Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா சுதந்திர தினம் – தமிழர் தேசத்தின் கரிநாள். தமிழீழ விடுதலைப் புலிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா சுதந்திர தினம் – தமிழர் தேசத்தின் கரிநாள் . தமிழீழ விடுதலைப் புலிகள்

  • February 2, 2022

மதிப்புக்குரிய தமிழீழ மக்களே ! மாசி 4ம் திகதி, ஈழத் தமிழர்களாகிய நாம் காலனித்துவவாதிகளின் கைகளிலிருந்து விடுபட்டு சிங்கள இனவாதிகளின் கோரப் பிடிக்குள் சிக்கிக் கொண்ட அவலத்தின் ஆரம்ப நாளாகும். இதனால் சிறீலங்கா சுதந்திரம் அடைந்த நாளை தமிழீழத்திலும், புலத்திலும் தமிழ் மக்கள் கரிநாளாக தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

பிரித்தானியார்களிடம் இருந்து இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசு இயங்கிய காலத்தைத் தவிர, இன்றைய நாள் வரை விடுதலைக் காற்றைத் தமிழ் மக்கள் சுவாசித்ததே கிடையாது. ஏறத்தாழ 442 ஆண்டுகள் காலனித்துவ நாடுகளின் ஆளுகைக்குள் அடிமைப்பட்டிருந்த ஈழத் தமிழர்கள், அதன் தொடர்ச்சியாகக் கடந்த 74 ஆண்டுகளாக பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறைக்கெதிராக அறவழியிலும் ஆயுதவழியிலும் போராடியே வந்திருக்கிறார்கள். சமநேரத்தில் இலங்கை தீவில் தமிழ் மக்களை இல்லாதொழிப்பதற்காக பேரினவாதச் சிங்கள அரசு திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகளை கடுகதி வேகத்தில் நடைமுறைப்படுத்தி வருகிறது.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சிங்களப் பேரினவாத அரசு தமிழ் மக்கள் மீது நிகழ்த்திய கொடிய யுத்தத்தில் சர்வதேசச் சட்டங்கள் மீறப்பட்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு மற்றும் போர்க்குற்ற நடவடிக்கைகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் வீதிகளில் தொடர்ந்தும் இரவு பகலாகத் தீர்வு எதுவும் இன்றிப் போராடி வருகின்றார்கள்.

சர்வதேசச் சட்ட நடைமுறைமைகளைக் கடைப்பிடிக்காது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள், யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை. தமிழீழ மக்களின் மண் மீட்புக்கான ஆயுதப் போர் அமைதி பெற்று ஒரு தசாப்தம் தாண்டியும் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவில்லை.

பலவந்தமாக தமிழர் நிலம் வன்பறிப்புச் செய்யப்பட்டுவரும் நிலையில், இராணுவ முகாம்களுக்கு முன்பாக நின்று பாதிக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்ந்தும் இரவு பகலாகப் போராடி வருகின்றார்கள். எமது மக்களின் காப்பரணாக நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தை அழிக்க உதவிய சர்வதேச நாடுகள், ஈழத் தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வில் அக்கறை காட்டவில்லை. சர்வதேச நாடுகள் தமது பூகோள, பிராந்திய ஆதிக்க அபிலாசைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பினும் ஈழத் தமிழர்கள் பூரண விடுதலை பெற்ற இனமாக வாழவேண்டும் என நாம் எமது மக்களின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

விடுதலைப் புலிகளின் அரசியற்துறையினராகிய நாம், மாசி 4ம் திகதியைத் கரிநாளாக எம் மக்களோடு ஒன்றிணைந்து கடைப்பிடிப்பதோடு, தமிழ் மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்புக் குரலை சர்வதேசத்தை நோக்கி ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும். தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்த் தேசிய விடுதலை நோக்கிய சனநாயக வழிப் போராட்டங்களை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டுமென அறைகூவல் விடுக்கிறோம்.
.
எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கமைவாக எமது போராட்ட வடிவங்கள் மாறினாலும் எமது இலட்சியம் என்றும் மாறாது என்ற கோட்பாட்டிற்கமைய, சனநாயக அரசியல் வழிமுறையில் ஒன்றுபட்ட மக்களாக, அனைத்து அறவழிப் போராட்டங்களிலும் தமிழ்த் தேசிய சக்தியாக அணிதிரண்டு போராடி, எமது இறுதி இலட்சியமாகிய சுதந்திர தமிழீழத்தை அமைப்போம் என உறுதியேற்போமாக.

‘’புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’
A1FAAF7A-4039-41CD-9203-B397807D118F.jpe

0DF8F44A-9110-4CEB-B221-FF331A5BB862.jpe

https://www.meenagam.com/சிறீலங்கா-சுதந்திர-தினம்/

  • கருத்துக்கள உறவுகள்+

அழிந்துபோன 🦸‍♂️இயக்கத்தின்🦸‍♀️ பெயரால் காகிதப்புலியொன்று🤡 விட்ட காற்றுப்போன அறிக்கை.🤥😒

பார்க்கவே நகைப்பாக உள்ளது.  

முந்தி ராம் மாமா உயிரோடு சிக்கியதால் அவரை வைத்து விட்டான் சிங்களவன். இப்போது சரணடைந்த இந்த முன்னாளை🐽 வைத்து விளையாடுகிறான். 🦝

காலம் மாறினாலும் செயற்பாடுகள் எல்லாம் ஏனோ ஒரே மாதிரித்தான் இருக்குதுடா, சிங்களவா. 

Edited by நன்னிச் சோழன்
எழுத்துப்பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நன்னிச் சோழன் said:

அழிந்துபோன 🦸‍♂️இயக்கத்தின்🦸‍♀️ பெயரால் காகிதப்புலியொன்று🤡 விட்ட காற்றுப்போன அறிக்கை.🤥😒

பார்க்கவே நகைப்பாக உள்ளது.  

முந்தி ராம் மாமா உயிரோடு சிக்கியதால் அவரை வைத்து விட்டான் சிங்களவன். இப்போது சரணடைந்த இந்த முன்னாளை🐽 வைத்து விளையாடுகிறான். 🦝

காலம் மாறினாலும் செயற்பாடுகள் எல்லாம் ஏனோ ஒரே மாதிரித்தான் இருக்குதுடா, சிங்களவா. 

இவர் சுவிஸ் இல், இந்திய பின்னணியில்…

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, MEERA said:

இவர் சுவிஸ் இல், இந்திய பின்னணியில்…

சாரிப்பா, மன்னிச்சுக்கோங்க...

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, MEERA said:

இவர் சுவிஸ் இல், இந்திய பின்னணியில்…

அப்போ புலிகளை இன்று உண்மையாகவே பிரதிநிதித்துவம் செய்பவர்கள் என்று எவராவது இருக்கிறார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியொரு அறிக்கை இந்த நேரத்தில் அவசியமா ? 

மக்கள் மீது உண்மையான அக்கறை உள்ள எவரும் தற்போது சிறிது சிறிதாக  மேலெழுந்துவரும் எமக்குச்  சாதகமான சூழலை திரிபுபடுத்த விரும்பார். 

இந்த அறிக்கை வெளியிட்டவர்களின் மீதும் அறிக்கையின் நோக்கத்தின் மீதும்  சந்தேகத்தை ஏற்படுத்துகிறது .

☹️

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்காலமாக தெரிந்தோ தெரியாமலோ எல்லாப் பக்கமும் சிங்களத்துக்கு தேவையானவையே நிறைவேற்றப் பெறுகிறது நம்மவர்களால். நெய் திரண்டு வாற நேரம் தாழி உடைந்த மாதிரி.

  • கருத்துக்கள உறவுகள்
On 2022-02-03 at 15:35, நன்னிச் சோழன் said:

அழிந்துபோன 🦸‍♂️இயக்கத்தின்🦸‍♀️ பெயரால் காகிதப்புலியொன்று🤡 விட்ட காற்றுப்போன அறிக்கை.🤥😒

பார்க்கவே நகைப்பாக உள்ளது.  

முந்தி ராம் மாமா உயிரோடு சிக்கியதால் அவரை வைத்து விட்டான் சிங்களவன். இப்போது சரணடைந்த இந்த முன்னாளை🐽 வைத்து விளையாடுகிறான். 🦝

காலம் மாறினாலும் செயற்பாடுகள் எல்லாம் ஏனோ ஒரே மாதிரித்தான் இருக்குதுடா, சிங்களவா. 

இப்படி கேட்பதற்கு மன்னிக்கவும்.  ராம் மாமா இப்ப எங்கை? 

சரி இப்போது யார் தூயபுலிகள் ?

எல்லாவற்றிற்கும் அவன் விளையாடுறான். இவன் கைப்பிள்ளையாக்கீட்டான் என்றால் யாரை முன்னிறுத்தி தமிழினம் முன்னேறலாம் ? 

8 hours ago, ரஞ்சித் said:

அப்போ புலிகளை இன்று உண்மையாகவே பிரதிநிதித்துவம் செய்பவர்கள் என்று எவராவது இருக்கிறார்களா? 

எனக்கும் இதே கேள்வி தான். பலரிடமும் கேட்டாயிற்று. பலரும் தலைவர் வரும்வரை பொறுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.😯

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

அப்போ புலிகளை இன்று உண்மையாகவே பிரதிநிதித்துவம் செய்பவர்கள் என்று எவராவது இருக்கிறார்களா? 

பதில் மிகவும் சுலபம் சகோ.

நீங்கள் யார் பக்கம் நிற்கிறார்களோ?

நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்களோ? 

நீங்கள் புலிகளாக யாரை இன்றும் அங்கீகரிக்கிறீர்களோ? அவர்களே புலிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

பதில் மிகவும் சுலபம் சகோ.

உண்மைதான்!

24 minutes ago, விசுகு said:

நீங்கள் புலிகளாக யாரை இன்றும் அங்கீகரிக்கிறீர்களோ? அவர்களே புலிகள்.

தயாமோகன் கூட யாருக்கும் வேலை செய்யலாம்!

இன்று உங்களைத் தவிர வேறு யாரையும் அங்கீகரிக்க மனம் ஒப்பவில்லை.  ஆகவே, இப்போதைக்கு நீங்கள் மட்டும்தான்!🙃

  • கருத்துக்கள உறவுகள்+
9 hours ago, shanthy said:

இப்படி கேட்பதற்கு மன்னிக்கவும்.  ராம் மாமா இப்ப எங்கை? 

சரி இப்போது யார் தூயபுலிகள்?

எல்லாவற்றிற்கும் அவன் விளையாடுறான். இவன் கைப்பிள்ளையாக்கீட்டான் என்றால் யாரை முன்னிறுத்தி தமிழினம் முன்னேறலாம் ? 

1)எனக்குத் தெரிந்தவரைக்கும் 2016 ஆம் ஆண்டுவரை உயிரோடு இருந்ததாகவும், மைத்திரி அரசங்கத்தில் புலிகளின் 16 கட்டளையாளர்கள் அடித்துக் கொல்லப்பட்டதாகவும் சிறீலங்கா கார்டியனில் 2016 ஆம் ஆண்டு செய்தி வந்தது. அவர்களில் இவரும் ஒருவராக இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம்.

2)இன்று புலிகளே இல்லை. இதில் தூயபுலி என்பது எங்கிருந்து வந்தது? 
2009ஆம் ஆண்டு மே மாதம் 17 திகதியோடு 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்ற அமைப்பு ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்தும் அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதாக் கூறியும் அதனுடைய அரசியல் தலைமைகளை அனுப்பிய போது அவையும் அனைத்துலக போர்முறைக்கு எதிரான வகையில் அழிக்கப்பட்டன. மே 18 வரை சில போராளிகள் இறுதிவரை களமாடி ஆகுதி ஆகினர். அத்தோடு அவ்வியக்கமும் அதனுடைய செயற்பாடுகளும் வரலாறாகிவிட்டது. (அதன் எஞ்சியோர் சிலர் ஜூன் மாதம் வரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் இயங்கினர் என்பது வேறு விடையம்)

அதன் பின்னர் அவ்வியக்கத்தின் பெயரால் வெளிவந்தவை யாவும் வெற்றுக்காகிதங்களும் சிங்கள புலனாய்விற்காய் அவ்வியக்கத்தில் இருந்து உயிரோடு சிக்கியவர்களாலும் உயிர் பிழைப்பதற்காய் சிங்களத்திடம் சரணடைந்து இன்றுவரை வேலை செய்பவர்களாலும்(மேற்கண்டவர் போன்றவர்கள்) வெளியிடப்படும் கூழ்ப்பாடி அறிக்கைகளே. 

இதுவா புலி? இதை புலியென்போர், இல்லாத புலிக்கு காவடி எடுத்து ஊரில் இளைஞர்களாக உள்ளோரை சிறைக்கு அனுப்புங்கள். இந்த இல்லாத புலியின் பெயரால் வரும் அறிக்கைகளால் ஊரில் எம்மக்களே துன்பப்படுகிறார்கள். 

3) யாரை முன்னிறுத்துதென்று எனக்குத் தெரியாது ஐயை. ஆனால் புலி பூனை என்று விலங்குகளின் பெயரில் எந்த காவடியள் வந்தாலும் அடிதான். குறிப்பாக எதிர்காலத்தில் நாந்தான் புலி என்ற பெயரில் எந்த ஓணான் வந்தாலும் அதை எதிர்த்தடிப்பேன்; ஏலுமென்றால் காட்டிக்கொடுக்கவும் செய்வேன் - தனிப்பட்ட கருத்து.🧐😈🤙 ஒரு பெரும் வரலாற்றிற்கு களங்கம் ஏற்படுத்துவதை அனுமதிக்க இயலாது!

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

1)எனக்குத் தெரிந்தவரைக்கும் 2016 ஆம் ஆண்டுவரை உயிரோடு இருந்ததாகவும், மைத்திரி அரசங்கத்தில் புலிகளின் 16 கட்டளையாளர்கள் அடித்துக் கொல்லப்பட்டதாகவும் சிறீலங்கா கார்டியனில் 2016 ஆம் ஆண்டு செய்தி வந்தது. அவர்களில் இவரும் ஒருவராக இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம்.

2)இன்று புலிகளே இல்லை. இதில் தூயபுலி என்பது எங்கிருந்து வந்தது? 
2009ஆம் ஆண்டு மே மாதம் 17 திகதியோடு 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்ற அமைப்பு ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்தும் அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதாக் கூறியும் அதனுடைய அரசியல் தலைமைகளை அனுப்பிய போது அவையும் அனைத்துலக போர்முறைக்கு எதிரான வகையில் அழிக்கப்பட்டன. 

நீங்கள் செய்தியில் படித்தது பொய். ஊடக வியாபாரிகளை நம்பும் நீங்கள் போராடிய போராளிகளை நம்பத்தயாரில்லை. 

1)எங்களுக்கு ராமண்ணா உங்களுக்கு ராம் மாமா அவர் உயிரோடு சிறையொன்றில் இருக்கிறார்.  உங்களுக்கு தெரிந்தவரை அவர் இறந்து விட்டதாக நம்புகிறீர்கள். 

2) புலி எப்போதும் புலிதான். புலிகளைப் புரிந்து கொண்டால் உண்மை புரியும். 

3) 2009 அழிக்கப்பட்டதா? அல்லது நாங்கள் தப்பியோடி வந்து அழித்தோமா? 

4) ஆயுத மௌனிப்பு என்றால் என்ன? தோற்றுப் போனோம் என்கிறீர்களா? 

5) எந்த சக்தியும் எங்களை அழிக்கவில்லை. நாங்கள் தான் அவன் இலங்கை அரச புலனாய்வு இவன் இந்தியப்புலனாய்வு என்று அரசியல் முயற்சிகளையும் அழித்தோமா. 

2 hours ago, நன்னிச் சோழன் said:

. குறிப்பாக எதிர்காலத்தில் நாந்தான் புலி என்ற பெயரில் எந்த ஓணான் வந்தாலும் அதை எதிர்த்தடிப்பேன்; ஏலுமென்றால் காட்டிக்கொடுக்கவும் செய்வேன் - தனிப்பட்ட கருத்து.🧐😈🤙 ஒரு பெரும் வரலாற்றிற்கு களங்கம் ஏற்படுத்துவதை அனுமதிக்க இயலாது!

ஓணாண்கள் என்று மனிதர்களை அடிப்பதைத் தான் செய்கிறீர்கள். எதிர்த்து அடிப்பதாக நினைத்து நீங்கள் தடக்கி விழுந்து விட்டீர்கள். 🤣

வரலாற்றை காக்கிறேன் என்று சிலர் முழங்குவது நகைப்புக்கு உரியது. 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரஞ்சித் said:

அப்போ புலிகளை இன்று உண்மையாகவே பிரதிநிதித்துவம் செய்பவர்கள் என்று எவராவது இருக்கிறார்களா? 

நிச்சயம் ஒருவரும் இல்லை.

என்னைப் பொறுத்தவரை எப்போது தலைவர் சரண் அடைவதோ அல்லது சண்டை பிடிப்பதோ உங்கள் விருப்பம் என்று சொன்னாரோ, அன்றே இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

இன்று உங்களைத் தவிர வேறு யாரையும் அங்கீகரிக்க மனம் ஒப்பவில்லை.  ஆகவே, இப்போதைக்கு நீங்கள் மட்டும்தான்!🙃

யாரை நீங்கள் அங்கீகரிக்கிறியள் சுவாமி ஜீ🤔

கொஞ்சம் விளக்கம் பிளீஸ் 🤨

  • கருத்துக்கள உறவுகள்+
36 minutes ago, shanthy said:

நீங்கள் செய்தியில் படித்தது பொய். ஊடக வியாபாரிகளை நம்பும் நீங்கள் போராடிய போராளிகளை நம்பத்தயாரில்லை. 

1)எங்களுக்கு ராமண்ணா உங்களுக்கு ராம் மாமா அவர் உயிரோடு சிறையொன்றில் இருக்கிறார்.  உங்களுக்கு தெரிந்தவரை அவர் இறந்து விட்டதாக நம்புகிறீர்கள். 

2) புலி எப்போதும் புலிதான். புலிகளைப் புரிந்து கொண்டால் உண்மை புரியும். 

3) 2009 அழிக்கப்பட்டதா? அல்லது நாங்கள் தப்பியோடி வந்து அழித்தோமா? 

4) ஆயுத மௌனிப்பு என்றால் என்ன? தோற்றுப் போனோம் என்கிறீர்களா? 

5) எந்த சக்தியும் எங்களை அழிக்கவில்லை. நாங்கள் தான் அவன் இலங்கை அரச புலனாய்வு இவன் இந்தியப்புலனாய்வு என்று அரசியல் முயற்சிகளையும் அழித்தோமா. 

ஓணாண்கள் என்று மனிதர்களை அடிப்பதைத் தான் செய்கிறீர்கள். எதிர்த்து அடிப்பதாக நினைத்து நீங்கள் தடக்கி விழுந்து விட்டீர்கள். 🤣

வரலாற்றை காக்கிறேன் என்று சிலர் முழங்குவது நகைப்புக்கு உரியது. 

1) நீங்கள் அவர் இருக்கிறார் என்று நம்புகிறீர்கள். நான் அவர் இல்லை என்று எண்ணுகிறேன். வேறுபாடுகள். இருந்தால் மிக்க மகிழ்ச்சியே.

2) ஆனால் இல்லாத புலியின் பெயரால் வரும் அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியனவன்று. அவை துன்பம் விளைவிக்க வல்லவை

மேலுள்ளது புலியோடு புலியாக வாழ்ந்து வேறுவழியில்லாமல் வலுக்கட்டாயமாக/தானாக எலியாக்கப்பட்டதுகளில் ஒன்று. 

3) தவிபு முள்ளிவாய்க்காலில் ஆயுதமௌனிப்பு செய்து அழிக்கப்பட்டதால் எஞ்சியோர் தப்பியோடவேண்டியதாகியது. சிலர் ஊடறுத்து வெளியேறினர். ஏற்கனவே ஊடறுத்து உள்ளிருந்தவர்கள் முகாம்களில் இருந்த முக்கிய தலைகளை வெளியில் அழைத்துச் சென்றனர். இவர்கள்தான் நான் குறிப்பிட்ட அந்த ஜூன் மாதம் வரை இருந்தவர்கள். 

அத்தோடு தவிபு வரலாறாகிவிட்டனர். புலி மேயோடு சரி. புலி ஒன்றே ஒன்றுதான். அது தலைவனின் சுட்டுவிரல் விரிந்த திசையில் அவர் உயிரோடு உள்ளவரை நடந்தவர்கள். அவர் உயிரோடு இருந்தவரை அவர் கொடுத்த எதிர்காலப் பணி முடிக்கச் சென்றவர்களும் புலி என்ற பெயரால் அறியப்படமாட்டார். இறந்த காலத்தில் வாழ்ந்த ஒன்றின் பெயரால் ஏற்றிக் கூற இதுவொன்றும் பண்டைய புராணங்கள் அன்று. பிறகு(2009<) நான் புலி, நீ புலி என்பவன் எல்லாம் கோமாளிகள் தான்! சிரித்துவிட்டு போயிட்டே இருப்பன். 

தப்பியோடி வந்து அழிக்க வேண்டியதில்லை. முகாமினுள்ளே வைத்தே முள்ளிவாய்க்கால்வரை புலிகளோடு இருந்த மக்களில் சில நரிகளே எஞ்சியிருந்தோரை காட்டிக்கொடுத்தனர் (இது ஜூன் 3ம் வாரத்தில் இருந்து தொடங்கியது) . இதனால் பலர் சிறையாகினர். வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களிலும் சிலர் காட்டிக்கொடுக்கப்பட்டனர். (அந்த வானோடி தெய்வீகன் (மாவீரர்) மற்றும் வானோடி குசந்தன் அண்ணா போன்றோர் சிறந்த எடுத்துக்காட்டு)

4) எளிது. ஆயுதங்கள் அற்ற வகையில் இனி எங்கள் போராட்டம் அரசியல் அடிப்படையில் தொடரும். ஆனால் புலி என்ற பெயரைத் தாங்காமல். அப்பெயரை ஏந்தினால் அழிவு என்பது அனைவரும் நன்கறிந்த விடையம்.

நாம் ஆய்த வகையில் தோற்றுவிட்டோம். ஆனால் எமது தாகம் அப்படியே உள்ளது. இனி தலைவர் மாமா சொன்னது போன்று அறிவையே ஆய்தமாக்கிப் போராட வேண்டும். அதன்போது நாம் எமது மக்கள் தொகையையும் அதில் எவ்வளவு பேர் இதற்கு ஆதரவு தருவார்கள் என்பதையும் கருத்திலெடுக்க வேண்டும்.

5) ஆய்தப் போருக்கு பின்னரான 'புலி' என்ற பெயரில் இல்லாத அரசியல் முயற்சியை ஆர் அழித்ததோ எனக்குத் தெரியாது. ஆனால் புலி புலி எண்டு இல்லாத ஒன்றின் பெயரால் வெற்று அறிக்கைகள் விடுவோரே அவ்வரசியல் முயற்சிகளை முன்னின்று நாசப்படுத்தியோர் என்பது நான் கொண்ட தெளிவு.

 தப்பியவர்கள் தலைவன் இல்லத புலிப் பெயரை அழிவு தரும் என்று தெரிந்தும் ஏன் பாவிக்க வேண்டும்? வேறு பெயர்கள் இல்லையா என்ன?

6) நானொன்றும் தடக்கி விழவில்லை. எனது கொள்கையில் நான் உறுதிதான். திரும்பவும் சொல்றன், புலி எண்ட பெயரில் எந்தப் பூனை இனிவந்தாலும் அடிதான். இனி எந்த முயற்சியாக இருந்தாலும் புலி எண்ட பெயரில் இல்லாமல் வந்த மகிழ்வே. இல்லை புலி என வந்தால் அதை அழிக்க வேண்டும். ஏனெனில் அது புலி அன்று, புலியின் தோல் போர்த்தியுள்ள பகை அனுப்பிய நரி. 
 
இல்லாத புலியின் பெயரால் வெளிநாடுகளில் இருந்தபடி வெற்று அறிக்கைகள் விடும் கையாள் நரிகளுக்கு ஆதரவளிப்போர் ஏன் ஊரில் போயிருந்தபடி புலிக்கு ஆதரவு திரட்டக்கூடாது?😌😜

சும்மா பம்மாத்து விடக்கூடாது!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நன்னிச் சோழன் said:

எனக்குத் தெரிந்தவரைக்கும் 2016 ஆம் ஆண்டுவரை உயிரோடு இருந்ததாகவும், மைத்திரி அரசங்கத்தில் புலிகளின் 16 கட்டளையாளர்கள் அடித்துக் கொல்லப்பட்டதாகவும் சிறீலங்கா கார்டியனில் 2016 ஆம் ஆண்டு செய்தி வந்தது. அவர்களில் இவரும் ஒருவராக இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம்.

நீங்கள் கூறுவது இந்தக் கட்டுரையா?  அல்லது வேறொன்றா?

இதில் அடித்துக் கொல்லப்பட்டதாக இல்லையே? 

http://www.srilankaguardian.org/2021/06/sri-lanka-full-moon-day-pardons.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

1) நீங்கள் அவர் இருக்கிறார் என்று நம்புகிறீர்கள். நான் அவர் இல்லை என்று எண்ணுகிறேன். வேறுபாடுகள். இருந்தால் மிக்க மகிழ்ச்சியே.

2) ஆனால் இல்லாத புலியின் பெயரால் வரும் அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியனவன்று. அவை துன்பம் விளைவிக்க வல்லவை

மேலுள்ளது புலியோடு புலியாக வாழ்ந்து வேறுவழியில்லாமல் வலுக்கட்டாயமாக/தானாக எலியாக்கப்பட்டதுகளில் ஒன்று. 

3) தவிபு முள்ளிவாய்க்காலில் ஆயுதமௌனிப்பு செய்து அழிக்கப்பட்டதால் எஞ்சியோர் தப்பியோடவேண்டியதாகியது. சிலர் ஊடறுத்து வெளியேறினர். ஏற்கனவே ஊடறுத்து உள்ளிருந்தவர்கள் முகாம்களில் இருந்த முக்கிய தலைகளை வெளியில் அழைத்துச் சென்றனர். இவர்கள்தான் நான் குறிப்பிட்ட அந்த ஜூன் மாதம் வரை இருந்தவர்கள். 

அத்தோடு தவிபு வரலாறாகிவிட்டனர். புலி மேயோடு சரி. புலி ஒன்றே ஒன்றுதான். அது தலைவனின் சுட்டுவிரல் விரிந்த திசையில் அவர் உயிரோடு உள்ளவரை நடந்தவர்கள். அவர் உயிரோடு இருந்தவரை அவர் கொடுத்த எதிர்காலப் பணி முடிக்கச் சென்றவர்களும் புலி என்ற பெயரால் அறியப்படமாட்டார். இறந்த காலத்தில் வாழ்ந்த ஒன்றின் பெயரால் ஏற்றிக் கூற இதுவொன்றும் பண்டைய புராணங்கள் அன்று. பிறகு(2009<) நான் புலி, நீ புலி என்பவன் எல்லாம் கோமாளிகள் தான்! சிரித்துவிட்டு போயிட்டே இருப்பன். 

தப்பியோடி வந்து அழிக்க வேண்டியதில்லை. முகாமினுள்ளே வைத்தே முள்ளிவாய்க்கால்வரை புலிகளோடு இருந்த மக்களில் சில நரிகளே எஞ்சியிருந்தோரை காட்டிக்கொடுத்தனர் (இது ஜூன் 3ம் வாரத்தில் இருந்து தொடங்கியது) . இதனால் பலர் சிறையாகினர். வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களிலும் சிலர் காட்டிக்கொடுக்கப்பட்டனர். (அந்த வானோடி தெய்வீகன் (மாவீரர்) மற்றும் வானோடி குசந்தன் அண்ணா போன்றோர் சிறந்த எடுத்துக்காட்டு)

4) எளிது. ஆயுதங்கள் அற்ற வகையில் இனி எங்கள் போராட்டம் அரசியல் அடிப்படையில் தொடரும். ஆனால் புலி என்ற பெயரைத் தாங்காமல். அப்பெயரை ஏந்தினால் அழிவு என்பது அனைவரும் நன்கறிந்த விடையம்.

நாம் ஆய்த வகையில் தோற்றுவிட்டோம். ஆனால் எமது தாகம் அப்படியே உள்ளது. இனி தலைவர் மாமா சொன்னது போன்று அறிவையே ஆய்தமாக்கிப் போராட வேண்டும். அதன்போது நாம் எமது மக்கள் தொகையையும் அதில் எவ்வளவு பேர் இதற்கு ஆதரவு தருவார்கள் என்பதையும் கருத்திலெடுக்க வேண்டும்.

5) ஆய்தப் போருக்கு பின்னரான 'புலி' என்ற பெயரில் இல்லாத அரசியல் முயற்சியை ஆர் அழித்ததோ எனக்குத் தெரியாது. ஆனால் புலி புலி எண்டு இல்லாத ஒன்றின் பெயரால் வெற்று அறிக்கைகள் விடுவோரே அவ்வரசியல் முயற்சிகளை முன்னின்று நாசப்படுத்தியோர் என்பது நான் கொண்ட தெளிவு.

 தப்பியவர்கள் தலைவன் இல்லத புலிப் பெயரை அழிவு தரும் என்று தெரிந்தும் ஏன் பாவிக்க வேண்டும்? வேறு பெயர்கள் இல்லையா என்ன?

6) நானொன்றும் தடக்கி விழவில்லை. எனது கொள்கையில் நான் உறுதிதான். திரும்பவும் சொல்றன், புலி எண்ட பெயரில் எந்தப் பூனை இனிவந்தாலும் அடிதான். இனி எந்த முயற்சியாக இருந்தாலும் புலி எண்ட பெயரில் இல்லாமல் வந்த மகிழ்வே. இல்லை புலி என வந்தால் அதை அழிக்க வேண்டும். ஏனெனில் அது புலி அன்று, புலியின் தோல் போர்த்தியுள்ள பகை அனுப்பிய நரி. 
 
இல்லாத புலியின் பெயரால் வெளிநாடுகளில் இருந்தபடி வெற்று அறிக்கைகள் விடும் கையாள் நரிகளுக்கு ஆதரவளிப்போர் ஏன் ஊரில் போயிருந்தபடி புலிக்கு ஆதரவு திரட்டக்கூடாது?😌😜

சும்மா பம்மாத்து விடக்கூடாது!

பச்சைப்புள்ளைத்தனமாக இருக்கிறியள். ராமண்ணா சிறையில் இருக்கிறார் நம்புங்க மருமகரே. 

அரசியல் அறிக்கைகளில் எனக்கு நிறைய முரண்பாடுகள் உள்ளன.  ஆனால் நீங்கள் வரலாறு காப்பு என்று வரலாறு புரியாத அப்பாவியாக இருக்கிறீங்கள். காலம் உங்களை விட்விக்கட்டும். 

தெய்வீகனை ஏன் போட்டுக் கொடுத்து கொன்றியள்? 

குசந்தன் இப்ப இருக்கும் இடம் தெரியாதோ? 

தலைவர் சண்டை பிடிக்கிறவை பிடியுங்கோ தப்பியோடுற நீங்கள் ஓடுங்கோ என்று யாருக்கும் சொல்லவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

1) நீங்கள் அவர் இருக்கிறார் என்று நம்புகிறீர்கள். நான் அவர் இல்லை என்று எண்ணுகிறேன். வேறுபாடுகள். இருந்தால் மிக்க மகிழ்ச்சியே.

2) ஆனால் இல்லாத புலியின் பெயரால் வரும் அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியனவன்று. அவை துன்பம் விளைவிக்க வல்லவை

மேலுள்ளது புலியோடு புலியாக வாழ்ந்து வேறுவழியில்லாமல் வலுக்கட்டாயமாக/தானாக எலியாக்கப்பட்டதுகளில் ஒன்று. 

3) தவிபு முள்ளிவாய்க்காலில் ஆயுதமௌனிப்பு செய்து அழிக்கப்பட்டதால் எஞ்சியோர் தப்பியோடவேண்டியதாகியது. சிலர் ஊடறுத்து வெளியேறினர். ஏற்கனவே ஊடறுத்து உள்ளிருந்தவர்கள் முகாம்களில் இருந்த முக்கிய தலைகளை வெளியில் அழைத்துச் சென்றனர். இவர்கள்தான் நான் குறிப்பிட்ட அந்த ஜூன் மாதம் வரை இருந்தவர்கள். 

அத்தோடு தவிபு வரலாறாகிவிட்டனர். புலி மேயோடு சரி. புலி ஒன்றே ஒன்றுதான். அது தலைவனின் சுட்டுவிரல் விரிந்த திசையில் அவர் உயிரோடு உள்ளவரை நடந்தவர்கள். அவர் உயிரோடு இருந்தவரை அவர் கொடுத்த எதிர்காலப் பணி முடிக்கச் சென்றவர்களும் புலி என்ற பெயரால் அறியப்படமாட்டார். இறந்த காலத்தில் வாழ்ந்த ஒன்றின் பெயரால் ஏற்றிக் கூற இதுவொன்றும் பண்டைய புராணங்கள் அன்று. பிறகு(2009<) நான் புலி, நீ புலி என்பவன் எல்லாம் கோமாளிகள் தான்! சிரித்துவிட்டு போயிட்டே இருப்பன். 

தப்பியோடி வந்து அழிக்க வேண்டியதில்லை. முகாமினுள்ளே வைத்தே முள்ளிவாய்க்கால்வரை புலிகளோடு இருந்த மக்களில் சில நரிகளே எஞ்சியிருந்தோரை காட்டிக்கொடுத்தனர் (இது ஜூன் 3ம் வாரத்தில் இருந்து தொடங்கியது) . இதனால் பலர் சிறையாகினர். வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களிலும் சிலர் காட்டிக்கொடுக்கப்பட்டனர். (அந்த வானோடி தெய்வீகன் (மாவீரர்) மற்றும் வானோடி குசந்தன் அண்ணா போன்றோர் சிறந்த எடுத்துக்காட்டு)

4) எளிது. ஆயுதங்கள் அற்ற வகையில் இனி எங்கள் போராட்டம் அரசியல் அடிப்படையில் தொடரும். ஆனால் புலி என்ற பெயரைத் தாங்காமல். அப்பெயரை ஏந்தினால் அழிவு என்பது அனைவரும் நன்கறிந்த விடையம்.

நாம் ஆய்த வகையில் தோற்றுவிட்டோம். ஆனால் எமது தாகம் அப்படியே உள்ளது. இனி தலைவர் மாமா சொன்னது போன்று அறிவையே ஆய்தமாக்கிப் போராட வேண்டும். அதன்போது நாம் எமது மக்கள் தொகையையும் அதில் எவ்வளவு பேர் இதற்கு ஆதரவு தருவார்கள் என்பதையும் கருத்திலெடுக்க வேண்டும்.

5) ஆய்தப் போருக்கு பின்னரான 'புலி' என்ற பெயரில் இல்லாத அரசியல் முயற்சியை ஆர் அழித்ததோ எனக்குத் தெரியாது. ஆனால் புலி புலி எண்டு இல்லாத ஒன்றின் பெயரால் வெற்று அறிக்கைகள் விடுவோரே அவ்வரசியல் முயற்சிகளை முன்னின்று நாசப்படுத்தியோர் என்பது நான் கொண்ட தெளிவு.

 தப்பியவர்கள் தலைவன் இல்லத புலிப் பெயரை அழிவு தரும் என்று தெரிந்தும் ஏன் பாவிக்க வேண்டும்? வேறு பெயர்கள் இல்லையா என்ன?

6) நானொன்றும் தடக்கி விழவில்லை. எனது கொள்கையில் நான் உறுதிதான். திரும்பவும் சொல்றன், புலி எண்ட பெயரில் எந்தப் பூனை இனிவந்தாலும் அடிதான். இனி எந்த முயற்சியாக இருந்தாலும் புலி எண்ட பெயரில் இல்லாமல் வந்த மகிழ்வே. இல்லை புலி என வந்தால் அதை அழிக்க வேண்டும். ஏனெனில் அது புலி அன்று, புலியின் தோல் போர்த்தியுள்ள பகை அனுப்பிய நரி
 
இல்லாத புலியின் பெயரால் வெளிநாடுகளில் இருந்தபடி வெற்று அறிக்கைகள் விடும் கையாள் நரிகளுக்கு ஆதரவளிப்போர் ஏன் ஊரில் போயிருந்தபடி புலிக்கு ஆதரவு திரட்டக்கூடாது?😌😜

சும்மா பம்மாத்து விடக்கூடாது!

எலி, கோமாளி, பூனை, நரி

எது பொருத்தமாக இருக்கும் கடைசியில ஒரு முடிவுக்கு வாங்க நன்னி!👀

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

நிச்சயம் ஒருவரும் இல்லை.

என்னைப் பொறுத்தவரை எப்போது தலைவர் சரண் அடைவதோ அல்லது சண்டை பிடிப்பதோ உங்கள் விருப்பம் என்று சொன்னாரோ, அன்றே இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது. 

ஏன் இல்லை?

தலைவர் ஆயுதத்தை மௌனிப்பதாக தான் சொன்னாரே தவிர இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக எங்கும் சொல்லவில்லை.

அதிலும் வெளிநாட்டு அமைப்புக்கள் பற்றி எதுவும் சொல்லவில்லை. 

அத்தனை அமைப்புக்களையும் கட்டமைப்புகளையும் சரியாக தூர பார்வையுடன் தான் வைத்திருந்திருந்தார். 

அதை சிதைத்தது யார்?

இவை சிதைக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்தோர் யார்???

ஒவ்வொன்றாக அளிக்கப்பட்டபோது ஒவ்வொருவராக துரோகியாக்கி  நக்கல் நையாண்டி செய்து எழுதியோர் கொண்டாடியோர் தான் இன்றும் ஏதாவது கிடைக்குமா என்று அதே நக்கல் நையாண்டியுடன் புலிகளை தேடுகிறார்கள்.

இன்றும் காலம் போய்விடவில்லை.

முதலில் நாம் நேர்மையாக இனம் சார்ந்து சிந்தித்து செயற்பட தயாராக இருக்கணும்.

அது இங்கே புலிகளை தேடுவோர் எவரிடமும் இல்லாதது தான் குறைபாடே.

நான் என்றில்லாமல் நாடு என்று சிந்திக்க எவரும் இல்லாதபோது புலிகள் இருந்தால் என்ன?? இல்லாவிட்டால் என்ன???

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, ரஞ்சித் said:

நீங்கள் கூறுவது இந்தக் கட்டுரையா?  அல்லது வேறொன்றா?

இதில் அடித்துக் கொல்லப்பட்டதாக இல்லையே? 

http://www.srilankaguardian.org/2021/06/sri-lanka-full-moon-day-pardons.html

இதில்லை. 

அது 2016 வந்தது. அதில் சில கட்டளையாளர்களின் பெயர்கள் கூட குறிப்பிடப்பட்டு இருந்தது. கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம் என்பது கூட இருக்கும்.

1 hour ago, வாலி said:

எலி, கோமாளி, பூனை, நரி

எது பொருத்தமாக இருக்கும் கடைசியில ஒரு முடிவுக்கு வாங்க நன்னி!👀

🤣எதுவாக இருந்தாலும் ஒன்றுதான். ஏமாற்றுபவர்களை எப்படித் திட்டினாலும் ஆத்திரம் அடங்கவில்லை.

2009இற்குப் பிறகு புலி என்ற பெயரில் யார் வந்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்பட இயலாது. புலி என்ற இயக்கம் ஒன்றுதான். அது இனி இல்லை. அவ்வளவுதான். 

Edited by நன்னிச் சோழன்
added a sentence

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, விசுகு said:

ஏன் இல்லை?

தலைவர் ஆயுதத்தை மௌனிப்பதாக தான் சொன்னாரே தவிர இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக எங்கும் சொல்லவில்லை.

அதிலும் வெளிநாட்டு அமைப்புக்கள் பற்றி எதுவும் சொல்லவில்லை. 

அத்தனை அமைப்புக்களையும் கட்டமைப்புகளையும் சரியாக தூர பார்வையுடன் தான் வைத்திருந்திருந்தார். 

அதை சிதைத்தது யார்?

இவை சிதைக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்தோர் யார்???

ஒவ்வொன்றாக அளிக்கப்பட்டபோது ஒவ்வொருவராக துரோகியாக்கி  நக்கல் நையாண்டி செய்து எழுதியோர் கொண்டாடியோர் தான் இன்றும் ஏதாவது கிடைக்குமா என்று அதே நக்கல் நையாண்டியுடன் புலிகளை தேடுகிறார்கள்.

இன்றும் காலம் போய்விடவில்லை.

முதலில் நாம் நேர்மையாக இனம் சார்ந்து சிந்தித்து செயற்பட தயாராக இருக்கணும்.

அது இங்கே புலிகளை தேடுவோர் எவரிடமும் இல்லாதது தான் குறைபாடே.

நான் என்றில்லாமல் நாடு என்று சிந்திக்க எவரும் இல்லாதபோது புலிகள் இருந்தால் என்ன?? இல்லாவிட்டால் என்ன???

அதே...👍

  • கருத்துக்கள உறவுகள்+

பச்சைப்புள்ளைத்தனமாக இருக்கிறியள். ராமண்ணா சிறையில் இருக்கிறார் நம்புங்க மருமகரே. 

இருந்தால் மகிழ்ச்சி என்று முன்னரே கூறிவிட்டேனே ஐயை. 

அரசியல் அறிக்கைகளில் எனக்கு நிறைய முரண்பாடுகள் உள்ளன.  ஆனால் நீங்கள் வரலாறு காப்பு என்று வரலாறு புரியாத அப்பாவியாக இருக்கிறீங்கள். காலம் உங்களை விட்விக்கட்டும். 

ஆ, என்ன சொல்ல வாறன் என்டால், நீங்கள் எதையோ மனதில் வைத்துக்கொண்டு கதைக்கிறியள் போலத் தெரிகிறது ஐயை. எதுவாக இருந்தாலும் நேரடியாகச் சொல்லுங்கள். 

நான் வரலாற்றில் தெளிவாகத்தான் உள்ளேன். இதுவொன்றும் பழங்கதைகளோ இல்லை வரலாற்று அரசுகளோ இல்லை, இரண்டாம் புலிக்கேசி மூன்றாம் புலிக்கேசி என வருவதற்கு. இது ஒற்றைப்புலி தான். அது முள்ளிவாய்க்காலோடு சரி. 

தாங்கள் காகிதப் புலிகளின் பரப்புரைகளுக்கு மண்டை கழுவுப்பட்டுவிட்டீர்கள்(brain wash) போலும். கவனமாக இருங்கள். 

2009இற்குப் பிறகு 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்ற பெயரைப் பயன்படுத்த யாருக்கும் தகுதி இல்லை. அவ்வளவுதான். இல்லாத ஒரு இயக்கத்தின் பெயரால் ஏன் கட்டுரைகள் வெளியிடுகின்றீர்கள்? ஏன் கொள்ளையடிச்ச காசுகள் காணாது என்று இன்னமும் கேட்குதோ?😜😁

தெய்வீகனை ஏன் போட்டுக் கொடுத்து கொன்றியள்? 

அதை அப்போது வெளிநாடுகளில் இருந்த நீங்கள்தான் சொல்ல வேண்டும். என்னைக் கேட்டால் எனக்கு எப்படித் தெரியும்? 

(தயவு கூர்ந்து இதை வரலாற்று நகர்வு, உயிர்த்த ஞாயிறு நகர்வு🤣 என்று மட்டும் மழுப்பிட வேண்டாம்)

குசந்தன் இப்ப இருக்கும் இடம் தெரியாதோ? 

ஏன் உங்களுக்குத் தெரியாதோ?

தலைவர் சண்டை பிடிக்கிறவை பிடியுங்கோ தப்பியோடுற நீங்கள் ஓடுங்கோ என்று யாருக்கும் சொல்லவில்லை. 

தலைவர் மாமா, சண்டை பிடிக்க விருப்பமானாக்கள் சண்டை பிடியுங்கோ, சரணடைய விருப்பமானாக்கள் சரணடையுங்கோ என்றார். இவர்களோடு பிறிதொன்றாக ஒரு தாக்குதலணி ஊடறுத்தது. 

(சரணடைந்தவர்களில் சிலர் ஆமி பிடியில் இருந்து தப்பியோடினர். தப்பினரா என்பது தெரியாது.)

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

ஏன் இல்லை?

தலைவர் ஆயுதத்தை மௌனிப்பதாக தான் சொன்னாரே தவிர இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக எங்கும் சொல்லவில்லை.

அதிலும் வெளிநாட்டு அமைப்புக்கள் பற்றி எதுவும் சொல்லவில்லை. 

அத்தனை அமைப்புக்களையும் கட்டமைப்புகளையும் சரியாக தூர பார்வையுடன் தான் வைத்திருந்திருந்தார். 

அதை சிதைத்தது யார்?

இவை சிதைக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்தோர் யார்???

ஒவ்வொன்றாக அளிக்கப்பட்டபோது ஒவ்வொருவராக துரோகியாக்கி  நக்கல் நையாண்டி செய்து எழுதியோர் கொண்டாடியோர் தான் இன்றும் ஏதாவது கிடைக்குமா என்று அதே நக்கல் நையாண்டியுடன் புலிகளை தேடுகிறார்கள்.

இன்றும் காலம் போய்விடவில்லை.

முதலில் நாம் நேர்மையாக இனம் சார்ந்து சிந்தித்து செயற்பட தயாராக இருக்கணும்.

அது இங்கே புலிகளை தேடுவோர் எவரிடமும் இல்லாதது தான் குறைபாடே.

நான் என்றில்லாமல் நாடு என்று சிந்திக்க எவரும் இல்லாதபோது புலிகள் இருந்தால் என்ன?? இல்லாவிட்டால் என்ன???

அண்ணா,

அங்கு வேர்கள் அழிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் கிளைகளால் எவ்வளவு காலம் தாக்கு பிடிக்க முடியும்? 

9 hours ago, shanthy said:

தலைவர் சண்டை பிடிக்கிறவை பிடியுங்கோ தப்பியோடுற நீங்கள் ஓடுங்கோ என்று யாருக்கும் சொல்லவில்லை. 

மே 2009 இல் நீங்களும் நானும் ஐரோப்பாவில்,

தலைவர் தனது பெற்றோரையும் மகனையும் இராணுவத்தின் பகுதிக்கு அனுப்பிவிட்டு போராளிகளை சண்டைபிடி என்று கூறுவாரோ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, shanthy said:

யாரை நீங்கள் அங்கீகரிக்கிறியள் சுவாமி ஜீ🤔

கொஞ்சம் விளக்கம் பிளீஸ் 🤨

தமிழீழக் கனவுடன் மாவீரர்களான போராளிகளையும், தலைவரையும், போரின் பின்னர் உயிருடனும் எஞ்சியிருக்கும் எவருக்கும் விலைபோகாத போராளிகளை மட்டுமே புலிகள் என்று அங்கீகரிக்கமுடியும். 

முன்னர் பகலவன் எழுதியதுபோல புலிகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்றுப் பங்குபோட்டவர்கள்தான் புலம்பெயர் நாடுகளில் அதிகம். மற்றவர்கள் வெறும் ஏமாளிகள். இதை போர் முடிந்த 13 ஆண்டுகளில் புரியாதவர்கள் முகில்களுக்குள் நீந்திக்கொண்டிருப்பவர்கள்!

புலம்பெயர் நாடுகளில் உள்ள உளவுக்கட்டமைப்புக்களுக்குத் தெரியாமல், அவர்களின் அனுமதிகள் இல்லாமல் இரகசியமாக இயங்கமுடியாது. அவர்களை “உச்சி”க்கொண்டு அரசியல் ரீதியாகவும் செயற்படமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

யார் ஏற்றாலும் ஏற்காவிடினும் இதுதான் உண்மை நிலை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.