Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 கதை நன்றாக தொய்வில்லாமல் போகிறது. இவ்வளவு   வேகமாக எழுத சுவி ஐயாவால் தான் முடியும். பாராட்டுக்கள் . தொடருங்கள். 

  • Replies 61
  • Views 6.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பார்வை ஒன்றே போதுமே.......(15).                                                             வீட்டுக்கு வருகின்றார்கள். தூரத்தில் வரும்போதே கோழிக்கறியின் வாசனை மூக்கைத் துளைக்கிறது. முற்றத்தில் நி

  • பார்வை ஒன்றே போதுமே........(2).                                                                   ஆங்காங்கே வயல் வெள்ளத்துக்குள் வந்திருந்த சின்ன மீன்களை கொக்கு, நாரை போன்ற சில பறவைகள் கொத்திக்கொ

  • பார்வை ஒன்றே போதுமே...........( 10 ).                                                                 முத்துவும் சாமிநாதனும் அந்தக் கடை முதலாளி குடுத்த பாதணிகளை சிறப்பாகத்  திருத்தி பொலீஸ் போட்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 23/2/2022 at 22:13, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுவி அண்ணாவும் தொடங்கியாச்சு. தொடருங்கோ அண்ணா.

நம்ம அண்ணாத்த கைவச்சா எதுவுமே ராங்கா போனதில்ல...:wink:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நம்ம அண்ணாத்த கைவச்சா எதுவுமே ராங்கா போனதில்ல...:wink:

உங்க கைவரிசையையும் காட்டுறது 😍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்க கைவரிசையையும் காட்டுறது 😍

நான் என்ன வைச்சுக்கொண்டே வஞ்சகம் பண்ணுறன்? :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை ஒன்றே போதுமே..........! (11).

                                                                   இம்முறை வயலில் நல்ல விளைச்சல். விதைநெல்லை கழித்துப்  பார்த்தாலும் அதில் எப்படியும் நாலு லட்சத்துக்குமேல் கிடைக்கும். இனி இவர்கள் உழைத்து கொண்டுவந்து குடுத்த காசு சேமிப்பு மற்றும் வீடு காணி ஈடுவைத்தாலும் அதில் எப்படியும் எழெட்டு லட்சங்கள் வரும்.கணக்கு பார்த்ததில் சராசரியாக பதினோரு லட்சங்கள் வரும். இன்னும் நாலு லட்சம் மற்றும் எழுத்து கூலிகள் எல்லாம் இருக்கின்றன.

                              முத்து சொல்கிறான் கண்ணப்பர் இவ்வளவு குறைவாக தாறன் என்ற போதிலும்  ஒரு கொஞ்சப் பணத்தால் எல்லாம் கைநழுவிப் போயிடும் போல இருக்கே என்று கவலைப் படுகிறான். தம்பியின் மனக்கஷ்டத்தைப் பார்த்த சித்ரா நானும் இப்போதுதான் வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். என்னை ஒரு பெரிய வணிக வளாக்கத்துக்கு ஆலோசகராக வக்கீல் நியமித்திருக்கிறார். ஆயினும் இப்பொழுது நான் உங்களுக்கு உதவ முடியாமல் இருக்கிறது வேதனை தருகிறது. மகேஸ்வரியும் பரவாயில்லை சித்ரா நீ யோசிக்காதை என்கிறாள் .

                                          பரவாயில்லை முத்து. ஒரு காரியம் கைகூட வேண்டுமென்றால் லேசில் கிடைக்காது. அதற்காக முயற்சி செய்யாமல் இருக்கக் கூடாது. "முயற்சி மெய் வருந்தக் கூலி தரும்" நாளைக்கு காலையில் நீ வங்கிக்கு சென்று உன் சான்றிதல்களைக் காட்டி கடன் கேட்டுப் பார் என்று சொல்ல அதுவும் சரி என்ற முடிவுடன் எல்லோரும் படுக்கப் போகின்றார்கள். மகேஸ்வரியும் சாமிநாதனின் கட்டிலுக்கு வேறு நல்ல துணிகளையும் போர்வையையும் மாற்றிவிட்டு லேசாக அவரை உரசிக் கொண்டு சென்று கதவருகில் நின்று சிநேகமான ஒரு பார்வை பார்த்துக்கொண்டே குசினிக்குள் பாய் விரித்து படுக்கப்போகிறாள். அப்போது சித்ரா அம்மா இங்கே வந்து என்கூட படும்மா என்று அழைக்க போடி உங்கே ஒரே நுளம்பு குத்துது. ஓ..... உங்கே நுளம்பு இல்லையா என்று கேட்க, ஓம் பிள்ளை இங்கு அடுப்பு வெக்கைக்கு நுளம்பு வாறதில்லை.வேணுமெண்டால் நீயும் இங்கு வந்து படு. இல்லையம்மா நான் கட்டிலில் படுக்கிறேன்  என்று சொல்லிவிட்டு அவள் தூங்கிப் போனாள். மகேஸ்வரிக்கு தூக்கம் வரவில்லை. இப்போதெல்லாம் தான் சாமிநாதன் மீது நிறைய அக்கறையும் உரிமையும் எடுத்துக் கொள்வதுபோல் அவளுக்கு தோன்றுகிறது.

                                                                               அந்நேரம் வெளியே படுத்திருக்கும் சாமிநாதனும் இவர்களின் சம்பாசனையைக் கேட்கிறார். தனது மனைவியின் இது போன்ற தவறுகளால்தான் தான் வீட்டை விட்டு வெளியேறி வந்தது. அதனால் எதுவாயினும் சபலத்துக்கு இடங்கொடுப்பதில்லை என்னும் வைராக்கியத்துடன் எதுவும் தெரியாததுபோல் நடந்து கொள்கிறார்.

                                    அடுத்தநாள் காலை முத்து தனது சான்றிதழ்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு வங்கிக்கு செல்கிறான். அங்கு மேலதிகாரியை சந்திப்பதற்கு நேர அனுமதி கேட்கிறான். அவர் கணணியைப் பார்த்து விட்டு இன்று மாலை 15:00 மணிக்கு ஒரு இடம் இருக்கு சரியா என்று கேட்க சரி என்றுவிட்டு வெளியே வருகிறான். பின் அங்கும் இங்கும் விடுப்பு பார்த்துக்கொண்டு திரிந்து விட்டு மத்தியானம் நல்ல கடையில் சாப்பிட்டு விட்டு மூன்று மணிக்கு வங்கிக்கு வருகிறான். அங்கே அவரின் அறையில் அவரிடம் தான் தனியாக தொழில் தொடங்குவதற்கு கடன் தந்து உதவ முடியுமா என்று கேட்டு தனது சான்றிதல்களைக் கொடுக்கிறான். அவரும் அவனது சான்றிதழ்களைப்  பார்த்துக் கொண்டே எவ்வளவு வேணும் என்று கேட்கிறார். அதற்கு அவனும் ஒரு ஐந்து லட்சம் வேணும் என்று சொல்கிறான். அதைக் கேட்டுக் கொண்டே ஆறுதலாக நிமிர்ந்தவர் இப்ப வெறும் சான்றிதழுக்கு எல்லாம் கடன் குடுக்க வாங்கி அனுமதிக்காது தம்பி.

அப்ப நாங்கள் சுயமாய் தொழில் செய்ய கடன் பெற முடியாதா ஐயா என்று கேட்க அவரும் இப்ப வங்கி விவசாயத்திற்கும் கால்நடை வளர்ப்புக்கும்தான் கடன் தருகுது. அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ நாங்கள் வந்து பார்த்து அதற்குரிய பெறுமதியை கடனாகத் தருகிறோம் என்று சொல்ல அவனும் கேட்டுக்கொண்டு அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறான்.

                                            அவன் வந்து சொன்னதைக் கேட்டதும் சாமிநாதன் கொஞ்சம் யோசித்து விட்டு வா கண்ணப்பரிடம் போகலாம் என்று அவனையும் கூட்டிக் கொண்டு போய் அவரைச் சந்தித்து அவரிடம், ஐயா நீங்கள் நகரத்துக்கு போவதாய் இருந்தால் உங்களின்  இந்த மாடுகளை என்ன செய்யப் போறீங்கள் என்று கேட்கிறார். அவரும் நான் அவற்றை வித்துக் கொண்டு இருக்கிறேன் தம்பி. முன்பு பத்து மாடும் கன்றுகளும் இருந்தன. அதில் இதுவரை நாலும் சில கன்றுகளும் வித்துப் போட்டன். எல்லாம் நல்ல நாட்டு மாடுகள். உழவுக்கு வண்டிலுக்கு என்று தனித்தனியாக இருக்கு. இன்னும் ஆறு மாடுகளும் கன்றுகளும் இருக்கு என்று சொல்கிறார். சாமிநாதனும் விஷயத்தை சொல்லி வங்கியில் கடன் வாங்க மாடுகள் தந்து உதவ வேண்டும்.நீங்கள் பார்த்து சொல்லுங்கோ பணம் தருகிறோம் என்று சொல்கிறார். பின் அவர் சம்மதத்துடன் அங்கிருந்து மாடுகளையும் கன்றுகளையும் இருவருமாக ஓட்டிக் கொண்டு வீட்டுக்கு வருகிறார்கள். வரும்போது முத்து கேட்கிறான் உங்களுக்கு எப்படி ஐயா தெரியும் அவரிடம் மாடுகள் இருக்குதெண்டு. அதுவா நாங்கள் அங்கு இருக்கும்போது பல மாடுகள் குரல் கொடுக்கும் சத்தங்களைக் கேட்டேன். சில சின்னக் கன்றுகள் வளவுகளில்  துள்ளித் திரிவதையும் கண்டேன்....அத்துடன் இவர் குடிபெயரும்போது இவைகளை என்ன செய்வார் என்றும் யோசித்தேன் அவ்வளவுதான்.

                                       ஒன்றும் இல்லை ஐயா உங்களின் அனுபவத்துக்கு முன்னாள் நானெல்லாம் வெறும் பூஜ்யம்தான் என்கிறான். ஓட்டிக் கொண்டுவந்த மாடுகளை வீட்டுக்கு முன் வெறுமையாய் கிடந்த நிலத்தில் ஒரு தடுப்புகள் போட்டு பட்டியாக அடைத்து விட்டார்கள். அடுத்து வந்த சில நாட்களில் வங்கி அதிகாரிகள் வந்து பார்த்து லோன் பாஸ் பண்ணி மகேஸ்வரியிடம்  ஐந்து லட்சம் கடனாக கொடுக்கிறார்கள்..................!

பார்ப்போம் இனி ........!  ✍️

  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை சுவி அண்ணா, தொடருங்கள் தொடர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நான் என்ன வைச்சுக்கொண்டே வஞ்சகம் பண்ணுறன்? :cool:

உங்கள் கற்பனைகள் எல்லாம் எங்க போட்டுது..உங்கள் ஆக்கமும் எதிர்பார்க்கிறோம் தாத்தா.✍️

  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை தொடருங்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறோம்

10 hours ago, suvy said:

.......!

பார்ப்போம் இனி ........!  ✍️

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை ஒன்றே போதுமே......... (12).

                                                                  அன்று வக்கீல் தவராசாவின் அலுவலகத்துக்கு கையில் பைலுடன் நிர்மலா வருகிறாள். அங்கு சித்ரா போன் பேசிக் கொண்டு இருக்கிறாள். பேசி முடித்ததும் போனை மேசையில் வைத்து விட்டு நிர்மலாவிடம் நலம் விசாரித்து விட்டு என்ன விடயம் நிர்மலா, ஒரு போன் செய்திருந்தால் நானே அங்கு வந்திருப்பன் என்கிறாள். நிர்மலாவும் பரவாயில்லை சித்ரா, இந்த ஒரு கேசில் உங்களின் ஆலோசனை தேவை என்று சொல்லி பைலை எடுத்து நீட்ட அதனுள் இருந்த பேப்பர்கள் சில கீழே விழுகின்றன. அடடா என்று நிர்மலாவுடன் சித்ராவும் குனிந்து அவற்றைப் பொறுக்குகின்றாள். அப்பொழுது சித்ராவின் ப்ளவுசுக்குள் இருந்து சங்கிலி டாலருடன் நழுவி கீழே தொங்குகிறது. அதைக் கவனித்த நிர்மலாவுக்கு அது தனது தந்தையின் செயின் போல் தோன்ற என்ன சித்ரா உங்களின் செயினும் டாலரும் அழகாய் இருக்கிறது, ஆனால் ஆண்களுடையது போல் இருக்கிறது என்ன.

ஆமாம் நிர்மலா இது என் அப்பா நான் பட்டம் பெற்றபோது பரிசளித்தவர்.  ஓ ....அப்படியா நல்லாயிருக்கு என்று சொல்கிறாள். அப்படியே தற்செயலாக மேசைமேல் இருந்த போனைப் பார்த்ததும் அதுவும் தனது தந்தையுடையது போல் இருக்கவும் அங்கு அவளால் நிக்க முடியவில்லை. நீங்கள் இவற்றைப் பாருங்கள் நான் மாலையில் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கிளம்ப,  சித்ராவும் பரவாயில்லை நிர்மலா நானே கொண்டுவந்து தருகிறேன் என்றதும் சரி என்று சொல்லி உடனே கிளம்பி அவர்களுடைய அலுவலகத்துக்கு வந்து  நேராக தமையனின் அறைக்கு சென்று நடந்ததை சொல்கிறாள். உடனே ரவிதாசும் வா போய் விசாரிப்பம் என்று வெளிக்கிட அவனை நிர்மலா தடுத்து அவள் மாலை இங்கு வருகிறாள் அப்பொழுது பக்குவமாய் விசாரிக்கலாம் என்று சொல்ல அவனுக்கும் அது சரியென்று தோன்றுகின்றது.

                                        அன்று மாலை சித்ரா பைலுடன் அங்கு வரும்போது நிர்மலாவோடு ரவிதாசும் வரவேற்பறையில் அங்கிருந்தான். இருவரும் கோப்பி குடித்துக் கொண்டிருந்தனர். சித்ராவிடம் நீங்களும் ஒரு கோப்பி குடிக்கலாமே என்று சொல்ல சித்ராவும் வேண்டாம் நன்றி என்கிறாள். அப்போது நிர்மலா தமையனிடம்  அண்ணா சித்ராவின் செயினைப் பாரேன் வித்தியாசமாக அழகாக இருக்கிறது என்கிறாள். ரவிதாசும் எங்கே பாப்போம் என்று அவன் ஜாடையாய் கேட்டு அவள் மார்பை நோக்க,  ம்....இருங்கள் கழட்டித் தருகிறேன் என்று சித்ராவும் செயினைக் கழட்டி அவனிடம் தருகிறாள்.அதை கையில் வாங்கி நன்றாகப் பார்த்த ரவிதாஸ் நானும் இதுபோல் ஒன்று செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே அதை அவளிடம் தந்து விட்டு உங்களின் போன் நம்பரைத் தர முடியுமா எனக் கேட்கிறான். அவளும் அதுக்கென்ன என்று சொல்லி தனது போனால் அவனது நம்பரைக் கேட்டு அதுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி வைக்கிறாள். அப்போது அவர்கள் இருவரும் அந்தக் கைபேசியை நன்றாக உற்றுப் பார்க்கின்றனர். பின்பு பொதுவாக அவன் அவளை விசாரிப்பதுபோல் விசாரித்து அவளது இருப்பிடத்தையும் அறிந்து கொள்கிறான். அதன்பின் சித்ரா கிளம்பி செல்கிறாள். அப்போது நிர்மலா என்ன அண்ணா ஒன்றும் விசாரிக்காமல் அவளை அனுப்பி விட்டாய்  என்று சொல்ல அதற்கு ரவிதாசும் இந்தப் பெண்ணைப் பார்த்தால் பொய்யானவள் போல் தெரியவில்லை, ஒருவேளை நமது அப்பா இவைகளை இவளது தந்தைக்கு விற்றிருக்கலாம். இவளின் தந்தையை சந்தித்தால் அப்பாவின் விபரம் தெரியவரும் என்று நினைக்கிறேன் என்று சொல்ல நிர்மலாவும் ஓம்...அதுவும் நல்ல யோசனைதான் என்று சொல்கிறாள்.   நாளைக்கு நானே நேரில் சென்று இவர்களை நோட்டம் விடப்போகிறேன் என்கிறான்.

                                                                                  அடுத்தநாள் ரவிதாஸ் மிகவும் சாதாரண உடுப்பு அணிந்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சித்ராவினது வீட்டருகே சென்று நிறுத்தி விட்டு வேலியால்  எட்டி எட்டி  இவர்களது வீட்டை நோட்டம் விடுகிறான். அங்கே பட்டியில் மாடுகள் நிக்கின்றன. இரண்டு கன்றுக்குட்டிகள் முற்றத்தில் செல்லமாக முட்டி முட்டி விளையாடுகின்றன. அங்காலே வீட்டு விறாந்தையில் ஒருவர் இருக்கிறார்.மறுபுறம் திரும்பி அவர் இருப்பதாலும் தாடி மீசையுடன் இருப்பதாலும் அவனால் அந்த ஆளை  மட்டுக்கட்ட முடியவில்லை. சிறிது நேரத்தில் ஒரு பெண் வந்து அவருக்கு தேனீர் குடுத்து விட்டு அவர் அதை அருந்தும் அழகை ரசிப்பதுபோல் ஆர்வமாக பார்த்துக் கொண்டு அருகில் நிக்கிறாள். அவன் தனக்குள் நினைக்கிறான் இவர்கள் சித்ராவின் பெற்றோராய் இருக்க வேண்டும் என்று. ரவிதாசுக்கு அந்தப் பெண்மணியின் வசீகரமான சாந்தமான  முகம்தான் தெரிகிறது. இன்னும் அவரைத் தெரிய வில்லை. அதனால் அங்கும் இங்குமாக நடந்து வேலியால் எட்டி எட்டி அவர் முகத்தைப் பார்க்க முயன்று கொண்டிருக்கிறான்.  அப்போது பேப்பர், பால் எல்லாம் வீடுகளுக்குப் போட்டு விட்டு சையிக்கிளில் வீட்டுக்கு வந்த முத்து தனது வீட்டருகில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ரவிதாசைக் கண்டு மறித்து அண்ணே நீங்கள் யார் வேலியால எட்டி எட்டி பார்க்கிறீங்கள். இதற்குமுன் உங்களை நான் இங்கு பார்த்ததில்லையே என்று கேட்க ரவிதாசும் அவசரத்துக்கு என்ன சொல்வதென்று யோசித்து சட்டென்று தம்பி நான் மாடு வாங்க வந்தனான். முத்தத்தில் மாடுகளைக் கண்டதும் நின்று பார்க்கிறன். வீட்டுக்காரர் விப்பினமோ தெரியேல்ல என்று சொல்கிறான். ஓ....அப்படியா இது எங்களுடைய வீடுதான். ஆனால் நாங்கள் மாடுகள் விக்கிறதில்லை என்று சொல்லிவிட்டு சைக்கிள் ஹாண்டிலில் கை வைத்து திருப்ப முயல அவன் கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்த ரவிதாசும் உங்களின் கடிகாரம் அழகாய் இருக்கு, என்ன விலையிருக்கும் என்று இயல்பாகக் கேட்கிறான். தெரியவில்லை இது அப்பா எனக்கு பரிசாகத் தந்தது என்று சொல்லிவிட்டு, என்ன நீங்கள் மாடு வாங்க வந்ததாக சொல்லுறீங்கள். பின் கடிகாரம் பற்றி விசாரிக்கிறீங்கள், உண்மையை சொல்லுங்கள் நீங்கள் யார் என்று கொஞ்சம் கடுமையாக கேட்கிறான். முத்துவின் முகத்தில் கோபம் கொப்பளிக்கிறது........!

பார்ப்போம் இனி ...................!   ✍️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/3/2022 at 10:57, suvy said:

மகேஸ்வரி,சித்ரா,நிர்மலா

உங்கடை கதையள்ல வாற பொம்புளை பெயர்கள் முழுக்க என்ரை பக்கத்து வீட்டு ஆக்காமாரின்ரை பேர்களாயே கிடக்கு.....😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

உங்கடை கதையள்ல வாற பொம்புளை பெயர்கள் முழுக்க என்ரை பக்கத்து வீட்டு ஆக்காமாரின்ரை பேர்களாயே கிடக்கு.....😁

இது ஒரு நல்ல கேள்வி. இதில் வியப்பொன்றும் இல்லை கு.சா.......!

பொதுவா 1990 க்கு முன்பெல்லாம் இவை போன்ற பெயர்கள் ஈழத்தமிழர்களிடம் பரவலாக நிறைந்து இருக்கும். அதுபோல் கிறிஸ்தவர்களும் குறிப்பான சில பெயர்களையே வைத்து வருவார்கள்.பாடசாலையில் ஆசிரிய/ ஆசிரியைகள் ஆனாலும் சரி, கூடப் படிக்கும் பிள்ளைகள் ஆனாலும் சரி பெரும்பாலும் 4/10 இந்தப் பெயர்களே இருக்கும். ஆனால் இப்போது எல்லாமே மாறிவிட்டது......பலரும் எந்தவொரு அர்த்தத்திலும் வராத பெயர்களையே நாகரீகம் என்று பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள்.(எனது உறவுகளுக்குள்ளும் இது நடக்கிறது). ஆண் பிள்ளையெனில் தாய் தந்தையின் முதல் எழுத்துடன் "ன்" போட்டு விடுகிறார்கள். அப்படியே பெண் என்றால் "லா" அல்லது "னி" போட்டு விடுகிறார்கள்.....இங்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர்கள் மற்றும் தாங்கள் வசிக்கும் இடத்தின் பெயர் என்று வைத்து விடுகின்றார்கள். பார்த்து மௌனமாக கடந்து போக வேண்டியுள்ளது. அதனால் இந்த நாகரீகப் பெயர்களை நான் கூடியவரை தவிர்த்து விடுகின்றேன்......!  😢

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக நகர்கிறது அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை ஒன்றே போதுமே.......... (13).

                                                 என்ன தம்பி நீங்கள் இப்படிப் பேசுறீங்கள்.நான் மாடு வாங்கத்தான் வந்தனான். தற்செயலாகத்தான் உங்களின் கைக் கடிகாரத்தைப் பார்த்தேன் அவ்வளவுதான்.

இல்லை அண்ணை , நீங்கள் பொய் சொல்லுறீங்கள். நீங்கள் அணிந்திருப்பது சாதாரண ஆடைகள்தான் ஆனால் உங்களின் மோட்டார் சைக்கிலே லட்சத்துக்கு மேல் இருக்கும். அதைவிட உங்களின் தோற்றமும் வீதிகளில் திரிந்து மாட்டு வியாபாரம் செய்ப்பவர் போல் இல்ல. ஒன்று நீங்கள் வசதியானவராய் இருக்க வேண்டும், அல்லது எங்காவது சைக்கிள் திருடுபவராய் இருக்க வேண்டும் என்கிறான் முத்து.

                          இவர்கள் இப்படி வாக்குவாதப் பட்டுக்கொண்டிருக்க உள்ளே இருந்து என்ன அண்ணா பிரச்சினை என்று கேட்டுக்கொண்டே வந்த சித்ரா ரவிதாசைப் பார்த்ததும் திகைத்துப் போய் சார் நீங்களா, இது என்ன கோலம். எதுக்கு சார் இப்படி என்று கேட்கிறாள். உடனே முத்து அக்கா இவரை உனக்கு முன்பே தெரியுமா, உன்னைப் பார்க்கத்தான் வந்து வேலியால எட்டிப் பார்த்துக் கொண்டு நிக்கிறாரோ.

                                ஓம் அண்ணா, இவர்தான் நான் வேலை பார்க்கும் வணிக வளாகத்தின் சொந்தக்காரர். பின்பு யோசித்து நேற்று அப்பா பரிசளித்த செயினைப் பார்த்து அதுபோல் ஒன்று செய்ய வேண்டும் என்றவர். ஒருவேளை அதுக்காக வந்திருக்கலாம். ஆனால் ஏன் இப்படி மாறுவேடத்தில் வரவேணும் அதுதான் எனக்குப் புரியவில்லை என்று செல்கிறாள்.

                                அப்படியா என்னுடைய கடிகாரத்தையும் பார்த்து விலை எல்லாம் விசாரித்தாரே என்று சொல்லி விட்டு ரவிதாசைப் பார்த்து என்ன சார் உங்கட பிரச்சினை எதுவானாலும் சொல்லுங்கள் எங்களால் முடிந்த உதவியை செய்கிறம் என்கிறான். அப்போது ஒரு வெண்ணிற ஆடிக்கார் ஒன்று அன்னம்போல் அசைந்துவந்து அவர்கள் அருகில் நிக்கிறது. அதில் இருந்து தமையனைத் தேடி வந்த  நிர்மலா இறங்கி வருகிறாள். அவளை பார்த்த சித்ராவும்  அண்ணா இவர் நிர்மலா இவரின் தங்கை என்று முத்துவுக்கு அறிமுகம் செய்கிறாள்.

                   அந்நேரம் தங்கள் வீட்டின் முன்னால் கார் வந்து நிக்கும் சத்தம் கேட்டு திண்ணையில் இருந்து எழும்பிய சாமிநாதன் திரும்பி இவர்களைப் பார்க்க ஒரு நிமிடம் உற்றுப் பார்த்து தகப்பனைக் கண்ட நிர்மலா அண்ணா எங்கட அப்பா அண்ணா என்று சொல்லி விட்டு அப்பா அப்பா என்று கத்திக் கொண்டு உள்ளே சாமிநாதனை பார்த்து ஓடுகிறாள். பின்னாலேயே ரவிதாசும் அப்பா என்று அழுதுகொண்டு ஓட முத்துவும் சித்ராவும் ஒன்றும் புரியாமல் பின்னால் போகிறார்கள். ஓடிப்போய் தகப்பனின் காலைக் கட்டிப் பிடித்த நிர்மலா ஏனப்பா எங்களைத் தவிக்க விட்டுட்டுப் போனனீங்கள். உங்களை எங்கெல்லாம் தேடி அலைந்தோம் கிடைக்கவில்லையே என்று கதறுகிறாள். பின்னால் வந்த ரவிதாசும் தந்தையின் தோளில்  முகம் புதைத்து அழுகின்றான்.

                     இதற்குள் மகேஸ்வரியும் சித்ராவும் முத்துவும் நிலைமையை ஓரளவு புரிந்து கொள்கிறார்கள். மகேஸ்வரி முன்னால் வந்து மெதுவாக நிர்மலாவின் தலையை வருடி தன்னுடன் அணைத்துத் தூக்குகிறாள். சாமிநாதன் கண்களில் இருந்தும் கண்ணீர் நிரம்பி கன்னங்களில் வழிந்தோடுகின்றது. அவரும் ரவிதாசை அணைத்துக் கொண்டு தேம்பி அழுகின்றார். ரவிதாசும் நீங்கள் எங்களை விட்டுட்டுப் போன சில மாதங்களிலேயே அம்மாவும் எங்களை அனாதையாக விட்டுட்டுப் போய் விட்டா அப்பா. உங்களை நாங்கள் தேடாத இடமில்லை. ஏனப்பா இப்படி என்று அழுகிறான்.

                                                     ஒருவாறு எல்லோரும் ஒருவரையொருவராக தேற்றிக் கொண்டபின் மகேஸ்வரி எல்லோருக்கும் தேநீர் போட உள்ளே போகிறாள்.முத்துவும் ரவிதாசும் சிநேகபூர்வமாய் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு தோளில் சாய்ந்திருந்த நிர்மலாவிடம் சித்ரா அவரை முதன் முதல் சந்தித்ததில் இருந்து எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொல்கிறாள்.அதை எல்லோரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

                                                     தேநீர் குடித்தபின் அந்த இடங்களை பார்ப்பதற்கு ரவிதாசும் நிர்மலாவும் செல்கின்றனர். அப்போது பின்னால் வந்த முத்து சித்ராவிடம் கண் ஜாடை செய்து தனது கையில் இருந்த கடிகாரத்தைக் கழட்டி ரவிதாசிடம் தர சித்ராவும் கழுத்தில் இருந்து சங்கிலியைக் கழட்டுகிறாள். உடனே அவர்களைத் தடுத்த ரவிதாசும் கொஞ்சம் பொறுங்கோ, என்ன இது  இவை உங்களுக்கு அன்போடு அப்பா தந்த பரிசுகள்.அவை உங்களிடமே இருக்கட்டும்.நாங்கள் இவற்றுக்காக இங்கு வரவேயில்லை முத்து, எங்கள் அப்பாவைப் பற்றி ஏதாவது விபரம் அறியலாம் என்றுதான் வந்தோம் வந்ததுக்கு அப்பாவே கிடைத்து விட்டார். இவ்வளவு நாளும் ஒரு விரக்த்தியில் வாழ்ந்திருந்தோம் இப்போதான் உயிர் வந்ததுபோல் இருக்கிறது. நீங்கள் எங்கள் அப்பாவை ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டதற்கு நாங்கள் உங்களுக்கு எவ்வளவு செய்தாலும் ஈடாகாது என்கிறான்.........!

பார்ப்போம் இனி.......!  ✍️

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி ஒன்று சேர்ந்திட்டினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, suvy said:

இது ஒரு நல்ல கேள்வி. இதில் வியப்பொன்றும் இல்லை கு.சா.......!

பொதுவா 1990 க்கு முன்பெல்லாம் இவை போன்ற பெயர்கள் ஈழத்தமிழர்களிடம் பரவலாக நிறைந்து இருக்கும். அதுபோல் கிறிஸ்தவர்களும் குறிப்பான சில பெயர்களையே வைத்து வருவார்கள்.பாடசாலையில் ஆசிரிய/ ஆசிரியைகள் ஆனாலும் சரி, கூடப் படிக்கும் பிள்ளைகள் ஆனாலும் சரி பெரும்பாலும் 4/10 இந்தப் பெயர்களே இருக்கும். ஆனால் இப்போது எல்லாமே மாறிவிட்டது......பலரும் எந்தவொரு அர்த்தத்திலும் வராத பெயர்களையே நாகரீகம் என்று பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள்.(எனது உறவுகளுக்குள்ளும் இது நடக்கிறது). ஆண் பிள்ளையெனில் தாய் தந்தையின் முதல் எழுத்துடன் "ன்" போட்டு விடுகிறார்கள். அப்படியே பெண் என்றால் "லா" அல்லது "னி" போட்டு விடுகிறார்கள்.....இங்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர்கள் மற்றும் தாங்கள் வசிக்கும் இடத்தின் பெயர் என்று வைத்து விடுகின்றார்கள். பார்த்து மௌனமாக கடந்து போக வேண்டியுள்ளது. அதனால் இந்த நாகரீகப் பெயர்களை நான் கூடியவரை தவிர்த்து விடுகின்றேன்......!  😢

வெள்ளைக்காரரை மாதிரி குடும்ப பெயரை சந்ததி சந்ததியாக தொடர வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை ஒன்றே போதுமே..........(14).

                                                                             அப்போது நிர்மலாவும் தனது கைப்கையில் இருந்து காசோலை புத்தகத்தை எடுத்து நீங்கள் குறை நினைக்கக் கூடாது உங்களுக்கு தேவையான அளவு நிரப்பிக் கொள்ளுங்கள் என்று ஒரு வெற்றுக் காசோலையை ஒப்பமிட்டுக் குடுக்க உடனே முத்து அதை மறுத்து வேண்டாம் தங்கச்சி அது உங்களிடமே இருக்கட்டும்.  அப்பாவே எங்களுக்கு எவ்வளவோ செய்து விட்டார். சித்ராவும் ஓம் நிர்மலா நான் அவர் மானம் காக்க ஒரு தாவணித்துண்டுதான் குடுத்தேன், நிர்மலா இடைமறித்து அண்ணா இவளின் தாவணியைக் கட்டிக்கொண்டு அப்பா எப்படி  இருந்திருப்பார் என்று நினைத்துப் பார் செமையாய் இருக்குதில்ல அவனுக்கும் சிரிப்பு வருது அதை மறைத்து கொண்டு உனக்கு நேரங்காலம் தெரியாமல் எப்போதும் குறும்புதான் என்று சொல்லி அவள் தலையில் குட்டுகிறான். போ அண்ணா வலிக்குது என்று சினுங்க,  சித்ராவும் தொடர்ந்து அப்பா எங்களுக்கு கல்வி மட்டுமல்ல நிரந்தர வருமானத்துக்குரிய வழிகளும் செய்து, கடைத்தெருவில் பெரிய கடை ஒன்றை வாங்கவும் ஆலோசனைகள், வங்கியில் கடன் வாங்க என்று எல்லா உதவிகளையும் செய்திருக்கிறார்.இவை யாவும் அவர் செய்திரா விட்டால்  எங்களால் முடிந்திராது. இதுவே எங்கள் ஆயுளுக்கும் போதும். இந்த அயலில் எங்கள் குடும்பத்தை  ஒரு கௌரவமான நிலைக்கு உயர்த்தி விட்டுள்ளார். அதைவிட எந்நிலையிலும் தாழாத தன்னம்பிக்கையை எங்களுக்கு ஊட்டி இருக்கிறார். இதைவிட எங்களுக்கு வேறென்ன வேண்டும். ரவிதாசும் உடனே நீங்கள் இருவரும் இன்றிலிருந்து எங்களுடைய சகோதரர்கள், இது வெறும் வார்த்தையல்ல என் இதயத்திலிருந்து சொல்கிறேன் என்று சொல்ல, நிர்மலா இடைமறித்து வேண்டாம் சித்ரா இவனுக்கு தங்கையாய் இருந்தால் குட்டி குட்டியே உன் மூளையை கூழாக்கி விடுவான். நீ விரும்பினால் எனக்கு அண்ணியாக வாயேன் நான் அப்பாவிடமும் அம்மாவிடமும் கதைக்கிறேன் என்று சொல்ல சித்ராவின் முகம் மலர்ந்தாலும் உடனே சிறிது வாட்டமடைகிறது. ஏன்  சித்ரா நான் சொல்வது உனக்குப் பிடிக்கவில்லையா அல்லது அண்ணாவைப் பிடிக்கவில்லையா வேறு யாரையாவது விரும்புகிறாயா எதுவானாலும் தைரியமாகச் சொல்லு என்கிறாள். 

                                               முத்துவும் கொஞ்சம் யோசிக்க, அப்படியல்ல நிர்மலா உங்கள் குடும்பத்தில் வாழ்க்கைப் படுவதென்றால் அது எங்களுக்கு மிகப்பெரும் பாக்கியமாகத்தான் இருக்கும். ஆனால் என்று இழுக்க, ஆனால் என்ன சொல்லு நிர்மலாவும் முத்துவும் கேட்க, ரவிதாசுக்கு மனம் நிம்மதியாய் இருக்கு, அவன் இப்பொழுதுதான் வெளியூர் பயணமாக லண்டன் போகும் போதெல்லாம் அங்கு ஒரு தமிழ்  யுவதியை காதலிக்க ஆரம்பித்திருந்தான். அது இன்னும் நிர்மலாவுக்கு தெரியாது. சித்ராவும் ஆனால் நீங்கள் யாரும் குறை நினைக்க வேண்டாம். சில நாளாக நான் கவனித்துக்கொண்டு வருகின்றேன், இவ்வளவு காலமும் இல்லாமல் எங்கள் அம்மா மனம் சலனமடைகின்றா போல் இருக்கிறது. அப்பாவிடமும் அது தெரிந்தாலும் எதுவோ தடுப்பதுபோல் அம்மாவைத் தவிர்த்து அவர் விட்டேற்றியாக செல்வதையும் பார்க்கிறேன். ஆனால் இப்போதுதான் அவர் வீட்டை விட்டு வெளியேறியதற்கும் அம்மாவின் விருப்பத்தை ஏற்கத் தயங்குவதுமாக "இருதலைக் கொள்ளி எறும்பு போல்" தவிப்பதையும்  உணரமுடிகிறது.  நாங்கள் அறிய எனது அம்மாவையும்  சிறுவயதிலேயே அப்பாவுக்கு கலியாணம் செய்து வைத்து விட்டார்கள். உடனேயே அடுத்தடுத்து பிள்ளைகள் என்றும் குடிக்கும் அப்பாவோடு எப்போதும் சண்டை என்றும் ......அவ வாழ்க்கையில் எந்த ஒரு சுகமும் கண்டதில்லை. இப்ப சமீபகாலமாகத்தான் அம்மா முகத்தில் ஒரு மலர்ச்சியையும் மந்தகாசத்தையும் பார்க்கிறேன். அதுதான் நான் யோசிக்கிறேன்.

                                                                                                    இது ஒன்றும் எனக்குத் தெரியாதே அக்கா என்று முத்து சொல்ல உனக்கு என்னதான் தெரியும் முன்பெல்லாம் அம்மா என்கூட அறையில்தான் படுப்பது வழக்கம்.இப்போ உள்ளே குசினிக்குள்தான் படுக்கிறா. அதன் வரிச்சு மட்டைகளினூடாக அப்பாவைப் பார்ப்பதுபோல், பழைய காதல் பாட்டுக்களை ரேடியோவில் ரசித்துக் கேட்கிறா, என்னுடைய பவுடர் கியூடெக்ஸ் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பாவிக்கிறா. இதெல்லாம் நான் பார்க்காத புது அம்மாவாக இருக்கு. சொல்லும்போதே அவள் குரல் கரகரக்கிறது, கண்களில் நீர் கோர்க்கிறது. ஓம்...சித்ரா சொல்வது சரிதான், இன்று நானும் அதைப்  பார்த்தேன் என்கிறான் ரவிதாஸ் . எது வேலியால் எட்டி எட்டி பார்த்தீங்களே அப்போதா. என்கிறான் முத்து. தனக்குள் மாட்டைத்தவிர மற்றதெல்லாத்தையும் பார்த்திருக்கிறார்  அண்ணர். ஆமாம் அப்போது அப்பாவின் முதுகுதான் தெரிந்தது அம்மாவ நன்றாகவே பார்த்தேன் ரொமான்ஸ் முகத்தில் தெரிந்தது. அப்போது அவர்கள் உங்களின் பெற்றோர் என்றுதான் நினைத்தேன்.  நினைத்துப் பார்த்தால் அப்பாவின் வாழ்க்கையும் அப்படித்தான் போய் இருக்கிறது எந்நேரமும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்தார்........!

பார்ப்போம் இனி ...........!  ✍️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, suvy said:

பார்வை ஒன்றே போதுமே

வணக்கம் ஐயா!
கதையை எப்படி அருவி போல் எழுதுகின்றீர்கள்? எனக்கு ஒருவருக்கு பதில் எழுதவே உள்ள மூலை முடுக்கெல்லாம் யோசித்து மண்டையை சுவரில் இடிக்க வேண்டியுள்ளது.😁
உங்கள் உடம்பில் கலைமகள் குடியிருக்கின்றாள் என நினைக்கின்றேன்.🛕

வாழ்த்துக்கள்...தொடருங்கள் வாசிக்கின்றோம்.👏

  • கருத்துக்கள உறவுகள்

இனி பாக்க ஏலாது!
நேரடியாக இரண்டாம் திருமணம் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை ஒன்றே போதுமே.......(15).

                                                            வீட்டுக்கு வருகின்றார்கள். தூரத்தில் வரும்போதே கோழிக்கறியின் வாசனை மூக்கைத் துளைக்கிறது. முற்றத்தில் நின்ற சேவல் சட்டிக்குள் கொதித்துக் கொண்டிருக்கு. மகேஸ்வரியின் பழகிய கை பக்குவமாய் சட்டியை கிளறுகின்றது.அவள் மனசும் அதுபோல் கொதித்துக் கொண்டிருக்க நினைவுகள் உள்ளே பிராண்டிக் கொண்டிருக்கின்றன. கடவுளே எதோ ஒரு எண்ணம் என்னையும் அறியாமல் என்னை அலைக்கழித்து இந்த மனுஷன் என் மனசுக்குள் புகுந்து விட்டார். அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்ற திருப்தி. அது கூட உனக்குப் பொறுக்கவில்லையா. மனம் ரணமாய் வலிக்கிறது. யோசித்துப் பார்க்கிறாள், இது எப்படி......சில கோவில் தீர்த்தக்கிணறுகளில் ஒரு சான் அளவு தண்ணீர்தான் இருக்கும்.அபிஷேகத்தின் பொழுது பத்து குடமா, நூறு குடமா, ஆயிரம், லட்ஷம் குடமா நீர் சுரந்து கொண்டு இருக்கும் வற்றாது, அதுபோல் இப்பொழுது அவர்மீதுள்ள அன்பு பிரவாகித்து வருகிறதே, நான் என்ன செய்வேன். குழம்புபோல் மனமும் கொதிக்கிறது.

                          அவளின் நிலையில்தான் சாமிநாதனும் இருந்தார். சமீபகாலமாக அவளின் நடவடிக்கையில் மாற்றங்களை அவர் பார்த்துக் கொண்டுதான் வருகிறார். இப்போது திண்ணையில் இருந்து மகேஸ்வரியைப் பார்க்க அவளின் பரிதவிப்பு அவரை என்னமோ செய்கிறது. இதற்கெல்லாம் தானும் காரணமாகி விட்ட குற்றவுணர்வு மேலோங்கி அவரை என்னமோ செய்கிறது. கண்கள் பனிக்கின்றன. பிள்ளைகள் வந்து விட்டதால் மறுபுறம் திரும்பிப் புறங்கையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார். ஆனால் அவர்கள் அதைக் கவனித்து விடுகிறார்கள். மகேஸ்வரி வெளியில் வந்து வாங்கோ பிள்ளைகள் சாப்பாடு தயார். எல்லோரும் சாப்பிட்டு விட்டுத்தான் போகவேணும். தம்பி முத்து ஓடிப்போய் எல்லோருக்கும் வாழையிலைகள் வெட்டிக் கொண்டு வா அப்பு. பிள்ளை பாய்களை எடுத்து வந்து போடனை என்று சொல்லிக்கொண்டு பம்பரமாய் சுழல்கிறாள்.

                                                   எல்லோரும் சாப்பிடும்போது சாமிநாதனும் பேருக்கு சாப்பிட்டு விட்டு எழும்புகிறார், மகேஸ்வரிக்கு சாப்பிடவே மனமில்லை வெறும் தண்ணியைக் குடித்துவிட்டு எழும்புகிறாள். அம்மா சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது, இப்படி ஒரு விருந்து சாப்பிட்டு ரொம்ப காலமாச்சுது என்று ரவிதாஸ் சொல்ல நிர்மலாவும் ஓம் அம்மா என்று சொல்கிறாள். கிளம்புகிற நேரம் எல்லோருக்கும் ஒரு தயக்கமாய் இருக்கு. சாமிநாதனுக்கும் தான் எப்படி இனியும் இங்கிருப்பது என்ற தயக்கம் ஆனாலும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு முன்வந்து "முத்தம்மா" ஆம் இதுவரை அவளை அவர் அப்படித்தான் கூப்பிட்டு வந்திருக்கிறார். நீங்கள் விரும்பினால் என் பிள்ளைகளில் ஒருவரையும் உங்களின் பிள்ளைகளில்  ஒருவரையும் மணமுடித்து வைக்கலாமே என்று சொல்கிறார். அதற்கு அவளும்  அதென்ன புதிதாக இன்றைக்கு உங்க பிள்ளை , என் பிள்ளை என்று பிரித்துப் பேசுகிறீர்கள். ஆனாலும் நீங்கள் எது சொன்னாலும் எனக்கு சம்மதம். இவ்வளவு நாளும் இந்தப் பிள்ளைகளுக்கும் எனக்கும் ஒரு அரணாக இருந்து அதுகளை சொந்தக்காலில் நிக்குமளவு ஆளாக்கி விட்டது நீங்கள்தான். அன்று நீங்கள் சொல்லவில்லை யென்றால் முத்துவால்  படித்திருக்கவே முடியாது. அந்த நன்றியை நாங்கள் ஒருகாலமும் மறக்க மாட்டோம்.எதுக்கும் பிள்ளைகளையும் ஒரு வார்த்தை கேளுங்கள்.அவர்கள் முடிவெடுக்கட்டும் என்று சொல்லும்போதும் அவலறியாமல் குரல் கம்முகிறது கண்களில் நீர் தளும்புகிறது.

                                                           சாமிநாதனும்  பிள்ளைகள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கோ என்று சொல்ல ரவிதாஸ் முன்வந்து அப்பா நீங்களும் இவ்வளவுகாலமாய் வேலை வேலை என்று வீட்டையும்  மறந்து எங்களுக்காக உழைத்தீர்கள். அதனாலோ என்னவோ எங்கள் அம்மாவையும் இழக்க வேண்டி வந்து விட்டது. பின் வந்த இடத்தில் இவர்களின் குடும்பத்தையும் ஒரு மேல் நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறீங்கள். அதுபோல்தான் இந்த அம்மாவும் தன் பிள்ளைகளின் நலனுக்காகவே இவ்வளவு காலமும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். இனி நீங்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும்  ஆசைப்படுகின்றோம் என்று சொல்ல, சித்ரா முன்வந்து ஓமம்மா அண்ணா சொல்வதுதான் சரி என்கிறாள். சற்றுமுன் நாங்கள் தோட்டத்தில் இதை பற்றித்தான் கதைத்தோம் என நிர்மலாவும் சொல்லிவிட்டு ஓம்....நீங்கள் "பார்வை ஒன்றே போதுமே" என்று பார்வையால் வாழ்ந்தது போதும்  மகேஸ்வரியின் கையைப் பிடித்து நீங்கள் எங்களுக்கும் அம்மாவாக வேணும் இதை நீங்கள் மறுக்கக் கூடாது என்கிறாள். மகேஸ்வரி வெட்கத்துடன் சாமிநாதனைப் பார்க்க அவரும் மௌனமாக ஓம் என்று தலையசைக்கிறார்.

                                           கொஞ்ச நேரத்தில் ஆடைகள் மாற்றிக்கொண்டு வந்த முத்துவும் சித்ராவும் அம்மா இன்று நாங்கள் அண்ணாத்தை படம் பார்த்துவிட்டு அண்ணாவின் பங்களாவில்தான் இரவு தங்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டே ஆடி காரில் ஓடிப்போய் ஏற அது கோர்ன் அடித்துக் கொண்டு சீறிச் செல்கின்றது.

                                    திண்ணைத் தூணைப் பிடித்தபடி ஒருக்களித்து நின்று கொண்டு மகேஸ்வரி வெட்கமும் காதலும் கலந்து காலால் நிலத்தை கீறிக்கொண்டு நிக்கிறாள். "காணாத உறவொன்று கண்முன் நிற்க வாழாத பெண் ஒன்று வழி கண்டதுபோல்" தலை தாழ்திருக்க விழிகளை அசைத்து மேற்கண்ணால் அவரைப் பார்க்கிறாள். சாமிநாதனும் மெல்ல நெருங்கி வந்து அவள் தோளைத் தொட்டு முத்தம்மா என்று மெல்ல சொல்ல .....

ம்.....என்கிறாள். சற்று மௌனம்..... பின் ஏன் நீங்கள் ரஜினி படம் பார்க்க போகவில்லையா......

இல்லை......

ஏனாம் .....

நாங்கள் வலிமை பார்க்கலாம் என்று ......

அப்படியா எனக்கு அஜித் படமும் பிடிக்கும்.

அப்படியென்றால் இருவரும் சேர்ந்தே பார்க்கலாம். தோள் மீதிருந்த கையை மெதுவாக அழுத்துகின்றார். அவளறியாமலே உடல் இசைவாக குழைகிறது.கூடவே மேனியெங்கும் சிறு நடுக்கமும்......இவ்வளவு காலமும் இருவருக்குள்ளும் தூங்கிக் கிடந்த ஹார்மோன்கள் சலனமடைந்து  கிளர்ச்சியுற்று ஹார்மோனியம் வாசிக்கத் தயாராகின்றன. இதற்கு மேலும் தாங்க முடியாமல் "அரங்கனின் தோளில் ஆண்டாள் மாலைபோல்" கைகளை அவர் கழுத்தில் போட்டு  மார்பில் மலர்கிறாள். துவளும் அவளது இடையை தன் இரு கைகளால் இறுக்கி அந்த மலரை தன்னுடன் சேர்த்தணைத்தபடி  திண்ணையில் அமர்கிறார் சாமிநாதன்......!

  யாவும் கற்பனை......!

  யாழ் 24 அகவைக்காக

 அன்புடன் சுவி......!

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுவி அண்ணா. பெண்களின் இரண்டாவது திருமணத்தை முன்னரெ எமது சமூகம் ஆதரித்திருக்கிறது என்பது எமது கிராமத்தில் அறுபது எழுபது  ஆண்டுகளிற்கு முன் நடந்த பல இரண்டாவது திருமணங்கள் சான்றாய் இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, ஏராளன் said:

இனி பாக்க ஏலாது!
நேரடியாக இரண்டாம் திருமணம் தான்.

 

1 hour ago, ஏராளன் said:

நன்றி சுவி அண்ணா. பெண்களின் இரண்டாவது திருமணத்தை முன்னரெ எமது சமூகம் ஆதரித்திருக்கிறது என்பது எமது கிராமத்தில் அறுபது எழுபது  ஆண்டுகளிற்கு முன் நடந்த பல இரண்டாவது திருமணங்கள் சான்றாய் இருக்கிறது.

என்ன இவர் கலியாணத்திலையே நிக்கிறார்? 😁

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

 

என்ன இவர் கலியாணத்திலையே நிக்கிறார்? 😁

என்ர சிறுவயது நண்பன் சொன்னான் நீ தப்பிட்டாய், நான் சிக்கிற்றன் என்று!😂

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின்னர் அடுத்த பகுதி எப்போது வரும் என ஆவலுடன் ஏங்க வைத்த்ச் ஒரு தொடர் கதை…! அரங்கனின் மார்பில் தவளும் ஆண்டாளின் மாலையாக….! வரிகளை ரசித்தேன்…! வைர முத்துவுக்குக் கேட்டுவிடப் போகின்றது..பரவாயில்லை…!

சங்கிகள் காதில் விழுந்தால் தான் பிரச்சனை…!

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும்  கதையை  வாசிக்கவில்லை  அண்ணா

மேலோட்டமாக கதைக்கு  வந்த கருத்துக்களை  மட்டும்  பார்த்தேன்

புல்லரித்துப்போகும் அளவுக்கு வசிட்டர்களின்  வாழ்த்துக்களும் இருக்கிறது

படிக்கணும்

படித்து  விட்டு  விரைவில்  கருத்திடுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பின் தொடர்கிறேன் சுவியண்ணா ...தொடருங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.