Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

1) எப்படி ?

2) சரி

3) என்னுடைய (இரஸ்யாவின்) அழிவிலிருந்துதான்  சுதந்திரம் ஆரம்பமாகிறதா ? 

4) யுத்தத்தினை அனுபவித்ததன் காரணமாக 

5) யார் ஆதரித்தது ? யுத்தம் என்பதை ஒருவருமே ஆதரிக்கப்போவதில்லை. 

எனக்குள்ள கேள்வியெல்லாம் இதுதான்..

இதுவரை மேற்குநாடுகள் செய்த செய்கின்ற செய்யப்போகின்ற அழிவுகளுக்கு குத்தி முறியும் நீங்கள் எப்படி பதில் சொல்லப்போகிறீர்கள் ?

1) உக்ரேனியர்கள் தனியான மக்கள் கூட்டம்.

எப்படி ?

இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் எப்படி ஒரு இனத்தவர், ஒரு மதத்தினர், ஒரு கலாசார தொன்மையினைக் கொண்டவர்கள் இல்லையோ, அவ்வாறே உக்ரேனியர்களும் ரஸ்ஸியர்களும். இதை என்னிடம் இருந்து கேட்டுத்தான் நீங்கள் அறியவேண்டும் என்றில்லை, கிருபன்கூட இதே திரியில் பலாமுறை இதுபற்றி விளக்கமளித்திருக்கிரார். அதுமட்டுமல்லாமல் பல்துறை வித்தகரான நீங்கள் இதுபற்றி நிச்சயமாக அறிந்தே இருப்பீர்காள். உங்களுக்கு நீண்டதொரு சரித்திரப் பாடத்தை நான் எடுத்து உங்களின் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை 

2) அவர்களுக்குத் தேவையானதை அவர்களே தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது.

சரி

உக்ரேனியர்களே தமது நாட்டினை, தமது எதிர்காலத்தை எவ்வாறு தீர்மானித்துக் கட்டியெழுப்பவேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள் போலவிருக்கிறதென்பதால், இதுபற்றி மேலும் நான் எழுதத் தேவையில்லை என்று நினைக்கிறேன். 

3) அதனை நிராகரித்து அவர்கள் மேல் அழிவு யுத்தம் ஒன்றினை ரஸ்ஸியா ஏவி இருப்பது அநீதியானது.

எமக்கு இழைக்கப்பட்ட அநீதியிலிருந்து நான் உக்ரேனின் இன்றைய நிலையினைப் பார்க்கிறேன். அதனால்,

என்னுடைய (இரஸ்யாவின்) அழிவிலிருந்துதான்  சுதந்திரம் ஆரம்பமாகிறதா ? 

தனியான உக்ரேனிய மக்கள் கூட்டத்தைப் போன்று இன்னம் பல மக்கள் கூட்டங்களை  அடாத்தாக தன்னுடன் சேர்த்தே சோவியத் ஒன்றியத்தை ரஸ்ஸியா உருவாக்கியது. ஆகவே, 1991 இல் இந்த தனியான மக்கள் கூட்டங்கள் சுதந்திரமாக வெளியேறியபோதே சோவியத் ஒன்றியம் எனும் போலியான ராச்சியம் அழிந்துவிட்டது. 

அதற்குப் பின்னரும் கூட, ரஸ்ஸியாவின் இருப்பும் பாதுகாப்பும் உக்ரேன் உட்பட்ட அயல் நாடுகள் தனக்குக் கீழ கட்டுப்பட்டு, அடிமைகளாக இருப்பதன் மூலம் தான் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று ரஸ்ஸியா கருதினால் ,  உக்ரேன் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதும் தவறில்லையே? தன்னை ரஸ்ஸியா ஆக்கிரமித்துவிடும் என்று உக்ரேன் எப்போதும் பயத்தில் வாழ்வதைக் காட்டிலும், தனக்குப் பாதுகாப்பைத் தேடிக்கொள்வதை எப்படித் தவறென்று கூறமுடியும்? 
 உக்ரேன் சுதந்திரமாக இருப்பது ரஸ்ஸியாவை அழிக்கும் என்றால், உக்ரேனை அழித்து ரஸ்ஸியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சரிதான் என்கிறீர்களா? தனது எல்லையில் நேட்டோவிற்கு ஆதரவான நாடுகள் உருவாகக் கூடாதென்று ரஸ்ஸியா உக்ரேனை இன்று ஆக்கிரமிப்பதுபோல, சுற்றியுள்ள ஏனைய நாடுகளையும் ஆக்கிரமிக்கும் நிலை வரலாம். இதனை இல்லையென்று உங்களால் மறுக்க முடியாது. ரஸ்ஸியாவின் பாதுகாப்பிற்காக இந்த தனியான மக்கள் கூட்டங்கள் பலியாக்கப்படலாம், அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

4) அவர்களின் வலி எனக்குப் புரிகிறது. அவ்வளவுதான். 

யுத்தத்தினை அனுபவித்ததன் காரணமாக

நிச்சயமாக. ஒரு இனவழிப்பு யுத்தத்தை எதிர்கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்கிற நிலையிலிருந்து உக்ரேனியர்களின் அவலத்தை நான் பார்க்கிறேன்.. 

5) அப்படியானால், உக்ரேன் மக்கள் தம்மை தமது விருப்பத்தின் பேரில் ஆள, சுதந்திரமாக வாழ விடுங்கள், அவர்கள் மீதான ரஸ்ஸியாவின் அழிவு ஆக்கிரமிப்பு யுத்தத்தினை ஆதரிக்காதீர்கள்.

யார் ஆதரித்தது ? யுத்தம் என்பதை ஒருவருமே ஆதரிக்கப்போவதில்லை. 

நீங்கள் ரஸ்ஸியாவை ஆதரிக்கவில்லையா? பின் எதற்காக கேள்வி 3 இல் என்னுடைய (ரஸ்ஸியாவின்) என்று எழுதினீர்கள்?

நீங்கள் ரஸ்ஸியாவை ஆதரிக்கவில்லையென்றால் நல்லதுதான். 

மேலும், நான் அதனை எழுதியது குமாரசாமியின் கேள்விக்குப் பதிலாகத்தான். 

இதுவரை மேற்குநாடுகள் செய்த செய்கின்ற செய்யப்போகின்ற அழிவுகளுக்கு குத்தி முறியும் நீங்கள் எப்படி பதில் சொல்லப்போகிறீர்கள் ?

சர்வாதிகாரிகளுக்கும், போர்க்குற்றவாளிகளுக்கும், அடக்குமுறையாளர்களுக்கும் எதிரான மக்களின் போராட்டத்திற்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும். அதில் மேற்குலகு பின்னால் இருந்து உதவினால் என்ன, இல்லாவிட்டால் என்ன, அவர்களுக்கான ஆதரவினை நான் தெரிவிக்கவேண்டியது எனது கடமையாகவே பார்க்கிறேன். 

இதுவரை மேற்குலகு செய்த அக்கிரமங்களையும், அழிவுகளையும் நான் வரவேற்கவில்லை. ஈராக்கிலும், அப்கானிஸ்த்தானிலும் மேற்குலகு செய்த அக்கிரமங்களை நியாயப்படுத்த எந்தவகையிலும் முடியாது. அவையும் போர்க்குற்றங்களே. மனித நாகரீகத்திற்கு எதிரான குற்றங்களே. 

இனிமேல் மேற்குலகினால் நடத்தப்படப்போகும் அக்கிரமங்கள் குறித்து இனிமேல்த்தான் அறியமுடியும். அப்பாவிகளைக் கொன்றால், யாராக இருந்தாலும் குற்றவாளிகளே, ஏன், தமிழர்காளாக இருந்தாலும் கூட

  • Replies 477
  • Views 30.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அப்ப அந்த ஆட்டைய போடுற விசயம் ரஷ்யாவிட்டையும் வெனிசுலாவிட்டையும் நடக்கல....அதத்தானே சொல்ல வாறிங்க.....😄

ஈரான் கதை பெரிய கதை 😁

ரஸ்யா சரி வரவில்லை. ஆனால்  யூக்ரேனை அதற்காக பயன்படுத்துகிறார்கள். வெனுசூலாவிடம் பேச்சு நடக்கிறது. அவர்களின் தடை  சுயநலத்துக்காக வெனிசூலாவின் தடை எடுக்கப்படும். ஈரானிடம் பேச்சு நடக்கிறது. சுயநலத்துக்காக அவர்களின் தடையும் எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, nunavilan said:

ரஸ்யா சரி வரவில்லை. ஆனால்  யூக்ரேனை அதற்காக பயன்படுத்துகிறார்கள். வெனுசூலாவிடம் பேச்சு நடக்கிறது. அவர்களின் தடை  சுயநலத்துக்காக வெனிசூலாவின் தடை எடுக்கப்படும். ஈரானிடம் பேச்சு நடக்கிறது. சுயநலத்துக்காக அவர்களின் தடையும் எடுக்கலாம்.

அதைத்தான் நான் முதலே சொன்னனே.....ஈரானோடை தடை எடுக்கிறது பற்றி கதைக்கினம் எண்டு....
அதாவது எப்பிடிப்பட்டாவது ரஷ்யாவை விழுத்தோணும் அதுதான் இப்ப விசயம்.

39 minutes ago, ரஞ்சித் said:

நான் அதனை எழுதியது குமாரசாமியின் கேள்விக்குப் பதிலாகத்தான். 

குமாரசாமி அண்ணையிலை தொடங்கி தனிய அண்ணைக்கு வந்து இப்ப குமாரசாமியிலை வந்து நிக்கிது.....அடுத்தது டிரக்டா டேய் குமாரசாமிதான்....😁

அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி....:cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

குமாரசாமி அண்ணையிலை தொடங்கி தனிய அண்ணைக்கு வந்து இப்ப குமாரசாமியிலை வந்து நிக்கிது.....அடுத்தது டிரக்டா டேய் குமாரசாமிதான்....😁

அண்ணை,

உங்களுக்கு நேர எழுதேக்குள்ள குமாரசாமியண்ணை எண்டு எழுதுறன். மற்ற ஆக்களுக்கு உங்களை மேற்கோள் காட்டேக்குள்ள குமாரசாமி எண்டு சொல்லுறன்.

உதெல்லாத்தையும் சீரியஸாய் எடுக்காதேங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, ரஞ்சித் said:

அண்ணை,

உங்களுக்கு நேர எழுதேக்குள்ள குமாரசாமியண்ணை எண்டு எழுதுறன். மற்ற ஆக்களுக்கு உங்களை மேற்கோள் காட்டேக்குள்ள குமாரசாமி எண்டு சொல்லுறன்.

உதெல்லாத்தையும் சீரியஸாய் எடுக்காதேங்கோ.

அது சும்மா பகிடிக்கு  எழுதினது. சீரியசாக  எடுக்கவேயில்லை.....நெடுக இந்த திரி உம்மெண்டு இருக்கக்கூடாதெல்லோ....😁

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரஞ்சித் said:

1) உக்ரேனியர்கள் தனியான மக்கள் கூட்டம்.

எப்படி ?

இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் எப்படி ஒரு இனத்தவர், ஒரு மதத்தினர், ஒரு கலாசார தொன்மையினைக் கொண்டவர்கள் இல்லையோ, அவ்வாறே உக்ரேனியர்களும் ரஸ்ஸியர்களும். இதை என்னிடம் இருந்து கேட்டுத்தான் நீங்கள் அறியவேண்டும் என்றில்லை, கிருபன்கூட இதே திரியில் பலாமுறை இதுபற்றி விளக்கமளித்திருக்கிரார். அதுமட்டுமல்லாமல் பல்துறை வித்தகரான நீங்கள் இதுபற்றி நிச்சயமாக அறிந்தே இருப்பீர்காள். உங்களுக்கு நீண்டதொரு சரித்திரப் பாடத்தை நான் எடுத்து உங்களின் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை 

2) அவர்களுக்குத் தேவையானதை அவர்களே தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது.

சரி

உக்ரேனியர்களே தமது நாட்டினை, தமது எதிர்காலத்தை எவ்வாறு தீர்மானித்துக் கட்டியெழுப்பவேண்டும் என்பதை முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள் போலவிருக்கிறதென்பதால், இதுபற்றி மேலும் நான் எழுதத் தேவையில்லை என்று நினைக்கிறேன். 

3) அதனை நிராகரித்து அவர்கள் மேல் அழிவு யுத்தம் ஒன்றினை ரஸ்ஸியா ஏவி இருப்பது அநீதியானது.

எமக்கு இழைக்கப்பட்ட அநீதியிலிருந்து நான் உக்ரேனின் இன்றைய நிலையினைப் பார்க்கிறேன். அதனால்,

என்னுடைய (இரஸ்யாவின்) அழிவிலிருந்துதான்  சுதந்திரம் ஆரம்பமாகிறதா ? 

தனியான உக்ரேனிய மக்கள் கூட்டத்தைப் போன்று இன்னம் பல மக்கள் கூட்டங்களை  அடாத்தாக தன்னுடன் சேர்த்தே சோவியத் ஒன்றியத்தை ரஸ்ஸியா உருவாக்கியது. ஆகவே, 1991 இல் இந்த தனியான மக்கள் கூட்டங்கள் சுதந்திரமாக வெளியேறியபோதே சோவியத் ஒன்றியம் எனும் போலியான ராச்சியம் அழிந்துவிட்டது. 

அதற்குப் பின்னரும் கூட, ரஸ்ஸியாவின் இருப்பும் பாதுகாப்பும் உக்ரேன் உட்பட்ட அயல் நாடுகள் தனக்குக் கீழ கட்டுப்பட்டு, அடிமைகளாக இருப்பதன் மூலம் தான் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று ரஸ்ஸியா கருதினால் ,  உக்ரேன் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதும் தவறில்லையே? தன்னை ரஸ்ஸியா ஆக்கிரமித்துவிடும் என்று உக்ரேன் எப்போதும் பயத்தில் வாழ்வதைக் காட்டிலும், தனக்குப் பாதுகாப்பைத் தேடிக்கொள்வதை எப்படித் தவறென்று கூறமுடியும்? 
 உக்ரேன் சுதந்திரமாக இருப்பது ரஸ்ஸியாவை அழிக்கும் என்றால், உக்ரேனை அழித்து ரஸ்ஸியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சரிதான் என்கிறீர்களா? தனது எல்லையில் நேட்டோவிற்கு ஆதரவான நாடுகள் உருவாகக் கூடாதென்று ரஸ்ஸியா உக்ரேனை இன்று ஆக்கிரமிப்பதுபோல, சுற்றியுள்ள ஏனைய நாடுகளையும் ஆக்கிரமிக்கும் நிலை வரலாம். இதனை இல்லையென்று உங்களால் மறுக்க முடியாது. ரஸ்ஸியாவின் பாதுகாப்பிற்காக இந்த தனியான மக்கள் கூட்டங்கள் பலியாக்கப்படலாம், அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

4) அவர்களின் வலி எனக்குப் புரிகிறது. அவ்வளவுதான். 

யுத்தத்தினை அனுபவித்ததன் காரணமாக

நிச்சயமாக. ஒரு இனவழிப்பு யுத்தத்தை எதிர்கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்கிற நிலையிலிருந்து உக்ரேனியர்களின் அவலத்தை நான் பார்க்கிறேன்.. 

5) அப்படியானால், உக்ரேன் மக்கள் தம்மை தமது விருப்பத்தின் பேரில் ஆள, சுதந்திரமாக வாழ விடுங்கள், அவர்கள் மீதான ரஸ்ஸியாவின் அழிவு ஆக்கிரமிப்பு யுத்தத்தினை ஆதரிக்காதீர்கள்.

யார் ஆதரித்தது ? யுத்தம் என்பதை ஒருவருமே ஆதரிக்கப்போவதில்லை. 

நீங்கள் ரஸ்ஸியாவை ஆதரிக்கவில்லையா? பின் எதற்காக கேள்வி 3 இல் என்னுடைய (ரஸ்ஸியாவின்) என்று எழுதினீர்கள்?

நீங்கள் ரஸ்ஸியாவை ஆதரிக்கவில்லையென்றால் நல்லதுதான். 

மேலும், நான் அதனை எழுதியது குமாரசாமியின் கேள்விக்குப் பதிலாகத்தான். 

இதுவரை மேற்குநாடுகள் செய்த செய்கின்ற செய்யப்போகின்ற அழிவுகளுக்கு குத்தி முறியும் நீங்கள் எப்படி பதில் சொல்லப்போகிறீர்கள் ?

சர்வாதிகாரிகளுக்கும், போர்க்குற்றவாளிகளுக்கும், அடக்குமுறையாளர்களுக்கும் எதிரான மக்களின் போராட்டத்திற்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும். அதில் மேற்குலகு பின்னால் இருந்து உதவினால் என்ன, இல்லாவிட்டால் என்ன, அவர்களுக்கான ஆதரவினை நான் தெரிவிக்கவேண்டியது எனது கடமையாகவே பார்க்கிறேன். 

இதுவரை மேற்குலகு செய்த அக்கிரமங்களையும், அழிவுகளையும் நான் வரவேற்கவில்லை. ஈராக்கிலும், அப்கானிஸ்த்தானிலும் மேற்குலகு செய்த அக்கிரமங்களை நியாயப்படுத்த எந்தவகையிலும் முடியாது. அவையும் போர்க்குற்றங்களே. மனித நாகரீகத்திற்கு எதிரான குற்றங்களே. 

இனிமேல் மேற்குலகினால் நடத்தப்படப்போகும் அக்கிரமங்கள் குறித்து இனிமேல்த்தான் அறியமுடியும். அப்பாவிகளைக் கொன்றால், யாராக இருந்தாலும் குற்றவாளிகளே, ஏன், தமிழர்காளாக இருந்தாலும் கூட

1) உங்கள் பதில் விஞ்ஞான / வரலாற்று ஆதாரங்களை குறிப்பிட்டதாக இல்லை. மேம்போக்காக யூகத்தின் அல்லது அனுமானத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

3) எங்கள் தீர்மானங்கள் "ஜனநாயகம்" என்பதை மட்டும் எடுகோளாகக் கொண்டதாக இருக்க  முடியாது. ஐரோப்பிய, கிழக்கு ஐரோப்பிய வரலாற்றையும் அதன்வழியாக அவர்களின் வாழ்க்கை முறையையும், நம்பிக்கைகளையும் புரிந்துகொண்டதன் அடிப்படையில் எங்கள் தீர்மானங்கள் இருக்க வேண்டும். அப்படி இல்லாது போனால் எங்கள் முடிவுகள் பக்கச் சார்பு  உள்ளதாகவும் மேம்போக்கானதாகவும் இருக்குமபாயம் உள்ளது.

5) உண்மையைச் சொல்லுங்கள்..

உக்ரேனின் இந்த அழிவு மிகப் பிரமாதமாக மேற்கின் ஆழும் வர்க்கத்தால் செதுக்கப்பட்டுள்ளதை நீங்கள் உணரவில்லையா...?

இந்த யுத்தம் தவிர்த்திருக்கக்கூடியதல்லவா..? 

யுத்தம் ஆரம்பமாகியவுடன் மேற்கின் நடவடிக்கைகள் மிக நேர்த்தியான ஒழுங்கில், வேகமாக இடம்பெறுவதை பார்க்கும்போது, இத்தகையதொரு நிலையை ஏற்கனவே அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள் என்பது புரிகிறதல்லவா..?

உண்மையில் இந்த படையெடுப்பு உக்ரேன் மீதான படையெடுப்பு மட்டும்தானா அல்லது புதிய   உலக ஒழுங்கு தொடர்பான கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான கயிறிழுப்பா? 

இந்த யுத்தத்துடன் உலகம் இரண்டாக பிரிந்துவிட்டதை தாங்கள் உணரவில்லையா?

12 hours ago, nunavilan said:

ரஸ்யா சரி வரவில்லை. ஆனால்  யூக்ரேனை அதற்காக பயன்படுத்துகிறார்கள். வெனுசூலாவிடம் பேச்சு நடக்கிறது. அவர்களின் தடை  சுயநலத்துக்காக வெனிசூலாவின் தடை எடுக்கப்படும். ஈரானிடம் பேச்சு நடக்கிறது. சுயநலத்துக்காக அவர்களின் தடையும் எடுக்கலாம்.

வெனிசுவேலாவுக்கு ஏன் தடை விதிச்சவங்கள்.விப்ப ஏன் தடைய எடுக்க நிக்கிறாங்கள் எண்டு கிருபனட்ட ஒருக்கா கேட்டுப்பாருங்கோவன்...அதுக்கும் அவர் ஒரு விளக்கம் வச்சிருப்பார்..

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

நான் சொல்ல வருவது தமிழர் போராட்டமும், உக்ரேனிய யுத்தமும் இரு வேறு துருவங்கள் ...தமிழர் நாடு கிடைத்த பின்னர் வேறு நாடுகளோடு சேர்ந்து இலங்கையை தாக்கவில்லை ....அதன் பாதுகாப்புக்கு எதிராய் செயற்படவில்லை ...ஆனால் உக்ரேனியர் செய்வது அதைத் தான் 

தமிழர்களுக்கு நாடு கிடைக்கவில்லை. கிடைக்கவும் வழியில்லை. அதனால் இலங்கையைத் தாக்கவில்லை என்று வசனம் விடுவதில் அர்த்தமில்லை. மற்றும்படி உக்கிரேனியர் ரஷ்யாவைத் தாக்கவில்லை. ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கத்தான் பல கிழக்கைரோப்பிய நாடுகள் போல நேட்டோவில் இணைய முயற்சித்தது. இப்போது ரஷ்யா உக்கிரேனை ஆக்கிரமித்ததால் நடுநிலை நாடுகளான பின்லாந்து, ஸ்வீடன் போன்றன நேட்டோவில் இணையக்கூடும். அணுவாயதம் உள்ள நாடுகளின் கூட்டில் இணைந்தால்தான் தமது சுதந்திரத்தைப் பாதுகாக்க முடியும் என்ற யதார்த்த நிலைதான் உலகில் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

வெனிசுவேலாவுக்கு ஏன் தடை விதிச்சவங்கள்.விப்ப ஏன் தடைய எடுக்க நிக்கிறாங்கள் எண்டு கிருபனட்ட ஒருக்கா கேட்டுப்பாருங்கோவன்...அதுக்கும் அவர் ஒரு விளக்கம் வச்சிருப்பார்..

அது மட்டுமில்லை. இப்ப உக்ரேன்ரை  அரசர் காலத்து வரலாறுகளையும் அசைபோட வெளிக்கிட்டினம்.ரஷ்ய அரசர்காலம் உக்ரேன் அரசன் காலத்தையெல்லாம் மீளாய்வு செய்யுறவையள் கனேடிய வரலாறு அண்ணன் அமெரிக்கன் வரலாறு அங்காலை அவுஸ்ரேலியன் வரலாறு எல்லாத்தையும் அலசி உரசி பாப்பினமோ?

இல்லாட்டி  பலஸ்தீனியன் வரலாறைத்தான் பிரட்டி பாப்பினமோ? இஸ்ரேல்காரன் டெய்லி அடிக்கிறான் அதையெல்லாம் கதைக்க மாட்டினம். ஈரானிலை அதுமீறி குண்டடிச்சதையெல்லாம் கதைக்க மாட்டினம்.

உக்ரேன் எண்டவுடனை இரத்தக்கண்ணீராய் வழியுதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

எங்களுக்கு ரஷ்யாவும் நண்பனல்ல உக்கிரேனும் நண்பனல்ல.......இருவருமே எம்மினத்தை அழித்த அழிக்க துணைபோன கொலைகாரர்கள்......இப்போது தங்களுக்குள் அடிபடுகிறார்கள் துழைஞ்சு போகட்டும். ......இன்று உக்கிரேனில் இருந்து ஏதிலிகளாகவும் அகதிகளாகவும் போகும் பொதுமக்களைப் பார்க்க ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும் உள்ளுக்குள் சிறு திருப்தி (மகிழ்ச்சி அல்ல) இருக்கிறது........!

                                காரணம் இந்தக் குடும்பங்களில் பத்தில் ஒன்றாவது எங்கள் தலைகளில் குண்டு போட்டு அழித்த, அங்கவீனர்களாக்கிய, பைத்தியங்களாக்கிய  உக்கிரேன் விமானிகளின் குடும்பங்களில் ஒன்றாவது இருக்கும்தானே.....எம்மினம் வீதிகளில் தெறித்து ஓடியபோது ஆகாயத்தில் இருந்து சிரித்துக் கொண்டு பார்த்த அவர்கள்  கண்முன்னே தெரியும்....இப்ப அவர்களின் மண்டைக்குள் வண்டு குடைந்து கொண்டிருக்கும் சாகும்வரை...........நாங்கள் இதையெல்லாம் மறந்து நைச்சியம் பேசுவதற்கு ஐம்பது, நூறு வருடங்களா போய்விட்டன வெறும் பத்து பன்னிரெண்டு வருடங்கள்தான்......!

5 hours ago, தமிழ் சிறி said:

தமிழர்களுக்கு மறதிக் குணம் அதிகம் என்று, 
யாழ். களத்தில் உள்ள ...சில ஆட்களின், கருத்தை பார்க்கவே தெரிகிறது. 🧐

பிற் குறிப்பு: உங்களுக்கு.... ரஞ்சித், கிருபன் ஜீ, சசி வர்ணம், விளங்க நினைப்பவன் ஆகியோரின் நினைவு  வந்தால்.... கம்பெனி பொறுப்பல்ல.  🤣

5 hours ago, குமாரசாமி said:

நாங்கள் மீம்ஸ் படிச்சு அறிவை வளர்க்கிறனாங்களாம்....அதுதானே அவையள் படிக்கிற புத்தகங்களின்ர  நீளமென்ன அகலமென்ன தடிப்பென்ன...நாங்கள் அவையளுக்கு கிட்ட வரேலுமே.....🤣😂

நக்கலுக்கு நீங்கள் சொன்னாலும் அது உண்மைதான். 😉

5 hours ago, தமிழ் சிறி said:

"அறப் படிச்ச பல்லி, 🦎 கூழ்  பானைக்குள்ளை விழுந்ததாம்" என்ற மாதிரி....
கனக்க  படிச்சாலும், தலை எல்லாம் குழம்பிப் போகும். 😂 🤣

5 hours ago, குமாரசாமி said:

Bild

ஈழத்தில் உக்ரைன் நாட்டு மிக் 27 ரக போர் விமானத்தை செலுத்திய உக்ரேனிய பெண் விமானிகளே. 

புதுகுடியிருப்பு  வெண்புறா மீது குண்டு வீச்சு  தாக்குதலை மேற்கொண்டடீர்கள் நினைவிருக்கிறதா?

எம் இனத்தை குண்டு வீசி கொத்து கொத்தாக அழித்தீர்களே தலை சிதறி,  கை, கால் இழந்து பல்லாயிரம் பேர் இறந்து போனார்கள்

உக்ரைனே! 
எங்கள் மீது குண்டு வீசியது நியாயம் என்றால் ..
ரஸ்யா உங்கள் மீது குண்டு வீசுவதும் தாக்குதல் நடத்துவது நியாயம் தானே?

ஆனாலும் போர் கொடுமையானது..

மேலுள்ளவற்றுக்கு எல்லாம் அடிப்படை உக்கிரேனிய விமானிகள் இறுதிக்கட்டப் போரில் தமிழ் மக்கள் மீது குண்டுபோட்டார்கள் என்று நீங்கள் நம்புவது. அப்போது புலிகள் இருந்தார்கள். அவர்களிடம் இருந்து அப்படி ஒரு அறிக்கை வந்ததா? அப்படி இருந்தால் தேடி எடுத்து இணையுங்கள். 

முகநூலிலும், ருவிற்றரிலும், மீம்ஸிலும் அரசியல் படித்தால் வரும் தவறான நம்பிக்கைகள்தான் உங்களை இப்படிச் யோசிக்க வைக்கின்றது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, கிருபன் said:

இப்போது ரஷ்யா உக்கிரேனை ஆக்கிரமித்ததால் நடுநிலை நாடுகளான பின்லாந்து, ஸ்வீடன் போன்றன நேட்டோவில் இணையக்கூடும்.

ஏற்கனவே துருக்கி நேட்டோவில் இருப்பதால் குர்திஷ்தான் விடுதலை பிரச்சனையும் தூர்வாரப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அந்தன் மக்களின் பிரச்சனையை கேட்க யாருமில்லை.
துருக்கி குர்திஷ்தானில் உக்ரேன் தாக்குதலை விட மிக மிக மோசமாக தாக்கியது. இத்தனைக்கும் துருக்கி நேட்டோவின் முக்கிய பங்காளி.....
 
Bild

இது பற்றி மேற்கத்திய ஊடகங்கள் வாய் திறக்கின்றனவா?

Bild

இங்கேயும் சிறுவர்களும் பெண்களும் குண்டு வீச்சினால் அழிக்கப்படுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

இது பற்றி மேற்கத்திய ஊடகங்கள் வாய் திறக்கின்றனவா?

அவர்கள் வாய் திறப்பது இருக்கட்டும். குர்திஷ் மக்களுக்காகக் குரல்கொடுக்க சக ஒடுக்குமுறைக்கு உள்ளான தமிழினம் மேற்கு நாடுகளில் அவர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களுக்குப் போய் இருக்கின்றார்களா? இல்லைத்தானே. ஆனால் குர்திஷ் இனப் பேராசிரியர் ஒருவரை தமிழர்களின் ஊர்வலங்களின் இறுதியில் பேசும்போது கண்டிருக்கின்றேன்.

நாம் ஏன் ஒடுக்கப்படும் உலக இனங்களுடன் ஒருமித்து நிற்பதில்லை என்பதை இந்தத் திரியில் சர்வாதிகாரி பூட்டினை நியாயப்படுத்தும் கருத்துக்கள் வரும்போது புரிந்துகொள்ளமுடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நக்கலுக்கு நீங்கள் சொன்னாலும் அது உண்மைதான். 😉

மேலுள்ளவற்றுக்கு எல்லாம் அடிப்படை உக்கிரேனிய விமானிகள் இறுதிக்கட்டப் போரில் தமிழ் மக்கள் மீது குண்டுபோட்டார்கள் என்று நீங்கள் நம்புவது. அப்போது புலிகள் இருந்தார்கள். அவர்களிடம் இருந்து அப்படி ஒரு அறிக்கை வந்ததா? அப்படி இருந்தால் தேடி எடுத்து இணையுங்கள். 

முகநூலிலும், ருவிற்றரிலும், மீம்ஸிலும் அரசியல் படித்தால் வரும் தவறான நம்பிக்கைகள்தான் உங்களை இப்படிச் யோசிக்க வைக்கின்றது. 

ஈழப் போரிக் உக்ரேனிய விமானிகளின் பங்களிப்பு உலகறிந்த உண்மை. இதுக்கு ஆதாரத்தைக் கேட்கும் நீங்கள், போராட்டமா அப்படியென்றால் என்றும் கேட்பீர்கள். ஏனென்றால் மறதி  என்பது எல்லாவற்றையும் இலகுவாக கடப்பதற்காக இறைவனால் கொடுக்கப்பட்ட்ட வரம் கண்டியளோ..😏

இப்ப சோசல் மீடியாதான் தற்போது  மேற்குலகிற்கு பிரச்சனையாக இருக்கிறது. பூமரங் மாதிரி திரும்பி அனுப்பினவங்களையே பதம் பார்ப்பது உங்களுக்கு புரியும் எண்டு நினைக்கிறேன். 

😉

17 minutes ago, கிருபன் said:

அவர்கள் வாய் திறப்பது இருக்கட்டும். குர்திஷ் மக்களுக்காகக் குரல்கொடுக்க சக ஒடுக்குமுறைக்கு உள்ளான தமிழினம் மேற்கு நாடுகளில் அவர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களுக்குப் போய் இருக்கின்றார்களா? இல்லைத்தானே. ஆனால் குர்திஷ் இனப் பேராசிரியர் ஒருவரை தமிழர்களின் ஊர்வலங்களின் இறுதியில் பேசும்போது கண்டிருக்கின்றேன்.

நாம் ஏன் ஒடுக்கப்படும் உலக இனங்களுடன் ஒருமித்து நிற்பதில்லை என்பதை இந்தத் திரியில் சர்வாதிகாரி பூட்டினை நியாயப்படுத்தும் கருத்துக்கள் வரும்போது புரிந்துகொள்ளமுடிகின்றது.

உங்கள் கருத்துகள் பகிரங்கமாக மறுதலிக்கப்படும்போது புட்டினை இழுத்து கருத்தைத் திசை திருப்புவது பலவீனத்தின் அடையாளம் கண்டியளோ..😏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

மேலுள்ளவற்றுக்கு எல்லாம் அடிப்படை உக்கிரேனிய விமானிகள் இறுதிக்கட்டப் போரில் தமிழ் மக்கள் மீது குண்டுபோட்டார்கள் என்று நீங்கள் நம்புவது. அப்போது புலிகள் இருந்தார்கள். அவர்களிடம் இருந்து அப்படி ஒரு அறிக்கை வந்ததா? அப்படி இருந்தால் தேடி எடுத்து இணையுங்கள். 

இந்தக் கேள்வியை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை கிருபன்.

மனதுக்கு மிகவும் கஸ்டமாக உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, கிருபன் said:

அவர்கள் வாய் திறப்பது இருக்கட்டும்.

அதென்ன வாய் திறப்பது இருக்கட்டும்? இன்றைய ஊடக இரட்டை வேடங்களுக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா முடியாதா?

24 minutes ago, கிருபன் said:

குர்திஷ் மக்களுக்காகக் குரல்கொடுக்க சக ஒடுக்குமுறைக்கு உள்ளான தமிழினம் மேற்கு நாடுகளில் அவர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களுக்குப் போய் இருக்கின்றார்களா?

நீங்கள் அவற்றை பார்க்கவில்லை அல்லது கேள்விப்படவில்லை என்றால் அதற்கு மற்றவர்கள் எதுவுமே செய்யமுடியாது.

26 minutes ago, கிருபன் said:

சர்வாதிகாரி பூட்டினை நியாயப்படுத்தும் கருத்துக்கள் வரும்போது புரிந்துகொள்ளமுடிகின்றது.

இங்கே யாரும் புட்டினை நியாயப்படுத்தவில்லை. மேற்குலகின் இரட்டை வேடத்தையும் அதன் ஊதுகுழல்களான ஊடங்களை சாடும்போது புட்டின் சார்பு கருத்துக்களாகவே உங்களைப்போன்ற அறப்படித்தவர்களுக்கு தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

ஈழப் போரிக் உக்ரேனிய விமானிகளின் பங்களிப்பு உலகறிந்த உண்மை. இதுக்கு ஆதாரத்தைக் கேட்கும் நீங்கள், போராட்டமா அப்படியென்றால் என்றும் கேட்பீர்கள். ஏனென்றால் மறதி  என்பது எல்லாவற்றையும் இலகுவாக கடப்பதற்காக இறைவனால் கொடுக்கப்பட்ட்ட வரம் கண்டியளோ..😏

எனக்கு மறதி கிடையாது. உங்களால் நம்பகத்தன்மையான ஆதாரம் தரமுடியாது என்று தெரியும். நான் எழுத முதல் தேடவேண்டிய இடத்தில் தேடிப்பார்த்துவிட்டுத்தான் எழுதினேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தக் கேள்வியை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை கிருபன்.

மனதுக்கு மிகவும் கஸ்டமாக உள்ளது.

என்ன ஐயா? மதில் மேல் பூனைகளை தெரியாதா? 😁

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தக் கேள்வியை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை கிருபன்.

மனதுக்கு மிகவும் கஸ்டமாக உள்ளது.

1997 இல் இருந்து தமிழ்நெற் வருகின்றது. அண்மைக்காலம்வரை தமிழ்நெற்றைப் பார்க்காத நாளில்லை. தமிழ்நெற்றைவிட 2007 இல் வந்த முகநூலில் வருவதை நம்பினால் கஸ்டமாகத்தான் இருக்கும்.

தமிழ்நெற்றில் ஒரேயொரு குறிப்பு அதுவும் இந்திய இணைய ஊடகத்தை மேற்கோள் காட்டி 2007 இல் வந்திருந்தது.  அது அப்படியே வளர்ந்து பெருகிவிட்டது. புலிகளின் அறிக்கை உக்கிரேனிய விமானிகள் குண்டுவீச்சில் ஈடுபட்டார்கள் என்று கூறவில்லை.

Some reports have mentioned that Ukrainian mercenary pilots have flown the Sri Lankan aircraft conducting bombing raids in the LTTE-held regions in the northeast of the island in recent weeks, rediff.com reported.”

33 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் அவற்றை பார்க்கவில்லை அல்லது கேள்விப்படவில்லை என்றால் அதற்கு மற்றவர்கள் எதுவுமே செய்யமுடியாது.

நீங்கள் கேள்விப்பட்டிருந்தால் அல்லது போயிருந்தால் சொல்லவேண்டியதுதானே. 

ஜேர்மனியில் அதிகம் துருக்கியரும் குர்திஷ்காரர்களும் வாழுகின்றார்கள்தானே. குர்திஷ்காரரின் போராட்டங்களில் இனியும் கலந்துகொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

அதென்ன வாய் திறப்பது இருக்கட்டும்? இன்றைய ஊடக இரட்டை வேடங்களுக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா முடியாதா?

குர்திஷ் இனங்களுக்கு எதிரான துருக்கியின் செயற்பாடுகளை மட்டும் அல்ல உலகில் நடைபெறும் எல்லா விடயங்களில் மேற்கத்தைய ஊடகங்களில் இருந்துதான் அறிந்துகொள்கின்றேன். யூடியூப், மீம்ஸ், ருவிற்றர் உங்களுக்கு சொல்லுவதை அப்படியே நம்பும் அளவுக்கு இல்லை.

10 hours ago, குமாரசாமி said:

Bild

குமாரசாமி, இலங்கையில் தாக்குதல் நடத்திய விமானியின் படமா இது ? இதன் ஆதாரம் என்ன ?

ஏனென்றால் ஒருவரின் படத்தைப் போட்டு ஆதாரமில்லாமல் குற்றம் சுமத்துவதும் யாழ் மூலம் பொய்யான தகவலைப் பரப்புவதும் தவறானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, இணையவன் said:

குமாரசாமி, இலங்கையில் தாக்குதல் நடத்திய விமானியின் படமா இது ? இதன் ஆதாரம் என்ன ?

ஏனென்றால் ஒருவரின் படத்தைப் போட்டு ஆதாரமில்லாமல் குற்றம் சுமத்துவதும் யாழ் மூலம் பொய்யான தகவலைப் பரப்புவதும் தவறானது.

இன்று ஈழத்தமிழர் அழிவு சம்பந்தப்பட்ட பல ஆதாரங்கள் இணையங்களில் நீக்கப்பட்டு விட்டன. உதாரணத்திற்கு இந்திய இராணுவத்தால்  யாழ்ப்பாணத்தில் அழிக்கப்பட்ட கொடூர படங்களை எடுத்து வாருங்கள் பார்க்கலாம்.

சிங்களம் எவ்வளவிற்கு முள்ளிவாய்க்கால் ஆதாரங்களை அழிக்கின்றதோ அதை விட நீங்களும் உங்கள் தொடர்புகளும் செய்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இன்று ஈழத்தமிழர் அழிவு சம்பந்தப்பட்ட பல ஆதாரங்கள் இணையங்களில் நீக்கப்பட்டு விட்டன. உதாரணத்திற்கு இந்திய இராணுவத்தால்  யாழ்ப்பாணத்தில் அழிக்கப்பட்ட கொடூர படங்களை எடுத்து வாருங்கள் பார்க்கலாம்.

சிங்களம் எவ்வளவிற்கு முள்ளிவாய்க்கால் ஆதாரங்களை அழிக்கின்றதோ அதை விட நீங்களும் உங்கள் தொடர்புகளும் செய்கின்றீர்கள்.

நீங்கள் சொல்வது போல் தனியார் நிறுவனங்கள் கூட தமது மோசமான இணையத்தரவுகளை சிறிது காலத்தின் பின் எந்த வகையிலோ அழித்துவிடுகிறார்கள், ஆனால் இந்த படத்தில் அந்த பெண் மிக் இரக போர் விமானத்திலா அமர்ந்திருக்கின்றார்? இணையத்தில் மிக் இரக விமான உட்பகுதி போல் இதில் இல்லை, எனது கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

இந்த ஆக்கிரமிப்பு உக்கிரேன் நாட்டை இரண்டாகப் பிரிப்பதில்தான் முடியும். அதேவேளை, சீனா தாய்வானை மீண்டும் அகண்ட சீனாவுக்குள் விரைவில் கொண்டுவர வழி செய்யும். அதையும் நாம் ஆதரிப்போம்!

மக்கள் தலைவன் புரின் தனது  unfriendly list ல் தைவானை அறிவித்துவிட்டாரே 😂

  • கருத்துக்கள உறவுகள்

Why is Ukraine the West's Fault? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

எனக்கு மறதி கிடையாது. உங்களால் நம்பகத்தன்மையான ஆதாரம் தரமுடியாது என்று தெரியும். நான் எழுத முதல் தேடவேண்டிய இடத்தில் தேடிப்பார்த்துவிட்டுத்தான் எழுதினேன்.

இந்த விடயம் உங்களுக்குத் தெரியாதவிடத்து, அதன் பொருள்  நீங்கள் யுத்த காலத்தில் இலங்கையில் இல்லை என்பதே...

😆

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nunavilan said:

Why is Ukraine the West's Fault? 

இந்த யுத்தத்திற்கான மூல காரணங்களை இரஸ்யாவை வைவோர் பார்க்கமாட்டார்கள். அது அவர்களுக்கு உவப்பானதாக இருக்கப்போவதில்லை.

உக்ரேனியர்கள் பாவப்பட்ட வேள்வியாடுகள். மேற்கால் வளர்க்கப்பட்டு இரஸ்யாவால் பலியிடப்படுபவர்கள்.

😭

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.