Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உக்ரேன் - ரஷ்யா சண்டைக்கு சிரியாவிலிருந்து கூலிப்படைகள் வருகின்றார்களாமே?????
உண்மையா????

  • Replies 477
  • Views 30.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

உக்ரேன் - ரஷ்யா சண்டைக்கு சிரியாவிலிருந்து கூலிப்படைகள் வருகின்றார்களாமே?????
உண்மையா????

 சிரியா உட்பட மத்திய கிழக்கிலிருந்து 16000 பேர்.

https://www.bbc.com/news/world-europe-60705486

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இந்த விடயம் உங்களுக்குத் தெரியாதவிடத்து, அதன் பொருள்  நீங்கள் யுத்த காலத்தில் இலங்கையில் இல்லை என்பதே...

😆

நீங்கள் என்னதான் குத்திமுறிந்தாலும் உங்களால் எதுவித ஆதாரமும் கொடுக்கமுடியாது. விரும்பினால் மெய்மை காணும் இணையத்தில் ஒரு கட்டுரை எழுதி ஆதாரமாகக் காட்டலாம். 😙

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

நீங்கள் என்னதான் குத்திமுறிந்தாலும் உங்களால் எதுவித ஆதாரமும் கொடுக்கமுடியாது. விரும்பினால் மெய்மை காணும் இணையத்தில் ஒரு கட்டுரை எழுதி ஆதாரமாகக் காட்டலாம். 😙

இலங்கைத் தமிழர் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை ஆதாரம் இல்லாமல் நம்பப்போவதில்லையாம்.

நீங்கள் யுத்த காலப்பகுதியில் இலங்கையில் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளுங்கள் பிரச்சனை முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இலங்கைத் தமிழர் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை ஆதாரம் இல்லாமல் நம்பப்போவதில்லையாம்.

நீங்கள் யுத்த காலப்பகுதியில் இலங்கையில் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளுங்கள் பிரச்சனை முடிந்தது.

கேள்வியின் நாயகனே, நானோ, நீங்களோ யுத்த காலத்தில் இலங்கையில் இல்லாததற்கும் ஆதாரத்தை இணைப்பதற்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் வன்னியில் இருந்து விமான ஓட்டிகளின் உரையாடல்களை ஒட்டுக்கேட்டது போல,  அல்லது கட்டுநாயாகக்காவில் அவர்கள் குண்டுவீச்சு விமானங்களில் ஏறுவதை அருகில் நின்றதைப் பார்த்ததைப் போல கதை  விடாதீர்கள்.

மீண்டும் கேட்கின்றேன். உக்கிரேனிய விமான ஓட்டிகள், கூலிக்கு விமானம் ஓட்டிக் குண்டுவீசினார்கள் என்று புலிகளின் அறிக்கை ஏதாவது சொல்லியிருக்கின்றதா? இணையம் இருந்த காலத்தில்தானே இறுதிப் போர் நடந்தது. சும்மா, எல்லோருக்கும் தெரிந்த உண்மை என்று சொல்லுவதால் மட்டும் உண்மையாகிவிடாது. 

சிறிலங்கா விமானப்படையினர் 2000 ஆம் ஆண்டளவிலேயே மிக்-27 குண்டுவீச்சு விமானங்களைப் பெற்றிருந்தனர். அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சிறிலங்கா விமான ஓட்டிகள் மிக்-27 குண்டுவீச்சு விமானங்களை ஓட்டத் தெரிந்திருந்தமையாகும்.  இணையத்தில் தேடினால் இலகுவாகக் கிடைக்கக்கூடிய காலத்தில் “எல்லோருக்கும் தெரிந்த உண்மை” என்றால் மட்டும் போதாது. 

இதற்கும் உருப்படியான பதில் வைக்காமல் ஒரு கேள்வியோடு வருவீர்கள்😂. உங்களுடன் கருத்தாடுவதே நேரவிரயம் என்று எப்போதே தெரியும் மெய்மை காணப் புறப்பட்டவரே!

ஆனால் எனது கருத்துக்கள் இக்கருத்தாடல்களை வாசிக்கும் வாசகர்களுக்குத்தான். விதண்டாவதம் புரிபவர்களுக்கல்ல😎

சில குறிப்புக்கள்:

Why SLAF selected MiG- 27 

The major reason for the SLAF to decide on the purchase was due to its capability with its capacity to transport maximum pay load, 3,000 Kgs at one time. In other words it could fly with 6 to 8 bombs weighing 500 Kgs, at one time. 

spacer.png

If the SLAF selected a brand new ground attack craft other than the MiG -27 it had to go for pilot conversions because they already had trained pilots to handle Mig 27s. If they go for a new aircraft the SLAF will have to train their pilots for that particular aircraft which will definitely be an added burden for the SLAF. 

Apart from this the SLAF has to train the maintenance crew if they go for a new aircraft at this point, with an additional burden on the economy and the SLAF.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2022 at 00:05, ரஞ்சித் said:

இந்த திரியில் உங்களை போல் எல்லோரையும் பார்க்கக்கூடாது என்று கிருபனுக்கு நான் எழுதிய கருத்தை காணவில்லை.

நிர்வாகத்தின் நேரத்தை நான் மதிக்கிறேன் அதே போல் தான் எனது நேரமும். ☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விசுகு said:

இந்த திரியில் உங்களை போல் எல்லோரையும் பார்க்கக்கூடாது என்று கிருபனுக்கு நான் எழுதிய கருத்தை காணவில்லை.

நிர்வாகத்தின் நேரத்தை நான் மதிக்கிறேன் அதே போல் தான் எனது நேரமும். ☹️

அண்ணை,

என்னுடைய கருத்து ஒன்றை மேற்கோள் காட்டியிருக்கிறியள் என்றுமட்டும் விளங்குது, ஆனால் எதுவென்றுதான்  விளங்கவில்லை.

நான் என்ன செய்யவேணும்? 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரஞ்சித் said:

அண்ணை,

என்னுடைய கருத்து ஒன்றை மேற்கோள் காட்டியிருக்கிறியள் என்றுமட்டும் விளங்குது, ஆனால் எதுவென்றுதான்  விளங்கவில்லை.

நான் என்ன செய்யவேணும்? 

அது தானாக நடந்திருக்கு. மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

Vladimir Putin's Speech on Ukraine and US Foreign Policy and NATO - 24 February 2022

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

கேள்வியின் நாயகனே, நானோ, நீங்களோ யுத்த காலத்தில் இலங்கையில் இல்லாததற்கும் ஆதாரத்தை இணைப்பதற்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் வன்னியில் இருந்து விமான ஓட்டிகளின் உரையாடல்களை ஒட்டுக்கேட்டது போல,  அல்லது கட்டுநாயாகக்காவில் அவர்கள் குண்டுவீச்சு விமானங்களில் ஏறுவதை அருகில் நின்றதைப் பார்த்ததைப் போல கதை  விடாதீர்கள்.

மீண்டும் கேட்கின்றேன். உக்கிரேனிய விமான ஓட்டிகள், கூலிக்கு விமானம் ஓட்டிக் குண்டுவீசினார்கள் என்று புலிகளின் அறிக்கை ஏதாவது சொல்லியிருக்கின்றதா? இணையம் இருந்த காலத்தில்தானே இறுதிப் போர் நடந்தது. சும்மா, எல்லோருக்கும் தெரிந்த உண்மை என்று சொல்லுவதால் மட்டும் உண்மையாகிவிடாது. 

சிறிலங்கா விமானப்படையினர் 2000 ஆம் ஆண்டளவிலேயே மிக்-27 குண்டுவீச்சு விமானங்களைப் பெற்றிருந்தனர். அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சிறிலங்கா விமான ஓட்டிகள் மிக்-27 குண்டுவீச்சு விமானங்களை ஓட்டத் தெரிந்திருந்தமையாகும்.  இணையத்தில் தேடினால் இலகுவாகக் கிடைக்கக்கூடிய காலத்தில் “எல்லோருக்கும் தெரிந்த உண்மை” என்றால் மட்டும் போதாது. 

இதற்கும் உருப்படியான பதில் வைக்காமல் ஒரு கேள்வியோடு வருவீர்கள்😂. உங்களுடன் கருத்தாடுவதே நேரவிரயம் என்று எப்போதே தெரியும் மெய்மை காணப் புறப்பட்டவரே!

ஆனால் எனது கருத்துக்கள் இக்கருத்தாடல்களை வாசிக்கும் வாசகர்களுக்குத்தான். விதண்டாவதம் புரிபவர்களுக்கல்ல😎

சில குறிப்புக்கள்:

Why SLAF selected MiG- 27 

The major reason for the SLAF to decide on the purchase was due to its capability with its capacity to transport maximum pay load, 3,000 Kgs at one time. In other words it could fly with 6 to 8 bombs weighing 500 Kgs, at one time. 

spacer.png

If the SLAF selected a brand new ground attack craft other than the MiG -27 it had to go for pilot conversions because they already had trained pilots to handle Mig 27s. If they go for a new aircraft the SLAF will have to train their pilots for that particular aircraft which will definitely be an added burden for the SLAF. 

Apart from this the SLAF has to train the maintenance crew if they go for a new aircraft at this point, with an additional burden on the economy and the SLAF.

எல்லாவற்றிற்கும் இணையத்தில் ஆதாரம் கிடைக்காது கிருபன். 

உங்கள் பதிலின் மூலம் நீங்கள் யுத்த காலத்தில் இலங்கையில் இருக்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

இணையத்தில் ஆதாரம் இல்லை என்பதால் நீங்கள் கூறுவது சரியாகிவிடாது. நான் யுத்த காலத்தில் வடக்கு கிழக்கில் இருந்தேன். ஆதலால் எனக்கு உண்மை தெரியும். உங்களுக்கு தெரியாது. அவ்வளவுதான்.

இந்த வகை விமானங்களுக்கு ஆரம்பத்தில் ஓட்டியாக இருந்தவர்கள் உக்ரேனியர்களே. இலங்கை விமானமோட்டிகள் அதன் பின்னரே அவர்களுடன் இணைந்தனர்.

யுத்ததின் நடுவே நின்றவனுக்கும் இணைய வெளியில் யுத்தம் தொடர்பான தரவுகளைத் தேடுபவர்களுக்கும் இருக்கும் வேறுபாடு இதுதான்.  

ஒன்று படத்தைப் பார்த்து நாவூறுபவர். மற்றையவர் அந்த உணவுகளை உண்பவர்😆

மற்றையது, 

எனது கேள்விகள் தொடர்பாக...

Teaching is an art. அந்தக் கலை எல்லா ஆசிரியர்களுக்கும் கைகூடுவதில்லை. 

1) மாணவனிடம் கேள்விகளை கேட்பதனூடாக (குறைந்த விளக்கத்துடன்) மானவனை சிந்தித்து செயற்பட வைப்பது. மாணவனைத் தேடலுக்கு பயிற்சியளிப்பது. இது ஒரு வகை.

2) மாணவர்களுக்கு வகுப்பெடுப்பது. விளங்கப்படுத்துவது. இந்த வகை ஆசிரியம், மாணவனிடம் எதிர்பார்க்கும் பலனை தருவது குறைவு. 

என்னால் கேட்கப்படும் கேள்விகள் (கேலி அல்ல) முதலாம் வகைக்குட்பட்டது.

(சில மாணாக்கருக்கு எப்படி படிப்பித்தாலும் அவர்களிடம் எந்தவித பலனையும் அது தராது. எருமை மாட்டின் மீது  மழை என்று வைத்துக்கொள்ளுங்கள்)

நீங்கள் தற்போதும் (வாசிப்பினூடாக) கற்றுக்கொள்வதில் ஆர்வமுடையவர் என்கின்ற காரணத்தால் சில வேளைகளில் இது உங்களுக்கு புரியாமலிருக்கக் கூடும். 

 தொடர்ந்து படியுங்கள் (வாசியுங்கள்) என்னுடன் விவாதித்து நேர விரயம் செய்யாமல்...

 🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2022 at 18:16, கிருபன் said:

அவர்கள் வாய் திறப்பது இருக்கட்டும். குர்திஷ் மக்களுக்காகக் குரல்கொடுக்க சக ஒடுக்குமுறைக்கு உள்ளான தமிழினம் மேற்கு நாடுகளில் அவர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களுக்குப் போய் இருக்கின்றார்களா? இல்லைத்தானே. ஆனால் குர்திஷ் இனப் பேராசிரியர் ஒருவரை தமிழர்களின் ஊர்வலங்களின் இறுதியில் பேசும்போது கண்டிருக்கின்றேன்.

நாம் ஏன் ஒடுக்கப்படும் உலக இனங்களுடன் ஒருமித்து நிற்பதில்லை என்பதை இந்தத் திரியில் சர்வாதிகாரி பூட்டினை நியாயப்படுத்தும் கருத்துக்கள் வரும்போது புரிந்துகொள்ளமுடிகின்றது.

சும்மா விசர்க்கதை கதைக்ககுடாது… குர்திஷ் மக்கள் நடத்தும் ஊர்வலங்களில் வருடம்தோறும் கலந்துகொள்பவன் நான்.. அங்கு வரும் தமிழர்கள் பலரையும் நான் அறிவேன்.. நீங்கள் போகாட்டி மற்றானும் போறதில்லை எண்டு நினைக்ககுடாது..

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

கேள்வியின் நாயகனே, நானோ, நீங்களோ யுத்த காலத்தில் இலங்கையில் இல்லாததற்கும் ஆதாரத்தை இணைப்பதற்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் வன்னியில் இருந்து விமான ஓட்டிகளின் உரையாடல்களை ஒட்டுக்கேட்டது போல,  அல்லது கட்டுநாயாகக்காவில் அவர்கள் குண்டுவீச்சு விமானங்களில் ஏறுவதை அருகில் நின்றதைப் பார்த்ததைப் போல கதை  விடாதீர்கள்.

மீண்டும் கேட்கின்றேன். உக்கிரேனிய விமான ஓட்டிகள், கூலிக்கு விமானம் ஓட்டிக் குண்டுவீசினார்கள் என்று புலிகளின் அறிக்கை ஏதாவது சொல்லியிருக்கின்றதா? இணையம் இருந்த காலத்தில்தானே இறுதிப் போர் நடந்தது. சும்மா, எல்லோருக்கும் தெரிந்த உண்மை என்று சொல்லுவதால் மட்டும் உண்மையாகிவிடாது. 

சிறிலங்கா விமானப்படையினர் 2000 ஆம் ஆண்டளவிலேயே மிக்-27 குண்டுவீச்சு விமானங்களைப் பெற்றிருந்தனர். அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று சிறிலங்கா விமான ஓட்டிகள் மிக்-27 குண்டுவீச்சு விமானங்களை ஓட்டத் தெரிந்திருந்தமையாகும்.  இணையத்தில் தேடினால் இலகுவாகக் கிடைக்கக்கூடிய காலத்தில் “எல்லோருக்கும் தெரிந்த உண்மை” என்றால் மட்டும் போதாது. 

இதற்கும் உருப்படியான பதில் வைக்காமல் ஒரு கேள்வியோடு வருவீர்கள்😂. உங்களுடன் கருத்தாடுவதே நேரவிரயம் என்று எப்போதே தெரியும் மெய்மை காணப் புறப்பட்டவரே!

ஆனால் எனது கருத்துக்கள் இக்கருத்தாடல்களை வாசிக்கும் வாசகர்களுக்குத்தான். விதண்டாவதம் புரிபவர்களுக்கல்ல😎

சில குறிப்புக்கள்:

Why SLAF selected MiG- 27 

The major reason for the SLAF to decide on the purchase was due to its capability with its capacity to transport maximum pay load, 3,000 Kgs at one time. In other words it could fly with 6 to 8 bombs weighing 500 Kgs, at one time. 

spacer.png

If the SLAF selected a brand new ground attack craft other than the MiG -27 it had to go for pilot conversions because they already had trained pilots to handle Mig 27s. If they go for a new aircraft the SLAF will have to train their pilots for that particular aircraft which will definitely be an added burden for the SLAF. 

Apart from this the SLAF has to train the maintenance crew if they go for a new aircraft at this point, with an additional burden on the economy and the SLAF.

உங்கட இணையத்தை கொண்டுபோய் குப்பையில போடுங்கோ… நாங்கள் ஈழநாதம், விடுதலைப்புலிகள், சுதந்திரப்பறவைகள் வன்னி அச்சகங்களின் மைவாசம் மறையமுன்னமே படிச்ச ஆக்கள்.. எங்களுக்கு தெரியும்  உக்ரைன் விமான ஓட்டிகள் இலங்கைபடைகளுக்கு உதவின கதை.. அதை படிக்கிற காலத்தில் எங்களுக்கு இணையம் எண்டா என்னெண்டே தெரியா… அங்கு போராடிக்கொண்டிருந்தவர்களுக்கும் மக்களுக்கும் கூட தெரியாது…இப்போது போல் விசைப்பலகையில் தேடிவிட்டு வந்து வியாக்கியானம் கதைக்கும் காலத்தில் ஈழப்போராட்டத்தின் நெருக்கடிமிக்க கால வாழ்க்கை இருக்கவில்லை.. அதை விசைப்பலகையில் தேடிப்பார்த்து புரிந்து கொள்ளவும் முடியாது.. அதற்குள் வாழனும்.. அந்த வாழ்வை அறிய புரிய இணையம் ஒருபோதும் உதவாது..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புக்குரிய கிருபனிற்கு… அவர் நம்பும் இணையத்திலேயயே தமிழ் நாதத்தில் 2006 இல் வெளியான கட்டுரை..👇அப்பொழுது ரஷ்யா உக்ரேனுக்கு அடிக்கவில்லை.. ஆக உக்ரேனை வலிந்து இழுத்து எழுதவேண்டிய அவசியம் 2006 இல் இல்லைதானே..

//உதாரணமாக 2000 ஆண்டு மாசி மாதம் அனுராதபுரத்தில் தலவா பகுதியில் பலாலியில் இருந்து படையினரை ஏற்றிச்சென்ற அன்ரனோவ் - 24 (யுழெவழழெஎ 24) ரக விமானம் 04 உக்ரைன் நாட்டு விமானிகள் உட்பட 36 படையினருடன் வீழ்ந்து நொருங்கியது.//

மூலம்- 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

2007 இல் எழுதப்பட்டது..👇

//மேலும் கொள்வனவு செய்யப்பட்ட 06 மிக்-27ஆ தாக்குதல் விமானங்களில் 03 விமானங்களை (அதாவது 50மூ) விமானப்படையினர் இழந்திருந்தனர். எஞ்சிய 03 விமானங்களும் மேலதிக மறுசீரமைப்பு வேலைகளுக்காக உக்கிரைனுக்கு அனுப்பப்பட்டது. 2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்க தாக்குதலில் ஒரு மிக்-27 விமானம் அழிந்ததுடன்இ அதே ஆண்டின் ஆகஸ்ட்டில் சீதுவை கடற்பரப்பில் ஒரு மிக்-27 ரக விமானம் வீழ்ந்து நொருங்கியது (இதில் உக்ரைன் விமானி கொல்லப்பட்டிருந்தார்). பின்னர் பயிற்சி நடவடிக்கையின் போது 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நீர்கொழும்பு கடல் நீரேரியில் ஒரு மிக்-27 வீழ்ந்து நொருங்கியது. எனினும் நாலாம் கட்ட ஈழப்போரில் மிக் விமானங்களின் அவசர தேவையை உணர்ந்த இலங்கை அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேலும் 04 மிக்-27 விமானங்களை கொள்வனவு செய்திருந்தது. //

http://kavishan.blogspot.com/2007/04/blog-post_22.html?m=1

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2022 at 16:01, கிருபன் said:

மேலுள்ளவற்றுக்கு எல்லாம் அடிப்படை உக்கிரேனிய விமானிகள் இறுதிக்கட்டப் போரில் தமிழ் மக்கள் மீது குண்டுபோட்டார்கள் என்று நீங்கள் நம்புவது. அப்போது புலிகள் இருந்தார்கள். அவர்களிடம் இருந்து அப்படி ஒரு அறிக்கை வந்ததா? அப்படி இருந்தால் தேடி எடுத்து இணையுங்கள். 

ஓணாண்டியார், என்னுடைய கேள்வி இதுதான். அதில் இறுதிக்கட்டப் போரில் என்று தெளிவாகச் சொல்லியிருக்கின்றேன். இறுதிக்கட்டப் போர் நடந்தபோது வன்னியில் அச்சு ஊடகங்களில் நீங்கள் வாசித்தீர்கள். அப்படித்தானே!

நீங்கள் இணைத்த அரூஸின் ஆய்வில் பல தவறுகளை பலர் ஆய்ந்திருந்தார்கள். அதில் அரூஸ் அன்ரனோவ் விமானம் விழுந்தபோது (அது வில்பத்து பகுதியில் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டது என்று ஞாபகம்) உக்கிரேனிய விமானிகள் நால்வர் கொல்லப்பட்டனர் என்று சொல்லப்பட்டுள்ளது. அன்ரனோவ் விமானத்தை உக்கிரேனியர்கள் ஓட்டினார்கள் என்று எடுத்துக்கொண்டாலும், அது இராணுவப் போக்குவரத்து விமானம், குண்டுவீச்சு விமானம் அல்ல. மேலும் மிக்-27 குண்டுவீச்சு விமானங்கள் பலாலியில் இருந்து வந்ததில்லை. அவை எப்போதுமே கட்டுநாயாக்காவில் இருந்துதான் வந்தன. எனவே அந்த விமானிகள் குண்டுவீச்சு விமானத்தை ஓட்டினார்கள் என்று உறுதியாகச் சொல்லமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நடந்த கதை மறந்துவிட்டாள் கேளாடா கண்ணா..நான் ஏன் ரஷ்யா தலைட்டு உக்ரைன் பிரிவதை ஆதரிக்கிறேன்(உக்ரைன் மட்டுமல்ல இந்தியா குர்தீஷ் ரெகிங்யா எண்டு எங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் ஒடுக்கபடுகிறார்களோ அங்கெல்லாம் அந்தமக்கல் வாழும் பிரதேசங்கள் தனிநாடுகள் ஆகவேண்டும்)… இண்டைக்கு எட்டுவருசத்துக்கு முன்னமே எழுதப்பட்ட கட்டுரை👇.. மேற்குலக ஊடகங்களால் மூலைசவை செய்யப்பட்ட ரஞ்சித் சசி வகையறாக்களுக்கு சமர்ப்பணம்..

கிரீமியா, ஈழம் : ஒரே இனப் பிரச்சினை, இரண்டு பரிமாணங்கள் (கட்டுரை)

admin admin
8 years ago

http://ilakkiyainfo.com/wp-content/uploads/2014/03/crimea.jpg
யாழ் குடாநாடு, கிரீமியா குடாநாடு : இரண்டுக்கும் இடையில் இனப் பிரச்சினை தொடர்பாக நிறைய ஒற்றுமைகள் காணப் பட்ட போதிலும், நமது  வலதுசாரி  தமிழ் தேசியவாதிகள், உக்ரைனிய பேரினவாதிகளை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது ஏன்?

உக்ரைன் பிரச்சினை குறித்து, எந்தவொரு மேற்கத்திய ஊடகமும் உங்களுக்கு சொல்லாத தகவல் இது. உக்ரைனில் நெருக்கடி நிலைமை தோன்றியதற்கு  மூல காரணம்,  ஜனாதிபதி யனுகோவிச்  பதவியில் இருந்து அகற்றப்பட்டது அல்ல.

ரஷ்ய சிறுபான்மையினத்தை  பாதுகாக்கும் சட்டம்  நீக்கப் பட்டது தான், இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். 2012 ம் ஆண்டு, உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையின மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், ரஷ்ய மொழியை உத்தியோகபூர்வ மொழியாக பிரகடனப்  படுத்தும்  சட்டம் கொண்டு  வரப் பட்டது. அது கடந்த  இருபதாண்டு  கால மொழிப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமைந்தது.

தற்போது ஆட்சியமைத்திருக்கும் உக்ரைனிய பேரினவாதிகளின் அரசாங்கம், அந்த சட்டத்தை வாபஸ் பெற்றது. நாடு முழுவதும், உக்ரைன் மொழி கட்டாயமாக்கப் பட்டது.

இது ரஷ்ய மொழி பேசும் மக்கள் அறுதிப் பெரும்பான்மையாக வாழும் கிரீமியா பிரதேசத்தில் கொந்தளிப்பை உண்டாக்கியது. அதற்குப் பிறகு தான், கிரீமியாவில் ரஷ்ய சிறுபான்மையின மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

தமது பிரதேசத்தை உக்ரைனிய பேரினவாதிகளிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, ஆயுதக் குழுக்களை அமைத்துள்ளனர்.

http://ilakkiyainfo.com/wp-content/uploads/2014/03/carte_ukraine.jpg
வருகிற மார்ச் 16 ம் தேதி, கிரீமியா தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. கிரீமியா உக்ரைனுடன் தொடர்ந்திருக்க வேண்டுமா, அல்லது ரஷ்யாவுடன் சேர வேண்டுமா என்று அந்த வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த இடத்தில், தமிழ் மக்களை ஏமாற்றி வரும், வலதுசாரி தமிழ் தேசியவாதிகளின் இரட்டை வேடத்தை அவதானிக்கலாம்.

தமிழீழத்திற்கு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரும் தமிழ் தேசியவாதிகள், கிரீமியாவின் நிலைப்பாட்டை எதிர்ப்பது ஏன்?

மேலும், ஈழத் தமிழர் பிரச்சினையும், கிரீமியா ரஷ்யர் பிரச்சினையும், ஒரே இனப் பிரச்சினையின் இரண்டு பரிமாணங்கள் என்பதை உணரத் தவறி விடுகின்றனர். அதற்கு அவர்களுக்கு கிடைத்த தகவல் போதாமை காரணம் என்று சொல்லித் தப்ப முடியாது.

உக்ரைனில், உக்ரைனிய மொழி மட்டும் சட்டம் கொண்டு வரப் பட்டமை, இலங்கையில் சிங்கள மொழி கட்டாயமாக்கப் பட்ட காலத்துடன் ஒப்பிட்டு நோக்கத் தக்கது.

அன்று சிங்களம் மட்டும் சட்டத்தின் விளைவாக, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ் குடாநட்டில் (கிரீமியாவும் ஒரு குடாநாடு தான் என்பது ஒரு அதிசயத் தக்க ஒற்றுமை.) கிளர்ச்சி ஏற்பட்டது.

கிரீமியாவில் நடந்ததைப் போன்று, யாழ்ப்பாணத்திலும் மொழிப் பிரச்சினை காரணமாக ஆயுதக் குழுக்கள் உருவாகின. விடுதலைப் புலிகள் இயக்கம் அதில் ஒன்று. ஆரம்பத்தில் இந்தியா அந்தக் குழுக்களுக்கு, ஆயுதமும், பயிற்சியும் வழங்கி வளர்த்து வந்தது.

இன்று  கிரீமியா விவகாரத்தில்  ரஷ்யா நடந்து கொள்வதைப் போன்று, அன்று ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியா நடந்து கொண்டது. கிரீமியா ரஷ்யர்கள் போன்று, யாழ்ப்பாணத் தமிழர்களும் இந்தியா படையெடுத்து தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

பேரினவாதிகளும், அதை எதிர்க்கும் குறுந் தேசியவாதிகளும் உலகம் முழுவதும் ஒரே மாதிரித் தான் நடந்து கொள்கின்றனர். ஈழத் தமிழ் தேசியவாதிகளுக்கும், கிரீமிய ரஷ்ய தேசியவாதிகளுக்கும்  இடையில், இந்த விஷயத்தில் நிறைய ஒற்றுமைகள் காணப் படுகின்றன. ஆனால், இரண்டினதும் புவியியல் அமைவிடம் மட்டுமே வித்தியாசம்.

http://ilakkiyainfo.com/wp-content/uploads/2014/03/tamileelam-crimea.png
உக்ரைனில், ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிரீமியா குடாநாடு, உக்ரைனில் இருந்து பிரிந்து செல்வதற்கான பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, கிரீமியா பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள், ரஷ்யாவுடன் சேர்வதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

எதிர்வரும் மார்ச் 16 ம் தேதி, பொது  மக்களின் வாக்கெடுப்புக்கு விடப் படும். அநேகமாக, கிரீமியாவில் அறுபது சதவீதமான ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழ்வதால், அவர்களும் ரஷ்யாவுடன் சேர வேண்டுமென்று தான் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

இதற்கிடையே, நடைபெறவிருக்கும் பொது வாக்கெடுப்பு “சட்ட விரோதமானது” என்று, உக்ரைனிய இடைக்கால அரசின் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், கிரீமியா தொடர்பான வாக்கெடுப்பு, உக்ரைன் முழுவதும் நடத்தப் பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அவ்வாறு, பொது வாக்கெடுப்பு உக்ரைன் நாடு முழுவதும் நடத்தப் பட்டால், பெரும்பான்மை உக்ரைனியர்கள் பிரிவினைக்கு எதிராகத் தான் வாக்களிப்பார்கள்.

இந்த இடத்தில், கிரீமியா பிரச்சினைக்கும், தமிழீழ பிரச்சினைக்கும் இடையிலான ஒற்றுமையை எடுத்துப் பார்க்கலாம். தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்பது, வலதுசாரி தமிழ் தேசியவாதிகளின் நீண்ட காலக் கோரிக்கை ஆகும்.

அவ்வாறு ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும், ஸ்ரீலங்கா அரசின் எதிர்வினை, தற்போது உக்ரைனிய பிரதமர் கூறியது போன்றிருக்கும். அதாவது, தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு, இலங்கை நாடு முழுவதும் நடத்தப் பட வேண்டும் என்று அரசு பிடிவாதமாக இருக்கும்.

அவ்வாறான பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை சிங்கள மக்கள் (உக்ரைனிய மக்கள் போன்று) தமிழீழ பிரிவினைக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை.

மேலும், கிரீமியா பிராந்தியத்தில் ரஷ்யர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும், அங்கே வேற்றின மக்களும் வாழ்கின்றனர். கிரீமிய சனத்தொகையில் மூவின மக்களின் விகிதாசாரம் பின்வருமாறு: ரஷ்யர்கள் 58%, உக்ரைனியர்கள் 24% , (முஸ்லிம்) டாட்டார்கள் 12%. ரஷ்யர்கள்  கிரீமியா பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தாலும், அங்கு வாழும் உக்ரைனியர்களும், டாட்டார்களும் எதிர்த்து வாக்களிப்பார்கள். அவர்கள் எப்போதும் உக்ரைனுடன் சேர்ந்திருக்கவே விரும்புகின்றனர்.

தமிழீழத்திலும், கிட்டத்தட்ட இதே மாதிரியான, மூவின மக்களின் பிரதிநிதித்துவத்தை காணலாம். அங்கே தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும், முஸ்லிம்களும், சிங்களவர்களும் குறைந்தது 24% சனத்தொகையை கொண்டுள்ளனர்.

(கிரீமிய டாட்டார்கள் போன்று, ஈழத்து முஸ்லிம்களும் தனியான இனமாகவே கருதப் படுகின்றனர்.) ஆகையினால், தமிழீழத்தில் வாழும் முஸ்லிம்களும், சிங்களவர்களும், பிரிவினைக்கு எதிராகவே வாக்களிப்பார்கள். ஸ்ரீலங்காவுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாக உள்ளது.

இந்த இடத்தில், சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். உக்ரைன் நாட்டின் அரசியல் நிர்ணய சட்ட மூலம், அது சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில் இருந்து தொடர்ந்திருக்கிறது.

முன்னைய சோவியத் ஒன்றியத்தில், இரண்டு வகையான சட்டங்கள் இருந்தன. ஒன்று: எல்லோருக்கும் பொதுவான சோவியத் சட்டம். மற்றது: குறிப்பிட்ட ஒரு குடியரசுக்கு மட்டுமே உரிய தனியான சட்டம்.

சோவியத் அரசமைப்பு சட்டத்தின் படி, ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு குடியரசும், விரும்பினால் பிரிந்து செல்லும் அதிகாரம் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் தான், 1991 ல் உக்ரைன் தனி நாடாக பிரிந்து சென்றது. அன்றைய சோவியத் ஒன்றியத்தினுள், பல்வேறு பட்ட குடியரசுகளும், சுயாட்சிப் பிரதேசங்களும் இருந்தன. அதே மாதிரி, ஒவ்வொரு குடியரசின் உள்ளேயும் இருந்தன. அதாவது, உக்ரைன் பல சுயாட்சிப் பிரதேசங்களைக் கொண்ட சமஷ்டி அமைப்பைக் கொண்டிருந்தது.

கிரீமியாவுக்கு பல விசேட சலுகைகள் வழங்கப் பட்டிருந்தன. உக்ரைன் சமஷ்டி அரசமைப்பு சட்டத்தின் படி, ஒரு சுயாட்சிப் பிரதேசம் விரும்பினால் பிரிந்து செல்லும் உரிமையைக் கொண்டுள்ளது. தற்போது கிரீமியாவும், அந்த சட்ட மூலத்தை பாவித்து தான் பிரிந்து செல்ல விரும்புகிறது. ஆகவே, அது சட்டப் படி செல்லுபடியாகும்.

ஆனால், சில நிபந்தனைகள் உள்ளன. சட்டப் படி பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு, கிரீமியாவுக்கு உரிமை உண்டு. ஆனால், அவர்களின் முடிவை, உக்ரைனில் உள்ள மத்திய  அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும், என்பது ஒரு முக்கியமான நிபந்தனை.

இந்த இடத்தில் பிரச்சினை உண்டாகலாம். ஆகவே, கிரீமியாவின் பிரிவினை முழுமையும் சட்டவிரோதமானது அல்ல. அனால், உக்ரைனிய அரசு விட்டுக் கொடுக்கும் என்றும் தெரியவில்லை.

அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும், கிரீமியா பிரிவினை சட்டவிரோதமானது என்று கூறி வருவது நகைப்புக்கிடமானது. ஒபாமாவுக்கும் மற்ற தலைவர்களுக்கும், உக்ரைனிய சட்டம் தெரியாது என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் உலக மக்களை முட்டாளாக்கும் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உக்ரைனிய நிலவரத்தை இலங்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இலங்கையில் ஒருக்காலும் அது போன்ற சட்டங்கள் இருக்கவில்லை. தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைகளை அங்கீகரிப்பதற்கு, இலங்கை என்றைக்குமே ஒரு சோஷலிச நாடாக இருக்கவில்லை. ஆகையினால், தமிழீழ பொது வாக்கெடுப்புக்கு ஆதரவாக, இலங்கையின் அரசமைப்பு சட்டத்தை உதவிக்கு அழைக்க முடியாது. முதலில் இலங்கையின் சட்டத்தை மாற்ற வேண்டும்.

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு தேவை என்று கோரும் வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், சட்டப் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவதில்லை. மேலும், அவர்கள் யாரும் கிரீமியா பிரிவினையை ஆதரிப்பதாகவும் நான் கேள்விப்படவில்லை.

கிரீமியா பிரச்சினையில், உக்ரைனிய பேரினவாத அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர். இது அவர்களது இரட்டை வேடத்தை காட்டுகின்றது. உண்மையில், தமிழீழம், அல்லது தமிழ்த் தேசியம் கூட, அவர்களுக்கு முக்கியம் இல்லாமல் இருக்கலாம்.

அதை விட, அமெரிக்கா, மேற்குலகிற்கு ஆதரவான அரசியலை முன்னெடுப்பது முக்கியமாகத் தெரியலாம். அதனால் தான், அவர்களை நாங்கள் “வலதுசாரி தமிழ் தேசியவாதிகள்” என்று அழைக்க வேண்டியுள்ளது. இது ஒன்றும் இரகசியம் அல்ல. அவர்களே, அதனை வெளிப்படையாக சொல்லிக் கொள்கின்றனர்.

தமிழீழம் அமைந்தால், அது இந்தியாவுக்கு விசுவாசமான நாடாக இருக்கும் என்று, நெடுமாறன், வைகோ போன்ற தமிழீழ ஆதரவாளர்கள் இந்திய அரசுடன் பேரம் பேசினார்கள். காஷ்மீர், அசாம் தனி நாடாவதை ஆதரிக்கும் தமிழீழ ஆதரவாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

கொசோவோ பிரச்சினையில், மேற்குலக நாடுகளின் நிலைப்பாட்டை ஆதரித்தார்கள். கொசோவோ போன்று தமிழீழமும் உருவாக வேண்டும் என்று, மேற்கத்திய அரசுக்களிடம் கோரிக்கை விடுத்தார்கள்.

அதே நேரம், பாலஸ்தீன பிரச்சினையில், இஸ்ரேலை ஆதரித்தார்கள். ரஷ்யா படையெடுப்பின் விளைவாக, ஜோர்ஜியாவில் அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய இரண்டு தனி நாடுகள் உருவானதை கடுமையாக எதிர்த்தார்கள்.

இப்படி நிறைய உதாரணங்களை எடுத்துக் காட்டலாம். ஆகவே, கிரீமியா பிரச்சினையில் மட்டுமல்ல, மேற்குலகம் எதிர்க்கும் எந்தவொரு தனி நாட்டுப் பிரச்சினையிலும், வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பதை நாம் ஊகித்து அறிந்து கொள்ள முடியும்

https://ilakkiyainfo.com/2014/03/07/கிரீமியா-ஈழம்-ஒரே-இனப்-பி/?amp=1

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

2007 இல் எழுதப்பட்டது..👇

//மேலும் கொள்வனவு செய்யப்பட்ட 06 மிக்-27ஆ தாக்குதல் விமானங்களில் 03 விமானங்களை (அதாவது 50மூ) விமானப்படையினர் இழந்திருந்தனர். எஞ்சிய 03 விமானங்களும் மேலதிக மறுசீரமைப்பு வேலைகளுக்காக உக்கிரைனுக்கு அனுப்பப்பட்டது. 2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்க தாக்குதலில் ஒரு மிக்-27 விமானம் அழிந்ததுடன்இ அதே ஆண்டின் ஆகஸ்ட்டில் சீதுவை கடற்பரப்பில் ஒரு மிக்-27 ரக விமானம் வீழ்ந்து நொருங்கியது (இதில் உக்ரைன் விமானி கொல்லப்பட்டிருந்தார்). பின்னர் பயிற்சி நடவடிக்கையின் போது 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நீர்கொழும்பு கடல் நீரேரியில் ஒரு மிக்-27 வீழ்ந்து நொருங்கியது. எனினும் நாலாம் கட்ட ஈழப்போரில் மிக் விமானங்களின் அவசர தேவையை உணர்ந்த இலங்கை அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேலும் 04 மிக்-27 விமானங்களை கொள்வனவு செய்திருந்தது. //

http://kavishan.blogspot.com/2007/04/blog-post_22.html?m=1

மிக்-27 விமானங்களை உக்கிரேனில் வாங்கினால் அவர்கள்தானே பராமரிக்கவும், ஓட்டவும் பயிற்சியளிக்கவேண்டும். இதைத்தான் மேலேயுள்ளது ஆங்கிலத்தில் Sunday Times, Sunday Observer இல் இருந்து தமிழுக்கு மாற்றித் தந்துள்ளன. 

இவை எதுவும் வன்னியிக் இறுதிப் போரின்போது உக்கிரேனியர்கள் குண்டுபோட்டார்கள் என்றும், புதுக்குடியிருப்பு வெண்புறா நிறுவனம் மீது குண்டுபோட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் அல்ல.

இறுதிப்போரின்போது ஆனந்தபுரம் சண்டைக்களத்தில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய thermobaric weapons ஐ பாவித்தனர். ஓணாண்டியாருக்கு அது தெரியுமா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி முள்ளிவாக்கால் அழிவே நடக்கவில்லை எண்ட சப்ஜெக்ட் தான்...

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் ஏன் ரஷ்யா தலைட்டு உக்ரைன் பிரிவதை ஆதரிக்கிறேன்(உக்ரைன் மட்டுமல்ல இந்தியா குர்தீஷ் ரெகிங்யா எண்டு எங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் ஒடுக்கபடுகிறார்களோ அங்கெல்லாம் அந்தமக்கல் வாழும் பிரதேசங்கள் தனிநாடுகள் ஆகவேண்டும்)…

ரஷ்யா தலையிட்டு டொன்பாஸ் பகுதிகள் சுதந்திரமாக இருக்கமுடியாது. இந்த யுத்தம் பூட்டினுடைய ரஷ்யப் பேரரசின் விரிவாக்கமே. அதுதான் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கான எனது எதிர்ப்பு.

மற்றும்படி ஒவ்வொரு ஒடுக்கப்படும் இனமும் விடுதலை அடையவேண்டும் என்பதை ஒடுக்கப்பட்ட தமிழினத்தவன் என்பதால் நானும் ஆதரிக்கின்றேன். 

சேனன் எழுதிய நீண்ட கட்டுரைகளை ஆறுதலாகப் படித்தால் பூட்டினது நோக்கமும், மேற்கு நாடுகளது நோக்கமும் தெளிவாகத் தெரியும். இடதுசாரி என்பதால் வழமைபோன்று தொழிலாளிகள் ஒன்றுசேர்ந்துதான் தீர்வைக்கொண்டு வரமுடியும் என்கின்றார்.

Quote

லெனினைக்கடுமையாக தாக்கும் பூட்டின் லெனினது கொள்கை அடிப்படையில் உக்ரேனின் பகுதிகளாக இருக்கும்பகுதிகளுக்கு சுய நிர்ணய உரிமை கோருகிறார். உண்மையில் லஹின்ச்க் (Luhansk) டானியச்க் (Donetsk) மக்களின் சுதந்திரம் பற்றி பூட்டின் பேசுவதன் போலித்தன்மையை அவரது பேச்சே சிறப்பாக எடுத்துக்காட்டி நிற்கிறது. உக்ரேனிய மற்றும் மேற்கு அரசுகளோடு மோதுவதற்கு மட்டுமே இந்தே இடங்கள் குடியரசாக அறிவிக்கப்பட்டிருக்கிறனவே தவிர இந்த இடங்களின் பூரண சுதந்திரம் பூட்டினின் நோக்கம் இல்லை. கிரிமியவைப் போல் இந்தப் பகுதிகளையும் ரஷ்யாவோடு இணைத்துக் கொள்ளும் நோக்கம்தான் பூட்டினுக்கு உண்டு.

ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இந்த பகுதிகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது. டான்பாஸ் பகுதி இராணுவத்தின் தலைமை முதற்கொண்டு அதன் முழுக் கட்டுப்பாடும் ரஷ்யர்கள் கையில்தான் உண்டு. அங்கு வாழும் உக்ரேனியர் பல நெருக்கடிக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். அங்கு வாழும் ரஷ்ய இனத்தவர்கள் பலர் தம்மை ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்களாகக் கருதுவதில்லை. அந்தப் பகுதி நிர்வாகங்கள் ரஷ்ய அரசை மீறி ஒரு முடிவுகளை எடுக்க முடியாது. ரஷ்ய அரசு பேசும் பெயரளிவில் சுதந்திரம் என்பது உக்ரேனுக்கு எதிராக தமது கட்டுப்பாடுகளை நிறுவுவதற்கே.

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

சும்மா விசர்க்கதை கதைக்ககுடாது… குர்திஷ் மக்கள் நடத்தும் ஊர்வலங்களில் வருடம்தோறும் கலந்துகொள்பவன் நான்.. அங்கு வரும் தமிழர்கள் பலரையும் நான் அறிவேன்.. நீங்கள் போகாட்டி மற்றானும் போறதில்லை எண்டு நினைக்ககுடாது..

நல்லது. இங்கும் ஒன்றிரண்டு பேர் போவதால்தான் குர்தீஸ் பேராசிரியரையும் எமது ஊர்வலங்களுக்கு அழைக்கக்கூடியதாக இருக்கின்றது. 

இந்த வருடம் போகும்போது குர்தீஸ்காரர்களுக்காக கொடியோ, பதாகையோ பிடிக்கும் தமிழரின் படத்தையும் ( குளோசப் வேண்டாம்) போட்டுவிடுங்கள்👍🏾

  • கருத்துக்கள உறவுகள்

யாருமே இலங்கையில் உள்ள தமிழர்கள் உக்கரேன் எம் மீது குண்டு தாக்குதல்கள் நடத்தியது ,ஆதனால் நாம் ரஷ்யா உக்ரைனை தாக்குவதை ஆக்கிரமிப்பை ஆதரிக்க வேண்டும் என்று  சொன்னதாக தெரியவில்லை. காதுக்கு வந்த செய்திகள்படி அங்கே புரின் ஹிட்லர் மாதிரி ஆசைபடுகிறார் போலும் என்று சொன்னார்களாம். மேற்குலக நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் தான் புரினின் ரசிகர்களாக மாறி நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

மதிப்புக்குரிய கிருபனிற்கு… அவர் நம்பும் இணையத்திலேயயே தமிழ் நாதத்தில் 2006 இல் வெளியான கட்டுரை..👇அப்பொழுது ரஷ்யா உக்ரேனுக்கு அடிக்கவில்லை.. ஆக உக்ரேனை வலிந்து இழுத்து எழுதவேண்டிய அவசியம் 2006 இல் இல்லைதானே..

//உதாரணமாக 2000 ஆண்டு மாசி மாதம் அனுராதபுரத்தில் தலவா பகுதியில் பலாலியில் இருந்து படையினரை ஏற்றிச்சென்ற அன்ரனோவ் - 24 (யுழெவழழெஎ 24) ரக விமானம் 04 உக்ரைன் நாட்டு விமானிகள் உட்பட 36 படையினருடன் வீழ்ந்து நொருங்கியது.//

மூலம்- 

குறைந்த பட்சம் நீங்கள் இணைக்கும் "எக்ஸ்டரா" தகவல்களையாவது முழுமையாக வாசித்து, அதற்கு எழுதப்பட்ட பிற கருத்துக்களை வாசித்து கிரகித்து, விடயத்தை உள்வாங்கி விட்டு; இங்கே கொண்டு வந்து வெட்டி ஓட்டுங்கள் ஓணாண்டியாரே. 

கிருபன்
October 29, 2006 இல் சொன்னது இன்று 2022 வில் கூட சாலப்பொருத்தமாய் தான் இருக்கு...
இணையத்தை பாவிக்கத் தெரிவதும், விசைப்பலகையில் உள்ள எழுத்துக்களை அடிக்கத் தெரிவதும், தேடல்பொறிகளைப் பாவிக்கத் தெரிவதும், (வாசிக்கமாலேயே) வெட்டி ஒட்டத் தெரிவதும் எம்மை அறிவாளிகள் என்று நாமே நம்பத் தேவையான தகுதிகள். 😀

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை இந்த திரி 5/6 பக்கத்துடன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.. அவ்வளவுதான். 
ஏனெனில் திரும்ப திரும்ப ஒரே கருத்தையும் குற்றவுணர்வு/உணர்ச்சி அரசியல், படித்த(?),படிக்காத(?) நபர்கள் என ஒருவருக்கொருவர் யார் பெரியவர் என நிரூபிப்பதும் DNA ஆராய்ச்சியுமே மிகுதி.. Seriously??

வலிமை உள்ள நாடுகள் தங்களது பலத்தைக் காட்ட போர்களை தொடங்குகிறார்கள்.. பலியாவது சாதாரன மனிதர்கள். இந்த போரினால் வரப்போகும் பொருளாதார நெருக்கடி ஒருபுறம் என்றால் human trafficking இன்னொருபுறம் அதிலும் பெண்கள்/சிறுவர்களைப் பற்றி ஒரு சிந்தனையும் இல்லை.. நாங்கள் அதனை அனுபவித்தவர்கள் என்பதால் மற்றவர்களும் அனுபவித்துவிட்டுப் போகட்டும். பிறகு  வந்து இதைப் பற்றி பக்கம்பக்கமாக எழுதுவோம்

பெரும்பலான தமிழர்கள் சுயநலமாகவும் ஒற்றுமையில்லாமலும் இருப்பதால்தான் விடிவும் இல்லை நீதியும் இல்லை ஆனால் மற்ற இனங்களைப் பற்றி விரிவுரை எடுக்கிறோம்.. 

ஒருவரையும் வேதனைப்படுத்த எழுதவில்லை, ஆனால் திரி போகும் திசையை பார்த்து விரக்தியில் எனது கருத்தை எழுதியுள்ளேன்.. அவ்வளவுதான் 
நன்றி!!

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அதே சலிப்பு தான் சகோதரி...
வாய் கிழிய அடக்கி, ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட எமது  மக்களின் தேசியம், அவலம் பற்றி 
பேசுவோர், சுயஆட்சி அதிகாரத்தோடு பிரிந்து சென்ற நாட்டின் மக்கள் கண்முன்னே 3 மில்லியன், 4 மில்லியன் என்று அகதிகளாக்கப்பட்டு, நீங்கள் சொன்ன மனித அவலங்கள் உட்பட பல இன்னல்களை சந்திக்கின்ற போதும் தார்மீக உணர்வோடு அதை பேசாமல்...  சர்வாதிகாரி புட்டினுக்கு அடிவருடிகளாக கதை அளக்கும் பண்பை  பார்க்க எனக்கும் அதே சலிப்புதான் தான். 😥 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Sasi_varnam said:

பிரபா சிதம்பரநாதன் தனது கருத்தை பக்கச்சார்பில்லாமல் போரால் பாதிக்கப்படுவோரின் குரலாக  எழுதியுள்ளார். 

ஆனால் நீங்கள் அவரையும் உங்கள் கருத்திற்கு துணையாக இழுப்பது கோழைத்தனமான இழி செயல்

வெட்கம்.

😏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

யாருமே இலங்கையில் உள்ள தமிழர்கள் உக்கரேன் எம் மீது குண்டு தாக்குதல்கள் நடத்தியது ,ஆதனால் நாம் ரஷ்யா உக்ரைனை தாக்குவதை ஆக்கிரமிப்பை ஆதரிக்க வேண்டும் என்று  சொன்னதாக தெரியவில்லை. காதுக்கு வந்த செய்திகள்படி அங்கே புரின் ஹிட்லர் மாதிரி ஆசைபடுகிறார் போலும் என்று சொன்னார்களாம். மேற்குலக நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் தான் புரினின் ரசிகர்களாக மாறி நிற்கிறார்கள்.

உங்கள் கற்பனைத் திறனுக்கு பாராட்டுக்கள்.

இங்கே புடினுக்கு ஆதரவாக எழுதியவர்கள் ஒருவரையாவது காட்ட முடியுமா..?

இன்றைய ahalnews.com ல் சண் தவறாஜா வீரகெசரிக்காக எழுதிய கட்டுரை (மீள் பிரசுரம்) வெளிவந்துள்ளது. 

உங்களை ப்போன்றவர்களுக்காகத்தான் அந்தக் கட்டுரை. வாசியுங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.