Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஆரம்பம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருவதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இடையிலான சந்திப்பு பிற்போடப்பட்டிருத்த நிலையில்  குறித்த சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை 25 ஆம் திகதி இடம்பெறுகின்றது.

அரசியல் தீர்வு விடயங்கள், அதிகார பகிர்வு, பொருளாதார நெருக்கடி நிலைமைகள், காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை இந்த சந்திப்பில் கலந்துரையாட தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கடந்த 15 ஆம் திகதி  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவிருந்த நிலையில் இறுதி நேரத்தில் இந்த சந்திப்பு பிற்போடப்பட்டது. 

அன்றைய தினம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர் கொழும்பில் நடத்திய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை காரணம் காட்டியே தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பை ஜனாதிபதி தரப்பு பிட்போட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/124702

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களிற்கும் இடையில் நிலவும் இடைவெளியை நிரப்புவதற்கு தான் தயாராக உள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் கோட்டாபய தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்ற சர்வ கட்சிகூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே புலம்பெயர் தமிழர்கள் தங்கள் தாயகப்பகுதியில் முதலீடு செய்வதற்கு அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்கள் மில்லியன் கணக்கில் டொலரை முதலீடு செய்ய தயாராக உள்ளனர் என தெரிவித்த அவர் இலங்கையில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்யவும் அவர்கள் தயார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

டயானா கமகேயின் யோசனையை ஆதரித்த சுமந்திரன் இலங்கையின் சமமான மக்கள் என்ற அடிப்படையில் அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களிற்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதன் மூலம் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கத் தயார் என தெரிவித்தார். 

 

https://ibctamil.com/article/srilanka-government-tamil-diaspora-sumanthiran-1648144218

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

சிறிலங்கா அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களிற்கும் இடையில் நிலவும் இடைவெளியை நிரப்புவதற்கு தான் தயாராக உள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆர் உந்த புலம்பெயர்ந்த தமிழர்கள்? அவையள் புலம்பெயர் நாடுகளிலை என்ன செய்யினம்?

  • கருத்துக்கள உறவுகள்

உவருக்கு எறியிற செருப்பில கொஞ்சத்தைக் கொண்டுபோய்க் கோட்டாவிட்ட குடுப்பார் எண்டு நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

உவருக்கு எறியிற செருப்பில கொஞ்சத்தைக் கொண்டுபோய்க் கோட்டாவிட்ட குடுப்பார் எண்டு நினைக்கிறேன்.

May be an image of 1 person, standing and outdoors

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

உவருக்கு எறியிற செருப்பில கொஞ்சத்தைக் கொண்டுபோய்க் கோட்டாவிட்ட குடுப்பார் எண்டு நினைக்கிறேன்.

இதைத்தான் பொல்லைக் கொடுத்து அடிவாங்குவது என்பது.

அவருக்கு தனிய வரமுடியாதநிலை. இதில கோத்தாவுடன் வரப்போறாராம்??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இதைத்தான் பொல்லைக் கொடுத்து அடிவாங்குவது என்பது.

அவருக்கு தனிய வரமுடியாதநிலை. இதில கோத்தாவுடன் வரப்போறாராம்??

நுண்லையும் தன் வாயால் கெடும். 

சிறந்த உதாரணம் - சுமந்திரன். 

1 hour ago, பெருமாள் said:

May be an image of 1 person, standing and outdoors

பெருமாள்,

சந்தடி சாக்கில இதை எனக்குக் காட்டவில்லைத்தானே 😆

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினர் காணியினை சுவீகரிக்கிறார்களா – அவர்களுக்கு எதற்கு காணி? கூட்டமைப்பிடம் கேட்டார் கோட்டா!

இராணுவத்தினர்... காணியினை சுவீகரிக்கிறார்களா? – அவர்களுக்கு எதற்கு காணி? கூட்டமைப்பிடம், கேட்டார் கோட்டா!

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணியினை சுவீகரிக்கிறார்களா? அவர்களுக்கு எதற்கு காணி என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்ததுடன், பகல் 1 மணி வரை நடைபெற்றிருந்தது.

இதன்போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்ததாக கூறப்படுகின்றது.

வயல் நிலங்களை சுவீகரிப்பது, மக்கள் நுழைய தடைவிதிப்பதெல்லாம் ஏற்க முடியாத நடைமுறைகள் என ஜனாதிபதியும், பிரதமரும் தெரிவித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://athavannews.com/2022/1273401

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

க வே பாலகுமார் அவர்கள் ஒரு தடவை கூறியிருந்தார் உண்மைய எவ்வளவு ஆழத்துக்குக் குழிதோண்டிப் புதைத்தீர்களோ அதே ஆழத்தின் அடிப்படையில் விரைவுகொண்டு மீண்டும் மேலே எழுந்துவரும் என ஒரு தத்துவாசிரியன் கூறியுள்ளான் என.

அதே போல் புலம்பெயர் தேசங்களில் மற்றும் தாயகத்தில் சுமந்திரன் தனது அடிடியாள் என "கிளப்கவுஸ்" "ருவீற்றர்" போன்றவற்றில் கக்கித்துப்பி சுமந்திரன் துதிபாடினாலும் சுமந்திரனது முகம் அவராலேயே வெளிக்கொணரப்படும். 

காலையில் கால் இறாத்தல் பாண்துண்டும் சீசனுக்கு மலிவாகக்கிடைக்கும் வாழைப்பழமும், ஆகக்குறைந்தது சூடைக்கருவாடோடு ஒரு பிடி மதிய சாப்பாடும்  மாலையில் புட்டோ இடியப்பமோ எப்போவாவது தோசையோ அல்லையேல் எடுப்புச்சாப்படோ இத்துடன் இருக்க ஒரு இடம் உடுக்க இரண்டு செற் உடுப்பு இவைகளுடன் ஒருவரால் வாழமுடியாதா? சுமந்திரன் தனதுசாபாட்டுத் தட்டில மேல்குறிப்ப பக்தார்தங்களை விடுத்து வேற ஏதையாவது போட்டுத் திங்கிறாரா? புறக்கிராசி வேலையை விட்டு எப்போ புறோக்கர் வேலை தொடங்கியவர்(.)

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதிக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு நிறைவு – அரசியல் தீர்வு குறித்தே அதிக அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக தகவல்!

நீண்டகாலமாக.... தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளை... விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்!

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்ததுடன், பகல் 1 மணி வரை நடைபெற்றிருந்தது.

குறித்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பானது கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடைபெறவிருந்த நிலையில், அது பிற்போடப்பட்டே இன்றைய தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

அரசியல் தீர்வு தொடர்பாக கலந்தாலோசிக்கவே நாம் விசேடமாக இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தோம்.

அரசமைப்பின் ஊடாக இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுக் காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

இதில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அரசமைப்பு தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர்களின் அறிக்கை கிடைத்துள்ளதாகவும், இது சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அறிக்கை கிடைத்தவுடன், அடுத்தக்கட்டப் பேச்சை கூட்டமைப்புடன் நடத்துவோம் என்று தெரிவித்திருந்தார்.

அத்தோடு, எமது அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தைக்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தோம்.

இதில் 4 விடயங்களில் இப்போது உடன்பாடும் எட்டப்பட்டுள்ளது. அந்தவகையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தோம்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை திருத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு இணங்க, இதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தோம்.

மேலும், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக நீதி அமைச்சரும் நானும் இணைந்து, சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் விளக்கவும் தீர்மானித்துள்ளோம்.

இதனை நாம் அடுத்து சில நாட்களில் மேற்கொள்வோம். அடுத்ததாக காணிப் பிரச்சினை தொடர்பாக பேசினோம்.

அதாவது, வடக்கு- கிழக்கில் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

அத்தோடு, தொல்பொருள் அகழ்வாராய்ச்சி எனும் பெயரில் இடம்பெறும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம்.

நீண்ட காலமாக பயிர்செய்கையில் ஈடுபடுவோருக்கும் இடையூறுகளை விளைவிக்காமல், அவர்களை அதனை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளோம்.

அதேநேரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிட்ட நாம், பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடானது அவர்களுக்கான தீர்வாக அமையாது என்றும் மாறாக இதுதொடர்பாக முழுமையான விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

நான்காவது விடயமாக, விசேட நிதித்தொகையொன்றை வடக்கு- கிழக்கு பகுதி அபிவிருத்திகளுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை நாட்டுக்குள் ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.

எமது இந்தக் கோரிக்கைளை ஏற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் இவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக எம்மிடம் உறுதியளித்துள்ளன.

புதிய அரசமைப்பு ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வையும் கோரியுள்ளோம். அதற்கான நடவடிக்கை இன்னும் 2 மாதங்களில் இடம்பெறும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.“ எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1273414

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் முதல் பேச்சுவார்த்தை

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
51 நிமிடங்களுக்கு முன்னர்
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பட மூலாதாரம்,PMD SRI LANKA

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் முதல் முறையாக இன்று (25) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக, அரசியல் தீர்வொன்றை பெறுவது குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இரண்டு மாத காலத்திற்குள் மொழி பெயர்ப்புக்களுடன் கிடைக்கும் எனவும், அதிகார பகிர்வு உள்ளிட்ட புதிய அரசியல் குறித்த விடயங்கள் அதன் பின்னர் தொடர முடியும் எனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உறுதியளித்ததாக, எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த விடயத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, செய்ய வேண்டிய நான்கு விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பட மூலாதாரம்,PMD SRI LANKA

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ தேவைக்காக இனி காணிகள் சுவிகரிக்கப்படாது என ஜனாதிபதி இன்றைய பேச்சுவார்த்தையில் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

அத்துடன், பிரதேச சபை எல்லைகள், மாவட்ட எல்லைகள், கரையோர எல்லைகள் ஆகியவை மாற்றப்படுவதற்கான சில முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கைகள் தற்போதைக்கு செய்யப்படாது எனவும் ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் காலப் பகுதியில் அந்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், விசேட சட்டங்களின் கீழ் நில ஆக்கிரமிப்பும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் விவகாரத்தில், காணாமல் போனோரின் உறவுகளுக்கு வழங்கப்படுவதாக கூறப்படும் ஒரு லட்சம் ரூபா பணமானது, காணாமல் போனோருக்கான இழப்பீடு அல்லவெனவும், அது தற்காலிக கொடுப்பனவு எனவும் ஜனாதிபதி தரப்பினர் இதன்போது கூறியுள்ளனர்.

காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் இன்றைய சந்திப்பில் உறுதி வழங்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் பொருளாதார மீள் எழுச்சிக்காக ஒரு விசேட அபிவிருத்தி நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இந்த நிதியத்தின் ஊடாக புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகளை வருவிப்பதற்கு அரசாங்கம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் உறுதி வழங்கப்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான நிலையில், அரசியல் தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தை, ஜனாதிபதி நிபுணர் குழுவின் மொழி பெயர்ப்பு அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் கிடைக்கப் பெற்றதை அடுத்து தொடரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, பொருளாதார ரீதியில் நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை

''நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைந்து செயற்படுவோம்" என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பட மூலாதாரம்,PMD SRI LANKA

நாட்டு மக்கள் அனைவரினதும் தலைவராக, அனைத்து மக்கள் மீதும் தாம் ஒருசேர அவதானத்தைச் செலுத்துவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை விடுவித்தல், குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்படாத சந்தேக நபர்கள் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்தல், உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை ஆரம்பித்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மறுசீரமைத்தல், காணாமற்போனோர் தொடர்பான பிரச்னைகளுக்கான தீர்வுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்துடன், தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம், வடக்கு - கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மக்களின் நோக்கங்களையும் நிறைவேற்றி, நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகர்த்த முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பட மூலாதாரம்,PMD SRI LANKA

ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வின் மூலம், நாட்டை சுபீட்சத்தை நோக்கி நகர்த்துவது தமது எதிர்பார்ப்பாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.

தாம் ஒரு நாடாக ஒன்றுபட வேண்டும். ஒரு நாடு, ஒரே மக்கள் என்று செயற்பட்டு, நாட்டின் தற்போதைய நிலைமையில் இருந்து, நாட்டை விடுவிப்பது அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகும் என இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை, கிழக்கு சுவிட்சர்லாந்தாக மாறுவதை காண விரும்புவதாக இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

நீண்டகாலமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் எதிர்கால நடவடிக்கைகள், நீண்டகாலமாக பயிர்ச் செய்யப்பட்ட காணிகளை விடுவித்தல், காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தல், புதிய அரசியலமைப்பு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதன் பின்னர் அதில் சேர்க்கப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுதல், வடக்கு - கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை ஸ்தாபித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

https://www.bbc.com/tamil/sri-lanka-60876079

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

ஆர் உந்த புலம்பெயர்ந்த தமிழர்கள்? அவையள் புலம்பெயர் நாடுகளிலை என்ன செய்யினம்?

உவருக்கு அடிச்சக்கள்தான்..ஊருக்கு கூப்பிட்டு சாத்த்துவதற்குத்த்தான்..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணியினை சுவீகரிக்கிறார்களா? அவர்களுக்கு எதற்கு காணி என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு முன் ஜனாதிபதி இதுபற்றி தெரிந்திருக்கவில்லையா அல்லது தமிழ் தரப்பு இந்த விடயம் பற்றி நாடாளுமன்றில் பேசவில்லையா.

இந்த பேச்சுவார்த்தையை குளப்புவதற்கும் விரைவில் முஸ்லிம்களும் களமிறக்கப்படுவார்கள்.
தாங்களும் தமிழ்தரப்புடன் சேர்ந்து ஜனாதிபதியுடன் பேச வேண்டும் என்று கோரிக்கைவைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, vanangaamudi said:

இதற்கு முன் ஜனாதிபதி இதுபற்றி தெரிந்திருக்கவில்லையா அல்லது தமிழ் தரப்பு இந்த விடயம் பற்றி நாடாளுமன்றில் பேசவில்லையா.

இந்த பேச்சுவார்த்தையை குளப்புவதற்கும் விரைவில் முஸ்லிம்களும் களமிறக்கப்படுவார்கள்.
தாங்களும் தமிழ்தரப்புடன் சேர்ந்து ஜனாதிபதியுடன் பேச வேண்டும் என்று கோரிக்கைவைப்பார்கள்.

மூக்கு, இருக்கும் மட்டும்….. சளி, இருக்கும் என்ற மாதிரி…. 😂
முஸ்லீம், இருக்கும்  மட்டும்…. நமக்கு, தீர்வும் இல்லை. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணியினை சுவீகரிக்கிறார்களா? அவர்களுக்கு எதற்கு காணி என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

திங்கள் கிழமையும் நிலாவரைக் கிணத்தைச்சுற்றி கிடங்குவெட்டினவை....இது அவருக்குத் தெரியாதோ ...அல்லது போனவைக்கும் தெரியாதோ....

முசுலிமுகள் .. இப்ப கதையாயினம்..பங்கு போடுகிற நேரத்திலை சரியா நிப்பினம்...அப்பதான் ...குழப்ப சரி...இப்ப அவை பேரீச்சம்பழம் ரக்ஸ்  பிறீயாக் கிடைத்த சந்தோசத்திலை இருக்கினம்..

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி கூட்டமைப்பு என்ன கேட்டிருக்கும்??  இந்த முறை கோட்டா எல்லாம் கேட்டு வாங்கியாச்சு? சில நேரங்களில் அடுத்த முறை கோட்டாவில்??? எதுக்கும் அடுத்த தீபாவளிக்கு தீர்வு என்ற அறிக்கை வந்தால் தெரிந்து கொள்ளலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

மூக்கு, இருக்கும் மட்டும்….. சளி, இருக்கும் என்ற மாதிரி…. 😂
முஸ்லீம், இருக்கும்  மட்டும்…. நமக்கு, தீர்வும் இல்லை. 🤣

அவர்களும் பெரும்பான்மை அடக்குமுறைகளுக்கு உள்ளாகிறார்கள், துரதிஸ்டவசமாக எமக்குள் ஒரு புரிந்துணர்வு இல்லாமல் போய் விட்டது, சிறுபான்மை மக்களை பிளவுபடுத்துவதில் சிங்களம் எப்போதும் கவனம் செலுத்தும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
54 minutes ago, விசுகு said:

அதுசரி கூட்டமைப்பு என்ன கேட்டிருக்கும்??  இந்த முறை கோட்டா எல்லாம் கேட்டு வாங்கியாச்சு? சில நேரங்களில் அடுத்த முறை கோட்டாவில்??? எதுக்கும் அடுத்த தீபாவளிக்கு தீர்வு என்ற அறிக்கை வந்தால் தெரிந்து கொள்ளலாம்.

 

வடிவேலுவின்ரை காமெடி அத்தனையும் சம்சும் கொம்பனிக்கு பொருந்தும்...

VadiveluComedy ஓ பையன் டிரஸ் போடாத முதுக பாத்து பயந்துட்டான் | Vadivelu  Comedy HD, #Vadivel #Comedy - YouTube

Iwillcrie Vadivelu GIF - Iwillcrie Vadivelu Winner - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணியினை சுவீகரிக்கிறார்களா? அவர்களுக்கு எதற்கு காணி என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தக்கேள்விக்கு நம்மாளுகள் என்ன சொல்லியிருப்பார்கள்?

மஹந்த ஜனாதிபதியாக வந்தபோது எஸ். பி. திஸாநாயக்கா என நினைக்கிறேன் (மறந்துவிட்டேன்) சிறையில் இருந்தார். அவரின் ஆதரவாளர்கள் அவரது விடுதலை பற்றி மஹிந்தவுடன் கதைத்தபோது; திஸாநாயக்கா இன்னும் சிறையிலா இருக்கிறார்? என்று கேட்டார். மாவிடபுரத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை திருவிழா செய்வதற்கு ஒருதடவை இராணுவம் அனுமதித்திருந்தது. அப்போ ஞானப்பழமாக நின்ற எங்கள் தலையிடம்; இடம்பெயர்ந்து தாம் படும் கஷ்ரங்களை சொல்லி தமக்கு அதிலிருந்து விடுதலை பெற்று தங்கள் இடங்களில் தாம் நிரந்தரமாக வாழ ஆவன செய்யுமாறு அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள்  கேட்டுக்கொண்டார்கள். அப்போ இவர் அவர்களை பார்த்து "நீங்கள் உங்கள் சொந்த இடங்களிலிருந்து எத்தனையாம் ஆண்டு இடம்பெயர்ந்தீர்கள்?" என்று  திருப்பிக்கேட்டார் என்றால் பாருங்களேன் இவரின் பகிடியை! அப்போ அந்த மக்கள் இடம்பெயரும்போது அவர் நாட்டில் இல்லை, அவர்களின் இடம்பெயர்வைப்பற்றி அவர் அறிந்திருக்கவும் இல்லை நம் தலீவர் இன்றும். அரசியல் வியாதிகள் மறந்ததுபோல் நடித்து தம்மை பாதுகாத்துக்கொள்வதும்,  புத்திசாலிகளாக காட்டுவதும்,  மக்களை ஏமாற்றுவதும், முட்டாள்களாக்குவதும் இன பேதமில்லாமல் நடக்குது.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.