Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டா அரசியலும் இருக்கும் கேள்விகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நிலவி வரும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகள் குறித்து மனதில் எழுந்த கேள்விகள் சில 
முடிந்தால் உங்கள் பதில்களையும் கருத்துகளையும் பதியுங்களேன்.

  1. ராஜபக்ஸ சகோதரர்கள் மக்கள் கோருவதுபோல ஆட்சியை கலைத்து, அரசியல் துறந்து விலகி நிற்பார்களா?    
  2. தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் தமிழர்களுக்கு பெரியஅளவில் பாதிப்பு இருக்கிறதா?
  3. இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு எழ அதிக காலங்கள் தேவைப்படுமா?   
  4. இன்றைய சூழ்நிலையை தாயக தமிழர்கள் /  புலம்பெயர் தமிழர்கள் எப்படி கையாளலாம்?
  5. தமிழர்கள் தார்மீகரீதியில் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு அடையாளமாக போராட்டங்களுக்கான ஆதரவை கொடுக்கலாமா?  
  6. புதிய அரசியல் மாற்றம் ஏற்படுமாயின் அது சார்ந்து தமிழ் அரசியல்வாதிகளின் பங்கு எப்படி இருக்க வேண்டும்?
  7. புதிய அரசு அமைக்கும் சூழல் ஏற்படின் யாரை, அல்லது எந்த கட்சியை மக்கள் தெரிவு செய்வார்கள்  என் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
  8. இலங்கையை சரியான முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தகமை இருக்கக் கூடிய யாரவது தலைவர் இருக்கிறார்களா?
  9. இன்றைய மக்கள் போராட்டங்களின் விளைவாக புதிய இளம் அரசியல்வாதிகள்  உருவாகுவார்களா ?
  10. இனிவரும் காலங்களில் இலங்கை அரசியல் சித்தாந்தம் "மஹாவம்ச" கொள்கைகள், புருடாக்களை தவிர்த்து பயணிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகிறதா?

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

10.  சிங்கள மக்கள் சிந்திக்கிறார்கள் . ஆனால் உணவும் ஏனைய தேவைகளும் கிடைக்கும் போது இனவாதம் இலகுவாக புகுந்து  கொள்ளும்.
9. மகிந்த  குடும்பம் , ரனில் போன்றவர்களை அரசியலில் இருந்து நீக்கும் வரை சாத்தியமில்லி.
7. தற்போது மைத்திரி , சஜித்  போன்ற தெரிவுகள் உண்டு.
6. சொல்லவே தேவை இல்லை. கெட்டித்தனமும், துணிவும் ஒருங்கே அமைந்த தலைவர் யாருமே இல்லை துரதிஸ்டவசமாக.

நிறைய நல்ல கேள்விகளை ஒரே அடியாக கேட்டுள்ளீர்கள் சசி. எல்லாவற்றுக்கும் பதில் சொல்லாமல் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்ல முயல்கின்றேன்.
 
1 hour ago, Sasi_varnam said:

  1. ராஜபக்ஸ சகோதரர்கள் மக்கள் கோருவதுபோல ஆட்சியை கலைத்து, அரசியல் துறந்து விலகி நிற்பார்களா?    

முதலாவது ஆட்சியில் பெரும் இனப்படுகொலையையும் பின் மூன்றாவது தடவை ஆட்சிக்கு வருவதற்காக ஈஸ்டர் தாக்குதல் என்ற மனிதப் படுகொலைகளையும் நிகழ்த்தி ஆட்சிக்கு வந்த மகிந்த சகோதரர்கள் தம் ஆட்சியை தக்கவைக்க அனைத்து விதமான முயற்சிகளிலும் ஈடுபடுவர் - அது இரானுவப் சதிப் புரட்சி ஒன்றை நிகழ்த்தி இராணுவத்தின் உதவியுடன் ஆட்சி செய்யும் அளவுக்கு செல்லலாம். ஆயினும் இது இந்தியா உட்பட பல நாடுகளால் எதிர்க்கப்படலாம் என்பதால், மீண்டும் தாம் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகளை எதிர்காலத்தில் உருவாக்கி கொள்ளலாம் என்பதால் சிங்கள மக்களின் எதிர்ப்பு மிகவும் கூர்மையாக அடுத்து வரும் நாட்களில் / வாரங்களில் நிகழுமாயின் ஆட்சியை விட்டு மரியாதையாக விலக விரும்புவார்கள். 

1 hour ago, Sasi_varnam said:

2. தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் தமிழர்களுக்கு பெரியஅளவில் பாதிப்பு இருக்கிறதா?

பொருளாதார ரீதியில் மட்டும் கடும் பாதிப்பு ஏற்படும். போரால் மிகவும் சிதைந்து போயிருக்கும் தமிழர்களின் பொருளாதாரம் கண்டிப்பாக இதனால் மேலும் பாதிக்கப்படும்.

அரசியல் ரீதியில் என்றால், பாதிப்போ அனுகூலமோ ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

1 hour ago, Sasi_varnam said:

4. இன்றைய சூழ்நிலையை தாயக தமிழர்கள் /  புலம்பெயர் தமிழர்கள் எப்படி கையாளலாம்?

தாயக தமிழர்கள்: முற்றிலும் சிங்களவர்களின் வாக்குகளால் தான் தெரிவான சனாதிபதி என்று அடிக்கடி சொல்லி மார்தட்டும் சனாபதியினதும் அவரது பரிவாரங்களினதும் ஆட்சியை அகற்ற அதே சிங்கள மக்கள் துடிக்கின்றனர். இதில் தமிழர்கள் செய்வதற்கு என்று என்ன இருக்கின்றது?  

இன்றைய சூழ்நிலையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்பதே நல்லம். இது கூத்து பார்க்கும் நேரம். சேர்ந்து ஆட வேண்டிய நேரம் அல்ல. 

புலம்பெயர் மக்கள்: இன்றைய பொருளாதார நெருக்கடியில் தாயக மக்களுக்கு பொருளாதார உதவிகளை மேலும் அதிகரித்து தம் தலைவிதியை, தம் அரசியல் முடிவுகளை தாமே தீர்மானிக்கும் அளவுக்கு அவர்களை வலுப்படுத்த வேண்டும். 

அரசியல் ரீதியில் எந்த தலையீடும் செய்ய கூடாது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

தமிழர்கள் தார்மீகரீதியில் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு அடையாளமாக போராட்டங்களுக்கான ஆதரவை கொடுக்கலாமா?  

இன்றுநடக்கும் போராட்டம் ராஜபக்ஷேக்களின் ஊழல்களுக்கெதிராகவும், தான் தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கெதிராகவும், நாட்டின் இக்கட்டான சூழ்நிலைக்காகவுமே நடக்கிறது. வேறு எந்தக் காரணத்திற்காகவும் அல்ல. 

அவர் தனது வெற்றிக்காக சிங்களத் தேசியவாதத்தையும், மதத்தையும் பாவித்தார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறதே ஒழிய, அவை தேவையில்லையென்று சிங்களவர்கள் கருதுவதாகத் தெரியவில்லை. 

அத்துடன், பெரும்பாலான சிங்களவர்கள் இவ்விரு பிரதான கட்சிகளிலிருந்தும் விலகி இன்னொரு இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வருவதையே விரும்புவதாகத் தெரிகிறது.

தமிழர்களாகிய நாம் கவனிக்கத் தவறும் ஒரு விடயம் தான் நாடு ஓரளவிற்கு நன்றாக இயங்கிக்கொன்டிருக்கும் நேரத்தில் ராஜபக்ஷேக்கள் ராஜாக்களாகத்தான் சிங்களவர்களால் வணங்கப்பட்டார்கள், தமது வயிற்றில் அவர்கள் கைவைக்கும்வரை சிங்களச் சனம் அவர்களை தமது மன்னர்களாகவே பார்த்தார்கள்.

ராஜபக்ஷேக்கள் ஒரு வேளை ஆட்சியை இழந்தாலும், அதே இனவாதத்தைப் பாவித்து மீண்டும் ஆட்சிக்கு வர சந்தர்ப்பம் இருக்கிறது.

வயிற்றுப்பசி, இனவாதப் பூதத்தை மறைத்து வைத்திருக்கிரது. பசியடங்கியதும் மீண்டும் பூதம் வெளிக்கிளம்பும்.

சில சமூக வலைத்தளங்களில் தமிழர்கள் இப்போராட்டம் குறித்து முன்வைக்கும் கருத்துக்களுக்கு, "இது உங்களின் பிரச்சினையில்லை, ஒதுங்கிநின்று வேடிக்கை மட்டும் பாருங்கள், இது எங்களுக்கும் எங்கள் அரசுக்கும் இடையிலான பிரச்சினை. உங்களின் அரசியல் பிரச்சினையினை இங்கு கொண்டுவரவேண்டாம்" என்று காட்டமாகப் பதிலளிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

அத்தனையும் பொருள்.

2 hours ago, Sasi_varnam said:

7. புதிய அரசு அமைக்கும் சூழல் ஏற்படின் யாரை, அல்லது எந்த கட்சியை மக்கள் தெரிவு செய்வார்கள்  என் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

இன்னொரு தேர்தலின் மூலம் தான் அடுத்த நிலையான ஆட்சியை கொண்டு வர முடியும். வலதும் இடதும் என்று இருக்கும் கட்சிகளுடன் இணைந்து அனைத்து கட்சிகளின் பங்களிப்புடன் ஆட்சி ஏற்படின் அதுவும் நீடிக்காது.

தேர்தல் வந்தால், 

சஜித்துக்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் அவரால், அவரது கட்சியால் தனித்து நின்று வெல்ல முடியாது. எனவே கடந்த முறை போன்று மனோகணேசன் போன்றோருடன் கூட்டணி அமைத்தால் வெல்ல முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்புடனுன் கூட்டணி அமைத்தால், வெற்றி பெறுவது கடினமாகும்.

அத்துடன் ஜேவிபி இற்கு சிங்கள மக்கள் இந்த முறையும் அதரவளிக்க மாட்டார்கள். அனுரவைத் தவிர அங்கு உருப்படியான ஒரு தலைவர் இல்லை.

2 hours ago, Sasi_varnam said:

8. இலங்கையை சரியான முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தகமை இருக்கக் கூடிய யாரவது தலைவர் இருக்கிறார்களா?

ஒருவரும் இல்லை

2 hours ago, Sasi_varnam said:

10. இனிவரும் காலங்களில் இலங்கை அரசியல் சித்தாந்தம் "மஹாவம்ச" கொள்கைகள், புருடாக்களை தவிர்த்து பயணிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகிறதா?

அடுத்த ஒரு இலட்சம் ஆண்டுகளுக்காவது இது சாத்தியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

5. இல்லை. இது ஒரு தற்காலிகமான போராட்டம். சிங்களவருக்கு சாப்பிட உணவிருந்தால் பழைய கிழவி கதவை திறவடி கதைதான்.இனவாதம் நீக்கப்பட அது தலைமையில் இருந்து தொடங்க வேண்டும்.தேரர்கள் உள்ள வரை அது சாத்தியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

இலங்கையில் நிலவி வரும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகள் குறித்து மனதில் எழுந்த கேள்விகள் சில 
முடிந்தால் உங்கள் பதில்களையும் கருத்துகளையும் பதியுங்களேன்.

  1. ராஜபக்ஸ சகோதரர்கள் மக்கள் கோருவதுபோல ஆட்சியை கலைத்து, அரசியல் துறந்து விலகி நிற்பார்களா?    
  2. தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் தமிழர்களுக்கு பெரியஅளவில் பாதிப்பு இருக்கிறதா?
  3. இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு எழ அதிக காலங்கள் தேவைப்படுமா?   
  4. இன்றைய சூழ்நிலையை தாயக தமிழர்கள் /  புலம்பெயர் தமிழர்கள் எப்படி கையாளலாம்?
  5. தமிழர்கள் தார்மீகரீதியில் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு அடையாளமாக போராட்டங்களுக்கான ஆதரவை கொடுக்கலாமா?  
  6. புதிய அரசியல் மாற்றம் ஏற்படுமாயின் அது சார்ந்து தமிழ் அரசியல்வாதிகளின் பங்கு எப்படி இருக்க வேண்டும்?
  7. புதிய அரசு அமைக்கும் சூழல் ஏற்படின் யாரை, அல்லது எந்த கட்சியை மக்கள் தெரிவு செய்வார்கள்  என் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
  8. இலங்கையை சரியான முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தகமை இருக்கக் கூடிய யாரவது தலைவர் இருக்கிறார்களா?
  9. இன்றைய மக்கள் போராட்டங்களின் விளைவாக புதிய இளம் அரசியல்வாதிகள்  உருவாகுவார்களா ?
  10. இனிவரும் காலங்களில் இலங்கை அரசியல் சித்தாந்தம் "மஹாவம்ச" கொள்கைகள், புருடாக்களை தவிர்த்து பயணிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகிறதா?

மூன்றாவது, ஐந்தாவது கேள்விகளுக்கு எனது கருத்துக்கள்:

 3. இவர்களின் வருமானம், கடன்கள், கட்டும்/கட்ட வேண்டிய வட்டியின் அளவை பார்த்தால், இப்போதைக்கு முழுமையாக மீள முடியாது. இவர்களுது வெளிநாட்டு வருமானம் பழைய நிலைக்கு வந்தால்கூட போதாது. செலவுகளையும் தேவையற்ற இறக்குமதியையும் கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும். IMF இடம் போகும்போது, இப்போது இருப்பதைவிட கொஞ்சம் மூச்சுவிட அவகாசம் கிடைக்கும். எனக்கென்னவோ இந்தியாவின்பிடி இலங்கையில் இறுகுவது போல தெரிகிறது,  கொஞ்சம் கொஞ்சமாக காசு கொடுத்து இதைவிட betterஆக வைத்திருக்க பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன், பார்ப்போம். 

5. நாங்கள் தள்ளி இருக்க வேண்டும் என்று இங்கு எல்லோரும் சொல்லுகிறார்கள், அப்படி இருக்கக்கூடாது என்று நினைக்கிறன். இதிலிருந்து நாங்கள் ஏதாவது எடுக்க விரும்பினால், எங்கள் எதிர்ப்பையும் சேர்த்து பதிவு செய்ய வேண்டும், நாங்கள் முன்னிற்க தேவையில்லை. சேர்ந்து செய்தால்தான் புதிய அரசியல் அமைப்பு ஏதாவது வரும்போது பேரம் பேசும் உரிமை கிடைக்கும், சுட்டிக்காட்டலாம். இதில் நாங்கள் தள்ளி இருந்து ஏதாவது சாதிக்க முடியுமென்றால், அது என்ன, எப்பிடியென்று சொல்லுங்கள்.  சிங்களவர்களின் சிந்தனைகளில் இருந்து இனவாதம் இலகுவில் மறையாவிட்டாலும்,  தொடர் பொருளாதார நெருக்கடி கொஞ்சமாவது இறங்கிவர வைக்கும்.  இப்பொழுது இருப்பது ஒரு வித்தியாசமான நிலைமை, வரலாற்றுச்  சந்தர்ப்பம். சேர்ந்து பொது எதிரியை எதிர்த்து மீண்டும் நாங்கள் ஏமாறலாம், மறுப்பதுக்கில்லை, அதனால் மேலதிகமாக இழப்பதுக்கும் எதுவுமில்லை. இன்றோ நாளையோ, அடுத்த வருடமோ  நிறைவேற்று அதிகார முறைக்கு கட்டாயம் ஆப்பு வரும், அப்பொழுது புது அரசியல் அமைப்பு ஒன்று வரலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

4.இன்றைய சூழ்நிலையில் தாயகமக்கள் ஒரு 1977 போன்றதொரு தமிழர் கூட்டணியை உருவாக்கி அரசியல் ரீதியாக பலமான சக்தியாக்க முயல வேண்டும். நேர்மையான , புத்திக்கூர்மையுள்ள தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
 புலம்பெயர்ந்தவர்கள்  அங்குள்ள மக்களை பொருளாதார ரீதியிலும் கல்வியிலும் மேம்பட வைத்தால் போதுமானது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது இலங்கையில் நடக்கும் வீதி போராட்டங்கள் பஞ்சத்தினால் வந்தவைகள்.இதற்குள் தமிழர்கள் மூக்கை நுழைக்காமல் விலகி இருப்பதுதான் சாலச்சிறந்தது. ஈழத்தமிழர்கள் சிங்களவர்களைப்போல் சோற்றுக்கும் தண்ணிக்கும் போராடியவர்கள் அல்ல.

இன்று வீதியில் இறங்கி போராடும் சிங்கள மக்கள் வயிறு நிறைய சகலதும் கிடைத்து விட்டால் சாராயத்துடன் பைலா ஆட தொடங்கி விடுவார்கள்.

சிங்கள அரசியல் இனவாதத்துடன் கூடிய அரசியல். அது எந்த கட்சியானாலும் சரி யார் அதிகமாக இனவாதம்,இன வெற்றிகள் பற்றி பேசுகின்றார்களோ அந்த கட்சி ஆட்சியமைக்கும்.தமிழர் கட்சிகள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல் இருக்க அவர்களுக்கு எந்தக்கவலையுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

1. ராஜபக்ஸ சகோதரர்கள் மக்கள் கோருவதுபோல ஆட்சியை கலைத்து, அரசியல் துறந்து விலகி நிற்பார்களா?    

  விலகி நிற்பதுபோன்று நாடகமாடி முழு அதிகாரத்தையும் தமது கைகளுக்குள்ளேயே வைத்திருக்க முயற்சி செய்வார்கள். அது வெற்றியளிக்குமா இல்லையா என்பதை காலம்தான் சொல்லும். தமிழர்களை வென்றவர்கள் என்ற வெற்றிவாத, மேலாதிக்க சிந்தனை சிங்கள மக்களிடம் இருந்து போவதற்கு வாய்ப்பே இல்லை. அதை வைத்தே தங்கள் இருப்பை தக்கவைக்க முயன்றுகொண்டுதான் இருப்பார்கள்.

5 hours ago, Sasi_varnam said:

2. தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் தமிழர்களுக்கு பெரியஅளவில் பாதிப்பு இருக்கிறதா?

சட்டம், ஒழுங்கு சீர்குலையும்போது காடையர்கள் தமிழர்களையும் முஸ்லிம்களையும் தாக்க வாய்ப்புள்ளது. அதனைத் தடுப்பதா, இல்லையா என்பது அரசு மற்றும் இராணுவத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் ராஜபக்ஸக்களிடமே உள்ளது. தமது அதிகாரத்தைத் தக்கவைக்க சட்டம் ஒழுங்கை கட்டுக்குள்  வைத்து ஜனநாயக நாடு என்றும் காட்டலாம். காடையர்களுக்கு லைசன்ஸ் கொடுத்து திசை திருப்பவும் முயற்சிக்கலாம். 

மற்றும்படி பொருளாதாரக் கஷ்டங்கள் எல்லோருக்கும் பொதுவானது. மலையகத் தமிழரையும், தமிழர் தாயகப் பகுதியில் அன்றாடம் கூலிவேலை செய்பவர்களையும், பெண் தலைமைத்துவக் குடும்பங்களையும் பொருளாதார நெருக்கடி இன்னும் கஷ்டப்படுத்தும்.

5 hours ago, Sasi_varnam said:

3. இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு எழ அதிக காலங்கள் தேவைப்படுமா?   

அப்படித்தான் பல ஆய்வுக்கட்டுரைகள் சொல்லுகின்றன. அந்நிய செலவாணியை அதிகரிக்க முதலீட்டாளர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் நம்பிக்கையளிக்கவேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் சேர்ந்து வேலை செய்யவேண்டும். முக்கியமாக இனப்பிரச்சினைக்கு தீர்வாக இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு என்பதை அடிப்படையாகக் கொண்டு அரசியல் யாப்பை மாற்றவேண்டும். ஆனால் எல்லாமே எதிர்மாறாக உள்ளன. எனவே, இந்த நெருக்கடி தற்காலிகமானது என்று நினைக்கமுடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

4. இன்றைய சூழ்நிலையை தாயக தமிழர்கள் /  புலம்பெயர் தமிழர்கள் எப்படி கையாளலாம்?

ஒரு சர்வதேச நிதியத்தை உருவாக்கி வடக்கு கிழக்கை வாங்க முயற்சிக்கலாம்!

போராடி தமிழீழம் அடையமுடியாது என்று 2004 - 2005 இலேயே தூரதரிசனத்துடன் போட்ட திட்டங்கள் வேலை செய்கின்றது!. சிங்கள இனம் உள்ளுக்குள்ளால் உக்கி, மட்கி அழிவைச் சந்தித்தால்தான் தனிநாட்டை அடையமுடியும் என்று தீர்க்க தரிசனத்துடன் மகிந்தவை ஜனாதிபதியாக்கி, கோத்தபாய, பசில், நாமல் என்று பரம்பரையாக நாட்டை பல வருடங்கள் ஆளவைத்து சிங்கள இனத்தை சின்னாபின்னப்படுத்த போட்ட சாணக்கிய தந்திரம் வேலை செய்கின்றது. அப்படியே புலம்பெயர்நாடுகளில் 20 வருடங்களுக்கு மேலாக சேர்த்த சொத்துக்களும் வடக்கு-கிழக்கை வாங்கும் அளவிற்கு பெருகிவிட்டது. இப்போது சிறிலங்கா வங்குரோத்து நிலைக்குப் போய்க்கொண்டிருக்கின்றது. எனவே போட்ட திட்டப்படி மலிந்த விலைக்கு வடக்கு-கிழக்கை வாங்கி தனிநாட்டை பிரகடனப்படுத்தலாம். குறைந்த கூலிக்கு சிங்களவரைப் பிடித்து சிங்கப்பூரை விட செழிப்பாக முன்னேற்றலாம்.!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sasi_varnam said:

5. தமிழர்கள் தார்மீகரீதியில் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு அடையாளமாக போராட்டங்களுக்கான ஆதரவை கொடுக்கலாமா?  

சிங்களவர்கள் தங்களது எதிர்கால சந்ததியின் நல்வாழ்வுக்காக வீதிகளில் இறங்கியுள்ளனர். தமிழர்களை சமமாக வாழ உரிமைகளைக் கொடுப்பதற்கு எந்த ஒரு கட்சியும் தயாரில்லை. பொதுசன அமைப்புக்களும் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி இந்த நேரத்தில் பேசமாட்டார்கள். எனவே தமிழர்கள் சிங்களவர்களுடன் அணிவகுப்பது முட்டாள்தனம்.

வெளிநாடுகளில் உள்ள தமிழர் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் இடங்களில்போய் “வீ வோன்ற் ரமில் ஈலம்” என்று ஆர்ப்பாட்டம் செய்யலாம். தாயகத்தில் இருப்பவர்கள் வெளியே போகாமல் வீடுகளைப் பத்திரமாகப் பார்ப்பதே உத்தமம்!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

ஒரு சர்வதேச நிதியத்தை உருவாக்கி வடக்கு கிழக்கை வாங்க முயற்சிக்கலாம்!

நல்லதொரு யோசனை,

தமிழர் வரலாற்றில் முதன் முறையாக 70ற்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள், ஆர்வலர்கள் லண்டனில் வரும் வைகாசி மாதம் 5ந் திகதி தொடக்கம் 7ந் திகதி வரை ஒன்று கூடி ஏதோ கதைக்கப்போகிறார்கள். கேள்விப்பட்டேன்.. அவர்களிடம் வடக்கு கிழக்கை வாங்கி வளம் படுத்த கேட்கலாம்.. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

தமிழர் வரலாற்றில் முதன் முறையாக 70ற்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள், ஆர்வலர்கள் லண்டனில் வரும் வைகாசி மாதம் 5ந் திகதி தொடக்கம் 7ந் திகதி வரை ஒன்று கூடி ஏதோ கதைக்கப்போகிறார்கள். கேள்விப்பட்டேன்.. அவர்களிடம் வடக்கு கிழக்கை வாங்கி வளம் படுத்த கேட்கலாம்.. 

இப்படி ஒரு சந்திப்பு நடப்பது எனக்கு சத்தியமாகத் தெரியாது!

👇🏾இப்படியான சந்திப்பாக இல்லாமல் இருந்தால் கேட்கலாம்😁

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

2.  நாம் அற நனைந்தவர்கள். எமக்கு  கூதல் என்ன குளிர் என்ன.
வெளிநாட்டு காசு வருபவர்கள் ஓரளவுக்கு சமாளித்தாலும் அடித்தட்டு மக்கள் உணவுக்காக கஸ்டப்பட கூடும்.
அரசியலில் மொ.சா. கள் நிறைய🤣 (தமிழ்) சந்தர்ப்பங்களை எமது மக்களுக்கு சாதகமாக  பயன்படுத்துவார்கள் என நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Sasi_varnam said:

தமிழர்கள் தார்மீகரீதியில் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு அடையாளமாக போராட்டங்களுக்கான ஆதரவை கொடுக்கலாமா?  

ராஜபக்ஸாக்களின் அமெரிக்காவில  உள்ள சொத்துக்களை முடக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஒரு petition உலாவுகிறது.. அதில் எழுதப்படும் சில கருத்துக்களைப் பார்த்தபின் இவர்களுக்கு தமிழர்கள் என்ற ஒரு இனமும் அங்கே உள்ளது என்பதை நினைக்க விருப்பமில்லை என்றே தோன்றியது.. ஆகையால் நாங்கள் ஒதுங்கி நிற்பதே சரியென நினைக்கிறேன். அத்துடன் இவர்களுடன் இந்த சமயத்தில் பேரம் பேசி எங்களுக்கான தீர்வை(குறைந்த பட்சமேனும்) தரக்கூடிய,  தமிழர் நலனில் அக்கறை கொண்ட தமிழ் தலைமையும் இல்லை.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இப்படி ஒரு சந்திப்பு நடப்பது எனக்கு சத்தியமாகத் தெரியாது!

இந்த திரிக்கு சம்பந்தமில்லாத ஒன்று என்பதால் அதிகம் எழுத விரும்பவில்லை ஆனால் இந்த மாநாடு தொடர்பான தகவல்களை பின்வரும் இணையத்தளத்தில் பார்க்கலாம்

தமிழ்நாட்டிலேயே இதை நடத்தியிருக்கலாம் ஆனால் லண்டனில் நடத்த ஏன் முடிவு செய்தார்கள்!!!

https://tamilrise.org/

நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Sasi_varnam said:

இலங்கையில் நிலவி வரும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகள் குறித்து மனதில் எழுந்த கேள்விகள் சில 
முடிந்தால் உங்கள் பதில்களையும் கருத்துகளையும் பதியுங்களேன்.

  1. ராஜபக்ஸ சகோதரர்கள் மக்கள் கோருவதுபோல ஆட்சியை கலைத்து, அரசியல் துறந்து விலகி நிற்பார்களா?    ஆம்  காலமெடுத்தாலும் வேறு  வழியில்லை
  2. தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் தமிழர்களுக்கு பெரியஅளவில் பாதிப்பு இருக்கிறதா?  பொருளாதார மற்றும் பொருட்கள் தட்டுப்பாட்டால் பாதிப்புக்கள் இருந்தாலும் நில  அபகரிப்பு  உட்பட  சிங்களத்தின் அழுத்தங்கள்  குறைய  வாய்ப்புண்டு
  3. இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு எழ அதிக காலங்கள் தேவைப்படுமா?   ஆம் மிக  மிக  நீண்ட  காலமெடுக்கும்
  4. இன்றைய சூழ்நிலையை தாயக தமிழர்கள் /  புலம்பெயர் தமிழர்கள் எப்படி கையாளலாம்?  ஒன்றும்  செய்யத்தேவையில்லை  வேடிக்கை  மட்டுமே பார்க்கலாம்.  இதற்குள்  தமிழர்கள்  தலையை  நுளைப்பது  சிங்களவர்களை  மீண்டும் இனவாதம்  நோக்கி ஒன்றுமைப்படுத்திவிடும்
  5. தமிழர்கள் தார்மீகரீதியில் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு அடையாளமாக போராட்டங்களுக்கான ஆதரவை கொடுக்கலாமா?ஆம்  எண்ணெய் ஊற்ற  மட்டும்  ஆனால் அவர்களுக்கு  தெரியக்கூடாது
  6. புதிய அரசியல் மாற்றம் ஏற்படுமாயின் அது சார்ந்து தமிழ் அரசியல்வாதிகளின் பங்கு எப்படி இருக்க வேண்டும்?  மிகச்சரியான நேரம் சரியாக  பயன்படுத்தவேண்டும் அதேநேரம்  சிங்களத்துக்கு  உதவுதாக நம்பத்தக்கதாக  இருக்கவேண்டும்   நடக்கவேண்டும்
  7. புதிய அரசு அமைக்கும் சூழல் ஏற்படின் யாரை, அல்லது எந்த கட்சியை மக்கள் தெரிவு செய்வார்கள்  என் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? இராமன் ஆண்டாலென்ன  இராமணன்  ஆண்டாலென்ன??
  8. இலங்கையை சரியான முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தகமை இருக்கக் கூடிய யாரவது தலைவர் இருக்கிறார்களா?  இன்று  எவர் வரினும் சூழ்நிலையோ நிதி  நெருக்கடியோ  தீரப்போவதில்லை
  9. இன்றைய மக்கள் போராட்டங்களின் விளைவாக புதிய இளம் அரசியல்வாதிகள்  உருவாகுவார்களா ?  உருவாகலாம் ஆனால்  முன்  வர தயங்குவார்கள்  அதேநேரம் அவர் அனைத்து  மக்களையும்  உண்மையாக  நேசிப்பவராக இருக்கவேண்டும்
  10. இனிவரும் காலங்களில் இலங்கை அரசியல் சித்தாந்தம் "மஹாவம்ச" கொள்கைகள், புருடாக்களை தவிர்த்து பயணிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகிறதா? இருக்கிறது அதைத்தவிர வேறுவழியில்லை  என்பதை  சிங்கள மக்கள்  உணர்ந்தால்???

நன்றி  சகோ

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்+
22 hours ago, Sasi_varnam said:

இலங்கையில் நிலவி வரும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகள் குறித்து மனதில் எழுந்த கேள்விகள் சில 
முடிந்தால் உங்கள் பதில்களையும் கருத்துகளையும் பதியுங்களேன்.

  1. ராஜபக்ஸ சகோதரர்கள் மக்கள் கோருவதுபோல ஆட்சியை கலைத்து, அரசியல் துறந்து விலகி நிற்பார்களா?    
  2. தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் தமிழர்களுக்கு பெரியஅளவில் பாதிப்பு இருக்கிறதா?
  3. இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு எழ அதிக காலங்கள் தேவைப்படுமா?   
  4. இன்றைய சூழ்நிலையை தாயக தமிழர்கள் /  புலம்பெயர் தமிழர்கள் எப்படி கையாளலாம்?
  5. தமிழர்கள் தார்மீகரீதியில் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒரு அடையாளமாக போராட்டங்களுக்கான ஆதரவை கொடுக்கலாமா?  
  6. புதிய அரசியல் மாற்றம் ஏற்படுமாயின் அது சார்ந்து தமிழ் அரசியல்வாதிகளின் பங்கு எப்படி இருக்க வேண்டும்?
  7. புதிய அரசு அமைக்கும் சூழல் ஏற்படின் யாரை, அல்லது எந்த கட்சியை மக்கள் தெரிவு செய்வார்கள்  என் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
  8. இலங்கையை சரியான முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தகமை இருக்கக் கூடிய யாரவது தலைவர் இருக்கிறார்களா?
  9. இன்றைய மக்கள் போராட்டங்களின் விளைவாக புதிய இளம் அரசியல்வாதிகள்  உருவாகுவார்களா ?
  10. இனிவரும் காலங்களில் இலங்கை அரசியல் சித்தாந்தம் "மஹாவம்ச" கொள்கைகள், புருடாக்களை தவிர்த்து பயணிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகிறதா?

5) என்னைப் பொறுத்தவரை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதே மேலானது. இறங்கி ஆதரவு கொடுத்தாலும் அவர்களின் பஞ்சச் சிக்கலுக்கு தீர்வு கிடைத்ததும் வேதாளங்கள் முருங்கை மரம் ஏறிவிடும்.

10) அவர்கள் தமது பேரினவாதத்தை விட்டுக்கொடுக்க தயாராகயில்லை. சிறந்த சான்று கடந்த 70+ ஆண்டு ஆட்சி. யார் மாறிமாறி ஆட்சிக்கு வந்தாலும் மகாவம்ச மனநிலையிலேயே ஆள்கிறார்கள். அங்கே இரு மொழி சார்ந்த இனங்கள் இருக்கின்றது என்ற எண்ணமே அவர்களுக்கு இல்லை. இதுவே இனிவருங் காலத்திலும் தலைமுறை தலைமுறையாக தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்றேஒன்று தான் நிம்மதியாக இருக்கிறது.

ராஜபக்க கம்பனியை ஆட்சியில் அமர தலைவர் பிரபாகரன் எடுத்த முயற்சி பலராலும் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

இப்போது தான் தெரிகிறது தலைவர் உண்மையிலேயே தீர்க்கதரிசி என்று.

புலம்பெயர்ந்த தமிழர்களும் இளையோரும் தான் எமது மக்களை காப்பாற்ற வேண்டுமென்றார்.

இன்று அதற்கான இடைவெளி தெரிகிறது.

இப்படி ஒரு சந்தர்ப்பம் இலங்கையில் வருமோ தெரியவில்லை.
எனவே இந்த சந்தர்பத்தில் சகல தமிழ் தலைவர்களும் தங்கள் கட்சியளுக்காக வேலை செய்யாமல் 

இதய சுத்தியுடன் தமிழர்களுக்காக ஒன்றாக வேலை செய்ய வேண்டும்.

இனிவரும் காலங்கள் இலங்கை வாழ் முழு இனத்துக்குமே மிகவும் கஸ்டமாக இருக்கும்.

அமெரிக்கா மேற்கு ஐ எம் எவ் என்பன சேர்ந்து வரப்போகும் புதிய அரசுக்கு பணத்தைக் கொடுத்து தற்போதுள்ள இலவசங்களை ஒழித்து (வைத்தியசாலை போன்றன)பொருட்களுக்கான வரிகளை உயர்த்தி தங்கள் வியாபார உத்திகளை எமது மக்களின் தலைகளில் சுமத்துவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 அவர்களிடம் வடக்கு கிழக்கை வாங்கி வளம் படுத்த கேட்கலாம்.. 

சிங்களவன், இதற்கு தான் உங்களுக்கு நாட்டை பிரிச்சு தர மாட்டன் என்டவன் 😀
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சிங்களவன், இதற்கு தான் உங்களுக்கு நாட்டை பிரிச்சு தர மாட்டன் என்டவன் 😀
 
சரி அப்படியென்றால் ஏன் ரதி இந்தியாவுக்கும், சைனாவுக்கும் நிலத்தை தாரை வார்க்கிறார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்து இணைய தர்வுகளை எனது இடைனிலை பாடசாலை கல்வியறிவின் புரிதலின் அடிப்படையில் கூறப்படுவதால், எனது கருத்து தவறாக இருக்கலாம்.

இலங்கையில் பொருளாதார சரிவு (recession)ஏற்படும் எந்த அறிகுற்யும் தென்படவில்லை.

Business confidence and consumer confidence (Leading indicator) நல்ல நிலையில் உள்ளது அத்துடன் ஆண்டிறுதி (மார்கழி)GDP 3.5% என எதிவு கூறுகிறார்கள்.

இலங்கையின் தற்போதய பொருளாதார சிக்கல் அடிப்படையில் தீர்க்ககூடிய ஓரளவிற்கு இலகுவான பிரச்சினை, இலங்கையின் தற்போதய சிக்கல் Balance of Payment பாதகமாக உள்ளதால் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மொத்த தேசிய வருமானத்தில்

சுற்றுலாத்துறை 13%

உற்பத்திதுறை 17%

இந்த இரண்டு துறையும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால்தான் இந்த நிலை.

இலங்கையால் இந்த சிக்கலில் இருந்து இலகுவாக மீள முடியும்.

1. இலங்கை வங்குரோத்தாவதை என்ன விலை கொடுத்தேனும் தவிர்த்தல்

2. மொத்த தேசிய வருமானத்தில் 35% வீதம் இறக்குமதியில் செலவாகிறது அதில் வெறும் நாலில் ஒரு பங்கு மட்டும் முதலீட்டு செலவு மிகுதி நுகர்வு செலவு,நுகர்வு செலவில் அத்தியாவசியங்களை நிரல்படுத்தல்.

3. வெளிநாட்டு பயணங்களை கட்டுப்படுத்தல்.

4. மூடிய பொருளாதார கொள்கைக்கு அவசரப்பட்டு செல்லவேண்டிய அவசியமில்லை ஏனெல் இலங்கையின் கல்வியறிவுள்ள சனத்தொகை மிகப்பெரிய வளம் அதன் மூலம் சேவை துறை ஏற்றுமதிக்கு புதிய சந்தையை உருவாக்கலாம்.

இலங்கையில் நல்ல ஒரு அரசு உருவானால் இந்த சிக்கலை 1-6 வருடத்திற்குள் தீர்க்கலாம் என கருதுகிறேன்.

இலங்கையில் பெரும்பான்மையினரிடையே ஒரு பேரழிவு ஏற்படப்போகிறது எனும் எண்ணம் வரத்தொடங்கியுள்ளது ( மனிதாபிமான பிரச்சனைகளுக்கு மக்கள் அன்னிய செலாவணி தட்டுப்பாடால் முகம் கொடுக்கும் நிலை உள்ளதுதான்) இதன் மூலம் அவர்கள் சிந்தனையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு சிறுபான்மையினர் அரசியல்வாதிகள் செய்வது போல (Scare campaign) அதாவது முன்பு தமிழருக்கும் உலகுக்கும் புலிகள்தான் தீர்வு திட்டங்களுக்கு தடை போடுகிறார்கள் என்று நம்பவைத்தை போல சிறுபான்மை மக்களின் உரிமைகளை வழங்குவதற்கு இந்த நிகழ்வை பயன்படுத்தலாம் என கருதுகிறேன்.

Edited by vasee

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.