Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டு மக்களுக்கு... விசேட உரையாற்றுகின்றார், பிரதமர் மஹிந்த !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடல்?

நாட்டு மக்களுக்கு... விசேட உரையாற்றுகின்றார், பிரதமர் மஹிந்த !!

நாட்டு மக்களுக்கு இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர் மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

தோசை மாஸ்ரர் போல கிடக்கு..😊

IMG-20220411-212616.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: மஹிந்த ராஜபக்ஷ மெளனம் கலைந்தார் - காணொளி உரையின் 15 முக்கிய தகவல்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

மஹிந்த ராஜபக்ஷ

பட மூலாதாரம்,MAHINDA RAJAPAKSA FB

 

படக்குறிப்பு,

மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை பிரதமர்

இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இரவு, பகலாக உழைத்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு மிகப்பெரிய அளவிலான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அந்நாட்டில் ஆளும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சவையில் இடம்பெற்றுள்ள அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பதவி விலக வேண்டும் என்று கோரி பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் இதுவரை பொதுவெளியில் எந்த கருத்தையும் வெளியிடாமல் தவிர்த்து வந்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏப்ரல் 11ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் பதிவு செய்யப்பட்ட காணொளியை தமது ஃபேஸ்புக் சமூக ஊடக பக்கம் வாயிலாகவும் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார். அதன் சில முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்

1. யுத்தத்தை வெற்றி கொண்டு, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற சந்தர்ப்பத்தில் மக்கள் மறந்த கதை தற்போது எனக்கு நினைவிற்கு வருகிறது. எதிர்காலத்தில் மின்சாரம் தடைபடாத நாடொன்றை நான் உருவாக்குவேன் என அன்று நான் கூறினேன். அதற்கான மின் உற்பத்தி நிலையங்களை ஸ்தாபிக்கும் திட்டங்களை ஆரம்பித்திருந்தாலும், முந்தைய அரசாங்கம் எமது திட்டத்தை உரிய வகையில் முன்னோக்கி கொண்டு செல்லாததால் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போனது.

2. எரிபொருள் வாங்க மக்கள் நாட்கணக்கில் கஷ்டப்பட்ட துன்பத்தை எம்மால் உணர முடிகிறது. எரிவாயுவை வாங்க நின்ற பெண்களின் சிரமத்தை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. பொருட்களின் விலைகள் வானளாவ உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில் நாட்டை ஒன்றிணைத்துக் கட்டியெழுப்புவதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் நாம் அழைப்பு விடுத்தோம். எனினும், அவர்கள் வரவில்லை.

3. தற்போது கட்சி தொடர்பில் சிந்திப்பதை விடவும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப் பெற செய்வதே எம் அனைவரது பொறுப்பாகும். யார் பொறுப்பேற்கா விட்டாலும், அதிகாரத்திலுள்ள கட்சி என்ற வகையில் நாம் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றோம். இந்த பிரச்னைகளுக்கு நாம் தீர்வை பெறுவோம்.

4. 30 வருட பயங்கரவாதத்தை தோற்கடித்து, இந்த நாட்டு மக்கள் மத்தியில் இருந்த மரண அச்சுறுத்தலை இல்லாது செய்தோம். இந்த நேரத்தில் மக்கள் கஷ்டப்பட நாம் வசதிகளை உருவாக்கவில்லை. அதிவேக வீதிகள், நவீன வீதிகள் நிர்மாணிக்கப்பட்டது, உங்களை அந்த வீதிகளில் வரிசைகளில் நிற்க வைப்பதற்காக அல்ல. நாம் துறைமுகங்களை நிர்மாணித்தது, எரிபொருள் கப்பல்களை பணம் செலுத்தி அதில் உள்ள பொருட்களை வாங்க முடியாமல் நிறுத்தி வைப்பதற்காக அல்ல.

5. மக்கள் மீது கண்ணீர் புகை பிரயோகத்தை நடத்துவதற்காகவும், துப்பாக்கி சூடுகளை நடத்துவதற்காகவும் நாம் ஆட்சி நடத்தவில்லை. இந்த நாட்டின் அனைத்து பிரச்னைகளின் போதும், மக்களை பாதுகாத்துக்கொள்ள முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட வரலாறு எமக்கு உள்ளது. மக்களுடன் தைரியமாக வேலை செய்து, இலங்கையை கடனற்ற நாடாக மாற்றுவதற்காகவே நாம் பாடுபடுகிறோம். மிகவும் சிரமமான காலத்தில் கூட வெளிநாடுகளிடமிருந்து உதவிகளை பெற்றுக்கொள்ளும் போது, நாட்டின் சுயாதீனத்தை பாதுகாத்துக் கொள்ளவே இந்த அரசாங்கம் முயற்சித்தது.

6. இந்த நாட்டின் ஜனநாயக ஆட்சியை சீர்குலைக்காத விதத்திலான தீர்மானமொன்றை எடுப்பது எமது பொறுப்பாகும். அந்த நோக்கத்திற்காக மாத்திரமே வேலை செய்தோம். 'நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரும் வேண்டாம்' என்ற போராட்டம் தற்போது எமக்கு கேட்கிறது. அதனூடாக இந்த ஜனநாயக முறைமையை நிராகரிப்பது என்றால், அந்த ஆபத்தின் எதிர்காலத்தை சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும்.

7. நாடாளுமன்றத்தில் குண்டுகளை வீசி, முழு நாடாளுமன்றத்தையும் இல்லாது செய்வதன் ஊடாக ஏற்படும் அனர்த்தத்தை நாம் கண்டுள்ளோம். அன்று நாடாளுமன்ற ஜனநாயகம் நிராகரிக்கப்பட்டதால், இளைஞர்கள் ரத்தம் வீதிகளில் வழிந்தோடியதை கண்டோம். இந்த ஜனநாயகத்தை நிராகரிக்க வேண்டும் என்றால், அந்த அபாயத்தை கடந்த காலங்களை நினைத்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்,

Facebook பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 1

8. ஆயிரக்கணக்கான இளைஞர்களை உயிரோடு எரித்தார்கள். 88, 89 ஆகிய இருள்ட யுகத்தில் 60 ஆயிரம் வரையான இளையோரின் உயிர்களை நாம் இழந்துள்ளோம். அன்று இளைஞர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு நாம் எடுத்த முயற்சி, முதியோரின் நினைவில் இருப்பதை நாம் நன்கறிவோம். தெற்கிலுள்ளவர்களை போன்று வடக்கில் உள்ளவர்களுக்கும் இதனை நினைவுப்படுத்த வேண்டும்.

9. அந்த இறந்த உறவுகளின் பெற்றோரிடம் கேட்டால், உண்மையை தெரிந்து கொள்ள முடியும். நாடாளுமன்றம் வேண்டாம், தேர்தல் வேண்டாம் என கூறியே, மக்கள் பிரதிநிதிகள் வீதிகளில் கொலை செய்யப்பட்டனர். அதனூடாகவே 70களில் வடக்கு இளைஞர்கள் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அந்த அரசியல் செயல்பாடு காரணமாக வடக்கில் மாத்திரமன்றி, தெற்கு மக்களும் துன்பங்களை அனுபவித்தனர்.

10. கண்ணி வெடிகளுக்கு, துப்பாக்கி சூடுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். பாடசாலை மாணவர்களும் படிப்படியாக போராட்டத்திற்கு அழைத்த செல்லப்பட்டார்கள். அதன் பின்னர் பாடசாலை மாணவர்களை பலவந்தமாக யுத்தத்திற்கு அழைத்து சென்றனர்.

 

இலங்கை மஹிந்த ராஜபக்ஷ

பட மூலாதாரம்,GETTY IMAGES

11. நாடாளுமன்றம் வேண்டாம் என்றே அன்றும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆபாயத்தை நாம் அறிந்தமையினால், உங்களிடம் ஒன்று கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் பிறந்த இந்த தாய் நாட்டை மீண்டும் அந்த இருள் சூழ்ந்த யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கிறோம். இந்த பிரச்னையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தில் இருப்பவர்கள், ஒவ்வொரு நொடியையும் கடக்கின்றனர். இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடியாது போனாலும், விரைவில் இந்த பிரச்னையைத் தீர்ப்போம்.

12. நீங்கள் வீதிகளில் போராடும் ஒவ்வொரு தருணத்திலும், எமது நாட்டிற்கு டொலர் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போகிறது. பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்னர், தேசத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையிலிருந்து மீண்டெழுவது எம் அனைவரது பொறுப்பாகும். அதற்காக சக்தி, தைரியம் உள்ள அனைவரையும் நாம் அழைத்திருக்கிறோம்.

காணொளிக் குறிப்பு,

''இனியும் இங்கு நடப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது", - போராட்ட களத்தில் இலங்கை முஸ்லிம் பெண்கள்

13. உங்களின் பொறுமை இந்த நாட்டிற்கு தற்போது அவசியம். அன்புக்குரிய பிள்ளைகளே, நீங்கள் பிறந்த இந்த பூமியின் மீது அளப்பரிய அன்பை கொண்டுள்ளீர்கள் என்பதை நாம் அறிவோம். அன்று வன்முறைகளிலிருந்து இளைஞர்களை காப்பாற்றுவதற்கு பாத யாத்திரை செல்லும் போது, மிதிக்கப்பட்ட மணல் துகில்ககளை விடவும், எனக்கும், எனது குடும்பத்திற்கும் கூறியுள்ள நிந்தனைகள் மற்றும் அபகீர்த்திகள் அதிகம் என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கூற வேண்டும்.

14. நாட்டிற்கான கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினர், போலீஸார் இடையூறு, அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டாம். இன்று சுதந்திரமாக வீதிகளில் நீங்கள் பயணிக்க, ஆர்ப்பாட்டங்களை நடத்த, ராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்து, நாட்டை மீட்டெடுத்ததை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

15. ஆர்ப்பாட்டம் நடத்தும் உங்களின் கைகளில் தேசிய கொடி இருக்கிறது. நாம் பிறந்த இந்த மண்ணில் எந்தவொரு இடத்திலும் தேசிய கொடியை ஏற்றுவதற்கான சந்தர்ப்பத்தை இந்த நாட்டிற்கு ஏற்படுத்திக் கொடுத்தது நாம்தான். அனைவருக்கும் இறைவனின் ஆசி கிடைக்கட்டும்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61072106

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஏராளன் said:

யுத்தத்தை வெற்றி கொண்டு, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற சந்தர்ப்பத்தில்

 

28 minutes ago, ஏராளன் said:

30 வருட பயங்கரவாதத்தை தோற்கடித்து, இந்த நாட்டு மக்கள் மத்தியில் இருந்த மரண அச்சுறுத்தலை இல்லாது செய்தோம்

4iMw3r4FPyuRcgKBtdp6EA.jpg

இன வாதம்.. யுத்த வெற்றி பெருமிதம் சோறு போடும் ..👍

  • கருத்துக்கள உறவுகள்

என்ன என்ன எல்லாம் சொல்றான் பாருங்க.. கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லுறான்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன என்ன எல்லாம் சொல்றான் பாருங்க.. கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லுறான்..

ஓணாண்டி    நீங்கள் இலங்கைக்கு போய் நிரந்தரமாய்த் வாழத் தொடங்கியதும் அனைத்து பிரச்சினையும் தீர்ந்து விடும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தருக்கு 3 வேளை சாப்பாடும்.. நாள் முழுக்க மின்சாரமும்.. நேரம் முழுக்க களியாட்டமும் இருப்பதால்.. இன்னும் போர் வெற்றி குறித்து சிந்திக்க முடியுது. ஆனால் மக்கள் அப்படியல்ல..! இந்த சிந்தனையற்ற மகிந்தர் எனியும் ஒரு நாட்டின் பிரதமராக இருக்க தகுதியற்றவர் ஆகிறார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

மஹிந்த ராஜபக்ஷ

பட மூலாதாரம்,MAHINDA RAJAPAKSA FB

 

படக்குறிப்பு,

மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை பிரதமர்

இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இரவு, பகலாக உழைத்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

என்ன ஆள் நல்லாய் வயக்கெட்டுப்போச்சுது?
போர் வெற்றி சோறு போடேல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

என்ன ஆள் நல்லாய் வயக்கெட்டுப்போச்சுது?
போர் வெற்றி சோறு போடேல்லையோ?

அண்ணா நாட்டில் உள்ள பிரச்சனை பயங்கரவாதம் என்று நினைத்தார...அதனை அழிந்தும் விட்டார் .....ஆனால் இப்போது என்ன பிரச்சனை என்று அவருக்கு விஎங்கவில்லை....நீங்கள் சொல்லி கொடுக்க கூடதா.?🙏

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

என்ன ஆள் நல்லாய் வயக்கெட்டுப்போச்சுது?
போர் வெற்றி சோறு போடேல்லையோ?

எதிர்காலம் சூனியமயமாகும் பயம், போர்ச்சாயம் வெளுக்கதொடங்குது, மக்களை உசுப்பேத்தி குளிர் காய்ந்தது மக்களை விட்டுப்போகுது, வீட்டுக்குப் போகும் நேரம் நெருங்குது, கொள்ளையடிச்சதை அனுபவிக்காமல் பறிமுதல் போயிடுமோ என்கிற ஏக்கம். உழைத்து சாப்பிட உடல் வளையாது, ஏமாற்றி பிழைக்கவும் முடியாது. இனி கையில தட்டு, காவி, யாசகம், போதனை. புத்தம் சரணம் கச்சாமி புறப்பட வேண்டியது. இனி வருங்காலத்தில் அது காப்பாற்றினாலும் காப்பாற்றலாம் இவர்களை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Kandiah57 said:

அண்ணா நாட்டில் உள்ள பிரச்சனை பயங்கரவாதம் என்று நினைத்தார...அதனை அழிந்தும் விட்டார் .....ஆனால் இப்போது என்ன பிரச்சனை என்று அவருக்கு விஎங்கவில்லை....நீங்கள் சொல்லி கொடுக்க கூடதா.?🙏

 இன்னுமொரு பஞ்சலிங்கங்களை வேலைக்கு அமர்த்துங்கள் நாடு செழிப்புறும்.:cool:

8 minutes ago, satan said:

எதிர்காலம் சூனியமயமாகும் பயம், போர்ச்சாயம் வெளுக்கதொடங்குது, மக்களை உசுப்பேத்தி குளிர் காய்ந்தது மக்களை விட்டுப்போகுது, வீட்டுக்குப் போகும் நேரம் நெருங்குது, கொள்ளையடிச்சதை அனுபவிக்காமல் பறிமுதல் போயிடுமோ என்கிற ஏக்கம். உழைத்து சாப்பிட உடல் வளையாது, ஏமாற்றி பிழைக்கவும் முடியாது. இனி கையில தட்டு, காவி, யாசகம், போதனை. புத்தம் சரணம் கச்சாமி புறப்பட வேண்டியது. இனி வருங்காலத்தில் அது காப்பாற்றினாலும் காப்பாற்றலாம் இவர்களை.

Bild

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்புத்துண்டுக்கு பதிலாக மஞ்சல் துண்டு நிழலாடுது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

ஓணாண்டி    நீங்கள் இலங்கைக்கு போய் நிரந்தரமாய்த் வாழத் தொடங்கியதும் அனைத்து பிரச்சினையும் தீர்ந்து விடும் 🤣

ஓய்.. வெந்த புண்ணில வேல பாய்ச்சாதையும் ஓய்…😂

  • கருத்துக்கள உறவுகள்

"கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்." மனதை தேற்றிக்கொள்வதை விட வேறு வழியில்லை இப்போதைக்கு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

மக்களை பொறுமையாக இருக்குமாறு பிரதமர் கோரிக்கை.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை மையமாகக் கொண்டு,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

அந்த உரையில் மக்களை  பொறுமையாக  இருக்குமாறும்,  இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒவ்வொரு நொடியும் செயற்படுவதாகவும்  பிரதமர் மஹிந்த ராஜபபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ஆற்றிய முழுமையான உரை!

எங்கள் நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த தருணத்தில் உங்கள் மத்தியில் உரையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு காலத்துக்கும் மேலான எனது அரசியல் வாழக்கையில் மிகவும் தீர்மானம் மிக்க அரசியல் மைல்கற்களை கடந்து வந்துள்ளேன் என்பதை குறிப்பிட வேண்டும்.

கொரோனா தொற்றுநோய்க்கு பின்னர் நாம் எதிர்கொள்ள வேண்டி நேரிட்ட பொருளாதார பிரச்சினைகளை நம் நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என நான் நம்புகிறேன்.

இத்தொற்றுநோய் தாக்கத்திலிருந்து நம் மக்களை எம்மால் பாதுகாக்க முடிந்தபோதும், தற்போது எங்கள் நாடு சவால்களுக்கு உட்பட்டு இருப்பதை எமக்கு உணர முடிகின்றது.

நாடு முடக்கப்பட்டதோடு அந்நியச் செலாவணி வீழ்ச்சியடைந்ததுடன், வெளிநாட்டு கையிருப்பு சிதைவடைந்தது என்பதை நான் கூறி தெரியவேண்டியதில்லை.

கடலில் எண்ணெய் கப்பல்கள் கண்களுக்கு எட்டும் தூரத்தில் இருந்தபோதும் அவற்றை பெற்றுக்கொள்வதற்கான டொலர் எம்மிடம் இல்லாதததால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதற்கு நேரிட்டுள்ளது.

யுத்தத்தை வெற்றிகொண்டு 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் மக்களுக்கு ஆற்றிய உரை, தற்போது எனது நினைவிற்கு வருகின்றது.

அன்று ‘மின்சார தடையில்லாத நாடொன்றை எதிர்காலத்தில் கட்டியெழுப்புவோம்’ என நான் கூறினேன். அதற்காக நாம் மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து நாம் செயலாற்றிய போதும், கடந்த அரசாங்கம் எமது வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லாமையினால் அந்த எதிர்பார்புகளை எம்மால் பூர்த்தி செய்ய முடியாமல் போனது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல நாட்களாக வரிசையில் நிற்கும் மக்களின் கஷ்டம் எமக்கு நன்கு புரிகின்றது. எரிவாயுவை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்ற பெண்களின் வேதனையை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

பொருட்களின் விலை, விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அனுபவித்துவரும் துன்பம் குறித்து நம் அனைவருக்கும் நல்ல புரிதல் உள்ளது.

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம் என நாம் சகல கட்சிகளுக்கும் அழைப்புவிடுத்தோம். ஆனால் வரவில்லை. இந்த தருணத்தில் கட்சி குறித்து சிந்திப்பதைவிட நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதே நம் அனைவரதும் பொறுப்பாகும்.

யார் பொறுப்பை ஏற்காவிடினும் ஆட்சியிலுள்ள கட்சி என்ற வகையில் நாம் அந்த இறுதி பொறுப்பை ஏற்க வேண்டும். நாம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருவோம்.

30 ஆண்டுகால பயங்கரவாத அச்சுறுத்தலை இல்லாதொழித்து, இந்நாட்டு மக்களின் மனதில் இருந்த பயத்தை அகற்றியது, இதுபோன்ற துன்பத்தில் மக்களை தள்ளுவதற்காக அல்ல.

மக்களாகிய உங்களை வரிசையில் நிறுத்துவதற்காக நாம் வீதிகளையும், அதிவேக நெடுஞ்சாலைகளையும் அமைக்கவில்லை. எண்ணெய் கப்பல்களை தடுத்து நிறுத்தி வைப்பதற்காக துறைமுகங்களை நாம் அமைக்கவில்லை.

ஏனைய நாடுகளில் கொரோனா தொற்று நோயால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த வேளையில், அனைத்து வசதிகளையும் கொண்ட கொரோனா தொற்றுநோய் தடுப்பு நிலையங்களை அமைத்து, கொத்தமல்லி நீரிலிருந்து உணவு, மருந்து ஆகியவற்றை வழங்கி முழு நாட்டிற்கும் தடுப்பூசியையும் பெற்றுக்கொடுத்து மக்களின் உயிரை பாதுகாத்தது, கண்ணீர் புகைக்கும், துப்பாக்கி தோட்டாக்களுக்கும் மக்களை பலி கொடுப்பதற்கல்ல.

நம் நாட்டின் அனைத்து பிரச்சினைகளின் போதும் மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுத்த அரசியல் வரலாற்றை நாம் கொண்டுள்ளோம்.

இந்த நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம்.

பொதுமக்களுடன் இணைந்து தைரியமாக பணியாற்றி, இலங்கையை கடனற்ற நாடாக மாற்றுவதற்காகவே வெளிநாடுகளிலிருந்து கடன்களை பெற்றுக்கொள்வதை இந்த அரசாங்கம் மட்டுப்படுத்தியது.

மிகவும் இக்காட்டான சூழ்நிலைகளிலும் வெளிநாடுகளிலிருந்து உதவிகளை பெற்றுக்கொள்ளும் போது, நாட்டின் சுயாதீனத்தை பாதுகாத்து உதவிகளை பெற்றுக்கொள்வதற்கே நாம் எப்போதும் முயற்சித்தோம்.

அதனால் தான், பாரிய அளவு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருந்த போதும் பொதுமக்களின் ஆணைக்கு மதிப்பு கொடுத்து அவற்றை நாம் மேற்கொள்ளாமல் இருந்தோம்.

இந்நாட்டின் ஜனநாயக ஆட்சி முறையை சிதைக்காத வகையிலான தீர்மானத்தை மேற்கொள்வதே மக்களின் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்த எமது பொறுப்பாகும்.

அந்த நோக்கத்திற்காகவே நாம் தொடர்ந்தும் சேவையாற்றிகொண்டு இருக்கின்றோம். கிடைக்காமல் போவதும், கைவிடுவதும் கூட அரசியலில் எமக்கு மிகவும் பழக்கப்பட்டதொரு விடயமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களும் வேண்டாம் என்ற மக்களின் கோஷம் எமக்கும் கேட்கின்றது. அதனூடாக கூறவருவது, இந்த ஜனநாயக முறையை மறுப்பதாயின் அதன் பயங்கரமான வரலாற்றை நோக்கி புரிந்துகொள்ள வேண்டும். பாராளுமன்றத்துக்கு குண்டுவீசி முழு பாராளுமன்றத்தையும் அழிப்பதற்கான முயற்சியினால் ஏற்பட்ட விளைவை நாம் கண்கூடாக கண்டுள்ளோம்.

அன்று பாராளுமன்றத்தில் ஜனநாயகம் மறுக்கப்பட்டதன் விளைவால், வீதியெங்கிலும் இளைஞர்களின் இரத்தம் வழிந்தோடியது. டயர்களை கொண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர்.

1988 மற்றும் 89 களில் 60ஆயிரத்துக்கும் அதிகமான இளம் உயிர்களை நம் நாடு இழக்க நேரிட்டது. அன்று நாம் எமது இளைஞர்களின் உயிர்களை காப்பதற்காக மேற்கொண்ட கஷ்டம் உங்கள் மூத்தோர்களின் நினைவிலிருக்கும் என்பதை நாம் அறிவோம்.

தெற்கு போன்றே வடக்கு இளைஞர்களுக்கும் நான் அது குறித்து ஞாபகப்படுத்த வேண்டும். அந்த கடந்த காலத்தை உங்களது பெற்றோர் மற்றும் மூத்தோர்களிடம் கேட்டறிந்து கொள்ளலாம். பாராளுமன்றம் வேண்டாம், தேர்தல் வேண்டாம் என்று மக்கள் பிரதிநிதிகளை வீதிகளில் கொன்றே, 1970-80 களில் வடக்கு இளைஞர்கள் ஆரம்பித்தனர்.

அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட அரசியல் இயக்கத்தினால் 30 ஆண்டு காலமாக வடக்கில் மட்டுமல்ல தெற்கு மக்களும் கஷ்டத்தை அனுபவித்தனர். கண்ணிவெடிகளுக்கும், துப்பாக்கி தோட்டாக்களுக்கும் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். அவர்கள் இருந்த அடையாளமே தெரியாது போனது.

கொஞ்சம் கொஞ்சமாக பாடசாலை மாணவர்களையும் போராட்டங்களுக்கு இழுத்து செல்ல ஆரம்பித்தனர். அடுத்ததாக, மாணவர்களை பலவந்தமாக யுத்தத்திற்கு இழுத்துச் சென்றார்கள். அன்றும் பாராளுமன்றம் வேண்டாம் என்றே ஆரம்பித்தார்கள். அவற்றின் விளைவை அறிந்தமையால், நீங்கள் பிறந்த நீங்கள் வாழும் இந்த நாட்டை மீண்டும் அந்த இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று அன்பார்ந்த பிள்ளைகளிடம் கேட்டுக் கொள்கிறோம்.

இன்று நாம் முகங்கொடுத்துள்ள நெருக்கடியை வெற்றி கொள்ள பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவே ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒவ்வொரு நிமிடத்தையும் செலவிட்டு வருகிறது.

வரலாற்றில் விவசாயிகளுக்கு அதிக சலுகைகளை வழங்கிய எமக்கு தற்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். என்னதான் நாட்டிற்கு நல்லது என்றாலும் சேதனப் பசளை வேலைத்திட்டத்தை கொண்டு செல்ல இது சரியான தருணம் அல்ல. அதனால் நாம் மீண்டும் உர மானியத்தை வழங்க தீர்மானித்துள்ளோம்.

தாங்கிக்கொள்ள முடியாத வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்று, கடதாசி பற்றாக்குறை வரை முகங்கொடுத்து வருகின்ற இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும். இரண்டு மூன்று நாட்களில் முடியாவிடினும் கூடிய விரைவில் இந்த நெருக்கடிக்கு இட்டுச்செல்லும் பாதையை முடிவுக்கு கொண்டுவர நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.

நீங்கள் வீதியில் போராடும் ஒவ்வொரு விநாடியும் எமது நாட்டிற்கு டொலர் கிடைக்கும் சந்தர்ப்பம் இல்லாது போகின்றது. பாரிய மறுசீரமைப்பு செய்வதற்கு முதல் தேசத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த அழிவிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது நம் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.

அதற்கு பலமுள்ள தைரியமுள்ள அனைவருக்கும் நாம் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளோம். உங்கள் அனைவரதும் பொறுமையும் தைரியமும் இச்சந்தர்ப்பத்தில் நாட்டிற்கு தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் அனைவரும் தாய்நாட்டை மிகவும் நேசிக்கிறீர்கள் என்பதை நாம் அறிவோம்.

அன்று பீதியிலிருந்த இளைஞர்களை காப்பாற்றுவதற்கு பாத யாத்திரை செல்லும் போது கால்களில் குத்திய மணல் கற்களைவிட அதிகமாக என் மீதும் எனது குடும்பத்தினர் மீதுமான அவமானங்களை இன்று நான் சந்திக்கிறேன். அவற்றை என்னால் தாங்கிக்கொள்ள முடியும்.

எனினும், நாட்டிற்காக சேவையாற்றும் முப்படையினரையும், பொலிஸ் சேவையில் ஈடுபடுபவர்களையும் அவமதிக்காதீர்கள். இன்று நீங்கள் சுதந்திரமாக பயமில்லாமல் வீதிகளில் பயணிப்பதும், எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுவதும் இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்து நாட்டை காப்பாற்றியமையினாலேயே ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதேபோன்று கொரோனா தொற்றிலிருந்து உங்களை காப்பாற்றுவதற்கும் இந்த இராணுவ வீரர்கள் போரடினார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

பிள்ளைகளே, உங்கள் எதிர்ப்பு போராட்டங்களில் தேசிய கொடியை வைத்திருப்பதை நான் காண்கிறேன். நாம் பிறந்த இந்த பூமியில் எந்தவொரு இடத்திற்கும் தேசிய கொடியை கொண்டு சென்று ஏற்றி வைப்பதற்கான நாட்டை நாம் உருவாக்கி கொடுத்தோம். அன்று அந்த சவால்களுக்கு முகங்கொடுத்த தைரியமும் துணிச்சலும் இன்றும் எமக்கு உள்ளது என்று உரையாற்றினார்.

https://athavannews.com/2022/1276313

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

12. நீங்கள் வீதிகளில் போராடும் ஒவ்வொரு தருணத்திலும், எமது நாட்டிற்கு டொலர் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போகிறது.

May be an image of 5 people and text that says 'MBULANG நீங்க ரோட்ல நின்னு ஆர்ப்பாட்டம் பண்ற ஒவ்வொரு நொடியும் நாட்டுக்கு டொலர்ஸ் கிடைக்காம போகுது பிச்கமணி ஆர்ப்பாட்டம் பன்றதே உங்ககிட்ட இருக்குற டாலர புடுங்கத்தானே'

🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஓய்.. வெந்த புண்ணில வேல பாய்ச்சாதையும் ஓய்…😂

அருந்தப்பில தப்பீட்டார் புலவர்!!!

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்துக்கு சார்பாக பிக்குகள் போராட்டமாம். இவங்கள் இதையும் சுழிச்சுப் போடுவாங்கள் .நாங்கள் கனவு காண வேண்டியது தான்

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஓய்.. வெந்த புண்ணில வேல பாய்ச்சாதையும் ஓய்…😂

அப்போ நீங்கள் ஊருக்கு போகும் எண்ணத்தை கைவிட்டு விட்டீங்காளா. ?.    ஏன்?.  

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த ராஜபக்ஷ உரை இனவாதத்தை பிரதிபலித்ததா? - இலங்கை தமிழர்களின் பார்வை

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
12 ஏப்ரல் 2022
 

மஹிந்த ராஜபக்ஷ

பட மூலாதாரம்,MAHINDA RAJAPAKSA FB

இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஏதுவாக அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை கைவிடுமாறு அந்நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்நாட்டு மக்களுக்கு பதிவு செய்யப்பட்ட காணொளி வாயிலாக நேற்று அவர் ஆற்றிய சிறப்புரையின்போது தற்போதைய சூழலை எதிர்கொள்ள இரவு, பகலாக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

இலங்கையில் நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தத் தொடங்கிய பிறகு முதல் முறையாக நாட்டு மக்களுக்காக இந்த சிறப்புரையை மஹிந்த ராஜபக்ஷா வழங்கினார்.

இந்த உரையின்போது, இலங்கை கடந்த காலங்களில் எதிர்கொண்ட யுத்தம் மற்றும் கலவரங்கள் தொடர்பாக அவர் விரிவாக பேசினார். இன ரீதியாக இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் மற்றும் இனங்களுக்கு இடையில் நடந்த வன்முறைகளை நினைவுகூர்ந்து சில தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அரசு தவித்து வரும் வேளையில், அரசுக்கு எதிராக இன, மத மாச்சர்யங்களைக் கடந்து மக்கள் ஒன்று சேர்ந்து போராடி வரும் வேளையில், 2000களில் நடந்த உள்நாட்டுப் போரின்போது நடந்த இனவாத மோதல்களை மேற்கோள்காட்டி, அத்தகைய நிலையை இல்லாது செய்தது தமது முந்தைய அரசாங்கமே என்று ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரதமர் மஹிந்தவின் இந்த கருத்துக்கள், மக்கள் பரவலான விமர்சனங்களை முன்வைக்கத் தூண்டியிருக்கிறது.

"எங்களை பிரிக்க முடியாது"

 

இலங்கை நெருக்கடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாட்டின் இன்றைய பிரச்னைகளை பற்றிப் பேசாமல், பழைய விடயங்களை பிரதமர் தனது உரையில் பேசியதாக கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த அபிக்ஷா கூறுகிறார்.

 

கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த அபிக்ஷா கூறுகிறார்.

 

படக்குறிப்பு,

அபிக்ஷா, கொட்டாஞ்சேனை பகுதி

''எங்களுக்காக போராடுகிறோம். மக்களுக்காக போராடுறோம். நாட்டு பிரச்னைகள பேசாம, பழைய விஷயங்கள எல்லாம் பேசியிருக்காரு பிரதமர். அது எங்களுக்கு தேவையே இல்லை. இன்னைக்கு நாட்டு மக்களுக்கு என்ன பிரச்னையோ அத பத்திதான் அவர் பேசனும். அதற்காக ஒரு தீர்வு தேவை. அதற்காகத் தான் இங்கே போராடுகிறோம்," என அபிக்ஷா தெரிவிக்கின்றார்.

"மக்கள் தெளிவாகி விட்டனர்"

மல்கி போயுள்ள உணர்வுகளை துண்டும் வகையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்றைய தினம் நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார்.

 

இலங்கை நெருக்கடி

 

படக்குறிப்பு,

உமாச்சந்திரபிரகாஷ்

உமாச்சந்திரா பிரகாஷ் என்ற பெண்மணி, ''ஒரு நாட்டை இளைஞர்களால் கட்டியெழுப்புவதற்கு இனங்களுக்கு இடையிலான முறுகல்களை நாங்கள் பேசாமல் தவிர்த்து விட்டு, எங்களிடம் இருக்கக்கூடிய ஒற்;றுமைகளை பேசி, எங்களிடம் இருக்க வேண்டிய பொது பண்புகளை பேசி நாட்டை இளைஞர்களால் கட்டியெழுப்ப வேண்டும். ஆனால், அவர்கள் மீண்டும் அதே தவறை செய்கிறார்கள்," என்கிறார்.

"இனத்தால், மதத்தால் மக்களை பிரித்து, அந்த பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் தங்களுடைய குடும்ப அரசியலை தாங்கள் வலுவடையச் செய்து, இந்த இலங்கை அரசாங்கத்துடைய கிட்டத்தட்ட 75 வீதத்திற்கும் அதிகமான வரவு செலவுத்திட்ட நிதியை ஒரே குடும்பம் அனுபவிக்க வேண்டும் என்ற ஒரு குறுகிய சிந்தனையோடு பயணிப்பதாகவே நான் பார்க்கின்றேன்," என்கிறார் அவர்.

Facebook பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 1

"பிரதமரின் உரையில் இனவாதம் மட்டுமில்லாமல், இனவாத ரீதியிலான உணர்வுகளை துண்டும் கருத்துக்கள் இருந்ததை பார்க்க முடிகிறது. இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றாக போராடும் போது, இவ்வாறான இன, மத ரீதியிலான பிரித்தாளும் சூழ்ச்சியை கைவிட்டு, விட்டு ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு பிரதமர் செயல்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு," என்கிறார் உமாச்சந்திரா பிரகாஷ்.

"நிச்சயமாக இனி இனவாதத்திற்கும், மதவாதத்திற்கும் இடம் இல்லை என்பதை மக்களே சொல்லி விட்டார்கள்,," என்றும் அவர் தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு,

இலங்கையில் இரவு பகலாகத் தொடரும் போராட்டங்கள் - வேற்றுமைகளைக் கடந்து ஒன்றிணைந்த மக்கள்

"இருண்ட உலகில் பிரதமரும் அவரது குடும்பமும்"

மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பம் இந்த நாட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அவரது குடும்ப அரசியல் இல்லாமல் போக போகின்ற எண்ணப்பாடு அவரது நேற்றைய உரையிலிருந்து தெளிவாகியதாக அரசியல் ஆய்வாளர் ஜனகன் விநாயகமூர்த்தி கூறுகிறார்.

 

இலங்கை நெருக்கடி

 

படக்குறிப்பு,

ஜனகன் விநாயகமூர்த்தி, அரசியல் ஆய்வாளர்

''மக்கள் என்ன விரும்புகின்றார்கள் என்பதே தெரியாத பிரதமராகவே மஹிந்த இருக்கிறார். அது தான் முதலாவது பிரச்னை. எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும், நாட்டை கட்டியெழுப்ப எதிர்கட்சி வரவில்லை என பிரதமர் கூறியுள்ளார். எனினும், இந்த ஜனாதிபதியின் கீழ் நாங்கள் பணியாற்ற முடியாது என எதிர்கட்சிகளும், இந்த ஜனாதிபதியின் கீழான ஆட்சி வேண்டாம் என மக்களும் போராடி வருகின்றனர். இந்த விடயத்தை கூட புரிந்துக்கொள்ள முடியாத நிலையில் பிரதமர் இருக்கிறார்," என்கிறார் ஜனகன் விநாயகமூர்த்தி.

"பிரதமர் இன்று வரை தனக்கான வரம்புக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இன, மத வேறுபாடின்றி, ஜனாதிபதியை மாற்ற வேண்டும் என்ற கோஷத்திற்காக ஒன்றிணைந்துள்ளார்கள். ஆனால், பிரதமர் இன்னுமே மக்களை பிரதிபலிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். அவரும், அவர் சார்ந்த குடும்பமும் ஒரு வரையறைக்குள் உள்ளனர். இவர்கள் உருவாக்கிய இனவாதத்தை கடந்து மக்கள் இன்று வெளியே வந்து விட்டார்கள். அனைவரும் இலங்கையர்களாக வேண்டும் என்ற எண்ணப்பாட்டிற்கு வந்து விட்டார்கள். மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்க முடியாத சூழ்நிலைக்குள் அவர்கள் உள்ளனர். இந்த நாடு மற்றும் நாடு சார்ந்தவர்களுடைய, சர்வதேசத்துடைய எண்ணப்பாடுகளை என்னவென்றே விளங்காமல், வாழக்கூடிய ஒரு இருண்ட யுகத்திற்குள் இவர்கள் போய் விட்டார்கள். அவர்கள் இருண்ட யுகத்திற்குள் வாழ்ந்து கொண்டு பார்ப்பதால் தான் தற்போதைய நிலைமை, இருண்ட யுகம் போல அவர்களுக்குத் தோன்றுகிறது. இருட்டுக்குள் இருந்து இருட்டை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்கள் வெளிச்சத்தை நோக்கி வந்து விட்டார்கள். பிரதமரும், அவரது குடும்பமும் இந்த நாட்டிலிருந்து அப்புறப்படுத்தப்படலாம் என அவருக்குள் இருக்கும் எண்ணம் அவருடைய உரையில் மிகத் தெளிவாகத் தெரிகிறது" என்கிறார் ஜனகன் விநாயகமூர்த்தி.

https://www.bbc.com/tamil/sri-lanka-61082061

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2022 at 18:13, ஏராளன் said:

30 வருட பயங்கரவாதத்தை தோற்கடித்து, இந்த நாட்டு மக்கள் மத்தியில் இருந்த மரண அச்சுறுத்தலை இல்லாது செய்தோம்.

மக்கள் மத்தியில் இருந்த மரண அச்சுறுத்தலை இல்லாது செய்து அவர்களை எல்லாம் இறைவனை நோக்கி விரதம் இருக்கவைத்து, எல்லோரையும் முக்தியடையும் நிலைக்குக் கொண்டுவந்தோம்.

On 11/4/2022 at 18:13, ஏராளன் said:

மக்கள் மீது கண்ணீர் புகை பிரயோகத்தை நடத்துவதற்காகவும், துப்பாக்கி சூடுகளை நடத்துவதற்காகவும் நாம் ஆட்சி நடத்தவில்லை.

கண்ணீர் புகை பிரயோகம், துப்பாக்கி சூடுகள், இரசாயனக் குண்டு வீச்சுக்களை முள்ளிவாய்காலில் நடத்தி முடித்து ஒரு இனத்தை அழிவிற்குக் கொண்டுவந்த எங்கள் வீரத்தைக் கண்டு, எங்களை ஆட்சிபீடத்தில் அமர்த்திய பெரும்பான்மை மக்களும் இன்று தங்கள் தவறை உணர்ந்து கண்ணீர் வடிக்க வைத்துள்ளோம். 

On 11/4/2022 at 18:13, ஏராளன் said:

நாட்டிற்கான கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினர், போலீஸார் இடையூறு, அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டாம்.

இவர்களின் துணையும் பாதுகாப்பும் இல்லாதுவிட்டால் எங்கள் புத்த சுவாமி இலங்கை எங்கிலும் எழுந்தருள முடியாமல் எல்லோரையும் சபித்து விடுவார். ஆகவேதான் சுவாமியின் சாபத்திற்கு ஆளாகமல் இருப்பதற்கு, இந்தப் படைகளுக்கு எவரும் இடையூற்றை ஏற்படுத்தாமல் இருக்குமாறு வேண்டுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2022 at 02:13, ஏராளன் said:

யுத்தத்தை வெற்றி கொண்டு, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற சந்தர்ப்பத்தில் மக்கள் மறந்த கதை தற்போது எனக்கு நினைவிற்கு வருகிறது.

அரைச்ச மாவையே திருப்பி திருப்பி அரைக்க அலுப்பதில்லையோ இவர்களுக்கு? திருப்பி மூஞ்சசையில அடிச்ச மாதிரி நாலு கேட்டானுகள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அன்றைக்கு நிக்கும் இந்த வீறாப்பு. அதுவரை பிதற்றிக்கொண்டு திரிய வேண்டியது. தேவையில்லாமல் போர் செய்து நாட்டை அழித்து, இனங்களை பிரித்து வைத்தீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வார்கள்? அவர்களுக்கு உரியதை பறித்து, எதை சாதித்தீர்கள் என்று கேட்கமாட்டார்கள் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மூத்த பத்திரிகையாளர் திரு. அய்யநாதன் அவர்களின்...
அருமையான கருத்துக்களை கேளுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஒக்டோபர் மாதத்தில் 7.6% இருந்த பணவீக்கம் 6 மாதத்திற்குள்ளாக இரண்டு மடங்கிற்கு மேலாகி விட்டது இப்படி இன்னுமொரு வருசம் மகிந்த குடும்பம் ஆட்சியிலிருந்தால் இலங்கை காசு வலுவிழந்து இலஙகை ரூபா செல்லுபடியற்ற காசாகிவிடும் அதன்பின் வேறு நாட்டு காசுதான் இலங்கையில் பயன்படுத்தப்படும்.

இலங்கையின் Balance of payment இல் Current account deficit  GDP யில் வெறும் 2% குறைவாகவுள்ள நிலையில் எதற்காக இவ்வளவு கடன் வாங்கினார்கள்? அதுவும் 2 வருடத்திற்குள்ளாகவே (கடன் GDP யில் 2019 இல் 42% இலிருந்து 2021 இல் 104%) எப்பிடி நாட்டை திவாலாக்க முடிந்தது, தூர கிழக்கு ஆசிய வளரும் நாடுகள் மாலைதீவு போன்ற உல்லாசதுறையை மட்டுமே நம்பியுள்ள நாடுகளே இப்படி ஆகவில்லை, ஆனால் இலங்கையால் எப்பிடி திவாலாக முடிந்தது?  இலங்கையை மகிந்த குடும்ப சும்மா விடப்போவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.