Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட

அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்..

1653722544178117.jpg

இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விமான நிலையத்தின் போக்குவரத்து 
தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட 
திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிமர் செய்தி

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ராசவன்னியன் said:

இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட

அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்..

1653722544178117.jpg

இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விமான நிலையத்தின் போக்குவரத்து 
தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட 
திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிமர் செய்தி

உங்களுடைய பாலிமர் நியூசிக்காரனின் வாயில், கொள்ளிக் கட்டையை செருக வேணும். 🤣

நிச்சயமாக நிரந்தரமாக... மூட, முடிவு எடுத்திருக்க மாட்டார்கள்.
வருகின்ற 31´ம் திகதியுடன் பொருளாதார பிரச்சினையால் 
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் உட்பட, 
அனைத்து விமான நிலையங்களையும் மூட இருப்பதாக செய்தி வந்தது. 

சர்வதேச விமான நிலையத்தை... மூடுவது சாத்தியமா என்று தெரியவில்லை!!!!
எரிபொருள் இல்லாவிடில்.... ?????

  • கருத்துக்கள உறவுகள்

திறந்திருந்தால் தானே மூடிறதுக்கு. 

நிரந்திரமாக மூடி வளமான வலி வடக்கில்  இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி மக்களை மீளகுடியேற்றி  விவசாய நடவடிக்கையை முன்னேடுத்தால் தமிழர் தாயகத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, London Ranjan said:

நிரந்திரமாக மூடி வளமான வலி வடக்கில்  இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி மக்களை மீளகுடியேற்றி  விவசாய நடவடிக்கையை முன்னேடுத்தால் தமிழர் தாயகத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்

இதை மூடி, நீங்கள் சொன்னது போல, வளமிக்க மண்ணை, வெவசாயம் செய்ய குடுத்துப்போட்டு, வறட்சியான தீவுப்பகுதிக்கு, விமான நிலையத்தை நகர்த்த வேணும் எண்டு ஒருக்கா சொன்னன்....

அட..... தண்ணீர் குடம் வெல தெரியுமே எண்டு நம்ப பங்கு சும்மாதான் சொன்னார்....

டபக்கு, டபக்கெண்டு கணபேர் ஓடியாந்து தேனிக்கள் மாதிரி..... கொட்டே, கொட்டு எண்டு கொட்டிப் போட்டினம்....

அதால.... பூட்டினாலும்.... அங்கையே இருக்கட்டுமண்... 😜 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

டபக்கு, டபக்கெண்டு கணபேர் ஓடியாந்து வந்து தேனிக்கள் மாதிரி..... கொட்டே, கொட்டு எண்டு கொட்டிப் போட்டினம்....

அதால.... பூட்டினாலும்.... அங்கையே இருக்கட்டுமண்... 😜 😁

 சிரிப்பும்,சோகமும்... கலந்த பதிவு. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

நான் இம்முறை இந்த இடங்களுக்குப் போயிருந்தேன்.. வளமான காணிகள் கேட்பாரற்று இருக்கிறது..எனது சகோதரி ஒரு காணியை வாங்கி தோட்டம் செய்கிறார்..விமான நிலையத்தை மாற்றவேண்டிய அவசியம் இப்பொழுது இல்லை, அங்கே பாராமரிப்பு இல்லாமல் இருக்கும் காணிகளைக்கு முதலில் ஒரு வழியைக் கண்டுபிடித்தால் நன்று..

நாங்கள் இருப்பதை தக்கவைத்துக் கொள்ள என வழிகள் உள்ளது என்பதைதான் முதலில் யோசிக்கவேண்டும் என நம்புகிறேன்

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அங்கிள், எனது தந்தை இந்த பலாலி விமான நிலையம் திறந்த சமயத்தில், இதன்ஊடாக சென்னைக்கு வந்திருந்தார், எவ்வளவோ நேரம் மிச்சம் என சந்தோஷப்பட்டாலும், விமானத்தின் தன்மை, மற்றும் வேறு சில விடயங்களும் மனதிற்கு சஞ்சலமாக இருந்தது என்றார். 

எல்லோருக்கும் அறிந்த விடயம் இந்த விமானநிலையம் பெயருக்காக தொடங்கிய ஒன்றே.. அதனை ஒரு நிலைக்கு கொண்டு வரவிரும்பினாலும் சாத்தியப்பட்டிருக்குமோ தெரியாது.. 

இலங்கையின் தற்போதைய நிலையால் இன்னமும் மோசமான நிலைக்கு பலாலி சர்வதேச விமான நிலையம் தள்ளப்பட்டுள்ளது.

இதனை தொடங்கிய சமயத்தில், பலாலி, வசாவிளான், மாவிட்டபுரம், புன்னாலைக்கட்டுவன் போன்ற இடங்களில் பலாலி வீதியை அண்டியிருந்த காணிகள் விலை கொஞ்சம் அதிகரித்து இருந்தது.. இப்பொழுது திரும்பவும் இறங்குமுகம்!!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானம்?

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானம்?

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விமான நிலையத்தின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இதுகுறித்த எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவித்தல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1284277

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

எனினும் இதுகுறித்த எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவித்தல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது.

பிரச்சனை இனவாதம் அல்ல...

அதிகாரிகளை அனுப்பி சம்பளம் கொடுக்க காசில்லை.... 

நாம அலம்பறை பண்ணினால், புலம் பெயர் தமிழர்கள் பொறுப்பெடுங்கோவன் எண்டால் சிக்கீறும்.

அதாலை நிலைமையை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு அமைதியா இருப்போம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறைக்கு இனி நேரடிக்கப்பல்கள்!டெல்லியில் புதிய முடிவுகள்

3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் இம்முறை இந்த இடங்களுக்குப் போயிருந்தேன்.. வளமான காணிகள் கேட்பாரற்று இருக்கிறது..எனது சகோதரி ஒரு காணியை வாங்கி தோட்டம் செய்கிறார்..விமான நிலையத்தை மாற்றவேண்டிய அவசியம் இப்பொழுது இல்லை, அங்கே பாராமரிப்பு இல்லாமல் இருக்கும் காணிகளைக்கு முதலில் ஒரு வழியைக் கண்டுபிடித்தால் நன்று..

நாங்கள் இருப்பதை தக்கவைத்துக் கொள்ள என வழிகள் உள்ளது என்பதைதான் முதலில் யோசிக்கவேண்டும் என நம்புகிறேன்

முதலில் உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்கி மக்களை குடியமர்த்தினால் தான் அந்த மக்கள் உற்பத்திக்கை பங்களிக்க முடியும் இதனை ஒரு பாரளுமன்ற தமிழ் உறுப்பினர் கூட பிரதமருக்கு நினைவு ட்ட வில்லை என்பது தான் சோகத்தில் உச்ச சோகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அங்கிள், எனது தந்தை இந்த பலாலி விமான நிலையம் திறந்த சமயத்தில், இதன்ஊடாக சென்னைக்கு வந்திருந்தார், எவ்வளவோ நேரம் மிச்சம் என சந்தோஷப்பட்டாலும், விமானத்தின் தன்மை, மற்றும் வேறு சில விடயங்களும் மனதிற்கு சஞ்சலமாக இருந்தது என்றார். 

எல்லோருக்கும் அறிந்த விடயம் இந்த விமானநிலையம் பெயருக்காக தொடங்கிய ஒன்றே.. அதனை ஒரு நிலைக்கு கொண்டு வரவிரும்பினாலும் சாத்தியப்பட்டிருக்குமோ தெரியாது.. 

....

விமானம் பழைய ATR வகையை சேர்ந்ததாக இருக்கும். உயரத்தில் காற்றழுத்த வேறுபாடு இருந்தால் குலுங்கி வயிற்றை கலக்கிவிடும்.

சமீபத்தில் அவரசர வேலையாக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு இவ்வகை விமானத்தில் சென்றபோது சில நேரம் குலுக்கல் இருந்தது, பத்திரமாக இறங்க வேண்டிக்கொண்டேன்.

ஆனால் யாழ்ப்பாணத்திற்கு பயணிகள் போக்குவரத்து அதிகம் இருந்தால்தானே எதிர்காலத்தில் விமான நிலையம் விரிவடையும்?

அதுதான் சாக்கென அரசு வேண்டுமென்றே கொழும்பிற்கு வரும் வருமானத்தை ஏன் வடக்கிற்கு கொடுக்கவேண்டுமென முட்டுக்கட்டை போட்டால் மூடிவிடவேண்டிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, London Ranjan said:

முதலில் உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்கி மக்களை குடியமர்த்தினால் தான் அந்த மக்கள் உற்பத்திக்கை பங்களிக்க முடியும் இதனை ஒரு பாரளுமன்ற தமிழ் உறுப்பினர் கூட பிரதமருக்கு நினைவு ட்ட வில்லை என்பது தான் சோகத்தில் உச்ச சோகம்

அவர்களுக்கு அடுத்த தேர்தலுக்குத்தான் மக்களை நினைவுக்குவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ராசவன்னியன் said:
21 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

விமானம் பழைய ATR வகையை சேர்ந்ததாக இருக்கும். உயரத்தில் காற்றழுத்த வேறுபாடு இருந்தால் குலுங்கி வயிற்றை கலக்கிவிடும்.

சமீபத்தில் அவரசர வேலையாக சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு இவ்வகை விமானத்தில் சென்றபோது சில நேரம் குலுக்கல் இருந்தது, பத்திரமாக இறங்க வேண்டிக்கொண்டேன்.

ஆனால் யாழ்ப்பாணத்திற்கு பயணிகள் போக்குவரத்து அதிகம் இருந்தால்தானே எதிர்காலத்தில் விமான நிலையம் விரிவடையும்?

அதுதான் சாக்கென அரசு வேண்டுமென்றே கொழும்பிற்கு வரும் வருமானத்தை ஏன் வடக்கிற்கு கொடுக்கவேண்டுமென முட்டுக்கட்டை போட்டால் மூடிவிடவேண்டிவரும்.

நீங்கள் கூறியபடி, விமானம் தரையிறங்கும் சமயத்திலும், சில சமயங்களிலும் குலுக்கல் இருந்ததாகத்தான் கூறினார்..

இந்த விமானநிலையம் ஊடாக சென்னைக்கு வர நானும் எனது சகோதரியும் 2020ல் போட்ட திட்டம், COVIDல் இல்லாது போய்விட்டது. இனி அப்படி ஒரு சந்தர்ப்பம் எப்பொழுது வருமோ தெரியாது. 

அதே போல வருமானம் வடக்கிற்கு வந்துவிட்டால் என்ற நோக்கத்தில் அதிகளவு வசதிகளை கொடுக்கவும் இல்லை.. 

இம்முறை யாழ்ப்பாணம் போன பொழுது, பலாலி விமான நிலையத்தை வெளியே நின்று பார்க்கத்தான் முடிந்தது!

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2022 at 12:08, Nathamuni said:

இதை மூடி, நீங்கள் சொன்னது போல, வளமிக்க மண்ணை, வெவசாயம் செய்ய குடுத்துப்போட்டு, வறட்சியான தீவுப்பகுதிக்கு, விமான நிலையத்தை நகர்த்த வேணும் எண்டு ஒருக்கா சொன்னன்....

அட..... தண்ணீர் குடம் வெல தெரியுமே எண்டு நம்ப பங்கு சும்மாதான் சொன்னார்....

டபக்கு, டபக்கெண்டு கணபேர் ஓடியாந்து தேனிக்கள் மாதிரி..... கொட்டே, கொட்டு எண்டு கொட்டிப் போட்டினம்....

அதால.... பூட்டினாலும்.... அங்கையே இருக்கட்டுமண்... 😜 😁

🤣 பாருங்கோவன் நாதம்…உவர் லண்டன் ராஜன் ஏதோதான் புதிசா கண்டு பிடிச்சு சொல்லுறமாரி கதை விடுறார். இது உங்கட கொப்பி ரைட்டட் ஐடியா எல்லே?

சிலவேளை உவரும் ஹரீ ஆளோ? அந்த பக்கத்து தண்ணிதான் இப்படி சிந்திக்க வைக்குதெண்டு நினைக்கிறன்🤣.

*ஹரோ

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

🤣 பாருங்கோவன் நாதம்…உவர் லண்டன் ராஜன் ஏதோதான் புதிசா கண்டு பிடிச்சு சொல்லுறமாரி கதை விடுறார். இது உங்கட கொப்பி ரைட்டட் ஐடியா எல்லே?

சிலவேளை உவரும் ஹரீ ஆளோ? அந்த பக்கத்து தண்ணிதான் இப்படி சிந்திக்க வைக்குதெண்டு நினைக்கிறன்🤣.

*ஹரோ

லண்டன் ராஜனா லண்டன் ரஞ்சனா….😂

பாவம் கொன்பீயூஸ் ஆகிட்டார் 

நான் யாருடைய கருத்தையும்  நகல் எடுத்து கொள்கிற அளவுக்கு சிந்தனை வறட்சி உள்ளவன் இல்லை பலாலி மேற்கில் பிறந்தவன் என்ற அடிப்படையில் அந்த மண்ணின் வளத்தால் வளர்ந்தவன் என்ற படியால் உள்ளதை உள்ள படியே  பதிவு செய்தேன்

Edited by London Ranjan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

லண்டன் ராஜனா லண்டன் ரஞ்சனா….😂

பாவம் கொன்பீயூஸ் ஆகிட்டார் 

🤣வயசு போகுது யுவர் ஆனர் 🤣

பிகு

லண்டன் ரஞ்சன் என்பது ஈரோசில் பத்மநாபா அறியப்பட்ட பெயர் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2022 at 11:56, London Ranjan said:

நிரந்திரமாக மூடி வளமான வலி வடக்கில்  இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி மக்களை மீளகுடியேற்றி  விவசாய நடவடிக்கையை முன்னேடுத்தால் தமிழர் தாயகத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்

குண்டு சட்டிக்குள் குதிரை ஓடணும்னா வேறு வழியில்லை முல்லை வன்னி மன்னார் மட்டக்களப்பு போன்ற இடங்களின் அருமை சிங்களவனுக்கும் முசுலீம் பெருமக்களுக்கும் தெரிகிறது நாங்கல்லாம் இங்குவந்துவிட்டு  அங்கிருக்கும் கொஞ்ச நஞ்சத்துக்கும் பாடம் எடுக்கிற கேவலத்தில் இருக்கிறம் வரும் பஞ்சத்தை எப்படி சமாளிப்பது என்பது தெரியாது அல்லாட வேண்டி உள்ளது முணுக்கென்றால் உயிரின் பெறுமதி தெரியாது தொங்குற கூட்டமாய் வளர்த்து வைத்து இருக்கிறம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, London Ranjan said:

நான் யாருடைய கருத்தையும்  நகல் எடுத்து கொள்கிற அளவுக்கு சிந்தனை வறட்சி உள்ளவன் இல்லை பலாலி மேற்கில் பிறந்தவன் என்ற அடிப்படையில் அந்த மண்ணின் வளத்தால் வளர்ந்தவன் என்ற படியால் உள்ளதை உள்ள படியே  பதிவு செய்தேன்

அது சும்மா நாதத்தோட பகிடியா எழுதினது ரஞ்சன். சீரியசா எடுக்க வேண்டாம் 🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

🤣வயசு போகுது யுவர் ஆனர் 🤣

பிகு

லண்டன் ரஞ்சன் என்பது ஈரோசில் பத்மநாபா அறியப்பட்ட பெயர் என நினைக்கிறேன்.

அவருக்கும் இந்த ரஞ்சனுக்கும் வெகு தூரம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, goshan_che said:

அது சும்மா நாதத்தோட பகிடியா எழுதினது ரஞ்சன். சீரியசா எடுக்க வேண்டாம் 🙏🏾

செக்யூரிட்டி பிளீஸ்......செக்யூரிட்டி......செக்யூரிட்டி பிளீஸ்...🤣 😁

  • கருத்துக்கள உறவுகள்

image.gif.134ab85bc51d1b17736c0c55c839449e.gifசென்னை, டுபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற விமான நிலையங்களுக்குத் விமானங்கள் திருப்பி அனுப்பப்படுவதாக  விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏனுங்க அங்கெல்லாம் அலையவேண்டும்....? மன்னாரில் எரிவாயு இருப்பதாக முன்பு செய்திகள் வந்தனவே.??🤔

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2022 at 07:08, Nathamuni said:

இதை மூடி, நீங்கள் சொன்னது போல, வளமிக்க மண்ணை, வெவசாயம் செய்ய குடுத்துப்போட்டு, வறட்சியான தீவுப்பகுதிக்கு, விமான நிலையத்தை நகர்த்த வேணும் எண்டு ஒருக்கா சொன்னன்....

அட..... தண்ணீர் குடம் வெல தெரியுமே எண்டு நம்ப பங்கு சும்மாதான் சொன்னார்....

டபக்கு, டபக்கெண்டு கணபேர் ஓடியாந்து தேனிக்கள் மாதிரி..... கொட்டே, கொட்டு எண்டு கொட்டிப் போட்டினம்....

அதால.... பூட்டினாலும்.... அங்கையே இருக்கட்டுமண்... 😜 😁

தீவுப்பகுதிக்கு விமான நிலையத்தை நகர்த்துவது சரி. தீவுப்பகுதியில் விமான ஓடுபாதை அமைப்பது, அதை பராமரிப்பது, தகுந்த நிலப்பரப்பு, மற்றும் காற்று வேகம்,  காலநிலை, பருவ கால மாற்றங்கள் எல்லாம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் அல்லவா? விமானம் பாதுகாப்பாக ஏறி இறங்க தீவுப்பகுதி உகந்ததா என்பதே முதல் விடயம். இதுபற்றி விமான போக்குவரத்து துறை ஏற்கனவே ஆராய்ந்து இருக்கலாம். யார் அறிவார். 

On 28/5/2022 at 05:35, nedukkalapoovan said:

திறந்திருந்தால் தானே மூடிறதுக்கு. 

உண்மைதான். தோசையிண்ட   விருத்தத்தில ஆட்டுக்கு கல்லுக்கு ஒரு படம் என்பது பற்றிய சிவலிங்கம் விலாஸ் உணவகம் பகிடிதான் நினைவுக்கு வருகின்றது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.