Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் – பிரித்தானியா எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் – பிரித்தானியா எச்சரிக்கை

By Shana
 
airport.jpg

இலங்கைக்கான அத்தியாவசியப் பயணங்களைத் தவிர ஏனைய பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறை நாட்டில் போராட்டங்களையும் வன்முறையையும் தூண்டியுள்ளது.

70 வருடங்களில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் போராட்டங்கள், அமைதியின்மை மற்றும் பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே விடுமுறைக்கு செல்பவர்கள் ஆர்ப்பாட்டங்கள், வீதித் தடைகள் மற்றும் அமைதியின்மை ஆகியவற்றை சந்திக்க நேரிடும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது.

மே மாதம் இடம்பெற்ற கலவரத்தை அடுத்து பிரித்தானிய அரசாங்கம் மே 13 ஆம் திகதி முதல் ஜூன் 10 வரை இதேபோன்ற பயண பயண எச்சரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.battinews.com/2022/07/blog-post_413.html

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

70 வருடங்களில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில்.... போராட்டங்கள், அமைதியின்மை மற்றும் பொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

பெரிய பிரித்தானியாவும்... சந்துல, சிந்து பாடுது.
அவை.. 70 வருடம் என்று, தாங்கள் இலங்கைக்கு..   
சுதந்திரம் குடுத்த வருசத்துல இருந்து.. கணக்கு வைச்சிருக்கினம்.  🤣

அதுக்கு முதல்... தேனாறும், பாலாறும் ஓடியிருக்கு. 😎

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செய்த வேலைதான் இவளவுக்கும் காரனம்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும்  ஆப்பு இறுகுது?

இது  தொடர்ந்தால்  எழும்பவே முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

மீண்டும்  ஆப்பு இறுகுது?

இது  தொடர்ந்தால்  எழும்பவே முடியாது

அரசாங்கத்தின் அனுமதி இன்றி வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும்

இலங்கைக்கான... அத்தியாவசியமற்ற, பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு..  நியூசிலாந்து அறிவுறுத்து.

இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு நியூசிலாந்து அறிவுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதுடன், எரிபொருள் பற்றாக்குறையால், பொது போக்குவரத்து, வாடகை வாகனம், உணவு விநியோகம் என்பனவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு நியூசிலாந்து அறிவுறுத்தியுள்ளது.

https://athavannews.com/2022/1289885

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

என்னைப்பொறுத்தவரை

மிகவம்  சந்தோசமான  செய்தி  இவை

ஆனால்  அவனற்ற இவை ?????

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

என்னைப்பொறுத்தவரை

மிகவம்  சந்தோசமான  செய்தி  இவை

ஆனால்  அவனற்ற இவை ?????

இனி... அடுத்தடுத்து மற்றைய நாடுகளும் அறிவிக்கும்.
அத்துடன்... வரும் 9´ம் திகதி பெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
இப்பவே... எல்லா இடமும், போராட்டம்  மெல்ல, மெல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இன்னும் சிலநாட்களில், நாட்டில் பெரிய மாற்றம் நிகழும் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படியாகினும் தமிழர்களுக்கு நல்லது நடந்தால் சந்தோசம். இந்த இடத்தில் தமிழர் தரப்பு  சிங்களத்திற்கு ஆதரவு கொடுக்காமல் தனித்து நிற்க அந்த இயற்கையின் சக்தியை வேண்டுகின்றேன்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அறிவித்தபின் பயணகாப்புறுதி நிறுவனம்கள் நிறுத்தி விடும் .

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு விமானநிலையத்தில் இருந்து  யாழ்ப்பாணத்துக்கு  ஒரு வாகனத்துக்கு ஒரு லட்சத்து முப்பதினாயிரம் ரூபா  கொடுத்து போயுள்ளார்கள் ஒரு தெரிந்த  குடும்பம்.

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, குமாரசாமி said:

எப்படியாகினும் தமிழர்களுக்கு நல்லது நடந்தால் சந்தோசம். இந்த இடத்தில் தமிழர் தரப்பு  சிங்களத்திற்கு ஆதரவு கொடுக்காமல் தனித்து நிற்க அந்த இயற்கையின் சக்தியை வேண்டுகின்றேன்.
 
சுமந்திரன் சேறு இருக்கேக்குலை, உப்பிடியெல்லாம் நீங்கள் கதைக்கப்படாது...

சேறு கூப்பிட்டால் எல்லாரும் போகத்தான் வேணும். ஓம்... 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

கொழும்பு விமானநிலையத்தில் இருந்து  யாழ்ப்பாணத்துக்கு  ஒரு வாகனத்துக்கு ஒரு லட்சத்து முப்பதினாயிரம் ரூபா  கொடுத்து போயுள்ளார்கள் ஒரு தெரிந்த  குடும்பம்.

இங்கிருந்து போய் யாழ்ப்பாணத்தில்  நிற்கும் ஒருவரால்

புங்குடுதீவுக்கு  போக முடியல...

நாங்க  சைக்கிளில் போய்விடுவோம்

இப்ப  சனமும்???😭

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எப்படியாகினும் தமிழர்களுக்கு நல்லது நடந்தால் சந்தோசம். இந்த இடத்தில் தமிழர் தரப்பு  சிங்களத்திற்கு ஆதரவு கொடுக்காமல் தனித்து நிற்க அந்த இயற்கையின் சக்தியை வேண்டுகின்றேன்.
 
இனிமேல்  சிங்கள மக்களால் நடாத்தப்படும் போராட்டங்களில் தமிழர்கள் பங்கு பற்றாது இருப்பதே நல்லது. இறுதியில் எம்மீது திசை திருப்பி விடுவதில் சிங்கள அரசியல்வாதிகள் கில்லாடிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் உள்ளவர்கள் சொல்கிறார்கள் சிங்களவர்கள் உணரும் வரை நாங்களும் கொஞ்சம் காய்ந்தாலும் பறவாய் இல்லை என்று.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

ஊரில் உள்ளவர்கள் சொல்கிறார்கள் சிங்களவர்கள் உணரும் வரை நாங்களும் கொஞ்சம் காய்ந்தாலும் பறவாய் இல்லை என்று.

அவர்கள் ஒருகாலமும் உணரமாட்டார்கள் பிக்குகளும் தமிழர் எதிர்ப்பு  இனவாத சிங்கள அரசியல்வாதிகள் இருக்கும்மட்டும் அந்த நாட்டுக்கு விடிவு கிடையாது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்மருக்கு ஊருக்குப் போய் வரலாம் என்ற திட்டத்தைக் கைவிட்டுவிட்டேன். வரிசையில் நிற்பது பெரிய பிரச்சினை இல்லை! ஆனால் வெயிலுக்குள் காயமுடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

சம்மருக்கு ஊருக்குப் போய் வரலாம் என்ற திட்டத்தைக் கைவிட்டுவிட்டேன். வரிசையில் நிற்பது பெரிய பிரச்சினை இல்லை! ஆனால் வெயிலுக்குள் காயமுடியாது!

15-30 நாட்கள் பாருங்க, வரவே முடியாத நிலைக்கு போகுமோ தெரியல.🤔

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

சம்மருக்கு ஊருக்குப் போய் வரலாம் என்ற திட்டத்தைக் கைவிட்டுவிட்டேன். வரிசையில் நிற்பது பெரிய பிரச்சினை இல்லை! ஆனால் வெயிலுக்குள் காயமுடியாது!

நீங்கள் ஏன் வரிசையில் நின்டு வெய்யிலுக்கை காய வேணும்.அதுக்கு ஆட்க்கள் இருக்கினம்.வேலை வாய்ப்பு கொடுத்த மாதிரியும் இருக்கும்.😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

15-30 நாட்கள் பாருங்க, வரவே முடியாத நிலைக்கு போகுமோ தெரியல.🤔

வருவோம். வந்து தள்ளாடலாம் என்று போட்ட பிளான் பெற்றோல் பிரச்சினையால் தள்ளாடுகிற வயசில வரப்பண்ணப்போகின்றது! 

2 minutes ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் ஏன் வரிசையில் நின்டு வெய்யிலுக்கை காய வேணும்.அதுக்கு ஆட்க்கள் இருக்கினம்.வேலை வாய்ப்பு கொடுத்த மாதிரியும் இருக்கும்.😄

இப்படி வரிசையில் நிற்கிற வேலை வாங்கிற உயர்குழாம் (elite) இருப்பதால்தான் நாடு வங்குரோத்தாகியிருக்கு! நாம எப்பவும் ஷோசலிசம் என்பதால் இப்படியான வேலைகளை ஆதரிப்பதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன் போகாதீங்க…….. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

@கிருபன் போகாதீங்க…….. 

போவதாக இல்லை. நண்பன் ஒருவனின் தாயாரின் வழமையான வைத்திய செக்கப்பிற்கு போவதற்கே ராக்ஸி, ஆட்டோ எரிபொருள் இல்லையென்று போகமுடியாமல் இருக்கின்றதாம். ஆனால் இன்னொரு கனடிய குடும்பம் நீர்கொழும்பு, கண்டி என்று resort களில் இருந்து படங்களைப் போடுகின்றனர்!

உங்கள் அனுபவத்தையும் சொன்னால் நல்லது!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

அவரே நொந்து நூடில்ஸ் ஆகியிருக்கிறார் அவரிடமிருந்து என்ன வரும் 

நாங்க ஊரில இருந்த சொல்கிறம் தயவு செய்து இந்த நேரம் வந்து மிகப்பெரிய சிரமத்துக்க ஆளாகவேண்டாம் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

 ஆனால் இன்னொரு கனடிய குடும்பம் நீர்கொழும்பு, கண்டி என்று resort களில் இருந்து படங்களைப் போடுகின்றனர்!

வாலறுந்த நரியின் விளயாட்டா இருக்கலாம், பச்சை திரையில் படம் பிடித்து பிண்ணணியினை சேர்த்திருக்கலாம் சும்மா ஒரு நகைசுவைக்காக சொன்னது.

என்னுடன் வேலை செய்யும் ஒரு பாகிஸ்தானியர் தனது நாட்டுக்கு போவதற்கு இலங்கை விமானத்தினூடாக சென்றால் மலிவாக இருக்கும் ஆனால் கொழும்பில் தரித்து போவதால் வேண்டாம் என மாற்றிவிட்டதாகக்கூறினார்.

பஞ்சத்தினை  விட ஒரு கலவரத்தினையும் தூண்டிவிடுவார்களோ என்ற ஒரு பயம் உள்ளது, வீண் சிரமம் எதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

எப்படியாகினும் தமிழர்களுக்கு நல்லது நடந்தால் சந்தோசம். இந்த இடத்தில் தமிழர் தரப்பு  சிங்களத்திற்கு ஆதரவு கொடுக்காமல் தனித்து நிற்க அந்த இயற்கையின் சக்தியை வேண்டுகின்றேன்.
 
15 hours ago, நன்னிச் சோழன் said:

சுமந்திரன் சேறு இருக்கேக்குலை, உப்பிடியெல்லாம் நீங்கள் கதைக்கப்படாது...

சேறு கூப்பிட்டால் எல்லாரும் போகத்தான் வேணும். ஓம்... 

15 hours ago, nunavilan said:

இனிமேல்  சிங்கள மக்களால் நடாத்தப்படும் போராட்டங்களில் தமிழர்கள் பங்கு பற்றாது இருப்பதே நல்லது. இறுதியில் எம்மீது திசை திருப்பி விடுவதில் சிங்கள அரசியல்வாதிகள் கில்லாடிகள்.

க்கும்.... ஆசை,தோசை, அப்பளம், வடை.....
நீங்கள் சொல்ல முதல், ஏற்கெனவே... இரண்டுபேர்,
சபையிலை... இடம் பிடிச்சு வைச்சிருக்கினம்.

இவை இரண்டு பேருக்கும்.... ஸ்ரீலங்கா அரசில்  அமைச்சராக  
இருக்க வேண்டும் என்று, நீண்ட நாட்களாக ஆசை உள்ளது. 

👇 👇 👇

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு வகையில் பார்க்கும் பொழுது, வெளிநாட்டவர்கள் இலங்கை போகும்போது தான், பணம். நாட்டுக்குள் போகும். அந்த வகையில் போகிறவர்கள் சிங்கள பிரதேசங்களுகரகிச் செல்லாமல் தமிழர் பகுதிகளுக்கு சென்றால் தமிழர்களுக்குத்தான் பணம் செல்லும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.