Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்கால திட்டத்தை... மக்களிடம் முன்வைத்த, போராட்டக்காரர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/watch?v=1327290944463188 👈

போராட்டக்காரர்கள்,  ஜனாதிபதி மாளிகையில் இருந்து கொண்டு.... 
நாட்டு மக்களுக்கு  தமது எதிர்கால திட்டத்தை அறிவித்தார்கள்.

Newsfirst.lk Tamil

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை கொஞ்சம் உரமாத்தான் இருக்கிறாங்கள் அரகள காராயோ.

  • கருத்துக்கள உறவுகள்

இனி யாரும் பொப்பேற்க்க முன் ஆயிரம் தடவை யோசிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி இனவாதத்தை தூண்டி ஆட்சியை பிடிக்க முடியாது. நாட்டின் முன்னேற்றம் பற்றி பேச வேண்டும். நாமும், தமிழ்த்தேசியம் பேசி ஏமாற்றும் பேர்வழிகள் பற்றி யோசிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, satan said:

இனி இனவாதத்தை தூண்டி ஆட்சியை பிடிக்க முடியாது. நாட்டின் முன்னேற்றம் பற்றி பேச வேண்டும். நாமும், தமிழ்த்தேசியம் பேசி ஏமாற்றும் பேர்வழிகள் பற்றி யோசிக்க வேண்டும்.

இவர்கள் கொண்டு வருவாதாய் சொல்லும் புதிய அரசியல் திட்டம் நமக்கு என்ன தீர்வு தருகிறது என முதலில் பார்ப்போம்.

காணி, பொலிஸ் உட்பட்ட சமஸ்டி அதிகாரம் தந்தால்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதைத் தந்தால் சொர்க்கம்.

இனி புத்த பிக்குகள் என்னென்ன சொல்ல போகிறார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இனி புத்த பிக்குகள் என்னென்ன சொல்ல போகிறார்களோ?

இனியும் பிக்குகள் இனவாதம் பேசினால்; விகாரைகள் அகற்றப்படும் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம். ஆகவே அடக்கி வாசிப்பதோடு தர்மம் போதிப்பார்கள். ஆனால் இன்றைய நிலைக்கு அவர்களும் முக்கிய காரணம். இனி விதி முடிவு செய்யும், விதி வரைந்த பாதை வழியே பயணம் தொடரும், யாரும் தடுக்க முடியாது. இது விதி முடிவு எழுதும் நேரம்.

  • கருத்துக்கள உறவுகள்+

இதென்னடாப்பா... சிங்களவர் சோத்து வழியில்லை என்ட உடன போராட்டம் செஞ்சு சோத்து வழியை ஏற்படுத்தி - தமிழனை குசிப்படுத்துற மாதிரி கதைவிடுகிற மாதிரி விட்டவுடன இஞ்சா எல்லாரும் சிங்களவனோட சம்ஸ்டி பற்றி கதைக்கத்தொடங்கீற்றினம்... 

உங்கள் எல்லாருக்கும் சிங்களவர் என்ன கற்பூரம் ஏத்தி சத்தியம் செஞ்சே தந்தவங்கள், இனி இனவாதம் கதைக்க மாட்டமெண்டு... ? (ஏத்தின கற்பூரத்தையே விளுங்கீற்றுப் போறவன் சிங்களவன்.)

இன்னும் வேண்ட இடமுண்டு.😂🤦‍♂️

அம்பாந்தோட்டைக் கள்ளர் அவங்கள்.. நீங்கள் எல்லாரும் அவங்களை மோட்டுச் சிங்களவர் என்டு சொல்லி அடிவாங்கி ஏமாந்ததுதான் மிச்சம்!

Edited by நன்னிச் சோழன்
added a sentence

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

உங்கள் எல்லாருக்கும் சிங்களவர் என்ன கற்பூரம் ஏத்தி சத்தியம் செஞ்சே தந்தவங்கள், இனி இனவாதம் கதைக்க மாட்டமெண்டு.

இல்லை சோழா! அவர்கள் சுட்டாலும் அப்படி செய்யவோ, சொல்லவோ  மாட்டார்கள். ஆனால் காலம் தன் ஆயுதத்தை கையிலெடுத்துள்ளது, தனது நோக்கம் நிறைவேற்றாமல் தனது போராட்டத்தை நிறுத்தாது. அதன் மேல் எனக்கு நம்பிக்கையுண்டு.

1 hour ago, நன்னிச் சோழன் said:

சிங்களவர் சோத்து வழியில்லை என்ட உடன போராட்டம் செஞ்சு சோத்து வழியை ஏற்படுத்தி

இந்த நிலை வராதிருந்திருந்தால், பக்க்ஷாக்களை  துரத்த முடிந்திருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் இலங்கையில் இனவாதம் அழியபோவதில்லை.

இன்று சிங்களவர்கள் தமது பிரச்சனைக்காகவே போராடுகிறார்கள், அவர்கள் தமிழ் முஸ்லிம்களின் பிரச்சனைக்காக போராடவில்லை.

ஒரு ஆட்சி அதிகாரத்தையே விரட்டியடிக்கும் இந்த போராட்டத்தில் தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் தம்மோடு தோளோடு தோள் நிற்க சொல்லி அவர்கள் அறைகூவல் விடுத்ததாய் பெரிதாக எந்த செய்திகளிலும் இல்லை.

அதுவே இனவாதம் வேண்டாமென்று அவர்கள் சொல்லவில்லையென்பதை மறைமுகமாய் சுட்டி நிற்கிறது.

ஜேவிபி ஆயுத கிளர்ச்சி நடத்திய 80களின் இறுதிகளில் ஒப்பீட்டளவில் தமிழர்களைவிட கால அடிப்படையில் அரச பயங்கரவாதத்தால் பெரும் அழிவை சந்தித்தது அவர்கள் இயக்கமே.

இயக்க உறுப்பினர்கள், தலைவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என்று மனித நாகரிகங்களுக்கு அப்பாற்பட்டு உயிரோடு டயர் போட்டு கொளுத்தியும், தலையை கொத்து கொத்தாய் துண்டித்து களனி பாலம் தொடக்கம் மட்டக்குளி கடற்கரைவரை வீசியும், பள்ளி மாணவர்கள் தொடக்கம் இளைஞர்கள்வரை கொத்து கொத்தாய் படுகொலை செய்து புதைகுழிகளில் போட்டு மூடியும் கோர தாண்டவம் ஆடியது இலங்கை அரச இயந்திரம்.

சராசரி மனித உணர்வு கொண்டவர்கள் தாம் எதிர் கொண்டதுபோன்று பிறரும் அதே துன்பத்தை அனுபவித்தால், அழிவை எதிர்கொள்ளூம் மனித கூட்டத்துக்கு ஆதரவாக அவர்களே முதலில் குரல் கொடுத்திருப்பார்கள்.

ஆனால் இறுதி யுத்தம்வரை அரசைவிட அதி தீவிரமாய் தமிழர் போராட்டங்களை ஒடுக்குவதில் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பில் உதவி முதற்கொண்டு, தமிழர் பகுதிக்கான சுனாமி நிதி தடுப்புவரை மிக ஆவேசமாக உறுதியாக இனவாதம் கக்கி நின்றது ஜேவிபியே.

அவர்கள் தமக்குள் ஆயிரம் முரண்பாடு கொண்டு மோதி கொள்வார்கள், ஆனால் தமது இனத்தை எவனுக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

இனத்தை விட்டுகொடுத்து அரச பதவிகள் சலுகைகளுக்காக ஏங்க அவர்கள் தமிழர்களா என்ன?

இன்றைய போராட்டம் ஓய்வடைந்து புதிய அரசு தோன்றினாலும், அவர்களின் தமிழர்கள் இஸ்லாமியர்களுக்கெதிரான பார்வை ஒருபோதும் மாறபோவதில்லை, அதை நாம் தொடர்ந்து பார்க்கதான் போகிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த போரட்டங்கள் இந்த எதிர்கால திட்டவரைபுகளுக்கெல்லாம் யார் பின்னணியில் இருக்கின்றார்கள்? இந்த போராட்டங்களை  பின்னணியில் நின்று நடாத்துவது யார்?

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தலைமுறை புறப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்

தமிழருக்கு தீர்வு இல்லை என்றால் இலங்கைக்கு நிலையான வாழ்வில்லை என்பதை உணர்ந்தவராகளாக இருக்க கடவது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நன்னிச் சோழன் said:

இதென்னடாப்பா... சிங்களவர் சோத்து வழியில்லை என்ட உடன போராட்டம் செஞ்சு சோத்து வழியை ஏற்படுத்தி - தமிழனை குசிப்படுத்துற மாதிரி கதைவிடுகிற மாதிரி விட்டவுடன இஞ்சா எல்லாரும் சிங்களவனோட சம்ஸ்டி பற்றி கதைக்கத்தொடங்கீற்றினம்... 

உங்கள் எல்லாருக்கும் சிங்களவர் என்ன கற்பூரம் ஏத்தி சத்தியம் செஞ்சே தந்தவங்கள், இனி இனவாதம் கதைக்க மாட்டமெண்டு... ? (ஏத்தின கற்பூரத்தையே விளுங்கீற்றுப் போறவன் சிங்களவன்.)

இன்னும் வேண்ட இடமுண்டு.😂🤦‍♂️

அம்பாந்தோட்டைக் கள்ளர் அவங்கள்.. நீங்கள் எல்லாரும் அவங்களை மோட்டுச் சிங்களவர் என்டு சொல்லி அடிவாங்கி ஏமாந்ததுதான் மிச்சம்!

🤣 தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் இல்லை. அதுதான்  என்ன தருகிறார்கள் என பாப்போம் என எழுதினேன்.

நிச்சயம் அவர்களாக தரபோவதில்லை. ஆனால் வெளிநாட்டு அளுத்தத்தை பயன்படுத்தி இதுவரை இருந்தவர்களை விட இவர்களை நாம் அழுத்தி தீர்வு பெறுவது இலகுவாக இருக்கலாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இந்த போரட்டங்கள் இந்த எதிர்கால திட்டவரைபுகளுக்கெல்லாம் யார் பின்னணியில் இருக்கின்றார்கள்? இந்த போராட்டங்களை  பின்னணியில் நின்று நடாத்துவது யார்?

எனக்கும் புரியவில்லை, இதைத்தான் நானும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன், இவ்வளவு தூரம், இவ்வளவு பேரை organize பண்ணி செய்வது என்றால் பின்னணி பெரிதாக இருக்க வேண்டும். ராணுவத்தை, வன்முறையை பாவிக்கக்கூடாது என்று அமெரிக்கத்தூதுவர் போராட்டதுக்கு முன்னமே சொல்லுகிறார், இந்த அளவுக்கு நடக்க போகுதென்று முதலே அவருக்கு தெரிகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நீர்வேலியான் said:
5 hours ago, குமாரசாமி said:

இந்த போரட்டங்கள் இந்த எதிர்கால திட்டவரைபுகளுக்கெல்லாம் யார் பின்னணியில் இருக்கின்றார்கள்? இந்த போராட்டங்களை  பின்னணியில் நின்று நடாத்துவது யார்?

எனக்கும் புரியவில்லை, இதைத்தான் நானும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன், இவ்வளவு தூரம், இவ்வளவு பேரை organize பண்ணி செய்வது என்றால் பின்னணி பெரிதாக இருக்க வேண்டும். ராணுவத்தை, வன்முறையை பாவிக்கக்கூடாது என்று அமெரிக்கத்தூதுவர் போராட்டதுக்கு முன்னமே சொல்லுகிறார், இந்த அளவுக்கு நடக்க போகுதென்று முதலே அவருக்கு தெரிகிறது

அதிவிசேடமாக அனுப்பப்பட்ட அமெரிக்க ராணியல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்+
10 hours ago, satan said:

இல்லை சோழா! அவர்கள் சுட்டாலும் அப்படி செய்யவோ, சொல்லவோ  மாட்டார்கள். ஆனால் காலம் தன் ஆயுதத்தை கையிலெடுத்துள்ளது, தனது நோக்கம் நிறைவேற்றாமல் தனது போராட்டத்தை நிறுத்தாது. அதன் மேல் எனக்கு நம்பிக்கையுண்டு.

இந்த நிலை வராதிருந்திருந்தால், பக்க்ஷாக்களை  துரத்த முடிந்திருக்குமா?

4 hours ago, goshan_che said:

🤣 தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் இல்லை. அதுதான்  என்ன தருகிறார்கள் என பாப்போம் என எழுதினேன்.

நிச்சயம் அவர்களாக தரபோவதில்லை. ஆனால் வெளிநாட்டு அளுத்தத்தை பயன்படுத்தி இதுவரை இருந்தவர்களை விட இவர்களை நாம் அழுத்தி தீர்வு பெறுவது இலகுவாக இருக்கலாம்.

மகிந்த மாமாக்கள் போயிட்டினம்; அதால சிக்கல் என்னென்டால், 

இப்ப வாறவன் மேற்கிற்கு ஆதராவான சீனாவுக்கு முழு எதிர்பாளியாக இருப்பானென்டால் மேற்கும் எமக்கு உதவாதே. சேர்ந்து வாழுங்கோ என்டு போட்டுப் போயிடுவாங்கள்.  நாங்களும் மண்ணைப் புடுங்காதை அதைப் புடுங்காத இதைப் புடுங்காத என்டு மாரித்தவளையள் மாதிரி ஒடுவில் வரைக்கும் கத்தவேணுமே!

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மை மக்களின் நாளாந்த வாழ்வியலை ராஜபக்ச கும்பலும் ரணில் கும்பலும் பாதிக்கச் செய்த படியால் தான்.. அரசை அவர்கள் கவிழ்த்தார்கள்.. அது நிஜம் தான்.

ஆனாலும் இன்றைய இளைய சமூகம் அது தமிழ்... சிங்கள.. முஸ்லிமாக இருந்தாலும்.. அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு ஒன்றை கட்டி எழுப்பின்.. அதன் மூலம்.. சாதாரண சிங்கள மக்களுக்கு தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமையை தான் கேட்கிறார்கள்.. சிங்கள மக்களைப் போலவே அவர்களும் தமது அரசியலை தாமே தீர்மானிக்கும் உரிமையை தமது மண்ணில் ஆட்சி உரிமையை தானே கேட்கிறார்கள் என்ற புரிதலுக்கு இட்டுச் செல்ல இந்தச் சூழலை பாவிக்க முடியும்.

சென்ற அல்லது பழைய தலைமுறை சிங்களத் தலைவர்களை போல அன்றி இளைய தலைமுறை இனவாதத்திற்கு இடமளிப்பதால்.. ஏற்படும் நன்மைகளை தீமைகளை அதிகம் ஆராயவும் அதன் விளைவுகளை உணரவும் தலைப்படும் இந்த வேளையில்.. நாட்டில் உள்ள தமிழ் இளையோர் தமிழ் மக்களின் பெரும்பான்மை விருப்பை தெளிவுபடுத்துவதோடு.. ராஜபக்ச கூட்டத்தை தமிழ் மக்கள் தொடர்ந்து நிராகரித்து நின்றதையும் அவர்கள் செய்த இனவாதச் செயற்பாடுகளின் தாக்கம்.. எப்படி ஒட்டுமொத்த இலங்கையையும் பாதிக்கச் செய்தது என்பதையும் விளக்க இதுவே சரியான தருணமும் ஆகும்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். இப்போ தமிழர்களுக்கும் சேர்த்து தான் காற்று வீசுது. விதைகளை தூற்றிக் கொள்வது நல்லது. அது விளைச்சலாவதும் விடுவதும் காலத்தினதும் புரிதலினதும் தன்மையில் தங்கியுள்ளது.

சந்தர்ப்பங்களை நழுவ விடுவதிலும்.. பயன்படுத்தி பார்த்து வென்றால்.. நன்று. தோற்றால்.. தொடர்ந்து முயற்சிப்பதே.. ஓர் நாள் வெற்றிக்கு.. மனமாற்றங்களுக்கு வழி சமைக்கும். எதையும் செய்யாமல்.. வாயால் வடை சுடும் பாரம்பரிய தமிழ் அரசியல்வாதிகளின் அணுகுமுறை தமிழருக்கோ.. இலங்கைக்கோ உதவாது.

ஏனெனில்.. இந்த நெருக்கடியான காலத்தில்.. கூட தமிழ் அரசியல்வாதிகளால்.. சாதாரண சிங்கள மக்களுக்கோ ஏன் சொந்த தமிழ் மக்களுக்கோ... ஆற்றுகை படுத்தக் கூடிய ஒரு விடயத்தைக் கூட செய்ய முடியவில்லை. குறிப்பாக ஹிந்தியாவுக்கு காவடி எடுக்கும் தமிழ் கட்சி தலைவர்களால் கூட. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்+

16 minutes ago, nedukkalapoovan said:

பெரும்பான்மை மக்களின் நாளாந்த வாழ்வியலை ராஜபக்ச கும்பலும் ரணில் கும்பலும் பாதிக்கச் செய்த படியால் தான்.. அரசை அவர்கள் கவிழ்த்தார்கள்.. அது நிஜம் தான்.

ஆனாலும் இன்றைய இளைய சமூகம் அது தமிழ்... சிங்கள.. முஸ்லிமாக இருந்தாலும்.. அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு ஒன்றை கட்டி எழுப்பின்.. அதன் மூலம்.. சாதாரண சிங்கள மக்களுக்கு தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமையை தான் கேட்கிறார்கள்.. சிங்கள மக்களைப் போலவே அவர்களும் தமது அரசியலை தாமே தீர்மானிக்கும் உரிமையை தமது மண்ணில் ஆட்சி உரிமையை தானே கேட்கிறார்கள் என்ற புரிதலுக்கு இட்டுச் செல்ல இந்தச் சூழலை பாவிக்க முடியும்.

சென்ற அல்லது பழைய தலைமுறை சிங்களத் தலைவர்களை போல அன்றி இளைய தலைமுறை இனவாதத்திற்கு இடமளிப்பதால்.. ஏற்படும் நன்மை தீமைகளையும் அதிகம் ஆராயவும் அதன் விளைவுகளை உணரவும் தலைப்படும் இந்த வேளையில்.. நாட்டில் உள்ள தமிழ் இளையோர் தமிழ் மக்களின் பெரும்பான்மை விருப்பை தெளிவுபடுத்துவதோடு.. ராஜபக்ச கூட்டத்தை தமிழ் மக்கள் தொடர்ந்து நிராகரித்து நின்றதையும் அவர்கள் செய்த இனவாதச் செயற்பாடுகளின் தாக்கம்.. எப்படி ஒட்டுமொத்த இலங்கையையும் பாதிக்கச் செய்தது என்பதையும் விளக்க இதுவே சரியான தருணமும் ஆகும்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். இப்போ தமிழர்களுக்கும் சேர்த்து தான் காற்று வீசுது. விதைகளை தூற்றிக் கொள்வது நல்லது. அது விளைச்சலாவதும் விடுவதும் காலத்தினதும் புரிதலினதும் தன்மையில் தங்கியுள்ளது.

சந்தர்ப்பங்களை நழுவ விடுவதிலும்.. பயன்படுத்தி பார்த்து வென்றால்.. நன்று. தோற்றால்.. தொடர்ந்து முயற்சிப்பதே.. ஓர் நாள் வெற்றிக்கு.. மனமாற்றங்களுக்கு வழி சமைக்கும். எதையும் செய்யாமல்.. வாயால் வடை சுடும் பாரம்பரிய தமிழ் அரசியல்வாதிகளின் அணுகுமுறை தமிழருக்கோ.. இலங்கைக்கோ உதவாது.

ஏனெனில்.. இந்த நெருக்கடியான காலத்தில்.. கூட தமிழ் அரசியல்வாதிகளால்.. சாதாரண சிங்கள மக்களுக்கோ ஏன் சொந்த தமிழ் மக்களுக்கோ... ஆற்றுகை படுத்தக் கூடிய ஒரு விடயத்தைக் கூட செய்ய முடியவில்லை. குறிப்பாக ஹிந்தியாவுக்கு காவடி எடுக்கும் தமிழ் கட்சி தலைவர்களால் கூட. 

நல்ல கருத்துக்கள்... அவங்கட மொழியிலையே எங்கட சிக்கல்களை நாம் கொண்டு சென்றால் இன்னும் பயனுடையதாய், இலகுவாய், அவங்கட அடித்தட்டுவரை புரியும்படியாக கொண்டு செல்லலாம்.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நன்னிச் சோழன் said:

நல்ல கருத்துக்கள்... அவங்கட மொழியிலையே எங்கட சிக்கல்களை நாம் கொண்டு சென்றால் இன்னும் பயனுடையதாய், இலகுவாய், அவங்கட அடித்தட்டுவரை புரியும்படியாக கொண்டு செல்லலாம்.

என்ன சோழன்,

அப்ப இனி சிங்களவன் ஏமாத்தமாட்டான் பேசி விளங்கவைக்கலாம் எண்டுறியளோ😆.

நல்லா கனவு காணலாம் சோழன் ஆனால் பாணையும், பருப்பையும் கண்டவுடன், வயிறு நிறைந்தவுடன் உள்ளதில் அதிகம் ஆர் இனவாதம் பேசினமோ அவர்கள் பின்னால் ஓடும் சிங்கள கூட்டு மகாவம்ச மனோநிலை.

இவர்களுக்கு பேசி மனமாற்றத்தை உருவாக்கி மாற்றத்தை உருவாக்கி முடிக்க முழுதீவும் சிங்கள மயமாகிவிட்டிருக்கும்.

இந்த மயிலே, மயிலே இறகு போடு கதை வேலைக்கு ஆகாது.

செய்ய கூடியது எல்லாம் இப்போ இந்த போரட்டத்தை வழிநடத்தும் மறை கரங்களை அணுகி, அழுத்தி, போராட்டகாரர் மூலமே, பசி பட்டினியில் இனவாதம் கவனம் திசை திரும்பி இருக்கும் சமயம் எமக்கான அடிப்படை உரிமைகளையாவது பெறுவதே.

  • கருத்துக்கள உறவுகள்

உடைகளைந்து அவமானம் செய்வது, உயிரோடு எரிப்பது, வீட்டை எரிப்பது, இவை வழிமுறைகள்.

1. உணவு, அத்தியாவசிய தேவை இல்லை

2. இனம் அழியும் அபாயம் சிறுபான்மையால் வருகிறது.

இவை இரெண்டும் கூட்டாக சிங்கள இனம் உணரும், கற்பனை செய்யும் ஆபத்துக்கள்.

இப்போ முதலவதான உண்மையாக இருக்கும் பயத்துடன் மேற்சொன்ன வழிமுறையை பயன்படுத்தி டீல் பண்ணுகிறார்கள்.

இந்த பயம் அகன்றதும். துட்டகாமினி காலத்தில் இருந்து கற்பிக்கபட்ட, கற்பனாவாதமான இரெண்டாம் பயம் தலைதூக்கும், தூக்க வைக்கப்படும்.

இப்போ எமக்கு கிடைக்கும் சந்தர்பத்தை பயன்படுத்தி சாட்சிகாரரிடம் கதைத்து ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை செய்யாவிடின், 1948 இல் தமிழ் தலைவர்கள் செய்த அதே பிழையை நாமும் விட்ட்வர்கள் ஆவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

இப்போ எமக்கு கிடைக்கும் சந்தர்பத்தை பயன்படுத்தி சாட்சிகாரரிடம் கதைத்து ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை செய்யாவிடின், 1948 இல் தமிழ் தலைவர்கள் செய்த அதே பிழையை நாமும் விட்ட்வர்கள் ஆவோம்.

அப்படியான பாதுகாப்பு ஏற்பாட்டை செய்வதற்கு..
தற்போதைய தமிழ் தலைமையை நம்ப முடியாது.
இவர்கள் வழமை போல்,  போக்கு காட்டி… தமிழரை ஏமாற்றி விடுவார்கள்.

அடுத்து… வேறு எவரை நம்பி, களம் இறக்கலாம் என நினைகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

என்ன சோழன்,

அப்ப இனி சிங்களவன் ஏமாத்தமாட்டான் பேசி விளங்கவைக்கலாம் எண்டுறியளோ😆.

நல்லா கனவு காணலாம் சோழன் ஆனால் பாணையும், பருப்பையும் கண்டவுடன், வயிறு நிறைந்தவுடன் உள்ளதில் அதிகம் ஆர் இனவாதம் பேசினமோ அவர்கள் பின்னால் ஓடும் சிங்கள கூட்டு மகாவம்ச மனோநிலை.

இவர்களுக்கு பேசி மனமாற்றத்தை உருவாக்கி மாற்றத்தை உருவாக்கி முடிக்க முழுதீவும் சிங்கள மயமாகிவிட்டிருக்கும்.

இந்த மயிலே, மயிலே இறகு போடு கதை வேலைக்கு ஆகாது.

செய்ய கூடியது எல்லாம் இப்போ இந்த போரட்டத்தை வழிநடத்தும் மறை கரங்களை அணுகி, அழுத்தி, போராட்டகாரர் மூலமே, பசி பட்டினியில் இனவாதம் கவனம் திசை திரும்பி இருக்கும் சமயம் எமக்கான அடிப்படை உரிமைகளையாவது பெறுவதே.

எமது இலக்குகளை மாற்றாது இருக்கும் வழிமுறைகள் ஊடாக இன்றைய சூழலில் சாத்தியமானதை அடைவதும் நன்மையே

41 minutes ago, goshan_che said:

உடைகளைந்து அவமானம் செய்வது, உயிரோடு எரிப்பது, வீட்டை எரிப்பது, இவை வழிமுறைகள்.

1. உணவு, அத்தியாவசிய தேவை இல்லை

2. இனம் அழியும் அபாயம் சிறுபான்மையால் வருகிறது.

இவை இரெண்டும் கூட்டாக சிங்கள இனம் உணரும், கற்பனை செய்யும் ஆபத்துக்கள்.

இப்போ முதலவதான உண்மையாக இருக்கும் பயத்துடன் மேற்சொன்ன வழிமுறையை பயன்படுத்தி டீல் பண்ணுகிறார்கள்.

இந்த பயம் அகன்றதும். துட்டகாமினி காலத்தில் இருந்து கற்பிக்கபட்ட, கற்பனாவாதமான இரெண்டாம் பயம் தலைதூக்கும், தூக்க வைக்கப்படும்.

இப்போ எமக்கு கிடைக்கும் சந்தர்பத்தை பயன்படுத்தி சாட்சிகாரரிடம் கதைத்து ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை செய்யாவிடின், 1948 இல் தமிழ் தலைவர்கள் செய்த அதே பிழையை நாமும் விட்ட்வர்கள் ஆவோம்.

அதற்கான மதிநுட்பத்தடனான தமிழ்த்ததலைமைகள் யாராவது இருக்கிறார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

பெரும்பான்மை மக்களின் நாளாந்த வாழ்வியலை ராஜபக்ச கும்பலும் ரணில் கும்பலும் பாதிக்கச் செய்த படியால் தான்.. அரசை அவர்கள் கவிழ்த்தார்கள்.. அது நிஜம் தான்.

ஆனாலும் இன்றைய இளைய சமூகம் அது தமிழ்... சிங்கள.. முஸ்லிமாக இருந்தாலும்.. அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு ஒன்றை கட்டி எழுப்பின்.. அதன் மூலம்.. சாதாரண சிங்கள மக்களுக்கு தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமையை தான் கேட்கிறார்கள்.. சிங்கள மக்களைப் போலவே அவர்களும் தமது அரசியலை தாமே தீர்மானிக்கும் உரிமையை தமது மண்ணில் ஆட்சி உரிமையை தானே கேட்கிறார்கள் என்ற புரிதலுக்கு இட்டுச் செல்ல இந்தச் சூழலை பாவிக்க முடியும்.

சென்ற அல்லது பழைய தலைமுறை சிங்களத் தலைவர்களை போல அன்றி இளைய தலைமுறை இனவாதத்திற்கு இடமளிப்பதால்.. ஏற்படும் நன்மைகளை தீமைகளை அதிகம் ஆராயவும் அதன் விளைவுகளை உணரவும் தலைப்படும் இந்த வேளையில்.. நாட்டில் உள்ள தமிழ் இளையோர் தமிழ் மக்களின் பெரும்பான்மை விருப்பை தெளிவுபடுத்துவதோடு.. ராஜபக்ச கூட்டத்தை தமிழ் மக்கள் தொடர்ந்து நிராகரித்து நின்றதையும் அவர்கள் செய்த இனவாதச் செயற்பாடுகளின் தாக்கம்.. எப்படி ஒட்டுமொத்த இலங்கையையும் பாதிக்கச் செய்தது என்பதையும் விளக்க இதுவே சரியான தருணமும் ஆகும்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். இப்போ தமிழர்களுக்கும் சேர்த்து தான் காற்று வீசுது. விதைகளை தூற்றிக் கொள்வது நல்லது. அது விளைச்சலாவதும் விடுவதும் காலத்தினதும் புரிதலினதும் தன்மையில் தங்கியுள்ளது.

சந்தர்ப்பங்களை நழுவ விடுவதிலும்.. பயன்படுத்தி பார்த்து வென்றால்.. நன்று. தோற்றால்.. தொடர்ந்து முயற்சிப்பதே.. ஓர் நாள் வெற்றிக்கு.. மனமாற்றங்களுக்கு வழி சமைக்கும். எதையும் செய்யாமல்.. வாயால் வடை சுடும் பாரம்பரிய தமிழ் அரசியல்வாதிகளின் அணுகுமுறை தமிழருக்கோ.. இலங்கைக்கோ உதவாது.

ஏனெனில்.. இந்த நெருக்கடியான காலத்தில்.. கூட தமிழ் அரசியல்வாதிகளால்.. சாதாரண சிங்கள மக்களுக்கோ ஏன் சொந்த தமிழ் மக்களுக்கோ... ஆற்றுகை படுத்தக் கூடிய ஒரு விடயத்தைக் கூட செய்ய முடியவில்லை. குறிப்பாக ஹிந்தியாவுக்கு காவடி எடுக்கும் தமிழ் கட்சி தலைவர்களால் கூட. 

கோத்தாகோகம போராட்டக்கார அமைப்பாளர்கள் கூட…
சென்ற மாதம்…யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு வந்து…
தமிழருடனான நல்லெண்ண சமிக்ஜையை… வெளிப் படுத்தியவர்கள்.
ஆகவே… எமது இளையவர்களும், அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது
நல்லது என நினைக்கின்றேன்.

தப்பித் தவறிக் கூட…. தற்போது இருக்கும், எந்த அரசியல் வாதிகளையும் இனி நம்ப வேண்டாம்.
அவர்கள் இனி… ஒட்டு மொத்தமாக நிரந்தர ஓய்வு எடுக்கட்டும்.
புதிய, இளைய தலை முறை அரசியல் வாதிகளை… இனம் கண்டு களமிறக்கப் பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

என்ன சோழன்,

அப்ப இனி சிங்களவன் ஏமாத்தமாட்டான் பேசி விளங்கவைக்கலாம் எண்டுறியளோ😆.

நல்லா கனவு காணலாம் சோழன் ஆனால் பாணையும், பருப்பையும் கண்டவுடன், வயிறு நிறைந்தவுடன் உள்ளதில் அதிகம் ஆர் இனவாதம் பேசினமோ அவர்கள் பின்னால் ஓடும் சிங்கள கூட்டு மகாவம்ச மனோநிலை.

இவர்களுக்கு பேசி மனமாற்றத்தை உருவாக்கி மாற்றத்தை உருவாக்கி முடிக்க முழுதீவும் சிங்கள மயமாகிவிட்டிருக்கும்.

இந்த மயிலே, மயிலே இறகு போடு கதை வேலைக்கு ஆகாது.

https://www.instagram.com/mihiriw/

எ.கா: இந்த அக்காவும் இவவோட கணக்கில இருக்கிற ஆக்களும்.

எங்கேனும் ஐதாக இவையள மாதிரி எங்களுக்கு மெல்லிய ஆதரவை தரக்கூடிய சிங்களவருக்கு அவங்கட மொழியிலையே எங்கட சிக்கல்களைக் (புலம்பெயர் ஈழத்தீவருள் தமிழரை விட தம் தாய்மொழி தெரிந்த சிங்களவர் அதிகம் உண்டென நினைக்கிறேன்) கொண்டுபோய் விளங்கப்படுத்தக்கூடிய அளவிற்கு விளங்கப்படுத்தினால் எங்கட பக்கம் கொஞ்சம் ஈர்க்கலாம் அல்லவா; பாருங்கோ, இஞ்சை நான் சுட்டுறது இனவாத பிசாசுகளிடம் கொண்டுபோகச்சொல்லி அன்று, ஏற்கனவே எங்களுக்கு மென்னாதரவை வழங்குபவர்கள், தரக்கூடியவர்கள், மற்றும் எம்மீது மெய்யான கரிசனை கொண்ட சிங்கள மக்களிடம் மட்டுமே. சாத்தானுக்கு வேதமோத நானொன்டும் விசரனில்லை.😂

அவங்களுக்கு உள்ளையே திசைதிருப்பக்கூடிய அல்லது குழப்பத்தை உண்டுபண்ணக்கூடிய அளவிற்கு பரப்புரையை அவங்கட மொழியிலையே செஞ்சால் - சிங்களவன் எப்படி எங்கட மொழியிலையே எங்களுக்கு எதிராச் செஞ்சான்/செய்யிறானோ அப்படி - சின்ன அறுவடை கிடைக்கும். அதை நாம் பெரிதாக ஊதிக் காட்டினால் - "பாருங்கோ, சிங்களவரே எங்களுக்கு ஆதரவா நிற்கினம்" - பாக்கிற மற்றவங்களில ஓரிரண்டு பேர் எங்களிடம் வந்தால் அவங்கள வைச்சு முழு வீச்சிலான பரப்புரையை எங்களிலை சிங்களம் தெரிந்தோரைக் கொண்டு ஏனையவரை இலக்குவைச்சு முன்னெடுக்கலாம்.

  • எ.கா: இப்ப உந்த வேசுபுக்கு வழிய தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக
    கூவிக்கொண்டு திரியிற எம்மினப் பழசுகள். இவர்களுள் பாடையில் போகும் வயது வந்ததுகளே அதிகம். இவங்கட கதைகளைக் கேட்டு ஊரில் இருக்கின்ற இளவட்ட குடு அடிக்கிறவங்களும் சேர்ந்து இன்னமும் சொந்த இனத்திற்கு எதிராகவே கதைவளிப்படுகுதுகள்... என்ன இழி பிறவிகளோ!

அதாவது கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்றுபோட்டு சும்மா இருப்பதைக் காட்டிலும் ஏலுமான வழிகளிலை முயற்சிக்கலாம் அல்லவா. கற்ற சிங்களத்தை சும்மா செய்தித்தாளும் அவங்கட பாடல்/திரைப்படங்கள்படங்கள் பார்ப்பதற்கும், கொழும்பிலை போய் விடுமுறை கொண்டாடுவதற்கும் செலவழிப்பதைத் தவிர்த்து எங்கட இனத்திற்காக, அவ்வவையின்ட சொந்த தலைமுறைகளின்ட எதிர்காலத்திற்காக செலவழிக்கலாம் தானே? 

எதிர்பார்த்தது கிடைக்காட்டியும் வேறெதுக்கேனும் எதிர்காலத்தில் இது அறுவடை தர வல்லது. 17 ஆண்டுகளுக்கு முன்னர் த.தே.தொ. ஆல் சிங்களத்தில் வெளியிடப்பட்ட கறுப்பு சூலை நிகழ்படத்தைத்தான் இன்றளவும் பயன்படுத்துகிறோம், பரப்புரையில். இன்றுவரை அதுபோலொன்று/அத்தகையது உருவாக - வில்லை/படவில்லை.

அதுபோல ஏதாவது ...

//செய்ய கூடியது எல்லாம் இப்போ இந்த போரட்டத்தை வழிநடத்தும் மறை கரங்களை அணுகி, அழுத்தி, போராட்டகாரர் மூலமே, பசி பட்டினியில் இனவாதம் கவனம் திசை திரும்பி இருக்கும் சமயம் எமக்கான அடிப்படை உரிமைகளையாவது பெறுவதே.//

கண்டிப்பாக நாம் இதைச் செய்ய வேண்டும். நான் மறுக்கவில்லை. 

நான் சொன்னது ஏலுமான வழிகளிலும் முயற்சிப்போம் என்பதன் கீழ். அதாவது அண்ணக்களை மாதிரி இருகிற வளங்களைக் கொண்டு உச்ச அறுவடையைப் பெறுவது என்ற கோட்பாட்டின் படி முயற்சிக்கலாம் என்றேன்.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

உடைகளைந்து அவமானம் செய்வது, உயிரோடு எரிப்பது, வீட்டை எரிப்பது, இவை வழிமுறைகள்.

1. உணவு, அத்தியாவசிய தேவை இல்லை

2. இனம் அழியும் அபாயம் சிறுபான்மையால் வருகிறது.

இவை இரெண்டும் கூட்டாக சிங்கள இனம் உணரும், கற்பனை செய்யும் ஆபத்துக்கள்.

இப்போ முதலவதான உண்மையாக இருக்கும் பயத்துடன் மேற்சொன்ன வழிமுறையை பயன்படுத்தி டீல் பண்ணுகிறார்கள்.

இந்த பயம் அகன்றதும். துட்டகாமினி காலத்தில் இருந்து கற்பிக்கபட்ட, கற்பனாவாதமான இரெண்டாம் பயம் தலைதூக்கும், தூக்க வைக்கப்படும்.

இப்போ எமக்கு கிடைக்கும் சந்தர்பத்தை பயன்படுத்தி சாட்சிகாரரிடம் கதைத்து ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை செய்யாவிடின், 1948 இல் தமிழ் தலைவர்கள் செய்த அதே பிழையை நாமும் விட்ட்வர்கள் ஆவோம்.

ஓம் சரியே.

ஐசே, இங்ச பாருங்கோ...
நான் முற்றாக அதிலையே மூழ்கச் சொல்லவில்லை. எம்மில் சிங்களம் அறிந்தோரைக் கொண்டு ஏலுமான வழிகளிலை முயற்சிப்பம் என்டுறன். நீங்கள் கொஞ்சம் முன்னலை போய் அதையேதான் சொல்லுறீங்கள்; வழிகிடைத்தபடியால் ஏலுமானதைத் செய்வம் என்டுறியள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.