Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டக்காரர்களை வடக்கிற்கு அழையுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தை திரும்பவும் ஒருமுறை நம்பச் சொல்கிறார்... 🤣

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக் காரர்களை வடக்கிற்கு அழைத்து…
இராணுவ வெற்றிச் சின்னங்களை.. உடைக்கப் பண்ணுவது,
நல்ல யோசனையாக இருந்தாலும், எவ்வளவு தூரத்திற்கு சாத்தியப் படும் என்று தெரியவில்லை.
காணொளிக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ வெற்றிக்கு தான் 60 லட்சத்துக்கு மேற்பட்ட சிங்கள மக்கள் வாக்களித்தனர். அவர்கள் இராணுவ வெற்றிச்சின்னங்களை உடைப்பார்களா??

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்கள் ஒருபோதும் இராணுவ வெற்றிச் சின்னங்களை உடைக்கப் போவதில்லை… வடக்கிற்கு வந்து தமிழர்களுக்கு உதவப்போவதுமில்லை….

வெளிநாட்டிலிருக்குக்கும் அரசியல் ஆய்வாளர்களின் உசிப்பேத்தல்களுக்கு ஊரில் உள்ளவர்கள் இனியும் ஆடப்போவதில்லை..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

போராட்டக் காரர்களை வடக்கிற்கு அழைத்து…
இராணுவ வெற்றிச் சின்னங்களை.. உடைக்கப் பண்ணுவது,
நல்ல யோசனையாக இருந்தாலும், எவ்வளவு தூரத்திற்கு சாத்தியப் படும் என்று தெரியவில்லை.
காணொளிக்கு நன்றி.

சிறியர், 

ஆசைக்கும் ஓர் அளவு வேண்டாமா ? எதுக்கும் ஒருமுறை அந்தக் காணொளி வெளியிடப்பட்ட திகதியைப் பாருங்கள். அனேகமாக April 01 ஆக இருக்கும்  🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சிங்களத்தை திரும்பவும் ஒருமுறை நம்பச் சொல்கிறார்... 🤣

சொல்பவருக்கு யூடியூப் லைக்ஸ் அள்ளணும்னா, எருமை மாடு எரோப்பிளேன் ஓட்டுமாம்🤪

58 minutes ago, MEERA said:

போராட்டக்காரர்கள் ஒருபோதும் இராணுவ வெற்றிச் சின்னங்களை உடைக்கப் போவதில்லை… வடக்கிற்கு வந்து தமிழர்களுக்கு உதவப்போவதுமில்லை….

வெளிநாட்டிலிருக்குக்கும் அரசியல் ஆய்வாளர்களின் உசிப்பேத்தல்களுக்கு ஊரில் உள்ளவர்கள் இனியும் ஆடப்போவதில்லை..

6 minutes ago, Kapithan said:

அனேகமாக April 01 ஆக இருக்கும்  🤣

பழனிக்கே பஞ்சாமிர்தமா🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

போராட்டக் காரர்களை வடக்கிற்கு அழைத்து…
இராணுவ வெற்றிச் சின்னங்களை.. உடைக்கப் பண்ணுவது,
நல்ல யோசனையாக இருந்தாலும், எவ்வளவு தூரத்திற்கு சாத்தியப் படும் என்று தெரியவில்லை.
காணொளிக்கு நன்றி.

நானும் இதைத்தான் யோசித்தேன். அவர்களைக் கொண்டே இவற்றை அழித்தால் என்னவென்று. ஆனால், அவர்களை இதற்கு உடன்பட வைப்பது சாத்தியமா என்பதுதான் கேள்வி. இன்று அரசுக்கெதிராகவும், ராணுவத்திற்கெதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இருக்கும் வெறுப்பை நாம் பயன்படுத்தி இதைச் செய்ய முயல வேண்டும். நாட்செல்லச் செல்ல, இந்த வெறுப்பு அடங்கிவிடும். 

தமிழர்கள் தற்போதைய புரட்சிக் காரர்களை நம்புகிறார்கள் எனும் மாயையினை ஏற்படுத்தியே அவர்களை இதற்குள் இழுத்துவிடவேண்டும். எமது தேவை அடிமைச் சின்னங்கள் அழிக்கப்படுதலே. அதை யார் செய்தால் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தன் வருமான வீடியோவை பதிவிடுபவருக்கு நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலிட நேரம் இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, நந்தன் said:

உண்மைதான்....

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

ஆனாலும் நீங்கள் சிங்கள இனத்தை ஆகத்தான் பேயன் எண்டு நினைக்கிறியள்.

ஏதோ பசி காதை அடைப்பதால் ராஜபக்சவை தூக்கி எறிகிறார்கள் - அதுதான் தமது மீட்சிக்கு வழி என்பதால்.

வடக்குக்கு எல்லாம் போக வேண்டாம் இலங்கை ஆமியினதை கூட வேண்டாம்.

இந்திய படை சகல இலங்கையரையும் கொன்றது. அதற்கான தெற்கில் இருக்கும் தூபிக்கு ஒரு கல் எறிய சொல்லுங்கள் பார்ப்போம்.

9 hours ago, நந்தன் said:

இங்கு தன் வருமான வீடியோவை பதிவிடுபவருக்கு நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலிட நேரம் இல்லை

👆👇 

தத்துவாசிரியர் 2.0 என்ற மிதப்பில் இருப்பவர் அவர்😆.

உங்களுக்கெல்லாம் பதில் சொல்லி மினகெடமாட்டார்.

19 minutes ago, குமாரசாமி said:

உண்மைதான்....

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

1583299117638.png

இங்கு குணா கவியழகன் அவர்களின் கருத்துக்கான பின்னூட்டங்கள், நம்பிக்கையை இழந்த சோர்வின் அடிப்படையில் எழுந்தவைபோல் தோன்றுகிறது. ஒருவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ள இயலாவிட்டால், அவரது கருத்தை மேவிய, நிறைவேறக்கூடிய, நல்ல சிந்தனைகளை வெளியிட்டுப் பதிவதே, சோர்வின்றி வெற்றியை நோக்கிப் பிறரும் நகர்வதற்கு வழிவகுக்கும்.🙏 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Paanch said:

ஏப்ரல் 01 க்கு ஒரு புளுடா விட்டால் அதற்கெல்லாம் கருத்து கூற முடியுமா ? 

அந்த நகைச்சுவைக்குக் கூட  பலர் ஏற்கனவே கருத்து கூறிவிட்டனர்.  

அதுவும் போதாதென்றால் நீங்கள் ஆரம்பியுங்க்ள் , நாங்கள் தொடருவோம்..👍

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரஞ்சித் said:

நானும் இதைத்தான் யோசித்தேன். அவர்களைக் கொண்டே இவற்றை அழித்தால் என்னவென்று. ஆனால், அவர்களை இதற்கு உடன்பட வைப்பது சாத்தியமா என்பதுதான் கேள்வி. இன்று அரசுக்கெதிராகவும், ராணுவத்திற்கெதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இருக்கும் வெறுப்பை நாம் பயன்படுத்தி இதைச் செய்ய முயல வேண்டும். நாட்செல்லச் செல்ல, இந்த வெறுப்பு அடங்கிவிடும். 

தமிழர்கள் தற்போதைய புரட்சிக் காரர்களை நம்புகிறார்கள் எனும் மாயையினை ஏற்படுத்தியே அவர்களை இதற்குள் இழுத்துவிடவேண்டும். எமது தேவை அடிமைச் சின்னங்கள் அழிக்கப்படுதலே. அதை யார் செய்தால் என்ன? 

@kalyani  @Kapithan @goshan_che @ரஞ்சித்  @நந்தன்@குமாரசாமி@paanch

ரஞ்சித்... இங்கு கருத்து எழுதிய பலரும், 
சிங்களவனை நம்ப ஏலாது என்ற தொனிப்படவே எழுதியுள்ளார்கள்.
அவர்களில்... நிச்சயம் தவறு உள்ளது என்று சொல்லவில்லை.
இதுவரை.. சிங்களவன் செய்த வேலைகள், அவர்களை அந்த முடிவுக்கு வர தூண்டியுள்ளது.

ஆனால்... இப்போ வந்திருக்கின்ற  சமுதாயம்
பழைய (சிங்கள, தமிழ்) அரசியல்வாதிகள் போலல்லாது...
புதிய சிந்தனையுடன் வந்துள்ளது போல் தோன்றுகின்றது.  
அவர்களுக்கு... குறைந்தது... ஒரு வருடமாவது சந்தர்ப்பம் கொடுக்காது,
உது சரிவராது என்று... ஆருடம் சொல்வது, 
எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

70 வருட சிங்கள துவேச அரசியலை... 
குறுகிய காலத்தில் மாற்றுவது இலேசானது அல்ல.
அதற்க்கு முதலில்... பாராளுமன்றத்தில் உள்ள, 
225 பாராளுமன்ற உறுப்பினர்களையும்  வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
அவை எல்லாம்... படிப்படியாக செய்ய, மாற்றம் உருவாகும் என நினைக்கின்றேன்.
அதற்கு... போராட்டக் காரர்களுக்கு, சந்தர்ப்பம் கொடுப்பதுதான் முறையான செயல். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

ஏப்ரல் 01 க்கு ஒரு புளுடா விட்டால் அதற்கெல்லாம் கருத்து கூற முடியுமா ? 

அந்த நகைச்சுவைக்குக் கூட  பலர் ஏற்கனவே கருத்து கூறிவிட்டனர்.  

அதுவும் போதாதென்றால் நீங்கள் ஆரம்பியுங்க்ள் , நாங்கள் தொடருவோம்..👍

நல்லது! உங்களாலும் நல்ல கருத்தைத் தெரிவிக்க முடியவில்லையே.🤔

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

@kalyani  @Kapithan @goshan_che @ரஞ்சித்  @நந்தன்@குமாரசாமி@paanch

ரஞ்சித்... இங்கு கருத்து எழுதிய பலரும், 
சிங்களவனை நம்ப ஏலாது என்ற தொனிப்படவே எழுதியுள்ளார்கள்.
அவர்களில்... நிச்சயம் தவறு உள்ளது என்று சொல்லவில்லை.
இதுவரை.. சிங்களவன் செய்த வேலைகள், அவர்களை அந்த முடிவுக்கு வர தூண்டியுள்ளது.

ஆனால்... இப்போ வந்திருக்கின்ற  சமுதாயம்
பழைய (சிங்கள, தமிழ்) அரசியல்வாதிகள் போலல்லாது...
புதிய சிந்தனையுடன் வந்துள்ளது போல் தோன்றுகின்றது.  
அவர்களுக்கு... குறைந்தது... ஒரு வருடமாவது சந்தர்ப்பம் கொடுக்காது,
உது சரிவராது என்று... ஆருடம் சொல்வது, 
எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

70 வருட சிங்கள துவேச அரசியலை... 
குறுகிய காலத்தில் மாற்றுவது இலேசானது அல்ல.
அதற்க்கு முதலில்... பாராளுமன்றத்தில் உள்ள, 
225 பாராளுமன்ற உறுப்பினர்களையும்  வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
அவை எல்லாம்... படிப்படியாக செய்ய, மாற்றம் உருவாகும் என நினைக்கின்றேன்.
அதற்கு... போராட்டக் காரர்களுக்கு, சந்தர்ப்பம் கொடுப்பதுதான் முறையான செயல். 🙂

"70 வருட சிங்கள துவேச அரசியலை... 
குறுகிய காலத்தில் மாற்றுவது இலேசானது அல்ல."

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

நல்லது! உங்களாலும் நல்ல கருத்தைத் தெரிவிக்க முடியவில்லையே.🤔

அய்யா,

உவர் என்ன கூறியிருக்கிறார்? போராட்டக்காறர்களைக்கொண்டு கல்லெறியச் சொல்கிறார். நடக்கிற காரியமா இது ? 

இன்றைய இலங்கைப் பிரச்சனையின் அடிப்படையே இனப்பிரச்சனைதான் என்பதுகூட இதுவரை  ஒரு சிங்களமும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. நிலைமை அப்படி இருக்கையில் இவர்களை வடக்கிற்கு அழைப்பித்து கல்லெறியச் சொன்னால் நடக்கிற் காரியமா ? 

இவ்வளவு பிரச்சனைக்குள்ளேயும் எமது அரசியல்வாதிகளும் மக்களும் எந்த ஒரு பிரதிபலிப்பையும் வெளிக்காட்டவில்லையென்றால் அதனைப் புரிந்துகொள்ள வேண்டாமா ? 

மனதளவில் நாங்கள் பிரிந்து போனோம். இதுதான்  உண்மை. 

இதனைப் புரிந்துகொள்ளாத ஒருவர் எப்படி ஆய்வாளராக முடியும்?

தன்னை ஆய்வாளராக கூறிக்கொள்வது அவரது உரிமை. ஆனால் அவரது ஆய்வுகளில் கொஞ்சமேனும் யதார்த்தத்தை புரிந்துகொண்டதாக காட்ட வேண்டாமா ? அதுவும் இல்லையென்றால் அதுக்கு மினெக்கெட்டு பதில் எழுத முடியுமா ? 

உவர் சொல்லுறத வடக்கில போய்ச் சொன்னால், சொல்லுறவனுக்குத்தான் சனம் முதலில் கல்லெறியும். 😏

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நந்தன் said:

இங்கு தன் வருமான வீடியோவை பதிவிடுபவருக்கு நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலிட நேரம் இல்லை

பாவம்  குணா

அவர்  யாழ் இணையத்தை  இன்னும் கண்டறியவில்லை😭

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விசுகு said:

பாவம்  குணா

அவர்  யாழ் இணையத்தை  இன்னும் கண்டறியவில்லை😭

அவரது PA யாராவது இங்கே இணைக்கிறார்கள் போல 🤣

1 hour ago, Paanch said:

நல்லது! உங்களாலும் நல்ல கருத்தைத் தெரிவிக்க முடியவில்லையே.🤔

""நாட்டின், பொருளாதாரநெருக்கடிகளுக்கு.. கொரோனாவே காரணம் – சபாநாயகர்.

ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக பதவி விலகிய ஒரு வாரத்திற்குள் புதிய கட்சி கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளிநாடுட்டு ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனாவே பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.""
 
உது இந்த so called ஆய்வாளருக்குத் தெரியுமோ? 
 
1 hour ago, தமிழ் சிறி said:

ஆனால்... இப்போ வந்திருக்கின்ற  சமுதாயம்
பழைய (சிங்கள, தமிழ்) அரசியல்வாதிகள் போலல்லாது...
புதிய சிந்தனையுடன் வந்துள்ளது போல் தோன்றுகின்றது.  
 
பாணினதும் பருப்பினதும் விலை குறைந்து பெற்றொல் தாரளமாக வாங்கக் கூடிய விலைக்கு வரும் போது இந்த நல்ல சிந்தனையின் இடத்தை மகாவம்ச சிந்தனை நிரப்பிக் கொள்ளும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

@kalyani  @Kapithan @goshan_che @ரஞ்சித்  @நந்தன்@குமாரசாமி@paanch

ரஞ்சித்... இங்கு கருத்து எழுதிய பலரும், 
சிங்களவனை நம்ப ஏலாது என்ற தொனிப்படவே எழுதியுள்ளார்கள்.
அவர்களில்... நிச்சயம் தவறு உள்ளது என்று சொல்லவில்லை.
இதுவரை.. சிங்களவன் செய்த வேலைகள், அவர்களை அந்த முடிவுக்கு வர தூண்டியுள்ளது.

ஆனால்... இப்போ வந்திருக்கின்ற  சமுதாயம்
பழைய (சிங்கள, தமிழ்) அரசியல்வாதிகள் போலல்லாது...
புதிய சிந்தனையுடன் வந்துள்ளது போல் தோன்றுகின்றது.  
அவர்களுக்கு... குறைந்தது... ஒரு வருடமாவது சந்தர்ப்பம் கொடுக்காது,
உது சரிவராது என்று... ஆருடம் சொல்வது, 
எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

அதற்கு... போராட்டக் காரர்களுக்கு, சந்தர்ப்பம் கொடுப்பதுதான் முறையான செயல். 🙂

எல்லாள சோழன்…… பொன்னம்பலம் இராமநாதன் …எஸ் ஜே வி செல்வநாயகம்…..தமிழ் சிறி என்று பட்டியல் தொடர வேண்டும் என்பதுதான் விதி போலும்😆

1 hour ago, தமிழ் சிறி said:

70 வருட சிங்கள துவேச அரசியலை... 
குறுகிய காலத்தில் மாற்றுவது இலேசானது அல்ல.

2500 வருட 

  • கருத்துக்கள உறவுகள்

இது அவரின் கருத்து,இந்த போராட்டத்தை எங்களுக்கு சார்பாக திருப்ப ஏதாவது வழிகள் இருக்கின்றனவா என அனுபவம் உள்ளவர்களும் கருத்துரைக்கலாம். முடியாதது என்ற ஒன்றில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

உவர் சொல்லுறத வடக்கில போய்ச் சொன்னால், சொல்லுறவனுக்குத்தான் சனம் முதலில் கல்லெறியும்.

கபிதன் அவர்களே அவர் சொல்வதை ஏற்றுக்கொள்பவர்களும் உள்ளார்கள், விமர்ச்சிப்பவர்களும் உள்ளார்கள். ஆகவே அவர் கருத்துக்கள் முற்றிலுமே தவறானவை என்று எழுந்தமானமாகக் கூற முடியாது. சிந்திக்க வேண்டியவற்றை உள்வாங்கி ஏனையவற்றைப் புறம்தள்ளிவிடலாம்.

வடக்குச் சனம் வாக்களித்துத் தெரிவுசெய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே இன்று விமர்ச்சனத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதில் முக்கியமாக டக்ளசு தேவானந்தா, அங்கயன், சுமந்திரன் போன்றோரைத் தெரிவுசெய்த சனமும் அங்கிருக்கையில் எவர் முன்வந்து கல்லெறிவார்கள்.?? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

பாஞ், 

சாதா காக்கைக்கும் அண்டங்காக்கைக்கும் வேற்பாடு உள்ளதல்லவா ? 

பொதுசனம் எதுவும் எப்படியும் கதைக்கலாம். பின்விளைவுகள் பெரிதாக ஏதும் இராது. ஆனால் தன்னை ஆய்வாளர் என்று சொல்பவர் பாமரர் மட்டத்திற்கு கீழிறங்கி கருத்துரைக்க முடியாது. 

தமிழர் சிங்களவர் பிரச்சனை எத்தனை நூற்றாண்டு காலத்தினை வரலாறாகக் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியும். அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நம்பிக்கையீனமே இன்றைய இனப்பிரச்சனைக்கான அடிப்படை.  ஒரிரவில் இதனைத் தீர்க்க முடியுமா ? அப்படி ஒரு தீர்வை முன்வைத்தாலும் அது நின்று நிலைக்குமா ? 

இத்தனை அழிவுகள் ஆகுதிகளைக் கண்ட பின்னரும் இந்தப் பிரச்சனையை இத்தனை இலகுவாகக் கையாளலாம் என சிந்திக்கும் வஞ்சகத்தனத்தை என்ன சொல்வது ? 

யாராவது குணா கவியழகனுக்குச் " உந்த ஆர்ப்பாட்டக்காறரை ஒருக்க யாழ்ப்பாணப் பக்கம் கொண்டுவந்த என்ன ? " என்று சொல்லியிருப்பினம். அதைக் கேட்டுவிட்டு ஒரு வீடியோ போட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். 

டக்கி, அங்கஜனின் தெரிவு என்பது மிகவும் சுதந்திரமான சூழலில் தேர்தல் இடம்பெற்றால் திரும்பவும் இடம்பெறாது என்பது எனது திடமான நம்பிக்கை. 

பறட்டைக் காட்டுக்கு கறட்டை ஓணான் ராசா என்பது தமிழர் வழக்கிலுள்ள சொல்லடை. அது இவருக்கு மிகவும் நன்றாகவே பொருந்தும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

இப்போ வந்திருக்கின்ற  சமுதாயம்
பழைய (சிங்கள, தமிழ்) அரசியல்வாதிகள் போலல்லாது...
புதிய சிந்தனையுடன் வந்துள்ளது போல் தோன்றுகின்றது.  
அவர்களுக்கு... குறைந்தது... ஒரு வருடமாவது சந்தர்ப்பம் கொடுக்காது,
உது சரிவராது என்று... ஆருடம் சொல்வது, 
எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

70 வருட சிங்கள துவேச அரசியலை... 
குறுகிய காலத்தில் மாற்றுவது இலேசானது அல்ல.
அதற்க்கு முதலில்... பாராளுமன்றத்தில் உள்ள, 
225 பாராளுமன்ற உறுப்பினர்களையும்  வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
அவை எல்லாம்... படிப்படியாக செய்ய, மாற்றம் உருவாகும் என நினைக்கின்றேன்.
அதற்கு... போராட்டக் காரர்களுக்கு, சந்தர்ப்பம் கொடுப்பதுதான் முறையான செயல்.

புலம்பெயர்ந்து சனநாயக நாடுகளில் சம உரிமையுடன் வாழும் சிங்களவர்களே இனவாதத்தை கைவிட தயாரில்லை. தமிழர்களுக்கு உரிமை வழங்க சிபாரிசு செய்கிறார்கள் இல்லை. நிலைமை இப்படியிருக்கும் போது  பஞ்சத்தினால் போராட வெளிக்கிட்டவர்களிடம் எப்படி மாற்று அரசியலை எதிர்பார்க்க முடியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.