Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அல்கைடா தலைவர் ஐமான் அல் சவாஹிரியைக் கொன்றுவிட்டதாக அமெரிக்கா அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அல்கைடா தலைவர் ஐமான் அல் சவாஹிரியைக் கொன்றுவிட்டதாக அமெரிக்கா அறிவிப்பு

ஒசாமாவுக்குப் பின்னர் அல் கைடாவினை வழிநடத்திச் சென்ற அதன் தலைவர் கலாநிதி ஐமான் அல் சவாஹிரியை ட்ரோன் தாக்குதல் ஒன்றின்மூலம் கொன்றுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

நேற்று ஆப்கானிஸ்த்தான் தலைநகர்காபூலில் உள்ள மறைவிடம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் அல்கைடா தலைவர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இத்தாக்குதலை கண்டித்திருக்கும் தலிபான்கள், இது சர்வதேச நியமங்களை மீறி நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் என்றும் கூறியிருக்கிறது.

https://edition.cnn.com/2022/08/01/politics/joe-biden-counter-terrorism/index.html

  • கருத்துக்கள உறவுகள்

காபூலின் ஒரு செழிப்பான பகுதியில், ஹாக்கானிக்கு சொந்தமானதாக கருதப்படும் ஒரு பெரிய வீட்டில், மாடத்தில் (பல்கனி) நின்ற சமயம் கொல்லப்பட்டாராம். 

அதே வீட்டில் இருந்த அவரின் மனைவி, மகள், பேரப்பிள்ளைகள் ஆபத்தின்றி தப்பித்துள்ளனராம்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி ஒரு வருடத்தில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அதே வீட்டில் இருந்த அவரின் மனைவி, மகள், பேரப்பிள்ளைகள் ஆபத்தின்றி தப்பித்துள்ளனராம்.

மிகத் துல்லியமான தாக்குதல்.

  • கருத்துக்கள உறவுகள்

அய்மன் அல்-ஜவாஹிரி: ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தாக்குதலில் அல்-காய்தா தலைவர் உயிரிழப்பு - ஜோ பைடன்

  • ராபர்ட் பிளம்பர்
  • பிபிசி நியூஸ்
2 ஆகஸ்ட் 2022, 01:50 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 
ஜவாஹிரி

பட மூலாதாரம்,AFP

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சிஐஏ நடத்திய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டார்.

"அமெரிக்க மக்களுக்கு எதிரான கொலை மற்றும் வன்முறையின் தடத்தை உருவாக்கியவர்" என்று ஜவாஹிரி பற்றி பைடன் கூறியுள்ளார்.

"இப்போது நீதி வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தலைவர் இப்போது இல்லை" என்று அவர் மேலும் கூறியிருக்கிறார்.

தனது ரகசிய வீட்டின் பால்கனியில் ஜவாஹிரி இருந்தபோது அமெரிக்காவின் ஆளில்லா விமானம் இரண்டு ஏவுகணைகளை அவர் மீது வீசியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் அவருடன் இருந்த மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. ஜவாஹிரி மட்டுமே கொல்லப்பட்டார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜவாஹிரி மீதான துல்லியத் தாக்குதலுக்கு தாம் இறுதி ஒப்புதலை வழங்கியதாக பைடன் தெரிவித்துள்ளார்.

ஜவாஹிரிக்கு வயது 71. அவரும் பின்லேடனும் சேர்ந்து 9/11 தாக்குதல்களைத் திட்டமிட்டனர். 2011-ஆம் ஆண்டு ஒசாமா பின்லேடனின் மரணத்திற்குப் பிறகு ஜவாஹிரி அல்-காய்தாவின் தலைவரானார். அவர் அமெரிக்காவால் அதிகம் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவர்.

அல் ஜவாஹிரி கொல்லப்பட்டது, 2001-ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டோரின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நீதி என்று பைடன் தெரிவித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டு அக்டோபரில் ஏடனில் யுஎஸ்எஸ் கோல் கடற்படை கப்பலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 17 அமெரிக்க மாலுமிகளைக் கொன்றது உட்பட பிற பயங்கரவாதச் செயல்களிலும் ஜவாஹிரி மூளையாக செயல்பட்டதாக பைடன் கூறினார்.

"எவ்வளவு காலம் எடுத்தாலும், எங்கு மறைந்திருந்தாலும், எங்கள் மக்களுக்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருந்தால், அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து அழிக்கும்" என்று பைடன் தெரிவித்தார்.

லேடன்

பட மூலாதாரம்,REUTERS

இதனிடையே அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச விதிகளை அப்பட்டமாக மீறியிருப்பதாக தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

"இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் பிராந்தியத்தின் நலன்களுக்கு எதிரானது. 20 ஆண்டுகால தோல்வி அனுபவங்களின் மீள்முயற்சி" என்று அவர் கூறினார்.

ஆனால் இந்த நடவடிக்கைக்கு சட்டபூர்வமான அடிப்படை இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறி சுமார் ஓராண்டுக்குப் பிறகு ஜவாஹிரியின் கொலை நடந்திருக்கிறது.

அமெரிக்காவுடன் 2020-ஆம் ஆண்டு செய்து கொண்ட அமைதி உடன்பாட்டில், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அல்-காய்தா உள்ளிட்ட தீவிரவாதக் அமைப்புகளைச் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று தாலிபன்கள் ஒப்புக்கொண்டனர்.

அல்-காய்தாவின் சித்தாந்தத்தை வடிவமைத்தவர்

கொல்லப்பட்ட அய்மன் அல்-ஜவாஹிரி, அல்-காய்தாவின் தலைமை சித்தாந்தவாதி என்று அடிக்கடி குறிப்பிடப்படுபவர்.

எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுவைக் கட்டமைத்த இவர் ஒரு கண் அறுவை சிகிச்சை நிபுணர். மே 2011 இல் அமெரிக்கப் படைகளால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அல்-காய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

அதற்கு முன்பு ஜவாஹிரி பின்லேடனின் வலது கையாகக் கருதப்பட்டார். செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த "சதிகாரர்" இவர் என்று நம்பப்பட்டது.

ஜவாஹிரி 2001 ஆம் ஆண்டில் அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட 22 "அதிகம் தேடப்படும் பயங்கரவாதிகள்" பட்டியலில் பின்லேடனுக்குப் பின் இரண்டாவது இடத்தில் இருந்தார். அவரது தலைக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜவாஹிரியைக் கொல்ல அமெரிக்கா முயற்சி செய்வது இது முதல் முறையல்ல. 2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைக்கு அருகே அவர் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்கானார்.

இந்த தாக்குதலில் நான்கு அல்-காய்தா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் இந்தத் தாக்குதலில் தப்பிய ஜவாஹிரி, இரண்டு வாரங்களுக்குப் பிறகு வீடியோவில் தோன்றி அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷை எச்சரித்தார்.

மரியாதைக்குரிய குடும்பத்தில் பிறந்தவர்

எகிப்திய தலைநகர் கெய்ரோவில் 1951-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி மருத்துவர்கள் மற்றும் அறிஞர்களைக் கொண்ட மரியாதைக்குரிய நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ஜவாஹிரி.

அவரது தாத்தா, ரபியா அல்-ஜவாஹிரி, மத்திய கிழக்கின் சன்னி இஸ்லாமிய கற்றலின் மையமான அல்-அஸ்ஹரின் தலைமை இமாமாக இருந்தார். அதே நேரத்தில் அவரது மாமா ஒருவர் அரபு லீக்கின் முதல் பொதுச் செயலாளராக இருந்தார்.

ஜவாஹிரி பள்ளியில் இருந்தபோதே இஸ்லாமிய அரசியலில் ஈடுபட்டார். எகிப்தின் பழமையான, மிகப்பெரிய இஸ்லாமிய அமைப்பான முஸ்லிம் சகோதரத்துவத்தின் உறுப்பினராக இருந்ததற்காக 15 வயதில் கைது செய்யப்பட்டார்.

இருப்பினும் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் அவரால் மருத்துவம் படிக்க முடிந்தது. 1974 இல் மருத்துவப் பட்டம் பெற்றார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அறுவை சிகிச்சையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

1995 இல் இறந்த அவரது தந்தை முகமது அதே கல்லூரியில் மருந்தியல் பேராசிரியராக இருந்தார்.

அடிப்படைவாத இளமைப் பருவம்

ஜவாஹிரி ஆரம்பத்தில் குடும்ப பாரம்பரியத்தையே கடைப்பிடித்தார். கெய்ரோவின் புறநகர்ப் பகுதியில் மருத்துவமனையைக் கட்டினார். ஆனால் எகிப்திய அரசாங்கத்தை தூக்கி எறிய வேண்டும் என்று அழைப்பு விடுத்த தீவிர இஸ்லாமிய குழுக்களின் நடவடிக்கைகள் அவரை ஈர்த்தன.

எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் 1973-ஆம் ஆண்டு நிறுவப்பட்டபோது, அவர் அதில் இணைந்தார்.

1981 ஆம் ஆண்டு கெய்ரோவில் நடந்த ராணுவ அணிவகுப்பின் போது அதிபர் அன்வர் சதாத்தை சிப்பாய்கள் போல உடையணிந்த இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பினர் படுகொலை செய்தனர். இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோருடன் ஜவாஹிரியும் கைது செய்யப்பட்டார்.

இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இஸ்லாமிய ஜிஹாதிகளின் கோபத்துக்கு சதாத் ஆளானார்.

நீதிமன்ற விசாரணையின்போது ஜவாஹிரியின் வாதம், அவரை இஸ்லாமியவாதிகளின் தலைவராக அடையாளப்படுத்தியது.

சதாத்தின் படுகொலையில் அவருக்கு தொடர்பு இல்லை என விடுவிக்கப்பட்ட போதிலும், சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

அவர் எகிப்தில் சிறையில் இருந்தபோது அதிகாரிகளால் தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டார் என்று சக கைதிகள் கூறுகின்றனர். இந்த அனுபவமே அவரை ஒரு வெறித்தனமான தீவிரவாதியாக மாற்றியதாக கூறப்படுகிறது.

1985-ல் விடுதலையானதைத் தொடர்ந்து ஜவாஹிரி சௌதி அரேபியாவுக்குச் சென்றார்.

பின்னர் பாகிஸ்தானின் பெஷாவருக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் சென்றார். அங்கு அவர் சோவியத் ஆக்கிரமிப்பின் போது மருத்துவராகப் பணிபுரிந்தார். அந்தத் தருணத்தில் எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத்தின் ஒரு பிரிவை அங்கு நிறுவினார்.

1993-ஆம் ஆண்டு எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் மீண்டும் செயல்படத் தொடங்கியபோது ஜவாஹிரி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். எகிப்திய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான தாக்குதலுக்குப் பின்னணியில் ஜவாஹிரி இருந்தார்.

1990 களின் நடுப்பகுதியில் எகிப்திய அரசைக் கவிழ்த்து இஸ்லாமிய அரசை அமைப்பதற்கான அவரது அமைப்பின் தாக்குதல்களால் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஜவாஹிரிக்கு 1999-இல் எகிப்திய ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

மேற்கு நாடுகளுக்குக் குறி

ஜவாஹிரி 1990 களில் புகலிடம் மற்றும் நிதி ஆதாரங்களைத் தேடி உலகம் முழுவதும் பயணம் செய்ததாகக் கருதப்படுகிறது.

1997 ஆம் ஆண்டில், ஜவாஹிரி ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகருக்குச் சென்றதாக நம்பப்படுகிறது. அங்குதான் ஒசாமா பின்லேடன் இருந்தார்.

ஒரு வருடம் கழித்து, எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத், பின்லேடனின் அல்-காய்தா உள்ளிட்ட 5 அமைப்புகள் இணைந்து யூதர்களுக்கு எதிரான இஸ்லாமிய முன்னணி உருவாக்கப்பட்டது.

இந்தக் கூட்டமைப்பின் முதல் பிரகடனத்தில் அமெரிக்க குடிமக்களை கொல்லக் கட்டளையிடும் ஃபத்வா அடங்கும். ஆறு மாதங்களுக்குப் பிறகு கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு 223 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல்களில் பின்லேடனும் அல்-காய்தாவும் சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்தனர் என்பதற்கு சான்றாகக் கிடைத்த செயற்கைக்கோள் தொலைபேசி உரையாடல்களில் ஜவாஹிரியும் பேசியிருந்தார்.

https://www.bbc.com/tamil/global-62247425

  • கருத்துக்கள உறவுகள்

ஜவாஹிரி கொல்லப்பட்டது எப்படி? பால்கனியில் நடமாடியவரை பதுங்கியிருந்து பழிதீர்த்த அமெரிக்காவின் சிஐஏ

2 ஆகஸ்ட் 2022, 08:13 GMT
புதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர்
 
ஜவாஹிரி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை மிரட்டி வந்த அல் காய்தா இயக்கத்தின் தலைவர் அய்மன் அல்- ஜவாஹிரியை பொறுமையாகப் பதுங்கியிருந்து கொன்றிருக்கிறது சிஐஏ அமைப்பு.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிக்கும்வரை, ஜவாஹிரி பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதியிலோ அல்லது ஆப்கானிஸ்தானுக்குள்ளோ இருப்பதாகத் தகவல்கள் வந்து கொண்டே இருந்தன.

மிகவும் ரகசியமாக உலவிக் கொண்டிருந்த ஜவாஹிரி, அமெரிக்காவின் கண்காணிப்பில் சிக்கியது எப்படி? அவரை எப்படி குறிவைத்துக் கொன்றார்கள் என்பது பற்றி ஒரு அதிகாரி கூறியதாக சில தகவல்களை ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்-காய்தாவின் அனைத்து நடவடிக்கைகளையும் ஜவாஹிரி ஒருங்கிணைத்து வந்தார்.

"அவரது நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக ஒரு பயங்கரவாத நெட்வொர்க் பற்றி அமெரிக்காவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தகவல்கள் கிடைத்துக் கொண்டிருந்தன" என்று ராய்ட்டர் நிறுவனம் ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியதைத் தொடர்ந்து, நாட்டில் அல்காய்தாவின் நடமாட்டத்தை அமெரிக்க அதிகாரிகள் கவனித்து வந்தனர்.

காத்திருந்த சிஐஏ

அந்த அடிப்படையில், இந்த ஆண்டு, ஜவாஹிரியின் மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாதுகாப்பான வீட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்தனர். அதே இடத்தில் ஜவாஹிரியை அடையாளம் கண்டு உறுதி செய்துள்ளனர்.

ஆனால் உனடியாகத் தாக்குதலைத் தொடங்கிவிடவில்லை. பல மாதங்களாகக் காத்திருந்தனர் என்று ராய்ட்டர்ஸ் குறிப்பிடுகிறது.

குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் ஆள், அல் ஜவாஹிரிதான் என்பதை படிப்படியாக உறுதி செய்வதற்காக பல்வேறு உத்திகளை அமெரிக்க உளவு அதிகாரிகள் மேற்கொண்டனர். இறுதியில் அவர்தான் அந்த ஆள் என்பதை உறுதி செய்த பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில் மூத்த அதிகாரிகளுக்கு விளக்கினர்.

பின் லேடன்

பட மூலாதாரம்,REUTERS

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் அதிபர் ஜோ பைடனிடம் விளக்கியதாக ராய்ட்டர் கூறுகிறது.

இதன் பிறகு ஜவாஹிரியைக் கொல்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.

தலைக்கு 200 கோடி ரூபாய் விலை வைத்திருந்த போதும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் வீட்டின் பால்கனிக்கு வருவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம் கூறியிருக்கின்றனர்.

துல்லியமான திட்டம்

"ஜவாஹிரி இருந்த வீட்டின் கட்டுமானம் மற்றும் தன்மையை ஆராய்ந்து, அதில் வசிப்பவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டு, கட்டடத்தின் கட்டமைப்க்கு அச்சுறுத்தல் இல்லாமல், பொதுமக்கள் மற்றும் ஜவாஹிரியின் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படாத வகையில், ஜவாஹிரியை கொல்ல முடியும்" என்பதை அதிகாரிகள் உறுதி செய்ததாக ராய்ட்டர்ஸ் குறஇப்பிட்டுள்ளது.

பைடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதே நேரத்தில் துல்லியமான திட்டத்தை தேர்வு செய்வதற்கு அதிபர் ஜோ பைடன் முக்கிய அதிகாரிகளுடன் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தியிருக்கிறார். சிஐஏ தலைவர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றிருக்கின்றனர். திட்டம் குறித்து அப்போது ஜோ பைடனுக்கு விளக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டங்களின்போது, ஜவாஹிரிதான் என்பதை எப்படி உறுதி செய்தீர்கள் என்று அடுக்கடுக்கான கேள்விகளை பைடன் கேட்டதாக ராய்ட்டர்ஸிடம் பேசிய அதிகாரி குறிப்பிட்டுள்ளார். ஜவாஹிரி வசித்த வீட்டின் மாதிரி கூட்டத்துக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அதை பைடன் ஆய்வு செய்ததாகவும் ராய்ட்டஸ் கூறுகிறது.

அத்துடன் வெளிச்சம், வானிலை, வீட்டின் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்ட பொருள்கள் என தாக்குதலின் வெற்றியைப் பாதிக்கும் பிற காரணிகள் குறித்தும் பைடன் கேட்டறிந்தார் என்று அந்த அதிகாரி கூறியதாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் திட்டம் வழக்கறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டு இறுதியில் ஜவாஹிரியைக் கொல்வது விதிகளுக்கு உள்பட்டது என்று முடிவு செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

கோவிட் தொற்றுடன் பைடன்

கடைசியாக ஜவாஹிரியைக் கொல்வது தாலிபன்களுடனான உறவைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அது தொடர்பான அதிகாரிகளின் விளக்கத்துக்குப் பிறகு துல்லியான ஒரு வான் வழித் தாக்குதலுக்கு பைடன் அனுமதி வழங்கியிருக்கிறார். அது ஜூலை மாதம் 25-ஆம் தேதி. பைடனுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டிருந்த நேரம்.

காபூல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காபூல் நகரில் ஜவாஹிரி கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பகுதி

2011-ஆம் ஆண்டு ஒசாமா பின் லேடனைக் கொல்வதற்கான திட்டம் வகுக்கப்பட்ட போது துணை அதிபராக பைடன் இருந்தார். அப்போது பாகிஸ்தானுடனான உறவு எந்த அளவு பாதிக்கப்படும் என்பது குறித்து பைடன் கவலைப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது அமெரிக்க வீரர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய வேண்டியிருந்தது. ஆனால் இந்த முறை அமெரிக்க ராணுவத்தின் வீரர்கள் யாரும் ஆப்கானிஸ்தானுக்குள் நுழையவில்லை.

திட்டமிட்டபடி உள்ளூர் நேரப்பட்டி ஜூலை 30-ஆம் தேதி காலை 9.48 மணிக்கு ட்ரோனில் இருந்து ஏவப்பட்ட ஹெல்பயர் ஏவுகணை மூலம் ஜவாஹிரி கொல்லப்பட்டார் என்று அதிகாரி ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஹெல்பயர் ஏவுகணை 'வெடிக்காத' வகையைச் சேர்ந்தது என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதனால் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தைத் தவிர கட்டடத்தின் வேறு பகுதி எதுவும் சேதமடையவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மரியாதைக்குரிய குடும்பத்தில் பிறந்தவர்

எகிப்திய தலைநகர் கெய்ரோவில் 1951-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி மருத்துவர்கள் மற்றும் அறிஞர்களைக் கொண்ட மரியாதைக்குரிய நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ஜவாஹிரி.

அவரது தாத்தா, ரபியா அல்-ஜவாஹிரி, மத்திய கிழக்கின் சன்னி இஸ்லாமிய கற்றலின் மையமான அல்-அஸ்ஹரின் தலைமை இமாமாக இருந்தார். அதே நேரத்தில் அவரது மாமா ஒருவர் அரபு லீக்கின் முதல் பொதுச் செயலாளராக இருந்தார்.

ஜவாஹிரி பள்ளியில் இருந்தபோதே இஸ்லாமிய அரசியலில் ஈடுபட்டார். எகிப்தின் பழமையான, மிகப்பெரிய இஸ்லாமிய அமைப்பான முஸ்லிம் சகோதரத்துவத்தின் உறுப்பினராக இருந்ததற்காக 15 வயதில் கைது செய்யப்பட்டார்.

இருப்பினும் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் அவரால் மருத்துவம் படிக்க முடிந்தது. 1974 இல் மருத்துவப் பட்டம் பெற்றார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அறுவை சிகிச்சையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

1995 இல் இறந்த அவரது தந்தை முகமது அதே கல்லூரியில் மருந்தியல் பேராசிரியராக இருந்தார்.

அடிப்படைவாத இளமைப் பருவம்

ஜவாஹிரி ஆரம்பத்தில் குடும்ப பாரம்பரியத்தையே கடைப்பிடித்தார். கெய்ரோவின் புறநகர்ப் பகுதியில் மருத்துவமனையைக் கட்டினார். ஆனால் எகிப்திய அரசாங்கத்தை தூக்கி எறிய வேண்டும் என்று அழைப்பு விடுத்த தீவிர இஸ்லாமிய குழுக்களின் நடவடிக்கைகள் அவரை ஈர்த்தன.

எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் 1973-ஆம் ஆண்டு நிறுவப்பட்டபோது, அவர் அதில் இணைந்தார்.

ஜவாஹிரி

பட மூலாதாரம்,REUTERS

1981 ஆம் ஆண்டு கெய்ரோவில் நடந்த ராணுவ அணிவகுப்பின் போது அதிபர் அன்வர் சதாத்தை சிப்பாய்கள் போல உடையணிந்த இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பினர் படுகொலை செய்தனர். இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோருடன் ஜவாஹிரியும் கைது செய்யப்பட்டார்.

இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் இஸ்லாமிய ஜிஹாதிகளின் கோபத்துக்கு சதாத் ஆளானார்.

நீதிமன்ற விசாரணையின்போது ஜவாஹிரியின் வாதம், அவரை இஸ்லாமியவாதிகளின் தலைவராக அடையாளப்படுத்தியது.

சதாத்தின் படுகொலையில் அவருக்கு தொடர்பு இல்லை என விடுவிக்கப்பட்ட போதிலும், சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

அவர் எகிப்தில் சிறையில் இருந்தபோது அதிகாரிகளால் தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டார் என்று சக கைதிகள் கூறுகின்றனர். இந்த அனுபவமே அவரை ஒரு வெறித்தனமான தீவிரவாதியாக மாற்றியதாக கூறப்படுகிறது.

1985-ல் விடுதலையானதைத் தொடர்ந்து ஜவாஹிரி சௌதி அரேபியாவுக்குச் சென்றார்.

பின்னர் பாகிஸ்தானின் பெஷாவருக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் சென்றார். அங்கு அவர் சோவியத் ஆக்கிரமிப்பின் போது மருத்துவராகப் பணிபுரிந்தார். அந்தத் தருணத்தில் எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத்தின் ஒரு பிரிவை அங்கு நிறுவினார்.

1993-ஆம் ஆண்டு எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் மீண்டும் செயல்படத் தொடங்கியபோது ஜவாஹிரி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். எகிப்திய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான தாக்குதலுக்குப் பின்னணியில் ஜவாஹிரி இருந்தார்.

ஜவாஹிரி

பட மூலாதாரம்,GETTY IMAGES

1990 களின் நடுப்பகுதியில் எகிப்திய அரசைக் கவிழ்த்து இஸ்லாமிய அரசை அமைப்பதற்கான அவரது அமைப்பின் தாக்குதல்களால் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஜவாஹிரிக்கு 1999-இல் எகிப்திய ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

மேற்கு நாடுகளுக்குக் குறி

ஜவாஹிரி 1990 களில் புகலிடம் மற்றும் நிதி ஆதாரங்களைத் தேடி உலகம் முழுவதும் பயணம் செய்ததாகக் கருதப்படுகிறது.

1997 ஆம் ஆண்டில், ஜவாஹிரி ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகருக்குச் சென்றதாக நம்பப்படுகிறது. அங்குதான் ஒசாமா பின்லேடன் இருந்தார்.

பின் லேடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு வருடம் கழித்து, எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத், பின்லேடனின் அல்-காய்தா உள்ளிட்ட 5 அமைப்புகள் இணைந்து யூதர்களுக்கு எதிரான இஸ்லாமிய முன்னணி உருவாக்கப்பட்டது.

இந்தக் கூட்டமைப்பின் முதல் பிரகடனத்தில் அமெரிக்க குடிமக்களை கொல்லக் கட்டளையிடும் ஃபத்வா அடங்கும். ஆறு மாதங்களுக்குப் பிறகு கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு 223 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல்களில் பின்லேடனும் அல்-காய்தாவும் சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்தனர் என்பதற்கு சான்றாகக் கிடைத்த செயற்கைக்கோள் தொலைபேசி உரையாடல்களில் ஜவாஹிரியும் பேசியிருந்தார்.

அந்தத் தாக்குதல்கள் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதப் பயிற்சி முகாம்களை அமெரிக்கா குண்டுவீசித் தாக்கியது.

https://www.bbc.com/tamil/global-62390935

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத் போராளிக் குழுவைக் கட்டமைத்த இவர் ஒரு கண் அறுவை சிகிச்சை நிபுணர்.

ஆள்... கண் வைத்தியராம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

மிகத் துல்லியமான தாக்குதல்.

ஓம். அந்தளவுக்கு காபூலில் அமெரிக்க உளவாளிகள் உள்ளார்கள் என்பது தெரிகிறது.

உயிராபத்து என்பது தெரிந்த படியால் வீட்டின் மாடத்தில் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் வந்து நின்றிருக்க மாட்டார்.

மாடத்தில் அதிக நேரமும் நின்றிருக்க மாட்டார்.

ஆப்கானிஸ்தானிற்கு அருகில் அமெரிக்க தளங்கள் ஏதும் இல்லை.

டிரோன்கள் எங்கே இருந்து கிளம்பி வந்தன?

  • கருத்துக்கள உறவுகள்

https://www.news18.com/amp/news/world/us-drone-to-kill-zawahiri-used-pak-airspace-flew-from-a-middle-eastern-country-source-exclusive-5673163.html

டிரோன்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கிளம்பி, பாகிஸ்தான் முன் அனுமதி பெற்று பாக் வான்பரப்பினுடு ஆப்கானிஸ்தானில் நுழைந்ததாக கூறுகிறது இந்த இந்திய தளம்.

கோத்துவிடுவதாயும் இருக்கலாம்.

Hellfire R9X என்ற வெடிபொருள் இல்லாத ஏவுகணை இத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெறும் 18 சென்ரிமீற்றர் விட்டமுள்ள இந்த ஏவுகணை லேசர் மூலம் துல்லியமாக இலக்கினை அடைய முன் சுற்றியுள்ள 6 கூர்மையான கத்திகளை விரிக்கும். இதனாலேயே கட்டடத்துக்குப் பாதிப்புகள் இல்லை. சக்திவாய்ந்த தொழில்நுட்பம். 2017 இல் முதல் தடவையாகப் பாவிக்கப்பட்டுள்ளது

Lockheed_Martin_Longbow_Hellfire.jpg

14 minutes ago, goshan_che said:

கபூல் பாகிஸ்தான் எல்லையிலிருந்து 200 கிமீ தூரத்துக்குக் குறைவக உள்ளது. சில நிமிடங்கள் போதும் இலக்கை எட்டுவதற்கு.  ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருவதானால் குறைந்தது ஒன்றரை மணித்தியாலமாவது தேவை. அத்துடன் டிரோன் திரும்பிப் போகவும் வேண்டும்.

Quote

கடைசியாக ஜவாஹிரியைக் கொல்வது தாலிபன்களுடனான உறவைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அது தொடர்பான அதிகாரிகளின் விளக்கத்துக்குப் பிறகு துல்லியான ஒரு வான் வழித் தாக்குதலுக்கு பைடன் அனுமதி வழங்கியிருக்கிறார்.

ஒரு அடிப்படைவாத பயங்கரவாதியை கொல்வதால் இன்னொரு அடிப்படைவாத பயங்கரவாத அமைப்பு சனனாயக முறையின்றி ஏற்படுத்திய ஆட்சியுடனான உறவு பாதிக்கபடுமா என கவலை கொண்டு இருக்கின்றார் வல்லரசு ஒன்றின் சனாதிபதி.

  • கருத்துக்கள உறவுகள்

இவரை.. தலிபான் தலைவரை.. ஐ எஸ் தலைவரை எல்லாம் கொன்றுவிட்டதாக முன்னரும் அறிவிச்சவை இதே சி ஐ ஏயினர்.

இப்பவாவது சரியாச் செய்திச்சினமோ..?!

போக... ஆப்கானிஸ்தானில் எனி இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளுக்கு இடமளிக்கமாட்டம் என்ற தலிபான்களின் உறுதிமொழிக்கு என்னானது..?! இதற்காக உயிர்விட்ட அமெரிக்க.. மேற்குநாட்டுப் படைகளின் முயற்சி.. அப்ப படுதோல்வியா..??! 

மேலும் இந்தச் சம்பவம் உண்மை என்றால்.. ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அடிப்படைவாதிகளான தலிபான்களின் ஆட்சியில் இருக்கும் இந்த வேளையில்.. உலகிற்கு.. குறிப்பாக அமெரிக்காவுக்கும் மேற்குலகிற்கும் வர இருக்கும் பழிவாங்கல் நடவடிக்கைகள் தீவிரமாக இருக்க வாய்ப்பிருக்குது. அதை பைடனும் சி ஐ ஏ யும் தடுப்பினமா.. இல்ல பொதுமக்கள் உயிர் விலை கோரப்படுமா..?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா எல்லா இடமும் வெடி கொளுத்தி விளையாட சீனா தாய்வான் எல்லைக்கு தனது இராணுவத்தை அனுப்பிக்கொண்டிருக்கின்றது. நான்சிக்கு தாய்வான்லை என்ன வேலை எண்டு கேக்கிறன்? 😂

Chinesische Panzer auf den Straßen in der Provinz Fujian, jenseits der Grenze zu Taiwan

இருக்கவே இருக்கு நேட்டோ ஒருத்தரும் பயப்பிடாதேங்கோ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

கபூல் பாகிஸ்தான் எல்லையிலிருந்து 200 கிமீ தூரத்துக்குக் குறைவக உள்ளது. சில நிமிடங்கள் போதும் இலக்கை எட்டுவதற்கு.  ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருவதானால் குறைந்தது ஒன்றரை மணித்தியாலமாவது தேவை. அத்துடன் டிரோன் திரும்பிப் போகவும் வேண்டும்.

ஓம் ஆனால் பாகிஸ்தானில் இவர்களுக்கு தளம் இல்லாத போது அங்கே போய் ஏற்பாடுகளை செய்தால் விசயம் கசிந்து விட்டிருக்கும் என்று யோசிக்கிறேன்.

B52 போன்ற உருமறையும் விமானக்ங்களில் இருந்து டிரோன்களை அனுப்பி மீள எடுக்க முடியுமா?

பின் லேடன் தாக்குதல் போலன்றி இதை எப்படி செய்தார்கள் என்பது வெளிவராது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

Hellfire R9X என்ற வெடிபொருள் இல்லாத ஏவுகணை இத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெறும் 18 சென்ரிமீற்றர் விட்டமுள்ள இந்த ஏவுகணை லேசர் மூலம் துல்லியமாக இலக்கினை அடைய முன் சுற்றியுள்ள 6 கூர்மையான கத்திகளை விரிக்கும். இதனாலேயே கட்டடத்துக்குப் பாதிப்புகள் இல்லை. சக்திவாய்ந்த தொழில்நுட்பம். 2017 இல் முதல் தடவையாகப் பாவிக்கப்பட்டுள்ளது

Lockheed_Martin_Longbow_Hellfire.jpg

இந்தப் படத்தைப் பாத்ததுமே புட்டினுக்கு வயித்தை கலக்கும்.👀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ஒரு அடிப்படைவாத பயங்கரவாதியை கொல்வதால் இன்னொரு அடிப்படைவாத பயங்கரவாத அமைப்பு சனனாயக முறையின்றி ஏற்படுத்திய ஆட்சியுடனான உறவு பாதிக்கபடுமா என கவலை கொண்டு இருக்கின்றார் வல்லரசு ஒன்றின் சனாதிபதி.

பயங்கரவாதம்

ஐனநாயகம்

உறவுகள் ...

இதெல்லாம் வெறும் பித்தலாட்டம் என்று சொல்லாமல்  சொல்கிறார்?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வாலி said:

இந்தப் படத்தைப் பாத்ததுமே புட்டினுக்கு வயித்தை கலக்கும்.👀

புட்டினுக்கு... பல்கனியிலை போய் நிக்க, விசரே...  🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வாலி said:

இந்தப் படத்தைப் பாத்ததுமே புட்டினுக்கு வயித்தை கலக்கும்.👀

புட்ஸ் மைண்ட்வாய்ஸ் :

ஒரு பதினெட்டடி மேசை எடுக்கிறம்.

அதில நீலம், சிவப்பு எண்டு 90ம் ஆண்டு சின்ன பிள்ளையள்ட விளையாட்டு சாமனில வாற ரெண்டு பொத்தானை பொருத்துறம்.

படம் எடுத்து போடுறம்.

நாம ஒண்டும் நமுத்து போன பிஸ்கெட் இல்லை எண்டு காட்டுறம்🤣.

ஆங்!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

புட்ஸ் மைண்ட்வாய்ஸ் :

ஒரு பதினெட்டடி மேசை எடுக்கிறம்.

அதில நீலம், சிவப்பு எண்டு 90ம் ஆண்டு சின்ன பிள்ளையள்ட விளையாட்டு சாமனில வாற ரெண்டு பொத்தானை பொருத்துறம்.

படம் எடுத்து போடுறம்.

நாம ஒண்டும் நமுத்து போன பிஸ்கெட் இல்லை எண்டு காட்டுறம்🤣.

ஆங்!

ஏனப்பா ஏன்???🤣

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, வாலி said:

இந்தப் படத்தைப் பாத்ததுமே புட்டினுக்கு வயித்தை கலக்கும்.👀

உண்மையிலே ஆப்கானிஸ்தானே அமெரிக்காவுக்கு கூடிப்போச்சு. ரூமேனியாவிலை வேலிக்கரையிலை பதுங்கி நிற்கினமாம். 🤣 பாவம்  யூக்ரேனியன்.

பழைய ஆயுதமோ புது ஆயுர்கமோ 30 நாடுகளுக்கும் தண்ணி காட்டுறதுக்கு ஒரு கெத்து வேணும்.

27 minutes ago, தமிழ் சிறி said:

புட்டினுக்கு... பல்கனியிலை போய் நிக்க, விசரே...  🤣

அது தானே.  மிதிவண்டி ஓடத்தெரியும் என்று ஒடி  விழுந்து காட்டிறமே.🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

உண்மையிலே ஆப்கானிஸ்தானே அமெரிக்காவுக்கு கூடிப்போச்சு. ரூமேனியாவிலை வேலிக்கரையிலை பதுங்கி நிற்கினமாம். 🤣 பாவம்  யூக்ரேனியன்.

பழைய ஆயுதமோ புது ஆயுர்கமோ 30 நாடுகளுக்கும் தண்ணி காட்டுறதுக்கு ஒரு கெத்து வேணும்.

அது தானே.  மிதிவண்டி ஓடத்தெரியும் என்று ஒடி  விழுந்து காட்டிறமே.🤣🤣

ஏனப்பா ஏன்???🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

உண்மையிலே ஆப்கானிஸ்தானே அமெரிக்காவுக்கு கூடிப்போச்சு. ரூமேனியாவிலை வேலிக்கரையிலை பதுங்கி நிற்கினமாம். 🤣 பாவம்  யூக்ரேனியன்.

பழைய ஆயுதமோ புது ஆயுர்கமோ 30 நாடுகளுக்கும் தண்ணி காட்டுறதுக்கு ஒரு கெத்து வேணும்.

அது தானே.  மிதிவண்டி ஓடத்தெரியும் என்று ஒடி  விழுந்து காட்டிறமே.🤣🤣

Joe Biden stürzt mit Fahrrad am Hochzeitstag im US-Bundesstaat Delaware

US-Präsident Joe Biden stürzt vom Fahrrad: "Wildes Durcheinander"

US-Präsident gestürzt – allerdings mit dem Fahrrad | Exxpress

ஏலாட்டி... சிவனே எண்டு இருக்குகிறதை விட்டுட்டு...
சைக்கிள் ஓடி, விழுந்து  காட்டினதாலை உலகமே சிரிக்குது.
நல்லகாலம்  பல்லு,   தப்பினது... தம்பிரான் புண்ணியம். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

Joe Biden stürzt mit Fahrrad am Hochzeitstag im US-Bundesstaat Delaware

US-Präsident Joe Biden stürzt vom Fahrrad: "Wildes Durcheinander"

US-Präsident gestürzt – allerdings mit dem Fahrrad | Exxpress

ஏலாட்டி... சிவனே எண்டு இருக்குகிறதை விட்டுட்டு...
சைக்கிள் ஓடி, விழுந்து  காட்டினதாலை உலகமே சிரிக்குது.
நல்லகாலம்  பல்லு,   தப்பினது... தம்பிரான் புண்ணியம். 😂

ஏன் ராசா  ஏன்??😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.