Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாடசாலை மாணவர்களும்.... பகுதி நேரமாக, வேலை செய்யலாம் : புதிய சட்டத்தை கொண்டு வருகின்றது அரசாங்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை மாணவர்களும் பகுதிநேரமாக வேலை செய்யலாம் : புதிய சட்டத்தை கொண்டுவருகின்றது அரசாங்கம்

பாடசாலை மாணவர்களும்.... பகுதி நேரமாக, வேலை செய்யலாம் : புதிய சட்டத்தை கொண்டு வருகின்றது அரசாங்கம்.

பதினாறு வயது முதல் இருபது வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிற்துறை அமைச்சு தயாராகி வருகிறது.

அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள் வேலை செய்யும் சூழலுக்குப் பழக்கப்படுத்தப்படாததால் தொழிற்துறையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மாதத்திற்கு இருபது மணிநேரம் பகுதி நேர வேலைகளைச் செய்யலாம் என்றும் அந்தச் சேவைக் காலத்திற்கு தனியார் நிறுவனங்களும் ஊதியம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

புதிய சட்ட திருத்தத்தின்படி, பாடசாலை மாணவர்களும் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என்றாலும் நிரந்தர வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடாது என்றும் முறையான பயிற்சி கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஆபத்தான வேலை வாய்ப்புகள் எழுபத்தி இரண்டு இருப்பதாகவும், அவற்றில் பணிபுரிய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாதுஎன்றும் தொழிற்துறை அமைச்சு கூறியுள்ளது.

பகுதி நேர வேலைவாய்ப்பில், இ.பி.எஃப். மற்றும் ETF செலுத்தும் போது பிரச்னை ஏற்படுவதால், அதற்கான விதிகளிலும் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

https://athavannews.com/2022/1294109

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. இந்த ஊதியம் வங்கியில் டிஜிற்றல் கரன்சியாக சேமிக்கப்படுவதோடு.. தவறான வழியில் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் பண அட்டை மூலம் மட்டும் பணப்பரிமாற்றம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். பணத்தாளாக வழங்குவதாயின் செலவின் அத்தாட்சி உறுதிப்படுத்தும் பெற்றோரின் அல்லது பாதுகாவலரின் கடிதம் பெறப்பட வேண்டும். 

இதன் மூலம் தவறான வழியில் இந்த வருமானம் செலவு செய்யப்படுவதும் தவறான பழக்க வழக்கங்கள் ஊக்குவிக்கப்படுவதும் குறையும். மாணவர்கள் வருமானம் அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் உதவுவதோடு அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்தும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வேலை இருக்கிறவன் நாளாந்தம் வேலை இழந்து வாழ வழியில்லாமல் வீதிக்கு வாறான் இதில பாடசாலை மாணவருக்கு வேலை வாய்ப்பாம். புதுசு புதுசாய் 
பொய், புரட்டு, புழுகு  எதையாவது அவிழ்த்து விட வேண்டியதுதான்!

  • கருத்துக்கள உறவுகள்

மாணவப் பருவத்திலேயே வேலை செய்யப் பழக்குவது நல்ல விடையம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

நல்ல முயற்சி. இந்த ஊதியம் வங்கியில் டிஜிற்றல் கரன்சியாக சேமிக்கப்படுவதோடு.. தவறான வழியில் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் பண அட்டை மூலம் மட்டும் பணப்பரிமாற்றம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். பணத்தாளாக வழங்குவதாயின் செலவின் அத்தாட்சி உறுதிப்படுத்தும் பெற்றோரின் அல்லது பாதுகாவலரின் கடிதம் பெறப்பட வேண்டும். 

இதன் மூலம் தவறான வழியில் இந்த வருமானம் செலவு செய்யப்படுவதும் தவறான பழக்க வழக்கங்கள் ஊக்குவிக்கப்படுவதும் குறையும். மாணவர்கள் வருமானம் அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் உதவுவதோடு அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்தும். 

பதினாறு வயது தொடக்கம் தொழில் அனுபவம் பெறுவது நல்ல விடயம். ஆனால், நீங்கள் சொல்வது போன்ற கட்டுப்பாடுகள் தேவை அற்றது. இங்கு வெளிநாடுகளில் இளையவர்களுக்கு அப்படி கட்டுப்பாடு இல்லையே. தமது உழைப்பை தாம் விரும்பியபடி செலவளிப்பது அவரவர் விருப்பம். நல்லது, கெட்டதை அவர்கள் தாமாக உணர்வார்கள். 

1 hour ago, satan said:

வேலை இருக்கிறவன் நாளாந்தம் வேலை இழந்து வாழ வழியில்லாமல் வீதிக்கு வாறான் இதில பாடசாலை மாணவருக்கு வேலை வாய்ப்பாம். புதுசு புதுசாய் 
பொய், புரட்டு, புழுகு  எதையாவது அவிழ்த்து விட வேண்டியதுதான்!

எல்லாரும் உடம்பு நோகாமல் வேலை செய்வது என்றால் நாடு எங்கே போகும்?

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் வேலை செய்யக்கூடாது என்று நான் எங்கும்  சொல்லவில்லை. நான் படிக்கும்போது வேலை செய்தே படித்தேன். நான் சொன்னது; வேலை இருக்கிறவனே ஊதியம் கொடுக்க வழியில்லாமல், வாழ்க்கை செலவை தாங்க முடியாமல் வீதியில் இறங்கி போராடி அடக்கப்படுகிறான், இதில மாணவருக்கு வேலை என்று புலுடா காட்டி மக்களை ஏமாற்றுகிற தந்திரம்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/8/2022 at 06:43, தமிழ் சிறி said:

பாடசாலை மாணவர்களும்.... பகுதி நேரமாக, வேலை செய்யலாம் : புதிய சட்டத்தை கொண்டு வருகின்றது அரசாங்கம்.

அப்ப ரியூசனுக்கு எப்ப எத்தினை மணிக்கு போறது? 😎

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2022 at 17:08, சுவைப்பிரியன் said:

மாணவப் பருவத்திலேயே வேலை செய்யப் பழக்குவது நல்ல விடையம்.

சீமேந்து வாளி,வேளாண்மை வெட்டி பள்ளிக்கு சென்றது நான். வாத்தியார் கேட்டதும் குடும்ப வறுமையை சொல்லாமல் ஏச்சு வாங்கியது நியாபகம் வருது .இப்ப வேலையில் லீவு போடவேண்டியதாக உள்ளது இலங்கை நிலை யாவரும் அறிந்ததே

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 18 வயதிற்கு கீழே உள்ளவர்களை பணிக்கு அமர்த்துவது குற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2022 at 13:45, நியாயத்தை கதைப்போம் said:

இங்கு வெளிநாடுகளில் இளையவர்களுக்கு அப்படி கட்டுப்பாடு இல்லையே. தமது உழைப்பை தாம் விரும்பியபடி செலவளிப்பது அவரவர் விருப்பம். நல்லது, கெட்டதை அவர்கள் தாமாக உணர்வார்கள். 

அதனால் தான் பதின்ம வயதுக் கத்திக்குத்துகளும்.. துப்பாக்கிச் சூடுகளும்.. பாலியல் துர்நடத்தைகளும்.. போதைவஸ்துப் பாவனையும்.. சண்டித்தனமும் நிறைஞ்சு கிடக்கு வெளிநாடுகளில். அதை இலங்கையிலும் முற்றாக நிறுவாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஏனெனில் பணக்கார நாடுகளே பல வழிகளில் முயன்றும் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. 

எனவே ஆரம்பப் புள்ளியில் சரியான நடைமுறையையும் கண்காணிப்பையும் முன்வைத்தால்.. இறுதிப் புள்ளி ஒழுங்காக அமையும். 

  • கருத்துக்கள உறவுகள்

On 9/8/2022 at 05:43, தமிழ் சிறி said:

இந்த வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மாதத்திற்கு இருபது மணிநேரம் பகுதி நேர வேலைகளைச் செய்யலாம் என்றும் அந்தச் சேவைக் காலத்திற்கு தனியார் நிறுவனங்களும் ஊதியம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

யோவ் இதென்னையா கூத்தா இருக்கு?

கட்டாய கல்வி 16 வரைக்கும்தானே?

16-18 ஒரு கிழமைக்கு 40 மணத்தியாலம்.

18 வயதுக்கு மேல் என்றால் ஏனைய வயது வந்தவர்கள் போல் விரும்பினால் முழு நேரமும் உழைக்கலாம் என்றல்லவா சட்டம் திருத்தப்பட வேண்டும் ?

20 வயது எருமைமாடு வாரம் 20 மணத்தியாலம்தான் சட்டபடி வேலை செய்யலாம் எண்டால் - நாடு ஏன் நாசமாய் போகாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

20 வயது எருமைமாடு வாரம் 20 மணத்தியாலம்தான் சட்டபடி வேலை செய்யலாம் எண்டால் - நாடு ஏன் நாசமாய் போகாது.

சிலோனிலை… பல்லு முளைச்சு, பால் பல்லு விழும் மட்டும்,
தாய்ப்பால் குடித்த ஆக்களும் இருக்கும் போது… 20 வயசு, சின்ன வயசு தானே. 😂

துருக்கியிலை… 20 வயசிலை, 2 பிள்ளைக்கு தகப்பனாக இருப்பார்கள்.
நம்ம நாட்டிலை, 30 வயசிலைதான்… சாதகத்தை தூசி தட்டி எடுப்பார்கள். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

சிலோனிலை… பல்லு முளைச்சு, பால் பல்லு விழும் மட்டும்,
தாய்ப்பால் குடித்த ஆக்களும் இருக்கும் போது… 20 வயசு, சின்ன வயசு தானே. 😂

துருக்கியிலை… 20 வயசிலை, 2 பிள்ளைக்கு தகப்பனாக இருப்பார்கள்.
நம்ம நாட்டிலை, 30 வயசிலைதான்… சாதகத்தை தூசி தட்டி எடுப்பார்கள். 🤣

உண்மைதான். ஆனாலும் 20 வயதில் சிறுவராக கருதுவது ரொம்ப ஓவர்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, தமிழ் சிறி said:

சிலோனிலை… பல்லு முளைச்சு, பால் பல்லு விழும் மட்டும்,
தாய்ப்பால் குடித்த ஆக்களும் இருக்கும் போது… 20 வயசு, சின்ன வயசு தானே. 😂

எப்பிடியெண்டாலும் தாய் தேப்பனுக்கு பிள்ளைதானே. கிழட்டு புருசனுக்கு மனிசி தீத்தி விடுற வீடுகள் இப்பவும் இருக்கெல்லோ? 😁
 
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

உண்மைதான். ஆனாலும் 20 வயதில் சிறுவராக கருதுவது ரொம்ப ஓவர்🤣

இங்கை nhs மாதிரி இலங்கையில இலவச கல்வியில் அனாவசிய செலவு அதிகம்.

இங்கு.... 16 வயது வரை கட்டாய கல்வி.... வகுப்பிறக்கம் கிடையாது. gcse ஒருக்கத்தான் எடுக்கலாம். மீண்டும் அதே பாடசாலையில் எடுக்க முடியாது. அது போலதான் a/l ம்.

சோதனை ஆனியில் எழுதி, மறுமொழி, ஆவணியில். புரட்டாதியில் பல்கலை கழகம் போடுவினம்.

அங்கை, வகுப்பிறக்கம், o/l, a/l அதே பள்ளியில் மீண்டும் எடுக்கலாம். எனக்கு தெரிந்த பலர், மூன்றாம் தடவையும் வெளியில இருந்து எடுத்து பல்கலை போயிருக்கினம்.

a/l சோதனைக்கும், பல்கலைக்கழகம் போவதுக்கும் இடைவெளி, ஒருவருசம்... (இப்பவும் இதுதான் கதை என்றே நினைக்கிறேன்).

ஆக 20 வயது.... பள்ளிக்கூடம் போற வயசு தானே. ஆற, அமர 30க்கு மேல கலியாணம்....

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

ஓம் ஆனால்…

நாட்டின் உற்பத்தியை, மனித வலுவை கூட்ட வேணும் எண்டால் 16 வயதில் தொழில்சார் கல்வியை, அல்லது தொழிலை கற்றுகொடுக்கும் apprentice ஆக சேரும் நடைமுறைகளை சொல்லி கொடுக்க வேண்டும்.  

ஆனால் சட்டமோ 20 வயது வரை 20 மணத்தியாலம் என்கிறது. 

என்னை கேட்டால் 97 பிளேயர் கவர்மெண்ட்டுடன் இங்கேயும் கூட தேவையில்லாமல் அநேகம் பேரை பல்கலைகழகம் அனுப்பும் நடைமுறை வந்து விட்டது. அவர்கள் business computing, travel management, history of modern art எண்டு micky mouse degree களை செய்துவிட்டு மாணவர் கடனில் தவிக்கிறார்கள்.

90 களுக்கு முன்பெல்லாம் இங்கே universities, technical colleges, further education colleges என பகுப்புகள் இருந்தது. இதில் பல  தொழில்நுட்ப கல்லூரிகளை இப்போ யூனிவர்சிட்டி என்றாக்கி விட்டார்கள். 

ஆனால் ஜேர்மனியில் தொழில் கல்விக்கும், வேலையில் வளர்தெடுக்கும் தொழில் தகமைக்கும் இன்றும் நல்ல மதிப்பு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சிலோனிலை… பல்லு முளைச்சு, பால் பல்லு விழும் மட்டும்,
தாய்ப்பால் குடித்த ஆக்களும் இருக்கும் போது

3 hours ago, குமாரசாமி said:

கிழட்டு புருசனுக்கு மனிசி தீத்தி விடுற வீடுகள் இப்பவும் இருக்கெல்லோ? 😁

ரொம்பத்தான் வயிறு எரியுதோ? வயது சென்றால் அவர்களும் குழந்தைதான், குழந்தைகளைபோற்தான் ற் பராமரிக்க வேண்டும். பாத்து ......  பிறகு உங்களை மனுசிக்காரி திரும்பியும் பாக்க மாட்டா வயசான காலத்தில! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, satan said:

ரொம்பத்தான் வயிறு எரியுதோ? வயது சென்றால் அவர்களும் குழந்தைதான், குழந்தைகளைபோற்தான் ற் பராமரிக்க வேண்டும். பாத்து ......  பிறகு உங்களை மனுசிக்காரி திரும்பியும் பாக்க மாட்டா வயசான காலத்தில! 

நான் ஏன் வயிறு எரிய வேணும்? 
வேலை செய்யிற இடத்திலையே எனக்கு கன்னிராசி வேலை செய்யுது. 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

நான் ஏன் வயிறு எரிய வேணும்? 
வேலை செய்யிற இடத்திலையே எனக்கு கன்னிராசி வேலை செய்யுது. 

வீட்டுக்காரிக்கு தெரியுமோ என்னோ? இந்த விஷயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, satan said:

வீட்டுக்காரிக்கு தெரியுமோ என்னோ? இந்த விஷயம்.

என்னட்ட சிவாஜி கணேசன் பிச்சை வாங்கோணும்...

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

என்னட்ட சிவாஜி கணேசன் பிச்சை வாங்கோணும்...

உது ரொம்பத்தப்பு!  பிறகு கோத்தாப்போல பிறந்த நாடும் இல்லாமல், குடியுரிமை பெற்ற நாடும் இல்லாமல் அலையோணும்,  வயதும், உடலும்  இடந்தராது அப்போது!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இங்கை nhs மாதிரி இலங்கையில இலவச கல்வியில் அனாவசிய செலவு அதிகம்.

எம்மை அழித்தவர்கள் இந்த நாடு நாசமாபோகனும் அது எப்படி என்றாலும் நல்லதுவே .

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

இலங்கையில இலவச கல்வியில் அனாவசிய செலவு அதிகம்.

இலங்கை போன்ற நாடுகளுக்கு கட்டாயம் இலவசக் கல்வி O/L வரையாவது அவசியம். ஏற்கனவே படிப்பை பாதியில் நிறுத்துபவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.  இந்த COVID மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாடசாலைக்கு போக முடியாமல் கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள்.. நிலமை அப்படியிருக்க இலவசக் கல்வி முறையையும் நிறுத்திவிட்டால் பாதிக்கப்படப்போவது கஷ்டப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிய அநேகமான நாடுகளில் 12ம் தரம் வரைக்கும் இலவச கல்வியாகவே இருக்கின்றது.

கொழுப்பெடுத்த பெற்றோர்  தங்கள் பிள்ளைகளை தனியார் கல்லூரிகளில் விட்டு  பாடம் சொல்லிக்கொடுப்பது வேறு விடயம்.😎

  • கருத்துக்கள உறவுகள்

பணம் இருக்கிறதோ இல்லையோ இலவச கல்வி அடிப்படையானது.
கொழுப்பு எடுத்த பெற்றோர்  தங்கள் அந்தஸ்தில் உயர்வு என்று காட்டுவதற்காக பணம் கொடுத்து பிள்ளையை தனியார் பாடசாலைக்கு படிக்க அனுப்புவது 🤦‍♂️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.