Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

அவர்கள் காசு அல்லது அவர்கள் உறவினர் அனுப்பிய காசில் இந்த விழாவை எடுத்திருக்கின்றார்கள். உலகத்தில் எந்தவொரு பெண்ணுக்கும் நிகழாத அற்புதமான பூப்பு இப் பெண்பிள்ளைக்கு நிகழ்ந்திருக்கின்றது. எனவே ஊரைக்கூட்டி கொடி, குடை, ஆலவட்டம், சாமரம், விசிறி எல்லாம் பிடித்து தம்பட்டம் அடிப்பதில் என்ன தவறு இருந்துவிடப் போகின்றது? இதில் எமக்கு ஏன் வயிறு எரிகின்றது?

இங்க கனடாவில நாங்கள் போகாத வக்கேசனா? கொலிடேயா? செய்யாத பார்ட்டிகளா?

அதுவும் ஆன்டிமார் இனி எப்ப சிறிலங்கா போறது, இந்த சந்தர்ப்பத்தில போனால் போனதுதான் இதுதான் சிறிலங்காவுக்கு போற கடைசி எண்டு “புல்டா போண்டா கஞ்சா கப்ஸா” விடுவினம்.

அவரவர் தத்தமது ஸ்டேட்டஸுக்கு ஏற்ப செலவு செய்யினம், ஏனென்றால் அவர்கள் அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். இதில் நான் மேலதிகமாக சொல்ல வேற என்ன இருக்கு?!

இங்க கனடாவில நாங்கள் போகாத வக்கேசனா? கொலிடேயா? செய்யாத பார்ட்டிகளா?🤠

  • Replies 118
  • Views 8.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற நிகழ்வுகள் ஜனாதிபதியின் வேண்டுதலுக்கு அமைவான புலம்பெயர்ந்த தமிழர்கள் தாய் நாட்டில் போடும் முதலீடு, அன்னிய செலாவணியை நாட்டுக்குள் கொண்டுவர எமது மக்களின்  பங்களிப்பு. தென்னிலங்கை தொழிலார்களுக்கு வடக்கில் வேலை வாய்ப்பு போன்ற திட்டங்களை நிறைவேற்றத்தான் உதவும்.

இருந்தாலும் கூட நாங்கள் புலம்பெயர் தேசத்திற்கு வந்து கஷ்டப்பட்டு உழைத்து நீண்ட காலம் வாழ்ந்தபின்னர் தான் எமது மக்கள் இன்று தாய் நாட்டில் வாழும் விதத்தை பார்த்து குறைசொல்லும் நிலைக்கு வந்திருக்கிறோம். நாங்களும் இன்று அங்கிருந்தால் இப்படிதான் வாழ்ந்துகொண்டிருப்போமோ  தெரியாது. இதை தட்டிகேட்ட உத்தமர்கள் கூட மண்ணோடு மண்ணாகி விட்டார்கள் அல்லது மெளனித்து விட்டார்கள்.

மறுபுறம் பார்த்தால் இதுபோன்ற உதவாக்கரை செயல்களை இணையத்தில் பதிவிட்டு விவாதித்து  நாங்கள் அவர்களுக்கு இலவச விளம்பரம் தேடிக் கொடுக்கிறோம். திருமண வீட்டு நிகழ்வுகளில் ஊர்வலம் போவார்கள் ஆனால் இது போன்ற சடங்குகளிலுமா யானை, தேர், இசை, நடனம் போட்டுக்கொண்டு  ஊர்வலம் போவார்கள். ஒன்றும் அறியாத குழந்தை பெற்றோர்களே அதை பிரச்சனைகளில் இழுத்துவிடுகிறார்கள். அறிவுபூர்வமாக சிந்திக்க முடியாத சமுதாயமாக மாறிக்கொண்டிருக்கும் எமது இனம். 
சரி செய்தது தான் செய்தார் எமது பாரம்பரிய நடனத்துக்கும் நாதஸ்வரம் தவில் இசைக்கும் என்ன குறை? 

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் எமது திருமண நாளுக்கு  மகள் ஒரு மலர்க்கொத்து வாங்கியிருந்தாள்  , பதினைந்து டாலர் , சந்தோசமான விடயம் , ஆயினும் இது அவசியமான செலவு தானா என்று மனதுக்குள் ஒரு அங்கலாய்ப்பு.

 ஒரு கிழமைக்கு முன்னர் மீண்டும் ஒரு அழகான ரோஜக் கொத்து , மலிவாகக் கிடைத்ததாம் பனிரெண்டு டொலருக்கு 10 பூக்கள் ஒரு கிழமைக்கு மேல்  வாடாமல் இருக்கிறது , ஒவ்வொரு தடவையும் அதனை கடந்து செல்லும் போது  மனதுக்கு இனம் புரியாத ஒரு மகிழ்வு தான் , ஆயினும் நான் என்றால் காசு கொடுத்து ஒருநாளும் வாங்கியிருக்க மாட்டேன்.

 முன்னர் Brunei யில் இருந்த சமயம் , வீட்டு வேலைகளுக்கு உதவியாக என்று இலங்கையில்  இருந்தது ஒரு பெண்ணை அழைத்து வைத்திருந்தோம் , அங்கே இதற்கான வேலையாள் விசா எடுப்பது வெகு சுலபம்.

 ஒருநாள் கடைக்கு போன நேரம் அவள் ஒரு பிறந்தநாள் கார்டு வாங்கினாள் ஆறோ ,  ஏழு டொலருக்கு , நாங்கள் என்றால் ஓரிரு டொலருக்கு மேல் வாங்குவதில்லை.

 என் காசைக் கரியாக்குகிறாய் எண்டு கேட்டதிற்கு , இங்க வெளியில வந்த பிறகு இதெல்லாம் பார்க்க ஏலாது எண்டு சொன்னாள்.

 கோடு இழுத்தல் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி , தள்ளி நின்று ரசிக்க வேண்டியது தான்….

6 minutes ago, vanangaamudi said:

சரி செய்தது தான் செய்தார் எமது பாரம்பரிய நடனத்துக்கும் நாதஸ்வரம் தவில் இசைக்கும் என்ன குறை? 

இதே கேள்வியை இன்னொரு குரூப்பில் யாரோ கேட்க , மலபார்காரருக்கு பழைய ஞாபகம் வந்துடுத்து போல எண்டும் ஒரு பதில் வந்தது ...

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சொல்வதற்கு என்ன இருக்கு, அவரவர் வசதிக்கு ஏற்ப செய்கிறார்கள்..... இதில் இரண்டுவகை இருக்கு......!

1) மேலே செய்வதுபோல் மிகவும் ஆடம்பரமாக செய்வது.......!

2) இங்கு சிம்பிளாய் செய்யவும்  மிக குறைந்தது 15ல் இருந்து 20 ஆயிரம் ஈரோவரை வேண்டும்.....( ஹாலுக்கு , இப்ப மெஹந்தி, எல்லோருக்கும் ஒப்பனைகள், ஹால் அலங்காரங்கள், பெண்ணை அழைத்துவரும் தேவதைகள்/தேவர்களுக்கு ஒரேமாதிரி உடுப்புகள், இத்யாதி....) ஆனால் நாட்டில் குறைந்த செலவில் செய்யலாம் என்று செய்ப்பவர்களும் உண்டு.....!

எனது நண்பர் ஒருவர் சமீபத்தில்  5000 ஈரோக்குள் அங்கு மிகவும் தடபுடலாக சாமத்திய சடங்கு செய்து முடித்திருந்தார்......(உறவினர்கள் எல்லோருக்கும் உடுப்புகள் எல்லாம் வாங்கிக் குடுத்து).......!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

அப்படியே.. சோழரின் யானைப்படையையும் பாண்டியரின் குதிரைப்படையையும் இழுத்து வந்துள்ளனர். மூவேந்தர்களும் கூடிக் குதூகலிக்கிறார்கள்.

இதற்கு பட்டகடன் எத்தனையோ யார் அறிவார். எந்த கிரடிட் காட் கொம்பனி கோல் பண்ணிக் கொண்டிருக்கோ...??! எந்த வங்கி கடனைக் கொடுத்திட்டு முழியப் போகுதோ..??!

Lycamobile has not paid any corporation tax for several years in the United Kingdom though the company put aside £9.5 million to cover "a potential liability of unpaid taxes" including "interest and penalties" in its 2015 accounts. Lycamobile's 2015 accounts were filed seven months late, appearing after Companies House threatened to strike Lycamobile off; such an action would have prevented the company from conducting business in the UK.[47] Lycamobile had previously been threatened with being struck off in 2012; its accounts were filed two years late that year.[48] Some suggest it is because Lycamobile is a significant donor to the British Conservative Party, having donated £1.3 million since 2011, including £500,000 in 2015.[47] They also donated use of a call centre to Boris Johnson during his 2012 London mayoral election campaign.[49]

இவர்களின் ஐரோப்பிய இளவரசரே இந்த நிலையில்.. இருக்கிறார். 🤣

வெறும் பகட்டு மட்டுமே வாழ்வதன் நோக்கம் என்றாகி போன மனிதர்கள்.

ஐரோப்பிய இளவரசர் இதன் அடுத்த படி நிலை.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

லைக்கா முனாவின் அம்மாவின் 75 வது பிறந்தநாள், லண்டன் உலகப்புகழ் மிக்க O2 மண்டபம் எடுக்கப்பட்டு, £250,000 செலவில் பல ஆயிரம் விருந்தினர்களுடன் நடந்தேறியது.

பல்லு இருப்பவன் பாக்கு சப்புறான் எண்டு சொல்லிப்போட்டு போகவேண்டியது தான்.

ஒரு யூகே வரியிறுப்பாளனாக திறைசேரிக்கு கடன் வைத்து விட்டு செய்யபட்ட இந்த நிகழ்வு - என் செலவில்(உம்) செய்யப்பட்டதே🤣.

பாக்கு போடலாம் தப்பில்லை, அடுத்தவன் பல்லை பாவிக்க கூடாது🤣.

11 hours ago, Kapithan said:

மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி பாட்டுக்கு கதகளி ஆடியிருப்பினமோ ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஒரு யூகே வரியிறுப்பாளனாக திறைசேரிக்கு கடன் வைத்து விட்டு செய்யபட்ட இந்த நிகழ்வு - என் செலவில்(உம்) செய்யப்பட்டதே🤣.

பெனிபிட் ஆபிசுக்கு இந்த விசயம் தெரியுமோ எண்டு, குமாரசாமியார் காதுக்கை குசுகுசுக்கிறார்? 😜😁 

திறைசேரி, வாங்கும்... விடும்... அவர் போரிசறுக்கு ஒரு மில்லியன் கொடுத்த கதை தெரியும் தானே.... 🤗

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, suvy said:

இதில் சொல்வதற்கு என்ன இருக்கு, அவரவர் வசதிக்கு ஏற்ப செய்கிறார்கள்..... இதில் இரண்டுவகை இருக்கு......!

பண வசதிகள் எங்கிருந்து போகின்றதோ.....அங்கிருந்தே அந்த ஆடம்பர கூத்துக்களையும் எடுத்துக்கொள்கின்றார்கள்.ஆடம்பரங்கள் அவரவர் தனிப்பட்ட விடயம், அது நான்கு சுவருக்குள் நடந்தால் நன்று. அதை வீதிக்கு இழுத்து வந்தால் நிச்சயம் கல்லடிபடும்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

பெனிபிட் ஆபிசுக்கு இந்த விசயம் தெரியுமோ எண்டு, குமாரசாமியார் காதுக்கை குசுகுசுக்கிறார்? 😜😁 

திறைசேரி, வாங்கும்... விடும்... அவர் போரிசறுக்கு ஒரு மில்லியன் கொடுத்த கதை தெரியும் தானே.... 🤗

வரியிறுபாளன் எண்ட படியால்தான் என்ர காசு உம் விகுதி சேர்த்தது.

சோசல் காசில இருப்பதெண்டால் அது முழுக்க முழுக்க எண்ட காசுதான்🤣.

அது சரி லைக்காவை பற்றி குறை சொன்னால், சுபாசுக்கு நோகுதோ இல்லையோ நாதத்துக்கு நோகும் எண்டது தெரியும்😜.

23 minutes ago, குமாரசாமி said:

அது நான்கு சுவருக்குள் நடந்தால் நன்று. அதை வீதிக்கு இழுத்து வந்தால் நிச்சயம் கல்லடிபடும்

அது.

எத்தனையோ பேர் நாளைக்கு பத்தாயிரம் பசுண்ட்ஸ் கட்டி கோட்டலில் எல்லாம் நிற்கிறார்கள். அதை யாரும் கேட்பதில்லைதானே.

ஆனால் அதை ஒரு விழாவாக எடுத்து அதையும் தாங்களே ஊடகங்களில் பிரபல்ய படுத்தும் போது, நாலு பேர் நாலு மாதிரி கதைக்கத்தான் செய்வார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

அது சரி லைக்காவை பற்றி குறை சொன்னால், சுபாசுக்கு நோகுதோ இல்லையோ நாதத்துக்கு நோகும் எண்டது தெரியும்😜.

ஏன் நாதத்தார் லைக்கா ரெலிபோன் காட் விக்கிறவரே? 😁

5 minutes ago, goshan_che said:

எத்தனையோ பேர் நாளைக்கு பத்தாயிரம் பசுண்ட்ஸ் கட்டி கோட்டலில் எல்லாம் நிற்கிறார்கள். அதை யாரும் கேட்பதில்லைதானே.

ஆனால் அதை ஒரு விழாவாக எடுத்து அதையும் தாங்களே ஊடகங்களில் பிரபல்ய படுத்தும் போது, நாலு பேர் நாலு மாதிரி கதைக்கத்தான் செய்வார்கள்.

அங்கை யானைய சிங்கள இடத்திலையிருந்து காசு குடுத்து கூப்பிடுற மாதிரி இஞ்டை இருக்கிற எங்கடை ஆக்கள்  அஞ்சாறு வெள்ளைத்தோலையும் ரிக்கற் எடுத்து கூட்டிக்கொண்டு போய் கலர் காட்டுவினம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஏன் நாதத்தார் லைக்கா ரெலிபோன் காட் விக்கிறவரே? 😁

🤣ஒருக்கால் யாழ்களத்தில லைக்கா பற்றி அலசபட்ட திரிகளை எடுத்து பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு யானைகள், ஒரு குதிரை வண்டி, நான்கு பரமேளம்..  வெளிநாட்டில் நம்மட ஆட்கள் போடும் கூத்துடன் கணக்கு பார்த்த்தால் இது சில சில்லறை காசுகள் செலவு. அவ்வளவுதான்.

பிள்ளைகளுக்கு உடு துணி, புடவை, அழகு பொருட்கள் எடுக்க என்றே ஒரு குடும்பம் விமானத்தில் வெளிநாட்டில் இருந்து இந்தியா போய் வரும். இந்த விடயம் எல்லாம் யூரியூப்பில் வராது நம்மட ஆட்கள் பொங்கி எழுவதற்கு. 

தவிர, அவரவர் விருப்பம். ஊருக்குத்தான் அறிவுரை உனக்கில்லைடி கண்மணி. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

🤣ஒருக்கால் யாழ்களத்தில லைக்கா பற்றி அலசபட்ட திரிகளை எடுத்து பாருங்கோ.

பின்ன,

வற்ச்சப்பில, முகபுத்தகத்தால, கூகிள் மெயிலுக்கிலால, சூமீலை எல்லாத்துக்கிளையாளும் இலவசமா கதைக்கலாம் எண்டாலும், நம்மாளு கார்ட் யாபாரம் அமோகமா நடாத்திறது கெட்டித்தனமா இல்லையோ பங்கர்?

அவர் மட்டுமே, லெபேரா எண்டு மூண்டு பேர்.... யாபாரத்தை சரியான நேரத்துக்கு வித்ததும் கெட்டித்தனமா இல்லையோ

சும்மா வரியை இழுத்து அடுத்த வருசம் கொடுக்கிறது ஒரு ரெக்கினிக் பங்கர்..... எல்லா அக்கவுண்டன் மாரும் குடுக்கிற ஜடியா..... தாமதத்துக்கு அறவிடுற அரச வட்டி, கடனுக்கான வங்கி வட்டியிலும் குறைய கண்டியளே....

அதால, வெளில விட்டெடுத்து, உருட்டி பிரட்டி, ஆறுதலா அடுத்த வருசம் வட்டியோட கட்டுறது தான் வழமை.. உடனே கொடுத்தால்..... யாவாரிக்கு அழகில்லை பாருங்கோ.

அதோட, அடுத்த வருசம் லொஸ்சில போனால் முதல் வருச, தாமதமான கொடுப்பனவில் கழிக்கலாம்.....

தாமதிப்பது வேறு, கட்டாமல் சுத்துவது வேறு..... முன்னதுக்கு வட்டி, சிலவேளை தண்டம், பின்னது பெய்லியில் ஆரம்பித்து சிறையில் முடியும்.....

அடுத்தது, வரி கட்ட தாமதம் எண்டது, வரித்துறை வெளியே சொல்லாது..... உள்ள இருந்து..... வெளிய போன கணக்கு பகுதி வேலை செய்பவர்கள் கசிய விடுவது..... அதை வரித்துறை உறுதி செய்யாது பாருங்கோ.....

உதில இன்னும் ஒரு விசயம் கண்டியளே....

பெரு நிறுவனம் (plc) வேறு, தனி முதலாளி நிறுவனம் (ltd) வேறு... பெருநிறுவனம் நேரத்துக்கு கட்டுவார்கள். காரணம், அங்கு வேலை செய்யும் பெரிய டைரக்டர்கள் தாமத காரணம் சொல்ல வேண்டும். மேலும் விசயம் வெளியே போனால், கம்பனி பணச்சிக்கலில் எண்டு பங்கு மதிப்பு இறங்கி விடுமெல்லே பங்கர்.

LYCA தனி முதலாளி நிறுவனம்

என்னிலை நம்பிக்கை இல்லை எண்டால், வேறு யாரும் கணக்குப்பிள்ளை தெரிந்தால் கேட்டுப்பாருங்க. கொடுப்புக்க சிரிப்பினம்.

சரி, இந்த ஆலோசணை.... பில்லை, தனிமடலில் அனுப்பவோ?  😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அது சரி லைக்காவை பற்றி குறை சொன்னால், சுபாசுக்கு நோகுதோ இல்லையோ நாதத்துக்கு நோகும் எண்டது தெரியும்😜.

👆 பதில் மேலே...😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பின்ன,

வற்ச்சப்பில, முகபுத்தகத்தால, கூகிள் மெயிலுக்கிலால, சூமீலை எல்லாத்துக்கிளையாளும் இலவசமா கதைக்கலாம் எண்டாலும், நம்மாளு கார்ட் யாபாரம் அமோகமா நடாத்திறது கெட்டித்தனமா இல்லையோ பங்கர்?

அவர் மட்டுமே, லெபேரா எண்டு மூண்டு பேர்.... யாபாரத்தை சரியான நேரத்துக்கு வித்ததும் கெட்டித்தனமா இல்லையோ

சும்மா வரியை இழுத்து அடுத்த வருசம் கொடுக்கிறது ஒரு ரெக்கினக் பங்கர்..... எல்லா அக்கவுண்டன் மாரும் குடுக்கிற ஜடியா..... தாமதத்துக்கு அறவிடுற அரச வட்டி, கடனுக்கானவங்கி வட்டியிலும் குறைய கண்டியளே....

அதால, வெளில விட்டெடுத்து, உருட்டி பிரட்டி, ஆறுதலா அடுத்த வருசம் வட்டியோட கட்டுறது தான் வழமை.. உடனே கொடுத்தால்..... யாவாரிக்கு அழகில்லை பாருங்கோ.

அதோட, அடுத்த வருசம் லொஸ்சில போனால் முதல் வருச, தாமதமான கொடுப்பனவில் கழிக்கலாம்.....

தாமதிப்பது வேறு, கட்டாமல் சுத்துவது வேறு..... முன்னதுக்கு வட்டி, சிலவேளை தண்டம், பின்னது பெய்லியில் ஆரம்பித்து சிறையில் முடியும்.....

அடுத்தது, வரி கட்ட தாமதம் எண்டது, வரித்துறை வெளியே சொல்லாது..... உள்ள இருந்து..... வெளிய போன கணக்கு பகுதி வேலை செய்பவர்கள் கசிய விடுவது..... அதை வரித்துறை உறுதி செய்யாது பாருங்கோ.....

உதில இன்னும் ஒரு விசயம் கண்டியளே....

பெரு நிறுவனம் வேறு, தனி முதலாளி நிறுவனம் வேறு... பெருநிறுவனம் நேரத்துக்கு கட்டுவார்கள். காரணம், அங்கு வேலை செய்யும் பெரிய டைரக்டர்கள் காரணம் சொல்ல வேண்டும். மேலும் விசயம் வெளியே போனால், கம்பனி பணச்சிக்கலில் எண்டு பங்கு மதிப்பு இறங்கி விடுமெல்லே பங்கர்.

LYCA தனி முதலாளி நிறுவனம்

என்னிலை நம்பிக்கை இல்லை எண்டால், வேறு யாரும் கணக்குப்பிள்ளை தெரிந்தால் கேட்டுப்பாருங்க. கொடுப்புக்க சிரிப்பினம்.

சரி, இந்த ஆலோசணை.... பில்லை, தனிமடலில் அனுப்பவோ?  😁

நன்றி நாதம்ஸ், 

மிகவும் பலனுள்ள விளக்கம். 

இப்படியான விளக்கங்கள் வாசிப்பவரின் சிந்தனை முறையை அறிவூட்டும், மாற்றும். 

நன்றி. 👏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

பின்ன,

வற்ச்சப்பில, முகபுத்தகத்தால, கூகிள் மெயிலுக்கிலால, சூமீலை எல்லாத்துக்கிளையாளும் இலவசமா கதைக்கலாம் எண்டாலும், நம்மாளு கார்ட் யாபாரம் அமோகமா நடாத்திறது கெட்டித்தனமா இல்லையோ பங்கர்?

அவர் மட்டுமே, லெபேரா எண்டு மூண்டு பேர்.... யாபாரத்தை சரியான நேரத்துக்கு வித்ததும் கெட்டித்தனமா இல்லையோ

சும்மா வரியை இழுத்து அடுத்த வருசம் கொடுக்கிறது ஒரு ரெக்கினிக் பங்கர்..... எல்லா அக்கவுண்டன் மாரும் குடுக்கிற ஜடியா..... தாமதத்துக்கு அறவிடுற அரச வட்டி, கடனுக்கான வங்கி வட்டியிலும் குறைய கண்டியளே....

அதால, வெளில விட்டெடுத்து, உருட்டி பிரட்டி, ஆறுதலா அடுத்த வருசம் வட்டியோட கட்டுறது தான் வழமை.. உடனே கொடுத்தால்..... யாவாரிக்கு அழகில்லை பாருங்கோ.

அதோட, அடுத்த வருசம் லொஸ்சில போனால் முதல் வருச, தாமதமான கொடுப்பனவில் கழிக்கலாம்.....

தாமதிப்பது வேறு, கட்டாமல் சுத்துவது வேறு..... முன்னதுக்கு வட்டி, சிலவேளை தண்டம், பின்னது பெய்லியில் ஆரம்பித்து சிறையில் முடியும்.....

அடுத்தது, வரி கட்ட தாமதம் எண்டது, வரித்துறை வெளியே சொல்லாது..... உள்ள இருந்து..... வெளிய போன கணக்கு பகுதி வேலை செய்பவர்கள் கசிய விடுவது..... அதை வரித்துறை உறுதி செய்யாது பாருங்கோ.....

உதில இன்னும் ஒரு விசயம் கண்டியளே....

பெரு நிறுவனம் (plc) வேறு, தனி முதலாளி நிறுவனம் (ltd) வேறு... பெருநிறுவனம் நேரத்துக்கு கட்டுவார்கள். காரணம், அங்கு வேலை செய்யும் பெரிய டைரக்டர்கள் தாமத காரணம் சொல்ல வேண்டும். மேலும் விசயம் வெளியே போனால், கம்பனி பணச்சிக்கலில் எண்டு பங்கு மதிப்பு இறங்கி விடுமெல்லே பங்கர்.

LYCA தனி முதலாளி நிறுவனம்

என்னிலை நம்பிக்கை இல்லை எண்டால், வேறு யாரும் கணக்குப்பிள்ளை தெரிந்தால் கேட்டுப்பாருங்க. கொடுப்புக்க சிரிப்பினம்.

சரி, இந்த ஆலோசணை.... பில்லை, தனிமடலில் அனுப்பவோ?  😁

🤣 உங்கள் தன்னிலை விளக்கத்துக்கு நாங்கள் பில் கட்டுவதோ🤣.

எனக்கு கோப்பாரா ஞானம் காலம், பரிசில் இருந்து வரலாறு தெரியும் நாதம். 

ஆகவே இந்த, “கணக்கியல்” “வியாபார காந்தம்” வெள்ளையடிப்புக்களை வாசித்து கொடுப்புக்குள் அல்ல வேறு ஒரு பக்கத்தால் சிரித்தபடி நகர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இப்படியான விளக்கங்கள் வாசிப்பவரின் சிந்தனை முறையை அறிவூட்டும், மாற்றும். 

நன்றி. 👏

ரஸ்யாவில் வாங்கினத்துகு லைக்காவில நெறி கட்டுதுபோல இருக்கே🤣.

நடத்துங்க கற்ப்ஸ்🤣

பெயர் மட்டும்தான் கற்பிதன், செயல் எல்லாம் குழந்தைபிள்ளை போலதானா🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பிள்ளைகளுக்கு உடு துணி, புடவை, அழகு பொருட்கள் எடுக்க என்றே ஒரு குடும்பம் விமானத்தில் வெளிநாட்டில் இருந்து இந்தியா போய் வரும். இந்த விடயம் எல்லாம் யூரியூப்பில் வராது நம்மட ஆட்கள் பொங்கி எழுவதற்கு. 

உடுப்புகள் துணிகள் சாறிகள் அழகு பொருட்கள் இந்தியாவில் போகும் போது வாங்குகிறார்களோ இல்லையோ அவற்றை வாங்க தான் இலங்கைக்கு போகின்ற வழியில் நாங்கள் இந்தியா போகிறோம் என்ற செய்தியை ஒரு 4 மாதத்திற்கு முன்பாவது இதர தமிழர்களிடம் பரப்பி விடுவதில் தான் வெற்றியே உள்ளது.

இப்படியான ஷோ காட்டும் குப்பை வேலையை வெளிநாட்டில் இருந்து டொலரில் செய்வதை இலங்கையில் இருப்பவர்களும் செய்வது வருத்தமானது.

On 15/8/2022 at 19:49, பகிடி said:

" பிள்ளை மீது பெற்றோர் வைத்த அன்பு தான் இதற்க்கு காரணம் என்கிறார்கள்..

இந்த ஈழத்து பெற்றோர்கள் தங்களது ஆண் பிள்ளைகள் மீது சிறிது கூட அன்பு வைக்காமல் இருக்கிறார்களே 😭

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

எனது நண்பர் ஒருவர் சமீபத்தில்  5000 ஈரோக்குள் அங்கு மிகவும் தடபுடலாக சாமத்திய சடங்கு செய்து முடித்திருந்தார்......

பல்லு சிகிச்சைகள் இலங்கை, மலேசியாவில்  விலை குறைவு  என்று அங்கே செய்வதை கேள்விபட்டுள்ளேன். தங்களுடன் படித்தவர்கள் பலர் இலங்கையில் இருப்பதனால் பிறந்தநாள் பார்ட்ரியை இலங்கையில் வைத்தார்கள் என்றும் கேள்விபட்டுள்ளேன்.
இந்த கூத்துக்குமா🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

பாக்கு போடலாம் தப்பில்லை,  அடுத்தவன் பல்லை பாவிக்க கூடாது🤣

பல்லு இருந்தால் பாக்கு சாப்பிடதான் வேண்டுமா வாய் இருந்தால் சிகரெட்டை புகையை இழுத்து வெளியேவிடத்தான் வேண்டுமா.
ஒரு திருமண நிகழ்வில் பீடாவை அறிந்து கொள்வதற்காக சாப்பிட்டு பார்த்தேன். என்னால் இதை சாப்பிடுவதை விளங்கி கொள்ளவே முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

🤣 உங்கள் தன்னிலை விளக்கத்துக்கு நாங்கள் பில் கட்டுவதோ🤣.

எனக்கு கோப்பாரா ஞானம் காலம், பரிசில் இருந்து வரலாறு தெரியும் நாதம். 

ஆகவே இந்த, “கணக்கியல்” “வியாபார காந்தம்” வெள்ளையடிப்புக்களை வாசித்து கொடுப்புக்குள் அல்ல வேறு ஒரு பக்கத்தால் சிரித்தபடி நகர்கிறேன்.

சரி பங்கர்.... பின்ன சொல்லுங்கோ.... (சும்மா ஒரு விவாதம் மட்டுமே.... நோ, கோபம், நோ டென்ஷன்....) 🤗

லைக்கா... எவ்வளவு வரி கொடுக்காமல் இருக்குது எண்டதை, வரைத்துறையிடம் இருந்து ஒருக்கா கேட்டு சொல்லுங்கோ.😜

அல்லது, லைக்கா ஓனரிடம் கேட்டு சொல்லுங்கோ....😁

ஆனால் அதிலை வந்தது, இதிலை வந்தது என்று மட்டும் வேணாமே.... சரியா. 🤗

அதாவது, ஊகத்தின் அடிப்படையில் வேண்டாம் என்று சொல்கிறேன். கம்பெனி ஹவுசில் சமர்ப்பிக்கும் அறிக்கையினை வைத்து, இவ்வளவு வரி கட்ட வேண்டும் என்று தேராயமாக ஒரு கணக்கு சொல்லலாம். அதை இன்னும் கட்டாமல் இழுக்கிறார் எண்டும் யாரும் எழுதலாம்.

அதேவேளை, பத்தர் (தீபம் டிவி) முதல், லைக்கா வரை சுத்து மாத்து இருக்கும். பெரும் நேர்மையாளர்கள் என்று சொல்ல வரவில்லை. அதேவேளை, தனி முதலாளி வியாபாரம் எப்படி சுத்து மாத்து செய்யும் என்று அத்துப்படி. அதில் மாட்டாமல் செய்வது ஒரு வித்தைப்படி. 😎

அது தவிர,  சினிமா முதலீடு விசயத்தில், நயன்தாரா நேரடியாக பேசக்கூடிய ஒருவராக, நம்மாளு இருக்கிறார். 😍

கழுதை கெட்டால் குட்டிச்சுவர் மாதிரி, கனடா இந்திரனுக்கு, ரம்பா.... நம்ம சுபேசுக்கு..... கோடம்பாக்கமே...  🤑

நீங்களும், நானும், சும்மா, கதைக்க தான் லாயக்கு போல... (நம்ம கற்ப்ஸயும் சேர்த்து தான்) 😬

****

ஓகே, ஒரு கேள்வி.... லைக்கா business model என்ன என்று இரண்டு வரியில் சொல்ல முடியுமா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

ரஸ்யாவில் வாங்கினத்துகு லைக்காவில நெறி கட்டுதுபோல இருக்கே🤣.

வித்தார கள்ளி விறகு ஒடிக்க போனாளாம் கத்தாழை முள்ளு கொத்தோட தச்சுச்சாம்...🤣 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

🤣 உங்கள் தன்னிலை விளக்கத்துக்கு நாங்கள் பில் கட்டுவதோ🤣.

எனக்கு கோப்பாரா ஞானம் காலம், பரிசில் இருந்து வரலாறு தெரியும் நாதம். 

ஆகவே இந்த, “கணக்கியல்” “வியாபார காந்தம்” வெள்ளையடிப்புக்களை வாசித்து கொடுப்புக்குள் அல்ல வேறு ஒரு பக்கத்தால் சிரித்தபடி நகர்கிறேன்.

நாதம் tax filing தொடர்பாகக் கூறியதன் சாராம்சத்தில் என்ன பிழை? 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

சரி பங்கர்.... பின்ன சொல்லுங்கோ.... (சும்மா ஒரு விவாதம் மட்டுமே.... நோ, கோபம், நோ டென்ஷன்....) 🤗

லைக்கா... எவ்வளவு வரி கொடுக்காமல் இருக்குது எண்டதை, வரைத்துறையிடம் இருந்து ஒருக்கா கேட்டு சொல்லுங்கோ.😜

அல்லது, லைக்கா ஓனரிடம் கேட்டு சொல்லுங்கோ....😁

ஆனால் அதிலை வந்தது, இதிலை வந்தது என்று மட்டும் வேணாமே.... சரியா. 🤗

அதாவது, ஊகத்தின் அடிப்படையில் வேண்டாம் என்று சொல்கிறேன்.

அதேவேளை, பத்தர் (தீபம் டிவி) முதல், லைக்கா வரை சுத்து மாத்து இருக்கும், பெரும் நேர்மையாளர்கள் என்று சொல்ல வரவில்லை. அதேவேளை, தனி முதலாளி வியாபாரம் எப்படி சுத்து மாத்து செய்யும் என்று அத்துப்படி. அதில் மாட்டாமல் செய்வது ஒரு வித்தைப்படி. 😎

அது தவிர,  சினிமா முதலீடு விசயத்தில், நயன்தாரா நேரடியாக பேசக்கூடிய ஒருவராக, நம்மாளு இருக்கிறார். 😍

கழுதை கெட்டால் குட்டிச்சுவர் மாதிரி, கனடா இந்திரனுக்கு, ரம்பா.... நம்ம சுபேசுக்கு..... கோடம்பாக்கமே...  🤑

நீங்களும், நானும், சும்மா, கதைக்க தான் லாயக்கு போல... (நம்ம கற்ப்ஸயும் சேர்த்து தான்) 😬

இந்த “தலைவர் வந்தோன சேர்த்த காசை திருப்பி தருவேன்” காறர் மாரி முதல்லையே எதை எல்லாம் சொல்லக்கூடாது எண்டு லிஸ்ட் போட்டுட்டு - சொல்லுங்கோ எண்டால் எப்படி நாதம்🤣.

பல நாள் திருடன் ஒரு நாள் ஆப்பிடுவான்.

இன்னும் லைக்கா அள்ளி, அள்ளி கொடுக்கிற கன்சேவேடிவ்தான் ஆட்சியில் இருக்கு. அவர்கள் லைக்காவை விசாரணையில் இருந்து பாதுகாப்பதாக பாராளுமன்றிலேயே கூறப்பட்டுள்ளது. எப்படியும் ஆட்சி மாறும் - அப்ப வெளிவரும் அவசரம் வேண்டாம்.

அடுத்து நான் எதையும் நிறுவ வேண்டியதில்லை நாதம். நீங்களே நிறுவி விட்டீர்கள் 👇.

 மேலே நீங்கள் சொன்ன வரியை இழுத்தடிப்பு செய்வது வித்தை அல்ல. அதுவும் களவுதான். ஒரு ஆஸ்பத்திரிக்கு, பள்ளிகூடத்துகு போக வேண்டிய பணத்தை அவர் வருட கணக்கில் வேண்டும் என்றே இழுத்தடிக்கிறார் என்றால் அதை விட ஈனத்தனம் வேறு இருக்குமா?

இழுத்தடிப்பது, அரசின் நேரத்தை வீணடிப்பது, பிறகு கொஞ்சம் fine ஐ கட்டி விட்டு காசை கொடுப்பது. ஆனால் அந்த காலத்தில், கொடுக்க வேண்டிய காசு fine ஐ விட பல மடங்கு வளர்ந்திருக்கும்.

இது பக்கா களவு.

கிரெடிட் கார்ட் மோசடி செய்வோம். பிடிபட்டால் 3 வருடம்தான் உள்ளே. செய்யும் களவுக்கு அது ஒக்கே என்று கணக்கு போடும் களவுக்கும் இதுக்கும் ஒரு வேறுபாடுமில்லை.

ஆனால் இதை எல்லாரும் செய்யினம் என சப்பை கட்டு கட்ட வேண்டாம். நேர்மையான பலர் உள்ளர்கள்.

CV யில் பொய் சொல்லுவது, வேலை தந்தவருக்கு எப்படி வெடி வைப்பது, ரணில் ஜனாதிபதியானது விடா முயற்சி - இப்படி நம்மிருவரின் moral compass எதிரும் புதிருமாக இருப்பது இது முதல்தடவை அல்லவே நாதம். இதையும் அதில் ஒன்றாகவே நான் கருதுகிறேன்.

ஆனால் நான் எழுதியது லைக்காவின் இப்போதைய வரி ஏய்பு பற்றி அல்ல. அவர்களின் ஆரம்பம் பற்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ரஸ்யாவில் வாங்கினத்துகு லைக்காவில நெறி கட்டுதுபோல இருக்கே🤣.

நடத்துங்க கற்ப்ஸ்🤣

பெயர் மட்டும்தான் கற்பிதன், செயல் எல்லாம் குழந்தைபிள்ளை போலதானா🤣

என்ன சொல்ல வருகிறீர்கள்? 

aincome & Tax filing என்பது tax department டுடன் தொடர்புடையது. இதில் நாதம்ஸ் கூறியதில் என்ன பிழை ? 

கோசான் வாழ்க்கையிலேயே tax filing செய்யாதவரோ ?

🤣

(லைக்க ஞான, லிபாரா, France என்று கடந்த காலத்தையும் தோண்ட வெளிக்கிட்டால்  ஊரில் இருந்துதான் தொடங்க வேண்டும் கோசான். அப்பிடிப்பார்த்தால் ஒருவருமே மிஞ்சப்போவதில்லை 😉)

Edited by Kapithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.