Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையம் கருத்தாடல்தளம் இல:03 தனது 200,000 ஆவது பதிவை தாண்டியமைக்கான வாழ்த்துப் பாடல் (காணொளி/வீடியோ)!!

Featured Replies

இந்தப்பாடல் யாழ் இணையம் கருத்தாடல்தளம் இல:03 இல் 200,000 ஆவது பதிவை இட்ட

யமுனாவிற்கு (எனது பிரதம சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளிற்கு ;) ) சமர்ப்பணம்! B)

பாடலை யூரியூப்பில் முழுத்திரையில் பார்க்க இங்கே சொடுக்கவும்!! (பின் திரையை பெரிதாக்கும் பொத்தானை அழுத்த வேண்டும்..)

பாடலை தரவிறக்கம் செய்து பார்ப்பதற்கு இங்கே சொடுக்கவும்!! (சிலோவான இண்டர்நெட் இணைப்பு உடையவர்களிற்கு உதவியாக இருக்கும்..)

பாடல் ஒலிப்பதிவை மட்டும் கேட்க இங்கே சொடுக்கவும்!!

----------------------------------

இல்லமாய் இருந்து

உள்ளமாய் விரிந்து

செல்லமாய் கடிந்து

மெல்லமாய் நடந்து

இணையத் தளத்திலே

இரு நூ.. ராயிரம்

கருத்துக்கள் கண்ட

யாழ்களம் வாழ்க!

ஊரிலே உறவை

இழந்து அகதியாய்

பாரில் எங்கும்

அலைந்த தமிழரை

தேரில் ஏற்றி

அழகு பார்க்கும்

பேர்புகழ் விரும்பாத

நிருவாகி வாழ்க!

யாழ் இணையமே

தொடர்ந்து கலக்கு!

நீ அலாவு தீனின்

அற்புத விளக்கு!

ஏழைநான் தனிமையில்

வாழும் வழக்கம்

தொலைந்து போனது

விடிந்தது கிழக்கு!

----------------------------------

கூழுக்கு சக்கரை போல்

வாழ்வுக்கோர் நல்லிணையம்!

யாழ்களத்தில் இல்லாதோர்

பாழ்கிணற்றில் நீர் போன்றோர்!

விஞ்ஞானக் களமிதுவே!

அஞ்ஞானம் களைவதற்கு

மெஞ்ஞானப் பேரறிவை

துஞ்சாமல் பெறுவோமே!

செய்திபல கருத்தாடல்

போட்டியுடன் பண்பாடல்

நாச்சுவையும் நகைச்சுவையும்

சிந்தனைக்கு விருந்தளிக்க

அனுபவமாய் ஆய்வையுமே

பகிர்ந்திடு நீ வாதஞ்செய்!

தொழில்நுட்பம் காண்பாய்வா

போகாத பொழுதுக்கும்!

-----------------------------------

காலையில் உன்னில்

கண்விழிப்பேன் நான்

சோலையாய் என்னில்

பூச் சொறிவாய் நீ!

மூலையில் குந்தி

ஊக்கமாய் உனக்காய்

மூளையை குடைந்து

ஆக்கங்கள் படைப்பேன்!

வலையில் அலைந்த

கலைஞன் என்னை

சிலையாக மாற்றி

சிறையிங்கு பிடித்தாய்!

தலைகால் புரியாமல்

நிலை குலைந்து

உனக்காக ஒரு

பாடல் தந்தேன்!

விலை மதிப்பற்ற

தமிழரின் சொத்துனை

உழைப்பால் நாங்கள்

உயர்த்த முயல்வோம்!

அலைபோல் தமிழர்

கூட்டம் தினமும்

யாழிசை கேட்டு

ஆட்டம் போடும்!

----------------------------------

இக்கரையின் பச்சை கண்டு

இச்சையுடன் வந்தவர் நாம்!

திரைகடலைத் தாண்டி வந்தே

திரவியத்தைப் பிரிந்தோமே!

அகிலத்தில் வாழ்தமிழர்

முகம் தெரியா உறவுகளே!

அழைத்தால் தான் வருவாரோ?

ஊட்டத் தான் உண்பாரோ?

எட்டுத் திசையினிலும்

விட்டில் பூச்சிகளாய்

எட்டி நடைநடந்தோம்!

குட்டத் தலைகுனிந்தோம்!

நாடற்ற பரதேசி!

பலவீடுள்ள சுகபோகி!

பொருள்தேடும் உபவாசி!

இருள்மூட நீ யோசி!

----------------------------------

அப்பாவி தமிழரை

கைது செய்து

சிங்கள காடையர்

போடுவார் வழக்கு!

இப்போதும் ஒன்றும்

கெட்டு விடவில்லை

உண்மையை அறிய

துப்பு துலக்கு!

விதிமுறை அறிந்து

விரும்பிய கருத்தை

புதியவர் இங்கு

பதிந்திட முடியும்!

முதியவர் கூட

அரட்டை பகுதியில்

குதித்து கும்மாளம்

போட்டிட முடியும்!

சதிவலை பின்னி

யாழை குழப்பிட

எதிரி கையாட்கள்

ஒருசிலர் வருவார்!

அதிகம் கதைத்து

அடாவடி செய்து

கெதியில் கெட்ட

பெயரை பெறுவார்!

------------------------------------

எடுத்தாலும் குறையாது!

தடுத்தாலும் நில்லாது!

பகிர்ந்து கொடுப்போர்க்கே

சுரந்திட்ட மெய்யறிவு!

ஆணும் பெண்குமரர்

கிழவர் இளவட்டம்

கூடிப் பெருகி நின்றால்

காலடியில் உலகமடா!

கற்றுக் கரை கண்ட

அறிஞர் பலருண்டு!

முற்றத் தரை காணா

பாமரரும் இங்குண்டு!

உற்று நோக்கிடில் நாம்

உடன்பிறவா சோதரர்கள்!

சற்றும் சலிக்காத

ஈழத்தின் காவலர்கள்!

-----------------------------------

விடுப்பு அறிய

புதினம் சங்கதி

தமிழ் நெட்டுக்கு

போவது இல்லை!

கடுவன் கந்தப்பு

தமிழீனி கறுப்பி

கொடுக் கின்ற

தகவலே போதும்!

நடுச்சாமம்பன்

ரெண்டு அரைக்கும்

யாழுக்கு வந்து

செய்திகள் படிப்பேன்!

கடுப்பாகிபோனால்

காலை விடியுமட்டும்

படுக்கைகு போகாது

அரட்டை அடிப்பேன்!

அடுப்படி இருக்கு

அறிவினை பெருக்க

நெடுக்காய் குறுக்காய்

குறிப்புகள் இருக்கு!

துடுபாட்டம் இருக்கு

ஞாயிறு தோறும்

ஓடும்படம் காலக்

கண்ணாடி இருக்கு!

---------------------------------

விடம் தின்ற சிவனை

உமாதேவி காத்தாள்!

இடம்பெயர்ந்த தமிழனை

எவர்தான் காப்பார்?

கடல்கடந்து உலகமெங்கும்

பரந்துவாழும் தமிழன்

ஒன்றிணையும் யாழ்

எங்கள் சுதந்திர தேசம்!

யாழில் இதயத்தினை

இன்றே இணைத்திடுவீர்!

அறியாமை இருள்போக்க

திரையதனை விலக்கிடுவீர்!

தமிழருக்கு யாழ்களமே!

உறவுகளாய் நாம்பழக

ஒப்புவமை உனக்கில்லை!

யாழ்களமே வாழியவே!

-----------------------------------

இல்லமாய் இருந்து

உள்ளமாய் விரிந்து

செல்லமாய் கடிந்து

மெல்லமாய் நடந்து

இணையத் தளத்திலே

இரு நூ.. ராயிரம்

கருத்துக்கள் கண்ட

யாழ்களம் வாழ்க!

துள்ளியே திரிந்து

அதிக பதிவுகளை

அள்ளி எறிந்த

யமுனாவுக்கும்

சல்லி வாங்காது

சேவை செய்கின்ற

மட்டறுத்து னருக்கும்

நன்றி! வணக்கம்!

சொல்லில் உறவாடி

சொந்தமாய்ப் போன

செல்வங்களுக்கு

நன்றி! வணக்கம்!

தள்ளியே நின்று

வேடிக்கை பார்க்கும்

வாசகருக்கும்

நன்றி! வணக்கம்!

-----------------------------

82388160jb8.jpg

பாடலை ஒரு அழகிய காணொளியாக நீங்கள் இப்போது பார்த்து மகிழ்வதற்கு இரவு பகலாக உழைத்த, மற்றும் பாடல் வரிகள் எழுதுவதற்கும், பாடல் இசை, ஒலிப்பதிவு வரை மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் [ஒரு லப்டொப்பையும், சிறிய லப்டொப் மைக்கையும், மென்பொருளையும் வைத்து] வெற்றிகரமான முறையில் நான் உருவாக்க பல்வேறு ஆலோசனைகளை தந்த, உதவிகள் புரிந்த

அனிதாவிற்கு மிக்க நன்றி! :D

பாடல் வரிகளை தந்த நோர்வேஜியனுக்கு மிக்க நன்றி! [யாழ் இணையம் அகவை 09 கொண்டாட்டத்தின் போது வைக்கப்பட்ட "யாழ் கீதம்" கவியரங்கத்துக்காக நோர்வேஜியனால் எழுதப்பட்டது.] :)

ஒரு கிழமைக்கும் மேலாக உழைத்து இந்தப் பாடலை நான் உருவாக்கும் போது ஏற்பட்ட சிரமங்களை பொறுமையாக தாங்கிக்கொண்ட, மேலும் எனக்கு முகம் சுழி(ளி?)க்காது சாப்பாடு, பானங்களை எனது அறைக்கு சப்ளை செய்த எனது வீட்டில் உள்ள உறவுகளிற்கும் மிக்க நன்றி! :P

மற்றும் இந்தப் பாடலைக் கேட்கும், பார்க்கும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி! :lol:

இதுவரையும் மாப்ளே என்று அழைத்த நாமத்தை மனப்பூர்வமாகக் கலைஞன் என்று மாற்றிக்கொள்கிறேன்.

அணிலுக்கும் பாராட்டுக்கள்

நோர்வேயியனுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்

செக்கிட் அவுட் யோ(வ்)............

மிகவும் மினக்கட்டு இப்பாடலை உருவாக்கியிருப்பதாகத் தெரிகிறது. பாடல் வரிகளை நோர்வேஜியன் நன்றாக எழுதியிருக்கிறார். அதனை உங்கள் குரலில் பாடி மெருகூட்டியிருக்கிறீர்கள் கலைஞன். பாடலைக் காட்சிப்படுத்துவதற்கு அனிதாவும் அதிகம் மினக்கட்டிருப்பது தெரிகிறது. அக்கைறையெடுத்து இணைந்து, கூட்டுமுயற்சியாக இவற்றை செய்வது பாராட்டுதற்குரியது. உங்கள் மூவரினதும் உழைப்புக்கும் மீண்டும் ஒருமுறை மனம்நிறைந்த பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பம் முதல் இறுதிவரை பார்க்கத் தூண்டிய படைப்பு.

படைப்பாளிகள் பங்காளிகள் பார்வையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களுடன் நன்றிகள்..! :lol:

ஆஹா ரொம்ப ரொம்ப ரொம்ப நலல இருக்குங்க. 2 தடவைகள் பார்த்த போதிலும் மீண்டும் ஒருதடவை பார்க்க தூண்டுகின்றது. மூவருக்கும் வாழ்த்துக்கள்.

அருமையான படைப்பு கலைஞன், நோர்வேஜியன்,அனி மூவருக்கும் எனது பாராட்டுக்கள் :lol:

மிக நல்லா இருக்குது வாழ்த்துக்கள்

ஆஹா. மிகவும் நன்று. :lol::D

யாழ்களம் 200 000 பதிவுகளை தாண்டியது மகிழ்ச்சிகரமானது. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

யாழ் களம் 200 000 கருத்துக்களைத் தாண்டியது மகிழ்ச்சி

அத்தனையும் பயனுள்ளதா என்பது தோன்றும் கேள்வி :D

எதுவாக இருப்பினும் யாழ் கீதம் எழுதிய நோர்வேஜியனும்

அதைப் பாடலாக்கி இசை சேர்த்துப் பாடிய கலைஞனும்

அழகான காட்சிகள் சேர்த்து அழகுபடுத்திய அனிதாவும்

இணைந்து உருவாக்கி வழங்கிய பாடல் அருமையோ அருமை.

அனிதாவை நினைக்கையிலே ஏற்படுவது பெருமையோ பெருமை.

நட்போடு வாழ்த்துகிறேன் நன்றியுணர்வோடு கரம்பற்றி

கரம்கோர்த்து உழைத்த மூன்று உறவுகளையும் போற்றி

கலக்கிட்டீங்கள்! :lol:

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பாய் இருக்கின்றது.

கலைஞன், நோர்வேஜியன்,அனிதா வுக்கு வாழ்த்துகள்

ஜமாய்ச்சீட்டீங்க மாப்பிளை....

உங்கள் முயற்சி போற்றத்தக்கது..

ஜம்முதான் அந்தக் கருத்தை எழுதுவாரென்று ஆரூடம் சொன்ன எனக்காக ஒரு பாட்டு சமர்ப்பிக்கூடாதா என்ன..?

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் நோர்வேஜியன் மற்றும் அனிதாவுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் இது போன்று இனிவரும் காலங்களிலும் யாழ் உறவுகள் ஒன்றிணைந்து சில படைப்புக்களை படைத்தால் நிச்சயம் வெற்றிபெறும் அது போல உங்கள் திட்டஙகளையும் ஒன்றிணைந்து செயற்படுத்தினால் அதுவும் வெற்றி பெறும்.

  • கருத்துக்கள உறவுகள்

ம். சிறப்பாக இருக்கின்றது. நோர்வேஜியன், அனிதா, கலைஞனுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது . பாராட்டுக்கள் கலைஞன், நோர்வேஜியன், அனிதா.

அது சரி என்னை ஏன் கடுவன் கந்தப்பு என்று அழைத்தீர்கள்? :angry:

குருவே நன்றி சொல்ல வார்த்தை வருதில்லையப்பா...............அந்த மாதிரி இருக்கு.......நேற்று நாற்சந்தியில போட்ட பாட்டை பார்த்து அது தான் பாட்டு என்று நினைத்துவிட்டேன் ஆனா இப்படி வரும் என்று நான் நினைக்கவே இல்லை..........கலகிட்டீங்க குருவே......... ;) :(

உங்களோடு சேர்ந்து உழைத்த அனிபாட்டி,நோர்வேஜியன் தாத்தாவிற்கும் நன்றிகள்.............அது சரி குரு கடைசியா ஆடினா ஒரு அக்கா அது யார்?எங்கையோ கண்டு இருகிறன் அவாவை நல்லா ஆடுறா குருவே........... :P :D

மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் ......

  • தொடங்கியவர்

ஆதி, பனங்காய், வலைஞன், நெடுக்காலபோவான், வெண்ணிலா, கெளரிபாலன், சின்னக்குட்டி, ஈழத்திருமகன், இளைஞன், கறுப்பி, விகடகவி, சாத்திரி, தூயவன், கந்தப்பு, யமுனா, குட்டிதம்பி.. உங்கள் அனைவரினதும் கருத்துக்களிற்கு மிக்க நன்றி!

கந்தப்பு, 'கடுவன்' என்று பாட்டில் சொன்னது உங்களை இல்லை. 'கடுவன்' என்று ஒருவர் வந்து செய்திகள் ஒட்டுவார் மறந்துபோச்சா? அவரைத்தான் பாடலில் குறிப்பிட்டேன். இப்போது சில காலமாக ஆளை காணவில்லை.

யமுனா, இந்த வீடியோவை எனது அக்காவிற்கு போட்டு காட்டினேன். அவ, அந்த படத்தில் இறுதியில் ஆடுபவவா பாடலில் வரும் அந்த 'யமுனா' என்று கேட்டா. நான் இல்லை, அவர் ஒரு ஆம்பளை என்று சொன்னேன். :(:D:lol:

இன்னுமொருவரும் யார் அவ அந்த யமுனா என்று கேட்டார்.. :lol::lol::)

ஒவ்வொருவருக்கும் அவா இல்லை அது அவர்! அவர் ஒரு ஆம்பளை என்று சொல்லவேண்டியதா போச்சு!

பொம்பளை பெயருடன் உலாவருவதன் பயன்களை விரைவில் கண்டுகொள்ளப் போகின்றீர்கள். எதற்கும் ஆண்களுடன் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.. ;)

  • கருத்துக்கள உறவுகள்

பொம்பளை பெயருடன் உலாவருவதன் பயன்களை விரைவில் கண்டுகொள்ளப் போகின்றீர்கள். எதற்கும் ஆண்களுடன் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது..

:rolleyes::lol::D:lol:

இப்போது தான் பார்த்தேன். மிகவும் நன்றாகவுள்ளது. இப்படைப்பிற்காய் உழைத்த அனைவரிற்கும்

மனமார்ந்த பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞா,

கலக்கிட்டீங்கள்!! மிக அருமை! அசத்தல்! இன்றுதான் நேரம் கிடைத்தது. பாடல்வரிகள் எழுதிய நோர்வேஜியன் அண்ணாவுக்கும் +கலைஞனுக்கும் வரைகலையில் மிகச் சிறப்பாய் சேவை புரிந்த அனுவிற்கும் நிறைந்த வாழ்த்துக்கள்.

கலைஞா! பேருக்கேற்றால் போல்!! மிக மிகச்சிலரே இருப்பார்கள் தாங்கள் புனைந்த பெயர் வெகுபொருத்தம்.

வாழ்த்துக்கள்!! போற்றுகின்றேன்.

பாடல் வரிகளும் காட்சிகளும் மிக உயிர்ப்போடு உன்னதமாய் இருந்தது! இதயத்தில் இன்னும் ஒலித்தபடி!!

பாராட்டுக்கள்!!..

நல்லா இருக்கு வாழ்த்துகள்

இந்தப் பாடல் பதியப்பட்டதிலிருந்து வாசிக்கவும் பார்க்கவும் மட்டுமே முடிந்தது. இப்போதுதான் இசையுடன் இரசித்தேன். சிறந்த கற்பனை வளமும் தொழில்நுட்பமும் சேர்ந்த சிறந்த படைப்பு. கலைஞனுக்கும் இதில் பங்காற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கிறது . இதில் பங்காற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

இன்னுமொருவன், தமிழ் தங்கை, ஈழவன், இணையவன், சுரேஸ் பாடலை பார்த்து ரசித்தமைக்கு மிக்க நன்றி! :P

Edited by கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.