Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ட்விட்டரை கைப்பற்றினார் ஈலோன் மஸ்க்: அடுத்து என்ன நடக்கும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ட்விட்டரை கைப்பற்றினார் ஈலோன் மஸ்க்: அடுத்து என்ன நடக்கும்?

12 நிமிடங்களுக்கு முன்னர்
 

மஸ்க்

பட மூலாதாரம்,AFP

உலகின் பெரும் பணக்காரரான் ஈலோன் மஸ்க் சமூக ஊடகமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விலைக்கு வாங்கி முடித்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. இந்திய மதிப்பில் இந்தத் தொகை சுமார் 3 லட்சத்துக்கு 52 ஆயிரம் கோடி.

ட்விட்டரை கைப்பற்றியது குறித்து ட்விட்டர் தளத்திலேயே சூசகமாகப் பதிவிட்டுள்ளார் ஈலோன் மஸ்க். எனினும் ட்விட்டர் நிர்வாகம் இதுபற்றி இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரியான பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுவிட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

தனது ட்விட்டர் பக்க சுயவிவரத்தை "Chief Twit" என்று மாற்றியுள்ள ஈலோன் மஸ்க், ட்விட்டர் தலைமை அலுவலகத்துக்குள் சமையலை சின்க்கை தூக்கிச் செல்லும் காணொளியையும் பதிவிட்டுள்ளார்.

 
Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ட்விட்டரை கையகப்படுத்துவதற்கான ஈலோன் மஸ்கின் முயற்சி எப்படி தொடங்கியது?

மார்ச் மாத இறுதியான அன்று, ஜான் ஜோஸில் குளிர்ச்சியான மாலைப்பொழுது. ட்விட்டர் நிர்வாகிகளுடன் அவசர அவசரமாக ஈலோன் மஸ்க் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்தக் கூட்டம் ட்விட்டர் நிறுவனத்திற்கு மிக முக்கியமானது. ட்விட்டரின் பெரும்பாலான பங்குகளை ஈலோன் மஸ்க் வாங்கியிருந்ததால் அதன் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட குழுவில் அவரை இணைக்க வேண்டும் என்ற பேச்சு அடிபட்டுக்கொண்டிருந்தது.

ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரான பிரட் டெய்லர், அந்த இடத்திற்கு வந்தபோது அது அவர் எதிர்பார்த்ததுபோல இல்லை.

அண்மையில் நான் அலுவல்பூர்வ சந்திப்பு நடத்திய இடங்களில் இது விசித்திரமானது என ஈலோன் மஸ்கிற்கு அவர் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

விமான நிலையத்திற்கு அருகே சந்திப்பிற்கான இடத்தை அவர்கள் எதிர்பார்த்ததாகவும், இங்கு ட்ராக்டர்கள் மற்றும் கழுதைகள் இருப்பதாக ஈலோன் மஸ்கிடம் பிரட் டெய்லர் கூறினார்.

எனினும், அந்தக் கூட்டம் சுமூகமாக முடிந்தது.

சில தினங்களுக்குப் பிறகு, ட்விட்டரின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட குழுவில் ஈலோன் மஸ்க் இணைய இருப்பதாக அதன் நிர்வாகம் அறிவித்தது.

அடுத்த ஆறு மாதங்கள் நடந்த இழுபறிக்கு, இதுதான் தொடக்கம்.

 

ட்விட்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரி பராக் அகர்வால்

அந்தப் பொறுப்பு குறித்து மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த ஈலோன் மஸ்க், ட்விட்டர் தளத்தை எப்படி மேம்படுத்துவது என்பது தொடர்பாக ஏப்ரல் மாத தொடக்கத்தில் தொடர்ந்து ட்வீட் செய்துவந்தார்.

இருப்பினும், ஈலோன் மஸ்கிற்கும் ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி பாரக் அகர்வாலுக்கும் இடையேயான தனிப்பட்ட சந்திப்புகள் சுமூகமாக நடைபெறவில்லை.

இதில் அதிருப்தியடைந்த ஈலோன் மஸ்க், "பாரக் அகர்வாலுடன் இணைந்து ட்விட்டர் தளத்தை சரி செய்வது பயனளிக்காது. தீவிரமான நடவடிக்கைகள் தேவை" என பிரட் டெய்லருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

பின்னர், ஏப்ரல் 14ஆம் தேதி ட்விட்டர் தளத்தை முழுவதுமாக வாங்கவுள்ளதாக ஈலோன் மஸ்க் வெளிப்படையாக அறிவித்தார்.

அதற்காக 44 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை ஈலோன் மஸ்க் கொடுக்க முன்வந்த நிலையில், அதை ட்விட்டர் நிறுவனம் முதலில் நிராகரித்தது. அதோடு, ட்விட்டரை அவர் கையகப்படுத்துதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டது.

பின்னர் ஏப்ரல் 25ஆம் தேதி ஈலோன் மஸ்கின் ஒப்பந்தத்தை ஏற்பதாக ட்விட்டர் அறிவித்தது.

 

மஸ்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ட்விட்டர் தன்னுடைய பாதையை இழந்துவிட்டதாக தெரிவித்த ஈலோன் மஸ்க், அந்தத் தளத்தில் பேச்சு சுதந்திரம் கட்டுப்படுத்துவதாகவும், பேச்சு சுதந்திரத்திற்கான தளமாக அது இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

கனடாவின் வான்கூவரில் நடந்த TED2022 மாநாட்டில் ஒரு நேர்காணலில் பேசிய ஈலோன் மஸ்க், பொருளாதாரத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை என்று கூறினார்.

ஒப்பந்தம் இறுதியான சில வாரங்களில் தொழில்நுட்ப பங்குகள் சரிந்ததால் ட்விட்டரின் பங்கும் சரிந்தது. இதனால் ட்விட்டருக்கு ஈலோன் மஸ்க் அதிக விலை கொடுத்துள்ளாரோ என்று ஆய்வாளர்கள் கேள்வியெழுப்பத் தொடங்கினர்.

ட்விட்டரில் எத்தனை உண்மையான கணக்குகள் உள்ளன என்று பொதுவெளியில் ஈலோன் மஸ்க் கேள்வியெழுப்பினார். ட்விட்டர் தளத்தில் உள்ள ஸ்பேம் கணக்குகள் குறித்து பல ஆண்டுகளாகவே அவர் தொடர்ந்து புகார் கூறிவருகிறார்.

 

மஸ்க்

பட மூலாதாரம்,ELON MUSK

தன்னுடைய ஒப்பந்தம் ஏற்கப்பட்டதும், ட்விட்டரில் உள்ள உண்மையான கணக்குகளின் தரவுகளை வழங்குமாறு தொடர்ந்து அந்நிறுவனத்திடம் ஈலோன் மஸ்க் கேட்டுவந்தார்.

தோராயமான மாதிரி கணக்குகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் தினசரி பயனர்களில் 5 சதவிகிதத்திற்கும் குறைவானது ஸ்பேம் கணக்குகள் என்று ட்விட்டர் தெரிவித்தது. இது ஈலோன் மஸ்கிற்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த எண்ணிக்கை எப்படி கணக்கிடப்பட்டது என்ற விவரங்களை நீண்ட பதிவாக பாரக் அகர்வால் ட்விட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், அதற்குப் பதிலளித்த ஈலோன் மஸ்க் மலத்தின் எமோஜியை பதிவிட்டார்.

பின்னர், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஜூலை 8ஆம் தேதி ஈலோன் மஸ்க் அறிவித்தார்.

அவர் இந்த ஒப்பந்தத்தை விட்டு விலக நினைத்தாரா அல்லது பொருத்தமான தொகையில் இந்த ஒப்பந்தத்தை முடிக்க நினைத்தாரா என்பதற்கு பதில் கூறுவது கடினம்.

ஆனால், ட்விட்டரை வாங்கும் முடிவில் இருந்து ஈலோன் மஸ்க் பின்வாங்க முடியாது என அந்நிறுவனம் வாதிட்டது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இரு தரப்பிலும் செல்வாக்கான வழக்கறிஞர்கள் வாதிட்டனர். தங்களது உண்மையான பயனர்கள் குறித்த போதுமான விவரங்களை அளித்துள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் ட்விட்டர் தெரிவித்திருந்தது.

ஆனால், ட்விட்டர் கூறியதைவிட அதிகமான ஸ்பேம் கணக்குகள் இருக்கலாம் என ஈலோன் மஸ்க் தரப்பு வாதிட்டது. மேலும், ட்விட்டர் மோசடி செய்ததாகவும் ஈலோன் மஸ்க் தரப்பு குற்றம்சாட்டியது.

பொதுமக்களின் விமர்சனமும் ட்விட்டர் நிறுவனத்தை பாதித்தது. ட்விட்டரின் வருவாயில் பெரும்பகுதி விளம்பரங்கள் மூலமாகவே வருகிறது. இதனால் நம்முடைய விளம்பரங்கள் எத்தனை உண்மையான மக்களுக்கு காட்டப்படுகின்றன என்று விளம்பரதாரர்கள் யோசிக்கத் தொடங்கினர்.

இது ட்விட்டரின் தலைமையகத்திலும் கவனத்தை சிதறடித்தது. சில ஊழியர்கள் தலைமை நிர்வாக அதிகாரியாக ஈலோன் மஸ்க் வருவதை விரும்பினர். பலர் தனிப்பட்ட முறையிலும், சிலர் பகிரங்கமாகவும் இது நிறுவனத்தின் பரந்த இலக்குகளுக்கு பேரழிவாக அமையும் என்று கூறினார்.

ட்விட்டர் மீது இத்தனை குற்றச்சாட்டுகளை வைத்த பிறகும், திடீரென கடந்த அக்டோபர் 5ஆம் தேதி ட்விட்டரை வாங்குவது X என்ற "எவரிதிங் ஆப்" என்ற செயலியை உருவாக்குவதை துரிதப்படுத்தும் என ஈலோன் மஸ்க் ட்வீட் செய்தார்.

காணொளிக் குறிப்பு,

ஈலோன் மஸ்க் ட்விட்டர் அலுவலகத்துக்குள் நுழைந்த முதல் நாளில் செய்தது என்ன?

அவரது இந்த மனமாற்றத்திற்கு என்ன காரணம்? ஒரு வேளை நீதிமன்ற வழக்கில் தாம் தோற்றுவிடுவோம் என அவர் நினைத்திருக்கலாம். இந்த முடிவை அறிவிப்பதற்கு சில தினங்களுக்கு முன்பாக, அவர் ட்விட்டர் தரப்பு வழக்கறிஞர்களின் விசாரணை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒருவேளை அந்தக் கடினமான குறுக்கு விசாரணையை அவர் தவிர்க்க விரும்பியிருக்கலாம்.

என்ன காரணமாக இருந்தாலும் சரி, ஈலோன் மஸ்கின் இந்த முடிவை ட்விட்டரும் பெரிய அளவில் கொண்டாடவில்லை. ஈலோன் மஸ்குடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி விலை மற்றும் விதிமுறைகளின் பரிவர்த்தனையை முடிக்க நிறுவனம் உறுதிகொண்டுள்ளது என ட்விட்டரின் தலைவரான பிரட் டெய்லர் ட்வீட் செய்தார்.

https://www.bbc.com/tamil/global-63419085

  • கருத்துக்கள உறவுகள்

டுவிட்டரை வாங்கினார் எலோன் மஸ்க் ; பிரதம நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் பதவி நீக்கம்

By T. Saranya

28 Oct, 2022 | 10:50 AM
image

எலான் மஸ்க் ஒப்பந்தம் முடிந்தவுடன் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார்.

உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை, கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில்  வாங்க முன்வந்தார். 

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி இன்றைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என எலான் மஸ்க் தனது துணை முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகின. 

எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்த ஒப்பந்தம் போட்டார்.

அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் சுமார் 44 பில்லியனுக்கு வாங்குவதாக அறிவித்தார். 

பின்னர் சில வாரங்களிலேயே அதில் இருந்து பின் வாங்கினார். டுவிட்டர் நிறுவனம் போலி கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க மறுப்பதால் மேற்கொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியாது என்றார்.

இதனை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. ஒப்பந்தத்தை தட்டிக்கழிக்க இது போன்ற காரணங்களை எலான் மஸ்க் கூறுவதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக்டோபர் 28-க்குள் (இன்று) ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது.

எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை மாலைக்குள் டுவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டொலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கை சந்திக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள டுவிட்டரின் தலைமையகத்திற்கு நேற்று சென்றார். அவர் தனது கையில் கை கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி (சிங்க்) ஒன்றை சுமந்து சென்று ஆச்சரியப்படுத்தினார்.

இந்நிலையில், இன்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, ஒப்பந்தம் முடிந்து எலான் மஸ்க் டுவிட்டரின் உரிமையாளரானார் என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தார். ஒப்பந்தம் முடிந்தவுடன் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
 

https://www.virakesari.lk/article/138564

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

மேலும், ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தார். ஒப்பந்தம் முடிந்தவுடன் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

75% ஆன தற்போது டுவிட்டரில் வேலை செய்பவர்கள் பதவி நீக்கப்படலாம் என்றொரு செய்தியும் உலாவுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, nunavilan said:

75% ஆன தற்போது டுவிட்டரில் வேலை செய்பவர்கள் பதவி நீக்கப்படலாம் என்றொரு செய்தியும் உலாவுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

அநேகமான நிறுவனங்களில்... புது நிர்வாகம் வந்த பின், 
பழையவர்களை தவிர்க்கவே விரும்புவார்கள்.
பழையவர்களை வைத்துக் கொண்டு, 
புதிய மாற்றங்களை செய்வது கடினமாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

அநேகமான நிறுவனங்களில்... புது நிர்வாகம் வந்த பின், 
பழையவர்களை தவிர்க்கவே விரும்புவார்கள்.
பழையவர்களை வைத்துக் கொண்டு, 
புதிய மாற்றங்களை செய்வது கடினமாக இருக்கலாம்.

ருவிற்றரை தொடர்ந்து பாவிக்கலாமா? ஊர்க்கிழவி என்ன சொல்லுறா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

ருவிற்றரை தொடர்ந்து பாவிக்கலாமா? ஊர்க்கிழவி என்ன சொல்லுறா?

Gifs In Twitter GIFs | Tenor

வருகிற பொங்கல் மட்டும்....  ருவிட்டருக்கு, ஏழரை நடக்குதாம். 🤣
அது வரை... ஒண்டையும் நோண்டாமல், கையை...சும்மா வைத்துக் கொண்டு    
பொறுமையாக இருக்கட்டாம். 

👆  பகிடிக்கு எழுதியது. 👆  😂

  • கருத்துக்கள உறவுகள்

பல. ஐடிகளை வைத்து விளையாட்டு காட்டுபவர்களை விரைவில் எலன் மஸ்க் இனம் கண்டு நீக்குவாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

எலான் மாஸ்கின் அப்பன் ஆத்தை ஆபிரிக்காவில் சுரங்கங்களிலிருந்து தாதுக் கனிமங்களை வெட்டி எடுக்கும் தொழில் செய்யும் பெரும் பணக்காரர்கள் எதிலையும் முதலிடலாம் டெஸ்லா நிறுவனத்தின் ஆரம்பத்தில் இவர் ஒன்றும் சின்னச் சின்னதா பங்குகளை வாங்கி கஸ்டப்பட்டு முன்னேறவில்லை.

ருவீட்டரை வாங்கிவிட்டார் அது நட்டத்தில போனாலும் இலாபத்தில போனாலும் ஒரு பிரச்சனையும் இல்லை இப்போ அவர் உலகப் பணக்காரனில் முதன்மையானவர்.

டோக்ஜி காயின் எனும் ஒரு மீம் கிருப்டோ கரன்சியை ஒரே இரவில் விலையை ஏத்திவிடும்படி செய்தவர் இப்போ ருவீற்றர் நேற்றைய தினம் கைக்கு வந்ததும் டோக்ஜி காயின் விலை ஏறுது. ஏன் எண்டு கேட்டால் டுவீட்டருக்கும் இந்தக் காயினுக்கும் ஏதோ தொடர்பு இருக்கு எனக் கதையை கட்டி விட்டுட்டாங்கள்

கிரிப்டோ மார்க்கற் இப்போ இறங்கு முகம்  ஆனால் எதைத் திண்டால் பித்தம் இறங்கும் எனத் தெரியாமல் டோக்ஜி காயினிலை காசைப் போடுகினம்

இங்கை யாழ் களத்தில யாரோ இறங்கு முகம் இருக்கும்போதுதான் கிரிப்டோவில் முத்கலீடு செய்யவேண்டும் என் முணுமுணிப்பது எனக்கும் தெரியுது ஆனால் முதலீடு செய்தால் வெப் 3 காயினில் குறைந்தது போல்கா டாட்டில் முதலீடு செய்யுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் mid term தேர்தல் மற்றும் 2024 அதிபருக்கான தேர்தலை நோக்காக்க்கொன்று இதை வாங்கியிருக்கிறார். இதில் Kanye west இன் influence உம் உன்று. மஸ்க்கிற்கு டீ சாண்டீசை ஆதரிக்க விருப்பம் ஆனால் டிரம்ப்பின் ஆதிக்கத்தைப் பொறுத்து இவர் தனது ஆதரவை அறிவிப்பார். மொத்தத்தில் இது குடியரசு கட்சியின் நன்மைக்காக வாங்ப்பட்டது அதனால் இது உண்மையாக மஸ்க்கின் பணமா என்று தாரியவில்லை.

டிரம்ப், கான்யே நட்பு கடைசியில் இவரை ஒன்றுமில்லாதவராக்கப்போகிறது. ( I hate trump and MAGA party )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீராம் கிருஷ்ணன்: ட்விட்டரில் ஈலோன் மஸ்க்கின் வலது கரமாகும் சென்னை இளைஞர் யார்?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஸ்ரீராம் கிருஷ்ணன்

பட மூலாதாரம்,SRIRAM KRISHNAN

 

படக்குறிப்பு,

ஸ்ரீராம் கிருஷ்ணன்

 

Red line

• ட்விட்டரை ஈலோன் மஸ்க் தன்வசமாக்கும் நடைமுறையை நிறைவேற்றினார்.

• ட்விட்டரில் இருந்து தலைமை நிர்வாக அதிகாரி உட்பட பல மூத்த நிர்வாகிகளை மஸ்க் நீக்கினார்.

• ட்விட்டரை $4.4 பில்லியனுக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் 2022, ஏப்ரலில் ஈலோன் மஸ்க் கையெழுத்திட்டார்.

• பின்னர் ஜூலையில் அவர் தனது மனதை மாற்றிக்கொண்டு, கொள்முதல் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற விரும்புவதாகக் கூறினார்.

 

• பின்னர் அக்டோபரில், மஸ்க் மீண்டும் கையகப்படுத்தும் செயல்முறையைத் தொடங்கி சில தினங்களுக்கு முன்பு அந்த பணியை முடித்தார்.

 

Red line

ட்விட்டரை வாங்கிய ஈலோன் மஸ்க், அந்த நிறுவனத்தில் தீவிர சீர்திருத்தங்களுக்கான வாய்ப்புக்கதவைத் திறந்து விட்டுள்ளார். இதுநாள்வரை ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வாலை, அந்தப் பொறுப்பில் இருந்து ஈலோன் மஸ்க் நீக்கினார்.

இப்போது அதே ஈலோன் மஸ்க் மற்றொரு இந்தியரின் உதவியை நாடியிருக்கிறார்.

அந்த இந்தியரின் பெயர் ஸ்ரீராம் கிருஷ்ணன். சென்னையில் பிறந்த இந்த இந்திய - அமெரிக்க பொறியாளர் இப்போது ஈலோன் மஸ்க்கின் முக்கிய குழுவில் உறுப்பினராக உள்ளார்.

மஸ்க் உடன் இணைந்து பணியாற்றும் ஸ்ரீராம் கிருஷ்ணன் தனது ட்விட்டர் கணக்கில் இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ஆனால், இந்த ஏற்பாடு தற்காலிகமானது என்று அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ஸ்ரீராம் கிருஷ்ணன் கருத்து

தொழில்முறை பொறியியலாளரான ஸ்ரீராம் கிருஷ்ணன், ட்விட்டர் நிறுவனத்திற்காக ஈலோன் மஸ்க்குடன் ஒத்துழைப்பதாக தனது சமீபத்திய ட்வீட்டில் கூறியுள்ளார்.

"நான் ஈலோன் மஸ்க்கிற்கு தற்காலிக அடிப்படையில், வேறு சில பெரியவர்களுடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். இது ஒரு மிக முக்கியமான நிறுவனம் என்று நான் நம்புகிறேன். ட்விட்டர் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது ஈலோன் மஸ்க் தலைமையில்தான் நடக்கும்" என்று ஸ்ரீராம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீராம், ஆண்ட்ரீசென் ஹாரோவிட்ஸ் எனப்படும் A16z என்ற முதலீட்டு நிறுவனத்தில் கூட்டாளியாக இருக்கிறார். இந்த நிறுவனம் பல கிரிப்டோ நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

மற்றொரு ட்வீட்டில், தாம் இன்னும் தற்போதைய நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகக் கூறியுள்ளார் ஸ்ரீராம்.

அதில் அவர் "நீங்கள் ஒரு கிரிப்டோ நிறுவனராக இருந்தால், என்னை எப்படி கண்டுபிடிப்பது என்பது உங்களுக்குத் தெரியும்!" என்று தெரிவித்துள்ளார்.

 

aarthi, Sriram krishnan

பட மூலாதாரம்,SRIRAMKRISHNAN/TWITTER

ஸ்ரீராம் கிருஷ்ணன் யார்?

a16z இணையதளத்தில் உள்ள விவரங்களின்படி, ஸ்ரீராம் கிருஷ்ணன் பணிபுரியும் நிறுவனத்தில், அவர் a16z என்று அழைக்கப்படும் 'Andreesen Horowitz' இல் பங்குதாரர்.

ஸ்ரீராம் 'ஆண்ட்ரீசன் ஹோரோவிட்ஸ்' மூலம் பல்வேறு நுகர்வோர் ஸ்டார்ட்அப்களில் அவர் முதலீடு செய்துள்ளார்.

பிட்ஸ்கி, ஹாபின், பாலிவொர்க் போன்ற நிறுவனங்களின் வாரியங்களில் ஸ்ரீராம் உறுப்பினராகவும் உள்ளார். இருப்பினும், a16zஇல் சேருவதற்கு முன்பு ஸ்ரீராம் ட்விட்டர் உட்பட பல பெரிய நிறுவனங்களில் பணியாற்றினார்.

ட்விட்டரில் நுகர்வோர் குழுக்களை வழிநடத்திய ஸ்ரீராம், அந்த நிறுவனத்தில் பயனர் அனுபவம், தேடல், கண்டுபிடிப்பு மற்றும் பார்வையாளர்களின் வளர்ச்சி ஆகிய பிரிவுகளைக் கையாண்டார்.

ஃபேஸ்புக் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான மொபைல் விளம்பர தயாரிப்புகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

உண்மையில் ஸ்ரீராமின் தொழில் வாழ்க்கை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தொடங்கியது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் விண்டோஸ் அஸூர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஸ்ரீராம் கவனித்து வந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

சென்னையில்படிப்பு

ஸ்ரீராம் கிருஷ்ணன் 2001-2005 வரை சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பி.டெக் படித்தார். பிறகு 2017 முதல் 2019 வரை ட்விட்டரில் பணியாற்றினார்.

ட்விட்டரின் முக்கிய நுகர்வோர் குழுவின் தலைவராக ஸ்ரீராம் இருந்த காலத்தில் அந்நிறுவனம் 20 சதவீதம் வளர்ச்சி கண்டது.

ஸ்ரீராம் 2013-2016க்கு இடையில் மெட்டாவில் (பேஸ்புக்) பணிபுரிந்ததாக அவரது லிங்க்டின் சுயகுறிப்பு கூறுகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 2005 முதல் 2011 வரை அவர் பணியாற்றினார்.

நுகர்வோர் தொழில்நுட்பங்கள், கிரிப்டோகரன்சிகள் முதலீட்டுத்துறையில் ஸ்ரீராம் ஆர்வமாக உள்ளார்.

 

ஸ்ரீராம் கிருஷ்ணன்

பட மூலாதாரம்,SRIRAMKRISHNAN/TWITTER

 

படக்குறிப்பு,

மனைவி ஆர்த்தியுடன் ஸ்ரீராம்

குடும்பத்தில் யார், யார்?

ஸ்ரீராம் சென்னையில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அம்மா ஒரு இல்லத்தரசி.

ஸ்ரீராமின் மனைவி பெயர் ஆர்த்தி. 2002இல், இந்த ஜோடி யாஹூ மெசஞ்சர் மூலம் சந்தித்தனர். பின்னர் திருமணம் நடந்தது. இவர்களது திருமணம் நடந்து 20 ஆண்டுகள் ஆகின்றன.

2005ஆம் ஆண்டில், தனது 21 வயதில், ஸ்ரீராம் அமெரிக்காவின் சியாட்டிலுக்கு குடிபெயர்ந்தார். அங்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார்.

ஸ்ரீராமும் அவரது மனைவி ஆர்த்தியும் சேர்ந்து தி குட் டைம் ஷோ என்ற யூடியூப் சேனலை தொடங்கினார்கள். 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த தம்பதி ஈலோன் மஸ்கை ஒரு நள்ளிரவு கேளிக்கை நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர்.

ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதன் மூலம் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஈலோன் மஸ்க் ஒப்புக் கொண்டதாக ஸ்ரீராம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழிடம் கூறியிருந்தார். சில வருடங்களுக்கு முன்பு இந்த தம்பதி ஈலோன் மஸ்கை அவரது ஸ்பேஸ் எக்ஸ் தலைமையகத்தில் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் உள்ளது.

 

ஸ்ரீராம் கிருஷ்ணன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இப்போது ட்விட்டரின் CEO யார்?

பராக் அகர்வால் சிஇஓ பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி யார் என்ற விவாதம் தொடங்கியிருக்கிறது. இருப்பினும், ஈலோன் மஸ்க் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநராக இருப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

மஸ்க் அனைத்து இயக்குநர்களையும் குழுவிலிருந்து நீக்கியதால், அவர் இப்போது தனது சொந்த நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.

ட்விட்டரில் உள்ள அம்சங்களை அவர் மாற்றப்போவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.bbc.com/tamil/india-63477121

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈலோன் மஸ்க் ட்விட்டர் ப்ளூ டிக் பெற 8 டாலர் நிர்ணயிப்பதாக அறிவிப்பு - கொதிக்கும் பிரபலங்கள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,REUTERS

ஈலோன் மஸ்க், ட்விட்டர் பயனர்களில், தனது பெயருக்கு அருகே கணக்கு ட்விட்டரால் உறுதி செய்யப்பட்டது என்பதைக் குறிக்கும் ப்ளூ டிக் அங்கீகாரம் கொண்டவர்களுக்கு மாதம் 8 டாலர் வசூலிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

சமூக ஊடக தளமான ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்திய பிறகு செய்யவுள்ள மாற்றங்களின் ஒரு பகுதியாக, "ஸ்பேம்/ஸ்கேம் போன்றவற்றை வீழ்த்துவதற்கு இது அவசியம்," எனக் கூறினார் மஸ்க்.

ட்விட்டரால் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளில், பயனர் பெயருக்கு அடுத்துள்ள நீல நிற டிக் குறி இப்போது இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை நம்பகத்தன்மை வாய்ந்த ஆதாரங்களை, நபர்களை அடையாளம் காண்பதைக் கடினமாக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

 
Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

உலகின் மிகப்பெரிய பணக்காரரான மஸ்க், பணம் செலுத்தும் பயனர்களுக்கு பதில்கள், தேடல்களில் முன்னுரிமை மற்றும் விளம்பரங்களில் முன்னுரிமை இருக்கும் என்று கூறினார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் கையில் அதிகாரம்! மாதம் 8 டாலருக்கு ப்ளூ," என்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார். பழைய ப்ளூ டிக் சரிபார்ப்பு முறையை, "நிலவுடைமை சமுதாயத்தில் பிரபுக்களின் கீழ் விவசாயிகள் இருப்பது போன்ற அமைப்பு" என்று அவர் விமர்சித்தார்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

ப்ளூ டிக் பயனர்களை சரிபார்க்கும் ட்விட்டரின் முந்தைய முறை, ஒரு குறுகிய இணைய விண்ணப்ப படிவத்தை உள்ளடக்கியது. பிரபலங்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் போன்ற ஆள்மாறாட்டத்திற்கு ஆளாகக்கூடிய இலக்குகளாக இருப்பவர்களுக்கு என ஒதுக்கப்பட்டது.

ட்விட்டர் நிறுவனம், 2009ஆம் ஆண்டில் இந்த முறையை அறிமுகப்படுத்தியது. போலி கணக்குகளைத் தடுக்க இந்நிறுவனம் போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வழக்கையும் எதிர்கொண்ட பிறகு இந்த முறையைக் கொண்டுவந்தது.

ஆனால், பல ஆண்டுகளாக லாபம் ஈட்டாத ட்விட்டரின் வணிகத்தை மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஈலோன் மஸ்க், கடும் சவாலை எதிர்கொள்கிறார்.

சில நிறுவனங்கள் தனது தலைமையின் கீழ் தளத்தில் விளம்பரம் செய்யக் காத்திருக்கும் நிலையிலும், ட்விட்டர் விளம்பரங்களை நம்பியிருப்பதைக் குறைக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

அவருடைய எலெக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லாவின் போட்டியாளரான ஜெனரல் மோட்டார்ஸ், கடந்த வாரம் ட்விட்டரில் அதன் விளம்பரங்களை வெளியிடுவதை நிறுத்தி வைப்பதாகக் கூறியது.

 

ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதற்கிடையில், வேறு சில முக்கிய நிறுவனங்கள், ஈலோன் மஸ்க் மேற்கொள்ளும் மாற்றங்கள் எப்படிச் செயல்படப் போகின்றன என்பதைப் பார்க்க காத்திருப்பதாகவும் அதற்கு இடைப்பட்ட காலத்தில் ட்விட்டரில் தற்காலிகமாக தங்கள் விளம்பரங்களை அவை நிறுத்திவிட்டன என்றும் ஒரு முன்னணி விளம்பர நிறுவனத்திற்கான ஊடக விளம்பரங்களை வாங்குபவர் பிபிசியிடம் கூறினார்.

திங்கட்கிழமையன்று, உலகின் மிகப்பெரிய விளம்பர நிறுவனங்களில் ஒன்றான ஐபிஜி, ட்விட்டரில் "நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை" உறுதி செய்வதற்கான திட்டங்களில் கூடுதல் தெளிவு தேவை எனக் கூறி, தனது வாடிக்கையாளர்களுக்கு அந்தத் தளத்தில் விளம்பரங்களை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு அறிவுறுத்தியது. உலகின் மிகப் பெரிய பிராண்டுகள் சிலவற்றின் சந்தைப்படுத்தலுக்கான வரவு செலவுகளைக் கையாள, ஐபிஜி நிறுவனத்திற்கு ஓராண்டுக்கு ஒரு பில்லியன் பவுண்டுகள் வழங்கப்படுகிறது.

ப்ளூ டிக் சலுகைகளுக்கான கட்டணம் மாதந்தோறும் 20 டாலராக இருக்கலாம் என்று கூறிய அசல் அறிக்கை, ப்ளூ டிக் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

தளத்தில் பலரும் எழுத்தாளர் ஸ்டீஃபன் கிங், இந்த மாற்றங்களுக்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில், "எனக்கு ட்விட்டர் தான் பணம் செலுத்த வேண்டும்" என்று எழுதினார். அதைப் பலரும் வழிமொழிந்தனர்.

அதற்கு மஸ்க், "எப்படியாவது நாம் பில்களை செலுத்தியாக வேண்டுமே!" என்று பதிலளித்தார்.

https://www.bbc.com/tamil/global-63481557

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டுவிட்டரின் விளம்பர விற்பனைப் பிரிவின் தலைவர் பதவி விலகினார்

By T. SARANYA

02 NOV, 2022 | 04:20 PM
image

டுவிட்டரின் விளம்பர விற்பனைப்பிரிவின் தலைவர் சாரா பெர்சனெட் தான் பதவி விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் 44 பில்லியன் டொலர் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார்.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய பிரதம நிறைவேற்று அதிகாரியான இந்திய வம்சாவளி பராக் அக்ரவால், பிரதம நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட 4 முக்கிய நிர்வாகிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.

இந்நிலையிலேயே சாரா பெர்சனெட்  விளம்பர விற்பனைப்பிரிவின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

தனது பதவி விலகல் தொடர்பில் டுட்டர் பதிவில், 

"வணக்கம் நண்பர்களே, நான் ட்விட்டரில் இருந்து வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்ததையும், எனது பணிக்கான அணுகல் நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக துண்டிக்கப்பட்டதையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்."

"தலைவராகவும் கூட்டாளராகவும் உங்கள் அனைவருக்கும் சேவை செய்வது மிகப்பெரிய பாக்கியம். பலர் நான் இதைச் சொல்வதைக் கேட்டிருக்கிறார்கள், ஆனால் நிறுவனத்தில் நான் ஆற்றிய மிக முக்கியமான பங்குதர அடையாள பாதுகாப்பின் தேவைகளை வென்றெடுப்பதாகும்" என அவர் மேலும் கூறினார்.

அவர் ஏன் ட்விட்டரில் இருந்து ராஜினாமா செய்தார் என்பதை பெர்சனெட் தெரிவிக்கவில்லை. 

அவர் தனது ட்வீட்டில், புதிய நிர்வாகம் பொறுப்பு வாய்ந்த ஊடகத்திற்கான உலகளாவிய கூட்டணியின் (GARM) தரத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/138970

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டுவிட்டர் நிறுவனத்துக்கு எதிராக ஊழியர்கள் வழக்கு

By DIGITAL DESK 3

04 NOV, 2022 | 05:21 PM
image

டுவிட்டர் நிறுவனத்திலிருந்து சுமார் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு  அந்நிறுவனத்தின் புதிய அதிபர் இலோன் மஸ்க் முன்வைத்துள்ள திட்டத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உலகின் முதல்நிலை கோடீஸ்வரரான இலோன் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான நடவடிக்கைகளை, கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி பூர்த்தி செய்தார்.

அதன்பின் டுவிட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பராக் அகர்வால் உட்பட உயர் அதிகாரிகளை அதிரடியாக நீக்கியதுடன் பணிப்பாளர் சபையையும் இலோன் மஸ்க் கலைத்தார். 

டுவிட்டரின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்றுள்ள இலோன் மஸ்க், அந்நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 7,000 ஊழியர்களில் சுமார் 3,700 பேரை பணியிலிருந்து நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஊழியர்கள் பணியிலிலிருந்து நீக்கப்படுவார்களா என்பது குறித்து, கலிபோர்னியா மாநில நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை (04) மின்னஞ்சல் ஊடாக ஊழியர்களுக்கு தகவல் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தீர்மானத்துக்கு எதிராக கலிபோர்னியாவிலுள்ள சமஷ்டி நீதிமன்றமொன்றில் ஊழியர்கள் பலரினால் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (03) வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டுவிட்டர் நிறுவனத்தின் தீர்மானமானது, அமெரிக்க சமஷ்டி அரசாங்க சட்டம் மற்றும் கலிபோர்னியா மாநில சட்டங்களை மீறுவதாக உள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பெரிய நிறுவனங்கள் குறைந்தபட்சம் 60 நாட்கள் முன்னறிவிப்பு இன்றி ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு தடை விதிக்கும் சட்டத்தின் அடிப்படையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இச்சட்டத்தை இலோன் மஸ்க் பின்பற்றுவதற்கும், வழக்குத் தொடுக்கும் உரிமையை கைவிடச் செய்யும் ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு ஊழியர்களை வற்புறுத்துவதிலிருந்து நிறுவனத்தை கட்டுப்படுத்துவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/139156

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்லாவின் 143,417 கோடி ரூபா பெறுமதியான பங்குகளை விற்றார்

By DIGITAL DESK 3

09 NOV, 2022 | 03:35 PM
image

உலகின் முதல்நிலை செல்வந்தரான இலோன் மஸ்க், தனது மின்சார வாகனத் தயாரிப்;பு நிறுவனமான டெஸ்லாவின் மேலும் சுமார் 4 பில்லியன் டொலர்கள் (சுமார் 143,417 கோடி இலங்கை ரூபா / 32,167 கோடி இந்திய ரூபா) பெறுமதியான பங்குகளை விற்பனை செய்துள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தை அண்மையில் 44 பில்லியன் டொலர்களுக்கு இலோன் மஸ்க் வாங்கினார். அதற்கான பணத்தை திரட்டுவதில் பல்வேறு வழிகளை இலோன் மஸ்க் ஆராய்ந்து வருகிறார்.

இதற்காக பல பில்லியன் டொலர்களை அவர் கடனாக வாங்கியதுடன், இதற்கு முன்னரும் டெஸ்லாவின் 15.5 பில்லியன் டொலர் பெறுமதியான பங்குகளை அவர் விற்பனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அமெரிக்க பங்குபரிவர்த்தனை ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி  டெஸ்லா நிறுவனத்திலிருந்து மேலும் 3.95 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பங்குகளை இலோன் மஸ்க் விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதம் இலோன் மஸ்க் அறிவித்தார். எனினும், பின்னர் அதிலிருந்து அவர் பின் வாங்க முயற்சித்தார். 

போலி டுவிட்டர் கணக்குகள் குறித்து டுவிடர் நிர்வாகம் தன்னை தவறாக வழிநடத்தியதாகக் கூறிய மஸ்க், அந்த நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்கு கடந்த ஜூலை மாதம் அவர் முற்பட்டார். 

இக்குற்றச்சாட்டை நிராகரித்த டுவிட்டர் நிர்வாகம், மேற்படி ஒப்பந்தப்படி செயற்படுமாறு இலோன் மஸ்கை நிர்ப்பந்திப்பதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/139550

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ப்ளூ டிக் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தியது டுவிட்டர்

By T. SARANYA

12 NOV, 2022 | 12:44 PM
image

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய திட்டமான மாதம் 8 டொலருக்கு ப்ளூ டிக் அடையாளத்தை பெற்றுக்கொள்ளும் திட்டம்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எலன் மஸ்க்கின் கட்டுப்பாட்டில் சென்ற பிறகு வாடிக்கையாளர்களுக்கு மாத சந்தா திட்டம் அறிவித்து ப்ளூ டிக்கிற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

முக்கியப் பிரமுகர்கள், பிரபலங்கள், ஊடகவியாலளர்கள் போன்ற நம்பகமான மனிதர்களை பின்தொடர இந்த ப்ளூ டிக் முக்கிய அடையாளமாகக் கருதப்பட்டது.

ஆனால் கட்டணம் செலுத்திய பலர் போலிகணக்கு வைத்து உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது. போலியான நபர்களின் அடையாளங்கள் அதிகரித்துள்ள சூழலில் ப்ளூ டிக் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/139799

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புளூ டிக் கட்டண சேவை குறித்து இலான் மாஸ்க் விடுத்துள்ள அறிவிப்பு

By T. SARANYA

16 NOV, 2022 | 01:35 PM
image

டுவிட்டரில் புளூ டிக்கிற்கு கட்டண செலுத்தும் முறை வரும் 29 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளார்.

சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான இலான் மஸ்க் கடந்த ஒக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். 

இந்த டுவிட்டரை பயன்படுத்துவோருக்கான சிறப்பம்சங்களில் ஒன்றாக, தங்களுடையது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என உறுதிப்படுத்தி கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். 

இந்த புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம்  இனி மாதம் 8 டொலர்  கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது என விலை குறைப்பு செய்து இலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டார்.

கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவு செய்யலாம் என்ற சலுகைகளும் அறிவிக்கப்பட்டன.

டுவிட்டர் புளூ டிக் சேவையை பணம் கொடுத்து பெறும் யாராவது இதனை தவறாக பயன்படுத்தினால், அவர்கள் தங்களின் கட்டண தொகையை இழக்க நேரிடும் என்றும் அவர்களின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் இலான் மஸ்க் தெரிவித்தார்.

புளூ டிக் கட்டண சேவை அறிவிப்பை மஸ்க் வெளியிட்ட பின்னர், 2 நாட்களுக்குள் கடந்த 11 ஆம் திகதி அதனை தற்காலிக நிறுத்தம் செய்து வைத்தார். 

போலி கணக்குகள் புளூ டிக் சேவையுடன் இருப்பது பற்றி அறிந்ததும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சூழலில், புளூ டிக் கட்டண சேவை வருகிற 29 ஆம் திகதி மீண்டும் அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

https://www.virakesari.lk/article/140209

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுறுத்தல் என்பது மிகவும் பொறுப்பான வேலை.

இவர் தனது சொந்த அரசியல் கருத்தை திணிக்க, மட்டுறுத்தலை பாவிக்க தலைப்படுகிறார்.

சில விடயங்களில் ஆள் கெட்டிகாரன் போல தெரிந்தாலும், உக்ரேன் விடயத்தில் மிக பிழையான புரிதல் கொண்டு கருத்துக்களை வெளியிட்டு பல கருத்தாளர்களிடம் குட்டு வாங்கியுள்ளார்.

ஒரு நல்ல கருத்து பகிர் தளத்தை ர்ஒருவர் அதிகார துஸ்பிரயோகம் செய்து எப்படி பாழாக்கலாம் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

எலோன் மஸ்கைத்தான் சொல்கிறேன்.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

மட்டுறுத்தல் என்பது மிகவும் பொறுப்பான வேலை.

இவர் தனது சொந்த அரசியல் கருத்தை திணிக்க, மட்டுறுத்தலை பாவிக்க தலைப்படுகிறார்.

சில விடயங்களில் ஆள் கெட்டிகாரன் போல தெரிந்தாலும், உக்ரேன் விடயத்தில் மிக பிழையான புரிதல் கொண்டு கருத்துக்களை வெளியிட்டு பல கருத்தாளர்களிடம் குட்டு வாங்கியுள்ளார்.

ஒரு நல்ல கருத்து பகிர் தளத்தை ர்ஒருவர் அதிகார துஸ்பிரயோகம் செய்து எப்படி பாழாக்கலாம் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

எலோன் மஸ்கைத்தான் சொல்கிறேன்.

 

 

நம்பிட்டம் சகோ...🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

goshan

வணக்கம் கோசான் நீண்ட நாட்களின் பின் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

தனியே அரசியல் மட்டும் செய்யாமல் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு உங்கள் உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

மட்டுறுத்தல் என்பது மிகவும் பொறுப்பான வேலை.

இவர் தனது சொந்த அரசியல் கருத்தை திணிக்க, மட்டுறுத்தலை பாவிக்க தலைப்படுகிறார்.

சில விடயங்களில் ஆள் கெட்டிகாரன் போல தெரிந்தாலும், உக்ரேன் விடயத்தில் மிக பிழையான புரிதல் கொண்டு கருத்துக்களை வெளியிட்டு பல கருத்தாளர்களிடம் குட்டு வாங்கியுள்ளார்.

ஒரு நல்ல கருத்து பகிர் தளத்தை ர்ஒருவர் அதிகார துஸ்பிரயோகம் செய்து எப்படி பாழாக்கலாம் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

எலோன் மஸ்கைத்தான் சொல்கிறேன்.

 

உக்ரேன் விடயத்தில் கதைத்து சொதப்பினாலும் உக்ரேன் இன்னிவரைக்கும் தாக்கு பிடித்து நிற்ப்பதுக்கு முக்கிய காரணமே இவருடைய starlink satellite .

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

உக்ரேன் விடயத்தில் கதைத்து சொதப்பினாலும் உக்ரேன் இன்னிவரைக்கும் தாக்கு பிடித்து நிற்ப்பதுக்கு முக்கிய காரணமே இவருடைய starlink satellite .

உண்மை

3 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் கோசான் நீண்ட நாட்களின் பின் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

தனியே அரசியல் மட்டும் செய்யாமல் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு உங்கள் உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

வணக்கமும், நன்றியும் அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, goshan_che said:

மட்டுறுத்தல் என்பது மிகவும் பொறுப்பான வேலை.

இவர் தனது சொந்த அரசியல் கருத்தை திணிக்க, மட்டுறுத்தலை பாவிக்க தலைப்படுகிறார்.

சில விடயங்களில் ஆள் கெட்டிகாரன் போல தெரிந்தாலும், உக்ரேன் விடயத்தில் மிக பிழையான புரிதல் கொண்டு கருத்துக்களை வெளியிட்டு பல கருத்தாளர்களிடம் குட்டு வாங்கியுள்ளார்.

ஒரு நல்ல கருத்து பகிர் தளத்தை ர்ஒருவர் அதிகார துஸ்பிரயோகம் செய்து எப்படி பாழாக்கலாம் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

எலோன் மஸ்கைத்தான் சொல்கிறேன்.

 

அது வந்து நல்லொதொரு கருத்து பகிர் தளம்தான்....ஆனால் பாருங்கோ பிரச்சனை என்னெண்டால் புதிசாய் வரேக்க நல்ல பவ்வியமாய் மரியாதையாய் எழுதுவினம். பிறகு பழகப்பழக பாலும் புளிக்கும் எண்ட மாதிரி பெரிய கெப்பர் விட்டு எழுதுவினம். அவையளைத்தான் அப்பப்ப சாடையாய் செல்லமாய் குட்டுறவர் எண்டு நினைக்கிறன். நான் கனதரம் குட்டு வாங்கியிருக்கிறன்.....😂

நானும் எலோன் மஸ்கைத்தான் சொல்லுறன் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

அது வந்து நல்லொதொரு கருத்து பகிர் தளம்தான்....ஆனால் பாருங்கோ பிரச்சனை என்னெண்டால் புதிசாய் வரேக்க நல்ல பவ்வியமாய் மரியாதையாய் எழுதுவினம். பிறகு பழகப்பழக பாலும் புளிக்கும் எண்ட மாதிரி பெரிய கெப்பர் விட்டு எழுதுவினம். அவையளைத்தான் அப்பப்ப சாடையாய் செல்லமாய் குட்டுறவர் எண்டு நினைக்கிறன். நான் கனதரம் குட்டு வாங்கியிருக்கிறன்.....😂

நானும் எலோன் மஸ்கைத்தான் சொல்லுறன் :cool:

🤣 நீங்களும், நானும் வாங்காத குட்டுகளா, கீச்சகத்தில்.

குட்டு வைக்கும் மட்டு வேண்டாம் என்றால் எலோன் மட்டும் அல்ல, யாரும் மட்டுவாக இருக்க முடியாது.

ஆனால் இதுவல்ல இங்கே விடயம்.

எலோனுக்கு தான் கருத்தாளராக இருப்பது, தான் மட்டுவாக இருப்பது இரெண்டுக்கும் இடையான இடைவெளி தெரியவில்லை.

ரொம்ப உணர்சி வசபடுகிறார். 

கருத்து களத்தில் தர்க்கித்து முடியாமல் போனால் …ஓடிப்போய் அந்த நபர்களை வேலையை விட்டு நீக்குகிறார்.

ஒரு கருத்தாளரை பற்றி அபாண்டம் எழுதிவிட்டு…ஆதாரம் கேட்டல் அந்த கீச்சை விட்டே எஸ் ஆகி விடுகிறார். 

நிர்வாக விதிகள் என எழுத்தில் இருப்பதை பல தடவைகள் அவரே மீறுகிறார்.

தரவுகளை தப்பு தப்பாக எழுதுகிறார். ஆதாரத்தோடு நிறுவினால் எஸ் ஆகி விடுகிறார்.

தனது கருத்த்துக்கு ஏற்ப எழுதும் நண்பர்கள் என்ன அடாவடி செய்தாலும் கண்டு கொள்ளமாட்டார்.

அவருக்கு பிடிகாத கருத்தாளர் எழுதுவதை முழுவதும் வெட்டினால் கூட பரவாயில்லை, இடையிடையே வெட்டி, கருத்தாளர் சொல்லாததை சொன்னதாக சித்தரிக்கும் உள்ளடி வேலைகளை செய்கிறார்.

எது நகைசுவை, எது செய்தி என தெரியாமல் தடுமாறுகிறார்.

உறுதிபடுத்திய உண்மையா செய்தியை கூட அவருக்கு உவப்பாக இல்லை என்பதால் தூக்குகிறார். பொய் வதந்தியை அவரே முன்னுக்கு நின்று பரப்புகிறார்.

கீச்சகம் என்பது பகிடி விடும் தளம் அல்ல( என நம்புகிறேன்). அதன் லகானை கையில் பிடிக்க ஒரு லாவகம், அதைவிட முக்கியமாக தொடர்சியான விடய ஞானம் தேவைப்படுகிறது.

துரதிஸ்டவசமாக எலோனுக்கு அது மருந்துக்கும் இல்லை.

வேணும் எண்டால் ஒரு சவால்.

ஒரு ஆறுமாதம் எலோனை சுயமாக விலகி இருக்க சொல்லுங்கள். பொறுப்பை ஒரு/இரு பொருத்தமனாவர்களிடம் கொடுத்து விட்டு.

டிவிட்டர் பழைய பொலிவை நோக்கி விரைவாக நகருகிறதா இல்லையா என காண்பீர்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நேரம் வேலை செய்யுங்கள் அல்லது வெளியேறுங்கள்: டுவிட்டர் ஊழியர்களுக்கு இலோன் மஸ்க் காலக்கெடு

By DIGITAL DESK 3

17 NOV, 2022 | 05:14 PM
image

டுவிட்டர் நிறுவன ஊழியர்கள் நீண்ட நேரம், தீவிரமாக வேலை செய்ய வேண்டும் அல்லது நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டும் என அந்நிறுவனத்தின் புதிய உரிமையாளரான இலோன் மஸ்க் கூறியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான இலோன் மஸ்க், கடந்த மாத இறுதியில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். 

அதன்பின் உயர் அதிகாரிகள் பலரையும் பதவியிலிருந்து நீக்கிய அவர், அந்நிறுவனத்தின் 7500 ஊழியர்களில் அரைவாசிப் போரை வேலையிலிருந்து நீக்கினார். வீட்டிலிருந்து பணியாற்றும்  திட்டத்தையும் அவர் முடிவுக்கு கொண்டுவந்தார். 

இந்நிலையில், டுவிட்டர் ஊழியர்களுக்கு இலோன் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சலில், ஊழியர்கள் நீண்ட நேரம், கடினமாக வேலை செய்ய வேண்டும். அல்லது வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

இந்த நிபந்தனைக்கு இணக்கம் தெரிவிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு நியூ யோர்க்  நேரப்படி இன்று வியாழக்கிழமை மாலை 5 மணி (இலங்கை, இந்திய நேரப்படி வெள்ளி காலை 3.30 மணி) வரைஇலோன் மஸ்க் அவகாசம் வழங்கியுள்ளார்.

இதில் கையெழுத்திடாத ஊழியர்கள் 3 மாத சம்பளத்துடன் சேவையிலிருந்து நீக்கப்படுவார்கள் என இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/140387

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் எலோன் மஸ்க். யாழ் களத்திலேயே எலோனைக் காய்கிறார்கள். 

எலோன் உனக்கு உது தேவையா 🤣

 

 

Edited by Kapithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.