Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க காங்கிரஸில் குடியரசுக்கட்சி பலம்பெற்றால் உக்ரைனிற்கான அமெரிக்க உதவிக்கு பாதிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க காங்கிரஸில் குடியரசுக்கட்சி பலம்பெற்றால் உக்ரைனிற்கான அமெரிக்க உதவிக்கு பாதிப்பு

By RAJEEBAN

11 NOV, 2022 | 01:16 PM
image

அமெரிக்க காங்கிரஸில் குடியரசுக்கட்சியின் செல்வாக்கு அதிகரித்தால் உக்ரைனிற்கான  அமெரிக்காவின் இராணுவ உதவிகள் பாதிக்கப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி ஜோ பைடனின் தலைமைத்துவத்தின் கீழ் அமெரிக்காவே உக்ரைனிற்கு இதுவரை அதிகளவு ஆயுதங்களை வழங்கியுள்ளது.

அமெரிக்கா இதுவரை 18.5 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்கியுள்ளது.

us_arms_to_uk.jpg

ரஸ்ய படையினரை பி;ன்வாங்கச்செய்வதற்கு அவசியமான ஆயுதங்களை அமெரிக்கா உக்ரைனிற்கு வழங்கியுள்ளது.

இந்த ஆயுதங்களை பயன்படுத்தி வடக்கு கிழக்கில் ரஸ்யா மேற்கொண்ட தாக்குதல்களை உக்ரைன் முறியடித்துள்ளது.

அமெரிக்காவின் ஆதரவு பாரிய தாக்கம் செலுத்தியுள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையை அல்லது செனட்டை குடியரசுக்கட்சியினர் வென்றாலும் அதன் காரணமாக உக்ரைன் தொடர்பான பைடனனி;ன் நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம்.

உக்ரைனிற்கான பைடன் நிர்வாகத்தின் நிதி உதவி குறித்து குடியரசுக்கட்சி சமீபத்தில் தனது  விமர்சனங்களை அதிகரித்துள்ளது.

RTS5CWHQ.jpg

குடியரசுகட்சியை சேர்ந்த சிலர் இதனை தாங்கள் மாற்றப்போவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற குடியரசுகட்சியின் பேரணியில் காங்கிரஸ் உறுப்பினர் ஒரு சதம் கூட உக்ரைனிற்கு செல்லாது என தெரிவித்திருந்தார்.

இதேவேளை சனப்பிரதிநிதிகள் சபையை குடியரசுகட்சி கைப்பற்றினால்  அதன் சபாநாயகராக தெரிவு செய்யப்படவுள்ள கெவின்மக்கார்த்தி உக்ரைனிற்கான உதவிகள் குறித்து எச்சரித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸில் பலம் குறைந்தாலும் உக்ரைனிற்கான உதவிகள் தொடரும் என  ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/139733

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஏராளன் said:

அமெரிக்க காங்கிரஸில் குடியரசுக்கட்சி பலம்பெற்றால் உக்ரைனிற்கான அமெரிக்க உதவிக்கு பாதிப்பு

மேற்குலக வியாபார/விபச்சார ஊடகங்கள் ட்ரம்ப்...ட்ரம்ப் எண்டு பதறி பதறி நியூஸ் வாசிக்கேக்கையே விளங்குது....🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் சபையை குடியரசுக் கட்சி கைப்பற்றியது

By DIGITAL DESK 3

17 NOV, 2022 | 09:16 AM
image

அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுள்ளது.

அமெரிக்க காங்கிரஸின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையின் 435 ஆசனங்களுக்கும் கடந்த 8 ஆம்திகதி தேர்தல் நடைபெற்றது. 

இச்சபையில் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கு 218 ஆசனங்கள் தேவை. 

இந்நிலையில்,  முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி 218 ஆசனங்களை வென்றுள்ளதாக  பிரதான ஊடகங்கள் கணித்துள்ளன. அக்கட்சி மொத்தமாக 218 முதல் 223 வரையான ஆசனங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

ஜனநாயகக் கட்சிடி 210 ஆசனங்களை ‍ வென்றுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் மேல் சபையான செனட் சபையில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி ஓர் ஆசனத்தினால் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அக்கட்சி 50 ஆசனங்களை வென்றுள்ளதாக கணிப்பிடப்பட்டள்ளமை குறிப்பிடதக்கது.

https://www.virakesari.lk/article/140283

  • கருத்துக்கள உறவுகள்

பெரிதாக முடிவுகள் எடுக்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட உள்ளதாக அறிவித்தது அனைவரும் அறிந்ததே.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களாட்சிக்(ஜனநாயக)கோட்பாட்டில் இவையொன்றும் புதியவையல்ல. ஆனால் சில நாடுகள் மக்களாட்சிக் கோட்பாட்டின் பேரால் செய்யும் அழிவுகளே பாதகமானவை. 

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் சிவப்பு அலை - என எதிர்பார்க்கபட்ட ரிப்பப்லிகன் வெற்றி புஸ்வானமாகி, செனேட்டை டெமோகிரட்ஸ் தக்க வைத்துள்ளனர்.

காங்கிரசை கூட சில சீட் வித்தியாசத்தில்தான் கைப்பற்றுகிறனர். தேர்தலுக்கு முன் பலத்த வெற்றி எதிர்பார்க்கப்பட்டது.

பைடனின்  ரேட்டிங் அதளபாதாளத்தில், விலைவாசி உயர்வு இப்படி இருந்தும் வழமையாக எதிர்கட்சிகள் சோபிக்கும் மிட்டேர்மில் கூட ரிப்பப்ளிகன் சோபிக்கவில்லை.

டிரம்ப் ஆதரவு என அறிவித்த பல கவர்னர்கள், செனேட்டர்கள் படுதோல்வி.

ஆனால் ரிபப்ப்ளிகன் ஜனாதிபதி வேட்பாளராக வர டிரம்பின் சாவால் என கருதப்படும் டிசாண்டிஸ் புளோரிடாவில் அமோக வெற்றி.  

இனி டிரம்ப் மீதான இராணுவ ரகசிய வழக்கு, ஏனைய வழக்குகள் துரிதமாக, டிரம்பை ரஸ்யாவின் நண்பன் என உருவகிக்க,

டிசாண்டிசும், ரிப்பளிகன் பார்ட்டியும், டிரம்ப்பை கைவிட்டு, தமது தேசபற்றை நிரூபிக்க, மிக கடுமையான ரஸ்ய எதிர்பாளர்களா மாற வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.

கட்டாயம் நடக்கும் என்பதில்லை. ஆனால் வாய்பிருக்கு.

ஆனால் புட்டின் எப்படியாவது டிரம்பை வரவைக்க முனைவார். டிரம்ப் வந்தால் புட்டின் போரில் 90% வென்றமாதிரித்தான்.

ஆனால் கட்சி அரசியலுக்கு அப்பால் அமெரிக்க ஆழ் அரசு (deep state) இன்னொரு முறை டிரம்பை வரவிட்டு புட்டினிடம் தோற்க வாய்ப்பு குறைவு. ஆனால் நடக்கவே ஆகாது என சொல்ல முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரம்ப் வந்தால் நல்லது ...உலகம் கொஞ்சம் அமைதியாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

ரம்ப் வந்தால் நல்லது ...உலகம் கொஞ்சம் அமைதியாய் இருக்கும்.

🤣 ஆசை, தோசை, அப்பளம், வடை🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ரம்ப் வந்தால் நல்லது ...உலகம் கொஞ்சம் அமைதியாய் இருக்கும்.

டிரம்பின் Ultra MAGA ஆதரவாளர்களைப்பார்ததால் உங்களுக்கு டிரம்பின் குணம் தெரியும். டிரம்ப்பிற்கு தனக்குப்பின்தான் மற்தெல்லாம்.  அவனைப் போய் support பண்ணுகிறீர்களே😫. டிரம்ப்பும் அவனது ஆதரவாளர்களும் பக்கா இனவாதிகள். டிரம்ப் பதவிக்கு வந்தால் மற்றநாடுகளிலும் கடும்போக்கான வலதுசாரிகள் பதவிக்கு வருவார்கள் அதைத்தொடர்ந்து சிறுபான்மைகளுக்கெதிரான நிறவெறித்தாக்குதல்கள் அதிகமாகும்

Edited by ragaa

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ரம்ப் வந்தால் நல்லது ...உலகம் கொஞ்சம் அமைதியாய் இருக்கும்.

10 minutes ago, ragaa said:

டிரம்பின் Ultra MAGA ஆதரவாளர்களைப்பார்ததால் உங்களுக்கு டிரம்பின் குணம் தெரியும். டிரம்ப்பிற்கு தனக்குப்பின்தான் மற்தெல்லாம்.  அவனைப் போய் support பண்ணுகிறீர்களே😫

உக்ரைனுக்கு… கண், மண் தெரியாமல்..  சணல் அடி விழ வேணுமென்றால்,
பேய்க்கு கூட ஆதரவு கொடுப்பதில் தப்பில்லை. 
முதலில் இந்த சுத்துமாத்து கள்ளரை… முட்டிக்கு, முட்டி தட்டி வைக்க….
மாண்புமிகு அதி உத்தமர் ❤️ புட்டின் அவர்களும், ட்ரம்பும் தான்… ❤️
இந்த உலகத்திலேயே சிறந்த கெட்டிக்காரர்கள். 👍🏼 💪 🥰

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ragaa said:

டிரம்பின் Ultra MAGA ஆதரவாளர்களைப்பார்ததால் உங்களுக்கு டிரம்பின் குணம் தெரியும். டிரம்ப்பிற்கு தனக்குப்பின்தான் மற்தெல்லாம்.  அவனைப் போய் support பண்ணுகிறீர்களே😫. டிரம்ப்பும் அவனது ஆதரவாளர்களும் பக்கா இனவாதிகள். டிரம்ப் பதவிக்கு வந்தால் மற்றநாடுகளிலும் கடும்போக்கான வலதுசாரிகள் பதவிக்கு வருவார்கள் அதைத்தொடர்ந்து சிறுபான்மைகளுக்கெதிரான நிறவெறித்தாக்குதல்கள் அதிகமாகும்

ஏன் wrestling பார்க்க விரும்பாதவரா நீங்கள்???😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

பெரும் சிவப்பு அலை - என எதிர்பார்க்கபட்ட ரிப்பப்லிகன் வெற்றி புஸ்வானமாகி, செனேட்டை டெமோகிரட்ஸ் தக்க வைத்துள்ளனர்.

காங்கிரசை கூட சில சீட் வித்தியாசத்தில்தான் கைப்பற்றுகிறனர். தேர்தலுக்கு முன் பலத்த வெற்றி எதிர்பார்க்கப்பட்டது.

பைடனின்  ரேட்டிங் அதளபாதாளத்தில், விலைவாசி உயர்வு இப்படி இருந்தும் வழமையாக எதிர்கட்சிகள் சோபிக்கும் மிட்டேர்மில் கூட ரிப்பப்ளிகன் சோபிக்கவில்லை.

டிரம்ப் ஆதரவு என அறிவித்த பல கவர்னர்கள், செனேட்டர்கள் படுதோல்வி.

ஆனால் ரிபப்ப்ளிகன் ஜனாதிபதி வேட்பாளராக வர டிரம்பின் சாவால் என கருதப்படும் டிசாண்டிஸ் புளோரிடாவில் அமோக வெற்றி.  

இனி டிரம்ப் மீதான இராணுவ ரகசிய வழக்கு, ஏனைய வழக்குகள் துரிதமாக, டிரம்பை ரஸ்யாவின் நண்பன் என உருவகிக்க,

டிசாண்டிசும், ரிப்பளிகன் பார்ட்டியும், டிரம்ப்பை கைவிட்டு, தமது தேசபற்றை நிரூபிக்க, மிக கடுமையான ரஸ்ய எதிர்பாளர்களா மாற வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.

கட்டாயம் நடக்கும் என்பதில்லை. ஆனால் வாய்பிருக்கு.

ஆனால் புட்டின் எப்படியாவது டிரம்பை வரவைக்க முனைவார். டிரம்ப் வந்தால் புட்டின் போரில் 90% வென்றமாதிரித்தான்.

ஆனால் கட்சி அரசியலுக்கு அப்பால் அமெரிக்க ஆழ் அரசு (deep state) இன்னொரு முறை டிரம்பை வரவிட்டு புட்டினிடம் தோற்க வாய்ப்பு குறைவு. ஆனால் நடக்கவே ஆகாது என சொல்ல முடியாது.

பொதுவாக தற்போதுள்ள சூழலில் அமெரிக்காவுக்கு ட்ரம்ப் ஆட்சி பீடம் ஏறுவது பொருளாதார ரீதியாக உவப்பானது, வர்த்தக வரி குறைப்பு முக்கியமானது.

இரஸ்சியா பற்றி அமெரிக்கா அலட்டி கொள்ளத்தேவையே இல்லை, அதற்கு இரஸ்சியா தகுதாயனது இல்லை, ஆனால் அமெரிக்கா கவலைப்பட வேண்டிய நாடு சீனாதான் அவர்கள் எதையும் சத்தமில்லாமல் செய்வார்கள் (மிகவும் மோசமான வியாபாரிகள்).

அமெரிக்கா நீண்டகால அளவில் உக்கிரேன் - இரஸ்சியாவுடன் மினக்கெடாது, அதனால் இந்தியா எமக்கு செய்த துரோகம் போல உக்கிரேனியர்களுக்கும் செய்ய வாய்ப்புள்ளது, 

பைடன் ஒரு தொலை நோக்கற்ற தலைவராக உள்ளார், இவரது ஆட்சி காலத்திலே அமெரிக்காவுக்கெதிராக இரண்டாவது உலக அணி உருவாகியுள்ளது, அமெரிக்க reserve currency போட்டி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க சாம்ராஜித்தின் முடிவின் முகவுரையினை பைடந்தான் எழுதியுள்ளார் என கருதுகிறேன்.

சீனா முடிந்தலவு இரஸ்சியாவினை உலகிலிருந்து தனிமைப்படுத்த முனைகிறது, அதன் மூலம் இரஸ்சியாவால் ஐரோப்பிய ஒன்றியம் எனும் நிலைக்கு வரலாற்றில் செல்ல முடியாதவாறு, அடுத்தது இந்தியாவையும் அந்த பட்டியலில் சீனா இணைத்துவிட்டால் போதும்.

அமெரிக்கா இந்தியாவை எந்த நிலையிலும் இழக்காது என நம்புகிறேன், ஆனால் அண்மை காலங்களில் பாகிஸ்தானுக்கு சில இராணுவ உதவிகளை செய்து இந்தியாவின் சீற்றத்திற்குள் அமெரிக்கா வந்துள்ளது.

இது பைடனின் காலத்திலேயே நிகழ்ந்துள்ளது.

இது அமெரிக்காவுக்கும் அதன் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல அதனால் என்னதான் இந்தியா இரஸ்சிய விவகாரத்தில் அமெரிக்காவை ஏறி மித்தாலும் அமெரிக்கா பொறுமையுடன் செயற்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

சீனா முடிந்தலவு இரஸ்சியாவினை உலகிலிருந்து தனிமைப்படுத்த முனைகிறது,

இதை இங்கே ஒரு நாலு மாதம் முதல் நான் எழுதிய போது, நீங்கள் உட்பட பலர் இல்லை - சீனா, ரஸ்யா, (இந்தியா, பிரேசில்) என ஒரு புது அணி உருவாகிறது என்றீர்கள்.

ரஸ்யாவின் பொருளாதார, இராணுவ, இராஜதந்திர கூட்டணி பலம் பற்றி இங்கே பலர் கொண்டிருந்த மிகை மதிப்பீடு கொஞ்சம் கொஞ்சமாக உடைகிறது என நினைக்கிறேன்.

அதே போலத்தான் சீனாவும். அண்மையில் சீனா GDP தரவுகளை காலம் தாழ்த்தி வெளியிட்டதை அறிந்திருபீர்கள்.

ஏனென்றால் they were cooking their books. 
சீனாவின் பொருளாதாரம் நாம் எண்ணும் படி அதிரடி ஆரோக்கியத்தோடு இல்லை.

போக போக புரியும் என்பது என் நிலைப்பாடு.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு அலை வராமல் போக பல காரணங்கள், ஆனால் இரண்டு முக்கிய காரணங்கள்: ட்ரம்பும் , அண்மையில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு உரிமையை (Roe Vs Wade) தேசிய மட்டத்தில் நீக்கி வழங்கிய தீர்ப்பும். இந்தத் தீர்ப்பு வெளிவந்த போது கொண்டாடிய சிவப்புக் கட்சிக் காரர்கள் அடுத்த ஒரு வாரத்திலேயே "அமெரிக்க வாக்காளர்களில் 50% பேர் பெண்கள்" என்பது உறைத்த போதே அச்சத்துடன் அடங்கி விட்டனர். 😂 

ட்ரம்பின் ஜனவரி 6 கலவரம், காங்கிரஸ் விசாரணையைக் கலைத்து விட்டாலும் கூட அமெரிக்க மக்களின் நினைவிலிருந்து நீங்காது. எனவே, வெல்வதற்கு அவசியமான அந்த 5% பக்கச் சார்பற்ற வாக்காளர்களின் வாக்கு ட்ரம்பின் சிவப்புக் கட்சியினருக்கு எட்டாக் கனி தான். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

வணக்கம் ஜஸ்ரின் நீண்ட காலத்துக்கு பின் களத்தில் காண்பது மிக்க மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் ஜஸ்ரின் நீண்ட காலத்துக்கு பின் களத்தில் காண்பது மிக்க மகிழ்ச்சி.

வணக்கம் அண்ணை, கண்டது மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

சிவப்பு அலை வராமல் போக பல காரணங்கள், ஆனால் இரண்டு முக்கிய காரணங்கள்: ட்ரம்பும் , அண்மையில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு உரிமையை (Roe Vs Wade) தேசிய மட்டத்தில் நீக்கி வழங்கிய தீர்ப்பும். இந்தத் தீர்ப்பு வெளிவந்த போது கொண்டாடிய சிவப்புக் கட்சிக் காரர்கள் அடுத்த ஒரு வாரத்திலேயே "அமெரிக்க வாக்காளர்களில் 50% பேர் பெண்கள்" என்பது உறைத்த போதே அச்சத்துடன் அடங்கி விட்டனர். 😂 

ட்ரம்பின் ஜனவரி 6 கலவரம், காங்கிரஸ் விசாரணையைக் கலைத்து விட்டாலும் கூட அமெரிக்க மக்களின் நினைவிலிருந்து நீங்காது. எனவே, வெல்வதற்கு அவசியமான அந்த 5% பக்கச் சார்பற்ற வாக்காளர்களின் வாக்கு ட்ரம்பின் சிவப்புக் கட்சியினருக்கு எட்டாக் கனி தான். 

ஆனால் electoral college முறையில் அமையும் ஜனாதிபதி தேர்தலில் இந்த 5% இன்றியே (popular vote இல் தோத்தாலும்) டிரம்பால் வெல்ல முடியும்? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

சிவப்பு அலை வராமல் போக பல காரணங்கள், ஆனால் இரண்டு முக்கிய காரணங்கள்

ஜஸ்ரின் அண்ணாவை கண்டது மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

ஏன் wrestling பார்க்க விரும்பாதவரா நீங்கள்???😂

ராகா உலகம் முழுவதும உள்ள மக்கள் சதந்திரமாக இன்பமாக வாழவேண்டும் என்று விரும்பும் ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இதை இங்கே ஒரு நாலு மாதம் முதல் நான் எழுதிய போது, நீங்கள் உட்பட பலர் இல்லை - சீனா, ரஸ்யா, (இந்தியா, பிரேசில்) என ஒரு புது அணி உருவாகிறது என்றீர்கள்.

ரஸ்யாவின் பொருளாதார, இராணுவ, இராஜதந்திர கூட்டணி பலம் பற்றி இங்கே பலர் கொண்டிருந்த மிகை மதிப்பீடு கொஞ்சம் கொஞ்சமாக உடைகிறது என நினைக்கிறேன்.

அதே போலத்தான் சீனாவும். அண்மையில் சீனா GDP தரவுகளை காலம் தாழ்த்தி வெளியிட்டதை அறிந்திருபீர்கள்.

ஏனென்றால் they were cooking their books. 
சீனாவின் பொருளாதாரம் நாம் எண்ணும் படி அதிரடி ஆரோக்கியத்தோடு இல்லை.

போக போக புரியும் என்பது என் நிலைப்பாடு.

எனக்கு இப்போதும் புரியாத விடயம் இரஸ்சியாவின் பொருளாதாரம் எவ்வாறு இப்படி ஒரு நீண்ட போரினை உலகிற்கெதிராக மேற்கொள்கிறது என்பதே, அதற்கு முக்கிய காரணம் பொருளாதார தடை எந்த தாக்கத்தினையும் இரஸ்சியாவின் மீது ஏற்படுத்தவில்லை.

ஆனால் கீவினை கைப்பற்ற இரஸ்சியா 65 கிலோ மீற்றர் நீளத்திற்கு இராணுவ கவசவாகனத்தினை ஒரு நகர்புற யுத்தத்தில் இரஸ்சியா நிறுத்தியபோதே அதன் இராணுவ மேலாதிக்க மாயை நீங்கிவிட்டது இதனை ஆரம்பத்தில் இந்த போர் ஆரம்பிக்கும் முன்னரே இரஸ்சியா போரில் தோற்றுவிட்டதாக ( என நினைக்கிறேன்) கூறியதாக நினைவில் உள்ளது.

இரஸ்சியாவின் இராஜதந்திரம்? அப்படி எதுவும் இரஸ்சியாவிடம் இல்லை.

இரண்டாவது அணி உருவாகி உள்ளது என்ற கருத்தில்தான் இப்போதும் உள்ளேன், அதைவிடவும் அமெரிக்காவின் உலகின் ஒற்றை தலைமை (சர்வ அதிகாரம்) முடிவுக்கு வர உள்ளதாகவும் நம்புகிறேன் ( அது என் விருப்பமும் கூட ஏன் என்றால் சம்த்துவம்தான் உண்மையான ஜனநாயகம்).

இப்படி ஒரு பலவீனமான இரஸ்சியா எப்படி ஒரு உலகவல்லரசுக்கு இவ்வளவு சவாலாக உள்ளது? அப்படியாயின் அமெரிக்கா கூட ஒரு பலவீனமான வல்லரசா?

சீனா உலகின் 2 வது மிக பெரிய பொருளாதாரம் ஆனால் அதன் பொருளாதார வளர்ச்சியடைந்து பொருளாதார வளர்ச்சி விகித பண்புடன் ஒத்தது, சீனாவினை வளர்ச்சியடைந்த நாடு என வரையறுப்பதில்லை (வளர்ச்சியடைந்துவரும் நாடுகளின் வளர்ச்சி விகிதம் 2 எண்ணில் இருக்கும்).

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, vasee said:

மேலே சீனாவின் ஜிடிபி யை சொன்னேனே அதுதான் ரஸ்யாவிலும் நடக்கிறது.

நாம் மேற்கில் ஒப்பீட்டளவில் வெளிப்படைத்தன்மையான பொருளாதாரத்தில் இருக்கிறோம்.

ஒரு சின்ன உதாரணம். யூகேயில் பட்ஜெட் ஐ மதிப்பீடு செய்ய OBR எனும் அமைப்பு உண்டு. முதலீட்டாளர்களும் அதன் மதிப்பீட்டை நம்புவார்கள்.

அண்மையில் அமைந்த லிஸ் டிரஸ்ட் அரசு, அதெல்லாம் ஒரு மதிப்பீடும் தேவையில்லை என சொல்லி ஒரு வரி குறைப்பு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்கள். 

விளைவு? யூகேயின் கில்ட், பென்சன் பிணை முறிகளளை விட்டு முதலீட்டாளர்கள் தலை தெறிக்க ஓட, மோர்ட்கேஜ் டீல்களை பல ஆயிரகணக்கில் வங்கிகள் எல்லாம் மீளப்பெற - அரச வங்கி தலையிட்டு 20 பில்லியனுக்கு பிணை நிற்கும் படி ஆயிற்று.

லிஸ்+கவாடாங் இணையரின் இந்த கோமாளி கூத்தின் மொத்த விலை (நட்டம்) நாட்டுக்கு 50 பில்லியன். 

அடுத்து நாட்டுக்கு நீண்ட ஆனால் மேலோட்டமான (long but shallow) recession அடுத்த வருடம் முதல் காலாண்டில் உறுதியாகும் என்கிறார்கள்.

அரசின் தவறான நிதி முடிவுக்கே இப்படி நடந்தது. ஏன்? ஏனென்றால் இது ஒரு ஒப்பீட்டளவில் சுதந்திரமான, OBR போன்ற நம்பகமான அமைபுகள் உள்ள பொருளாதாரம் - சுயாதீன மத்திய வங்கிகள் உண்டு, ஆகவே இங்கே இறங்குமுகம் என்றால் அதற்கு சந்தை உடனடியாக விழைவை காட்டும். அது வெளிப்படையாக தெரியும்.

ஆனால் ரஸ்யா அப்படி அல்ல. அங்கே எல்லாமுமே மிக இறுக்கமான கட்டுப்பாட்டில் உள்ள பொருளாதாரம். சீனாவும் அப்படித்தான். அங்கே இருந்து வரும் தரவுகள் எதுவும் நம்ப தகுந்தவை அல்ல, போருக்கு முன்பே.

முதலீட்டாளர்கள், ஏன் நியூயார்க்கில், லண்டனில் லிஸ்டட் ஆக உள்ள கம்பனிகளில் முதலிடுவதை விரும்புவார்கள்? மொஸ்கோ, ஹாங்காங்கை விட? (போருக்கு முன்பே). ஒரு பெரிய காரணம் அங்கே இருந்து வரும் கம்பெனி சொல்லும் figures மீதான அவ நம்பிக்கை. 

இதேதான் அரசுகளுக்கும்.

அண்மையில் ரஸ்யா டெக்னிகல் ரிசெசனுக்குள் போய் விட்டதை அறிந்திருப்பீர்கள். இரெண்டு அடுத்தடுத்த காலாண்டுகள் பொருளாதாரம் 4% வீழ்ந்துள்ளதாக ரஸ்யாவே ஒப்பு கொண்டுள்ளது.

என்னை பொறுத்தவரை இது குறைந்தது 8% ஆவது இருக்கும் என நினைக்கிறேன். 4% என்றாலே அது ஒரு ஆழமான ரிசெசந்தான். 

ரஸ்யாவின் இராணுவ மூக்குடைவு ஒவ்வொரு நகராக உக்ரேன் கொடி ஏற்ற ஏற்ற - இலகுவாக வெளித்தெரியும்.

ரஸ்யாவின் இராஜதந்திர தோல்வி - ஒவ்வொரு ஐநா சபை தீர்மானம் நிறைவேறும் போதும், ஒவ்வொரு தடவை சீனா ரஸ்யாவை இடது கையால் டீல் பண்ணும் போதும் தெரியும். 

என்னை பொறுத்தவரை ரஸ்ய பொருளாதாரம் பலத்த அடி வாங்குகிறது. ஆனால் மேலே சொன்ன இரு தோல்விகள் போல் இது வெளியே தெரிவதில்லை. இதற்கு ரஸ்யாவை, மேற்கின் பொருளாதாரங்களை பார்க்கும் அதே கண்ணாடி வழியாக நாம் பார்ப்பதே காரணம்.

பிகு

சீனா பிரிக்ஸ்சை இப்போ ரஸ்யாவை பாவிப்பது போல் பாவித்தாலும் நீங்கள் நினைக்கும் multipolar world அல்ல சீனாவின் இலக்கு. 

சீனாவின் இலக்கு இப்போ இருக்கும் unipolar உலகில் இருந்து அமெரிக்கா v சீனா என்ற bipolar உலக ஒழுங்கை அமைப்பதே. வேணும் எண்டால் ரஸ்யா, இந்தியா சீனாவின் கீழ் அணி வகுக்கலாம்.

ஆனால் இதை ரஸ்யாவோ, இந்தியாவோ ஏற்க போவதில்லை. எனவே இழுபறிதான். 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் முன்பொரு முறை ரஸ்யாவின் மிக திறமையான மத்திய வங்கி அதிகாரி பற்றி பேசினோம். பொருளாதார தடைகள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி அவர் சொல்வது கீழே. கவனிக்க, ரஸ்யாவின் முக்கிய நிதி அதிகாரியாக இதை விட நெகடிவாக அவரால் சொல்ல முடியாது.

https://www.reuters.com/markets/currencies/russian-cbank-no-need-ease-capital-controls-further-now-2022-11-08/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.