Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

நீங்கள் சொன்னது போல் நடந்தால் ரொம்ப மகிழ்ச்சியடைவேன்....அப்படி நடக்கும் சத்தியம் இருக்குமாயின்  இலங்கையில் தமிழர் பிரச்சனை என்று ஒன்று இருக்க வாய்ப்புகள் இல்லை...முழு புலம்பெயர் தமிழர்களும் பலாலி விமான நிலையத்தை பயன்படுத்தினாலும்.  உங்கள் மதுரை விமான நிலையம் வளர்ச்சி அடைந்தது போல் பலாலி விமான நிலையம் வளரப்போவதில்லை ...சிங்கள அரசு ஒத்துழைப்பு வழங்கினாலும்.  சிங்கள இனவாதிகள். விடமாட்டார்கள். ...இன்றைக்குக்கூட  கனடா பிரித்தானியா ஜேர்மனி பிரான்ஸ்   அமெரிக்கா அவுஸ்திரேலியா.....போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக பலாலிக்கு விமானம் இருந்தால் நிறையவே புலம்பெயர் தமிழர்கள் வருவார்கள்’’      ஆனால் கொழும்பு விமான நிலையம் மூடவும் வேண்டி வரலாம்” .....வரும்    மேலும் இங்கே பல இலங்கை தமிழர்கள் குடியுரிமை பெறும் வாய்ப்புகள் இருந்தும் கூட    இலங்கை பாஸ்போர்ட் இல். காலவரையின்றி வதிவிட விசா பெற்று இருக்கிறார்கள்  அவ்வளவு காதல் இலங்கையில்    ஆனால் இங்குள்ள இலங்கை தூதுவராகங்களில்.  புதிய பாஸ்போர்ட் அல்லது பாஸ்போர்ட் இன் காலத்தை நீடிப்பு செய்யும் போது   இலங்கைக்கு போனால் திரும்ப ஜேர்மனி வர முடியாது என்று அடித்து கொடுக்கப்படுவதால் பலர் இலங்கை போக விரும்பியும்  போகவில்லை    கொழும்பு விமான நிலையத்திலும். இதே பிரச்சனை    இவர்களுக்கு இங்கே தங்க.   ....வாழ   விசா உண்டு    இறுதியாக ஈழவன்னியன்.  🤣   இல்லை இல்லை...ராஜாவன்னியன்.  நீங்கள் இவ்வளவு இலங்கை தமிழர்களுடன் நெடுங்காலமாக பழகியும்  இன்னும் இலங்கை தமிழர்கள் பிரச்சனை பற்றிபூரணமாக அறியவில்லையென்பது கவலையளிக்கிறது 😂🤣

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா.

உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உரிமையுடன் வாழ விரும்புவதுண்டு. அவ்வகையில் இலங்கை தமிழர்கள் எம் உணர்வோடும், மனதோடும் மிக நெருக்கமானவர்கள். அந்த மனநிலையிலேயே இக்களத்தில் தொடர்கிறேன், ஈழத்தை பற்றி அதிகம் அறிய விரும்புகிறேன்.

நிற்க, 'சிங்களன் வளரவிடமாட்டான்' என எத்தனை காலம் சொல்லிக்கொண்டே காலம் தள்ளுவது? பல்வேறு வழிகள் முயற்சி செய்ய வேண்டாமா? ஏன் அரும்பிலேயே வளர விடாமல் அதைரியபடுத்துகிறீர்கள்? இந்த மனநிலையிலேயே இருந்தால் எப்படி? 😔

உங்கள் பதில் எமக்கும் கவலையளிக்கிறது. 🙄

  • Replies 240
  • Views 16.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ராசவன்னியன் said:

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா.

உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உரிமையுடன் வாழ விரும்புவதுண்டு. அவ்வகையில் இலங்கை தமிழர்கள் எம் உணர்வோடும், மனதோடும் மிக நெருக்கமானவர்கள். அந்த மனநிலையிலேயே இக்களத்தில் தொடர்கிறேன், ஈழத்தை பற்றி அதிகம் அறிய விரும்புகிறேன்.

நிற்க, 'சிங்களன் வளரவிடமாட்டான்' என எத்தனை காலம் சொல்லிக்கொண்டே காலம் தள்ளுவது? பல்வேறு வழிகள் முயற்சி செய்ய வேண்டாமா? ஏன் அரும்பிலேயே வளர விடாமல் அதைரியபடுத்துகிறீர்கள்? இந்த மனநிலையிலேயே இருந்தால் எப்படி? 😔

உங்கள் பதில் எமக்கும் கவலையளிக்கிறது. 🙄

உங்கள் பதில் மிக சரியானது வன்னியன். இனப்பிரச்சனை தொடர்நது இழுபடுவதற்கான முக்கிய காரணமே இரு பகுதியினரும் ஒருவரை ஒருவர் பார்தது பயப்படுவதே.  தமிழருக்கு இடம் கொடுத்தால் பக்கதில் உள்ள தமிழ் நாட்டுடன் சேர்ந்து எம்மை அழித்துவிடுவார்கள் என்ற பாரிய பயம் சிங்களவரிடையே அரசியல்வாதிகளால் திணிக்கப்பட்டுள்ளது.  

சிங்களவர்கள் எதுவும் தரமாட்டார்கள் இவர்களுடன் வாழ முடியாது. இவர்களுடன் பேசி பயனில்லை என்ற கருத்துருவாக்கம், அவநம்பிக்கை  தமிழரிடையே அரசியல்வாதிகளால் விதைக்கப்பபடுள்ளது. இதனால்  இருபகுதியினரும்   negotiation க்கு வருவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. 

ஒரே நிலப்பகுதியில் வாழும் மக்கள் தமக்குள் எதிரிகளாக வாழும் நிலை அந்த நாட்டில் வாழும் இரு பகுதியினருக்கும் நாசத்தையே ஏற்படுத்தும் என்பதே உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு போதும் அந்த மண்ணுக்கு போய் வாழப்போவது இல்லை.. அந்த மண்ணில் வாழும் மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.. அந்த மண்ணும் மக்களும் முன்னேறவேண்டும் என்ற எண்ணமும் இல்லை.. இவர்கள் எல்லோரும் 2009 க்கு முன்னம் பாத்துவிட்டு வந்த இலங்கையின் ஞாபகத்திலேயே மிஞ்சி இருக்கும் வயோதிக காலத்தை எழுதியும் வாழ்ந்தும் கழிப்பவர்கள்.. இவர்களின் அடுத்த தலைமுறைக்கு அதைக்கூட நினைக்க நேரம் இருக்கப்போவதில்லை.. அவர்கள் உலகம் வேறு.. அதேபோல்தான் இப்பொழுது ஈழத்தில் இருக்கும் புதிய தலைமுறையின் உலகமும் வேறு.. அவர்களும் இருக்கும் சாத்தியமான வழிகளில் தாமும் தாம் சூழ்ந்திருக்கும் சமூகமும் டெவலப்பாக இருக்கவேண்டும் வேலை  வாய்ப்புகள் என்று அவர்கள் சிந்தனையே வேறு.. இவர்கள் எதிர்பார்ப்பது போல் எந்த நேரமும் போர் போர் என்று வாழ அவர்களால் முடியாது.. அவர்கள் ஏற்கனவே போரால் அனுபவித்து விட்டார்கள்.. உங்களைப்போல் ஒரு மாநில சுயாட்சி கிடைதாலே போதும் உங்களைப்போல் நாங்களும் சந்தோசமாக வாழுவோம்.. பலாலி விமான நிலையத்தை முன்னேற்ற அந்த மண்ணில் அக்கறை உள்ள எல்லா தமிழர்களும் முயற்சி செய்யவேண்டும்.. அதனால் பலன் பெறப்போவது அந்த மண்ணில் வாழும் எம் உறவுகளே.. அதை விடுத்து அந்த மக்களுக்கு நல்லது நடக்ககூடிய விடயங்களில் உதவி செய்ய விருப்பமில்லாதவர்கள் முளையிலையே கிள்ளிவிடுவதுபோலான கருத்துக்களை வைத்து உபத்திரவம் செய்யாமல் அமைதியாக இருந்தாலே அது பெரிய உதவி அம்மக்களுக்கு..

ஓணாண்டியாரே,

எப்படி சுகம்கள். இத மாரி அடிக்கடி ஜோதியில் ஐக்கியமாகிறது?

37 minutes ago, ராசவன்னியன் said:

நிற்க, 'சிங்களன் வளரவிடமாட்டான்' என எத்தனை காலம் சொல்லிக்கொண்டே காலம் தள்ளுவது? பல்வேறு வழிகள் முயற்சி செய்ய வேண்டாமா? ஏன் அரும்பிலேயே வளர விடாமல் அதைரியபடுத்துகிறீர்கள்? இந்த மனநிலையிலேயே இருந்தால் எப்படி?

நியாமான கேள்வி.

இதன் அர்த்தம் அவன் வளர விடுவான் என்பதல்ல. ஆனால் நாம் வளர கிடைக்கும் அத்தனை வாய்ப்புக்களையும் பயன்படுத்த வேண்டும்.

ஆனால் கந்தையா அண்ணையின் பட்டறிவை புறம் தள்ளவும் முடியாது.

மேலே ஒரு இடத்தில் சொல்லி உள்ளார் - புலம் பெயர்ந்தவர் எல்லாம் பலாலியால் வரத் தொடங்கி, கொழும்பில் வியாபாரம் குறைந்தால் இலாபத்தில் ஓடும் பலாலியையும் இழுத்து மூடும் சிங்களம்.

இந்த உண்மைதான் பலரை பின்னுக்கு இழுக்கிறது ஆனால் நீங்கள் சொன்னது போல் இதையும் தாண்டித்தான் நாம் முயல வேண்டும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஐலன்ட்,

நீங்கள் யாழின் பெரும்பாலானோர் போக்குக்கு வித்தியாசமாக சிந்திகிறீர்கள் (முன்பு சோழர், இப்போ இந்த திரி) - இதை வரவேற்கிறேன். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

வேறுபட்ட சிந்தனைகள்தான் தெளிவை தரும்.

—————

17 minutes ago, island said:

இனப்பிரச்சனை தொடர்நது இழுபடுவதற்கான முக்கிய காரணமே இரு பகுதியினரும் ஒருவரை ஒருவர் பார்தது பயப்படுவதே.

இதை ஆமோதிக்கிறேன்.

17 minutes ago, island said:

தமிழருக்கு இடம் கொடுத்தால் பக்கதில் உள்ள தமிழ் நாட்டுடன் சேர்ந்து எம்மை அழித்துவிடுவார்கள் என்ற பாரிய பயம் சிங்களவரிடையே அரசியல்வாதிகளால் திணிக்கப்பட்டுள்ளது.

இதை மேலும் வளர்த்து அரசியல்வாதிகள் குளிர்காய்வது உண்மை. ஆனால் இதை குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாய் உருவாக்கி, போசித்து, இன்றும் ஊட்டி வருவது பெளத்த-சிங்கள மேலாதிக்க சமய-இன தலைமை.

இது எங்கோ வானத்தில் இருந்து விழவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் இருந்துதான் இந்த நஞ்சு வருகிறது.

ஆகவே சிங்கள மக்கள் அப்பாவிகள் - அரசியல்வாதிகள் நஞ்சூட்டுகிறார்கள் என்பது மேலோட்டமான பார்வை.

ஒவ்வொரு தேர்தலிலும் இனவாதத்தில் யார் ஒப்பீட்டளவில் பெரியவரோ அவரைத்தான் அந்த மக்கள் தேர்ந்துல்ளார்கள்.

இதற்கு தமிழர் மீதான பயம் காரணமாக இருக்கலாம், ஆனால் துட்டு கெமுனு விகாரமாதேவியிடம் கூறியது போல் “தெற்கே இந்துமாகடல், வடக்கே தமிழர் நான் எப்படி நிமிர்ந்து படுப்பேன்” என்ற பயமும் அந்த பயத்தை தீர்க்க கைக்கொள்ளும் மஹாவம்ச மனோநிலையும் - சிங்கள மனங்களில் psyche இல் ஊறியது.

25 minutes ago, island said:

சிங்களவர்கள் எதுவும் தரமாட்டார்கள் இவர்களுடன் வாழ முடியாது. இவர்களுடன் பேசி பயனில்லை என்ற கருத்துருவாக்கம், அவநம்பிக்கை  தமிழரிடையே அரசியல்வாதிகளால் விதைக்கப்பபடுள்ளது. இதனால்  இருபகுதியினரும்   negotiation க்கு வருவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. 

👆🏼இது மிக தவறான புரிதல்.

தமிழரிடம் எந்த மதமும், எந்த நிறுவனமும் ஒற்றை செல்வாக்கை புலிகள் வரும் வரை செலுத்தியதில்லை. நாம் ஒரு கூட்டு இன பிரஞ்ஞை இன்றி சந்தர்பத்து வாக்கு போட்டு, சுயநலமாக வாழ்ந்த கூட்டம். 

என்று தமிழர்களின் அடிப்படை மொழி உரிமையும், தொழில் செய்யும் உரிமையும் பறிக்கப்படாதோ அன்றுதான் தமிழர் ஒன்றாக தொடங்கினர்.

அதன் பின் ஒவ்வொரு முறை அவர்கள் தம் உரிமையை கேட்ட போது வன்முறை ஏவப்பட்டது.

பண்டா-செல்வா, டட்லி-செல்வா, 87, 95, 2002 என ஒவ்வொரு பேச்சுவார்தையிலும் இலங்கை அரசு தம்மை நம்பமுடியாத இதய சுத்தி இல்லலாத பங்காளி என நிரூபித்துள்ளது.

ஆகவே அரசியல்வாதிகள் பேச்சை கேட்டு 50,000 இளையோரை காவு கொடுக்க தமிழர் ஒன்றும் அடிமை சமூகம் இல்லை.

நாம் சிங்களவரை நம்ப முடியாது என்ற நிலைக்கு வர 75 வருட காலமாக நாம் தொடர்சியாக ஏமாற்றுபட்ட “பட்டறிவே” காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

கோடு போட்டுக்கொடுத்தால் அதையே ரோடாக மாற்ற முயற்சிக்கோணும்.

மனமிருந்தால் மார்க்கபந்து ச்சீ.. மார்க்கமுண்டு, முன்னேற்றமும் உண்டுடூடூடூ

சிறப்பான கருத்துக்கள் அய்யா.
பாலபத்ர ஓணாண்டி அவர்களின் கருத்து தான் எனதும்.
[உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு போதும் அந்த மண்ணுக்கு போய் வாழப்போவது இல்லை.. அந்த மண்ணில் வாழும் மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.. அந்த மண்ணும் மக்களும் முன்னேறவேண்டும் என்ற எண்ணமும் இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

நாங்களாவது சிங்களரோட சிங்கள சிறீ கார் நம்பர் பிளேட்டில போடு என்டதுக்கே சண்டை பிடித்தோம்.

இந்தி தவிர்ந்த மாநிலம், தமிழகத்தில் கூட, ரயில் நிலையங்களில், இந்தி..... இந்தியே தான்...🥴

ஓம் நானும் கேள்விபட்டேன்.

3 hours ago, goshan_che said:

அப்பா சுகவீனமாய் இருந்தார? நான் செய்தியை காணவில்லை. இப்போ சுகமா?

பிரபா சிதம்பரநாதனின் அப்பா சுகம் இன்றி இருந்த செய்தியை நானும் யாழ்களத்தில் காணவில்லை.நலம் பெற விரும்புகின்றேன்.

9 hours ago, goshan_che said:

மக்கள் ஜேபிவ்பிக்கு தயார் என எழுதுகிறார்.

அது இப்போ இருப்பதை விட மோசமாக இருக்க கூடும்.

💯

படு மோசம் அடையும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில். 5 மாடிக்குமேல். கட்டிடம் கட்டக்கூடாது. என்று இலங்கை சட்டம் சொல்லுது   ஆனால் கொழும்புக்கு இந்த சட்டம் இல்லை கொழும்பு இல்20. மாடி கட்டிடமும் உண்டு”   ஏன் இந்த பாரபட்சம்?.   யாழ்ப்பாணக்கு தனியா இப்படி சட்டம் இயற்றவேண்டியது அவசியமா ? இலங்கை அரசுக்கு இதனால் என்ன லாபம் உண்டு”?. இந்த சட்டம் இல்லையென்றால் யாழ்ப்பாணம் 20 மாடி கட்டிடத்தை. பெற்று இருக்குமா ?இல்லையா?. யாழ்ப்பாணத்தில். குச்சி ஒழுங்கையிலும். மாடி வீடுகள் உண்டு”    கட்டிடத்துறையில்  யாழ்ப்பாணம் குறுகிய காலத்தில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது....இதை எதிர்பபவார்கள்.  உங்கள் கருத்துகளை முன் வையுங்கள் வாசித்து பார்ப்போம்  

இலங்கை வாழ் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும். இணைந்து தனிநாடு கோரி போராடினார்கள்  ...[கருத்து வேறுபாடு காட்டி கொடுப்பது புறக்கணித்து விடுவோம் ] இலங்கைக்கு பலநாடுகள் உதவி செய்தன  ...ஆயுதம் சென்று அடைவதை தடை செய்யாமல்...ஆயுதக்கப்பல்கள். முழ்கடிக்கப்படாமலும். இருந்திருந்தால் போராட்டம் 2009 முடிவடைந்து இருக்காது..இன்றும் தொடர்ந்து இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் அள்ளி அள்ளி கொடுத்து இருப்பார்கள்   

பலாலி விமான நிலையம் சுயாதீனமாக. இயங்க விட்டால் ....சர்வதேச விமானங்கள் நேரடியாக வந்து போனால்   கண்டிப்பாக இந்த பிரதேசத்தில் யாழ்ப்பாணம் முக்கிய கேத்திர நிலையமாக மாறும்    ...இப்படி ஒரு நிலை எற்பட இலங்கை இந்தியா....போன்ற அரசுகள் அனுமதிக்குமா   ?  இந்தியா தமிழ்நாடு கொழும்பு......பாதிப்பு இல்லையா   ?கருத்துகளை எழுதுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விளங்க நினைப்பவன் said:
3 hours ago, goshan_che said:

அப்பா சுகவீனமாய் இருந்தார? நான் செய்தியை காணவில்லை. இப்போ சுகமா?

பிரபா சிதம்பரநாதனின் அப்பா சுகம் இன்றி இருந்த செய்தியை நானும் யாழ்களத்தில் காணவில்லை.நலம் பெற விரும்புகின்றேன்

On 19/10/2022 at 22:21, பிரபா சிதம்பரநாதன் said:

வணக்கம்!!

எனது தந்தையின் உடல்நிலை கொஞ்சம் சீரற்று இருக்கிறது அதனால் இலங்கைக்கும் அவுஸிற்கும் பயணங்கள் இருப்பதால் என்னால் கொஞ்ச காலத்திற்கு தொடர்ந்து யாழில் இணைத்திருக்க முடியாதுள்ளது.

இவ்வளவுகாலமும் என்னையும், எனது கருத்துக்களையும் மதித்து ஆதரவு தந்தமைக்கு நன்றிகள்! 

மீண்டும் ஒருநாள் சந்திப்போம்

நன்றி

நீங்கள் இருவரும் அப்போ உக்ரேனில் இருந்தபடியால் தவறவிட்டுவிட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவர்கள் ஒரு போதும் அந்த மண்ணுக்கு போய் வாழப்போவது இல்லை.. அந்த மண்ணில் வாழும் மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.

ஓணாண்டி நாங்கள் அங்கே போய் வாழப் போவதில்லை என்பது ஏதோ உண்மை தான்.

ஆனால் அந்த மண்ணில் வாழும் மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை என்று வாய்க்கு வந்தபடி கதைக்காமல் இருந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் இருவரும் அப்போ உக்ரேனில் இருந்தபடியால் தவறவிட்டுவிட்டீர்கள்.

அது தான் காரணம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து  தமிழ் ஈழ விமான Air என்று தொடங்குவோமா.?

நல்ல விடயம் .

7 hours ago, Kandiah57 said:

உங்கள் மதுரை விமான நிலையம் வளர்ச்சி அடைந்தது போல் பலாலி விமான நிலையம் வளரப்போவதில்லை

சிரிப்பு சிரிப்பாய் வருகுது மதுரை விமான நிலையம் வளர்ச்சியா ?  அரும்பிலே கருக்கி விட்டார்கள் மலையாளிகள் .

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் இருவரும் அப்போ உக்ரேனில் இருந்தபடியால் தவறவிட்டுவிட்டீர்கள்.

ஒரு கையில ஹிமார்ஸ் செலுத்தி, மறுகையில் ATACMS கண்டிரோலர், காதுக்க ஹெட்போனில ஆஸ்டின் கொடுக்கும் உத்தரவுகள். 

இந்த பிசியில இதை கவனியாமல் விட்டது ஒரு தப்பா அண்ணை🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

யாழ்ப்பாணத்தில். 5 மாடிக்குமேல். கட்டிடம் கட்டக்கூடாது. என்று இலங்கை சட்டம் சொல்லுது   ஆனால் கொழும்புக்கு இந்த சட்டம் இல்லை கொழும்பு இல்20. மாடி கட்டிடமும் உண்டு”   ஏன் இந்த பாரபட்சம்?.   யாழ்ப்பாணக்கு தனியா இப்படி சட்டம் இயற்றவேண்டியது அவசியமா ? இலங்கை அரசுக்கு இதனால் என்ன லாபம் உண்டு”?. இந்த சட்டம் இல்லையென்றால் யாழ்ப்பாணம் 20 மாடி கட்டிடத்தை. பெற்று இருக்குமா ?இல்லையா?. யாழ்ப்பாணத்தில். குச்சி ஒழுங்கையிலும். மாடி வீடுகள் உண்டு”    கட்டிடத்துறையில்  யாழ்ப்பாணம் குறுகிய காலத்தில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது....இதை எதிர்பபவார்கள்.  உங்கள் கருத்துகளை முன் வையுங்கள் வாசித்து பார்ப்போம்  

இலங்கை வாழ் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும். இணைந்து தனிநாடு கோரி போராடினார்கள்  ...[கருத்து வேறுபாடு காட்டி கொடுப்பது புறக்கணித்து விடுவோம் ] இலங்கைக்கு பலநாடுகள் உதவி செய்தன  ...ஆயுதம் சென்று அடைவதை தடை செய்யாமல்...ஆயுதக்கப்பல்கள். முழ்கடிக்கப்படாமலும். இருந்திருந்தால் போராட்டம் 2009 முடிவடைந்து இருக்காது..இன்றும் தொடர்ந்து இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் அள்ளி அள்ளி கொடுத்து இருப்பார்கள்   

பலாலி விமான நிலையம் சுயாதீனமாக. இயங்க விட்டால் ....சர்வதேச விமானங்கள் நேரடியாக வந்து போனால்   கண்டிப்பாக இந்த பிரதேசத்தில் யாழ்ப்பாணம் முக்கிய கேத்திர நிலையமாக மாறும்    ...இப்படி ஒரு நிலை எற்பட இலங்கை இந்தியா....போன்ற அரசுகள் அனுமதிக்குமா   ?  இந்தியா தமிழ்நாடு கொழும்பு......பாதிப்பு இல்லையா   ?கருத்துகளை எழுதுங்கள் 

யதார்த்தபூர்வமான கருத்துக்கள் கந்தையர்....👌🏼
ஆசிய நாட்டின் பிராந்திய அரசியலையும்  சிங்களத்தின் அரசியலையும் புலம்பெயர் தமிழரின் பலத்தையும் உள்ளடக்கிய உங்கள் கருத்து அபாரம்.👍🏼

தங்களைத்தாங்களே  ஒழுக்க சீலர்களாகவும் நாட்டு பற்றாளர்களாகவும் காட்டிக்கொள்பவர்கள்  உங்கள் கருத்தை வாசிப்பார்கள் என நினைக்கின்றேன். 😁

நன்றி.🙏🏼

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

வணக்கம் ஐலன்ட்,

நீங்கள் யாழின் பெரும்பாலானோர் போக்குக்கு வித்தியாசமாக சிந்திகிறீர்கள் (முன்பு சோழர், இப்போ இந்த திரி) - இதை வரவேற்கிறேன். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

வேறுபட்ட சிந்தனைகள்தான் தெளிவை தரும்.

—————

இதை ஆமோதிக்கிறேன்.

இதை மேலும் வளர்த்து அரசியல்வாதிகள் குளிர்காய்வது உண்மை. ஆனால் இதை குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாய் உருவாக்கி, போசித்து, இன்றும் ஊட்டி வருவது பெளத்த-சிங்கள மேலாதிக்க சமய-இன தலைமை.

இது எங்கோ வானத்தில் இருந்து விழவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் இருந்துதான் இந்த நஞ்சு வருகிறது.

ஆகவே சிங்கள மக்கள் அப்பாவிகள் - அரசியல்வாதிகள் நஞ்சூட்டுகிறார்கள் என்பது மேலோட்டமான பார்வை.

ஒவ்வொரு தேர்தலிலும் இனவாதத்தில் யார் ஒப்பீட்டளவில் பெரியவரோ அவரைத்தான் அந்த மக்கள் தேர்ந்துல்ளார்கள்.

இதற்கு தமிழர் மீதான பயம் காரணமாக இருக்கலாம், ஆனால் துட்டு கெமுனு விகாரமாதேவியிடம் கூறியது போல் “தெற்கே இந்துமாகடல், வடக்கே தமிழர் நான் எப்படி நிமிர்ந்து படுப்பேன்” என்ற பயமும் அந்த பயத்தை தீர்க்க கைக்கொள்ளும் மஹாவம்ச மனோநிலையும் - சிங்கள மனங்களில் psyche இல் ஊறியது.

👆🏼இது மிக தவறான புரிதல்.

தமிழரிடம் எந்த மதமும், எந்த நிறுவனமும் ஒற்றை செல்வாக்கை புலிகள் வரும் வரை செலுத்தியதில்லை. நாம் ஒரு கூட்டு இன பிரஞ்ஞை இன்றி சந்தர்பத்து வாக்கு போட்டு, சுயநலமாக வாழ்ந்த கூட்டம். 

என்று தமிழர்களின் அடிப்படை மொழி உரிமையும், தொழில் செய்யும் உரிமையும் பறிக்கப்படாதோ அன்றுதான் தமிழர் ஒன்றாக தொடங்கினர்.

அதன் பின் ஒவ்வொரு முறை அவர்கள் தம் உரிமையை கேட்ட போது வன்முறை ஏவப்பட்டது.

பண்டா-செல்வா, டட்லி-செல்வா, 87, 95, 2002 என ஒவ்வொரு பேச்சுவார்தையிலும் இலங்கை அரசு தம்மை நம்பமுடியாத இதய சுத்தி இல்லலாத பங்காளி என நிரூபித்துள்ளது.

ஆகவே அரசியல்வாதிகள் பேச்சை கேட்டு 50,000 இளையோரை காவு கொடுக்க தமிழர் ஒன்றும் அடிமை சமூகம் இல்லை.

நாம் சிங்களவரை நம்ப முடியாது என்ற நிலைக்கு வர 75 வருட காலமாக நாம் தொடர்சியாக ஏமாற்றுபட்ட “பட்டறிவே” காரணம்.

தமிழ் மக்கள் பல வகையிலும்  சிங்களத்தால் காலத்துக்கு காலம் ஏமாற்றப்பட்டதால்  சிங்களவர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது. தற்போது கூட ரனில்  பேச்சுவார்த்தைக்கு தமிழ் கட்சிகளை அழைப்பதை கபட எண்ணத்துடன் அழைப்பதாகவே என்னை போன்றவர்கள் நம்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

தமிழ் மக்கள் பல வகையிலும்  சிங்களத்தால் காலத்துக்கு காலம் ஏமாற்றப்பட்டதால்  சிங்களவர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது. தற்போது கூட ரனில்  பேச்சுவார்த்தைக்கு தமிழ் கட்சிகளை அழைப்பதை கபட எண்ணத்துடன் அழைப்பதாகவே என்னை போன்றவர்கள் நம்புகிறார்கள்.

உண்மை.

அத்தோடு இப்போ இருக்கும் எந்த தமிழ் அரசியல்வாதியையும் நம்பி தமது பிய்ந்த செருப்பை கூட கொடுக்க ஒரு ஈழ தமிழரும் தயாராக இல்லை.

ஆகவே நாம் சிங்களவர் மீது கொண்டுள்ள அவ நம்பிக்கைக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிக தொடர்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் பிரபா நீண்ட நாட்களின் பின் காண்பது சந்தோசம்.

உங்கள் அப்பாவின் உடல்நிலை எப்படி?

வணக்கம் அங்கிள்,

முழுமையாக குணமடையவில்லை.. காலம் எடுக்கும் என நினைக்கிறேன். 

நன்றி அங்கிள். 

6 hours ago, goshan_che said:

 வணக்கம் பிரபா. 

அப்பா சுகவீனமாய் இருந்தார? நான் செய்தியை காணவில்லை. இப்போ சுகமா?

ஓம் நீங்கள் சொன்ன கடற்கரை மிக அழகானதுதான். இன்னும் கொஞ்சம் தூரம் போனால் மணல் கும்பான்கள் எல்லாம் இருக்கும். இலங்கை மாதிரியே இருக்காது.

வணக்கம் Goshan,

கொஞ்ச காலம் எடுக்கும் அவர் குணமடைய. நன்றி. 

உண்மைதான், அந்த இடங்களைப் பார்த்திருக்கிறேன். குறிப்பிட்ட இடத்திற்கு அப்பால் போக கொஞ்ச தயக்கமாக இருந்தமையால் போகவில்லை. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

வணக்கம் அங்கிள்,

முழுமையாக குணமடையவில்லை.. காலம் எடுக்கும் என நினைக்கிறேன். 

நன்றி அங்கிள். 

வணக்கம் Goshan,

கொஞ்ச காலம் எடுக்கும் அவர் குணமடைய. நன்றி. 

உண்மைதான், அந்த இடங்களைப் பார்த்திருக்கிறேன். குறிப்பிட்ட இடத்திற்கு அப்பால் போக கொஞ்ச தயக்கமாக இருந்தமையால் போகவில்லை. 

என் பிரார்தனைகள் உங்களோடும் அப்பாவோடும் 🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை - ஜிகர்தண்டா,பன் புரோட்டா ,கறி தோசை

திண்டுக்கல் -  பூட்டு , புரியாணி

சிறிவில்லிபுத்தூர் -  பால்கோவா

பழனி - விபூதி , பஞ்சாமிர்தம்

ஆம்பூர் , நாகூர்- புரியாணி

தூத்துக்குடி -  மக்ரோன் 

ஊட்டி -  வர்க்கி

ராமநாதபுரம்- மஸ்கோத் அல்வா

தஞ்சாவூர்- லெஸ்சி ,சர்பத்

கும்பகோணம் - பால்பசந்தி, சூரிய கலா ,சந்திர கலா 

கூத்தாநல்லூர் -  தம்ரூட்

திருவையாறு- அசோகா அல்வா

திருநெல்வேலி- இருட்டுகடை அல்வா

சாத்தூர் -  காரா சேவு

அருப்புகோட்டை - சீவல்

மணப்பாறை-  நெய் முறுக்கு

செஞ்சி - முட்டை மிட்டாய்

சிதம்பரம் - கொத்சு

மாயவரம் -  கடப்பா..

காஞ்சிபுரம் ,சிறுவந்தாடு ,திருபுவனம் - பட்டு சேலை

ஆலங்குடி -பால் திரட்டு

......

டிஸ்கி 

கள உறவுகள்  அங்க உள்ளதையும்  எடுத்துப்போட்டு ஆக்கப்பூர்வமா உரையாடுங்கப்பா..😢

5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

வணக்கம் அங்கிள்,

முழுமையாக குணமடையவில்லை.. காலம் எடுக்கும் என நினைக்கிறேன். 

நன்றி அங்கிள். 

வணக்கம் Goshan,

கொஞ்ச காலம் எடுக்கும் அவர் குணமடைய. நன்றி. 

உண்மைதான், அந்த இடங்களைப் பார்த்திருக்கிறேன். குறிப்பிட்ட இடத்திற்கு அப்பால் போக கொஞ்ச தயக்கமாக இருந்தமையால் போகவில்லை. 

எனது வேண்டுதல்களும்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தயார் !

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தயார் !

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தமைக்கு இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலாலி விமான நிலையத்திற்கு நேற்று மூன்று வருடங்களின் பின்னர் விமானம் வந்திறங்கியதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே கோபால் பாக்லே இதனைத் தெரிவித்துள்ளார்.

காங்கசந்துறை துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு பின்னர், அங்கிருந்து காரைக்கால் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே படகு சேவையை விரைவில் தொடங்குவது குறித்து அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/2022/1315250

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் நாட்டுக்கு படகு சேவை அதுவும் காரைக்காலுக்கு?

கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு படகு சேவை ஏன் பாதியில் நின்று போனது?

புளுகுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? முதலில் ராமேசுவரம் (உங்கள் மொழியில் “தமிழக”) மீனவர்கள் பிரச்சனையை முடிக்கப் பாருங்கள். 😌

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மதுரை - ஜிகர்தண்டா,பன் புரோட்டா ,கறி தோசை

திண்டுக்கல் -  பூட்டு , புரியாணி

சிறிவில்லிபுத்தூர் -  பால்கோவா

பழனி - விபூதி , பஞ்சாமிர்தம்

ஆம்பூர் , நாகூர்- புரியாணி

தூத்துக்குடி -  மக்ரோன் 

ஊட்டி -  வர்க்கி

ராமநாதபுரம்- மஸ்கோத் அல்வா

தஞ்சாவூர்- லெஸ்சி ,சர்பத்

கும்பகோணம் - பால்பசந்தி, சூரிய கலா ,சந்திர கலா 

கூத்தாநல்லூர் -  தம்ரூட்

திருவையாறு- அசோகா அல்வா

திருநெல்வேலி- இருட்டுகடை அல்வா

சாத்தூர் -  காரா சேவு

அருப்புகோட்டை - சீவல்

மணப்பாறை-  நெய் முறுக்கு

செஞ்சி - முட்டை மிட்டாய்

சிதம்பரம் - கொத்சு

மாயவரம் -  கடப்பா..

காஞ்சிபுரம் ,சிறுவந்தாடு ,திருபுவனம் - பட்டு சேலை

ஆலங்குடி -பால் திரட்டு

......

டிஸ்கி 

கள உறவுகள்  அங்க உள்ளதையும்  எடுத்துப்போட்டு ஆக்கப்பூர்வமா உரையாடுங்கப்பா..😢

எனது வேண்டுதல்களும்..

மட்டகளப்பு - முந்திரி விதை, முந்திரி பழம், எருமைத்தயிர், காட்டுத்தேன், சோளம், சூட்டிறைச்சி, பொரித்த மரவெள்ளி+ஆனம். அப்பம். பிறகு முஸ்லிம் ஊர்களுக்கு போனால், சமோசா, கொத்துரொட்டி, பாபத், பாலாண்டி, “டல்” கோப்பி. 

யாழ்பாணம் - மாம்பழம், திராட்சை, வெற்றிலை, புகையிலை, பனாட்டு, பனங்கட்டி, கள்ளு, சகல பனம்பொருட்களும் (பனை பியர் உள்ளடங்கலாக). நெல்லி ரசம். எள்ளு பலகாராம்.

வன்னி - மான், மரை, நாவல் பழம், காட்டுத்தேன், சூட்டிறைச்சி, அவித்த கச்சான், சோளம்

மன்னார் - முத்து, கருவாடு, 

எல்லா மாவட்டத்திலும் கடலுணவு, புட்டு, இடியப்பம் நன்றாக கிடைக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மதுரை - ஜிகர்தண்டா,பன் புரோட்டா ,கறி தோசை

திண்டுக்கல் -  பூட்டு , புரியாணி

சிறிவில்லிபுத்தூர் -  பால்கோவா

பழனி - விபூதி , பஞ்சாமிர்தம்

ஆம்பூர் , நாகூர்- புரியாணி

தூத்துக்குடி -  மக்ரோன் 

ஊட்டி -  வர்க்கி

ராமநாதபுரம்- மஸ்கோத் அல்வா

தஞ்சாவூர்- லெஸ்சி ,சர்பத்

கும்பகோணம் - பால்பசந்தி, சூரிய கலா ,சந்திர கலா 

கூத்தாநல்லூர் -  தம்ரூட்

திருவையாறு- அசோகா அல்வா

திருநெல்வேலி- இருட்டுகடை அல்வா

சாத்தூர் -  காரா சேவு

அருப்புகோட்டை - சீவல்

மணப்பாறை-  நெய் முறுக்கு

செஞ்சி - முட்டை மிட்டாய்

சிதம்பரம் - கொத்சு

மாயவரம் -  கடப்பா..

காஞ்சிபுரம் ,சிறுவந்தாடு ,திருபுவனம் - பட்டு சேலை

ஆலங்குடி -பால் திரட்டு

14 minutes ago, goshan_che said:

மட்டகளப்பு - முந்திரி விதை, முந்திரி பழம், எருமைத்தயிர், காட்டுத்தேன், சோளம், சூட்டிறைச்சி, பொரித்த மரவெள்ளி+ஆனம். அப்பம். பிறகு முஸ்லிம் ஊர்களுக்கு போனால், சமோசா, கொத்துரொட்டி, பாபத், பாலாண்டி, “டல்” கோப்பி. 

யாழ்பாணம் - மாம்பழம், திராட்சை, வெற்றிலை, புகையிலை, பனாட்டு, பனங்கட்டி, கள்ளு, சகல பனம்பொருட்களும் (பனை பியர் உள்ளடங்கலாக). நெல்லி ரசம். எள்ளு பலகாராம்.

வன்னி - மான், மரை, நாவல் பழம், காட்டுத்தேன், சூட்டிறைச்சி, அவித்த கச்சான், சோளம்

மன்னார் - முத்து, கருவாடு, 

எல்லா மாவட்டத்திலும் கடலுணவு, புட்டு, இடியப்பம் நன்றாக கிடைக்கும். 

பருத்தித்துறை -  வடை, அப்பம்.
சாவகச்சேரி - பிலாப்பழம் 
பூநகரி - மொட்டைக்  கருப்பன் அரிசி 
ஆனைக் கோட்டை - செக்கில் ஆட்டின சுத்தமான நல்லெண்ணெய். .
உரும்பிராய் - மரவள்ளிக்கிழங்கு.
திருநெல்வேலி - கீரை.
வசாவிளான் - கப்பல் வாழைப்பழம்.
மட்டுவில் - கத்தரிக்காய்.
மானிப்பாய் - பனங்கிழங்கு 
கீரிமலை -  கூவில்  பனங்கள்ளு
யாழ்ப்பாணம் - மொக்கன் கடை புட்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களம் தமிழரை நிமிர விடாது என்பதை யாராவது விளங்கப்படுத்தி  எழுதி விடுங்கப்பா....

புலம்பெயர் தமிழரின் பலம் தமிழர்களுக்கு தெரியாது. ஆனால் உலகத்திற்கும் சிங்களத்திற்கும் நன்றாகவே தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.