Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

கோடு போட்டுக்கொடுத்தால் அதையே ரோடாக மாற்ற முயற்சிக்கோணும். பலரும் சென்னை மூலமாக யாழ்ப்பாணம் வர ஆரம்பித்தால் தானாகவே பெரிய விமானங்கள் வந்து செல்ல அடிகோலும், அதற்கேற்ப பயணப் பொதிகளின் எடையையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனக்கு தெரிந்து மதுரை விமான நிலையத்துக்கு ஆவ்ரோ ரக விமானங்களே சில வருடங்கள் வரை வந்து சென்றன. இப்பொழுதுதான் ஏர்பஸ் A320 ரக பெரிய விமானங்கள் சர்வதேச அளவில் (துபாய், சிங்கப்பூர்) போன்ற நாடுகளுக்கு செல்கின்றன. ஆகவே புலம்பெயர்தவர்களில் வருகையை ஒட்டியே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக மாற வாய்ப்புள்ளது, இல்லையேல் மத்தள விமான நிலையம் மாதிரி நெல் காயப்போட, வைக்கோல் பொதிகளை அடுக்க யாழ்ப்பாண விமான நிலையத்தை பயன்படுத்த நேரிடும்.

நீங்கள் சொன்னது போல் நடந்தால் ரொம்ப மகிழ்ச்சியடைவேன்....அப்படி நடக்கும் சத்தியம் இருக்குமாயின்  இலங்கையில் தமிழர் பிரச்சனை என்று ஒன்று இருக்க வாய்ப்புகள் இல்லை...முழு புலம்பெயர் தமிழர்களும் பலாலி விமான நிலையத்தை பயன்படுத்தினாலும்.  உங்கள் மதுரை விமான நிலையம் வளர்ச்சி அடைந்தது போல் பலாலி விமான நிலையம் வளரப்போவதில்லை ...சிங்கள அரசு ஒத்துழைப்பு வழங்கினாலும்.  சிங்கள இனவாதிகள். விடமாட்டார்கள். ...இன்றைக்குக்கூட  கனடா பிரித்தானியா ஜேர்மனி பிரான்ஸ்   அமெரிக்கா அவுஸ்திரேலியா.....போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக பலாலிக்கு விமானம் இருந்தால் நிறையவே புலம்பெயர் தமிழர்கள் வருவார்கள்’’      ஆனால் கொழும்பு விமான நிலையம் மூடவும் வேண்டி வரலாம்” .....வரும்    மேலும் இங்கே பல இலங்கை தமிழர்கள் குடியுரிமை பெறும் வாய்ப்புகள் இருந்தும் கூட    இலங்கை பாஸ்போர்ட் இல். காலவரையின்றி வதிவிட விசா பெற்று இருக்கிறார்கள்  அவ்வளவு காதல் இலங்கையில்    ஆனால் இங்குள்ள இலங்கை தூதுவராகங்களில்.  புதிய பாஸ்போர்ட் அல்லது பாஸ்போர்ட் இன் காலத்தை நீடிப்பு செய்யும் போது   இலங்கைக்கு போனால் திரும்ப ஜேர்மனி வர முடியாது என்று அடித்து கொடுக்கப்படுவதால் பலர் இலங்கை போக விரும்பியும்  போகவில்லை    கொழும்பு விமான நிலையத்திலும். இதே பிரச்சனை    இவர்களுக்கு இங்கே தங்க.   ....வாழ   விசா உண்டு    இறுதியாக ஈழவன்னியன்.  🤣   இல்லை இல்லை...ராஜாவன்னியன்.  நீங்கள் இவ்வளவு இலங்கை தமிழர்களுடன் நெடுங்காலமாக பழகியும்  இன்னும் இலங்கை தமிழர்கள் பிரச்சனை பற்றிபூரணமாக அறியவில்லையென்பது கவலையளிக்கிறது 😂🤣

  • Replies 240
  • Views 16.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

கூரியர் மூலம் அனுப்பும் பொருட்கள் கொழும்புக்கு போய் சுங்க இலாகா வரிகள்கட்டி எடுக்கணுமா?

இல்லை யாழில் வீடு வந்து சேருமா?

நான் முந்தி அனுப்பும் போது (2020 முன்) புதிய சாமன்கள், எலெக்டிரோனிக் இருக்கா என கேட்பார்கள் இல்லை என்றால் தனியாக வரி ஏதும் இல்லை.

வரி ஏதும் இல்லை, இருந்தாலும் அவர்கள் அறவிடும் தொகையில் வரிகளும் அடக்கம் என நினைக்கிறேன்.    வீட்டில் கொண்டு போய் கொடுப்பார்கள்.

பாவித்த (நல்ல நிலையில் உள்ள) சாறிகள், புத்தகங்கள், உலர் உணவுகள், புதிய விளையாட்டு சாமன்கள், ஒரு தரம் 2 மாதம் நிற்கும் போது குழந்தைக்கு தேவையான பொருட்கள் (பம்பர்ஸ்), புதிய விளையாட்டு உபகரணங்கள் (பேட், பாட்ஸ்) அனுப்பி உள்ளேன். 

அதே போல் ஒரு மணப்பெண் “இலக்கியா” பலகாரம்தான் வேணும் எண்டு அடம்பித்து, அதையும் கொழும்புக்கு அனுப்பி உள்ளேன்.

ஒரு போதும் வரி கட்டிய நியாபகம் இல்லை.

நான் சொல்வது சரிதானே @பெருமாள்@Nathamuni?

  • கருத்துக்கள உறவுகள்

கேக்கில தமிழும் இல்லை, சிங்களமும் இல்லை. 😁
நாங்களாவது சிங்களரோட சிங்கள சிறீ கார் நம்பர் பிளேட்டில போடு என்டதுக்கே சண்டை பிடித்தோம்.

இந்தி தவிர்ந்த மாநிலம், தமிழகத்தில் கூட, ரயில் நிலையங்களில், இந்தி..... இந்தியே தான்.... 🥴

4 hours ago, ராசவன்னியன் said:

முதலில் விமான நிலையத்தை லாபகரமானதாக நடத்த ஜெர்மனியிலிருந்து சென்னை மூலமாகவேனும் யாழ்ப்பாணம் வரப்பாருங்கள். எடுத்த எடுப்பிலேயே அத்தனை விமானங்களும் வந்திடுமா? புலத்திலிருக்கும் அத்தனை சனங்களும் உபயோகிக்க வெளிக்கிட்டால் யாழ் விமான நிலையம் சர்வதேசமாகாதா ஐயா?

மனமிருந்தால் மார்க்கபந்து ச்சீ.. மார்க்கமுண்டு, முன்னேற்றமும் உண்டுடூடூடூ…😎 

நான் நிச்சயம் வருவேன், ஆனால் அங்கே எனக்கு யாரையும் தெரியாதே? சுற்றுலா பயணமாக ஓரிரு நாள் தங்கி பார்க்கலாம்.

ஏன் தெரியாது?

யாழில் ஏராளன். மட்டக்கிளப்பில தனி.....

அது சரி..... சென்னை வழியே வர ரிராண்சிற் விசா தேவையில்லை என்றால் தான் சனம் வரும். இலங்கைப் பாஸ்போட் விசா கட்ணம் குறைவு.

நமக்கு £153 தேவையில்லா தண்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

கேக்கில தமிழும் இல்லை, சிங்களமும் இல்லை. 😁
நாங்களாவது சிங்களரோட சிங்கள சிறீ கார் நம்பர் பிளேட்டில போடு என்டதுக்கே சண்டை பிடித்தோம்.

இந்தி தவிர்ந்த மாநிலம், தமிழகத்தில் கூட, ரயில் நிலையங்களில், இந்தி..... இந்தியே தான்.... 🥴

அஸ்கு புஸ்கு, இப்போதைக்கு டாட்டா இந்திதான் போடுவான். தமிழ் நாட்டு பாங்கிலயே சேட்டை விட்டவனுகள், வெளிநாட்டு விமான சேவையில்? 

ரூட் நல்லா ஓடினால் லைக்காட்ட சொல்லி ஒரு பிளைட்டை இறக்குங்கோ, கேக் என்ன தமிழ்ல பாயாசமே ஊத்துவோம்🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

அதே போல் ஒரு மணப்பெண் “இலக்கியா” பலகாரம்தான் வேணும் எண்டு அடம்பித்து, அதையும் கொழும்புக்கு அனுப்பி உள்ளேன்.

சரிதான்....

அதுசரி....

யாரப்பா அடம் பிடித்த மணப்பெண், இலண்டன் பலகாரம் கேட்டு அடம் பிடிச்சது?

மனிசன் துளைஞ்சார்...

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

கேக்கில தமிழும் இல்லை, சிங்களமும் இல்லை. 😁
நாங்களாவது சிங்களரோட சிங்கள சிறீ கார் நம்பர் பிளேட்டில போடு என்டதுக்கே சண்டை பிடித்தோம்.

இந்தி தவிர்ந்த மாநிலம், தமிழகத்தில் கூட, ரயில் நிலையங்களில், இந்தி..... இந்தியே தான்.... 🥴

ஏன் தெரியாது?

யாழில் ஏராளன். மட்டக்கிளப்பில தனி.....

அது சரி..... சென்னை வழியே வர ரிராண்சிற் விசா தேவையில்லை என்றால் தான் சனம் வரும். இலங்கைப் பாஸ்போட் விசா கட்ணம் குறைவு.

நமக்கு £153 தேவையில்லா தண்டம்.

புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து  தமிழ் ஈழ விமான Air என்று தொடங்குவோமா.?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

சரிதான்....

அதுசரி....

யாரப்பா அடம் பிடித்த மணப்பெண், இலண்டன் பலகாரம் கேட்டு அடம் பிடிச்சது?

மனிசன் துளைஞ்சார்...

🤣 எல்லாம் லண்டன் பார்ட்டிதான்,  கலியாணம் ஊரில நடந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அது கொழும்பு போறது?

எங்கட அமைச்சர்மார் வந்திருப்பினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

இந்தியன் போட்ட ரன்வேயில் சீன விமானம் இறங்கினால் அதன் கற்புக்கு களங்கம்🤣.

ஆகவே சன்ஹாய் - சங்கானைய் தான் சரி வரும்

 யூ மீன் ஈழத்து சங்காய் நம்ம சங்கானை? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

வரி ஏதும் இல்லை, இருந்தாலும் அவர்கள் அறவிடும் தொகையில் வரிகளும் அடக்கம் என நினைக்கிறேன்.    வீட்டில் கொண்டு போய் கொடுப்பார்கள்.

நீங்கள் வீடு என்று குறிப்பிடுவது கொழும்பா?யாழா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் வீடு என்று குறிப்பிடுவது கொழும்பா?யாழா?

மட்டக்களப்பு. 😂🤣   என்று  @ரதி சொன்னவ. 
தமிழ்சிறி…. எஸ்கேப்பு. 😁

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஏராளன் said:

எங்கட அமைச்சர்மார் வந்திருப்பினம்.

ஓம்

38 minutes ago, குமாரசாமி said:

 யூ மீன் ஈழத்து சங்காய் நம்ம சங்கானை? :cool:

அதேதான். முன்னர் எங்கட தோழர்கள் சீனாவில் மழை பிடித்தால் சங்காணையில்தானாமே குடை பிடிப்பார்கள்🤣

31 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் வீடு என்று குறிப்பிடுவது கொழும்பா?யாழா?

கொழும்பு, யாழ், மட்டகளப்பு

26 minutes ago, தமிழ் சிறி said:

மட்டக்களப்பு. 😂🤣   என்று  @ரதி சொன்னவ. 
தமிழ்சிறி…. எஸ்கேப்பு. 😁

🤣. முல்லைதீவு வீட்டுக்கு சாமான் அனுப்பியதில்லை🤣

@ஈழப்பிரியன் அண்ணா, முன்பு கொழும்பில் ராஜசிங்க ரோட்டில் போ எடுக்கோணும். பிறகு மேல் மாகாணத்தில் டோர் டிலிவரி. 2020 க்கு சற்று முன்னான காலப்பகுதியில் வட கிழகிலும் டோர் டிலிவரி வந்து விட்டிருந்தது. இப்போ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

* எல்லாம் என் வீடுகள் அல்ல - தங்கும் வீடுகள் 🤣

நமக்கு ஒரே வீடுதான் - யூகேயில் - துரத்தி பிடித்து கட்டியது🤣

  • கருத்துக்கள உறவுகள்

சரி ஊருக்கு வந்து சுத்தி போற ஆட்கள் லிஸ்ட போடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சரி ஊருக்கு வந்து சுத்தி போற ஆட்கள் லிஸ்ட போடுங்கள்

இப்ப என்ன சீன் எண்டா,

Wizz Air எண்டு ஒரு செக் கொம்பனி அபுதாபில இருந்து மத்தளக்கு பிளேன் ஓட்டுறான். அபுதாபி போய் அத பிடிச்சி வந்தா, van ஐ சியம்பாலாண்டுவைக்கால விட்டா, 4 மணதியாலதில கண்ணகை அம்மன் கோவில்ல நிக்கலாம்.

பலாலியா, மத்தளவா🤣 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

நான் நிச்சயம் வருவேன், ஆனால் அங்கே எனக்கு யாரையும் தெரியாதே? சுற்றுலா பயணமாக ஓரிரு நாள் தங்கி பார்க்கலாம்.

யாழ்ப்பாணத்தில் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உண்டு..

👇🏽இந்த கடற்கரையும் அதன் சுற்றுப்புற சூழலும் மிகவும் அமைதியான ஒன்று. ஆனால் கவனிப்பாராற்று இருக்கிறது. இது போல இன்னமும் சில.. இந்த இடம் தாளையடி, இங்கே உள்ள கடற்கரை அழகான ஒன்று. தாளையடிக்கு அருகில் உள்ள மணற்காடும் சரி நாகர் கோவிலும் சரி.. கவனிப்பாராற்று இருக்கிறது. இப்படி பல உள்ளன. நல்லூர், யாழ்ப்பாணக் கோட்டை என்பதை விட இந்த மாதிரி இடங்களையும் பார்க்கலாம். 

large.6D47BF44-DE38-403B-83DB-0AEAE1B537C3.jpeg.eb2b0dcd802d6ec31d0ca195286bb207.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

நான் நிச்சயம் வருவேன், ஆனால் அங்கே எனக்கு யாரையும் தெரியாதே? சுற்றுலா பயணமாக ஓரிரு நாள் தங்கி பார்க்கலாம்.

கீரிமலை உச்சியில், ஏறி நின்று பார்த்தால்….
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தெரியும் என்று பலர் சொல்வார்கள்.
ஆனால் நான் ஏறி நின்று பார்த்த போது…
வானம், மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

இது யார் விட்ட புலுடா? 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

கீரிமலை உச்சியில், ஏறி நின்று பார்த்தால்….
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தெரியும் என்று பலர் சொல்வார்கள்.
ஆனால் நான் ஏறி நின்று பார்த்த போது…
வானம், மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. 😁

மப்பில ஏறி நிண்டு பார்த்தன், ஒரே மந்தாரமா இருந்தது எண்டெல்லே நான், பிழையா வாசிச்சுப் போட்டன். 😎

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

யாழ்ப்பாணத்தில் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உண்டு..

வணக்கம் பிரபா நீண்ட நாட்களின் பின் காண்பது சந்தோசம்.

உங்கள் அப்பாவின் உடல்நிலை எப்படி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இது யார் விட்ட புலுடா? 

2 minutes ago, Nathamuni said:

மப்பில ஏறி நிண்டு பார்த்தன், ஒரே மந்தாரமா இருந்தது எண்டெல்லே நான், பிழையா வாசிச்சுப் போட்டன். 😎

இதைப் பார்த்திட்டு… @ராசவன்னியன் பலாலிக்கு, ரிக்கற் போடப் போறார். 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

இதைப் பார்த்திட்டு… @ராசவன்னியன் பலாலிக்கு, ரிக்கற் போடப் போறார். 😁

இஞ்ச இருந்த என் மலைய காணோம் சார்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இஞ்ச இருந்த என் மலைய காணோம் சார்🤣

ராசவன்னியன், கீரி மலையில் ஏறிப் பார்க்க முன்னம்,
மலையை ஆட்டையை போட்டுட்டாங்க சார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

யாழ்ப்பாணத்தில் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உண்டு..

👇🏽இந்த கடற்கரையும் அதன் சுற்றுப்புற சூழலும் மிகவும் அமைதியான ஒன்று. ஆனால் கவனிப்பாராற்று இருக்கிறது. இது போல இன்னமும் சில.. இந்த இடம் தாளையடி, இங்கே உள்ள கடற்கரை அழகான ஒன்று. தாளையடிக்கு அருகில் உள்ள மணற்காடும் சரி நாகர் கோவிலும் சரி.. கவனிப்பாராற்று இருக்கிறது. இப்படி பல உள்ளன. நல்லூர், யாழ்ப்பாணக் கோட்டை என்பதை விட இந்த மாதிரி இடங்களையும் பார்க்கலாம். 

large.6D47BF44-DE38-403B-83DB-0AEAE1B537C3.jpeg.eb2b0dcd802d6ec31d0ca195286bb207.jpeg

 வணக்கம் பிரபா. 

அப்பா சுகவீனமாய் இருந்தார? நான் செய்தியை காணவில்லை. இப்போ சுகமா?

ஓம் நீங்கள் சொன்ன கடற்கரை மிக அழகானதுதான். இன்னும் கொஞ்சம் தூரம் போனால் மணல் கும்பான்கள் எல்லாம் இருக்கும். இலங்கை மாதிரியே இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு போதும் அந்த மண்ணுக்கு போய் வாழப்போவது இல்லை.. அந்த மண்ணில் வாழும் மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.. அந்த மண்ணும் மக்களும் முன்னேறவேண்டும் என்ற எண்ணமும் இல்லை.. இவர்கள் எல்லோரும் 2009 க்கு முன்னம் பாத்துவிட்டு வந்த இலங்கையின் ஞாபகத்திலேயே மிஞ்சி இருக்கும் வயோதிக காலத்தை எழுதியும் வாழ்ந்தும் கழிப்பவர்கள்.. இவர்களின் அடுத்த தலைமுறைக்கு அதைக்கூட நினைக்க நேரம் இருக்கப்போவதில்லை.. அவர்கள் உலகம் வேறு.. அதேபோல்தான் இப்பொழுது ஈழத்தில் இருக்கும் புதிய தலைமுறையின் உலகமும் வேறு.. அவர்களும் இருக்கும் சாத்தியமான வழிகளில் தாமும் தாம் சூழ்ந்திருக்கும் சமூகமும் டெவலப்பாக இருக்கவேண்டும் வேலை  வாய்ப்புகள் என்று அவர்கள் சிந்தனையே வேறு.. இவர்கள் எதிர்பார்ப்பது போல் எந்த நேரமும் போர் போர் என்று வாழ அவர்களால் முடியாது.. அவர்கள் ஏற்கனவே போரால் அனுபவித்து விட்டார்கள்.. உங்களைப்போல் ஒரு மாநில சுயாட்சி கிடைதாலே போதும் உங்களைப்போல் நாங்களும் சந்தோசமாக வாழுவோம்.. பலாலி விமான நிலையத்தை முன்னேற்ற அந்த மண்ணில் அக்கறை உள்ள எல்லா தமிழர்களும் முயற்சி செய்யவேண்டும்.. அதனால் பலன் பெறப்போவது அந்த மண்ணில் வாழும் எம் உறவுகளே.. அதை விடுத்து அந்த மக்களுக்கு நல்லது நடக்ககூடிய விடயங்களில் உதவி செய்ய விருப்பமில்லாதவர்கள் முளையிலையே கிள்ளிவிடுவதுபோலான கருத்துக்களை வைத்து உபத்திரவம் செய்யாமல் அமைதியாக இருந்தாலே அது பெரிய உதவி அம்மக்களுக்கு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.