Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொரோக்கோவும் போர்த்துக்கலும் இலங்கை சோனகராகிய நாமும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மொரோக்கோவும் போர்த்துக்கலும் இலங்கை சோனகராகிய நாமும்.
இலங்கை முஸ்லிம்களின் இன உருவாக்கத்தின் சிக்கலான வரலாற்றுப் பின்னணியை சமூக கலாச்சார மற்றும் அரசியல் அம்சங்களுடன் விரிவாக விளங்கிக்கொள்தல் எமக்கும் மொரோக்கோவிற்கும் போர்த்துக்கலுக்குமான தொடர்பை ஓரளவு விபரிக்கும் என நம்பலாம்.
மூர் என்ற பெயரின் சொற்பிறப்பியல் தோற்றம் உலகளவில் அறியப்படுகிறது. இது லத்தீன் மூலமான மவுரியிலிருந்து வந்தது.
இன்றைய மேற்கு அல்ஜீரியா மற்றும் வடகிழக்கு மொராக்கோவை உள்ளடக்கிய ரோமானிய மாகாணமான மவுரேட்டானியாவில் வசிப்பவர்களின் சந்ததியினரே உலகெங்கும் மூர் என முதலில் அழைக்கப்பட்டனர்.
இலங்கையைப் பற்றிய போர்த்துகீசிய வரலாற்றாசிரியர், ஃபெர்னாவோ டி குய்ரோஸ்(Portuguese
historian Fernao De Queyroz) இலங்கை முஸ்லிம்கள் "முரிட்டானியாவைச் சேர்ந்தவர்கள்" என்பதால் 'மௌரோஸ்' என்று அழைக்கப்பட்டதாகக் கூறினார். இறுதியில் 'மௌரோஸ்' பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் 'மூர்ஸ்' ஆனது.
இலங்கையின் முதல் பிரதம நீதியரசர்
சேர் அலெக்ஸாந்தர் ஜொன்ஸ்டனும் (Sri Alexander Johnston) இலங்கை சோனகர்கள் முரிட்டானியாவைச் (Mauretania) சேர்ந்த அறபுக்களின் வழித் தோன்றல்கள் என்பதாகக் கூறுகின்றார். வேறு சில வரலாற்றாசிரியர்களின் கருத்தும் இதை உறுதிப்படுத்துகிறது.
வட ஆப்பிரிக்காவின் அல்ஜீரியா, மாரிட்டானியா,லிபியா மற்றும் மொராக்கோ பகுதிகளை உள்ளடக்கிய மக்ரெப் பிராந்தியத்தில் இருந்த வணிக குழுவினருக்கும் மத்திய தரைக்கடல் மற்றும் அரபு வணிகர்களுக்குமான வியாபாரத்தொடர்புகளை பற்றிய கிபி 11ம் நூற்றாண்டின் அரபு புவியியலாளரான அல் பக்ரியின் பதிவுகள், அதேபோல கிபி 8ம் நூற்றாண்டில் சோனிங்கே மக்களின் வணிகத்தொடர்புகள் குறித்து அரபு புவியியலாளர் முஹம்மது இப்னு இப்ராஹிம் அல் ஃபஸாரி என்பவரின் பதிவுகள் இவர்களின் வணிக நோக்கத்திற்கான மரக்கலத்திலான இலங்கை நோக்கிய பயணம், திமிலரிடமிருந்து முக்குவர்களை பாதுகாப்பதில் பட்டாணியர், துலுக்கர் அல்லது சோனகர் என தமிழர்களாலும் மரக்கல மினிசு என சிங்களவர்களாலும் அறியப்பட்ட இவர்களின் தமிழ் பெண்களின் திருமண பந்தத்தால் உருவான இலங்கை சோனக முஸ்லீம்கள் ( Ceylon Moors) பற்றிய விரிவான ஆராய்ச்சி என்பன நமக்கும் மொரோக்கோவிற்குமான தொடர்பை விரிவாக எடுத்தியம்புகிறது.
எனவே இலங்கை முஸ்லீம்களை குறிக்கும் சொற்களான மூர், சோனகர் அல்லது மரக்கல மினிசு என்கிற சொற்களின் அடிப்படை நம்முள் ஆப்பிரிக்க வணிகர்களின் குறிப்பாக மரிட்டானிய மற்றும் மொரோக்கோ இனக்கலப்பினை காட்டுவதாக உள்ளது.
இதனால் நாமும் மொரோக்கோவின் வெற்றியை கொண்டாடலாம். 🤣.
-கியாஸ் சம்சுடீன் -
 
  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக்கொடுப்பதும் கூட்டிக்கொடுப்பதும் கைவந்தகலை.

மொரோக்கோவின் வெற்றியை கொண்டாடலாமாம். ஆனால் தமிழை பேசிக்கொண்டு தமிழரின் தோல்வியை கொண்டாடிய இனமல்லவா இது! 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாலி said:

காட்டிக்கொடுப்பதும் கூட்டிக்கொடுப்பதும் கைவந்தகலை.

மொரோக்கோவின் வெற்றியை கொண்டாடலாமாம். ஆனால் தமிழை பேசிக்கொண்டு தமிழரின் தோல்வியை கொண்டாடிய இனமல்லவா இது! 

எங்கேயாவது வீழ்ந்து தொழுதால் அவன் இனம் அண்ணன் தம்பி ஆவான்

நாம் வீழ்ந்தால் நம்மவர்கள் எட்டி உதைத்து விட்டு போவார்கள் இது தான் நம்ம இனம் 

இதுவே சவுதியாக இருந்தால் உருட்டு இதை விட பல மடங்காக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

இது மாவனெல்ல காக்காவின் கட்டுரையா?

அமீர் நானா, கப்பலில் இருந்து இறங்கி ஓடிப் போய் கக்கா இருந்ததால் அமெரிக்கா என்று அடித்து விட்ட கோஸ்ட்டியின் கதை போல இருக்குதே...

அடேயப்பா... மொரோக்கோ வெண்டது குவாட்டர் பைனல்.

இனி செமி, பைனல் எண்டு கணக்க விசயம் இருக்கு

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி அடைந்தவன் பக்கம் போய்… ஒட்டிக் கொள்வது இந்த இனம்.
பாலஸ்தீனத்துக்கு… இஸ்ரேல் தினமும் அடிக்கிறான்.
அதைப் பற்றி இவர்கள், கவலைப் படுவது கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

வெற்றி அடைந்தவன் பக்கம் போய்… ஒட்டிக் கொள்வது இந்த இனம்.
பாலஸ்தீனத்துக்கு… இஸ்ரேல் தினமும் அடிக்கிறான்.
அதைப் பற்றி இவர்கள், கவலைப் படுவது கிடையாது.

இப்பவும் பதுங்குகினம் ..ரணில் வென்றால் ...நானாமார் எல்லாம் அமைச்சுப்பதவிக்கு ரெடி...அது ரத்தத்தில்

ஊறியது...அது ஆவியாகாமல் இருக்க தொப்பியும் போடுவினம்...தேவையென்றால் மாத்தியும் போடுவினம்/

  • கருத்துக்கள உறவுகள்

மொரோக்கோவும் போர்த்துக்கலும் இலங்கை சோனகராகிய நாமும்.

சவுதி அரேபியாவை இப்போது விட்டாச்சா

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவன் போனவன் எல்லாம் இலங்கை சோனகரை ஏறிமிதிச்சுட்டு போயிருக்கான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

வெற்றி அடைந்தவன் பக்கம் போய்… ஒட்டிக் கொள்வது இந்த இனம்.
பாலஸ்தீனத்துக்கு… இஸ்ரேல் தினமும் அடிக்கிறான்.
அதைப் பற்றி இவர்கள், கவலைப் படுவது கிடையாது.

என்ன சிறித்தம்பி......எம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இது மாவனெல்ல காக்காவின் கட்டுரையா?

அமீர் நானா, கப்பலில் இருந்து இறங்கி ஓடிப் போய் கக்கா இருந்ததால் அமெரிக்கா என்று அடித்து விட்ட கோஸ்ட்டியின் கதை போல இருக்குதே...

அடேயப்பா... மொரோக்கோ வெண்டது குவாட்டர் பைனல்.

இனி செமி, பைனல் எண்டு கணக்க விசயம் இருக்கு

போர்துகேயர் வட ஆபிரிக்க அரபிகளை Mores என அழைத்ததும் அதன் ஆங்கில வடிவம் Moores என்பது உண்மைதான்.

லிஸ்பனில் இருந்து 1 மணி நேர ஓட்டத்தில் Castelo dos Mouros என்ற இஸ்லாமியரின் 9ம் நூற்றாண்டு கோட்டை உண்டு. நான் போய் பார்த்துள்ளேன்.

ஒரு காலத்தில் போர்துகல், ஸ்பெயின் என தெற்கு ஐரோப்பா முழுவதும் (ஐபீரியா) இஸ்லாமிய நாடாக இருந்தபோது கட்டப்பட்டது.

ஆனால்…..

Mores, Moores என்ற பதங்களை தனியே வட ஆபிரிக்க அரபிகளை (மெஹ்ரப்) மட்டும் குறிக்க ஐரோப்பியர் பயன் படுத்தவில்லை. மாறாக இதை முகமதியர் (Mohamaddians, Muslims ) என்பதற்கு மாற்று சொல்லாகவே பயன்படுத்தினர்.

அதாவது போர்த்துகேயர் தாம் 9-12 ம் நூற்றாண்டில் முதலில் போரிட்ட அரபி முஸ்லிம்களை மோரெஸ் என அழைத்தனர். பின் ஆசியா, ஆபிரிக்கா வந்து நாடுகள் பிடித்த போது அங்கே இருந்த முஸ்லிம்களையும் அதே பேரில் அழைத்தனர்.

ஆகவே இலங்கை முஸ்லிம்களுக்கும் மொரொக்கோவுக்கும் உள்ள தொடர்பு, மொட்டந்தலைக்கும் முக்காபுலாவுக்கும் உள்ள முடிச்சுத்தான்.

10 hours ago, colomban said:

பட்டாணியர்

இவர்கள் பஸ்தூன் எனப்படும் வடக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் தெற்கு அரைப்பகுதிக்கும் மேலாக வசிக்கும் இனக்குடி. இவர்கள் அரபிகள் அல்ல. ஒரு காலத்தில் இந்து, பின் பெளத்தர், அலக்சாண்டர் வந்து போன பின் இஸ்லாத்தை தழுவினர்.

10 hours ago, colomban said:

துலுக்கர்

துருக்கியர் என்பதன் திரிபு. இவர்களும் அரபிகளோ, மஹ்ரப் பகுதியினரோ அல்ல.

10 hours ago, colomban said:

சோனகர்

யவனர் என முதலில் கிரேக்கர்களை, பின் ரோமர்களை, பின் அரபி, பேர்சியர்களை, அதாவது தோல் நிறம் பழுத்தவர்களை விபரிக்க தமிழர் பயன்படுத்திய சொல். அதன் திரிபே சோனகர்.

யவனர்  என்பது பல இடங்களில் சங்க இலக்கியத்தில் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

மரக்கல மினிசு

மரக்கலத்தில் வந்ததாலா இல்லையே?

ஒரு சிங்கள மன்னனை சோனகர் படை காப்பாற்றியதாயும் அதனால் “என்னை காத்த இரத்தம்” “மா ரக்க லே” என்று அவர் சொன்னதாவும் அல்லவா பல முஸ்லிம் தலைவர்கள் உட்பட “சிங்க லே” கலவர காலத்தில் சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

வெற்றி அடைந்தவன் பக்கம் போய்… ஒட்டிக் கொள்வது இந்த இனம்.
பாலஸ்தீனத்துக்கு… இஸ்ரேல் தினமும் அடிக்கிறான்.
அதைப் பற்றி இவர்கள், கவலைப் படுவது கிடையாது.

யார் சொன்னது 
இலங்கையில் நின்று இஸ்ரேலுக்கு  கல் எறிந்தவர்கள் நீங்க பார்க்கவில்லையா ...
ஷைத்தானையே கல் எறிந்து விரட்டும் கூட்டமல்லவோ 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் ஒர் நாடு வெற்றி பெற்றால் அதை மதத்துடன் கலப்பார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.