Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் இராஜினாமா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாநகர சபை அறிமுகப்படுத்திய சீருடை விவகாரம்: யாழ்.மாநகர சபை முதல்வர் கைது

யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் இராஜினாமா!

யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

நாளை (சனிக்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மணிவண்ணன் தெரியப்படுத்தியுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதையடுத்து அவர் தனது பதவியை துறக்க முன்வந்துள்ளார்.

இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காத நிலையில் மணிவண்ணன் இராஜினாமா முடிவை எடுத்ததாக மணிவண்ணனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிததுள்ளன.

கடந்த 2020 டிசம்பர் 30ஆம் திகதி மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்டும், மணிவண்ணனும் போட்டியிட்ட நிலையில், ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் முதல்வராக தெரிவானார்.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1318053

  • Replies 73
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 முன்னாள் முதல்வர் ஆனோல்ரின் நினைவு மணிவண்ணனுக்கு வந்து போயிருக்கும் 🤣

முற்பகல் விதப்பின், பிற்பகல் விளையும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பதவியை ராஜினாமா செய்தார் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன்

30 DEC, 2022 | 08:32 PM
image

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு  தெரியப்படுத்தியுள்ளார். 

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் 2022 டிசம்பர் 21ம் திகதி தோற்கடிக்கப்பட்டது. 
இந்நிலையில் ஒன்பது நாட்களுக்கு பின்னர் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இரண்டு வருடங்களுக்கு பின்னர் ராஜினாமா செய்துள்ளார். 
இரண்டாவது தடவையாக வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதும் கட்சிகளின் ஆதரவு கிடைக்காத நிலையில் மணிவண்ணன் ராஜினாமா முடிவை எடுத்ததாக மணிவண்ணனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. 
2020 டிசம்பர் 30 இல் மாநகர முதல்வர் பதவிக்கு ஆர்னோல்டும், மணிவண்ணனும் போட்டியிட்டனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் மணிவண்ணன் முதல்வராக தெரிவானார். 
45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/144578

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஏராளன் said:

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும்

ஒற்றுமைக்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டு தமிழரது அரசியலில் வாய்க்குமா? இந்த இலட்சணத்தில் தமிழினத்துக்கு தீர்வு தேடுகினமாம். வடிவேலு சொல்லும் *** பயலுக என்ற சொல்லியம் வேறு நினைவுக்கு வருகிறது.
இவர்கள் எல்லோரையும் கலைத்துக் கலைத்து மக்கள் துரத்தியடிக்கும்வரை விமோசனம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாரை நம்பணும்

யாரை  நம்பக்காடாது என்பதற்கு  இவரும் இவரது பதவியும்  மீண்டும் சாட்சியாகிறது

  • கருத்துக்கள உறவுகள்

பல நகர அபிவிருத்தி சார்ந்த செயல்திட்டங்களைக் குறுகிய காலப்பகுதியில் செயல்படுத்திய ஒரு யாழ் மேயர் மணிவண்ணன். இனி யார் வந்து கதிரையைச் சூடாக்க ஆவலாக இருக்கிறார்கள் எனப் பார்க்க ஆவலாக உள்ளேன்!😂

மணி இனி தேசிய அரசியலுக்கு வர வேண்டியது தான், செயல்படக் கூடியவர்கள் தான் அங்கேயும் தேவை. கவனிப்பார் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

யாரை நம்பணும்

யாரை  நம்பக்காடாது என்பதற்கு  இவரும் இவரது பதவியும்  மீண்டும் சாட்சியாகிறது

இப்படியே யாரை யாரை என்னு தேய்நது தேரையாகிப்போய் நிற்கிறன தமிழ்க் கட்சிகள். என்னதான விடை?

16 minutes ago, Justin said:

மணி இனி தேசிய அரசியலுக்கு வர வேண்டியது தான், செயல்படக் கூடியவர்கள் தான் அங்கேயும் தேவை. கவனிப்பார் என நம்புகிறேன்.

மாநகரத்துக்கே பூட்டுப்போடும் ஆசாமிகள், தேசிய அரசிலுக்கு....... எப்படியான கருங்கற்களை ருட்டிவிடுவார்கள்! தாண்டுவாரா? தாழ்வாரா?

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Justin said:

பல நகர அபிவிருத்தி சார்ந்த செயல்திட்டங்களைக் குறுகிய காலப்பகுதியில் செயல்படுத்திய ஒரு யாழ் மேயர் மணிவண்ணன். இனி யார் வந்து கதிரையைச் சூடாக்க ஆவலாக இருக்கிறார்கள் எனப் பார்க்க ஆவலாக உள்ளேன்!😂

மணி இனி தேசிய அரசியலுக்கு வர வேண்டியது தான், செயல்படக் கூடியவர்கள் தான் அங்கேயும் தேவை. கவனிப்பார் என நம்புகிறேன்.

ஜஸ்டின் அவர்களே என்ன என்ன அபிவிருத்தித் திட்டங்களை குறுகிய காலத்தில் செயற்படுத்தனார்? உண்மையில் ஆர்வ மிகுதியால்தான் குறை நினைக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணண் தமிழ்த்தேசிய முன்னணியில் நல்ல டபொறுப்பில் இருந்தவல் பதவி ஆசையில்; ஈபிடிபியுடன் சேர்ந்து மேயராகினார்.இதற்கு ஆர்னோல்ட்டை மேயராக்கி ஆர்னோல்ட்டை கவிழ்த்த சுமத்திரனே காரணம். எந்த சுமத்திரன் மணவண்ணைனை மாநகரசபை அமர்வுகளில் பங்கு பற்ற முடியாத வகையில் வழக்குப் போட்டு முடக்கினராரோ அதே சுமத்திரனே ஆர்னோல்ட்டைக் கவிழ்த்து மணியை முதல்வராக்கினார். பதவிஆசை கண்ணை மறைக்க முன்னணியைப் பகைத்துக்கொண்டு ஈபிடிபியுடன் சேர்ந்து மேயரான  மணிவண்ணன் இன்று பதவிதுறந்து எங்கே போவது என்று தெரியாமல் நிற்கிறார். கழுதை கெட்டால் பகுட்டிச்சுவரென்று அனந்தி>சிவாஸிலிங்கம் செய்தது போல தமிழ்டதேசியம் என்ற சொற்'கள் வரத்தக்கதாக ஒருகட்சியை அமைத்துக்கொண்டு விக்கி.மாவை>சுரேஸ் எல்லோருடனும் கொள்கையற்ற தேர்ல் கூட்டு  ஒன்றை வைக்க வேண்டியதுதான். தமிழ்த்தேசியக்கூட்டமைபின் ஒற்றுமையைச் சிதைத்த சுமத்தரன் இப்பொழுது தானே அரசியல் வெற்றிடத்தில் அந்தரத்தில் தொங்குகின்றார்.

வலி வடக்கு , வலி தென் மேற்கு போன்ற பல வடக்கின் சபைகள் சிறப்பாக செயல்படுகின்ற போது யாழ்ப்பாண மாநகர சபை தோல்வியடைந்து இருக்கின்றது
2022 ஆம் ஆண்டின் உலக வங்கியின் மதிப்பீட்டில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் 17 சபைகளில் 14 இடத்தையும் வடக்கு மாகாணத்தில் உள்ள 34 சபைகளில் 26 ஆவது இடத்திலும் மாநகர சபை இருக்கின்றது
இதற்கு யார் பொறுப்பு ?
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

ஜஸ்டின் அவர்களே என்ன என்ன அபிவிருத்தித் திட்டங்களை குறுகிய காலத்தில் செயற்படுத்தனார்? உண்மையில் ஆர்வ மிகுதியால்தான் குறை நினைக்க வேண்டாம்.

அழகிய நகரம் திட்டத்தின் கீழ் ஆரிய குளப் பகுதி மீளமைப்பு, புல்லுக் குளத்தை அண்டிய பகுதி, நாயன்மார்க்கட்டுப் பகுதியில் சில வேலைகள் என பல திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டன. ஆரிய குளம், புல்லுக் குளம் பூர்த்தி, நாயன்மார்க்கட்டு ஏரியா பற்றித் தெரியவில்லை.

இதுக்கேன் குறை நினைக்கிறேன்? 😂 நாம் மணியைப் பற்றிப் பேசும் போதே நீங்களும் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லிப் போங்கோவன் குறை நினைக்காமல்? ஏன் தேர்தல் வென்ற உடனேயே பொன்னம்பலத்தார் மணியை வெட்டினவராம்?

  • கருத்துக்கள உறவுகள்

தன்னலத்திற்காக சேரக்கூடாதாரோடு சேர்ந்தால், பாதியிலே சரிந்து வேதனையும், அவமானமும், நம்பிக்கை இழப்பும் அடைவது நிஜம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. என்று தாடியோடு சேர்ந்து பதவியமைத்தாரோ, அன்றே இவர் மீது இருந்த நம்பிக்கை போய் இவர்மேல் சந்தேகமே எழுந்தது. இருந்தாலும் இதோடு தப்பிவிட்டார், இனி சரிசெய்ய முயற்சிப்பார். ஆனால் இங்கு தோற்றது கழுதைப்புலி. அது நினைத்தது மணி தன்ர காலில விழுந்து கெஞ்சுவார் என்று. அது நடந்திருந்தால் தாம் தூம் என்று குதித்திருக்கும். தீர்வு விடயத்திலும் இந்தக் கழுதைப்புலியை தள்ளிவைப்பதே நல்லது. அதுக்குதானே இன்னொன்று முதலிலேயே போய் குந்தியிருந்து குசுகுசுக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, புலவர் said:

மணிவண்ணண் தமிழ்த்தேசிய முன்னணியில் நல்ல டபொறுப்பில் இருந்தவல் பதவி ஆசையில்; ஈபிடிபியுடன் சேர்ந்து மேயராகினார்.இதற்கு ஆர்னோல்ட்டை மேயராக்கி ஆர்னோல்ட்டை கவிழ்த்த சுமத்திரனே காரணம். எந்த சுமத்திரன் மணவண்ணைனை மாநகரசபை அமர்வுகளில் பங்கு பற்ற முடியாத வகையில் வழக்குப் போட்டு முடக்கினராரோ அதே சுமத்திரனே ஆர்னோல்ட்டைக் கவிழ்த்து மணியை முதல்வராக்கினார். பதவிஆசை கண்ணை மறைக்க முன்னணியைப் பகைத்துக்கொண்டு ஈபிடிபியுடன் சேர்ந்து மேயரான  மணிவண்ணன் இன்று பதவிதுறந்து எங்கே போவது என்று தெரியாமல் நிற்கிறார். கழுதை கெட்டால் பகுட்டிச்சுவரென்று அனந்தி>சிவாஸிலிங்கம் செய்தது போல தமிழ்டதேசியம் என்ற சொற்'கள் வரத்தக்கதாக ஒருகட்சியை அமைத்துக்கொண்டு விக்கி.மாவை>சுரேஸ் எல்லோருடனும் கொள்கையற்ற தேர்ல் கூட்டு  ஒன்றை வைக்க வேண்டியதுதான். தமிழ்த்தேசியக்கூட்டமைபின் ஒற்றுமையைச் சிதைத்த சுமத்தரன் இப்பொழுது தானே அரசியல் வெற்றிடத்தில் அந்தரத்தில் தொங்குகின்றார்.

வலி வடக்கு , வலி தென் மேற்கு போன்ற பல வடக்கின் சபைகள் சிறப்பாக செயல்படுகின்ற போது யாழ்ப்பாண மாநகர சபை தோல்வியடைந்து இருக்கின்றது
2022 ஆம் ஆண்டின் உலக வங்கியின் மதிப்பீட்டில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் 17 சபைகளில் 14 இடத்தையும் வடக்கு மாகாணத்தில் உள்ள 34 சபைகளில் 26 ஆவது இடத்திலும் மாநகர சபை இருக்கின்றது
இதற்கு யார் பொறுப்பு ?

புலவர், மணிக்குப் பதவி ஆசை வரமுதல் அவர் மூலம் சில ஆயிரம் வாக்குகளைப் பெற்று வென்ற கஜே குழு தேசியப் பட்டியல் ஆசையில் அவரைக் கட்சியில் இருந்து தூக்கிய பிறகு, முன்னணிக்குத் தடவி விட மணிக்கு என்ன தேவை இருந்தது என நினைக்கிறீர்கள்?

உலக வங்கி என்ன அடிப்படையில் இந்த 2022 தரப்படுத்தலை செய்திருக்கிறது என்று அறிய ஆவல், ஒதுக்கிய பண அடிப்படையிலா அல்லது பூர்த்தியான திட்டங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலா? எதுவாக இருந்தாலும் எங்கள் பகுதி நிர்வாகங்கள் நன்கு செயற்படுவதில் மகிழ்ச்சியே!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

ஏன் தேர்தல் வென்ற உடனேயே பொன்னம்பலத்தார் மணியை வெட்டினவராம்?

கூட்டமொன்றுக்கு அடியாட்களோடு போய் சண்டித்தனம் காட்டியிருக்கிறார். (எதற்காக என்பதை தேடினால் காரணம் புரியும்). அத முதலில நான் நம்பேல, கூடிய கூட்டைபாக்கும்போது நம்பாமல் இருக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பல நகர அபிவிருத்தி சார்ந்த செயல்திட்டங்களைக் குறுகிய காலப்பகுதியில் செயல்படுத்திய ஒரு யாழ் மேயர் மணிவண்ணன். இனி யார் வந்து கதிரையைச் சூடாக்க ஆவலாக இருக்கிறார்கள் எனப் பார்க்க ஆவலாக உள்ளேன்!😂

மணி இனி தேசிய அரசியலுக்கு வர வேண்டியது தான், செயல்படக் கூடியவர்கள் தான் அங்கேயும் தேவை. கவனிப்பார் என நம்புகிறேன்.

உங்கள் கருத்து தான் எனதும்

ஆனால் டக்ளஸ் மாமாவை இவரால் தாண்ட முடியவில்லை 😭

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

கூட்டமொன்றுக்கு அடியாட்களோடு போய் சண்டித்தனம் காட்டியிருக்கிறார். (எதற்காக என்பதை தேடினால் காரணம் புரியும்). அத முதலில நான் நம்பேல, கூடிய கூட்டைபாக்கும்போது நம்பாமல் இருக்க முடியவில்லை.

இதை நீக்கக் காரணமாக கஜே குழு சொன்னதாக எனக்கு நினைவில்லை! இது நீக்கப் பட்ட பிறகா அல்லது முன்னரா?

5 minutes ago, விசுகு said:

உங்கள் கருத்து தான் எனதும்

ஆனால் டக்ளஸ் மாமாவை இவரால் தாண்ட முடியவில்லை 😭

என்னைப் பொறுத்த வரை, நகர, மாகாண மட்டங்களிலாவது இனி நாம் தமிழர்களுக்கு ஏதாவது கிடைக்கும் வழியில் முன்னாள் துரோகிகளோடும் கூட சேர்ந்து தான் செயல்பட வேண்டும். அந்த வழியில், டக்கியோடு சேர்ந்து சில நல்ல திட்டங்களை மக்களுக்குச் செய்வதில் பெரிய விக்கினமேதும் இல்லையென நினைக்கிறேன்.

இது நடக்கா விட்டால், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நகர சபையையும், மாகாணத்தையும் கைப்பற்றுவது நடக்கும். மீண்டும் துரையப்பா காலம் போல முதல் சதுரத்தில் போய் நிற்க வேண்டி வரும்!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

இதை நீக்கக் காரணமாக கஜே குழு சொன்னதாக எனக்கு நினைவில்லை! இது நீக்கப் பட்ட பிறகா அல்லது முன்னரா?

என்னைப் பொறுத்த வரை, நகர, மாகாண மட்டங்களிலாவது இனி நாம் தமிழர்களுக்கு ஏதாவது கிடைக்கும் வழியில் முன்னாள் துரோகிகளோடும் கூட சேர்ந்து தான் செயல்பட வேண்டும். அந்த வழியில், டக்கியோடு சேர்ந்து சில நல்ல திட்டங்களை மக்களுக்குச் செய்வதில் பெரிய விக்கினமேதும் இல்லையென நினைக்கிறேன்.

இது நடக்கா விட்டால், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நகர சபையையும், மாகாணத்தையும் கைப்பற்றுவது நடக்கும். மீண்டும் துரையப்பா காலம் போல முதல் சதுரத்தில் போய் நிற்க வேண்டி வரும்!

இந்த கருத்திலும் மாற்று கருத்து இல்லை

ஆனால் அதில் வெல்லணும் என்பதே அக்கறை 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

இதை நீக்கக் காரணமாக கஜே குழு சொன்னதாக எனக்கு நினைவில்லை! இது நீக்கப் பட்ட பிறகா அல்லது முன்னரா?

முன்னரா பின்னரா என்று நான் தேடவில்லை. காரணம் கூறப்பட்டது; முக்கிய முடிவு ஒன்று எடுக்கும் கூட்டத்திற்கு அடியாட்களோடு போய், தான்தான் கட்சியின் வெற்றிக்கு அதிகம் உழைத்ததாக  தகராறு செய்ததாக அறிந்தேன். நீங்கள் தேடிப்பாத்து காரணம் வேறிருந்தால் அறியத்தாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உள்ளூராட்சி தேர்தல் வரப்போகுது. அதுதான் குத்தியர் அடி எடுத்து வைக்கிறார். இந்த யாழ் மாநகர சபை ஈபிடிபியின் பொன் முட்டையிடும் வாத்து. இதை வைச்சு அடிச்ச கொள்ளைகள் ஏராளம். இருந்தும்.. இவங்களுக்கு வாக்குப் போட ஒரு கூட்டமிருக்குது. அதுகளை மீண்டும் ஏமாற்ற.. மணிவண்ணனை வெளில தூக்கிக் கடாச வேண்டிய தேவை இருக்குது. ஏனெனில்.. மணிவண்ணன்.. புலிப் பினாமியாக பிம்பப்படுத்தப்பட்டவர். மேலும் ஆட்சியில் இருந்த சபையில் எதிர்கட்சி வரிசைக்குக் கூட ஆட்கள் கிடைக்காத நிலையில்... மணிவண்ணனை வைச்சு.. ஈபிடிபி புகுந்து விளையாடலாம் என்று நினைக்க.. மணிவண்ணணோ ஈபிடிபிக்கு கணக்கு விட்டுக் கொண்டிருந்ததால்.. கடைசி நேரத்தில் இந்த கழுத்தறுப்பு. 

இதனை ஈபிடிபிக்கு எதிராகவும் தனக்கான வாக்கிற்காகவும் மணிவண்ணன் பாவிப்பாரா.. இல்லையா பொறுத்திருந்து பார்ப்போம்.

ஈபிடிபி தோளில் இருந்து சதுராட்டம் போட அனுமதிக்க முடியாது என்று அதன் செயலாளர் நாய் அகம்.. அறிக்கை விட்டது நினைவு படுத்தத்தக்கது. குத்தியருக்கு இப்ப போட்டி ஆயுத அரசியல் செய்ய புலிகள் இல்லாத நிலையில்.. மணிவண்ணன் போன்றவர்களை வைச்சு குத்தியர் சவாரி செய்வதே நிகழ்கிறது. 

சிங்கள எஜமானர்களின் முன் தான் புறக்கணிக்கப்பட முடியாத கொம்பு என்று காட்ட வேண்டிய தேவை இப்ப குத்தியருக்கு எழுந்திருப்பதன் விளைவே இதெல்லாம். ரணில்.. ராஜபக்ச கும்பல் போல் அல்ல. வைக்க வேண்டியவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பதில் கில்லாடி நரி. கருணா என்றவர் இப்ப முகவரியில்லாமல் போயிருப்பது கவனிக்கத்தக்கது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, satan said:

முன்னரா பின்னரா என்று நான் தேடவில்லை. காரணம் கூறப்பட்டது; முக்கிய முடிவு ஒன்று எடுக்கும் கூட்டத்திற்கு அடியாட்களோடு போய், தான்தான் கட்சியின் வெற்றிக்கு அதிகம் உழைத்ததாக  தகராறு செய்ததாக அறிந்தேன். நீங்கள் தேடிப்பாத்து காரணம் வேறிருந்தால் அறியத்தாருங்கள்!

உறவே, எனக்கு உண்மைக் காரணம் தெரிந்தால் நான் ஏன் எழுஞாயிறிடம் கேட்கிறேன்? உங்கள் கதை பாபநாசம் திரை வசனம் போலல்லவா இருக்குது?😂 முன்னா பின்னா தெரியாது என்கிறீர்கள், ஆனால் அது தான் நீக்கக் காரணம் என்கிறீர்கள்.

மணி நீக்கப் பட்டதற்கான காரணம் சளாப்பலாகக் கூறப் பட்டது, ஆனால் கூறப்பட்ட சம்பவங்கள் நடந்தது நீக்கப் படுவதற்கு ஒரு ஆறு மாதங்கள் முன்பான காலத்தில். அந்த நேரம் உடனே நீக்காமல், தேர்தலில் வென்று தேசியப் பட்டியல் போட்டி வந்த பின்னர் ஏன் நீக்கினார்கள்? இதைத் தான் எழுஞாயிறிடம் கேட்கிறேன். முன்னர் ரதி ஒரு தடவை கேட்ட போது "உங்களுக்கெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை!" என்றார். எனவே, தெரிந்து கொண்டு தான் சொல்லாமல் இருக்கிறார் எனக் கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் மணிவண்ணன் சுயேட்சையாக நகர அபிவிருத்தி முன்னேற்றத்தை மட்டும் மக்களிடம் கூறி வாக்கு கேட்டால் வெல்ல சான்ஸ் உண்டு. ஏனென்றால்,  மணிவண்ணணன் சிறந்த மேயராக செயற்பட்டார்.  மக்கள் இவரை miss பண்ணுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

குத்தியர் மணியை ஆதரித்தது; அவரின் திறமைகளை வைத்து தான் வளர்வது, அவரது புகழில் தனது அழுக்குகளை மறைத்து தன்னை பெரிய கனவானாக்குவது, தனது அழுக்குக்குள் மணியை மூழ்கடிப்பது. தனது கடைசி அறிக்கையில்; தன்னோடு யாரும் பேசவில்லை, கட்சியில் யாரோடும் பேசினார்களோ தெரியவில்லை, பேசினால் பரிசீலிக்கப்படலாம் என்கிற எதிர்பார்போடுதான் இருந்தார். ஆனால் மணி பதவிக்காக காலில விழுவாரென காலை நீட்டிக்கொண்டு இருந்திருப்பார் பாவம், அதுவும் தேர்தல் வாற நேரத்தில் கிடைத்த ஒரு துருப்புசீட்டும் நழுவிவிட்டதே! மணி இந்த முடிவை எடுப்பாரென எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார். 

யஸ்ரின்! மணி எதற்காக அடியாட்களோடு வந்து தகராறு செய்தார் எனக் கூறப்பட்ட காரணமும், அதற்காக  அவர் நடந்து கொண்ட விதம் எனக்  கூறப்பட்டதும், பின்னாளில் மணி பதவிக்காக சேர்ந்த கூட்டமும் அதை உறுதிப்படுத்தின. அதோடு மணிக்கு பழிவாங்கும் உணர்வு அதிகமாகியது அது அவரின் அறிவுக்கண்ணை மறைத்தது. பொறுப்பில் இருக்கும் ஒருவர் முன்னேற விரும்பினால்; பெறும் பாராட்டை விட, தன்னை நோக்கி வரும் விமர்சனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதற்கு பதில்கொடுப்பதைவிட. அப்போதுதான் தன்னை சீர்படுத்திக்கொள்ள முடியும். பாராட்டுவோரும் பாராட்டும் எதிர்பாராவிதத்தில் கைவிட்டுவிடும், கவிட்டு விடும்! நான் உங்கள் போன்று அரசியல் தெரிந்த ஆளுமில்லை, அந்தளவுக்கு அரசியல் அறிவுமில்லை. எனது அனுபவம் தவறாகவுமிருக்கலாம்.               

25 minutes ago, Justin said:

அது தான் நீக்கக் காரணம் என்கிறீர்கள்.

இங்கேயே விடை இருக்கே!

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவத்தைப்போல் நல்ல ஆசானில்லை. "வாரம் செய்தறி, வழி நடந்தறி, தோழமை கூடியறி" என்பர் நம் மூத்தோர். மணி புத்திசாலியாக இருந்தால் அவசரப்படாமல், ஆறுதலாக யோசித்து தனது அரசியல் பயணத்தை தொடர்வது நல்லது. குமார் இவரை சேர்க்குமளவுக்கு பெருத்தன்மையானவர் கிடையாது. முதலில் நின்று, நிதானித்து செயற்பட்டிருந்தால் மணி நன்றாக தொடர்ந்து செயற்பட்டிருக்க முடியும். நான் அவர் அந்த முடிவை எடுப்பாரென்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இன்னும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. அவருக்கு இருக்கும் இளமை, அறிவு, அனுபவம் இன்னும் நல்ல பாதையில் பயணிக்க முடியும். பொறுமை அவசியம்!

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, satan said:

குத்தியர் மணியை ஆதரித்தது; அவரின் திறமைகளை வைத்து தான் வளர்வது, அவரது புகழில் தனது அழுக்குகளை மறைத்து தன்னை பெரிய கனவானாக்குவது, தனது அழுக்குக்குள் மணியை மூழ்கடிப்பது. தனது கடைசி அறிக்கையில்; தன்னோடு யாரும் பேசவில்லை, கட்சியில் யாரோடும் பேசினார்களோ தெரியவில்லை, பேசினால் பரிசீலிக்கப்படலாம் என்கிற எதிர்பார்போடுதான் இருந்தார். ஆனால் மணி பதவிக்காக காலில விழுவாரென காலை நீட்டிக்கொண்டு இருந்திருப்பார் பாவம், அதுவும் தேர்தல் வாற நேரத்தில் கிடைத்த ஒரு துருப்புசீட்டும் நழுவிவிட்டதே! மணி இந்த முடிவை எடுப்பாரென எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார். 

யஸ்ரின்! மணி எதற்காக அடியாட்களோடு வந்து தகராறு செய்தார் எனக் கூறப்பட்ட காரணமும், அதற்காக  அவர் நடந்து கொண்ட விதம் எனக்  கூறப்பட்டதும், பின்னாளில் மணி பதவிக்காக சேர்ந்த கூட்டமும் அதை உறுதிப்படுத்தின. அதோடு மணிக்கு பழிவாங்கும் உணர்வு அதிகமாகியது அது அவரின் அறிவுக்கண்ணை மறைத்தது. பொறுப்பில் இருக்கும் ஒருவர் முன்னேற விரும்பினால்; பெறும் பாராட்டை விட, தன்னை நோக்கி வரும் விமர்சனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதற்கு பதில்கொடுப்பதைவிட. அப்போதுதான் தன்னை சீர்படுத்திக்கொள்ள முடியும். பாராட்டுவோரும் பாராட்டும் எதிர்பாராவிதத்தில் கைவிட்டுவிடும், கவிட்டு விடும்! நான் உங்கள் போன்று அரசியல் தெரிந்த ஆளுமில்லை, அந்தளவுக்கு அரசியல் அறிவுமில்லை. எனது அனுபவம் தவறாகவுமிருக்கலாம்.               

இங்கேயே விடை இருக்கே!

🤣இதைத் தான் பாபநாசம் பட திரை வசனம் என்றேன்:

மணியை நீக்குகிறது கஜே குழு.

நான்: ஏன் நீக்கினார்களாம்?

சாத்ஸ்: கூட்டத்தில் தகராறு செய்தார், மேலும் டக்கி குழுவோடு சார்ந்தார்!

நான்: அது நீக்கிய பின்னர் அல்லவா? நீக்க என்ன காரணமாம்?

சாத்ஸ்: மேலே சொன்ன, நீக்கிய பின்னர் அவர் செய்தவை தான் காரணங்கள், அதிலேயே பதில் இருக்கே?

இப்ப என் கேள்வி: கஜே குழுவுக்கு யார் time travel machine ஐ வழங்கி உதவினார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

வரும் உள்ளாட்சி தேர்தலில் யாழ் மாநகரசபை தேர்தலும் அடங்கும்தானே?

அதில் மணி தலைமையில் ஒரு சுயேட்சை அணி இறங்கலாம்தானே?

இங்கே மாறுபட்ட கருத்துகள் இருப்போர் கூட அவர் டக்லசிடம் போய் வந்த பின்னும் அவர் மீது ஒரு நல்அபிப்ராயம் வைத்திருப்பதாகவே படுகிறது.

அவர் தேசியம், அபிவிருத்தி என்ற இரெட்டை குதிரை சவாரிக்கு ஏற்றவர் என பலர் கருதுவதாகவும், அவர் முன்னுக்கு வர வேண்டும் எனவும் நினைப்பதாக தெரிகிறது.

ததேமு, தமிழரசு, ஈபிடிபி - இல்லாத ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த சுயேட்சை அணியில் கேட்கலாம்.

அதிகாரத்தை பிடிக்க முடியா விட்டாலும், எதிர்கட்சியாகவாவது அமரலாம்.

நாம் எல்லாரும் எதிர்பார்க்கும் புதிய அரசியல் தலைமை இதன் வழி பிறக்கவும் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

அழகிய நகரம் திட்டத்தின் கீழ் ஆரிய குளப் பகுதி மீளமைப்பு, புல்லுக் குளத்தை அண்டிய பகுதி, நாயன்மார்க்கட்டுப் பகுதியில் சில வேலைகள் என பல திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டன. ஆரிய குளம், புல்லுக் குளம் பூர்த்தி, நாயன்மார்க்கட்டு ஏரியா பற்றித் தெரியவில்லை.

இதுக்கேன் குறை நினைக்கிறேன்? 😂 நாம் மணியைப் பற்றிப் பேசும் போதே நீங்களும் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லிப் போங்கோவன் குறை நினைக்காமல்? ஏன் தேர்தல் வென்ற உடனேயே பொன்னம்பலத்தார் மணியை வெட்டினவராம்?

நீங்கள் குறிப்பிட்ட, குறிப்பிடாத பல திட்டங்கள் இவரது வருகைக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டவை என நம்புகிறேன். இவரது காலத்திலும் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவை தொடர்பாக உறுதியான தகவல்களைப் பெற முடியவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.