Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

வேறை...எங்கை நேர மூளாய் தான்....:406:

🤣 மூளாயோ? மந்திகையோ?

14 hours ago, nunavilan said:

தொடருங்கள் கோசான். மிகுதியையும் வாசிக்கும் ஆவலுடன் உள்ளேன்.

நன்றி நுணா.

9 hours ago, புங்கையூரன் said:

த்யவு செய்து தொடரும் என்பதைப் பொறித்த இடங்களில் போடாதீர்கள் எண்டு நான் சொன்னால் கேட்கவா போகின்றீர்கள்? தொடருங்கள்…!

நன்றி அண்ணா. இந்த டெக்னிக்கை வைத்துத்தானே மாதர் குலத்தையே மடக்கி வைத்துள்ளார்கள் டெலி டிராமா காரர்கள்🤣

  • Replies 77
  • Views 6.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • முன் குறிப்பு பாகம் IV ம் V ம் இக்கதையின் இரு வேறுபட்ட முடிவுகள் (கிளைமாக்ஸ்). ———————————————— பாகம் IV இன்று ஒரு மிக முக்கியமான நாள். அவனுக்கும் இவனுக்குமான அந்த சம்பாசணை நி

  • பாகம் II அவனுக்கும் இவனுக்குமான நட்பு அலாதியானது. வாழ்க்கைமுறை, சமயம், பிரதேசம், தெரிவுப்பாடங்கள் என பலதிலும் வேறுபட்டிருந்தாலும் தமிழும், கவிதையும், நாடகமும், புத்தகங்களும் அந்த இடைவெளியை இட்டு

  • பாகம் III அவனின் காருக்குள் மூச்சுக்காற்று புகாராகி, கண்ணாடியிலும் பதிந்து ஒரு திரைச்சீலை போல் ஆகி இருந்தது. அநேகமாக மூன்று அல்லது மூன்றரை மணி நேரம்  அவன் இப்படி காரில் இருந்தபடியே பேசி கொண்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் III

அவனின் காருக்குள் மூச்சுக்காற்று புகாராகி, கண்ணாடியிலும் பதிந்து ஒரு திரைச்சீலை போல் ஆகி இருந்தது.

அநேகமாக மூன்று அல்லது மூன்றரை மணி நேரம்  அவன் இப்படி காரில் இருந்தபடியே பேசி கொண்டிருந்திருக்க வேண்டும்.

எஞ்சினை ஆன்பண்ணி புகார் நீக்கியை தட்டி விடவோ, அல்லது கண்ணாடியை இறக்கி விடவோ கூட அவனுக்குத் தோணவில்லை. பேச்சின் பொருள் அத்தகையது.

காரினை ஸ்டார் செய்தபோது வெளியே வெப்பநிலை -2 எனக்காட்டியது டாஷ்போர்ட். ஆனால் அவனின் உடலோ தெப்பமாக வியர்வையில் நனைந்திருந்தது.

இவனுடன் போனில் கதைத்து கொண்டே வேலைக்கு இன்று அவசர லீவு என ஒரு இமெயிலை தட்டிவிட்டிருந்தான் அவன். இனி இந்த நாள் முழுவதும் அவனுக்கு ஓய்வுதான். வேலையில் இருந்து போனிலும், இமெயிலிலும் நொய் நொய் என்று யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

இவன் போனில் சொன்னதை முதல் ஐந்து நிமிடம் வரை கூட அவன் பகிடி என்றே நினைத்தான்.

தன்னை ஏலியன்கள் பிந்தொடர்வதாயும். பெப்ரவரி 2023 இல் தன்னை கடத்திப் போக அவர்கள் திட்டமிட்டிருப்பதாயும். தனது மனைவியை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் காதலிப்பதாயும். அவளை கவர திட்டமிடுவதாயும். பொரிசும் ஒரு ஏலியன் என்றும் இவன் சொல்ல, சொல்லத்தான், அவனுக்கு கொஞ்சம், கொஞ்சமாக இது வழமையான பிராங்க் இல்லை என்பது புரிய தொடங்கி இருந்தது.

படி… பொரிஸ் வாண்ட்ஸ் டு டேக் ஹேர் ப்ரொம் மீ படி…

பிளீஸ் ஹெல்ப் மீ… ஐ ஒன்லி ஹாவ் யூ…

என தன் ஆருயிர் நண்பன் உடைந்து அழுத போது…..அவனுக்கு முள்ளம் தண்டில் உள்ளிருக்கும் முன்ணானின் அடியில் இருந்து, மூளை வரை, சில்லிட்டது போல ஒரு உணர்வு பரவியது.

ஒரு வழியாக இவனை சமாதானப்படுத்தி போனை வைத்து விட்டு, கொழும்பில் பெயர் போன இன்னொரு மன நல வைத்தியர் நண்பனுக்கு போன் பண்ணி, விபரம் சொல்லி, அவனை உடனடியாக இவன் வீட்டுக்கே போய் வைத்தியம் பார்க்கும் ஏற்பாட்டை செய்து விட்டு அதை இவனின் மனைவிக்கும் எடுத்து சொல்லி ஒருவழியாக இந்த பிரச்சனையின் தீர்வை நோக்கி ஒரு அடியை எடுத்து வைத்தபோதுதான்….

சுகர் வருத்தகாரனான அவன் நேற்று முன்னிரவில் இருந்து எதையும் சாப்பிடவில்லை என்பதும்….ஹைபோ கிளைசீமியா எனும் ரத்தத்தில் குளுகோசின் அளவு குறையும் நிலைக்கான அறிகுறிகள் அவனில் தோன்ற ஆரம்பித்துள்ளமையையும் அவன் அவதானித்தான்.

ஆன் செய்த வாகனத்தை அப்படியே ஆப் செய்து விட்டு…டெஸ்கோவில் இருக்கும் கோஸ்டா கோப்பிக்கடை நோக்கி நடக்கத்தொடங்கினான் அவன்.

தொடரும்….

(யாவும் கற்பனை)

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, goshan_che said:

🤣 மூளாயோ? மந்திகையோ?

என்ன கோதாரியோ.....ஆனால் நான் சொல்ல வந்த விசயம் உங்களுக்கு விளங்கியதையிட்டு  எனக்கு மகா சந்தோசம். நான் பெற்ற பாக்கியமாக கருதுகின்றேன் :face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்

கதை வலு சீரியசாகப் போகத் தொடங்குது போல கிடக்குது..! கோப்பியைக் குடிச்சிட்டு வந்து தொடருங்கோ..! இண்டைக்கு லீவு தானே…!😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தொடரும்….

சரிசரி தொடருங்கோ எங்க போகுதென்று பாப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாவும் கற்பனை அல்ல தானே?!
தொடருங்கள் அண்ணை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்தக்கதை போல கிடக்கு...:beaming_face_with_smiling_eyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புங்கையூரன் said:

கதை வலு சீரியசாகப் போகத் தொடங்குது போல கிடக்குது..! கோப்பியைக் குடிச்சிட்டு வந்து தொடருங்கோ..! இண்டைக்கு லீவு தானே…!😀

நன்றி அண்ணாக்கள்.

17 hours ago, ஈழப்பிரியன் said:

சரிசரி தொடருங்கோ எங்க போகுதென்று பாப்பம்.

15 hours ago, ஏராளன் said:

யாவும் கற்பனை அல்ல தானே?!
தொடருங்கள் அண்ணை.

மூன்றாம் பாகமும் அடுத்தனவவும் யாவும் கற்பனைதான்.

9 hours ago, குமாரசாமி said:

சொந்தக்கதை போல கிடக்கு...:beaming_face_with_smiling_eyes:

🤣

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன் குறிப்பு

பாகம் IV ம் V ம் இக்கதையின் இரு வேறுபட்ட முடிவுகள் (கிளைமாக்ஸ்).

————————————————

பாகம் IV

இன்று ஒரு மிக முக்கியமான நாள்.

அவனுக்கும் இவனுக்குமான அந்த சம்பாசணை நிகழ்ந்து கிட்டத்தட்ட பதின்மூன்று மாதங்கள் உருண்டோடி விட்டிருந்தன.

அதன் பின் வைத்திய நண்பனின் ஆலோசனையின் பெயரில் அவன் இவனுடன் தொடர்பு ஏற்படுத்துவதை அறவே தவிர்த்து விட்டிருந்தான். 

பதின்மூன்று மாதங்கள் முன்னதாக நடந்த அன்றைய சம்பாசணையின் போது இவனுக்கு…

நீ கட்டாயம் ஒரு சைக்கியாடிரிஸ்டை பார்க்க வேண்டும் மச்சான்…. உடல் காயம் போலத்தான், மனக்காயமும். இரெண்டுக்கும் ஒரு அளவுக்கு மேல் மருந்து அவசியம்…..

என தயங்கி, தயங்கி அவன் சொல்லி இருந்தான். 

இவனும் கூட சற்றே மனம் நிதானப்பட்ட ஒரு நிமிடத்தில்…

நீ சொல்றது சரிதான் மச்சான்…. எனக்கு ஏதோ பிசகீட்டுது எண்டு விளங்குது…கெதியா காட்டோணும்…மருந்து எடுக்கோணும்…. இல்லாட்டில் முழு விசராக்கிப்போடும்…

என சொல்லியும் இருந்தான்.

ஆனால் அடுத்த நொடியே, போரிஸ், ஏலியன், மனைவி என வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறிவிட்டது.

இதை எல்லாம் கருத்தில் எடுத்த வைத்திய நண்பன் அவனுக்கும், இவனுக்கும் மட்டுமான உறவை மட்டும் அல்ல, இத்தனை மாதகாலமும் இவனுக்கும் அவனின் வட்டத்தில் மனைவியை தவிர மிகுதி அனைவருக்குமான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்தே சிகிச்சையை தொடர்ந்தான்.

இந்த ஏற்பாட்டின் பலனாக, தன்னையும், மனைவியையும், வைத்தியரையும் தவிர வேறு எவருக்கும் இந்த பிரச்சனையின் ஆழம் தெரியாது என்ற நம்பிக்கையோடு இத்தனை மாதகாலமாக இவனும் தொடர்ந்து சிகிச்சையை எடுத்து வந்தான்.

இவனோடு தொடர்பில் இல்லாதபோதும் வைத்திய நண்பனோடும், திருமதி இவனோடும் அவன் தொடர்பில் இருந்து, இவனுக்கு வழங்கப்படும் மருந்துகள், சிகிச்சைகள் பற்றி முழுவதுமாக அறிந்தே இருந்தான்.

நேற்று வைத்திய நண்பன் பேசும் போது இவன் கிட்டதட்ட முழுவதுமாக தேறி விட்டான் எனவும். அன்றைய சம்பாசணையை பற்றி இவனுக்கு அதிகம் நியாபகம் இல்லை எனவும். அதை பற்றி கதைப்பதை தவிர்த்து, வழமை போல் உரையாடலை தொடரும் படியும் அவனுக்கு கூறி இருந்தான்.

இதோ…நெஞ்சம் நிறைந்த படபடப்போடு அவன் மொபலை எடுத்து இவனின் வாட்சப் நம்பரை அழுத்த தயாராகி விட்டான்…….

அழைப்பை எடுக்க முதல், வைத்திய நண்பன் கடைசியாக சொன்னதை மீண்டும் ஒரு முறை அவன்  நினைவு படுத்தி கொண்டான்.

மச்சான்…மறந்தும் வாயை விட்டுடாதயடா…இவனுக்கு தனக்கு வந்த பிரச்சனை எவ்வளவு பெரிசு…தான் என்ன குழிசையள் எடுத்தது…இனியும் என்ன குழிசையள் எடுக்க வேணும்…எல்லாம் வடிவா தெரியுமடா.

ஆனால் இவனை பொறுத்தவரை…இது எதுவும் உனக்கு தெரியாது…அதை நீ மறந்துடாத…

———————————

இவனுடனான தொலைபேசி அழைப்பு நினைத்தததை விட சகஜமாகவே போய் கொண்டிருந்தது. ஆனால் உறவு முன்னர் போல் அந்நியோனியமாக இல்லை என்பதாக அவனுக்கு தோன்றியது.

தொடர்பு விட்டு போனமைக்கு பரஸ்பரம் மன்னிப்புகள், குடும்பத்தினர் நலம் விசாரிப்புகள் என வழமையான விடயங்கள் பேசித்தீர்ந்த பின் உருவான அந்த அசெளகரியமான நிசப்தத்தை கலைத்து கொண்டு…இவன் தானாகவே பேசினான்.

மச்சான்…அண்டைக்கு நான் கதைக்கேக்க கொஞ்சம் அப்செட்டா இருந்தனாண்டா… ஒரு சின்ன ஸ்டிரெஸ்…நித்திரை கொண்டு எழும்பினதும் அது சரியாப் போச்சு….

என்ன சொல்வது என தெரியாத அவன்…ம்ம்…என்று சொல்லி விட்டு இதை எப்படி கையாள்வது என யோசித்து கொண்டிருக்கும் போதே…இவன் தொடர்ந்தான்….

நல்ல காலம் மச்சான்…. உண்ட பேய் கதையை கேட்டு நான் டொக்டரிட்ட போய் இருந்தா என்னை பைத்தியம் எண்டே முடிவு கட்டி இருப்பாங்கள்….

இனிமேலாவது கண்டதையிம் வாசிச்சு போட்டு…அட்வைஸ் பண்ணுறன் பேர்வழி எண்டு மற்றவனுக்கு விசர்பட்டம் கட்டாத மச்சான்…….

அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாத அவன்…கதையை மேலும் வளர்க்க விரும்பாதவனாக……

ம்……ம்…ம் கொட்டினான்.

#stigma #கேடிசூழ் #கறை #வடு

(யாவும் கற்பனை)

பாகம் IV முற்றும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் எதிர்பாராத முடிவு …!

ஆல கால விஷத்தையும் நம்பலாம்…!!!!?

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.......உங்களைப் புரிந்து கொள்ளுமளவுக்கு அவன் புத்திசாலியாகி விட்டான். மிச்சத்தையும் எழுதவும்.அவர்களையும் பார்க்க ஆவல்......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் கூறப்படும் கொழும்பு நண்பருக்கு குடிபழக்கம் காணப்படக்கூடும்? 

போதைப்பொருள் பயன்பாடு, அதிக குடி பிதற்றலுக்கு காரணம் ஆகலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

 மன அழுத்தம் கண்ட சிலருக்கு சரியான வைத்தியத்தின் பின்  ஒரு குறிப்பிட்ட் காலத்தை மறந்தவர்காளக இருப்பார்களாம். நேற்று நடத்து ஞாபகம்  இராது . பல வருடங்களுக்கு முன் நடந்தது ஞாபகம் இருக்கும். உலக நடைமுறையில் இவாறு   பாதிக்க படுவோர் சதவீதம் அதிகம் . முறையான சிகிச்சை மேற்கொண்டால்  குணமாகி விடுவார்கள். 

கதையில் வரும் நண்பருக்கு இனம் கண்டு வைத்திய உதவி செய்த்தையிட்டு கதா சிரியருக்குபராட்டுக் கள் 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2023 at 22:09, goshan_che said:

பாகம் IV  மகிழ்ச்சியாக,  இனிய முடிவாக அமைந்ததை இட்டு எமக்கும் சந்தோசம். 👍
பாகம்  V´ல்... என்ன முடிவு வர இருக்கின்றது அறிய ஆவலாக உள்ளோம். 😋

பாகம் IV இளகிய மனம் கொண்டவர்களுக்கும், 😂
பாகம்  V முரட்டு மனம் கொண்டவர்களுக்கும் என்று இரு முடிவுகளை தெரிவு செய்ததன் மூலம் 
கதாசிரியர் ✍️ @goshan_che  இருபாலருக்கும் திருப்தியை கொடுக்க முயலுகின்றார் என ஊகிக்கின்றோம். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2023 at 22:47, புங்கையூரன் said:

யாரும் எதிர்பாராத முடிவு …!

ஆல கால விஷத்தையும் நம்பலாம்…!!!!?

நன்றி அண்ணா.

இது நோயின் அறிகுறியா?

தனக்கு நோய் இல்லை என்று நிறுவிவிட வேண்டும் என்ற அந்தரிப்பா?

பச்சை நன்றியீனமா?

முடிவு வாசகர் மனதில்.

On 16/2/2023 at 08:49, suvy said:

ஆஹா.......உங்களைப் புரிந்து கொள்ளுமளவுக்கு அவன் புத்திசாலியாகி விட்டான். மிச்சத்தையும் எழுதவும்.அவர்களையும் பார்க்க ஆவல்......!  😂

நன்றி அண்ணா. கெத்தா இரெண்டு கிளைமாக்ஸ் என அறிவித்து விட்டேன். இப்ப இரெண்டாவது கொஞ்சம் சின்னபிள்ளைதனமான முடிவாக தெரியுது. பாப்பம்.

On 16/2/2023 at 23:40, நியாயத்தை கதைப்போம் said:

கதையில் கூறப்படும் கொழும்பு நண்பருக்கு குடிபழக்கம் காணப்படக்கூடும்? 

போதைப்பொருள் பயன்பாடு, அதிக குடி பிதற்றலுக்கு காரணம் ஆகலாம். 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இருக்கலாம். 3ம் பாகத்தில் இருந்து கற்பனையே என்பதை கவனத்தில் கொள்க. 

On 17/2/2023 at 00:47, நிலாமதி said:

 மன அழுத்தம் கண்ட சிலருக்கு சரியான வைத்தியத்தின் பின்  ஒரு குறிப்பிட்ட் காலத்தை மறந்தவர்காளக இருப்பார்களாம். நேற்று நடத்து ஞாபகம்  இராது . பல வருடங்களுக்கு முன் நடந்தது ஞாபகம் இருக்கும். உலக நடைமுறையில் இவாறு   பாதிக்க படுவோர் சதவீதம் அதிகம் . முறையான சிகிச்சை மேற்கொண்டால்  குணமாகி விடுவார்கள். 

கதையில் வரும் நண்பருக்கு இனம் கண்டு வைத்திய உதவி செய்த்தையிட்டு கதா சிரியருக்குபராட்டுக் கள் 

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

ஓம்…இவ்வாறானதொரு மறதி பிரச்சனையாகவும் இருக்கலாம். கதையின் எல்லா சம்பவங்களும் நிஜம் அல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பாகம் IV  மகிழ்ச்சியாக,  இனிய முடிவாக அமைந்ததை இட்டு எமக்கும் சந்தோசம். 👍
பாகம்  V´ல்... என்ன முடிவு வர இருக்கின்றது அறிய ஆவலாக உள்ளோம். 😋

பாகம் IV இளகிய மனம் கொண்டவர்களுக்கும், 😂
பாகம்  V முரட்டு மனம் கொண்டவர்களுக்கும் என்று இரு முடிவுகளை தெரிவு செய்ததன் மூலம் 
கதாசிரியர் ✍️ @goshan_che  இருபாலருக்கும் திருப்தியை கொடுக்க முயலுகின்றார் என ஊகிக்கின்றோம். 🤣

நன்றி அண்ணா. பாகம் V இன் முடிவு எப்படி இருக்கும் என அறிய நானும் ஆவலலாய்த்தான் உள்ளேன்🤣. நான் எட்டியதும் எழுதி விடுகிறேன்.

உங்கள் கருத்தை பார்த்த பின் ஒரு முரட்டு முடிவாககவே வைக்கலாம் என நினைக்கிறேன். ஐடியாவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2023 at 16:09, goshan_che said:

நீ சொல்றது சரிதான் மச்சான்…. எனக்கு ஏதோ பிசகீட்டுது எண்டு விளங்குது…கெதியா காட்டோணும்…மருந்து எடுக்கோணும்…. இல்லாட்டில் முழு விசராக்கிப்போடும்…

என சொல்லியும் இருந்தான்.

ஆனால் அடுத்த நொடியே, போரிஸ், ஏலியன், மனைவி என வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறிவிட்டது.

மனநோயாளர்கள் எவருமே தானாகவே வைத்தியரை நாடமாட்டார்கள்.

கட்டாயம் இன்னொருவரின் துணை தேவை.

ஆனால் அந்த துணை யார் என்பதே பிரச்சனை.

கோசான் நீங்க நம்புகிறீர்களோ இல்லையோ இந்த கதை மாதிரியே எனது நெருங்கிய உறவு ஒருவருக்கும் நடந்தது.

இன்னமும் கனடாவில் இருக்கிறார்கள்.நாளாந்தம் கதைத்த நாம் இப்போ 1 1/2 -2 வருடங்களாக தொடர்பேதும் இல்லை.

அவரது பிள்ளைகள் கூட இப்போது தொடர்பைக் குறைத்துக் கொண்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் நம்புகிறேன். Stigma வை தவிர்ப்பதே அடிப்படைகாரணம் அதனால் அதை தெரிந்தோரை விலத்துகிறனர் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2023 at 00:03, ஈழப்பிரியன் said:

மனநோயாளர்கள் எவருமே தானாகவே வைத்தியரை நாடமாட்டார்கள்.

கட்டாயம் இன்னொருவரின் துணை தேவை.

ஆனால் அந்த துணை யார் என்பதே பிரச்சனை.

கோசான் நீங்க நம்புகிறீர்களோ இல்லையோ இந்த கதை மாதிரியே எனது நெருங்கிய உறவு ஒருவருக்கும் நடந்தது.

இன்னமும் கனடாவில் இருக்கிறார்கள்.நாளாந்தம் கதைத்த நாம் இப்போ 1 1/2 -2 வருடங்களாக தொடர்பேதும் இல்லை.

அவரது பிள்ளைகள் கூட இப்போது தொடர்பைக் குறைத்துக் கொண்டார்கள்.

இதற்கு சமூகமும் ஒரு காரணம் என நினைக்கிறேன் அங்கிள்.. 

@goshan_che பாகம் IVல் உங்களது கற்பனை மனோத்துவ வைத்திய நண்பர் உபயோகித்த technique எல்லோருக்கும் சரிவாரது என நினைக்கிறேன்..  இவனுக்கு உதவப் போய் அவனுக்கு வாழ்க்கை குழம்பாமல் விட்டால் சரி… 😊

  • கருத்துக்கள உறவுகள்

அட எல்லாரும் பின்னுகறீர்கள்.பாராட்டுகள் கோசான்.மிகுதியையும் சுபமாக முயுங்ஙகள்.முன்றாம் பிறை கமல் ஏதோ ஞாபகம் வாறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2023 at 21:09, goshan_che said:

முன் குறிப்பு

பாகம் IV ம் V ம் இக்கதையின் இரு வேறுபட்ட முடிவுகள் (கிளைமாக்ஸ்).

————————————————

பாகம் IV ஐ தவிர்த்து பாகம் III இருந்து நேரடியாக பாகம் V ஐ வாசிக்கவும்.

பாகம் V

ஹைபோகிளைசீமியா ஒரு பொல்லாத விசயம். சாதாரணமாக இருப்பது போல் இருக்கும், ஆனால் உணவையும் மருந்தையும் கிரமமாக எடுக்காது போனால் குருதியில் குளுகோசின் அளவு திடீரென்று, ஹிடின்பேர்க்கின் அறிக்கைக்கு பின்னான அதானியின் நிகர மதிப்பு போல கிடுகிடு என இறங்க தொடங்கி விடும்.

உடல் வியர்க்கும், நடுங்கும், கடும் கோபம் வரும், ஏன் ஆக ரத்த குளுகோசின் அளவு குறைந்தால் கொலை வெறி கூட வரும். இன்னும் குறைந்தால் கோமாக்கு கொண்டுபோய் ஆளின் கதையையே முடித்து விடும்.

இதை எல்லாம் தவிர்க்கவேண்டும் என்றுதான் அவன் கோப்பி கடைக்குள் நுழைகிறான்.  ஆனால் அவனின் லக் அப்படி, கோப்பி கடையில் ஒரு கூட்டம் சனமாக இருந்தது. அந்த நெரிசலில் நிற்க தலையை சுத்தி கொண்டு வந்தது அவனுக்கு.

பிரித்தானியரில் என்ன கெட்ட பழக்கம் இருந்தாலும் வரிசையில் நிற்கும் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. ஆனால் இப்போ அந்த நல்ல பழக்கமே அவனுக்கு எமனாக வந்து விடும் போல் இருந்தது. ஒரு வழியாக வரிசையில் முன்னுக்கு நின்றவனிடம் தன் நிலையை சொல்லி, அனுமதி பெற்று இரெண்டு சீனி தூவிய டோநட்களையும் ஒரு கோக் கானையும் வாங்கி கொண்டு மேசையில் போய் அமர்ந்தான் அவன்.

கோக் குடியாதேங்கோ எண்டு சொல்லுறது இதுக்குத்தான். குளுகோஸ் தண்ணிக்கு அடுத்து ரத்தத்தில் சீனியின் அளவை உடனடியாக கூட்ட கோக்கை விட்டால் வேறு பானம் இல்லை.

….இதைதான் வருத்தம் ஏதும் இல்லாத பிள்ளையள் கூட வாங்கி குடிக்குதுகள். பின்ன ஏன் டயபிடிஸ் வராது…..

நினைத்தபடியே…கோக் கானை “டொப்” என மூடி உடைத்து பருக தொடங்கினான் அவன்.

கோப்பி கடையில் கல்லாவில் நின்றவனை நினைக்க நினைக்க அவனுக்கு கோவம் பற்றி கொண்டு வந்தது. என்ன அசிரத்தை இது? ஏதோ இலவசமாக தருவது போல் இருந்தது அவனின் பாவனையும் நடந்து கொண்ட முறையும். முந்தி எல்லாம் இந்த நாட்டில் இப்படி இல்லை. முன்பு யூகேயில் கஸ்டமர் சேர்விஸ் நன்றாக இருக்கும்.  இப்போ?…பச்….  

அவனை பார்த்தால் உக்ரேன் காரன் போல இருந்ததது. உக்ரேன்காரர் உக்கல் சனம், நிறவெறி பிடித்தவர் என யாழ்களத்தில் முருகர்சாமி அண்ணை எழுதியது ஏனோ அவனுக்கு நியாபகம் வந்தது.

கிட்டதட்ட ஒரு இருபது நிமிடம் ஆகி இருக்கும். கோக் கான் முக்கால்வாசி தீர்ந்து விட்டிருந்தது. ஆனாலும் ஓடர் பண்ணிய டோநட்டை இன்னும் காணவில்லை.

“ஹலோ ஆம் ஐ கெட்டிங் மை டோ நட் டுடே, ஓர் டுமோரோ”?

கொஞ்சம் சத்தமாகவே உக்ரேன்காரனை டோநட் இன்றா அல்லது நாளையா கிடைக்கும்? கேட்டான் அவன்.

ஆனால் அந்த உக்ரேனியனோ (முடிவே கட்டிவிட்டான்) கோப்பி மெசின் அருகில் எதையும் கேளாதவன் போல் நின்று எதையோ கழுவிக்கொண்டிருந்தான்.

திடீரென திரும்பி பார்த்தால் அந்த உக்ரேனியன் அவனை நோக்கி ஒரு பெரிய கத்தியோடு ஓடி வந்து கொண்டிருந்தான்…….. கண்களில் நிறவெறி ஜொலி ஜொலித்தது……..

”என்ர பிள்ளையாரே, முருகர்சாமி அண்ணை உவங்களை உக்கல் எண்டு சொன்னது சரிதான்”

என ஒரு கணம் அவன் திகைத்து நின்றாலும்…….

மறுகணமே அவனின் உடலில் அதிரீனலீனின் “தப்பியோடு அல்லது சண்டையிடு” பொறிமுறை வேலை செய்ய தொடங்கி இருந்தது.

 உக்ரேனியன் கொண்டு வரும் கத்தியோ பெரிது…வேறு வழியில்லை, ஒரு நல்ல கனமான மரக்கதிரையை தூக்கி கொண்டு அந்த உக்ரேனியனை நோக்கி பாய்ந்தான் அவன்.

——————————————

அப்போதுதான் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ், அவனின் பிரான்சில் இருந்து வருவிக்கபட்டிருந்த தம்பிக்கும், டாக்டர் பிரணவணுக்கும்  சீசீடிவி படங்களை போட்டு காட்டி முடித்திருந்தார்.

தம்பிக்கு ஏதோ விளங்கியது போலவும் இருந்தது ஆனால் விளங்காதது போலவும் இருந்தது.

கேள்வி குறியோடு டாக்டரின் முகத்தை பார்த்தான் தம்பி.

மொழி பிரச்சனையை விளங்கி கொண்ட டாக்டர்,

”ஐ வில் எக்ஸ்பிளைன் டு ஹிம் இன் ஹிஸ் ஓன் லாங்குவேஜ்”……..

என பிலிப்சுக்கு சொல்லியபடி தம்பியிடம் தனது புலம்பெயர் கொச்சை தமிழில்  பேச தொடங்கினார்.

சீசீடிவி பார்தனிங்கள்தானே…சும்மா டோநட் எடுத்து கொண்டிருந்த அவர போட்டு நல்லா அடிச்சு வச்சிருக்கிறார். இதுக்கு ஒரு ரீசனும் இல்லை.

பொலிஸ் அன் புரொவோக்ட் அட்டாக் எண்டு சொல்லினம்…..

அதுக்கு முதல் மூண்டு அவர்ஸ் காரில இருந்து…போனில கதைச்சிருக்கிறார்….

ஆனால் போனை செக் பண்ணி பார்த்தா அந்த மூண்டு அவர்ஸ்சும் எந்த ஒரு கோலும் கூட வரலேல்ல உங்கட அண்ணாக்கு….

அதுமாரி….சில மாசமா…. ஒவ்வொரு நாள் காலமையிலும், பின்னேரமும் ஒப்பசிட்டா இருக்கிறா ஸ்கூல் வாசலில் வந்து நிண்டிருக்கிறார்….. 

ஆனா நாங்கள் செக் பண்ணி பார்த்தா உங்கட அண்ணாக்கு பிள்ளையோ, வைவ்வோ கூட இல்லை.

எல்லாம் சேர்த்து பார்த்தா எனக்கு இது ஒரு மனசு சரியில்லாத வருத்தம் எண்டுதான் விளங்குது….

இத நான், தொடர்ந்து வெளிநாட்டில தனியாவே இருந்ததால வந்த ஒரு மெண்டல் ஹெல்த் பிரச்சனை என சஸ்பெட்க் பண்ணுறன்….

அதால… உங்கட அண்ணையை செக்சன் பண்ணுற முடிவை எடுக்கப்போறம்….

செக்சன் எண்டால்…? புரியாதவனாக கேட்டான் தம்பி.

செக்சன் எண்டால்…. வந்த வருத்தம் மாறும் வரைக்கும் அவரை ஒரு சைகியாடிரிக் கொஸ்பிடலை தடுத்து வச்சிருப்பம். உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி நீங்கள் அப்பீல் பண்ணலாம். நாளைக்கு ஒரு இண்டர்பிரிட்டரை வச்சு எல்லாத்தையும் வடிவா சொல்லுறன்.

அவன் இப்போதைக்கு வெளியில் வர வாய்ப்பில்லை என்பதை முடிந்தளவு தன்மையாக சொன்னார் டாக்டர் பிரணவன்.

என்ன செய்தாலும்….. அண்ணையை பழையபடி மாத்தி தாங்கோ டொக்டர்….

எங்களை எல்லாம் வெளிநாட்டுக்கு எடுத்து ஆளாக்கினது அவர்தான்….

கண்ணீர் புரண்டோட…கை கூப்பினான் அவனின் தம்பி.

அப்ப கூட்டத்தை முடிக்கலாம்……

என்ற தோரணையில்……. கையை திருப்பி…..

மணிக்கூட்டை வெறித்துப்பார்த்தார் இன்ஸ்பெக்டர் பிலிப்ஸ்.

(யாவும் கற்பனை)

முற்றும்.

On 19/2/2023 at 23:10, பிரபா சிதம்பரநாதன் said:

இதற்கு சமூகமும் ஒரு காரணம் என நினைக்கிறேன் அங்கிள்.. 

@goshan_che பாகம் IVல் உங்களது கற்பனை மனோத்துவ வைத்திய நண்பர் உபயோகித்த technique எல்லோருக்கும் சரிவாரது என நினைக்கிறேன்..  இவனுக்கு உதவப் போய் அவனுக்கு வாழ்க்கை குழம்பாமல் விட்டால் சரி… 😊

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபா.

ஐந்தாம் பாகம் பற்றிய பார்வையையும் எழுதுங்கள்.🙏🏾

1 hour ago, சுவைப்பிரியன் said:

அட எல்லாரும் பின்னுகறீர்கள்.பாராட்டுகள் கோசான்.மிகுதியையும் சுபமாக முயுங்ஙகள்.முன்றாம் பிறை கமல் ஏதோ ஞாபகம் வாறார்.

நன்றி சுவை அண்ணா. இப்ப எழுதியதை வாசிதால் சேது விக்ரம் நியாபகம் வருவாரோ?😀

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

அட, எதிர்பார்க்காத மாதிரியான முடிவு! நைற் ஷியாமளனின் The Sixth Sense படம் நினைவிற்கு வந்தது!

பி.கு:  "முருகர்சாமி" வன்முறையைத் தூண்டினார் என்று ஒரு சைட் கேசையும் பிலிப்ஸ் முன்னெடுக்க வைக்கலாமோ? 😂

  • கருத்துக்கள உறவுகள்

abayam.jpg

மருத்துவமனையில் நேற்று பார்த்தது, யாருக்காவது பயன்படும் என படம் எடுத்து வந்தேன். திரிக்கும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

கதையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என கோபிக்க வேணாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

abayam.jpg

மருத்துவமனையில் நேற்று பார்த்தது, யாருக்காவது பயன்படும் என படம் எடுத்து வந்தேன். திரிக்கும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

கதையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என கோபிக்க வேணாம்.

இதை விட வேறு என்ன அதிகமாக சொல்ல முடியும். கதையை வாசித்து இதை பகிர வேண்டும் என நினைத்ததையே கதையின் வெற்றியாக கொள்கிறேன்🙏🏾.

2 hours ago, Justin said:

அட, எதிர்பார்க்காத மாதிரியான முடிவு! நைற் ஷியாமளனின் The Sixth Sense படம் நினைவிற்கு வந்தது!

பி.கு:  "முருகர்சாமி" வன்முறையைத் தூண்டினார் என்று ஒரு சைட் கேசையும் பிலிப்ஸ் முன்னெடுக்க வைக்கலாமோ? 😂

நன்றி. சியாமளனின் இந்த படத்தை பார்த்துப்போட்டு இரெண்டு நாள் பேயறைந்தது போல் இருந்திருக்கிறேன்.

என்னை ஊக்க்கப்படுத்த சொல்லுகிறீர்கள் என புரிந்தாலும், மூன்றாம் பிறை, Sixth Sense என வித்யாசமான படக்கதைகளை இணைத்து கதைப்பதே சந்தோசமாக உள்ளது🙏🏾.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு அத்துடன் யதார்த்தமான முடிவும் அதுதான்.......!  👍

இது நடந்து இரு வருடங்களுக்கு முன் இருக்கும்.......பின்னடி காலத்தில் கொஞ்சம் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார் ஒருநாள் பிரச்சினை கூட யாரோ போன் செய்து போலீஸ் மற்றும் அவசர வண்டியும் வந்து கொண்டு போனது. பின்பு அவரை தனியான ஒரு ஆஸ்பத்திரியில் சில நாட்கள் வைத்திருந்து பின் விட்டு விட்டார்கள் .......பிறகு அவர் சரியான அமைதியாகி விட்டார்.....இப்ப நன்றாக இருக்கிறார்கள்........!

டயபிட்டீஸ் மெல்லெனக் கொல்லும் ஒரு வருத்தம்தான்......கொஞ்சம் கவனித்து உணவுகளை எடுத்து வந்தால் வருத்தம் இருந்த போதிலும் நலமாக வாழலாம்.......மனக்கட்டுப்பாடு மிக மிக அவசியம்.......!  😁

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.