Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க ஜனாதிபதி உக்ரைனுக்கு திடீர் விஜயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் இணைய தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்கா தேவையான நடவடிக்கையை எடுக்கும்: ஜோ பைடன்!

அமெரிக்க ஜனாதிபதி உக்ரைனுக்கு திடீர் விஜயம்! 

பைடனின் விஜயம் குறித்து பாத் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு நிபுணரும், முன்னாள் நேட்டோ ஆய்வாளருமான டாக்டர் பேட்ரிக் புரி, கருத்து தெரிவித்துள்ளார்.

பைடனின் விஜயம் ‘நாங்கள் நீண்ட காலத்திற்கு உக்ரைனுடன் இருக்கிறோம்’ என்ற நேட்டோ கூட்டாளிகளின் உறுதிப்பாடாகும்.

‘பின்வாங்கப் போவதில்லை என்று அவர்கள் விளாடிமிர் புடினுக்கு சமிக்ஞை செய்கிறார்கள், எனவே இந்த போரில் எங்களை மிஞ்ச முயற்சிப்பது குறித்த உங்கள் அடிப்படை அனுமானங்களை நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்’ என கூறினார்.

பிப்ரவரி 24 அன்று ஓராண்டு நிறைவில், ரஷ்ய குண்டுவெடிப்பு அபாயங்கள் அதிகரிப்பு அச்சத்தால் முன்கூட்டியே இந்த பயணம் அமைந்துள்ளது.


போரின் போது உக்ரைனின் தைரியத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பாராட்டியுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியுடன் அவர் ஆற்றிய உரையில், அவர் துணை ஜனாதிபதியாக பணியாற்றியபோது ஆறு முறை உக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டதையும் நினைவுக்கூர்ந்தார்.

மேலும், ‘நான் திரும்பி வருவேன் என்று எனக்குத் தெரியும்’ என்று அவர் கூறினார்.

முன்னதாக, அமெரிக்கா 500 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள புதிய இராணுவ உதவிப் தொகுப்பை உக்ரைனுக்கு வழங்கும் என்று கூறினார், அது நாளை அறிவிக்கப்படும்.


ஊடக கூட்டறிக்கையில், ஸெலென்ஸ்கி கூறுகையில், ‘ஜனநாயக உலகம் இந்த வரலாற்றுப் போரில் வெற்றிபெற வேண்டும். அமெரிக்க-உக்ரைன் உறவுகளின் முழு வரலாற்றிலும் இது மிக முக்கியமான வருகை. நாங்கள் ஏற்கனவே அடைந்த முடிவுகளை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இன்று எங்கள் பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இந்த விஜயத்தின் முடிவுகள் நிச்சயமாகப் போர்க்களத்தில் ஒரு பிரதிபலிப்பைக் கொண்டிருக்கும். ஜனவரியில் உக்ரைனுக்கு ஆப்ராம்ஸ் டாங்கிகளை வழங்குவதற்கான அமெரிக்க முடிவு ஏற்கனவே உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்த பங்களித்துள்ளது.

உக்ரைனுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க ஆதரவுத் தொகுப்பு இருக்கும் என்று எனக்குத் தெரியும்… ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பே இல்லை என்பதற்கான தெளிவான சமிக்ஞையை அளிக்கிறது. உக்ரைன் பைடனுக்கு நன்றியுடன் இருக்கிறது’ என கூறினார்.


ஒரு ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னதாக, ஜோ பைடன், உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியுடன் அரையில் அமர்ந்து, அவருடன் உலகைப் பற்றி விவாதிக்க ஆவலுடன் காத்திருப்பதாக கூறினார்.

இராணுவ அனுபவம் இல்லாத போதிலும் உக்ரைன் குடிமக்களின் வீர சண்டைக்காக அவர் பாராட்டினார்.

மேலும், ‘உக்ரைன் மக்கள், சாதாரண, கடின உழைப்பாளி குடிமக்கள், இராணுவத்தில் ஒருபோதும் பயிற்சி பெறாதவர்கள், ஆனால் அவர்கள் முன்னேறிய விதம் வீரத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் முழு உலகமும் அப்படி நினைக்கிறது’ என கூறினார்.


உக்ரைனுக்கு பைடனின் ரகசியப் பயணம் போலந்து எல்லையில் இருந்து ரயில் வழியாக மேற்கொள்ளப்பட்டதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புக் காரணங்களால் கிவ் விஜயம் இரகசியமாகவே இருந்தது. சனிக்கிழமை இரவு ஒரு உணவகத்தில் அவரும் அவரது மனைவி ஜிலும் ஒரு அரிய விருந்து உட்கொண்ட பிறகு பைடன் எந்த அறிவிப்பும் இல்லாமல் அமெரிக்காவை விட்டு வெளியேறினார் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.


ழுவதும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்த நேரத்தில், மத்திய கிவ்வில் உள்ள செயின்ட் மைக்கேல் கதீட்ரலில் இருந்து இருநாட்டு தலைவர்களும் வெளியேறியுள்ளனர்.


அமெரிக்க ஜனாதிபதி பைடன் ஒரு அறிக்கையில், ‘கிவ் விஜயம் உக்ரைனின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றில் எங்களின் அசைக்க முடியாத மற்றும் உறுதியான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு புடின் தனது படையெடுப்பைத் தொடங்கியபோது, உக்ரைன் பலவீனமாக இருப்பதாகவும், மேற்கு நாடுகள் பிளவுபட்டிருப்பதாகவும் அவர் நினைத்தார். ஆனால் அவர் தவறு செய்துவிட்டார்’ என்று அவர் கூறினார்.

மேலும், ‘பாதுகாப்புக்கு உதவ பீரங்கி வெடிமருந்துகள், கவச எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் விமான கண்காணிப்பு ரேடார்கள் உள்ளிட்ட முக்கிய உபகரணங்களை அவர் அறிவிப்பார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பைடனின் வருகை தீவிர பாதுகாப்பு கவலைகள் காரணமாக ரகசியமாக வைக்கப்பட்டது, ஆனால் இன்று காலைதலைநகர் கிவ்வில் பல்வேறு வீதிகள் மூடப்பட்டன


உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி கடந்த சில நிமிடங்களில் தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் கணக்கில் அமெரிக்க ஜனாதிபதியுடன் கைகுலுக்கும் படத்தைப் பதிவிட்டுள்ளார்.

5dmroihg_kane-williamson-afp_625x300_08_September_22-3-600x400.jpg

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இன்று (திங்கட்கிழமை) உக்ரைனுக்கு திடிர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடாவை சந்திப்பதற்காக அவர் அண்டை நாடான போலந்திற்குச் சென்றிருந்த நிலையில், தனது திட்டமிட்ட நிகழ்சி நிரலுக்கு மாறாக அவர் உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கு சென்றுள்ளார்.

உக்ரைனிய தலைநகருக்கு ஒரு முக்கியமான விருந்தினர் வருகிறார் என்று இன்று முன்னதாக ஊகங்கள் இருந்தன, உக்ரைனிய அரசியல்வாதியான லெசியா வாசிலென்கோ பைடன் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ரஷ்யா படையெடுப்பு ஓராண்டு நிறைவை எட்டவுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த விஜயம் அமைந்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், மற்றும் முன்னாள் பிரதமரான பொரிஸ் ஜோன்ஸன் உள்ளிட்ட தலைவர்கள் உக்ரைனுக்கு விஜயம் செய்திருந்த நிலையில், தற்போது பைடனுக்கு அங்கு விஜயம் செய்துள்ளார்.


ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனில் நடந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் 107 பேர் கொல்லப்பட்டதை நினைவுகூரும் நாளில் அவர் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியை சந்திக்கிறார்.

https://athavannews.com/2023/1324725

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேனில் ஜோ பைடன் - கடைசி வரை ரகசியம் காத்த இந்த பயணம் எதற்காக?

45 நிமிடங்களுக்கு முன்னர்
Biden and Zelensky

பட மூலாதாரம்,TELEGRAM

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

'நியூயார்க் டைம்ஸ்' செய்தியின்படி, போலந்து எல்லையில் மிகவும் ரகசியமான முறையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரயில் மூலம் யுக்ரேனுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

போலந்தில் இருந்து யுக்ரேனின் தலைநகர் கியவுக்கு பைடன் மேற்கொண்ட வருகை பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது. அதிபர் பைடன் தற்போது யுக்ரேனை விட்டுப் புறப்பட்டு விட்டதாக தெரிய வந்துள்ளது.கடந்த சனிக்கிழமை, பைடன் தனது மனைவி ஜில்லுடன் ஒரு உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு அமைதியாக வாஷிங்டனில் இருந்து புறப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூயார்க் டைம்ஸ் தனது செய்தியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிபரின் பயண நிரலின்படி அவர் திங்கள்கிழமை வாஷிங்டனில் தங்கியிருந்து மாலை வார்சாவுக்குச் செல்ல வேண்டும் என இருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு யுக்ரேன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு படையெடுப்பைத் தொடங்கிய பிறகு அந்நாட்டுக்கு அமெரிக்க அதிபர் செய்யும் முதலாவது பயணம் இதுவாகும். முன்னதாக, போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டுடாவை சந்திக்க பைடன் யுக்ரேனுக்கு அருகே உள்ள போலந்துக்கு சென்றிருந்தார்.

 

பைடன் பேசியது என்ன?

யுக்ரேன்
 
படக்குறிப்பு,

யுக்ரேன் அதிபர் வொலோடிமீர் ஸெலென்ஸ்கியை அவரது மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்துப் பேசினார். இந்தப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

யுக்ரேனிய குடிமக்களைப் பாராட்டிய ஜோ பைடன், ராணுவ பயிற்சியில் எந்த அனுபவமும் இல்லாமல் இந்த மக்கள் அற்புதமாகப் போராடியதாகக் கூறினார்."யுக்ரேனியர்களை மீண்டும் ஒருமுறை நான் பாராட்டுகிறேன். சாதாரண மற்றும் கடின உழைப்பாளியாக அவர்கள் திகழ்கிறார்கள். ஒருபோதும் ராணுவ பயிற்சி பெறவில்லை. ஆனாலும் களத்தில் அவர்கள் முன்னோக்கிச் சென்று போராடிய விதம் சிறந்த வீரத்திற்கு குறைவானது அல்ல. இப்போது உலகம் முழுவதும் அவர்களை அறிந்துள்ளது," என்று பைடன் கூறினார்.

யுக்ரேனிய அதிபரை சந்தித்த பிறகு அவரும் ஜோ பைடனும் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பில் தோன்றி வெளியிட்ட கூட்டறிக்கையில், "ஜனநாயக உலகம்" இந்த "போரில்" வெற்றி பெற வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

யுக்ரேனுக்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று பைடன் தெரிவித்தார்.

ஸெலென்ஸ்கி பேசுகையில், "அமெரிக்க-யுக்ரேன் உறவுகளின் முழு வரலாற்றிலும் அதிபர் பைடனின் வருகை நிலைத்திருக்கும். நாம் ஏற்கெனவே சாதித்ததை இது காட்டுகிறது. இன்று நாங்கள் மிகவும் பயனுள்ள பேச்சுக்களை நடத்தினோம்," என்று கூறினார்.

இந்தப் பயணத்தின் தாக்கம் நிச்சயம் போராட்டக் களத்தில் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனவரி மாத தொடக்கத்தில் அமெரிக்கா யுக்ரேனுக்கு ஆப்ராம்ஸ் டாங்கியை வழங்க முடிவு செய்தது. அது இப்போது யுக்ரேனின் பாதுகாப்பு தளவாடங்களில் அங்கம் வகிக்கிறது.

நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் குறித்தும் பைடனுடன் விவாதித்ததாக ஸெலென்ஸ்கி கூறினார்.

ரஷ்ய டாங்கி

வெள்ளை மாளிகை அறிக்கை

ஜோ பைடனின் பயணம் குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அதிபரின் கியவ் பயணம், யுக்ரேனின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான எங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது," என்று கூறப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்

Twitter பதிவின் முடிவு, 1

மேலும் அதில், "யுக்ரேன் பலவீனமாக இருப்பதாகவும், ஐரோப்பா பிளவுபட்டதாகவும் நினைத்து புதின் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு அந்நாட்டை தாக்கினார். எங்களை சோர்வடையச் செய்யலாம் என அவர் நினைத்தார். ஆனால் அவர் தவறு செய்தார்," என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஜோ பைடன் தமது மண்ணுக்கு வந்து சென்ற சில நிமிடங்களில் யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி தனது அதிகாரபூர்வ டெலிகிராம் கணக்கில் இருந்து, அமெரிக்க அதிபருடன் கைகுலுக்கும் படத்தை வெளியிட்டார்.

https://www.bbc.com/tamil/global-64707685

  • கருத்துக்கள உறவுகள்

நைசா போய் நைசா வந்தாலும் இந்த 80 வயது முதியவருக்கு அங்க போற தைரியம் வந்திருக்கே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பகிடி said:

நைசா போய் நைசா வந்தாலும் இந்த 80 வயது முதியவருக்கு அங்க போற தைரியம் வந்திருக்கே

கிழவன் ரஜனிகாந்தின்ர இப்பத்தையான் படம் பார்த்த பீலிங் உங்களிலை தெரியுது...:face_with_tears_of_joy:

ஒழுங்காய் நடக்கேலாத பைடனுக்கு மருந்து மாத்திரையளை குடுத்து ஏத்திக்கொண்டு போய் நடக்க விட்டு,பேச விட்டு சேக்கஸ் காட்டியிருக்கிறாங்கள்....இத பாத்து ரஷ்யா பயந்து உச்சா போயிடுமாக்கும்.:beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

நைசா போய் நைசா வந்தாலும் இந்த 80 வயது முதியவருக்கு அங்க போற தைரியம் வந்திருக்கே

அவருக்கு விருப்பம் இல்லா விட்டாலும் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் விடமாட்டினம் மேலும் அவரின் வீட்டில் இருந்து ரைசிய வுக்கு டாக்கு மென்ட்கள் அனுப்பி உள்ளார் என்று துரோகியாக்கி சாவடிப்பம் என்று வெருட்டுவார்கள் இதெல்லாம் வேண்டாம் என்று கிழவரை உணரவைத்து தங்களின் உருட்டுகெல்லாம் ஆட வைப்பார்கள்  ரிசி சுணக்  பைடன் போன்றவர்கள் தங்களின் சுய அறிவுன்படி இயங்குகிறார்கள் என்று நினைப்பதை நிறுத்தி வைப்பது நல்லது .

வடகிழக்கு தமிழ் மக்களை  சம்பந்தன் சுமத்திரன் என்ற கிழட்டு கூட்டம் ஏமாற்துவதை போல் அல்ல  உலக அரசியல் அல்ல அதுவேற  நம்ம கதை வேற.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியுடன் அவர் ஆற்றிய உரையில், அவர் துணை ஜனாதிபதியாக பணியாற்றியபோது ஆறு முறை உக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டதையும் நினைவுக்கூர்ந்தார்.

நரிகளின் சாயம் வெளுக்க ஆரம்பித்து விட்டது.
எதற்காக ஆறு முறை உக்ரேனுக்கு வந்து போனார்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எதற்காக ஆறு முறை உக்ரேனுக்கு வந்து போனார்?

பைடன் பதவி இறங்குவதற்கு முன் இதை காங்கிரஸ் நோண்டும் என்றே எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நரிகளின் சாயம் வெளுக்க ஆரம்பித்து விட்டது.
எதற்காக ஆறு முறை உக்ரேனுக்கு வந்து போனார்?

நான் அங்கே 2006 கால கட்டத்தில் இருந்த பொழுதே இவர் முன்னாள் கனடியன் பிரதமர் கார்ப்பர் போன்றோர் விஜயம் செய்து அந்த மக்களுக்கு சோவியத் ரஷ்யா செய்த அநியாயங்களை நினைவு படுத்திக்கொண்டு ஆறும் காயங்களை கிண்டி விட்டுக்கொண்டு இருந்தனர். இப்பொழுது புண் சீழ் பிடித்து விட்டது 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

நரிகளின் சாயம் வெளுக்க ஆரம்பித்து விட்டது.
எதற்காக ஆறு முறை உக்ரேனுக்கு வந்து போனார்?

சுருக்கமாக, நேட்டோவுக்கோ அல்லது eu க்கோ எல்லைகளை அகட்டாமல் இருக்க முடியாது.

இதது ஒரு பிரதான காரணம், ருசியா உக்கிரைன் ஐ நாடு நிலையாக இருக்கும் படி வலோற்காரப்படுத்துவதற்கு.

நேட்டோ, eu, உக்கிரைன் வழியாக, ரஷ்யாவுக்கு பக்கத்தில் வரும் ஆயின், அடுத்த நகர்வு, ருசியாவை உடைப்பது - உடைத்தால் தான் நேட்டோ, eu இன் எல்லைகளை அகட்ட முடியும்.

நேட்டோ உத்தியோகபூர்வம் இல்லாமல் உக்கிரனுக்குள் வந்தே இவ்வளவு சண்டை. 

உக்கிரைன் நேட்டோ நிலபுலம்  ஆகி இருந்தால் மிகப்பெரிய சண்டை மூளும் - அணு ஆயுதங்கள் உடனடியாக பாவிக்கப்படும் வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் தாராளம்.     

அனால், நேட்டோ ருசியா எல்லைகளில் வருவதில்  வேறுபட்ட அரசுக்கள் சுவிடனும், பின்லாந்தும் - இவை ருசியா அரசை இவளவு முழங்கை தூரத்தில் வைத்து இருக்க வேண்டும் நன்கு அறிந்தவை, வரலாற்று வழியாக.

அவற்றின் பாதுகாப்புக்கு நேட்டோ இல்  இணைந்தாலும், நேட்டோ வுக்கு அவை ஆடாது, நேட்டோ வும் அவற்றை ஆட்ட அல்லது தாளம் போட வைக்க  முடியாது.

மற்றது, சுவீடனினும், பின்லாந்தினதும், ருசியா சார்ந்து புவியில் அமைவிடமும், மொழி, கலாசார, இன வேறுபாடுகளும். அவை ஏற்கனவே மேற்கு அமைப்பாக, அனால் பிறிம்பாக இருந்ததும் - ருஷ்யாவில் செல்வக்கு செலுத்த முடியாது.

அனால், உக்கிரைன் இதில் வேறுபட்டது - நேட்டோ உக்கிரைன் இல் வந்தால், ரஸ்சியாவில் செல்வாக்கு செலுத்துவது, பிரச்சனைகளை தூண்டி  விடுவது, நிறப்புரட்சி, பிரிவினைகள் தூண்டுவது  என்று பல பிரச்சனைகள் வரும்.   அனால், எல்லாமே ருசியா அரசை நலிவாக்கி, ருசியாவை உடைப்பதற்கு.

நான் முதலே சொல்லி  இருந்தேன் - உக்கிரைன் (மற்றும் நேட்டோ இன்) இந்த பிழையான கணிப்பீடு - இழப்பு வந்தால் ருசியா  விட்டு விட்டு போய்விடும் என்று எண்ணியது.


இன்னொரு பிழையான கணிப்பீடு  - இது புடின் மற்றும் அவரின் குழாமால் தான் ருஷ்யா இந்த நிலைப்பாடு எடுக்கிறது என்பது - ஒரே இரவில் மேற்கு படுக்கவைக்க எண்ணிய ருஷ்யாவின் பொருளாதார்த்ததை வழிநடத்துவது தாராளவாத பொருளியல் நிபுணர்கள்.

புடின் மற்றும் இறுக்கமான குழாம் ஒப்பீட்டளவில், உள்நாட்டு, பூகோள அரசியல் தாராளவாதிகள். 

அனால், எந்த தாரளாவாதிகளும், அவர்களுக்கு, அவர்களின் அரசுக்கு  நீண்டகால போக்கில் ஆபத்து சூழ்கிறது  என்பதை பார்த்து கொண்டு இருப்பார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

செல்போன் இல்லாமல் ரயிலில் 10 மணிநேரம் - பைடனின் ரகசிய பயணம் சாத்தியமானது எப்படி?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சாரா ஸ்மித்
  • பதவி,ஆசிரியர், வட அமெரிக்கப் பிரிவு
  • 21 பிப்ரவரி 2023, 06:02 GMT
biden

பட மூலாதாரம்,REUTERS

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் யுக்ரேனுக்கு ஒரு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

 

தினந்தோறும் தாக்குதல் நடக்கும் ஒரு போர்க் களத்திற்கு சென்ற ஜோ பைடனின் இந்த பயணம் நவீன காலத்தில் ‘அபூர்வமானது’ என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

இதற்கு முன்பு இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் என போர் நடக்கும் பகுதிகளுக்கு அமெரிக்க அதிபர்கள் சென்றபோது பலமான அமெரிக்க ராணுவ ஆதரவுடன் சென்றனர்.

 

போலாந்தில் ஜோ பைடன் இருந்தபோது அவர் யுக்ரேனுக்கு பயணம் மேற்கொள்வார் எனப் பத்திரிகையாளர்கள் ஊகித்திருந்தபோதும், பைடனின் பயணம் பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

போலாந்தில் யுக்ரேன் மக்கள், அமெரிக்காவின் ஆதரவு குறித்து உரையாற்றியிருந்தார் பைடன் ஆனால் அவரின் பேச்சைக்காட்டிலும் சைரன் சத்தத்திற்கு மத்தியில் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அருகில் அவர் இருந்தது வலுவான பல செய்திகளை சொல்கிறது.

 

“அது ஒரு ஆபத்தான பயணம் ஆனால் தனது கடமைகளைத் தீவிரமாக எடுத்து கொள்பவர் பைடன் என்பதை இந்த பயணம் காட்டுகிறது,” என வெள்ளை மாளிகையின் செய்தி இயக்குநர் கேட் பெடிங்ஃபீல்ட் தெரிவித்தார்.

மொபைல் ஃபோன்கள் இல்லை

திங்களன்று மாலை அமெரிக்காவிலிருந்து போலாந்து தலைநகரான வார்சாவிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் பைடன். பயணத்தின்போது அவரின் திட்டம் என்ன என்பதில் இரு இடங்களில் நீண்ட நேரத்திற்கு எதுவும் குறிப்பிடாமல் இருந்தால் அவர் யுக்ரேனுக்கு செல்லலாம் என் சந்தேகங்கள் எழுந்தன.

 

வெள்ளை மாளிகையில் தினந்தோறும் நடைபெறும் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது இதுகுறித்து தொடர் கேள்விகள் எழுப்பப்பட்டாலும் யுக்ரேன் அதிபருடன் எந்த சந்திப்பும் இல்லை என்றும் வார்சாவை தவிர எங்கும் செல்ல திட்டம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

கீயவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என ஒரு மாத காலமாக திட்டமிடப்பட்டு வந்தாலும் வெள்ளியன்றுதான் இறுதிக்கட்ட முடிவு எடுக்கப்பட்டது.

 

இந்த பயணத்தில் பைடனுடன் ஒரு சிறிய குழு மட்டுமே சென்றது. ஒரு மருத்துவக் குழு மற்றும் சில பாதுகாப்பு அதிகாரிகள்.

 

இரண்டு பத்திரிகையாளர்கள் மட்டுமே அதிபருடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் பயணமும் ரகசியமாக வைக்கப்பட்டது. அவர்களின் மொபைல் ஃபோன்கள் எடுத்து கொள்ளப்பட்டது. பைடன் கீவ்விற்கு வந்த பிறகு தான் அதுகுறித்து அவர்கள் செய்தி வெளியிட அனுமதிக்கப்பட்டது.

 

பைடன் கீயவ்விற்கு செல்வதற்கு சற்று முன்புதான் இந்த பயணம் குறித்து ரஷ்யாவுக்கு தெரிவிக்கப்பட்டது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுவிலன் தெரிவித்தார்.

 

“தாக்குதல் நடைபெறுவதை தடுப்பதற்கான நோக்கத்தில் எங்களின் செய்தி ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டது. ஆனால் அது எத்தகைய செய்தி, அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்பதை விளக்க இயலாது” என அவர் தெரிவித்தார்.

பைடன் மற்றும் செலன்ஸ்கி

10 மணிநேர ரயில் பயணம்

கீவ்விற்கு செல்ல பத்து மணிநேர ரயில் பயணத்தை மேற்கொண்டார் அதிபர் பைடன். அவர் யுக்ரேனில் எளிதாக செல்லக்கூடிய பிற இடங்களுக்கு சென்றிருக்கலாம் ஆனால் அவர் கீவ்விற்கு செல்ல திட்டமிட்டார். இதன்மூலம் யுக்ரேனுக்கு உதவுவதில் அமெரிக்காவுக்கு உள்ள உறுதி குறித்து ரஷ்யாவுக்கு காட்டப்படுகிறது.

 

பைடனின் ஊடக செயலர் கரின் ஜேன் பியரி, “பைடன் எப்போதெல்லாம் உரையாற்றுகிறாரோ அது அமெரிக்க மக்களுக்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைவருக்கும் தான்,” என தெரிவித்துள்ளார்.

 

மேலும், “குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சிலர் எத்தனை நாட்களுக்கு அமெரிக்கா யுக்ரேனுக்கு ஆதரவு வழங்கும் எனக் கேட்டதற்கான பதில் இது,” என அவர் தெரிவித்தார்.

பைடன் பேசியது என்ன?

யுக்ரேனிய குடிமக்களைப் பாராட்டிய ஜோ பைடன், ராணுவ பயிற்சியில் எந்த அனுபவமும் இல்லாமல் இந்த மக்கள் அற்புதமாகப் போராடியதாகக் கூறினார்."யுக்ரேனியர்களை மீண்டும் ஒருமுறை நான் பாராட்டுகிறேன். சாதாரண மற்றும் கடின உழைப்பாளியாக அவர்கள் திகழ்கிறார்கள். ஒருபோதும் ராணுவ பயிற்சி பெறவில்லை. ஆனாலும் களத்தில் அவர்கள் முன்னோக்கிச் சென்று போராடிய விதம் சிறந்த வீரத்திற்கு குறைவானது அல்ல. இப்போது உலகம் முழுவதும் அவர்களை அறிந்துள்ளது," என்று பைடன் கூறினார்.

யுக்ரேனிய அதிபரை சந்தித்த பிறகு அவரும் ஜோ பைடனும் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பில் தோன்றி வெளியிட்ட கூட்டறிக்கையில், "ஜனநாயக உலகம்" இந்த "போரில்" வெற்றி பெற வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

யுக்ரேனுக்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று பைடன் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c14nxl04e0qo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

பைடன் பதவி இறங்குவதற்கு முன் இதை காங்கிரஸ் நோண்டும் என்றே எண்ணுகிறேன்.

பைடனும் அவர் மகனும் உக்ரேனில் செய்த ஊழல் சுத்துமாத்துக்கள் வெளி வர  அடக்கி விட்டார்கள் அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

செல்போன் இல்லாமல் ரயிலில் 10 மணிநேரம் - பைடனின் ரகசிய பயணம் சாத்தியமானது எப்படி?

இதெல்லாம் சும்மா ஒரு பில்டப். தங்களை வீரர் தீரர் ஆக காட்டும் நாடகம். நான் நினைக்கின்றேன் ரஷ்ய உளவுத்துறையும் அமெரிக்க  உளவுத்துறையும் ஏற்கனவே தங்களுக்குள் பயணம் பற்றிய விடயங்களை பரிமாறி இருப்பார்கள் என.....

ஏற்கனவே பைடன் போலந்துக்கு வருகின்றார் என செய்தியாக வெளியிட்டு விட்டனர். அதை விட ரஷ்யா இந்த  நேரத்தில் மோட்டுத்தனமான நடவடிக்கைகளிலும் இறங்காது.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

பைடனும் அவர் மகனும் உக்ரேனில் செய்த ஊழல் சுத்துமாத்துக்கள் வெளி வர  அடக்கி விட்டார்கள் அல்லவா?

காங்கிரஸ் கைமாறியபடியால் எதுவும் நடக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

காங்கிரஸ் கைமாறியபடியால் எதுவும் நடக்கலாம்.

நான் நினைக்கவில்லை. உக்ரேன் விடயத்தில் அமெரிக்காவும் அதன் சார்பு கூட்டணிகளும் வெல்ல வேண்டும். அதற்காகவாவது பாராமுகமாக இருப்பார்கள் என நம்பலாம்.

இருந்தாலும் ரம்ப் எனும் ஜாம்பவானும் லேசுப்பட்ட ஆள் இல்லைத்தானே? :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

நான் நினைக்கவில்லை. உக்ரேன் விடயத்தில் அமெரிக்காவும் அதன் சார்பு கூட்டணிகளும் வெல்ல வேண்டும். அதற்காகவாவது பாராமுகமாக இருப்பார்கள் என நம்பலாம்.

இருந்தாலும் ரம்ப் எனும் ஜாம்பவானும் லேசுப்பட்ட ஆள் இல்லைத்தானே? :beaming_face_with_smiling_eyes:

பைடன் போகும் போது ஒருமணி நேரம் முதல் ரசியாவுக்கு தகவல் கொடுத்துவிட்டு தான் போயிருக்கிறார்.

37 minutes ago, குமாரசாமி said:

இதெல்லாம் சும்மா ஒரு பில்டப். தங்களை வீரர் தீரர் ஆக காட்டும் நாடகம். நான் நினைக்கின்றேன் ரஷ்ய உளவுத்துறையும் அமெரிக்க  உளவுத்துறையும் ஏற்கனவே தங்களுக்குள் பயணம் பற்றிய விடயங்களை பரிமாறி இருப்பார்கள் என.....

ஏற்கனவே பைடன் போலந்துக்கு வருகின்றார் என செய்தியாக வெளியிட்டு விட்டனர். அதை விட ரஷ்யா இந்த  நேரத்தில் மோட்டுத்தனமான நடவடிக்கைகளிலும் இறங்காது.

இங்கிருந்து போகும்போதே எல்லோரிடமும் தொலைபேசிகளை சேகரித்துவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதெல்லாம் சும்மா ஒரு பில்டப். தங்களை வீரர் தீரர் ஆக காட்டும் நாடகம். நான் நினைக்கின்றேன் ரஷ்ய உளவுத்துறையும் அமெரிக்க  உளவுத்துறையும் ஏற்கனவே தங்களுக்குள் பயணம் பற்றிய விடயங்களை பரிமாறி இருப்பார்கள் என.

இதை வெள்ளைமாளிகையே அறிவித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பல மாதங்களாக இரகசியமாக திட்டமிடப்பட்ட பைடனின் உக்ரைன் விஜயம் - 10 மணித்தியால புகையிரத பயணம்- வெளியாகின விபரங்கள்

Published By: RAJEEBAN

22 FEB, 2023 | 11:07 AM
image

cnn

சனிக்கிழமை இரவு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வோசிங்டனில் காதலர் தின இரவு விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்துகொண்டார்.

FpgaOoqXsAwMmQz.jpg

பின்னர் அவர் தனது மனைவியுடன் வெள்ளை மாளிகை திரும்பினார்.

அதன் பின்னர் அவர் 36 மணித்தியாலங்களின் பின்னர் பொதுமக்கள் மத்தியில் காணப்பட்டார் - உக்ரைன் தலைநகர் கிவ்வில் உள்ள சென் மைக்கல் தேவாலயத்திலிருந்து வெளியே வந்தார்.

அவ்வேளை வான்தாக்குதல் சமிக்ஞைகள் ஒலித்தன - அவை அங்கு காணப்படும் ஆபத்தையும்இ உக்ரைன் யுத்தத்தின் இரண்டாவது வருடத்திற்குள் காலடி எடுத்துவைக்கும்வேளை  ஜோ பைடன் அங்கு விஜயம் மேற்கொள்வதற்கான காரணத்தையும் தெரிவிக்கும் வகையில் அமைந்திருந்தன.

இரகசியமாக வைக்கப்பட்டிருந்த வரலாற்றின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட இந்த விஜயம் பல மாதங்களாக திட்டமிடப்பட்ட ஒன்றாக காணப்பட்டது.

பைடனிற்கு நெருக்கமான சிரேஸ்ட அதிகாரிகள் சிலருக்கு மாத்திரம் இது குறித்து தெரிந்திருந்தது.

ரஸ்யா உக்ரைனை கைப்பற்ற முயன்று ஒருவருடகாலமாகின்ற வேளையில் பைடன் விஜயத்தினை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்திருந்தனர்.

ஒருவருடத்தின் பின்னரும் உக்ரைன் தலைநகர் உறுதியாக உள்ளது என பைடன் திங்கட்கிழமை அங்கு தெரிவித்தார்.

உக்ரைன் உறுதியுடன் உள்ளது ஜனநாயகம் வலுவாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மரின்ஸ்கி மாளிகையில் மூடப்பட்ட கதவுகளின் பின்னால் உக்ரைன் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற  பேச்சுவார்த்தைகளின் போது யுத்தத்தின் அடுத்த கட்டம் குறித்து பைடன் ஆராய்ந்தார்.

பைடனின் திட்டங்களை இரகசியமாக வைத்திருப்பதற்கு வெள்ளை மாளிகைக்கு கடும் நடவடிக்கைகள் அவசியமாக காணப்பட்டன.

பைடனின் உக்ரைன் விஜயத்தை இரத்துச்செய்வதற்கு அவரது சிரேஸ்ட அதிகாரிகள் முயன்றனர்.

உக்ரைனிற்கான விஜயம் இடம்பெறுவதற்கு சில மணிநேரம் வரை அந்த விஜயத்தை தவிர்ப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றன.

 

அந்த விஜயத்தின் உறுதியற்ற தன்மையே இதற்கு காரணமாக காணப்பட்டது.

உக்ரைன் விஜயம் சாத்தியமான ஒன்று என்ற நம்பிக்கை வெள்ளை மாளிகையின சில அதிகாரிகள் மத்தியில் காணப்பட்டாலும் கூட அமெரிக்க ஜனாதிபதியை வான்வெளி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு போர்முனைக்கு அனுப்புவது என்பது மிகவும் சவாலான விடயமாக காணப்பட்டது.

 

 கடந்த வெள்ளிக்கிழமை ஓவல் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இது குறித்த இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டது. அன்று பைடன் தனது விஜயத்திற்கான அனுமதியை வழங்கினார்.

 

 இந்த விஜயம் உறுதியானதும் அதனை மொஸ்கோவிற்கு தெரிவிப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டனர்.

 பைடன் உக்ரைனில் உள்ளவேளை நினைத்துப்பார்க்க முடியாத விடயங்கள் இடம்பெறுவதை தவிர்ப்பதற்காகவே இந்த அமெரிக்க அதிகாரிகள் ரஸ்யாவை தொடர்புகொண்டனர்.

 biden_jele.jpg

எனினும் வோசிங்டனில் இந்த இரகசியத்தை தொடர்ந்தும் பேணவேண்டிய நிலை காணப்பட்டது.

 ஞாயிற்றுக்கிழமை பைடன் வோசிங்டனில் இல்லை என்பதற்கான அறிவிப்புகள் எவையும் நிருபர்களிற்கு வழங்கப்படவில்லை.

 ஞாயிற்றுக்கிழமை வெளியான வெள்ளை மாளிகையின் அறிக்கையிலும் பைடன் போலந்திற்கு செல்வது குறித்தே தெரிவிக்கப்பட்டிருந்தது.

 ஞாயிற்றுக்கிழமை வழங்கிய பேட்டியில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பைடன் உக்ரைனிற்கு செல்லக்கூடும் என்பதை மறுத்திருந்தார்.

 இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி உக்ரைனிற்கு செல்வதற்கான திட்டம் எதுவுமில்லை என தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் ஜோன் கேர்பி பேட்டியொன்றில் தெரிவித்தார்.

 

ஆனால் அந்த தருணத்தில் பைடன் ஏற்கனவே அன்ரூஸ் கூட்டு தளத்திலிருந்து புறப்பட்டிருந்தார்.

 

பைடன் விமானப்படையின் வழமையான பெரிய விமானத்தை பயன்படுத்தவில்லை மாறாக விமானப்படையின் சி32 சிறிய ரக விமானத்தை பயன்படுத்தினார்.

 

 அவருடன் சிறிய எண்ணிக்கையிலான சிரேஸ்ட ஆலோசகர்களும்  ஒரு செய்தியாளரும் ஒரு புகைப்படப்பிடிப்பாளரும் பயணித்தனர் – விமானம் புறப்படுவதற்கு முன்னர் அவர்களிடமிருந்த இலத்திரனியல் சாதனங்களை அதிகாரிகள் எடுத்துக்கொண்டனர்.

 

 உக்ரைன் ஊடாக பத்து மணிநேர புகையிர பயணம்

 ஜேர்மனியில் உள்ள அமெரிக்க தளமொன்றில் விமானம் இறங்கி எரிபொருளை மீளநிரப்பிக்கொண்டதுஇ அதன் பின்னர் போலந்து நோக்கி புறப்பட்டது.

 விமானம் கிழக்கு நோக்கி புறப்பட்டுக்கொண்டிருந்தவேளை உக்ரைன் ஜனாதிபதியுடனான தனது உரையாடல் குறித்து பைடன் திட்டமிட்டுக்கொண்டிருந்தார்.தனக்கு கிடைக்ககூடிய சிறிய நேரத்தை எவ்வாறு புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது என திட்டமிட்டார்.

 

எதிர்காலத்தில் இடம்பெறப்போகின்ற மோதல்கள் குறித்து ஆராய்வது குறித்து அவரின் சிந்தனை காணப்பட்டது.

 பைடனின் விமானம் என்ற நகரில் தரையிறங்கியது.

 உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள அமெரிக்க படையினரை சந்திப்பதற்காகவும் மனிதாபிமான நடவடிக்கைகளை பார்வையிடவும் அவர் கடந்த வருடம் அந்த பகுதிக்கு சென்றிருந்தார்.

 கடந்த வருட விஜயத்தின் போது அவர் உக்ரைனிற்குள் செல்வதற்கான தனது விருப்பத்தை வெளியிட்டிருந்தார்.

 

 நான் மனிதாபிமான நெருக்கடியை நேரடியாக பார்த்து அறிந்துகொள்வதற்காக போலந்திற்கு வந்திருக்கின்றேன் ஆனால் என்னால் நேரடியாக பார்க்க முடியாது  எல்லையை கடந்து உக்ரைன் சென்று நேரடியாக பார்ப்பதற்கு அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என கருதுகின்றேன் என அவ்வேளை பைடன் தெரிவித்திருந்தார்.

 

இம்முறை அமெரிக்க விமானங்கள் போலந்து எல்லையை உன்னிப்பாக  அவதானித்துக்கொண்டிருந்த நிலையில் பைடன் எல்லையை கடந்து உக்ரைனிற்குள் சென்றார்.  

 அங்கிருந்து பத்துமணித்தியாலங்கள் புகையிரதத்தில் பயணம் செய்து பைடன் உக்ரைன் தலைநகரை அடைந்தார்.

https://www.virakesari.lk/article/148822

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

பைடனும் அவர் மகனும் உக்ரேனில் செய்த ஊழல் சுத்துமாத்துக்கள் வெளி வர  அடக்கி விட்டார்கள் அல்லவா?

டிரம்ப்பும் அவரது குடும்பமும் செய்ததை விட பெரிய ஊழல் இருக்குமா

  • கருத்துக்கள உறவுகள்

பைடன் உக்ரேனிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை ரஷ்யா ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டது - அமெரிக்க அதிகாரிகள்

Published By: RAJEEBAN

22 FEB, 2023 | 12:08 PM
image

அமெரிக்க ஜனாதிபதி உக்ரேனிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதனை செய்தது என அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இந்த சோதனை தோல்வியடைந்துள்ளது என அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

இந்த விடயம் குறித்து நன்கு அறிந்த இரண்டு அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா இது குறித்து அமெரிக்காவிற்கு முன்கூட்டியே தெரிவித்திருந்தது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணை பரிசோதனை அமெரிக்காவிற்கு ஆபத்தானதாக காணப்படவில்லை அமெரிக்கா இதனை வழமைக்கு மாறானதாகவோ அல்லது பதற்றத்தை அதிகரிப்பதாகவோ கருதவில்லை என மற்றுமொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்குலகில் சாத்தான் இரண்டு என அழைக்கப்படும் சர்மார்ட்  ஏவுகணையை ரஷ்யா பரிசோதனை செய்தது அது தோல்வியடைந்துள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/148835

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ragaa said:

டிரம்ப்பும் அவரது குடும்பமும் செய்ததை விட பெரிய ஊழல் இருக்குமா

எல்லாருமே கெரகம் புடிச்சவனுகள்...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

எல்லாருமே கெரகம் புடிச்சவனுகள்...

இப்போதைக்கு நாடுதான் பிடிக்கிறார்கள். நாசா, எலோன் மஸ்க் சக்சஸ் எண்டால் கிரகம் பிடிப்பார்கள்.

பிகு

புட்லர் அப்பவும் 19% உக்ரேனை பிடிக்க முக்குவார்🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

புட்லர் அப்பவும் 19% உக்ரேனை பிடிக்க முக்குவார்🤣

உங்க கதையை பார்த்தா புட்டின் சாகாவரம் பெற்றுவிட்டாரோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, goshan_che said:

இப்போதைக்கு நாடுதான் பிடிக்கிறார்கள். நாசா, எலோன் மஸ்க் சக்சஸ் எண்டால் கிரகம் பிடிப்பார்கள்.

பிகு

புட்லர் அப்பவும் 19% உக்ரேனை பிடிக்க முக்குவார்🤣

கிரகத்தை புடிச்சு?????????? :face_with_tongue:

  • கருத்துக்கள உறவுகள்

வந்து போயிருப்பது உலக சண்டியர். 

அந்தப் பயம் யாழிலும் தெரியுது 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

கிரகத்தை புடிச்சு?????????? :face_with_tongue:

பிடிச்சு, அங்க எல்லா வசதியளையும் உருவக்கினா பிறகு நாங்கள் ஓடிப்போய் கையைதூக்கி, அங்கே இருந்து வக்கணையா கதைக்க வசதியாய் இருக்கும் எல்லே🤣.

4 hours ago, ஈழப்பிரியன் said:

உங்க கதையை பார்த்தா புட்டின் சாகாவரம் பெற்றுவிட்டாரோ?

புட்லர் கால இயந்திரத்தில் வந்தவர் எண்டு ஒரு சதி கோட்பாடு இருக்கு. 

இன்னும் யாழுக்கு வரவில்லை🤣.

55 minutes ago, விசுகு said:

வந்து போயிருப்பது உலக சண்டியர். 

அந்தப் பயம் யாழிலும் தெரியுது 

Legend level trolling 🤣.

உருசுலாவும் சொல்லி போட்டு போயும் வெடி போட்டவர்.

பைடன் வந்து போகும் மட்டும் ஒரு கல்லு கூட வந்து விழவில்லை🤣.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.