Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“பலத்த இசையால் பறிபோன உயிர்” மாலை மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சியில் மணமகன் மாரடைப்பால் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“பலத்த இசையால் பறிபோன உயிர்” மாலை மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சியில் மணமகன் மாரடைப்பால் மரணம்

13-1.jpg

இசை சத்தத்தைக் குறைக்க வேண்டும் என்று மணமகன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் யாரும் அவர் சொல்வதை கேட்கவில்லை.
சீதாமர்ஹி

பீகார் மாநிலம் இந்தர்வா கிராமத்தில் திருமண விழா நடந்து கொண்டிருந்தது. மணமகன் சுரேந்திர குமார் இவர் ரெயில்வேயின் குரூப் டி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
மணமகன் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மணமடையில் மணமகளுடன் அமர்ந்து இருந்தார்.

அங்கு கொண்டாட்டமான சூழல் நிலவி வந்த இளைஞர்கள் சத்தத்தைக அதிகமாக வைத்து இசையில் நடனமாடிக்கொண்டிருந்தனர்

இசை சத்தத்தைக் குறைக்க வேண்டும் என்று மணமகன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் யாரும் அவர் சொல்வதை கேட்கவில்லை.

இந்த நிலையில் மணமகள் மணமகன் மாலை மாற்றிக்கொண்டனர். மணமகள் கழுத்தில் சுரேந்திரகுமார் மாலை அணிவித்த அடுத்த நொடி மேடையில் மயங்கி சரிந்து விழுந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக டொக்டர்கள் தெரிவித்தனர்.

இசையின் பலத்த சத்தத்தால் சுரேந்திரன் இறந்ததாக ஊர்வலத்தில் இருந்தவர் ஒருவர் கூறினார்.

https://thinakkural.lk/article/243267

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, ஏராளன் said:

“பலத்த இசையால் பறிபோன உயிர்” மாலை மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சியில் மணமகன் மாரடைப்பால் மரணம்

எம்மவர் கொண்டாட்டங்களிலும் பாடலோ இசையோ விளங்காத அளவிற்கு சத்தமாக போடுவார்கள்.பெரிய பெரிய பொக்ஸ்களை வைத்து உடம்பு அதிரும் அளவுக்கு சத்தமாக போடுவார்கள். கேட்டால் தாங்கள் DJஆம். இவர்கள் எல்லாம் வெள்ளைக்காரர்களின் இரவு நடன கிளப்புகளுக்கு சென்று பயிற்சி எடுக்க வேண்டும்:rolling_on_the_floor_laughing:

அங்கே இசை சத்தமாகவும் இருக்கும்.இனிமையாகவும் இருக்கும்.துல்லிய இசையும் புரியும் படியாகவும் இருக்கும்.காது கிழியாது.:beaming_face_with_smiling_eyes:

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு. லு😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

எம்மவர் கொண்டாட்டங்களிகும் பாடலோ இசையோ விளங்காத அளவிற்கு சத்தமாக போடுவார்கள்.பெரிய பெரிய பொக்ஸ்களை வைத்து உடம்பு அதிரும் அளவுக்கு சத்தமாக போடுவார்கள். கேட்டால் தாங்கள் DJஆம். இவர்கள் எல்லாம் வெள்ளைக்காரர்களின் இரவு நடன கிளப்புகளுக்கு சென்று பயிற்சி எடுக்க வேண்டும்:rolling_on_the_floor_laughing:

அங்கே இசை சத்தமாகவும் இருக்கும்.இனிமையாகவும் இருக்கும்.துல்லிய இசையும் புரியும் படியாகவும் இருக்கும்.காது கிழியாது.:beaming_face_with_smiling_eyes:

எனக்கும் ஒத்துவராது. நெஞ்சுக்குள்ள இடிப்பது போல் இருக்கும், காது அடைத்துவிடும். அந்த இடத்தை விட்டே ஓடிவிடுவேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, ஏராளன் said:

எனக்கும் ஒத்துவராது. நெஞ்சுக்குள்ள இடிப்பது போல் இருக்கும், காது அடைத்துவிடும். அந்த இடத்தை விட்டே ஓடிவிடுவேன்.

இஞ்சை இவங்கள் தண்ணியை போட்டுட்டு சவுண்டை கூட்டி செய்யிற அட்டகாசம் தாங்கேலாமல் வெளியிலை வந்துடுவன்.....:rolling_on_the_floor_laughing:

Kiliyudhu Kizhiyudhu GIF - Kiliyudhu Kizhiyudhu Subramaniapuram - Discover  & Share GIFs

அதிலையும் சிலதுகளுக்கு ஒழுங்காய் ஆடவும் தெரியாது. ஆனால் சிம்ரன் நினைப்பு  :face_with_tears_of_joy:

Simran Nav1 GIF by gowthamg280 | Gfycat

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எம்மவர் கொண்டாட்டங்களிலும் பாடலோ இசையோ விளங்காத அளவிற்கு சத்தமாக போடுவார்கள்.பெரிய பெரிய பொக்ஸ்களை வைத்து உடம்பு அதிரும் அளவுக்கு சத்தமாக போடுவார்கள். கேட்டால் தாங்கள் DJஆம். இவர்கள் எல்லாம் வெள்ளைக்காரர்களின் இரவு நடன கிளப்புகளுக்கு சென்று பயிற்சி எடுக்க வேண்டும்:rolling_on_the_floor_laughing:

அங்கே இசை சத்தமாகவும் இருக்கும்.இனிமையாகவும் இருக்கும்.துல்லிய இசையும் புரியும் படியாகவும் இருக்கும்.காது கிழியாது.:beaming_face_with_smiling_eyes:

உண்மையான கருத்து. DJ ஆவதற்கு நிச்சயமாக சிறந்த பயிற்சி எடுக்க வேண்டும். உதாரணமாக உணவு பரிமாறப்படும் போது மிருதுவான குறைந்த ஒலியுடனான  melody  இசையே ஐரோப்பியர்களின் திருமணம் போன்ற  கொண்டாட்டங்களில் ஒலிக்க விடப்படும்.

ஆனால் நீங்கள் சொல்வது போலவே,  எம்மவர் உணவு பரிமாறப்படும் வேளையில் கூட காதை அடைக்கும் சத்தத்துடன் இசை ஒலிக்க விடுவதை அவதானித்துள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எம்மவர் கொண்டாட்டங்களிலும் பாடலோ இசையோ விளங்காத அளவிற்கு சத்தமாக போடுவார்கள்.பெரிய பெரிய பொக்ஸ்களை வைத்து உடம்பு அதிரும் அளவுக்கு சத்தமாக போடுவார்கள். கேட்டால் தாங்கள் DJஆம். இவர்கள் எல்லாம் வெள்ளைக்காரர்களின் இரவு நடன கிளப்புகளுக்கு சென்று பயிற்சி எடுக்க வேண்டும்:rolling_on_the_floor_laughing:

அங்கே இசை சத்தமாகவும் இருக்கும்.இனிமையாகவும் இருக்கும்.துல்லிய இசையும் புரியும் படியாகவும் இருக்கும்.காது கிழியாது.:beaming_face_with_smiling_eyes:

எனக்கும் அது சரிவராது.....அப்பால் போய் விடுவதுண்டு.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அந்தப் பெண்ணுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகுதோ இந்த சமுகம்.

2 hours ago, குமாரசாமி said:

எம்மவர் கொண்டாட்டங்களிலும் பாடலோ இசையோ விளங்காத அளவிற்கு சத்தமாக போடுவார்கள்.பெரிய பெரிய பொக்ஸ்களை வைத்து உடம்பு அதிரும் அளவுக்கு சத்தமாக போடுவார்கள். கேட்டால் தாங்கள் DJஆம். இவர்கள் எல்லாம் வெள்ளைக்காரர்களின் இரவு நடன கிளப்புகளுக்கு சென்று பயிற்சி எடுக்க வேண்டும்:rolling_on_the_floor_laughing:

அங்கே இசை சத்தமாகவும் இருக்கும்.இனிமையாகவும் இருக்கும்.துல்லிய இசையும் புரியும் படியாகவும் இருக்கும்.காது கிழியாது.:beaming_face_with_smiling_eyes:

உண்மை.  அதிகமான சத்தமாக இருந்தால் இசை பின்னர் அலறாகி விடும். எனக்கும் அதிக சத்தம் ஒவ்வாது. தலையிடியும் வந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் தான் விழாக்களுக்கு போனால் ஸ்பீக்கர்  அருகில் இருக்கும் ஆசனத்தை  தவிர்த்து  விடுவேன். இசை என்பது மனதுக்கும்  மகிழ்ச்சி தரக் கூடியதாக இருக்க வேண்டும் . தனியே நாதஸ்வர   இசை மிகவும் பிடிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிலாமதி said:

நானும் தான் விழாக்களுக்கு போனால் ஸ்பீக்கர்  அருகில் இருக்கும் ஆசனத்தை  தவிர்த்து  விடுவேன். இசை என்பது மனதுக்கும்  மகிழ்ச்சி தரக் கூடியதாக இருக்க வேண்டும் . தனியே நாதஸ்வர   இசை மிகவும் பிடிக்கும். 

நாதஸ்வர இசையை மண்டபங்களுக்குள் வைக்கும் போது அதன் முன்னால் மைக் வைத்தால் equalizer இல் அந்த இசைக்கேற்ப சில மாற்றங்களை துறைசார் நிபுணர்கள் செய்ய வேண்டும். இல்லை என்றால் அதுவும் தலையிடியை தான் கொண்டு வரும். அல்லது மண்டபங்களுக்குள் மைக் வைக்காமல் நாதஸ்வர இசையை ஒலிக்க வைக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

எம்மவர் கொண்டாட்டங்களிலும் பாடலோ இசையோ விளங்காத அளவிற்கு சத்தமாக போடுவார்கள்.பெரிய பெரிய பொக்ஸ்களை வைத்து உடம்பு அதிரும் அளவுக்கு சத்தமாக போடுவார்கள். கேட்டால் தாங்கள் DJஆம். இவர்கள் எல்லாம் வெள்ளைக்காரர்களின் இரவு நடன கிளப்புகளுக்கு சென்று பயிற்சி எடுக்க வேண்டும்:rolling_on_the_floor_laughing:

அங்கே இசை சத்தமாகவும் இருக்கும்.இனிமையாகவும் இருக்கும்.துல்லிய இசையும் புரியும் படியாகவும் இருக்கும்.காது கிழியாது.:beaming_face_with_smiling_eyes:

நான் சிலவேளை 3D படம் பார்க்க போனால் படுறபாடிருக்கே சொல்லவே வெட்கம்.

ஒரு கண்ணாடியும் தருவான்.அதோட பரலோகம் தான்.

9 hours ago, குமாரசாமி said:

இவர்கள் எல்லாம் வெள்ளைக்காரர்களின் இரவு நடன கிளப்புகளுக்கு சென்று பயிற்சி எடுக்க வேண்டும்:rolling_on_the_floor_laughing:

ம் கிளப்புகள் எல்லாம் கிழப்பியிருக்கிறீங்க.

  • கருத்துக்கள உறவுகள்

A new study found that exposure to loud noises may increase your risk of a heart attack.

After adjusting for other factors that contribute to cardiovascular risk (including air pollution), they found that every 5-decibel increase in the average 24-hour noise level was associated with a 34% increase in heart attacks, strokes, and other serious heart-related problems

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இது ஒத்து வராது ஆனால் நான் ஆடும்போது சத்தம் குறைவாக இருந்தால் ஆட வராது?😂 சத்தம் அதிகரிக்க அதிகரிக்க நம்ம வேகமும் அதிகரிக்கும் பாருங்க. அனுபவித்தவனுக்கு தான் புரியும். 🤪

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

எனக்கும் இது ஒத்து வராது ஆனால் நான் ஆடும்போது சத்தம் குறைவாக இருந்தால் ஆட வராது?😂 சத்தம் அதிகரிக்க அதிகரிக்க நம்ம வேகமும் அதிகரிக்கும் பாருங்க. அனுபவித்தவனுக்கு தான் புரியும். 🤪

இசை பெரிதாக இருக்கும் போது, ஆடினால், உடல் இசைக்கு அமைய சமாளிக்கும். ஆடாமல் அமைதியாக இருந்தால் தான், சிக்கல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/3/2023 at 17:51, சுவைப்பிரியன் said:

இப்ப அந்தப் பெண்ணுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகுதோ இந்த சமுகம்.

மாப்பிளைக்கு ஏற்கனவே இருதயத்திலை ஓட்டையாம். நல்லகாலம் தலையோடை போக வேண்டியது தலைப்பாகையோட போட்டுது.படு பாவி ஒரு பொம்புளைப்புள்ளையின்ர வாழ்க்கையில விளையாட பாத்திட்டானே....கடவுள் கண்னை திறந்திட்டார்.

இது எப்பிடியிருக்கு......?

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

மாப்பிளைக்கு ஏற்கனவே இருதயத்திலை ஓட்டையாம். நல்லகாலம் தலையோடை போக வேண்டியது தலைப்பாகையோட போட்டுது.படு பாவி ஒரு பொம்புளைப்புள்ளையின்ர வாழ்க்கையில விளையாட பாத்திட்டானே....கடவுள் கண்னை திறந்திட்டார்.

இது எப்பிடியிருக்கு......?

 உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக டொக்டர்கள் தெரிவித்தனர்.

இசையின் பலத்த சத்தத்தால் சுரேந்திரன் இறந்ததாக ஊர்வலத்தில் இருந்தவர் ஒருவர் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இசை பெரிதாக இருக்கும் போது, ஆடினால், உடல் இசைக்கு அமைய சமாளிக்கும். ஆடாமல் அமைதியாக இருந்தால் தான், சிக்கல்.

அதற்கு முதலில் சரக்கு 🥃 உள்ளே செல்லவேண்டுமே.  மாப்பிள்ளை சரக்கு அடிப்பதில்லை என்றால் என்ன செய்வது. 

On 3/3/2023 at 19:19, Nathamuni said:

A new study found that exposure to loud noises may increase your risk of a heart attack.

After adjusting for other factors that contribute to cardiovascular risk (including air pollution), they found that every 5-decibel increase in the average 24-hour noise level was associated with a 34% increase in heart attacks, strokes, and other serious heart-related problems

இரைச்சலுடன் வருகின்ற மோசமான இன்னோர் விடயம் வைபிரேசன் அதிர்வு. இந்த அதிர்வு ரொம்ப பொல்லாதது. உடம்பில் அதிர்வினால் ஏற்படும் தாக்கம் அதிகம். 

1 hour ago, குமாரசாமி said:

மாப்பிளைக்கு ஏற்கனவே இருதயத்திலை ஓட்டையாம். நல்லகாலம் தலையோடை போக வேண்டியது தலைப்பாகையோட போட்டுது.படு பாவி ஒரு பொம்புளைப்புள்ளையின்ர வாழ்க்கையில விளையாட பாத்திட்டானே....கடவுள் கண்னை திறந்திட்டார்.

இது எப்பிடியிருக்கு......?

சொந்த கற்பனையோ. 

On 3/3/2023 at 09:58, குமாரசாமி said:

எம்மவர் கொண்டாட்டங்களிலும் பாடலோ இசையோ விளங்காத அளவிற்கு சத்தமாக போடுவார்கள்.பெரிய பெரிய பொக்ஸ்களை வைத்து உடம்பு அதிரும் அளவுக்கு சத்தமாக போடுவார்கள். கேட்டால் தாங்கள் DJஆம். இவர்கள் எல்லாம் வெள்ளைக்காரர்களின் இரவு நடன கிளப்புகளுக்கு சென்று பயிற்சி எடுக்க வேண்டும்:rolling_on_the_floor_laughing:

அங்கே இசை சத்தமாகவும் இருக்கும்.இனிமையாகவும் இருக்கும்.துல்லிய இசையும் புரியும் படியாகவும் இருக்கும்.காது கிழியாது.:beaming_face_with_smiling_eyes:

எங்கடை ஆட்கள் பலருக்கு முக்கியமாக டீ ஜேக்களுக்கு காது ஏற்கனவே ஓட்டை ஆகீட்டு. செவிட்டு டீஜேக்கள் தங்களுக்கு கேட்கும் அளவுக்கு சத்தத்தை அதிகரிப்பதால் ஒழுங்காக காது கேட்கும் ஆட்களுக்கு காது புளிக்கின்றது. 

Edited by நியாயத்தை கதைப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, விசுகு said:

எனக்கும் இது ஒத்து வராது ஆனால் நான் ஆடும்போது சத்தம் குறைவாக இருந்தால் ஆட வராது?😂 சத்தம் அதிகரிக்க அதிகரிக்க நம்ம வேகமும் அதிகரிக்கும் பாருங்க. அனுபவித்தவனுக்கு தான் புரியும். 🤪

தண்ணி அடிக்காமல் தண்ணி அடிச்சவனை விட உக்ரமாய் ஆடுற ஆக்களை பார்த்திருக்கிறன். :beaming_face_with_smiling_eyes:

Michael-jackson-billie-jean-moonwalk GIFs - Get the best GIF ...

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

தண்ணி அடிக்காமல் தண்ணி அடிச்சவனை விட உக்ரமாய் ஆடுற ஆக்களை பார்த்திருக்கிறன். :beaming_face_with_smiling_eyes:

Michael-jackson-billie-jean-moonwalk GIFs - Get the best GIF ...

ஆமாம் அண்ணா

நான் தண்ணி அடிக்காமல் ஆடுபவன் தான் 👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, விசுகு said:

ஆமாம் அண்ணா

நான் தண்ணி அடிக்காமல் ஆடுபவன் தான் 👍

தண்ணி அடிக்காத ஆக்களோட நிண்டு தாக்கு பிடிக்கறது கஸ்டம்.....:face_with_tears_of_joy:

9 hours ago, விசுகு said:

?😂சத்தம் அதிகரிக்க அதிகரிக்க நம்ம வேகமும் அதிகரிக்கும் பாருங்க. அனுபவித்தவனுக்கு தான் புரியும். 🤪

எனக்கு மட்டும் ஏன் டபிள் மீனிங்கில் விளங்குது 😅

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.