Jump to content

தமிழ்நாடானது ஈழத்தமிழர்களின் மரபுவழித் தாயகத்தின் ஒர் பகுதி இல்லை ! இந்திய அரசுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவிப்பு !!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடானது ஈழத்தமிழர்களின் மரபுவழித் தாயகத்தின் ஒர் பகுதி இல்லை ! இந்திய அரசுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவிப்பு !!

Published By: RAJEEBAN

11 MAR, 2023 | 01:02 PM
image

தமிழீழம் என்ற ஈழத்தமிழர்களின் மரபுவழித் தாயகத்தின் ஓர் பகுதியாக இந்தியஆட்புலத்தில் உள்ள தமிழ்நாடு இல்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கான சட்டப் போராட்டத்தின் ஓர்படியாக புதிதாக இந்திய உள்துறை அமைச்சிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. 

 “தமிழர்கள் அனைவருக்குமான ஓர் தனிநாடு(தமிழீழம்) என்ற விடுதலைப்      புலிகளின் குறிக்கோள் இந்தியாவின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாகும். இது இந்திய ஆட்புலத்தில் ஒரு பகுதியை(தமிழ்நாடு) இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிப்பதாகும். ஆகவே சட்டத்தின்படி “சட்டப்புறம்பான அமைப்பு” என்ற எல்லை அல்லது வீச்சுக்கு உட்பட்டது என்பதாகும்”என தமிழீழவிடுதலைப் புலிகளை மீதான தடை தொடர்பிலான ஒவ்வோர் அறிக்கையிலும் இந்திய உள்துறை அமைச்சு சொல்லும் குற்றச்சாட்டாக அமைந்து வருகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இதற்கு மறுமொழியாக “தமிழர்கள் தனிநாடு (தமிழீழம்) கோருவது தொடர்பாக ஆதரவாளர்களும், பரிவாளர்களும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், இந்திய ஆட்புலத்தில் ஒரு பகுதியின் பிரிவினையை நிகழ்த்துவதற்கான திட்டம் அல்ல”என தனது புதிய விண்ணப்பத்தில் எடுத்துரைத்துள்ளது.

“தமிழீழ விடுதலைப் புலிகள், தீர்ப்பாயத்தின் முன்னால் வந்து, இந்திய ஆட்புலத்தின் ஒரு பகுதியைப் பிரிக்கும் குறிக்கோளை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று திட்டவட்டமாக நிலை எடுக்க விடாமல் எதுவும் அவர்களை தடுக்கவில்லை'”என்று தீர்ப்பாயம் கூறியிருப்பதற்கு, தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் செயல்படத் தகுதியுள்ள ஒருவருக்கும் முறைப்படி தடை தொடர்பான அறிவித்தல்கள் வழங்கப்படவில்லை என்று  நாடுகடந்த தமிழீழஅரசாங்கம் தனது பதிலாக தற்போது சமர்ப்பித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தடைநீக்கத்துக்கான செயன்முனைப்பில் இந்தியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்ஈடுபட்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்குப் போதிய காரணம் உள்ளதா என்பதைத் தீர்ப்புரைக்கும் நோக்கத்துக்காக, இந்திய உள்துறை அமைச்சு டெல்லியில் உள்ள தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அறிக்கைஅனுப்பியதன் எதிரொலியாக 2019 செப்டம்பர் 5 ம் நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவ்விசாரணையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் தன்னையும் ஒருதரப்பாக சேர்த்துகொள்ளும்படி மனு சமர்ப்பித்திருந்தார். தீர்ப்பாயம் நாடுகடந்ததமிழீழ அரசாங்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பு இல்லை என்ற காரணத்தினாலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்ற காரணத்தினாலும் உருத்திரகுமாரனின் மனுவை நிராகரித்திருந்தது.

 இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகள் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்கும்படி, விண்ணப்பித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இதற்கான காரணங்களில் ஒன்றாக தமிழீழ விடுதலைக்கான செயற்பாட்டில் பேச்சுரிமை மீதும், கூட்டங்கூடும் உரிமையின் மீதும் தொடர்ந்தும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள முடக்கம் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

 ஈழத்தமிழர்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் போராடி வருகின்றவர்களின் செயற்பாட்டுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையானது, இடையூறாக அமைகின்றது என இப்புதிய விண்ணப்பத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்கள் சார்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் பிற அமைப்புகளின் செயற்பாடுகளுக்கு தடையானது இடையூறாக அமைந்துள்ளது.

சுதந்திரமும், இறைமையும் உள்ள தமிழீழ அரசு நிறுவுதல் என்ற இலக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் இடையில் அதன் இலட்சியத்தில் பொதுத்தன்மை காணப்படுவதால், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் இந்தியாவில் செயற்பாட்டுகளை மேற்கொள்வதற்கு பெரும்நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடுவதாக இந்திய உள்துறை அமைச்சுக்கு முன்வைக்கப்பட்டுள்ள புதிய கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 “ஈழத்தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையானது, பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்வதற்கு அல்லது ஊக்கப்டுத்துவதற்கே ஒப்பானது என்ற தவறான புரிதலை இத் தடை ஏற்படுத்துகின்றது; எமது குறிக்கோளை ஆதரிப்பவர்கள் இந்திய அரசியல் பொதுப்பரப்பில் எடுத்துரைக்கும்உரிமையினைத்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய விண்ணப்பம் வேண்டிநிற்கிறது” என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். 

 மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் என்று சொல்லிக்கொள்ளும் தனிமனிதர்களின் நடவடிக்கைகளானது, விடுதலைப் புலிகளின் தலைமையால் அங்கீகரிக்கப்படாவிட்டால் அவற்றுக்கு  விடுதலைப் புலிகளைக் காரணமாக்க முடியாது என்ற நிலைப்பாட்டை சட்டத் தீர்ப்புக்களை ஆதாரம் காட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மனுவில் குறிப்பிட்டு   உள்ளது. மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு, ஒரு அமைப்புக்குரிய கட்டுமானம் தற்போது இல்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளது. 

இதேவேளை ஈழத்தமிழர்களின் அரசியல் பெருவிருப்பினை அடைவதற்கு அரச தந்திரக்களத்தில் இந்திய அரசின் ஆதரவு இன்றியமையாதது என்பதனையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.“இந்திய மக்களுடன் தோழமை தெரிவித்து, இந்தியப் பெருங்கடல் வட்டாரத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் பேணி வளர்க்கவும், இந்தியாவுடன் தமிழீழம் ஒருசிறப்பு உறவை வார்த்தெடுக்கவும் செய்யும்” என2013ம் ஆண்டு முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திரசாசனத்தில் குறிப்பிட்டமையையும் இம் மனுவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/150232

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஈழ தமிழர்களும் தமிழ் நாட்டு தமிழர்களும் வெவ்வேறு தேசிய இனத்தினரே. மொழியால் ஒன்று பட்டாலும் இருவரதும் சிந்தனை முறைகளில் பாரிய மாற்றம் உள்ளது. 

ஈழத்தமிழர்கள் தமிழ் நாட்டு தமிழர்களை விட கல்வி போருளாதாரம் ஆகிய விடயங்களிலும் சிந்தனைப் போக்கிலும்   நவீனத்துவம் கொண்டவர்களாகவே முன்பு காணப்பட்டார்கள். (1960,1970 ஆகிய பத்தாண்டுகளில்களில் ஈழத்தமிழர்களின் வாழ்க்கைமுறையையும் தமிழக தமிழர்களின் வாழ்ககை முறையையும் ( lifestyle) ஒப்பிட்டு  ஆராய்ந்து பார்ததால் இது புரியும். 

உருவாகிய சிங்கள இனவாதம் அதை சரிவர கையாள தெரியாத தமிழ் தலைவர்கள்,  சுயநல அரசியல் போன்ற இன்னாரென்ன விடயங்கள் ஆயுத போருக்கு வழிவகுக்க அந்த யுத்தத்தால் மிகவும்்அதிகம் பாதிக்கப்பட்ட பின்னோக்கி இழுத்து செல்லப்பட்ட இனமாக  ஈழத் தமிழர் என்ற தேசிய இனம் தற்போது உள்ளது.

இன்று  ஈழத்தமிழர்களை விட தமிழகத்தமிழர் இன்று பல துறைகளில் முன்னேறி உள்ளனர் என்பது கண்கூடு.   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

உண்மையில் ஈழ தமிழர்களும் தமிழ் நாட்டு தமிழர்களும் வெவ்வேறு தேசிய இனத்தினரே. மொழியால் ஒன்று பட்டாலும் இருவரதும் சிந்தனை முறைகளில் பாரிய மாற்றம் உள்ளது. 

நூறு வீதம் உண்மை. இருவர்களுக்கிடையிலும் பெரிய வேறுபாடுகள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் தெரியாமலா இந்திரா காந்தி அம்மையார் ஈழ விடுதலைக்கு உதவ முன்வந்தார்.

பிரச்சனை விளக்கமல்ல.. வில்லங்கமான ஆக்கள் ஹிந்திய மத்தியையும் நீதிமன்றங்களையும் தவறாக வழிநடத்துவதுதான். விளைவு.. ஹிந்தியா சீன ரகனின் முழுச் சுற்றி வளைப்பில். 

தனித் தமிழ்நாடு கேட்ட போது தமிழீழம் கேட்கவில்லை. எப்போ தமிழர்கள் ஈழத்தில் எனியும் சிங்களவனிடம் அடிவாங்க முடியாது என்று நினைத்தார்களோ அப்போதுதான் தமது பிராந்தியத்தை தாமே ஆள வேண்டிய நிலைக்கு தளப்பட்டார்கள். இதனை 1983 கலவரத்தின் பின் இந்திராகாந்தி அம்மையாரே உறுதிபட ஹிந்திய தேசத்துக்குச் சொல்லி உள்ளாரே. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெவ்வேறு இனமா?😲

அப்போ இந்த 'தொப்புள் கொடி உறவு.., ஆப்பிள் கடி உறவு..' 😜 எல்லாம் பொய்யா. கோப்பால்? 😞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் சரியான கூற்று. தென்னிந்திய தமிழர்கள். முதலில் இந்தியர்கள் பிறகுதான் தமிழர்கள் இது உலக நியதி. இதை புரிந்துகொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கு தமிழர்கள் முதலில் இலங்கையர்கள், பிறகுதான் தமிழர்கள். இந்த உலக நியதியையும் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். 😉

'ஈழத் தமிழர்கள்' என தங்களை அழைத்துக்கொள்ளக் கூடாது. 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

வெவ்வேறு இனமா?😲

அப்போ இந்த 'தொப்புள் கொடி உறவு.., ஆப்பிள் கடி உறவு..' 😜 எல்லாம் பொய்யா. கோப்பால்? 😞

@island உங்கள் பதிலை தெளிவுபடுத்துங்கோ, வன்னியன் அண்ணா குழம்பிற்றார்.

8 hours ago, colomban said:

இது மிகவும் சரியான கூற்று. தென்னிந்திய தமிழர்கள். முதலில் இந்தியர்கள் பிறகுதான் தமிழர்கள் இது உலக நியதி. இதை புரிந்துகொள்ள வேண்டும்.

7 hours ago, ராசவன்னியன் said:

வடகிழக்கு தமிழர்கள் முதலில் இலங்கையர்கள், பிறகுதான் தமிழர்கள். இந்த உலக நியதியையும் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். 😉

'ஈழத் தமிழர்கள்' என தங்களை அழைத்துக்கொள்ளக் கூடாது. 😍

நல்ல போட்டி!

Edited by ஏராளன்
சிறிய தவறை சரி செய்தேன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

வெவ்வேறு இனமா?😲

அப்போ இந்த 'தொப்புள் கொடி உறவு.., ஆப்பிள் கடி உறவு..' 😜 எல்லாம் பொய்யா. கோப்பால்? 😞

விடுங்கள் தோழர் இப்படியாவது தங்கள் மீதான இந்திய அரசின் பிடி விலகாதா.. ஒதுங்குவார்களா என்று எதிர்பார்கிறார்கள் .. அதெல்லாம் வாய்ப்பு இல்லை

memees.php?w=650&img=Z291bmRhbWFuaS9nb3V

உலக வரைபடத்தில் வேறு எங்காவது இலங்கை அமைவிடம் இருந்தால் இந்நேரம் தமிழ்ஈழம் பிறந்து இருக்கும் . இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு  நாமும் ஒரு காரணம் என்பதே நிதர்சனமான உண்மை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ஏராளன் ஒரே மொழியை பேசும் மக்கள் வெவ்வேறு தேசிய இனமாக இருப்பது உலகில் சாதாரணமானதே. இங்கிலாந்து மக்களும், ஸகொட்லாந்து மக்களும் வேல்ஸ் மக்களும்  ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் வெவ்வேறு தேசிய இனங்களாகவே உணர்கிறார்கள். உலக கோப்பை கால்பந்தட்டத்தில் வெவ்வேறு கொடிகளுடன் பங்கு பற்றுகிறார்கள். அமெரிக்கர்களும் அவுஸ்திரேலியர்களும் அப்படியே.

அதே போல் ஜேர்மனியர்களும், ஒஸ்ரிய மக்களும் ஜேர்மன் மொழியை பேசும் சுவிஸ் மக்களிம் தம்மை ஒரே தேசிய இனமாக உணர்வதில்லை.  

அதே போல தான்  ஈழத்தமிழரும் தமிழ்நாட்டு தமிழரும். இருவரும் கலை, கலாச்சார, வணிக, தொழில் நுட்ப விடயங்களில் தமக்குள் உறவை பேணி தம்மைப் பலப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அரசியல் ரீதியாக வேறுபட்ட தேசிய இனமே. ஒருவர் அரசியலில் மற்றவர் தலையிடுவது எதிர்மறையான விளைவையே தரும். ஏற்கனவே அந்த படிப்பினை  இரு பகுதிக்கும் உள்ளது. அரசியல் பிரச்சனைகள் அறிவு பூர்வமாக தீர்க்கப்பட வேண்டியதேயொழிய உணர்வு ரீதியாக அல்ல. 

8 hours ago, ராசவன்னியன் said:

வடகிழக்கு தமிழர்கள் முதலில் இலங்கையர்கள், பிறகுதான் தமிழர்கள். இந்த உலக நியதியையும் புரிந்துகொள்ள வேண்டுகிறேன். 😉

'ஈழத் தமிழர்கள்' என தங்களை அழைத்துக்கொள்ளக் கூடாது. 😍

ஈழம் என்பது பண்டை காலத்தில் இருந்து இலங்கை தீவு முழுவதையும் குறிக்கும் சொல். இலங்கை தேசிய கீதத்திலேயே ஈழம் என்ற சொல் உள்ளது. தமிழீழம் என்பதே நாம் போராடி பெற முனைந்த வட கிழக்கு இணைந்த எமது தாயக பிரதேசம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2023 at 16:17, island said:

உண்மையில் ஈழ தமிழர்களும் தமிழ் நாட்டு தமிழர்களும் வெவ்வேறு தேசிய இனத்தினரே. மொழியால் ஒன்று பட்டாலும் இருவரதும் சிந்தனை முறைகளில் பாரிய மாற்றம் உள்ளது. 

இல்லை இருவரும் ஒரே தேசிய இனமே.

எப்படி?

எப்படி என்றால் தம் ethnic identity (சிற்றின இன அடையாளம்) தமிழ் என்றே இருவரும் உணர்கிறார்கள். வேல்ஸ், ஸ்காட்டிஷ், ஐரிஷ், ஆங்கிலேயர் அப்படி அல்ல. அவர்கள் வெல்ஷ், ஸ்கொடிஷ் கேலிக், ஐரிஷ் கேலிக், ஆங்கிலம் ஆகிய வேறு, வேறு மொழிகளை பேசி வந்த, ஆங்கில ஆக்கிரமிப்பால் அந்த மொழிகளை இழந்த (முற்றாக அல்ல) சிற்றினங்கள்.

நாமும் தமிழக தமிழரும் அப்படி அல்ல. நாம் ஒரே நிலப்பரப்பில் (கடல் பிரித்த) , பெருமளவு ஒத்த கலை பண்பாட்டுடன், ஒரே கூட்டம் என தம் வசமாக உணர்ந்து (subjective) வாழ்கிறோம். 

ஆகவே நாம் இருவரும் ஒரு தேசிய இனத்தின் கூறுகளே.

மேலும் எல்லா நாடுகளும் தேசிய இனவழி அமைந்தவை அல்ல.

குறிப்பாக அவுஸ்ரேலியா, அமெரிக்கா, கனடா போன்ற குடியேற்ற நாடுகளும், இந்தியா போன்ற கூட்டுகலவை நாடுகளும்.

இந்தியா பல தேசிய இனங்களின் கூட்டு. இங்கே பல தேசிய இனங்கள் சேர்ந்து இந்தியா என்ற தேசிய அடையாளத்தை உருவாக்கி உள்ளன. ஆனால் இந்தியன் என்பது தேசிய இனம் அல்ல.

அதேபோல் அவுஸ்ரேலியர், அமரிக்கர் ஆங்கிலதேசிய இனத்தவர் அல்ல. அங்கே ஆங்கிலம் பேசும் பல குடியேறிகள் சேர்ந்து அமெரிக்கன், அவுஸ்ரேலியன் என்ற தேசிய அடையாளத்தை உருவாக்கி உள்ளன.  இவையும் தேசிய இனங்கள் அல்ல.

ஒரு அமெரிக்கனுக்கு, 

பிரஜா உரிமை (citizenship) - அமெரிக்கன்.

தேசியம் (nationality) - அமரிக்கன்

தேசிய இனம் - இல்லை

ஒரு இந்திய தமிழனுக்கு,

பிரஜா உரிமை (citizenship) - இந்தியன்

தேசியம் (nationality) - இந்தியன், தமிழன்

தேசிய இனம் - தமிழ்.

ஒரு இலங்கை தமிழனுக்கு,

பிரஜா உரிமை (citizenship) - இலங்கை.

தேசியம் (nationality) - இலங்கையர், தமிழ்

தேசிய இனம் - தமிழ்.

ஒரு இங்கிலாந்தில் பிறந்த தமிழனுக்கு,

பிரஜா உரிமை (citizenship) - பிரித்தானியன்.

தேசியம் (nationality) - பிரிட்டிஷ், இங்கிலிஷ், (உணர்ந்தால்)-தமிழ்

தேசிய இனம் - தமிழ் (காலப்போக்கில் இன உணர்வு அற்றால் - இவர்களும் தேசிய இனமற்றோர் ஆவார்கள் - கயானாவில் இருக்கும் “தமிழர்கள்” போல்.

14 hours ago, ராசவன்னியன் said:

வெவ்வேறு இனமா?😲

அப்போ இந்த 'தொப்புள் கொடி உறவு.., ஆப்பிள் கடி உறவு..' 😜 எல்லாம் பொய்யா. கோப்பால்? 😞

எல்லாவறுக்கும் அடிப்படை தற்சார்ப்பு பார்வைதான் (subjective view). 
 
தமிழக, ஈழ தமிழர் தாம் ஒரே இனத்தின் வாரிசுகள் என உணரும் வரை நாம் ஒரே தேசிய இனமே.

பிகு

அவரவர் அரசியலில் பக்கம்சார்ந்து தலையிட கூடாது என்பது சரி.

ஆனால் பொதுவாக ஒரு பகுதிக்கு, மறு பகுதியின் ஆதரவை கோருவதில், தெரிவிப்பதில் ஒரு தவறும் இல்லை. அது தேவையும் கூட.

Edited by goshan_che
  • Like 4
  • Thanks 1
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

நீங்கள் கூறுவத்தை நான் உணரவில்லை. ஏனென்றால் ஈழத்தமிழ்ரகளகிய நாம் மலையத்தில் வழும் இந்திய வம்சாவளி தமிழரையோ அவர்களின் பிரச்சனையையோ  எம்மவர்கள் என்ற ரீதியில் அணுகியதை நான் நடைமுறையில் காணவில்லை. நான் அறிய மலையக தமிழருடன் திருமண பந்தம் முதலான சம கெளரவ உறவுகளை அவர்களுடன் யாழ்பாண தமிழர் நாம் விரும்பி மேற்கொண்டதை காணவில்லை. எங்காவது ஒரு சில காதல் திருமணங்கள் நடந்திருக்கலாம். மற்றப்படி பேச்சுவழக்கு சற்று மாறுபட்டாலே யாழில் அந்நிய தன்மையுடன் பார்ததை இப்போது விவாதத்துக்காக யாராவது மறுக்கலாம். அனால் அது உண்மை எனபது அவரவர் மனச்சாட்சிக்கு தெரியும். இன்னும் கூறப்போனால் தோட்டக்காட்டான் என்ற அடைமொழியுடனேயே யாழ்பாணத்தில் இந்திய வம்சாவளித்தமிழர் பார்க்கப்பட்டார்கள். 

ஏன் இப்போது கூட இலங்கை தமிழர் பிரதேசங்களையும் தமிழ் நாட்டையும் அரசியல்ரீதியாக இணைத்து ஒரு நாடு என்று ஆக்கினாலும் இவ்விரு மக்களுக்குள் பாரிய முரண்பாடுகள் ஏற்படும் என்பதே உண்மை. நீங்கள் கூறயது போல் ஒரு இனக்கூறு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அரசியல் ரீதியில் வெவ்வேறு தேசிய இனங்களாகவே வாழ்கிறோம் என்பதே இயல்பு என்பதே எனது தரப்பு வாதம். 

ஆனால் எமது போராட்டம் கூர்மை அடைந்து ஈழத்தமிழர் அதிகளவில் பாதிக்கபட்ட 1983 ம் ஆண்டின் பின்னர் தமிழ் நாட்டு தமிழர் ஒட்டுமொத்தமாக கட்சி வேறுபாடுகளை மறந்து  தார்மீகமாக  குரல் கொடுத்த அந்த மனிதாபிமானத்தை  நான் மறக்கவில்லை. 

எனது கருத்து அரசியல் ரீதியாக என்பது மட்டுமே. கலை, கலாச்சார, வணிக, தொழில்நுடபரீதியில் இருவரும் தத்தமது வளங்களை பங்கிடுவது தொடர்பானது அல்ல. அதை வரவேற்கிறேன். 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, island said:

இது ஒரு உள்-இன முரண்.

இந்தியாவில் கூட ஒரு சாதியினர், இன்னொரு சாதியினரை இப்படி நடத்துவார்கள்.

இலங்கையில் கூட வடக்கு-கிழக்கு மக்களிடமும் இந்த அந்நியபடல் உண்டு. 

54 minutes ago, island said:

ஏன் இப்போது கூட இலங்கை தமிழர் பிரதேசங்களையும் தமிழ் நாட்டையும் அரசியல்ரீதியாக இணைத்து ஒரு நாடு என்று ஆக்கினாலும் இவ்விரு மக்களுக்குள் பாரிய முரண்பாடுகள் ஏற்படும் என்பதே உண்மை. நீங்கள் கூறயது போல் ஒரு இனக்கூறு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அரசியல் ரீதியில் வெவ்வேறு தேசிய இனங்களாகவே வாழ்கிறோம் என்பதே இயல்பு என்பதே எனது தரப்பு வாதம். 

ஒரு தேசிய இனம் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனவழி நாடுகளை கொண்டிருக்கலாம்.  அல்பேனியா, கொசோவோ.

55 minutes ago, island said:

ஆனால் எமது போராட்டம் கூர்மை அடைந்து ஈழத்தமிழர் அதிகளவில் பாதிக்கபட்ட 1983 ம் ஆண்டின் பின்னர் தமிழ் நாட்டு தமிழர் ஒட்டுமொத்தமாக கட்சி வேறுபாடுகளை மறந்து  தார்மீகமாக  குரல் கொடுத்த அந்த மனிதாபிமானத்தை  நான் மறக்கவில்லை. 

எனது கருத்து அரசியல் ரீதியாக என்பது மட்டுமே. கலை, கலாச்சார, வணிக, தொழில்நுடபரீதியில் இருவரும் தத்தமது வளங்களை பங்கிடுவது தொடர்பானது அல்ல. அதை வரவேற்கிறேன். 

வள பகிர்வுக்கு அப்பால் - தன் நிலையாக உணர்தல் முக்கியம். பல வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் ஒரே இனம் என்ற உணர்வு, உலகெங்கும் வாழும் “தமிழராக உணர்வோர்” அனைவரிடமும் உண்டு என்பதே என் அனுபவம்.

மேலே @ராசவன்னியன் கேள்வி கூட இதைத்தான் நிறுவுகிறது.

ஆகவே நாம் ஒரே தேசிய இனம்தான். உலகும் அப்படியே ஏற்கிறது.

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

Quote

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இதற்கு மறுமொழியாக “தமிழர்கள் தனிநாடு (தமிழீழம்) கோருவது தொடர்பாக ஆதரவாளர்களும், பரிவாளர்களும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், இந்திய ஆட்புலத்தில் ஒரு பகுதியின் பிரிவினையை நிகழ்த்துவதற்கான திட்டம் அல்ல”என தனது புதிய விண்ணப்பத்தில் எடுத்துரைத்துள்ளது.

தமிழ் நாட்டையும் பிரித்து விடுவார்கள் என்ற இந்திய அரசின் எண்ணத்துக்காக இதனை கூறுகிறாரா??

----------------------------------------------------------------------------------------------------------

நன்றிகள் கோசான். உருத்திரகுமார் ஏன் குட்டையை குழப்புகிறார்.
போர்ப்பயிற்சி என்று ஓடியதும், அகதி என்று ஓடுவதும் தமிழ் நாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

நன்றிகள் கோசான். உருத்திரகுமார் ஏன் குட்டையை குழப்புகிறார்.
போர்ப்பயிற்சி என்று ஓடியதும், அகதி என்று ஓடுவதும் தமிழ் நாடு.

🙏

“ஈழத்தமிழரின்” மரபுவழி தாயகம் இந்தியாவில் இல்லை.

அங்கே இருப்பது இந்திய தமிழர்களின் மரபுவழித்தாயகம்.

இந்திய தமிழரின் மரபு வழிதாயகம் ஈழத்தில் இல்லை.

இதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

நாளைக்கு பூமி தட்டை இல்லை என்று உருத்திரகுமார் நாசாவுக்கு அறிக்கை அனுப்புவார் போலுள்ளது.

பிகு

நாம் இருவரும் ஒரே தேசிய இனமாக இருந்தாலும் இரு வேறுபட்ட மரபுவழி தாயகம் உடையோர்.

ஆகவே நாளைக்கு இரு நாடுகள் ஆனாலும், தமிழ் நாடும், தமிழ் ஈழமும் இரு வேறு நாடுகளாகவே அமையும்.

மீண்டும் அல்பேனியா, கொசொவோ உதாரணமாகிறது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

மீண்டும் அல்பேனியா, கொசொவோ உதாரணமாகிறது.

சேர்பியாவுக்கு சொந்தமான பூமி கொசோவோ....எல்லாம் பாவ இரக்கம் பார்த்ததின் விளைவு. 
உதுமானியர்களுக்கு எதிராக போராடிய மண் அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

சேர்பியாவுக்கு சொந்தமான பூமி கொசோவோ....எல்லாம் பாவ இரக்கம் பார்த்ததின் விளைவு. 
உதுமானியர்களுக்கு எதிராக போராடிய மண் அது.

உண்மைதான். அது சேர்பிய மண்தான். ஆனால் சில நூறு ஆண்டுகளாக நடந்த அல்பேனிய குடியேற்றம் அதன் சனதொகையை 90% கிட்ட அல்பேனியர் ஆக்கி விட்டிருந்தது.

இந்த அல்பேனியர் வருகை 2ம் உலக யுத்ததின் பின் மட்டுமே என நீங்கள் எழுதி, நான் இல்லை சில நூற்றாண்டுகளாக நடந்தது என ஆதராம் காட்டி எழுதினேன். பிறிதொரு திரியில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

உண்மைதான். அது சேர்பிய மண்தான். ஆனால் சில நூறு ஆண்டுகளாக நடந்த அல்பேனிய குடியேற்றம் அதன் சனதொகையை 90% கிட்ட அல்பேனியர் ஆக்கி விட்டிருந்தது.

இந்த அல்பேனியர் வருகை 2ம் உலக யுத்ததின் பின் மட்டுமே என நீங்கள் எழுதி, நான் இல்லை சில நூற்றாண்டுகளாக நடந்தது என ஆதராம் காட்டி எழுதினேன். பிறிதொரு திரியில்.

மார்ஷல் டிட்டோ காலத்தில் தான் கொசோவோ சேர்பியாவின்  அல்பானிச மொழி பேசும் மாநிலம் என அங்கீகரிக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

மார்ஷல் டிட்டோ காலத்தில் தான் கொசோவோ சேர்பியாவின்  அல்பானிச மொழி பேசும் மாநிலம் என அங்கீகரிக்கப்பட்டது.

இதை நான் மறுக்கவில்லை. ஆனால் கொசொவோவுக்குள் அல்பேனிய வருகை அதை விட நெடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இதை நான் மறுக்கவில்லை. ஆனால் கொசொவோவுக்குள் அல்பேனிய வருகை அதை விட நெடியது.

இதே நுட்பத்தை ஆங்கிலேயர்கள் அன்றே கைக்கொண்டார்கள்.
அது இன்று சிறிலங்கா தமிழ்நாடு வரைக்கும் தொடர்கின்றது.

இதே வம்ச விருத்தியால் தான் சீனாவையும் இந்தியாவையும் கண்டு இந்த உலகம் பயப்பிடுகின்றது.ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் மக்கள் தொகை வலிமைமிக்க நாட்டுக்கு சமம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20230312-235616-Chrome.jpg Josip Broz Tito 

இவ‌ர் உயிருட‌ன் இருக்கும் வ‌ரை பிரிவின‌வாத‌ம் இல்லாம‌ ஒற்றுமையா இருந்தார்க‌ள் இவ‌ரின் ம‌றைவுக்கு பிற‌க்கு சேர்வியாவின் ஆதிக்க‌த்தால் ஒன்னு ஒன்னா த‌னி நாடாக‌ பிரிந்த‌து................

யூகேசுலொவியா நாடு வாஸ்கேட் வோல்  விளையாட்டில் அதிக‌ த‌ர‌ம் உல‌க‌ கோப்பைய‌ வென்ற‌ நாடு..............இப்ப‌ வாஸ்கேட் வோல் என்றால் அமெரிக்க‌ன‌ வெல்ல‌ ஏலாது...............இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் அமெரிக்க‌ன்ட‌ ஆதிக்க‌ம் தான்.................இந்த‌ ம‌னுஷ‌ன‌ இப்ப‌வும் ப‌ழைய‌ யூகேசுலாவியா ம‌க்க‌ள் ரொம்ப‌ நேசிக்கின‌ம்................பிள்ளைக‌ளின் ப‌டிப்புக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்த‌வ‌ர்...............பிள்ளைக‌ள் ப‌ல‌ விளையாட்டில் திற‌மைக‌ளை  வெளிப‌டுத்த‌ பாட‌சாலையோட‌ சேர்த்து விளையாட்டு மைதான‌ங்க‌ள் க‌ட்டி கொடுத்த‌வ‌ர்.....................இவ‌ரின் ம‌றைவுக்கு பிற‌க்கு ஒன்னா இருந்த‌வ‌ர்க‌ள் செய்த‌ யுத்த‌ம் க‌ண் கொடுத்து பார்க்க‌ முடியாத‌வை....................
இந்தியாவுக்கும் இதே நிலை வ‌ர‌க் கூடும்.............அது ஹிந்தி மொழியில் ஆர‌ம்பிச்சு பிரிவினைவாத‌த்தில் போய் முடியும்...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

பையன் நீங்கள் கூறியது சரியே. மார்ஷல் டிட்டோ பற்றி பலகான்  நாட்டு  பலவேறு இன மக்களும் விதந்துரைப்பது கேட்டிருக்கிறேன். அவரது காலம் பொற்காலமாக இருந்ததாம். இன ரீதியில் எந்த பாகுபாடும் இன்றி அனைவருக்கும் சம உரிமை கொடுத்தவர் என்று கூறுவார்கள். இவருடன் மிகுந்த நட்பாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா இவரிடமிருந்த அந்த நற்குணங்களை உள்வாங்கி பின்பற்றி இருந்திருந்தால் ஈழத்தில்  யுத்தமே ஏற்பட்டிருக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பையன்26 said:

Screenshot-20230312-235616-Chrome.jpg Josip Broz Tito 

இவ‌ர் உயிருட‌ன் இருக்கும் வ‌ரை பிரிவின‌வாத‌ம் இல்லாம‌ ஒற்றுமையா இருந்தார்க‌ள் இவ‌ரின் ம‌றைவுக்கு பிற‌க்கு சேர்வியாவின் ஆதிக்க‌த்தால் ஒன்னு ஒன்னா த‌னி நாடாக‌ பிரிந்த‌து................

யூகேசுலொவியா நாடு வாஸ்கேட் வோல்  விளையாட்டில் அதிக‌ த‌ர‌ம் உல‌க‌ கோப்பைய‌ வென்ற‌ நாடு..............இப்ப‌ வாஸ்கேட் வோல் என்றால் அமெரிக்க‌ன‌ வெல்ல‌ ஏலாது...............இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் அமெரிக்க‌ன்ட‌ ஆதிக்க‌ம் தான்.................இந்த‌ ம‌னுஷ‌ன‌ இப்ப‌வும் ப‌ழைய‌ யூகேசுலாவியா ம‌க்க‌ள் ரொம்ப‌ நேசிக்கின‌ம்................பிள்ளைக‌ளின் ப‌டிப்புக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்த‌வ‌ர்...............பிள்ளைக‌ள் ப‌ல‌ விளையாட்டில் திற‌மைக‌ளை  வெளிப‌டுத்த‌ பாட‌சாலையோட‌ சேர்த்து விளையாட்டு மைதான‌ங்க‌ள் க‌ட்டி கொடுத்த‌வ‌ர்.....................இவ‌ரின் ம‌றைவுக்கு பிற‌க்கு ஒன்னா இருந்த‌வ‌ர்க‌ள் செய்த‌ யுத்த‌ம் க‌ண் கொடுத்து பார்க்க‌ முடியாத‌வை....................
இந்தியாவுக்கும் இதே நிலை வ‌ர‌க் கூடும்.............அது ஹிந்தி மொழியில் ஆர‌ம்பிச்சு பிரிவினைவாத‌த்தில் போய் முடியும்...............

டிட்டோ குரேசியா சமூகத்தை சேர்ந்தவராயினும் அணிசேரா கொள்கை மூலம் நாட்டையும் பல இன மக்களையும் ஒன்றிணைத்து ஆட்சி செய்தவர். அமெரிக்காவிற்கு தண்ணி காட்டியவர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

டிட்டோ குரேசியா சமூகத்தை சேர்ந்தவராயினும் அணிசேரா கொள்கை மூலம் நாட்டையும் பல இன மக்களையும் ஒன்றிணைத்து ஆட்சி செய்தவர். அமெரிக்காவிற்கு தண்ணி காட்டியவர்.

அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல, சோவியத்துக்கும் தண்ணி காட்டியவர். டிட்டோ இல்லாவிட்டால் ஏனைய ஐரோப்பிய தேசிய இனங்களை போல், சேர்பிய, குரோசிய, பொஸ்னிய மண்ணையும் சோவியத் பூதம் விழுங்கி இருக்கும்.

ஆங்கிலத்தில் benevolent dictator என்பார்கள். தமிழில் இரக்க-சர்வாதிகாரி எனலாம்.   ஓரளவு அதற்கு நெருங்கி வரகூடியவர் டிட்டோ.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

டிட்டோ குரேசியா சமூகத்தை சேர்ந்தவராயினும் அணிசேரா கொள்கை மூலம் நாட்டையும் பல இன மக்களையும் ஒன்றிணைத்து ஆட்சி செய்தவர். அமெரிக்காவிற்கு தண்ணி காட்டியவர்.

இவ‌ட்ட‌ வ‌ர‌லாறு பெரிசு தாத்தா..............த‌ன‌து நாட்டின் பாதுகாப்புக்கு இவ‌ரின் உள‌வுத்துறை இவ‌ருக்கு உருதுணையா இருந்தார்க‌ள்....................இவ‌ரிட‌ம் ஊழ‌ல் புகார் இல்லை நேர்மையான‌ ம‌னித‌ர்................த‌ன‌து நாட்டு ம‌க்க‌ளுக்கு என்னென்ன‌ செய்து கொடுக்க‌னுமோ அனைத்தையும் செய்து கொடுத்த‌வ‌ர்....................வாழ்ந்த‌வ‌ர் கோடி ம‌றைந்த‌வ‌ர் கோடி ம‌க்க‌ள் ம‌ன‌ங்க‌ளில் நிலைத்து நிப்ப‌வ‌ர்க‌ளில் இவ‌ரும் ஒருவ‌ர்

இவ‌ரும் எங்க‌ட‌ த‌லைவ‌ர் போல் கொண்ட‌ கொள்கையில் உறுதியா நிப்ப‌வ‌ர்...................

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.