Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சீன, ரஷ்ய சுற்றுலா பயணிகளால் ஒரு பிரயோசனமும் இல்லை – ஹோட்டல் உரிமையாளர்கள் போர்க்கொடி

9-14.jpg

இலங்கைக்கு ரஷ்ய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்தாலும், அவர்கள் மிகக் குறைந்த பணத்தையே செலவிடுவதாக சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க அரசாங்கம் தலையிட வேண்டும் என சங்கத்தின் செயலாளர் சுமித் உபேசிறி தெரிவித்துள்ளார்.

ஹோட்டல்கள் தற்போது ரஷ்ய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ளன, ஆனால் அவர்கள் மிகக் குறைந்த பணத்தை செலவிடுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வரமாட்டார்கள் என்றும் ரஷ்ய சுற்றுலா பயணிகள் கடற்கரையில் இருந்தால் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு கூட வரமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

அதன் காரணமாக மேற்கத்திய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
 
https://akkinikkunchu.com/?p=241013

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

ஏன்??.     ஐரோப்பியர்களுக்கு. விளங்கியுள்ளது ரஷ்யார்கள்.  பற்றி    அதை சிங்களம் கண்டுபுடுச்சுட்டீங்களே.....

  • Like 1
  • Haha 1

என்ன கோதரியப்பா...

பட்ஜெட் ஹாலிடே.... வாருங்கோ எண்டு ஆட்களை கூப்பிட்டு, செலவழிக்கிறாங்கள் இல்லை எண்டு புலம்பினா... என்னத்தை சொல்லுறது?

யாழ்ப்பாணத்திலை, சொந்தக்காரர் வீடுகளில் டாய்லெட் வசதி என்று, ஹோட்டல் தேடுகினம் எண்டு, கண ஹோட்டல்கள் கட்டுப்படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் ஆரம்பத்திலேயே இங்கே  குறிப்பிட்டேன்

இவர்கள் சாப்பிட்ட  கையால் காகம் கலைக்கக்கூட மாட்டார்கள் என்று?😂

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, Kandiah57 said:

ஐரோப்பியர்களுக்கு. விளங்கியுள்ளது ரஷ்யார்கள்.  பற்றி    அதை சிங்களம் கண்டுபுடுச்சுட்டீங்களே.....

9 hours ago, விசுகு said:

நான் ஆரம்பத்திலேயே இங்கே  குறிப்பிட்டேன்

இவர்கள் சாப்பிட்ட  கையால் காகம் கலைக்கக்கூட மாட்டார்கள் என்று?😂

இருவரும் ரஷ்யா சீனா பற்றிய உண்மைகளை பகுதி பகுதியாக பிரித்து சிறப்பாக விளங்கபடுத்தியுள்ளீர்கள்.

1.jpg

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, Kandiah57 said:

ஏன்??.     ஐரோப்பியர்களுக்கு. விளங்கியுள்ளது ரஷ்யார்கள்.  பற்றி    அதை சிங்களம் கண்டுபுடுச்சுட்டீங்களே.....

நம்ம புலம்பெயர் தமிழர்கள் சக புலம்பெயர்நாடுகளில் வசிக்கும் நாடுகளுக்கு போவார்கள். அங்கே தமது உறவினர்கள் அல்லது ஊர்க்காரர்கள் இல்லையேல் சிநேகிதர்களின் வீடுகளில் தங்கி உல்லாசமாக பொழுதை கழித்து திரும்பி தாம் வாழும் நாட்டிற்கு வருவர்.

வந்ததும் நாங்கள் 
கனடா போனோம்
அமெரிக்கா போனோம்
இங்கிலாந்து போனோம்
சுவீஸ் போனோம்
இத்தாலி போனோம்
பிரான்ஸ் போனோம்
ஜேர்மனி போனோம்
அவுஸ்ரேலியா போனோம்
டென்மார்க் போனோம்

என அடுக்கிக்கொண்டே போவர்.
எண்ணிக்கை மரணச்சடங்கிற்கு போனாலும் கணக்கில் வரும்
சாமத்திய/கலியாண வீட்டிற்கு போனாலும் கணக்கில் வரும்.

இங்கே யார் புத்திசாலிகள்?
சீனர்களா? ரஷ்யர்களா? அல்லது புலம்பெயர் தமிழர்களா?

அது சரி உக்ரேனியர்கள் பணத்தை அள்ளியள்ளி வீசுகின்றார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, குமாரசாமி said:

நான் இங்கு செலவுகள் பற்றி சொல்லவில்லை.....சிங்களம் தான் சொல்லி உள்ளார்கள்    அவரகளிடம் தான் கேட்க வேண்டும்... ரஷ்யார்குக்கு பக்கத்தில்    ஐரோப்பியர்கள் ஏன்  இருகிறார்களில்லை என்பது தான் எனது கேள்வி   ......இதனை கண்டு பிடித்து இருக்கிறார்கள் சிங்களவர்கள். ......

உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் நிற்பதை விட.   Hotel நிற்பது செலவுகள் குறைவு     ...என்னுடைய தனிப்பட்ட செலவுகள் மட்டும்........ஆனால் உறவினர் வீட்டில்...அப்படியல்ல.  சாப்பிட போனால்   எனக்கு மட்டுமே காசு கொடுக்க முடியாது  ...எல்லோருக்கும் சேர்ந்து தான் கொடுக்க வேண்டும்        மேலும் யாழ்ப்பாணத்தில். ஓய்வு பெற்ற. இராணுவம் நடத்தும் விடுதிகளில்.   வெளிநாட்டு தமிழர்கள் நிரம்பி வழிகிறார்கள்     இடமில்லை    

என்னை பொறுத்தவரை புலம்பெயர் தமிழர்கள் புத்திசாலிகள்.   ஏனென்றால் சொந்த நாடு இல்லாமல் பெரிய வளர்ச்சி கண்டுள்ளர்கள்.  சீனா  ரஷ்யார்களுக்கு சொந்த நாடுகள் உண்டு”   ஆனால் கருத்து சுதந்திரமில்லை 🤣

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, Kandiah57 said:

நீங்களும் ஜேர்மனியில் தான் இருக்கின்றீர்கள். நானும் ஜேர்மனியில் தான் இருக்கின்றேன்.
இங்கே சுற்றுலா வரும் சீனர்களும் சரி சீன மாணவர்களும் சரி அவர்கள் உணவு விடுதிகளுக்கு சென்றால் மலிந்த உணவுகள் சாப்பிடுவதில்லை.சாதாரண ஜேர்மனியர்கள் கூட அப்படி சாப்பிட கட்டுபடியாகாது.அவ்வளவிற்கு விலையுயர்ந்த சாப்பாடுகள்.
அது போல் ரஷ்யர்கள் இரு மடங்காக செலவு செய்பவர்கள்.

34 minutes ago, Kandiah57 said:

சீனா  ரஷ்யார்களுக்கு சொந்த நாடுகள் உண்டு”   ஆனால் கருத்து சுதந்திரமில்லை 🤣

மேற்குலக கருத்து சுதந்திரம் என்பது நாய் போல் குரைத்து விட்டு இருக்க வேண்டியதுதான்.ஆளும் கட்சியில் இருப்பவர்கள் தாம் நினைத்ததை சாதித்த வண்ணமே இருப்பர்.:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, குமாரசாமி said:

நீங்களும் ஜேர்மனியில் தான் இருக்கின்றீர்கள். நானும் ஜேர்மனியில் தான் இருக்கின்றேன்.
இங்கே சுற்றுலா வரும் சீனர்களும் சரி சீன மாணவர்களும் சரி அவர்கள் உணவு விடுதிகளுக்கு சென்றால் மலிந்த உணவுகள் சாப்பிடுவதில்லை.சாதாரண ஜேர்மனியர்கள் கூட அப்படி சாப்பிட கட்டுபடியாகாது.அவ்வளவிற்கு விலையுயர்ந்த சாப்பாடுகள்.
அது போல் ரஷ்யர்கள் இரு மடங்காக செலவு செய்பவர்கள்.

மேற்குலக கருத்து சுதந்திரம் என்பது நாய் போல் குரைத்து விட்டு இருக்க வேண்டியதுதான்.ஆளும் கட்சியில் இருப்பவர்கள் தாம் நினைத்ததை சாதித்த வண்ணமே இருப்பர்.:rolling_on_the_floor_laughing:

ரஷ்யார்கள்.  இருமடங்கு செலவு செய்வதை எற்றுக்கொள்கிறேன். .....ஆனால் உங்கள் நாட்டின் சிங்களவர்கள்.   எற்கிறார்களில்லையே....

புலம்பெயர் தமிழர்கள்   புத்திசாலிகளா.🤣😂செலவளிக்கமாட்டார்களா     😛

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, குமாரசாமி said:

அது சரி உக்ரேனியர்கள் பணத்தை அள்ளியள்ளி வீசுகின்றார்களா?

உக்ரேனியர்கள் சுற்றுலா போனால்…
ஹோட்டேலில் உள்ள முள்ளு கரண்டி, கோப்பை, துவாய்… எல்லாத்தையும் களவு எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள்.  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, தமிழ் சிறி said:

உக்ரேனியர்கள் சுற்றுலா போனால்…
ஹோட்டேலில் உள்ள முள்ளு கரண்டி, கோப்பை, துவாய்… எல்லாத்தையும் களவு எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள்.  😁

எங்கே...இலங்கையில்லா?......🤣 ..நீங்கள் குறிப்பிட்ட பொருள்கள் அங்கு பாவனையிலில்லை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:
1 hour ago, தமிழ் சிறி said:

உக்ரேனியர்கள் சுற்றுலா போனால்…
ஹோட்டேலில் உள்ள முள்ளு கரண்டி, கோப்பை, துவாய்… எல்லாத்தையும் களவு எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள்.  😁

எங்கே...இலங்கையில்லா?......🤣 ..நீங்கள் குறிப்பிட்ட பொருள்கள் அங்கு பாவனையிலில்லை

என்ன கந்தையா உக்ரேனியர்களைக் கண்டவுடன் எடுத்து ஒழிக்கிறார்களோ?

உங்களுக்கும் இந்த அனுபவம் நடந்துள்ளது போல தெரிகிறது.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, குமாரசாமி said:

நம்ம புலம்பெயர் தமிழர்கள் சக புலம்பெயர்நாடுகளில் வசிக்கும் நாடுகளுக்கு போவார்கள். அங்கே தமது உறவினர்கள் அல்லது ஊர்க்காரர்கள் இல்லையேல் சிநேகிதர்களின் வீடுகளில் தங்கி உல்லாசமாக பொழுதை கழித்து திரும்பி தாம் வாழும் நாட்டிற்கு வருவர்.

வந்ததும் நாங்கள் 
கனடா போனோம்
அமெரிக்கா போனோம்
இங்கிலாந்து போனோம்
சுவீஸ் போனோம்
இத்தாலி போனோம்
பிரான்ஸ் போனோம்
ஜேர்மனி போனோம்
அவுஸ்ரேலியா போனோம்
டென்மார்க் போனோம்

என அடுக்கிக்கொண்டே போவர்.
எண்ணிக்கை மரணச்சடங்கிற்கு போனாலும் கணக்கில் வரும்
சாமத்திய/கலியாண வீட்டிற்கு போனாலும் கணக்கில் வரும்.

இங்கே யார் புத்திசாலிகள்?
சீனர்களா? ரஷ்யர்களா? அல்லது புலம்பெயர் தமிழர்களா?

அது சரி உக்ரேனியர்கள் பணத்தை அள்ளியள்ளி வீசுகின்றார்களா?

கனடா போனோம்

அமெரிக்கா போனோம்

இங்கிலாந்து போனோம்

சுவீஸ் போனோம்

இத்தாலி போனோம்

பிரான்ஸ் போனோம்

ஜேர்மனி போனோம்

அவுஸ்ரேலியா போனோம்

டென்மார்க் போனோம் 

இந்த நாட்டின் வியாபாரிகள் யாரேனும் அறிக்கை விட்டார்களா அண்ணா தமிழர்களால் எமக்கு எந்த லாபமும் இல்லை என்று. 😀 

ஆனால் தமிழர்களால் விமான நிறுவனங்கள் உழைக்கின்றன என்பதை மறந்து விடக்கூடாது 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kandiah57 said:

எங்கே...இலங்கையில்லா?......🤣 ..நீங்கள் குறிப்பிட்ட பொருள்கள் அங்கு பாவனையிலில்லை 🤣

கரண்டி,  முள்ளு கரண்டி எல்லாம் பாவனையில் இருந்ததை  நான் கண்டுள்ளேன்.
இப்போ... நீங்கள் காணததற்கு, @ஈழப்பிரியன்   சொன்ன காரணமாக இருக்கலாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கெக்கே பிக்கே….

தட் கரடியே காறி துப்பின மொமெண்ட்….

On 16/3/2023 at 06:29, கிருபன் said:

சீன, ரஷ்ய சுற்றுலா பயணிகளால் ஒரு பிரயோசனமும் இல்லை

பிகு

பெரியவருக்கும், சின்னவருக்கும் “நிர்மூலம்” ஆக்காமல் அக்கினிகுஞ்சு அடங்காது போல இருக்கு🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

ஹோட்டேலில் உள்ள முள்ளு கரண்டி, கோப்பை, துவாய்… எல்லாத்தையும் களவு எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள்.  😁

இஞ்சை ஜேர்மனியிலை உக்ரேன்காரலாலை நாடே நாறுது. அந்த கரைச்சலாலை ஆவது ரஷ்யாவிட்ட மன்றாடியாவது யுத்தத்தை முடிப்பார்கள்.:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

இஞ்சை ஜேர்மனியிலை உக்ரேன்காரலாலை நாடே நாறுது. அந்த கரைச்சலாலை ஆவது ரஷ்யாவிட்ட மன்றாடியாவது யுத்தத்தை முடிப்பார்கள்.:rolling_on_the_floor_laughing:

அண்ணை...  போர் நின்றாலும், வந்த உக்ரைன் சனம் போகும் எண்டு நினைக்கிறியளோ..  🤣

லண்டனிலை இருந்து, களத்துக்கு வாற ஒருத்தர், மோட்டு சிங்களவன் சொன்னதை...
வேத வாக்காக எடுத்துக் கொண்டு, புளுகத்திலை திரியிறார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை ஜேர்மனியிலை உக்ரேன்காரலாலை நாடே நாறுது. அந்த கரைச்சலாலை ஆவது ரஷ்யாவிட்ட மன்றாடியாவது யுத்தத்தை முடிப்பார்கள்.:rolling_on_the_floor_laughing:

நம்ம ஆள்கள்.  தொலைபேசி கூடுகளை.  நவீன மயப்படுத்தியதை.  மறந்து விட்டீர்களா?? அண்ணை. [ ஐந்து மார்க்.  குற்றி ]

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kandiah57 said:

நம்ம ஆள்கள்.  தொலைபேசி கூடுகளை.  நவீன மயப்படுத்தியதை.  மறந்து விட்டீர்களா?? அண்ணை. [ ஐந்து மார்க்.  குற்றி ]

ஐயோ….அசல் ஜேர்மன் சிட்டிசன் மாரி விசனப்பட்டு கொண்டிருக்கேக்கெ…ஏன் பழசை எல்லாம் நியாபகபடுத்துறியள்🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kandiah57 said:

ஆனால் உங்கள் நாட்டின் சிங்களவர்கள்.   எற்கிறார்களில்லையே....

சிங்களவன் சம்திங் எதிர்பார்க்கிறான். அது இப்ப ஜேர்மனியிலையும் குறைவு.:grimacing_face:

அதே மாதிரி அப்பவும் சரி இப்பவும் பிரிட்டிஸ் வெள்ளை ரூரிற்ஸ்கள் ஐஞ்சு சதம் உய்ய மாட்டானுவள். போத்தில் தண்ணி கூட வாங்கமாட்டானுகள். ஒன்லி பைப் தண்ணிதான்:angry_face:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, தமிழ் சிறி said:

அண்ணை...  போர் நின்றாலும், வந்த உக்ரைன் சனம் போகும் எண்டு நினைக்கிறியளோ.. 

அண்ணை….இலங்கையில் போர் நிண்டு 15 வருசமாக போகுது…ஜேர்மனியில் என்ன செய்யுறியள்🤣

Posted

யேர்மனியில் எப்படி என்று தெரியாது. ஆனால் போர் ஆரம்பித்தபோது பிரான்சுக்குள் அகதிகளாக நுளைந்த இலட்சக்கணக்கான உக்ரெயின் மக்களில் பெரும்பான்மையாவர்கள் ரஸ்ய படைகள் Kiev இனை விட்டு வெளியேறி சில நாட்களில் நாடு திரும்பி விட்டனர். பிரான்ஸ் உக்ரெயினை விட மோசமானதாகக் கருதியிருக்கலாம்.😂

  • Thanks 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kandiah57 said:

நம்ம ஆள்கள்.  தொலைபேசி கூடுகளை.  நவீன மயப்படுத்தியதை.  மறந்து விட்டீர்களா?? அண்ணை. [ ஐந்து மார்க்.  குற்றி ]

அது மட்டுமே?????
சிகரெட் ஓட்டோமற்றிக்கில செய்த அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம்....:rolling_on_the_floor_laughing:

3 minutes ago, goshan_che said:

அண்ணை….இலங்கையில் போர் நிண்டு 15 வருசமாக போகுது…ஜேர்மனியில் என்ன செய்யுறியள்🤣

போர் முடிஞ்சுது. அரசியல் பிரச்சனை முடிஞ்சுதா? போர் முடிந்தால் சிங்கள இராணுவத்திற்கு போர் பகுதிகளில் என்ன வேலை? இராணுவத்தின் திடீர் தேடுதல் வேட்டைகள் இப்போது இல்லையா?

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:

போர் முடிஞ்சுது. அரசியல் பிரச்சனை முடிஞ்சுதா? போர் முடிந்தால் சிங்கள இராணுவத்திற்கு போர் பகுதிகளில் என்ன வேலை? இராணுவத்தின் திடீர் தேடுதல் வேட்டைகள் இப்போது இல்லையா?

இப்படி பிரச்சனை அவரவரர் நாட்டில் உக்ரேனியர் உட்பட, வேறு இன அகதிகளுக்கும் இருக்கலாம் அல்லவா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, தமிழ் சிறி said:

அண்ணை...  போர் நின்றாலும், வந்த உக்ரைன் சனம் போகும் எண்டு நினைக்கிறியளோ..  🤣

லண்டனிலை இருந்து, களத்துக்கு வாற ஒருத்தர், மோட்டு சிங்களவன் சொன்னதை...
வேத வாக்காக எடுத்துக் கொண்டு, புளுகத்திலை திரியிறார். 😂

ஜேர்மனிக்கு உக்ரேன் விருந்தினர்களை சாட்டி  உக்ரேன் நாட்டையே அமுக்கிற பிளானாய் இருக்கலாம்.
அது சரி ஏன் இருக்கக்கூடாது?

பரந்த விரிஞ்ச அகண்ட ஜேர்மனி!!!! :zany_face:

இது லண்டனுக்கு வயித்தை கலக்கும்.:hurra:

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.