Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம் பெற்றது ? - கடற்படையினர் கச்சதீவையும் விட்டுவைக்கவில்லை என்கிறார் சார்ள்ஸ் நிர்மலநாதன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம் பெற்றது ? - கடற்படையினர் கச்சதீவையும் விட்டுவைக்கவில்லை என்கிறார் சார்ள்ஸ் நிர்மலநாதன் 

Published By: VISHNU

23 MAR, 2023 | 03:52 PM
image

(எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் படையினர் கச்சத்தீவையும் வீட்டுவைக்காது அங்கே பெரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்துள்ளார்கள்.

அந்த சிலையை அங்கிருந்து அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

பொருளாதார மீட்சியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. இந்தியாவின் ஒத்துழைப்பை ஒருபோதும் மறுக்கவோ,மறக்கவோ முடியாது.

கடந்த 3,4ஆம்  திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற்றபோது. தமிழ்நாட்டில் இருந்து 2281 பேரும் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும் கச்சதீவு திருவிழாவில் கலந்துக் கொண்டிருந்தனர்.

கச்சத்தீவு கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் போது அந்த ஆலயத்துடனேயே வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்த பக்தர்களை நடத்திய விதம் மிகவும் கேவலமானதாக பார்க்கப்படுகின்றது.

இந்திய அரசாங்கத்தினால் கச்சதீவு திருவிழாவுக்கு வருபவர்களுக்காக 40 மில்லியன் ரூபாவை செலுத்தியிருந்தனர். ஆனால் அவர்களுக்கு முறையாக குடிநீர், உணவு வழங்கப்படவில்லை. இந்த ஏற்பாட்டை கடற்படையே செய்திருந்தது.

தமிழ்நாட்டில் இருந்து கச்சத்தீவு வந்த அனைவரையும் தனியொரு கடற்படை உத்தியோகத்தரே பதிவை மேற்கொண்டுள்ளார்.

4 மணித்தியாலங்கள் கடற்கரையில் இருந்தே ஆலயத்திற்கு அவர்களுக்கு செல்ல முடியுமாக இருந்தது. இந்தியாவில் இருந்து வந்தவர்களுக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதென்றால் இது கண்டிக்கத்தக்கது.

கச்சத்தீவில் அந்தோனியார் ஆலயம் மாத்திரமே இவ்வளவு காலமாக இருந்தது. ஆனால் இப்போது அங்கே பெரிய புத்தர் சிலை எப்படி வந்தது என்பது கேள்வியாகவுள்ளது.

இலங்கையில் இருப்பவர்களுக்கும் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் அது அந்தோனியார் ஆலயத்திற்கு உரிய இடமென்று தெரியும். வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த அடையாளங்களை நிறுவிவருகின்றன .

படையினரால் கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. கச்சத்தீவையும் விட்டுவைக்காத நிலைமையே இருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்டுகின்றேன். இதனை உடனடியாக அகற்ற வேண்டும்.

கடற்படையினர் வழிபடுவதற்காக அது வைக்கப்பட்டது என்று பதில் வரலாம் கச்சத்தீவு திருவிழாவின் போது கடற்படையினரின் விருந்தினர்களுக்கே முன்னிலை வழங்கப்பட்டது.

ஆனால் தமிழ் நாட்டில் இருந்தும் வடக்கு,கிழக்கில் இருந்து சென்றவர்களுக்கும் எந்தவிதமான ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்றார். 

https://www.virakesari.lk/article/151258

  • கருத்துக்கள உறவுகள்

 

புத்தனுக்கு பிள்ளையாரைக் கண்டால் பயம். பிள்ளையாருக்கு யேசுவைக் கண்டால் பயம். யேசுவுக்கோ புத்தனைக் கண்டால் பயம்.....😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

படையினரால் கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அடிச்சான் பாரு ஆப்பு…

இங்கிட்டு நம்ம ஆளுங்க சிவனை வச்சா புத்தர் வரமாட்டார்….

மோடி இருக்கும் வரை புத்தர் வரமாட்டார் என கனவு காண….

அவன் மோடியின் பின்பக்கத்திலேயே புத்தரை நட்டு வச்சிருக்கான்🤣

# மிஸ் பண்ணிட்டியே சச்சி

  • கருத்துக்கள உறவுகள்

இனி அந்தோனியார் மண்டபம் அகதிமுகாமில் அகதி அந்தஸ்த்து கேட்க்க வேண்டியதுதான் .😀

  • கருத்துக்கள உறவுகள்

யூ ரியூப்காரரின் படம் காட்டுதலின்படி ஒரு பிக்குதான் முதல் முறையாக போனதாக கத்தினார்கள்...இப்ப பார்த்தால் ..அந்தக் காவிச்சீலைக்குள் ஒளிச்சுப்போயிருக்கிறார்  போலை...மோடி சாரு கோவணத்தையே உருவிட்டாங்களோ.... காசு கையிலை வந்திட்டுது...இனி டில்லிக்கு தெரியத்தக்க கோபுரமும் கட்டப்படும்...

  • கருத்துக்கள உறவுகள்

மோடியின் பூரண ஆசீர்வாதத்துடனேயே நடந்திருக்கும். புத்தர் சனாதன இந்துத்துவாவுக்கு வரலாற்றில்  எதிரி என்றாலும் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் புத்தமதமும் மோடியின் இந்துத்துவாவுக்கும் அதிக வேறுபாடு இல்லை.  இரண்டுமே அடக்குமுறையின்,  ஆதிக்கத்தின் அடையாள சின்னங்கள் தான்.

 இலங்கைப் புத்த மதம் இந்திய ஆர் எஸ் எஸ்  இந்துத்துவ மதம் இரண்டினதும் அழிவில் தான் இந்த பிரதேசத்தில் மனித நேயம் பிழைக்கும். மக்களுக்கு விடுதலையும் கிடைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

நயினாதீவு எப்படி சைவர்களிடம் இருந்து பறிபோச்சோ.. அப்படி எனி இது அந்தோனியார்களிடம் இருந்து பறிபோயிடும்.

நாம சிங்களத்துக்கு முதலீடு செய்து உழைச்சுக் கொடுப்பம். அவன் போட்டு எங்களை மிதிக்கட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையிலேயே தமிழ் மக்களுக்கு மன அழுத்தத்தை கொடுப்பதோடு அவர்களை ஒரு கொதிநிலையில் வைப்பதும், அதை அடக்குவதில் தீவிரம் காட்டுவதுமே நோக்கம். நாடு பொருளாதார நிலையில் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் நிலையில் இதுக்கு எங்கிருந்து பணம் வந்தது? நாட்டின் இன்றைய நிலைக்கு இது முக்கிய காரணம். இலங்கைக்கு கேள்வி கேட்காமல், நிபந்தனை விதிக்காமல், அதன் நோக்கங்கள், செயற்பாடுகள் ஆராயாமல் கடன் கொடுக்கும் ஸ்தாபனங்கள் மீண்டும் ஒரு இன ஒடுக்குமுறைக்கு கைகொடுக்கின்றன. வெள்ளரசுக்கிளை வந்து இறங்கியது வடக்கின் ஒரு மூலையில், அங்கே குடியிருந்தது தமிழர், அவர்களிடம் இருந்தே அது மற்றைய பிரதேசங்களுக்கு பரப்பப்பட்டிருக்கும் அல்லது தெற்கு தழுவியிருக்கும். அவ்வாறு இருக்கும்போது கச்சத்தீவுக்கு புத்தர் எப்போ குடிபெயர்ந்தார்? அங்கே யார் இருந்தார் அவரை ஆதரிக்க?                         

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும் கச்சதீவிலுள்ள புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் – கச்சதீவு தல பரிபாலகர் கோரிக்கை

Published By: T. SARANYA

25 MAR, 2023 | 10:57 AM
image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும் கச்சதீவு பகுதியிலுள்ள புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என கச்சதீவு யாத்திரை தல பரிபாலகர் அருட்பணி வசந்தன் அடிகளார் கோரிக்கை விடுத்தார்.

கச்சதீவில் பெளத்த சின்னங்களில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில் இன்றையதினம் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், கச்சதீவு என்றாலே தமிழக மக்களுக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் ஏன் அண்மைய காலமாக சிங்கள மக்களுக்கும் ஞாபகத்துக்கு வருவது புனித அந்தோனியார் ஆலயமே.

கச்சதீவு அந்தோனியாருக்காக அர்ப்பணிக்கப்பட்ட தீவாக தொன்றுதொட்டு காணப்படுகின்றது.

ஆனால் திட்டமிட்ட வகையில் அண்மைய நாட்களில் இரண்டு புத்த பெருமானின் சிலைகள் வைக்கப்பட்டதுடன் அரச மரக்கன்றுகளும் நாட்டப்பட்டுள்ளது.

336633417_229313452981248_59095193577619

யாருக்கும் தெரியாத வகையில் உயரமாக பனை ஓலைகளால் வேலியமைத்து அது மூடப்பட்டு காணப்படுகின்றமையை சில நாட்களுக்கு முன்னர் பார்த்த புகைப்படங்கள் மூலம் அறியக்கிடைத்தது. எதிர்காலத்தில் வரலாற்றை திரிபுபடுத்துவதற்கான முயற்சியே இது.

336643547_131161949915913_10070629734417

கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருக்கின்றது. அங்கு 7 தொடக்கம் 10 வரையான கடற்படையினர் கடமையாற்றுகின்றனர். அவர்கள் வழிபட சிறியதான புத்தர் சிலையை வைத்து வழிபடலாம். ஆனால் இவ்வளவு பெரிய புத்தர் சிலைகள் எதற்கு? அதை ஏன் மறைத்து வைத்திருக்க வேண்டும். கச்சதீவில் எந்தப்பகுதியிலும் அரச மரங்கள் இல்லை. ஆனால் திட்டமிட்ட வகையில் அரசமரங்கள் நாட்டப்பட்டுள்ளது. வடகிழக்கு தமிழர் பகுதியில் பௌத்த திணிப்பு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது.

337148880_549853073795761_53752812746555

போருக்கு பின்னர் இன ஒற்றுமை பற்றி பேசப்படும்போது இவ்வாறான விடயங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும் கச்சதீவு பகுதியிலுள்ள இவ்வாறான விடயங்கள் அகற்றப்பட வேண்டும். கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் புனிதத்திற்கும் தனித்துவத்திற்கும் பாதிக்காத வகையில் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் – என்றார்.

https://www.virakesari.lk/article/151362

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவில் புத்தர் சிலை – இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்படுவதாக விசனம்!

கச்சதீவில் புத்தர் சிலை – இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்படுவதாக விசனம்!

கச்சதீவில் கடற்படையினரால் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

கச்சதீவு இலங்கை – இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், தங்போது அங்கு இரகசியமாக புத்தர் சிலை வைத்து பௌத்தமயமாக்கல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை இந்திய  – இலங்கை உறவில் விரிசலை ஏற்படுத்த கூடும் என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் இலங்கை படையினர் கச்சத்தீவையும் விட்டுவைக்காது அங்கேயும் பாரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்துள்ளனர்கள்.

இவ்வாறான நிலையில், இது வரை காலமும் இந்திய – இலங்கை பக்தர்கள் மட்டுமே திருவிழாவில் கலந்து கொண்டிருந்த நிலையில், இந்த வருடம் புதிதாக பௌத்த பிக்குகள் குழு ஒன்றும் கச்சதீவிற்கு சென்றிருந்தைமையும் தற்போது, பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும் கச்சதீவில் 5 முதல் 10 கடற்படையினரே கடமையில் இருக்கின்ற நிலையில், இவ்வாறு பிரமாண்டமாக புத்தர் சிலை கட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சதீவில் அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அதனைத் தவிர நிரந்தரமான கட்டடங்கள் எவையும் அமைக்க கூடாது எனவும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், அங்கு கடற்படையினருக்கான இருப்பிடம் கூட நிலையானதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒப்பந்த யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம். ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் மீறி தற்போது நிரந்தரமான பௌத்தமயமாக்கலுக்கான ஒரு திட்டமாக பாரியளவில் புத்தர் சிலை ஒன்று இரகசியமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, அந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியை சூழ மிக உயரமான கம்பிகள் பாவித்தும் பனை ஓலை வேலி அமைத்து மிக மிக இரகசியமாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அண்மையில் நடைபெற்ற திருவிழாவின் போதும் அங்கு சென்ற கிறிஸ்தவ மதகுருமாரையோ, பக்தர்களையோ மற்றும் ஊடகவியலாளர்களையோ குறித்த இடத்திற்கு அருகில் கூட செல்ல கடற்படையினர் அனுமதி வழங்கவில்லை.

இதேவேளை, கச்சதீவு பகுதியில், கடற்கரையை சூழவும் காட்டு மரங்களே வளர்ந்திருந்தன. ஆனால் தற்போது, கடற்படையினர் அரச மரங்களை கொண்டுவந்து குறித்த பகுதியில் வைத்துள்ளனர் எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

கச்சத்தீவு இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கச்சத்தீவை இந்தியா, இலங்கைக்கு வழங்கும் போது அந்தோனியார் ஆலயத்துடனேயே வழங்கியது.

இவ்வாறான நிலையில், இலங்கை பொருளாதார ரீதியாக அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருந்த போது, பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாடுகள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ள போதும்,  இந்தியா வழங்கிய ஒத்துழைப்பை ஒருபோதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

ஆகவே இவ்வாறான சிறுமைத்தனமான செயற்பாடுகள் இலங்கை – இந்திய நல்லுறவில் பாரிய விரிசலாக உருவெடுக்கும் சந்தர்ப்பங்களும் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவில் அந்தோனியார் ஆலயம் மாத்திரமே இவ்வளவு காலமாக இருந்தது.

ஆனால் இப்போது அங்கே பெரிய புத்தர் சிலை எப்படி வந்தது என்பது விடைகாண முடியாத கேள்வியாகவுள்ளது.

இலங்கையில் இருப்பவர்களுக்கும் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு உரிய இடமென்று தெரியும்.

இருப்பினும் வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த அடையாளங்களை நிறுவிவருவதைப் அபோன்று கச்சதீவிலும் தற்போது பௌத்த சின்னத்தை நிறுவியுள்ளனர்.

கச்சத்தீவையும் விட்டுவைக்காத நிலைமையே தற்போது இருக்கின்றது. ஆனால் கடற்படையினர் வழிபடுவதற்காக அது வைக்கப்பட்டது என்று இனி வரும் காலங்களில் பதில் வரலாம்.

குறித்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறு இருப்பினும் அங்கு அமைக்கப்பட்ட பிரமாண்டமான புத்தர் சிலை எவ்வாறு கட்டப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து அதனை நிறுவியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும் மத தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

IMG-20230324-WA0044.jpg

IMG-20230324-WA0053.jpg

IMG-20230324-WA0045.jpg

IMG-20230324-WA0042.jpg

IMG-20230324-WA0038.jpg

IMG-20230324-WA0047.jpg

IMG-20230324-WA0054.jpg

IMG-20230324-WA0057.jpg

IMG-20230324-WA0048.jpg

IMG-20230324-WA0051.jpg

IMG-20230324-WA0055.jpg

IMG-20230324-WA0040.jpg

IMG-20230324-WA0049.jpg

IMG-20230324-WA0059.jpg

IMG-20230324-WA0039.jpg

IMG-20230324-WA0058.jpg

IMG-20230324-WA0062.jpg

IMG-20230324-WA0043.jpg

IMG-20230324-WA0050.jpg

IMG-20230324-WA0041.jpg

IMG-20230324-WA0035.jpg

IMG-20230324-WA0046.jpg

IMG-20230324-WA0061.jpg

IMG-20230324-WA0060.jpg

https://athavannews.com/2023/1328494

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“தகரம் எடுக்க சென்றபோது சிலையை பார்த்தேன்” – கச்சத்தீவு புத்தர் சிலை சர்ச்சை முழு விவரம்

கச்சத்தீவு

பட மூலாதாரம்,FATHER VASANTHAN

 
படக்குறிப்பு,

கச்சத்தீவில் இரும்புத் தகடுகளை தேடிச் சென்றபோது பார்த்து, படம் பிடித்ததாக பங்குத் தந்தை வசந்தன் கூறும் புத்தர் சிலை

25 மார்ச் 2023, 08:27 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள சர்ச்சைக்குரிய தீவான கச்சதீவில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.

எனினும், கச்சத் தீவில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவில்லை என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவிக்கின்றார்.

புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதை கடற்படை நிராகரித்தாலும், கச்சதீவில் புத்தர் சிலை காணப்படும் வகையிலான புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும் கச்சத்தீவில் புத்தர் சிலை அமைக்கும் சிங்கள கடற்படையினரின் போக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்தி புத்தர் சிலைகளை அகற்ற இந்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என இந்திய பக்தர்கள் மற்றும் இரு நாட்டு பங்குத் தந்தைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

"இரும்புத் தகடுகளைத் தேடிச் சென்றபோது கண்ணில் பட்ட புத்தர் சிலைகள்"

இதுகுறித்து நெடுந்தீவு பங்குதந்தை வசந்தன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “இந்திய இலங்கை மக்களின் மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக உள்ள புனித அந்தோணியார் கோவில் மட்டுமே கச்சத்தீவில் இருந்து வந்த நிலையில் தற்போது இலங்கை கடற்படை வீரர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்டுள்ள கடற்படை தளத்திற்கு எதிரே இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு விகாரை கட்டப்பட்டுள்ளதாக” கூறினார்.

மேலும், “இந்த விகாரை கடந்த 3 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டதாக இருக்கலாம். இந்த ஆண்டு வருடாந்திர திருவிழா முடிந்த மறு நாள் நெடுந்தீவில் இருந்து திருவிழாவிற்காக எடுத்து வந்த இரும்புத் தகடுகள் சிலவற்றைக் காணவில்லை. அதைத் தேடிச் சென்றபோது விகாரை இருப்பதை முதலில் நான் பார்த்து எனது செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டேன்.

கச்சத்தீவில் அரச மரம் இல்லாத நிலையில் இலங்கையில் இருந்து அரச மரக் கன்றுகள் கொண்டுவரப்பட்டு கச்சத்தீவில் வைத்து அரச மரத்தை வளர்த்து, அதற்குப் பிறகு தற்போது அங்கு 3 அடி உயரத்தில் சிலையுடன் கூடிய விகாரை மற்றும் 5 அடி உயரத்துடன் விகாரை என இரண்டு விகாரை கட்டப்பட்டுள்ளது,” என்று கூறினார் வசந்தன்.

கச்சத்தீவு

பட மூலாதாரம்,FATHER VASANTHAN

 
படக்குறிப்பு,

கச்சத்தீவில் இரும்புத் தகடுகளை தேடிச் சென்றபோது பார்த்து, படம் பிடித்ததாக பங்குத் தந்தை வசந்தன் கூறும் புத்தர் சிலை

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாக்கு வரும் பங்குத் தந்தைகள் மற்றும் பக்தர்கள் யாரும் புத்தர் சிலையைப் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக பனை ஓலைகளால் நான்கு புறமும் உயரமாக தடுப்புகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளதாக வசந்தன் கூறுகிறார்.

இந்த ஆண்டு திருவிழாவிற்குச் சென்ற இந்திய இலங்கை பங்குத் தந்தைகள் அந்தப் பகுதிக்குச் செல்ல இலங்கை கடற்படை வீரர்கள் அனுமதி மறுத்ததால் பங்குத் தந்தைகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பெயரில் விசாரித்தபோது அங்கு புத்த விகாரை கட்டப்பட்டுள்ளது தெரிய வந்தது.

“கச்சத்தீவில் நிறுவப்பட்டுள்ள புத்த விகாரையால் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு அனைத்து மதத்தினரும் தங்களின் சுவாமி சிலைகளை வைத்து வழிபடத் தொடங்கினால் கச்சத்தீவில் எதிர்வரும் காலங்களில் மத மோதல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

கச்சத்தீவு
 
படக்குறிப்பு,

பங்குத் தந்தை வசந்தன்

தற்போது அமைந்துள்ள புத்தர் சிலையால் காலம் காலமாக இரு நாட்டு பக்தர்களும் வழிபடும் கச்சத்தீவு புனித அந்தோணியார் வரலாறு மறைக்கப்பட்டு, மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.

கச்சத்தீவில் அமைந்துள்ள புத்த விகாரை யாரும் பார்க்காத அளவு உயரமான தட்டிகளைக் கொண்டு மறைத்து வைத்திருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. இலங்கை கடற்படை உடனடியாக உண்மையை மக்கள் மத்தியில் தெரிவிக்கவேண்டும்,” என்று வசந்தன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அதோடு, “புத்த விகாரை அமைத்திருப்பது கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய பக்தர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக புத்த சிலைகள் கச்சத்தீவில் இருந்து அகற்றவேண்டும்,” என்று பங்குத் தந்தை வசந்தன் தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்

கச்சத்தீவில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

''கச்சத்தீவில் இவ்வளவு காலமாக அந்தோனியார் ஆலயம் மாத்திரம் காணப்பட்டது. தற்போது அங்கு மிகப் பெரியதொரு புத்தர் சிலை எப்படி வந்தது என்பது தான் கேள்வியாக இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்

பட மூலாதாரம்,CHARLES NIRMALANATHAN

 
படக்குறிப்பு,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்

இன்று இலங்கையில் உள்ளவர்களுக்கும் தமிழ் நாட்டில் இருக்கின்றவர்களுக்கும், கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு சொந்தமான இடம் என்று தெரியும். மீனவர்கள் அங்கு சென்று வருவது, வழிபடுவது வழமையான விடயம்.

ஆனால், வடக்கு கிழக்கு பகுதிகளில் அதிகளவான பௌத்த அடையாளங்களை நிறுவி வருகின்றது படைத்தரப்பு. கச்சத்தீவில் மிகப் பெரிய புத்தர் சிலையை கடற்படை நிறுவியுள்ளது. கச்சதீவையும் விட்டு வைக்காத ஒரு நிலையாக இருக்கின்றமையை நான் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஆனால், கேட்டால் சொல்வார்கள், கடற்படை வழிபடுவதற்காக அங்கு சிலை வைக்கப்பட்டதாக அரசாங்கத்திலிருந்து பதில் வரும். இதை உடனடியாக அகற்ற வேண்டும்," என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு

கச்சத்தீவில் பிபிசி தமிழ் குழு

இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் வருடாந்திர திருவிழா மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டு செய்தி சேகரிப்பதற்காக பிபிசி தமிழ் குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் கச்சத்தீவு சென்றிருந்தது.

அப்போது கச்சத்தீவில் உள்ள இலங்கை கடற்படை முகாமிற்கு எதிரே பனை மரங்களுக்கு மத்தியில் பனை ஓலைகளால் நான்கு புறமும் தடுப்பு வைத்து வேலி அமைத்து மறைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே சில கடற்படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

செய்தியாளர்கள், பங்குத் தந்தைகள், திருவிழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் என யாரையும் அதன் அருகே செல்ல அனுமதிக்கவில்லை. அதற்குள் என்ன இருந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அதற்கு உள்ளேதான் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புத்தர் சிலை இருப்பதாக நெடுந்தீவு பங்குத் தந்தை தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு

வடக்கு, கிழக்கு பகுதிகளில் பௌத்த மயமாக்கல்?

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவிலான பௌத்த அடையாளங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தமிழர் தரப்பு தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணம் - வெடியரசன் கோட்டையில் தமிழர் பண்பாட்டு, மரபியல் அடையாளமாகப் பேணப்பட்டு வரும் விஷ்ணுபுத்திர வெடியரசன் கோட்டையை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சமாக நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதிய கடிதத்திலேயே அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்
 
படக்குறிப்பு,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்

நீண்டதோர் யுத்தத்தின் நேரடி விளைவுகளை எதிர்கொண்டு, அதிலிருந்து மீண்டெழ முடியாது தவிக்கும் தமிழ் மக்களது இன, மத, மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் அடியோடு அழிக்கப்பட்டு அல்லது அந்த அடையாளங்களின் முக்கியத்துவமும் தொன்மமும் வலிந்து மறைக்கப்பட்டு அத்தகைய தொல்லிடங்களில் சிங்கள பௌத்த அடையாளங்களான விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் துறவி மடங்களையும் அமைக்கும் நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் மிக முனைப்போடு செயலுருப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, நிலாவரை, நாவற்குழி, மயிலிட்டி, மண்ணித்தலை, உருத்திரபுரம், கச்சதீவு, கன்னியா வெந்நீரூற்று என நீளும் இந்த ஆக்கிரமிப்புப் பட்டியல் தற்போது நெடுந்தீவின் வெடியரசன் கோட்டை வரை தனது ஆக்கிரமிப்பின் கால்களை ஆழப் பதித்துள்ளமை, இலங்கைத் தீவிலுள்ள தமிழர்களின் இயல்பு வாழ்வு குறித்த அச்சத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பௌத்தம் என்பது ஒரு மத அடையாளமே அன்றி சிங்கள இனத்துக்கான அடையாளம் அல்ல என்பதை அடியோடு மறுத்து தமிழினத்தின் மீது கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுப் படுகொலையை நிகழ்த்துவதென்பது, இந்த நாட்டின் ஆட்சியாளருடைய தாராளவாதம் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவிக்கின்றார்.

“புத்தர் சிலையை அகற்றாவிட்டால் பிரச்னை உருவாகும்”

இதுகுறித்து கச்சத்தீவு வருடாந்திர திருவிழா குழு பொறுப்பாளர் ஜேசுராஜா பிபிசி தமிழிடம் பேசுகையில், “ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் காலங்காலமாக கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவிலில் இரு நாட்டு பக்தர்களும் இரு நாட்டு அரசும் பாரம்பரிய முறைப்படி மத நல்லிணக்க திருவிழாவாகக் கொண்டாடி வருகிறோம்.

கச்சத்தீவில் இன்று புத்தர் சிலை நிறுவி வழிபடத் தொடங்கினால் நாளை இந்துக்கள், முஸ்லிம்கள் எனப் பல மதத்தினரும் அவர்களுக்குப் பிரியமான தெய்வங்களின் சிலைகளை வைத்து வழிபடும் சூழ்நிலை ஏற்படும் எனவே அதைத் தடுத்து நிறுத்தவேண்டும்,” என்று கூறினார்.

மேற்கொண்டு பேசிய ஜேசுராஜா, “கச்சத்தீவில் புத்தர் சிலை வைப்பதற்கு தமிழக பாரம்பரிய மீனவர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம். உடனடியாக புத்தர் சிலையை அகற்ற இரு நாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. இல்லையெனில் இதனால் மிகப்பெரிய பிரச்னை உருவாகக்கூடும். எனவே மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து இலங்கை அரசுடன் பேசி புத்தர் சிலையை அப்புறப்படுத்த வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

கச்சத்தீவு

கடற்படையின் பதில்

கச்சதீவில் எந்தவொரு புத்தர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்படவில்லை என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

கச்சதீவில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டமை தொடர்பில் தொலைபேசியூடாக வினவியபோது அவர் இதைக் குறிப்பிட்டார்.

''கச்சதீவில் நானும் இருந்தேன். அந்த இடத்தில் ஊடகவியலாளர்களும் இருந்தார்கள். அவ்வாறு சிலை வைக்கப்பட்டிருந்தாலும், அங்கு சென்றவர்கள் அதைப் பார்வையிட்டிருப்பார்கள் அல்லவா?

திருவிழாவின்போது, தீவு முழுவதும் அந்த சந்தர்ப்பத்தில் சுமார் 6000 பேர் வரை இருந்தார்கள். அருட்தந்தையர்களும் சென்றார்கள். புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தால், அதை அவர்கள் அவதானித்திருக்க வேண்டும் அல்லவா?

புத்தர் சிலையை மறைத்து வைக்க முடியாது. அவ்வாறு புத்தர் சிலை அங்கிருந்தால் நிச்சயமாக அவதானித்திருக்க வேண்டும். படமொன்றையாவது அப்போது எடுத்திருக்க முடியும் அல்லவா?

அவ்வாறு ஒன்று இல்லை. நானும் தீவு முழுவதும் சென்றேன். நான் அவ்வாறானதொன்றை அவதானிக்கவில்லை," என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய குறிப்பிட்டார்.

கச்சத்தீவு

இரு நாட்டு மீனவர்கள் கலக்கம்

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத் தந்தை தேவ சகாயம், “திருவிழாவில் இலங்கை, இந்திய தமிழ் பக்தர்கள் மட்டுமில்லாமல் இலங்கையில் உள்ள சிங்கள பக்தர்களும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து வரும் நிலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டு சிறு ஆலயம் அமைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி பக்தர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய, இலங்கை மக்களிடையே உள்ள சமூகமான உறவைப் பாதிக்கும்,” என்று கூறினார்.

ஆகையால் தமிழக அரசும் இந்திய அரசும் இணைந்து இலங்கை அரசிடம் பேசி உடனடியாக அந்த புத்த விகாரையை அகற்றவேண்டும் என வேர்க்கோடு பங்குத் தந்தை தேவ சகாயம் இரு நாட்டு அரசுக்கும் கோரிக்கை வைத்தார்.

https://www.bbc.com/tamil/articles/c2lnq7dlpv2o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சத்தீவில் புத்தர் சிலையா? உடனடியாக அகற்ற வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

Published By: RAJEEBAN

25 MAR, 2023 | 03:56 PM
image

மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் கச்சத்தீவில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற இந்தியா ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். சிங்கள அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது

கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் மட்டுமே உள்ளது. அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் ஈழத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து மதத் தமிழர்கள் பங்கேற்கின்றனர். அத்திருவிழா மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்கிறது.

புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பது கச்சத்தீவை சிங்களமயமாக்கும் செயலாகும். புத்தர் கோயிலுக்கு ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டால் அது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும். மத நல்லிணக்கத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும்.

இவற்றையும் கடந்து புத்தர் சிலை வழிபாடு என்ற பெயரில் சிங்களர்களையும், சீனர்களையும் கச்சத்தீவில் முகாமிடச் செய்து, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவை உளவு பார்ப்பதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும்.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் கூட அந்தோணியார் ஆலயத் திருவிழா, அடிப்படை வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றுக்கு இந்தியா தான் உதவி வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு கச்சத்தீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற ஆணையிட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/151396

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியம் கொடுத்த காசிலை தமிழ்பகுதிகள் எங்கும் விகாரைகள் கட்டப்படப்போகின்றது. ஆனால் ரணில் நல்லவர். அவருக்குத்தான் தமிழ்மக்கள் வாக்குப் போட வேணும். அவர்தான் நல்லாட்சி நடத்துவார். -தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

கச்சத்தீவில் புத்தர் சிலையா? உடனடியாக அகற்ற வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

Published By: RAJEEBAN

25 MAR, 2023 | 03:56 PM
image

மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் கச்சத்தீவில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற இந்தியா ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். சிங்கள அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது

கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் மட்டுமே உள்ளது. அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் ஈழத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து மதத் தமிழர்கள் பங்கேற்கின்றனர். அத்திருவிழா மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்கிறது.

புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பது கச்சத்தீவை சிங்களமயமாக்கும் செயலாகும். புத்தர் கோயிலுக்கு ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டால் அது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும். மத நல்லிணக்கத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும்.

இவற்றையும் கடந்து புத்தர் சிலை வழிபாடு என்ற பெயரில் சிங்களர்களையும், சீனர்களையும் கச்சத்தீவில் முகாமிடச் செய்து, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவை உளவு பார்ப்பதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும்.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் கூட அந்தோணியார் ஆலயத் திருவிழா, அடிப்படை வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றுக்கு இந்தியா தான் உதவி வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு கச்சத்தீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற ஆணையிட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/151396

அடுத்த சிலை தமிழ்நாட்டில்தான்

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படை சிப்பாய்கள் வழிபடுவதற்கு எழுந்தருளிய புத்தர் ஏன் ஒளிந்திருந்து அந்தோனியாருக்கு கொண்டு வந்த இரும்புக்கம்பிகளை திருட வேண்டும்? ஒளித்திருந்தவர் கம்பியை திருடப்போனதாலேயே வெளிச்சத்துக்கு வந்தார், அல்லது மறைந்திருக்க விருப்பமில்லாமல் சரண்டர் ஆனாரோ? வடக்கில் இராணுவ முகாம்களை தமிழர் நிலங்களில் அமைப்பது, சர்வதேசத்துக்கு அப்படி  ஒன்றும் நடைபெறவில்லை வேண்டுமென்றால் வந்து பாருங்கள் என்று அழைப்பு விடுப்பது, அவர்கள் பார்வையிட வரும்  போது இராணுவமே அவர்கள் பயணம் செய்யும் பாதையை வகுத்து, முகாம்களை பனை ஓலைகளால் உயரமாக வேலியமைத்து மறைத்து, அந்த பாதைகளை தவிர்த்து பார்வையிட வந்தவர்களை அழைத்துச்சென்று பேய்க்காட்டினார்கள். ஆனால் இன்று தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது என்பதை இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய அறியவில்லையோ அல்லது அதை மறுக்கிறாரோ?  முழுப்பூசணிக்காயை ஒரு தட்டு சோற்றில் மறைக்கப்பார்க்கிறார்.  அந்தோனியார் கூட தன்னிலத்தில் புத்தரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அது அவரின் உரிமை அதனாலேயே காட்டிக்கொடுத்தார். இல்லது குருந்தூர் மலை நிகழ்வே அங்கும் நிகழும். இனி, சிங்கள கிறிஸ்தவர்களும் இந்திய கிறிஸ்தவர்களும் எங்களோடு சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இனிமேல் நிகழப்போகும் போர்; அந்தோனியாருக்கும் புத்தருக்குமிடையிலான போர். இதில் பிள்ளையாரும் தலையிடலாம் தடையில்லை!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு புத்தர் சிலை குறித்து கடற்படை ஊடகப் பிரிவு விளக்கம்

Published By: DIGITAL DESK 5

27 MAR, 2023 | 06:43 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தைத் தவிர வேறு எந்த மத வழிப்பாட்டுதலமும்  இல்லை என்றும் எதிர்காலத்தில் எந்தவொரு விகாரையும் நிர்மாணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கடற்படை ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கச்சதீவு நிலப்பரப்பில் இருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவில் உள்ள மக்கள் வசிக்காத தீவொன்றாகும். அப்பகுதியின் பாதுகாப்புக்காக கடற்படைக் குழுவொன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கடமைகளுக்கு மேலதிகமாக இலங்கை கடற்படை  புனித அந்தோனியார் தேவாலயத்தையும்  பாதுகாத்து வருகின்றனர். 

புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா வைத் தவிர, இந்த தேவாலயம் தினமும் சுத்தம் செய்யப்பட்டு விளக்குகள் ஏற்றப்பட்டு கடற்படையினரால் பராமரிக்கப்படுகிறது. 

இந்த கடற்படை இணைப்பில் பணிபுரியும் கடற்படையினர்களில் பெரும்பான்மையானவர்கள் பௌத்தர்கள் என்பதால் அவர்களின் மத வழிபாட்டு  நடவடிக்கைகளுக்காக ஒரு சிறிய புத்தர் சிலை கடற்படை இணைப்பின் கடற்படையினரின் இல்லத்திற்கு அருகில் வைக்கப்பட்டு மத வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.

மேலும் இந்த தேவாலயத்தை தவிர இந்த தீவில் வேறு எந்த நிரந்தர கட்டுமானமும் மேற்கொள்ள முடியாது. இதேவேளை,  கடமைகளில் ஈடுபட்டுள்ள கடற்படையினர் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட இராணுவ இல்லங்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர இந்த கச்சதீவில் வேறு எந்த மத வழிப்பாட்டுதலமும் இல்லை என்றும் எதிர்காலத்தில் எந்தவொரு விகாரையும் நிர்மாணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை  என்றும் கடற்படை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/151538

  • 5 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவில் புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டது - யாழ். ஆயர் இல்லம் 

26 APR, 2023 | 10:01 PM
image

கச்சதீவில்  அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

 

சிலை அகற்றப்பட்ட விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள். 

அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியே  கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாக  தெரிவித்துள்ளார்கள்.

இவ்விடயத்தை அமைதியான முறையில் தீர்த்துவைக்க ஒத்துழைத்த கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் என ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

அத்துடன் , அது தொடர்பில் யாழ்.மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் ஆயர் இல்லம் சார்பில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் நன்றி தெரிவித்துள்ளார். 

3__1_.jpg

https://www.virakesari.lk/article/153854

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Die 7 besten Buddha Figuren für den Garten | Vaterzeiten.de

மேற்கத்தையவர்கள் அநேகமாக தங்கள் வீட்டுத்தோட்டங்களிலும், அவர்கள் தம் சிறிய பூந்தோட்டங்களிலும் அழகிற்காக ஆங்காங்கே புத்தர் சிலைகளை வைத்திருப்பார்கள். புத்தரின் ஆன்மீக சிந்தனைகள் அவர்களை கவர்ந்தும் உள்ளது. ஆனால் புத்தர் சிலையை வழிபாட்டு உருவமாக என்றுமே கருதியதில்லை.

ஆனால்...

சிங்கள அரசியலோ / பௌத்த துறவிகளோ தம் இன வெறிக்கு தாம் சார்ந்த ஆன்மீக மதத்தையே பலிக்கடாவாக ஊரெல்லாம் தூக்கிக்கொண்டு திரிகின்றது. இந்த இனவாத அரசியல்வாதிகள் புத்தரின் சிந்தனைகளை நன்கு கற்றார்களா என்பதில் சந்தேகம் உண்டு.

Westerners probably have Buddha statues scattered around their home gardens and their small flower gardens for beauty. Buddha's spiritual thoughts are also appealing to them. But the statue of Buddha was never considered as a worship image.

But...

Sinhalese politicians / Buddhist monks are using their own spiritual religion as a scapegoat for their ethnic hatred. It is doubtful whether these racist politicians were well versed in the Buddha's thoughts.

 

බටහිර මිනිසුන්ට ඔවුන්ගේ ගෙවතු අවට බුදු පිළිම සහ අලංකාරය සඳහා කුඩා මල් උයන් ඇත. බුදුන් වහන්සේගේ ආධ්‍යාත්මික සිතිවිලි ද ඔවුන්ට ආකර්ශනීය ය. නමුත් බුද්ධ ප්‍රතිමාව කිසිවිටෙක වන්දනා ප්‍රතිමාවක් ලෙස සැලකුවේ නැත.

එහෙත්...

සිංහල දේශපාලකයින් / බෞද්ධ භික්ෂූන් වහන්සේලා තමන්ගේම ආධ්‍යාත්මික ආගම තමන්ගේ වාර්ගික වෛරයේ බිල්ලක් ලෙස භාවිතා කරති. මේ ජාතිවාදී දේශපාලකයන් බුදුන් වහන්සේගේ චින්තනය මැනවින් උගත් අයද යන්න සැක සහිතය.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.