Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா – ரஸ்யா உறவு அமெரிக்காவின் வியூகங்களின் தோல்வி – பொம்பியோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனா – ரஸ்யா உறவு அமெரிக்காவின் வியூகங்களின் தோல்வி – பொம்பியோ

March 26, 2023
 
சீனாவுக்கும் ரஸ்யாவுக்குமிடையில் ஏற்பட்டுவரும் நெருக்கமான உறவுகள் அமெரிக்காவின் படைத்துறை மற்றும் அரசியல் வியூகங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் தோல்வியாகும் என அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இந்த தோல்வியை மறைப்பதற்கே வெள்ளை மாளிகை இந்த விடயத்தை அடக்கி வாசிக்கின்றது என சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் ரஸ்யாவுக்கான 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட கடந்த புதன்கிழமை (22) பொம்பியோ இந்த கருத்தை அமெரிக்காவின் ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார்.

இந்த பயணத்தின் போது சீனாவும் ரஸ்யாவும் பெருமளவான வர்த்தக உடன்பாடுகளை மேற்கொண்டதுடன், ஐக்கிய நாடுகள் சபையை தலைமையேற்று உலகின் அமைதிக்கு கூட்டாக செயற்படப்போவதாகவும் தெரிவித்திருந்தன.

அமெரிக்க நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து எரிபொருட்களை கொள்வனவு செய்கின்றன. ஆனால் சீன நிறுவனங்கள் 20 விகித கழிவு விலையில் ரஸ்யாவில் இருந்து வாங்குகின்றன. இது அமெரிக்க நிறுவனங்களுக்கு மிகப்பெரும் ஆபத்தாகும் என பொம்பியோ மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் சீனாவினதும், ரஸ்யாவினதும் உறவு கூட்டணி அமைப்பதற்கு ஏற்றதாக தமக்கு தெரியவில்லை என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு சபையின் பேச்சாளார் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/china-russia-relations-are-a-failure-of-us-strategies-pompeo/

  • Replies 64
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, கிருபன் said:

இந்த பயணத்தின் போது சீனாவும் ரஸ்யாவும் பெருமளவான வர்த்தக உடன்பாடுகளை மேற்கொண்டதுடன், ஐக்கிய நாடுகள் சபையை தலைமையேற்று உலகின் அமைதிக்கு கூட்டாக செயற்படப்போவதாகவும் தெரிவித்திருந்தன.

அமெரிக்க நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து எரிபொருட்களை கொள்வனவு செய்கின்றன. ஆனால் சீன நிறுவனங்கள் 20 விகித கழிவு விலையில் ரஸ்யாவில் இருந்து வாங்குகின்றன. இது அமெரிக்க நிறுவனங்களுக்கு மிகப்பெரும் ஆபத்தாகும் என பொம்பியோ மேலும் தெரிவித்துள்ளார்

பொம்பியோ சொல்லுறது சரிதானே :cool:

  • கருத்துக்கள உறவுகள்

எது நடக்கக்கூடாது என நினைத்தார்களோ அது நடைபெறுகிறது. அதுவும் மேற்குலகு ரஸ்யாவை முற்று முழுதாக ஒழித்துக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, சீன அதிபரின் ரஸ்ய பயணம் அவர்களுக்கு சொல்லும் செய்திதான் அதிர்ச்சிகரமானது. 

மேற்கின் Rule base order ன் கதை குத்து வேண்ட ஆரம்பித்துவிட்டது. 

😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பொம்பியோ சொல்லுறது சரிதானே :cool:

அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ...
இப்ப ரஷ்ய, சீன நாட்டுக்காக உளவு பார்க்கும் வேலையை செய்கிறார் போலுள்ளது.
இல்லாட்டி... அமெரிக்காவை இப்படி பப்ளிக்குட்டியிலை, வெளுத்து வாங்கியிருப்பாரா...  🤣

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்கள் எப்பவும் நுனிப்புல் தான்.?

எனினும் சீனாவினதும், ரஸ்யாவினதும் உறவு கூட்டணி அமைப்பதற்கு ஏற்றதாக தமக்கு தெரியவில்லை என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு சபையின் பேச்சாளார் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

ரசியா-சீனா-வடகொரியா-ஈரான் தலையை சொறியும் அமெரிக்கா, அமெரிக்காவின் தூண்டில் இரை இப்ப உக்ரைன், அடுத்தது? 

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

தென்சீனக் கடல்.. தாய்வான்.. வடகொரியான்னு பூச்சாண்டி காட்டினாலும்.. சீனா அசையுற மாதிரி இல்லை. 

இப்ப ஐரோப்பாவும் பாதுகாப்பில்லாத இடமாப் போச்சு. ரஷ்சியா சோவியத் வீழ்ச்சியின் பின் முதல்முறையாக தனது அணு ஆயுதங்களை பெலரூசுக்குள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kapithan said:

எது நடக்கக்கூடாது என நினைத்தார்களோ அது நடைபெறுகிறது. அதுவும் மேற்குலகு ரஸ்யாவை முற்று முழுதாக ஒழித்துக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, சீன அதிபரின் ரஸ்ய பயணம் அவர்களுக்கு சொல்லும் செய்திதான் அதிர்ச்சிகரமானது. 

மேற்கின் Rule base order ன் கதை குத்து வேண்ட ஆரம்பித்துவிட்டது. 

😀

3 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ...
இப்ப ரஷ்ய, சீன நாட்டுக்காக உளவு பார்க்கும் வேலையை செய்கிறார் போலுள்ளது.
இல்லாட்டி... அமெரிக்காவை இப்படி பப்ளிக்குட்டியிலை, வெளுத்து வாங்கியிருப்பாரா...  🤣

2 hours ago, உடையார் said:

ரசியா-சீனா-வடகொரியா-ஈரான் தலையை சொறியும் அமெரிக்கா, அமெரிக்காவின் தூண்டில் இரை இப்ப உக்ரைன், அடுத்தது? 

55 minutes ago, nedukkalapoovan said:

தென்சீனக் கடல்.. தாய்வான்.. வடகொரியான்னு பூச்சாண்டி காட்டினாலும்.. சீனா அசையுற மாதிரி இல்லை. 

இப்ப ஐரோப்பாவும் பாதுகாப்பில்லாத இடமாப் போச்சு. ரஷ்சியா சோவியத் வீழ்ச்சியின் பின் முதல்முறையாக தனது அணு ஆயுதங்களை பெலரூசுக்குள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. 

மேற்குலக மக்களையும் ;மேற்குலக விசுவாசிகளையும் தவிர ஏனைய அனைத்து உலகமும் அமெரிக்க டொலரின் வீழ்ச்சியைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்றன. அடுத்த பண பரிமாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.

சில வேளைகளில் உக்ரேன் அழிவுடன் உலகம் அமைதியடையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

ரசியா-சீனா-வடகொரியா-ஈரான் தலையை சொறியும் அமெரிக்கா, அமெரிக்காவின் தூண்டில் இரை இப்ப உக்ரைன், அடுத்தது? 

தாய்வான்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

மேற்குலக மக்களையும் ;மேற்குலக விசுவாசிகளையும் தவிர ஏனைய அனைத்து உலகமும் அமெரிக்க டொலரின் வீழ்ச்சியைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்றன. அடுத்த பண பரிமாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.

சில வேளைகளில் உக்ரேன் அழிவுடன் உலகம் அமைதியடையலாம்.

இதுதான் மரத்தில் இருந்தபடியே மரத்தை தறிப்பதை பார்த்து மகிழ்வதாகும்?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

இதுதான் மரத்தில் இருந்தபடியே மரத்தை தறிப்பதை பார்த்து மகிழ்வதாகும்?

UK is poorer as a country, says Michael Gove.

The UK is poorer than it would have been, partly due to the war in Ukraine, but also the pandemic, Levelling Up Secretary Michael Gove has admitted.

But he said ministers were taking action on the soaring cost of living, including giving help on energy bills.

The head of the independent forecaster, the Office for Budget Responsibility (OBR), said living standards were seeing their biggest squeeze on record.

Richard Hughes said Brexit and poor productivity had also hurt growth.

And he warned living standards would not return to pre-pandemic levels for at another five to six years.

https://www.bbc.co.uk/news/business-your-money-65079792

உக்ரைன் யுத்தத்திற்கு அமெரிக்க வாலாகப் போய் வால்பிடிக்கப் போய் வளர்ந்த நாடுகளில் ஏழை நாடானது தான் மிச்சம். ரஷ்சியா கூட இவ்வளவு நெருக்கடிகளை சமாளிச்சுக் கொண்டு முன்னேறி வர.

இவைக்கு அமெரிக்காவா கைகொடுக்கப் போகுது.

இருக்க விட்ட பாவத்திற்கு உழைச்சு 40 சதவீதத்திற்கும் மேல் வரியாக் கட்டிக்கிட்டு இருக்கமே அது போதாதா. அதையும் உக்ரைன் யுத்தத்தில் கொட்டி கரியாக்குவதற்கும் நாமா பொறுப்பு. பொறுப்பற்ற கொள்கை வகுப்பாளர்களும்.. அவர்தம் எடுபிடி அரசியல்வாதிகளினதும் விளைவு.. பிரிட்டனை பிச்சைக்கார நாடாக்கியது தான்.  

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

பிரித்தானிய பொருளாதார சிக்கலுக்கு உக்ரைன் சிக்கல் ஆரம்பித்தது மட்டும் தான் காரணம் என்று ஓரளவு பொருளாதாரம் படித்த எனக்கு தெரியவில்லை 

என்ன ராசா இது

ஏதோ அவர்கள் எங்களை கெஞ்சி கூத்தாடி கூப்பிட்டு படிப்பித்து விசா தந்து கதவைத் தட்டி வேலை தந்து அடைத்து வைத்து வரி கேட்கிறார்களா என்ன???

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

பிரித்தானிய பொருளாதார சிக்கலுக்கு உக்ரைன் சிக்கல் ஆரம்பித்தது மட்டும் தான் காரணம் என்று ஓரளவு பொருளாதாரம் படித்த எனக்கு தெரியவில்லை 

என்ன ராசா இது

ஏதோ அவர்கள் எங்களை கெஞ்சி கூத்தாடி கூப்பிட்டு படிப்பித்து விசா தந்து கதவைத் தட்டி வேலை தந்து அடைத்து வைத்து வரி கேட்கிறார்களா என்ன???

அவையே ஒத்துக்கொள்ளினம் இந்த பிச்சைக்கார நிலைக்கு உக்ரைன் யுத்தமும் பகுதிக்காரணம் என்று.. நீங்க என்னடான்னா.

அப்ப வரியை வாங்காமல் விடலாமே..??! ஆக்களும் வேணும்.. சேவையும் வேணும்.. வரியும் வேணும். சும்மாவா இருக்க விடினம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

ஆனாலும் என் தம்பி 40வீதம் வரிகட்டும் நிலைக்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சி தருகிறது.❤️

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் மட்டுமல்ல, பல நாடுகள் தள்ளாட உக்ரைன் யுத்தமும் காரணம், பெருந்தொற்றும் காரணம். ஆனால், பிரிட்டனுக்கு இவையிரண்டையும் விட மூன்றாவதாக பிறெக்சிற்றும் ஒரு காரண ம் (மேலே இணைத்த செய்தியிலேயே இருக்கிறது, ஆனால் இணைத்தவர் கண்ணுக்குத் தெரியாமல் "பிறெக்சிற் வாதம்" மறைத்து விட்டது!😎).

நிற்க: அமெரிக்காவோடு ஒப்பிடுகையில் கனடாவும் , பல ஐரோப்பிய நாடுகளும் வசூலிக்கும் வருமான/சேவை வரிகள் உயர்வானவை. இதன் காரணம், இலவச மருத்துவ சேவைகள், வேலையிழந்தால் உதவி கொடுப்பனவு, வருமானம் குறைந்தவர்களுக்கு கவுன்சில் வீடு போன்ற சலுகை எனப் பல சமூகப் பாதுகாப்பு வலை முயற்சிகளை கனடாவும், ஐரோப்பிய நாடுகளும் வரிவருமானம் மூலமே செய்கின்றன.

அனேகமாக, இந்தச் சலுகைகளை அனுபவிக்கும் போது வேண்டாமென்று சொல்லாதவர்கள் தான் பின்னர் தாம் சொந்தக் காலில் நின்று வரி கட்டும் போது முறைப்பாடு செய்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

மேலே இணைத்த செய்தியிலேயே இருக்கிறது, ஆனால் இணைத்தவர் கண்ணுக்குத் தெரியாமல் "பிறெக்சிற் வாதம்" மறைத்து விட்டது!

அமைச்சரே போரை தான் முதன்மையாகக் குறிப்பிட்டுள்ளார். இணைத்தவர் எல்லாக் கருத்தையும் தான் இணைத்துள்ளார். அமைச்சரின் முதல் காரணியே.. உக்ரைன் போர் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இதுதான் மரத்தில் இருந்தபடியே மரத்தை தறிப்பதை பார்த்து மகிழ்வதாகும்?

உங்களது கூற்று இந்த விட்யத்தில் சரி என்றே என்னளவில் கருதுகிறேன், உலகம் பல துருவங்கள் கொண்ட பொருளாதார அமைப்பிற்கு மாறும்ப்போது, மேற்கு நேரிடியாக பாதிப்பிற்குள்ளாகும்.

1. வியாபார மையமாக உள்ள மேற்கு என்ற நிலை மாறி ஆசியா அந்த இடத்தினை பிடிக்கும்.

தற்போதுள்ள வழங்கல் பாதையில் மாற்றம் ஏற்படும்(Supply chain) இதனால் ஒப்பீட்டளவில் மேற்கில் பொருள்களின் விலை அதிகரிக்கும்.

உதாரணமாக நியூசிலாந்து உலகின் ஒரு கோடியில் உள்ளது அதன் சனத்தொகை 5 மில்லியன் மட்டுமே அங்கு பொருள்களின் விலை அதிகமாக காணப்படுவது இதனாலேயே.

2. மேற்கின் பொருளாதார பலமே சுரண்டல் பொருளாதாரம், அடிப்படையில் மேற்கின் உற்பத்தி பொருள்கள் அதிகரித்த விலையில் 3ஆம் உலக நாடுகளுக்கு சந்தைப்படுத்தப்படும்(அதிகரித்த சனத்தொகை), ஆனால் 3ஆம் உலக நாடுகளின் பொருள்கள் ஒப்பீட்டளவில்  பல மடங்கு குறைவாக இருக்கும். இந்த மாற்றம் இந்த 3ஆம் உலக நாடுகளின் பொருள்களின் விலையில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம், அதனால் மேற்கில் வதியும் ஆசியர்களின் வாழ்க்கை செலவு ஒப்பீட்டளவில் மற்றைய மேற்கத்தவர்கலை விட அதிகரிக்கும்.

3.மேற்கு நாடுகளுக்கிடையே அமைதியின்மை ஏற்பட்டு அவர்களுக்கிடையே போர் மூழும் ஆபாயம் ஏற்படலாம்.

ஆனாலும் இந்த பல்துருவ பொருளாதாரம் பல நன்மைகளையும் கொண்டுள்ளது தற்போதுள்ள உற்தியற்ற பொருளாதார நிலை இல்லாமல் போகும்.

உலகில் பட்டினி சாவு குறைவடையும், போசாக்கின்மை, தாய் மற்றும் சேய் மரணவிகிதம் குறையும்.

ஒப்பீட்டளவில் உலக கல்வியறிவு அதிகரிக்கும், அதனால் நீண்ட கால அடிப்படையில் போர் குறைவடையலாம்.

இந்த பல்துருவ உலக பொருளாதார மாற்றம் ஒட்டு மொத்த உலகிற்கு நன்மை தரும் விடயம், ஒரு தரப்பு பாதிப்படையலாம் ஆனால் உலக நன்மையுடன் பார்க்கும்போது அது பரவாயில்லை என கருதுகிறேன்.

இப்படிதான் நடக்கும் என்றில்லை, எனது கருத்து தவறாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vasee said:

நன்றி உங்கள் கனவுக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

நன்றி உங்கள் கனவுக்கு 

பொதுவாக மூலப்பொருள்கள் ஆசிய நாடுகளில் குறைந்த விலைக்கு வாங்கி அதிலிருந்து உற்பத்தி செய்யும் முடிவுப்பொர்ள்கள் மேற்கிலிருந்து அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

தற்போது ஒபெக் மற்றும் ஒபெக் பிளஸ் நாடுகள் ஓரணியில் வந்து விட்டதனை அவதானித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இதன் மூலம் விலைகளுக்கு ஒரு விலை நிர்ணயத்தினை ஆசிய நாடுகளால் போட முடியும்.

அப்படி அவை மூலப்பொருள்களின் விலையினை அதிகரிக்கும் போது உற்பத்தி பொருளின் விலை அதிகரிக்கும், அவற்றினை சந்தை படுத்த நீண்ட தூர பயணங்கள் மூலம் மேலும் செலவு அதிகமாகும், அதனை விட சந்தைக்கு மிக அருகாமையில் தமது உற்பத்தியினை முதலீட்டாளர்கள் அணுகுவார்கள், அத்துடன் விலை குறவான வழ்ங்களை உள்நாட்டில் பெறலாம் குறைந்த ஊதியத்தில் வேலையாள்களை பெறலாம்.

மெதுவாக நிகழலாம் ஆனால் மாற்றம் தொடங்கிவிட்டதாகவே கருதுகிறேன், எனது கருத்து தவறாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தில் ஒரு பாதுகாப்பான கிளையை  நானே தேடி பிடித்து  அதில் அமர்ந்து கொண்டு அந்த கிளையை நானே வெட்டினால்..
_____________
அனேகமாக இலங்கை தமிழர்கள்  சலுகைகளை அனுபவிக்கும் போது வேண்டாமென்று சொல்லாதவர்கள் தான் பின்னர் தாம் சொந்தக் காலில் நின்று வரி கட்டும் போது முறைப்பாடு செய்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

அமைச்சரே போரை தான் முதன்மையாகக் குறிப்பிட்டுள்ளார். இணைத்தவர் எல்லாக் கருத்தையும் தான் இணைத்துள்ளார். அமைச்சரின் முதல் காரணியே.. உக்ரைன் போர் தான். 

சொன்ன அமைச்சர் மைக்கேல் கவ் - பிரெக்சிற் ஆதரவு அரசியல்வாதிகளில், ஜோன்சன் பிரச்சார முகம் என்றால், மூளையாக செயல்பட்டவர்.

கவ் - பிரெக்சிற்றும் ஒரு காரணம் என ஏற்றதே பெரிய விடயம்.

போரினால் பாதிக்கப்படுவது ஈயு+ யூகே. 

ஆனால் யூகே அடி வாங்கும் அளவு ஈயு நாடுகள் அடி வாங்கவில்லை.

இரு பகுதிக்கும் உள்ள வித்தியாசம்? பிரெக்சிற்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

5 hours ago, nedukkalapoovan said:

Richard Hughes said Brexit and poor productivity had also hurt growth.

Quote

 OBR chairman Richard Hughes

உங்கள் கருத்துப் புரிதலில் தவறுள்ளது. அமைச்சர் பிரக்சிட் பாதிப்புப்பற்றிச் சொல்லவில்லை. சொன்னது  OBR chairman Richard Hughes. 

அமைச்சர் உக்ரைன் யுத்தத்தை முதன்மையாகவும்.. கோவிட் பான்டமிக்கை அடுத்தும் குறிப்பிட்டுள்ளார்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

உங்கள் கருத்துப் புரிதலில் தவறுள்ளது. அமைச்சர் பிரக்சிட் பாதிப்பற்றிச் சொல்லவில்லை. சொன்னது  OBR chairman Richard Hughes. 

ஓ அப்படியா ? நீங்கள் அமைச்சர் சொன்னார் என்றீர்கள் அதுதான் கவ் சொன்னார் என சொல்கிறீர்கள் என நினைத்தேன்.

1 hour ago, nedukkalapoovan said:

அமைச்சரே போரை தான் முதன்மையாகக் குறிப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

ஓ அப்படியா ? நீங்கள் அமைச்சர் சொன்னார் என்றீர்கள் அதுதான் கவ் சொன்னார் என சொல்கிறீர்கள் என நினைத்தேன்.

நாங்க எங்கும் அமைச்சர் பிரக்சிட்டை காரணியாக்கியுள்ளார் என்று எழுதவே இல்லை. பிரக்சிட்டை இங்கு முதன்மைப்படுத்தியது வேறொரு கருத்தாளர். 

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்து 

பிரித்தானியாவின் இறங்கு முகத்துக்கு காரணம், பிரெக்சிற், யுத்தம், கோவிட்…ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கியம்….

இப்போ நாம் அரசாங்கம் என வைத்துள்ள முட்டாபீசுகள்.

92 இல் ஜோன்மேஜர் அரசின் கடைசி நாட்கள் போல இருக்கிறது இன்றைய அரசின் செயல்பாடுகள்.

ரிசி, வலஸ், ஹண்டை தவிர மருந்துக்கும் கெட்டிகாரார்/ரி என்று எவரும் இல்லை.

புதிய சிந்தனைகளும் இல்லை. 

ஐரோப்பியரை அல்லது குடியேறிகளை சாட்டுவது, ரஸ்ய போரில் சீன் போடுவது இவைதான் இவர்களின் அரசியல்.

இந்த குப்பை கூழத்தை அடுத்த தேர்தலில் அடியோடு தூக்கி எறிய நாடு வழமைக்குத் திரும்பும்.

1997 இலும், 2010 இலும் நடந்தது இதுதான்.

கன்சவேடிவ் கட்சியும் தன்னை புதிய தலைமையில் புதுப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

Led by donkeys என்ற அமைப்பு சில முன்னாள் அமைச்சர்கள், இன்நாள் எம்பிக்களை முட்டாளாக்கி விலை பேசியுள்ளது 👇.

ஒருவர் முன்னாள் நிதி, மற்றவர் சுகாதார மந்திரிகள்.

இவர்கள் இருக்கும் வரை அந்த இடத்துக்கு வரமுடியாத அளவில் இருப்பவர்கள்தான் இப்போ அமைச்சர்களா இருப்போர் 🤣.

இவர்களே இப்படி என்றால் இப்போ இருப்போரின் தரம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.