Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

              கடந்த மார்கழியில் மகள் குடும்பத்தை பார்க்க சன்பிரான்சிஸ்கோ போயிருந்தோம். வழமையை விட கூடுதலான மழையாக இருந்தது.கலிபோர்ணியா மழை இல்லாமல் தண்ணீர் இல்லாமல் அழியப் போகுது என்று தொலைக்காட்சி பத்திரிகை செய்திகள் பல மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

               இங்கு கூடுதல் மழை பெய்தால் மண்சரிவு ஏற்பட்டு அதனால் உயிர்ச் சேதம் பொருள் சேதம் என்று பல அழிவுகளை சந்திக்க வேண்டும்.

                கலிபோர்ணியாவின் புவியியல் அமைப்பே சற்று வித்தியாசமானது.சமசீரான நிலங்களைக் காண்பது மிகவும் அரிது.மலைப் பிரதேசங்களை கூடுதலாக உள்ளடக்கியதே இந்த மாநிலம்.

                இந்த புது வருடத்துக்கு பனிமலையில் சறுக்கி விளையாடப் போகிறோம் என்று மகள் சொன்னா.மகளும் கணவரும் ஒவ்வொரு வருடமும் பனியில் சறுக்கி விளையாட போவார்கள்.நீங்களும் சறுக்கி விளையாட போறீங்களோ என்று எம்மையும் கேட்டா.வேண்டாம் வேண்டாம் நாங்கள் பிள்ளைகளை பார்க்கிறோம் நீங்கள் விளையாடிப் போட்டு வாங்கோ என்று மறுத்துவிட்டோம்.

                  அவர்கள் வருடாவருடம் Tahoe என்ற இடத்துக்கு பனியில் சறுக்கி விளையாட போவதால் அதற்கேற்ற உடுப்புகள்,தண்ணீர் போகாத சப்பாத்து ,கையுறை என்று எல்லாமே வைத்திருக்கிறார்கள்.இப்போ நாங்களும் சேர்ந்து கொண்டபடியால் எங்களுக்கும் குளிருக்கு உடைகளும் தண்ணீர் போகாத கையுறையும் வாங்கினார்கள்.பின் விபரீதம் தெரியாமல் சப்பாத்தை ஏன் வீண்காசு என்று மறுத்துவிட்டேன்.

a05a0d03-0eaa-456e-9d27-f6cdb9eb423e-Ori

                     இந்த உடுப்பு பார்வைக்கு சாதாரணமாக இருந்தாலும் மிகவும் பாரமானதும் தடிப்பம் கூடியதும் ஆகும்.எவ்வளவு குளிரிலும் நம்பி போட்டுக் கொண்டு போகலாம்.

                      மூன்று நாள் கொட்டாட்டம் என்று புதுவருடத்துக்கு முதல்முதல் நாள் பெட்டி படுக்கைகளுடன் ஏற்கனவே பதிவு செய்த கொட்டேலை நோக்கி பயணம் தொடங்கினோம்.மகளும் கணவரும் சகலதையும் பொறுப்பெடுத்து செய்ததால் நான் எங்கு போகிறோம் காலநிலை என்ன எதுவுமே பார்க்கவில்லை.வழமையில் இப்படியான பயணங்கள் என்றால் அதுவும் குழந்தைகளுடன் போவதென்றால் போகிற வழியில் இருந்து நாங்கள் போய் நின்று திரும்ப வரும்வரை காலநிலை பாதுகாப்பு எங்கெங்கே வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று அட்டவணையே போட்டுவிடுவேன்.

                     இந்த தடவை அப்படி எதுவும் செய்யாததன் விளைவை பின்னர் அனுபவிக்க நேரும்போது தான் உணர்ந்தேன்.

பனி பொழியும்.

  • Replies 66
  • Views 16.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    மலைப் பகுதியில் 6-7 மைல் போனதும் பெரிய மலையின் உச்சிக்கு ஏற்றிப் போவதற்கு கேபிள் கார்கள் ஓடிக் கொண்டே இருந்தது.மருமகன் சொந்தமாகவே சினோபோட் என்று சொல்லும் காலில் பூட்டி சறுக்கி விளையாடும் பலகை வைத்திரு

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    பனிப் பொழிவு 2                          காலை 8 மணிக்கு இறங்க வேண்டும் என்று சொன்னாலும் 10 மணிக்குத் தான் இறங்க முடிந்தது. ஏறத்தாள 3 மணிநேர பயணம்.பிள்ளைகளுடன் போவதால் நின்றுநின்று போக வேண்டும்.மதி

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    குளிர் காலங்களில் இந்த இடத்து மலைகளில் படிந்திருக்கும் பனிகள் தான் போடை காலத்தில் கரைந்து காய்ந்து போயிருக்கும் இடங்களுக்கு உயிரூட்டுவதாக சொல்கிறார்கள். கோடை காலத்தில் பனிகள் கரைந்த பின்பு மல

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அண்ணா.  வெயில் காலத்தில் Lake Tahoe ஐ ரசித்த படியே நாள் முழுக்க இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி  .தொடருங்கள் நனையக் காத்திருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

படத்தைப் பார்க்க எங்கட fire brigade போல கிடக்குது..!

தொடருங்கோ…!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

தொடருங்கள் அண்ணா.  வெயில் காலத்தில் Lake Tahoe ஐ ரசித்த படியே நாள் முழுக்க இருக்கலாம்.

குளிர் காலங்களில் இந்த இடத்து மலைகளில் படிந்திருக்கும் பனிகள் தான் போடை காலத்தில் கரைந்து காய்ந்து போயிருக்கும் இடங்களுக்கு உயிரூட்டுவதாக சொல்கிறார்கள்.

கோடை காலத்தில் பனிகள் கரைந்த பின்பு மலை ஏறுவதற்கென்றே பலர் வருவதாக சொல்கிறார்கள்.

மொத்தத்தில் 365 நாளும் இந்தப் பகுதி ஒரே கொண்டாட்டம் தான்.

நுணா நீங்களும் இங்கு கும்மாளம் அடித்திருக்கிறீங்க போல.

3 hours ago, நிலாமதி said:

மிக்க மகிழ்ச்சி  .தொடருங்கள் நனையக் காத்திருக்கிறோம்.

அக்கா காய்ச்சல் தடிமன் வரப்போகுது.

2 hours ago, புங்கையூரன் said:

படத்தைப் பார்க்க எங்கட fire brigade போல கிடக்குது..!

தொடருங்கோ…!

புங்கை இந்த படத்தைப் பார்த்த மகன்

என்ன ஜெயிலில் இருந்து தப்பி வந்த மாதிரி இருக்கு என்றான்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

              கடந்த மார்கழியில் மகள் குடும்பத்தை பார்க்க சன்பிரான்சிஸ்கோ போயிருந்தோம். வழமையை விட கூடுதலான மழையாக இருந்தது.கலிபோர்ணியா மழை இல்லாமல் தண்ணீர் இல்லாமல் அழியப் போகுது என்று தொலைக்காட்சி பத்திரிகை செய்திகள் பல மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

               இங்கு கூடுதல் மழை பெய்தால் மண்சரிவு ஏற்பட்டு அதனால் உயிர்ச் சேதம் பொருள் சேதம் என்று பல அழிவுகளை சந்திக்க வேண்டும்.

                கலிபோர்ணியாவின் புவியியல் அமைப்பே சற்று வித்தியாசமானது.சமசீரான நிலங்களைக் காண்பது மிகவும் அரிது.மலைப் பிரதேசங்களை கூடுதலாக உள்ளடக்கியதே இந்த மாநிலம்.

                இந்த புது வருடத்துக்கு பனிமலையில் சறுக்கி விளையாடப் போகிறோம் என்று மகள் சொன்னா.மகளும் கணவரும் ஒவ்வொரு வருடமும் பனியில் சறுக்கி விளையாட போவார்கள்.நீங்களும் சறுக்கி விளையாட போறீங்களோ என்று எம்மையும் கேட்டா.வேண்டாம் வேண்டாம் நாங்கள் பிள்ளைகளை பார்க்கிறோம் நீங்கள் விளையாடிப் போட்டு வாங்கோ என்று மறுத்துவிட்டோம்.

                  அவர்கள் வருடாவருடம் Tahoe என்ற இடத்துக்கு பனியில் சறுக்கி விளையாட போவதால் அதற்கேற்ற உடுப்புகள்,தண்ணீர் போகாத சப்பாத்து ,கையுறை என்று எல்லாமே வைத்திருக்கிறார்கள்.இப்போ நாங்களும் சேர்ந்து கொண்டபடியால் எங்களுக்கும் குளிருக்கு உடைகளும் தண்ணீர் போகாத கையுறையும் வாங்கினார்கள்.பின் விபரீதம் தெரியாமல் சப்பாத்தை ஏன் வீண்காசு என்று மறுத்துவிட்டேன்.

a05a0d03-0eaa-456e-9d27-f6cdb9eb423e-Ori

                     இந்த உடுப்பு பார்வைக்கு சாதாரணமாக இருந்தாலும் மிகவும் பாரமானதும் தடிப்பம் கூடியதும் ஆகும்.எவ்வளவு குளிரிலும் நம்பி போட்டுக் கொண்டு போகலாம்.

                      மூன்று நாள் கொட்டாட்டம் என்று புதுவருடத்துக்கு முதல்முதல் நாள் பெட்டி படுக்கைகளுடன் ஏற்கனவே பதிவு செய்த கொட்டேலை நோக்கி பயணம் தொடங்கினோம்.மகளும் கணவரும் சகலதையும் பொறுப்பெடுத்து செய்ததால் நான் எங்கு போகிறோம் காலநிலை என்ன எதுவுமே பார்க்கவில்லை.வழமையில் இப்படியான பயணங்கள் என்றால் அதுவும் குழந்தைகளுடன் போவதென்றால் போகிற வழியில் இருந்து நாங்கள் போய் நின்று திரும்ப வரும்வரை காலநிலை பாதுகாப்பு எங்கெங்கே வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று அட்டவணையே போட்டுவிடுவேன்.

                     இந்த தடவை அப்படி எதுவும் செய்யாததன் விளைவை பின்னர் அனுபவிக்க நேரும்போது தான் உணர்ந்தேன்.

பனி பொழியும்.

சென்ற இடத்தில்,   குளிருக்குள்   அவதிப் படுவது போல் நரக வேதனை கிடையாது.
அதைப் போன்ற அனுபவத்தை பகிரப் போகின்றீர்கள் என நினைக்கின்றேன்.
ஆரம்பமே தொடர்ந்து வாசிக்கும் ஆவலை தூண்டுகின்றது. 
தொடருங்கள் ஈழப்பிரியன். 👍🏽

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

சென்ற இடத்தில்,   குளிருக்குள்   அவதிப் படுவது போல் நரக வேதனை கிடையாது.
அதைப் போன்ற அனுபவத்தை பகிரப் போகின்றீர்கள் என நினைக்கின்றேன்.
ஆரம்பமே தொடர்ந்து வாசிக்கும் ஆவலை தூண்டுகின்றது. 
தொடருங்கள் ஈழப்பிரியன். 👍🏽

பாம்பின் கால் பாம்பறியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

                இந்த உடுப்பு பார்வைக்கு சாதாரணமாக இருந்தாலும் மிகவும் பாரமானதும் தடிப்பம் கூடியதும் ஆகும்.எவ்வளவு குளிரிலும் நம்பி போட்டுக் கொண்டு போகலாம்.

செல்லம்!  உந்த உடுப்பு போட்ட நேரம் பேசாமல் அந்ததேரரை மாதிரி போர்த்து மூடிக்கொண்டு நிண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.:face_with_tears_of_joy:

a05a0d03-0eaa-456e-9d27-f6cdb9eb423e-Ori

Our Power Of People Party has won one seat from the national list in the 2020 General Election. Galagoda Aththe Gnanasara Thero could go to the parliament from their national list.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.....நல்லதொரு குளிர்மையான தொடர்......தொடருங்கள்......கொஞ்சம் படங்களையும் பகிருங்கள் பிரியன்.........👍  😂

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

பனி பொழியும்.

நானும் -20 குளிரை அனுபவிக்காத விளைவை Mongolia இல் அனுபவித்தேன்😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பனிப் பொழிவு 2

                         காலை 8 மணிக்கு இறங்க வேண்டும் என்று சொன்னாலும் 10 மணிக்குத் தான் இறங்க முடிந்தது. ஏறத்தாள 3 மணிநேர பயணம்.பிள்ளைகளுடன் போவதால் நின்றுநின்று போக வேண்டும்.மதியம் சாப்பாட்டுக்கு வேறு நிற்க வேண்டும்.

                          புறப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே பேத்திக்கு பம்பஸ் மாற்ற வேண்டும் என்று ஒரு கோப்பிக் கடையில் நிற்பாட்டினார்கள்.கோப்பிக் கடையில் பிள்ளைகளுக்கு டோநட்டும் கோப்பியும் வாங்கினார்கள்.எனக்கு எப்போதும் கோன்மபின் சாப்பிடவே விருப்பம்.எந்தநாளும் என்றில்லை இப்படி எங்காவது போனால் விரும்பி சாப்பிடுவது இதைத் தான்.

                           அங்கிருந்து புறப்பட்டு சக்கரமன்ரோ பகுதியில் மதியம் சாப்பாடு.நிறைய கூட்டமாக இருந்தது.இவர்கள் கொஞ்சம் முதலே முன்பதிவு செய்தபடியால் சுலபமாக உள்ளே போய்விட்டோம்.சாப்பாடு கொண்டுவர தாமதமாகி விட்டது. கூட்டத்தைப் பார்த்து இதை எதிர்பார்த்தது தான்.சாப்பாடு திறமாக இருந்தது.

                           சக்கரமன்ரோவில் காலநிலையும் நன்றாகவே இருந்தது.இன்னும் ஒன்றரை மணிநேரம் ஓடினால் கொட்டேலுக்கு போய்விடலாம் என்றார்கள்.போகப் போக வழி நெடுகலும் ஏற்கனவே பனி கொட்டிக் கிடக்கிறது.இரு பக்கங்களிலும் பெரிய மலைகள்.அனேகமானவை பனி படிந்து போயிருந்தது.

                           ஒருசில இடங்களில் மக்கள் பனியில் சறுக்கி விளையாடுவதையும் கேபிள் கார்கள் மக்களை சுமந்து மேலே கூட்டிச் செல்வதையும் தூரத்தே காண முடிந்தது.இப்படி தான் நாங்களும் நாளைக்கு போகப் போகிறோம் என்று சொன்னார்கள்.நாளை நடக்க போவதை தெரியாமல் ரசித்துக் கொண்டே வந்தோம்.

                          நாங்கள் போனநேரம் ஏற்கனவே விளையாடி முடிந்து மூட்டை முடிச்சுக்களுடன் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.எமக்காக ஒதுக்கப்பட்ட அறையில் எமது சாமான்களை வைத்துவிட்டு மகளும் மருமகனும் வெளியே போய் சுற்றி பார்க்க போனார்கள்.பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்களுடன் நாமும் படுத்து தூங்கவிட்டோம்.

                           பிற்பகல் 5 மணி போல் இரவு சாப்பாட்டுக்காக நடந்தே போனோம்.சாப்பாடு மதிய சாப்பாடு போல இருக்கவில்லை.மனைவியும் நானும் வேளைக்கே சாப்பாட்டை முடித்து பக்கத்தில் இருந்த கடையில் நொறுக்குத்தீனி என்று சிப்ஸ் பிஸ்கட் என்று கூடுலாகவே வாங்கி வந்தோம்.அடுத்த நாள் இது தான் சாப்பாடு என்று யாருக்கு தெரியும்.

                           மீண்டும் கொட்டேலுக்கு வர 8 மணி ஆகிவிட்டது.நாளைக்கு நிறைய பனி பொழியப் போகுது.அதற்கு முதல் போய் விளையாடிப் போட்டு வர வேண்டும்.7 மணிக்காவது இறங்க வேண்டும் என்று அடுத்த நாள் போடுற உடுப்புகள் எல்லாம் இப்பவே எடுத்து வையுங்கோ என்று அவரவர் உடுப்புகளை எடுத்து வைத்துவிட்டு 9 மணிக்கே படுக்கைக்கு போய்விட்டோம்.

பனி பொழியும்.

8 hours ago, குமாரசாமி said:

செல்லம்!  உந்த உடுப்பு போட்ட நேரம் பேசாமல் அந்ததேரரை மாதிரி போர்த்து மூடிக்கொண்டு நிண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.:face_with_tears_of_joy:

a05a0d03-0eaa-456e-9d27-f6cdb9eb423e-Ori

Our Power Of People Party has won one seat from the national list in the 2020 General Election. Galagoda Aththe Gnanasara Thero could go to the parliament from their national list.

இப்ப இந்த உடைக்காரருக்கும் இடைஇடை அடி விழுகுது.
இது தேவையா?

8 hours ago, suvy said:

ஆஹா.....நல்லதொரு குளிர்மையான தொடர்......தொடருங்கள்......கொஞ்சம் படங்களையும் பகிருங்கள் பிரியன்.........👍  😂

பனியில் நனைய தயாராகுங்கள்.

5 hours ago, உடையார் said:

நானும் -20 குளிரை அனுபவிக்காத விளைவை Mongolia இல் அனுபவித்தேன்😂

இதுவும் ஒரு அனுபவம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

நுணா நீங்களும் இங்கு கும்மாளம் அடித்திருக்கிறீங்க போல.

என்னுடைய சில நண்பர்கள்  Folsom  ல் இருக்கிறார்கள். அங்கே வந்து தங்கி விட்டு பிறகு  லேக்குக்கு போறது சமரிலே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இப்ப இந்த உடைக்காரருக்கும் இடைஇடை அடி விழுகுது.
இது தேவையா?

சும்மா கலாய்ப்புக்குத்தானே எழுதினது.:beaming_face_with_smiling_eyes:

குடும்ப அங்கத்தவர்களையும் சேர்த்து சுவாரசியமாக எழுதுகின்றீர்கள். தொடருங்கள் வாசிப்போம்.:gutenmorgen:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே பனி பொழியக் காணொம்  ? பிசி போல ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

எங்கே பனி பொழியக் காணொம்  ? பிசி போல ...

ஓம் அக்கா.மகள் இடம் மாறுகிறா.புதிய இடத்தில் இணைய வசதிகள் இன்னும் இல்லை.இப்ப தான் வேலை நடக்குது.சிலவேளை இன்று சரிவரலாம்.

தொடர்ந்து பனிக்குள் நின்றால் விறைத்துப் போவீர்கள் தானே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

                   அடுத்த நாள் காலை 6 மணிக்கே எழும்பி ஆளாளுக்கு அதை எடு இதை எடு என்று ஒருமாதிரி தயாராகிவிட்டோம்.இறங்க முதல் வயிறு முட்ட ஒரு பிடிபிடித்தால்த் தானே போற இடங்களில் நிமிர்ந்து நிற்கலாம்.ஆனாலும் 7 மணிக்குத் தான் திறப்போம் என்று அறிவித்தல் வேறு தொங்குது.ஒரு மாதிரி காலைச் சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு லேசான பனிப் பொழிவுக்குள் புறப்பட்டோம்.

                    நேரம் போகபோக பனி கொஞ்சம் கூடுதலாக கொட்டத் தொடங்கியது.ஒரு 15-20 நிமிட ஓடிய பின்பு ஒரு சிகப்பு வெளிச்சத்தில் நின்றோம்.அதில் வலது பக்கம் திரும்ப வேண்டும். கொஞ்சம் ஏற்றமாகவும் இருந்தது.

                      பச்சை விளக்கு வந்தவுடன் வலது பக்கம் திருப்பி 25 யார் போகவில்லை சில்லு சுத்த தொடங்கிவிட்டது.மருமகன் தான் சாரதி.நான் இறங்கி பின்னால் நின்ற வாகனங்களை சுற்றிப் போகுமாறு கையைக் காட்டினேன்.பின்னுக்கு நின்ற வாகனங்கள் 4 சில்லும் பிடித்தமான வாகனங்கள் அல்லது சக்கரங்களுக்கு சங்கிலி போட்டிருந்தனர்.எங்களை பரிதாபமாக பார்த்துக் கொண்டு போனார்கள்.

                     இயன்றளவு முயற்சிகள் செய்தும் ஒரு சாண் கூட முன்னேற முடியவில்லை.சரி பின்பக்கம் எடுத்தால் சுலபமாக போகும் எனவே முதலில் கொஞ்சம் கரைக்கு எடுத்து விடுவோம் என்று நான் சைகை காட்ட மருமகன் கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கெடுத்தார்.

                     இப்படி எவ்வளவு நேரம் தான் நிற்பது வானுக்குள் சங்கிலி இருக்கிறது எடுத்து போடுவோமா என்று மருமகன் கேட்டு பதிலுக்கு காத்திராமல் தானே இறங்கி சங்கிலியை எடுத்துவந்தார்.ஆனால் இதுவரை அவரோ நானோ வாகனத்துக்கு சங்கிலி போட்ட அனுபவம் இல்லை.

                        அரை மணிநேரமாக சங்கிலியை போட முயன்றும் போட முடியவில்லை.எனது கால் பகுதி முழுவதும் பனிக்குள் நனைந்து விறைக்கத் தொடங்கிவிட்டது.சங்கிலி இந்த வானோடு வந்ததா என்று கேட்க இல்லை இது எமது காருக்கு வாங்கியது என்றார்.அதோடு கதை கந்தல்.

34a7fd98-7a28-4bab-8a8a-adc35463513e-Ori
பனி பொழியும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

படங்களுடன்… நடந்த சம்பவத்தை விபரித்த விதம் சிறப்பு.
படத்தில் தெரியும் அந்தச் சுற்றாடலை பார்க்கவே… நமக்கு கையும், காலும் விறைக்கின்றது. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

படங்களுடன்… நடந்த சம்பவத்தை விபரித்த விதம் சிறப்பு.
படத்தில் தெரியும் அந்தச் சுற்றாடலை பார்க்கவே… நமக்கு கையும், காலும் விறைக்கின்றது. 😂

மகள் திரும்ப திரும்ப தண்ணீர் போகாத சப்பாத்து வாங்குவம் என்று சொன்னா.

நான் தான் பனிக்குள் போக மாட்டேனே ஏன் வீணாக செலவு செய்வான் என்று மறுத்துவிட்டேன்.

நியூயோர்க்கில் தண்ணீர் போகாத சப்பாத்து வைத்திருக்கிறேன்.

மனைவி மகள் பேரப்பிள்ளைகளை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக விறைத்து விழுந்தாலும் பரவாயில்லை என்று சமாளித்து நின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அடுத்த நாள் காலை 6 மணிக்கே எழும்பி ஆளாளுக்கு அதை எடு இதை எடு என்று ஒருமாதிரி தயாராகிவிட்டோம்.இறங்க முதல் வயிறு முட்ட ஒரு பிடிபிடித்தால்த் தானே போற இடங்களில் நிமிர்ந்து நிற்கலாம்.

1980களில் நாங்கள் இடம் பெயர்ந்து யேர்மனிக்கு வந்த போது,   எங்களுக்கு வசிக்க கிடைத்தது அநேகமாகக் மாடிக் கட்டிடங்கள்தான். அப்பொழுது நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது  பாவித்த வார்த்தைதான்  இறங்கிறன்”. இப்பொழுது வீடுகளில்  வாழ்ந்தாலும் அந்த வார்ததை கூடவே வருகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kavi arunasalam said:

1980களில் நாங்கள் இடம் பெயர்ந்து யேர்மனிக்கு வந்த போது,   எங்களுக்கு வசிக்க கிடைத்தது அநேகமாகக் மாடிக் கட்டிடங்கள்தான். அப்பொழுது நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது  பாவித்த வார்த்தைதான்  இறங்கிறன்”. இப்பொழுது வீடுகளில்  வாழ்ந்தாலும் அந்த வார்ததை கூடவே வருகிறது.

உண்மை தான்.ஆனாலும் எமது சந்ததியோட நின்றுவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

பனிப்பொழிவும் அழகு ஆளும் அழகுதான் வயசானாலும் அழகன் தான் அண்ண

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பனிப்பொழிவைப் பார்க்கவே வேர்த்துக் கொட்டுது (பயத்தில்). ஆனால் இதெல்லாம் நல்ல அனுபவங்கள்.....பின்னாளில் நினைத்து சிரிக்க நல்லா இருக்கும்......எனக்கும் சில அனுபவங்கள் உண்டு.......தொடருங்கள்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

அந்தப் பனிப்பொழிவைப் பார்க்கவே வேர்த்துக் கொட்டுது (பயத்தில்). ஆனால் இதெல்லாம் நல்ல அனுபவங்கள்.....பின்னாளில் நினைத்து சிரிக்க நல்லா இருக்கும்......எனக்கும் சில அனுபவங்கள் உண்டு.......தொடருங்கள்......!  👍

உங்களுடைய அனுபவத்தையும் சொல்லுங்கள் சுவியர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பனிக்குள்ள தான் நம் இனம்  30 , 40    வருடங்களாக வாழ்கிறார்கள். (  வெளி நாட்டுக்கு வர ஆசைப்படுபவர்களுக்கு ) "வீடடை விட்டு வெளியில் வந்தால் எதுவும் நடக்கலாம் ...நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்ல இருக்கலாம்.  ". உன்னைக் கேட்டு  என்னைக் கேட்டு எதுவம் நடக்குமா ? என்று கவிஞ்சன்   பாடி வைத்தான். 
 வாழ்க்கையே ஒரு அனுபவம் தானே. பயணத்தில் இவ்வாறான அனுபவங்களை   எதிர்   கொள்ளத்தான் வேண்டும்.   பெரியவர்கள் சமாளித்து கொள்வார்கள்  குழந்தைகளுடன் மிகவும் சிரமம் .தொடருங்கள். ........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பனிப்பொழிவும் அழகு ஆளும் அழகுதான் வயசானாலும் அழகன் தான் அண்ண

அடபாவி நீங்க மருமகனைப் பார்த்து நான் என்று ஏமாந்திட்டீங்க.

7 hours ago, suvy said:

அந்தப் பனிப்பொழிவைப் பார்க்கவே வேர்த்துக் கொட்டுது (பயத்தில்). ஆனால் இதெல்லாம் நல்ல அனுபவங்கள்.....பின்னாளில் நினைத்து சிரிக்க நல்லா இருக்கும்......எனக்கும் சில அனுபவங்கள் உண்டு.......தொடருங்கள்......!  👍

சுவி சுகமா வீடு வந்து சேர்ந்தால் அனுபவம்.

இவைகளே ஆபத்தாகவும் முடியலாம்.

உங்கள் அனுபவத்தையும் எழுதலாமே.

5 hours ago, தமிழ் சிறி said:

உங்களுடைய அனுபவத்தையும் சொல்லுங்கள் சுவியர்.

எழுதுவார் என நம்புவோம்.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.