Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிலாமதி said:

இந்தப் பனிக்குள்ள தான் நம் இனம்  30 , 40    வருடங்களாக வாழ்கிறார்கள். (  வெளி நாட்டுக்கு வர ஆசைப்படுபவர்களுக்கு ) "வீடடை விட்டு வெளியில் வந்தால் எதுவும் நடக்கலாம் ...நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்ல இருக்கலாம்.  ". உன்னைக் கேட்டு  என்னைக் கேட்டு எதுவம் நடக்குமா ? என்று கவிஞ்சன்   பாடி வைத்தான். 
 வாழ்க்கையே ஒரு அனுபவம் தானே. பயணத்தில் இவ்வாறான அனுபவங்களை   எதிர்   கொள்ளத்தான் வேண்டும்.   பெரியவர்கள் சமாளித்து கொள்வார்கள்  குழந்தைகளுடன் மிகவும் சிரமம் .தொடருங்கள். ........

உண்மை தான் அக்கா.

அண்மையில் பவலோ நியூயோர்க்கில் கடும் பனிப் பொழிவின் போது 40 பேர்வரை இறந்திருந்தார்கள்.

  • Replies 66
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

கடந்த மார்கழியில் மகள் குடும்பத்தை பார்க்க சன்பிரான்சிஸ்கோ போயிருந்தோம். வழமையை விட கூடுதலான மழையாக இருந்தது.கலிபோர்ணியா மழை இல்லாமல் தண்ணீர் இல்லாமல் அழியப் போகுது என்று தொலைக்காட்சி பத்திரிகை செய்தி

ஈழப்பிரியன்

மலைப் பகுதியில் 6-7 மைல் போனதும் பெரிய மலையின் உச்சிக்கு ஏற்றிப் போவதற்கு கேபிள் கார்கள் ஓடிக் கொண்டே இருந்தது.மருமகன் சொந்தமாகவே சினோபோட் என்று சொல்லும் காலில் பூட்டி சறுக்கி விளையாடும் பலகை வைத்திரு

ஈழப்பிரியன்

பனிப் பொழிவு 2                          காலை 8 மணிக்கு இறங்க வேண்டும் என்று சொன்னாலும் 10 மணிக்குத் தான் இறங்க முடிந்தது. ஏறத்தாள 3 மணிநேர பயணம்.பிள்ளைகளுடன் போவதால் நின்றுநின்று போக வேண்டும்.மதி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

                           பிழையான சக்கர சங்கிலி கொண்டுவந்தபடியால் இனி வேலைக்காகது மெதுவாக திரும்ப வேண்டியது தான்.ஆனாலும் எப்படி போவது?பிள்ளைகள் விளையாட வைத்திருந்த பனி அள்ளும் சவல் எடுத்து மெதுவாக தோண்டி தோண்டி கொஞ்சம் கொஞ்சமாக அருகில் இருந்த வீட்டு பாதையில் திருப்பிவிட்டோம்.நியூயோர்க்கில் வண்டி ஓட்டும் போது பனி தொடங்கினால் றைக்சன் கொன்றோலை வேலை செய்யாமல் பண்ணிவிடுவேன்.இது ஓரளவுக்கு பனியை கவ்விப் பிடிக்கும்.நீங்களும் முயற்சி செய்யலாம்.

                           இதற்கும் அதே மாதிரி றைக்சன் கொன்ரோலை நிற்பாட்டி போட்டு பெரிய கஸ்டப்பட்டு இருபக்கமும் வந்த வாகனங்களை நான் மறிக்க பின்பக்கமாக வெளியே வீதிக்கு வந்துவிட்டது.இனி பள்ளம் என்றபடியால் மெதுவாக போய் சேர்ந்துடலாம். எனக்கும் கால் விறைத்து இயலாத கட்டம்.வானுக்குள் ஏறியவுடன் சப்பாத்து ஒன்று இரண்டு சொக்ஸ் எல்லாம் களட்டி போட்டு சூட்டையும் காலுக்கு படக்கூடிய மாதிரி திருப்பிவிட்டு இருந்தேன்.போன உயிர் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது போல இருந்தது.கொட்டேலுக்கு போய் உடைகளை மாற்றிவிட்டு எல்லோரும் ஒரு குட்டி தூக்கம்.

                            எழும்பி பார்த்தால் பெரியபெரிய தடலாக பனி கொட்டோ கொட்டுன்னு கொட்டுது.எல்லா அறைக் கதவுகளிலும் அறிவித்தல் ஒட்டப்பட்டிருக்கிறது.

                             இப்போது முதல் மறு அறிவித்தல்வரை அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.சக்கரத்துக்கு சங்கிலியோ வாகனத்துக்கு நான்கு சக்கரத்துக்கும் பிடிப்புள்ள வாகனம் மட்டுமே வீதியில் ஓடலாம் என்று இருந்தது.மதிய சாப்பாடும் அம்போ தான்.வீட்டிலிருந்து கொண்டு போன ரூணா பாண் வாழைப்பழம் இதை வைத்து ஒருமாதிரி சமாளித்தாகிவிட்டது.இனி என்ன செய்வது திரும்பவும் படுக்கை தான்.பிற்பகல் எழும்பி வாகனத்தை கொஞ்சம் துப்பரவாக்கி வைத்திருந்தால் நாளைக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும் என்று வெளியே போனால் இந்த நிலையில் வாகனம்.

 

IMG-1997.pngவிடுதியில் இருந்த சவல் தும்புதடியைக் கொண்டு மகளும் மருமகனும் துப்பரவாக்கினர்கள்.எனது சப்பாத்து இன்னமும் ஈரமாக இருந்ததால் என்னால் உதவி செய்ய முடியவில்லை.

                                   பனிப் பொழிவுக்கு மத்தியிலும் நீச்சல் தடாகத்தில்.

பனிப் பொழியும்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மத்தியானம் பார்த்த வாகனத்தையும் பிற்பகல் பார்க்கும் வாகனத்தையும் பார்க்க எவ்வளவு பனி கொட்டியிருக்கிறது என்பதை நீங்களே ஊகிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

(5)                     

                          இரவு சாப்பாட்டுக்கு வெளியே போகவும் முடியாது கொண்டுவந்தும் தர மாட்டார்களாம்.சரி இருங்கோ வாறன் என்று சிற்றூண்டிசாலைப் பக்கம் போனால் பூட்டிக்கிடக்கறது.
                           மெதுவாக வரவேற்பறையில் இருந்தவளுடன் கதையைப் போட்டு கொஞ்ச பணமும் கொடுத்தேன்.சரி ஒரு 15-20 நிமிடம் இருந்துகொள் ஏதாவது செய்கிறேன் என்றாள்.சொன்னது போலவே 15வது நிமிடம் தன்னோடு கூட்டிக் கொண்டு சிற்றூண்டிச்சாலைப் பக்கம் போய் கதவைத் திறந்து எல்லாம் நாளை காலைக்காக வைக்கப்பட்டிருக்கு தேவையானதை எடு என்றாள்.

                           கூடுதலாக எடுக்காமல் பாண் பழங்கள் பிள்ளைகளுக்கு பட்டர் ஜாம் என்று எடுத்துவிட்டு இன்னும் கொஞ்சபணம் கொடுத்தேன்.சந்தோசமாக வாங்கினாள்.வேறு ஏதாவது தேவை என்றால் வரவேற்பறைக்கு வா என்றாள்.இத்தனையும் தந்ததே கடவுளைக் கண்டமாதிரி.அறையில் இரவுச் சாப்பாடு சரி.

                             பகல் முழுவதும் படுத்தபடியால் இரவு எல்லோருக்கும் நித்திரைக்குப் பிரச்சனை.சரி இப்படியே இருக்க முடியாது சூடாக்கப்பட்ட நீச்சல்தடாகத்தில் குளிக்கப் போகிறேன் யார்யாருக்கு வர விருப்பம் என்றால்.ஆளையாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.நான் துவாயும் எடுத்துக் கொண்டு போய்விட்டேன்.
                              எமது அறையில் இருந்து பார்க்க நீச்சல்தடாகம் தெரிந்தது.

b153e0c8-72ff-4d70-ad43-3565cf7dcc55-Ori
                              நான் தைரியத்துடன் போனாலும் வெளியில் இருந்து அறையில் உடுப்புகளை கழற்றிவிட்டு வெறும் காலுடன் பனிக்குள் நடக்க வேண்டுமே என்பதை எண்ண நடுக்கமாகவே இருந்தது.இனி என்ன சொல்லிப் போட்டு வேற வந்துவிட்டேன் திரும்பவும் போகவா முடியும்.திடுதிடென்று போய் தண்ணீரில் இறங்கிவிட்டேன்.யன்னலால் பார்த்துக் கொண்டிருக்க அவர்களுக்கும் இருப்புக் கொள்ளவில்லை.என்ன எண்ணினார்களோ எல்லோரும் வந்துவிட்டனர்.

IMG-1999.jpg
 

                             ஒருமணி நேரத்துக்கு மேலாக நல்ல சூடான தண்ணீர் குளிக்க நல்ல சுகமாக இருந்தது.வெளியே போகவே மனம் வரவில்லை.முக்கியமாக பிள்ளைகள்.ஒரு மாதிரியாக எல்லோரும் அறைக்குப் போய் நன்றாகவே தூங்கிவிட்டோம்.

                              அடுத்தநாள் காலை 11 மணிக்கிடையில் கொட்டேலை விடவேண்டும்.பனியில் சறுக்கி விளையாடாமல் வீடு போகமாட்டோம் என்று மகளும் மருமகனும் வேற அடம்பிடிக்கிறார்கள்.சரி முட்டை முடிச்சுக்களுடன் கிளம்புவோம் அதற்கிடையில் பக்கத்தில் ஏதாவதொரு இடத்தில் சக்கரத்துக்கு சங்கிலியை வாங்கி மாட்டுவோம் என்று முன்னரே பேசிக் கொண்டோம்.

பனிப் பொழியும்.

Edited by ஈழப்பிரியன்
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பனி பொழியட்டும்.......!  👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடருங்கள் ..பனி பொழியட்டும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

பனிப் பொழியும்.

ப்ரோ! பனி பொழியட்டும் ப்ரோ..... :cool:

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாசிக்கவே சரியாக குளிருது . தொடருங்கள் அண்ணா.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

              கடைசி பதிவு.

 

நாளைக் காலை கொட்டேல் விட வேண்டும்.சக்கரத்துக்கு சங்கிலி போட வேண்டும்.பனியில் சறுக்கி விளையாடி முடிந்து சுகமாக வீடு போய் சேரணும்.

                                  காலையில் வேளைக்கே எழும்பினாலும் 7 மணிவரை சிற்றூண்டிச்சாலை திறக்கும் வரை காத்திருந்து மருமகனும் நானும் முதலாளாய் போய் சாப்பிட்டுவிட்டு சங்கிலி எங்கே போடலாம் என்று விசாரிக்க எண்ணெய் நிரப்பு நிலையத்துக்கு போனோம்.அங்கு சங்கிலி இருந்தது. ஆனாலும் கூட பணம் சொன்னார்கள்.இந்த நேரத்தில் பணத்தை பார்க்க முடியுமா?வாங்கி ஒரு 10 நிமிடத்திலேயே மாட்டிவிட்டோம்.

IMG-3110-Original.jpg
 

                               மிகவும் சந்தோசத்துடன் கொட்டேலுக்கும் போனோம். ஏற்கனவே பெட்டி படுக்கைகளுடன் புறப்பட தயாராக இருந்தவர்களையும் ஏற்றிக் கொண்டு தெரிவு செய்திருந்த இடத்துக்கு புறப்பட்டோம்.

                               அந்த இடத்துக்கு போறதற்கு நெடுஞ்சாலை எடுத்தே போக வேண்டும்.நெடுஞ்சாலையில் வானை ஏற்றினால் பொலிஸ் தடை போட்டு 4 சக்கர பிடிப்புள்ள வாகனம் அல்லது சக்கர சங்கிலி போட்ட வாகனம் மட்டுமே போகலாம் என்று சொன்னார்கள்.எமது வாகனத்தையும் மறித்து பார்த்துவிட்டு மெதுவாக போக சொன்னார்கள்.

IMG-2005.png
                             நெடுஞ்சாலையில் இருந்து மலையடிவாரம் போகும் இடமெல்லாம் 8-10 அடி பனி.வீதிகளை துப்பரவாக்கி கரையில் ஒதுக்கிவிட்டிருந்தனர்.வீட்டுக்கு வீடு ரைக்கர் மாதிரி பெரிய பனி அள்ளிக் கொட்டும் இயந்திரங்கள் வைத்திருக்கிறார்கள்.

மாலை தொடரும்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்

அனுபவத் தொடர் அருமை அண்ணா, தொடருங்கள்.

தவிச்ச முயல் அடிப்பவர்கள் அங்கும் உள்ளார்கள்!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

                               மலைப் பகுதியில் 6-7 மைல் போனதும் பெரிய மலையின் உச்சிக்கு ஏற்றிப் போவதற்கு கேபிள் கார்கள் ஓடிக் கொண்டே இருந்தது.மருமகன் சொந்தமாகவே சினோபோட் என்று சொல்லும் காலில் பூட்டி சறுக்கி விளையாடும் பலகை வைத்திருந்தார்.மகள் ஸ்கீனிங் என்று காலில் பூட்டி இரண்டு தடி ஊன்றி சறுக்கி விளையாட வாடகைக்கு எடுத்தா.

IMG-2007.jpg

https://www.facebook.com/100051745984442/posts/pfbid0yrWfidKdNxtry1VWyEt8Ynj8RbJhqmgSVTGNDGLAu9TW2XQZ45DAdzJz8cwUt732l/

                                நாங்கள் பேரப் பிள்ளைகளுடன் கொஞ்ச நேரம் எல்லோர் விளையாட்டுக்களையும் பார்த்து ரசித்தோம்.பலர் சறுக்கி வரும்போது பலதடவை கரணம் அடித்து விழுந்து எழும்பி திரும்பவும் சறுக்கினார்கள்.சிலரைப் பார்த்தா வேணும் என்று சறுக்கி விழுந்த மாதிரியே இருந்தது.நீண்ட நேரம் நிறக முடியவில்லை.குளிர் காற்று எப்படி மூடிக் கட்டினாலும் குளிரவே செய்தது.குழந்தைகள் வேறு பனிக்குள் விளையாடி ஆளாளுக்கு தலையெல்லாம் பனி அள்ளிக் கொட்டி நனைந்து போனார்கள்.மெதுவாக பக்கத்தில் இருந்த சிற்றுண்டிச்சாலைக்கு போய் பீச்சா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

                                 ஏறத்தாள 2 மணிநேரம் சறுக்கி விளையாடி முடிந்து களைத்துப் போய்வந்தார்கள்.மீண்டும் எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு சுகமாக வீடுவந்து சேர்ந்தோம்.
முற்றும்.

Edited by ஈழப்பிரியன்
  • Like 7
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருவருடைய அனுபவங்கள் இன்னொருவருக்கு பாடமாய் அமையும். அனுபவ பகிர்வுக்கு நன்றி . எல்லாம் சுபமே முடித்தையிட்டு மகிழ்ச்சி . அதிகாலை ரெஸ்டாரண்ட் காரியிடம் கையூட்டு கொடுத்து உறவுகளுக்கு உணவு வாங்கினீர்கள் பாருங்கோ அங்கே  தான் அப்பா தாத்தா எனும் கம்பீரம்.  

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு வித்தியாசமான அனுபவம் போலத் தான் உள்ளது...!

நாங்களும் உங்களுடன் சேர்ந்து சறுக்கியது போல உங்கள் எழுத்து நடை..!

மிக்க நன்றி, ஈழப்பிரியன்..!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு ஜாலியான தொடர்........!   👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போனதுதான் போனீர்கள். நீங்களும் ஒருமுறையாயினும் சறுக்கிப்பார்த்திருக்கலாம் அண்ணா

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/4/2023 at 16:52, நிலாமதி said:

ஒருவருடைய அனுபவங்கள் இன்னொருவருக்கு பாடமாய் அமையும். அனுபவ பகிர்வுக்கு நன்றி . எல்லாம் சுபமே முடித்தையிட்டு மகிழ்ச்சி . அதிகாலை ரெஸ்டாரண்ட் காரியிடம் கையூட்டு கொடுத்து உறவுகளுக்கு உணவு வாங்கினீர்கள் பாருங்கோ அங்கே  தான் அப்பா தாத்தா எனும் கம்பீரம்.  

அக்கா இப்படி ஒரு நிலை வருமென்று யாரும் எண்ணியிருக்கவில்லை.அவர்களுக்கும் சிற்றூண்டிசாலையை திறந்துவிட்டால் காலையில் இலவச உணவு கொடுக்க வேண்டுமே என்ற பயம். அத்தோடு அவசரகாலநிலை போட்டிருந்ததால் வீடு திரும்ப வேண்டிய பலர் மீண்டும் அறை எடுத்து தங்கியதால் கொட்டேலிலும் அறை இல்லை.இத்தனை பேருக்கும் காலை சாப்பாடு போட வேண்டும்.

On 9/4/2023 at 17:09, புங்கையூரன் said:

ஒரு வித்தியாசமான அனுபவம் போலத் தான் உள்ளது...!

நாங்களும் உங்களுடன் சேர்ந்து சறுக்கியது போல உங்கள் எழுத்து நடை..!

மிக்க நன்றி, ஈழப்பிரியன்..!

மிகவும் நன்றி புங்கை.

17 hours ago, suvy said:

நல்லதொரு ஜாலியான தொடர்........!   👍

உங்கள் தொடர் ஆதரவுக்கு மிகவும் நன்றி சுவி.

5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

போனதுதான் போனீர்கள். நீங்களும் ஒருமுறையாயினும் சறுக்கிப்பார்த்திருக்கலாம் அண்ணா

எனக்கும் மிகவும் ஆவலாகவே இருந்தது.

ஆனாலும் ஏற்கனவே இரண்டு டீஸ்க் சிலிப்பாகி ரொம்பவும் நொந்துவிட்டேன்.எங்கே போனாலும் பாரம் தூக்குவதானாலும் நாரிக்கு பெரிய பட்டி அணிந்து தான் போவேன்.

சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடுமா?

On 9/4/2023 at 10:28, ஏராளன் said:

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்

அனுபவத் தொடர் அருமை அண்ணா, தொடருங்கள்.

தவிச்ச முயல் அடிப்பவர்கள் அங்கும் உள்ளார்கள்!

நன்றி ஏராளன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுபவக் கட்டுரை நன்றாக உள்ளது.. பனிமழை அழகுதான்.. இங்கே இப்படி பார்க்கவே முடியாது.. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

போனதுதான் போனீர்கள். நீங்களும் ஒருமுறையாயினும் சறுக்கிப்பார்த்திருக்கலாம் அண்ணா

பெரிசு ! ஏற்கனவே பந்தா காட்ட வெளிக்கிட்டு  சறுக்கி விழுந்தது தெரியாதா? :cool:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, குமாரசாமி said:

பெரிசு ! ஏற்கனவே பந்தா காட்ட வெளிக்கிட்டு  சறுக்கி விழுந்தது தெரியாதா? :cool:

மரத்தில ஏறி விழுந்ததையா சொல்றீங்க?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அனுபவக் கட்டுரை நன்றாக உள்ளது.. பனிமழை அழகுதான்.. இங்கே இப்படி பார்க்கவே முடியாது.. 

நன்றி சகோதரி.

பனிமழை அழகு தான்.ஆனாலும் ஆபத்தும் உள்ளது.

1 hour ago, குமாரசாமி said:

பெரிசு ! ஏற்கனவே பந்தா காட்ட வெளிக்கிட்டு  சறுக்கி விழுந்தது தெரியாதா? :cool:

அதெல்லாம் ஒரு கனாக்காலம்.

1 hour ago, ஏராளன் said:

மரத்தில ஏறி விழுந்ததையா சொல்றீங்க?

அடபாவிகளா மறக்காமல் இருக்கிறீர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூப்பர் ரா இருக்கு  enjoy 
 

  • Thanks 1
Posted

நல்ல risk  எடுத்து பனி மழையை அனுபவித்துள்ளீர்கள். வாசித்து ரசித்தேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஏராளன் said:

மரத்தில ஏறி விழுந்ததையா சொல்றீங்க?

சறுக்கி விழுந்தது பிலா மரத்தாலை எண்டதை என்ரை வாயாலை சொல்ல மாட்டன் :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

சறுக்கி விழுந்தது பிலா மரத்தாலை எண்டதை என்ரை வாயாலை சொல்ல மாட்டன் :rolling_on_the_floor_laughing:

இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை.

7 hours ago, Maruthankerny said:

சூப்பர் ரா இருக்கு  enjoy 
 

மருது நன்றி.

7 hours ago, nunavilan said:

நல்ல risk  எடுத்து பனி மழையை அனுபவித்துள்ளீர்கள். வாசித்து ரசித்தேன்.

நன்றி நுணா.நீங்கள் இந்த இடத்துக்கு பரிச்சயம் என்றபடியால் நல்லதாக போச்சு.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லொதொரு அனுபவப பகிர்வு. ஏழப்பிரியன் ஐயா 


இது போன மார்கழியில் குளிரான காலப்பகுதியில் நடந்த சம்பவமா?


மே, ஜுன் ஆகிய மாதங்களில்  காலனிலை எப்படி இருக்கும்? ஏனென்றால் நான் அடுத்த மாதம் லாஸ் ஏஞலஸ், சன் ப்ரான்சிச்கோ, நியூ யேர்க், ஹூஸ்டன் மற்றும் ஓர்லாண்டோ ஆகிய பகுதிகளையும் கன‌டாவின் டொரோன்டாவுக்கும் விசிட் பண்ணலாம் என இருக்கின்றேன். இப்பொழுது வெயில் காலம் ஆரம்பித்து விட்டதா? 

  • Thanks 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குரங்கும்...சுமந்திரனும் ஒன்றா கோபாலு ?
    • முன் பின் அனுபவம் இருந்தால் எங்களுடன் பகிருங்கள். போற வழிக்கு புண்ணியமாய் போகும் 😂
    • தென்னிலங்கை செய்திகள் 36 நிமிடம் நேரம் முன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேர் போதைப்பொருளுடன் கைது!   நான்கு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேரை கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களுடன், 1 கிலோ 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 835 கிராம் ஹெரோயினுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மூன்று பேர் பயணித்த சந்தேகத்திற்குரிய முச்சக்கரவண்டியில் ஒருவர் வைத்திருந்த 5,140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கஹதுடுவ பொலிஸ் அதிகாரிகள் குழு கைப்பற்றியது. சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சந்தேகநபர் ஒருவரின் கைப்பேசியில் பதிவான இணைய வரைபடத்தின் ஊடாக கிரிவத்துடுவ முனமலேவத்தை 16ஆம் லேனில் அமைந்திருந்த சந்தேகத்திற்கிடமான வீடொன்றில் சோதனையிட்ட போது அங்கிருந்த வயோதிப தம்பதியினர் வீட்டினுள் இருந்த நாள் ஒன்றை அவிழ்த்து விட்டு பொலிஸ் அதிகாரிகளை விரட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர். இதற்கிடையில், மற்றுமொரு நபர் வீட்டின் பின் கதவின் வழியாக  பொதி ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது அவரை கைது செய்து குறித்த பொதியை சோதனையிட்ட போது அதில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரை விசாரித்த போது முச்சக்கரவண்டி சாரதியான தனது மாமாவிற்கு இந்த வாடகை வீடு சொந்தம் எனவும், அவர் கொழும்பு பிரதேசத்தில் வேலை செய்வதாகவும் தான் கிருலப்பனை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இரண்டு நாள் தடுப்புப் காவல் உத்தரவின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.    https://newuthayan.com/article/வயோதிப_தம்பதியினர்_உட்பட_6_பேர்_போதைப்பொருளுடன்_கைது!  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.