Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2023 at 22:41, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது சிறந்த ஐடியாவா இருக்கே. 😃

ஆம் நிச்சயமாக....உங்களுடைய வெளிநாட்டு நண்பர்கள் ஊருக்கு போகும் போது   வாடகைக்கு விட ஒரு கார்.  போதாது....

  • Replies 378
  • Views 31.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    இரண்டு   என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பன்னிரண்டு    முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பத்தொன்பது    எனது முகநூல் மெசெஞ்சரில் நீங்கள் இன்னும் ஊரில் தான் நிற்கிறீர்களா என்ற செய்தி வந்திருந்தது. பார்த்தால் சகாரா. தானும் அங்கு வருவதாக கூறியிருந்தாலும் வேலைகள் தொடர்ந்து காணியில் ந

  • கருத்துக்கள உறவுகள்
On 16/5/2023 at 19:38, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தங்கச்சி 9000 ரூபாய்கள் கேட்கின்றார். என்ன சொல்ல என்கிறார். சரி வரச் சொல்லுங்கள் என்கிறேன். விமான நிலையம் வந்து செக்கின் முடிய கணவருக்கு போன் செய்ய, நாம் வரும்போது ஊபருக்கு 3000 ரூபாய்தான் கொடுத்தோம். கோட்டலில் உள்ளவர்கள் உன்னை நன்றாக ஏமாற்றிவிட்டனர்

ருபாய் இல் பார்க்கும் போது பெரிய எண்ணிக்கையில் தெரியும்....பவுண்டுகளில். மாற்றி பாருங்கள் சின்ன எண்ணிக்கையில் வந்து விடும்   அட.  25. பவுண்டுகள் தானே என்று எண்ணத்தோண்றும்.  மேலும்  பிறந்த நாளை இலங்கையில் கொண்டியிருக்கலாம்.      ஒரு 4.    5.   கிழமைகள்.   பிந்தியிருக்கும்.   

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்         எழுதி முடித்து விட்டீர்களா.    ?

  • கருத்துக்கள உறவுகள்

சுமே பல பந்திகளை தவறவிட்டுவிட்டேன்.ஆறுதலாக பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/5/2023 at 03:38, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நானாட்டானில் இருந்து மன்னார் மன்னார் வரும்போதும் எனக்கு கடைசி இருக்கை தான். அரச பேருந்து அதிவேகமாகச் செல்லும். எனக்கு முன்னால் பிடிப்பதற்குக் கூட எதுவும் இல்லை.அது ஐந்துபேர் இருக்கக்கூடிய இருக்கை. நாம் நாங்கு பேர்தான். ஒரு ஐம்பது மதிக்கத்தக்க ஒருவர் என்னருகில். பிரேக் பிடித்தால் நான் விழுந்துவிடுவேன் என்ற பயத்தில் முன் இருக்கையின் கம்பியை இறுக்கிப் பிடித்தபடி இருக்க, நித்திரை தூங்கியபடி என் கைகளில் தலையைக் கொண்டுவந்து சாய்ப்பதும் நான் கையை எடுப்பதுமாக இருக்க, அவர் வேண்டுமென்றே செய்கிறாரா அல்லது தற்செயலானதா என்று புரியாவிட்டாலும் கூட இதுக்கு மிஞ்சி சகிக்க முடியாது எனறு எண்ணி என் பலம் கொண்ட மட்டும் அவர் தலையை கைகளால் தள்ள திடுக்கிட்டு விழித்தவர்போல் என்னைப் பார்க்க, அண்ணா என்ர கையில படுக்காதேங்கோ. நித்திரை வந்தால் பின்னால சாய்ந்து படுங்கோ என்றபின் மன்னார் வரும்வரை அவர் நித்திரையே கொள்ளேல்லை. 

சகோதரி,

உங்கள் பதிவுகள் முழுவதும் வாசித்து முடிய இன்னமும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை  -  in progress… நன்றாக இருக்கிறது.

 நானும் சென்ற மாசி மாதம் இலங்கை சென்றிருந்தேன். உங்களை ஒட்டிய பல அனுபவங்கள் எனக்கும் கிடைத்தன. பயணங்கள் இனிமையானவை.

உங்கள் கையில் தூங்கி விழுந்த அந்த வயோதிபரின் தலையை நீங்கள் தள்ளி விட்ட படலம் வாசிக்கும் போது நினைவில் தட்டி நிற்கும் நிகழ்வொன்று..

 சென்ற வருட இறுதியில்  ஐரோப்பிய பயணம் சென்றிருந்த போது , உலகிலேயே சாய்வு கூடிய ரயில் பாதையில் பயணம் செய்து சுவிஸ் ஆல்ப்ஸின் உச்சியொன்றிற்கு போகும் சந்தர்ப்பம் கிடைத்தது.

மனோரம்மியமான சுற்றுப்புற சூழல் காட்சிகள். ( சிவந்த மண் சிவாஜி -காஞ்சனா  காட்சிகளை  மனதில் கொள்க…) .

மிகுந்த ஆர்வத்துடன் எனது போன் கமராவை செல்ஃபீ  தடியில் கொழுவி  சீற்றிட்கு கீழே முழந்தாளிட்டபடி வெளியேயிருந்த  சுற்றுப்புற சூழ்நிலைகளை கவர் பண்ணிக் கொண்டிருந்தேன்.

சில காட்சிகளை ரயில் தாண்டு முன்  பிடித்துவிடவேண்டுமே என்று,  எனது பொசிஷனை  அடிக்கடி நகர்த்திக்கொண்டிருந்திருந்தேன் என்று நினைக்கிறேன் .

இருந்தாற்போல் எனது  கால் ஒன்றிற்கு இன்னொரு காலினால் பலத்த அடியொன்று விழ,  திடுக்கிட்டுப் போய் கீழே பார்த்தேன். சுருங்கிப்போன சிறிய காலொன்று எனக்கு உதைத்து விட்டு விலகிக் கொண்டிருந்தது.

சற்றே நிமிர்ந்து பார்த்தால் ஒரு 95 வயது மதிக்கக் கூடிய ஒரு பெண்மணி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தார் , அந்த காலுக்கு சொந்தக்காரராக.

ஆர்வக்கோளாறில் அவரது காலுக்கு இடித்து விட்டேன் என்று உணர்ந்து கொண்டு , அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.  அவர் மன்னிக்கவில்லை என அவர் முகக்குறிப்பு உணர்த்திற்று .

பேரிளம்  பூவையர் பொது போக்குவரத்து இடங்களில் அப்பாவி  ஆடவர்  மீது  தவறுதலாக நடக்கும் நிகழ்வுகளுக்கு கடும் கோபம் கொள்வதும் ஏனோ  .

இந்தத்தன்மை இனம் , மொழி , கலாச்சாரம் தாண்டி உலகளாவிய  ரீதியில் ஒன்றாகவே  இருப்பது போல தோன்றுகிறதே ……

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 16/5/2023 at 19:15, suvy said:

ஒரு ஜான்சிராணி யாழில் இருப்பது எமக்குப் பெருமையாக இருக்கின்றது........!  😂

ம்க்கும் 😀

On 16/5/2023 at 23:55, நிலாமதி said:

தற்போது உள்ள காலம்  நாம் வாழ்ந்த காலம் இல்லை. எல்லாமே   மாறிவிடட து   .ஊரோடு ஒத்து ஓடவேண்டியதாயிருக்கிறது.  தொடடதற்கும் வாளும் பொல்லும் கத்தியும்பேசுகிற காலம். போதை யால் சீரழிகிறார்கள்.   

உண்மைதான் அக்கா பாரிய மாற்றம் எங்கும். பல்லைக் கடித்துக்கொண்டு வாழ்ந்தால்த்தான் உண்டு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 17/5/2023 at 05:45, Kavi arunasalam said:

சுமேரியர், வேதநாயகம் தபேந்திரன் புலத்தில் உள்ளவர்களுக்கு ஏதோ சொல்ல வருகிறார் கவனித்தீர்களா? குறிப்பாக 09,10,11 என்று இலக்கங்களில்  உள்ள  வரிகள்

படத்துக்கு நன்றி அண்ணா.

தபேந்திரன் கூறியிருப்பது எல்லாம் சரியென ஒத்துக்கொள்ள முடியாது அண்ணா. இங்கக்கு பெரிய வளவுகள் வைத்திருப்பவர் குறைவு. அதிலும் தாயக்கத்தைப் போல பெரு மரங்கள் இருக்கும் வீடுகள் மிகக் குறைவு. அங்கு நிரந்தரமாக வாழ்பவர்களே உயிர் வேலிகளை வைத்திருப்பதில்லை. அதுவும் வசதி குறைந்தவர்கள் கூட  கதியால்களை அகற்றிவிட்டு மதிலோ தாகரமோ அடைக்கிறார்கள். அறிவுள்ளவர்கள் யாரும் வளவுக்குள் உள்ள மரங்களை அழிக்கமாட்டார்கள். நான் கவனித்தவரை என் அயலிலேயே பல வீடுக்களில் மரங்கள் இல்லை.  ஏன் வெட்டிவிட்டீர்கள் என்று கேட்டால் குப்பையைக் கூட்ட முடியவில்லையாம். 

புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் காணிகளை விற்றும் விட்டனர். தற்போது காணிகளை வாங்கிக்குவிப்பதாகக் கூறப்படுவோர் ஏதோ எமது நாட்டில் நல்லது செய்து நான்கு பெருக்காவது வேலைவாய்ப்பைக குடுக்கலாம் என்ற நல்ல நோக்கத்திலேயே காணிகளை வாங்குகின்றனர். ஒருசிலர்தான் வீணாக ஆடம்பரத்துக்காக மாடி வீடுகளைக் கட்டி வீட்டைப் பார்க்க ஆட்களையும் நியமித்து பணத்தையும் கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அதனால்தான் காணிகள் விலை என்று கூறுவது மிகத் தவறு. எமது ஊரில் ஒரு பரப்பு 30-60 லட்சம் வரை போகிறது. அதுவே நான் காணி வாங்கிய இடத்தில் 8 - 12 இலட்சயமே போகிறது ஒரு பரப்புக் காணி. எமது ஊரில் நான் வாங்கியிருந்தால் வெறும் 5 பரப்புக் காணி மட்டுமே வாங்கியிருக்க முடியும். எம்மூரில்  காணிகளே விற்பனைக்கு இல்லை என்பது வேறு விடயம். தாம் வசிக்கும் இடத்தை விட்டு பக்கத்து ஊருக்குக் கூடப் போக விரும்பாதவர்கள்தான் அங்கு உள்ளவர்கள். அதனால் தான் காணிகள் அதிக விலை போகின்றன..அடுத்தது 10 லட்சம் போகும் காணியை தமது புரோக்கர் பணத்துக்காக 15,16 எனக் கூட்டி விலை ஏற்றுபவர்கள் புரோக்கர்மார் தான். வெளிநாட்டினரே எல்லாக் காணிகளையும் வாங்குகின்றனர் என்பது மிகைப்படுத்தல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ இப்போதுதான் வெளிநாட்டுக்குச் செல்லும் ஆசை எம்மவருக்கு அதுவும் விடுமுறைக்குச் செல்லும் எம்மவரைப் பார்த்து என்று கூறுவதும் முற்றுமுழுதான உண்மை அல்ல. நாம் இங்குள்ள கடின வேலைகளை, குளிரை, நின்மதியை,நோய்களை என்று எவற்றைச் சொன்னாலும் நம்பாது வெளிநாட்டுக்குத் தாமும் சென்று பணம் ஈட்ட வெட்டும் என்பது அவர்களது அடிப்படை ஆசை. இக்கரை மாட்டுக்கு அக்கரை  பச்சை என்று சும்மாவா சொன்னார்கள். வெளிநாட்டில் இருந்து செல்பவர்கள் பாவம் அவர்களிடம் போதிய பயணம் இல்லை எமது பணத்தில் அவர்களை இதையாவது அனுபவிக்க வைப்போம் என்று  இங்கிருந்து பொருட்களையோ நகைகளையோ அல்லது பணத்தையோ அவர்களுக்கு வாரி இறைக்கும்போது மட்டும் வேண்டாம் எனறு சொல்லாமல் அனுபவித்துவிட்டு அவர்கள் டம்பம் காட்டுகிறார்களென்பது என்ன நியாயம்????

என்ன சொன்னாலும் நாம் பிறந்த மண்ணில் எங்கள் ஆசைக்கு காணிகளை வாங்கும் உரிமை  வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு  உண்டு. காணி மலிவாக வேண்டும் என்றால் மலிவாக இருக்கும் இடத்தில் நீக்கள் போய் வாங்குவதை யாருமே தடுப்பதில்லையே. 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 17/5/2023 at 17:30, தனிக்காட்டு ராஜா said:

ஊர் நாடு என்பனவற்றின் நிலை விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது. @மெசொபொத்தேமியா சுமேரியர் அப்படியே, மண்ணெண்ணெய்,சிலிண்டர் வாயு,பெற்றோல் இந்த வரிசையில் நின்ற சம்பவங்கள் எழுதினால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்

நான் வரும்போது பேற்றோல் வரிசை குறைந்திருந்தது. நான் ஸ்கூட்டி வாங்கும்போது கியூவா கோட் முறை ஆரம்பித்துவிட்டாபடியால் எனக்கு அதுபற்றி எழுதிய ஒன்றும் இல்லை. 

ஆனால் சிலிண்டர் விலை 25000 ரூபாய்களாக உயர்ந்திருந்தது மட்டுமன்றி இலகுவில் வாங்கவும் முடியவில்லை. அதுகும் வெளிநாட்டுக் காறியைக் கொண்டு ஒன்றை இலவசமாக வாங்கி விடவேண்டும் என்பதில் என் சித்தி குறியாக இருந்ததில் கெதியா ஒன்றை வாங்கு என்று எனக்கு கரைச்சல் வேறு. யாழ்ப்பாணம்,  சுண்ணாகம், வரும்வழி, போகும் வழி எனக்கும் சிலிண்டர் பார்ப்பதே ஒரு வார வேலை. கொட்டடியில் பெரிய விற்பனை நிலையம் உண்டென்று அங்கு சென்றால் அங்கும் இல்லை. பின்னர் அவர்களில் ஒருவர் தந்த தொலைபேசிக்கு தொடர்புகொண்டு கதைக்க ஒரேஒரு சிலிண்டர் தான் இருக்கு. 25000 ரூபாய்கள் என்றும் கொண்டுவந்து தருவதற்கு 2000 ரூபாய்கள் என்றும் கூற சம்மதித்ததும் மாலையே கொண்டுவந்து தந்துவிட்டுச் சென்றனர். மீண்டும் நான் வருவதற்கு முன்னர் காஸ் விலை கூடப்போகிறது என்ற செய்தி வந்ததும் மீண்டும் கடைகளில் காஸ் சிலிண்டர்களை ஒளித்துவைத்துவிட்டு இல்லை இல்லை என்ற வார்த்தை மட்டும்தான்.

On 18/5/2023 at 15:27, Sabesh said:

உங்களது நேரத்தை செலவு செய்து, மிகவும் நேர்த்தியாக பல விடையங்களை நாங்கள் அறியும் படியாக விளக்கமாகவும் சுவாரசியமாகவும் எழுதியததற்கு மனமார்ந்த நன்றி சுமே.

வருகைக்கு நன்றி சபேஷ்

12 hours ago, Kandiah57 said:

ருபாய் இல் பார்க்கும் போது பெரிய எண்ணிக்கையில் தெரியும்....பவுண்டுகளில். மாற்றி பாருங்கள் சின்ன எண்ணிக்கையில் வந்து விடும்   அட.  25. பவுண்டுகள் தானே என்று எண்ணத்தோண்றும்.  மேலும்  பிறந்த நாளை இலங்கையில் கொண்டியிருக்கலாம்.      ஒரு 4.    5.   கிழமைகள்.   பிந்தியிருக்கும்.   

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்         எழுதி முடித்து விட்டீர்களா.    ?

நாங்கள் லண்டனில் வசித்தாலும் சாதாரண குடிமக்கள் தான். அதனால் எங்கள் வீட்டிலோ வங்கியிலோ கட்டுக்கட்டாக பணமிருக்காது. இருந்திருந்தால் நான் எங்கேயோ இருந்திருப்பன்.😃

8 hours ago, ஈழப்பிரியன் said:

சுமே பல பந்திகளை தவறவிட்டுவிட்டேன்.ஆறுதலாக பார்க்கிறேன்.

பரவாயில்லை நேரம் இருந்தால் வாசியுங்கள்  அண்ணா.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சாமானியன் said:

சகோதரி,

உங்கள் பதிவுகள் முழுவதும் வாசித்து முடிய இன்னமும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை  -  in progress… நன்றாக இருக்கிறது.

 நானும் சென்ற மாசி மாதம் இலங்கை சென்றிருந்தேன். உங்களை ஒட்டிய பல அனுபவங்கள் எனக்கும் கிடைத்தன. பயணங்கள் இனிமையானவை.

உங்கள் கையில் தூங்கி விழுந்த அந்த வயோதிபரின் தலையை நீங்கள் தள்ளி விட்ட படலம் வாசிக்கும் போது நினைவில் தட்டி நிற்கும் நிகழ்வொன்று..

 சென்ற வருட இறுதியில்  ஐரோப்பிய பயணம் சென்றிருந்த போது , உலகிலேயே சாய்வு கூடிய ரயில் பாதையில் பயணம் செய்து சுவிஸ் ஆல்ப்ஸின் உச்சியொன்றிற்கு போகும் சந்தர்ப்பம் கிடைத்தது.

மனோரம்மியமான சுற்றுப்புற சூழல் காட்சிகள். ( சிவந்த மண் சிவாஜி -காஞ்சனா  காட்சிகளை  மனதில் கொள்க…) .

மிகுந்த ஆர்வத்துடன் எனது போன் கமராவை செல்ஃபீ  தடியில் கொழுவி  சீற்றிட்கு கீழே முழந்தாளிட்டபடி வெளியேயிருந்த  சுற்றுப்புற சூழ்நிலைகளை கவர் பண்ணிக் கொண்டிருந்தேன்.

சில காட்சிகளை ரயில் தாண்டு முன்  பிடித்துவிடவேண்டுமே என்று,  எனது பொசிஷனை  அடிக்கடி நகர்த்திக்கொண்டிருந்திருந்தேன் என்று நினைக்கிறேன் .

இருந்தாற்போல் எனது  கால் ஒன்றிற்கு இன்னொரு காலினால் பலத்த அடியொன்று விழ,  திடுக்கிட்டுப் போய் கீழே பார்த்தேன். சுருங்கிப்போன சிறிய காலொன்று எனக்கு உதைத்து விட்டு விலகிக் கொண்டிருந்தது.

சற்றே நிமிர்ந்து பார்த்தால் ஒரு 95 வயது மதிக்கக் கூடிய ஒரு பெண்மணி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தார் , அந்த காலுக்கு சொந்தக்காரராக.

ஆர்வக்கோளாறில் அவரது காலுக்கு இடித்து விட்டேன் என்று உணர்ந்து கொண்டு , அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.  அவர் மன்னிக்கவில்லை என அவர் முகக்குறிப்பு உணர்த்திற்று .

பேரிளம்  பூவையர் பொது போக்குவரத்து இடங்களில் அப்பாவி  ஆடவர்  மீது  தவறுதலாக நடக்கும் நிகழ்வுகளுக்கு கடும் கோபம் கொள்வதும் ஏனோ  .

இந்தத்தன்மை இனம் , மொழி , கலாச்சாரம் தாண்டி உலகளாவிய  ரீதியில் ஒன்றாகவே  இருப்பது போல தோன்றுகிறதே ……

சுவீசிற்குச் சென்று மற்றக்கோன் மற்றும் ஜங்லேடி போன்றவற்றுக்குச் சென்றுள்ளீர்கள் எனறு புரிகிறது. கேபிள் ரெயினில் செல்வது மறக்கமுடியாத அனுபவம்.

காதலன் காதலியின் தோள்களில் அல்லது கணவன் மனைவி சாய்வதும் தூங்குவதும் அதைவிட குழந்தைகள் பெற்றோரின் தோள்களிலோ அல்லது எங்கும் சாய்வது யாருக்கும் தொந்தரவாகத் தெரிவதில்லை. ஆனால் மற்றவர்கள் சாய்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

படம் எடுக்கும் ஆர்வத்தில் அதுவும் 95 வயதுப் பெண்ணின் வலுவற்ற கால்களை மிதித்தால் கோவம் வராமல் என்ன செய்யும். 😂

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்களுக்கு உபயோகமாய் இருக்கும் என்பதனால் இணைத்துள்ளேன்........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2023 at 06:04, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

. 14 தை சகாரா போன்  செய்கிறார். நாளை எங்கள் ஊரில் பட்டத்திருவிழா நடைபெற இருக்கு சுமே. வந்தீர்கள் என்றால் என் வீட்டில் தங்கிப் போகலாம் என்கிறார். 

நானும் இந்த முறை இந்தப் பட்டத்திருவிழாவிற்கு முதன்முதலாகப் போயிருந்தேன். ஆனால் போனபின் இதுதான் கடைசி முறை என்பதையும் மனதில் நினைத்துவிட்டேன். 

On 11/5/2023 at 16:36, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

. கச்சேரியில் பணம் கட்டினால் காணி உறுதியை இலகுவாக எடுக்கலாம். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

வேறு சில விடயங்கள் சம்பந்தமாக எனக்குத் தெரிந்த பிரசித்த நொத்தரிசு ஒருவருடன் கதைத்த பொழுது இப்படிக் கூறினார். காணி மோசடிகள் அதிகம் நடைபெற்றதாலும் அதனை தடுக்கும் ஒரு வழியாக காணி வாங்கும் பொழுது/விற்கும் பொழுது இரு பகுதியினரும் நேரில் வரவேண்டும் என்பதுடன் கையொப்பம் மற்றும் கைரேகையும் இடவேண்டும் என்றார். அத்துடன் இருபகுதியனரது புகைப்படமும் பத்திரத்தில் ஒட்டப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதனால் காசு கட்டி காணி உறுதியை எடுத்தாலும் மாற்றும் பொழுது பிடிபடலாம் என நினைக்கிறேன். 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்

காணிப்பிரச்சினை பற்றி கதை வருவதால் தோன்றிற்று ..

" தோம்பு " என்றால் என்ன ...

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வந்து கனகாலம். இடைக்கிடை வாசிப்பதோடு சரி. சுமே அக்காவின் தொடரை விடாமல் வாசிச்சு முடிச்சாச்சு. சுவாரசியம் குறையாமல் நேரம் மினக்கெட்டு எழுதுவது இலக்கு இல்லை

பச்சை குத்தெலம கிடக்கு. நிர்வாகம் கொஞ்சம் உதவி செய்யுங்கப்பா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Thumpalayan said:

கன்டது மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சாமானியன் said:

காணிப்பிரச்சினை பற்றி கதை வருவதால் தோன்றிற்று ..

" தோம்பு " என்றால் என்ன ...

சாமானியன்.  தோம்பு என்று ஒரு சொல்.   இருப்பதாக எனக்கு தெரியவில்லை...ஆனால் .......தோப்பு   என்று இருக்கிறது   அதாவது ஒரு காணியில்   முழுவதும் தென்னை மரங்கள் இருந்தால்   அந்த காணி    தென்னம் தோப்பு என்று அழைக்கப்படும்.....இதோபோல்.   பனை இருந்தால்   பனாம் தோப்பு என்பார்கள்   😄

  • கருத்துக்கள உறவுகள்

தென்னந் தோப்பு   பனங்காடு😀

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kandiah57 said:

 தென்னம் தோப்பு என்று அழைக்கப்படும்.....இதோபோல்.   பனை இருந்தால்   பனாம் தோப்பு என்பார்கள்   😄

ம்.. நிறைய தென்னம் தோப்புகள் பனம் தோப்புகள் எல்லாம் அங்கே வைத்திருப்பீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ம்.. நிறைய தென்னம் தோப்புகள் பனம் தோப்புகள் எல்லாம் அங்கே வைத்திருப்பீர்கள்.

ஆம். நாலு   ஏக்கர் தோன்னந்தோப்பு இருந்தது....விற்றுவிட்டோம்......அதனை   உழுவதற்க்கே   வருடம்    40  ஆயிரம் வேண்டும் .....இப்போது கூட வரலாம்”   ..இப்படி காணிகள் அங்கே வைத்திருப்பதால்      இலவசமாக கிடைக்கும் நித்திரையை   பல நாள்கள். இழந்து விட்டோம்  ...🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2023 at 06:04, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பத்தொன்பது 

என்னட்டை சேட்டை விடாதை. தலையிலயோ தட்டுறாய் என்றபடி ஏதேதோ சொல்ல எனக்கோ ஒன்றும் புரியாமல் அவன் என்னைச் சொல்கிறானா அல்லது சகாராவா என்று எண்ண அவன் சகாராவைப் பார்த்துத் திட்டுவது தெரிய தவறுதலாத் தட்டுப்பட்டிருக்கும் தம்பி என்று அவனை நான் அமைதிப்படுத்தப் பார்க்க, நான் வேணும் என்றுதான் அவனுக்கு தலையில அடிச்சனான் என்கிறா சகாரா. எனக்குப் பதட்டமாகிறது. ஏன் அடித்தீர்கள் என்று கேட்க அவர் தேவையிலாமல் தனக்குக் கிட்ட அவர் மோட்டார் சயிக்கிளை கொட்டுவர அதுதான் மண்டையில போட்டனான்.  இவை எங்கள் ஊரவையும் இல்லை.வாற இடத்தில ஒழுங்கா நடக்க வேண்டாமோ என்று சகாரா கேட்க நான் சரிதான் என்கிறேன்.

தண்ணியும் அடித்திருக்கிறார்கள் போல. இந்தியத் திரைப்படங்களில் சிறிய ரவுடிகள் போலவே இருக்க இன்று என்ன நடக்கப்போகுதோ, கடவுளே காப்பாற்று என்று மனதில் வேண்டிக்கொள்கிறேன். மெதுவாக எனது போனை எடுத்து அவர்களை வீடியோ எடுத்தால் கண்டுவிடுவார்கள் எனப் பயந்து சும்மா கையில்வைத்திருப்பதுபோல் அவர்களின் மோட்டார் சயிக்கிளை வீடியோ எடுத்து வைத்துக் கொள்கிறேன். அதன்பின் இரண்டு மூன்றுபேர் எமக்குகிக்கிட்ட வந்து  மன்னிப்புக் கேட்கவேணும் என்று கூற எனக்கு எந்தப் பக்கத்தால் ஓடுவது என்று கூடத் தெரியவில்லையே என மனதில் எண்ணுகிறேன். சகாராவோ அசரவில்லை. எங்கள் ஊரில வந்து என்ன தனகல் வேண்டிக்கிடக்கு. வந்தா வந்த அலுவலைப் பாருங்கோ. எங்கடை ஊர் ஆட்களைக் கூப்பிட்டன் என்றா வீடுபோய் சேரமாட்டியள் என்கிறா. அவர்கள் ஊரவர் என்று தெரிந்தபின் சமாளித்து பின்வாங்கிச் செல்ல எனக்குப் பதட்டம் தணியவே இல்லை. 

சகரா அக்கா செய்தது பாராட்ட வேண்டிய விசயம். செவிடைப் பொத்தி போட்டிருந்தால் இன்னும் சிறப்பான சம்பவமாக இருந்திருக்கும். கண்ட கண்ட காவாலியளிண்ட சேட்டை ஊரில கூடீட்டு. 

A480-A96-C-13-F1-4-E32-ACE1-A6-C3-C5-AA5

2018 அதை இந்திர விழா போன போது

Edited by Thumpalayan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் குறிப்பாக 2018-19 காலப்பகுதியில் நான் கொழும்பில்/ஊரில் போய் இருக்க வேண்டும் என்று விரும்பியிருந்தேன். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் (எனது துறை அல்ல) வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து WSO2, Virtusa போன்ற பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்களையும் சந்தித்திருந்தேன். ஆனால் கொரோனோ வந்த பின்னர் எல்லாம் கிடப்பில் போட்டாச்சு. 

ஊரிலே காணி வாங்கியதுக்கு வாழ்த்துகள். செலவோட செலவா மதிலக் கட்டி விடுங்கோ, இல்லாட்டிக்கு பிற்காலத்தில கன தலையிடி வரும். 

காணி வேலைளுக்கு கொன்ராக் மாதிரி குடுத்து செய்விக்கேலாதோ? 

ஸ்கூட்டி ஓடுறது கவனம். சின்னக் கார் நல்லது ஆனால் ஆரையும் நம்பி குடுத்தியளோ, அவளவுதான். 

ஊரில் அப்பா அம்மா இருப்பதால் 2009 23 லச்சத்துக்கு இதை எடுத்து விட்டன். டீசல் வாகனம், றைவர் தவிர ஏழு பேர் சாமான்களோட வசதியா போகலாம். நான் போய் நிக்கும் ஒரு மாசத்துக்கு திறப்பு என்ட கையில என்டது வாங்கேக்க போட்ட கொன்டிசன். 

57-DC6-BAA-91-CE-4-E7-F-AAB8-4-F06-B1209

6-B003-B68-8-C91-4-ABA-84-B4-E8-C284-BAB

Edited by Thumpalayan

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சாமானியன் said:

காணிப்பிரச்சினை பற்றி கதை வருவதால் தோன்றிற்று ..

" தோம்பு " என்றால் என்ன ...

"தோம்பு" இரண்டு மூன்று தலைமுறைக்கு முற்பட்ட காணி உறுதிகள்......உதாரணமாய் ஒரு கொள்ளுத்தாத்தா அவருக்கு 8/10 பிள்ளைகள் இருந்திருக்கும். அவர் தனது காணியை எல்லா பிள்ளைகளுக்கும் பிரித்து எழுதி வைத்திருப்பார். காலப்போக்கில் எல்லோரும் பிரிந்து எங்கெங்கோ வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்ப அந்தக் காணிக்குள் இருப்பவர் தனது பிள்ளைகளுக்கு குடுப்பதற்காக அந்தத் தோம்பை (பழைய உறுதி) தேடி எடுத்து மற்றவர்களிடம் கையொப்பம் பெறுவதற்கு அலைந்து திரிவார். அவர்களில் சிலர் கையொப்பம் இடுவார்கள் சிலர் இறந்திருப்பார்கள். சிலர் ஒப்பம் இட மறுப்பார்கள். இவர் அவர்களுக்கு பணம் குடுத்து ஒப்பம் வாங்குவார்.அதுவும் சரிவரவில்லையென்று கோட்டுக்கு (நீதிமன்றம்)போனால் இவற்ர கதை காலி, ஏனெனில் இவரது கொள்ளுப்பேரன் காலத்திலும் அந்த வழக்கு முடியாது. ஆரம்பத்தில் விசாரித்த நீதிபதியும் போய் சேர்ந்திருப்பார். இவரும் போய் சேர்ந்திருப்பர். அதன் பின் இவற்ர மகன் தொடர்ந்து வழக்காட விரும்பினால் முதலில் தான்தான் இவற்ர மகன் என்று "சத்தியகடதாசி" முடித்து (பிறகு சத்தியக்கடதாசி என்றால் என்ன என்று கேட்கப்படாது) நிரூபித்து இப்படியே ......இப்ப எனக்கே ஒன்றும் புரியவில்லை, உங்களுக்கு ஏதாவது கொஞ்சமாவது புரியுதா சாமானியன்.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Thumpalayan said:

சகரா அக்கா செய்தது பாராட்ட வேண்டிய விசயம். செவிடைப் பொத்தி போட்டிருந்தால் இன்னும் சிறப்பான சம்பவமாக இருந்திருக்கும். கண்ட கண்ட காவாலியளிண்ட சேட்டை ஊரில கூடீட்டு. 

A480-A96-C-13-F1-4-E32-ACE1-A6-C3-C5-AA5

2018 அதை இந்திர விழா போன போது

இந்த பாட்டை "மக்களெல்லாம் மக்களெல்லாம் - செல்லப்பா" 1988/4989 இந்திர விழாவில் பாடினார்கள். இன்று மனதில் ஓடும் பாடல் இதுதான், அதுதான் கடைசியாக பார்த்த இந்திர விழா

On 23/5/2023 at 17:32, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏதோ இப்போதுதான் வெளிநாட்டுக்குச் செல்லும் ஆசை எம்மவருக்கு அதுவும் விடுமுறைக்குச் செல்லும் எம்மவரைப் பார்த்து என்று கூறுவதும் முற்றுமுழுதான உண்மை அல்ல. நாம் இங்குள்ள கடின வேலைகளை, குளிரை, நின்மதியை,நோய்களை என்று எவற்றைச் சொன்னாலும் நம்பாது வெளிநாட்டுக்குத் தாமும் சென்று பணம் ஈட்ட வெட்டும் என்பது அவர்களது அடிப்படை ஆசை. இக்கரை மாட்டுக்கு அக்கரை  பச்சை என்று சும்மாவா சொன்னார்கள். வெளிநாட்டில் இருந்து செல்பவர்கள் பாவம் அவர்களிடம் போதிய பயணம் இல்லை எமது பணத்தில் அவர்களை இதையாவது அனுபவிக்க வைப்போம் என்று  இங்கிருந்து பொருட்களையோ நகைகளையோ அல்லது பணத்தையோ அவர்களுக்கு வாரி இறைக்கும்போது மட்டும் வேண்டாம் எனறு சொல்லாமல் அனுபவித்துவிட்டு அவர்கள் டம்பம் காட்டுகிறார்களென்பது என்ன நியாயம்????

என்ன சொன்னாலும் நாம் பிறந்த மண்ணில் எங்கள் ஆசைக்கு காணிகளை வாங்கும் உரிமை  வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு  உண்டு. காணி மலிவாக வேண்டும் என்றால் மலிவாக இருக்கும் இடத்தில் நீக்கள் போய் வாங்குவதை யாருமே தடுப்பதில்லையே. 

என்ன சொன்னாலும் நாம் பிறந்த மண்ணில் எங்கள் ஆசைக்கு காணிகளை வாங்கும் உரிமை  வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு  உண்டு.👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 23/5/2023 at 12:04, suvy said:

இது உங்களுக்கு உபயோகமாய் இருக்கும் என்பதனால் இணைத்துள்ளேன்........!  😂

இவரிடம் 40000 ரூபாய்களுக்கு கன்றுகள் வாங்கினேன். நன்றி அண்ணா 

On 23/5/2023 at 13:25, பிரபா சிதம்பரநாதன் said:

நானும் இந்த முறை இந்தப் பட்டத்திருவிழாவிற்கு முதன்முதலாகப் போயிருந்தேன். ஆனால் போனபின் இதுதான் கடைசி முறை என்பதையும் மனதில் நினைத்துவிட்டேன். 

வேறு சில விடயங்கள் சம்பந்தமாக எனக்குத் தெரிந்த பிரசித்த நொத்தரிசு ஒருவருடன் கதைத்த பொழுது இப்படிக் கூறினார். காணி மோசடிகள் அதிகம் நடைபெற்றதாலும் அதனை தடுக்கும் ஒரு வழியாக காணி வாங்கும் பொழுது/விற்கும் பொழுது இரு பகுதியினரும் நேரில் வரவேண்டும் என்பதுடன் கையொப்பம் மற்றும் கைரேகையும் இடவேண்டும் என்றார். அத்துடன் இருபகுதியனரது புகைப்படமும் பத்திரத்தில் ஒட்டப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதனால் காசு கட்டி காணி உறுதியை எடுத்தாலும் மாற்றும் பொழுது பிடிபடலாம் என நினைக்கிறேன். 

ஒரு ஆண்டுகளுள் நாம் கண்டுபிடிக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்றார் ஒருவர். உண்மை தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சாமானியன் said:

காணிப்பிரச்சினை பற்றி கதை வருவதால் தோன்றிற்று ..

" தோம்பு " என்றால் என்ன ...

தோம்பு என்பது கடந்த காலங்களில் யார் யார் காணியை வைத்திருந்தனர். யாரிடமிருந்து எப்ப வாங்கினர் திகதி உறுதி இலக்கம் உட்பட எல்லாம் இருக்கும். A3 அளவில் மடித்துத் தருவார்கள். கச்சேரியில் தான் இருக்கும். நாமே சென்று பணம் கட்டிப் பெற 160 ரூபாய்கள். அடுத்தநாள் எடுத்துத் தருவதற்கு லோயர் அறவிடும் பணம் பிரதி ஒன்றுக்கு 1500 ரூபாய்கள். நாம் புதிதாக சோலை வரியோ அல்லது காணி வாங்கும்போதோ அல்லது மின்சாரம் பெறவோ அது கட்டடாயம் தேவை. எனக்கு இவ்வளவுதான் தெரியும். வேறு யாருக்கும் இதுபற்றித் தெரிந்தால் குறிப்பிடுக.

7 hours ago, Thumpalayan said:

யாழ் வந்து கனகாலம். இடைக்கிடை வாசிப்பதோடு சரி. சுமே அக்காவின் தொடரை விடாமல் வாசிச்சு முடிச்சாச்சு. சுவாரசியம் குறையாமல் நேரம் மினக்கெட்டு எழுதுவது இலக்கு இல்லை

பச்சை குத்தெலம கிடக்கு. நிர்வாகம் கொஞ்சம் உதவி செய்யுங்கப்பா.

 கன காலம்  வராவிட்டால் எல்லாருக்கும் உந்தக்கதிதான்.

2 hours ago, Thumpalayan said:

சகரா அக்கா செய்தது பாராட்ட வேண்டிய விசயம். செவிடைப் பொத்தி போட்டிருந்தால் இன்னும் சிறப்பான சம்பவமாக இருந்திருக்கும். கண்ட கண்ட காவாலியளிண்ட சேட்டை ஊரில கூடீட்டு. 

A480-A96-C-13-F1-4-E32-ACE1-A6-C3-C5-AA5

2018 அதை இந்திர விழா போன போது

இதிலை நீக்கள் எது என்று சொல்லவே இல்லையே. அனேகமா அந்த நடுவில நிற்கும் கண்ணாடிதானே நீக்கள் ????😄

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Thumpalayan said:

ஒரு காலத்தில் குறிப்பாக 2018-19 காலப்பகுதியில் நான் கொழும்பில்/ஊரில் போய் இருக்க வேண்டும் என்று விரும்பியிருந்தேன். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் (எனது துறை அல்ல) வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து WSO2, Virtusa போன்ற பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்களையும் சந்தித்திருந்தேன். ஆனால் கொரோனோ வந்த பின்னர் எல்லாம் கிடப்பில் போட்டாச்சு. 

ஊரிலே காணி வாங்கியதுக்கு வாழ்த்துகள். செலவோட செலவா மதிலக் கட்டி விடுங்கோ, இல்லாட்டிக்கு பிற்காலத்தில கன தலையிடி வரும். 

காணி வேலைளுக்கு கொன்ராக் மாதிரி குடுத்து செய்விக்கேலாதோ? 

ஸ்கூட்டி ஓடுறது கவனம். சின்னக் கார் நல்லது ஆனால் ஆரையும் நம்பி குடுத்தியளோ, அவளவுதான். 

ஊரில் அப்பா அம்மா இருப்பதால் 2009 23 லச்சத்துக்கு இதை எடுத்து விட்டன். டீசல் வாகனம், றைவர் தவிர ஏழு பேர் சாமான்களோட வசதியா போகலாம். நான் போய் நிக்கும் ஒரு மாசத்துக்கு திறப்பு என்ட கையில என்டது வாங்கேக்க போட்ட கொன்டிசன். 

கொன்றாக் குடுத்தால் இழுத்தடித்துத்தான் வேலை நடக்கும். தினக்கூலி அன்றே குடுப்பதானால் ஓரளவு வேலை நடக்கும். இந்த செப்டெம்பர் போய் ஸ்கூட்டியில தான் முல்லைத்தீவு வவுனியா கிளிநொச்சி எல்லாம் போய் வரவேண்டும் என்று மனிசன் சொல்லிக்கொண்டு இருக்கிறார். எனக்கு அதை நினைக்கவே நெஞ்சு திக் திக் எண்ணுது இப்பவே. நாம் இருவரும் போய் இருக்கும்போது கட்டாயம் சிறிய கார் ஒன்று எடுப்போம்.

1 hour ago, suvy said:

"தோம்பு" இரண்டு மூன்று தலைமுறைக்கு முற்பட்ட காணி உறுதிகள்......உதாரணமாய் ஒரு கொள்ளுத்தாத்தா அவருக்கு 8/10 பிள்ளைகள் இருந்திருக்கும். அவர் தனது காணியை எல்லா பிள்ளைகளுக்கும் பிரித்து எழுதி வைத்திருப்பார். காலப்போக்கில் எல்லோரும் பிரிந்து எங்கெங்கோ வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்ப அந்தக் காணிக்குள் இருப்பவர் தனது பிள்ளைகளுக்கு குடுப்பதற்காக அந்தத் தோம்பை (பழைய உறுதி) தேடி எடுத்து மற்றவர்களிடம் கையொப்பம் பெறுவதற்கு அலைந்து திரிவார். அவர்களில் சிலர் கையொப்பம் இடுவார்கள் சிலர் இறந்திருப்பார்கள். சிலர் ஒப்பம் இட மறுப்பார்கள். இவர் அவர்களுக்கு பணம் குடுத்து ஒப்பம் வாங்குவார்.அதுவும் சரிவரவில்லையென்று கோட்டுக்கு (நீதிமன்றம்)போனால் இவற்ர கதை காலி, ஏனெனில் இவரது கொள்ளுப்பேரன் காலத்திலும் அந்த வழக்கு முடியாது. ஆரம்பத்தில் விசாரித்த நீதிபதியும் போய் சேர்ந்திருப்பார். இவரும் போய் சேர்ந்திருப்பர். அதன் பின் இவற்ர மகன் தொடர்ந்து வழக்காட விரும்பினால் முதலில் தான்தான் இவற்ர மகன் என்று "சத்தியகடதாசி" முடித்து (பிறகு சத்தியக்கடதாசி என்றால் என்ன என்று கேட்கப்படாது) நிரூபித்து இப்படியே ......இப்ப எனக்கே ஒன்றும் புரியவில்லை, உங்களுக்கு ஏதாவது கொஞ்சமாவது புரியுதா சாமானியன்.......!  😁

எமக்குத் தந்த தோம்பில் யாரும் கையொப்பம் இட்டதுபோல் தெரியவில்லை அண்ணா.

1 hour ago, உடையார் said:

இந்த பாட்டை "மக்களெல்லாம் மக்களெல்லாம் - செல்லப்பா" 1988/4989 இந்திர விழாவில் பாடினார்கள். இன்று மனதில் ஓடும் பாடல் இதுதான், அதுதான் கடைசியாக பார்த்த இந்திர விழா

என்ன சொன்னாலும் நாம் பிறந்த மண்ணில் எங்கள் ஆசைக்கு காணிகளை வாங்கும் உரிமை  வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு  உண்டு.👍

உண்மையை உரத்துச் சொல்வோம் 😃

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.