Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

FCFA7708-DD30-4-C16-AD85-70-E9530-A04-C9

அருமையான ஓவியம் பாராட்டுக்கள்.......!

நான் அப்போது அந்தந்த வயதுக்கு ஏற்றபடி தனித்தனியாகத்தான் எடுத்தனான்......அதாவது 18 வயசில் காரும் (light vehicle)  மோட்டார் சைக்கிளும், 21 வயதில் (all moter coches) பஸ்சுக்கு எடுத்தனான்.இந்த லைசென்சில் லொறி எல்லாம் ஓடலாம். அதே 21 வயதில் வவுனியாவில் வேலைசெய்யும் பொழுது ட்ராக்ட்டருக்கு 8 போட்டு காட்டி எடுத்தனான்.....! 😁

Link to comment
Share on other sites

  • Replies 378
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

மெசொபொத்தேமியா சுமேரியர்

இலங்கையில் ஆறு மாதங்கள்    நீண்ட நாட்களாகவே எம்மூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை என்னை அலைக்கழித்தபடியே இருந்ததுதான். அதிலும் ஆறு மாதங்களாவது நின்மதியாய் கணவர் பிள்ளைகளின் தொல்லைகள் இன்றி ந

மெசொபொத்தேமியா சுமேரியர்

இரண்டு   என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும்

மெசொபொத்தேமியா சுமேரியர்

பன்னிரண்டு    முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

நல்லகாலம் பிளைட் ஓடேலாது. அதுவுமெண்டால் நாங்கள் இஞ்சை இருக்கேலாது.:rolling_on_the_floor_laughing:

அது சரி.....

அங்கை ஆரிட்டையும் உங்கடை சமையல் சித்து விளையாட்டையும்  செய்து காட்டினனீங்களோ? :cool:

அது இல்லாமலா ?? பின்னாலே வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, யாயினி said:

கவனம் யாழில் ரக்ரர் படத்தை ,ஸ்கூட்டியில புழுதி எழுப்பினதை  கொண்டு வந்து ஒட்டிடாதீங்கோ..சும்மாவே யாழ் தள்ளாடுது அப்புறம் எழும்பி ஓட முடியாதவே பாடு சொல்ல இயலாது..✍️🖐️

😃

7 hours ago, Kavi arunasalam said:

FCFA7708-DD30-4-C16-AD85-70-E9530-A04-C9

சிரித்து முடியவில்லை அண்ணா. நல்ல படம் 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதினைந்து

 

இரவு கொழும்பு சொய்சா புரத்தில் இருந்து 10 மணிக்கு வெளிக்கிட்ட சொகுசு பஸ் விடிகாலை 4.30 க்கு இணுவிலுக்கு வந்துவிட்டது. ஒருவருக்கு 4500 ரூபாய்கள். நல்ல வசதியான பஸ்தான். ஓட்டுனர் சிங்களத்திலும் தமிழிலும் மாறிமாறிக் கதைக்க அவர் சிங்களவரா தமிழரா என்றுகூட மட்டுக்கட்ட முடியவில்லை. 

 

அடுத்தநாள் எல்லோரும் வரவேற்பறையில் இருந்து கதைத்துக்கொண்டிருக்க காணிகள் பார்த்த கதையும் வருகிறது. வேறு காணிகள் பார்க்கவில்லையோ என்கிறா மச்சாள். பார்த்துப் பார்த்து களைத்துவிட்டது. மிஞ்சிப்போனால் உதயனின் காணி இருக்குத்தானே. அதற்குள் ஒரு சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டாவது இருக்கலாம் தானே என்கிறேன். உடனே கணவரின் தங்கை மகள் “தோட்டக் காணிக்குள் எப்பிடி நீங்கள் வீடு கட்ட முடியும்? நாங்கள் விடவே மாட்டோம்” என்கிறா. கணவர் இதைக்  கேட்டுத் திடுக்கிட்டுப் போய் நிற்க எனக்குக் கோபம் வருகிறது. “எம்மை வீடு கட்ட வேண்டாம் என்று எப்படி நீங்கள் சொல்ல முடியும். உங்கள் அம்மா சொன்னாக்கூடப் பரவாயில்லை” என்கிறேன். “ ஏன் அவள் இந்த வீட்டுப் பிள்ளை தானே. அவளுக்குக் கதைப்பதற்கு எல்லா உரிமையும் இருக்கு” என்கிறா. 

 

இருக்கட்டும். எனக்குச் சொந்தமான காணியில் நான் எதுவும் செய்ய முடியும் என்கிறார் கணவர். இல்லை அண்ணா சுற்றிவர மற்றவர்கள் தோட்டம் செய்யும் போது அவர்கள் ஓம் என்று சொல்லாமல் நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்கிறா தங்கை. அப்படியும் இருக்குமோ என்று நான் எண்ணிவிட்டுப் பேசாமல் இருக்க, அப்ப நீயே இந்தக் காணியையும் எடுத்துக்கொண்டு காசைத் தா என்கிறார் கணவர். உடனே அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. ஒரு இரண்டு ஆண்டுகள் செல்ல வாங்குவதைப்பற்றி யோசிக்கிறேன். அதுவும் நான் தான் விலையைச் சொல்வேனே தவிர நீங்கள் சொல்லும் விலைக்கு நான் வாங்கமாட்டேன் என்கிறா. எம்மை விட அவர்களிடம் பணம் இருப்பது ஊருக்கே தெரிந்த விடயம். என் மகள் என்னை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு இருக்கிறாள். இத்தனை நேரம் சும்மா பார்த்துக்கொண்டிருந்த தங்கையின் கணவர் சரிசரி தேவையில்லாமல் உந்தக் கதையள் எதுக்கு நிப்பாட்டுங்கோ என்று கூறிய பின் யாரும் எதுவும் பேசாது எழுந்து செல்கிறோம்.

 

எனக்கு மனதுள்ளே கனன்றுகொண்டிருக்கிறது. கணவர் இதை எதிர்பார்க்கவே இல்லை என்பது அவர் என்னிடம் ஆதங்கத்தில் மீண்டும் மீண்டும் புலம்பியதில் இருந்து புரிய, என் தங்கையின் கணவருக்கு போன் செய்து உங்களுக்குத் தெரிந்த லோயர் யாராவது இருந்தால் கூறுங்கள் என்கிறேன். தனக்கு நன்கு தெரிந்தவர் மணிவண்ணன். நான் சொல்லி விடுகிறேன். போய்ப் பாருங்கள் என்கிறார். அடுத்தநாள் காலையே செல்வோம் என எண்ணிப் போன் செய்தால்  மாலைதான் தாம் திறப்பதாக கூற மாலை 5.30 இக்குப் போய் காவலிருக்கிறோம். 

 

திறந்தவுடன் இன்னொரு ஆணும் ஒரு பெண் வக்கீலும் இருக்கின்றனர். மணிவண்ணன் வர ஏழரை ஆகும் என்கிறார். எனக்கு ஒருவிதமான கூச்சமாகவும் இருக்கு. அந்தப் பெண் வக்கீலிடம் விபரம் கேட்க, உங்கள் பெயரில் காணி இருந்தால் நீங்கள் என்னவும் செய்யலாம். யாருக்கும் விற்கலாம். என்கிறா. கணவரின் முகத்தில் விளக்கெரிகிறது. ஆனாலும் காணி உங்கள் பெயரில் இருந்தாலும் அவர்கள் சோழவரியை இருபது ஆண்டுகளுக்குமேல் கட்டியிருந்தால் அவர்களுக்குக் காணி சொந்தமாவதற்குரிய சட்டங்கள் இந்த நாட்டில் இருக்கு. எனவே உங்கள் பெயரில் சோழவரி கட்டுவதற்குரிய ஏற்பாட்டைப் பாருங்கள் என்கிறார். 

அடுத்தநாளே பிரதேச சபைக்குச் சென்று கணவரின் பெயரில் சோழவரியை மாற்றுவதற்குரிய படிவத்தைக் கேட்டால் படிவம் 300 ரூபாய்கள். அத்துடன் அந்த நிலத்துக்குரிய திட்டம் மற்றும் தாய் உறுதி, காணி உறுதி என்பன கட்டாயம் வேண்டும் என்கின்றனர். ஏற்கனவே காணிக்குத் திட்ட வரைபு இருக்கிறதா என்று கேட்க கணவர் தெரியாது என்கிறார். தங்கையிடம் தான் கேட்கவேண்டும். கணவனோ நீயே கேள் என்கிறார். எனக்கோ சங்கடமாக இருக்கு. ஆனாலும் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருக்க, என் நல்ல நேரம் வீட்டுக்குச் சோழவரி கட்டும் விலைப் பட்டியலை ஒருவர் மணி அடித்துத் தந்துவிட்டுப் போக என்ன உது என்கிறேன் மச்சாளிடம். சோழவரி கட்டவேண்டும். அதுதான் என்கிறா. கடிதம்போடாமல் கொண்டு வந்தா தருவார்கள் என்கிறேன் நம்பாமல். இது வெளிநாடில்லை. இங்க வீடுவீடாக கொண்டுபோய் குடுப்பினம் என்றவுடன் தோட்டத்தின் சோழவரியும் அப்படித்தானோ என்கிறேன். 

:தோட்டத்தின்ர சோழவரி உங்கள் பெயரிலோ இருக்கு? 

 

:இல்லை அம்மாவின் பெயரில் தான் தொடர்ந்து கட்டிக்கொண்டு இருக்கிறம். 

 

:இனிமேல் நீங்களே கட்டிக்கொண்டிருக்காமல் உதயனின் பெயருக்கு மாத்தி விடுவம். 

 

:அது கன காசு சிலவு மச்சாள். பேசாமல் அம்மாவின் பெயரிலேயே இருக்கட்டும். 

 

:என்ன சிலவு ?

 

:பிளான் எல்லாம் கீற வேணும். அதுக்கு கன காசு. போக சேவையர்மார் செய்து முடிக்க நாலைஞ்சு மாசம் செல்லும். அதுக்குள்ள அண்ணா திரும்பப் போயிடுவார் எல்லோ. 

 

:காசு பிரச்சனைஇல்லை. அதை நாங்கள் குடுப்பம். ஆரும் இருந்தாச் சொல்லுங்கோ. 

 

:எனக்கு ஒருத்தரையும் தெரியாது. 

 

:உங்கள் மகனும் கட்டட அளவையாளர்தானே. அவருக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கும் தானே. 

 

:அவன் போன் செய்யேக்குள்ள கேட்டுப்பாக்கிறன்.

 

:தோட்டத்துக்கு சோழவரி கட்டுற துண்டை ஒருக்கா தாங்கோ பார்ப்பம். 

 

:தேடித்தான் எடுக்கவேணும். இவர் வந்ததும் கேட்டுப் பார்க்கிறன்.

 

:சரி. 

 

மச்சாளுக்கு நாம் காணி அளப்பது பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் உதை உப்பிடியே விடுவம். உங்கள் அம்மாவின் பெயரில் தான் சோழ வரி கட்டுறதாலை எந்தப் பிரச்சனையும் இல்லை என்கிறேன்.  

நீ குழப்பாதை. பிளானைக் கீறி எடுத்தால்தான் உவவுக்கு கொஞ்சம் பயம் வரும் என்கிறார்.   

 

அடுத்த நாளே என் தங்கையின் கணவர் ஒரு நில அளவையாளரைத் தொடர்புகொண்டு வார இறுதியில் வருவதாகக் கூற தங்கையிடமும் கூற தங்களுக்கு ஒரு சாமத்தியவீடு இருப்பதாகவும் அதனால் தாங்கள் நிற்கமாட்டோம் என்றும் கூற அடுத்த வார இறுதிக்கு அது ஒத்திவைக்கப்படுகிறது. 

 

கணவர் இன்னும் ஒரு எட்டு நாட்கள் தான் நிற்பார். அவரில்லாது காணி அளப்பது சரியானதாக இருக்காது என்பதனால் அடுத்த வாரமும் அவர்கள் ஏதும் சாட்டுச் சொல்லி தட்டிக்கழித்தால் என்ன செய்வது என்று யோசனை ஓடுகிறது. நில அளவையாளர் பக்கத்துக் காணிக்காரரின் பெயர்களும் தேவை என்கின்றார். சகோதரியும் கணவரும் தமக்குத் தெரியாது என்கின்றனர். என்ன நீங்கள். இங்கேயே இருக்கிறியள். பக்கத்து காணிக்காரரைத் தெரியாமல் இருக்கிறியளா? என்கிறார் கணவர். நல்ல காலத்துக்கு கணவரின் அண்ணா ஒருவர். அவருக்கு காணிக்காரரின் பெயர்கள் தெரிந்தபடியால் அலைச்சலின்றி பெயரை அளவையாளரிடம் கொடுக்க அவரும் காணி அளப்பதற்கு வருகிறார். 

 

எல்லாமாக மூன்றுபேர் வருகின்றனர். இரண்டு மணி நேரத்தின் பின் தங்கையின் எட்டுப் பரப்புப் போக எமக்கு ஐந்து பரப்பு வருகின்றது என்கிறார் அளவையாளர். தங்கையின் கணவருக்கு டென்ஷன் ஏற்பட அதெப்படி வரும். எங்கட காணியில குறைச்சு அளந்திட்டியளோ என்று கோபமாகக் கேட்கிறார். அதற்கு அந்த நில அளவையாளருடன் வந்தவர் “தம்பி நீங்கள் உப்பிடிக்க கதைக்கக் கூடாது. நாங்கள் பத்து ஆண்டுகளாகத் தொழில் செய்கிறம். ஒருவரும் உப்பிடிச் சொன்னதில்லை. முந்தி காணியளை காலாலைதான் அளக்கிறது. கூடக் குறைய வாறது தான் “ என்றவுடன் சயிக்கிளை எடுத்துக்கொண்டு அவர் தன் வீட்டுக்குப் போகிறார். என்னடா இது என்று எமக்குக் குழப்பமாக இருக்க அளவையாளர் சொல்கிறார் கூட இருப்பதை இரண்டாகப் பிரித்துவிடவோ என்று. ஓம் அப்பிடிக்க செய்யுங்கோ பிரச்சனை இல்லை என்று நான் கூற, நீ வாயை மூடிக்கொண்டு இரு. இது என்ர காணி. நானே முடிவை எடுக்கிறன். அஞ்சு நிமிஷம் பொறுங்கோ என்றுவிட்டு பக்கத்தில் இருக்கும் அண்ணாவின் வீட்டுக்குச் செல்கிறார். 

 

நானும் மற்றவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள “இது எனக்குத்தான் கெட்டபெயர். நான் தான் தடுத்திட்டன்  என்று தங்கச்சியார் நினைக்கப்போறா, இந்தாள் ஏன் இப்பிடிச் செய்யுது” என்கிறேன். “அவை சகோதரங்கள். கதைச்சு முடிவெடுக்கட்டும் அக்கா. நீங்கள் தலையிடாதேங்கோ” என்கிறார் அளவையாளர். 

 

சிறிது நேரத்தில் கணவரும் தமையனும் ஒருபக்கத்தால் வர மறுபக்கம் தங்கையின் கணவரும் வருகிறார். தங்கையின் கணவர் "இவர் குடும்பத்தைப் பார்த்ததுக்கு மாமி நாலேகால் பரப்பு மட்டும்தான் எழுதினவா. ஆனபடியால் மிகுதி எங்களுக்குத்தான் சேரவேண்டும். நான் இரண்டு மூண்டு பேரிட்டை இப்ப விசாரிச்சிட்டுத்தான் வாறன் " என்கிறார். உடனே தமையன் "இல்லை உங்களுக்கு வீடுவளவும் காணியும் சீதனம் தந்தபடியால் சீதனக் காணி தவிர மிகுதி தம்பிக்குத்தான் சேரவேணும். நீங்கள் கதைப்பதற்கு ஒன்றும் இல்லை" என்றவுடன் "எனக்கு இவை அளந்ததில நம்பிக்கை இல்லை. திரும்ப வேறு யாரையும் கொண்டு அளவுங்கோ" என்று கூற சேவையருக்குக் கோபம் வந்துவிட்டது. என் கணவரைப் பார்த்து உங்களுக்கு வேறை யாரையும் கொண்டு அளக்கவேணும் என்றால் அளவுங்கோ என்கிறார். எனக்கு நாலேகால் பரப்பில் கால் பரப்பு குறைந்தால் இவர்கள் எனக்குத் தரவா போகிறார்கள். நீங்கள் அளந்ததில் எனக்கு எந்தக் குறையுமில்லை. நீக்கள் எங்கள் காணிக்குரிய பிளானை கீறி ரெஜிஸ்டர் பண்ணித் தாங்கோ. மச்சான் நீங்கள் வேறு ஒருவரைப் பிடித்து உங்கள் காணி எட்டுப் பரப்பும் இருக்கிறதா என்று பாருங்கள் என்றவுடன் அளவையாளர்கள் எல்லைக் கற்களை நான்குபுறமும் கிண்டித் தாட்டுவிட்டுச் செல்கின்றனர். 

 

  

 

 

    

  • Like 3
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தின்படி தோட்டக் காணிக்குள் வீடுகட்ட முடியாது அக்கா. ஆனால் எனக்கு தெரிய பிரதேச சபையே காணிக்க மண்ணைக் கொட்டி மீன் சந்தை கட்டியிருக்கு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

சட்டத்தின்படி தோட்டக் காணிக்குள் வீடுகட்ட முடியாது அக்கா. ஆனால் எனக்கு தெரிய பிரதேச சபையே காணிக்க மண்ணைக் கொட்டி மீன் சந்தை கட்டியிருக்கு! 

எம்மூரில் மூன்று வீடுகள் கட்டப்பட்டிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பதினைந்து

எனது சொந்த அனுபவத்தில் சொந்தங்கள் தான் விரோதிகளாகவும் இருக்கின்றார்கள்.
சகோதர உறவு முறையை கூட தக்க வைக்க பணம் / பொருட்கள் தேவைப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே…!

இவ்வளவு தான் சொந்தம்..! அண்ணா தங்கச்சிக்கு எவ்வளவோ செய்திருக்கிறார் என்று சொன்னால், உலகத்தில எல்லா அண்ணர் மாரும் தானே செய்யினம் எண்டும் சொல்லிவினம்..! சோழவரியை.. சோலை வரி எண்டு மாத்தி விடுங்கோ..! தொடருங்கோ…!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

சட்டத்தின்படி தோட்டக் காணிக்குள் வீடுகட்ட முடியாது அக்கா. ஆனால் எனக்கு தெரிய பிரதேச சபையே காணிக்க மண்ணைக் கொட்டி மீன் சந்தை கட்டியிருக்கு! 

நான் ஊரில் இருந்த காலம்,அதற்கு முந்திய காலங்களிலும் விவசாய குடியேற்ற காணிகளில்  பெரிய,சிறிய வீடுகள் கட்டிக்கொள்ளக்கூடியதாக இருந்தது.பல இடங்களில் பங்களா போன்ற வீடுகளே கட்டியிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

எனது சொந்த அனுபவத்தில் சொந்தங்கள் தான் விரோதிகளாகவும் இருக்கின்றார்கள்.
சகோதர உறவு முறையை கூட தக்க வைக்க பணம் / பொருட்கள் தேவைப்படுகின்றது.

பலருக்கும் மனச்சாட்சி என்பதே இல்லை.

9 hours ago, புங்கையூரன் said:

சுமே…!

இவ்வளவு தான் சொந்தம்..! அண்ணா தங்கச்சிக்கு எவ்வளவோ செய்திருக்கிறார் என்று சொன்னால், உலகத்தில எல்லா அண்ணர் மாரும் தானே செய்யினம் எண்டும் சொல்லிவினம்..! சோழவரியை.. சோலை வரி எண்டு மாத்தி விடுங்கோ..! தொடருங்கோ…!

 

என் கவனமின்மையை நினைக்கச் சிரிப்பாக இருக்கு. எல்லோரும் சோழவரி என்று சொல்ல நானும் அதுதான் என்று நினைத்துவிட்டேன். படிவத்தில் சரியாகத்தான் எழுதியிருப்பார்கள். அதைக்கூட நான் கவனிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2023 at 16:53, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மிகுதியையும் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்😀

வீட்டுக்கு வீடு வாசற்படி தான்...உங்களின் கோபம் புரிகிறது.  அதுவும் ஒரு முக்கால் பரப்புக்காக :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில சொய்ஸா வாழ்கிற உவங்களூக்கு எதுக்கு இங்க காணி என ஒரு கேள்வியும் வந்திருக்குமே🤔🤔.

தற்போது போராசை ஒன்று அசை போட தொடங்கியுள்ளது ஈழத்தில் அது கன சொந்தங்களை தூரமாகவே வைத்துள்ளது சொத்துப் பிரிப்புப் பிரச்சினைகள் வெட்டுக்குத்து,கொலை வரைக்குமே சென்றுள்ளது அக்கா 

தொடரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட கெதியெண்டு எழுதப்பா மிச்சத்தை.. அடுத்த வீட்டு புதினம் கதைக்கிறதெண்டாலே அன்னம் தண்ணி இல்லாமல் திண்ணையில இருக்கிற ஆக்கள் நாங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sabesh said:

வீட்டுக்கு வீடு வாசற்படி தான்...உங்களின் கோபம் புரிகிறது.  அதுவும் ஒரு முக்கால் பரப்புக்காக :(

நீங்கள் விட்டுக் கொடுத்திருக்கலாம் என்கிறியள். 😀

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில சொய்ஸா வாழ்கிற உவங்களூக்கு எதுக்கு இங்க காணி என ஒரு கேள்வியும் வந்திருக்குமே🤔🤔.

தற்போது போராசை ஒன்று அசை போட தொடங்கியுள்ளது ஈழத்தில் அது கன சொந்தங்களை தூரமாகவே வைத்துள்ளது சொத்துப் பிரிப்புப் பிரச்சினைகள் வெட்டுக்குத்து,கொலை வரைக்குமே சென்றுள்ளது அக்கா 

தொடரட்டும்.

அது எமக்கு நேராகச் சொல்லப்படவில்லை. ஆனால் மகளுக்குச் சொன்னர்களாம். வெளிநாட்டில இருக்கிறியள். இங்க வந்து இருக்கப்போறியளோ. உங்கட அப்பாவுக்குப் பேராசை என்று.😀😂  

53 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அட கெதியெண்டு எழுதப்பா மிச்சத்தை.. அடுத்த வீட்டு புதினம் கதைக்கிறதெண்டாலே அன்னம் தண்ணி இல்லாமல் திண்ணையில இருக்கிற ஆக்கள் நாங்கள்..

நாங்கள் அன்ன தண்ணி இல்லாமல் எப்பிடி எழுதமுடியும் ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில சொய்ஸா வாழ்கிற உவங்களூக்கு எதுக்கு இங்க காணி என ஒரு கேள்வியும் வந்திருக்குமே🤔🤔.

தற்போது போராசை ஒன்று அசை போட தொடங்கியுள்ளது ஈழத்தில் அது கன சொந்தங்களை தூரமாகவே வைத்துள்ளது சொத்துப் பிரிப்புப் பிரச்சினைகள் வெட்டுக்குத்து,கொலை வரைக்குமே சென்றுள்ளது அக்கா 

தொடரட்டும்.

நன்றி ராசன் உங்கள் நெஞ்சார்ந்த கருத்திற்கு.
அண்மையில் உவ்விடம் வந்து திரும்பிய நண்பர் ஒருவர் எனக்கு சொன்னது......சொந்தக்காரர் வீடுகளில் சாப்பிட,தண்ணி குடிக்கவே பயமாக இருக்கின்றதென......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில சொய்ஸா வாழ்கிற உவங்களூக்கு எதுக்கு இங்க காணி என ஒரு கேள்வியும் வந்திருக்குமே🤔🤔.

தற்போது போராசை ஒன்று அசை போட தொடங்கியுள்ளது ஈழத்தில் அது கன சொந்தங்களை தூரமாகவே வைத்துள்ளது சொத்துப் பிரிப்புப் பிரச்சினைகள் வெட்டுக்குத்து,கொலை வரைக்குமே சென்றுள்ளது அக்கா 

தொடரட்டும்.

சொந்தபந்தம் எண்டாலும் பரவாயில்லை. வாடகைக்கு இருந்த ஆக்களுக்கும் ஆசை வருதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில சொய்ஸா வாழ்கிற உவங்களூக்கு எதுக்கு இங்க காணி என ஒரு கேள்வியும் வந்திருக்குமே🤔🤔.

 

அது தம்பி சொய்சா   அல்ல சொகுசா ...சொகுசு( நோகாம ) ஒருகஷ்டமும் இல்லாமல் வாழ்தல்.   வெளிநாடு வந்து பார்த்தால் தான் சொகுசா   வாழ்வதுபற்றி தெரியும்.  

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிலாமதி said:

அது தம்பி சொய்சா   அல்ல சொகுசா ...சொகுசு( நோகாம ) ஒருகஷ்டமும் இல்லாமல் வாழ்தல்.   வெளிநாடு வந்து பார்த்தால் தான் சொகுசா   வாழ்வதுபற்றி தெரியும்.  

என்ன சகோதரி நீங்கள்????

தற்போது பல திரிகளில் புலம்பெயர் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்த நாடுகளில் சொகுசாக வாழ்ந்தபடி...... என்றுதானே கருத்தெழுதுகின்றார்கள்.

அந்த தம்பி என்ன செய்யும்?

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதினாறு  


 

அடுத்தநாளே பழைய காணித் தரகர் போன் செய்கிறார். தம்பி எங்களுக்குக் காணி ஒன்றும் வேண்டாம். இனிமேல் காணி பார்க்கக் கூப்பிடவேண்டாம் என்கிறேன். இல்லை அக்கா. இந்தக் காணியைப் பார்த்தால் உங்களுக்கும் அண்ணருக்கும் கட்டாயம் பிடிக்கும். உங்களுக்குப் பிடிக்காட்டில் இதோட நான் கேட்க மாட்டன் என்கிறார். சரி அதையும் ஒருக்காப் பார்த்திடுவம் என்று நானும் கணவரும் மகளும் செல்ல பின்னாலேயே தங்கையின் கணவரும் வருகிறார். இணுவிலில் இருந்து இருபது நிமிடம் ஓட்டோவில் செல்ல தரகர் எமக்காகப் பார்த்துக்கொண்டு நிற்கிறார். கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே சென்றால் பெரிய வளவு. தென்னை மரங்கள், மாமரங்கள், பாலாமரங்கள், வாழைத்தோட்டம் என நான் எதிர்பார்த்தவாறு காணி இருக்க நட்டநடுவே ட வடிவில் பழைய வீடு ஒன்றும் இருக்க எம் எல்லோருக்கும் பிடித்துவிடுகிறது. 

 

தங்கையின்  கணவரிடம் எம் விருப்பத்தைக் கூற, நீங்கள் வாயத் திறக்கவேண்டா ம். நானே கதைத்துக்கொள்கிறேன் என்கிறார். வீட்டினுள்ளே சென்று பார்த்தால் அறைகள் நான்குமீற்றர் உயரத்துடன் இருக்கின்றன. மூன்று அறைகள், குசினி, சுவாமி அறை என்பவற்றுடன் நீளமான வரவேற்பறையும் குசினிக்குச் செல்வதற்கு நீண்ட தாள்வாரமும் இருக்கின்றன. எந்தவிதத் திருத்தவேலைகளும் தேவை இல்லை எனத்தெரிய இதை வாங்குவது என்று தீர்மானித்து 14 பரப்புக்காணியும் வீடும் ஒன்றேகால் கோடி என்கின்றனர். வீடு கட்டவே இப்ப ஒருகோடி முடியும் என்கிறார் இன்னொரு தரகர். எல்லாமாக நான்கு தரகர்கள் ஒவ்வொருத்தராக வந்து சேர, ஏன் இத்தனை தரகர்கள் என்றதற்கு இந்தக் காணி ஒருவர் இன்னொருவருக்குச் சொல்லிக் அவர் மற்றவருக்குச் சொல்லி இப்பிடித்தான் கூட்டி வருவார்கள். அதனால் தான் கனபேர் என்கிறார். ஒரு கிழமையில உங்களால் இங்கு பணத்தை எடுக்க முடியுமா என்று கேட்க ஓம் என்கிறார் கணவர். 

 

ஆறுமாதம் அவர்கள் வாடகை இல்லாமல் இந்த வீட்டில் இருப்பதற்குக் கேட்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள் என்று தரகர் கேட்க அதற்கென்ன இருக்கட்டும். ஆனால் நான் வீட்டுக்குள் வரமாட்டேன். காணியைத் துப்பரவு செய்ய, வேலி அடைக்க ஆட்களைக் கூட்டிக்கொண்டு வருவேன் அதற்குச் சம்மதமா என்று கேளுங்கள் என்றுகூற, ஒரு முப்பத்தைந்து மதிக்கத்தக்க வீட்டின் உரிமையாளர் சம்மதம் என்கிறார். நான் காலை வேலைக்குச் சென்றால் வர இரவாகும். மற்ற இரண்டு பேரும்தான் இருப்பினம். எனக்குப் பிரச்சனை இல்லை என்கிறார்.     

 

ஒரு கோடிக்கு பேசி முடிக்க தங்கையின் கணவர் நீங்கள் பணம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? இருந்தால் இன்றே அட்வான்ஸ் குடுக்கலாம் என்கிறார். என்னிடம் இருபதாயிரம் தான் இருக்கு என்கிறேன். அண்ணரிடம் கொடுங்கோ என்றுவிட்டு அவரையும் கூட்டிக்கொண்டு புரோக்கர்மார் நிற்குமிடம் சென்று காணி உரிமையாளரையும் கூப்பிட்டு பணத்தைக் கொடுத்து அடுத்த கிழமையே எழுத்தலாம் என்றுவிட்டு மகிழ்வோடு வீடு திரும்புகிறோம். இரண்டு நாட்களில் கணவரும் மகளும் லண்டனுக்குத் திரும்ப நானே தனிய ஓட்டோவில் சென்று அலுவல்கள் பார்த்து ஒரு வாரத்தில் எழுத்துவேலை எல்லாம் முடிய எனது சித்தியையும் மச்சாளையும் கூட்டிக்கொண்டு இரண்டாம் தடவை வீட்டுக்குச் செல்கிறேன். காணியைப் பார்த்ததும் என் சித்திக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு ஐந்து நிமிடத்தில் வளவைச் சுற்றிப் பார்த்தவர் 44 தென்னை நிக்குது. தேங்காய் நல்ல விலைக்கு விக்கலாம் என்றவுடன் நான் சிரிக்கிறேன். மச்சாளின் முகத்தில் எந்த உணர்வையும் காண முடியவில்லை.  இணுவிலில் இருந்து போக வர ஓட்டோவுக்கு 2000 ரூபாய்கள். நான்கு புறமும் வேலிகள் எல்லாம் உயிர்வேலிகள். தென்னைகளில் 14 தென்னைகள் தறிக்கவேணும். உயரமாகி சோடைபோய்விட்டது என்கிறா சித்தி. மச்சாளும் அதை ஆமோதிக்க யாரையாவது பிடித்துவிடுங்கள் என்று அவர்களிடமே கேட்கிறேன். இணுவிலில இருந்து ஆர் இவ்வளவு தூரத்துக்கு வேலை செய்ய வரப்போகின்றனர் என்கின்றனர் இருவரும்.  நான்கு பக்கமும் மதில் கட்ட எக்கச்சக்கம் முடியப்போகுது என்கிறா சித்தி. பேசாமல் தகர வேலி அடியுங்கோ என்கிறா மச்சாள். கணவரிடம் கேட்க, கனக்கப் பணத்தை வீணாக்காதே என்கிறார். 

 

தங்கையின் கணவரைக் கேட்க இங்கிருந்து ஒருத்தரும் வரமாட்டார்கள் அக்கா. நீங்கள் உங்கே அயலட்டையில் விசாரித்துப் பாருங்கள் என்கிறார். தென்னை மரங்கள் வெட்டுவதற்கு யாரிடம் விசாரித்தும் சரியானவர்கள் அகப்படவே இல்லை. என் வளவுக்குப் பின்னால் மூன்று வீடுகள். அவர்களிடம் சென்று விசாரித்தால் எல்லாரும் வேலைக்குப் போறவை. வரீனமோ தெரியாது என்று என் தொலைபேசி இலக்கத்தை வாங்கிக்கொண்டு விட்டதோடு சரி. என் நண்பனின் அம்மாவுடன் கதைத்தபோது தன்னிடம் வேலை செய்யும் இருவர் இருக்கின்றனர். அனுப்பிவிடுகிறேன் என்று கூற நானும் சரி என்கிறேன். 

 

அவர்கள் வந்ததும் அவர்களைப் பார்க்க ஒரு நம்பிக்கை வருகிறது. ஒரு தென்னை மரம் வெட்ட நான்காயிரம் என்கின்றனர். அவர்கள் கதைக்கும்போது என் ஓட்டோக் காரரும் நிற்க, துண்டுபோடுவதற்குத்தான் உந்த விலை. இது முழுசாகவே வெட்டி விழுத்தலாம். மூவாயிரம் கேளுங்கள் என்கிறார். அவர்களும் சம்மதிக்க அன்றே பதினாலு தென்னைகளையும் வெட்டி வீழ்த்திவிட காணி பார்க்கமுடியாமல் இருக்கு. மாலை வீடு திரும்பும்போது ஓட்டுனரை எங்கே அகற்றுவது என்று கேட்கிறேன். தேடித்தான் பார்க்கவேணும். சிலவேளை மரங்கள் சிலாகைக்காய் அறுப்பதற்கு எடுப்பாங்கள். ஆனால் நீங்கள் வெட்டிப்போட்டுக் கூப்பிட்டால் உடன வரமாட்டினம்.  எதுக்கும் உவங்களைக்கொண்டு துண்டுபோட்டு எங்காவது அகத்திவிடுங்கோ என்கிறார். 

 

அடுத்தநாள் அவர்கள் எல்லாவற்றையும் துண்டுபோட்டுக்கொண்டு நிற்க இரண்டு மூன்று பேர் வந்து தாம் அந்தக் குற்றிகளை விறகுக்கு எடுக்கலாமா என்கின்றனர். தாராளமாக எடுத்துப் போகலாம் என்கின்றேன். அதில் இருவர் வந்து மூன்றில் இரு பகுதியை பெட்டி பூட்டிய உளவு இயந்திரத்தைக் கொண்டுவந்து எடுத்துச் செல்கின்றனர். மூன்றாவதாய் எடுப்பதாகக் கூறியவர்களை மூன்றுநாட்கள்  ஆகியும் காணவில்லை. தொலைபேசியை அடித்தாலும் எடுக்காமல் இருக்க பின்னால் உள்ள வீடுகளில் ஒன்றுக்குச் சென்று உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் தென்னங்குற்றிகள் இருக்கு. தேவை என்றால் சொல்லி விடுங்கள் என்றுசொல்ல தாமே எடுக்கிறோம் என்றும் ஆனால் தமக்கு அதை ஏற்றிவிட ஆட்கள் இல்லை என்கின்றனர். சரி நானே ஆட்களைத் தருகிறேன் என்றுவிட்டு இரு கூலி 6000 கொடுத்து காணிக்குள் வெட்டிய தென்னைமரங்களை எல்லாம் அகற்றியாச்சு. 

 

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப வீடு கட்டவில்லை, வீடும் வளவும் வாங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
புரோக்கர்மார் கொமிசனுக்கு ஆக்களைக் கூட்டுவாங்கள், அவ்வளவு ஒற்றுமை.

Edited by ஏராளன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி.......ரெம்பப் பிரயாசைப் பட்டு விரும்பியதுபோல் வாங்கி இருக்கிறீங்கள் ......!எல்லைகளை சரியாக அடைக்கவும் அதுதான் முக்கியம்.....!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்....நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகளின் ஒன்றாயினும். அங்கே போய் வாழ்வதாகயிருந்தால.  சிறந்ததொரு முயற்சிகள்      எங்களுக்கு முரசுமோட்டை இல் 2..5 ஏக்கர் வயல் காணி இருந்தது   நாங்கள் போய் பார்பதில்லை  ...குத்தகைக்கு விடப்பட்டுள்ளது     அதாவது நெல் மூட்டையாக தாருவார்கள்.     இப்போது வயல் 2 ஏக்கர் ஆகி விட்டது    பக்கத்து வயல்காரர்.   வரம்புகளை. அரக்கி   அரக்கி கட்டி விட்டார்கள்.....எனவேதான் எல்லைகள் முக்கியம்  சுவி அண்ணா சொன்னது போல் வேலிகள் வடிவாக அடைத்து வையுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அது எமக்கு நேராகச் சொல்லப்படவில்லை. ஆனால் மகளுக்குச் சொன்னர்களாம். வெளிநாட்டில இருக்கிறியள். இங்க வந்து இருக்கப்போறியளோ. உங்கட அப்பாவுக்குப் பேராசை என்று.😀😂  

ம்ம் கன பேர் அதைதான் இங்க சொல்லி இருக்குறார்கள் 

17 hours ago, குமாரசாமி said:

நன்றி ராசன் உங்கள் நெஞ்சார்ந்த கருத்திற்கு.
அண்மையில் உவ்விடம் வந்து திரும்பிய நண்பர் ஒருவர் எனக்கு சொன்னது......சொந்தக்காரர் வீடுகளில் சாப்பிட,தண்ணி குடிக்கவே பயமாக இருக்கின்றதென......

இங்க உள்ளவர்கள் கதைப்பதைதானே சொன்னேன் எங்க மாமி இருவர் கனடா, லண்டன் வீடு வளவு காணி காடு பிடித்து போய் இருக்கிறது இப்பவரைக்கும் வரவில்லை 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது அதை கொடுத்தால் என் அப்பாவின் சொந்தங்கள் பயனடையும் ஆனால் கொடுக்கவும் மாட்டார்கள் ஊருக்கு வரவும் மாட்டார்கள் .

 

16 hours ago, Nathamuni said:

சொந்தபந்தம் எண்டாலும் பரவாயில்லை. வாடகைக்கு இருந்த ஆக்களுக்கும் ஆசை வருதே.

நீங்க வேற நாதம்ஸ் என் தங்கையின் வீடு ஒன்று சுனாமி ஏரியா என ஒதுக்கிய பகுதிகளில் இருக்கிறது ஒரு  குடும்பத்தை குடி வைத்தோம் பாழடைந்து கிடக்கிறது என ஆனால் எல்லாம் ஒரு வருட ஒப்பந்தம் என வருட முடிவில் வெளியேறுங்கள் வீடை சரி செய்து எடுக்க போகிறோம் என சொல்ல சண்டைக்கு வந்துவிட்டார்கள் உதவி செய்ய போய் உபத்திரத்தில் முடிகிறது பல கதைகள் 

 

15 hours ago, நிலாமதி said:

அது தம்பி சொய்சா   அல்ல சொகுசா ...சொகுசு( நோகாம ) ஒருகஷ்டமும் இல்லாமல் வாழ்தல்.   வெளிநாடு வந்து பார்த்தால் தான் சொகுசா   வாழ்வதுபற்றி தெரியும்.  

அது சொகுசு தான் அக்கா வெளிநாட்டு வாழ்க்கை நானும் அனுபவித்தவன் தானே எனக்கு தெரியாததா இங்க பலர் அங்கே காசு காய்க்கிறது என்ற நினைப்பிலே கோடிகளை கொடுத்தும் வர முண்டியடிக்கிறார்கள்

5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வேலி அடைக்க ஆட்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்

முடிஞ்சவரைக்கும் மதில் வேலி கட்டுங்கள் அதுவே பல பிரச்சினைகளை தவிர்க்கும் 

அப்பாடா காணி வாங்கியாச்சு என பெருமூச்சு விட்ட தருணம் மக்களே அக்கா கோடி கொடுத்து காணி வாங்கு இருக்காவு இருக்காவு இருக்காவு என அறியத்தருகிறோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்க உள்ளவர்கள் கதைப்பதைதானே சொன்னேன் எங்க மாமி இருவர் கனடா, லண்டன் வீடு வளவு காணி காடு பிடித்து போய் இருக்கிறது இப்பவரைக்கும் வரவில்லை 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது அதை கொடுத்தால் என் அப்பாவின் சொந்தங்கள் பயனடையும் ஆனால் கொடுக்கவும் மாட்டார்கள் ஊருக்கு வரவும் மாட்டார்கள் .

காணிகள் பற்றையாக. காடு போல் இருக்குமாயின் மாநகரசபை தண்டப்பணம் அறவிடுமில்லையா  ?? அப்படி சட்டம் இருப்பதாக அறிந்தேன்   ....பிழையா??

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பார்ம்ல இருக்கவன பார்ம் அவுட் பண்ணனுமா... பார்ம்ல இல்லாதவனுக்கு ஓப்பனிங் பேட் வேணுமா டேபிள் கடைசில இருக்க அணிய டேபிள் டாப் கொண்டு போகனுமா மத்த டீம் கிட்ட அடி வாங்குனவன் எல்லாம் 100 அடிக்கனுமா டாஸ் வின் பண்ணி மேட்ச் தோக்கனுமா திறமையான பிளேயர்ஸ் எல்லாரையும் வருச கணக்கா பெஞ்ச்ல உக்கார வைக்கனுமா அணுகுவீர் சென்னை சூப்பர் கிங்ஸ்... சேப்பாக்கம் மைதானம்.... எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.....   முகநூல் பதிவொன்று https://www.facebook.com/story.php?story_fbid=2675239192649639&id=100004907528753&post_id=100004907528753_2675239192649639&mibextid=xfxF2i&rdid=t05xMYxZyNxFKvqs
    • வணக்கம். காலையில் எழுந்ததும் இன்றைய நாள்(05/11/2024) குறித்த திட்டமிடல் குறித்துப் பேசினேன். மனைவியார் சொன்னார், “நாளைக்கு மதர்சு டே, ஆகவே கடைகள்ல கூட்டமா இருக்கும்”. தொடர்ச்சியாக ஒரு பேச்சைப் பதிவு(ஆடியோ கிளிப்) செய்து குழுக்களிலும் ஒருசிலருக்கும் அனுப்பி விட்டு வேலைகளைத் துவக்கி இருந்தேன். வணிக வளாகத்தை நோக்கி வண்டி சென்று கொண்டிருக்கும் போது ஓர் அழைப்பு. நார்த்கரொலைனாப் பல்கலைக்கழகத் தமிழ்மாணவர் சங்கத்தலைவரின்(president of University of North Carolina Tamil Students Organization) அழைப்பு அது. வண்டியைச் செலுத்திக் கொண்டேவும் உட்கிடை உரையாடற்கடத்தியின் ஊடாகப் பேசலானேன். “Appa, you are more inline with mother of mother's day" என்றார். நன்றி சொல்லி, நலம் விசாரிப்புக்குப் பின்னர் பேச்சு முடிவுக்கு வந்தது. வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், அன்னையர் நாளின் அன்னை குறித்த தேடலையும் நாடலையும் மேற்கொண்டேன். அமெரிக்க சிவில்வார், உள்நாட்டுப் போருக்கு முந்தைய காலகட்டத்தில் சமூகத்தில் கொந்தளிப்புகள் மேலோங்கி இருந்தன. பிள்ளைவளர்ப்பில் விழிப்புணர்வு வேண்டி, உள்ளூர் அளவில் தாயார்களுக்கான சங்கங்கள் அமைத்து விழிப்புணர்வு ஊட்டி வந்தார் யேனா ஜார்விஸ் என்பார். அடுத்தடுத்து அன்னையர்கள் நலம், கடமைகள் கருதிப் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்தார் யேனா. 1905ஆம் ஆண்டு மறைந்த தம் தாயாரின் செய்த பல தியாகங்களை மேற்கோள் காட்டி, 1908ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அன்னையர் நாள் கடைபிடிக்கப்பட வழிவகுத்தார் யேனா அவர்கள். தொடர்ந்து யேனா அவர்கள் மேற்கொண்ட அலுவல்களின் வழி, குடியரசுத் தலைவர் வுட்ரோ வில்சன் அவர்கள், மே மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை நாட்டின் அதிகாரப்பூர்வமான அன்னையர் நாளாகவும் விடுமுறைநாளாகவும் அறிவித்தார். நாடெங்கும் அன்னையர்நாள் பரபரப்பாகக் கடைபிடிக்கப்பட்டது. யேனா அவர்கள் சொல்லொணாத்துயர் கொண்டார். நாட்டின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியிலிருந்து அன்னையர் நாளை நீக்க வேண்டுமெனப் போராடவும் விழைந்தார். காரணம்? அத்தகு நாள் அதன் நோக்கத்தில் இருந்து, அடிப்படையில் இருந்து விலகி, நழுவி, வணிகமயமாக்கப்பட்டதுதான் காரணம். அரசாங்கத்துடன் பேசிப் பேசி, தம் மறைவுக்குச் சற்று முன்பாக, 1948ஆம் ஆண்டு, நீக்கப்பட்டதைக் கண்டு சற்று மனம் ஆற்றிக் கொண்டார். இருந்தாலும், இன்றளவும், அன்னையர் நாள் கடைபிடிக்கப்பட்டே வருகின்றது. அன்னையர் நாளின் அன்னைக்கு நாம் செய்யும் தொண்டு என்னவாக இருக்க முடியும்? உள்ளபடியே அவரின் உள்ளக்கிடக்கையைப் புரிந்து கொண்டு செயற்படுவதால் மட்டுமே அது ஈடேறும். மகவினை ஈன்றுகின்ற போது ஒருவர் தாய் ஆகின்றார். அதன் நிமித்தம் அவர் பல்வேறு அர்ப்பணிப்புகளை, தன்னலம் கருதாமல் தியாகங்களைச் செய்கின்றார். ஒவ்வொரு பிரசவமும் மறுபிறப்பு என வர்ணிப்பர். அதற்கும் மேற்பட்டு, மகவு ஈன்றபின்னரும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டே மீள்கின்றார். உயிர்நீர்களின்(hormonals imbalance) சமன்பாடின்மை நிமித்தம் மனச்சோகை(postpartum depression), தாய்ப்பால் ஊட்டுதற்சிக்கல்கள், தன்னுடற்கட்டுமான மீள்பணிகளெனப் பலவும். பிரசவத்திற்குப் பிறகான மனச்சோகை என்பது 80% பெண்களுக்கு ஏற்படுவதாகவும், எழுவரில் ஒருவருக்கு அது பெரும்சிக்கலாகவே உருவெடுப்பதாகவும் அற்வியற்கட்டுரைகள் சொல்கின்றன. பெரும்பாலானோர் இதனை இனம் கண்டு கொள்வதே இல்லை. மாறாக, பிணக்குகள், கருத்து வேறுபாடுகள் என்பதாகக் கருதி விடுகின்றனர். நீண்டநாள்ச் சிக்கல்களாக இன்னபிறவும். According to the WHO, more than a third of women experience lasting health problems after giving birth, including: Pain during sexual intercourse (30%) Low back pain (32%) Anal incontinence (19%) Urinary incontinence (8-31%) Anxiety (9-24%) Depression (11-17%) Perineal pain (11%) Fear of childbirth (tokophobia) (6-15%) சும்மா, அன்னையர் நாளில் லாலா பாடி, குளிர்விப்பதால் மட்டுமே மேன்மை கிட்டிவிடுமா? இது போன்றவற்றை வெளிப்படுத்தி, நல்லதொரு புரிதலையும் ஒத்துழைப்பையும் கவனிப்பையும் நல்குவதால் மட்டுமே, அன்னையர் நாளின் அன்னையாரான யேனா ஜார்விஸ் அவர்களின் புகழுக்கு வலுசேர்க்க முடியும். மாந்தகுலத்துக்கும் மேன்மை கிட்டும். அன்னையர் நாள் வாழ்த்தும் வணக்கமும்!! -பழமைபேசி, pazamaipesi@gmail.com http://maniyinpakkam.blogspot.com/2024/05/blog-post.html
    • தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் தீர்மானம் எடுக்க அவசரப்பட வேண்டாம் - தமிழ் அரசுக் கட்சி உட்பட அனைத்து தரப்பிடமும் சம்பந்தன் வேண்டுகோள் Published By: DIGITAL DESK 7    12 MAY, 2024 | 10:44 AM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சி உட்பட விடயத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பிடமும் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் பகிரங்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான அரசியல் கட்சிகள் கொள்கை அளவில் இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளன. சிவில் அமைப்புக்களும் ஏகமனதான கருத்துக்கு வருகை தந்துள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி 19ஆம் திகதி தீர்மானத்தை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிரேஷ்ட தலைவர் என்ற வகையில் உங்களுடைய நிலைப்பாடு என்னவாக உள்ளது என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாட்டின் நீண்ட வரலாற்றை பார்க்கின்றபோது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக வரமுடியும் என்ற நிலைமைகள் உள்ளன. இந்த நிலையில் தென்னிலங்கையின் தேசியக் கட்சிகள் தற்போது வரையில் உத்தியோகபூர்வமாக தங்களது ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்புக்களைச் செய்யவில்லை. அக்கட்சிகள் அவ்விதமான அறிவிப்புக்களை செய்வதற்கு முன்னதாக நாம் எமது நிலைப்பாட்டை முன்வைத்து வீணான குழப்பங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. தென்னிலங்கைத் தலைவர்களில் யார்? வேட்பாளர் அவர்களின் தமிழ் மக்கள் தொடர்பான நிலைப்பாடு என்ன? அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம் என்ன கூறுகின்றது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆழமான கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கில் சரித்திர ரீதியாக வாழ்ந்துவருகின்ற மக்கள் சமஷ்டி அடிப்படையில் அதியுச்சமான அதிகாரப்பகிர்வினைக் கோரிவருகின்றார்கள் என்பது தென்னிலங்கையின் தலைவர்கள் நன்கு அறிவார்கள். ஆகவே அவர்கள் நாட்டின் தலைமைப்பொறுப்பினை ஏற்பதாக இருந்தால் நிச்சயமாக தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உள்ள சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். தென்னிலங்கையில் உள்ள தலைவர்கள் உள்ளக சுயநிர்ணய உரித்தினை ஏற்றுக்கொள்ளாது விட்டால் நாம் சர்வதேசச் சட்டங்களுக்கு அமைவாக வெளியக சுயநிர்ணயத்தினைக் கோருவதற்கு இயலுமானவர்களாக இருக்கின்றோம் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துகின்றேன். அந்த வகையில், நாம் அனைத்து சூழல்களையும் ஆழமாக எமது கருமங்களை முன்னெடுக்க வேண்டும். அவசரப்பட்டு எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றார். https://www.virakesari.lk/article/183291
    • வேறுயாருக்கு எனக்குத்தான்........நானும் ஜனாதிபதி வேட்பாளராய் நிற்பேனே .......!  😂
    • இனி யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பேச மாட்டேன்.. நீதிபதியிடம் சொன்ன சவுக்கு சங்கர் சென்னை: இனி யூடியூப்பில் கடுமையான பிரச்சனை ஏற்படுத்துவது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன், யார் மனதையும் புண்படுத்தும் வகையில் இனிமேல் பேச மாட்டேன் என்று சவுக்கு சங்கர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், 10 நபர்கள் இருட்டு அறையில் வைத்து தன்னை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். என்னை மோசமாக அடிக்கின்றனர். விசாரணையை என்று அடிக்கிறார்கள். இனி யூடியூப்பில் கடுமையான பிரச்சனை ஏற்படுத்துவது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என்று சவுக்கு சங்கர் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கு, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறேன். நான் விசாரணை மேற்கொள்ளும் வரை தைரியமாக இருக்கும்படியும் சவுக்கு சங்கரிடம் நீதிபதி கூறியதாக சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் விஜயராகவன் பேட்டி அளித்துள்ளார். சிறைத்துறை தலைவர் வழக்கு: முன்னதாக கோவை சிறையில் இருந்து சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்து என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூ-டியூபர் சவுக்கு சங்கர், தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது வலது கை வேண்டுமென்றே உடைக்கப்பட்டுள்ளதாகவும், சிறையில் அவரை சிறைத் துறையினர் துன்புறுத்தியுள்ளதால், அதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.   காயமடைந்த சவுக்கு சங்கருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அடங்கிய அமர்வு, சிறையில் ஆய்வு செய்த கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையை (மே 09) தாக்கல் செய்யும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் , சிறையில் சவுக்கு சங்கர் கொடுமை படுத்தப்படவில்லை. சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது ஏன்? என பதிலளித்த அவர், அவருக்கு ஏற்கனவே சிறை கைதிகளுடன் பகை இருந்திருக்கலாம் எனவும், அதனால் தாக்கப்பட்டிருந்தால் அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது எனவும் தெரிவித்தார். சிறை நிர்வாகம் சார்பில் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆட்கொணர்வு மனுவில் வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க முடியாது. சிறை மாற்றம் செய்ய சிறை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், சவுக்கு சங்கர் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறித்தி உள்ளனர். அதனால், மருத்துவர்கள் அறிக்கை படி சிறை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சவுக்கு சங்கருக்கு சிறை நிர்வாகம் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோவை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற சவுக்கு சங்கரின் தாயார் அளித்த மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். https://tamil.oneindia.com/news/chennai/i-will-not-hurt-anyones-feelings-anymore-in-youtube-videos-says-savukku-shankar-to-judges-605191.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.