Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"நிவேதகிரி' மட்டும் தானே இதுவரைக்கும்.. அக்கா சித்திக்கு கதிரை எப்போ வாங்கிப் போடுவீங்கள்....இது எல்லாம் அங்குள்ளவர்களின் செயல்பாடுகளில் ஒன்று  பொருட்களை மறைச்சு வைப்பது......

  • Replies 378
  • Views 31.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    இரண்டு   என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பன்னிரண்டு    முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பத்தொன்பது    எனது முகநூல் மெசெஞ்சரில் நீங்கள் இன்னும் ஊரில் தான் நிற்கிறீர்களா என்ற செய்தி வந்திருந்தது. பார்த்தால் சகாரா. தானும் அங்கு வருவதாக கூறியிருந்தாலும் வேலைகள் தொடர்ந்து காணியில் ந

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

ஆ.....என்னமா யோசித்து சித்தியையும் சரிக்கட்டி புருஷனையும் சமாளித்து, சா......சொல்லி வேல இல்ல.....இதெல்லாம் பெண்களுடன் கூடவே பிறந்து வருகிறது போல...... தொடருங்கள்......!  😂

சித்தியையாவது சமாளிக்கலாம். புருஷனை சமாளிக்கிறதுதான் சரியான கடினம். சரி பிழையை ஒருக்காக்க சொல்லிப்போட்டு விடாமல் திரும்பத் திரும்பச் சொல்லி .. ................😀

7 hours ago, ஏராளன் said:

அக்கா கட்டுநாயக்காவில் இருந்து வரும்போது பரந்தனுக்குப் பிறகு தான் ஆனையிறவு வரும். 

தொடருங்கோ...

சரி மாறிச் சொல்லிப்போட்டான். இது ஒரு தப்பா.

😃🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

தொடருங்கள் சுமே. உங்கள் குறிப்பை தவிர அநேகமான உங்களை பற்றிய தகவல்களை  சேகரித்து விட்டோம். சும்மா...🙂

images-2.jpg

கவனமாகக் சேமிச்சு வையுங்கோ. விசாரணைக்கு உதவும்.

 

3 hours ago, யாயினி said:

"நிவேதகிரி' மட்டும் தானே இதுவரைக்கும்.. அக்கா சித்திக்கு கதிரை எப்போ வாங்கிப் போடுவீங்கள்....இது எல்லாம் அங்குள்ளவர்களின் செயல்பாடுகளில் ஒன்று  பொருட்களை மறைச்சு வைப்பது......

அவசரப்படக்கூடாது 😃

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சரி மாறிச் சொல்லிப்போட்டான். இது ஒரு தப்பா.

😃🙂

பிழைதான்... 😊

சரி பரவாயில்ல.... 😁

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

  எங்கே சித்தி இவற்றை வைக்கிறது என்று நான் கேட்க, முன்னால் உள்ள அறையைக் காட்டுகிறா. அதற்குள் பொதிகளை வைத்தவுடன் இதுமட்டும் தானோ என்கிறா

இது சரியான கேள்வி?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

இது சரியான கேள்வி?

அப்படியே, மூண்டு பாக் மச்சாள் வீடு போட்டுது எண்டு, சித்திக்கு தெரியாது. சொல்லிப்போடாதீங்க.

காதை திருகி கேட்டாலும் சொல்லிப்போடாதீங்க. 😍

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் படிக்க ஆவலாக உள்ளோம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 15/4/2023 at 19:02, Nathamuni said:

பிழைதான்... 😊

சரி பரவாயில்ல.... 😁

😂

On 15/4/2023 at 19:50, Kavi arunasalam said:

இது சரியான கேள்வி?

😃

On 15/4/2023 at 22:06, Nathamuni said:

அப்படியே, மூண்டு பாக் மச்சாள் வீடு போட்டுது எண்டு, சித்திக்கு தெரியாது. சொல்லிப்போடாதீங்க.

காதை திருகி கேட்டாலும் சொல்லிப்போடாதீங்க. 😍

சொல்ல மாட்டனே

On 15/4/2023 at 23:38, பெருமாள் said:

தொடருங்கள் படிக்க ஆவலாக உள்ளோம் .

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழு

 

 

தேநீர் போடவோ என்கிறா சித்தி. ஓம் கொண்டுவாங்கோ என்றுவிட்டு சாய்மனைக் கதிரையில் இருந்து எழுகிறேன். உள்ளே சென்று வீட்டைப் பார்க்க மனதில் இது இப்ப என் வீடு இல்லை என்னும் எண்ணம் தோன்றி அலைக்கழிக்கிறது. பத்து ஆண்டுகளின் முன்னர் என்  கணவரின் சகோதரர் ஒருபுறம், என் அம்மாவின் தங்கை பிள்ளைகள் ஒருபுறம் தமக்குத் தான் வீடு என்று கதைத்துக்கொண்டு திரிந்ததாலும் கணவரின் தொடர் கரைச்சல் காரணமாக அந்த வீட்டை என்  தங்கைக்குக் கொடுத்து இரண்டு மாதங்கள் சரியான தவிப்பாகிவிட திரும்ப எனக்குத் தா என்று கேட்டதற்கு நான் விக்கமாட்டான். கேட்காதைங்கோ என்றுவிட்டாள். வேறு காணிகள் வாங்குவதற்கு நான் ஆசைப்பட்டபோதெல்லாம் அங்க ஆர் போய் இருக்கப்போறது சும்மா இரு. என்ர காணி இருக்குத்தானே. வேணுமென்டால் அதில போய் வீடுகட்டி இருக்கலாம் என்னும் கணவரின் அதட்டலாலும் காணிகள் வாங்கும் ஆசையே போய்விட, இப்ப வீட்டுக்குள் நின்று பார்க்கும்போதுதான் அவசரப்பட்டு விற்றுவிட்டேன் என்று மனதில் வேதனை எழுகிறது.  

 

தேநீர் குடித்தபின் தங்கை வீட்டுக்குச் செல்கிறோம்.  வெளிநாடு தோற்றுப்போகுமளவு பார்த்துப்பார்த்து வீட்டைத் திருத்தி வைத்துள்ளனர். 2- 2.20 நீள அகலத்துடன் தேக்குக் கட்டிலும் மெத்தையும் யன்னல் திரைச் சேலைகளும் ஏசியும் என பார்க்கவே ஆசையாக இருக்கிறது. அறையுடனேயே ரொய்லெட் வசதியுடன் கணவரும் வீட்டைச் சுற்றிப் பார்க்கிறார். மகளுக்கும் பிடித்துவிட ஒரு இரண்டு மூன்று நாட்கள் தூங்குவதும் கதைப்பதும் உண்பதுமாக காலம் களிக்கிறது. வீட்டின் முன்பகுதி முழுவதும் விதவிதமாக பூங்கன்றுகள் சாடிகளிலும் நிலங்களிலும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 

 

அடுத்த வாரம் அங்குள்ள கருணாகரப் பிள்ளையார் கோவில் தேர் என்பதனால் எனக்கும் மகளுக்கும் சேலை வாங்குவது சட்டை தைக்கக் கொடுப்பது என்று நேரம் ஓடிப்போக மனிசன் வேட்டி கட்டிக்கொண்டு மேலே ஒன்றும் போடாமல் கோயிலுக்குத் தயாராகி வருகிறார். அப்பா சேர்ட்டை மறந்திட்டியள் என்று சிரிக்கிறாள். கோயிலுக்கு உள்ளே சேர்ட் போடக்கூடாது  என்று மச்சாள் சொல்ல எதுக்கும் சேர்ட்டைப் போட்டுக்கொண்டு வாங்கோ. உள்ள போகும்போது கழற்றி இடுப்பில் கட்டிக்கொண்டு போகலாம் என்கிறேன். 

 

கோயிலில் முன்பு போல் பெரிதாகக் கூட்டம் இல்லை. இணுவிலுக்கும் உரும்பராய்க்கும் நடுவே இருப்பதால் இரு ஊரவரும்முன்னர் நிறையவே வருவார்கள். இம்முறை சிறிய குழந்தைகளையும் இளம் பெண்களையோ ஆண்களையோ  அல்லது கொஞ்சம் வயது முதிர்ந்தவர்களையோ அங்கு காணமுடியவில்லை. எங்கள் வயதை ஒத்தவர்கள் தான் அதிகம் காணப்பட்டனர். விசாரித்தபோது பிள்ளைகளுக்குப் பள்ளி. பெரியவர்களும் யூனி, வேலை.  மற்றவர்கள் வரப் பஞ்சியில் வரவில்லை என்றனர். அம்மன் கோவிலுக்கு என்றால் நிறையப்பேர் லீவு போட்டுவிட்டும் வருவினம். இந்தக் கோவிலுக்குக் குறைவு என்கிறா மச்சாள். சனம் குறைவாக இருந்தது பார்க்க ஒரு மாதிரித்தான் இருந்தது. 

 

நான் சாதாரணமாகவே கோயில்களுக்குச் செல்வதில்லை. மகளுக்காகவும், சரி கன நாட்கள் தேர் பார்த்து. போவோம் என்று போனது. கடும் வெயில் வேறு. காலையில் உணவுமில்லை. தேர் மெதுவாக நகர நகர கால்களிலும் வெயிற்சூடு மட்டுமன்றி குறுணிக் கற்கள் குற்றுவதும் தாங்கவே முடியாததாகிவிட்டது. மூன்றாவது வீதிவரை பொறுமையோடு இருந்த எனக்குப் பொறுமை போய்விட தேரைக் கடந்து சென்று செருப்பை எடுக்கவும் ஏலாமல் தவிப்புடன் நிற்கிறேன். வெறுங்காலுடன் வீடும் செல்ல முடியாது. மேற்கொண்டு தேருக்குப் பின்னால் போவதில்லை என்று முடிவெடுத்து தண்ணீர்ப் பந்தல் ஓரமாக நிற்கிறேன். கணவர் தூரத்திலிருந்து பார்த்துவிட்டாற்போல் என்னருகே வருகிறார். சர்க்கரைத் தண்ணீர் அல்லது மோர் குடிக்கப் போகிறாயா என்று கேட்க சரியான விடாய் தான் ஆனாலும் வேண்டாம் என்கிறேன். மகளும் தகப்பனும் சர்க்கரைத் தண்ணீர் வாங்கிக் குடிக்கின்றனர். ஒரு வாளியில் தண்ணீர் வைத்து சில்வர் கப்புகளைக் கழுவிக் கழுவி அடுக்குகிறார்கள். என்ர செருப்பை எடுத்துக்கொண்டு வாறியளோ ? நான் போகப்போறன் என்கிறேன். நான் அப்பாவுடன் வருகிறேன் என்கிறாள் மகள். தேர் தெற்கு வீதிக்கு நகர மச்சாளிடம் திறப்பை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து ஒரு தேநீர் போட்டுக் குடித்தபின்னர் தான் மனம் அசுவாசமடைகிறது. 

 

அடுத்தநாள் கோட்டையைச் சுற்றிப் பார்க்கச் செல்வோம் என முடிவெடுத்து பேருந்தில் யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து நடந்து செல்கிறோம். என் ஒன்றுவிட்ட அண்ணா சிவகுமாரனுடன் சேர்ந்து சில விடயங்களைச் செய்ததாலும்,  துரையப்பா கொலைவழக்கில் கைதாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவரைப் பார்ப்பதற்கு அம்மா என்னையும் அழைத்துக்கொண்டே கோட்டைச் சிறைக்குச் செல்வார். அகளிக்குள் முதலைகளெல்லாம் இருக்கின்றனவோ இல்லையோ. நான் அம்மாவுடன் அதைக் கடந்து உள்ளே செல்லும்வரை முதலை பாய்ந்து வந்து இழுத்தாலும் என்ன செய்வது எனப் பயந்தபடி அம்மாவின் கையை  இறுக்கிப் பிடித்தபடி செல்வேன். இப்ப எல்லாம் தரைமட்டமாகிக் கிடப்பதைப் பார்க்க மகிழ்ச்சி ஏற்பட்டாலும் எத்தனை உயிர்கள் இதற்காகக் காவு கொள்ளப்பட்டன என எண்ணும்போது வேதனையாகவுமிருந்தது. 

 

இப்போது முன்னர் போன பாதை அன்றி வேறு பாதை அமைக்கப்பட்டிருந்தது. நானும் கணவரும் இலங்கை ஐடி வைத்திருந்தபடியால் எமக்கு 100 ரூபாய்களும் மகளுக்கு 1250 ரூபாய்களும் அறவிட்டனர். எக்கச்சக்கமான சிங்கவர்கள், சிங்களப் பள்ளி மாணவிகள் என சிங்களப் பிரதேசத்தில் நிற்பதுபோன்ற எண்ணமே ஏற்பட்டது. நாம் போனது 11 மணிக்கு கடும் வெயில். ஒரு 15 நிமிடத்தில் பார்த்துவிட்டு மேலே இருந்த ஒரு மரத்தடியில் வேரில் நான் இருக்க கணவனும் மகளும் புல்லின்மேல் அமர்கின்றனர். மகள் கோட்டையைப் பற்றிக் கேள்விகள் கேட்க நானும் கணவரும் தெரிந்தவற்றைக் கூறுகிறோம். 

 

மீண்டும் வெளியில் வந்து முனியப்பர் கோவிலடியிலும் சிறிதுநேரம் இருந்துவிட்டு பக்கத்தில் இருக்கும் நூலகத்தையும் பார்ப்போம் என்று சொன்னால் அங்கும் நிறைய ஆட்கள். ஆனால் நூலகத்தில் ஏதோ வேலை நடப்பதாகக் கூறி யாரையும் உள்ளே விடவில்லை. வெளியே சென்று உணவருந்தலாம் என்று பார்த்தால் வீதிகளில் ஓட்டோவைக் காணவில்லை. யாழ் பேருந்து நிலையம்வரை சென்று அங்கிருந்து  ஒரு ஓட்டோவை அமர்த்திக்கொண்டு ஒரு நல்ல கோட்டலாகக் கொண்டுபோக முடியுமா என்று கேட்க, தட்டாதெருவுக்குக் கிட்ட ஒன்று இருக்கு. அங்கு போகலாமா என்று சாரதி கேட்கிறார். சரி என அங்கு சென்றால் அதைப் பார்க்க நல்ல உணவகம் போலவே இல்லை. ஆனால் சரியான சனம். மணமும் நன்றாகவே இருக்கு. ஆக எடுப்பு எடுக்காதை சாப்பிட்டுப் பார்ப்பம். நல்லம் இல்லை என்றால் இனிமேல் வராமல் விடுவம் என்கிறார். மகளும் தகப்பனுக்கு சப்போட செய்ய நாம் ஓரிடத்தில் அமர்கிறோம். ஒரு மட்டன்  பிரியாணியும் 2 சீபூட் பிரைட் ரைஸ்சும் மாம்பழ, அன்னாசி யூசும் மாறும் கோலாவும் ஓடர் செய்துவிட்டு காத்திருக்கிறோம். 

 

சுற்றிவரப் பார்த்தால் ஏ லெவல் படிக்கும் மாணவர்கள் போல. ஒரு பத்துப்பேர் ஒரு பெரிய மேசையைச் சுற்றி அமர்ந்திருக்கின்றனர். அனேகமாக பக்கத்தில் இருக்கும் ஆண்கள் கல்லூரி மாணவர்களாய்த்தான் இருக்க வேண்டும். கடைகளில் வந்து உண்ணுமளவு இப்ப மானவர்களின் நிலை மாறிவிட்டதா என்கிறேன். ஏனம்மா ஏதாவதொரு மாணவனின் பிறந்தநாளாகக் கூட இருக்கலாம் தானே என்கிறாள் மகள். என்ன வெளிநாட்டுக் காசாய் இருக்கும்  என்று கணவர் கூற, அதைப் பற்றி உங்களுக்கு என்ன? நீங்களா பணம் கொடுக்கப் போகிறீர்கள் என்கிறாள். 

 

முதலில் யூசைக் கொண்டு வருவார்கள் என்று பார்த்தால் எதையும் காணவில்லை. யாரிடமும் கேட்கலாம் என்றாலும் அவர்களையும் காணவில்லை. சிறிது நேரத்தில் எல்லாம் ஒன்றாக வருகிறது. கரண்டியும் ரிசுவும் தரமுடியுமா என்று கேட்க கொண்டுவந்து தருகிறார். உணவு நினைத்ததிலும் மேலாக நன்றாகவே இருக்கிறது. டிசேர்ட் இல்லையோ என்கிரா மகள். றியோவில் போய் உண்போம் என்கிறார் மனிசன். ஐஸ்கிரீம் சாப்பிட இன்னொருநாள் தனியப் போவம். இப்ப இங்க ஏதும் இருக்கா கேட்பம் என்றுவிட்டு அதில் நின்ற வேலையாளைக் கூப்பிட்டு என்ன இருக்கு என்று கேட்க வனிலா  ஐஸ் மட்டும்தான் இருக்கு என்கிறார். அதை வாங்கி ஆடிப்பாடி உண்டு விட்டு வெளியே செல்கிறோம்.  

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2023 at 18:57, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

 அதற்குள் ஏறியவுடன் “இவன் ஐந்து டொலர் தரும்படி கேட்கிறான்” என்கிறார் மனிசன். “அவனுக்கு எதற்கு ஐந்து டொலர் ? அதுகும் அவனுக்கு எதற்குக் கொடுக்கவேண்டும். அப்பிடி அவன் கேட்கிறதே பிழை” என்கிறேன். அதுதான் விரைவாகத் தள்ளிக்கொண்டு வந்தவரோ என்றபடி அவனை ஒரு பார்வை பார்க்கிறேன். "ஒண்டும் குடுக்கத் தேவையில்லை அப்பா. அது அவரின் தொழில்" என்கிறாள் மகள். அதற்குள் லிப்ட் கதவு திறக்க, கணவரைத் தள்ளியபடியே எனக்குக் காசு எதுவும் வேண்டாம் என்கிறான் அவன். 

 

அவனுக்குத் தமிழில் நாம் கதைத்தது புரிந்துவிட்டதோ என்னும் ஐயம் எழுகிறது. நானும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறோம்.


 

அவருக்கு நீங்கள் கொடுத்திருக்கலாம், அது அவரின் கடமைதான் என்றாலும் அவரின் அன்றைய வாழ்வும் சந்தோஷமான நாட்களில் ஓன்றாக இருந்திருக்கும், உங்களுக்கு USD5/- பெரியவிடமில்லை

நானும் போன முறை இலங்கை போனபோது ஒரு பொதி வரவில்லை, அங்கு நின்ற உதவியாளர் வந்து கடைசிவரை உதவினார், அவர் வெளியில் வந்ததும் Rs 5000/- கொடுக்க, அங்கு நின்ற சில உதவி தாய்மார்கள் வந்து உதவி கேட்க Rs 10,000/- கொடுத்து பங்கிட சொன்னேன், அவர்களின் முகத்தில் பார்த்த மகிழ்ச்சியில் நான் திரும்பும் வரை எந்தவித தடங்களுமின்றி மகிழ்ச்சியாக விடுமுறையை யாழில் செலவழித்தேன், எனது அனுபவத்தில் ஆண்டவன் இவர்கள் உருவில் வருவார்கள்👍,

தொடருங்கள், வாசிக்க ஆவலாக இருக்கு

On 10/4/2023 at 04:33, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதன் விலை £30 பயன்படுத்தியதுபோக மிகுதி £20 வரும். 

 

 

 

இது இயற்கையின் நியதி😁

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கோவில்களில் மக்களைக் காணமுடியாது!
செவ்வாய், வெள்ளியில் அருகில் உள்ள முருகன், பிள்ளையார் கோவிலடிக்குப் போனால் பூசகரும் மணியடிக்க உதவியாளரும் மட்டுமே இருப்பார்கள். தேர் திருவிழா நேரமும் மக்கள் குறைவு தான்.
அக்கா தொடருங்கோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடுத்த வாரம் அங்குள்ள கருணாகரப் பிள்ளையார் கோவில் தேர் என்பதனால் எனக்கும் மகளுக்கும் சேலை வாங்குவது சட்டை தைக்கக் கொடுப்பது என்று நேரம் ஓடிப்போக மனிசன் வேட்டி கட்டிக்கொண்டு மேலே ஒன்றும் போடாமல் கோயிலுக்குத் தயாராகி வருகிறார். அப்பா சேர்ட்டை மறந்திட்டியள் என்று சிரிக்கிறாள். கோயிலுக்கு உள்ளே சேர்ட் போடக்கூடாது  என்று மச்சாள் சொல்ல எதுக்கும் சேர்ட்டைப் போட்டுக்கொண்டு வாங்கோ. உள்ள போகும்போது கழற்றி இடுப்பில் கட்டிக்கொண்டு போகலாம் என்கிறேன். 

உங்களுக்கு கோயில் குளம் எல்லாம் பிடிக்காது எண்டு நினைச்சன்......:cool:

அது சரி சாறி,நகையளை காட்ட வேணுமெல்லே :smiling_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக போகிறது பயணம்.  முழுதும் எழுதி முடிய கருத்து  எழுதுகிறேன். தொடருங்கள்.

மிக நன்றாக எழுதுகின்றீர்கள் சுமே. சுவாரசியமாக உள்ளது.

ஒருவர் பயணம் போகும் போது, மடிக்கணணியைக் கொண்டு போகாமல், பெரிய கணணியை கொண்டு போனதை வாழ்க்கையில் முதல் தடவையாக இன்றுதான் கேள்விப்பட்டேன்.

On 13/4/2023 at 05:19, ஏராளன் said:

முறிகண்டில மட்டும் பொதுக் கழிப்பறையை பாவிக்கக் கூடாது, காசும் வாங்கிற்று சரியான பராமரிப்புச் செய்வதும் இல்லை. எங்கட அம்மா ரொம்ப அவஸ்தைப்பட்டவ.

 

ஒரு நாளைக்கு எத்தனையோ பேர் வந்து போகும் இடம் இது. சாதாரண நாட்களிலேயே குறைந்தது 1000 பேராவது வருவர். ஆனாலும் ஆகக் குறைந்த சுகாதார வசதி கூட எம்மவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. இது தான் எம் தமிழ் மக்களின் பொறுப்பின்மை. எப்படி கேவலமாக இருப்பினும், காசு கொடுத்து அதை பயன்படுத்தியே ஆக வேண்டிய நிலையில் தான் சனம் வருவினம் என்பதால் தான் அவர்கள் இப்படி செய்கின்றனர்.

இத்தகைய திமிர் கலந்த பொறுப்பின்மையை தென்னிலங்கையில் காண்பது மிகக் குறைவு.

10 hours ago, உடையார் said:

அவருக்கு நீங்கள் கொடுத்திருக்கலாம், அது அவரின் கடமைதான் என்றாலும் அவரின் அன்றைய வாழ்வும் சந்தோஷமான நாட்களில் ஓன்றாக இருந்திருக்கும், உங்களுக்கு USD5/- பெரியவிடமில்லை

 

நானும் இவ்வாறுதான் நினைத்தேன்.

ஒரு $5 இல் அவர் வாழ்க்கை செழிக்கப் போவதில்லை என்றாலும் அவ்வாறு கொடுப்பதால் நாங்கள் ஏழைகளாகவும் மாட்டோம்.

சுமே, உணவு விடுதிகளில் உணவு பரிமாறுகின்றவர்களுக்கும் ஒரு போதும் டிப்ஸ் கொடுப்பதில்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்

பயண அனுபவங்களை மிகவும் சிறப்பாக கொண்டு போகிறீர்கள்........ அதுசரி அந்த கணனி திரும்பவும் கொண்டு வருவதற்காகவா கொண்டு போனனீங்கள்......... தொடருங்கள்..........!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, உடையார் said:

அவருக்கு நீங்கள் கொடுத்திருக்கலாம், அது அவரின் கடமைதான் என்றாலும் அவரின் அன்றைய வாழ்வும் சந்தோஷமான நாட்களில் ஓன்றாக இருந்திருக்கும், உங்களுக்கு USD5/- பெரியவிடமில்லை

நானும் போன முறை இலங்கை போனபோது ஒரு பொதி வரவில்லை, அங்கு நின்ற உதவியாளர் வந்து கடைசிவரை உதவினார், அவர் வெளியில் வந்ததும் Rs 5000/- கொடுக்க, அங்கு நின்ற சில உதவி தாய்மார்கள் வந்து உதவி கேட்க Rs 10,000/- கொடுத்து பங்கிட சொன்னேன், அவர்களின் முகத்தில் பார்த்த மகிழ்ச்சியில் நான் திரும்பும் வரை எந்தவித தடங்களுமின்றி மகிழ்ச்சியாக விடுமுறையை யாழில் செலவழித்தேன், எனது அனுபவத்தில் ஆண்டவன் இவர்கள் உருவில் வருவார்கள்👍,

தொடருங்கள், வாசிக்க ஆவலாக இருக்கு

 

அது உங்கள் நம்பிக்கை. போக நாம் டொலர் கொண்டு போகவில்லையே. £50 தாளைத் தான் தூக்கிக் கொடுக்கவேணும்.

20 hours ago, ஏராளன் said:

இப்ப கோவில்களில் மக்களைக் காணமுடியாது!
செவ்வாய், வெள்ளியில் அருகில் உள்ள முருகன், பிள்ளையார் கோவிலடிக்குப் போனால் பூசகரும் மணியடிக்க உதவியாளரும் மட்டுமே இருப்பார்கள். தேர் திருவிழா நேரமும் மக்கள் குறைவு தான்.
அக்கா தொடருங்கோ...

உண்மைதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

நானும் இவ்வாறுதான் நினைத்தேன்.

ஒரு $5 இல் அவர் வாழ்க்கை செழிக்கப் போவதில்லை என்றாலும் அவ்வாறு கொடுப்பதால் நாங்கள் ஏழைகளாகவும் மாட்டோம்.

சுமே, உணவு விடுதிகளில் உணவு பரிமாறுகின்றவர்களுக்கும் ஒரு போதும் டிப்ஸ் கொடுப்பதில்லையா? 

என்னிடம் இருந்தது 50 இப்பிடியானவர்கள் கேட்பார்களென்று நீங்கள் மாற்றிக் கொண்டுபோவீர்களா ???

உணவு விடுதிகளில் ஐந்து பவுன்சுக்கு மேல் கொடுப்பதில்லை. அதுவும் service charge என்று அறவிட்டால் கொடுப்பதே இல்லை. 😀

1 hour ago, suvy said:

பயண அனுபவங்களை மிகவும் சிறப்பாக கொண்டு போகிறீர்கள்........ அதுசரி அந்த கணனி திரும்பவும் கொண்டு வருவதற்காகவா கொண்டு போனனீங்கள்......... தொடருங்கள்..........!  😁

திரும்பக் கொண்டு தான் வந்தது. ஏனெனில் அதில் என் தமிழ் பள்ளி ஆவணங்கள் ,வினாத்தாள்கள், வங்கி விபரங்கள் என வீட்டின் அத்தனை அலுவல்களையும் அங்கிருந்து நான் பார்க்கவேண்டி இருந்தது. 

15 hours ago, நிலாமதி said:

நன்றாக போகிறது பயணம்.  முழுதும் எழுதி முடிய கருத்து  எழுதுகிறேன். தொடருங்கள்.

நன்றி அக்கா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

மிக நன்றாக எழுதுகின்றீர்கள் சுமே. சுவாரசியமாக உள்ளது.

ஒருவர் பயணம் போகும் போது, மடிக்கணணியைக் கொண்டு போகாமல், பெரிய கணணியை கொண்டு போனதை வாழ்க்கையில் முதல் தடவையாக இன்றுதான் கேள்விப்பட்டேன்.

ஒரு நாளைக்கு எத்தனையோ பேர் வந்து போகும் இடம் இது. சாதாரண நாட்களிலேயே குறைந்தது 1000 பேராவது வருவர். ஆனாலும் ஆகக் குறைந்த சுகாதார வசதி கூட எம்மவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. இது தான் எம் தமிழ் மக்களின் பொறுப்பின்மை. எப்படி கேவலமாக இருப்பினும், காசு கொடுத்து அதை பயன்படுத்தியே ஆக வேண்டிய நிலையில் தான் சனம் வருவினம் என்பதால் தான் அவர்கள் இப்படி செய்கின்றனர்.

இத்தகைய திமிர் கலந்த பொறுப்பின்மையை தென்னிலங்கையில் காண்பது மிகக் குறைவு.

எனக்கும் மடிக் கணனிக்கும் எட்டாத தூரம். ஏனோ தெரியவில்லை என்னிடம் வீட்டில் சிறியதும் பெரியதுமாக இரண்டு மடிக் கணனிகள் இருக்கு.. ஆனாலும்  பயன்படுத்துவதில்லை. எனக்குக் கணனித் தொழில்நுட்பம் அதிகம் புரியாததும் காரணமாக இருக்கலாம்.

20 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு கோயில் குளம் எல்லாம் பிடிக்காது எண்டு நினைச்சன்......:cool:

அது சரி சாறி,நகையளை காட்ட வேணுமெல்லே :smiling_face_with_smiling_eyes:

நான் கொண்டுபோனது இரண்டு சேலைகள். ஒரு சோடி காப்பு, ஒரு சங்கிலி அவ்வளவே. நாங்கள் பாவம். அங்கு உடுக்கும் சேலை என்ன போடும் நகைகள் என்ன. 

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னிடம் இருந்தது 50 இப்பிடியானவர்கள் கேட்பார்களென்று நீங்கள் மாற்றிக் கொண்டுபோவீர்களா ???

உணவு விடுதிகளில் ஐந்து பவுன்சுக்கு மேல் கொடுப்பதில்லை. அதுவும் service charge என்று அறவிட்டால் கொடுப்பதே இல்லை. 😀

 

Wheel Chair போன்ற சேவைகளை நான் இன்னும் பயன்படுத்தியதில்லை. ஆனால், காசு மாற்றிக் கொண்டு போவதுண்டு. பம்பாய், கட்டார் போன்ற இடங்களில் உள்ள விமான நிலையங்களில் உள்ள Toilet இனை பயன்படுத்த முதல் அங்கிருக்கும் கிளீனரை கண்டு பிடித்து (அனேகமாக அங்கேதான் நிற்பார்கள்), அவருக்கு $10 இனை கொடுத்து நான் பாவிக்க நினைக்கும் Toilet ட்டை சுத்தம் செய்ய சொல்லிய பின் தான் பயன்படுத்துவது. அவருக்கு மகிழ்ச்சி, எனக்கு தூய்மை.

சேர்விஸ் சார்ஜ் அறவிடும் உணவு விடுதிகளில் Tips கொடுப்பதில்லை. இங்கு (கனடிய) Tips ஆக மொத்த பில்லின் 10 அல்லது 15 வீதம் கொடுப்பதுதான் வழமை. கனடிய முறைகளில் (habits) இதுவும் ஒன்று. கொடுக்கப்படும் பணம் அங்குள்ள மிச்ச வேலையாட்களும் பகிரப்படும்.

என் மகன் கடந்த வருட கோடை விடுமுறையில் ஒரு உணவு விடுதியில் Dish washer ஆக part time வேலை செய்தான். வாரத்துக்கு டிப்ஸ் மட்டும் $100 இற்கு மேல் கிடைத்தது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

Wheel Chair போன்ற சேவைகளை நான் இன்னும் பயன்படுத்தியதில்லை. ஆனால், காசு மாற்றிக் கொண்டு போவதுண்டு. பம்பாய், கட்டார் போன்ற இடங்களில் உள்ள விமான நிலையங்களில் உள்ள Toilet இனை பயன்படுத்த முதல் அங்கிருக்கும் கிளீனரை கண்டு பிடித்து (அனேகமாக அங்கேதான் நிற்பார்கள்), அவருக்கு $10 இனை கொடுத்து நான் பாவிக்க நினைக்கும் Toilet ட்டை சுத்தம் செய்ய சொல்லிய பின் தான் பயன்படுத்துவது. அவருக்கு மகிழ்ச்சி, எனக்கு தூய்மை.

சேர்விஸ் சார்ஜ் அறவிடும் உணவு விடுதிகளில் Tips கொடுப்பதில்லை. இங்கு (கனடிய) Tips ஆக மொத்த பில்லின் 10 அல்லது 15 வீதம் கொடுப்பதுதான் வழமை. கனடிய முறைகளில் (habits) இதுவும் ஒன்று. கொடுக்கப்படும் பணம் அங்குள்ள மிச்ச வேலையாட்களும் பகிரப்படும்.

என் மகன் கடந்த வருட கோடை விடுமுறையில் ஒரு உணவு விடுதியில் Dish washer ஆக part time வேலை செய்தான். வாரத்துக்கு டிப்ஸ் மட்டும் $100 இற்கு மேல் கிடைத்தது. 

லண்டனில் கட்டாயம் டிப்ஸ் கொடுக்கும் வழக்கம் இல்லை. அதுவும் காட் இல் பயணம் செலுத்திவிட்டு எழுந்து போவார்கள். சில உணவகங்களில் முதலாளி அரைவாசியை எடுப்பதும் உண்டு. நல்ல உணவாக இருந்துஅவர்களும்  எம்மை நன்கு கவனித்தால் அவர்களுக்கு நாமாகவே கொடுப்பதும் உண்டு. இங்கு லெபனான் Buffet உணவகம் ஒன்று உண்டு. ஒருவருக்கு £60. பச்சை சிவப்பு என்று இரு நிறக் கட்டைகள் இருக்கும். பச்சையை நிமிர்த்தி வைத்தால் விதவிதமாக இறைச்சிகளை கொண்டுவருவார்கள். சிவப்பை வைத்தால் வரமாட்டார்கள். ஆனால் அதற்குமுன்னரே சலாட் நூடில்ஸ் என வைத்திருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட உணவுக்கு மிஞ்சி உண்ண முடியாது. அங்கு என் மகள் 10 பவுண்சை டிப்ஸ் ஆக வைத்துவிட்டு வர நான் திட்டினேன். ஏற்கனவே 180 பவுண்டஸ் உணவுக்காகக் கொடுத்திருக்கிறோமே என. ஆனால் அவள் சொன்னாள் அவர் நாம் பச்சைக் கட்டையை நிமிர்த்திவைத்த நேரம் எல்லாம் எம்மைக் காக்க வைக்காது சுடச் சுடக் கொண்டுவந்ததற்கே வைத்தேன் என்றாள்.  என நண்பிகளோடு சென்றபோது 12 பவுண்டஸ் சேவிஸ் சார்ஜ் என்று போட்டு பில் கொண்டுவந்தார்கள். என் நண்பி அதைப்பார்த்துவிட்டு சேவிஸ் சார்ஜ்ஐ பில்லில் இருந்து எடுத்துவிடுமாறு கூற அந்தப் பெண் எடுத்துவிட்டு திரும்பவும் பில் கொண்டுவரச்செல்ல நாம் எல்லாம் ஏன் அப்படிச் செய்தாய் என அவளைக் கேட்டோம். இந்த நாட்டில் optional சேர்விஸ் சாச் என்று போட்டிருந்தால் அதைக் தவிர்க்கும்படி கூற கஷ்டமருக்கு உரிமை இருக்காம் என்றாள். அதன்பின் நாம் எல்லோரும் சேர்ந்து 10 பவுண்சை டிப்ஸ் ஆக வைத்துவிட்டு வந்தோம் .

34 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

லண்டனில் கட்டாயம் டிப்ஸ் கொடுக்கும் வழக்கம் இல்லை.  

இங்கும் கட்டாயம் இல்லை. சுயதெரிவு தான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் கொண்டுபோனது இரண்டு சேலைகள். ஒரு சோடி காப்பு, ஒரு சங்கிலி அவ்வளவே. நாங்கள் பாவம். அங்கு உடுக்கும் சேலை என்ன போடும் நகைகள் என்ன. 

அதெண்டால் உண்மைதான். அங்கிருப்பவர்களின் ஆடம்பரத்தை பார்த்தால் வெளிநாட்டில் வாழும் அதிக தமிழர்கள் பாவிகள்  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எட்டு

 

வீட்டுக்குப் போகும்போது ஒரு லட்ச ரூபாய்களை எடுத்துச் சென்று எல்லோரும் நிற்கும்போது தங்கையின் கைகளில் கொடுக்கும்படி கணவரிடம் சொல்ல மறு பேச்சுப் பேசாமல் எடுத்துச் சென்று கொடுக்கிறார். அதன் பின்தான் என்னால் நிம்மதியாக உண்ண முடிகிறது. ஆனாலும் என்ன, அது முடிய மாறிமாறி அந்தக் கோவில் இந்தக் கோவில் விரதம் என்று ஒரு மாதமாக ஒரே மரக்கறிதான் என்பது வேறுகதை. ஆனால் நாங்கள் அங்கு தொடர்ந்து நிற்கவில்லை என்பது எம்மைக் காப்பாற்றிவிட்டது.

 

அடுத்தநாள் கிளிநொச்சி செல்வதற்குக் கிளம்பி காலை 9.30 இக்கு இணுவிலுக்கு வரும் தொடருந்தில் ஏறி அமர்ந்தாச்சு. இரண்டாம் வகுப்பு டிக்கட் ஒருவருக்கு 350 ரூபாய்கள். மூன்றாம் வகுப்பில் எக்கச்சக்கமான சனம். ஓரளவு புதிய தொடருந்து. சுத்தமாகவும் இருக்க பாராக்குப் பார்ப்பதும் கதைப்பதுமாகப் பொழுதுபோக யாழ் ப்பாணத்தில் இரு சிறுவர்களுடன் ஒரு குடும்பம் ஏறி எமக்கு அடுத்த பக்கத்து இருக்கைகளில் அமர்கின்றனர். மனைவி நல்ல நகைநட்டுகள் போட்டு அழகான ஆடையும் அணிந்திருக்க கணவனும் பிள்ளைகளும் கூட நல்ல ஆடையுடன் பார்க்க நல்ல குடும்பம் போல் இருக்கிறது. 

 

தொடருந்து புறப்பட்டவுடன் இருக்கைகளில் இருக்காமல் இரு பையன்களும் சாண்டில்சுடன் இருக்கைகளின் மேல் தாவுவதும் குதிப்பதும் தாயை ஏதோ கரைசல் குடுப்பதும் இந்தத் தொங்கலில் இருந்து அந்தத் தொங்கல் வரை ஓடுவதுமாக ஒரே அட்டகாசம். கணவனும் மனைவியும் பிள்ளைகள் ஏதோ சாகசம் செய்வதுபோல் பார்த்துக்கொண்டு இருக்க எனக்கு எரிச்சல் வருகிறது. என் முகத்தைப் பார்த்தே நான் ஏதோ சொல்லப் போகிறேன் என்று எண்ணி என் கணவர் நீ கொஞ்ச நேரம் கண்ணை மூடிப்படு என்கிறார். நானும் சரியென தலையை ஒருபக்கம் சாய்த்து கண்களை மூட தூக்கம் நன்றாக வருகிறது. எவ்வளவுநேரம் தூக்கினேனோ தெரியாது என் கன்னத்தில் எதுவோ விழுந்ததுபோல் இருக்கத் திடுக்கிட்டு விழித்து அங்கும் இங்கும் பார்க்கிறேன். கணவர் ஒரு பிஸ்கட் பக்கற்றை என் காலடியில் இருந்து மெதுவாக எடுக்கிறார். பிஸ்கட் சாப்பிடவே என்னை எழுபின்நீங்கள் என்று கேட்க மகள் சிரிக்கிறாள். உதில சிரிக்க என்ன இருக்கு என்று கேட்க, மனிசன் பிஸ்கட்டை எடுத்து அந்தப் பக்கம் உள்ளவர்களிடம் நீட்ட அந்தப் பையன் வெடுக்கென கணவனின் கைகளிலிருந்து அதைப் பிடுங்குகிறான். அவன் எறிந்த பக்கட்தான் என் கன்னத்தில் விழுந்திருக்கு என எனக்குப் புரிகிறது. பிஸ்கற் பக்கற்றை கண்டபடி பிரித்து உடைத்து எடுத்து உண்கிறான் அவன். மற்றப் பையனும் ஓடிவந்து தானும் பறித்து உண்கிறது. காலின் கீழே பிஸ்கட் தூள்கள் கொட்டுண்டு கிடக்கின்றன.

 

தாயும் தகப்பனும் எதுவித சுரணையுமின்றிப் பார்த்துக்கொண்டிருக்க நீங்கள் ஒழுங்கக்காகப் பிய்த்துக் கொடுங்கோ என்று சொல்ல வாயெடுக்க, மகள் வேண்டாம் அம்மா என கண்களால் சைகை காட்ட நான் மறுபுறம் திரும்பிக் கொள்கிறேன்.கணவர் மகளுக்கு எல்லா இடங்களையும் காட்டிக் காட்டி ஏதேதோ சொல்லியவண்ணம் வர நான் என் பண்ணை பற்றியே எண்ணியபடி வருகிறேன். 

 

ஒன்றரை மாணித்தியாலத்தில் கிளிநொச்சியை சென்றடைகிறோம். முன்னரே ஹோட்டல் ஒன்றை தொலைபேசியில் தொடர்புகொண்டு புக் செய்து வைத்ததனால் ஓட்டோ ஒன்றை கூப்பிடுகிறோம். கடும் வெயிலாக இருக்கிறது. ஹோட்டலின் பெயரைக் குறிப்பிடுகிறார் கணவர். 1500 ரூபாய்கள் வரும் என்கிறார் ஓட்டோக்காரர். அவ்வளவு தூரமா என்கிறேன் நான். கரடிப்போக்குச் சந்திக்குப் போக அவ்வளவு தேவையில்லையே தம்பி என்று கணவர் கூற 1000 ரூபாய்க்குக் குறைக்க ஏலாது என்கிறான். சரி என ஏறி அமர்ந்தால் ஒரு மூன்று கிலோமீற்றர் போக கோட்டல் தெரிகிறது. 

 

கீழே கடைகள் இருக்க முப்பது படிகள் நடந்து மேலே ஏறிப் போகக் கோட்டல். உள்ளே சுத்தமாக இருக்கிறது. ஆனால் யாரையும் காணவில்லை. தொலைபேசியில் அந்த இலக்கத்துக்கு அழைத்து யாரும் இல்லையா என்று கேட்க, நான் போன் செய்யிறன் உடனே வருவார்கள் என்கிறார் ஒருவர். நாம் சோபாவில் அமர்ந்து ஐந்து நிமிடங்கள் காத்திருக்க ஒரு பெண் வருகிறார். எங்களைக் கடந்து சென்றவர் எம்மை திரும்பியும் பார்க்காமல் சென்று வரவேற்பு மேசையில் எதையோ தேடுகிறார். நான் எழுந்து சென்று நீங்கள் இங்கு வேலை செய்பவரோ என்று கேட்கிறேன். ஓம் பொறுங்கோ வாறன் என்றுவிட்டு லாச்சியை இழுத்தும் பார்க்கிறா. பின் வேறு ஒன்றைத் திறந்து திறப்பையும் ஒரு கொப்பியையும் எடுக்கிறா. 

 

வெளிநாடா? உங்கட பாஸ்போட்டுகளைத் தாங்கோ என்கிறா. நான் கணவரின் பாஸ்போட்டை மட்டும் கொண்டுவந்து கொடுக்க, மற்றதுகள் என்கிறா. என்ன மற்றதுகள் என்கிறேன் நான். பாஸ்போட் என்கிறா. நாங்கள் குடும்பம் ஒரு பாஸ்போட் காணும் என்கிறேன். அவர் வேறொன்றும் பேசாமல் பெயரை எழுதிவிட்டு பாஸ்போட்டைத் தந்துவிட்டு வாங்கோ என்றபடி முன்னால் சென்று  பக்கத்தில் இருக்கும் ஒரு அறையைத் திறக்கிறா. வெளியே யன்னல் இல்லாத அந்த அறை சிறிதாகவும் இருட்டாகவும் இருக்க நாம் இரு கட்டில்களுடன் மூன்றுபேர் தங்குவதற்குரிய அறைகள் தானே கேட்டோம். இது சிறிதாக இருக்கிறது. வேறு அறை காட்டுங்கள் என்கிறேன். அப்ப மேலேதான் போகவேண்டும் என்றபடி மேலே செல்ல நாமும் பின்தொடர்கிறோம். 

 

அந்த அறை பெரிதாக இருக்கிறது. AC, Fan எல்லாம் இருக்கிறது. Toilet ஐ எட்டிப் பார்க்க சுத்தமாக இருக்கிறது. மகள் உடனே கட்டிலின் மேலே ஏறிச் சாய்ந்தபடி TV பார்க்க ஆரம்பித்துவிட்டாள். சூட்கேசை வைத்துவிட்டு நானும் ஏறி அமர்கிறேன். கணவர் ஏசியை போட நன்றாக இருக்கிறது. இப்ப மதிய உணவுக்குச் செல்வோமா என்கிறார் கணவர். ஒரு மணித்தியாலம் செல்லச் செல்வோமென்று மகள் கூற சரி என்று கூறிவிட்டு நானும் கணவரும் AC குளிரில் கட்டிலில் சாய்கிறோம். உடனே கதவு தட்டும் சத்தம் கேட்க என்னடாய்து என்று எழுந்து சென்று நான் கதவைத் திறந்தால் ஒரு றேயில் கோப்பிக் கோப்பைகளை நீட்டுகிறார். நாம் கேட்கவில்லையே என்கிறேன். இது ஃப்ரீ தான் என்கிறார். நன்றி சொல்லிவிட்டு வாங்கி மற்றவர்களுக்கும் கொடுக்கிறேன். நன்றாகச் சீனி போட்டு nescafe வாசனையுடன் இருக்கிறது. குடித்து முடிய மீண்டும் நீட்டி நிமிர்ந்து கட்டிலில் படுக்க எத்தனை சுகம் என எண்ணியபடி நன்றாகத் தூங்கிவிட மீண்டுமெழுந்தபோது ஒரு மணிமுப்பது நிமிடம் என தொலைபேசி சொல்கிறது.  

 

கீழே இறங்கிச் சென்றால் பக்கங்களில் இரண்டு மூன்று சிறு உணவகங்கள். ஒரு கடையில் நுழைகிறோம். அங்கும் இங்கும் வேலையாட்கள் செல்கிறார்கள். ஒருவர் கூட எம்மை வாருங்கள் என்று கூப்பிடவில்லை. ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு வாங்கோ வேறு கடைக்குப் போவோம் என்று கூறி வெளியே வந்து போவோர் சிலரை இங்கு எது நல்ல உணவகம் என்று கேட்க சிலர் தெரியாது என்கின்றனர். சிலர் இன்னும் சில கடைகளைக் காட்டுகின்றனர். ஓட்டோ காரரிடம் கேட்டால் காட்டுவார்கள் என எண்ணி அவற்றை மறித்தால் அவை ஆட்களோடு செல்வதால் நிறுத்தவில்லை. வீட்டில் இருந்து வரும்போது தொப்பியையும் கொண்டுவரவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை நிறுத்தியிருக்கும் ஓட்டோவையும் காணவில்லை. 

 

ஓட்டோவைப் பிடியுங்கள் என்றுவிட்டு நானும் மகளும் ஒரு கடையுள் நுழைந்து குடை இருக்கா என்று கேட்கிறோம். மகள் தொப்பிகளைப் பார்த்து ஒன்றை எடுக்க நான் குடை என்ன விலை என்று கேட்க 2500 ரூபாய்கள் என்கிறார் கடைக்காரர். நான் ஒரு கூடையைத் தெரிவுசெய்து எடுக்க அதில் 1200 என்று விலை தொங்குகிறது. இதில் 1200 என்று போட்டிருக்க நீங்கள் இரு மடங்கக்காகச் சொல்கிறீர்களே என்கிறேன். அது பழைய விலை தங்கச்சி. இப்ப விலை கூடீற்றுது. அதை கிழிக்க மறந்துபோனன் என்கிறார். தொப்பிக்கும் அதற்கும் சேர்த்து 3000 ரூபாய்களைக் கொடுத்துவிட்டு வெளியே வர கணவர் ஓட்டோவை மறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். 

 

நல்ல உணவகம் என்றால் மூன்று மைல் செல்லவேண்டுமாம் அம்மாச்சி பக்கத்தில் இருக்காம் என்கிறார். மகளும் ஒன்லைனில் பார்த்துவிட்டு இரண்டு மூன்று உணவகங்கள் தூர இருக்கு என்கிறாள். எதற்கும் அம்மாச்சிக்கே இப்ப போவோம். மாலை உணவுக்கு அங்கே போகலாம் என்கிறேன். அங்கு சென்று பார்த்தால் நிறையப்பேர் இருக்கிறார்கள். 2017 இல் வந்தபோது இருந்த அம்மாச்சி உணவகம் சுத்தமாக இருந்தது. தொங்கலில் வெறுமையாக இருந்த மேசையில் சென்று அமர்கிறோம். மேசையில் ஆங்காங்கே உணவுப் பருக்கைகள் கிடக்கின்றன. உண்ட தட்டுக்களும் யாரும் எடுப்பாரற்றுக் கிடக்க கணவர் அங்கு வேலை செய்த பெண்ணை கூப்பிட்டு துடைக்கும்படி கூற அவர் தண்ணீருடன் ஒரு துண்டைக் கொண்டுவந்து துடைத்துவிட்டுப் போகிறார். 

 

நல்ல காலம் நான் டிசு கொண்டுசென்றதால் அதை எடுத்து நன்றாக மேசையைத் துடைத்துவிட்டு உணவை எடுக்கச் செல்கிறேன். மகளும் பின்னே வர அவளையும் கேட்டு விருப்பமானவற்றை வாங்கி வருகிறோம். அப்பம், இடியப்பம் எல்லாம் ஆறிபோய் இருக்கு. நான் வழமைபோல தோசை, வடை. மகள் எடுத்த இட்லியும் ஆறிப்போய் இருந்தாலும் சாம்பார் சூடாக இருக்கிறது. நான் தேநீர் எடுக்க தகப்பனும் மகளும் பிரெஸ் பழச்சாறுகளை எடுக்கின்றனர்.  நான் எழுந்து சென்று ஒரு பெண்ணிடம் பேச்சுக் கொடுக்கிறேன். ஏன் முன்புபோல் சுத்தமாக இல்லை என்று கேட்க இப்பதான் லஞ்ச் டைம் முடிந்து பழையவர்கள் போக நாங்கள் வந்துள்ளோம். அதுதான் இப்படி என்று சமாளிக்கிறார். பொரித்த மோதகமும் பார்க்க நன்றாக இருக்க அதில்ஒரு ஆறை பார்சல் செய்துகொண்டு வெளியே வர உனக்கு ஏன் தேவை இல்லாத வேலை என்கிறார் கணவர். 

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

லண்டனில் கட்டாயம் டிப்ஸ் கொடுக்கும் வழக்கம் இல்லை.

இங்கு ஜேர்மனியிலும் டிப்ஸ் கட்டாயம் இல்லை. டிப்ஸ் அதிகமாக வரும் இடங்கள் என பார்த்தால் உணவகங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் தான் முன்னணியில் நிற்கின்றன.

பலர் டிப்ஸ் வருவாய்  மூலம் தமது மாதாந்த சம்பளத்தை கூட  சேமிக்க முடிகின்றது. அதே நேரம் முதலாளிகளாக இருந்தால் டிப்ஸ் மூலம் வரும் பணத்தை இரு தொழிலாளிகளுக்கு சம்பளமாக வழங்க முடியும்.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.