Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ராணுவம் - துணை ராணுவம் இடையே பயங்கர மோதல்

ராணுவம் - துணை ராணுவம் இடையே பயங்கர மோதல்

ஹர்டோம்,

சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. அங்கு 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார்.

ஆனால், அந்நாட்டில் கூட்டணி ஆட்சியை கவிழ்ந்து கடந்த 2021 அக்டோபர் மாதம் 25-ம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, ராணுவத்திற்கும் துணை ராணுவத்தின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படை தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. துணை ராணுவத்தின் தளபதி ஜெனரல் முகமது ஹம்டனுடன் இந்த அதிவிரைவு ஆதரவு படையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனால், ராணுவத்திற்கும் - துணை ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்படது. துணை ராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படையினர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியும் கொடுக்கப்பட்டது.

இந்த மோதலால் தலைநகர் ஹர்டோமில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ராணுவ தளங்கள் மீது துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதிபர் மாளிகைக்கு செல்லும் சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. 

இந்த சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு, குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில் உயிரிழப்பு விவரம் இதுவரை வெளியாகவில்லை.

அதேவேளை, ராணுவம் - துணை ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் சூடானில் வசிக்கும் இந்தியர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மோதல் நீடித்து வருவதால் சூடானில் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.dailythanthi.com/News/World/fighting-erupts-in-khartoum-as-army-and-paramilitary-force-clash-943157

 

  • Replies 78
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

vasee

கடந்த ஆண்டு யாழில் அமெரிக்க உலக ஏகாதிபத்திய உலக ஒழுங்கு 20 - 25 வருடங்களில் முடிவுக்கு வரும் என விவாதிக்கப்பட்ட போது, அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் சீனா, இந்தியா போன்ற நாடுகளை இந்த பக்கமா அந்த பக்கமா

Eppothum Thamizhan

தேவையில்லாமல் மற்றவனை சொறிஞ்சால் அவனும் திருப்பி சொறியத்தான் செய்வான்! அமெரிக்காக்காரன் தன வேலை முடிய தங்கடை ஆட்களை எல்லாம் கூட்டி கொண்டு ஓடிவந்திட்டான்! இனி அவங்கள் தங்களுக்குள் அடிபட்டு சாக வேண்டியத

Justin

ஒரு நோக்கத்திற்காக எல்லாத் திரிகளிலும் fake news பரப்புவோர் ஒதுங்கி நின்றால் இது போன்ற திரிகளை வரலாற்றை அறிந்து கொள்ளும் திரிகளாக மாற்றலாம்! சரி, எப்போதும் தமிழன் சொல்லுங்கள்: சூடான் நிலைமைகளில்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூடானில் அரசபடையினருக்கும் துணை இராணுவ குழுவிற்கும் இடையில் மோதல் - ஐநா பணியாளர்கள் உட்பட 70க்கும் அதிகமானவர்கள் பலி

Published By: Rajeeban

16 Apr, 2023 | 11:38 AM
image

சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவகுழுவொன்றிற்கும் இடையில் மூண்டுள்ள மோதலில் சிக்கி 70க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சூடான் தலைநகர் கார்டோமில் துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்பதாகவும் ஜனாதிபதி மாளிகை அரசதொலைக்காட்சி கட்டிடம் இராணுவதலைமையகம் போன்ற பகுதிகளில் மோதல்கள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைநகரில் பொதுமக்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகாரத்தை பொதுமக்களிடம் கையளிப்பது தொடர்பான கருத்துவேறுபாடுகள் காரணமாகவே மோதல்கள் மூண்டுள்ளன.

FtzF9HIWwAMhQyB.jpg

இராணுவமும் ஆர்எஸ் அமைப்பும் தலைநகரில் விமானநிலையமும் முக்கியமான பகுதிகளும் தங்கள் வசம் உள்ளதாக தெரிவித்துள்ளன.

தலைநகரி;ற்கு அருகே உள்ள ஓம்டுர்மன் மற்றும் பஹ்ரி நகரங்களில் ஆட்டிலறி சத்தங்கள் கேட்பதாகவும் சில நகரங்களி;ல் துப்பாக்கி சூட்டு சத்தங்களை கேட்க முடிவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்எஸ்எவ் அமைப்பின் தளங்களை தாக்குவதாக சூடான் இராணுவம் தெரிவித்துள்ளது - இதேவேளை துணை இராணுவ குழுவின் தளங்கள் மீது முழுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள விமானப்படை பொதுமக்களை வீடுகளிற்குள் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

சூடான் தலைநகரில்  பொதுமக்கள் அச்சமும் கவலையும் வெளியிட்டுள்ளதுடன் தங்கள் வீடுகளிற்கு அருகில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் 56க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சூடானின் மருத்துவர்கள் குழு பல படையினர் கொல்லப்பட்டுள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சுமார் 600 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

நலிவடைந்த நிலையில் உள்ள மக்களிற்கான உணவுவிநியோகத்தில் ஈடுபட்டிருந்த உலக உணவு திட்டத்தின் பணியாளர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்

தற்போதைய மோதலிற்கு என்ன காரணம்?

Sp5ad91i.jpg

நாட்டின் இராணுவ தலைமைக்குள் காணப்படும்  அதிகாரப்போட்டி காரணமாகவே இந்த மோதல்கள் வெடித்துள்ளன.

2021 இல் இடம்பெற்ற சதிப்புரட்சிக்கு பின்னர் சூடானை இராணுவ அதிகாரிகள் குழுவொன்று நிர்வாகம் செய்கின்றது.

இதில் இடம்பெற்றுள்ள இரண்டு இராணுவ அதிகாரிகளே தற்போதைய வன்முறைகளிற்கு காரணமாக உள்ளனர்.

இராணுவ தலைவரான ஜெனரல் அப்தெல் பட்டா அல் புர்கான் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார்.

சூடானின் துணை ஜனாதிபதியாக முகமட் ஹம்டான் டகலோ பதவிவகிக்கின்றார் இவர் ஆர்எஸ்எவ் துணை இராணுவகுழுவின் தலைவர்.

நாடு சென்றுகொண்டிருக்கும் திசை மற்றும் பொதுமக்களிடம் ஆட்சியை வழங்குவது போன்ற விடயங்கள்  குறித்து இருவர் மத்தியிலும் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது.

 

https://www.virakesari.lk/article/152921

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூடான் ராணுவ மோதல்: இந்தியர் உட்பட 50 பேர் பலி, எகிப்து படையினர் சிறை பிடிக்கப்பட்டது ஏன்?

சூடானில் உள்நாட்டுச் சண்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜெய்நப் முகமது சலி மற்றும் இம்மானுவேல் இகுன்ஸா
  • பதவி,பிபிசி நியூஸ்
  • இருந்துகார்டோம் & நைரோபி
  • 58 நிமிடங்களுக்கு முன்னர்

சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையே எழுந்த அதிகாரப் போட்டி பெரும் மோதலாக வெடித்துள்ளது. இதில், இதில் இந்தியர் ஒருவர் உட்பட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் கார்டோமில் அதிபர் மாளிகை, அரசு தொலைக்காட்சி மற்றும் ராணுவ தலைமையகத்தைப் பிடிக்க இரு தரப்பும் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டுள்ளன.

தலைநகரில் மட்டும் 17 பொதுமக்கள் உள்பட 55 பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ராணுவ ஆட்சியைக் கைவிட்டு ஜனநாயகத்திற்கு திரும்பலாம் என்ற முன்மொழிவே இந்த மோதலுக்குக் காரணம்.

 

இரவு முழுவதும் சண்டை நீடித்த நிலையில், கார்டோம் நகரில் விமான நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ராணுவம், அதற்கு எதிராக போரிடும் துரித உதவிப் படைகள்(Rapid Support Forces) ஆகிய இரு தரப்புமே கூறுகின்றன.

தலைநகருக்கு வெளியேயும் விரியும் சண்டை

தலைநகர் கார்டோமிற்கு அருகில் உள்ள ஒம்துர்மான், பாஹ்ரி ஆகிய நகரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை காலையில் கடும் சண்டை நடப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. செங்கடல் துறைமுகமான போர்ட் சூடானிலும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

துணை ராணுவப் படைத் தளங்கள் மீது போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை இரவில் துணை ராணுவப் படைகளின் நடமாட்டத்தை கண்காணித்துக் கொண்டிருந்த விமானப்படை, பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ராணுவம் - துணை ராணுவப்படைகள் சண்டையால் பீதியடைந்துள்ள கார்டோம் நகரவாசிகள் பிபிசியிடம் பேசுகையில், அருகில் உள்ள வீட்டின் மீதே துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததாக தெரிவித்தனர்.

சூடான் முழுவதும் ஆங்காங்கே நீடிக்கும் இந்த சண்டையில் அப்பாவி பொதுமக்கள் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. ராணுவத்தைச் சேர்ந்த பலரும் உயிரிழந்திருப்பதாகக் கூறும் மருத்துவர்கள் குழு, பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளது.

மொத்தத்தில் 595 பேர் காயமடைந்திருக்கலாம் என்றும் அந்த குழு கூறியுள்ளது.

காப்கபியா தளத்தில் ராணுவம் - துணை ராணுவப் படைகள் இடையே மூண்ட மோதலில் ஐ.நா. துணை அமைப்பான உலக உணவுத் திட்டப் பணியாளர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள், சூடானில் வறுமையால் வாடும் மக்களுக்கு உணவுப்பொருட்களை அளிப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்தவர்கள்.

சூடானில் உள்நாட்டுச் சண்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியர் ஒருவர் பலி

சூடானில் ராணுவம் - துணை ராணுவப் படைகள் இடையே வெடித்துள்ள மோதலில் இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டிருக்கிறார். சூடானில் டால் குரூப் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்ற இந்தியர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்திருப்பதை இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியர் கொல்லப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவரது குடும்பத்துடன் இந்திய தூதரகம் தொடர்பில் இருப்பதாகவும், தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

சண்டையை நிறுத்த ஐ.நா., உலக நாடுகள் வலியுறுத்தல்

சூடானில் 2021-ம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பின்னர் ராணுவ ஜெனரல்களே ஆட்சி நடத்தி வந்தனர்.

ராணுவ ஆட்சியாளரான ஜெனரல் அப்டெல் ஃபட்டா அல்-புர்ஹானுக்கு விசுவாசமான ராணுவப் படைகளுக்கும், துணைத் தலைவராக செயல்பட்ட முகமது ஹம்தான் டெகலோ ஆதரவு துணை ராணுவப் படைகளுக்கும் இடையே தற்போது சண்டை நடக்கிறது.

அனைத்து ராணுவத் தளங்களையும் கைப்பற்றும் வரை சண்டை நீடிக்கும் என்று ஹெமிடிட் என்று அழைக்கப்படும் முகமது ஹம்தான் டெகலோ உறுதிபடக் கூறியுள்ளார்.

ராணுவத் தரப்போ, துரித உதவிப் படைகள் என்ற துணை ராணுவப்படை முற்றிலுமாக கலைக்கப்படும் வரை பேச்சுவார்த்தையே கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் சண்டையை உடனே நிறுத்துமாறு இரு தரப்புகளையும் கேட்டுக் கொண்டுள்ளன. இரு தரப்பு தலைவர்களையும் தொடர்பு கொண்டு மோதலை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சூடானில் உள்நாட்டுச் சண்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குடேரஸ்

எகிப்து ராணுவத்தினரை சிறைபிடித்த துணை ராணுவப் படை

அதிபர் மாளிகை, ராணுவ தளபதியின் இல்லம், 3 விமான நிலையங்கள் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக துணை ராணுவப் படைகள் தெரிவித்துள்ளன. ஆனால் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் புர்ஹான் அளித்துள்ள நேர்காணலில் இதனை மறுத்துள்ளார்.

அரசுத் தொலைக்காட்சி நிலையத்திலும் சண்டை நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அலுவலகம் தற்போது துணை ராணுவப் படை கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதாக சண்டையை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, கார்டோம் நகருக்குத் தெற்கே தங்களது ஒரு தளம் தாக்குதலுக்கு இலக்கானதாக துணை ராணுவப் படைகள் தெரிவித்திருந்தன. துணை ராணுவப் படைகள் மீது ராணுவம் விமான தாக்குதல் நடத்துவதாக நேரில் பார்த்தவர்கள் கூறியதன் அடிப்படையில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

துணை ராணுவப் படையினர் ராணுவ முகாம்களை தாக்கியதோடு, ராணுவ தலைமையகத்தையும் கைப்பற்ற முயன்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

"ஆங்காங்கே சண்டை நீடிக்கிறது. நாட்டைப் பாதுகாக்கும் கடமையை ராணுவத்தினர் ஆற்றி வருகின்றனர்" என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் நாபில் அப்துல்லா கூறியதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூடானில் வடக்கேயுள்ள மெரோவெ நகரிலும் துப்பாக்கிச் சண்டை நடப்பதாக நேரில் கண்டவர்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மெரோவெ நகரில் எகிப்திய துருப்புகள் சரணடையும் வீடியோவை துணை ராணுவப் படைகள் வெளியிட்டுள்ளன. சூடான் ராணுவத்தினருடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடச் சென்ற தனது படை வீரர்கள், தற்போதைய புதிய சூழலில் தங்களது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திக் கொள்ள சூடான் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாக எகிப்து ராணுவம் தெரிவித்துள்ளது.

சூடானில் உள்நாட்டுச் சண்டை

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

சூடானில் துணை ராணுவப் படைகளை வழிநடத்தும் முகமது ஹம்தான் டெகலோ

சூடானில் திடீர் சண்டை ஏன்?

2021-ம் ஆண்டு ஆட்சியைக் கவிழ்த்த ராணுவ தளபதிகள் ஒருங்கிணைந்து இறையாண்மை கவுன்சில் என்ற பெயரில் குழு அமைத்து ஆட்சி நடத்துகின்றனர். அதன் தலைவராக ஜெனரல் புர்ஹானும், துணைத் தலைவராக ஹெமெடியும் இருக்கின்றனர்.

சூடானில் மீண்டும் ஜனநாயக ஆட்சிக்குத் திரும்புவதற்கான முன்மொழிவுப்படி, ராணுவத்துடன் துணை ராணுவப் படைகளை எப்போது இணைப்பது என்பதில்தான் மோதல் வெடித்துள்ளது. இதனை 2 ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டும் என்று ராணுவமும், 10 ஆண்டுகள் தாமதிக்க வேண்டும் என்று துணை ராணுவப் படைகளும் கூறுகின்றன.

2003-ம் ஆண்டு டார்புர் நகரில் தொடங்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமான சண்டையில் ஹெமிடிக்கு பிரதான பங்கு உண்டு.

இருதரப்பும் சண்டையைக் கைவிட்டு ஜனநாயக ஆட்சியை மீண்டும் மலரச் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும் என்று மேற்கத்திய வல்லரசுகளும், ஆப்ரிக்க பிராந்திய தலைவர்களும் வலியுறுத்தியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரச்னை தீர்ந்து போவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

ராணுவமும் ஜனநாயகத் தலைவர்களும் கூட்டாக அதிகாரங்களை பகிர்ந்து கொண்ட 2 ஆண்டு கால ஆட்சியை 2021-ம் ஆண்டு ராணுவப் புரட்சி முடிவுக்குக் கொண்டு வந்தது. சூடானை நீண்ட காலம் ஆட்சிபுரிந்த சர்வாதிகாரி அதிபர் ஒமர் அல் பஷிர் ஆட்சி தூக்கியெறியப்பட்ட பிறகு அவ்வாறான உடன்படிக்கை ஏற்பட்டிருந்தது.

2021 புரட்சிக்குப் பின்னர் தலைநகர் கார்டாமில் ஜனநாயகத்திற்கு ஆதரவாக மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவது வாடிக்கையாக மாறிவிட்டிருந்தது.

https://www.bbc.com/tamil/articles/c0vz059zzg7o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூடான் மோதல்களால் 97 பொதுமக்கள் பலி

17 Apr, 2023 | 10:40 AM
image

சூடானில் அரச படையினருக்கும் துணை இராணுவக் குழுவுக்கும் இடையிலான மோதல்களால் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு மருத்துவர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.

எனினும், இது உயிரிழந்தவர்கள் அனைவரினதும் எண்ணிக்கை அல்ல என அச்சங்கம் தெரிவித்துள்ளது. நடமாடுவதில்  உள்ள சிரமங்கள் காரணமாக பலர் வைத்தியசாலையை அடையாமல் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மோதல்களால் சுமார் 1,100 பேர் காயமடைந்துள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சூடான் அரச படையினருக்கும் ஆர்எஸ்எவ் எனும் துணை இராணுவக் குழுக்களுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் முதல் மோதல்கள் நடைபெறுகின்றன. அதிகாரத்தை பொதுமக்களுக்கு கையளிப்பது தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகளே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தலைநகர் கார்டூமின் பல்வேறு பகுதிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ளதாக இரு தரப்பினரும் உரிமை கோருகின்றனர்.
 

 

https://www.virakesari.lk/article/152975

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூடான் மோதலில் இந்தியர் உள்பட 100 பேர் பலி - என்ன நடக்கிறது? எளிய விளக்கம்

சூடான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

34 நிமிடங்களுக்கு முன்னர்

சூடானின் ராணுவத்திற்கும், Rapid Support Forces (RSF) எனப்படும் அந்நாட்டின் துணை ராணுவத்திற்கும் இடையேயான மோதலில் ஏறத்தாழ 100 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 1,100 பேர் காயமடைந்திருக்கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு தரப்பினரும் நாட்டின் தலைநகரான கார்டூம் நகரின் முக்கிய பகுதிகள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கார்டூம் நகர மருத்துவமனைகளில் சூழ்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

போர், மருத்துவப் பணியாளர்கள், மருந்துகள், மற்றும் உபகரணங்கள் ஆகியவை மக்களிடம் சென்று சேர்வதைத் தடுத்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

கார்டூம் நகரின் மக்கள் இடைவிடாத துப்பாக்கிச் சத்தங்கள், குண்டுவெடிப்புகளுக்கிடையே, 24 மணிநேரத்தைத் தூங்காமல் கழித்ததாகச் சொல்கின்றனர்.

 

ஞாயிறன்று தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது எவ்வளவு முறையாகக் கடைபிடிக்கப்படும் என்று தெரியவில்லை.

சூடான் எங்கே இருக்கிறது?

ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்கு பகுதியில் இருக்கிறது சூடான். எகிப்து, சாட், எரித்ரியா, எத்தியோப்பியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளும் செங்கடலும் இதைச் சுற்றி அமைந்திருக்கின்றன.

ஒரு காலத்தில் பெரிய பன்முகத் தன்மை கொண்ட நாடாக விளங்கியது சூடான். 2011-ஆம் ஆண்டு இந்த நாட்டில் இருந்து தெற்கு சூடான் என்று தனி நாடு பிரிந்து சென்றுவிட்டது. எனினும் எண்ணெய், எல்லை ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பிரச்னையாக இருந்து வருகிறது.

தற்போது சூடானின் மக்கள் தொகை 3.95 கோடி. அரபியும் ஆங்கிலமும் இந்நாட்டின் மொழிகள். பெரும்பான்மை மக்கள் இஸ்லாமை பின்பற்றுகிறார்கள்.

சூடான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தற்போதைய மோதலின் பின்னணி என்ன?

சூடானில் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தது. அப்போதிருந்து அந்நாட்டை ராணுவப் படைத்தலைவர்களைக் கொண்ட ஒரு குழு நிர்வகித்து வருகிறது.

இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் சிக்கலில் பிரதானமாக இரண்டு ராணுவத் தளபதிகள் உள்ளனர். ஜெனரல் ஃபத்தா அல்-புர்ஹான், சூடானின் படைத்தலைவர். இதனால் நடைமுறைப்படி இவர் நாட்டின் ஜனாதிபதி.

அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் ஜெனரல் ஹம்தான் தாகலோ. இவர் ஹெமெத்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் சூடானின் துணை ராணுவமான Rapid Support Forces இன் (RSF) தலைவர்.

இருவருக்கும் இடையே நாடு செல்லும் திசை, ஜனநாயக அரசினை அமைப்பது போன்ற விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

இருவருக்குமிடையே முக்கியமான பிரச்சனைகள் RSFஇன் ஒரு லட்சம் வீரர்களை ராணுவத்தில் இணைப்பதும், அப்படி நடந்தால், படைகளுக்கு யார் தலைமை தாங்குவது ஆகியவை.

சூடான்

யார் முதலில் மோதலைத் துவங்கியது?

கடந்த பல நாட்களாக, RSF உறுப்பினர்கள் சூடான் முழுவதும் பணியமர்த்தப்பட்டனர். ராணுவம் இதனை ஒரு அச்சுறுத்தலாகப் பார்த்தது.

அப்போதிருந்து நிலவிவந்த இறுக்கமான சூழலே மோதலாக வெடித்திருக்கிறது.

பேச்சுவார்த்தை மூலமாக நிலமையை சரிசெய்யமுடியும் என்று பலரும் நம்பினர். ஆனால் அது நடக்கவில்லை.

அனைத்திற்கும் இடையே, சனிக்கிழமை, யார் முதலில் மோதலைத் துவங்கியது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், ஏற்கனவே இருக்கும் ஸ்திரமற்ற தன்மையை இம்மோதல் மேலும் மோசமாக்கும் என்ற அச்சம் பெருமளவில் நிலவுகிறது.

ராஜதந்திரிகள் போர்நிறுத்தம் செய்யுமாறு இருதரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Rapid Support Forces என்பது என்ன?

RSF 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இப்படையின் வேர்கள், மேற்கு சூடானின் டார்ஃபூர் பிராந்தியத்தில் புரட்சியாளர்களைக் கொடூரமாக ஒடுக்கிய ஜன்ஜாவீத் எனப்படும் ஆயுதக்குழுவிலிருந்து முளைப்பவை.

அப்போதிருந்து, ஜெனரல் தாகலோ மிகவும் சக்திவாய்ந்த ஒரு படையைக் கட்டமைத்தார். இப்படை யேமன் மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் நிகழ்ந்த மோதல்களில் இப்படை தலையிட்டது.

மேலும் சூடானின் சில தங்கச் சுரங்கங்கள் இப்படையின் கட்டுப்பட்டில் இருக்கின்றன.

இதன்மீது பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும் உள்ளன. இப்படையின் வீரர்கள் 2019ஆம் ஆண்டு 120 போராட்டக்காரர்களைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

ராணுவமல்லாத இப்படியொரு படை, நாட்டின் ஸ்திரத்தன்மைக்கான காரணமாகக் கருதப்படுகிறது.

ராணுவ ஆட்சி ஏன்?

சூடான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2019ஆம் ஆண்டு, சூடானின் நீண்டநாள் அதிபராக இருந்த ஒமர் அல்-பஷீர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அப்போதிருந்து நிலவிவந்த இறுக்கத்தின் சமீபத்திய விளைவுதான் இந்த மோதல்.

பஷீர் அதிபராக இருந்தபோது, 30 ஆண்டுகளுக்குமேல் நீண்டு கொண்டிருந்த அவரது ஆட்சிக்கு முடிவுவேண்டி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ராணுவம் அவருக்கு எதிராக ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்தியது.

அதன்பின்னும், ஜனநாயக அரசுவேண்டி மக்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

அதைத்தொடர்ந்து, மக்களும் ராணுவமும் இணைந்த ஒரு அரசு நிறுவப்பட்டது. ஆனால் இதுவும் 2021ஆம் அண்டு நிகழ்ந்த ஒரு ஆட்சிக்கவிழ்ப்பினால் வீழ்த்தப்பட்டது.

அப்போதிருந்து ஜெனரல் புர்ஹான் மற்றும் ஜெனரல் தாகலோ ஆகியோருக்கு இடையேயான போட்டி தீவிரமடைந்து வந்திருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம், ஜனநாயக அரசினை நிறுவுவதறகான ஒரு ஒப்பந்தம் சம்மதமானது, ஆனால் இறுதிகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

இந்தியர்களின் நிலைமை என்ன?

சூடானில் கணிசமான இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள். கார்டூம் நகரில் இந்தியாவின் தூதரகம் அமைந்திருக்கிறது. தற்போதைய சண்டையில் ஒரு இந்தியர் கொல்லப்பட்டதாக இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. அவரது பெயர் ஆல்பர்ட் அகஸ்டின்.

சண்டை ஓரிரு நாளுக்குள் முடிவுக்கு வராது என்பதால் இந்தியர்கள் அனைவரும் தற்போது இருக்கும் இடத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. வீடுகளில் இருப்பவர்கள் மொட்டை மாடி, பால்கனி ஆகிய பகுதிகளுக்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

அடுத்து என்ன நடக்கும்?

மோதல் தொடர்ந்தால், அது சூடானில் மேலும் பிரிவினைகளை உண்டாக்கி, அரசியல் குழப்பங்களை மோசமாக்கும்.

ஜனநாயக அரசினை நிறுவ முயன்றுவரும் ராஜதந்திரிகள், இரண்டு ஜெனரல்களையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவைக்கத் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

அதுவரை, சூடானின் சாதாரண குடிமக்கள், மற்றொரு குழப்பமான காலகட்டத்தை வாழ்ந்து கடக்கவேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/cx7378pxyz3o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூடானில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் தோல்வி: தொடர்கின்றது மோதல்

சூடானில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் தோல்வி: தொடர்கின்றது மோதல்

புனித ரமழான் பெருநாளை முன்னிட்டு சூடானில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கார்டூம் நகரம் முழுவதும் குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

நேற்று வெள்ளிக்கிழமை சூடான் ராணுவமும், இடைக்கால ராணுவமும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் வகையில் 72 மணி நேர போர்நிறுத்தத்துக்கு உடன்பாடு தெரிவித்தன.

இதற்கு முன் இரண்டு முறை, மோதல்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு கால அவகாசம் வழங்க இரு தரப்பும் போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டன.

இராணுவ ஆட்சியின் கீழ் இருக்கும் சூடானை சிவில் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான பரிசீலனையின் விளைவாக இராணுவத்திற்கு இடையில் போராட்டம் வெடித்துள்ளது.

இந்த மோதல்களால் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளஅதெல்லாம் நகரில் வசிக்கும் பலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கார்டூம் சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது, ஆனால் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் அமைப்புகளும் சூடானில் உள்ள தங்கள் குடிமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை செய்து வருகின்றன.

https://athavannews.com/2023/1330594

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூடானில் 413 பேர் பலி, 3,551 பேர் காயம்; உலக சுகாதார ஸ்தாபனம்

Published By: SETHU

21 APR, 2023 | 04:20 PM
image

சூடானில் இடம்பெறும் மோதல்களால் 413 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3,551 பேர் காயமடைந்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் இன்று தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் மார்கரெட் ஹரீஸ் இதனைத் தெரிவித்தார்.  

‍மோதல்களில் சிக்கி  சிறார்கள் உயிரிந்துள்ளனர் எனவும் 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

சூடானின் இராணுவத் தளபதி அப்தேல் ஃபத்தா அல் புர்ஹானுக்கு ஆதரவான படையினருக்கும் துணை இராணுவப் படையின் தளபதி மொஹம்மத் ஹம்தானி தாக்லோவுக்கு ஆதரவான படையினருக்கும் இடையில் கடந்த 15 ஆம்  திகதி முதல் கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன.

தலைநகர் கார்ட்டூமில் மக்கள் அடர்த்தி மிகுந்த பிரதேசங்களில் இன்று மோதல்கள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு 3 நாட்கள் போர் நிறுத்தத்தை கடைபிடிக்குமாறு சூடான் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ், அமெரிக்க வெளிவிவகார செயலாளர் அன்டனி பிளின்கென் ஆகியோர் தனித்தனியாக கோரிக்கை விடுத்தனர். ஆனால், இக்கோரிக்கைகளுக்கு இதுவரை செவிசாய்க்கப்படவில்லை.

https://www.virakesari.lk/article/153433

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூடானிலுள்ள வெளிநாட்டவர்களை வான்வழியாக வெளியேற்ற நடவடிக்கை

Published By: SETHU

23 APR, 2023 | 08:09 AM
image

சூடானில் மோதல்கள் தொடரும் நிலை­யில், அங்­குள்ள அமெ­ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடு­களைச் சேர்ந்த இரா­ஜ­தந்­தி­ரி­களும் அந்­நா­டு­களின் மக்­களும் வெளி­யேற உத­வு­வ­தற்கு சூடானின் இரா­ணுவத் தள­பதி இணங்­கி­யுள்ளார் என சூடான் இரா­ணுவம் தெரி­வித்­துள்­ளது.

தலை­நகர் கார்ட்­டூமில், சூடான் இரா­ணு­வத்­துக்கும் துணை இரா­ணுவப் படை­யி­ன­ருக்கும் இடையில் கடந்த 15ஆம் திகதி முதல் மோதல்­கள் நடை­பெ­று­கின்­றன. 

சூடானை எவ்­வாறு நிர்­வ­கிப்­பது என்­பது தொடர்­பாக, இரா­ணுவத் தள­பதி ஜெனரல் ஃபத்தா அல் புர்­ஹா­னுக்கும் ஆர்.எஸ்.எவ். எனும் துணை இரா­ணுவப் படையின் தள­பதி ஜெனரல் மொஹம்மத் ஹம்தான் தக­லோ­வுக்கும் இடை­யி­லான முரண்­பா­டுகள் கார­ண­மாக இம்­மோ­தல்கள் ஏற்­பட்­டுள்­ளன. இதனால், 400 இற்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டுள்­ள­துடன் 3351 பேர் காய­ம­டைந்­துள்­ளனர் என யுனிசெப் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லையில், சூடா­னி­லுள்ள வெளி­நாட்டு இரா­ஜ­தந்­தி­ரிகள் மற்றும்  பொது­மக்­களை வெளி­யேற்­று­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனால், பாது­காப்பு அச்­சு­றுத்­தல்கள் கார­ண­மாக அத்­திட்­டங்கள் கைவி­டப்­பட்­டன.

இந்­நி­லையில், பிரித்­தா­னிய, அமெ­ரிக்க, பிரெஞ்சு மற்றும் சீனப் பிர­ஜை­களும் இரா­ஜ­தந்­தி­ரி­களும் இரா­ணுவு விமா­னங்கள் மூலம் கார்ட்­டூ­மி­லி­ருந்து வெளி­யேற்­றப்­ப­டுவர் என சூடான் இரா­ணுவம் நேற்று தெரி­வித்­துள்­ளது.

தனது பிர­ஜை­க­ளையும் நட்பு நாடு­களின் பிர­ஜை­க­ளையும் வெளி­யேற்­று­வ­தற்கு தான் ஏற்­பாடு செய்­வ­தாக சவூதி அரே­பி­யாவும் அறி­வித்­துள்­ளது. சவூதி அரே­பிய தூத­ரக ஊழி­யர்கள் ஏற்­கெ­னவே வெளி­யேற்­றப்­பட்டு விட்­டனர் என  சூடான் இரா­ணுவம் தெரி­வித்­துள்­ளது.

சூடா­னி­லுள்ள அமெ­ரிக்க இரா­ஜ­தந்­தி­ரி­களை வெளி­யேற்­று­வ­தற்கு உத­வு­வ­தற்­காக, சூடா­னுக்கு அரு­கி­லுள்ள தளங்­க­ளுக்கு அமெ­­ரிக்கப் படை­களை நகர்த்த, ஜனா­தி­பதி ஜோ பைடன் ஒப்­புதல் அளித்­துள்ளார் என வெள்ளை மாளி­கையின் தேசிய பாது­காப்புப் பேச்­சாளர் ஜோன் கேர்பி கூறி­யி­ருந்தார். 

அது எந்த இடம் என அவர் கூறவில்லை. எனினும், கார்ட்ரூமிலிருந்து 1,126 கிலோ­மீற்றர் தொலைவிலுள்ள ஜிபூட்டி நாட்டிலுள்ள அமெரிக்கப் படைத்தளத்திலிருந்து இந்­நட­வடிக்கை முன்னெடுக்கப்படலாம் என ஏற்­கெனவே செய்தி வெளியாகியிருந்தது.

https://www.virakesari.lk/article/153513

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வன்முறைக்கு மத்தியில் சூடானில் இருந்து அமெரிக்க இராஜதந்திரிகள் வெளியேற்றம்

வன்முறைக்கு மத்தியில் சூடானில் இருந்து அமெரிக்க இராஜதந்திரிகள் வெளியேற்றம்

சூடானின் போரினால் பாதிக்கப்பட்ட தலைநகர் கார்ட்டூமில் இருந்து அமெரிக்கத் தூதரக ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்கப் படைகளால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இரண்டாவது வாரமாக தொடரும் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவ படைகளுக்கும் இடையிலான சண்டையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

தனது உத்தரவின் பேரில், அமெரிக்க இராணுவம் கார்ட்டூமில் இருந்து அமெரிக்க அரச ஊழியர்களை மீட்டெடுக்க நடவடிக்கையை மேற்கொண்டதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆறு விமானங்களைக் கொண்ட அமெரிக்க இராணுவ குழுவுடன் ஒருங்கிணைத்து அவர்களை நாட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியதாக சூடான் துணை இராணுவ படை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சூடானின் தலைநகர் கார்ட்டூமில் வன்முறை வெடித்ததில் இருந்து வெளிநாட்டு மக்கள் வெளியேற்றப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

நேற்று சனிக்கிழமை மட்டும் 150 க்கும் மேற்பட்ட மக்கள், இராஜதந்திரிகள் மற்றும் சர்வதேச அதிகாரிகள் சவூதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகத்திற்கு கடல் வழியாக வெளியேற்றப்பட்டனர்.

https://athavannews.com/2023/1330658

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசேட நடவடிக்கை மூலம் சூடானிலிருந்து அமெரிக்க இராஜதந்திரிகள் வெளியேற்றப்பட்டனர்

Published By: RAJEEBAN

23 APR, 2023 | 11:05 AM
image

சூடான் தலைநகரிலிருந்து அமெரிக்க இராஜதந்திரிகளையும் அவர்களது குடும்பத்தவர்களையும் அமெரிக்க இராணுவம் வெளியேற்றியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இதனை உறுதி செய்துள்ளார்.

எனது உத்தரவின் பேரில் அமெரிக்க படையினர் அமெரிக்க இராஜதந்திரிகளையும் அவர்களது குடும்பத்தவர்களையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என பைடன் தெரிவித்துள்ளார்.

சூடான் தலைநகரில்   அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் மூன்று உலங்குவானூர்திகள் தரையிறங்கி சுமார் 100 பேரை வெளியேற்றியுள்ளன.

https://www.virakesari.lk/article/153521

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சூடான் உள்நாட்டுப் போரில் துணை ராணுவத்திற்கு உதவும் ரஸ்ஸியாவின் வாக்னர் கூலிப்படை

Mohamed Hamdan Dagalo, former Deputy Head of the Sudan Transitional Military Council and parmilitary leader, attends the signing ceremony of the agreement on peace and ceasefire in Juba, South Sudan October 21, 2019. REUTERS/Samir Bol

சூடானின் துணைப்படைத் தளபதி டகாலோ

 

ரஸ்ஸியாவின் கூலிப்படையான வாக்னர் குறூப், சூடானின் அரச ராணுவத்திற்கு எதிராகப் போராடிவரும் துணைராணுவப்படையினருக்கு ஏவுகணைகளை வழங்கிவருவதாக சூடான் மற்றும் அப்பிராந்தியத்தின் இராஜதந்திரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தரையிலிருந்து வானுக்கு தாவும் ஏவுகணைகளின் பற்றாக்குறையினால் அரச ராணுவத்திற்கெதிராகப் போராடும் துணைப்படையும் அதன் தலைவரும் கடுமையான முட்டுக்கட்டைகளை இதுவரை சந்தித்துவந்ததாகக் கருதப்படுகிறது.

சூடானின் அயல் நாடான லிபியாவின் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுதக் குழுவின் தலைவரான கலீபா ஹப்டாருடன் மிகவும் நெருங்கிய தொடர்புகளை வாக்னர் கூலிப்படை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இந்த ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இருக்கும் வாக்னர் கூலிப்படையின் முகாம்களில் வழமைக்கும் மாறான அதீத செயற்பாடு காணப்படுவதை செய்தமதிப் படங்கள் வெளிக்காட்டியிருக்கின்றன.

சூடானில் இயங்கிவரும் வாக்னர் கூலிப்படையின் துணை அமைப்பொன்று தங்கத்தை சட்டத்திற்குப் புறம்பான வகையில் அகழ்வு செய்து வந்ததனால் ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த குழுமீது பொருளாதாரத் தடைகள் போடப்பட்டிருக்கின்றன. 

பலம் மிக்க ரஸ்ஸிய கூலிப்படையான வாக்னர், புட்டினின் அயல் நாடுகள் மீதான ஆக்கிரமிப்புக்களில் வெளிப்படையாகவே முன்னின்று செயற்பட்டு வருகிறது. உக்ரேன் மீதான் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் வாக்னர் கூலிப்படை பாரியளவில் மனிதவுரிமை மீறல்களிலும், போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டு வருகின்றமைக்கான சான்றுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன. 

ஆப்பிரிக்கா கண்டத்திலும், புட்டினுக்கான வளங்களை உறுதிப்படுத்திக்கொள்ள, அப்பிராந்தியத்தில் ரஸ்ஸியாவின் செல்வாக்கினை வாக்னர் கூலிப்படையே முன்னின்று உருவாக்கிப் பேணிவருகிறது.

இன்று சூடானில் போரில் ஈடுபட்டு வரும் இரு ஜெனரல்களும், மக்களிடம் ஆட்சியதிகாரத்தைக் கையளிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். பேச்சுவார்த்தைகளின் தோல்வியே இன்று பாரிய போராக வெடித்திருக்கிறது.

இந்த மோதல்களில் பல நூற்றுக்கணக்காணோர் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளதுடன், பல மில்லியன் மக்களுக்கான மின்சாரம், தண்ணிர், உணவு ஆகியவற்றின் வழங்கலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

லிபியாவின் ஆயுதக் குழுவான ஹப்டாருக்குச் சொந்தமான  விமானத் தளங்களை செய்மதி மூலம் தொடர்ச்சியாகக் கண்காணித்துவரும் நெதர்லாந்து  நிறுவனமொன்று, ஐ நா வால் தடைசெய்யப்பட்ட வாக்னர் கூலிப்படையின் துணைப்படை பல தடவைகள் ரஸ்ஸிய விமானங்களை இத்தளங்களில் ஏற்றி இறக்குவதைப் பதிவுசெய்திருக்கிறது.

லிபியாவின் ஆயுதக் குழுவான ஹப்டார் சூடானில் அரசிற்கெதிராகப் போராடும் துணை ராணுவத்திற்கு வெளிப்படையான ஆதரவை வழங்கி வருகிறது. ஹப்டாரின் விமானத்தளங்களை வாக்னர் கூலிப்படையினர் மிக அண்மைக்காலமாக தொடர்ந்து பாவித்து வரும் நிகழ்வு கூறும் ஒரே விடயம், லிபியாவின் ஆயுதக் குழுவிற்கும், ரஸ்ஸியாவிற்கும் இடையே ஏற்படுத்தப்பட்டிருக்கும் நெருங்கிய தொடர்புதான். லிபிய ஆயுதக் குழுவின் விமானத் தளங்களில் காணப்பட்ட ரஸ்ஸிய ராணுவவிமானங்கள் மற்றும் சூடானிய அரச ராஜதந்திரிகளின் குற்றச்சாட்டுக்களை வைத்துப் பார்க்கும்போது, தற்போது நடைபெற்று வரும் போர் ஆரம்பிக்கும் முன்னமே சூடானின் துணை ராணுவக் குழுவிற்கான ஆயுத உதவியினை ரஸ்ஸியா, லிபிய ஆயுதக் குழுவினூடாக வழங்கத் தொடங்கிவிட்டது என்பதுதான். 

The uptick in movement by the Ilyushin-76 transport aircraft started two days before the conflict in Sudan began on Saturday.

ரஸ்ஸிய ராணுவத்தின் சரக்கு விமானமான இல்யூஷின் - 76, சூடானில் சண்டைகள் தொடங்குவதற்கு சரியாக இரு நாட்களுக்கு முன்னர் லிபிய ஆயுதக் குழுவினரின் விமானப்படைத்தளத்தில் பல தடவைகள் இறங்கி ஏறியுள்ளதுடன், இந்தப் பறப்புக்கள் சண்டை தொடங்கி , புதன்கிழமை வரை தொடர்ந்திருக்கின்றன. நெதர்லாந்தை மைய்யமாகக் கொண்டு இயங்கும் செய்மதிக் கண்காணிப்பு நிறுவனமான கெர்ஜோன் இந்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது.

இச்செய்மதிப் புகைப்படங்கள் மூலம், ரஸ்ஸிய ராணுவச் சரக்கு விமானம் லிபியாவின் ஹப்டாருக்குச் சொந்தமான கடீம்  தளத்திலிருந்து புறப்பட்டு ரஸ்ஸியாவின் பாரிய விமானப்படைத் தளம் அமைந்திருக்கும் சிரியாவின் கரையோர நகரான லடாக்கியாவில் தரித்து நின்றிருக்கிறது. பின்னர், சித்திரை 14 ஆம் திகதி, அங்கிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் லிபியாவின் கடீம் விமானத் தளத்தில் தரையிறங்கியிருக்கிறது. மறுநாள், 14 ஆம் திகதி, லிபியாவின் இன்னொரு விமானத் தளமான அல் ஜுப்ராவுக்குப் பறந்திருக்கிறது. அத்தளத்தில் பறப்பதற்கு ஆயத்தமான நில்கையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் நாளிலேயே, சூடானில் சண்டைகள் தொடங்கியிருந்தன. 

மேலும், ரஸ்ஸிய ராணுவச் சரக்கு விமானம் லிபிய விமானத் தளங்களான கடீமுக்கும், ஜுப்ராவுக்கும் சில தடவைகள் பறந்துவிட்டு, இறுதியாக சிரியாவின் லடாக்கிய தளத்திற்குத் திரும்பியிருக்கிறது. அதேநாள். ரஸ்ஸியா, சூடானின் வடமேற்குப் பகுதிகளில் அமைந்திருக்கும் துணை ராணுவப்படையின் முகாம்களுக்கு  தரையிலிருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணைகளின் ஒரு தொகுதியை இறக்கியிருக்கிறது என்று சூடானின் அரச தரப்பும், அப்பிராந்தியத்தின் ராஜதந்திரிகளும் கூறியிருக்கின்றனர். 

இன்று சூடானில் அரசுக்கெதிராகப் போராடிவரும் துணைராணுவக் குழுவினர் பல வருடங்களாகவே ரஸ்ஸியாவின் ஆயுத உதவிகளையும் பயிற்சிகளையும் பெற்று வந்திருக்கின்றனர். 

A satellite image of the Ilyushin-76 Candid at Libya's al-Khadim airbase, used by Wagner on April 18, 2023

ரஸ்ஸிய ராணுவத்தின் இலுஷின் - 76 விமானம், வாக்னர் கூலிப்படையினர் தளம் அமைத்திருக்கும் லிபியாவின் அல் கடீம் தளத்தில் நிற்கும் படம் - 18/04/2023 - மூலம் மக்ஸார் தொழில்நுட்பப் பிரிவு

சூடானின் ராணுவ ஆட்சியாளர்களுக்கும், ரஸ்ஸியாவுக்கும் இடையே உறவுகள் நெருக்கமடைந்து வருவது குறித்து 2022 ஆம் ஆண்டு ஆடியில் விரிவான அறிக்கையொன்று சி.என்.என் இல் வெளிவந்திருந்தது. சூடானின் ராணுவ ஆட்சியாளருக்கு ஆயுத உதவியையும், சர்வதேச அரங்கில் சூடானின் ராணுவ அதிகாரப் பீடத்திற்கான அங்கீகாரத்தையும் ரஸ்ஸியா பெற்றுத்தரும் என்றும், அதற்குப் பதிலாக சூடானின் தங்கச் சுரங்கங்களின் உற்பத்தியை ரஸ்ஸியா பொறுப்பெடுக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. சூடானுக்கும் ரஸ்ஸியாவுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம், 2014 ஆம் ஆண்டு, உக்ரேனின் கிரிமியா தீபகற்பத்தை புட்டின் ஆக்கிரமித்துக்கொண்ட காலப்பகுதியில் நடைபெற்றிருந்தது. புட்டினின் கிரிமியா மீதான ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் மேற்குநாடுகள் கொண்டுவந்த தடைகளைலிருந்து சற்றேனும் மீள்வதற்கு ரஸ்ஸியாவுக்கு சூடானின் தங்கச் சுரங்கங்கள் பெரிதும் உதவியதாகக் கூறப்படுகிறது.

Sudan - Cold Shoulder for UN, Warm Embrace for Russia - allAfrica.com

புர்கானுடனுடன் புட்டின்

மேலும், 2022 ஆம் ஆண்டு உக்ரேன் மீது நேரடியான ஆக்கிரமிப்பை ரஸ்ஸியா ஆரம்பித்ததிலிருந்து, ரஸ்ஸியா மீது மேற்குலகால் விதிக்கப்பட்ட புதிய பொருளாதாரத் தடைகளால், ரஸ்ஸியா சூடானில் தனது தங்க உற்பத்தியை மேலும் அதிகரித்ததோடு, சூடானின் ராணுவ ஆட்சிக்கும் பலத்தையும் அங்கீகாரத்தையும் அது வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே புட்டினின் தனியார் ராணுவக் கூலிப்படையான வாக்னர் சூடானின் உள்நாட்டுச் சந்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

Sudan: All roads lead to Khartoum as Russia, Israel and West vie in game of  thrones | Middle East Eye

டகாலோவுடன் ரஸ்ஸிய வெளிவிவகார அமைச்சர் செர்கேய் லவ்ரோவ்
 

2022 இல் உக்ரேன் மீது ரஸ்ஸியா முற்றான ஆக்கிரமிப்புப் போரை ஆரம்பிக்கும் நாளுக்கு முதல் நாள் இன்று சூடானில் அரசுக்கெதிராகப் போராடிவரும் துணைராணுவக் குழுவின் தளபதி டகாலோவும் அவரது ராணுவ ஆலோசகர்களும் புட்டினைச் சந்தித்திருந்தார்கள். இச்சந்திப்பில், ரஸ்ஸியாவுக்கும் சூடானுக்கும் இடையே உருவாகி வரும் உறவினை இன்னும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதுபற்றி இரு தலைவர்களும் ஆரய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இன்று சூடானில் சண்டையிட்டு வரும் இரு ஜெனரல்களும் முன்னர் ஒரே அணியில் இருந்தவர்கள், ரஸ்ஸியாவின் நண்பர்கள். ஆனால், முறுகல் நிலை ஆரம்பித்த பின்னர், ரஸ்ஸியா தொடர்ந்தும் டகாலோவை ஆதரித்துவருகிறது. அரச ராணுவத்தின் தளபதியான ஜெனரல் புர்கானை எகிப்து ஆதரித்து வந்ததுடன், எகிப்திய ராணுவத்தினரின் ஒரு பகுதியினரும் சூடானில் அரச ராணுவத்துடன் சேர்ந்து போரிட்டு வந்தனர். 

டகாலோவுக்கான வாக்னரின் ராணுவ உதவிபற்றி வந்த செய்தியை மறுத்துள்ள வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்கெனி பிரிகொலின், சூடானில் நடக்கும் போருக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்திருக்கிறாராம். 

அவ்வாறே, சூடானின் துணைப்படைத் தளபதி டகாலோவும் வாக்னரிடமிருந்தோ, ரஸ்ஸியாவிடமிருந்தோ தாம் ஆயுத உதவியைப் பெறவில்லை என்று கூறியிருக்கிறாராம்.

அதேவேளை லிபியாவின் ஆயுதக் குழுவின் தலைவரான ஹப்டாரிடம் ரஸ்ஸியாவின் ஆயுதங்களை டகாலொவின் படைகளுக்கு வழங்கிவருவதுபற்றிக் கேட்டபோது அவர் பதில் கூற மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

சூடானின் தங்கத்தை இங்கிலாந்து மட்டுமல்ல, புட்டின் கூட களவாடுகிறார். இங்கிலாந்து போன இடம் மட்டுமல்ல, புட்டின் போன இடங்களும் சுடுகாடுதான். 

https://edition.cnn.com/2023/04/20/africa/wagner-sudan-russia-libya-intl/index.html

Edited by ரஞ்சித்
spelling
  • Like 2
  • Thanks 1
  • ரஞ்சித் changed the title to சூடான் உள்நாட்டுப் போரில் துணை ராணுவத்திற்கு உதவும் ரஸ்ஸியாவின் வாக்னர் கூலிப்படை
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூடான் உள்நாட்டுப் போரில் துணை ராணுவத்திற்கு உதவு ரஸ்ஸியாவின் வாக்னர் கூலிப்படை

நம்ம வீட்டுக்கதவை இது தட்டும்வரை ....???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேவையில்லாமல் மற்றவனை சொறிஞ்சால் அவனும் திருப்பி சொறியத்தான் செய்வான்! அமெரிக்காக்காரன் தன வேலை முடிய தங்கடை ஆட்களை எல்லாம் கூட்டி கொண்டு ஓடிவந்திட்டான்! இனி அவங்கள் தங்களுக்குள் அடிபட்டு சாக வேண்டியதுதான். இதென்ன புதுசா ? ஈராக், லிபியா எல்லாம் இதே தான்!

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Eppothum Thamizhan said:

தேவையில்லாமல் மற்றவனை சொறிஞ்சால் அவனும் திருப்பி சொறியத்தான் செய்வான்! அமெரிக்காக்காரன் தன வேலை முடிய தங்கடை ஆட்களை எல்லாம் கூட்டி கொண்டு ஓடிவந்திட்டான்! இனி அவங்கள் தங்களுக்குள் அடிபட்டு சாக வேண்டியதுதான். இதென்ன புதுசா ? ஈராக், லிபியா எல்லாம் இதே தான்!

ம்..இதெப்ப நடந்தது? சூடானுக்கு அமெரிக்கா போய் என்னவேலை செய்தது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரஞ்சித் said:

 

சூடானின் தங்கத்தை இங்கிலாந்து மட்டுமல்ல, புட்டின் கூட களவாடுகிறார். இங்கிலாந்து போன இடம் மட்டுமல்ல, புட்டின் போன இடங்களும் சுடுகாடுதான். 

https://edition.cnn.com/2023/04/20/africa/wagner-sudan-russia-libya-intl/index.html

CNN னின் மூல கட்டுரையில் மேலே கூறப்பட்டுள்ளது போன்ற எந்த  ஒரு சொற்தொடரும் இல்லையே ? 

இதைத்தான் சைக்கிள் கப்பில கிடா வேட்டுறது எனக் கூறுவதோ? 

🤣

 

1 hour ago, Eppothum Thamizhan said:

தேவையில்லாமல் மற்றவனை சொறிஞ்சால் அவனும் திருப்பி சொறியத்தான் செய்வான்! அமெரிக்காக்காரன் தன வேலை முடிய தங்கடை ஆட்களை எல்லாம் கூட்டி கொண்டு ஓடிவந்திட்டான்! இனி அவங்கள் தங்களுக்குள் அடிபட்டு சாக வேண்டியதுதான். இதென்ன புதுசா ? ஈராக், லிபியா எல்லாம் இதே தான்!

நீங்கள் "அ" என்கிற எழுத்தைத் தவிர்த்திருக்கலாம் 🤣

சூடான தலைப்புப் பகுதியில் உள்ள தலையங்கத்திற்கும் இங்கே ஆரம்பத்தில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரையின் தலைப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 🤨

3 hours ago, விசுகு said:

சூடான் உள்நாட்டுப் போரில் துணை ராணுவத்திற்கு உதவு ரஸ்ஸியாவின் வாக்னர் கூலிப்படை

நம்ம வீட்டுக்கதவை இது தட்டும்வரை ....???

BLACK WATER யார் வீட்டுக் கதவைத் தட்டியது...?

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு நோக்கத்திற்காக எல்லாத் திரிகளிலும் fake news பரப்புவோர் ஒதுங்கி நின்றால் இது போன்ற திரிகளை வரலாற்றை அறிந்து கொள்ளும் திரிகளாக மாற்றலாம்!

சரி, எப்போதும் தமிழன் சொல்லுங்கள்: சூடான் நிலைமைகளில் அமெரிக்காவின் பங்கு என்ன?

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, Eppothum Thamizhan said:

தேவையில்லாமல் மற்றவனை சொறிஞ்சால் அவனும் திருப்பி சொறியத்தான் செய்வான்! அமெரிக்காக்காரன் தன வேலை முடிய தங்கடை ஆட்களை எல்லாம் கூட்டி கொண்டு ஓடிவந்திட்டான்! இனி அவங்கள் தங்களுக்குள் அடிபட்டு சாக வேண்டியதுதான். இதென்ன புதுசா ? ஈராக், லிபியா எல்லாம் இதே தான்!

On March 1, 1973, Palestinian terrorists of the “Black September” organization murdered U.S. Ambassador Cleo A. Noel and Deputy Chief of Mission Curtis G. Moore in Khartoum.

 

August 1998

In August 1998, in the wake of the East Africa embassy bombings, the U.S. launched cruise missile strikes against Khartoum.

 

https://edition.cnn.com/2023/04/18/politics/state-department-taskforce-sudan/index.html


https://sd.usembassy.gov/our-relationship/policy-history/us-sudan-relations/

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போரில் சிக்கிய பிரித்தானிய மக்கள்... கோப்ரா அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர் ரிஷி சுனக்

சூடானின் உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களை மீட்கும் பொருட்டு, கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் ரிஷி சுனக்.

ரிஷி சுனக் தலைமையில் கோப்ரா கூட்டம்

சூடானில் இருந்து பிரித்தானிய மக்கள் மற்றும் தூதர்களை வெளியேற்ற இங்கிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக ஏற்கனவே நேற்று இரு கோப்ரா கூட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளிவிவகார அமைச்சகத்தின் முக்கிய அமைச்சர்களுடன் கோப்ரா கூட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, பிரித்தானிய அரசாங்க செய்தித்திடர்பாளர் தெரிவிக்கையில், சூடானில் நடந்துவரும் சண்டையில் சிக்கியுள்ள பிரித்தானிய பிரஜைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதை அரசாங்கம் கவந்த்தில் கொண்டுள்ளது.

கார்ட்டூமில் உள்ள பிரித்தானிய பிரஜைகள் மற்றும் தூதரக ஊழியர்களுக்கு உதவ முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். மட்டுமின்றி, பாதுகாப்பு அமைச்சகம் வெளிவிவகார அலுவலகத்துடன் இணைந்து உரிய நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளது என்றார்.

பிரிட்டிஸ் துருப்புக்கள் தயார்

சூடானில் வெடித்துள்ள உள்நாட்டுப் போரில் இதுவரை 400 பேர்கள் கொல்லப்பட்டதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பிரித்தானிய மக்கள் மற்றும் அதிகாரிகளை வெளியேற்றும் பொருட்டு இங்கிலாந்து துருப்புக்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உரிய திட்டத்துடன் மட்டுமே தற்போதைய சூழலில் துருப்புகளை சூடானுக்கு அனுப்ப வேண்டும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ல் தாலிபான் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் காபூல் நடவடிக்கைக்கு பிறகு மிகப்பெரிய வெளியேற்றும் நடவடிக்கை என்பதால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான RAF C-17 போக்குவரத்து விமானங்களும் தயார் நிலையில் உள்ளன.

பிரித்தானிய பிரஜைகளை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதுடன், மேலதிக தகவல்களுக்காக தங்கள் பயண ஆலோசனையைப் பின்பற்றவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போவது ரசியா கூட இல்லை. கூலிப்படை. இதன் அர்த்தத்தையும் அநியாயங்களையும் அறியாத புரியாத மக்கள் கூட்டத்துடன் எதையும் எழுதி பிரயோசனம் இல்லை. டொட்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Justin said:

சரி, எப்போதும் தமிழன் சொல்லுங்கள்: சூடான் நிலைமைகளில் அமெரிக்காவின் பங்கு என்ன?

அல்கொய்தா பின்லேடன் எல்லாரும் அங்கதான் இருக்கினம் எண்டு முதலில் குண்டு போட்டதிலிருந்து இப்பவும் தென் சூடானின் ஒரு பகுதியினருக்கு எல்லா உதவியும் அமரிக்காதானே செய்துகொண்டிருக்கு!

1 hour ago, விசுகு said:

போவது ரசியா கூட இல்லை. கூலிப்படை. இதன் அர்த்தத்தையும் அநியாயங்களையும் அறியாத புரியாத மக்கள் கூட்டத்துடன் எதையும் எழுதி பிரயோசனம் இல்லை. டொட்.

 

7 hours ago, விசுகு said:

நம்ம வீட்டுக்கதவை இது தட்டும்வரை ....???

இதில டாட் வைத்து எந்த பிரயோசனமும் இல்லை. நான் எழுதியது நீங்கள் ஒருவனை வைத்து மற்றவன் வீட்டை சொறிந்தால் அவன் உங்கள் வீட்டு கதவையும் ஒருநாள் தட்டுவான் என்பதற்காகவே!!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kapithan said:

CNN னின் மூல கட்டுரையில் மேலே கூறப்பட்டுள்ளது போன்ற எந்த  ஒரு சொற்தொடரும் இல்லையே ? 

இதைத்தான் சைக்கிள் கப்பில கிடா வேட்டுறது எனக் கூறுவதோ? 

உண்மைதான். சி.என்.என் மூலச் செய்தியில் இது இருக்கவில்லை. அது நான் எழுதியது. சூடானின் இன்றைய போர்பற்றி வந்த ஒரு செய்தியில், சூடானிலிருக்கும் தங்கத்திற்காக இங்கிலாந்து செய்த சதியே இந்த மோதல் என்றும், இங்கிலாந்து போகுமிடமெல்லாம் அழிவுகளே எஞ்சியிருக்கிறதென்றும் ஒரு அன்பர் எழுதியிருந்தார். ஆனால், இன்றைய சூடானின் போருக்குப் பின்னாலும், சூடானின் தங்கத்தைச் சுரண்டவும் முயல்வது ரஸ்ஸியாதான் என்பதைக் காட்டவுமே அப்படி எழுதினேன்.

ஆனால் அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஈழத்தமிழர் உட்பட பல இனங்கள் இன்று வேற்றினத்தின் கைகளில் அடிமைகளாக இருக்கவும், அந்நாடுகளின் வளங்கள் சூறையாடப்படவும் ஒரே காரணமாக இருந்தது இங்கிலாந்தே, இதில் மாற்றுக்கருத்தில்லை. 15 ஆம் நூற்றாண்டிலிருந்து பல நாடுகளை ஆக்கிரமித்து அடிமை கொண்டு நின்றவை போர்த்துக்கீசம், ஒல்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளே.

இரண்டாம் உலக யுத்தத்தில் பல நாடுகளை ஆக்கிரமித்து நின்றவை கூட ஜேர்மனி, இத்தாலி ஆகிய மேற்குநாடுகளும், ஜப்பான் எனும் ஆசிய நாடும் தான்.

இன்று ரஸ்ஸியாவும், சீனாவும் செய்துவரும் பொருளாதார, ராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கு நிகராக அல்லது அதனைக் காட்டிலும் பல மடங்கு ஆக்கிரமிப்பை இந்த நாடுகள் செய்திருக்கின்றன. அதை மறுக்கவில்லை. 

அவ்வாறே, தனக்கு விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்தில் தனது கூட்டாளிகளையும் இழுத்துக்கொண்டு இராணுவ ஆக்கிரமிப்பிலும், அரச அதிகாரத்தைத் தெரிவுசெய்வதிலும் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது என்பதையும் மறுக்கவில்லை. 

நாம் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு, இன்னொரு பக்கத்தை பார்க்க மறுக்கிறோம் என்பதைக் காட்டவே அப்படி எழுதினேன். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kapithan said:

BLACK WATER யார் வீட்டுக் கதவைத் தட்டியது...?

Screenshot_20220305-020426_Chrome.jpg

இன்று ரஸ்ஸியாவின் ராணுவ முகவராகச் செயற்படும் வாக்னர் குழுவுக்கு நிகரானது மிக அண்மைக்காலம் வரை அமெரிக்காவின் ராணுவ முகவராகச் செயற்பட்ட பிளக் வோட்டர் எனப்படும் தனியார் ராணுவ கூலிப்படையினர் அல்லது ஒப்பந்தக்காரர்கள். மரியாதையாகச் சொல்வதானால், ராணுவக் கொன்டரக்டர்கள்.

முன்னாள் ராணுவ வீரர்களால் உருவாக்கப்பட்ட இந்த பிளக் வோட்டர் ஒப்பந்தக் காரர்கள், பனிப்போர் முடிந்தவுடன் கலைக்கப்பட்ட தேவையற்ற ராணுவப் பிரிவுகளில் பணிபுரிந்தவர்கள் அல்லது அவ்வாறு பணிபுரிந்தவர்களால் உருவாக்கப்பட்டவர்கள். 

பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்கிற பெயரில் ஜோர்ஜ் புஷ் (ஜூனியர்) ஆரம்பித்த ஈராக், ஆப்கானிஸ்த்தான் மீதான ஆக்கிரமிப்புக்களின்போது, ராணுவம் கைப்பற்றிய இடங்களின் பாதுகாப்பிற்கும், முக்கியஸ்த்தர்களின் பாதுகாப்பிற்கும், எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் பாதுகாப்பிற்கும், மீள்கட்டுமான நிபுணர்களின் பாதுகாப்பிற்கும் சாதாரண ராணுவ வளங்களைப் பாவிப்பதைக் காட்டிலும் இந்த கொன்ட்ராக்டர்களைப் பாவிப்பதையே அமெரிக்க அரசு விரும்பியது. அதுமட்டுமல்லாமல் அன்றைய குடியரசுக் கட்சியின் அமெரிக்க அதிகாரப் பீடத்திலிருந்த மிக முக்கியமானவர்களுடன் இந்த பிளக் வோட்டர் தனியார் ராணுவப் படை நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.

அடிப்படையில், குடியரசுக் கட்சியின் தீவிர வலதுசாரி பிரிவினருடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வரும் இந்த தனியார் ராணுவ கூலிப்படை ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டதாகச் செய்திகள் வந்திருந்தன. மேலும் ஈராக் போர் ஆரம்பித்த சில நாட்களில் இந்த பிளக் வோட்டர் கூலிப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் கொல்லப்பட்டதுடன், கொல்லப்பட்ட இவர்களின் உடல்களை ஈராக்கிய தீவிரவாதிகள் வீதிகளில் இழுத்துச் சென்று சாகசம் காட்டியதும் நினைவில் இருக்கிறது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, ரஞ்சித் said:

இங்கிலாந்து போன இடம் மட்டுமல்ல, புட்டின் போன இடங்களும் சுடுகாடுதான். 

இங்கிலாந்து போன இடங்களில் கல்வி கொடுத்து ரெயின்னாவது ஓடவிட்டார்கள். புட்டின் போன இடங்கள் சுடுகாடுதான்.

Edited by விளங்க நினைப்பவன்
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, ரஞ்சித் said:

உண்மைதான். சி.என்.என் மூலச் செய்தியில் இது இருக்கவில்லை. அது நான் எழுதியது. சூடானின் இன்றைய போர்பற்றி வந்த ஒரு செய்தியில், சூடானிலிருக்கும் தங்கத்திற்காக இங்கிலாந்து செய்த சதியே இந்த மோதல் என்றும், இங்கிலாந்து போகுமிடமெல்லாம் அழிவுகளே எஞ்சியிருக்கிறதென்றும் ஒரு அன்பர் எழுதியிருந்தார். ஆனால், இன்றைய சூடானின் போருக்குப் பின்னாலும், சூடானின் தங்கத்தைச் சுரண்டவும் முயல்வது ரஸ்ஸியாதான் என்பதைக் காட்டவுமே அப்படி எழுதினேன்.

ஆனால் அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஈழத்தமிழர் உட்பட பல இனங்கள் இன்று வேற்றினத்தின் கைகளில் அடிமைகளாக இருக்கவும், அந்நாடுகளின் வளங்கள் சூறையாடப்படவும் ஒரே காரணமாக இருந்தது இங்கிலாந்தே, இதில் மாற்றுக்கருத்தில்லை. 15 ஆம் நூற்றாண்டிலிருந்து பல நாடுகளை ஆக்கிரமித்து அடிமை கொண்டு நின்றவை போர்த்துக்கீசம், ஒல்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளே.

இரண்டாம் உலக யுத்தத்தில் பல நாடுகளை ஆக்கிரமித்து நின்றவை கூட ஜேர்மனி, இத்தாலி ஆகிய மேற்குநாடுகளும், ஜப்பான் எனும் ஆசிய நாடும் தான்.

இன்று ரஸ்ஸியாவும், சீனாவும் செய்துவரும் பொருளாதார, ராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கு நிகராக அல்லது அதனைக் காட்டிலும் பல மடங்கு ஆக்கிரமிப்பை இந்த நாடுகள் செய்திருக்கின்றன. அதை மறுக்கவில்லை. 

அவ்வாறே, தனக்கு விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்தில் தனது கூட்டாளிகளையும் இழுத்துக்கொண்டு இராணுவ ஆக்கிரமிப்பிலும், அரச அதிகாரத்தைத் தெரிவுசெய்வதிலும் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது என்பதையும் மறுக்கவில்லை. 

நாம் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு, இன்னொரு பக்கத்தை பார்க்க மறுக்கிறோம் என்பதைக் காட்டவே அப்படி எழுதினேன். 

நன்றி 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலில் கருங்கடல் இராச்சிய போட்டி.
இப்போது செங்கடல் இராச்சிய போட்டி.

அமெரிக்காவுக்கு தங்கம் பெரிதல்ல. ஆனால் அந்த கறுப்பு தங்கத்தை கண்டால் விலகி போகவே மாட்டானுகள்.

நிற்க.....

அன்பு உறவுகளே! சூடான் அரசியல் வரலாற்றை அறிந்து கொண்டாவது கருத்தெழுத வாருங்கள். 

வானூர்தி விபத்தில் சிக்கிய அமெரிக்க இராணுவ சிப்பாயை வீதி வீதியாக இழுத்து சென்றார்களே? அது சூடான் தானே?




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • சூடு சுரணை உள்ளவர்களுக்கு நிச்சயம் வரும். அதிகாலையில் அடுத்த வீட்டில் மூக்கை நுழைத்து குற்றம் கண்டு சுகம் காணும் வியாதிகளுக்கு சுரணை சுட்டுப் போட்டாலும் வராது. 
    • பழமையும் புதுமையும்  ·  Rejoindre   Shanmugam Apn  · otspoSenrdm8mtu5i553642hi4058h7 mt17i5m70clai96hf9hlf1f0flil  ·  இஞ்சினீயரிங் படிச்சிட்டு ரொம்ப வருசமா வேலை கிடைக்காத ஒருத்தர், டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்.. வாசலில் ஒரு போர்டு எழுதி வைத்தார். "எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லையெனில், 1000 ரூபாயாகத் திருப்பித் தரப்படும் " இதைக் கவனித்த, கிளினிக் வைக்க வசதியும், வேலையும் இல்லாத மருத்துவர் ஒருவர், நம்ம போலி இஞ்சினீயர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயைப் பறிக்க உள்ளே சென்றார். "டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடியல .." நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலில் இருக்குற மருந்தை, இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு, " அய்யோ டாக்டர், இது மாட்டு மூத்திரம் ஆச்சே" என்று அலறினார் இவர். "Very Good, இப்ப உங்க Taste Buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு.. உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது... 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் " உண்மையான டாக்டர் வேறு வழி இல்லாமல், 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார். ஆனாலும், ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை.. சில நாட்கள் கழித்து, மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார். " டாக்டர்,எனக்கு ஞாபகமறதி ரொம்ப ஜாஸ்தியாயிருக்கு குணப்படுத்துங்க "என்றார். " நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலைத் திறந்து இவர் வாயில் மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். " அய்யோ டாக்டர், அது மாட்டு மூத்திரம் ஆச்சே " என்று அலறினார் இவர்.. "Very Good,உங்க Memory Power (மெமரி பவர்) நல்லாய்டுச்சு.. 500 ரூபா எடுங்க" இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர், சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்.. " எனக்கு கண் பார்வை சரி இல்லை . மருந்து தாங்க டாக்டர்", என்றார். " Sorry.. இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை.. இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று, ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீயர் டாக்டர் "இது 500 ரூபாய் நோட்டாச்சே! " என்று பதறினார் இவர். " Very Good.. உங்க பார்வையும் நல்லாய்டுச்சு.. எடுங்க 500 ரூபாய் " பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்... படிப்பாவது.. கிடிப்பாவது? மூனாங்கிளாஸ் படிச்ச ஆளே, மந்திரியா இருக்கும் நாடு இது........!  😂
    • எண்ணத்தை சொல்லுறது . .......!  😢
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.