Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அலபாமா மாநிலத்தில் 20 பேர் மீது துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: SETHU

16 APR, 2023 | 08:23 PM
image

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த தின வைபவம் ஒன்றின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர். 

குறைந்தபட்சம் 20 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

16 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் ஒன்றின்போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

வாக்குவாதம் ஒன்றையடுத்து துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்து;ளனர்.

https://www.virakesari.lk/article/152958

  • Replies 72
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஏராளன் said:

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த தின வைபவம் ஒன்றின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர். 

துவக்கு சூடும் சூறாவளியும் அமெரிக்காவிலை நோர்மல் பிரச்சனை. 😎

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

துவக்கு சூடும் சூறாவளியும் அமெரிக்காவிலை நோர்மல் பிரச்சனை. 😎

வேறு ஒன்றும்  நோர்மல் 😁 🙃 பள்ளிப்பிள்ளைகள் நிம்மதியாக செல்லமுடியாத நாடுகளில் ஒன்று

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கித் தாக்குதல் தொடர்பான சமூகப் பிரச்சினை அமெரிக்காவில் பெரியளவில் நடந்துவருகிறது. ஒரு நாளைக்குச் சராசரியாக 1.5 துப்பாக்கிச் சூட்டுச் சமபவங்கள் நடந்துவருகின்றன. இதற்கான காரணமாக அமெரிக்காவில் இன்றுவரை இருந்துவரும் துப்பாக்கிப் பாவனை தொடர்பான சட்டங்களே பலராலும் குற்றஞ்சுமத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் இயங்கிவரும் பல ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களின் சம்மேளமான நஷணல் ரைபிள் அசோஷியேஷன் எனும் அமைப்பு மிகவும் பலம் வாய்ந்தது. அரசியல் மற்றங்களை ஏற்படுத்துவது, ஜனாதிபதிகளைத் தீர்மானிப்பது போன்ற மிகவும் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் பெருமளவு செல்வாக்குச் செலுத்தி வருகிறது. தமது உற்பத்திகளுக்கான சந்தையினை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ள இந்த அமைப்பு அரசியலில் தனது பொம்மைகளை தொடர்ச்சியாக இறக்கிவிட்டு வருகிறது. இன்றிருக்கும் குடியரசுக் கட்சியின் பிரமுகர்கள் பலர் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் என்பதோடு, இவர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் பெருமளவு பணத்தினை இந்த அமைப்பு வாரியிறைத்தும் வருகிறது. முன்னாள் ஜனாதிபதிகளான ஜோர்ஜ் புஷ் சீனியர், டொனால் டிரம்ப், சாரா போலின் உள்ளிட்ட பலர் இவ்வமைப்பின் உறுப்பினர்கள். இவர்களை அரசியலின் உச்சத்தில் தக்கவைப்பதன் மூலம் தனது நலன்களை இவ்வமைப்பு காத்து வருகிறது.

நேற்று அலபாமாவில் நடைபெற்ற பிறந்ததின கொண்டாட்ட நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அலபாமா மாநில ஆளுநரான எலன் ஐவி எனும் பெண்மணி, இந்த அமைப்பினரால் பதவியில் அமர்த்தப்பட்டவர் என்பது பலரும் அறிந்த உண்மை என்பதுடன் இவர் ஆட்சிக்கு வந்தபின்னர் துப்பாக்கிச் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்து, கைத்துப்பாக்கிகளை தனது மாநிலத்தில் எவரும் தாராளமாக எடுத்துச் செல்லலாம் எனும் நிலையினை உருவாக்கினார். மேலும், இதுதொடர்பான அரச விளம்பரங்களில் தானே தோன்றி மக்கள் துப்பாக்கிகளை வெளிப்படையாகக் கொண்டு செல்வதை ஊக்குவித்தார்.

இன்றுவரை அமெரிக்காவில் துப்பாக்கிகளைத் தடைசெய்வதற்கு எதிராக நிற்பது குடியரசுக் கட்சியும், அதன் பின்னால் நிற்கு ஆயுத உற்பத்தியாளர்களும் தான். இந்த லட்சணத்தில் டொனால்ட் டிரம்பை மீளவும் பதவிக்குக் கொண்டுவர சிலர் விரும்புவது தெரிகிறது. பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுவதென்பதும், துப்பாக்கித்தாக்குதல்களை விமர்சித்துக்கொண்டே குடியரசுக் கட்சியின் ஆயுத விற்பன்னர்களை ஆட்சிக்குக் கொண்டுவருவதும் ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரஞ்சித் said:

ரஞ்சித் உண்மையை எழுதியுள்ளீர்கள்.

இது தான் நடைமுறை.

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப் உட்பட்ட சிவப்புக் கட்சிக் காரர்கள் அனைவருமே இந்த gun lobby எனப்படும் NRA இன் பணத்தை வாங்கிக் கொண்டு துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை காங்கிரசில் நிறைவேற்ற விடாமல் செய்துவரும் பேர்வழிகள். "குழந்தைகளின் உயிரா அல்லது கொடுக்கும் பணமா?" என்று வரும் போது பணமே என்று நிலையெடுத்து விட்டு, மற்றப்பக்கம் வலதுசாரிக் கிறிஸ்தவ வாக்காளர்களிடம் "கருக்கலைப்பு என்பது மனிதக் கொலை, அதைத் தடுக்க சிவப்பிற்கு வாக்களியுங்கள்" என்று கேட்கும் மூன்றாம் உலக நாட்டு லெவெல் அரசியல் வாதிகள்!

இதை ஆழமாக விளங்கிக் கொள்ளும் அளவுக்கு அமெரிக்காவுக்கு வெளியே வாழும் சில யாழ் கள உறவுகள் இல்லையென நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

துப்பாக்கித் தாக்குதல் தொடர்பான சமூகப் பிரச்சினை அமெரிக்காவில் பெரியளவில் நடந்துவருகிறது. ஒரு நாளைக்குச் சராசரியாக 1.5 துப்பாக்கிச் சூட்டுச் சமபவங்கள் நடந்துவருகின்றன. இதற்கான காரணமாக அமெரிக்காவில் இன்றுவரை இருந்துவரும் துப்பாக்கிப் பாவனை தொடர்பான சட்டங்களே பலராலும் குற்றஞ்சுமத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் இயங்கிவரும் பல ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களின் சம்மேளமான நஷணல் ரைபிள் அசோஷியேஷன் எனும் அமைப்பு மிகவும் பலம் வாய்ந்தது. அரசியல் மற்றங்களை ஏற்படுத்துவது, ஜனாதிபதிகளைத் தீர்மானிப்பது போன்ற மிகவும் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் பெருமளவு செல்வாக்குச் செலுத்தி வருகிறது. தமது உற்பத்திகளுக்கான சந்தையினை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ள இந்த அமைப்பு அரசியலில் தனது பொம்மைகளை தொடர்ச்சியாக இறக்கிவிட்டு வருகிறது. இன்றிருக்கும் குடியரசுக் கட்சியின் பிரமுகர்கள் பலர் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் என்பதோடு, இவர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் பெருமளவு பணத்தினை இந்த அமைப்பு வாரியிறைத்தும் வருகிறது. முன்னாள் ஜனாதிபதிகளான ஜோர்ஜ் புஷ் சீனியர், டொனால் டிரம்ப், சாரா போலின் உள்ளிட்ட பலர் இவ்வமைப்பின் உறுப்பினர்கள். இவர்களை அரசியலின் உச்சத்தில் தக்கவைப்பதன் மூலம் தனது நலன்களை இவ்வமைப்பு காத்து வருகிறது.

நேற்று அலபாமாவில் நடைபெற்ற பிறந்ததின கொண்டாட்ட நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அலபாமா மாநில ஆளுநரான எலன் ஐவி எனும் பெண்மணி, இந்த அமைப்பினரால் பதவியில் அமர்த்தப்பட்டவர் என்பது பலரும் அறிந்த உண்மை என்பதுடன் இவர் ஆட்சிக்கு வந்தபின்னர் துப்பாக்கிச் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்து, கைத்துப்பாக்கிகளை தனது மாநிலத்தில் எவரும் தாராளமாக எடுத்துச் செல்லலாம் எனும் நிலையினை உருவாக்கினார். மேலும், இதுதொடர்பான அரச விளம்பரங்களில் தானே தோன்றி மக்கள் துப்பாக்கிகளை வெளிப்படையாகக் கொண்டு செல்வதை ஊக்குவித்தார்.

இன்றுவரை அமெரிக்காவில் துப்பாக்கிகளைத் தடைசெய்வதற்கு எதிராக நிற்பது குடியரசுக் கட்சியும், அதன் பின்னால் நிற்கு ஆயுத உற்பத்தியாளர்களும் தான். இந்த லட்சணத்தில் டொனால்ட் டிரம்பை மீளவும் பதவிக்குக் கொண்டுவர சிலர் விரும்புவது தெரிகிறது. பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுவதென்பதும், துப்பாக்கித்தாக்குதல்களை விமர்சித்துக்கொண்டே குடியரசுக் கட்சியின் ஆயுத விற்பன்னர்களை ஆட்சிக்குக் கொண்டுவருவதும் ஒன்றுதான்.

நன்றி ரகு 

இது அமெரிக்காவின் பலவீனம் மட்டும் அல்ல ஐனநாயகத்தின் பலவீனம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்க வரலாற்றிலை ஏதோ குடியரசுக்கட்சிதான் தொடர்ந்து ஆட்சி செய்யுறமாதிரி கதை போகுது.. எந்தக்கட்சியெண்டாலும் ஆயுத கலாச்சாரத்தை விட்டு வெளியே வரமாட்டார்கள்.கட்சிகளுக்குள் சும்மா மாறி மாறி குற்றம் சுமத்திக்கொண்டேயிருப்பார்கள்.

அமெரிக்க காலை உணவு மேசை.

Bild

சீனர்களும் ரஷ்யர்களும் இந்த ஆயுத கலாச்சாரம் இல்லாதையிட்டு நிச்சயம் சந்தோசப்படுவார்கள்.:face_with_tears_of_joy:

2 hours ago, ரஞ்சித் said:

இன்றுவரை அமெரிக்காவில் துப்பாக்கிகளைத் தடைசெய்வதற்கு எதிராக நிற்பது குடியரசுக் கட்சியும், அதன் பின்னால் நிற்கு ஆயுத உற்பத்தியாளர்களும் தான். இந்த லட்சணத்தில் டொனால்ட் டிரம்பை மீளவும் பதவிக்குக் கொண்டுவர சிலர் விரும்புவது தெரிகிறது. பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுவதென்பதும், துப்பாக்கித்தாக்குதல்களை விமர்சித்துக்கொண்டே குடியரசுக் கட்சியின் ஆயுத விற்பன்னர்களை ஆட்சிக்குக் கொண்டுவருவதும் ஒன்றுதான்.

கடந்த அமெரிக்க சனாதிபதித் தேர்தலில் மட்டுமல்ல அதற்கு முதல் நடந்த அமெரிக்க சனாதிபதித் தேர்தலிலும் குடியரசுக் கட்சியை. ட்ரம்ப்பை வெல்ல வைக்க ரஷ்யாவின் / புட்டின் அரசின் புலநாய்வுப்பிரிவு கடும் முயற்சி எடுத்தது. பல போலி இணையத்தளங்களையும் பல்லாயிரம் முக நூல் கணக்குகளையும் உருவாக்கி ட்ரம்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது மட்டுமன்றி, தேர்தல் முடிவுகளை Hack செய்து மாற்றியமைக்கவும் முனைந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்க வரலாற்றிலை ஏதோ குடியரசுக்கட்சிதான் தொடர்ந்து ஆட்சி செய்யுறமாதிரி கதை போகுது.. எந்தக்கட்சியெண்டாலும் ஆயுத கலாச்சாரத்தை விட்டு வெளியே வரமாட்டார்கள்.கட்சிகளுக்குள் சும்மா மாறி மாறி குற்றம் சுமத்திக்கொண்டேயிருப்பார்கள்.

அமெரிக்க காலை உணவு மேசை.

Bild

சீனர்களும் ரஷ்யர்களும் இந்த ஆயுத கலாச்சாரம் இல்லாதையிட்டு நிச்சயம் சந்தோசப்படுவார்கள்.:face_with_tears_of_joy:

இது அமெரிக்காவின் நவீன வரலாறும் ஆட்சி முறையும் பற்றி நீங்கள் அறியாததால் வந்த கருத்து.

1994 முதல் 2004 வரை இராணுவம் பாவிக்கும் தாக்குதல் (assault) துப்பாக்கிகளை சிவிலியன்களுக்கு விற்காமல் தடுக்கும் சட்டம் இருந்தது. "10 ஆண்டுகள் தடை" என்று கிளின்டன் அரசின் காலத்தில் கொண்டு வரப்பட்ட தடை, புஷ் ஆட்சியில் இருந்த போது காங்கிரசினால் புதுப்பிக்கப் படவில்லை. 2012 இல் மீண்டும் ஒபாமா அரசு முயற்சி செய்த போது சிவப்புக் கட்சியினர் NRA இன் காசை வாங்கிக் கொண்டு ஒத்துழைக்க மறுத்தனர்.

ஆனால், காலம் மாறி வருகிறது. இப்போது NRA இனை விட நிதி, சமூக ஊடுருவல் பலம் கொண்ட சில துப்பாக்கிக் கலாச்சார எதிர்ப்பு அமைப்புகள் உருவாகியிருக்கின்றன. NRA, அதன் தலைமையில் இருந்தவரின் ஊழலால் அடிபட்டு நொந்து போய் இருக்கிறது என்பதும் இன்னொரு நல்ல செய்தி!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அமெரிக்க வரலாற்றிலை ஏதோ குடியரசுக்கட்சிதான் தொடர்ந்து ஆட்சி செய்யுறமாதிரி கதை போகுது.. எந்தக்கட்சியெண்டாலும் ஆயுத கலாச்சாரத்தை விட்டு வெளியே வரமாட்டார்கள்.கட்சிகளுக்குள் சும்மா மாறி மாறி குற்றம் சுமத்திக்கொண்டேயிருப்பார்கள்.

அமெரிக்க காலை உணவு மேசை.

Bild

சீனர்களும் ரஷ்யர்களும் இந்த ஆயுத கலாச்சாரம் இல்லாதையிட்டு நிச்சயம் சந்தோசப்படுவார்கள்.:face_with_tears_of_joy:

நீலம் செத்தவர்களை வைத்து வாக்கு வாங்குவார்கள் 
சிவப்பு சுடடவர்களை வைத்து வாக்கு வாங்குவார்கள் 

ஆகவே இருவருக்கும் துப்பாக்கி சூடும் மரணமும் இன்றி அமையாத தேவை.

உக்ரைனோ ... சிரியாவோ .... அமெரிக்காவோ துப்பாக்கி சூடு விழுந்துகொண்டே இருக்கவேண்டும் 
பாதுகாப்புக்கு என்ற பெயரில் பெரிய ஆயுத விற்பனை அப்போதுதான் தொய்வில்லாது நிகழும். 

இங்கு உணவே கொலை மருந்துதான் .... உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய அத்தனை இரசாயனமும் 
உணவு பொருட்களில் உண்டு. இதுவரைக்கும் குறைந்தபட்ஷம் ஐரோப்பிய நாடுகள் இதை தடை செய்து வைத்திருக்கிறார்கள். ரசியாவை எதிர்க்கிறோம் என்று கட்டி புரண்டு ஆற தழுவி அதையும் அங்கு கொண்டுவர பார்க்கிறார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது.

ரசிய - உக்கிரைன் போரின் முக்கிய நோக்கமே உலகில் உணவு பஞ்சத்தை கொண்டுவருவதுதான் 
குறிப்பாக ஆப்ரிக்க நாடுகளில் .... பின்பு பசியில் இருப்பவனுக்கு உணவு தருகிறோம் எனும் பெயரில் இந்த மோன்சடோ Monsanto , Bayer, Syngenta போன்ற நாசகார நிறுவனங்களின் இரசாயன உணவு பழக்கத்திற்கும் விவசாயத்துக்கும் உலக மக்களை  அடிமை ஆக்குவது என்பதே ... இந்த போரின் முக்கிய இலக்கு.  

  • கருத்துக்கள உறவுகள்

ம்..உணவுப் பஞ்சம் நாடிய போர்!

அப்ப இங்க பலர் சொல்வது போல நேட்டோவை வளர்க்கிற அமெரிக்காவின் உள்நோக்கமும், ரஷ்யாவின் வளங்களைச் சூறையாடுகிற கபட நோக்கமும் உக்ரைன் ரஷ்யா போரின் நோக்கங்களில்லைப் போல!

 நாளுக்கொரு காரணம் சொல்லி , புட்டினை ஏதோ மட்டி மடையனாகக் காட்டி கடைசியில  அந்தாளும் ஈழத்தமிழரைக் கைகழுவி விடப்போகுது!😂

1 hour ago, Maruthankerny said:

ரசிய - உக்கிரைன் போரின் முக்கிய நோக்கமே உலகில் உணவு பஞ்சத்தை கொண்டுவருவதுதான் 
குறிப்பாக ஆப்ரிக்க நாடுகளில் .... 

அட, இதுக்காகவா புட்டின் உக்ரைன் மேல் படையெடுத்தார்? நான் அவர் உக்ரைன் நேட்டோவில் சேர்வதால் தன் நாட்டுக்கு அமெரிக்க உட்பட நேட்டோ நாடுகளால் ஆபத்து வந்து விடும் என்ற நோக்கத்தினால் தான் படையெடுத்தார் என்று நினைத்து இருந்தேன்.

புட்டினுக்கு ஆபிரிக்கர்கள் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

ஆமாம் ஆமாம் சிரியா நோட்டொவில் இணைந்துவிடும் என்று அஞ்சியே 
புடின் ரசிய படைகளை சிரியாவுக்கு அனுப்பி வைத்தார் 

சிரியாவை நோட்டொவில் இனைக்கும் அரிய ஜனாநாயக எண்ணத்திலதான் 
அமேரிக்கா ஐஸ்ஸ் ஸ் தீவிரவாத குழு முதல்கொண்டு ஆயுதம் கொடுத்து 
சிரியாவின் எண்ணெய் வளமிக்க பகுதிகளை இன்றும் ஜனநாயக ரீதியாக கைப்பற்றி வைத்திருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

மேலே எழுதியுள்ள இருவருக்கும் மருதர் என்ன சொல்கிறார் என்கிற விளக்கம்கூட இல்லை. உக்கிரைன், போர் என்ற சொற்களை கேட்டாலே உடனே புட்டினை இழுப்பதுதான் வேலை. இதில மற்றவர்களின் கருத்துக்களுக்கு நக்கலும் நளினங்களும் வேற!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நிழலி said:

கடந்த அமெரிக்க சனாதிபதித் தேர்தலில் மட்டுமல்ல அதற்கு முதல் நடந்த அமெரிக்க சனாதிபதித் தேர்தலிலும் குடியரசுக் கட்சியை. ட்ரம்ப்பை வெல்ல வைக்க ரஷ்யாவின் / புட்டின் அரசின் புலநாய்வுப்பிரிவு கடும் முயற்சி எடுத்தது. பல போலி இணையத்தளங்களையும் பல்லாயிரம் முக நூல் கணக்குகளையும் உருவாக்கி ட்ரம்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது மட்டுமன்றி, தேர்தல் முடிவுகளை Hack செய்து மாற்றியமைக்கவும் முனைந்தது. 

சோவியத் ஒன்றியத்தை உடைந்தது முதல் இன்றுவரை அமெரிக்கா ரஷ்ய மண்ணில் எந்தவொரு உளவு வேலைகளையும் செய்யவில்லையாக்கும்.

ரம்ப் ஆட்சியில் தனது நாட்டுக்கு எந்த கெடுதலும் செய்யவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Eppothum Thamizhan said:

மேலே எழுதியுள்ள இருவருக்கும் மருதர் என்ன சொல்கிறார் என்கிற விளக்கம்கூட இல்லை. உக்கிரைன், போர் என்ற சொற்களை கேட்டாலே உடனே புட்டினை இழுப்பதுதான் வேலை. இதில மற்றவர்களின் கருத்துக்களுக்கு நக்கலும் நளினங்களும் வேற!

எப்போதும் தமிழன், இப்ப புட்டினை இழுத்ததால் கோபமா அல்லது எங்களுக்கு விளங்கவில்லையென்ற கோபமா?😎

உக்ரைன் ரஷ்யா மோதலுக்கு சிம்பிளாக கண் முன்னால் முழுசிக்கொண்டிருக்கும் காரணம் என்ன?:

1. உக்ரைன் நேட்டோவில் சேர முனைந்தது (நேட்டோ உக்ரைனின் உள்ளக அரசியல் சீராகும் வரை சேர்த்திருக்காது என்பது வேறு கதை!)

2. ரஷ்யா சேராதே என்றது.

3. உக்ரைன் மசியவில்லை.

4. ரஷ்யா படையெடுத்தது.

5. மேற்கும் நேட்டோவும் ரஷ்யாவின் சண்டித்தனத்திற்கு முடிவுகட்ட வேண்டுமென்று உக்ரைனை ஆதரிக்கின்றன (மறைமுகமாக ஏனைய உடனே சேரக் கூடிய நாடுகளைநேட்டோவில் இணைத்தும் கொண்டன).

சரி பிழைகளுக்கப்பால், இந்தக் காரண காரியத் தொடர்பை மறுக்க முடியுமா? இதை விட்டு விட்டு தலையைச் சுத்தி மூக்கைத் தொடும் சதிக்கதைகளால் பலன் என்ன? குறைந்த பட்சம் நடக்கும் சம்பவங்களாவது இக்கதைகளை ஆதரிக்கின்றனவா? எப்படி?

2 minutes ago, குமாரசாமி said:

சோவியத் ஒன்றியத்தை உடைந்தது முதல் இன்றுவரை அமெரிக்கா ரஷ்ய மண்ணில் எந்தவொரு உளவு வேலைகளையும் செய்யவில்லையாக்கும்.

ரம்ப் ஆட்சியில் தனது நாட்டுக்கு எந்த கெடுதலும் செய்யவில்லை. 

அமெரிக்கா எப்படி சோவியத் ரஷ்யாவை உடைத்தது? ஒருக்கா விளக்குங்கோவன்?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Eppothum Thamizhan said:

மேலே எழுதியுள்ள இருவருக்கும் மருதர் என்ன சொல்கிறார் என்கிற விளக்கம்கூட இல்லை. உக்கிரைன், போர் என்ற சொற்களை கேட்டாலே உடனே புட்டினை இழுப்பதுதான் வேலை. இதில மற்றவர்களின் கருத்துக்களுக்கு நக்கலும் நளினங்களும் வேற!

இது ஒரு சாதாரண ஆதிக்க மனோநிலை சாதி .... உடலால் பலவீனம் ஆனவன் .... ஓரளவு எங்கேனும் அறிவு குறைந்தவன் ......  பல்கலைக்கழகம் சென்றால் யூனியர் ... பெண்கள் என்று யார் மீதாவது மீது ஏவிக்கொண்டே இருப்பது.  எவ்வளவோ பாலியல் வக்கிரங்கள்  பெண்களுக்கு எதிராக ராக்கிங் எனும் பெயரில் சாதாரணமாக இலங்கை பல்கலைகளில் நடக்கிறது. இந்த கொடுமைகளை செய்யும் நாய்கள் பின்பு படித்தோம் படடம் பெற்றோம் எனும் பெயரில் சில வேலைகளில் அமர்ந்துகொண்டு ..... ஊருக்கு உபதேசிக்கும். இது மிக சாதாரணம். 

புடின் படையெடுத்தார் அதை ஏன் அமெரிக்கா இவ்வளவு பணச்செலவில் எண்ணெய் ஊற்றி வளர்கிறது 
என்பதுக்கு ஒரு கருத்தை வைத்து .... எனது கருத்தை எதிர்த்தால் அது ஆரோக்கியமான கருத்தாடல். 

அல்லது இப்போ உணவு தட்டுப்பாடு நாளும் நாளும் கூடுகிறது என்பதை பொய் என்று நிரூபித்தால் 
ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் 

எனது கருத்தே அமெரிக்காவில் ஏன் துப்பாக்கி சூடு நடக்கிறது என்பதை நோக்கியது ...
அதை எதிர்த்து ஒரு கருதுவைத்தால் அது ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் 

ஆனால் கருத்து எழுதியவனை சொறியவேணும் 
அப்போதான் அரிப்பு அடங்கும் எனும் மனோநிலை.  அல்லது கருத்தை நீக்கிவிட்டு களத்தின் புனிதம் காக்கவேண்டும்.   

2 minutes ago, Maruthankerny said:

எனது கருத்தே அமெரிக்காவில் ஏன் துப்பாக்கி சூடு நடக்கிறது என்பதை நோக்கியது ...
அதை எதிர்த்து ஒரு கருதுவைத்தால் அது ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் 

அமெரிக்காவில் என் துப்பாக்கி சூடு நடக்குது என்பதை விளக்க தான் தாங்கள் 'ஆப்பிரிக்காவில் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தவே உக்ரைன் -ரசியா போர்" என்று சதிக் கோட்பாட்டை முன் வைத்தீர்களோ..

எழுதும் போது என்ன எழுதினீர்கள் என்ற தெளிவாவது இருக்கும் என நினைத்தது என் தவறுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
52 minutes ago, நிழலி said:

அட, இதுக்காகவா புட்டின் உக்ரைன் மேல் படையெடுத்தார்? நான் அவர் உக்ரைன் நேட்டோவில் சேர்வதால் தன் நாட்டுக்கு அமெரிக்க உட்பட நேட்டோ நாடுகளால் ஆபத்து வந்து விடும் என்ற நோக்கத்தினால் தான் படையெடுத்தார் என்று நினைத்து இருந்தேன்.

உண்மையான காரணத்தை சொல்லிக்கொண்டா ஈராக்,லிபியா மீது போர் தொடுத்தார்கள்?
ரஷ்யாவிடமிருந்து பாதுகாக்க நேட்டோ அமைப்பு. லிபியாவில் நேட்டோவுக்கு என்ன வேலை?

6 minutes ago, Maruthankerny said:

ஓரளவு எங்கேனும்  பெண்களுக்கு எதிராக ராக்கிங் எனும் பெயரில் சாதாரணமாக இலங்கை பல்கலைகளில் நடக்கிறது. இந்த கொடுமைகளை செய்யும் நாய்கள் பின்பு படித்தோம் படடம் பெற்றோம் எனும் பெயரில் சில வேலைகளில் அமர்ந்துகொண்டு ..... ஊருக்கு உபதேசிக்கும். இது மிக சாதாரணம். 

மற்றவர்களை இவ்வளவு அநாகரீகமாக எழுதும் நீங்கள் தான் வக்கிரங்கள் பற்றி கவலைப்படுகின்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

அமெரிக்காவில் என் துப்பாக்கி சூடு நடக்குது என்பதை விளக்க தான் தாங்கள் 'ஆப்பிரிக்காவில் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தவே உக்ரைன் -ரசியா போர்" என்று சதிக் கோட்பாட்டை முன் வைத்தீர்களோ..

எழுதும் போது என்ன எழுதினீர்கள் என்ற தெளிவாவது இருக்கும் என நினைத்தது என் தவறுதான்.

எனது கருத்தில் இரண்டு விடயங்களை முன்வைத்தேன் 

ஒன்று - ஆயுதவியாபாரம் 

மற்றது - இரசாயன உணவு விவசாய வியாபாரம் 

கருத்து எழுதுபவரை சொறியும் எண்ணம் இல்லது இருந்து இருப்பின் 
நான் எழுதிய இரண்டில் ஒன்றை எதிர்த்து கருத்து வைத்து 
நான் எழுதியது பொய் என்று நிரூபித்து இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

இது ஒரு சாதாரண ஆதிக்க மனோநிலை சாதி .... உடலால் பலவீனம் ஆனவன் .... ஓரளவு எங்கேனும் அறிவு குறைந்தவன் ......  பல்கலைக்கழகம் சென்றால் யூனியர் ... பெண்கள் என்று யார் மீதாவது மீது ஏவிக்கொண்டே இருப்பது.  எவ்வளவோ பாலியல் வக்கிரங்கள்  பெண்களுக்கு எதிராக ராக்கிங் எனும் பெயரில் சாதாரணமாக இலங்கை பல்கலைகளில் நடக்கிறது. இந்த கொடுமைகளை செய்யும் நாய்கள் பின்பு படித்தோம் படடம் பெற்றோம் எனும் பெயரில் சில வேலைகளில் அமர்ந்துகொண்டு ..... ஊருக்கு உபதேசிக்கும். இது மிக சாதாரணம். 

புடின் படையெடுத்தார் அதை ஏன் அமெரிக்கா இவ்வளவு பணச்செலவில் எண்ணெய் ஊற்றி வளர்கிறது 
என்பதுக்கு ஒரு கருத்தை வைத்து .... எனது கருத்தை எதிர்த்தால் அது ஆரோக்கியமான கருத்தாடல். 

அல்லது இப்போ உணவு தட்டுப்பாடு நாளும் நாளும் கூடுகிறது என்பதை பொய் என்று நிரூபித்தால் 
ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் 

எனது கருத்தே அமெரிக்காவில் ஏன் துப்பாக்கி சூடு நடக்கிறது என்பதை நோக்கியது ...
அதை எதிர்த்து ஒரு கருதுவைத்தால் அது ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் 

ஆனால் கருத்து எழுதியவனை சொறியவேணும் 
அப்போதான் அரிப்பு அடங்கும் எனும் மனோநிலை.  அல்லது கருத்தை நீக்கிவிட்டு களத்தின் புனிதம் காக்கவேண்டும்.   

உங்கள் முதல் பந்தி உங்கள் வழமையான கோபத் தாக்குதல், உங்கள் அடிப்படை மன நிலையின் பிரதிபலிப்பு, எனவே நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்👍

விடயத்திற்கு வாருங்கள்:

அமெரிக்காவில் ஏன் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் நிகழ்கின்றன என்ற துல்லியமான பின்னணியை ரஞ்சித் உட்பட மேலே மூவர் எழுயிருக்கின்றனர். இதில் உக்ரைன் போரை யார் கொண்டு வந்தது? அது எப்படி அமெரிக்காவின் துப்பாக்கிப் பிரச்சினயை விளக்குகிறது?

உணவுத் தட்டுப்பாடு, ரஷ்யா உக்ரைன் என்ற பிரதான தானிய ஏற்றுமதி செய்யும் நாட்டை ஆக்கிரமித்து, தெற்கில் இருக்கும் துறைமுகங்களை தடுத்ததால் ஏற்பட்டது. அப்ப, ரஷ்யா பஞ்சம் வர வைக்க முயன்றது என்றல்லவா சாதாரணமாக யோசிப்பில் தெரிகிறது? இதை எப்படி அமெரிக்கா செய்தது என்கிறீர்கள்?

இன்னொரு பக்கம், இப்போது ஆபிரிக்காவிற்கு அமெரிக்கா தானிய ஏற்றுமதி செய்யவில்லை என்கிறீர்களா? அமெரிக்காவின் நீட்டரிசி (long grain rice) மேற்கு ஆபிரிக்காவிற்கு USDA ஊடாக ஏற்றுமதி ஆகிறதே? ஆனால், அதில் அமெரிக்காவிற்கு இலாபமில்லை, எங்கள் வரிப்பணத்தில் ஒரு உதவியாகத் தான் போகிறது. இந்த நிலையில், எப்படி அமெரிக்காவிற்கு ஆப்ரிக்கப் பஞ்சம் உதவும் என நினைக்கிறீர்கள்? 

2 minutes ago, குமாரசாமி said:

உண்மையான காரணத்தை சொல்லிக்கொண்டா ஈராக்,லிபியா மீது போர் தொடுத்தார்கள்?
ரஷ்யாவிடமிருந்து பாதுகாக்க நேட்டோ அமைப்பு. லிபியாவில் நேட்டோவுக்கு என்ன வேலை?

ஆகவே உண்மையான காரணம், ஆபிரிக்கர்களுக்கு உணவுப் பஞ்சத்தை உருவாக்க... அந்த உண்மையை சொல்லாமல், சும்மா தம் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு கேடு வரப்போகுது என்று படையெடுத்தோம் என்று ரஷ்யா பொய் சொல்லியிருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, நிழலி said:

ஆகவே உண்மையான காரணம், ஆபிரிக்கர்களுக்கு உணவுப் பஞ்சத்தை உருவாக்க... அந்த உண்மையை சொல்லாமல், சும்மா தம் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு கேடு வரப்போகுது என்று படையெடுத்தோம் என்று ரஷ்யா பொய் சொல்லியிருக்கு.

இல்லை.

தனிய ஒரு பிரச்சனையை மட்டும் வைத்து போர்கள் ஆரம்பிப்பதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.