Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அலபாமா மாநிலத்தில் 20 பேர் மீது துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி

Featured Replies

2 minutes ago, Maruthankerny said:

எனது கருத்தில் இரண்டு விடயங்களை முன்வைத்தேன் 

ஒன்று - ஆயுதவியாபாரம் 

மற்றது - இரசாயன உணவு விவசாய வியாபாரம் 

கருத்து எழுதுபவரை சொறியும் எண்ணம் இல்லது இருந்து இருப்பின் 
நான் எழுதிய இரண்டில் ஒன்றை எதிர்த்து கருத்து வைத்து 
நான் எழுதியது பொய் என்று நிரூபித்து இருக்கலாம். 

எந்த விடயத்துக்கு கருத்து எழுத வேண்டும் என்பது அவரவர் உரிமை.

யாழில் எத்தனை திரிகளில் இருக்க இந்த திரியில் வந்து கருத்து எழுதியது (உங்கள் மொழியில் சொறிந்தது) எப்படி உங்கள் உரிமையோ, அவ்வாறே நீங்கள் சொன்ன விடயஙளில் ஒன்றை தொட்டு கருத்து எழுதுவது அவரவர் உரிமை.

நீங்கள் எழுதிய சதிக் கோட்பாடு பற்றி கருத்து எழுத தூண்டியது, எனவே கருத்து வைத்தேன்,,, உங்கள் மொழியில் வந்து சொறிந்தேன்.

  • Replies 72
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

எனது கருத்தில் இரண்டு விடயங்களை முன்வைத்தேன் 

ஒன்று - ஆயுதவியாபாரம் 

மற்றது - இரசாயன உணவு விவசாய வியாபாரம் 

கருத்து எழுதுபவரை சொறியும் எண்ணம் இல்லது இருந்து இருப்பின் 
நான் எழுதிய இரண்டில் ஒன்றை எதிர்த்து கருத்து வைத்து 
நான் எழுதியது பொய் என்று நிரூபித்து இருக்கலாம். 

ஒருவரின் முகம், அடையாளம் எதுவும் தெரியாமல் (ஆனால் பல்கலையில் படித்தவர் என்பது மட்டும் தெரிந்து கொண்டு) இவ்வளவு வக்கிரம் பூசி எழுதியிருக்கிறீர்கள், ஆனால் ஒரு  பகிடிக்கு நின்று பிடிக்க இயலாதவராக இருக்கிறீர்களே? மேலே நான் சொல்லியிருக்கும் காரணங்கள் சார்ந்து என்ன சொல்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இல்லை.

தனிய ஒரு பிரச்சனையை மட்டும் வைத்து போர்கள் ஆரம்பிப்பதில்லை.

இணைக்க போவது நேட்டொ 
இணைக்க போவது உக்ரைனை 

ஏன் இன்னமும் இணைக்காது போரை மட்டும் முன்னெடுக்கிறார்கள்?
பின்லாந்தை இணைத்தார்களே? 
 
3 minutes ago, நிழலி said:

எந்த விடயத்துக்கு கருத்து எழுத வேண்டும் என்பது அவரவர் உரிமை.

யாழில் எத்தனை திரிகளில் இருக்க இந்த திரியில் வந்து கருத்து எழுதியது (உங்கள் மொழியில் சொறிந்தது) எப்படி உங்கள் உரிமையோ, அவ்வாறே நீங்கள் சொன்ன விடயஙளில் ஒன்றை தொட்டு கருத்து எழுதுவது அவரவர் உரிமை.

நீங்கள் எழுதிய சதிக் கோட்பாடு பற்றி கருத்து எழுத தூண்டியது, எனவே கருத்து வைத்தேன்,,, உங்கள் மொழியில் வந்து சொறிந்தேன்.

எனது கருத்தில் இரண்டு விடயங்களே உண்டு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Maruthankerny said:

ஏன் இன்னமும் இணைக்காது போரை மட்டும் முன்னெடுக்கிறார்கள்?
பின்லாந்தை இணைத்தார்களே? 

இதற்கு இந்த திரியில் நிற்கும்  ஜாம்பவான்கள் பதில் சொல்லக்கடவர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

இணைக்க போவது நேட்டொ 
இணைக்க போவது உக்ரைனை 

ஏன் இன்னமும் இணைக்காது போரை மட்டும் முன்னெடுக்கிறார்கள்?
பின்லாந்தை இணைத்தார்களே? 
 
எனது கருத்தில் இரண்டு விடயங்களே உண்டு 

நேட்டோவில் இணைய வரும் நாடுகள் சில தகுதி நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது இங்கே யாழில் பல முறை விளக்கப் பட்டிருக்கு மருதர்! உக்ரைன் இன்னும்  பல ஆண்டுகளுக்கு நேட்டோவில் இணைந்திருக்க முடியாது. இது நன்கு தெரிந்து கொண்டு தான் ரஷ்யா படை எடுத்தது.

ஆனால், இது எதுவும் தெரியாத உங்கள் போன்ற நோக்கர்கள் தான் சதிக்கதைகளால் நிலவரத்தை விளக்க முனைகிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இதற்கு இந்த திரியில் நிற்கும்  ஜாம்பவான்கள் பதில் சொல்லக்கடவர்.

பின்லாந்தை இணைக்க தகுதி நிபந்தனைகள் இல்லை .......
----------------------------------------- அது போன மாசம் 

பின்லாந்தை இணைத்துவிடடோம் 
                                           நான் சொல்றது இந்த மாசம் 
 
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

பின்லாந்தை இணைக்க தகுதி நிபந்தனைகள் இல்லை .......
----------------------------------------- அது போன மாசம் 

பின்லாந்தை இணைத்துவிடடோம் 
                                           நான் சொல்றது இந்த மாசம் 
 
பின்லாந்து, சுவீடன் இரண்டும் தம்மளவில் நேட்டோ கேட்கும் தகுதிகளை, இப்ப அல்ல, 30 ஆண்டுகள் முன்பே கொண்டிருந்த நாடுகள் - அவர்களே நடு நிலைமையோடிருந்தார்கள் உக்ரைன் தாக்கப் படும் வரை.

மொல்டோவா, உக்ரைன், ஜோர்ஜியா மூன்றும் தம் நாட்டிற்குள் தீர்க்க வேண்டிய நிபந்தனைகள் பிரச்சினைகள் உண்டு, எனவே நேட்டோவிற்கு விண்ணப்பித்தாலும் உடனே இணைய முடியாது!

இது நியூஸ் வாசிக்கும் ஒருவர் புரிந்து கொள்ளக் கூடிய fact - தரவு.

படிச்ச நாய் சொன்னாலும், படிக்காத தெய்வம் சொன்னாலும் fact இது தான் .😎 உரையாடல் என்பது இப்படித் தான் இருக்க வேண்டுமேயொழிய சும்மா ஒன்றைப் புரிந்து கொள்ள முடியாத அல்லது அரை குறையாகப் புரிந்து கொண்ட வெற்றிடத்தை வசவுகளால் நிரப்புவதால் அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இது நன்றாக இருக்கே நல்ல தரமான வார்த்தை பிரயோகங்களுடன், கோபத்தில் பதிந்தால் இப்படிதான் வார்த்தைகள் வருமா🤔 ************+++++++++🤓

நீங்கள் சொல்வதை மற்றவர் ஏற்கவேண்டுமென நினைப்பதை என்னவென்று சொல்ல???

Edited by உடையார்
Words removal

21 minutes ago, உடையார் said:

இது நன்றாக இருக்கே நல்ல தரமான வார்த்தை பிரயோகங்களுடன், கோபத்தில் பதிந்தால் இப்படிதான் வார்த்தைகள் வருமா🤔 ************+++++++++🤓

நீங்கள் சொல்வதை மற்றவர் ஏற்கவேண்டுமென நினைப்பதை என்னவென்று சொல்ல???

நுனிப்புல் மேய வேண்டாம் உடையார்.

நாய்கள் என்ற் வார்த்தையை இலங்கையில் பல்கலைக்கழக படிப்பை முடித்தவர்கள் மீது பயன்படுத்தியது @Maruthankernyதான். அந்த வார்த்தையை சுட்டிக் காட்டியது நான் தான்.

அப்படி அவர் தான் இதை பயன்படுத்தி இருந்ததை கண்டு இருந்தால் நீங்கள் அதை கண்டித்து இருப்பீர்கள். 

ஆனால் என்ன செய்வது? 

 நுனிப்புல் மேய்ந்தமையால் உங்களால் அதை கண்டு பிடிக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Justin said:

எப்போதும் தமிழன், இப்ப புட்டினை இழுத்ததால் கோபமா அல்லது எங்களுக்கு விளங்கவில்லையென்ற கோபமா?😎

உக்ரைன் ரஷ்யா மோதலுக்கு சிம்பிளாக கண் முன்னால் முழுசிக்கொண்டிருக்கும் காரணம் என்ன?:

1. உக்ரைன் நேட்டோவில் சேர முனைந்தது (நேட்டோ உக்ரைனின் உள்ளக அரசியல் சீராகும் வரை சேர்த்திருக்காது என்பது வேறு கதை!)

2. ரஷ்யா சேராதே என்றது.

3. உக்ரைன் மசியவில்லை.

4. ரஷ்யா படையெடுத்தது.

5. மேற்கும் நேட்டோவும் ரஷ்யாவின் சண்டித்தனத்திற்கு முடிவுகட்ட வேண்டுமென்று உக்ரைனை ஆதரிக்கின்றன (மறைமுகமாக ஏனைய உடனே சேரக் கூடிய நாடுகளைநேட்டோவில் இணைத்தும் கொண்டன).

சரி பிழைகளுக்கப்பால், இந்தக் காரண காரியத் தொடர்பை மறுக்க முடியுமா? இதை விட்டு விட்டு தலையைச் சுத்தி மூக்கைத் தொடும் சதிக்கதைகளால் பலன் என்ன? குறைந்த பட்சம் நடக்கும் சம்பவங்களாவது இக்கதைகளை ஆதரிக்கின்றனவா? எப்படி?

ஜஸ்டின், அமெரிக்கா உக்ரைனுக்கு கொடுத்த அழுத்தமும் அதன் பின்னரான போரும் அமெரிக்கா தனது ஆயுதங்களை பரிசோதிக்கவும், ரஷ்யாவின் போர் ஆற்றலை சோதிக்கவும் மட்டுமல்ல. ரஸ்சியாவின் எரிவாயு விற்பனையை நிறுத்தி அதற்கு பதிலீடாக தனது எரிபொருட்களை அறாவிலைக்கு விற்கவும், உக்ரைனின் உணவு ஏற்றுமதி தடைப்பட்டு ஐரோப்பா எங்கும் பொருட்களின் விலையுயர்வுகளால் எல்லா நாடுகளையும் ஒரு பதட்டத்தில் வைத்திருக்கவும்தான். இத்தேசத்தில் இந்த இரசாயன உணவு உற்பத்தியை ஊக்குவிக்க இந்த சந்தர்ப்பத்தை அமெரிக்கா பாவிக்காது என்று நினைக்கிறீர்களா?

அப்பத்தானே டாலரின் பெறுமதியையும் தக்கவைக்கமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Eppothum Thamizhan said:

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எல்லாமே அனேகமாக ரஷ்ய ஆதரவு இணையங்களில் பரப்பப் பட்டிருக்கும் கதையாடல் - narrative தவிர இதிலே தரவு ரீதியாக  ஒன்றும் இல்லை.

உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எப்போது, எப்படி? நேட்டோவின் உள்ளே உக்ரைனை எடுத்துக் கொள்ள பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் உக்ரைன் இருக்க, அமெரிக்கா எப்படி அழுத்தம் , யாருக்குக் கொடுத்தது?

ரஷ்யாவின் எரிவாயு, உயிர் சுவட்டு எரி பொருள் இரண்டையும் எந்த நாட்டினாலும் மேவ முடியாது. அதுவும், அமெரிக்காவில் சூழல் பாதுகாப்புக் கரிசனை காரணமாக எரிவாயுக் கிணறு தோண்டுவதைக் கட்டுப் படுத்திய நிலையில், ரஷ்யாவுக்கு போட்டியாக அமெரிக்கா வர நினைத்தது என்பது வேடிக்கையான ஒரு வாதம்.

இரசாயன உணவு உற்பத்தியென்பது அமெரிக்காவில் மட்டும் நடக்க , ஏனைய நாடுகளில் இயற்கை விவசாயமா நடக்கிறது? இன்றைய உலக விவசாயம், கால்நடை எல்லாமே நவீன முறைகளால் தான் உலகில் பஞ்சமின்றிக் காக்கிறது. இவற்றில் தீமைகள் உண்டு, ஆனால் அமெரிக்கா தான் இரசாயன உணவுகளை உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டுமென்பது உலக உணவு உற்பத்தி, நகர்வுகளின் நிலை தெரியாதோரின் கற்பனை.

இதனால் தான் அங்கதத்தில் சொல்லியிருந்தாலும்  சுட்டிக் காட்டியிருந்தேன்: இவ்வளவு நொய்மையான remotely possible கொக்கியால் அமெரிக்கா புட்டினை போருக்கிழுத்தது, புட்டினும் இழுபட்டு வந்தார் என்றால், புட்டின் எவ்வளவு ஒரு மட்டி மடையரென அது நிரூபிக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Justin said:

இரசாயன உணவு உற்பத்தியென்பது அமெரிக்காவில் மட்டும் நடக்க , ஏனைய நாடுகளில் இயற்கை விவசாயமா நடக்கிறது? இன்றைய உலக விவசாயம், கால்நடை எல்லாமே நவீன முறைகளால் தான் உலகில் பஞ்சமின்றிக் காக்கிறது. இவற்றில் தீமைகள் உண்டு, ஆனால் அமெரிக்கா தான் இரசாயன உணவுகளை உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டுமென்பது உலக உணவு உற்பத்தி, நகர்வுகளின் நிலை தெரியாதோரின் கற்பனை.

நாங்கள் (பிரித்தானியர்) ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்த பின்னர் அமெரிக்கா குளோரினில் கழுவிய கோழி இறைச்சியை விற்கப்பார்க்கின்றது. ஆனால் நாங்கள் தரக்கட்டுப்பாட்டில் மட்டும் விட்டுக்கொடுக்கமாட்டோம்!😎

நிற்க, இங்கு 16 வயதில் biology படிக்கும் பிள்ளைகளுக்கே GM food ஏன் தேவை என்பதை இலகுவாக விளங்கப்படுத்துகின்றார்கள். நூறு வருஷத்திற்கு முன்னர் 2 பில்லியனுக்கு குறைவாக இருந்த மனித சனத்தொகை இப்போது 8 பில்லியனாக உள்ளது. எதையும் கொடுத்தாலும் சாப்பிட்டு செமிபாடடையச் செய்வார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

தமிழர்கள் புலம்பெயர்ந்து வந்து குடியேறிய நாடுகளில் இன்றும் 40 வருடங்களுக்கு முன்னர் ஊரில் வாழ்ந்த, பாடசாலைகளில் படித்த நிலையை தாண்டாத அதே உறைநிலையில் தான் இன்றும் உள்ளோம். இந்த 40 வருடங்களில் உலகில் நடந்த மாற்றங்கள் சனத்தொகை மற்றும் அதற்கு ஈடுசெய்ய உணவு மருத்துவம் மற்றும் எரிபொருள் சார்ந்து எடுக்கப்பட்ட தேடுதல்கள் பற்றிய தேடுதல்கள் இல்லாதது மட்டுமல்ல அவற்றை அனுபவித்தபடி கேலி செய்யும் நிலையில் தான் இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
43 minutes ago, கிருபன் said:

நூறு வருஷத்திற்கு முன்னர் 2 பில்லியனுக்கு குறைவாக இருந்த மனித சனத்தொகை இப்போது 8 பில்லியனாக உள்ளது. எதையும் கொடுத்தாலும் சாப்பிட்டு செமிபாடடையச் செய்வார்கள்!

நோய்களுடனும்  வலிகளுடனும் மருந்து மாத்திரைகளுடனும்  100 வருடங்கள் வாழ்வதை விட  தேகாரோக்கியமாக 60 வயது மட்டும் வாழ்ந்தாலே போதுமானது.:cool:

இன்றைய நவீன புத்திசாலி உலகில் சிறுவர்களுக்கும் புற்றுநோய்,இருதய நோய் என அதிகமாக  பேசப்படுவது வேறு விடயம்.:smiling_face_with_sunglasses:

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

தமிழர்கள் புலம்பெயர்ந்து வந்து குடியேறிய நாடுகளில் இன்றும் 40 வருடங்களுக்கு முன்னர் ஊரில் வாழ்ந்த, பாடசாலைகளில் படித்த நிலையை தாண்டாத அதே உறைநிலையில் தான் இன்றும் உள்ளோம். இந்த 40 வருடங்களில் உலகில் நடந்த மாற்றங்கள் சனத்தொகை மற்றும் அதற்கு ஈடுசெய்ய உணவு மருத்துவம் மற்றும் எரிபொருள் சார்ந்து எடுக்கப்பட்ட தேடுதல்கள் பற்றிய தேடுதல்கள் இல்லாதது மட்டுமல்ல அவற்றை அனுபவித்தபடி கேலி செய்யும் நிலையில் தான் இருக்கிறோம்.

ஈழதமிழர்கள் பலரது நிலையை அப்படியே பதிவு செய்துள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விசுகு said:

தமிழர்கள் புலம்பெயர்ந்து வந்து குடியேறிய நாடுகளில் இன்றும் 40 வருடங்களுக்கு முன்னர் ஊரில் வாழ்ந்த, பாடசாலைகளில் படித்த நிலையை தாண்டாத அதே உறைநிலையில் தான் இன்றும் உள்ளோம். இந்த 40 வருடங்களில் உலகில் நடந்த மாற்றங்கள் சனத்தொகை மற்றும் அதற்கு ஈடுசெய்ய உணவு மருத்துவம் மற்றும் எரிபொருள் சார்ந்து எடுக்கப்பட்ட தேடுதல்கள் பற்றிய தேடுதல்கள் இல்லாதது மட்டுமல்ல அவற்றை அனுபவித்தபடி கேலி செய்யும் நிலையில் தான் இருக்கிறோம்.

இது உண்மைதான் அண்ணை,

எம்மைத்தாண்டிய வெளியுலகில் இடம்பெறும் மாற்றங்கள் குறித்த அவதானமும், அம்மாற்றங்களை எமக்குள் உள்வாங்கிக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மையும் எம்மினத்தில் குறைவாகவே உள்ளதாக நான் நினைக்கிறேன். இதற்கு மிகவும் கட்டுக்கோப்பாக நாம் ஊரில் வாழ்ந்த வாழ்க்கை முறை ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அதைத் தவறென்றும் தட்டிக்கழித்து விட முடியாது. வெளியுலகின் விபரங்களை நாம் அறிந்துகொள்ளத் தொடங்கிய கடந்த 40 வருடங்களுக்கு முன்னரான எமது தாயக வாழ்வு நிலைத்தன்மை பொருந்தியே இருந்தது. நாம் எவரிலும் தங்கியிருக்கவேண்டிய தேவை எமக்கு அப்போது இருக்கவில்லை. 

ஆனால், கடந்த 40 வருடப் போரும், அதன் பின்னரான உயிர்காத்துக்கொள்ளலுக்கான தேடல்களும் எம்மை உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் சிந்தித் தெளித்துவிட்டது. சிலவேளைகளில் எம்மில் பலர் இந்த சடுதியான மாற்றங்களை உள்வாங்குவதில் அவ்வப்போது சிரமப்படுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எல்லாமே அனேகமாக ரஷ்ய ஆதரவு இணையங்களில் பரப்பப் பட்டிருக்கும் கதையாடல் - narrative தவிர இதிலே தரவு ரீதியாக  ஒன்றும் இல்லை.

உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எப்போது, எப்படி? நேட்டோவின் உள்ளே உக்ரைனை எடுத்துக் கொள்ள பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் உக்ரைன் இருக்க, அமெரிக்கா எப்படி அழுத்தம் , யாருக்குக் கொடுத்தது?

இணையத்தளத்தில் வாசித்துத்தான் விளங்கவேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள். இதுக்கு கொஞ்சம் பொதறிவே போதுமே. ஈராக்கிற்கு அடிக்கும்போது எண்ணெய் எடுக்கத்தான் அடிக்கிறோம் என்று சொன்னார்களா? இல்லாத அணு, இரசாயன ஆயுதங்களை அழிக்கப்போவதாக கூறித்தானே போனார்கள்.

அமெரிக்கா, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியமூடாக உக்ரைனை கொம்புசீவி விட்டு அந்த கோமாளியை கைக்குள் வைத்துக்கொண்டு ஆயுத வழங்கல்களுக்கான எல்லா உத்தரவாதமும் கொடுக்காமல்தான் உக்ரைன் ரஷ்யாவுடன் முண்டிக்கொண்டு நின்றதாக்கும். அடிச்சுவிடுங்கோ. இங்கை கண்ணைமூடிக்கொண்டு கைதட்டிறதுக்குத்தான் ஒரு கூட்டமே இருக்குதே.

ஐரோப்பியநாடுகள் எரிவாயுக்காக ரஷ்யாவிடம் இந்த தங்கியிருக்க கூடாது என்பதை நினைவில் கொண்டே இந்த போர் உத்தியை அமெரிக்கா அந்த கோமாளியூடாக செய்துகொண்டிருக்கிறது என்பது குழந்தை பிள்ளைக்கும் தெரியும். நேட்டோ அமெரிக்கா சொல்வதை செய்யும் கிளிப்பிள்ளை என்பது தெரியாதா என்ன. யூரோ டொலரைவிட அதிகம் உயர்ந்துவிடக்கூடாதென்பதில் அமெரிக்கா மிக கவனமாகவே காய் நகர்த்துகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
51 minutes ago, Eppothum Thamizhan said:

இணையத்தளத்தில் வாசித்துத்தான் விளங்கவேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள். இதுக்கு கொஞ்சம் பொதறிவே போதுமே. ஈராக்கிற்கு அடிக்கும்போது எண்ணெய் எடுக்கத்தான் அடிக்கிறோம் என்று சொன்னார்களா? இல்லாத அணு, இரசாயன ஆயுதங்களை அழிக்கப்போவதாக கூறித்தானே போனார்கள்.

அரசியல் வரலாற்று புத்தக பக்கங்களை புரட்டி ஆதாரங்களை தேடுவதற்கு முதல்.....

கண் முன்னே நடந்த வரலாற்று நிகழ்வுகளை கண்ணுற்றும் ஆதாரங்களை தேடுபவர்களை என்னவென்பது? மேற்குலக , சுயநல மோகம் என்பதை தவிர வேறெதுவுமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

நிற்க, இங்கு 16 வயதில் biology படிக்கும் பிள்ளைகளுக்கே GM food ஏன் தேவை என்பதை இலகுவாக விளங்கப்படுத்துகின்றார்கள். நூறு வருஷத்திற்கு முன்னர் 2 பில்லியனுக்கு குறைவாக இருந்த மனித சனத்தொகை இப்போது 8 பில்லியனாக உள்ளது. எதையும் கொடுத்தாலும் சாப்பிட்டு செமிபாடடையச் செய்வார்கள்!

அப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டாயமில்லை.

இப்படியும் வாழலாம். இனி வரும் காலங்களில் இப்படித்தான் வாழ வேண்டும்.

இணையவனின் இந்த திரியும் பல தகவல்களை சொல்லி நிற்கின்றது.
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

இணையத்தளத்தில் வாசித்துத்தான் விளங்கவேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள். இதுக்கு கொஞ்சம் பொதறிவே போதுமே. ஈராக்கிற்கு அடிக்கும்போது எண்ணெய் எடுக்கத்தான் அடிக்கிறோம் என்று சொன்னார்களா? இல்லாத அணு, இரசாயன ஆயுதங்களை அழிக்கப்போவதாக கூறித்தானே போனார்கள்.

அமெரிக்கா, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியமூடாக உக்ரைனை கொம்புசீவி விட்டு அந்த கோமாளியை கைக்குள் வைத்துக்கொண்டு ஆயுத வழங்கல்களுக்கான எல்லா உத்தரவாதமும் கொடுக்காமல்தான் உக்ரைன் ரஷ்யாவுடன் முண்டிக்கொண்டு நின்றதாக்கும். அடிச்சுவிடுங்கோ. இங்கை கண்ணைமூடிக்கொண்டு கைதட்டிறதுக்குத்தான் ஒரு கூட்டமே இருக்குதே.

ஐரோப்பியநாடுகள் எரிவாயுக்காக ரஷ்யாவிடம் இந்த தங்கியிருக்க கூடாது என்பதை நினைவில் கொண்டே இந்த போர் உத்தியை அமெரிக்கா அந்த கோமாளியூடாக செய்துகொண்டிருக்கிறது என்பது குழந்தை பிள்ளைக்கும் தெரியும். நேட்டோ அமெரிக்கா சொல்வதை செய்யும் கிளிப்பிள்ளை என்பது தெரியாதா என்ன. யூரோ டொலரைவிட அதிகம் உயர்ந்துவிடக்கூடாதென்பதில் அமெரிக்கா மிக கவனமாகவே காய் நகர்த்துகிறது.

நான் உங்கள் கருத்துகளுக்கு சம்பவங்களை, நபர்களை ஆதாரம் கேட்டால் "அடிச்சு விடுங்க சும்மா" என்பது பதில் இல்லையே?

பொது அறிவைப் பாவிப்பது நல்லது தான், ஆனால் நிலைவரம், தரவுகள் இவையொன்றுமில்லையெனில் "யாவும் கற்பனை" என்று முடித்து விட வேண்டியான்!😂

2 hours ago, குமாரசாமி said:

நோய்களுடனும்  வலிகளுடனும் மருந்து மாத்திரைகளுடனும்  100 வருடங்கள் வாழ்வதை விட  தேகாரோக்கியமாக 60 வயது மட்டும் வாழ்ந்தாலே போதுமானது.:cool:

இன்றைய நவீன புத்திசாலி உலகில் சிறுவர்களுக்கும் புற்றுநோய்,இருதய நோய் என அதிகமாக  பேசப்படுவது வேறு விடயம்.:smiling_face_with_sunglasses:

நூறு வருடங்கள் அதிகம் பேர் இப்போது வாழ்வதால் தான் பெருமளவு புற்று நோய்களே அதிகம் ஏற்படுகின்றன என்று சொன்னால் நம்புவீர்களா? இல்லையல்லவா? எனவே , சொல்லாமல் விடுகிறேன்!😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Justin said:

நூறு வருடங்கள் அதிகம் பேர் இப்போது வாழ்வதால் தான் பெருமளவு புற்று நோய்களே அதிகம் ஏற்படுகின்றன என்று சொன்னால் நம்புவீர்களா? இல்லையல்லவா? எனவே , சொல்லாமல் விடுகிறேன்!😎

இப்போதெல்லாம் 20 வயதுகளிலையே 60/70 வயதுடையோருக்கு வரவேண்டிய நோய்கள் எல்லாம் வந்து விடுகின்றது. இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. சமூகத்துடன் சேர்ந்து வாழ்ந்தாலே தெரிய வரும்.  100 வயது வரை நோய்களுடனும் வலிகளுடனும் உணவுபோல் மாத்திரைகளையும் விழுங்கி வாழ்வதை விட 50/60 வயதுடன் மேலோகம் செல்வதே மேல்....😎

தியறியின் படி பார்த்தால் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் அறிவும் வளர நோய்கள் குறைந்திருக்க வேண்டும்.வைத்தியசாலைகள் குறைந்திருக்க வேண்டும்.நோயாளிகள் குறைந்திருக்க வேண்டும்.விநோத நோய்கள் பெருகாமல் இருந்திருக்க வேண்டும்.மாறாக......?😎

மனிதர்களுக்கு படிப்பறிவு கூடினால்  பகுத்தறிவு பெருகியிருக்கும். சிந்திக்கும் ஆற்றலும் பெருகியிருக்கும். அதனால் உலகில் சண்டைகளே வந்திருக்கக்கூடாது. விட்டுக்கொடுத்து வாழும் மனப்பான்மை வந்திருக்கணுமே? மாறாக.......????:cool:

34 minutes ago, குமாரசாமி said:

100 வயது வரை நோய்களுடனும் வலிகளுடனும் உணவுபோல் மாத்திரைகளையும் விழுங்கி வாழ்வதை விட 50/60 வயதுடன் மேலோகம் செல்வதே மேல்....😎

50 60 வயதுடைய மாத்திரை உக்டொள்பவர்களை மலினப்படுத்தும் விதமாக இவ்வாறு கீழ்த்தரமாக உங்களால் எப்படி எழுத முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

இப்போதெல்லாம் 20 வயதுகளிலையே 60/70 வயதுடையோருக்கு வரவேண்டிய நோய்கள் எல்லாம் வந்து விடுகின்றது. இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. சமூகத்துடன் சேர்ந்து வாழ்ந்தாலே தெரிய வரும்.  100 வயது வரை நோய்களுடனும் வலிகளுடனும் உணவுபோல் மாத்திரைகளையும் விழுங்கி வாழ்வதை விட 50/60 வயதுடன் மேலோகம் செல்வதே மேல்....😎

அந்தக் காலம் 40-50 வயது வரை வாழ்ந்தாலே பூரண ஆயுசு என்று சொல்லலாம். நவீன மருத்துவம், நவீன உணவு உற்பத்தி முறை எல்லாம் ஆயுளைக் கூட்டியுள்ளது. 

முன்னர் எல்லாம் 10 - 15 பிள்ளைகள் என்று பெற்றுக்கொள்வார்கள். அப்படிப் பெற்றால்தான் 4-5 ஆவது தப்பிப் பிழைக்கும் (தாய் தப்பினால்). மிச்சம் எல்லாம் 5 வயசுக்கு முன்னாலே போய்விடும்.

எனவே முன்னைய காலம் மிகவும் பயங்கரமாகத்தான் இருந்தது. 

வீங்கியுள்ள சனத்தொகையைக் கட்டுப்படுத்தாவிட்டால், பஞ்சம், பசி, பட்டினி எல்லாம் வந்துதான் தீரும். குடிக்கின்ற தண்ணீருக்குக் கூட உலக யுத்தங்கள் வரலாம்!

spacer.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, இணையவன் said:

50 60 வயதுடைய மாத்திரை உக்டொள்பவர்களை மலினப்படுத்தும் விதமாக இவ்வாறு கீழ்த்தரமாக உங்களால் எப்படி எழுத முடிகிறது.

இதில் எங்கே மலினப்படுத்தல் வருகின்றது?
இன்றைய சமுதாயத்தில் நடப்பதைத்தானே சொல்கின்றேன். கருணைக்கொலைக்கு சட்டங்கள் வழி சொல்கின்றனவே????

23 minutes ago, கிருபன் said:

அந்தக் காலம் 40-50 வயது வரை வாழ்ந்தாலே பூரண ஆயுசு என்று சொல்லலாம். நவீன மருத்துவம், நவீன உணவு உற்பத்தி முறை எல்லாம் ஆயுளைக் கூட்டியுள்ளது. 

23 minutes ago, கிருபன் said:

வீங்கியுள்ள சனத்தொகையைக் கட்டுப்படுத்தாவிட்டால், பஞ்சம், பசி, பட்டினி எல்லாம் வந்துதான் தீரும். குடிக்கின்ற தண்ணீருக்குக் கூட உலக யுத்தங்கள் வரலாம்!

இவை இரண்டு கருத்திற்குமான பொழிப்புரையை தருமாறு வேண்டப்படுகின்றீர்கள்?

சனப்பெருக்கம் நல்லதா கூடாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, கிருபன் said:

அந்தக் காலம் 40-50 வயது வரை வாழ்ந்தாலே பூரண ஆயுசு என்று சொல்லலாம். நவீன மருத்துவம், நவீன உணவு உற்பத்தி முறை எல்லாம் ஆயுளைக் கூட்டியுள்ளது. 

27 minutes ago, கிருபன் said:

வீங்கியுள்ள சனத்தொகையைக் கட்டுப்படுத்தாவிட்டால், பஞ்சம், பசி, பட்டினி எல்லாம் வந்துதான் தீரும். குடிக்கின்ற தண்ணீருக்குக் கூட உலக யுத்தங்கள் வரலாம்!

இவை இரண்டு கருத்திற்குமான பொழிப்புரையை தருமாறு வேண்டப்படுகின்றீர்கள்?

சனப்பெருக்கம் நல்லதா கூடாதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.