Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sri-lanka-easter-attacks-750x375.jpg

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு!

உலகத்தையே அதிர்வுக்குள்ளாக்கிய ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன்(வெள்ளிக்கிழமை) நான்கு வருடங்கள் கடந்துள்ளன.

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள், சமாதானத்தின் இறைவனாம் இயேசு கிறிஸ்த்துவின் உயிர்ப்பை கொண்டாடிக் கொண்டிந்த, இன்று போன்றதொரு தினத்தில் தான் அந்தக் கொடியச் சம்பவம் நிகழ்த்தப்பட்டது.

8.45 மணி முதல் 9 மணிவரையான அந்த நேரப்பகுதிக்குள் இலங்கைத் தீவின் 8 இடங்கள் குண்டுச் சத்தங்களினால் அதிர்ந்தன.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கத்தோலிக்க – கிறிஸ்தவ தேவாலயங்களையும் நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் 269 பேர் கொல்லப்பட்டனர்.

500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து- நூற்றுக்கணக்கானோர் அவையங்களை இழந்து அங்கவீனர்களாக்கப்பட்டனர்.

கணவன் மனைவியை இழந்தார்…

மனைவி கணவனை இழந்தாள்…

பெற்றோர் பிள்ளைகளை இழந்தனர்…

பிள்ளைகள் பெற்றோரை இழந்தனர்…

உடன் பிறந்தோர் இறந்தனர்…

உறவினர்களும் இறந்தனர்…

ஆம். கனவில் கூட கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத கண்மூடித் தனமான இந்தத் தாக்குதல், இன்றுவரை இலங்கை மக்களின் மனங்களில் அறா ரனமாக இருந்துக் கொண்டுதான் உள்ளது.

இலங்கையின் ஆட்சிமாற்றத்திற்கே காரணமான இந்தத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் கடந்துவிட்டன.

நாட்களும் நகர்ந்து விட்டன.

ஆனால், பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கான நீதியோ, இன்னும் பகல் கனவாக மட்டுமே நீடித்து வருகின்றது.

சுவர்களிலும், தேவாலய கதிரை மேசைகளிலும் படிந்திருந்த அந்த இரத்தக்கரைகள், இனியொருத் தாக்குதல் இதுபோன்று இனிமேல் வேண்டாம் என்ற கசப்பானச் செய்தியையே வெளியுலகுக்கு காண்பித்து நிற்கின்றது.

https://athavannews.com/2023/1330499

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

 

May be a doodle

 

May be an image of crocodile

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள். இந்திய, இலங்கை அரசின் இரத்தம் தோய்ந்த கைகள் இத்தாக்குதலுக்கு  பொறுப்பானவர்கள் ஆவர். நீதி கிடைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்......! 

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக விசேட அஞ்சலி நிகழ்வு!

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக விசேட அஞ்சலி நிகழ்வு!

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக இன்று(வெள்ளிக்கிழமை) விசேட அஞ்சலி நிகழ்வும் திருப்பலி ஆராதனையும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், சர்வமத தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டு, உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியின் இரு மருங்கிலும் பெருந்திரளான மக்களும் திரண்டு, அஞ்சலி செலுத்தியதோடு, தாக்குலுக்கு நீதி வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தனர்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு இலக்கான, கொச்சிக்கடை தேவாலய பகுதியில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

அதேநேரம், ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியார் ஆலயத்திலிருந்து நேற்று மாலை ஆரம்பமாகியிருந்த அமைதிப் பேரணியும் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை வந்தடைந்துள்ளது.

இந்த நிலையில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்தோடு,  நினைவேந்தல் நிகழ்வொன்றும் நடத்தப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட மற்றும் காலிமுகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதனால், கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

02.jpeg

01.jpeg

FuN-h-taEAEdunP.jpeg

FuN-hzZaUAAEIhR.jpeg

https://athavannews.com/2023/1330568

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மரியண்ணை தேவாலயத்தில் நினைவேந்தல்!

யாழ்.மரியண்ணை தேவாலயத்தில் நினைவேந்தல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது, குண்டு வெடித்த நேரமான 8.42 மணிக்கு தேவாலய மணி ஒலிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்காக இரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

நினைவேந்தலில் யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர், அருட்தந்தையர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

16de32c5-9462-4358-babb-9c1490bda412.jpg

b5bc8d37-a8ee-4698-bd45-7c5e5725dc63.jpg

5e86692b-0b1c-4985-8ccc-ab398d21e50d.jpg

e52fef4f-3ba2-4864-9d85-9f79b83a93d3.jpg

018dbb3a-307e-4609-898d-5399d51899fa.jpg

2377c47f-3770-4a41-bd50-f9f4a91ec4d1.jpg

ef56ad3f-514c-43a2-8e8e-2be3ef923988.jpg

da64795e-4d25-409f-8ec2-7db34e2a2af1.jpg

https://athavannews.com/2023/1330536

  • கருத்துக்கள உறவுகள்

வத்திக்கானில் உள்ளவர்களால் சிறிலங்கா அரசை வற்புறுத்தி நீதியான விசாரணையை நடத்த இயலாதது கவலைக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

நீதியை எதிர்பார்ப்பவர்கள் முட்டாளாகக் கருதப்படுவார்கள். 

☹️

4 hours ago, nunavilan said:

நினைவஞ்சலிகள். இந்திய, இலங்கை அரசின் இரத்தம் தோய்ந்த கைகள் இத்தாக்குதலுக்கு  பொறுப்பானவர்கள் ஆவர். நீதி கிடைக்காது.

மேற்கை விட்டுவிட்டீர்களே? அவர்கள்தான் மிகப் பிரதானமானவர்கள். 

 முஸ்லிம்களிலுள்ள முட்டாள்களைப் பலிக்கடாவாக்கி மேற்கொள்ளப்பட்ட, திட்டமிட்ட அழிப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்!! 🙏

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியப் பயங்கரவாதத்துக்குப் பலியான அனைத்து மக்களுக்கு நினைவு வணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்🙏

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைவஞ்சலிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

 

May be a doodle of text that says 'Gone But Never Forgotten 21-04-19 l" s.s@.'

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு?

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கும் தொடர்பு?

 

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளது எனும் அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்திற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் இறந்தவர்களுக்காக இலங்கை தமிழ் கட்சி நான்காவது வருடமாகவும் ஏற்பாடு செய்திருந்த அஞ்சலி நிகழ்வின் போது இவ்வாறு கூறியிருந்தார்.

“இலங்கையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதிலே மட்டக்களப்பு மாவட்டத்தின் சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 30 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

கடந்த நான்கு வருடங்களாக நாங்களும் இறந்த உறவுகளுக்கு நீதி வேண்டும், சதி செய்து கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்று போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

ஒரு புறம் நாங்கள் அஞ்சலி செலுத்துவதாக இருந்தாலும் கூட, இது அரசியல் இலாபங்களுக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு குண்டுத்தாக்குதல் என்பதை பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையிலே அசாத் மௌலானா என்று அழைக்கப்படும் அவரது முன்னாள் பேச்சாளர் இந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னால் ராஜபக்சர்கள் இருந்ததாகவும், இந்தக் கொடூரமான செயலை செய்ததற்கு பின்னால் தற்போது இராஜாங்க அமைச்சராக இருக்கும் சிவனேசதுரை சந்திரகாந்தனும் தொடர்பு இருப்பதாக ஐ.நாவிலே அறிக்கை கொடுத்திருக்கின்றார்.

ஆனால், இவர்கள் இன்னும் சுதந்திரமாகவே நடமாடிக் கொண்டிருக்கின்றார்கள்” என்றார்.
  • கருத்துக்கள உறவுகள்

 

நீதி கிடைக்குமென நம்பிக்கை இல்லை

 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட  போதிலும் இன்னும் நான்கு தீர்க்கப்படாத கேள்விகள் எஞ்சியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவ உளவுத்துறை தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு உணவளித்தது என்ற குற்றச்சாட்டுகளுக்கு இன்னும் பதில் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.

இந்த அமைப்பு ஏன் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தலை அங்கீகரித்தது என்றும் ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/நத-கடககமன-நமபகக-இலல/175-316173

  • கருத்துக்கள உறவுகள்
n14.jpg?itok=qrlS7p4Q

ஜூலி சங் டுவிட்டரில் பதிவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களையும் அமெரிக்கா கெளரவிப்பதோடு, நீதிக்காகக் காத்திருப்பவர்களுடன் ஐக்கியமாக நிற்கிறதென, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் செய்தியில், “நான்கு வருடங்களுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்து அமெரிக்கர்கள் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை இன்று நான் நினைவுகூருகிறேன். பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களுக்கும் அமெரிக்கா மரியாதை செலுத்துகிறது. நீதிக்காகக் காத்திருப்பவர்களுடன் அமெரிக்கா ஐக்கியமாக நிற்கின்றது" தெரிவித்துள்ளார்.

https://www.thinakaran.lk/2023/04/22/உள்நாடு/97837/நீதிக்காக-காத்திருப்போருக்கு-அமெரிக்கா-துணை-நிற்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.