Jump to content

ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, புலவர் said:

தெலுங்கு நடிகை

தெலுங்கு நடிகை

ஒ அப்ப‌டியா

Link to comment
Share on other sites

  • Replies 546
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் தோல்விக்கான 10 காரணங்கள் - லீக்கில் ஆஸி.க்கு எதிராக கலக்கிய அஸ்வினை சேர்க்காதது ஏன்?

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 19 நவம்பர் 2023

இந்திய அணி 2-வது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து கோப்பையை நழுவவிட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்குப்பின் உலகக் கோப்பையை வென்றுவிடலாம் என்று ரசிகர்களும், இந்திய அணியினரும் நம்பி இருந்தநிலையில் அனைத்தும் கானல் நீராகிவிட்டது.

லீக் சுற்றுகளில் தோல்வியே இல்லாமல் தொடர்ந்து 9 வெற்றிகள், அரையிறுதியில் மிகப்பெரிய வெற்றி என்று வெற்றி நடையுடன் வந்த இந்திய அணி இறுதிப்போட்டியில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்திய அணி இப்போது இருக்கும்ஃபார்மில் எந்த அணியையும் வீழ்த்தும் வல்லமை இருப்பதாக இருந்தது. இந்த உலகக் கோப்பையோடு பல மூத்த வீரர்கள் விடைபெறுவார்கள் என்றும் கூறப்பட்டது. ஆதலால், நிச்சயமாக கோப்பையை வென்றுகொடுப்பார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால், அனைத்தும், இறுதிப்போட்டியில் எதிர்மறையாக நடந்துவிட்டது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக் கோப்பையை நடத்தும் அணிகள்தான் அந்த கோப்பையை வெல்லும் என்ற டிரண்ட் கடந்த 3 தொடர்களாக இருந்தது. அதை மாற்றி இந்தியாவில் நடத்தப்பட்ட உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன்பட்டத்தை வென்றுள்ளது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று, தங்களை உலக சாம்பியன் என்று நிரூபித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஐசிசியின் டி20 உலகக் கோப்பை, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை என 3 கோப்பைகளையும் வென்று உலகக் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செய்து ஆட்சி செய்துள்ளது.

இந்திய அணி லீக் ஆட்டங்களிலும், அரையிறுதியிலும் பெரிதாக தவறு ஏதும் செய்யவில்லை, அல்லது குறைவாக தவறுகள் செய்ததால்தான் வென்றது என எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தொடர்ந்து 10 வெற்றிகளைப் பெற்ற இந்திய அணியால் ஏன் இறுதிப் போட்டியில் வெல்ல முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது. இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களையும், தவறுகள் குறித்தும் பார்க்கலாம்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் தோல்விக்கு காரணங்கள் என்ன?

  • அஸ்வின் இல்லாதது: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டிருந்தார். அந்த ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றியில் அவர் முக்கிய பங்காற்றினார். அதேபோல் இறுதிப்போட்டியிலும் அஸ்வின் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆமதாபாத் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றது என்பதால், கூடுதலாக ஒரு சுழற்பந்துவீச்சாளராகவும், ஆல்ரவுண்டராகவும் அஸ்வின் இருப்பது பலமாக அமையும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.ஆனால், இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், ஜடேஜா ஆட்டமிழந்தபின், கடைசி வரிசையில் நிலைத்து ஆட எந்த பேட்டரும் இல்லாமல் ஸ்கோரை உயர்த்த முடியாமல் போனது. அது மட்டுமல்லாமல் அஸ்வின் ஒரு விக்கெட் டேக்கர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர் பைனலில் விளையாடி இருந்தால் இக்கட்டான நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்திருப்பார் என்பதையும் மறுக்க முடியாது.
  • பந்துவீச்சு மோசம்: இறுதிப் போட்டியில் சிராஜ் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றார்போல் சிராஜ் பந்துவீச்சு தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக இல்லை. பும்ரா, ஷமி இருவரும் முதல் 10 ஓவர்களை கட்டுப்படுத்திய நிலையில், அதன்பின் பவுண்டரிகளை வழங்கி ஹெட்டுக்கு நம்பிக்கையூட்டியது சிராஜ் பந்துவீச்சுதான். அனைத்து லீக் ஆட்டங்களிலும் சிராஜ் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூற முடியாது. சிராஜுக்குப் பதிலாக அஸ்வினையோ அல்லது சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக அஸ்வினையோ பைனலில் அணியில் சேர்த்து மாற்றம் செய்திருக்கலாம்.
  • ஸ்லிப்பில் பீல்டர் இல்லை: இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது ஸ்லிப்பில் பீல்டர்கள் வைக்காதது பெரிய தவறாகும். ஸ்லிப்பில் இரு கேட்சுகள் பிடிக்க முடியாமல் போனது காரணம் அங்கு பீல்டர்கள் இல்லை. பீல்டர்களை வைத்து குல்தீப், ஜடேஜாவை பந்துவீச வைத்திருந்தால், ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு விக்கெட்டுகளை இழந்திருப்பார்கள்.
 
உலகக்கோப்பை இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • பவுண்டரியே வரவில்லை: இந்திய அணி பேட்டிங்கின்போது ரோஹித் சர்மா களத்தில் இருந்தவரைதான் பவுண்டரி, சிக்ஸர்கள் கிடைத்தன. ரோஹித் ஆட்டமிழந்து சென்றபின், பவுண்டரியை பார்ப்பதே கடினமாக இருந்தது. இந்திய அணி சேர்த்த 240 ரன்களில் ரோஹித் சர்மாவின் 4 பவுண்டரிகளை கழித்துப் பார்த்தால் 8 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டது. பவுண்டரிகள்மூலமே அதிகமாக ஸ்கோர் செய்ய முடியும் ஆனால், ஆடுகளத்தின் தன்மை, ஆஸ்திரேலியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் பவுண்டரிகளை இந்திய பேட்டர்கள் அடிக்காதது ஸ்கோரை உயர்த்த முடியாதமைக்கு முக்கியக் காரணமாகும்.
  • ஸ்ரேயாஸ், கில், சூர்யா ஆட்டமிழப்பு: இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய ஸ்ரேயாஸ், கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 3 பேரும் பெரிதாக ஸ்கோர் செய்யாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்து. 360 டிகிரி வீரர் எனப் புகழப்படும் சூர்யகுமார் யாதவ் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது பரிதாபம். இந்தத் தொடரில் சூர்யகுமார் பெரிதாக ஏதும் செய்யவில்லை.
  • பனிப்பொழிவு: இந்திய அணியின் தோல்விக்கு இயற்கை முக்கியக் காரணமாகும். இரவு 7 மணிக்கு மேல் ஆகமதாபாத்தில் பனிப்பொழிவு அதிகமானதால் ஆடுகளத்தின் தன்மை மாறத்தொடங்கியது. பந்து பேட்டரை நோக்கி வேகமாக வரத் தொடங்கியதால் எளிதாக அடித்து ஆட உதவியது. இதனால் இந்தியப் பந்துவீச்சு பெரிதாக எடுபடமுடியாமல் போனது.
 
உலகக்கோப்பை இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • உதிரிகள் அதிகம்: இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 16 உதிரி ரன்களை வழங்கிவிட்டது. ஆஸ்திரேலிய அணி 12 உதிரிகள் வழங்கிய நிலையில் இ்ந்திய அணி 18 உதிரிகளை வழங்கியது. உதிரிகள் வழங்கியதைக் குறைத்திருக்கலாம்.
  • ஆடுகளத்தின் தன்மை: ஆமதாபாத்தில் இன்று போட்டி நடந்த ஆடுகளம் சற்று வித்தியாசமானது. சமனற்ற வகையில், சற்று காய்ந்தநிலையில் இருந்தது. இதைப் பார்த்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்றவுடனே தாமதிக்காமல் சேஸிங்கைத் தேர்ந்தெடுத்தார். ஆடுகளம் தொடக்கத்திலேயே சுழற்பந்துவீச்சுக்கும், வேகப்பந்துவீச்சுக்கும் சாதகமாக இருந்தது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
  • கம்மின்ஸ் கேப்டன்ஷிப்: இந்திய அணியை களத்தில் மட்டுமல்லாமல், களத்துக்கு வெளியேயையும் ஆஸ்திரேலிய அணி வென்றுவிட்டது. ஒவ்வொரு பேட்டருக்கும் தனித்தனியாகத் திட்டங்கள், பீல்டிங் அமைப்பு, தேவைப்படும் நேரத்தில் பந்துவீச்சு மாற்றம், பந்துவீச்சாளர்களைக் கையாண்டது என கேப்டன்ஷிப்பில் கம்மின்ஸ் பட்டையைக் கிளப்பிவிட்டார்.
  • ஆஸ்திரேலியாவின் பீல்டிங், பந்துவீச்சு: ஆஸ்திரேலியாவின் பீல்டிங், பந்துவீச்சு இறுதிப் போட்டியில் அற்புதமாக அமைந்தது. அதிலும் வார்னர், டிராவிஸ் ஹெட்டின் பீல்டிங். ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய ஹெட்டின் கேட்ச், கோலியின் விக்கெட் ஆகியவை ஆட்டத்தின் திருப்புமுனை. முதல் 10ஓவர்கள் மட்டுமே இந்தியாவின் கட்டுப்பாட்டில் ஆட்டம் இருந்தது, ரோஹித் சர்மா ஆட்டமிழந்தவுடன் ஆட்டத்தை ஆஸ்திரேலியா கையில் எடுத்துக்கொண்டு 40 ஓவர்களையும் கட்டுப்படுத்தியது.

1983ம் ஆண்டு உலகக் கோப்பையில் விவியன் ரிச்சார்ட்ஸுக்கு இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் பிடித்த கேட்ச்தான் திருப்புமுனையாக அமைந்து மேற்கிந்தியத் தீவுகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அதுபோல், இந்திய அணியின் இந்த உலகக் கோப்பைத் தோல்விக்கு காரணமாக அமைந்தது ரோஹித் சர்மாவின் கேட்சை டிராவிஸ் ஹெட் பிடித்ததுதான். இந்த இரு கேட்சுகளும்தான், வெற்றியை இந்திய அணியின் கைகளில் இருந்து பறித்த தருணங்களாகும்.

https://www.bbc.com/tamil/articles/c889d3772ldo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமதாபாத் ரசிகர்களை மௌனமாக்க கம்மின்ஸ் தீட்டிய திட்டம்

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

2023-ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடங்கியபோது, ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்லும் என்று யாரும் கணிக்கவில்லை. மாறாக இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்குப்பின் முன்னாள் சாம்பியன் என்ற அடிப்படையில் ஆஸ்திரேலியாவை கணக்கில் சேர்த்தனர்.

ஏனென்றால், உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாகத் தென் ஆப்பிரிக்கா பயணம் சென்று அந்நாட்டு அணியிடம் ஆஸ்திரேலியா மோசமான தோல்வியைச் சந்தித்திருந்தது. இந்தியாவுக்குப் பயணம் செய்து இந்திய அணியிடம் ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் தோற்றது.

உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதும் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணியிடமும், தென் ஆப்பிரிக்காவிடமும் தோற்றதால், ஆஸ்திரேலிய அணியின் மீதான நம்பகத்தன்மையும், முன்னாள் சாம்பியன் என்ற பெருமிதப் பார்வையும் ரசிகர்கள் மத்தியில் குறைந்தது.

அது மட்டுமல்லாமல் மேக்ஸ்வெல், மார்ஷ் உள்ளிட்ட வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டது, பல வீரர்கள் ஃபார்மின்றி இருந்தது ஆகியவை அவ்வளவுதான் ஆஸ்திரேலியா என்று ரசிகர்களைப் பேசவைத்தது.

அப்படிப்பட்ட அணி, இப்போது எப்படி உலகக் கோப்பையை வென்று சாம்பியன் ஆனது?

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மறுபிரவேசம் செய்த ஆஸ்திரேலியா

நடந்து முடிந்திருக்கும் உலகக் கோப்பைத் தொடரின் 3-வது போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணி பெறத் துவங்கிய வெற்றிகள், தவறுகளைத் திருத்திக் கொண்டு ஆடிய ஆட்டங்கள் ஆகியவை மெல்ல ஆஸ்திரேலியாவின் பக்கம் கவனத்தைத் திருப்பச் செய்தன. அதிலும் டிராவிஸ் ஹெட் அணிக்குள் திரும்பியது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம்.

லீக் சுற்றுகளில்கூட ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்தைப் பிடிக்கப் போகிறதா அல்லது கடைசி இடத்தைத் தக்கவைக்கப் போகிறதா என்றெல்லாம் கிண்டலாகப் பேசப்பட்டு, 3-வது இடத்தைத்தான் பிடித்தது.

ஆனால், அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியைச் சாய்த்து ஆஸ்திரேலியா பைனலுக்கு முன்னேறியபோதுதான் ரசிகர்களுக்கு ஆஸ்திரேலிய அணி மீதான அச்சம் அதிகரித்தது.

நிழலாடிய 2015-இன் நினைவுகள்

கடந்த 2015ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின் போதும், இதேபோன்ற நிலையைத்தான் ஆஸ்திரேலியா சந்தித்தது. ஆனால், அரையிறுதிக்குப்பின் ஆஸ்திரேலியாவின் முகம் மாறியது, தங்களை சாம்பியனாக உயர்த்திக்கொள்ள ஒவ்வொரு வீரரும் முழுமையாக அர்ப்பணிப்புடன் விளையாடியது, நியூசிலாந்து அணியைத் தோற்கடித்தது நினைவைவிட்டு அகலவில்லை. ஆதலால், இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு சவாலாக ஆஸ்திரேலியா அணி மாறும் என்பதில் சந்தேமில்லாமல் இருந்தது.

அது மட்டுமல்லாமல் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி என்பதால், இறுதிப் போட்டியை எவ்வாறு அணுக வேண்டும், எவ்வாறு எதிரணிக்கு வியூகங்களை வகுக்க வேண்டும், ஒவ்வொரு வீரருக்குமான தனிப்பட்ட திட்டங்கள் என்ன என்பதை ஆஸ்திரேலிய அணி நன்றாக அறிந்திருக்கும்.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இறுதி ஆட்டத்தில் கேப்டன் கம்மின்ஸ் செயல்பட்டவிதம், அனுபவம் மிக்கவரின் செயல்பாடு போல இருந்தது

கட்டம் கட்டிய கம்மின்ஸ்

அதற்கு ஏற்றார்போல் டாஸ் வென்றவுடன் கேப்டன் கம்மின்ஸ் சற்றும் யோசிக்காமல் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி யுத்திகளைப் பயன்படுத்தி கச்சிதமாக திட்டங்களை செயல்படுத்தி 240 ரன்களுக்குள் சுருட்டினார்.

அதிலும் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடர், ஆமதாபாத்தில் 1.25 லட்சம் இந்தியர்களுக்கு மத்தியில் அந்நாட்டு அணியை வீழ்த்துவது என்பது சாதாரண விஷயமல்ல. ஆமதாபாத் ஆடுகளத்தைப்பற்றி ஆஸ்திரேலியா பெரிதாக அறிந்திருக்கவில்லை.

ஆமதாபாத் மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப்போட்டி ஆடுகளம் மெதுவான ஆடுகளம், பந்து பெரிதாக பவுன்ஸ் ஆகவில்லை, சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதா என்பதுகூடத் தெரியாது. ஆனால் இவை அனைத்தையும் தங்களின் வலிமையாக மாற்றிக்கொண்டு செயல்பட்டதுதான் ஆஸ்திரேலியா சாம்பியனாக உருவெடுக்கவும், 6-வது முறையாக பட்டம் வெல்லவும் காரணமாக அமைந்தது.

விராட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பந்துவீச்சில் ‘மும்மூர்த்திகளின்’ சக்தி

வேகப்பந்துவீச்சிலும் ஸ்டார்க், கேப்டன் கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகிய 3 பேரைத் தவிர யாருமில்லை. சுழற்பந்துவீச்சில் ஆடம் ஸம்பா மட்டுமே முழுநேரச் சுழற்பந்துவீச்சாளர், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், மார்ஷ் ஆகியோர் பகுதிநேரப் பந்துவீச்சாளர்கள். இவர்களை வைத்துக்கொண்டு ஆடுகளத்தை தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொண்டு இந்திய அணியை 240 ரன்களில் சுருட்டியதில்தான் ஆஸ்திரேலியா ஒரு சாம்பியனாக மிளிர்கிறது.

அதிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் மூவரும் அனைத்து வகையான ஆட்டங்களிலும் தவிர்க்காமல் இடம் பெறக்கூடியவர்கள், எந்த ஆட்டத்துக்கும் தங்களின் பந்துவீச்சை உடனடியாக தகவமைத்துக் கொள்ளக் கூடியவர்கள்.

டி-20 உலகக் கோப்பையில் சாம்பியனாகியபோதும், ஒருநாள் உலகக் கோப்பையில் பட்டம் வென்றபோதும், ஆஷஸ் தொடர் வெற்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி என அனைத்திலும் இந்த 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த 3 வேகப்பந்துவீச்சாளர்கள்தான் ஆஸ்திரேலிய பந்துவீச்சின் பலம்.

அனைத்துவிதமான போட்டிகளிலும் இந்த 3 பந்துவீச்சாளர்களுக்குக் கிடைத்த அனுபவம்தான் பைனலில் சிறப்பாகப் பந்துவீச முடிந்தது. பெரிதாக ஸ்விங் பந்துவீச்சு இல்லை, கட்டர்கள்கூட பெரிதாக இல்லை ஆனாலும், லைன் - லெங்த் துல்லியமாக இருந்தது, 90% பந்துகளை தவறான லெங்த்தில் வீசவில்லை, தொடர்ந்து நெருக்கடி தரும் லெங்த்தில் வீசி இந்திய பேட்டர்களை கிறங்கடித்ததுதான் ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களின் பலம்.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்திய அணியின் இந்த உலகக் கோப்பைத் தோல்விக்கு காரணமாக அமைந்தது ரோகித் சர்மாவின் கேட்சை டிராவிஸ் ஹெட் பிடித்ததுதான்

ஆட்டத்தை மாற்றிய கேட்ச்

இந்த உலகக் கோப்பைத் தொடருக்குக் கேப்டன் பொறுப்பேற்கும் முன் கம்மின்ஸுக்கு ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்த அனுபம் மிகக்குறைவு. 4 போட்டிகளில் மட்டுமே கேப்டனாக இருந்திருந்தார். ஆனால், இறுதி ஆட்டத்தில் கேப்டன் கம்மின்ஸ் செயல்பட்டவிதம், அனுபவம் மிக்கவரின் செயல்பாடு போல இருந்தது.

கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதர்ச நாயகன், தொடரின் அதிக ரன்களை எடுத்த பேட்டர் விராட் கோலி விக்கெட்டை கட்டம் கட்டி வீழ்த்தி லட்சக்கணக்கான ரசிகர்களை மவுனத்தில் ஆழ்த்தினார் கம்மின்ஸ். ஒரு கேப்டனாகவும், ஒரு பந்துவீச்சாளராகவும் கம்மின்ஸ் அந்த இடத்தில் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி சாம்பியனாகப் போகிறோம் என்பதை சொல்லாமல் உணர்த்தினார்.

ரோகித் சர்மா களத்தில் இருந்தவரை ஆஸ்திரேலிய அணியிடம் ஆட்டம் கையில் இல்லை. ஆனால், ரோஹித் சர்மா பலமுறை ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அவரைப் பந்துவீசச் செய்து கட்டம் கட்டினர்.

உலகக் கோப்பைத் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியின் பீல்டிங் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது, கிண்டலடிக்கப்பட்டது. ஆனால், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு மட்டுமல்ல போட்டிக்கே திருப்புமுனையாக அமைந்தது ரோகித் சர்மா அடித்த ஷாட்டை டிராவிஸ் ஹெட் ஓடிச் சென்று பிடித்த கேட்ச்தான்.

1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விவியன் ரிச்சார்ட்ஸுக்கு இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் பிடித்த கேட்ச்தான் திருப்புமுனையாக அமைந்து மேற்கிந்தியத்தீவுகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அதுபோல், இந்திய அணியின் இந்த உலகக் கோப்பைத் தோல்விக்கு காரணமாக அமைந்தது ரோகித் சர்மாவின் கேட்சை டிராவிஸ் ஹெட் பிடித்ததுதான். இந்த இரு கேட்சுகளும்தான், போட்டியின் முடிவுகளை எதிரணியின் கைகளில் இருந்து பறித்த தருணங்களாகும்.

இறுதிப் போட்டியில் இதுபோன்று ஒவ்வொரு தருணத்தையும் ஆஸ்திரேலிய அணி தங்களை சாம்பியன்களாக உயர்த்துவதற்கு பயன்படுத்திக்கொண்டு முன்னெடுத்துச் சென்றது என்பதில் மிகையில்லை.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆஸ்திரேலியா தன்னுடைய இயல்பான கிரிக்கெட் முறையில் இருந்து மாறவே இல்லை

பாரம்பரிய கிரிக்கெட்டை விளையாடிய ஆஸ்திரேலியா

சேஸிங்கிலும் ஆஸ்திரேலிய அணியின் நுணுக்கங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஷமி, பும்ரா இருவரும் பவர்ப்ளேயில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள், ஓவருக்கு 4.5 ரன்கள் என்று எகனாமி வைத்திருக்கிறார்கள். ஆமதாபாத் மைதானம், லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவுக் குரல், பும்ரா, ஷமியின் ஸ்விங் பந்துவீச்சு, மின்னொளி வெப்பம் என கடும் அழுத்தத்துக்கு மத்தியில் ஆஸ்திரேலிய பேட்டர்கள் விளையாடினர்.

அதனால்தான் வெளிப்புற அழுத்தத்தில் என்னசெய்வெதென்று தெரியாமல்கூட, ஸ்மித் தனக்குரிய டி.ஆர்.எஸ் வாய்ப்பை பயன்படுத்தாமல் பும்ரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். ஆஸ்திரேலிய அணியும் ஒரு கட்டத்தில் அழுத்தத்தில் இருந்தாலும், அதிலிருந்து லாபுஷேன், ஹெட் இருவரும் தங்களையும் மீட்டு, அணியையும் மீட்டுக் கரை சேர்த்தனர். பவர்ப்ளே ஓவர்கள் முடியும்போது, ஆஸ்திரேலியா தங்கள் வெற்றி இலக்கில் கால்பகுதியைக் கூட எட்டவில்லை.

உலகிற்கு கிரிக்கெட்டை போதித்த இங்கிலாந்து பாரம்பரிய கிரிக்கெட் முறையில் இருந்து விலகி ‘பேஸ்பால் கிரிக்கெட்டுக்கு’ மாறிவிட்டது. இனிமேல் இந்த பேஸ்பால் கிரிக்கெட் (அதிரடிஆட்டம்) முறைதான் டிரண்ட் என்று உள்ளூர் கிரிக்கெட்டுக்கும் அறிவுறுத்தி வருகிறது.

இந்திய அணி கூட தங்களின் பேட்டிங் முறையை ‘பேஸ்பால்’ உத்திக்கு மாற்றிவிட்டது. இந்த உலகக் கோப்பையில் பல போட்டிகளில் அந்த உத்தியை இந்திய அணி பின்பற்றியது.

ஆனால், ஆஸ்திரேலியா தன்னுடைய இயல்பான கிரிக்கெட் முறையில் இருந்து மாறவே இல்லை என்பதற்கு இறுதிப்போட்டி ஆட்டமே சிறந்த உதாரணம். ஏனென்றால், இவர்கள் இப்படித்தான் விளையாடப் பிறந்தவர்கள், பாரம்பரிய கிரிக்கெட் ரத்தத்தில் ஊறிவிட்டது என்பதை உணர்த்தினர். டிராவிஸ் ஹெட்டின் பேட்டிங் முறை நிச்சயமாக பேஸ்பால் ஆட்டமாக இருக்க முடியாது. பழைமையான, பாரம்பரிய கிரிக்கெட் மாதிரியான பொறுமையான, நிதானமான, மோசான பந்துகளை மட்டும் ஷாட்கள் அடிப்பது போன்றுதான் ஹெட்டின் பேட்டிங் இருந்தது. உலக ரசிகர்கள் பாரம்பரிய கிரிக்கெட் பேட்டிங் முறையை மறந்துவரும்போது ஹெட், லாபுஷேன் ஆட்டம் அதை அற்புதமாக நினைவூட்டியது.

இறுதிப் போட்டி என்றவுடன் ரிக்கி பாண்டிங், மாத்யூ ஹேடன், கில்கிறிஸ்ட் ஆகியோர் அதிரடி ஆட்டம் நினைவுக்கு வந்தாலும், டிராவிஸ் ஹெட்டின் பேட்டிங் பரந்த, பாரம்பரிய கிரிக்கெட் வீரர்களை நினைவூட்டும் வகையில் இருந்தது. தாக்குதல் ஆட்டம், அதிரடியான ஆட்டம் என்பது ஆஸ்திரேலிய பேட்டர்களின் டி.என்.ஏ.வில் இருந்தாலும், பாரம்பரிய பேட்டிங் முறையை மறக்கவில்லை.

நிரூபித்த லாபுஷேன்

இரண்டு மாதங்களுக்கு முன்புவரை லாபுஷேன் ஆஸ்திரேலிய அணியின் உலகக் கோப்பைத் தொடரில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் இருந்தது. டெஸ்ட் தொடருக்காக பயிற்றுவிக்கப்பட்ட லாபுஷேன் ஒருநாள் தொடருக்கு ஒத்துவருவாரா என்ற விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், டிராவிஸ் ஹெட் காயத்தால் அணியில் இல்லாத நிலையில் லாபுஷேனுக்கு இடம் கிடைத்தது. ஆனால், ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்காக தனக்கிருக்கும் பொறுப்புடன் லாபுஷேன் விளையாடினார். அதிலும் இறுதி ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட்டுக்கு அளித்த ஒத்துழைப்பு, பொறுமையாக ஆடி அரைசதம் அடித்தது ஆகியவை லாபுஷேன் அணியில் அவசியம் இருக்கவேண்டியவர் என்பதை நியாயப்படுத்தியது.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

'உலகக் கோப்பையையும் வென்றது மலையின் உச்சியில் நிற்பதைப் போன்று' உள்ளதாகக் கம்மின்ஸ் தெரிவித்தார்

‘சிறப்பான ஆட்டத்தைச் சேமித்து வைத்திருந்தோம்’

வெற்றிக்குப்பின் ஆஸ்திரேலியக் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “இந்த வெற்றிக்காகத்தான் எங்களின் சிறப்பான ஆட்டத்தைச் சேமித்து வைத்திருந்தோம் என நினைக்கிறேன். இரு பெரிய பேட்டர்கள் சேர்ந்து எங்களுக்கு வெற்றியை உரித்தாக்கியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் வயதானவர்களாக இருப்பினும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பங்களிப்பை அளித்துள்ளனர்.

குறிப்பாக லாபுஷேன் அணிக்குள் வருவதற்கு பலவிதான எதிர்ப்புகள் இருந்தன, ஆனால், தன்னுடைய இருப்பைக் கடைசி ஆட்டத்தில் லாபுஷேன் நியாயப்படுத்திவிட்டார். டிராவிஸ் ஹெட் காயத்தால் இருந்தபோது எங்களின் மருத்துவக் குழு செயல்பட்டவிதம், தேர்வாளர்கள் அளித்த ஆதரவு எங்களுக்கு பக்கபலமாக இருந்தது,” என்றார்.

மேலும், “இதனால்தான் ஹெட் விரைவில் குணமடைந்து அணிக்குள் திரும்பினார். நாங்கள் ஏறக்குறைய ஓர் ஆண்டாக வெளிநாடுகளில்தான் விளையாடி வருகிறோம். பல வெற்றிகளை தொடர்ந்து பெற்றிருக்கிறோம். இப்போது உலகக் கோப்பையையும் வென்றது மலையின் உச்சியில் நிற்பதைப் போன்று உணர்கிறேன்,” எனத் தெரிவித்தார்.

ஆமதாபாத் அரங்கில் குழுமும் லட்சக்கணக்கான ரசிகர்களையும் நிசப்தமாக்கிவிடுவேன் அதைத்தவிர எனக்கு மனநிறைவு தரக்கூடியது வேறு ஒன்றுமில்லை என்று இறுதிப்போட்டிக்கு முன்பாக கம்மின்ஸ் பேசியிருந்தார். தான் சொன்னதை கம்மின்ஸ் நிறைவேற்றிவிட்டார்.

https://www.bbc.com/tamil/articles/cy92d2g9xv1o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வீரர்களை கடுமையாக விமர்சிக்கும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்

இந்தியா - விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறாவது முறையாக உலக சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணிக்கு எல்லா இடங்களிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்தப் போட்டியின் நாயகன் டிராவிஸ் ஹெட் அடித்த சதத்தால், 42 பந்துகள் எஞ்சியிருக்கும் நிலையில் மூன்றாவது முறையாக உலக சாம்பியன் ஆகும் இந்தியாவின் கனவு தகர்ந்தது.

ஸ்டேடியத்தில் இருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரம் இந்திய ரசிகர்களை மௌனமாக்க விரும்புகிறேன் என்று போட்டிக்கு முன்பு கூறிய ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய ஊடகங்களில் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் இருந்த பார்வையாளர்கள் அமைதியாக இருந்தது மட்டுமல்லாமல், '140 கோடி இந்தியர்களை அமைதியாக்கி ஆஸ்திரேலிய வீரர்கள் உலகக் கோப்பையை பறித்தார்கள்' என்று ஆஸ்திரேலிய செய்தித்தாளான டெய்லி டெலிகிராஃப் எழுதியிருக்கிறது.

'தொழில்நுட்ப ரீதியாக, ஆமதாபாத்தில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இந்தக் கோப்பை இந்தியாவுக்குச் சென்றிருக்க வேண்டும், ஆனாலும் ஆஸ்திரேலியா வென்றிருக்கிறது, என்று கூறியிருக்கிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய வீரர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து விமர்சனம்

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியர்கள் விளையாட்டுத் திறமையைக் காட்டவில்லை என்று தி கிரானிக்கிள் செய்தித்தாள் தலைப்புச் செய்தியை வெளியிட்டுள்ளது.

மேலும் அது, "காயம் மிகவும் ஆழமாக இருந்தது. ஆஸ்திரேலிய அணி கோப்பையுடன் கொண்டாடிய நேரத்தில், இந்திய வீரர்கள் மரியாதையின்றி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறார்கள்," என்று எழுதியிருந்தது.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை எந்தப் போட்டியிலும் தோல்வி அடையாத இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்றதால், இந்த வெற்றியும் சிறப்பு வாய்ந்தது என்று அந்த நாளிதழ் எழுதியிருக்கிறது.

"1 லட்சத்து 30 ஆயிரம் திறன் கொண்ட மைதானம் காலியாக இருந்த நேரத்தில் கோப்பையை ஒப்படைத்ததால், இந்த மாபெரும் சாதனையின் அளவை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் அவரது குழுவினர் உணர்ந்திருக்க மாட்டார்கள்," என்று அந்த அறிக்கை கூறுகிறது.

"மேலும், கோப்பை ஆஸ்திரேலிய அணியிடம் ஒப்படைக்கப்பட்ட சமயம், இந்திய அணி களத்தில் எங்கும் காணப்படவில்லை," என்று அந்தச் செய்தி கூறுகிறது.

"இந்திய வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டிருக்கலாம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் இது விளையாட்டின் நன்னடத்தைக்கு எதிரானது," என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் மைக்கேல் வாகன் இந்தச் செயலை வெளிப்படையாக விமர்சித்ததாக ‘தி க்ரோனிக்கிள்’ கூறுகிறது. ஆனாலும் அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தயார் செய்யப்பட்ட ஆடுகளம் இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாக ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்

'ஆடுகளம் இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது'

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் கருத்துகளை ‘ஹெரால்ட் சன்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் அவர் ஆடுகளம் தொடர்பான இந்தியாவின் வியூகம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தயார் செய்யப்பட்ட ஆடுகளம் இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாக பாண்டிங் கூறியுள்ளார்.

"கடந்த மாதம் நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதே ஆடுகளத்தில்தான் உலகக் கோப்பை இறுதிப் போட்டியும் நடந்தது," என்று அவர் கூறியதாக அந்தச் செய்தித்தாள் எழுதுகிறது.

"பாட் கம்மின்ஸும் முந்தைய நாள் ஆடுகளம் குறித்து கவலை தெரிவித்திருந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா இலக்கை சிறப்பாகத் துரத்த புல்வெளி உதவியது," என்றிருக்கிறார் அவர்.

போட்டிக்குப் பிறகு ரிக்கி பாண்டிங் கூறுகையில், “இந்த ஆடுகளம் நான் எதிர்பார்த்ததை விட மெதுவாக இருந்தது. இது எதிர்பார்த்ததை விட குறைவாகவே சுழன்றது, ஆனால் அனைவரும் ஆடுகளத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக பந்து வீசினர்,” என்றார்.

போட்டிக்குப் பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா, அணியின் தோல்விக்கு ஆடுகளத்தை காரணம் கூறவில்லை. அவர் "இரவு விளக்குகளின் கீழ் இது கொஞ்சம் சிறப்பாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் இப்போது நான் எந்த காரணத்தையும் கூற விரும்பவில்லை," என்றார்.

வர்ணனையின் போது, பாண்டிங், “உண்மையைச் சொல்வதானால், ஆடுகளம் நன்கு தயாரிக்கப்பட்டதே, இந்தியாவுக்குப் பின்விளைவை ஏற்படுத்தியிருக்கலாம்," என்றார்.

அதே சமயம் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியைவிட ஆடுகளத்தை நன்றாகப் புரிந்துகொண்டதாக இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

'நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் நிலவிய அமைதி கம்மின்ஸுக்கும் அவரது அணியினருக்கும் பொன்னான தருணம்' என்று ஒரு பத்திரிகை எழுதியிருக்கிறது

'ஆஸ்திரேலிய வீரர்களின் குரல் மட்டுமே மைதானத்தில் எதிரொலித்தது'

‘தி ஏஜ்’ பத்திரிகை, ‘90,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சத்தம் எழுப்பிய மைதானத்தில், விராட் கோலியின் விக்கெட் வேரோடு பிடுங்கப்பட்ட சத்தத்திற்குப் பிறகு, 11 ஆஸ்திரேலிய வீரர்களின் உற்சாகக் குரல்கள் மட்டுமே கேட்டன,’ என்று எழுதியிருக்கிறது.

அது மேலும், "கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், கம்மின்ஸ் தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார், பின்னர் மீதமுள்ள பணியை டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுசேன் இடையேயான 192 ரன்களின் பார்ட்னர்ஷிப் மூலம் முடித்தார்," என்று எழுதியிருக்கிறது.

“ஆடுகளத்தை விட்டு கோலி வெளியேறினாலும், ஹெட்டின் சதம் அடித்த தருணத்தில், நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் நிலவிய அமைதி கம்மின்ஸுக்கும் அவரது அணியினருக்கும் பொன்னான தருணம். இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூட கோப்பையை கம்மின்ஸிடம் ஒப்படைக்க தாமதப்படுத்தினார்,” என்று அந்தச் செய்தித்தாள் எழுதியிருக்கிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தியாவைத் தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றது தனது அணியின் மிகப்பெரிய சாதனை என்று கேப்டன் பாட் கம்மின்ஸ் கருதுகிறார்

கம்மின்ஸ் ஒரு துணிச்சலான தலைவர் என்பதை நிரூபித்தார்

‘தி சண்டே மார்னிங் ஹெரால்ட்’ பத்திரிகை, 'இந்தியாவில் உலகக் கோப்பையை வெல்வது கிரிக்கெட்டின் உச்சம்’, என்று கூறியதாக எழுதியிருக்கிறது.

இந்தியாவைத் தோற்கடித்து ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்றது தனது அணியின் மிகப்பெரிய சாதனை என்று கேப்டன் பாட் கம்மின்ஸ் கருதுவதாக அந்தச் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

கம்மின்ஸ், “இது சர்வதேச கிரிக்கெட்டின் உச்சம் என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக இந்தியாவில் இதுபோன்ற பார்வையாளர்களுக்கு முன்னால் வெற்றி பெற்றது. இது நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பான ஆண்டாகும். எங்கள் அணி ஆஷஸ் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் வென்றுள்ளது. இது வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்,” என்று அவர் கூறியதாக அச்செய்தித்தாள் கூறுகிறது.

மேலும், கம்மின்ஸைப் பாராட்டி எழுதியிருக்கும் அந்த நாளிதழ், “முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறும் அபாயத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியை, அடுத்த ஒன்பது போட்டிகளிலும் வெற்றிபெறச் செய்த கம்மின்ஸ் ஒரு துணிச்சலான மற்றும் தீர்க்கமான கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார்," என்று கூறியிருக்கிறது.

ODI விதியை மாற்றக் கோரிக்கை

ஒருநாள் கிரிக்கெட்டின் விதியை மாற்றுமாறு கோரிய மிட்செல் ஸ்டார்க்கின் கருத்தை கெய்ர்ன்ஸ் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் இரண்டு புதிய பந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை மாற்ற வேண்டும் என்று மிட்செல் ஸ்டார்க் கருதுகிறார்.

ஏனெனில் இது ஆட்டத்தை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாற்றியுள்ளது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் இந்த உலகக் கோப்பையின் எட்டு ஆட்டங்களில் சராசரியாக 43.40 மற்றும் எகானமி ரேட் 6.55-இல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது அவர்களின் சிறந்த செயல்திறன் அல்ல, 2015 மற்றும் 2019 உலகக் கோப்பைகளை விட மோசமானது."

ஸ்டார்க், தனது திறமைக்கு ஏற்றவாறு செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டதாகக் கூறினார், ஆனால் 25 ஓவர்களுக்குப் பிறகு புதிய பந்தைப் பயன்படுத்துவது ரிவர்ஸ் ஸ்விங்கை மிகவும் கடினமாக்கியது, குறிப்பாக பகலில்.

இந்த உலகக் கோப்பையில் பகலில் பந்துவீசும்போது ஸ்டார்க் பவர் பிளேயில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. ஆனால் இந்தியா மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக இரவில் பந்துவீசும்போது சிறப்பாகச் செயல்பட்டார்.

"நான் ஒரு பந்து தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறேன், இரண்டு அல்ல," என்று அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cxw1x72xepxo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்பாலை வென்ற பாரம்பரியம்: உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா தொடர்ந்து வெல்லும் ரகசியம்

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 20 நவம்பர் 2023, 02:35 GMT
    புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்

2023-ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடங்கியபோது, ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்லும் என்று யாரும் கணிக்கவில்லை. மாறாக இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்குப்பின் முன்னாள் சாம்பியன் என்ற அடிப்படையில் ஆஸ்திரேலியாவை கணக்கில் சேர்த்தனர்.

ஏனென்றால், உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாகத் தென் ஆப்பிரிக்கா பயணம் சென்று அந்நாட்டு அணியிடம் ஆஸ்திரேலியா மோசமான தோல்வியைச் சந்தித்திருந்தது. இந்தியாவுக்குப் பயணம் செய்து இந்திய அணியிடம் ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் தோற்றது.

உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதும் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணியிடமும், தென் ஆப்பிரிக்காவிடமும் தோற்றதால், ஆஸ்திரேலிய அணியின் மீதான நம்பகத்தன்மையும், முன்னாள் சாம்பியன் என்ற பெருமிதப் பார்வையும் ரசிகர்கள் மத்தியில் குறைந்தது.

அது மட்டுமல்லாமல் மேக்ஸ்வெல், மார்ஷ் உள்ளிட்ட வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டது, பல வீரர்கள் ஃபார்மின்றி இருந்தது ஆகியவை அவ்வளவுதான் ஆஸ்திரேலியா என்று ரசிகர்களைப் பேசவைத்தது.

அப்படிப்பட்ட அணி, இப்போது எப்படி உலகக் கோப்பையை வென்று சாம்பியன் ஆனது? உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா தொடர்ந்து வெல்லும் ரகசியம் என்ன?

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மறுபிரவேசம் செய்த ஆஸ்திரேலியா

நடந்து முடிந்திருக்கும் உலகக் கோப்பைத் தொடரின் 3-வது போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணி பெறத் துவங்கிய வெற்றிகள், தவறுகளைத் திருத்திக் கொண்டு ஆடிய ஆட்டங்கள் ஆகியவை மெல்ல ஆஸ்திரேலியாவின் பக்கம் கவனத்தைத் திருப்பச் செய்தன. அதிலும் டிராவிஸ் ஹெட் அணிக்குள் திரும்பியது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம்.

லீக் சுற்றுகளில்கூட ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்தைப் பிடிக்கப் போகிறதா அல்லது கடைசி இடத்தைத் தக்கவைக்கப் போகிறதா என்றெல்லாம் கிண்டலாகப் பேசப்பட்டு, 3-வது இடத்தைத்தான் பிடித்தது.

ஆனால், அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியைச் சாய்த்து ஆஸ்திரேலியா பைனலுக்கு முன்னேறியபோதுதான் ரசிகர்களுக்கு ஆஸ்திரேலிய அணி மீதான அச்சம் அதிகரித்தது.

நிழலாடிய 2015-இன் நினைவுகள்

கடந்த 2015ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின் போதும், இதேபோன்ற நிலையைத்தான் ஆஸ்திரேலியா சந்தித்தது. ஆனால், அரையிறுதிக்குப்பின் ஆஸ்திரேலியாவின் முகம் மாறியது, தங்களை சாம்பியனாக உயர்த்திக்கொள்ள ஒவ்வொரு வீரரும் முழுமையாக அர்ப்பணிப்புடன் விளையாடியது, நியூசிலாந்து அணியைத் தோற்கடித்தது நினைவைவிட்டு அகலவில்லை. ஆதலால், இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு சவாலாக ஆஸ்திரேலியா அணி மாறும் என்பதில் சந்தேமில்லாமல் இருந்தது.

அது மட்டுமல்லாமல் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி என்பதால், இறுதிப் போட்டியை எவ்வாறு அணுக வேண்டும், எவ்வாறு எதிரணிக்கு வியூகங்களை வகுக்க வேண்டும், ஒவ்வொரு வீரருக்குமான தனிப்பட்ட திட்டங்கள் என்ன என்பதை ஆஸ்திரேலிய அணி நன்றாக அறிந்திருக்கும்.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இறுதி ஆட்டத்தில் கேப்டன் கம்மின்ஸ் செயல்பட்டவிதம், அனுபவம் மிக்கவரின் செயல்பாடு போல இருந்தது

கட்டம் கட்டிய கம்மின்ஸ்

அதற்கு ஏற்றார்போல் டாஸ் வென்றவுடன் கேப்டன் கம்மின்ஸ் சற்றும் யோசிக்காமல் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி யுத்திகளைப் பயன்படுத்தி கச்சிதமாக திட்டங்களை செயல்படுத்தி 240 ரன்களுக்குள் சுருட்டினார்.

அதிலும் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடர், ஆமதாபாத்தில் 1.25 லட்சம் இந்தியர்களுக்கு மத்தியில் அந்நாட்டு அணியை வீழ்த்துவது என்பது சாதாரண விஷயமல்ல. ஆமதாபாத் ஆடுகளத்தைப்பற்றி ஆஸ்திரேலியா பெரிதாக அறிந்திருக்கவில்லை.

ஆமதாபாத் மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப்போட்டி ஆடுகளம் மெதுவான ஆடுகளம், பந்து பெரிதாக பவுன்ஸ் ஆகவில்லை, சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதா என்பதுகூடத் தெரியாது. ஆனால் இவை அனைத்தையும் தங்களின் வலிமையாக மாற்றிக்கொண்டு செயல்பட்டதுதான் ஆஸ்திரேலியா சாம்பியனாக உருவெடுக்கவும், 6-வது முறையாக பட்டம் வெல்லவும் காரணமாக அமைந்தது.

விராட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பந்துவீச்சில் ‘மும்மூர்த்திகளின்’ சக்தி

வேகப்பந்துவீச்சிலும் ஸ்டார்க், கேப்டன் கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகிய 3 பேரைத் தவிர யாருமில்லை. சுழற்பந்துவீச்சில் ஆடம் ஸம்பா மட்டுமே முழுநேரச் சுழற்பந்துவீச்சாளர், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், மார்ஷ் ஆகியோர் பகுதிநேரப் பந்துவீச்சாளர்கள். இவர்களை வைத்துக்கொண்டு ஆடுகளத்தை தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொண்டு இந்திய அணியை 240 ரன்களில் சுருட்டியதில்தான் ஆஸ்திரேலியா ஒரு சாம்பியனாக மிளிர்கிறது.

அதிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் மூவரும் அனைத்து வகையான ஆட்டங்களிலும் தவிர்க்காமல் இடம் பெறக்கூடியவர்கள், எந்த ஆட்டத்துக்கும் தங்களின் பந்துவீச்சை உடனடியாக தகவமைத்துக் கொள்ளக் கூடியவர்கள்.

டி-20 உலகக் கோப்பையில் சாம்பியனாகியபோதும், ஒருநாள் உலகக் கோப்பையில் பட்டம் வென்றபோதும், ஆஷஸ் தொடர் வெற்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி என அனைத்திலும் இந்த 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த 3 வேகப்பந்துவீச்சாளர்கள்தான் ஆஸ்திரேலிய பந்துவீச்சின் பலம்.

அனைத்துவிதமான போட்டிகளிலும் இந்த 3 பந்துவீச்சாளர்களுக்குக் கிடைத்த அனுபவம்தான் பைனலில் சிறப்பாகப் பந்துவீச முடிந்தது. பெரிதாக ஸ்விங் பந்துவீச்சு இல்லை, கட்டர்கள்கூட பெரிதாக இல்லை ஆனாலும், லைன் - லெங்த் துல்லியமாக இருந்தது, 90% பந்துகளை தவறான லெங்த்தில் வீசவில்லை, தொடர்ந்து நெருக்கடி தரும் லெங்த்தில் வீசி இந்திய பேட்டர்களை கிறங்கடித்ததுதான் ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களின் பலம்.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்திய அணியின் இந்த உலகக் கோப்பைத் தோல்விக்கு காரணமாக அமைந்தது ரோகித் சர்மாவின் கேட்சை டிராவிஸ் ஹெட் பிடித்ததுதான்

ஆட்டத்தை மாற்றிய கேட்ச்

இந்த உலகக் கோப்பைத் தொடருக்குக் கேப்டன் பொறுப்பேற்கும் முன் கம்மின்ஸுக்கு ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்த அனுபம் மிகக்குறைவு. 4 போட்டிகளில் மட்டுமே கேப்டனாக இருந்திருந்தார். ஆனால், இறுதி ஆட்டத்தில் கேப்டன் கம்மின்ஸ் செயல்பட்டவிதம், அனுபவம் மிக்கவரின் செயல்பாடு போல இருந்தது.

கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதர்ச நாயகன், தொடரின் அதிக ரன்களை எடுத்த பேட்டர் விராட் கோலி விக்கெட்டை கட்டம் கட்டி வீழ்த்தி லட்சக்கணக்கான ரசிகர்களை மவுனத்தில் ஆழ்த்தினார் கம்மின்ஸ். ஒரு கேப்டனாகவும், ஒரு பந்துவீச்சாளராகவும் கம்மின்ஸ் அந்த இடத்தில் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி சாம்பியனாகப் போகிறோம் என்பதை சொல்லாமல் உணர்த்தினார்.

ரோகித் சர்மா களத்தில் இருந்தவரை ஆஸ்திரேலிய அணியிடம் ஆட்டம் கையில் இல்லை. ஆனால், ரோஹித் சர்மா பலமுறை ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அவரைப் பந்துவீசச் செய்து கட்டம் கட்டினர்.

உலகக் கோப்பைத் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியின் பீல்டிங் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது, கிண்டலடிக்கப்பட்டது. ஆனால், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு மட்டுமல்ல போட்டிக்கே திருப்புமுனையாக அமைந்தது ரோகித் சர்மா அடித்த ஷாட்டை டிராவிஸ் ஹெட் ஓடிச் சென்று பிடித்த கேட்ச்தான்.

1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விவியன் ரிச்சார்ட்ஸுக்கு இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் பிடித்த கேட்ச்தான் திருப்புமுனையாக அமைந்து மேற்கிந்தியத்தீவுகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அதுபோல், இந்திய அணியின் இந்த உலகக் கோப்பைத் தோல்விக்கு காரணமாக அமைந்தது ரோகித் சர்மாவின் கேட்சை டிராவிஸ் ஹெட் பிடித்ததுதான். இந்த இரு கேட்சுகளும்தான், போட்டியின் முடிவுகளை எதிரணியின் கைகளில் இருந்து பறித்த தருணங்களாகும்.

இறுதிப் போட்டியில் இதுபோன்று ஒவ்வொரு தருணத்தையும் ஆஸ்திரேலிய அணி தங்களை சாம்பியன்களாக உயர்த்துவதற்கு பயன்படுத்திக்கொண்டு முன்னெடுத்துச் சென்றது என்பதில் மிகையில்லை.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆஸ்திரேலியா தன்னுடைய இயல்பான கிரிக்கெட் முறையில் இருந்து மாறவே இல்லை

பேஸ்பாலை வென்ற பாரம்பரியம்

சேஸிங்கிலும் ஆஸ்திரேலிய அணியின் நுணுக்கங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஷமி, பும்ரா இருவரும் பவர்ப்ளேயில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள், ஓவருக்கு 4.5 ரன்கள் என்று எகனாமி வைத்திருக்கிறார்கள். ஆமதாபாத் மைதானம், லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவுக் குரல், பும்ரா, ஷமியின் ஸ்விங் பந்துவீச்சு, மின்னொளி வெப்பம் என கடும் அழுத்தத்துக்கு மத்தியில் ஆஸ்திரேலிய பேட்டர்கள் விளையாடினர்.

அதனால்தான் வெளிப்புற அழுத்தத்தில் என்னசெய்வெதென்று தெரியாமல்கூட, ஸ்மித் தனக்குரிய டி.ஆர்.எஸ் வாய்ப்பை பயன்படுத்தாமல் பும்ரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். ஆஸ்திரேலிய அணியும் ஒரு கட்டத்தில் அழுத்தத்தில் இருந்தாலும், அதிலிருந்து லாபுஷேன், ஹெட் இருவரும் தங்களையும் மீட்டு, அணியையும் மீட்டுக் கரை சேர்த்தனர். பவர்ப்ளே ஓவர்கள் முடியும்போது, ஆஸ்திரேலியா தங்கள் வெற்றி இலக்கில் கால்பகுதியைக் கூட எட்டவில்லை.

உலகிற்கு கிரிக்கெட்டை போதித்த இங்கிலாந்து பாரம்பரிய கிரிக்கெட் முறையில் இருந்து விலகி ‘பேஸ்பால் கிரிக்கெட்டுக்கு’ மாறிவிட்டது. இனிமேல் இந்த பேஸ்பால் கிரிக்கெட் (அதிரடிஆட்டம்) முறைதான் டிரண்ட் என்று உள்ளூர் கிரிக்கெட்டுக்கும் அறிவுறுத்தி வருகிறது.

இந்திய அணி கூட தங்களின் பேட்டிங் முறையை ‘பேஸ்பால்’ உத்திக்கு மாற்றிவிட்டது. இந்த உலகக் கோப்பையில் பல போட்டிகளில் அந்த உத்தியை இந்திய அணி பின்பற்றியது.

ஆனால், ஆஸ்திரேலியா தன்னுடைய இயல்பான கிரிக்கெட் முறையில் இருந்து மாறவே இல்லை என்பதற்கு இறுதிப்போட்டி ஆட்டமே சிறந்த உதாரணம். ஏனென்றால், இவர்கள் இப்படித்தான் விளையாடப் பிறந்தவர்கள், பாரம்பரிய கிரிக்கெட் ரத்தத்தில் ஊறிவிட்டது என்பதை உணர்த்தினர். டிராவிஸ் ஹெட்டின் பேட்டிங் முறை நிச்சயமாக பேஸ்பால் ஆட்டமாக இருக்க முடியாது. பழைமையான, பாரம்பரிய கிரிக்கெட் மாதிரியான பொறுமையான, நிதானமான, மோசான பந்துகளை மட்டும் ஷாட்கள் அடிப்பது போன்றுதான் ஹெட்டின் பேட்டிங் இருந்தது. உலக ரசிகர்கள் பாரம்பரிய கிரிக்கெட் பேட்டிங் முறையை மறந்துவரும்போது ஹெட், லாபுஷேன் ஆட்டம் அதை அற்புதமாக நினைவூட்டியது.

இறுதிப் போட்டி என்றவுடன் ரிக்கி பாண்டிங், மாத்யூ ஹேடன், கில்கிறிஸ்ட் ஆகியோர் அதிரடி ஆட்டம் நினைவுக்கு வந்தாலும், டிராவிஸ் ஹெட்டின் பேட்டிங் பரந்த, பாரம்பரிய கிரிக்கெட் வீரர்களை நினைவூட்டும் வகையில் இருந்தது. தாக்குதல் ஆட்டம், அதிரடியான ஆட்டம் என்பது ஆஸ்திரேலிய பேட்டர்களின் டி.என்.ஏ.வில் இருந்தாலும், பாரம்பரிய பேட்டிங் முறையை மறக்கவில்லை.

நிரூபித்த லாபுஷேன்

இரண்டு மாதங்களுக்கு முன்புவரை லாபுஷேன் ஆஸ்திரேலிய அணியின் உலகக் கோப்பைத் தொடரில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் இருந்தது. டெஸ்ட் தொடருக்காக பயிற்றுவிக்கப்பட்ட லாபுஷேன் ஒருநாள் தொடருக்கு ஒத்துவருவாரா என்ற விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், டிராவிஸ் ஹெட் காயத்தால் அணியில் இல்லாத நிலையில் லாபுஷேனுக்கு இடம் கிடைத்தது. ஆனால், ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்காக தனக்கிருக்கும் பொறுப்புடன் லாபுஷேன் விளையாடினார். அதிலும் இறுதி ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட்டுக்கு அளித்த ஒத்துழைப்பு, பொறுமையாக ஆடி அரைசதம் அடித்தது ஆகியவை லாபுஷேன் அணியில் அவசியம் இருக்கவேண்டியவர் என்பதை நியாயப்படுத்தியது.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

'உலகக் கோப்பையையும் வென்றது மலையின் உச்சியில் நிற்பதைப் போன்று' உள்ளதாகக் கம்மின்ஸ் தெரிவித்தார்

‘சிறப்பான ஆட்டத்தைச் சேமித்து வைத்திருந்தோம்’

வெற்றிக்குப்பின் ஆஸ்திரேலியக் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “இந்த வெற்றிக்காகத்தான் எங்களின் சிறப்பான ஆட்டத்தைச் சேமித்து வைத்திருந்தோம் என நினைக்கிறேன். இரு பெரிய பேட்டர்கள் சேர்ந்து எங்களுக்கு வெற்றியை உரித்தாக்கியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் வயதானவர்களாக இருப்பினும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பங்களிப்பை அளித்துள்ளனர்.

குறிப்பாக லாபுஷேன் அணிக்குள் வருவதற்கு பலவிதான எதிர்ப்புகள் இருந்தன, ஆனால், தன்னுடைய இருப்பைக் கடைசி ஆட்டத்தில் லாபுஷேன் நியாயப்படுத்திவிட்டார். டிராவிஸ் ஹெட் காயத்தால் இருந்தபோது எங்களின் மருத்துவக் குழு செயல்பட்டவிதம், தேர்வாளர்கள் அளித்த ஆதரவு எங்களுக்கு பக்கபலமாக இருந்தது,” என்றார்.

மேலும், “இதனால்தான் ஹெட் விரைவில் குணமடைந்து அணிக்குள் திரும்பினார். நாங்கள் ஏறக்குறைய ஓர் ஆண்டாக வெளிநாடுகளில்தான் விளையாடி வருகிறோம். பல வெற்றிகளை தொடர்ந்து பெற்றிருக்கிறோம். இப்போது உலகக் கோப்பையையும் வென்றது மலையின் உச்சியில் நிற்பதைப் போன்று உணர்கிறேன்,” எனத் தெரிவித்தார்.

ஆமதாபாத் அரங்கில் குழுமும் லட்சக்கணக்கான ரசிகர்களையும் நிசப்தமாக்கிவிடுவேன் அதைத்தவிர எனக்கு மனநிறைவு தரக்கூடியது வேறு ஒன்றுமில்லை என்று இறுதிப்போட்டிக்கு முன்பாக கம்மின்ஸ் பேசியிருந்தார். தான் சொன்னதை கம்மின்ஸ் நிறைவேற்றிவிட்டார்.

https://www.bbc.com/tamil/articles/cy92d2g9xv1o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியான்ட‌ தோல்விக்கு ப‌ல‌ கார‌ண‌ங்க‌ள் உண்டு

முத‌லாவ‌து ப‌ந்து போடும் இந்திய‌ அணி வீர‌ர்க‌ளில் ஜ‌டேயாவை த‌விற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ளுக்கு ம‌ட்டையாய் அடிக்க‌ தெரியாது..............இதே அவுஸ்ரேலியா என்றால் ஒரு வீர‌ரை த‌விற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் ம‌ட்டையால் அடிக்கும் திற‌மை ப‌டைத்த‌வ‌ர்க‌ள்..................நாண‌ய‌த்தில் வென்று பிச்சின் த‌ன்மை தெரிந்த‌ ப‌டியால் தான் அவுஸ் க‌ப்ட‌ன் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இந்தியாவை குறைந்த‌ ர‌ன்ஸ்சுக்கை ம‌ட‌க்கின‌வை.............அவுஸ்ரேலியா அணிக்கு வாழ்த்துக்க‌ள்.............சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு இனி அவுஸ்ரேலியாவின் கையில் உல‌க‌ கோப்பை போகாது என்று யாழில் சில‌ர் க‌ணித்த‌ன‌ர் ஆனால் அத‌ற்கு பிற‌க்கு 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை இர‌ண்டு த‌ட‌வை............20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை 1முறை வென்று இருக்கின‌ம்............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அவுஸ் வெல்லுறது அவ்வளவா விருப்பமில்லைதான்! ஆனாலும் இந்தியாவை யார் வென்றாலும் ஓகே! தென்னாபிரிக்கா அல்லது நியூஸிலாந்து வென்றிருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும்!!😜

  • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, பையன்26 said:

அஸ்வின் சுழல் பந்து வீச்சாளரும் இறுதி வரிசைக்கு நல்ல மட்டையாளரும் கூட.  அவர்  குழுவில் கட்டாயம் இருந்து இருக்க வேண்டும்.
சூது இப்போட்டியில் இடம் பெற்றிருக்க வாய்ப்புண்டு என சிலர் (இந்தியர் அல்லாதோர்) பேசிக்கொள்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Eppothum Thamizhan said:

எனக்கும் அவுஸ் வெல்லுறது அவ்வளவா விருப்பமில்லைதான்! ஆனாலும் இந்தியாவை யார் வென்றாலும் ஓகே! தென்னாபிரிக்கா அல்லது நியூஸிலாந்து வென்றிருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும்!!😜

எனது நிலைப்பாடும் அது தான்.

Link to comment
Share on other sites

இந்த திரியை திறந்து தொடர்ச்சியாக செய்திகளை இணைத்த ஏராளனுக்கும், அதை உயிர்ப்புடன் வைத்திருந்து, சுவாரசியமாக்கிய பையனுக்கும் ஏனையவர்களுக்கும் நன்றி. 

மழைக்கு கூட மைதானப் பக்கம் ஒதுங்காத என்னையும் இந்த திரி எழுத வைத்து இருக்கு!

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nunavilan said:

அஸ்வின் சுழல் பந்து வீச்சாளரும் இறுதி வரிசைக்கு நல்ல மட்டையாளரும் கூட.  அவர்  குழுவில் கட்டாயம் இருந்து இருக்க வேண்டும்.
சூது இப்போட்டியில் இடம் பெற்றிருக்க வாய்ப்புண்டு என சிலர் (இந்தியர் அல்லாதோர்) பேசிக்கொள்கிறார்கள்.

கூல்டிப் ஜ‌டாவ் ஏன் தெரிவு செய்தார்க‌ள் தெரிய‌ வில்லை........சென்னையில் ந‌ட‌ந்த‌ முத‌லாவ‌து விளையாட்டில் அஸ்வினை அணியில் சேர்த்தார்க‌ள்...........மீத‌ம் உள்ள‌ அனைத்து விளையாட்டிலும் கூப்பில் உக்கார‌ வைத்தார்க‌ள்...............சூதாட்ட‌த்துக்கு வாய்ப்பில்லை அண்ணா..........இந்திய‌ர்க‌ள் ப‌ல‌ வ‌ருட‌ம் உல‌க‌ கோப்பை தூக்க‌ வில்லை இந்த‌ முறை எப்ப‌டியாவ‌து தூக்கி விட‌னும் என்ற‌ வெறியுட‌ன் இருந்தார்க‌ள் அடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் குறைந்த‌ ர‌ன்சில் அவுட் ஆன‌தால் இந்திய‌ வீர‌ர்க‌ளால் பெரிய‌ ஸ்கோர் அடிக்க‌ முடியாம‌ல் போச்சு..........ஒரு க‌தைக்கு 320ர‌ன்ஸ் இந்திய‌ வீர‌ர்க‌ள் அடிச்சு இருக்க‌னும் அவுஸ்ரேலியாவை வெறும் கையோட‌ நாட்டுக்கு அனுப்பி இருப்பிப்பின‌ம்...........எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு நேற்று அவுஸ் க‌ப்ட‌ன் ந‌ல்லா ப‌ந்து போட்டார்...........

இந்தியா வீர‌ர் சூரிய‌ குமார் ஜ‌டாவ் இந்த‌ உல‌க‌ கோப்பையில் 

பெரிசா சாதிக்க‌ வில்லை ப‌ண்டியா காய‌ப் ப‌ட்ட‌து இந்தியாவுக்கு சிறு பின்ன‌டைவு...................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பையன்26 said:

அவுஸ்ரேலியாவின் இந்த‌ வெற்றியை க‌ண்டிப்பாய் இங்லாந் நாட்ட‌வ‌ர் நியுசிலாந் நாட்ட‌வ‌ர்க‌ளும் ச‌ந்தோஷ‌த்தில் கொண்டாடுவின‌ம்.............

இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரையும் விட‌ ஜ‌பிஎல்ல‌ ராஜ‌ஸ்தானுக்கு தொட‌க்க‌ வீர‌ரா  விளையாடும் Yashasvi Jaiswal இந்த‌ உல‌க‌ கோப்பையில் தெரிவு செய்து இருக்க‌னும் அதோட‌ த‌மிழ‌க‌ வீர‌ர் அஸ்வினை அனைத்து விளையாட்டிலும் விளையாட‌ விட்டு இருக்க‌னும்..................

இது தான் எனது நிலைப்பாடாகவும் இருந்தது.ஜஸ்வாலுக்கு பயப்பிடுறாங்கள போல விட்டால் எல்லா இந்திய வீரர்களின் சாதனையகளை முறயடிப்பான் என்று.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் முடிச்சா கப்.. 4 ஆவது கெப்டனாக உலகக் கோப்பையை கைப்பற்றிய கம்மின்ஸ்

13 ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- அவுஸ்திரேலியா மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பெட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்து உலகக் கோப்பை கைப்பற்றியது.

இந்த உலகக் கோப்பையை கைப்பற்றியதன் மூலம் கல்யாணம் முடிந்த அடுத்த வருடமே உலகக் கோப்பை வென்ற 4 ஆவது கெப்டன் என்ற சாதனையை பேட் கம்மின்ஸ் படைத்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கெப்டன் ரிக்கி பாண்டிங் 2002ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் திகதி திருமணம் முடித்தார். 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றினார்.

pic.jpg

அதுபோல இந்திய அணியின் முன்னாள் கெப்டன் டோனி 2010 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார். 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையை வென்றார்.

pic-1.jpg

அவரை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கெப்டன் இயான் மார்கன் 2018ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி திருமணம் செய்து 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்றார்.

pic-2.jpg

இந்த வரிசையில் பேட் கம்மின்ஸ் இணைந்துள்ளார். இவர் 2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

pic-3.jpg

கிரிக்கெட்டில் இதுபோன்ற சுவாரஸ்மான விடயங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று.

https://thinakkural.lk/article/281824

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிராவிஸ் ஹெட்: ஒருநாள், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் கனவை தகர்த்தது எப்படி?

டிராவிஸ் ஹெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்

20 நவம்பர் 2023, 15:05 GMT
புதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்

டிராவிஸ் ஹெட்- இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் இந்தக் கால ரிக்கி பாண்டிங் என நினைவுகூரப்படும் ஒரு ஆஸ்திரேலிய வீரர்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தனது அபாரமான பேட்டிங்கால் ஆஸ்திரேலியாவுக்கு மறக்க முடியாத ஒரு வெற்றியை தந்தவர் டிராவிஸ் ஹெட். இதன் மூலம் 140 கோடி இந்தியர்களின் உலகக்கோப்பை கனவைக் கலைத்தவர் அவர்.

ஞாயிற்றுக்கிழமை ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், அவர் 120 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 137 ரன்கள் எடுத்தார். இறுதிப்போட்டியில் 'மேட்ச் ஆஃப் தி மேட்ச்' விருதையும் அவர் பெற்றார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம், ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோருக்குப் பிறகு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை டிராவிஸ் ஹெட் பெற்றார்.

விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த உலகக் கோப்பையின் முதல் நான்கு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. பின்னர் அவர் போட்டிகளில் விளையாடி, நியூசிலாந்துக்கு எதிராக சதம் அடித்து தனது பலத்தை வெளிப்படுத்தினார்.

முக்கியமான அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் வெற்றியில் இவரது பங்கு முக்கியமானது. சேஸிங்கில் 48 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அணியின் அதிகபட்ச ஸ்கோரராக ஆனார். அரையிறுதியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாகவும் இவர் தேர்வானார்.

டிராவிஸ் ஹெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஹெட் அவுட் ஆனபோது ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இன்னும் இரண்டு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அப்போதைய ஆஸி அணியின் கேப்டன் ரிக்கி பாயிண்டிங்கின் ஆட்டத்தை நினைவூட்டும் வகையில் 2023 இறுதிப் போட்டியில் டிராவிஸ் ஹெட் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2003 இல் நடந்த போட்டியில் பாயிண்டிங் 140 ரன்கள் எடுத்தார்.

ஞாயிற்றுக்கிழமை இந்தியா நிர்ணயித்த 241 ரன்கள் இலக்கை எட்ட பேட்டிங்கைத் தொடங்கிய ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்களை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆரம்பத்தில் விக்கெட் எடுத்தனர். 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஆனால், அங்கிருந்து ஹெட், மார்னஸ் லபுஷேன் 192 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்து இலக்கை நோக்கி சென்றனர். ஹெட் அவுட் ஆனபோது ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இன்னும் இரண்டு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

டிராவிஸ் ஹெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில், டிராவிஸ் ஹெட் ஓபனிங் பேட்ஸ்மேனாக அவதாரம் எடுத்தார்

மைக் ஹஸ்ஸிக்கு பதிலாக சேர்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட்

டிராவிஸ் ஹெட் டிசம்பர் 29, 1993 அன்று ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் பிறந்தார்.

ஆரம்பத்தில் இடது கை பேட்ஸ்மேனாக ஆஸ்திரேலிய உள்நாட்டுப் போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடியுளளார். வலது கை ஆஃப் ஸ்பின்னர். இவர் தேசிய அணிக்கு வந்தபோதும், ஹெட் ஒரு மிட்பீல்டர் ஒரு பேட்ஸ்மேனாகவே இருந்துள்ளார்.

மைக்கேல் ஹஸ்ஸி ஓய்வு பெற்ற பிறகு, அந்த இடத்திற்கு யாரை கொண்டு வருவது என்பதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஒரு குழப்பத்தில் இருந்தது. அந்த இடத்திற்கு பலரும் பரீட்சித்து பார்க்கப்பட்டனர். முடிவில், டிராவிஸ் ஹெட் அந்த இடத்தை பூர்த்தி செய்யும் வீரராக உருவெடுத்தார்.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு ஹெட் தேர்வு செய்யப்பட்டார். உண்மையில், 2016 டி20 உலகக் கோப்பைக்கு ஹெட் தேர்வு செய்யப்படவில்லை, ஆனால் அவர் தேர்வாளர்களின் பார்வையில் இருந்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியில் டிராவிட் ஹெட் முக்கிய இடத்தைப் பிடித்தார். மிடில் ஆர்டரில் மட்டையால் ஜொலித்தார். ஆனால் 2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில், இவர் ஓபனிங் பேட்ஸ்மேனாக அவதாரம் எடுத்தார்.

2018 சாம்பியன்ஸ் டிராபியை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்தது ஆஸ்திரேலிய அணி. ஆனால் அவர் ஒரு தொடக்க ஆட்டக்காரராக தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்தது மட்டுமல்லாமல் தனது சக பேட்ஸ்மேனான டேவிட் வார்னருடன் ஒரு சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்தார்.

இதற்குப் பிறகும், ஹெட் சில ஆண்டுகள் மிடில் ஆர்டரில் விளையாடினார். சில காலம் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஹெட் பின்தங்கியே இருந்தார்.

இதன் காரணமாக, 2019 உலகக் கோப்பைக்கு தேர்வுக்குழு அவரைக் கருத்தில் கொள்ளவில்லை. அப்போது ஷேன் மார்ஷ், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் ஃபுல் ஃபார்மில் இருந்ததால் டிராவிஸ் ஹெட் ஓரங்கட்டப்பட்டார்.

அதில் இருந்து மீண்டு வந்து அடுத்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்த டிராவிஸ் ஹெட், இறுதிப்போட்டியில் சதம் அடித்து 140 கோடி இந்தியர்களின் கவலையும் கலைத்துள்ளார்.

டிராவிஸ் ஹெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஒருநாள் போட்டிகளில் டிராவிஸ் ஹெட்டின் அதிகபட்ச ஸ்கோர் 152 ரன்கள்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியில்...

2021-23 ஆஷஸ் தொடரில் டிராவிஸ் ஹெட் 357 ரன்கள் எடுத்தார்.

இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றதில் ஹெட் முக்கிய பங்கு வகித்தார். லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 163 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் இவர் இடம் பெற்றார். ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த அற்புதமான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்திய அவர், இப்போது ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு மறக்க முடியாத வெற்றியைக் கொடுத்துள்ளார்.

டிராவிஸ் ஹெட் 63 போட்டிகளில் விளையாடி 60 இன்னிங்ஸ்களில் 2,256 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 152 ரன்கள்.

சிலிர்ப்பான ஒலிகள்: டிராவிஸ் ஹெட்

டிராவிஸ் ஹெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டிக்குப் பிறகு, டிராவிஸ் ஹெட், “இது ஒரு அருமையான நாள். இதில் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்றார்.

"வீட்டில் உட்கார்ந்து ஆட்டத்தைப் பார்ப்பதை விட விளையாடுவது நல்லது என்று நான் நினைத்தேன் (டிராவிஸ் ஹெட் விரவில் ஏற்பட்ட காயத்தால் முதல் நான்கு ஆட்டங்களை தவறவிட்டார், பின்னர் மீண்டும் அணிக்குள் வந்தார்).

இன்னிங்ஸின் போது நான் கொஞ்சம் கவலைப்பட்டேன். மார்னஸ் லாபுஷானே அசாதாரண இன்னிங்ஸ் விளையாடி அழுத்தத்தை தணித்தார். முன்னணியில் இருந்து அணியின் வெற்றிக்கு எனது பங்களிப்பை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/c72v70wjvneo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

இது தான் எனது நிலைப்பாடாகவும் இருந்தது.ஜஸ்வாலுக்கு பயப்பிடுறாங்கள போல விட்டால் எல்லா இந்திய வீரர்களின் சாதனையகளை முறயடிப்பான் என்று.

உங்க‌ளுக்கு என‌க்கு தெரியுது அண்ணா
தேர்வுக்குழு கூமுட்டைக‌ளுக்கு தெரிய‌ வில்லை.............தொட‌ங்கின‌ ஆர‌ம்ப‌  ஜ‌ந்து நாள் போட்டியில்  200ர‌ன்ஸ் அடிச்ச‌வ‌ர்............ரி20 விளையாட்டிலும் ந‌ல்ல‌ அடிச்சார் 
ஒரு நாள் விளையாட்டிலும் ந‌ல்ல‌ விளையாட்டு ந‌ட‌ந்து முடிந்த‌ ஜ‌பிஎல்ல‌ கூட‌ ராஜ‌ஸ்தான் அணி சார்வாய் அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ வீர‌ர் அதோட‌ ஜ‌பில்ல‌ ஒரு செஞ்ச‌ரி

யார் ப‌ந்து போட்டாலும் அடிக்கும் திற‌மை ப‌டைத்த‌ இள‌ம் வீர‌ர்🥰🙏..................

Edited by பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2023 at 17:54, ஈழப்பிரியன் said:

பையா இவர்கள் பூநுhல் போட்டிருக்கிறார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Eppothum Thamizhan said:

எனக்கும் அவுஸ் வெல்லுறது அவ்வளவா விருப்பமில்லைதான்! ஆனாலும் இந்தியாவை யார் வென்றாலும் ஓகே! தென்னாபிரிக்கா அல்லது நியூஸிலாந்து வென்றிருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும்!!😜

இதுவே எனது கருத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

அஸ்வின் சுழல் பந்து வீச்சாளரும் இறுதி வரிசைக்கு நல்ல மட்டையாளரும் கூட.  அவர்  குழுவில் கட்டாயம் இருந்து இருக்க வேண்டும்.

அஸ்வின் பந்து போடுவதில் மட்டுமல்ல இக்கட்டான நேரங்களில் துடுப்பாட்டத்திலும் கைகொடுக்கக் கூடியவர். இது 50 ஓவர்  போட்டி  இப்படியான போட்டிகளில் சகலதுறை ஆட்டக்காரர்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும். அப்படி இருந்தால்தான் விக்கட் வீழந்தாலும் பின்னல் வரும் வீரர்களுக்கு போட்டியின் முடிவை மாற்நறும் வாய்ப்பு உண்டு. ஆப்கானிஜ்தான் போட்டி இதற்கு சிறந்த உதாரணம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

அஸ்வினை இன்னும் இர‌ண்டு வருட‌த்தில் அணியில் இருந்து நீக்கி போடுவின‌ம் வ‌ய‌தை காட்டி.........ஆனால் இன்னொரு த‌மிழ‌க‌ வீர‌ர் ந‌ல்லா சுழ‌ல் ப‌ந்தும் போடுவார் நிலைத்து நின்றும் ஆட‌க் கூடிய‌ வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ரை உல‌க‌ கோப்பையில் சேர்த்து இருக்க‌னும்............ஜ‌டேயா அவுட் ஆனால் பின்ன‌னி இந்தியா ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு ம‌ட்டையால் அடிக்க‌ தெரியாது..........

இங்லாந்

அவுஸ்ரேலியா

நியுசிலாந்

வெஸ்சின்டீஸ்

தென் ஆபிரிக்கா.........இந்த‌ ஜ‌ந்து நாட்டு வீர‌ர்க‌ளும் ப‌ந்தும் போடுவின‌ம் க‌ட‌சி க‌ட்ட‌த்தில் அடிச்சு ஆடக் கூடிய‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் ம‌ற்ற‌ அணிக‌ள் அப்ப‌டியும் இப்ப‌டியும் தான்............அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் சில‌து அடிப்பின‌ம் கூட‌ வ‌ந்த‌ கையோட‌ மைதான‌த்தை விட்டு வெளியில் போவின‌ம்😁...............

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட் கம்மின்ஸ்: கேலி செய்தவர்களை தலைகுனிய வைத்த ஆஸ்திரேலிய கேப்டன்

பாட் கம்மின்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

“ ஆமதாபாத் மைதானத்துக்கு வரும் லட்சக்கணக்கான ரசிகர்களை மவுனமாக்குவதே எனக்கு மனநிறைவைத் தரும்”

இந்திய அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு முதல் நாள் ஆஸ்திரேலியக் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்த வார்த்தையைப் பேசினார்.

கம்மின்ஸ் பேசிய இந்த வார்த்தைகளை ஆதிக்க மனநிலையோடு, ஒப்பிடுவது முடியாது. கம்மின்ஸ் வழக்கமான ஆஸ்திரேலிய கேப்டன் இல்லை.

அது ஏன் என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

எதிரணியின் மூளையோடு விளையாடும் கேப்டன்கள்

கடந்த 1990களில் இருந்து 2000 ஆண்டுகள் வரை ஆஸ்திரேலிய அணியில் உருவாகிய கேப்டன்களான மார்க் டெய்லர், ஆலன் பார்டர், ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகியோர் எதிரணி வீரர்களோடு மட்டுமல்லாது அவர்களின் மனநிலையோடும் சேர்ந்து விளையாடக்கூடியவர்கள்.

ஒரு போட்டியில் குறிப்பிட்ட இரு வீரர்கள், அல்லது ஒரு பேட்டர் நல்ல ஃபார்மில் இருந்தால் அவரிடம் வம்பிழுப்பது, சூடான வார்த்தைகளை விடுவது என அவர்களின் கவனத்தை திசைதிருப்பும் வேலையில் ஈடுபடும் வழக்கமான ஆஸ்திரேலிய கேப்டன்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டனர்.

கம்மின்ஸ்: வழக்கமான ஆஸ்திரேலிய கேப்டன் இல்லை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கம்மின்ஸ் எப்படி மாறுபட்ட கேப்டன்?

ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் அரிதான கேப்டனாகக் கிடைத்தவர் பாட் கம்மின்ஸ். “எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்து, கவனத்தை திருப்பி வெற்றி பெறுவதில் நேரத்தை வீணாக்க எனக்கு விருப்பமில்லை. தரமற்ற விஷயங்களை விரும்பவில்லை” என்று ஒருமுறை வெளிப்படையாகவே ஊடகங்களுக்கு பேட்டியளித்து வியக்க வைத்தவர் பாட் கம்மின்ஸ்.

இதுவரை கிரிக்கெட் வட்டாரங்களில் பாட் கம்மின்ஸ் மீது எந்தவிதமான ஸ்ட்லெட்ஜிங் புகாரும் இருந்தது இல்லை என்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

இறுதி ஆட்டத்தில்கூட, முதல் 15 ஓவர்கள் பாட் கம்மின்ஸ் வழக்கமான கேப்டன் பணியை மட்டும்தான் செய்து வந்தார். விராட் கோலி, ராகுல் கூட்டணி பிரி்த்து கோலியை இன்சைட் எட்ஜ் மூலம் ஆட்டமிழக்கச் செய்தபோதுதான் கம்மின்ஸ் தன்னுடைய மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்று கைகளை உயர்த்தி பம்பிங் செய்தார். அதுவரை இறுக்கமான முகத்துடன், பலவிதமான யோசனைகளுடனே இருந்தார்.

கம்மின்ஸ்: வழக்கமான ஆஸ்திரேலிய கேப்டன் இல்லை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாண்டிங் -கம்மின்ஸ்

2007ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியின்போது ஆஸ்திரேலிய கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியில், “ எங்களுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா மோதுகிறது. ஜேக்ஸ் காலிஸ் சிறந்த வீரர்தான், நல்ல ரெக்கார்ட் வைத்துள்ளார், திறமையான ஆல்ரவுண்டர்தான். ஆனால் எங்களுக்கு எதிராக அவரால் ஒன்றும் செய்ய முடியாது. எங்களின் திட்டம் சரியாக இருந்தால் காலிஸை வீழ்த்திவிடுவோம்” என்று பேசினார். பாண்டிங்கின் இந்தப் பேச்சில் எதிரணி வீரர்களை குறைத்துமதிப்பிடும் போக்கு இருந்ததாக மதிப்பிடப்பட்டது.

ஆனால், இப்போது கேப்டனாக இருக்கும் கம்மின்ஸ் இந்திய அணி குறித்தோ, வீரர்கள் குறித்தோ இதுவரை ஒரு வார்த்தைகூட அவதூறாக, குறைத்துமதிப்பிட்டோ பேசவில்லை. இந்திய வீரர்கள் ஆட்டமிழந்தபோது அவர்களை நோக்கி எந்தவிதமான சீண்டலும் இன்றி சிறிய புன்முறுவலுடன் கம்மின்ஸ் கடந்தார்.

தற்செயலாக கிடைத்த கேப்டன் பதவி

ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக கம்மின்ஸ் நியமிக்கப்பட்டதே ஒரு விபத்துதான். கேப்டனாக இருந்த டிம் பெய்ன் ஒரு சர்ச்சையில் சிக்கியதால், அந்தப் பொறுப்பை கம்மின்ஸ் ஏற்றார். கம்மின்ஸ் தலைமையில் ஆஷஸ் தொடரை அற்புதமாக வென்று திரும்பிய ஆஸ்திரேலிய அணியை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்று அந்தப் பட்டத்தையும் கம்மின்ஸ் வென்று கொடுத்தார்.

கடந்த 65 ஆண்டுகளில் ரே லிண்ட்வாலுக்குப்பின் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் ஆஸ்திரிலேய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது இதுதான் முதல்முறை.

கம்மின்ஸ்: வழக்கமான ஆஸ்திரேலிய கேப்டன் இல்லை

பட மூலாதாரம்,GETTY IMAGES

விமர்சனம், கேலிப் பேச்சு

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக கம்மினிஸ் நியமிக்கப்பட்டபோது அவர் அதற்கு முன் 4 ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே கேப்டனாக இருந்திருந்தார். எந்தவிதமான அனுபவமும் இல்லாத ஒரு வீரரை முக்கியத்துவம் வாய்ந்த உலகக் கோப்பைத் தொடருக்கு ஆஸ்திரேலிய வாரியம் கேப்டனாக நியமித்துள்ளது என்று விமர்சனங்களும், கேலிப்பேச்சுகளும் வந்தன.

அதற்கு ஏற்றாற்போல், லீக் போட்டிகளில் முதல் இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி தோற்றது கம்மின்ஸ் கேப்டன்ஷிப்புக்கு கடும் நெருக்கடிகளை அளித்தது. ஆனால், அதன்பின் ஒவ்வொரு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் சரியான திட்டமிடலை களத்தில் செயல்படுத்தி வெற்றி தேடித்தந்த பெருமை கம்மின்ஸை சாரும்.

இந்த உலக்க கோப்பைத் தொடரில் 11 ஆட்டங்களில் இறுதிப்போட்டித் தவிர கம்மின்ஸ் பெரிதாக எந்தப் போட்டியிலும் சிறப்பாகப் பந்துவீசவில்லை. இறுதிப் போட்டியில் கம்மின்ஸ் வீசிய ஒவ்வொரு ஓவரும் லைன் லெங்த்தில் இருந்து மாறவில்லை. ஒரு கேப்டனாகவும், பந்துவீச்சாளராகவும் பொறுப்புடன் செயல்பட்டு மற்ற பந்துவீச்சாளர்களையும் கம்மின்ஸ் செயல்பட வைத்தார்.

கம்மின்ஸ்: வழக்கமான ஆஸ்திரேலிய கேப்டன் இல்லை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டம் கட்டிய கம்மின்ஸ்

இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆஸ்திரேலிய அணியினர் தனித்தனியாக ஸ்கெட்ச் அமைத்தனர் எனக் கூறப்படுகிறது. ரோஹித் சர்மா பலவீனம் என்ன, அவரை எவ்வாறு ஆட்டமிழக்கச் செய்வது, கோலியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்துவது எப்படி, ராகுலுக்கு நெருக்கடி அளிப்பது என ஒவ்வொருவருக்கும் தனித்தனி திட்டத்தை வகுத்திருந்தனர்.

அந்த திட்டத்தை வகுப்பது மட்டுமல்லாமல் அதை களத்தில் வெற்றிகரமாக செயல்படுத்த தெரிந்த கேப்டன் இருப்பது அவசியம். அந்தப் பணியை நேற்று கம்மின்ஸ் மிகுந்த கச்சிதமாகச் செய்தார். ரோஹித் சர்மாவை பெரிய ஷாட்களை அடிக்கவைத்து அவருக்கான வலையில் அவரை சிக்கவைத்தனர்.

விராட் கோலி பவுண்டரி அடிக்கும் திசையில் கட்டுக்கோப்பான கூடுதல் பீல்டர்களை நிறுத்தி அவரை திணறவைத்து, பொறுமையிழந்து ஆட்டமிழக்க வைத்தனர். இதுபோன்று ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி பிளான் அமைத்திருந்தனர்.

முதல் 10 ஓவர்கள் வேண்டுமானால் இந்திய அணியின் பக்கம் ஆட்டம் சென்றிருக்கும். ஆனால், மீதமுள்ள 40 ஓவர்களும் ஆஸ்திரேலிய கட்டுப்பாட்டில்தான் ஆட்டம் இருந்தது.

கம்மின்ஸ்: வழக்கமான ஆஸ்திரேலிய கேப்டன் இல்லை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்டிங்கிலும் அசத்திய கம்மின்ஸ்

பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் தேவைப்படும் நேரங்களில் பொறுப்புடன் ஆடக் கூடியவர் கம்மின்ஸ் என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின்போது முதல் டெஸ்ட் போட்டியில் 281 ரன்கள் வெற்றி இலக்காக இருந்தது. 8 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 221 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது களமிறங்கிய கேப்டன் கம்மின்ஸ் 44ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்ஹடே மைதானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை தொடரவைக்க ஸ்ட்ரைக்கை அளித்துவிட்டு கம்மின்ஸ் 68 பந்துகளில் 12 ரன்களுடன் அவருக்கு ஒத்துழைத்து பேட் செய்தார். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தோற்றிருந்தால் அரையிறுதி வருவதே சிக்கலாக மாறியிருக்கும். ஒரு கேப்டனாக இருந்து அணியின் வெற்றிக்கு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் தேவைப்படும் அம்சங்களை கம்மின்ஸ் வழங்கியுள்ளார்.

கம்மின்ஸ்: வழக்கமான ஆஸ்திரேலிய கேப்டன் இல்லை

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறைந்த வயதில் ஆஸ்திரேலிய அணியில் இடம்

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் 2011ம் ஆண்டு 18 வயதிலேயே கம்மின்ஸ் இடம் பெற்றார். சிறுவயதிலேயே கதவில் சிக்கி தனது வலதுகை நடுவிரலின் பாதியை இழந்தவர் கம்மின்ஸ். வலது கை பந்துவீச்சாளரான அவர், இந்தக் குறைபாட்டுடன், விடாமுயற்சியால் உலகளவில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக ஜொலித்து வருகிறார்.

ரியான் ஹாரிஸ் ஓய்வுபெற்றபின் அவரின் இடத்தை நிரப்ப மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் தேவைப்பட்டபோது, கம்மின்ஸ் அந்த இடத்தை நிரப்ப வந்தார். ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்குப்பின் 2017ம் ஆண்டு மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்குள் இடம் பெற்ற திடமான நம்பிக்கை கொண்டவர்.

கம்மின்ஸ்: வழக்கமான ஆஸ்திரேலிய கேப்டன் இல்லை

பட மூலாதாரம்,GETTY IMAGES

வேறுபட்டுத் தெரிந்த கேப்டன்

கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக வந்தது முதல் இதற்கு முன் இருந்த மற்ற கேப்டன்களில் இருந்து தன்னை வேறுபடுத்தி செயல்பட்டார். மற்ற கேப்டன்களான ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங், கிளார்க், டிம் பெய்ன் போல் கம்மின்ஸ் தன் முகத்தை சிடுசிடுவென களத்தில் வைத்திருக்கவில்லை.

எப்போதும் புன்னகையுடன், அமைதியான முகத்துடன், சகவீரர்களை அனுசரித்துச் செல்லும் போக்கை கம்மின்ஸ் கடைபிடித்தார். பந்துவீச்சாளர்களுக்கு முழுச் சுதந்திரம் அளித்து அவர்களின் நோக்கத்தின்படி பீல்டிங்கை மாற்றி அமைத்து செயல்பட்டார்

கம்மின்ஸ் கேப்டன்சியைப் பார்த்து, அவர் விளையாடிய பென்ரித் மவுன்டைன்ஸ் கிளப் பயிற்சியாளர் மைக்கேல் ஹோலோகன் கூறுகையில் “ கம்மின்ஸ் புன்னகைதான் எவ்வளவு பெரியது, அழகானது. அவர் தனது புன்னகையால் அனைவரையும் வசீகரித்து விடுவார் .இதுதான் அவரை சாம்பியனாக வைத்திருக்கிறது” என பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

மைதானத்தில் எப்போதாவதுதான் உணர்ச்சிவசப்பட்டு சத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார், மற்ற நேரங்களில் அவரின் புன்னகை மட்டுமே அனைத்துக்கும் பதில் அளிக்கும். எதிரணி வீரர்களிடம் வாக்குவாதத்தை, சூடான கருத்து மோதல்களை, எதிரணி பேட்ஸ்மேன்களை ஸ்லெட்ஜிங் செய்வதை விரும்பாதவர் கம்மின்ஸ் என்பதை மைதானத்திலேயே பார்க்க முடியும்.

கம்மின்ஸ்: வழக்கமான ஆஸ்திரேலிய கேப்டன் இல்லை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஸ்லாமிய வீரருக்காக மது விருந்தை தவிர்த்தவர்

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் தன்னுடைய சக வீரர்கள் மீது பெரும்பாலும் குறைகூறாமல் அவர்களுக்கு ஆதரவாகவே கம்மின்ஸ் கருத்துக்களை கூறக்கூடியவர். தோல்விக்கு கேப்டனாக நான் பொறுப்பேற்கிறேன் என்று சொல்லும் கம்மினிஸ் தோல்விக்கான பழியை சகவீரர்கள் மீது சுமத்துவதை விரும்பாதவர்.

சக வீரர்களின் உணர்வுகளையும் கம்மின்ஸ் மதிக்கக்கூடியவர். ஆஸ்திரேலிய அணியில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த உஸ்மான் கவாஜா இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணியினர் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சாம்ப்பைன் மது விருந்து அளிப்பார்கள்.

ஆனால், இஸ்லாம் மதப்படி மது அருந்துவது தடை செய்யப்பட்டது என்பதால், அந்த விருந்துகளில் கவாஜா பங்கேற்காமல் இருந்தார். இதைக் கவனித்த கேப்டன் கம்மின்ஸ், சகவீரர்களிடம் இதை எடுத்துக்கூறி, கவாஜாவுக்காக, சாம்பைன் மது விருந்துக் கொண்டாட்டத்தை நடத்தாமல் தவிர்த்தார்.

கம்மின்ஸும், சக வீரர்களும் தனக்காக சாம்பைன் கொண்டாட்டத்தை நடத்தவில்லை என்ற செய்தியை கவாஜாவும் மெய்சிலிர்க்கப் பேசினார். கேப்டன் கம்மின்ஸ் சகவீரர்களின் உணர்வுகளை மதிக்கும் இந்த செயல்பாடு வீரர்கள் மத்தியில் பெருத்த மரியாதையை ஏற்படுத்தியது.

இந்தியாவுக்கு கொரோனா நிதியுதவி அளித்தவர்

இந்தியாவில் கொரோனா கடுமையாகத் தாக்கியபோது, ஆக்சிஜன் தேவைக்காக 50 ஆயிரம் டாலர் நிதியுதவி அளித்தவர் பாட் கம்மின்ஸ்.

கம்மின்ஸ்: வழக்கமான ஆஸ்திரேலிய கேப்டன் இல்லை

பட மூலாதாரம்,EMPICS

கேப்டன் திறமையை நிரூபித்துள்ளார்

கம்மின்ஸ் கேப்டன்சி குறித்து விளையாட்டுத்துறை மூத்த பத்திரிகையாளர் முத்துக் குமார் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறுகையி்ல் “அனுபவமில்லாத கேப்டனாகத்தான் உலகக் கோப்பைக்குள் கம்மின்ஸ் வந்தார். உலகக் கோப்பைத்தொடருக்கு முன் தென் ஆப்பிரி்க்காவிடம் தோல்வி, இந்திய அணியிடம் தோல்வி என நெருக்கடி இருந்தது. இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்று கொடுத்தபோது கம்மின்ஸ் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார். அவருக்குள் கேப்டன் திறமை இருப்பது அப்போதுதான் தெரிந்தது. கம்மின்ஸ் திறமை இந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தனித்தன்மையுடன் வெளிப்பட்டது. இந்திய அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான வியூகத்தை கம்மின்ஸ் வகுத்தார். வியூகம் வகுப்பது முக்கியமில்லை அதை களத்தில் கச்சிதமாக செயல்படுத்தி கோப்பையை வென்று கொடுத்தபோது கம்மின்ஸ் சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார்.” என்று கூறினார்.

7 முக்கிய வீரர்கள் பக்கபலம்

“உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திய இதற்கு முந்தைய கேப்டன்களான ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாஹ், டெய்லர் ஆகியோர் அனுபவம் நிறைந்தவர்கள். ஆனால், அனுபவம் குறைந்த ஒருவர் அணியை வழிநடத்தி, கோப்பையை வென்று கொடுத்தது கம்மின்ஸ் தலைமை மட்டும்தான்."

"கம்மின்ஸ் தலைமை மட்டும் காரணமல்ல, ஆஸ்திரேலிய அணியில் 7 வீரர்கள் கடந்த 2015 உலகக் கோப்பைத் தொடரில் இருந்து விளையாடி வருகிறார்கள். அனுபவம் மிக்க வீரர்கள் கம்மின்ஸுக்கு பக்கபலமாக இருந்ததும், கோப்பையை வெல்ல முக்கியக் காரணம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கம்மின்ஸ்: வழக்கமான ஆஸ்திரேலிய கேப்டன் இல்லை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐபிஎல் முக்கியக் காரணம்

இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்றாற்போல் ஆஸ்திரேலிய வீரர்கள் எளிதில் பழக்கப்பட்டுவிட்டதற்கு ஐபிஎல் காரணமா என்பதற்கு முத்துக் குமார் வளிக்கம் அளிக்கையில் “ஆஸ்திரேலிய வீரர்கள் துணைக் கண்டத்தில் சிறப்பாக விளையாடுவதற்கு ஐபிஎல் டி20 லீக் முக்கியக் காரணம். ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய ஆடுகளங்கள் குறித்து நன்கு அறிந்து கொண்டதால் எளிதாக பழகிவிட்டனர். இது உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்வதற்கு முக்கியக் காரணம்” எனத் தெரிவித்தார்

"ஆதிக்க மனப்போக்கு அல்ல"

ஒரு லட்சம் ரசிகர்களை மவுனமாக்குவேன் என்று கம்மின்ஸ் பேசிய பேச்சு ஆதிக்க மனப்போக்கு இல்லை என்று முத்துக் குமார் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் “கம்மின்ஸ் பேசியதன் உள்ளர்த்ததை நாம் தவறாக எடுக்கக்கூடாது. அது ஆதிக்கமனப்போக்கு அல்ல. ஆஸ்திரேலியா இயல்பாகவே விளையாட்டு சார்ந்த நாடு. அங்கிருக்கும் வீரர்கள் எதிரணியினரை இதுபோன்றுதான் இயல்பாகவே பேசுவார்கள். இது ஆதிக்க மனப்போக்கு என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. இது முழுமையான ஸ்போர்ட்மேன்ஷிப், ஆஸ்திரேலியர்களின் மனநிலையை கம்மின்ஸ் வெளிப்படுத்தியுள்ளார். மற்றவகையில் உள்நோக்கம் கொண்டதாக நான் பார்க்கவில்லை” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cldp16w9qqzo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பையன்26 said:
15 hours ago, பையன்26 said:

இந்தியா வீர‌ர் சூரிய‌ குமார் ஜ‌டாவ் இந்த‌ உல‌க‌ கோப்பையில் 

பெரிசா சாதிக்க‌ வில்லை ப‌ண்டியா காய‌ப் ப‌ட்ட‌து இந்தியாவுக்கு சிறு பின்ன‌டைவு...................

பையா, Hardik Pandiya காயப்பட்டதால்தான் Shami உள்ளே வர முடிந்தது! Suryakumar இற்கு பதிலாக Ashwin ஆடியிருக்க வேண்டும். அதுவும் அவுஸின் ஆரம்ப வீரர்கள் இருவரும் இடதுகை ஆட்டக்கார்கள்!!

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மலேசியாவில் இருந்து நாட்டுக்கு வருகை வந்த 52 வயதுடைய இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு வருடத்திற்கு முன்பு பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடம் இருந்து 180 கோடி ரூபாய்  பணமோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தார். இந்நிலையில், இன்றைய தினம் மலேசியாவில் இருந்து நாட்டுக்கு வருகை வருகை தந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சந்தேகநபரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198150
    • நம்மட பொஸ் என்னை தனியா கடை வழிய விடுவதில்லை , தான் சொல்லாத கண்ட கண்ட சாமான்களை வாங்கி வந்து விடுவேன் எண்டு . நேற்று என்னை பால் பாண் வாங்க சொல்ல நான் கேட்டனான் , நீர் வரேல்லையோ எண்டு . என்ன இந்த சாரியோட வூலிசிற்குள்ள வரவோ . அது சரி வராது என்று ஆள் ஜகா வாங்கி விட்டது . அருமையாக கிடைக்கிற சந்தர்ப்பம் என்ற பரபரப்பில் , குறு பார்வைகளைப் பற்றி நான் யோசிக்கவேயில்லை , ஆள் மனம் மாறேக்கு    முன்னர் போய் வந்து விடுவோம் எண்டு . செக்கவுட் பெண்மணியின் வழமைக்கு மாறான கவனிப்பு ஒரு கிகுளுப்பாக தான் இருந்தது . ம்ம்ம்  .. சூரன் போர் வருடத்தில் ஒரு தடவை தானே வரும் .. 
    • நீங்கள், அந்தக் கடைக்குள் போக முதல்… மக்கள் இப்படி “குறுகுறு” என்று பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லையா. 😂 வெளியே வரும் போது.. உங்கள் மனநிலை எப்படி இருந்தது. 🤣
    • கந்தையா அண்ணை…. ஊகங்களாக வரும் செய்திகளுக்கு எல்லாம், பதில் சொல்லி மினைக்கெடுவது சரியாக இராது. ஆனால்… இந்தியர்கள் மட்டுமல்ல பொதுவாக ஆசியர்கள் போகின்ற நாடுகளில் எல்லாம் அங்குள்ள மக்களுக்கு தமது கலாச்சாரத்தை காட்டுகின்றோம் என்ற போர்வையில்…  எரிச்சலூட்டும் நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. ஆபிரிக்கர்கள் கூட இந்த அளவுக்கு மோசமாக நடப்பது இல்லை. 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.