Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் செனட்டரும், வடக்குக் கரொலினாவின் 13 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவருமான வைலி நிக்கெல் முள்ளிவாய்க்கால் நினைவுநாளன்று தமிழினக் கொலையினை ஏற்றுக்கொண்டு தீர்மானம் ஒன்றினை இன்னும் சில செனட்டர்களுடன் இணைந்து நிறைவேற்றியிருக்கிறார்.

அமெரிக்காவில் வாழும் தமிழ்த் தேசியவாதிகள் சிலருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் வைலி நிக்கெல், தனது சகாக்களுடன் இணைந்து தமிழினக் கொலைபற்றிய விளிப்புணர்வை அமெரிக்காவில் ஏற்படுத்தவும், போர்க்குற்ற விசாரணைகள் குறித்த முயற்சிகளை முன்னோக்கித் தள்ளுவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கு தான் உதவ விரும்புவதாகவும் கூறியிருப்பதாக தெரியவருகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவுநாளன்று அவர் ஆற்றிய உரையினையும் அதன் தமிழாக்கத்தினையும் கீழே பார்க்கலாம். 

"இந்த நாளில், மிகுந்த வேதனையுடன், தமது இழந்த உறவுகளுக்காக இரங்கும் தமிழர்களுடன் இணைந்து எனது இரங்கலினைத்  தெரிவிப்பதில் நான் பெருமையடைகிறேன். தமிழ் இனக்கொலை நினைவு நாள், முக்கியமான ஒரு நாள், ஏனென்றால், அது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமான நிகழ்வாக அமைவதோடு, சமாதானத்திற்காகவும், நீதிக்ககவும், மனித உரிமைகளுக்காகவும் பாடுபடும் பலருக்கும் முக்கியமான நாளாகக் காணப்படுகிறது. அமெரிக்காவில் தெரிவுசெய்யப்பட்ட செனட்டர்களில் தமிழ் இனக்கொலையினை வெளிப்படையாக ஏற்றுக்கொண்ட முதலாவது சட்டவாளர் என்பதிலும், இன்று வெளியிடப்பட்ட தமிழினக் கொலை தீர்மானத்தின் இணை அணுசரணையாளர் என்கிற ரீதியிலும் மிகுந்த பெருமையடைகிறேன். தமிழ் மக்கள் அனுபவித்த அவலங்களையும், வலிகளையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இனக்கொலையில் உயிர்தப்பியவர்களின் குரல்கள் வெளியே கேட்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். தமிழினக்கொலை தொடர்பான புரிதலை மக்களிடையே பரப்புவதற்கு அயராது உழைத்துவரும் அமெரிக்கத் தமிழர்களின் பணியினை, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்விற்காக அவர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளையும் நான் மெச்சுகிறேன். சமாதானத்திற்காகவும், நீதிக்காகவும் அவர்கள் மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் போற்றுதற்குரியன. நாம் தமிழினக் கொலையினை நினைவுகூரும் இந்த நாளில், கொல்லப்பட்ட உயிர்களையும் சிதைக்கப்பட்ட குடும்பங்களையும் நாம் நினைவுகூர்வோம்".

"இந்தநாள், நாம் அனைவரும் அநீதிக்கெதிராக ஒன்றாக எழுந்துநிற்கும் பொறுப்பினை எமக்குத் தந்திருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்வதோடு, அனைவரும் அமைதியாகவும், சுதந்திரமாகவும், சமமாகவும், சுயகெளரவத்துடனும் வாழக்கூடிய உலகினை உருவாக்குவோம் என்று சபதமெடுப்போம்".

"தமிழ் மக்கள் எதிர்காலத்தில் அமைதியாக, நிம்மதியாக வாழ்வதற்கு முற்றான தகுதியுடையவர்கள். அவர்கள் தமது உரிமைகளை முற்றாகப் பெற்று வாழக்கூடிய சூழ்நிலையினை அந்த எதிர்காலம் நிச்சயம் உருவாக்கவேண்டும். ஜனநாயக ரீதியில் தமிழர்களால் முன்வைக்கப்படும் குரல்களும் கோரிக்கைகளும் நிச்சயம் செவிமடுக்கப்பட வேண்டும்". 

"இந்த தமிழினக் கொலை நினைவு நாளில், நாம் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்கிறோம், அவர்களுக்காக இரங்குகிறோம்.  தமிழர்களுக்கான நீதியினைப் பெற்றுக்கொடுக்க நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் நான் உங்களோடு தோளுடன் தோள் நின்று எனது ஆதரவினை நல்குவேன் என்று இத்தாழ் உறுதியளிக்கிறேன்"

வைலி நிக்கெல், அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர்

  • Like 3
  • Thanks 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தீர்மானத்தின் ஆங்கில மூலம் , அமெரிக்க காங்கிரஸ் இணையத்திலிருந்து.

https://www.congress.gov/bill/118th-congress/house-resolution/427/text

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ஒரு நல்ல முதல்படி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இது நிறைவேற்றப் பட்ட தீர்மானமெனச் சொல்வது சரியான தகவல் அல்ல.

1. ஆறு நீலக்கட்சிப் பிரதிநிதிகளும், ஒரு சிவப்புக் கட்சிப் பிரதிநிதியும் சேர்ந்து இதைப் பிரநிதிகள் (House of Representative) சபையில்  சமர்ப்பித்திருக்கிறார்கள். தற்போது இது பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக் குழுவிடம் (Foreign Relations Cmte) சமர்ப்பிக்கப் பட்டிருக்கிறது.

2. அந்தக்  குழுவில் இத்தீர்மானம் வாக்களிப்பில் வெல்ல வேண்டும். வெல்வது சந்தேகம், ஏனெனில் சிவப்புக் கட்சி பெரும்பான்மை கொண்ட குழு அது - சிவப்புக் கட்சியின் கொள்கைகள் வெளிநாடுகளின் இது போன்ற விடயங்களில் தலையிடுவதைக் குறைக்க வேண்டும் என்பது தான்.

3. அப்படியே குழுவில் ஏதாவது காரணங்களால் வென்றால் முழு பிரதிநிதிகள் சபையிடம் அனுப்பப் பட்டு, அங்கேயும் வாக்கெடுப்பில் வெல்ல வேண்டும்.  அதன் பின்னர் தான் இது பிரதிநிதிகள் சபைத் (House Resolution) தீர்மானமாக மேல் சபைக்கு (Senate) அனுப்பப் படும்.

4. மேல் சபை இதை மிக மெதுவாக ஆற அமர ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளும், அல்லது அப்படியே கிடப்பில் போட்டு விடவும் கூடும்.

எனவே, முதல் படி, ஆனால் இப்படிச் சில தடவைகள் "முதல் படிகள்" நடந்திருக்கின்றன - எதுவும் முன் நகரவில்லை! 

  • Like 2
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியான அறிக்கைகளை 77களிலையே பார்த்து விட்டோம்.

இந்தியாவை மீறி எந்தவொரு மேற்குலக நாடுகளும் இலங்கையில் கை வைக்கமுடியாது என்பதை முள்ளிவாய்க்கால் அழிவுவுகளிலேயே பார்த்தும் திருந்தவில்லையென்றால்.......
ஓம்  சாந்தி.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ரஞ்சித் said:

தகவலுக்கு நன்றி.

தீர்மானம் நிறைவேறுதோ இல்லையோ பிரேரணை கொண்டு வந்ததே மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது.

4 hours ago, Justin said:

இது ஒரு நல்ல முதல்படி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இது நிறைவேற்றப் பட்ட தீர்மானமெனச் சொல்வது சரியான தகவல் அல்ல.

1. ஆறு நீலக்கட்சிப் பிரதிநிதிகளும், ஒரு சிவப்புக் கட்சிப் பிரதிநிதியும் சேர்ந்து இதைப் பிரநிதிகள் (House of Representative) சபையில்  சமர்ப்பித்திருக்கிறார்கள். தற்போது இது பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக் குழுவிடம் (Foreign Relations Cmte) சமர்ப்பிக்கப் பட்டிருக்கிறது.

2. அந்தக்  குழுவில் இத்தீர்மானம் வாக்களிப்பில் வெல்ல வேண்டும். வெல்வது சந்தேகம், ஏனெனில் சிவப்புக் கட்சி பெரும்பான்மை கொண்ட குழு அது - சிவப்புக் கட்சியின் கொள்கைகள் வெளிநாடுகளின் இது போன்ற விடயங்களில் தலையிடுவதைக் குறைக்க வேண்டும் என்பது தான்.

3. அப்படியே குழுவில் ஏதாவது காரணங்களால் வென்றால் முழு பிரதிநிதிகள் சபையிடம் அனுப்பப் பட்டு, அங்கேயும் வாக்கெடுப்பில் வெல்ல வேண்டும்.  அதன் பின்னர் தான் இது பிரதிநிதிகள் சபைத் (House Resolution) தீர்மானமாக மேல் சபைக்கு (Senate) அனுப்பப் படும்.

4. மேல் சபை இதை மிக மெதுவாக ஆற அமர ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளும், அல்லது அப்படியே கிடப்பில் போட்டு விடவும் கூடும்.

எனவே, முதல் படி, ஆனால் இப்படிச் சில தடவைகள் "முதல் படிகள்" நடந்திருக்கின்றன - எதுவும் முன் நகரவில்லை! 

இதையே நானும் நினைத்தேன் மிகவும் தெளிவாக எழுதியுள்ளீர்கள்.

நன்றி ஜஸ்ரின்.

3 hours ago, குமாரசாமி said:

இப்படியான அறிக்கைகளை 77களிலையே பார்த்து விட்டோம்.

இந்தியாவை மீறி எந்தவொரு மேற்குலக நாடுகளும் இலங்கையில் கை வைக்கமுடியாது என்பதை முள்ளிவாய்க்கால் அழிவுவுகளிலேயே பார்த்தும் திருந்தவில்லையென்றால்.......
ஓம்  சாந்தி.

இதுவும் மறுபக்கத்து சரியான வாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, குமாரசாமி said:

இப்படியான அறிக்கைகளை 77களிலையே பார்த்து விட்டோம்.

இந்தியாவை மீறி எந்தவொரு மேற்குலக நாடுகளும் இலங்கையில் கை வைக்கமுடியாது என்பதை முள்ளிவாய்க்கால் அழிவுவுகளிலேயே பார்த்தும் திருந்தவில்லையென்றால்.......
ஓம்  சாந்தி.

இது விதண்டாவாதமா அல்லது சீரியசான கருத்தா எனத் தெரியவில்லை, ஆனால் பொது நன்மை கருதி, சீரியசான கருத்தாக எடுத்துக் கொண்டு பதில் தருகிறேன்.

முதலில் இது அறிக்கை அல்ல, ஒரு அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தை வேண்டும் சமர்ப்பிப்பு. 77 இல் இப்படியொரு தீர்மானம் எந்த நாட்டிலாவது வந்திருந்ததா என்பது எனக்குத் தெரியாது, நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

இரண்டு: இந்தத் தீர்மானத்தை வெற்றி பெறச் செய்வது ஒரு நீண்ட கால முயற்சி. தற்போது நடந்திருப்பது முதல் படி. இந்த முதல் படிக்கே ஏராளமான மணித்துளிகள் உழைப்பும், பணச் செலவும் வட கரோலினாத் தமிழர்கள் சிலரால் செலவழிக்கப் பட்டிருக்கின்றன. இது வெற்றி பெறாமல் போகலாம் என்ற தெளிவான அறிவுடன் அவர்கள் இவ்வளவு உழைத்திருப்பது மெச்சத் தக்கது. இவர்கள் பின் தொடர்ந்த எளிய விதி: லொத்தர் ரிக்கற் வாங்காமல் லொத்தர் விழுமென்று எதிர்பார்க்க முடியாது😂.

மூன்று: இத்தகைய ஒரு முயற்சி, அதன் வெற்றி வாய்ப்புகள் இதற்கெல்லாம் ஒரு முன்மாதிரி இருக்கிறதா? நிச்சயமாக; 2019 இல் அமெரிக்க மக்களவை நீலக் கட்சியின் கைகளில் இருந்த போது , "ஆர்மேனிய இனப் படுகொலையை அமெரிக்கா நிராகரிக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற" எளிமையான தீர்மானம் 6 மாதங்களில் சமர்ப்பிப்பு நிலையிலிருந்து அமெரிக்க செனட் வரை சென்று வென்றது. இணைப்புக் கீழே, விபரம் வேண்டுவோருக்கு.

https://www.congress.gov/bill/116th-congress/house-resolution/296?s=1&r=3&q={"search"%3A"armenian+genocide"}

இதில் எங்களுக்கு இருக்கும் பாடம்: இந்த 2019 தீர்மானம் வரை வர ஆர்மேனிய அமெரிக்கர்கள் பல தசாப்தங்களாக உழைத்தனர். 2007 இல் இறுதி வரை வந்து ஜூனியர் புஷ்ஷின் நிர்வாகம் ஆதரிக்காமையால் தோல்வி கண்டனர். மூலையில் உட்கார்ந்து திட்டிக் கொண்டிருக்காமல் தொடர்ந்து உழைத்தமையால் 2019 இல் செனட் தீர்மானம் வரை கொண்டு வந்தனர்.

எனவே, நம் தலைமுறை செய்யா விட்டாலும் அடுத்த தலைமுறை தொடர்ந்து உழைக்க வேண்டுமானால் இப்படியான முதல் படிகளை எடுத்து வைப்பதே ஒரே வழி. 

  • Like 4
  • Thanks 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு செய்தி

நன்றி  ரகு

இதற்காக உழைத்த  உழைத்துக்கொண்டிருக்கிற அனைவருக்கும் நன்றிகள்

என்றோ  ஒரு  நாள் எமக்கான  நீதி  கிடைக்கவேண்டும்  என்றால்

எமக்கும்  ஒருநாள் விடியும் என்ற  கனவு உண்மையானால்  உழைப்பை  தொடரணும்

தொடரட்டும்

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணைப்புக்கு நன்றி. மனதில் சிறு புத்துணர்வைத்தரும் செய்தி. 

கண்மூடித்தனமான நம்பிக்கைகளோடு இறங்காது எதையும் ஏற்போம் என்ற பலரது ஆரோக்கியமான உழைப்புக்கு ஒரு படியேறியிருப்பது நன்மையே. யஸ்ரினவர்கள் சுட்டியதுபோல் இது அடுத்தலைமுறைக்கான படியாகவும் அமையலாம். ஆனாலும் தொடர்ந்து முயற்சிப்பதைத் தவிர வேறுதிசையில்லைத்தானே.  இதற்காக உழைத்த உறவுகள் அனைவருக்கும் பாராட்டுகள். 
 
  • Like 1
  • Thanks 1
Posted

நன்றி ரகு, ஜஸ்டின்.
அண்மையின் ஜஸ்டின் ரூடோவின் கருத்துக்கு குய்யோ முறையோ என கத்திய சிங்களம் விலி நிக்கலின் அறிக்கைக்கு அடக்கி வாசிப்பது ஆச்சரியமளிக்கிறது.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, nunavilan said:

நன்றி ரகு, ஜஸ்டின்.
அண்மையின் ஜஸ்டின் ரூடோவின் கருத்துக்கு குய்யோ முறையோ என கத்திய சிங்களம் விலி நிக்கலின் அறிக்கைக்கு அடக்கி வாசிப்பது ஆச்சரியமளிக்கிறது.

நான் ஊகிப்பது, அமெரிக்கா வாழ் சிங்களவர்கள் மௌனமாக இந்தச் சமர்ப்பிப்பிற்கு எதிர் நடவடிக்கைகளை எடுப்பர்கள். சிவப்புக் கட்சியில் ஓரிரு பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் சிறி லங்கா சார்பான பேச்சு/அறிக்கைகளை கடந்த சில வருடங்களில் வெளியிட்ட நினைவிருக்கிறது, இந்த உறுப்பினர்களோடு மீண்டும் சிங்கள அமெரிக்கர்கள் தொடர்பை ஏற்படுத்தி சிறிலங்காவின் மனித உரிமை நிலைமைகள் பற்றி ஏதாவது நேர்த்தன்மையாகப் பேச வைக்கக் கூடும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/5/2023 at 13:39, ரஞ்சித் said:

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் செனட்டரும், வடக்குக் கரொலினாவின் 13 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவருமான வைலி நிக்கெல் முள்ளிவாய்க்கால் நினைவுநாளன்று தமிழினக் கொலையினை ஏற்றுக்கொண்டு தீர்மானம் ஒன்றினை இன்னும் சில செனட்டர்களுடன் இணைந்து நிறைவேற்றியிருக்கிறார்.

அமெரிக்காவில் வாழும் தமிழ்த் தேசியவாதிகள் சிலருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் வைலி நிக்கெல், தனது சகாக்களுடன் இணைந்து தமிழினக் கொலைபற்றிய விளிப்புணர்வை அமெரிக்காவில் ஏற்படுத்தவும், போர்க்குற்ற விசாரணைகள் குறித்த முயற்சிகளை முன்னோக்கித் தள்ளுவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்கு தான் உதவ விரும்புவதாகவும் கூறியிருப்பதாக தெரியவருகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவுநாளன்று அவர் ஆற்றிய உரையினையும் அதன் தமிழாக்கத்தினையும் கீழே பார்க்கலாம். 

"இந்த நாளில், மிகுந்த வேதனையுடன், தமது இழந்த உறவுகளுக்காக இரங்கும் தமிழர்களுடன் இணைந்து எனது இரங்கலினைத்  தெரிவிப்பதில் நான் பெருமையடைகிறேன். தமிழ் இனக்கொலை நினைவு நாள், முக்கியமான ஒரு நாள், ஏனென்றால், அது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமான நிகழ்வாக அமைவதோடு, சமாதானத்திற்காகவும், நீதிக்ககவும், மனித உரிமைகளுக்காகவும் பாடுபடும் பலருக்கும் முக்கியமான நாளாகக் காணப்படுகிறது. அமெரிக்காவில் தெரிவுசெய்யப்பட்ட செனட்டர்களில் தமிழ் இனக்கொலையினை வெளிப்படையாக ஏற்றுக்கொண்ட முதலாவது சட்டவாளர் என்பதிலும், இன்று வெளியிடப்பட்ட தமிழினக் கொலை தீர்மானத்தின் இணை அணுசரணையாளர் என்கிற ரீதியிலும் மிகுந்த பெருமையடைகிறேன். தமிழ் மக்கள் அனுபவித்த அவலங்களையும், வலிகளையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இனக்கொலையில் உயிர்தப்பியவர்களின் குரல்கள் வெளியே கேட்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். தமிழினக்கொலை தொடர்பான புரிதலை மக்களிடையே பரப்புவதற்கு அயராது உழைத்துவரும் அமெரிக்கத் தமிழர்களின் பணியினை, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்விற்காக அவர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளையும் நான் மெச்சுகிறேன். சமாதானத்திற்காகவும், நீதிக்காகவும் அவர்கள் மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் போற்றுதற்குரியன. நாம் தமிழினக் கொலையினை நினைவுகூரும் இந்த நாளில், கொல்லப்பட்ட உயிர்களையும் சிதைக்கப்பட்ட குடும்பங்களையும் நாம் நினைவுகூர்வோம்".

"இந்தநாள், நாம் அனைவரும் அநீதிக்கெதிராக ஒன்றாக எழுந்துநிற்கும் பொறுப்பினை எமக்குத் தந்திருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்வதோடு, அனைவரும் அமைதியாகவும், சுதந்திரமாகவும், சமமாகவும், சுயகெளரவத்துடனும் வாழக்கூடிய உலகினை உருவாக்குவோம் என்று சபதமெடுப்போம்".

"தமிழ் மக்கள் எதிர்காலத்தில் அமைதியாக, நிம்மதியாக வாழ்வதற்கு முற்றான தகுதியுடையவர்கள். அவர்கள் தமது உரிமைகளை முற்றாகப் பெற்று வாழக்கூடிய சூழ்நிலையினை அந்த எதிர்காலம் நிச்சயம் உருவாக்கவேண்டும். ஜனநாயக ரீதியில் தமிழர்களால் முன்வைக்கப்படும் குரல்களும் கோரிக்கைகளும் நிச்சயம் செவிமடுக்கப்பட வேண்டும்". 

"இந்த தமிழினக் கொலை நினைவு நாளில், நாம் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்கிறோம், அவர்களுக்காக இரங்குகிறோம்.  தமிழர்களுக்கான நீதியினைப் பெற்றுக்கொடுக்க நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் நான் உங்களோடு தோளுடன் தோள் நின்று எனது ஆதரவினை நல்குவேன் என்று இத்தாழ் உறுதியளிக்கிறேன்"

வைலி நிக்கெல், அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர்

இது மிகவும் வரவேற்க வேண்டிய உழைப்பு .....செய்தி.......நன்றிகளையும்.  பாராட்டுகளையும். தெரிவித்துக்கொள்கிறேன்....

1 பெயில்    பண்ணுவேன் என்று. எவரும் பாடசாலை. செல்லமாலும்   ...படிக்கமாலும்.   விடுவதில்லை.   

2. வழக்கு தோற்று விடும் என்று   யாரும் வழக்குகளை வாதிடமால்.  விடுவதில்லை 

3. கெண்டா.  மோட்டார் நிறுவனர் வெற்றி என்றால் என்ன என்ற கேள்விக்கு பின்வாறுமாறு.  பதில்  சொன்னார்.......99 தடவைகள் தோல்வியோ    வெற்றி ஆகும்   எனவே… நாங்கள் வெற்றி பெற வேண்டுமாயின் பல தடவைகள் தோற்கும்போது தான்   வெற்றி பெறலாம் 

4....ஆகவே கவலைப்பட வேண்டாம்.....இதற்காக உழைத்த.   உழைத்து கொண்டிருக்கும் அமெரிக்கா வாழ் தமிழருக்கு நன்றிகள் பல  பாராட்டுகளும் உரித்தாகுக.   🙏

5..செய்திகளை  ஆங்கிலம் தெரியாத என் போன்றோர்  வாசித்து விளங்கும்படியும்.   மற்றும் அமெரிக்கா சட்ட நூணுங்களையும்.சிரமம் பார்க்காது  இணைக்கும்  யஸ்ரினுக்கும். நன்றிகள் பல   🙏

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Justin said:

நான் ஊகிப்பது, அமெரிக்கா வாழ் சிங்களவர்கள் மௌனமாக இந்தச் சமர்ப்பிப்பிற்கு எதிர் நடவடிக்கைகளை எடுப்பர்கள். சிவப்புக் கட்சியில் ஓரிரு பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் சிறி லங்கா சார்பான பேச்சு/அறிக்கைகளை கடந்த சில வருடங்களில் வெளியிட்ட நினைவிருக்கிறது, இந்த உறுப்பினர்களோடு மீண்டும் சிங்கள அமெரிக்கர்கள் தொடர்பை ஏற்படுத்தி சிறிலங்காவின் மனித உரிமை நிலைமைகள் பற்றி ஏதாவது நேர்த்தன்மையாகப் பேச வைக்கக் கூடும். 

உங்களின் ஊகம்சரியானதே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் இப்படி ஒரு விடயத்தை ரசியாவிலும், சைனாவிலும் யாராவது முன்னெடுப்பார்கள் என்ற ஏக்கத்தோடு இருக்கிறேன். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/5/2023 at 14:04, ரஞ்சித் said:

தீர்மானத்தின் ஆங்கில மூலம் , அமெரிக்க காங்கிரஸ் இணையத்திலிருந்து.

https://www.congress.gov/bill/118th-congress/house-resolution/427/text

இந்த ஆங்கிலமூல விவரிப்பையும்(H.Res.427)தமிழில் மொழிபெயர்த்துப்போட்டால் பல அரசியல் குமுகாயச் செயற்பாட்டாளர்கள் தெளிவாக அறிவதோடு, தத்தமது நாடுகளிலும் இதுபோன்ற அணுகல்களைச் செய்யச் சிந்திகக்கூடும்.

1 hour ago, Sasi_varnam said:

நானும் இப்படி ஒரு விடயத்தை ரசியாவிலும், சைனாவிலும் யாராவது முன்னெடுப்பார்கள் என்ற ஏக்கத்தோடு இருக்கிறேன். 

இப்படிக் கண்மூடித்தனமாக நம்பலாமா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, nochchi said:

இந்த ஆங்கிலமூல விவரிப்பையும்(H.Res.427)தமிழில் மொழிபெயர்த்துப்போட்டால் பல அரசியல் குமுகாயச் செயற்பாட்டாளர்கள் தெளிவாக அறிவதோடு, தத்தமது நாடுகளிலும் இதுபோன்ற அணுகல்களைச் செய்யச் சிந்திகக்கூடும்.

முயற்சிக்கிறேன்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Sasi_varnam said:

நானும் இப்படி ஒரு விடயத்தை ரசியாவிலும், சைனாவிலும் யாராவது முன்னெடுப்பார்கள் என்ற ஏக்கத்தோடு இருக்கிறேன். 

கூல் டவுண்.....கூல் டவுண் ப்ரோ!

நீங்கள் அல்லது தமிழ் தலைமைகள் யாராவது ரஷ்யா சீனாவிடம் ஈழப்பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு கேட்டீர்களா? அல்லது கேட்டார்களா?
70 வருடங்களுக்கு மேலான இலங்கை இனப்பிரச்சனையை 77 களிலேயே மேற்குலகில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.தந்தை செல்வாகூட  திராவிடத்தின் தந்தை எனப்படும் பெரியாரிடம் இனப்பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு கேட்டதாக ஒரு கதையும் உண்டு.
நிலைமைகள் இப்படியிருக்க.....

 77ம் ஆண்டு தொடக்கம் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக அவ்வப்போது அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டிருக்கும் நீங்கள் தாலாட்டும் மேற்குலகு  இன்று வரைக்கும் செய்தது என்ன? விடுதலைப்புலிகளுடனான  பேச்சுவார்த்தை கூட உங்கள் ஆசை மேற்குலகுதானே நடத்தியது. அது ஏன் தோல்வியடைத்தது.

முள்ளிவாய்க்கால் பொதுமக்கள் அழிவைக்கூட அவர்கள் தடுத்து நிறுத்தவில்லையே? அழிவுகள் நடந்து 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இதுவரை உங்கள் கண்மணி மேற்குலகு அறிக்கை விட்டதை தவிர வேறென்ன செய்தது.

சிங்கள இனவாதிகள் தமிழர் பிரதேசங்களை சிங்கள பிரதேசமாக்கிய பின்னர் அங்கே இனப்பிரச்சனையே இருக்காது. அதன் பின்னர் சர்வதேசம்  போர்க்குற்ற நடந்ததாக அறிவிக்கும். அப்போது அங்கே இருக்கும் தமிழர்கள் எல்லாம் சிங்களவர்களாக மாறியிருப்பர். அல்லது வேறு ஏதாவது நடந்து தமிழர் பிரச்சனையை தீர்க்க வேண்டிய தேவையே இல்லாமல் போகலாம்.

ஆர்மேனிய படுகொலை மற்றும் இன அழிப்பிற்கு 100 வருடம் கழித்து  அஞ்சலி செலுத்தி அது போர்க்குற்றம் என தீர்ப்பு வழங்கிய  மேற்குலகின் சித்திரத்தை அண்மையில் தானே கண்டு களித்தோம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

நீங்கள் அல்லது தமிழ் தலைமைகள் யாராவது ரஷ்யா சீனாவிடம் ஈழப்பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு கேட்டீர்களா? அல்லது கேட்டார்களா?

பெரியவாள் நிறைய பேர் அதிபர் புட்டின் மேல் அளவற்ற மதிப்பு, நம்பிக்கை வைத்துள்ளதால் அவர்கள் பக்கம் இருந்து காய் நகர்தல் நடக்கும், நமக்கும் தேனும் பாலும் ஓடும் என்ற கற்பனையில் இருந்துவிட்டோம்.

ஆனாலும் சுயநிர்ணய உரிமையோடு பிரிந்து போன உக்ரேயின் மேல் ரசியா காட்டும் பச்சாதாபத்தை பார்க்கும் போது அந்த நம்பிக்கை கேள்விக்குறியாக என் கண்முன்னே விசுவரூபமாய் நிட்கிறது ஐயா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Sasi_varnam said:

தாங்களும் உக்ரேனுக்குள் காலை வைத்து நீட்டி முழக்காமல்  40 வருடகாலமாக நவநாகரீக , மனித உரிமையின் சிகரங்கள் மேற்குலகு  இலங்கை இனப்பிரச்சனைக்கும்,மனித உரிமை மீறல்களுக்கும் இதுவரை என்ன செய்தது என்பதை கொஞ்சம் விரிவாக சொல்லவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையுடன் குடும்பம் நடத்தி கொண்டுயிருக்கும்.  ...இலங்கை சொல்வதை செய்வதை...எந்தவொரு மறுப்புமற்றமுறையில். 100%ஏற்றுக்கொள்ளும்  ரஷ்யா    சீனா   போன்ற நாடுகளுடன்.  தமிழ் மக்கள் அல்லது அவர்களின் தலைவர்கள்  எப்படி ?எதை. ?பேச  முடியும் ...

1...தமிழ் ஈழம் பெற்று தாருங்கள்” என. கோர முடியுமா??

2...பூரண மாநில சுயாட்சி   இலங்கையின் வடக்கு கிழக்கு இல் அமைக்கவேண்டுமென ஒரு விசேட பிரோணை. உங்கள் பாராளுமன்றத்தில் நிறையவேற்றுங்கள் என. கேட்க இயலுமா? 

3...போர் குற்ற விசாரணைகளுக்கான ஒழுங்குக்களை செய்து தலைமை ஏற்று நடத்துவார்களா??   மனித உரிமைகள் சபையில்  இலங்கையை  போற்றினார்கள் 

4...இவர்களுடன்   பேச்சுவார்த்தை வைத்தால்   முடிவு என்ன எனபது   தமிழ் மக்களுக்கும்...தமிழ் தலைவர்களும்  நன்றாகவே தெரியும் 

5...1985 ஆம் ஆணடில்    கனடாவும்.  பிரித்தானியாவும். தமிழ் மக்களை  வரும் படி  ஓபன் விசா  கொடுத்து அழைத்து கொண்டார்கள்   ...சீனாவும் சரி  ரஷ்யாவும் சரி    தமிழ் மக்களை வரும் படி அழைத்து உள்ளார்களா. ?? இல்லையே   ??ஏன?

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

2023 ஆம் ஆண்டு வைகாசி 18 ஆம் திகதி பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு வைகாசி 18 ஆம் திகதி முடிவடைந்த போரினை நினைவுகூறும் வேளை, இப்போரில் உயிரிழந்த அனைத்து மக்களுக்கும் எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம். இப்போரில் நடந்த குற்றங்களுக்கான நீதி,  பொறுப்புக்கூறல், இணக்கப்பாடு, மீள்கட்டுமாணம், இழப்புக்களுக்கான பரிகாரம், சீர்திருத்தம் ஆகியவற்றினூடாக இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் உகந்த நிரந்தர அரசியல்  தீர்வினை உருவாக்க உதவுவது எமது நோக்கமாகும்.  

ஒஹையோவைச் சேர்ந்த திரு ஜோன்சன், திரு நிக்கெல், வட கரோலினாவைச் சேர்ந்த திரு டேவிஸ், வட கரோலினாவைச் சேர்ந்த திரு ஜக்சன், பென்சில்வேனியாவைச் சேர்ந்த செல்வி லீ, இல்லினொயிஸைச் சேர்ந்த திரு டேவிஸ் மற்றும் திருமதி மக்பத் ஆகியோர் சார்பாக செல்வி ரொஸ் அவர்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் முன்வைத்த தீர்மானம்.

இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட பல தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும் இடையே 26 வருடங்களாக  இடம்பெற்று வந்த போர் முடிவடைந்த 14 வருடங்கள் இன்றைய தினமான 2023 ஆம் ஆண்டு வைகாசி 18 ஆம் திகதி நினைவுகூரப்படுகிறது.

இனப்போரில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் மற்றும் பதில் வன்முறைகளால் அனைத்துச் சமூகங்களும் இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றன.

குறிப்பாக தமிழ் மக்கள் இப்போரில் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்களைச் சந்தித்திருப்பதுடன், காணாமற்போதல்கள், மனிதவுரிமை மீறல்கள், இடப்பெயர்வுகள் ஆகியவற்றையும் சந்தித்திருக்கின்றனர்.

இந்த இனப்போரில் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருப்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இந்த ஆதாரங்களுள், போரின் இறுதி மாதங்களில் மட்டுமே, அரசால் அறிவிக்கப்பட்ட யுத்த சூனியப் பிரதேசங்களில் அடைக்கலம் புகுந்த தமிழர்கள் மீது வேண்டுமென்றே இலங்கை அரசால் நடத்தப்பட்ட செல்த் தாக்குதல்களில் 40,000 இலிருந்து 170,000 வரையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

போரின்போதும் அதன் பின்னரும் இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான குற்றங்களை விசாரிக்கவென இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட கற்ற படிப்பினைகளும், இணக்காப்பாட்டினை ஏற்படுத்துதலும் எனும் பெயரில் அமைக்கப்பட விசாரணைக் குழு முன்வைத்த பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கையரசு தவறியதாலேயே ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையில் 2012,2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா முன்வைத்த  தீர்மானங்கள், மேம்படுத்தப்பட்ட உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றினூடாக செயற்பாடுகளும், இணக்கப்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்தன.

2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைச் சபை வெளியிட்ட அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்ற போரில்  போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கெதிரான குற்றங்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன என்று கூறப்பட்டிருக்கிறது.

2015 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினைத் தொடர்ந்து. மனிதவுரிமை சபை வெளியிட்ட அறிக்கை மற்றும் மனிதவுரிமை ஆணையாளரின் பரிந்துரைகள் ஆகியவற்றினை அடிப்படையாக வைத்து இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அமெரிக்கா அதேவருடம் மனிதவுரிமைச் சபையில் தீர்மானம் 30/1 இனை முன்வைத்திருந்ததுடன் இத்தீர்மானம் 2017 ஆம் ஆண்டு அமர்விலும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை முன்வைத்த தீர்மானத்தின்படி பின்வரும் விடயங்களைச் செய்வதாக இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டிருந்தது.

1. பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டவாளர்கள், விசாரணை அதிகாரிகள் அடங்கிய விசேட நீதிமன்ற அமைப்பின்மூலம் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவது.

2. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினை உருவாக்குவது.

3. காணாமற்ப்போனவர்களுக்கான அலுவலகத்தை உருவாக்குவது.

4. நடைபெற்ற குற்றங்களுக்கான பரிகாரங்களை முன்வைக்கும் அதேவேளை இக்குற்றங்கள் மீளவும் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் சட்டரீதியான சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது.

5. மக்களிடையே நம்பிக்கையினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது.

ஆனால், 2015 இலும் 2017 இலும் தானே முன்வைத்த தீர்மானங்களிலிருந்து 2020 இல் விலகிக்கொண்ட இலங்கையரசு, போர்க்குற்றங்களில்  ஈடுபட்டவர்களுக்கான தண்டனைகளிலிருந்து முற்றான விலக்கினை தொடர்ச்சியாக வழங்கிவருகிறது.

அதேவேளை, போரினால் மிகக்கடுமையான அழிவுகளைச் சந்தித்த தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்குக் கிழக்கில் கடுமையான இராணுவப் பிரசன்னம் ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, அங்கு இரு தமிழருக்கு ஒரு ராணுவ வீரர் எனும் அடிப்படையில் இராணுவ அழுத்தம் காணப்படுகிறது.

இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்திருக்கும் அதேவேளை ஈழத்தமிழ்ச் சமுதாயம் சுதந்திரமாக தனது கருத்துக்களை வெளியிடுவதையும் சட்டங்களை அமுல்ப்படுத்தியிருப்பதன் மூலம் இலங்கையரசு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது .

2018 ஆம் ஆண்டு இலங்கையின் வடமாகாணசபை நிறைவேற்றிய தீர்மானத்தில் இறுதி யுத்தத்தில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச விசாரணை பொறிமுறையினைக் கோரியிருந்ததுடன் நிலையான அரசியல்த் தீர்வொன்றினைக் காணபதற்கு வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சர்வதேச அமைப்புக்களின்  கண்காணிப்பின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தவேண்டும் என்றும் கோரியிருந்தது.

மகாணசபைத் தேர்தல்களை நடத்துவதை பல வருடங்களாகப் பிட்போட்டுவருவதன் மூலம், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும்  தமிழ் மக்கள் உட்பட அனைத்து இலங்கையர்களும் தமது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி, உள்ளூர் அரைசியல்ப் பிரதிநிதித்துவத்தைத் தேர்வுசெய்யும் உரிமையினையும் இலங்கையரசு மறுத்து வருகிறது.

2021 ஆம் ஆண்டு ஐக்கியநாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில் 2020 முதல் 2021 வரையான ஓராண்டு காலத்தில் இலங்கையரசு செயற்பட்ட விதம்பற்றிப் பின்வருமாறு கூறியிருந்தார்,

1. போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று அறியப்பட்ட ராணுவ அதிகாரிகளை அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு நியமித்தது.

2. போர்க்குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களை விடுதலை செய்தது.

3. முன்னெடுக்கப்பட்டு வந்த ஜனநாயகச் சீர்திருத்தங்களை முற்றாக நிறுத்திவிட்டதோடு, சர்வ வல்லமை மிக்க ஜனாதிபதிப் பதவியினை  மேலும் வலுப்படுத்திக் கொண்டது.

4. போர்க்குற்றவாளிகளை விசாரிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளை தடுத்து நிறுத்தியது.

5. பெரும்பான்மையின மனோநிலையோடு செயற்பட்டு ஏனைய இனக்குழுமங்களை புறக்கணித்தது.

6. சமூகச் செயற்பாட்டாளர்களையும் மனிதவுரிமைக் காவலர்களையும் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதுடன் அச்சுருத்தலுக்கு உள்ளாக்கியிருப்பது.

7. அரசுக்கெதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களை ராணுவத்தினரைக் கொண்டு கடத்திச் சென்று சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவது.

2006 ஆம் ஆண்டு, ஆனி மாதம் 1 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்கச் செயலாளர் ரிச்சேர்ட் பெளச்சர், "தமிழ் மக்களால் முன்வைக்கப்படும் நீதிகோரல்கள் சட்டபூர்வமானவை. இந்த உலகில் வாழும் வேறு எவரைப்போலவும் தமது வாழ்க்கையினைத் தாமே கவனித்துக்கொள்ளவும், தமது பூர்வீகத் தாயகத்தில் தம்மைத் தாமே ஆளவும், தமது தலைவிதியினைத் தாமே தீர்மானித்துக்கொள்ளவும் அவர்கள் வெளிப்படுத்தும் அபிலாஷைகளும் சட்டபூர்வமானவை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இலங்கை தற்போது பயணித்துவரும் பாதை, கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான மனிதவுரிமை மீறல்களை மீளவும் கொண்டுவரும் செயற்பாடுகளையும், திட்டத்தினையும் கொண்டிருப்பது போலத் தெரிகிறது என்றும் அவ்வறிக்கை எச்சரித்திருந்தது.

2021 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இணை அணுசரணையுடன், இங்கிலாந்தினால் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் 46/1, கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கெதிரான மீறல்கள் ஆகியவற்றுக்கான பொறுப்புக்கூறலினை இலங்கை முற்றாகவே தவிர்த்திருந்ததை சுட்டிக்காட்டியிருப்பதுடன், இலங்கையில் இடம்பெற்ற மிக மோசமான கூட்டு மனிதவுரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கவும், அவற்றினை ஆராயவும், ஆராயப்பட்ட தகவல்களை பிற்காலத்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்காகப் பாயன்படுத்துவதற்காக ஆவணப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளைச் செய்யவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணையாளரைக் கேட்டுக்கொண்டிருந்தது.

 2022 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையில் அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன,

1. தமிழர் தாயகத்தின் அதிகரித்துவரும் ராணுவப் பிரசன்னம், பொறுப்புக்கூறலினை உதாசீனப்படுத்தும் அரச அதிகாரம், கடுமையான மனிதவுரிமை மீறல்களைல் ஈடுபடுவோருக்கான அரச ஆசீர்வாதம் ஆகியவை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்துகொள்வது.

2. தேர்தல்களை நடத்துவது, சர்வஜன வாக்கெடுப்புக்களை நடத்துவது, அமைதியான வழிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது உட்பட்ட ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கான அவசியத்தினை ஏற்றுக்கொள்வது.

3. இலங்கையரசாங்கத்தால் ஒத்துக்கொள்ளப்பட்ட அதிகாரப் பகிர்வின் ஒரு அங்கமான அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை நடத்துவது, குறிப்பாக வடக்குக் கிழக்கு மாகாணங்களின் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான அழுத்தத்தை அரசு மீது பிரயோகிப்பது.

இலங்கையில், போர்க்குற்றங்களிலும் மனித குலத்திற்கெதிரான குற்றங்களிலும் ஈடுபட்டவர்களை இதுவரையில் நீதியின் முன் நிறுத்தாமை,  அடையாளத்திற்குத் தன்னும் இதுவரையில் ஒரு விசாரணையாவது இடம்பெறாமை, போர்க்குற்ற ஆதாரங்களைச் சேகரிப்பவர்கள் மீது அரசாங்கத்தால் தொடர்ச்சியாக இடப்பட்டு வரும் முட்டுக்கட்டைகள்,   கைதுகள் மற்றும் அச்சுருத்தல்கள், சர்வதேச சட்டங்களுக்கு முரணான வகையில் இலங்கையரசால் இன்றுவரை பாவிக்கப்பட்டுவரும் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் பாரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை இன்றுவரை அரசு பாதுகாத்து வருகின்றமை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாக பலமுறை அரசே அறிவித்த பின்னரும் இன்றுவரை அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றமை ஆகிய செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

2021 ஆம் ஆண்டு தை மாதம் பேசிய ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையின ஆணையாளர் மிச்செல் பாக்லெட், "தேசிய ரீதியில் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளினை செயற்படுத்துவதற்கு இலங்கையரசாங்கம் விரும்பவில்லையென்பதும், அதனால் இவ்விடயத்தில் செயற்பட முடியாதென்பதும் எமக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே, சர்வதேச சமூகம் இலங்கையரசால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேசச் சட்டங்களுக்கெதிரான குற்றங்களை விசாரித்து நீதிவழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தருணம் வந்திருக்கிறது. அதேவேளை, சர்வதேசச் சட்டங்களின் அடிப்படையில் , சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில், இலங்கையரசு உள்நாட்டு நீதிமன்றங்களில் குற்றங்களில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினரையும் விசாரித்து தண்டனை வழங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.

ராஜபக்ஷேக்கள் கைக்கொண்டுவந்த அதேவகையான அழிவுதரும் அரசியலை முன்னெடுத்துவரும் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச ஆதரவுடனான நில அபகரிப்பு, தமிழர்களின் சமய, கலாசார சின்னங்களை அழிப்பது அப்பகுதிகளை ஆக்கிரமித்துக்கொள்வது, அமைதியான வழிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்கள் மீது அடக்குமுறையினையும், அரச வன்முறையினையும் ஏவிவிடுவது, செயற்பாட்டாளர்களைக் கைதுசெய்து அடைத்துவைப்பது, முன்னர் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன்னால் நிறுத்தக் கோரும் குரல்களைத் தொடர்ச்சியாக உதாசீனம் செய்துவருவதுபோன்ற செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.

போரின்போதும், அதன் பின்னரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றுவரை அவர்களித்தேடி முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு இதுவரையில் பதில் ஏதும் கொடுக்கப்படவில்லை. போரின் இறுதியில் அரசாங்கத்திடம் சரணடைந்த மற்றும் கையளிக்கப்பட்ட தமிழர்களின் பட்டியலினை அரசு இதுவரை வெளியிடவில்லை.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான உள்நாட்டு மற்றும் சர்வதேச விசாரணைகளும், இணக்கப்பட்டிற்கான முன்னெடுப்புக்களும் அமெரிக்கா இலங்கையில் அபிவிருத்திகளில் ஈடுபடவும், மூலதனத்தினை இடவும் இதன்மூலம் சர்வதேசச் சட்டங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கிலும் நாம் கீழ்வரும் தீர்மானங்களை இச்சபையின் முன்னால் கொண்டுவருகிறோம்.

எம்மால் முடிவுசெய்யப்பட்டு, பிரதிநிதிகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்களவன,

1. இலங்கையில் இடம்பெற்ற போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட 14 ஆம் ஆண்டினை நினைவுகூரும் இவ்வேளை,  இப்போரில் கொல்லப்பட்டவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

2. இப்போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் இவ்வேளை, இலங்கையில் அனைத்துச் சமூகங்களிடையேயும் நல்லிணக்கத்தையும், மீள் கட்டுமானத்தையும், பரிகாரத்தையும் சீர்திருத்தங்களையும் செய்ய முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உற்ற துணையாக இருப்போம் என்று இத்தாள் உறுதியெடுத்துக் கொள்கிறோம்.

3. போரில் இடம்பெற்ற குற்றங்களுக்கான ஆதாரங்களைச் சேகரிப்பதிலும், ஆவணப்படுத்துவதிலும் ஈடுபட்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையின் செயற்பாடுகளை போற்றும் அதேவேளை, இச்செயற்பாடுகளுக்கு இலங்கையரசு எந்தவித  குந்தககங்களையும் செய்யக் கூடாது என்றும் வலியுறுத்துகிறோம்.

4. இலங்கையில் காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்கள் உட்பட, நீதிக்காக அயராது உழைத்துவரும் அனைத்து இலங்கையர்களினதும் துணிவினை மெச்சுவதோடு இந்த மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக முகம்கொடுத்துவரும் இலங்கை அரச படைகளின் அச்சுருத்தல்கள், துன்புருத்தல்கள், மிரட்டல்கள் ஆகியவற்றையும் நாம் அவதானித்து வருகிறோம்.

5.  சரித்திர ரீதியாக வடக்குக் கிழக்கில் வாழ்ந்துவரும் தமிழர்கள் மீது இலங்கையரசுகள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் அடக்குமுறைகளுக்கெதிராக, தமிழர்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்திக்கொள்ள சர்வதேச சமூகம் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்று நாம் கோருவதோடு நிரந்தரமான அரசியல்த் தீர்வொன்றினை உருவாக்குவதன் மூலம் இனப்பிரச்சினை உருவாவதற்கான  மூல காரணங்களைக் கண்டறிந்து, அவற்றினை  அகற்றிவிடுவதோடு, இனவன்முறைகள் மீள நடைபெறுவதைத் தடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

6. சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு,  நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஜனநாயக வழிமுறைகளையும், செயற்பாடுகளையும் இலங்கையிலும் ஏற்படுத்துவது. குறிப்பாக சர்வஜன வாக்கெடுப்புக்கள் மூலம் ஈழத் தமிழர்கள் உட்பட அனைத்து இலங்கையர்களும் ஜனநாயக ரீதியில், சமமாக இலங்கையில் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலைமையினை உருவாக்குவது.

7. ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணையாளரினால் முன்வைக்கப்பட்ட 
பரிந்துரைக்களுக்கு அமைவாக, அமெரிக்க அரசு, போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

8. இலங்கையில் இடம்பெற்ற போரில் நிகழ்த்தப்பட்ட மிகக்கொடூரமான குற்றங்களை விசாரிக்கவும், குற்றவாளிகளைத் தண்டிக்கவும் உரிய பொறிமுறையினை அமெரிக்க அரசு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை, ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபை ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

9. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் அமெரிக்காவுக்கு இருக்கும் செல்வாக்கினைப் பாவிப்பதன் மூலம், பாதுகாப்புச் சபை, இலங்கையரசை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றின் முன்னால் நிறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 2021 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணையாளர் தெரிவித்த கருத்தான, "இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலினை உறுதிப்படுத்த இலங்கையரசை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துவதன் மூலம் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிவழங்கும் ஒரு செயற்பாடாக இதனை முன்னெடுக்கப்பட முடியும்" என்று கூறியதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

18 hours ago, nochchi said:

இந்த ஆங்கிலமூல விவரிப்பையும்(H.Res.427)தமிழில் மொழிபெயர்த்துப்போட்டால் பல அரசியல் குமுகாயச் செயற்பாட்டாளர்கள் தெளிவாக அறிவதோடு, தத்தமது நாடுகளிலும் இதுபோன்ற அணுகல்களைச் செய்யச் சிந்திகக்கூடும்.

வணக்கம் நொச்சி, என்னால் முடிந்தளவில் இத்தீர்மானத்தினை மொழிபெயர்த்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். 
 
Edited by ரஞ்சித்
ளி
  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரஞ்சித் said:

வணக்கம் நொச்சி, என்னால் முடிந்தளவில் இத்தீர்மானத்தினை மொழிபெயர்த்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். 

சிறப்பு, றஞ்சித் அவர்களே தங்களின் இந்த முயற்சிக்கு நன்றியும் பாராட்டும் உரித்தாகுக. 

நன்றி ரகு...

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30/5/2023 at 18:57, Sasi_varnam said:

நானும் இப்படி ஒரு விடயத்தை ரசியாவிலும், சைனாவிலும் யாராவது முன்னெடுப்பார்கள் என்ற ஏக்கத்தோடு இருக்கிறேன். 

இப்படி ஈழதமிழர்களுக்கு ஆதரவான விடயத்தை ரஷ்யா சீனா வடகொரியாவில் முன்னெடுக்க கூடிய ஈழதமிழ் புரட்சிகரவாதிகள் எல்லோருமே கப்பிற்ரலிஸ்ட் ஏகாதிபத்தியநாடுகளின் பாதுகாப்பான அரவணைப்பில் சுகம் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே உங்கள் ஏக்கம் ஒரு போதும் நிறைவேறாது.

9 hours ago, Kandiah57 said:

1985 ஆம் ஆணடில்    கனடாவும்.  பிரித்தானியாவும். தமிழ் மக்களை  வரும் படி  ஓபன் விசா  கொடுத்து அழைத்து கொண்டார்கள்   ...சீனாவும் சரி  ரஷ்யாவும் சரி    தமிழ் மக்களை வரும் படி அழைத்து உள்ளார்களா. ?? இல்லையே   ??ஏன?

அவர்களுடைய தமிழ் விசுவாசிகளையே ரஷ்யா சீனா அழைக்கவில்லை. ரஷ்யா சீனா அழைத்தாலும் அவர்கள் அங்கே ஒரு போதும் போகமாட்டார்கள் என்பது யாவரும் அறிந்தது. ஆனால் ரஷ்யா சீனா தங்கள் தமிழ் விசுவாசிகளை  உலகத்திற்கு படம் காட்டுவதற்காக கூட அழைக்க  இல்லையே.

  • Haha 1
Posted
8 hours ago, ரஞ்சித் said:

வணக்கம் நொச்சி, என்னால் முடிந்தளவில் இத்தீர்மானத்தினை மொழிபெயர்த்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். 
 
நன்றி ரஞ்சித்.

நன்றிகள் பல ரகு 

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.