Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: RAJEEBAN

23 MAY, 2023 | 12:10 PM
image

உக்ரைன் தனது எல்லைகளிற்கு அப்பால் சதிதாக்குதல்களில் ஈடுபடுகின்றது என ரஸ்யா குற்றம்சாட்டியுள்ளது.

புட்டினிற்கு எதிரான குழுவொன்றை சேர்ந்தவர்கள் ரஸ்யாவின் தென்மேற்கு பிராந்தியமான பெல்கொரோட்டில் தாக்குதலை மேற்கொண்டதாக உரிமைகோரியுள்ள  நிலையிலேயே ரஸ்யா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

பெல்கொரோட்டில் இடம்பெற்ற தாக்குதலில் நிர்வாககட்டிடங்கள் வீடுகள் ஆரம்பபாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக அந்த பிராந்தியத்தின் ஆளுநர்தெரிவித்துள்ளார்.

எனினும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

FwypqxiX0AEbZVj.jpg

என்ற அமைப்பினர் உக்ரைன் அருகில் உள்ள பெல்கொரோட்டின் ஒரு குடியிருப்பை விடுவித்துள்ளதாக டெலிகிராமில் தெரிவித்துள்ளனர்.

குழுவொன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளதை உறுதி செய்துள்ள உக்ரைன் அவர்கள் சுதந்திரமாக செயற்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளது.

ரஸ்ய பிரஜைகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என உக்ரைனின் பாதுகாப்பு புலனாய்வு தரப்பை சேர்ந்த அதிகாரியொருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை சதிகார புலனாய்வு குழுவை அழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கிரெம்ளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் சார்பு படையணிகள் உக்ரைன் எல்லையை கடந்து ரஸ்யாவில் உள்ள பகுதி மீது தாக்குதலை மேற்கொண்டது இதுவே முதல்தடவை என சிஎன்என் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/155937

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர்களின் இந்தப் படை நடவடிக்கை முற்றாக முறியடிக்கப்பட்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சுற்றிவளைக்கப்பட்டு கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேவையற்ற, வீணான உயிரிழப்பு. 😭

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kapithan said:

இவர்களின் இந்தப் படை நடவடிக்கை முற்றாக முறியடிக்கப்பட்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சுற்றிவளைக்கப்பட்டு கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேவையற்ற, வீணான உயிரிழப்பு. 😭

அப்படி சொல்ல முடியாது.உள்ளே சென்றவர்களுக்கு தெரியும் சாவோம் என்று, கிட்டட்ட தற்கொலைப் படை போலத்தான்.

இந்தப் போரில் ரஷ்யா தோற்கடிக்கப் பட வேண்டுமானால் ரஷ்யாவுக்குள் குழப்பங்கள் ஏற்படுத்தப் பட வேண்டும்.

இப்படி சம்பவங்கள் நடக்கும் பொழுது தான் ரஷ்யாவுக்குள் உள்ள புட்டினுக்கு எதிரானவர்களுக்கு எதிராக ரஷ்யா நடவடிக்கையை கூர்மைப் படுத்தும், அதனால் புட்டினை எதிர்பவர்கள் தொகை கூடும், தவிர சாதாரண பொது மக்களுக்கும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும், அது மேலதிக உள்நாட்டுக் கலகங்களை உருவாக்கும். ஒருபக்கம் நேரடிப் போரில் ரஷிய வீரர்களின் சாவு எண்ணிக்கை அதிகரிக்க, இன்னொரு பக்கம் பொருளாதாரம் பாதிக்கப்பட, உள்ளே உள்நாட்டு குழப்பங்களை ஏற்படுத்த ரஷ்யாவில் புட்டினின் ஆட்சியை அசைக்கலாம் என்று மேற்கு நம்புகின்றது.

இதற்க்கு பதிலடி கொடுக்க  ரஷ்யா முயலும், இங்கே கனடாவிலும் அமெரிக்காவிலும், பிரிட்டன் யூரோப்பீலும் பல இடங்களில் குண்டுகள் வெடிக்க வைக்கப்படலாம், ரஷ்யாவுக்கு இங்கேல்லாம் பல ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் என்பது வெளிப்படை உண்மை. முக்கியமாக ukraine அகதிகள் போர்வையில் மேற்கில் ஊடுருவி உள்ள ரஷிய ஆதரவு மக்களில் ஒரு பகுதியினர் இதற்க்கு வேலை செய்யலாம்.

ஆகவே பெரிய மால்கள், ஆட்கள் கூடும் இடங்கள், கேந்திர முக்கியத்துவம் உள்ள இடங்களுக்கு போவதை தவிர்ப்பது நல்லது 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, பகிடி said:

சீரியஸாய் எழுதினாலும், பெயருக்கேற்ப இடைக்கிடை பகிடியும் விடுகிறீர்கள். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஸ்யாவை முழுமையாக புட்டின் பிடியிலிருந்து விடுவிப்பதே எங்கள் நோக்கம்-ரஸ்யாவிற்குள் ஊருடுவி தாக்குதலை மேற்கொண்ட புட்டின் எதிர்ப்பு ரஸ்ய குழு

Published By: RAJEEBAN

24 MAY, 2023 | 11:02 AM
image

ரஸ்யாவை முழுமையாக விடுதலை செய்வதே தங்கள் நோக்கம் என ரஸ்யாவிற்குள் ஊருடுவி தாக்குதலை மேற்கொண்ட புட்டின் எதிர்ப்பு ரஸ்ய குழு தெரிவித்துள்ளது.

பீரிடம் போர் ரஸ்யா லீஜன் என்ற அமைப்பே இதனை தெரிவித்துள்ளது.

ரஸ்யாவின் பெல்கொரொட் நகரின் மீதான தாக்குதலை அமைதிகாக்கும் நடவடிக்கை என இந்த அமைப்பு வர்ணித்துள்ளது.

freedom_of_russia1.jpg

ரஸ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையில் இராணுவசூன்ய பிரதேசத்தை உருவாக்குவது புட்டின் ஆட்சிக்கு சேவைசெய்யும் படையினரை அழிப்பது புட்டின் ஆட்சிக்கு எதிராக போராடுவது சாத்தியமான விடயம் என மக்களிற்கு நிருபிப்பது ஆகியன தங்களின் இலக்குகள் என புட்டின் எதிர்ப்பு ரஸ்ய குழு தெரிவித்துள்ளது.

இந்த இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/156026

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ரஸ்யா, சீனா, வட கொரியாவின் வடகோடியில் குண்டூசி விழுந்தாலும் அது யாழ் களத்தில் அதிரடிச் செய்தியாக வரும்.

ஆனால், ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் எந்தப் பேரழிவு நடைபெற்றாலும் அப்படி எதுவுமே நடைபெற்றது போல எவருக்குமே எதுவுமே கரிசனைக்குட்பட்டவை அல்ல. 

🥺

Edited by Kapithan
Posted
51 minutes ago, Kapithan said:

ஆனால், ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் எந்தப் பேரழிவு நடைபெற்றாலும் அப்படி எதுவுமே நடைபெற்றது போல எவருக்குமே எதுவுமே கரிசனைக்குட்பட்டவை அல்ல. 

🥺

இப்படியான செய்திகளில் எத்தனை செய்திகளை , (கருப்புப் பட்டியலில் இடப்படாத இணையங்களில் இருந்து )கபிதன் யாழில் கொண்டு வந்து பதிந்து க்ருத்துக்களத்தில் உரையாடுவதற்காக பகிர்ந்து இருக்கின்றார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

இப்படியான செய்திகளில் எத்தனை செய்திகளை , (கருப்புப் பட்டியலில் இடப்படாத இணையங்களில் இருந்து )கபிதன் யாழில் கொண்டு வந்து பதிந்து க்ருத்துக்களத்தில் உரையாடுவதற்காக பகிர்ந்து இருக்கின்றார்?

1) நிழலியின் கண்களுக்கு கப்பித்தான் மட்டும்தான் யாழ் கள உறுப்பினர் போல 🤣 

2) யாழ் களத்தினரில் பலருக்குப் பிடிக்காதது கருப்பு(ப் பட்டியல்). பிடித்தது, வெள்ளை(ப் பட்டியல்). இது ஏற்கனவே தெரிந்ததுதானே 😀

ஆனால் பேசுவது ஊடக சுதந்திம், பேச்சுரிமை, எண்ணங்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை 

😀

Posted
21 minutes ago, Kapithan said:

1) நிழலியின் கண்களுக்கு கப்பித்தான் மட்டும்தான் யாழ் கள உறுப்பினர் போல 🤣 

2) யாழ் களத்தினரில் பலருக்குப் பிடிக்காதது கருப்பு(ப் பட்டியல்). பிடித்தது, வெள்ளை(ப் பட்டியல்). இது ஏற்கனவே தெரிந்ததுதானே 😀

ஆனால் பேசுவது ஊடக சுதந்திம், பேச்சுரிமை, எண்ணங்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை 

😀

1. ஏனையவர்கள் இணைக்கவில்லை என்றால் தாராளமாக நீங்கள் இணைக்கலாம். கபிதன் தான் ஆகிய ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் எந்தப் பேரழிவு நடைபெற்றாலும் அவை பற்றிய செய்திகளை யாழில் இணைப்பது இல்லை என்று மற்றவர்களை குறை கூறி இருந்தார்.

2. யாழில் ஒரு போதும் கட்டற்ற சுதந்திரம் இருக்கவில்லை, இருக்கப் போவதும் இல்லை. பேச்சுரிமை என்பதும் கருத்துச் சுந்ததிரம் என்பதும் யாழின் பிரதான போக்கிற்கு எதிராக அமையாத வரைக்கும் தான். இது பற்றி போதுமான அளவுக்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் விளக்கம் கொடுப்பட்டு விட்டது. மேலதிக உரையாடல்கள் நீக்கப்படும்.

நன்றி

  • Like 2
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, Kapithan said:

இவர்களின் இந்தப் படை நடவடிக்கை முற்றாக முறியடிக்கப்பட்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சுற்றிவளைக்கப்பட்டு கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேவையற்ற, வீணான உயிரிழப்பு. 😭

4 hours ago, ஏராளன் said:

ரஸ்யாவை முழுமையாக புட்டின் பிடியிலிருந்து விடுவிப்பதே எங்கள் நோக்கம்-ரஸ்யாவிற்குள் ஊருடுவி தாக்குதலை மேற்கொண்ட புட்டின் எதிர்ப்பு ரஸ்ய குழு

Publishe

இந்த இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எது  உண்மை???

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, விசுகு said:

எது  உண்மை???

உண்மையை நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். இன்று அமெரிக்கத் தயாரிப்பான Humvee வாகனங்களை இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப் பட்டதாக ரஷ்யா படங்கள் வெளியிட்டிருக்கிறதாம். நம்புவதும், நம்பாததும் அவரவர் பின்புல அறிவைச் சார்ந்தது!😎

ஆனால், ஒரு வரலாற்றுத் தகவல்: 79 இல் சோவியத் செம்படை ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்த இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுதம் கொடுத்தது. எப்படிக் கொடுத்தது? எகிப்திடம் இருந்த சோவியத் தயாரிப்பு ஆயுதங்களை இஸ்றேல் மூலம் வாங்கி ஆப்கான் ஆயுததாரிகளுக்குக் கொடுத்தது. அந்த நேரமே இவ்வளவு கவனமாக இருந்த அமெரிக்கா, இப்ப அமெரிக்க ஹம்வீக்களை நேரடியாக ரஷ்யாவை ஆக்கிரமிக்க அனுப்பி வைக்கிறதா? 😂

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, Kapithan said:

ரஸ்யா, சீனா, வட கொரியாவின் வடகோடியில் குண்டூசி விழுந்தாலும் அது யாழ் களத்தில் அதிரடிச் செய்தியாக வரும்.

ஆனால், ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் எந்தப் பேரழிவு நடைபெற்றாலும் அப்படி எதுவுமே நடைபெற்றது போல எவருக்குமே எதுவுமே கரிசனைக்குட்பட்டவை அல்ல. 

🥺

அப்படியென்றால் நீங்களாவது கொண்டுவந்து போடுங்கோவன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ரஸ்ஸிய ஆக்கிரமிப்பிற்கெதிரான போரில் உக்ரேனுக்கு பல ராணுவ உபகரணங்களை அமெரிக்கா வழங்கிவருகிறது. இவற்றுள் அதி நவீன ஹிமாஸ் ஏவுகணைகள், ஜவலின் ஏவுகணைகள், பேட்ரியட் ஏவுகணைத் தடுப்பு ஏவுகணைகள், பிராட்லி சண்டை வாகனங்கள், ஸ்ட்ரைக்கர் சண்டை வாகனங்கள் என்று வழங்கப்பட்டு தற்போது ஏப்ரகாம்  தாங்கிகளில் 31 இனையும் வழங்க அமெரிக்கா தயாராக இருக்கிறது. எப் - 16 சண்டை விமானங்களில் உக்ரேனிய விமானிகள் பயில்வதற்கு பைடன் அனுமதியளித்திருக்கிறார். சிலவேளை இந்த விமானங்கள் உக்ரேனுக்கு வழங்கப்படலாம். 

ஆக, அமெரிக்க ராணுவ வாகனங்களும் உபகரணங்களும் உக்ரேனுள் இருப்பது வெளிப்படை. அவ்வாறானதொரு வாகனத் தொகுதியை உக்ரேன் அரசு, புட்டினுக்கெதிராகப் போராடும் ரஸ்ஸியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கியிருக்கலாம். 

அமெரிக்கா தனது ராணுவ உபகரணங்களை ரஸ்ஸியாவினுள் நேரடியாக அனுப்பி வலுக்கட்டாயமாக சண்டையினை உருவாக்காது. ரஸ்ஸியாவினுடனான நேரடிச் சண்டையொன்றை அமெரிக்கா விரும்பாது. மொஸ்கோவில் நடந்த ட்ரோன் தாக்குதலை அமெரிக்கா வரவேற்றிருக்கவில்லை. அதேபோல, நேற்றைய தாக்குதலில் அமெரிக்க வாகனங்கள் பாவிக்கப்பட்டமையும் பெரிதாக வரவேற்கப்படவில்லை.

ஆனால், உக்ரேனுக்கு தான் செய்யும் ராணுவ உதவியை நிறுத்தப்போவதில்லை. மக்களின் அழிவு பற்றி இப்போது எவருமே பேசுவதாகத் தெரியவில்லை என்பதுதான் வேதனை.

Edited by ரஞ்சித்
வேதனை.
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ragaa said:

அப்படியென்றால் நீங்களாவது கொண்டுவந்து போடுங்கோவன்

டொலர், யூறோ செய்திகள்தான் உங்களுக்குப் பிடிக்கும்.

யுவான், ரூபிள், ரெம்பிற், றான்ட், புலா, டினார் செய்திகள் எல்லாம் கறுப்புப் பட்டியலுக்குள் வந்துவிடுமே. பிறகெப்படி நான் செய்திகளை மேற்கோள் காட்டுவதாம் 😀

Posted
53 minutes ago, Kapithan said:

டொலர், யூறோ செய்திகள்தான் உங்களுக்குப் பிடிக்கும்.

யுவான், ரூபிள், ரெம்பிற், றான்ட், புலா, டினார் செய்திகள் எல்லாம் கறுப்புப் பட்டியலுக்குள் வந்துவிடுமே. பிறகெப்படி நான் செய்திகளை மேற்கோள் காட்டுவதாம் 😀

மொத்த அறிவையும் கறுப்புப் பட்டியலுக்குள் அடக்காமல் வெளியில் வந்து தேடிப் பாருங்கள். 🙂

https://economictimes.indiatimes.com/topic/russian-rouble-ruble-news

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, இணையவன் said:

மொத்த அறிவையும் கறுப்புப் பட்டியலுக்குள் அடக்காமல் வெளியில் வந்து தேடிப் பாருங்கள். 🙂

https://economictimes.indiatimes.com/topic/russian-rouble-ruble-news

இணையவன் தனிப்பட்ட ரீதியில், காழ்ப்புணர்வுடன் எனது கருத்துக்களை நீக்குகிறாரா எனும் எனது குற்றச்சாட்டுக்கு இன்னமும் பதில் தரவில்லையே

😁

Posted
27 minutes ago, Kapithan said:

இணையவன் தனிப்பட்ட ரீதியில், காழ்ப்புணர்வுடன் எனது கருத்துக்களை நீக்குகிறாரா எனும் எனது குற்றச்சாட்டுக்கு இன்னமும் பதில் தரவில்லையே

😁

கபிதான்,

நீங்கள் இத் திரியில் முதலாவதாக எழுதிய கருத்து தவிர ஏனைய 5 கருத்துகளும் திரிக்குத் தேவையில்லாத உரையாடல்கள். இது போன்ற கருத்துகள் யாழுக்கு அவசியமற்றவை என்பதை நன்கு தெரிந்துகொண்டே எழுதுகிறீர்கள். ஆக்கபூர்வமாக நீங்கள் எழுதும் (அப்படி ஏதாவது எழுதியிருந்தால்) எந்தக் கருத்தும் நீக்கப்பட்ட மாட்டாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, இணையவன் said:

தனி மடலில் கேட்டிருந்தேன். பதிலில்லை. அதனால் இங்கே கேட்டேன்.  

உங்களைப்போன்ற பலர் தங்களுக்கு உவப்பான  பதில்களை எதிர்பார்க்கிறார்கள். உவப்பான பதிவுகளை எல்லா நேரமும் கொடுக்க முடியாதல்லவ?

மருந்து கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் குணப்படுத்தும். 

Posted
20 minutes ago, Kapithan said:

தனி மடலில் கேட்டிருந்தேன். பதிலில்லை. அதனால் இங்கே கேட்டேன்.  

உங்களைப்போன்ற பலர் தங்களுக்கு உவப்பான  பதில்களை எதிர்பார்க்கிறார்கள். உவப்பான பதிவுகளை எல்லா நேரமும் கொடுக்க முடியாதல்லவ?

மருந்து கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் குணப்படுத்தும். 

தனிமடலிலும் இதே மாதிரியான பதிலைத்தான் உங்களுக்குத் தந்திருந்தேன். விதண்டாவிதமாக எழுதிவிட்டு அதற்காக வாதிடும் உங்களுடன் தனிமடலில் உரையாடுவது நேர விரயம் என்பதால் அதற்கு மேல் பதில் தரவில்லை. 

நேரடியாகச் சொல்வதானால் பொழுதுபோக்குத் திரிகள் தவிர்த்து ஏனையவற்றில் விதண்டாவாதக் கருத்துகளும் வீண் புலம்பல்களும் யாழின் வளர்ச்சிக்குப் பாதகமானவை. அவை தொடர்ந்தும் நீக்கப்படும்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, Kapithan said:

தனி மடலில் கேட்டிருந்தேன். பதிலில்லை. அதனால் இங்கே கேட்டேன்.  

உங்களைப்போன்ற பலர் தங்களுக்கு உவப்பான  பதில்களை எதிர்பார்க்கிறார்கள். உவப்பான பதிவுகளை எல்லா நேரமும் கொடுக்க முடியாதல்லவ?

மருந்து கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் குணப்படுத்தும். 

எங்குமே  சில  கட்டுப்பாடுகள்  உண்டு

விதிமுறைகள்  உண்டு

அது  குடும்ப  வாழ்வாக  இருந்தாலும்

பொது  வாழ்வாக  இருந்தாலும்

ஏன் வேலையாக  இருந்தாலும் கூட....

எப்பொழுது விதிமுறைகள் கட்டுப்பாடுகளுக்குள் இயங்கும் ஒரு சமூகமாக நாம்  மாறப்போகின்றோம்???

இது என்னையும் சேர்த்துத்தான் சகோ....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

எங்குமே  சில  கட்டுப்பாடுகள்  உண்டு

விதிமுறைகள்  உண்டு

அது  குடும்ப  வாழ்வாக  இருந்தாலும்

பொது  வாழ்வாக  இருந்தாலும்

ஏன் வேலையாக  இருந்தாலும் கூட....

எப்பொழுது விதிமுறைகள் கட்டுப்பாடுகளுக்குள் இயங்கும் ஒரு சமூகமாக நாம்  மாறப்போகின்றோம்???

இது என்னையும் சேர்த்துத்தான் சகோ....

கருத்திற்குப் பதில் கருத்து எழுதும்போது கூறப்பட்டுள்ள கருத்திற்குத்தான் பதில் எழுத முடியும். எப்போதும் தலையங்கத்துடன் மட்டும் நிற்க முடியாது. கிளைக் கருத்துகள் வரத்தான் செய்யும். 

உதாரணமாக எனது கருத்திற்கு நீங்கள் கருத்தெழுதினால் நான் அதற்கு பதில் எழுத வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் முதன்மைக் கருத்திலிருந்து விலக வேண்டி ஏற்படும். இது இயல்பானது. உங்களுக்கு பதில் எழுதும்போது அதை எவ்வாறு பிழையென்று கூற முடியும்? 

இணையவன் ரஸ்ய உக்ரேன் யுத்தத்தில் சார்பு நிலையெடுத்துவிட்டார். நடுநிலையாளர் அல்ல. அவர் தனக்கு உவப்பில்லாத கருத்துக்களை, குறிப்பாக எனது கருத்துக்களை தொடர்ச்சியாக நீக்குகிறார். மட்டுறுத்தினர் எனும் நிலை அவருக்கு உதவுகிறது. 

மற்றும்படி கட்டுப்பாடுகளுக்கு நான் எதிரானவன் அல்ல. 

மெலே நிழலி, நான் யாழ் களத்தில் செய்திகளை இணைப்பவர்களைக் குறைகூறியதாகக் கூறியுள்ளார். ஆனால் நான் அப்படி யாரையுமே கூறவில்லை. செய்திகளை இணைக்காவிட்டால் யாழின் நிலை என்னாகும் என்பது எனக்குத் தெரியும். 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.