Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இளவரசர் ஹரியைப் பிரிய மேகன் திட்டம்: பரபரப்பை ஏற்படுத்திவரும் தகவல் | Meghan Plans To Break Up With Prince Harry

இளவரசர் ஹரியைப் பிரிய மேகன் திட்டம்: பரபரப்பை ஏற்படுத்திவரும் தகவல்

இளவரசர் ஹரியைப் பிரிய அவரது மனைவியான மேகன் திட்டமிடுவருவதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் கூறியுள்ள விடயம் தொடர்பிலான செய்திகள் பிரித்தானிய ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.

குழந்தைகளையும் பிரிக்கத் திட்டம்

ராஜ குடும்ப எழுத்தாளரான ஏஞ்சலா லெவின் என்பவர், இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகன், மெல்ல தன்னை ஹரியிடமிருந்து பிரிப்பதாகவும், தன் பிள்ளைகளையும் தானே பொறுப்பெடுத்துக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே, ஹரி மேகன் உறவில் பிரச்சினை உருவாகியுள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவிவருகின்றன. 

உறுதி செய்வதுபோல் நிகழ்ந்த சம்பவம்

இதற்கிடையில், வதந்திகளாக பரவிவரும் செய்திகளை உறுதி செய்வது போல் ஒரு விடயம் நிகழ்ந்துள்ளது. ஆம், மே மாதம் 19ஆம் திகதி, ஹரி மேகனுடைய திருமண நாள். ஆனால், தங்கள் ஐந்தாவது திருமண ஆண்டுவிழாவை தம்பதியர் பெரிதாக கொண்டாடவில்லை.

இந்நிலையில், ராஜ குடும்பத்தைக் குறித்து பல புத்தகங்கள் எழுதியுள்ள ஏஞ்சலா லெவின், மேகன் ஹரியைப் பிரிய திட்டமிட்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.

இளவரசர் ஹரியைப் பிரிய மேகன் திட்டம்: பரபரப்பை ஏற்படுத்திவரும் தகவல் | Meghan Plans To Break Up With Prince Harry

ஹரி மேகன் தம்பதியரின் திருமண வாழ்வு மோசமாக சிதைந்துவிட்டதாக தெரிவித்துள்ள ஏஞ்சலா, ஹரி மோசமான மன நிலைமையில் இருக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் அவருடன் இருக்கவேண்டிய மேகனோ விலகிப்போகிறார்.

முன்பே இது குறித்து கவனமாக திட்டமிட்டு வைத்திருந்த மேகன், இதற்காகவே காத்திருந்ததுபோல, இப்போது தன் குழந்தைகளையும் பிரித்துக்கொண்டு ஹரியை விட்டுப் பிரிய திட்டமிடுகிறார் என்கிறார் ஏஞ்சலா.

Posted

சில மாதங்களுக்கு முன்  கரி விவாகரத்து சட்டத்தரணியிடம் தொடர்பு  கொண்டதாக சொல்லப்படுகிறது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இரண்டு பிள்ளைகளை பெற்று விட்டால், கதை சரி.

பிள்ளைகளுக்கு, மில்லியன் கணக்கில் அரச குடும்பம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும். மேகன் வாழ்க்கை அமோகமாக செட்டில்.

இந்த இளவரசரை பிடித்து தொங்க வேண்டியதில்லை. முன்னமே, ஒருவரை 5 நிமிட வாக்குவாதத்தில், கடாசி எறிந்துவிட்டு வந்தவர் தான் இந்த பெண்மணி.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 அரச குடும்பத்தினரினை அனுசரித்து செல்வது என்பது அவ்வளவு எளிதல்ல. அதேநேரம் பணத்தை நாடி ஓடும் உலகிற்கு போதும் என்று ஒன்று இல்லை. 

Edited by விசுகு
Posted

மேகன், ஐ யாம் வெயிட்டிங் 😄

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது மிகவும் பூகோள முக்கியத்துவம் வாய்ந்த செய்தி!😎 ஹரி- மேகன் விவாகரத்து வதந்தி உண்மையானால், பணவீக்கம் முதல் உலக அணுவாயுத மோதல் வாய்ப்புகள் வரை பரந்த அளவில் விளைவுகள் ஏற்படலாம், எனவே மக்கள் இதைப் பற்றி வாசித்து, விவாதித்து அறிந்து கொள்ள வேண்டும்!

பகிடி, ஒரு பக்கம் இருக்கட்டும், சீரியசாகப் பார்ப்போம்:

இந்த வதந்தி மே மாத ஆரம்பத்தில் முதலில் வெளிவந்தது GB News என்ற பிரிட்டன் ஊடகத்தில். வதந்தியின் முதல் மூலம் சமந்தா மார்கல் - மேகன் மார்கலின் சகோதரி, தனக்குப் பணத்தட்டுப்பாடு ஏற்படும் போதெல்லாம் இப்படி ஏதாவது ஒரு ஊடகத்தில் எதையாவது சொல்லி, மேலதிக நேர்காணல்களுக்கு வழியேற்படுத்திக் கொள்ளும் ஒரு "மனித ஒட்டுண்ணி" போன்றவர் தான் இந்த சமந்தா மார்கல்! வதந்தியின் இரண்டாவது மூலம், லேடி C என்று அழைக்கப் படும், இன்றும் பரம்பரைச் சொத்தில் வாழும் இன்னொரு சோசியலைற் பாட்டியம்மா😂!

இந்த இருவரையும் பி.பி.சி, கார்டியன், இன்டிபென்டன்ற் போன்ற தகவல் தரக்கட்டுப்பாடு பேணும் ஊடகங்கள் கணக்கிலெடுப்பதில்லை, எனவே குட்டிச் சுவர் ஊடகங்களை நாடியிருக்கிறார்கள். இந்த tabloid செய்தியை இரண்டு வாரங்கள் கழித்து தமிழ் ஊடகங்களும் பிரதி செய்து தமிழ் செய்தி ஊடகங்களின் செல்திசையை தெளிவாகக் காட்டியிருக்கின்றன எனக் கருதுகிறேன்.

இது போன்ற வதந்தி செய்திகளால் யாழ் சேர்வரை நிரப்புவது அவசியமா? இது என் அபிப்பிராயம் மட்டுமே.

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

மேகன், ஐ யாம் வெயிட்டிங் 😄

இதை ஹரி, வாசித்தார் என்றால்…
”வெந்த புண்ணிலை, வேல்… பாய்ச்சின மாதிரி இருக்கும்.” 🤪 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, நிழலி said:

மேகன், ஐ யாம் வெயிட்டிங் 😄

அரசனையே விட்டுட்டு  வாறார்

வசதி  எப்படி???
🤪

Edited by விசுகு
பிழை திருத்தம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, விசுகு said:

அரசனையே விட்டுட்டு  வாறார்

வசதி  எப்படி???
🤪

நிழலி…. ஆயுள் முழுவதும் உழைத்த பணம்,
மேகனின்… ஒரு நாள் செலவுக்கு காணாது. 😂
இது… யானையை கட்டி, தீனி போடுற விசயம் எண்டு…
அந்த கனடாக்காரரின் காதிலை சொல்லி விடுங்கோ விசுகர். 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, Nathamuni said:

இரண்டு பிள்ளைகளை பெற்று விட்டால், கதை சரி.

பிள்ளைகளுக்கு, மில்லியன் கணக்கில் அரச குடும்பம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும். மேகன் வாழ்க்கை அமோகமாக செட்டில்.

இந்த இளவரசரை பிடித்து தொங்க வேண்டியதில்லை. முன்னமே, ஒருவரை 5 நிமிட வாக்குவாதத்தில், கடாசி எறிந்துவிட்டு வந்தவர் தான் இந்த பெண்மணி.

நாதம்ஸ்… ஹரி, அரச குடும்பத்தில் இருந்து விலகி விட்டார்.
ஆனபடியால்… அவர் சாதாரண மனிதனே.
வேணும் என்றால், மேகனின்  பிள்ளைகளுக்கு… பால்மாவும், “பம்பர்ஸ்”சும் வாங்க காசு கிடைக்கலாம். 😂

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

நிழலி…. ஆயுள் முழுவதும் உழைத்த பணம்,
மேகனின்… ஒரு நாள் செலவுக்கு காணாது. 😂
இது… யானையை கட்டி, தீனி போடுற விசயம் எண்டு…
அந்த கனடாக்காரரின் காதிலை சொல்லி விடுங்கோ விசுகர். 🤣

இந்த விஷயத்தில் நான் தம்பிக்கு புத்தி சொல்லமுடியாது ராசா 🤪

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

மேகன், ஐ யாம் வெயிட்டிங் 😄

மொட்டைத்தலையும், கூலிங் கிளாசிலை யங்கா தெரிஞ்ச மாதிரியிருக்கு இப்ப அப்படி தெரீல்ல எண்டப்போகுது மனசி! 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, விசுகு said:

இந்த விஷயத்தில் நான் தம்பிக்கு புத்தி சொல்லமுடியாது ராசா 🤪

Mac Looking GIF - Mac Looking - Discover & Share GIFs

அதுவுஞ் சரிதான் விசுகர்.
உங்க தம்பி.... இந்த விசயத்திலையும், சாப்பாட்டு விசயத்திலையும் சொல்வழி கேளார்.
ஹ்ம்... பட்டுத்தான் தெளிய வேணுமெண்டால், ஒண்டும் செய்ய ஏலாது.
நாங்கள்... வழக்கம் போலை, மிக  உன்னிப்பாக அவதானிப்போம். 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
58 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்… ஹரி, அரச குடும்பத்தில் இருந்து விலகி விட்டார்.

அது ஹரீயன்...

பேரப்பிள்ளையள் கஸ்டப்படுகினம் எண்டால், ராசாவை வறுத்தெடுப்பாங்கள் மீடியாக்காரர்.

போரீஸ் பெக்கர் இப்படித்தான் மாட்டுப்பட்டவர்....

பணக்காரருக்கு இது ஒரு பெரீய பிரச்சணை. அழகான பெண், கொஞ்சநாளைக்கு வைச்சு மேய்ப்பம் எண்டு கிளம்ப, அந்த பெண் கருத்தடை மாத்திரை ஒழுங்கா எடுக்கிறன் பயப்படாதீங்க எண்டதை நம்பீ..... 🥶 மாட்டியவர்களில் அண்மைய பிரிட்டிஸ் பிரதமர் போரீஸ் ஜோன்சனும் ஒருவர். கடைசீல கலியாணத்தில முடிஞ்சுது!

ஜீவனாம்சம் பிள்ளைகளுடன் அவர்களை பார்க்கும் தாய்க்கும்.... அதனால் பெண்கள் இவ்விசயத்தில்.... மட்டும்... முன்புத்தி...😁

இவர்கள், ஆண் கருத்தடை ஆப்பிரேசன் செய்யிறது புத்தி... தகப்பன் இவர்தான் எண்டால் பயப்படாம டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சொல்லலாம். 😍

 

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

இதை ஹரி, வாசித்தார் என்றால்…
”வெந்த புண்ணிலை, வேல்… பாய்ச்சின மாதிரி இருக்கும்.” 🤪 🤣

ஹரி. வாசிக்கத் தான் எழுதியிருக்கிறார்   ......அது மேகன்.  இல்லை   மோகன்   என்று சொல்லி விடலாம்    🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
21 minutes ago, Nathamuni said:

அது ஹரீயன்...

பேரப்பிள்ளையள் கஸ்டப்படுகினம் எண்டால், ராசாவை வறுத்தெடுப்பாங்கள் மீடியாக்காரர்.

போரீஸ் பெக்கர் இப்படித்தான் மாட்டுப்பட்டவர்....

பணக்காரருக்கு இது ஒரு பெரீய பிரச்சணை. கொஞ்சநாளைக்கு வைச்சு மேய்ப்பம் எண்டு கிளம்ப, அந்த பெண் கருத்தடை மாத்திரை ஒழுங்கா எடுக்கிறன் பயப்படாதீங்க எண்டதை நம்பீ..... 🥶 மாட்டியவர்களில் அண்மைய பிரிட்டிஸ் பிரதமர் போரீஸ் ஜோன்சனும் ஒருவர்.

இவர்கள், ஆண் கருத்தடை ஆப்பிரேசன் செய்யிறது புத்தி... 😍

இவர்கள் பலரை திருமணம் செய்யும் ஆசையில் இருப்பதால்,
ஆண்கள் கருத்தடை ஆபரேஷன் பண்ண, 
லேசில் சம்மதிக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன். 
ஆண்  கருத்தடை பண்ணினது இவர்களுக்கு பின்பு தெரிந்தால்,
இளவரசன் என்றும் பார்க்காமல்... ஏறி... மிதி, மிதி... என்று, மிதித்து விட்டு போய் விடுவார்கள். 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, தமிழ் சிறி said:

இவர்கள் பலரை திருமணம் செய்யும் ஆசையில் இருப்பதால்,
ஆண்கள் கருத்தடை ஆபரேஷன் பண்ண, 
லேசில் சம்மதிக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன். 
ஆண்  கருத்தடை பண்ணினது இவர்களுக்கு பின்பு தெரிந்தால்,
இளவரசன் என்றும் பார்க்காமல்... ஏறி... மிதி, மிதி... மிதித்து விட்டு போய் விடுவார்கள். 🤣

🤣

ஹரி சின்னப்பெடியன். நான் சொல்லுறது காசுகார கிழவர்களை.

ஆகக்குறைந்து, தற்காலிக வெட்டு ஆவது செய்யிற புத்தி. 😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
43 minutes ago, Kandiah57 said:

ஹரி. வாசிக்கத் தான் எழுதியிருக்கிறார்   ......அது மேகன்.  இல்லை   மோகன்   என்று சொல்லி விடலாம்    🤣

Sale > vadivelu water comedy > in stock

நாங்கள், ஹரி கேட்டால்.. என்ன சொல்லுறது எண்டு யோசித்துக் கொண்டிருந்தனாங்கள்.  😜
நீங்கள் சொன்ன மாதிரி, மோகன் என்று சொல்லி தப்பி விடலாம்.   நல்ல யோசனை. 👍 😂
ஆனால்... அடித்துக் கூட கேட்பார்கள், அப்பவும்  மேகன் என்று சொல்லிப் போடாதேங்கோ... 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
24 minutes ago, Nathamuni said:

🤣

ஹரி சின்னப்பெடியன். நான் சொல்லுறது காசுகார கிழவர்களை.

ஆகக்குறைந்து, தற்காலிக வெட்டு ஆவது செய்யிற புத்தி. 😍

animiertes-arzt-bild-0007.gif  animiertes-arzt-bild-0020.gif

காசுக்கார கிழவர்கள்.... அதில்,  🔪  கத்தி... ✂️ வைக்க விட மாட்டார்கள். 😂
பிரச்சினை  முத்தினாப்  பிறகு தான், ஆபரேஷன் செய்திருக்கலாமே என்று யோசிப்பார்கள்.
அதற்கிடையில்... செய்தி உலகம் எல்லாம் பரவி, அவர்களை திக்கு முக்காட  வைத்து விடும். 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, Nathamuni said:

இவர்கள், ஆண் கருத்தடை ஆப்பிரேசன் செய்யிறது புத்தி... த

இப்படி எல்லா ஆண்களும் கருத்தடை  ஆப்பிரேசன்.   செய்தால்    உலகில் மனித இனம் அழிந்துவிடும்   🤣😂. இவ்வாறு சொல்வோர்.   ஏற்கனவே பிறந்து விட்டார்கள்   இனி பிறக்க போகிறாவர்களை     தடை செய்வதும்     ஒரு கொலை தான்    எனவே… இந்த யோசனைக்கு .  கண்டனங்களைத் தெரிவிக்கிறேன் 🙏😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் முதலே சொன்னனான்!🙄

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, நிழலி said:

மேகன், ஐ யாம் வெயிட்டிங் 😄

தம்பியர்! ஹரியன்   கட்டப்போற சுளையான ஜீவானாம்ச காசுக்கு ஆசைப்படுறார் :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, குமாரசாமி said:

தம்பியர்! ஹரியன்   கட்டப்போற சுளையான ஜீவானாம்ச காசுக்கு ஆசைப்படுறார் :rolling_on_the_floor_laughing:

தம்பியருக்கு… மேகன் மட்டும்தான் வேணுமாம். 😂
அந்த இரண்டு குழந்தைகளையும், தகப்பன்காரன் ஹரியிட்டை விட்டுட்டு வரட்டாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, நிழலி said:

மேகன், ஐ யாம் வெயிட்டிங் 😄

வீட்டில் பொஸ்  இல்லாத நேரத்தில் சிங்கம் என்றி   பண்ணியிருக்கு எண்டு நினைக்கிறன் 😀

10 hours ago, Justin said:

இது மிகவும் பூகோள முக்கியத்துவம் வாய்ந்த செய்தி!😎 ஹரி- மேகன் விவாகரத்து வதந்தி உண்மையானால், பணவீக்கம் முதல் உலக அணுவாயுத மோதல் வாய்ப்புகள் வரை பரந்த அளவில் விளைவுகள் ஏற்படலாம், எனவே மக்கள் இதைப் பற்றி வாசித்து, விவாதித்து அறிந்து கொள்ள வேண்டும்!

பகிடி, ஒரு பக்கம் இருக்கட்டும், சீரியசாகப் பார்ப்போம்:

இந்த வதந்தி மே மாத ஆரம்பத்தில் முதலில் வெளிவந்தது GB News என்ற பிரிட்டன் ஊடகத்தில். வதந்தியின் முதல் மூலம் சமந்தா மார்கல் - மேகன் மார்கலின் சகோதரி, தனக்குப் பணத்தட்டுப்பாடு ஏற்படும் போதெல்லாம் இப்படி ஏதாவது ஒரு ஊடகத்தில் எதையாவது சொல்லி, மேலதிக நேர்காணல்களுக்கு வழியேற்படுத்திக் கொள்ளும் ஒரு "மனித ஒட்டுண்ணி" போன்றவர் தான் இந்த சமந்தா மார்கல்! வதந்தியின் இரண்டாவது மூலம், லேடி C என்று அழைக்கப் படும், இன்றும் பரம்பரைச் சொத்தில் வாழும் இன்னொரு சோசியலைற் பாட்டியம்மா😂!

இந்த இருவரையும் பி.பி.சி, கார்டியன், இன்டிபென்டன்ற் போன்ற தகவல் தரக்கட்டுப்பாடு பேணும் ஊடகங்கள் கணக்கிலெடுப்பதில்லை, எனவே குட்டிச் சுவர் ஊடகங்களை நாடியிருக்கிறார்கள். இந்த tabloid செய்தியை இரண்டு வாரங்கள் கழித்து தமிழ் ஊடகங்களும் பிரதி செய்து தமிழ் செய்தி ஊடகங்களின் செல்திசையை தெளிவாகக் காட்டியிருக்கின்றன எனக் கருதுகிறேன்.

இது போன்ற வதந்தி செய்திகளால் யாழ் சேர்வரை நிரப்புவது அவசியமா? இது என் அபிப்பிராயம் மட்டுமே.

சார்வரை நிரப்புறம்  நிரப்புறம் அழுது  வடியாதீங்க  கொஞ்சமாவது றிலாகஸ் சா இருங்க 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, பெருமாள் said:

சார்வரை நிரப்புறம்  நிரப்புறம் அழுது  வடியாதீங்க  கொஞ்சமாவது றிலாகஸ் சா இருங்க 

ஆடி மாதம் யாழ் கதி.... முடிவு தெரியும் மட்டும் நிரப்புவமே 🤣

  • Haha 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகளை அழித்ததுற்காக இலங்கை ஈராணுவத்தை பாராட்டி பாரளுமன்றத்தில் பேசிய சம்பந்தனை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். இன அழிப்பின் இரத்தம்காயும்முன் இன அழிப்பின முக்கிய சூத்திரதாரியான சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழர்கள் சீமான் இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்தியதை விமர்சிப்பது வேடிக்கையானது. எனக்கும் ஆது உடன்பாடில்லாத போதிலும் சீமானைத்தவிர காங்கிரசை மூர்க்கமாக வேறு யாரும் எதிர்க்கப் போவதில்லை என்பது தான் உண்மை.இன அழிப்பின் பிரதான பொறுப்பாளர் மகிந்த இராஜபக்சவின் கட்சியில் இன அழிப்பின் இரத்தம் காயமுன்னமே  இணைந்து தேர்தலில் நின்ற சாணக்கியரன தமிழரசுக்கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் உள்ளவர்களுக்கெல்லாம். சீமானின் இந்தச் செயல் கோபத்தை ஏற்படுத்தியிருப்பது. உண்மையில் கோபப்பட வேண்டியது மானை ஆதரப்பவர்களே அதற்கான உரிமையும் எங்களுக்கு இருக்கிறது. சீமாhனின் இறத்ச் செயலை நான் விமர்சிக்கிறேன். ஆனால் சீமான்  காங்கிரஸ் எதிர்ப்பில் எல்லோரையும் விட உறுதியாக இருப்பார் என்பதையும் இந்த இடத்தில் கூறிவைக்கிறேன்.
    • இன்னும் ஐந்து வருடங்களில் இரண்டாவது மொழியை கற்க தேவயற்று போகும் அந்தளவுக்கு a1 தொழில் நுட்பம் தலைவிரித்து ஆடுகிறது .
    • என்ன கேப்பில கொண்டெயினர் லொரி ஓட்டுறியள்? நான் விமர்சித்தது - உங்களை போல அனுரவுக்கு காவடி தூக்கும் ஆட்களை. அருச்சுனாவுக்கு நானே மானசீக தேர்தலில் வாக்கு போட்டேன். அனுரவுக்கு வாக்கு போட்டவர்களையும் விமர்சிக்கவில்லை. அருச்சுனா அணியில் மயூரன் போல நம்பிக்கையானவருக்கு போட்டிருக்கலாம் என்றே எழுதினேன்.  
    • Brexit என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியா (UK) உலகின் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தமான டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) 12ஆவது உறுப்பினராக பிரித்தனையா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.  இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடுகளுக்கிடையே உறவுகளை ஆழப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் தனது உலகளாவிய வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் பிரித்தானியா முயற்சிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  உள்நாட்டு உற்பத்தி இந்த கூட்டுறவில் ஜப்பான், அவுஸ்திரேலியா, கனடா போன்ற 11 நாடுகள் உறுப்பினராக உள்ளன. தற்போது, பிரித்தானியா இணைவதன் மூலம், ப்ரூனே, சிலி, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் பிரித்தானியாவுக்கான வர்த்தக வரிகள் குறைக்கப்படும். இப்புதிய திட்டத்தின் மூலம் பிரித்தானியா, 2 பில்லியன் பவுண்டுகள் வருமானத்தை எதிர்பார்க்கின்ற போதிலும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.1வீதத்திற்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆட்சி சார்ந்த முக்கியத்துவம் பெறுகிறது, இதன் மூலம் சீனா மற்றும் தாய்வான் போன்ற புதிய நாடுகளின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் பிரித்தானியா பங்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/uk-to-join-massive-trade-deal-1734286828
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.