Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரேன் மீது அணு ஆயுதத் தாக்குதல்? அதிர்ச்சியில் உலக நாடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் மீது  அணு ஆயுதத் தாக்குதல்? அதிர்ச்சியில் உலக நாடுகள்

உக்ரேன் மீது  அணு ஆயுதத் தாக்குதல்? அதிர்ச்சியில் உலக நாடுகள்

”தேவை ஏற்படின் உக்ரேன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷ்யா தயங்காது” என பெலரஸ் ஜனாதிபதி  அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது தற்போது தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில்  பெலரஸின் ஜனாதிபதியும் ரஷ்ய ஜனாதிபதியின் நெருங்கிய நண்பருமான அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ள இக்கருத்தானது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” எனது நாட்டின் மீது ஆக்கிரமிப்பு ஏதேனும் நடந்தால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் நாம் தயங்க மாட்டோம் .

அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய ஒரு அவசியத்தை கடவுள் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். ஆனால் எங்கள் நாட்டின் மீது ஆக்கிரமிப்பு நடந்தால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயங்க மாட்டோம்.

ரஷ்ய ஜனாதிபதி புடினை எமது  நாட்டில், தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.  தனது நாட்டின் மீது தாக்குதல்  நடக்க அதிகளவான சாத்தியக்கூறுகள் இருப்பதால் இதனைச் செய்தாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்”

இவ் அறிவிப்பானது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://athavannews.com/2023/1334826

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவன்  ணியூசத் தவிர வேறெங்கும் இப்படியான செய்தி வந்துள்ளதா ?

  • கருத்துக்கள உறவுகள்

Lukashenko warned he would not hesitate to use the weapons in response to potential aggressors.

“Why do we need them? To make sure not a single foreign soldier sets their foot on the Belarusian land again,” he said.

“God forbid that I have to make a decision to use these weapons. But there will be no hesitation in the event of an aggression against us.”

This marks the first time since the fall of the Soviet Union that Moscow has moved warheads outside of the country.
 
https://www.aljazeera.com/amp/news/2023/6/13/russian-tactical-weapons-to-be-deployed-to-minsk-in-days

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஆதவன்  ணியூசத் தவிர வேறெங்கும் இப்படியான செய்தி வந்துள்ளதா ?

ஆதவனின்... தலைப்பு எப்பிடி இருக்கு?
நான் பார்த்துவிட்டு, நேற்று ராத்திரி உக்ரைனிலை அணுகுண்டு விழுந்திட்டுது 
என்று நினைத்து விட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

Lukashenko warned he would not hesitate to use the weapons in response to potential aggressors.

“Why do we need them? To make sure not a single foreign soldier sets their foot on the Belarusian land again,” he said.

“God forbid that I have to make a decision to use these weapons. But there will be no hesitation in the event of an aggression against us.”

This marks the first time since the fall of the Soviet Union that Moscow has moved warheads outside of the country.
 
https://www.aljazeera.com/amp/news/2023/6/13/russian-tactical-weapons-to-be-deployed-to-minsk-in-days

உக்ரேன் மீது  அணு ஆயுதத் தாக்குதல்? அதிர்ச்சியில் உலக நாடுகள் 
 
மட்டுப்படுத்தப்பட்ட  அணு ஆயுதப் பிரயோகம் தொடர்பாக தற்போதும் பலர் தமது அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகிறார்கள்.  இது உக்ரேன் ரஸ்ய யுத்தத்தின் ஆரம்பத்திலேயிருந்து தொடர்கிறது. 

ஆனால் உக்ரேன் மீது அணுஆயுதத் தாக்குதல் நடாத்தப்படுமென்று எவரும் கூறியதாக நான் அறியவில்ல. ஆதவன் நியூசைத் தவிர.

🤨

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

ஒரு பிட்டை கூட அடிச்சு விடுகிறது.🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ஒரு பிட்டை கூட அடிச்சு விடுகிறது.🙂

 எக்ஸ்டரா பிட் எண்டாலும் பலருக்கு சந்தோசம் தரும் பிட்டு தானே சகோ...🤭

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Sasi_varnam said:

 எக்ஸ்டரா பிட் எண்டாலும் பலருக்கு சந்தோசம் தரும் பிட்டு தானே சகோ...🤭

உண்மை கசக்கும் என்பதால் சரியான/உண்மையான accurate  தகவல்களை பலரும் விரும்புவதில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக வல்லாதிக்க போட்டி எதிர்பார்த்தது போல புதிய நாடுகளை உருவாக்கும் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உலக வல்லாதிக்க போட்டி எதிர்பார்த்தது போல புதிய நாடுகளை உருவாக்கும் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. :cool:

இந்தப் பிரளயத்தில் தமிழீழமும் தமிழ்நாடும் உருவாகிவிட்டால் அதைப்போல மகிழ்ச்சியுண்டா? சாவதற்கிடையில் அதைக் கண்டுவிடவேண்டுமென்றுதான் ஆசையாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, karu said:

இந்தப் பிரளயத்தில் தமிழீழமும் தமிழ்நாடும் உருவாகிவிட்டால் அதைப்போல மகிழ்ச்சியுண்டா? சாவதற்கிடையில் அதைக் கண்டுவிடவேண்டுமென்றுதான் ஆசையாக இருக்கிறது.

அப்படி உன்டு உருவானால் சிங்கள தமிழ் அரசியலி வாதிகளுக்கு அரசியல் செய்ய ஒன்டும் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

 எக்ஸ்டரா பிட் எண்டாலும் பலருக்கு சந்தோசம் தரும் பிட்டு தானே சகோ...🤭

அணு ஆயுதம் சசி. மனித இனத்தையே இல்லாமல் செய்து விடும்.இது பற்றி எந்த ஊடகம் எனினும் பொறுப்புடன் அல்லவா எழுத வேண்டும்.?

2 hours ago, karu said:

இந்தப் பிரளயத்தில் தமிழீழமும் தமிழ்நாடும் உருவாகிவிட்டால் அதைப்போல மகிழ்ச்சியுண்டா? சாவதற்கிடையில் அதைக் கண்டுவிடவேண்டுமென்றுதான் ஆசையாக இருக்கிறது.

நாம்( தமிழ் தலைமைகள்) இவற்றை நோக்கி செயற்படாவிட்டால் எட்டா பழம் புளிக்கும் கதையாக முடியும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

ஆதவனின்... தலைப்பு எப்பிடி இருக்கு?
நான் பார்த்துவிட்டு, நேற்று ராத்திரி உக்ரைனிலை அணுகுண்டு விழுந்திட்டுது 
என்று நினைத்து விட்டேன். 

கவலைப்பட வேண்டாம்....இப்போது விழவில்லை. என்று தெரியும் தானே  ?😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, karu said:

இந்தப் பிரளயத்தில் தமிழீழமும் தமிழ்நாடும் உருவாகிவிட்டால் அதைப்போல மகிழ்ச்சியுண்டா? சாவதற்கிடையில் அதைக் கண்டுவிடவேண்டுமென்றுதான் ஆசையாக இருக்கிறது.

சில வேளைகளில் புதிய சரித்திரங்கள் இங்கிருந்து தோற்றமாகலாம்.

முதுகில் குத்தும் பழக்கம் சீனாவுக்கு இல்லையென நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் மீது  அணு ஆயுதத் தாக்குதல்? அதிர்ச்சியில் உலக நாடுகள்]

புதிதாக ஒன்றும் இல்லை. ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமிக்க போர் தொடங்கிய போதே யாழ்களத்தில் படித்தவை தான். உக்ரேன் ஜனாதிபதிக்கு ஆக்கிரமிப்பை ஏற்கொள், முட்டாள்தனமாக எதிர்காதே  அடிபணிந்துவிடு  அல்லது... என்று தமிழர்களால் விடபட்ட எச்சரிக்கை தான்.

14 hours ago, சுவைப்பிரியன் said:

அப்படி உன்டு உருவானால் சிங்கள தமிழ் அரசியலி வாதிகளுக்கு அரசியல் செய்ய ஒன்டும் இருக்காது.

சதந்திர நாடானான உக்ரேன்னே ஆக்கிரமிக்கபடுகிறது அய்யா.

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் ஆக்கிரமிக்கப்படுவதோ 

அணுஆயுதம் அழிவுகளை பாதிப்போ பிரச்சினை இல்லை

உக்ரைனை அணுஆயுதத்தை பாவித்தாவது ரசியா வெல்லணும். அதனூடாக உலக ஒழுங்கு மாறணும்? அதன் பின்னர் உயிரினங்கள் இப்பூமியில் இருந்தால் தானே உலக ஒழுங்கை பார்க்க???

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nunavilan said:

அணு ஆயுதம் சசி. மனித இனத்தையே இல்லாமல் செய்து விடும்.இது பற்றி எந்த ஊடகம் எனினும் பொறுப்புடன் அல்லவா எழுத வேண்டும்.?

ஒரு கதைக்கு மனித குலத்துக்கு எதிரான ரஷ்ய பயங்கரவாதி புட்டின் கீவ் மீது தனது இயாலாத்தன்மையால் அணுவாயுதத்தை பயன்படுத்துகின்றார் என வைத்துக்கொள்வோம். அந்தப் பயங்கரவாதத்தை மிகவும் பொறுப்புடன் நியாயப்படுத்தி மேற்குலகின் மீது பொறுப்புடன் குற்றஞ்சாட்டும் பொறுப்பும் எங்களில் சிலருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, வாலி said:

இதுவரை உலகில் அணுக்குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட ஒரே ஒரு நாடு ...மெரிக்கா மட்டும்தான். 

ஞாபக மறதிக்கு அல்சைமர் என்கின்றன  பெயரும் உண்டு. 

😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

ஒரு கதைக்கு மனித குலத்துக்கு எதிரான ரஷ்ய பயங்கரவாதி புட்டின் கீவ் மீது தனது இயாலாத்தன்மையால் அணுவாயுதத்தை பயன்படுத்துகின்றார் என வைத்துக்கொள்வோம். அந்தப் பயங்கரவாதத்தை மிகவும் பொறுப்புடன் நியாயப்படுத்தி மேற்குலகின் மீது பொறுப்புடன் குற்றஞ்சாட்டும் பொறுப்பும் எங்களில் சிலருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அது நேட்டோவின் கேணை தனத்தை பொறுத்து தான் சொல்ல முடியும். ஆடறுக்க முதல்…….🙃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 ஆடறுக்க முதல்…….🙃

ஆடறுக்க முதல் …… என்ன? 

1 hour ago, nunavilan said:

அது நேட்டோவின் கேணை தனத்தை பொறுத்து தான் சொல்ல முடியும். 

நேட்டோவின் கேணைத்தனம் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, nunavilan said:

அது நேட்டோவின் கேணை தனத்தை பொறுத்து தான் சொல்ல முடியும். ஆடறுக்க முதல்…….🙃

நேட்டோவின் விரிவுபடுத்தல் ஏன் எதற்கு என்று தெரியாதவர்களுடன் உரையாடி என்ன பலன்? :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாலி said:

ஒரு கதைக்கு மனித குலத்துக்கு எதிரான ரஷ்ய பயங்கரவாதி புட்டின் கீவ் மீது தனது இயாலாத்தன்மையால் அணுவாயுதத்தை பயன்படுத்துகின்றார் என வைத்துக்கொள்வோம். அந்தப் பயங்கரவாதத்தை மிகவும் பொறுப்புடன் நியாயப்படுத்தி மேற்குலகின் மீது பொறுப்புடன் குற்றஞ்சாட்டும் பொறுப்பும் எங்களில் சிலருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

7 hours ago, வாலி said:

ஆடறுக்க முதல் …… என்ன? 

நேட்டோவின் கேணைத்தனம் என்ன?

முதலாவது பேரிச்சம்பழத்துக்கு ரஸ்யாவின் ஆயுதங்கள் இணையானவை என்ற 2ம் வகுப்பு சிந்தனையில் இருந்து வெளியில் வந்து போர்முனையில் நின்ற ஒரு நிபுணனின் கருத்தை கேளுங்கள்.
அமெரிக்காவின், ஐரோப்பாவின் அதி நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டும் உக்ரேன் பின் வாங்குவது ஏன்? 

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2023 at 22:16, nunavilan said:

முதலாவது பேரிச்சம்பழத்துக்கு ரஸ்யாவின் ஆயுதங்கள் இணையானவை என்ற 2ம் வகுப்பு சிந்தனையில் இருந்து வெளியில் வந்து போர்முனையில் நின்ற ஒரு நிபுணனின் கருத்தை கேளுங்கள்.
அமெரிக்காவின், ஐரோப்பாவின் அதி நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டும் உக்ரேன் பின் வாங்குவது ஏன்? 

கருத்துக்களை கருத்தால் எதிர்கொள்ள முடியாத நிலையில் ஒருவர் தனிமனிதத் தாக்குதலை நிகழ்த்த தொடங்குகிறார் என்பது யாழ்கள வரலாறு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.