Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் மோதியின் அமெரிக்க பயணம்: MQ-9B ரக ஆளில்லா விமானம் முக்கியமாக பேசப்படுவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரதமர் மோதியின் அமெரிக்க பயணம்

பட மூலாதாரம்,WWW.GA-ASI.COM

படக்குறிப்பு,

MQ-9B ரக ஆளில்லா விமானம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ராகவேந்திரா ராவ்
  • பதவி,பிபிசி செய்திகள்
  • 55 நிமிடங்களுக்கு முன்னர்

பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்க பயணத்தின் போது, அந்நாட்டிடமிருந்து 31 ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்கும் இந்தியாவின் திட்டம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் தான் இந்த தகவல் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அண்மையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஜெனரல் அட்டாமிக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து ஆயுதம் தாங்கிய MQ-9 ரக ஆளில்லா விமானங்களை வாங்க, ஆயுத கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

இருப்பினும், பாதுகாப்பு தொடர்பான கேபினட் அமைச்சரவை குழுவிடமிருந்து இந்த திட்டத்திற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

பிரதமர் மோதி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த பாதுகாப்பு உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, மொத்தமுள்ள 31 ஆளில்லா விமானங்களில் 15 இந்திய விமானங்கள் கடற்படைக்கும், ராணுவம் மற்றும் விமானப்படைக்கு தலா 8 விமானங்களும் வழங்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.

இந்த விமானங்களை கொள்முதல் செய்ய சுமார் ரூ. 25,000 கோடி (மூன்று பில்லியன் டாலர்கள்) செலவிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கான இந்தியாவின் முயற்சி, நாட்டின் ஆளில்லா பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பெரிய பகுதியாக இருக்கும்.

இந்த MQ-9 ரக விமானங்களைப் பயன்படுத்தி இந்தியா தனது எல்லைகளில் கண்காணிப்பு திறனை அதிகரிக்கவும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மிகவும் திறம்பட கையாளவும் உதவும் என்று நம்பப்படுகிறது.

இதுமட்டுமின்றி, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதுபோன்ற வெளிநாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் இந்த ஆளில்லா விமானங்கள் பயன்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோதியின் அமெரிக்க பயணம்

பட மூலாதாரம்,WWW.GA-ASI.COM

MQ-9 ரக ஆளில்லா விமானத்தின் சிறப்புக்கள் என்ன?

MQ9 ரக ஆளில்லா விமானங்களில், MQ9A மற்றும் MQ9B ஆகிய இரண்டு வகையான விமானங்கள் உள்ளன. இதில் MQ9A என்பது நில எல்லைகளைக் கண்காணிக்கவும், MQ9B என்பது கடல் எல்லைகளைக் கண்காணிக்கவும் பயன்படுகின்றன. இந்த இரண்டு வகை ஆளில்லா விமானங்களையும் வாங்க இந்தியா பரிசீலத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிரி நாட்டின் விமானங்கள் பறந்துகொண்டிருக்கும் போது, அவற்றை நோக்கி ஏவுகணைகளை ஏவவும், ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தவும் இந்த ஆளில்லா விமானங்கள் பேருதவியாக இருக்கும்.

MQ9 ரக ஆளில்லா விமானங்கள் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதுடன், உளவு பார்க்கும் பணிகளையும் மேற்கொள்ளும் திறன் கொண்டவை. இது மட்டுமின்றி, அவற்றின் ஆயுத தொகுப்பில் 'ஹெல்ஃபயர்' ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்கு மட்டுமின்றி, இந்த விமானங்கள் மூலம் ஆபத்து காலங்களில் பொதுமக்களுக்கு உதவி செய்தல், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட ஏராளமான வழிகளில் பயன்படுத்தமுடியும்.

இத்துடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடற்கொள்ளை போன்ற குற்றங்களைக் கண்காணித்து அவற்றை முறியடிக்கவும் இந்த விமானத்தைப் பயன்படுத்தலாம்.

மேலும், இந்த விமானங்கள் மழை, வெயில் என எந்த வானிலை நிலவினாலும், ஒரே நேரத்தில் சுமார் 30 முதல் 40 மணி நேரம் வரை பறக்கும் திறன் பெற்றவை. அதிகபட்சமாக இந்த விமானங்கள் 40,000 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டவை.

பிரதமர் மோதியின் அமெரிக்க பயணம்

பட மூலாதாரம்,WWW.GA-ASI.COM

நேட்டோ நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த விமானங்கள்

இது போன்ற ஆளில்லா விமானங்களை வாங்குவது குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், இதுபற்றி அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த முடிவு நீண்டகாலமாகவே கிடப்பில் போடப்பட்டிருந்திருக்கிறது.

பாதுகாப்புத் துறை குறித்து ஆய்வு செய்துவரும் ராகுல் பேடி இது பற்றிக் கூறுகையில், "இந்த விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா பெரும் முயற்சி செய்துள்ளது. விமானங்களைத் தயாரிக்கும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் தான் இதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டுவந்துள்ளது," என்றார்.

"இதற்கிடையே, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென ஆளில்லா விமானங்களை இந்தியா வாங்குவது குறித்து பேசப்பட்டது. மேலும் 30 விமானங்களுக்குப் பதிலாக 18 விமானங்கள் மட்டுமே வாங்க முதலில் முடிவெடுக்கப்பட்டிருந்தாலும், தற்போது அந்த எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இவற்றை இந்தியாவுக்கு விற்பனை செய்வதன் மூலம், பாதுகாப்புத் துறையில் அமெரிக்காவும் பாரபட்சமின்றிச் செயல்படுவதை வெளிக்காட்டிக் கொள்ள முயல்கிறது."

கடந்த 2016-ம் ஆண்டு ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் (Missile Technology Control Regime) அதிகாரபூர்வ உறுப்பினராக இந்தியா இணைந்ததிலிருந்து இந்த ஆளில்லா விமானங்களை வாங்குவது குறித்த பேச்சு தொடர்ந்து முக்கியத்துவம் பெறத் தொடங்கியது என்று ராகுல் பேடி கூறுகிறார்.

ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பின் உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடாமல் இருந்திருந்தால், இந்த ஆளில்லா விமானங்களைப் பெற்றிருக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

"அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பின் இந்த ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்க அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. இதுவரை 'நேட்டோ' நாடுகளுக்கு மட்டுமே இந்த விமானங்களை அமெரிக்கா வழங்கிய நிலையில் தற்போது, இந்தியாவுக்கும் வழங்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், நேட்டோவில் உறுப்பினராக இல்லாமல் இந்த விமானங்களை வாங்கும் முதல் நாடு என இந்தியாவுக்கு பெயர் கிடைக்கும்." என்கிறார் ராகுல் பேடி.

ராகுல் பேடியின் கூற்றுப்படி, இந்தியா இந்த ஆளில்லா விமானங்களை வாங்க விருப்பம் தெரிவித்தபோது, அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியாவுக்கு அவற்றை விற்பனை செய்ய அனுமதித்தது என்று தெரியவருகிறது.

இது தொடர்பாக அவர் பேசுகையில், "அப்போது ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைக்கு 30 ஆளில்லா விமானங்களை வாங்குவது பற்றி பேசப்பட்டது. ஆனால் இந்த ஆளில்லா விமானங்களின் விலை அதிகம் என்பதால் அதற்கு பதிலாக 18 விமானங்களை மட்டும் வாங்க இந்தியா முடிவு செய்தது. ஆனால் இப்போது திடீரென்று 31 விமானங்களை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது." என்கிறார் ராகுல் பேடி.

பிரதமர் மோதியின் அமெரிக்க பயணம்

பட மூலாதாரம்,WWW.GA-ASI.COM

குறைந்த செலவில் இந்த விமானங்களை இயக்கவோ, பராமரிக்கவோ முடியாது

இந்த ட்ரோன்களின் விலை மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், இவற்றை இயக்குதலும் செலவு மிக்க ஒன்றாகவே இருக்கும். எனவே இவற்றை வாங்குவதும், இயக்குதலும் அதிக செலவு பிடிக்கும் செயல்கள் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

"கண்காணிப்பு பணிகளைப் பொறுத்தவரை இந்த விமானங்கள் உலகின் சிறந்த விமானங்கள் என்ற முடிவுக்கு நாம் வரமுடியும்," என்று ராகுல் பேடி கூறுகிறார், ஆனால் அதே நேரத்தில் இவற்றை வாங்குவது குறித்து அவர் ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறார்.

"ரூ. 25,000 கோடி செலவில் இந்த ஆளில்லா விமானங்களை இந்தியா வாங்குகிறது. ஆனால் அவற்றை எங்கு பயன்படுத்துவது? இந்த ஆளில்லா விமானங்களை இயக்குவது மிகவும் செலவு மிக்கது. இவற்றைப் பயன்படுத்தும் போது ஒவ்வொரு நிலைக்கும் ஆகும் செலவு மிக அதிகம். எனவே இவற்றை, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளைக் கண்டறிந்து முறியடிக்கப் பயன்படுத்த முடியுமா? அதுவும் அதிக செலவு மிக்க பணி என்ற நிலையில், சில தீவிரவாதிகளைக் கொல்வதற்காக இத்தனை செலவு மிக்க நடவடிக்கையை எடுக்க முடியாது.

மறுபுறம் சீன எல்லையில் தாக்குதல் நடத்த இந்த விமானங்களைப் பயன்படுத்தினால் அந்நாட்டு ராணுவமும் பதிலடி கொடுக்கும். எனவே, கண்காணிப்புப் பணிகளுக்காக மட்டும் இந்த விமானங்களை இந்தியா பெரிய அளவில் பயன்படுத்த முடியும். வேறு பணிகளுக்கு இந்த விமானங்கள் எப்படிப் பயன்படுத்தப்படும் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை." என்கிறார் அவர்.

பொதுவாகவே அமெரிக்க தயாரிப்புக்களின் மிகப்பெரிய குறைபாடு, அவை செலவு மிக்கவையாகவே இருக்கும் என்றும் ராகுல் பேடி கூறுகிறார்.

பிரதமர் மோதியின் அமெரிக்க பயணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாதுகாப்பு தொடர்பாக வலுவடையும் உறவுகள்

அண்மைக் காலங்களில் அமெரிக்காவிடமிருந்து பல முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா வாங்கியுள்ள நிலையில், இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், 15 சினூக் ஹெவி-லிஃப்ட் ஹெலிகாப்டர்கள், 10 சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானங்கள் 3, P8I கடல்சார் கண்காணிப்பு விமானம் மற்றும் M777 ஹோவிட்சர் பீரங்கி துப்பாக்கிகளை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ளது.

MQ 9 ரக ஆளில்லா விமானங்களை இந்தியா வாங்குவது, நாட்டின் பாதுகாப்புக்கு பயனுள்ள ஒரு நடவடிக்கைக தான் என விமானப் படையில் இருந்து ஓய்வுபெற்ற ஏர் கமடோர் மற்றும் இந்திய விமானப்படையின் வியூக விவகாரங்களின் விமர்சகர் பிரசாந்த் தீட்சித் கூறுகிறார்.

"இந்த உடன்படிக்கை இந்தியாவின் இராணுவ நவீனமயமாக்கல் திட்டத்திற்கு உதவுகிறதா என்றால் நிச்சயமாக உதவுகிறது என்றே சொல்ல முடியும். இந்திய கடற்படைக்கு ஆளில்லா விமானங்களை வாங்குவதில் ஏற்கெனவே சில அனுபவங்கள் இருக்கின்றன. எனவே இந்த ஆளில்லா விமானங்களை வாங்குவது உண்மையில் ஒரு பயனுள்ள முதலீடாகும்," என்கிறார் அவர்.

கடந்த 2020 ஆம் ஆண்டில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பை அதிகரிக்க அமெரிக்காவிடமிருந்து இரண்டு MQ 9 ட்ரோன்களை இந்தியா வாடகைக்கு எடுத்துள்ளது. அந்த ஆளில்லா விமானங்கள் தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் அருகே அமைந்துள்ள இந்திய கடற்படை விமான நிலையமான ஐஎன்எஸ் ராஜாளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஆளில்லா விமானங்களின் குத்தகை 2024ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது என தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உடன்படிக்கையை இறுதி செய்வதற்கு முன், ஆளில்லா விமானங்களை வாங்கிய பின் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமா என்பதை இந்திய அரசு சரிபார்க்க வேண்டும் என்று ஏர் கமடோர் தீட்சித் கருதுகிறார்.

"கடந்த காலங்களில் அமெரிக்க அரசின் பாதுகாப்பு தொடர்பான பல விஷயங்களில் அந்நாட்டு நாடாளுமன்றம் தலையிட்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே, இங்கு நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த விமானங்களை நாம் வாங்கிப் பயன்படுத்தும் போது, எதிர்காலத்தில் அவற்றுக்கான பாகங்கள் தேவைப்பட்டால் அப்போது எழும் சிக்கல்களைப் பற்றி நிச்சயமாக ஆராயவேண்டும். ஒரு வேளை அமெரிக்க நாடாளுமன்றத்தின் தலையீட்டின் காரணமாக உதிரிபாகங்கள் கிடைக்காவிட்டால் நாம் சிக்கலில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும்," என எச்சரிக்கிறார் அவர்.

இந்த உடன்படிக்கை குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், பரவலாக அறியப்படும் செய்திகளின்படி, 31 ஆளில்லா விமானங்களை பராமரிப்பது, பழுதுபார்ப்பது, மாற்றியமைத்தல் போன்ற அனைத்து செலவுகளும் இந்த ரூ. 25,000 கோடியில் அடக்கம் என்றே தெரியவருகிறது.

இதற்கிடையே, பிரதமர் மோதியின் அமெரிக்க பயணத்தின் போது இந்த விமானங்களை வாங்குவது குறித்த உடன்படிக்கையை உறுதி செய்யுமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏர் கொமடோர் பிரசாந்த் தீட்சித் பேசிய போது, "அமெரிக்காவுடனான நமது உறவுகள் நன்றாக வளர்ந்துள்ளன, ஆனால் அந்நாட்டுடன் ஒரு உத்தி சார்ந்த கூட்டு உடன்படிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதனால் நாம் கவனமாகச் செயல்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அமெரிக்கா மற்றும் அமெரிக்க தொழில்துறையினர் எப்போதும் வணிக நோக்கத்துக்குத் தான் முன்னுரிமை தருவார்கள். முதலில் கதவைத் திறந்து அனுமதிக்க முயல்வார்கள். அதன் பின் அந்த அனுமதியை மேலும் விரிவாக்க முயற்சிப்பார்கள். எனக்கு புரிந்த வரையில், இந்திய கடற்படைக்கு F-18 ஹார்னெட்டை விற்பனை செய்வதில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. பிரதமர் மோதியின் தற்போதைய பயணத்தின் போது, காம்பட் ஏர்கிராப்ட் இன்ஜின்களை விற்பதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டால், அதுவே மிகப் பெரிய விஷயமாக இருக்கும்," என்றார்.

https://www.bbc.com/tamil/articles/ckdknvprvgyo

  • கருத்துக்கள உறவுகள்

2018ல் இந்தியா, இந்தியாவில் இந்த ஆளில்லா விமானத்தை இந்தியாவில் கூட்டாக தயாரிக்க கேட்ட போது அமெரிக்க அரசு மறுத்து இருந்தது.
சீனாவிடமும் இதே தரத்தில் ஆளில்லா விமானம் உள்ளதால் ஏட்டிக்கு போட்டியாக இந்தியா வாங்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

2018ல் இந்தியா, இந்தியாவில் இந்த ஆளில்லா விமானத்தை இந்தியாவில் கூட்டாக தயாரிக்க கேட்ட போது அமெரிக்க அரசு மறுத்து இருந்தது.
சீனாவிடமும் இதே தரத்தில் ஆளில்லா விமானம் உள்ளதால் ஏட்டிக்கு போட்டியாக இந்தியா வாங்குகிறது.

ஏதோ நல்ல விடயங்கள் நடந்தால் நன்று. 😜

  • கருத்துக்கள உறவுகள்

Reaper ஐ தடிகளால் அடித்து வீழ்த்த முடியாதோ ? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இதுவரை 'நேட்டோ' நாடுகளுக்கு மட்டுமே இந்த விமானங்களை அமெரிக்கா வழங்கிய நிலையில் தற்போது, இந்தியாவுக்கும் வழங்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.

வருந்ததக்கது. நம்பதகாத இந்தியா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபரை சந்தித்த நரேந்திர மோதி இரு நாடுகளின் நட்புறவு குறித்து என்ன பேசினார்?

மோதி பைடன் சந்திப்பு

பட மூலாதாரம்,PMO

22 ஜூன் 2023, 16:31 GMT
புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.)

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணத்தின் முக்கிய கட்டமாக அவர், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ  இல்லமான வெள்ளை மாளிகைக்கு இன்று சென்றார்.

அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். அத்துடன் மோதிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் ஹிந்தி திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டன.

வெள்ளை மாளிகையில் ஒலித்த ஹிந்தி பாடல்கள்

அமெரிக்காவின் ‘பென் மசாலா’ எனும் இசைக் குழுவினர் ஹிந்தி சினிமாக்களில் (பாலிவுட்) ஹிட்டான சில திரைப்படங்களின் பாடல்களைப் பாடி,  மோதியை வரவேற்றனர்.

‘சாயா சய்யா’, ‘ஜாஷ்ன் -இ-பஹாரா’ உள்ளிட்ட பாடல்களை பென் மசாலா இசைக்குழு பாடி அசத்தியது.

இசைக் கருவிகள் எதையும் இசைக்காமல், தங்களின் குரல் வளத்தை வெளிப்படுத்துவது இந்தக் குழுவின் தனிச் சிறப்பு.

முன்னதாக,  “இந்திய பிரதமரை வெள்ளை மாளிகை வரவேற்கிறது” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

“இன்றைய நமது பேச்சுவார்த்தை இந்தியா - அமெரிக்கா இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்,” என்று பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபருக்கு தனது ட்விட்டர் பதிவில் பதிலளித்திருந்தார்.

ஜோ பைடனிடம் நரேந்திர மோதி என்ன சொன்னார்?

மோதி பைடன் சந்திப்பு

பட மூலாதாரம்,REUTERS

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், இந்திய பிரதமர் மோதி கலந்துரையாடினார். அதன் பின்னர் அவர் கூறும்போது, “வெள்ளை மாளிகையில் இன்று தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, 140 கோடி இந்தியர்களுக்கும், அமெரிக்காவில் வாழும் 40 லட்சம் இந்தியர்களுக்கும் அளிக்கப்பட்ட வரவேற்பு,” என்று கூறினார்.

அத்துடன், “முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு சராசரி இந்தியனாக நான் இங்கு வந்திருந்தேன். அப்போது வெள்ளை மாளிகையை வெளியில் இருந்துதான் பார்த்தேன். ஆனால் இன்று அதே வெள்ளை மாளிகையின் கதவுகள் பெரும் எண்ணிக்கையிலான இந்திய வம்சாவளியினருக்காக திறந்திருக்கிறது என்பதை எண்ணி மகிழ்கிறேன்,” என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.

முன்னதாக, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோதிக்கு, வெள்ளை மாளிகையில் இன்று அரசு முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஹிந்தி திரையிசை பாடல்கள் முழங்க, பிரதமர் மோதிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்று அளித்தார். அதன்பின் அவர் பேசும்போது, “இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவு 21ஆம் நூற்றாண்டின் தீர்மானிக்கத்தக்க உறவு”களில் ஒன்று என்று வர்ணித்தார்

இரண்டு நாடுகளின் அரசமைப்பு சட்டங்களும் “We The People” என்றே தொடங்குகின்றன. இது தேச மக்களின் நலனில் இரு நாடுகளும் கொண்டுள்ள முன்னுரிமையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

இந்தோ -பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு எனும் இலக்கை நோக்கி நாம் பணியாற்றி வருகிறோம். பருவநிலை மாற்றம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்ற முக்கியமான விஷயங்களில் அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றாகச் செயல்பட்டு வருகின்றன,” என்று ஜோ பைடன் பேசினார்.

கோவிட்டுக்கு பிறகு மாறி வரும் உலகம்

மோதி பைடன் சந்திப்பு

பட மூலாதாரம்,ANI

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்புக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோதி, 30 ஆண்டுக்கு முன் தான் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தை நினைவு கூர்ந்து பேசினார்.

மேலும் அவர் பேசும்போது, “வேற்றுமையில் ஒற்றுமை காண்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் பெருமை கொள்கின்றன. கோவிட் காலகட்டம் மற்றும் அதற்குப் பிந்தைய தற்போதைய  காலகட்டத்தில் உலகம் புதிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

இந்தியா -அமெரிக்கா இடையிலான நட்பு ஒட்டுமொத்த உலகை  மேம்படுத்துவதற்குத் துணையாக இருக்கும். உலகளாவிய நன்மைக்கு, உலக அளவிலான அமைதியும், ஸ்திரத்தன்மையும் அவசியம். இந்த இலக்கை அடைய  இந்தியா-அமெரிக்கா  இரு நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றத் தயாராக உள்ளன,” என்று மோதி பேசினார்.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தபோது பிரதமர் மோதி, பாரம்பரிய வெள்ளை நிற குர்தா பைஜாமாவும், நீல நிற  மேலாடையும் அணிந்திருந்தார்.

அமெரிக்காவின் பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக் குழு,  துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் அணி வகுத்திருந்தது. இந்திய உயர்நிலைக் குழுவுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.

வெள்ளை மாளிகையின் தெற்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கூடியிருந்த நிலையில் அங்கு இந்தியா மற்றும் அமெரிக்காவின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.

ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்த பிரதமர்

ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்த பிரதமர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருவரின் உரையாடலுக்கு பிறகு அமெரிக்க அதிபருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். குறிப்பாக இந்திய சமூகத்திற்காக, வெள்ளை மாளிகையின் கதவுகள் திறந்துள்ளதற்காக பைடனுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக மோதி கூறினார்.

அமெரிக்கா எப்போதும் இந்தியாவின் நலன் விரும்பியாகவே இருந்து வருகிறது எனவும் அப்போது மோதி கூறினார்.

மேலும், “எட்டு ஆண்டுகளுக்கு முன், இந்திய- அமெரிக்க வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் நீங்கள் (ஜோ பைடன்) பேசும்போது, ‘இந்தியாவின் சிறந்த நண்பராக இருப்பதே உங்களின் நோக்கம்’ என்று கூறியிருந்தீர்கள். இந்தியா மீதான உங்களது தனிப்பட்ட ஈடுபாடுதான், துணிச்சலான மற்றும் லட்சியம் மிக்க முடிவுகளை எடுக்க எங்களைத் தூண்டியது,” என்று மோதி கூறினார்.

“இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவானது, இரு தரப்புக்கும் இடையே பகிரப்படும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள், பேச்சுவார்த்தைகளில் அடங்கியுள்ளது.

இருதரப்பு உறவில் அரசு முறையிலான இதுபோன்ற நடவடிக்கைகள் அவற்றுக்கான முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. ஆனால், உண்மையில் இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு என்பது, இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவு” என்று மோதி பெருமிதத்துடன் பேசினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது, “ உலகம் இன்று வேகமாக மாறி வருகிறது. மாற்றத்திற்கான வாய்ப்பு இந்தியா, அமெரிக்கா, ஏன் ஒட்டுமொத்த உலகின் முன்பும் இருக்கிறது.

பல தசாப்தங்களுக்கு ஒருமுறையே இதுபோன்ற வாய்ப்புகள் அமையும். இன்று எடுக்கும் முடிவுகள்தான் நாளை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் நன்கு அறிவோம்,” என்று பைடன் பேசினார்.

பிரதமர் அமெரிக்க பயணம்

பட மூலாதாரம்,DENNIS BRACK-POOL/GETTY IMAGES

சிறுபான்மையினர் குறித்து மோதியுடன் பேசியிருப்பேன் - ஒபாமா

இந்நிலையில், சிஎன்என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, மோதியுடன் தனக்குப் பேச வாய்ப்பு கிடைத்திருந்தால் சிறுபான்மையினர் குறித்துப் பேசியிருப்பேன் என்று இஸ்லாமியர்களின் பாதுகாப்பை மேற்கொள்காட்டிக் கூறியுள்ளார்.

செய்தியாளர் கிறிஸ்டியனே அமன்பூர் மோதியின் பயணத்தைக் குறிப்பிட்டு, “எதேச்சதிகார அல்லது மிகவும் குறைந்த தாராளவாத ஜனநாயகவாதியாகக் கருதப்படும் மோதியை ஜோ பைடன் தற்போது அமெரிக்காவில் வரவேற்கிறார். அத்தகைய தலைவர்களை ஒரு அதிபர் எவ்வாறு கையாள வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

இதற்குப் பதிலளித்த ஒபாமா, "இந்து பெரும்பான்மையான இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோதியை எனக்கு நன்றாகத் தெரியும்.

அவருடன் நான் உரையாடியிருந்தால், இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், இந்தியா ஒரு கட்டத்தில் பிரிந்து செல்வதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. அது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்பது என் வாதமாக இருந்திருக்கும்,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cyxg9xrd9vzo

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அதற்காக மோதிக்கு அமெரிக்கா வர தடை இருந்தது. அதை இலகுவாக மறந்து புழுகி அடிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அத்துடன், “முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு சராசரி இந்தியனாக நான் இங்கு வந்திருந்தேன்.

ஐயா ஏன் அதுக்கு பிறகு போகவில்லை?

கொலைகாரன் என்று விசா தர மறுத்துவிட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயா ஏன் அதுக்கு பிறகு போகவில்லை?

கொலைகாரன் என்று விசா தர மறுத்துவிட்டார்களா?

உண்மை. குஜரத் முதலமைச்சராக இருந்த காலத்தில் முஸ்லீம்கள் மீதான படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தவர் என்று சர்வதேசத்தில் நம்பப்பட்டவர். இன்றுவரை தீவிர இந்து வலதுசாரிகளுடன் கைகோர்த்து நிற்பவர். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நரேந்திர மோதி பேசியது என்ன?

மோதி

பட மூலாதாரம்,ANI

22 ஜூன் 2023
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.)

பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

"மும்பையில் 9/11 தாக்குதலுக்கு 2 தசாப்தங்களுக்கு மேலாகியும், மும்பையில் 26/11க்குப் பிறகு ஒரு தசாப்தத்திற்கும் மேலாகியும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் இன்னும் உலகம் முழுவதும் ஆபத்தாகவே உள்ளது." என்று அவர் கூறினார்.

"அதிகம் பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி, அதைக் கையாள்வதில் எந்த தவறும் இருக்க முடியாது. பயங்கரவாதத்தை ஊக்குவித்து ஏற்றுமதி செய்யும் அனைத்து சக்திகளையும் நாம் முறியடிக்க வேண்டும்." என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி உரையாற்றினார். இந்தியாவின் பிரதமர் ஒருவர் அமெரிக்க காங்கிரசில் 2வது முறையாக உரையாற்றுவது இதுவே முதல்முறை. இவருக்கு முன்பு வின்ஸ்டன் சர்ச்சில், நெல்சன் மண்டேலா போன்றோர் இத்தகைய பெருமையைப் பெற்றுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் இரண்டு முறை உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் மோடி தான்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோதி இருந்தபோது அவரிடம் பல எம்.பி.க்கள் ஆட்டோகிராப் வாங்கியதுடன் சிலர் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக இந்தப் பயணத்தின் முக்கிய கட்டமாக அவர், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ  இல்லமான வெள்ளை மாளிகைக்கு இன்று சென்றார்.

அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். அத்துடன் மோதிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் ஹிந்தி திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டன.

வெள்ளை மாளிகையில் ஒலித்த ஹிந்தி பாடல்கள்

அமெரிக்காவின் ‘பென் மசாலா’ எனும் இசைக் குழுவினர் ஹிந்தி சினிமாக்களில் (பாலிவுட்) ஹிட்டான சில திரைப்படங்களின் பாடல்களைப் பாடி,  மோதியை வரவேற்றனர்.

‘சாயா சய்யா’, ‘ஜாஷ்ன் -இ-பஹாரா’ உள்ளிட்ட பாடல்களை பென் மசாலா இசைக்குழு பாடி அசத்தியது.

இசைக் கருவிகள் எதையும் இசைக்காமல், தங்களின் குரல் வளத்தை வெளிப்படுத்துவது இந்தக் குழுவின் தனிச் சிறப்பு.

முன்னதாக,  “இந்திய பிரதமரை வெள்ளை மாளிகை வரவேற்கிறது” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

“இன்றைய நமது பேச்சுவார்த்தை இந்தியா - அமெரிக்கா இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்,” என்று பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபருக்கு தனது ட்விட்டர் பதிவில் பதிலளித்திருந்தார்.

மோதி பைடன் சந்திப்பு

பட மூலாதாரம்,PMO

ஜோ பைடனிடம் நரேந்திர மோதி என்ன சொன்னார்?

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், இந்திய பிரதமர் மோதி கலந்துரையாடினார். அதன் பின்னர் அவர் கூறும்போது, “வெள்ளை மாளிகையில் இன்று தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, 140 கோடி இந்தியர்களுக்கும், அமெரிக்காவில் வாழும் 40 லட்சம் இந்தியர்களுக்கும் அளிக்கப்பட்ட வரவேற்பு,” என்று கூறினார்.

அத்துடன், “முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு சராசரி இந்தியனாக நான் இங்கு வந்திருந்தேன். அப்போது வெள்ளை மாளிகையை வெளியில் இருந்துதான் பார்த்தேன். ஆனால் இன்று அதே வெள்ளை மாளிகையின் கதவுகள் பெரும் எண்ணிக்கையிலான இந்திய வம்சாவளியினருக்காக திறந்திருக்கிறது என்பதை எண்ணி மகிழ்கிறேன்,” என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.

முன்னதாக, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோதிக்கு, வெள்ளை மாளிகையில் இன்று அரசு முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஹிந்தி திரையிசை பாடல்கள் முழங்க, பிரதமர் மோதிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்று அளித்தார். அதன்பின் அவர் பேசும்போது, “இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவு 21ஆம் நூற்றாண்டின் தீர்மானிக்கத்தக்க உறவு”களில் ஒன்று என்று வர்ணித்தார்

இரண்டு நாடுகளின் அரசமைப்பு சட்டங்களும் “We The People” என்றே தொடங்குகின்றன. இது தேச மக்களின் நலனில் இரு நாடுகளும் கொண்டுள்ள முன்னுரிமையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

இந்தோ -பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு எனும் இலக்கை நோக்கி நாம் பணியாற்றி வருகிறோம். பருவநிலை மாற்றம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்ற முக்கியமான விஷயங்களில் அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றாகச் செயல்பட்டு வருகின்றன,” என்று ஜோ பைடன் பேசினார்.

மோதி பைடன் சந்திப்பு

பட மூலாதாரம்,REUTERS

கோவிட்டுக்கு பிறகு மாறி வரும் உலகம்

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்புக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோதி, 30 ஆண்டுக்கு முன் தான் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தை நினைவு கூர்ந்து பேசினார்.

மேலும் அவர் பேசும்போது, “வேற்றுமையில் ஒற்றுமை காண்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் பெருமை கொள்கின்றன. கோவிட் காலகட்டம் மற்றும் அதற்குப் பிந்தைய தற்போதைய  காலகட்டத்தில் உலகம் புதிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

இந்தியா -அமெரிக்கா இடையிலான நட்பு ஒட்டுமொத்த உலகை  மேம்படுத்துவதற்குத் துணையாக இருக்கும். உலகளாவிய நன்மைக்கு, உலக அளவிலான அமைதியும், ஸ்திரத்தன்மையும் அவசியம். இந்த இலக்கை அடைய  இந்தியா-அமெரிக்கா  இரு நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றத் தயாராக உள்ளன,” என்று மோதி பேசினார்.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்தபோது பிரதமர் மோதி, பாரம்பரிய வெள்ளை நிற குர்தா பைஜாமாவும், நீல நிற  மேலாடையும் அணிந்திருந்தார்.

அமெரிக்காவின் பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக் குழு,  துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் அணி வகுத்திருந்தது. இந்திய உயர்நிலைக் குழுவுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.

வெள்ளை மாளிகையின் தெற்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கூடியிருந்த நிலையில் அங்கு இந்தியா மற்றும் அமெரிக்காவின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.

மோதி பைடன் சந்திப்பு

பட மூலாதாரம்,ANI

ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்த பிரதமர்

ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்த பிரதமர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இருவரின் உரையாடலுக்கு பிறகு அமெரிக்க அதிபருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். குறிப்பாக இந்திய சமூகத்திற்காக, வெள்ளை மாளிகையின் கதவுகள் திறந்துள்ளதற்காக பைடனுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக மோதி கூறினார்.

அமெரிக்கா எப்போதும் இந்தியாவின் நலன் விரும்பியாகவே இருந்து வருகிறது எனவும் அப்போது மோதி கூறினார்.

மேலும், “எட்டு ஆண்டுகளுக்கு முன், இந்திய- அமெரிக்க வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் நீங்கள் (ஜோ பைடன்) பேசும்போது, ‘இந்தியாவின் சிறந்த நண்பராக இருப்பதே உங்களின் நோக்கம்’ என்று கூறியிருந்தீர்கள். இந்தியா மீதான உங்களது தனிப்பட்ட ஈடுபாடுதான், துணிச்சலான மற்றும் லட்சியம் மிக்க முடிவுகளை எடுக்க எங்களைத் தூண்டியது,” என்று மோதி கூறினார்.

“இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவானது, இரு தரப்புக்கும் இடையே பகிரப்படும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள், பேச்சுவார்த்தைகளில் அடங்கியுள்ளது.

இருதரப்பு உறவில் அரசு முறையிலான இதுபோன்ற நடவடிக்கைகள் அவற்றுக்கான முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. ஆனால், உண்மையில் இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு என்பது, இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவு” என்று மோதி பெருமிதத்துடன் பேசினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது, “ உலகம் இன்று வேகமாக மாறி வருகிறது. மாற்றத்திற்கான வாய்ப்பு இந்தியா, அமெரிக்கா, ஏன் ஒட்டுமொத்த உலகின் முன்பும் இருக்கிறது.

பல தசாப்தங்களுக்கு ஒருமுறையே இதுபோன்ற வாய்ப்புகள் அமையும். இன்று எடுக்கும் முடிவுகள்தான் நாளை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் நன்கு அறிவோம்,” என்று பைடன் பேசினார்.

பிரதமர் அமெரிக்க பயணம்

பட மூலாதாரம்,DENNIS BRACK-POOL/GETTY IMAGES

சிறுபான்மையினர் குறித்து மோதியுடன் பேசியிருப்பேன் - ஒபாமா

இந்நிலையில், சிஎன்என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, மோதியுடன் தனக்குப் பேச வாய்ப்பு கிடைத்திருந்தால் சிறுபான்மையினர் குறித்துப் பேசியிருப்பேன் என்று இஸ்லாமியர்களின் பாதுகாப்பை மேற்கொள்காட்டிக் கூறியுள்ளார்.

செய்தியாளர் கிறிஸ்டியனே அமன்பூர் மோதியின் பயணத்தைக் குறிப்பிட்டு, “எதேச்சதிகார அல்லது மிகவும் குறைந்த தாராளவாத ஜனநாயகவாதியாகக் கருதப்படும் மோதியை ஜோ பைடன் தற்போது அமெரிக்காவில் வரவேற்கிறார். அத்தகைய தலைவர்களை ஒரு அதிபர் எவ்வாறு கையாள வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

இதற்குப் பதிலளித்த ஒபாமா, "இந்து பெரும்பான்மையான இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோதியை எனக்கு நன்றாகத் தெரியும்.

அவருடன் நான் உரையாடியிருந்தால், இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், இந்தியா ஒரு கட்டத்தில் பிரிந்து செல்வதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. அது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்பது என் வாதமாக இருந்திருக்கும்,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cyxg9xrd9vzo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய முஸ்லிம்கள் குறித்த அமெரிக்க பத்திரிகையாளரின் கேள்விக்கு மோதியின் பதில் என்ன?

அமெரிக்காவில் மோதி - இந்திய முஸ்லிம்கள் பற்றி கேள்வி

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மணி நேரங்களுக்கு முன்னர்

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிறகு அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்த அந்நாட்டு செய்தியாளர்களின் கேள்விகளை அவர் எதிர்கொண்டார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி பங்கேற்றது மிகப்பெரிய விஷயம் என்று பைடன் நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஜான் கிர்பி தெரிவித்தார்.

"இந்திய பிரதமர் மோடி அவரது சுற்றுப்பயணத்தின் கடைசிப் பகுதியாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பார். அதற்காக அவருக்கு நன்றி. இது முக்கியமான ஒன்று என்று நாங்கள் நம்புகிறோம். அதேபோன்ற கருத்தை அவரும் கொண்டிருப்பதை எண்ணி மகிழ்கிறோம்." என்று அவர் கூறியுள்ளார்.

இந்திய முஸ்லிம்கள் குறித்த கேள்விக்கு மோதி என்ன சொன்னார்?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - இந்திய பிரதமர் மோடி ஆகிய இருவரின் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையின் செய்தியாளர் சபரினா சித்திக், இந்திய பிரதமர் மோதியிடம் கேள்வி ஒன்றை முன்வைத்தார்.

"முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகளை வலுப்படுத்தவும், கருத்துரிமையை உறுதி செய்யவும் நீங்களும், உங்கள் அரசும் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்கிறீர்கள்?" என்று மோதியிடம் அவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த மோதி, "நாங்கள் ஜனநாயக நாடு. இந்தியாவும், அமெரிக்காவும் அவற்றின் மரபணுவிலேயே ஜனநாயகத்தைக் கொண்டுள்ளன. ஜனநாயகம் எங்கள் ஆன்மா. ஜனநாயகம் எங்கள் நரம்புகளிலேயே இருக்கிறது. நாம் ஜனநாயகத்தில் வாழ்கிறோம். நமது முன்னோர்கள் அரசியல் சாசன வடிவில் அதனை உறுதிப்படுத்திச் சென்றுள்ளார்கள். ஜனநாயகத்தின் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சாசனத்தின் அடிப்படையில் எங்கள் அரசு நடைபோடுகிறது. ஜனநாயகத்தின் வழியே செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்.

சாதி, மதம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை. ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறோம். அப்படியென்றால், மனித விழுமியங்களோ, மனிதநேயமோ, மனித உரிமைகளோ இல்லாவிட்டால் அது ஜனநாயகமாக இருக்காது." என்றார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

மேலும் தொடர்ந்த மோதி, "நீங்கள் ஜனநாயகம் என்று சொல்லும் போது, நீங்கள் அதனை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழும் போது பாகுபாடு என்ற கேள்வியே எழாது. ஆகவேதான், நாங்கள் பாரதத்தில் அனைவரின் ஆதரவு, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்கிற வகையில் நடைபோடுகிறோம் "

"இந்தியாவில் அரசு நலத்திட்டங்களின் பலன் அனைவருக்கும் பொதுவானது. யார்யார் பயனாளிகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளார்களோ அவர்கள் பயன் பெறுவார்கள். ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாக கொண்ட இந்தியாவில் மத ரீதியிலோ, சாதி ரீதியிலோ, வயது அடிப்படையிலோ, பிராந்திய ரீதியிலோ எந்தவொரு பாரபட்சமும் பார்க்கப்படுவதில்லை." என்று பதிலளித்தார்.

சிறுபான்மையினர் குறித்து மோதியுடன் பேசியிருப்பேன் - ஒபாமா

இந்நிலையில், சி.என்.என். தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, மோதியுடன் தனக்குப் பேச வாய்ப்பு கிடைத்திருந்தால் சிறுபான்மையினர் குறித்துப் பேசியிருப்பேன் என்று இஸ்லாமியர்களின் பாதுகாப்பை மேற்கொள்காட்டிக் கூறியுள்ளார்.

செய்தியாளர் கிறிஸ்டியனே அமன்பூர் மோதியின் பயணத்தைக் குறிப்பிட்டு, “எதேச்சதிகார அல்லது மிகவும் குறைந்த தாராளவாத ஜனநாயகவாதியாகக் கருதப்படும் மோதியை ஜோ பைடன் தற்போது அமெரிக்காவில் வரவேற்கிறார். அத்தகைய தலைவர்களை ஒரு அதிபர் எவ்வாறு கையாள வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

இதற்குப் பதிலளித்த ஒபாமா, "இந்து பெரும்பான்மையான இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோதியை எனக்கு நன்றாகத் தெரியும்.

அவருடன் நான் உரையாடியிருந்தால், இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், இந்தியா ஒரு கட்டத்தில் உடைந்து சிதறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. அது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்பது என் வாதமாக இருந்திருக்கும்,” என்றார்.

அமெரிக்காவில் மோதி - இந்திய முஸ்லிம்கள் பற்றி கேள்வி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

2016, ஜூன் 7-ம் தேதி அமெரிக்கா சென்ற மோதி, வெள்ளை மாளிகையில் அப்போதைய அதிபர் ஒபாமாவை சந்தித்த காட்சி

பெர்னி சாண்டர்ஸ் விமர்சனம்

ஜனநாயகக் கட்சியின் முன்னணித் தலைவரும், அடுத்த அதிபருக்கான போட்டியில் இருப்பவருமான பெர்னி சாண்டர்சும், இந்தியாவில் மத சிறுபான்மையினரின் நிலை குறித்து மோதியிடம் ஜோ பைடன் பேச வேண்டும் என்று வலியுறுத்தி ட்வீட் செய்துள்ளார்.

"பத்திரிகை மற்றும் சிவில் சமூகம் மீது மோதி அரசு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்துள்ளது. இந்து தேசியவாதத்தை மிகத் தீவிரமாக ஊக்குவிக்கிறது. இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கான இயங்குவெளி வெகுவாக குறைந்துவிட்டிருக்கிறது. மோதியுடனான சந்திப்பின் போது அதிபர் பைடன் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மோதி ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் குறித்த விவரங்களை உள்ளடக்கிய விரிவான கடிதம் ஒன்றை அதிபர் ஜோ பைடனுக்கு பராக் ஒபாமா, பெர்னி சாண்டர்ஸ் உள்பட ஜனநாயகக் கட்சியின் 75 தலைவர்கள் கூட்டாக எழுதியுள்ளனர்.

அமெரிக்காவின் முன்னணித் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்களும் இதில் அடங்குவர்.

ஜனவரி 20-ம் தேதி எழுதப்பட்ட அந்த கடிதத்தில், "அமெரிக்கா - இந்தியா இருதரப்பு உறவு என்பது பொதுவான நலன் அடிப்படையிலானதாக இருக்கக் கூடாது. ஜனநாயகம் போன்ற பொது விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தலைவர்களில் சிலர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் மோதி உரையை புறக்கணித்தனர்.

நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் மோதியின் உரையை புறக்கணித்தது ஏன் என்பதை விளக்கி அமெரிக்காவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அலெக்சாண்டிரியா ஒகோஸியோ கார்டெஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

அவருடன், மற்றொரு முக்கிய தலைவரான இலான் ஒமர் என்பவரும் பிரதமர் மோதி உரையை புறக்கணித்துள்ளார். "மோதி அரசு மத சிறுபான்மையினரை ஒடுக்குகிறது. இந்து தேசியவாதிகள் ஊக்கம் அடைந்துள்ளனர். அத்துடன், பத்திரிகையாளர்கள், மனித உரிமை குறித்து கேள்வி எழுப்புவோரையும் மோதி அரசு குறி வைத்துள்ளது. அவரது பேச்சைக் கேட்க நான் அவைக்குப் போக மாட்டேன்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

ரஷிதா தலெப் என்ற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரோ, "நம் நாட்டின் தலைநகரில் மோதிக்கு இப்படியொரு வாய்ப்பு தரப்பட்டிருப்பதை எண்ணி வெட்கப்படுகிறேன். மனித உரிமை மீறல்கள் முதல் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் வரை மோதி அரசுக்கென நீண்ட வரலாறு இருக்கிறது. முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினரை குறிவைப்பது, பத்திரிகையாளர்களின் குரலை ஒடுக்குவது என அது பல வகையிலும் இருக்கிறது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அமெரிக்க நாடாளுமுன்றத்தில் மோதி உரையை நான் புறக்கணிக்கிறேன்." என்று ட்வீட் செய்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

குடியரசுக் கட்சியின் நிக்கி ஹாலே ஆதரவு

இந்திய பிரதமர் மோதியின் வருகைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் கடுமையான அணுகுமுறையை கையில் எடுத்துள்ளனர்.

அதேநேரத்தில், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவரும், அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருப்பவருமான நிக்கி ஹாலே, "இந்தியா - அமெரிக்கா நட்புறவு என்பது மிகவும் தனிப்பட்ட விஷயம்." என்று கூறியுள்ளார்.

"அமெரிக்கா - இந்தியா நட்புறவு என்பது தனிப்பட்ட ஒன்று. நமது ஜனநாயக மதிப்பீடுகள், விழுமியங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு நட்பு நாடு இந்தியா. வர்த்தகம், கலாசார உறவுகள், பாதுகாப்பு நலன்கள் என இருவருக்கும் பொதுவானவை ஏராளமாக உள்ளன. இந்த நட்புறவை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது முக்கியம். மோதியின் வாஷிங்டன் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்." என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்காவில் மோதி - இந்திய முஸ்லிம்கள் பற்றி கேள்வி

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

நிக்கி ஹாலே

இந்திய பிரதமர் மோதியின் 3 நாள் அமெரிக்க பயணம் இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், வெளியுறவு அமைச்சர் ஆன்டன் பிளிங்கன் ஆகியோர் அவருக்கு மதிய விருந்து அளிக்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்க தொழில்துறையினரை சந்திக்கும் மோதி, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், தொழில் ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுகிறார்.

அமெரிக்கப் பயணத்தின் நிறைவாக, ரொனால்ட் ரீகன் மையத்தில் இந்திய வம்சாவளியினரிடையே அவர் உரையாற்றுகிறார்.

அதன் பிறகு, அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு மோதி எகிப்து செல்கிறார். எகிப்து அதிபர் அப்டெல் ஃபடே எல் சிசியை சந்தித்து இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து அவர் பேசுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cl4d21lmgz2o

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

அதற்காக மோதிக்கு அமெரிக்கா வர தடை இருந்தது. அதை இலகுவாக மறந்து புழுகி அடிக்கிறார்.

15 hours ago, ஈழப்பிரியன் said:

ஐயா ஏன் அதுக்கு பிறகு போகவில்லை?

கொலைகாரன் என்று விசா தர மறுத்துவிட்டார்களா?

இதுதான் அமெரிக்கா🤣

முதுகெலும்பு???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியர்களை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபடும் அபாயம் உள்ளது” – ஒபாமா பேட்டி

23 JUN, 2023 | 01:52 PM
image
 
இஸ்லாமிய சிறுபான்மையினரை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபடும் அபாயம் உள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அமெரிக்காவின் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா பிரதமர் மோடியுடன் தான் உரையாடியிருந்தால் இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை தாங்கள் பாதுகாக்கவில்லை என்று கூறியிருப்பேன் என தெரிவித்தார்.

மேலும் பிரதமருடனான தனது சந்தித்திப்பின் போது வாதத்தின் ஒரு பகுதியாக சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து இருந்திருக்கும் எனக்கூறிய ஓபாமா இஸ்லாமிய சிறுபான்மையினரை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபட  அதிகம் வாய்ப்புள்ளதாக உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் பிரதமர் மோடியை சந்திக்கும்  பைடன் இந்தியாவில் இஸ்லாமிய சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும் என்று ஓபாமா வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/158415

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஏராளன் said:

இஸ்லாமியர்களை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபடும் அபாயம் உள்ளது” – ஒபாமா பேட்டி

எனவே!?!?!?!?! 

அமெரிக்க நிகழ்ச்சி நிரல் ஒன்று  பட்டும் படாமலும் சொல்லப்பட்டு விட்டது. :rolling_on_the_floor_laughing:

மோடியின் அமெரிக்க விஜயம் தொடர்பான செய்திகளுக்குள் இன்னொரு செய்தியையும் வாசிக்க நேர்ந்தது.

சில வருடங்களாக இந்தியப் பாடப்புத்தகங்களில் இந்துத்துவாவுக்கு எதிரான கூற்றுக்கள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன. இந்தியச் சரித்திரப் பாடங்களில் முகலாயர்களின் படையெடுப்பு மற்றும் அவர்களது சரித்திரம் நீக்கப்பட்டு விட்டது. அதுமட்டுமின்றி விஞ்ஞான பாடத்தில் டார்வினின் கூர்ப்பு விதி நீக்கப்பட்டு அது மருத்துவ மேற்படிப்புக் கல்வியில் மட்டுமே உள்ளது.

அதாவது இந்தியா தனது பெரும்பாலான மக்களை இருட்டுக்குள்ளேயே வைக்க முயல்கிறது. 

https://www.courrierinternational.com/article/la-lettre-de-l-educ-en-inde-le-pouvoir-nationaliste-censure-et-reecrit-les-manuels-scolaires

சில விடயங்களில் இதே நிலமைதான் இலங்கையிலும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் சுவையான இட்லி : மலரும் நினைவுகளை பகிர்ந்த கமலா ஹாரீஸ்

24 JUN, 2023 | 02:38 PM
image
 
இந்தியாவில் மேற்கொண்ட அரசு முறை பயணத்தின் போது அங்கு சுவையான இட்லி பரிமாறப்பட்டதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

FzYFfFYagAEw5A0.jpg

இதனிடையே மோடிக்கு அளித்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் பேசினார். அப்போது, பிரதமர் மோடி 21 ஆம் நூற்றாண்டில் இந்தியா உலகளாவிய தலைவராக உருவெடுக்க உதவுவதில் உங்கள் பங்கு மற்றும் தலைமைக்கு நன்றி. நான் அமெரிக்க துணை அதிபராக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன்.

அப்போது இந்தியாவின் உலகளாவி தாக்கத்தை கண்டேன். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பல உயிர்களை காப்பாற்றுகின்றன. ஆப்பிரிக்க கண்டத்தில், இந்தியாவின் நீண்டகால கூட்டாண்மை வளம் மற்றும் பாதுகாப்பை ஆதரிக்கிறது.

இந்தோ-பசிபிக் தொடர்பு மூலம், இந்தியா சுதந்திரமான மற்றும் திறந்த பிராந்தியத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்தியாவில் விடுமுறை நாட்களை கழித்ததை மறக்க முடியாது. இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்ட போது அங்கு சுவையான மெருதுவான் இட்லி பரிமாறப்பட்டது. அதன் சுவையை என்றும் மறக்க முடியாது ” என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/158488

இங்க அப்பம், அங்க இட்லி போல!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மூத்த மொழி தமிழ் - அமெரிக்காவில் பிரதமர் மோடி பெருமிதம் : ஹூஸ்டன் பல்கலையில் இந்திய அரசு உதவியுடன் தமிழ் இருக்கை

25 JUN, 2023 | 12:47 PM
image
 
புதுடெல்லி: உலகின் மூத்த மொழி தமிழ் என அமெரிக்காவில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசின் உதவியுடன் தமிழுக்கான இருக்கை அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

கடந்த வருடம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி முதலாக ‘உலகின் மூத்த மொழி தமிழ்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு வருகிறார். இதுவரை தனது இந்திய நிகழ்ச்சிகளில் மட்டும் இதைக் கூறிவந்த அவர், வெளிநாடுகளிலும் இதை பேசத் தொடங்கியுள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் தனது அமெரிக்கப் பயண நிகழ்ச்சியில் பல ஆயிரம் பேர் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகின் மூத்த மொழி தமிழ் என்ற பெருமை இந்தியர்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து வாஷிங்டனில் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிடுகையில், “இந்திய அரசின் உதவியுடன் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கல்விக்காக ஓர் இருக்கை அமைக்கப்பட உள்ளது. இந்த இருக்கையால் தமிழ் கலாச்சாரம் மற்றும் உலகின் மூத்த மொழியான தமிழைப் பரப்புவதில் கூடுதலான பலன்கள் கிடைக்கும். உங்கள் அனைவருக்கும் எனது சார்பில் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.

மொழிகளை பற்றிய விவாதம் உங்கள் முன் எழும்போது, உலக மனித சமுதாயத்தின் முதல் மொழி தமிழ்தான் என்று அனைவரின் முன் நெஞ்சை நிமிர்த்திக் கூறுங்கள். அனைத்தையும் விடப் பழமையான மொழி தமிழ் மட்டுமே. அது எங்கள் மொழி ஆகும்” என தனது மார்பில் கையை தட்டி உற்சாகமாகத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது உரையில் தமிழைப் பற்றிப் பேசிய காட்சிப் பதிவு, அமெரிக்காவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்ட தமிழ் இருக்கைக்கான தேவை பல வருடங்களாக வலியுறுத்தப்படுகிறது.

இதன்மூலம், டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் நகரில் வாழும் பல லட்சம் தமிழர்கள் பலனடைவார்கள். ஹூஸ்டன் தமிழர்கள் தங்கள் உழைப்பின் ஒரு பகுதியை மூலதனமாக்கி தமிழ் இருக்கை அமைக்க முயற்சித்தனர்.

இவர்களுடன் அமெரிக்கத் தமிழர்களும் இணைந்துகொண்ட பின், உலகம் முழுவதிலும் இருந்தும் நன்கொடைகள் வசூலிக்கப்பட்டு வந்தன. இதற்காக, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ரூ.2.5 கோடி நன்கொடை அளித்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.

இதற்கிடையே மத்திய அரசு சார்பில் இந்திய கலாச்சார உறவு கவுன்சில் (ஐசிசிஆர்) ஹூஸ்டனில் தமிழ் இருக்கையை தொடங்கும் பணியில் இறங்கியது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்துடன் சமீபத்தில் போடப்பட்டது. இதையடுத்து பேராசிரியருக்கான விளம்பரம் அளித்து நேர்முகத்தேர்வும் நடத்தப்பட்டது. இதில், கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியரான டி.விஜயலட்சுமி வருகைதருப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹூஸ்டன் தமிழ் இருக்கையுடன் சேர்த்து, வெளிநாடுகளில் ஐசிசிஆர் அமைப்பின் தமிழ் இருக்கை 3 ஆக உயருகிறது. ஏற்கெனவே, போலந்தில் இதன் சார்பில் இரண்டு தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/158537

  • கருத்துக்கள உறவுகள்
On 22/6/2023 at 23:13, ரஞ்சித் said:

கொலைகாரன் என்று விசா தர மறுத்துவிட்டார்களா?

உண்மை. குஜரத் முதலமைச்சராக இருந்த காலத்தில் முஸ்லீம்கள் மீதான படுகொலைகளுக்குக் காரணமாக இருந்தவர் என்று சர்வதேசத்தில் நம்பப்பட்டவர்

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் அண்ணா. முஸ்லிம் நாடான எகிப்து தனது நாட்டின் அதிஉயர் விருதை  மோடிக்கு  கொடுத்து கவுரவித்து இருக்கிறது.அவர் அங்கே பழைகாலத்து மசூதிக்கும் விசிட் செய்தவராம்.

https://www.thehindu.com/news/national/egyptian-president-el-sisi-confers-pm-narendra-modi-with-order-of-the-nile-award/article67007998.ece

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, ஏராளன் said:

கடந்த வருடம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி முதலாக ‘உலகின் மூத்த மொழி தமிழ்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு வருகிறார். இதுவரை தனது இந்திய நிகழ்ச்சிகளில் மட்டும் இதைக் கூறிவந்த அவர், வெளிநாடுகளிலும் இதை பேசத் தொடங்கியுள்ளார்.

கண்ணன் தமிழ்நாட்டிலையே  கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்.
பெரியார் மண்ணில் தாமரை மலருமா?

  • கருத்துக்கள உறவுகள்

அவரது ஒரு மணித்தியால உரை அமெரிக்காவை உச்சி குளிர வைத்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

கண்ணன் தமிழ்நாட்டிலையே  கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்.
பெரியார் மண்ணில் தாமரை மலருமா?

ஹூஸ்டன் பல்கலைக் கழகத்திலும், மத்திய அரசு உதவியுடன்… தமிழ் இருக்கை
அமைக்கப் படும் என்று, நல்ல செய்தியை சொல்லியுள்ளார்.

திராவிடத்தை… தமிழ் நாட்டை விட்டு விரட்டுவதற்காகத் தன்னும்… 
தாமரை அல்லது சீமான் வர வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அழைப்பு - பிரதமர் நரேந்திர மோடி

Published By: VISHNU

26 JUN, 2023 | 12:27 PM
image
 
2.7 பில்லியன் டொலர் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்கவின் மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

ராய்ட்டர் செய்தி சேவையின் அறிக்கையின்படி, மைக்ரான்  நிறுவனத்திற்கு 110 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தியை அதிகரிக்க மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, செயல்முறை தொழில்நுட்பம் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு தரப்புகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/158606

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஹூஸ்டன் பல்கலைக் கழகத்திலும், மத்திய அரசு உதவியுடன்… தமிழ் இருக்கை
அமைக்கப் படும் என்று, நல்ல செய்தியை சொல்லியுள்ளார்.

திராவிடத்தை… தமிழ் நாட்டை விட்டு விரட்டுவதற்காகத் தன்னும்… 
தாமரை அல்லது சீமான் வர வேண்டும். 

அந்த திராவிடம் தன் கொள்கைய வைத்து தமிழ்நாட்டில் எதையும் சாதிக்கவில்லை.
அந்த புண்ணிய பூமியில் தாமரை மலர்ந்தாலும் சந்தோசம். நாம் தமிழர் கை ஓங்கினாலும் சந்தோசம்.

மோடி பைடன் சந்திப்பில் இருவருக்கும் பரிமாறப்பட்ட பானங்களின் நிறம் வித்தியாசமாக உள்ளதே. வழக்கமாக இப்படி வித்தியாசமாக இருப்பதில்லை. பைடன் பச்சைத் தண்ணி குடிக்கிறார். மோடியின் கையில் உள்ளது மஞ்சள் நிறமாக உள்ளது (கேமியம் ?).

modi.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு தலை, ரஸ்யாவுக்கு வால் - பிராந்திய வாலரசு இப்படித்தான் காலத்தை ஓட்டுகிறது🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.