Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டைட்டானிக்கின் சிதைவுகளிற்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து சென்ற நீர்மூழ்கியிலிருந்த அனைவரும் உயிரிழப்பு – அமெரிக்க கடற்படை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டைட்டானிக்கின் சிதைவுகளிற்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து சென்ற நீர்மூழ்கியிலிருந்த அனைவரும் உயிரிழப்பு – அமெரிக்க கடற்படை

Published By: Rajeeban

23 Jun, 2023 | 05:44 AM
image

டைட்டானிக் நீர் மூழ்கியிலிருந்த ஐவரும் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது.

டை;டானிக்கின் சிதைவுகளுக்கு அருகில் நீர்மூழ்கியின் சிதைவடைந்த ஐந்து பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக  ரியர்அட்மிரல் ஜோன் மகுவர் உறுதிசெய்துள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட சிதைவுகள் ஒரு பேரழிவு வெடிப்பு இடம்பெற்றிருக்கலாம் என கருதக்கூடிய விதத்தில் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

நீர்மூழ்கி காணாமல்போன சிலநிமிடங்களிலேயே அமெரிக்க கடற்படை ஒருவெடிப்பு என கருதக்கூடிய ஒலியை உணர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

டைட்டானிக்கின் சிதைவுகளை பார்வையிடுவதற்கு ஐவரை ஏற்றிக்கொண்டு சென்ற நீர்மூழ்கி ஞாயிற்றுக்கிழமை காணாமல்போனமை குறிப்பிடத்தக்கது.
 
https://www.virakesari.lk/article/158375

  • கருத்துக்கள உறவுகள்

நீர்மூழ்கி பயணித்த பாதையில் சிதைவுகளை காணமுடிகின்றது – அமெரிக்க கடலோர காவல்படை

22 JUN, 2023 | 10:34 PM
image
 
டைட்டானிக் சிதைவுகள் காணப்படும் பகுதிக்கு அருகி;ல் சிதைவுகள் பலவற்றை அவதானித்துள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்

டைட்டானிக் சிதைவுகளிற்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்துச்சென்ற நீர்மூழ்கி காணாமல்போயுள்ள நிலையில் அதனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடலோர காவல்படையினரே இதனை தெரிவித்துள்ளனர்

டைட்டானிக் விபத்தினை சந்தித்த பகுதிக்கு அருகில் சிதைவுகள் பலவற்றை அவதானித்துள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

நீருக்கடியில் செயற்படும் ஆர்ஓவிக்கள் remotely operated vehicle இதனை கண்டுபிடித்துள்ளன விக்டர் 6000 என அழைக்கப்படும் இவற்றை பிரான்ஸ் தேடுதல் நடவடிக்கைகாக வழங்கியுள்ளது.

கடலுக்கடியிலிருந்து அனுப்பப்பட்ட படங்கள் மூலம் சிதைவுகள் குறித்து தெரியவந்துள்ளது இது குறித்து நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/158374

  • கருத்துக்கள உறவுகள்

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின்... வெடிப்பு எப்படி இருந்திருக்கும், 
என்பதற்கான உதாரணம் இங்கே. கடலின் ஆழத்தை பொறுத்து...  
வெடிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

போனது எல்லாம் பெரிய பணக்காரர்கள். அது Titanic.. இது Titan. இதற்கு முதல் இந்த இடத்தை எத்தனையோ தரம் போய் பார்த்தெல்லாம் வந்திருக்கினம்.. ஆக இது ஒரு புது இடமல்ல. 

இது என்னவோ சதியா இருக்குமோ என்ற சந்தேகம் தான் மிஞ்சுது. என்ன இன்னும் சில வருடங்களில் ஹொலிவூட்டுக்கு காசு பார்க்க.. ஒரு கதை ரெடி. அதற்குப் பெயர்..Titan.

உக்ரைனில்.. ஹொலிவூட் காட்சிகள் அரங்கேறும் ஸ்ரார் வோர் ரேஞ்சில.. உக்ரைன் அடிக்கும் என்று கனவு கண்ட மேற்குலக ஊடகங்களுக்கும் மைன்ட் செட்டுக்கும்.. ஒரு மாற்றம் அவசியம் தானே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

96 மணி நேர கவுண்ட்டவுன் - பலியான 5 மில்லினியர்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் 
1912´ம் ஆண்டு மூழ்கிய  டைட்டானிக் கப்பலை,
2030´ம் ஆண்டு முற்று முழுதாக அழிக்க இருக்கின்றார்களாம் அதற்குள் 
பார்த்து விட வேண்டும் என்று..டைட்டான்  நீர்முழ்கி கப்பல் மூலம் சென்ற 
5 பணக்காரர் பலியாகி விட்டார்கள். 

பணம்,  அதிகம் இருந்தாலும்.... உயிருக்கு ஆபத்து.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இவர்கள் அழிக்கத் தேவையில்லை அண்ணை, அதுவாகவே துருப்பிடித்து உருக்குலைந்து கொண்டிருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஏராளன் said:

இவர்கள் அழிக்கத் தேவையில்லை அண்ணை, அதுவாகவே துருப்பிடித்து உருக்குலைந்து கொண்டிருக்கிறது!

சரியான கூற்று.......கிடக்கிறவரைக்கும் மீன்களாவது பிள்ளை குட்டிகள் பெற்று இனத்தைப் பெருக்கி வாழ்ந்திட்டுப் போகட்டும்.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

Image

Image

ஐந்து பேருடன் சென்ற  "டைட்டன்" நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது, 
இது 1 ஆம் நாளிலிருந்து கீழே செல்லும் வழியில் வெடித்தது! 
 
பிற் குறிப்பு: இந்தப் படத்தின் உண்மைத் தன்மை பற்றி, உறுதிப் படுத்த முடியவில்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இவர்கள் அழிக்கத் தேவையில்லை அண்ணை, அதுவாகவே துருப்பிடித்து உருக்குலைந்து கொண்டிருக்கிறது!

தமிழ் யூரியூபர்கள் கொஞ்சம் தங்கள் கற்பனை அவியல்களையும் சேர்த்து வீடியோக்கள் விட்டுக் காசு பார்ப்பர்😂. அவியலில் இந்த "அழிக்கப் போகிறார்கள்" என்பதும் ஒன்று. கடந்த நூறாண்டுகளில் எப்படி ரைற்றானிக் சிதைவுகள் மாறியிருக்கின்றன என்பதை வைத்து மொடலிங் செய்த போது 2030 இல் ரைற்றானிக் சிதைவுகள் முற்றாக இல்லாமல் போய் விடும் என்பதை மட்டும் தான் யுனெஸ்கோ சொல்லியிருக்கிறது.

கவனிக்க வேண்டிய இன்னொரு கருத்து, எப்படி "பல  நாடுகள் சேர்ந்து இந்த செல்வந்தர்களைக் காக்க முனைந்தன, ஆனால் ஆபிரிக்காவில் படகு கவிழ்ந்தால் யாரும் வரவில்லை" என்ற முறைப்பாடு. ஆபிரிக்காவில் ஒரு நாட்டின் எல்லைக்குள் கவிழ்ந்த படகை அந்த நாட்டின் மீட்புப் படை தான் கவனிக்க வேண்டும். சர்வதேசப் பரப்பில் விபத்து நிகழ்ந்தால் உதவக் கூடிய தொழில் நுட்ப வல்லமையுள்ள நாடுகள் எவ்வளவு தொலைவிலிருந்தாலும் உதவிக்கு வருவார்கள். இதுவே வழமை.

2 hours ago, Justin said:

அண்மையில் கிரீஸ் நாட்டு கடல் எல்லையில் 500 மேற்பட்டவர்கள் (அதில் பெண்களும் குழந்தைகளுமே பெரும்பாலானோர்) கொல்லப்பட்ட விபத்து நடந்தது ஆபிரிக்க கடல் பிரதேசத்தில் அல்ல. கப்பல், 10 மணி நேரங்களுக்கும் மேலாக அவதிப்படும் போதும், கிரீஸ் நாட்டு கடற்படை உட்பட எவரும் உதவவில்லை. 

4 பணக்காரர்கள் மற்றும் பொறுப்பற்ற தந்தையால் கூட்டிச் செல்லப்பட்ட இளைஞன் ஆகியோரின் சாகச பயணத்தில் நிகழ்ந்த விபத்துக்கு சர்வதேசமும், அதன் ஊடகங்களும் கொடுக்கும் முன்னுரிமையில் பத்தில் ஒன்று அளவுக்கு கூட 500 இற்கும் மேற்பட்ட அகதிகள் கொல்லப்பட்ட படகு விபத்திற்கு கொடுக்கப்படவில்லை என்பது தான் யதார்த்தம்.

சர்சதேச கடலில் நிகழ்ந்தாக பிபிசி யும் செல்கின்றது:

https://www.bbc.com/news/world-europe-66003244

Edited by நிழலி
ஒரு சொல்லை மாற்ற

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இது உண்மை. கிறீஸ் (சாதாரணமாகவே நிற/இனவாதிகள்) கடற்படை, நகராமல் இருந்த அகதிகள் படகை ஏனைய வர்த்தகக் கப்பல்களைக் கொண்டு உணவும் நீரும் மட்டும் வழங்கிக் கொண்டிருந்து விட்டு தாழ அனுமதித்து விட்டது. ஆனால், Frontex எனும் ஐரோப்பிய ஒன்றிய எல்லைக் காவல் படையின் கப்பல்கள் பல அகதிகள்  படகுகளை வழி மறித்து இத்தாலிக் கரைக்குக் கொண்டு செல்வதும் நடந்திருக்கிறது.

இந்த நீர்மூழ்கி விபத்து நிலைக்கும், அகதிகள் படகுகள் விபத்துகளுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றனவே? 12000 அடி ஆழத்தில் உயிரோடு மாட்டுப் பட்டிருப்பார்களோ என்ற சந்தேகத்தில் பல நாடுகளின் முயற்சி தேவைப்பட்டது. செய்தி ஊடகங்களும் கவனம் செலுத்தின. இது இவர்கள் செல்வந்தர்கள் என்பதால் நடந்தவை என நான் கருதவில்லை. இது ஒரு அபூர்வமான விபத்து என்பதால் தான் இந்தப் பிரபல்யம். சிலியில் சில வருடங்கள் முன்பு சுரங்கத்தில் மாட்டிக் கொண்ட தொழிலாளர்களையும் அமெரிக்க/ பல் தேசிய நடவடிக்கை தான் மீட்டது, மீடியாக் கவனமும் பெருமளவு இருந்தது. தாய்லாந்தின் குகை மீட்பும் அதே போலத் தான்.

எனவே, எல்லாவற்றையும் வைத்துப் பார்த்தால் இவை செல்வந்தர்களான பயணிகளுக்குக் கிடைத்த விசேட சலுகையாகத் தெரியவில்லை. அவர்களை மீட்க அவசியமான நடவடிக்கைகளை எடுத்தார்கள் என்று மட்டும் தான் எனக்குப் புரிகிறது.

11 minutes ago, Justin said:

இந்த சாகச பயண விபத்தும் சிலி சுரங்க விபத்தும், தாய்லாந்து மாணவர்கள் குகையில் சிக்கிய நிகழ்வும் ஒரே ஒரே தட்டில் வைத்து ஒப்புடக் கூடியதாக எனக்குத் தோன்றவில்லை. 

இவர்களை மீட்க சர்வதேசம் மேற்கண்ட முயற்சிகளை விட சர்வதேச ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் தான் சந்தேகங்களை எழுப்புகின்றது. அவர்கள் இறந்துவிட்டனர் என்று அறிந்த பின்பு அவர்களின் குடும்பத்தின் பேட்டிகளை கண்ணீர் கதைகளை முதன்மைச் செய்திகளாக தொடர்ந்து வெளியிட்டு வருவது இயல்பானதாக தோன்றவில்லை. இவை எனக்கு கிரீஸ் விபத்தின் இழப்புகளை மூடி மறைக்க செய்யும் உத்தியாக இருக்கலாமோ என்று சந்தேகம் உள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிறீஸ்,இத்தாலி,துருக்கி போன்ற நாடுகளுக்கு அளவிற்கு அதிகமான அகதிகள் வருகையால் சகிப்புத்தன்மை இல்லாமல் போய் விட்டது. இத்தாலி கிறீஸ்  நாட்டு கடல் கண்காணிப்பாளர்கள் அகதிகப்பல் விபத்துக்களை கண்டும் காணாமலும் இருந்த சம்பவங்கள் நிறையவே உண்டு.

உலகிற்கு அத்தியாவசியமற்ற பொழுது போக்கிகளின் மரணத்திற்காக வாதாடுவது பொன்னான நேரத்தை வீணடிப்பதற்கு சமம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

இந்த சாகச பயண விபத்தும் சிலி சுரங்க விபத்தும், தாய்லாந்து மாணவர்கள் குகையில் சிக்கிய நிகழ்வும் ஒரே ஒரே தட்டில் வைத்து ஒப்புடக் கூடியதாக எனக்குத் தோன்றவில்லை. 

இவர்களை மீட்க சர்வதேசம் மேற்கண்ட முயற்சிகளை விட சர்வதேச ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் தான் சந்தேகங்களை எழுப்புகின்றது. அவர்கள் இறந்துவிட்டனர் என்று அறிந்த பின்பு அவர்களின் குடும்பத்தின் பேட்டிகளை கண்ணீர் கதைகளை முதன்மைச் செய்திகளாக தொடர்ந்து வெளியிட்டு வருவது இயல்பானதாக தோன்றவில்லை. இவை எனக்கு கிரீஸ் விபத்தின் இழப்புகளை மூடி மறைக்க செய்யும் உத்தியாக இருக்கலாமோ என்று சந்தேகம் உள்ளது. 

இன்னொரு திரியில் இது போன்ற "சந்தேகங்களை" வைத்துச் சதிக்கதையையே பின்னத் தொடங்கி விட்டார்களென நினைக்கிறேன்😂.

ஆனால், இது வரை எத்தனை தடவைகள் மத்திய தரைக்கடலில் அகதிகள் படகுகள் கவிழ்ந்து, அகதிகள் மூழ்கியிருக்கிறார்கள்? அப்போதெல்லாம் நீங்கள் சொல்வது போல மடைமாற்றும் முயற்சி செய்யாமல், இப்போது மட்டும் ஏன் செய்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

இறந்தவர்களில் சிலர் பிரபலமானவர்கள் என்பதும், இது அடிக்கடி நடக்காத ஒரு அரிய விபத்து என்பதும் செய்திச் சக்கரத்தை ஆக்கிரமித்திருக்கின்றன என நினைக்கிறேன். என்னைப் பொறுத்த வரை அவர்கள் காசில் அவர்கள் சுற்றுலா போனது தவறில்லை. ஆனால், பாதுகாப்பில் அக்கறையேயில்லாமல் சுற்றுலா நிறுவனம் இருந்திருக்கிறது - அது தவறு! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, தமிழ் சிறி said:

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின்... வெடிப்பு எப்படி இருந்திருக்கும், 
என்பதற்கான உதாரணம் இங்கே. கடலின் ஆழத்தை பொறுத்து...  
வெடிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம்.

இது அரச அனுமதியில்லாத சிறிய நீர்மூழ்கி கப்பலாம். எந்தவொரு  பாதுகாப்பு தொழில் நுட்பங்களே இல்லையாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்கு முன்பே, இன்றைய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அந்த பெருநிலப்பரப்பில் மூலப்பொருள், மூலவளங்கள் அற்ற நிலையில் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் முதல் நீர்மூழ்கி 1860 அளவில், அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அன்று முதல், பல்வேறு சாகச விரும்பிகள் பல நீர்மூழ்கிகளை வடிவமைத்து வந்திருக்கிறார்கள். விபத்துக்குள்ளான நீர்முழ்கியை விடப் பாதுகாப்பான நீர்மூழ்கிகள் அரை நூற்றாண்டுகளாகப் புளக்கத்தில் இருக்கின்றன.

அமெரிக்க முன்னால் சனாதிபதி ஒபாமா,  Titan விபத்தையும் கிரீஸ் கப்பல் விபத்தையும் உலகம் எவ்வாறு கவனித்தது தொடர்பாக ஒப்பிட்டு பேசிய பேட்டி/ காணொளி.

https://www.independent.co.uk/news/world/americas/barack-obama-titanic-sub-migrant-boat-b2363161.html

  • கருத்துக்கள உறவுகள்

கிரீஸ் படகு விபத்து; 290 க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு

கிரீஸ் படகு விபத்து; 290 க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு

கிரீஸில் சுமார் 750 புகலிடக்கோரிக்கையாளர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதில் 298 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் இன்றைய தினம் துக்க தினமாகப்   பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

இப்படகில் 310 பாகிஸ்தானியர்கள் பயணித்துள்ள நிலையில்,  அவர்களில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் எனவும், 298 பேர் பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், உயிரிழந்தவர்களில்  134 பேர் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்றைய தினத்தை துக்க தினமான அந்நாடு பிரகடனப்படுத்தியுள்ளது.

கடந்த புதன் கிழமை அதிக எடைகாரணமாக ஏற்பட்ட இவ்விபத்தில் 78 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு 500 பேர் காணமற்போயுள்ளனர்  எனவும் அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் எனவும்  கூறப்பட்டது.

இந்நிலையிலேயே பாகிஸ்தான் அரசு 298 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவித்துள்ளது.

https://athavannews.com/2023/1335422

####################    ####################   ###############

May be a doodle

கோட்டு சூட்டு போட்ட வெள்ளைக்கார  அங்கிள்...
ஒவ்வொரு பிரச்சினைகளையும் கையாண்டு,
சொல்லுற நியாயாத்தை கேட்க... உடம்பெல்லாம் புல்லரிக்கும். animiertes-gefuehl-smilies-bild-0107.gif
அதுக்கு... வக்ககாலத்து வாங்கிற ஆட்களை பார்க்க, இன்னும் தமாசாய் இருக்கும். animiertes-gefuehl-smilies-bild-0191.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nedukkalapoovan said:

போனது எல்லாம் பெரிய பணக்காரர்கள். அது Titanic.. இது Titan. இதற்கு முதல் இந்த இடத்தை எத்தனையோ தரம் போய் பார்த்தெல்லாம் வந்திருக்கினம்.. ஆக இது ஒரு புது இடமல்ல. 

இது என்னவோ சதியா இருக்குமோ என்ற சந்தேகம் தான் மிஞ்சுது. என்ன இன்னும் சில வருடங்களில் ஹொலிவூட்டுக்கு காசு பார்க்க.. ஒரு கதை ரெடி. அதற்குப் பெயர்..Titan.

உக்ரைனில்.. ஹொலிவூட் காட்சிகள் அரங்கேறும் ஸ்ரார் வோர் ரேஞ்சில.. உக்ரைன் அடிக்கும் என்று கனவு கண்ட மேற்குலக ஊடகங்களுக்கும் மைன்ட் செட்டுக்கும்.. ஒரு மாற்றம் அவசியம் தானே. 

9௦ வயது தாத்தா முதல் 12 வயது பிள்ளை வரை  முன்னைய பயனம்களில் போய் உடைந்த கப்பலை பார்க்கையில் வெடிக்காத நீர் முழ்கி இப்ப  எந்த காரணமும் இன்றி வெடித்து உள்ளது என்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

அமெரிக்க முன்னால் சனாதிபதி ஒபாமா,  Titan விபத்தையும் கிரீஸ் கப்பல் விபத்தையும் உலகம் எவ்வாறு கவனித்தது தொடர்பாக ஒப்பிட்டு பேசிய பேட்டி/ காணொளி.

https://www.independent.co.uk/news/world/americas/barack-obama-titanic-sub-migrant-boat-b2363161.html

ஒபாமாவின் மனிதாபிமானம் கலந்த தலைமைக்கு நான் என்றும் தலைவணங்கும் ஒருவன்.

ஆனால், நான் எப்படி  இரு செய்திகளையும் பார்த்தேன் என்று யோசித்துப் பார்க்கும் போது கிறீஸ் கப்பல் செய்தியை பிபிசியில் மட்டும் பார்த்தேன் (பிபிசி லைவ் கவரேஜ் போடவும் இல்லை). நீர்மூழ்கி விபத்துச் செய்தியை  தொலைக்காட்சியிலும், பிபிசி லைவ் கவரேஜிலும் தொடர்ந்து பார்த்து வந்தேன்.  எப்படித் தப்புவர்?, எப்படி கண்டு பிடித்த பின்னர் மீட்பர்? போன்ற கேள்விகள் எனக்கிருந்ததால் தான் ஆர்வத்தோடு தேடித் தேடிப் பார்த்தேன். ஏனோ, அகதிகள் படகு விடயத்தில் எனக்கு இந்த ஆர்வம் இருக்கவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

, அகதிகள் படகு விடயத்தில் எனக்கு இந்த ஆர்வம் இருக்கவில்லை.  

ஒரு வேளை அகதிகள்  தத்தமது  நாடுகளை  விட்டு

கானல்  நீர்  போன்ற  நாடுகளை  நோக்கி  ஓடுவதற்கு  எதிரான  மனநிலைக்கு  நாம்  வந்து  விட்டது காரணமாக  இருக்குமா???

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

ஒரு வேளை அகதிகள்  தத்தமது  நாடுகளை  விட்டு

கானல்  நீர்  போன்ற  நாடுகளை  நோக்கி  ஓடுவதற்கு  எதிரான  மனநிலைக்கு  நாம்  வந்து  விட்டது காரணமாக  இருக்குமா???

ஒ..நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்களென நினைக்கிறேன்.

அகதிகள் படகு எப்படி மூழ்கியது, இனி என்ன செய்வர் போன்ற கேள்விகள் எனக்கு இருக்கவில்லை, அதனால் செய்தியைப் பார்த்து விட்டு தொடராமல், அது பற்றி அதிகம் யோசிக்காமல் இருந்து விட்டேன். மற்றபடி அகதிகள் பிரச்சினை பரிதாபத்திற்கும், அக்கறைக்கும் உரியது தான். அகதிகளை வெறுக்கும் அளவுக்கு நான் அதி வலது பக்கத்திற்கு நகரவில்லை இன்னும்.
 
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

ஒ..நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்களென நினைக்கிறேன்.

அகதிகள் படகு எப்படி மூழ்கியது, இனி என்ன செய்வர் போன்ற கேள்விகள் எனக்கு இருக்கவில்லை, அதனால் செய்தியைப் பார்த்து விட்டு தொடராமல், அது பற்றி அதிகம் யோசிக்காமல் இருந்து விட்டேன். மற்றபடி அகதிகள் பிரச்சினை பரிதாபத்திற்கும், அக்கறைக்கும் உரியது தான். அகதிகளை வெறுக்கும் அளவுக்கு நான் அதி வலது பக்கத்திற்கு நகரவில்லை இன்னும்.
 
நான்  ஒரு  அளவுக்கு அந்த  மனநிலையில் தான் உள்ளேன்

அகதிகளை  வெறுப்பதென்று இல்லை

அவரவர் நாட்டில் எல்லா  வளங்களும் உண்டு

அவற்றை  விட்டு விட்டு

அநேகமாக  பொருளாதாரம்  தேடி அலைவதைத்தான் கானல் நீர் என்று குறிப்பிட்டேன்

நாட்டை விட்டு புறப்பட்டதற்காக  தற்போதும் வருந்துவதுண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.