Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ.. 
பி.பி.சி. நிருபரை...  வெளுத்து வாங்கினார்.
இந்த பி.பி.சி. நிருபருக்கு... ஒரு கப் தண்ணி குடுங்க. 😂

  • Replies 231
  • Views 15.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குட்டி ஸ்டோரி 

1. புட்டின் சனி காலை நிகழ்த்திய உரையிலும், நேற்றைய உரையிலும்…பிரிகோசினை ரஸ்யாவை முதுகில் குத்திய துரோகி என்றார்

2. நேற்றைய உரையில், இந்த கலகத்தின் தலைவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்

3. இந்த கலகத்தால் ரஸ்யா விமானங்கள், விமானிகளை இழந்தது என்பதை ஏற்று கொண்டார்.

இன்று…..

4. பிரிகோசின் மீதான தேச துரோக வழக்குகள் கைவிடப்படுள்ளன

5. பிரிகோசினின் தனியார் ஜெட், ரோஸ்டோவ் வில் இருந்து பெலரூஸ் போயுள்ளது. அதில் பிரிகோசின், வாக்னர் கூட்டாளிகள், குடும்பம் அடக்கமாம்

முடிவு?

1. தான் ரஸ்யாவின் துரோகி என நேற்று சொன்னவரை…

2. தான் கட்டாயம் தண்டிக்கப்படுவார் என நேற்றிரவு சொன்னவரை…

இன்று தண்டிக்காமல், தப்பி போக விட வேண்டிய கையாலாகாத நிலையில் இருக்கிறார் புட்டின்.

புட்டினின் அதிகாரம், ஆளுமை, சுக்கல் சுக்கலால உடைந்து விட்டது.

இனி பிரிகோசனை கொன்றால் மட்டுமே புட்டிகள் இதை ஓரளவுக்கு திரும்பி பெற முடியும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஒரு குட்டி ஸ்டோரி 

1. புட்டின் சனி காலை நிகழ்த்திய உரையிலும், நேற்றைய உரையிலும்…பிரிகோசினை ரஸ்யாவை முதுகில் குத்திய துரோகி என்றார்

2. நேற்றைய உரையில், இந்த கலகத்தின் தலைவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்

3. இந்த கலகத்தால் ரஸ்யா விமானங்கள், விமானிகளை இழந்தது என்பதை ஏற்று கொண்டார்.

இன்று…..

4. பிரிகோசின் மீதான தேச துரோக வழக்குகள் கைவிடப்படுள்ளன

5. பிரிகோசினின் தனியார் ஜெட், ரோஸ்டோவ் வில் இருந்து பெலரூஸ் போயுள்ளது. அதில் பிரிகோசின், வாக்னர் கூட்டாளிகள், குடும்பம் அடக்கமாம்

முடிவு?

1. தான் ரஸ்யாவின் துரோகி என நேற்று சொன்னவரை…

2. தான் கட்டாயம் தண்டிக்கப்படுவார் என நேற்றிரவு சொன்னவரை…

இன்று தண்டிக்காமல், தப்பி போக விட வேண்டிய கையாலாகாத நிலையில் இருக்கிறார் புட்டின்.

புட்டினின் அதிகாரம், ஆளுமை, சுக்கல் சுக்கலால உடைந்து விட்டது.

இனி பிரிகோசனை கொன்றால் மட்டுமே புட்டிகள் இதை ஓரளவுக்கு திரும்பி பெற முடியும்.

கொல்ல முடியும் என்றால் தப்பிக்க விட்டு இருப்பாரா??

இனி அந்தாள் அங்கே ஆட்சி?

ஏலும் என்றால் பண்ணி பாருங்களேன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

முடிவு?

1. தான் ரஸ்யாவின் துரோகி என நேற்று சொன்னவரை…

2. தான் கட்டாயம் தண்டிக்கப்படுவார் என நேற்றிரவு சொன்னவரை…

இன்று தண்டிக்காமல், தப்பி போக விட வேண்டிய கையாலாகாத நிலையில் இருக்கிறார் புட்டின்.

புட்டினின் அதிகாரம், ஆளுமை, சுக்கல் சுக்கலால உடைந்து விட்டது.

இனி பிரிகோசனை கொன்றால் மட்டுமே புட்டிகள் இதை ஓரளவுக்கு திரும்பி பெற முடியும்.

 

முடிவு:

மனிதகுலத்துக்கெதிரான இருபெரும் பயங்கரவாதிகள் பிரிந்துள்ளனர். நல்ல விடயம்.

அடுத்த விடயம், புட்டினால் இப்ப கூட துள்ளமுடியாமல் இருக்கின்றது. ஏதோ ஒரு பெரும் பிடி இன்னும் பிரிகோஜினின் பிடியில் இருப்பதாக தோன்றுகின்றது. பிரிகோஜின் ரஶ்யாவில் இல்லாவிட்டாலும் அவரின் நம்பிக்கைக்கு உரியவர்கள் இன்னும் உயர்மட்டத்தில் இருக்கின்றார்கள். இல்லாவிட்டால் இவ்வளவு சுலபமாக பிரிகோஜின் ரஷ்யாவைவிட்டு வெளியேறி ரஷ்ய பயங்கரவாத ஆதரவு நாடான வெள்ளை ரஷ்யாவுக்குள் போயிருக்கமுடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

 பிரிகோஸின் கனரக ஆயுதங்களை ஒப்படைப்பதத்திற்கு இணங்கி உள்ளதாக.

ருசியா அரசு - அரசின் பாணியில் சலனம் இல்லாமல் செயற்படுவதை ஏன் இங்கே அவதானிக்க முடியாததாக உள்ளது.  

பிரிகோசினுக்கு என்ன நடக்கிறது என்பதை பொறுத்து  இருந்து தான் பார்க்க வேண்டும்.  

ரஷ்யா ஒருபோதும் உணர்ச்சிகரமான நடவடிக்கைக்கு இடம் கொடுக்காது.

அப்படி நடக்க வேண்டும் என்று மேற்கு எதிர்பார்க்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன லவ் மேட்டரா உணர்சிகளை பற்றி கதைக்க.

சட்ட படி நடவடிக்கை எடுக்க தைரியம் இல்லாமல்…பிரிகோசனை ராஜ மரியாதையோடு பெலரூஸ் அனுப்பிய கணமே, ரஸ்யாவின், புட்டினின் ஆண்மை பல்லிளித்து விட்டது.

இனி என்ன தான் சேர்ட்டை கழற்றி விட்டு குதிரையில் ஓடினாலும், கரடியோடு கராத்தே விளையாடினாலும்….

“பிரிகோசனுக்கு பயந்த பேடி” என்றே புட்டினை, சாதாரண ரஸ்ய மக்களும், உலகும், வரலாறும் கருதும்.

இனி வழமையாக செய்வது போல் பேடித்தனமாக தேனீரில் புலோனியம் கலந்தோ, மாடியில் இருந்து தள்ளி விட்டோ பிரிகோசனை கொன்றால் - இழந்த மதிப்பில் 20% அளவில் மீட்க கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

உசுப்பேத்தும் கதைகளை அரசுக்கள் கணக்கில் எடுப்பதில்லை என்பது தெரியாது போலும்.

வேடிக்கை அதை சொல்லி வாதம் வைக்கப்படுகிறது, உண்மையான விடயங்களை கதைக்காமல். 

சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேர வரம்பு இருக்கிறதா? மீள்குற்றம் சுமத்த எவ்வளவு நேரம் தேவை?

immunity அளிக்கப்பட்டதா?  

இங்கே பதிபவர்கள், அல்லது மேற்றுகின் நேர அட்டவணை அல்லது நிகழ்ச்சி அட்டவணைக்கு ஏற்ற படி நடக்க  வேண்டும் என்பதில் ருசியாவுக்கு என்ன கட்டாயம்.

முதலில், அரசுக்கு ஏற்றப்பட்டு இருக்கும் ஓபிஓட்டளவில் சிறு சேதங்களையும், மற்றும் வேறு எதாவது அச்சுறுத்தல் காரணிகளை நீக்குதல்.

அதி முக்கியமானது, கனரக ஆயுதங்களை களைதல்.

மிகுதியை எவரும் அட்டவணை போடலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றிற்கும் முதலாவதாக - ராஜ துரோகம் வெளிபடையாக இழைத்து, அரச படைகளை கொன்று, விமானங்களை சுட்டு வீழ்த்தியோரை….

கைது செய்து…சிறையில் அடைத்து…பின் வழக்கு போட்டு…தண்டணை வழங்க வேண்டும்.

ஒரு தைரியமான தலைவனால் நடத்தப்படும் நாடு அப்படிதான் செய்யும்.

தப்ப விட்டால் கூட பராவாயில்லை…போதை மாபியா டீல் போடுவது போல் டீல் போட்டு….தாமே வழி அனுப்பி வைப்பதெல்லாம்…சைக்…வெட்கம்.

போற போக்கை பார்த்தால்… சோவியத் யூனியன் தயாரித்த அணு குண்டு மட்டும் இல்லை என்றால்…மோல்டோவாவிடம் கூட ரஸ்யா அடி வாங்கி இருக்கும் போல தெரிகிறது🤣.

இந்திய உதவியோடு எனிலும் கூட…புளொட்டுக்கு மாலை தீவு காட்டிய எதிர்வினையை கூட ரஸ்யா பிரிகோசினுக்கு காட்டவில்லை என்பது…வெட்க கேடு.

  • கருத்துக்கள உறவுகள்

மீட்பர் பிறந்து விட்டார் ....
ஜேசு உயிர்த்தெழும்பி விட்டார் 

மாஸ்கோ நோக்கி நகருகிறார் 
என்று வீணை வாசித்த மேற்குல செய்திகள் எல்லாம் 

3 நாளிலேயே அவர் சிறை கைதி குற்றம் இழைத்தவர் 
என்று கரணம் அடித்து நிற்கிறது 

சிரிப்பை அடக்க முடியவில்லை 
மிக சாதாரணமாக கூகிளில் தேடியே ரசிய ஆயுதங்களை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளலாம் 
இப்போ கூடுதலாக சீனா ஈரான் வட கொரியா பின் நிற்கிறது .

ஏன் இங்கு யாழ் களத்தில் உப்புக்கும் உதவாத விடயத்தை பிடித்து தொங்குகிறார்கள் என்பது புரியவில்லை 
குறைந்த பட்ஷம் எமக்கு எந்த லாபமமும் இல்லாத இந்த விடயத்தில் என்றாலும் இருபக்க செய்திகளையும் வாசித்து நடுநிலையாக எழுத முடியும். உக்ரைனுக்கு அழிவு என்பது 25ஆம் புலிகேசி ( உக்கரைனுக்கு எந்த சம்மந்தமும் இல்லாத) பதவிக்கு வந்த போதே மேற்கு உலக அரசியல் ஆய்வாளர்கள் கூட எழுதியது.

இதில் ரசிய மக்களும் சேர்ந்து அழிந்தால் .... எங்களுக்கு சந்தோசம் என்று மக்கள் நலன் விரும்பிகள் எந்த வெட்கமும்  இல்லாமல் எழுத்தில் எழுதி வைக்கிறார்கள். 
நீங்கள் எழுதுவற்றை ஒருவாரம் கடந்து மீண்டும் வாசித்து பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் எமக்கு தெரிந்து எந்த கொலைகார நாயும் நீதிக்கு முன் நிறுத்தி தண்டிக்கப்படவில்லை 
புட்டின் என்றாலும் ஜோர்ஜ் புஸ என்றாலும் அவர்கள் போரில் இறக்கப்போவதில்லை 
இடி அமீன் கூட இறுதிவரை வாழ்ந்தே இறந்தான் 

அப்பாவி மக்களும் ...
அரசு கைநீட்டினால் அதே திசையில் செல்லும் இராணுவமுமே 
இறந்துபோவது. 

வக்கனோர் பற்றி அவர் குற்றம் பற்றி பந்தி பிரிச்சு எழுதுவோருக்கு 
உக்ரைனில் எந்த எந்த மாபியா கும்பல் எல்லாம் சண்டை செய்கிறார்கள் என்பது தெரியுமா? 

குறைந்தபட்ஷம் இலங்கையில் வந்து எம்மீது குண்டு கொட்டிய பிரிட்டிஷை சேர்ந்த கினிமினி அமைப்பின் உறுப்பினர்கள் யார் என்று தெரியுமா? 
(முன்னாள் இராணுவ வீரர் என்ற திரை ஏன் என்று தெரியுமா?) 

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2023 at 11:31, goshan_che said:

இப்பெல்லாம் முன்னர் போல் நடுநிலையாக சிந்திக்கிறேன், கேள்விகள் கேட்டு தெளிவடைகிறேன் என்ற பாவனையை கூட நீங்கள் கைவிட்டு விட்டிடீர்கள் என நினைக்கிறேன்🤣.

 

அவர் புட்டின் அலையில் சிக்கி கனநாளாச்சு ]

இருவரும் சரியாகவே அவதானித்துள்ளீர்கள்.

நானும் ஆரம்பத்தில் நினைத்தேன் அவருக்கு புகுத்தபட்ட சித்தாந்தத்தில் இருந்து அவர் தன்னை தானே கேள்விகள் கேட்டு தெளிவடைந்து வருகிறார், தான் வாழுகின்ற உலகத்திற்கு திரும்புகிறார் என்று. அவரோ எங்களுக்கு பரலோகத்திற்கு வழிகாட்டுகிறார்.

பேலருஸ்  லுக்காசென்கோ சொல்லியுள்ளார் ரஷ்யா விழுந்தால் நாங்களும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி விடுவோம் அனைவரும் இறந்துவிடுவோம் என்று. எங்களது  ரஷ்ய ஆதரவாளர்கள் மேற்குலநாடுகளின் உச்ச கட்ட பாதுகாப்பில் உள்ளனர்.அப்படி இருந்து கொண்டு கிளையை வெட்டும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.
வாக்னர்  கூலிப்படையின் அனுபவத்திலிருந்து தனது நாடு பயனடைய விரும்புவதாக சொல்லியுள்ளார் லுக்காசென்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

ரசியாவை சுற்றி உள்ள நாடுகளை நேட்டோ நாடுகள் ஆக்கி என அங்கெல்லாம் 
அன்ரை மிஸ்ஸில் காப்பரணை அமேரிக்கா நிறுவி வருகிறது? 
என்ற கேள்வியை யாராவது கேட்டிருக்கிறீர்களா?

சிரியாவில் ரசியா ஏன் இறங்கியது?
ஏன் அமரிக்க மற்றும் எடுபிடிகள் சிரியாவில் வைத்து ரசியாவை அடிக்கவில்லை ? 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Maruthankerny said:

ஏன் இங்கு யாழ் களத்தில் உப்புக்கும் உதவாத விடயத்தை பிடித்து தொங்குகிறார்கள் என்பது புரியவில்லை 

நாங்கள் லூசுக்கூட்டம் இதை பிடித்து தொங்குகிறோம் மருதர்….

நீங்களாவது…பிரயோசனமான எதையாவது பிடித்து தொங்குவீர்கள் என பார்த்தால்…

நீங்களும் ஏன் அதையே பிடித்து தொங்குகிறீர்கள்🤣

17 minutes ago, Maruthankerny said:

வக்கனோர் பற்றி அவர் குற்றம் பற்றி பந்தி பிரிச்சு எழுதுவோருக்கு 
உக்ரைனில் எந்த எந்த மாபியா கும்பல் எல்லாம் சண்டை செய்கிறார்கள் என்பது தெரியுமா? 

உங்கள் அளவுக்கு தெரியாது. ஆனால் அசோவ் அணி, அவர்களின் நாஜிய கருத்தியல் பற்றி எமக்கு தெரிந்தவற்றை எழுதி, விவாதித்தும் உள்ளோம். 

நீங்கள் பிசியான, உருப்படியாக நேரத்தை செலவு செய்பவர் என்பதால் கண்ணில் படவில்லை போலும்.

20 minutes ago, Maruthankerny said:

குறைந்தபட்ஷம் இலங்கையில் வந்து எம்மீது குண்டு கொட்டிய பிரிட்டிஷை சேர்ந்த கினிமினி அமைப்பின் உறுப்பினர்கள் யார் என்று தெரியுமா? 
(முன்னாள் இராணுவ வீரர் என்ற திரை ஏன் என்று தெரியுமா?) 

இதை பற்றியும் வீடியோ எல்லாம் இணைத்து அக்கு வேறு ஆணி வேறாக சிலாகித்தோமே.

4 minutes ago, Maruthankerny said:

ரசியாவை சுற்றி உள்ள நாடுகளை நேட்டோ நாடுகள் ஆக்கி என அங்கெல்லாம் 
அன்ரை மிஸ்ஸில் காப்பரணை அமேரிக்கா நிறுவி வருகிறது? 
என்ற கேள்வியை யாராவது கேட்டிருக்கிறீர்களா?

இல்லை. அருகில் இருக்கும் ரசியாவை நம்பாமல், ஏன் இந்த சின்னம் சிறு தேசிய இனவழி நாடுகள் எல்லாம் அத்லாந்திக்கு அப்பால் இருக்கும் அமெரிக்காவை நாடுகிறன என சிலாகித்துள்ளோம்.

6 minutes ago, Maruthankerny said:

சிரியாவில் ரசியா ஏன் இறங்கியது?

அமெரிக்கா ஈராக்கில் இறங்கிய அதே காரணம்

6 minutes ago, Maruthankerny said:

ஏன் அமரிக்க மற்றும் எடுபிடிகள் சிரியாவில் வைத்து ரசியாவை அடிக்கவில்லை

ஒரு அணு ஆயுத நாடு, இன்னொரு அணு ஆயுத நாட்டை அடிக்காது. சிரியாவிலும், உக்ரேனிலும்.

25 minutes ago, Maruthankerny said:

பந்தி பிரிச்சு எழுதுவோருக்கு

நீங்கள் இதுவரைக்கும் 12 பந்தி எழுதி உள்ளீர்கள் மருதர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நாங்கள் லூசுக்கூட்டம் இதை பிடித்து தொங்குகிறோம் மருதர்….

நீங்களாவது…பிரயோசனமான எதையாவது பிடித்து தொங்குவீர்கள் என பார்த்தால்…

நீங்களும் ஏன் அதையே பிடித்து தொங்குகிறீர்கள்🤣

உங்கள் அளவுக்கு தெரியாது. ஆனால் அசோவ் அணி, அவர்களின் நாஜிய கருத்தியல் பற்றி எமக்கு தெரிந்தவற்றை எழுதி, விவாதித்தும் உள்ளோம். 

நீங்கள் பிசியான, உருப்படியாக நேரத்தை செலவு செய்பவர் என்பதால் கண்ணில் படவில்லை போலும்.

இதை பற்றியும் வீடியோ எல்லாம் இணைத்து அக்கு வேறு ஆணி வேறாக சிலாகித்தோமே.

இல்லை. அருகில் இருக்கும் ரசியாவை நம்பாமல், ஏன் இந்த சின்னம் சிறு தேசிய இனவழி நாடுகள் எல்லாம் அத்லாந்திக்கு அப்பால் இருக்கும் அமெரிக்காவை நாடுகிறன என சிலாகித்துள்ளோம்.

அமெரிக்கா ஈராக்கில் இறங்கிய அதே காரணம்

மூக்கு உடைக்கிறமாதிரி எனக்கு சரியான பதிலடி 
இனி இந்த பக்கமே வர முடியாது ......... அவ்வளவு அடி 
சூப்பர் ....... பத்தி அடி  என்றால் இப்படித்தான் அடிக்கவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

மூக்கு உடைக்கிறமாதிரி எனக்கு சரியான பதிலடி 
இனி இந்த பக்கமே வர முடியாது ......... அவ்வளவு அடி 
சூப்பர் ....... பத்தி அடி  என்றால் இப்படித்தான் அடிக்கவேண்டும் 

🤣சும்மா பகிடி விடாமல் நிண்டு எழுதுங்கோ…

ஆனால் முந்தி மாரி ஒரே மூச்சாய் எழுதாமல்…இப்படி அழகாக பத்தி பிரிச்சு எழுதினால் வாசிக்க இலகுவாய் இருக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Maruthankerny said:

மூக்கு உடைக்கிறமாதிரி எனக்கு சரியான பதிலடி 
இனி இந்த பக்கமே வர முடியாது ......... அவ்வளவு அடி 
சூப்பர் ....... பத்தி அடி  என்றால் இப்படித்தான் அடிக்கவேண்டும் 

ஓம் .....மருதங்கேணியார்!
ஜூலியன் அசாஞ்சேக்கு அமெரிக்கா 175 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்குமாம்.அதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்த மாட்டம். ஏனெண்டால் நாங்கள் நடுநிலைவாதிகள்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Sasi_varnam said:

Mr.Kapithan,

உதுக்குள்ள நீங்க  வாய விட்டு வேண்டிக்கட்டாம வெளியில இருந்து புலம்பெயர்ஸ் postmortem றிப்போட்டுகள வாசிக்களாமே!!


நீங்கள் சொன்னதை ஞாபகம் ஊட்டினேன் அவ்வளவே. 😂
 

உண்மையைச் சொன்னால் கோபம் வரும் என்பது உண்மைதானே சசி. 

ஏதோ புட்டின்தான் எங்களை பயங்கரவாதிகளாக அறிவிச்சதாயும், அதாலதான் எங்கள் போராட்டம் தோற்றதாயும, அதனால் ரஸ்யாவும் புடினும் அழிய வேண்டும் எனும் ஒப்பாரிகளை எத்தனை நாளைக்குத்தான் தாங்குவது? சலிப்பு வராதா ? 

அதுக்கு ஒரு கோஸ்ரி ஆமாஞ்சாமி போட்டுக்கொண்டு....ஒத்தூதுதலுக்கும் ஒரு அளவு வேண்டாமா? 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2023 at 15:20, goshan_che said:

🤣சும்மா பகிடி விடாமல் நிண்டு எழுதுங்கோ…

ஆனால் முந்தி மாரி ஒரே மூச்சாய் எழுதாமல்…இப்படி அழகாக பத்தி பிரிச்சு எழுதினால் வாசிக்க இலகுவாய் இருக்கும். 

மன்னிக்கவும் ....
கருத்துக்களத்தில் ஒரு கருத்தை வைத்தால் .. அதற்கு யாரும் பதில் கருத்து வைக்கும்போது அதற்கு பதில் எழுதுவதே முறைமை.

ஓடி ஒழிய காரணம் நேரம் இன்மை 
மற்றது உண்மையிலேயே இந்த ரசிய உக்கரைன் போர் பற்றி இங்கு எழுத எந்த உந்துதலும் இல்லை.
போர் இயந்திரத்தை மேற்கு உலகு கடந்த 50 வருடமாக இயக்கிக்கொண்டே வருகிறது.
ஒரு சில கொடூர நாய்கள் மனித பிணம்தின்று கொழுத்து வருகிறார்கள். ஈழ தமிழனாக இருந்துகொண்டு 
ஒரு கொலைகார கும்பலுக்கு வக்காலத்து வாங்க முடியவில்லை. 

நான் எழுதிய எந்த கருத்திலும் ரசியாவை ஆதரித்து எழுதியதும் இல்லை 
இருந்தும் முன்பு ஒரு திரியில் போட்டு பிழிந்து எடுத்துவிட்டார்கள் 
அவ்வளவு ஆர்வ கோளாறு என்று எண்ணுகிறேன். இதுக்குள் இறங்கி நிற்க முடியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

 

நான் எழுதிய எந்த கருத்திலும் ரசியாவை ஆதரித்து எழுதியதும் இல்லை 
இருந்தும் முன்பு ஒரு திரியில் போட்டு பிழிந்து எடுத்துவிட்டார்கள் அவ்வளவு

ஆர்வ கோளாறு

என்று எண்ணுகிறேன். இதுக்குள் இறங்கி நிற்க முடியவில்லை 

🤣

சரியான வார்த்தைப் பிரயோகம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

மன்னிக்கவும் ....
கருத்துக்களத்தில் ஒரு கருத்தை வைத்தால் .. அதற்கு யாரும் பதில் கருத்து வைக்கும்போது அதற்கு பதில் எழுதுவதே முறைமை.

ஓடி ஒழிய காரணம் நேரம் இன்மை 
மற்றது உண்மையிலேயே இந்த ரசிய உக்கரைன் போர் பற்றி இங்கு எழுத எந்த உந்துதலும் இல்லை.
போர் இயந்திரத்தை மேற்கு உலகு கடந்த 50 வருடமாக இயக்கிக்கொண்டே வருகிறது.
ஒரு சில கொடூர நாய்கள் மனித பிணம்தின்று கொழுத்து வருகிறார்கள். ஈழ தமிழனாக இருந்துகொண்டு 
ஒரு கொலைகார கும்பலுக்கு வக்காலத்து வாங்க முடியவில்லை. 

நான் எழுதிய எந்த கருத்திலும் ரசியாவை ஆதரித்து எழுதியதும் இல்லை 
இருந்தும் முன்பு ஒரு திரியில் போட்டு பிழிந்து எடுத்துவிட்டார்கள் 
அவ்வளவு ஆர்வ கோளாறு என்று எண்ணுகிறேன். இதுக்குள் இறங்கி நிற்க முடியவில்லை 

உங்கள் மன நிலையை முழுவதுமாக புரிந்து கொள்கிறேன்.

இப்போ ஊர் புதினம் பக்கம் தலை வைத்தும் படுக்காமல் நான் விட்டது இதை ஒத்த காரணத்தால்தான்.

உக்ரேன் - அதில் சம்பந்த பட்ட நபர்கள் பற்றியோ, நாடுகள், உலக புவிசார் போட்டிகள் பற்றியோ நான் கருதுவதில்லை.

உக்ரேன் ஒரு இனவழி தேசிய நாடு - அது இன்னொரு பேரினவழி தேசிய நாட்டில் இருந்து தன்னை காத்து, சுயாதீனத்தை பேண வேண்டும். இது மட்டுமே நான் நிலைபாட்டின் ஒரே காரணி.

உக்ரேனியருக்கு மட்டும் அல்ல, முசுலீம்களாக இருந்தாலும் கஸ்மீரிகளுக்கு நான் ஆதரவழிக்கவும் இதுவே காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

உங்கள் மன நிலையை முழுவதுமாக புரிந்து கொள்கிறேன்.

இப்போ ஊர் புதினம் பக்கம் தலை வைத்தும் படுக்காமல் நான் விட்டது இதை ஒத்த காரணத்தால்தான்.

உக்ரேன் - அதில் சம்பந்த பட்ட நபர்கள் பற்றியோ, நாடுகள், உலக புவிசார் போட்டிகள் பற்றியோ நான் கருதுவதில்லை.

உக்ரேன் ஒரு இனவழி தேசிய நாடு - அது இன்னொரு பேரினவழி தேசிய நாட்டில் இருந்து தன்னை காத்து, சுயாதீனத்தை பேண வேண்டும். இது மட்டுமே நான் நிலைபாட்டின் ஒரே காரணி.

உக்ரேனியருக்கு மட்டும் அல்ல, முசுலீம்களாக இருந்தாலும் கஸ்மீரிகளுக்கு நான் ஆதரவழிக்கவும் இதுவே காரணம்.

இந்த தெளிவு தேவை. 

ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் ஆகக் குறைந்த தெளிவு இது தான்.

ஆனால் இங்கே அதை ரசியாவா அமெரிக்காவா என்று மாற்றி விடுகிறார்கள். அந்தக் கேள்வியே இங்கே தேவையில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த உக்ரைன் ரஷ்ய போர் செய்திகளில் இறங்கி நிற்பது ஆர்வம் காரணமாகத் தான். 

நான் ஏற்கனவே இன்னொரு திரியில் சொன்னது போல: உக்ரைன் ரஷ்ய போரைப் பற்றிப் பேசும் யாழ் களம் உட்பட்ட, ஈழத்தமிழர்கள் கருத்து வெளியிடும் தளங்களில் எவ்வளவு அரைவேக்காட்டு வரலாற்றறிவு  எம்மிடையே புளக்கத்தில் இருக்கிறது என்பதைக் கணிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. 2600 ஆண்டுகள் முன்பு நடந்தவை பற்றி நீளமாகப் பேசும் இனக்குழு நாம், ஆனால் 70 ஆண்டுகளுக்குள் நடந்த பாரிய உலக நிகழ்வுகளே தெரியாமல் கேலிச்சித்திரத்திலிருந்து "அறிவை" பெருக்கிக் கொள்ளும் இனமாக இருக்கிறோம்.

இதை மாற்ற, உக்ரைன் ரஷ்ய போர் ஒரு நல்ல சந்தர்ப்பம். இதைச்  செய்யும் போது சிலரது பெருவிரல் மீது மிதிக்க வேண்டி வரும், ஈகோவை நறுக்க வேண்டியும் வரும். ஆனால், நிகர விளைவு எல்லோருக்கும் நல்லதாகத் தான் இருக்கும்! 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விடை தெரியாத மர்மம்: புதினை ரகசியமாக சந்தித்த ப்ரிகோஜின் எங்கே? வாக்னர் குழுவினர் என்ன ஆனார்கள்?

புதின் - ப்ரிகோஜின் சந்திப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

2010-ம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் புதின் - ப்ரிகோஜின் சந்தித்த போது எடுத்த படம்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஸ்டீவ் ரோஸன்பெர்க்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 11 ஜூலை 2023
    புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர்

ரஷ்ய ஆதரவு கூலிப்படையாக இருந்த வாக்னர் குழு ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி மாஸ்கோவை நோக்கி அணிவகுத்து சென்றது. எனினும் ஒரே நாளில் இந்த கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், கிளர்ச்சி முடிவுக்கு வந்த 5 நாட்கள் கழித்து வாக்னர் குழுவின் தலைவர் ப்ரிகோஜினை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சந்தித்து பேசியது தற்போது தெரியவந்துள்ளது. ரஷ்ய அரசும் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

ஜூன் 24ஆம் தேதி காலையில் வாக்னர் குழுவின் கமாண்டர் யெவ்கெனி ப்ரிகோஜின் 5,000 படை வீரர்களுடன் தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுத்துச் சென்றார். ப்ரிகோஜின் ராஜதுரோகம் செய்துவிட்டார் என்றும் முதுகில் குத்திவிட்டார் என்றும் புதின் கடுமையாக இதனை விமர்சித்தார்.

புதின் - ப்ரிகோஜின்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

ஜூன் 24ஆம் தேதி காலையில் வாக்னர் குழுவின் கமாண்டர் யெவ்கெனி ப்ரிகோஜின் 5,000 படை வீரர்களுடன் தலைநகர் மாஸ்கோ நோக்கி அணிவகுத்துச் சென்றார்.

மாஸ்கோவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் வாக்னர் குழு இருந்தபோது, இரு தரப்புக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டது. இதனையடுத்து கிளர்ச்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. யாரும் கைது செய்யப்படவில்லை, யார் மீதும் வழக்குத் தொடரப்படவில்லை.

 

ப்ரிகோஜின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைத் தாண்டி, கிளர்ச்சி முடிவுக்கு வந்த 5 நாட்கள் கழித்து ரஷ்ய அதிபர் மாளிகையில் அதிபர் புதினை தனது படைவீரர்களுடன் போய் அவர் சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தஸ்தாயெவ்ஸ்கியின் கதைகளை மிஞ்சும் அளவுக்கு ஆச்சரியங்களும் மர்மங்களும் உடைய ரஷ்ய அரசு - வாக்னர் குழு விவகாரத்தில் மற்றுமொரு திருப்பமாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் இருவரும் என்ன பேசிக்கொண்டனர், சந்திப்பு எப்படி முடிவுக்கு வந்தது போன்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. எனினும் இதுவரை நிகழ்ந்ததை வைத்து பார்க்கும்போது மீண்டும் அவர்கள் இடையே `நட்பு` ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்பது மட்டும் புரியவருகிறது.

புதின் - ப்ரிகோஜின்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

மாஸ்கோவிற்கு அருகே நடைபெற்ற ஒரு விருந்தில் விளாதிமிர் புதினுடன் ப்ரிகோஜின் - நவம்பர் 2011இல் எடுக்கப்பட்ட புகைப்படம்

சமீப நாட்களாக, ப்ரிகோஜினை பற்றி அவதூறுகளை பரப்புவதிலேயே ரஷ்ய அரசு ஊடகம் அதிகம் கவனம் செலுத்துகிறது.

ப்ரிகோஜினின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் வீட்டில் ரஷ்ய படையினர் நடத்திய சோதனையில் துப்பாக்கிகள், தங்கக் கட்டிகள், செயற்கை தலைமுடி போன்றவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும், ரஷ்ய தொலைக்காட்சிகளிலும் வெளியாகின.

இதேபோல், ரஷ்யா ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நியூஸ் ஆஃப் தி வீக் நிகழ்ச்சியில் ப்ரிகோஜின் குறித்து அவதூறு கூறுவது தொடர்கிறது.

அவர் ஒன்றும் ராபின்ஹுட் அல்ல, குற்றப்பின்னணி உடைய ஒரு தொழிலதிபர். அவரது பல்வேறு செயல்பாடுகள் சட்டத்துக்கு உட்பட்டவையாக இல்லை என்றும் ப்ரிகோஜன் குறித்து கருத்து பரப்பப்படுகிறது.

24ஆம் தேதி ஏற்பட்ட கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அரசுக்கும் வாக்னர் குழுவுக்கும் இடையே என்ன ஒப்பந்தம் செய்யப்பட்டது? தன்னுடன் இருக்க விருப்பம் தெரிவித்த வாக்னர் குழுவினருடன் ப்ரிகோஜின் ரஷ்யாவை விட்டு பெலாரஸுக்கு செல்ல வேண்டும் என்பது ஒப்பந்தமாக இருக்கலாம்.

கடந்த வாரம் பெலாரஸின் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, வாக்னர் தலைவரும் அவரது கூலிப்படையினரும் பெலாரஸில் இல்லை என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

அப்படியென்றால், வாக்னர் குழுவினர் எங்கே? ப்ரிகோஜின் எங்கே? அவர்களின் திட்டங்கள் என்ன? புதினுடன் அவர்கள் என்ன ஒப்பந்தம் செய்தனர் என்பது விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/c0k48ljk8y1o

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பிரிகோஜின்: ரஷ்யாவில் நொறுங்கிய விமானத்தில் இருந்த கூலிப்படைத் தலைவர் என்ன ஆனார்?

கூலிப்படைத் தலைவர் பிரிகோஜின்

பட மூலாதாரம்,SHUTTERSTOCK

 
படக்குறிப்பு,

கூலிப்படைத் தலைவர் பிரிகோஜின்

3 மணி நேரங்களுக்கு முன்னர்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு வடக்கே விபத்துக்குள்ளான தனியார் ஜெட் விமானத்தின் பயணிகள் பட்டியலில் இருந்த வாக்னர் கூலிப்படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் முக்கிய கூட்டாளியான அவரது வாக்னர் கூலிப்படை யுக்ரேன் போரில் முக்கியப் பங்காற்றி வருகிறது.

ஆனால் ஜூன் மாதம் ரஷ்யாவின் ராணுவத் தலைவர்களுக்கு எதிராக மாஸ்கோவில் அணுவகுப்புக் கிளர்ச்சியை நடத்தியதால் புடினுக்கும் பிரிகோஜினுக்கும் இடையேயான உறவில் கசப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்தே இந்த விமான விபத்தில் பிரிகோஜின் இறந்துவிட்டதாகச் செய்திகள் வந்திருக்கின்றன.

 
கூலிப்படைத் தலைவர் பிரிகோஜின்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

விபத்துக்குள்ளான தனியார் ஜெட் விமானத்தில் ஏழு பயணிகள் மற்றும் மூன்று பணியாளர்கள் இருந்தனர்.

விமானத்திற்கு என்ன ஆனது?

புதன்கிழமை மாலை எம்ப்ரேயர் லெகசி என்ற விமானம் மாஸ்கோவிற்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கும் இடையே பறந்து கொண்டிருந்தபோது, மாஸ்கோவிற்கு வடக்கே உள்ள ட்வெர் பகுதியில் விபத்துக்குள்ளானதாக ரஷ்ய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் வாக்னர் கூலிப்படையுடன் தொடர்புடைய டெலிகிராம் சேனலான கிரே சோன் விமானத்தை ரஷ்ய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்ததது. ஆனால் இதற்கான ஆதாரம் எதுவும் வழங்கப்படவில்லை.

விபத்துக்குள்ளான தனியார் ஜெட் விமானத்தில் ஏழு பயணிகள் மற்றும் மூன்று பணியாளர்கள் இருந்தனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, விமானத்தில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்துவிட்டனர். அனைத்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக இன்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரை மணி நேரத்திற்கும் குறைவாக பறந்த பிறகு தரையில் மோதியதால் விமானம் தீப்பிடித்ததாக வாக்னருடன் தொடர்புடைய மற்றொரு செய்தி நிறுவனமான டாஸ் கூறியுள்ளது.

பிபிசியால் சரிபார்க்கப்பட்ட வீடியோ காட்சியில் ரஷ்யாவின் குசென்கினோவில் வானத்தில் இருந்து ஒரு விமானம் விழுவது தெரிகிறது.

அதே நேரத்தில் ப்ரிகோஜினுக்கு சொந்தமான மற்றொரு வணிக ஜெட் விமானம் மாஸ்கோ பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக கிரே சோன் தெரிவித்துள்ளது.

 
வாக்னர் தலைவர்

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

விபத்துக்குள்ளான விமானத்தின் பயணிகள் பட்டியலில் வாக்னர் தலைவர் இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

ப்ரிகோஜினின் சமீபத்திய நடவடிக்கைகள் என்னென்ன?

விபத்துக்குள்ளான விமானத்தின் பயணிகள் பட்டியலில் வாக்னர் தலைவர் இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

ரஷ்ய தலைநகருக்கு வடக்கே சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி தனியார் ஜெட் விமானம் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

ரஷ்யாவின் ராணுவத் தளபதிகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்த அவர், ஒப்பீட்டளவில் அதிகம் பொதுவெளியில் அறியப்படாதவராகவே இருந்தார். யுக்ரேன் போர் தொடர்பான அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தன.

கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தின் கீழ், அவர் பெலாரூஸுக்கு குடிபெயர்ந்தார் என்ற அடிப்படையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.

ஆனால் அவர் பெலாரூஸ் நாட்டிலேயே தங்கியிருந்தாரா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் அவர் பல்வேறு நாடுகளில் இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி வந்தன.

ஜூலை மத்திய வாக்கில் பெலாரஸில் தனது வீரர்களை பிரிகோஜின் வரவேற்கும் காணொளி ஒன்று வெளியானது.

அதே நேரத்தில் ஜூலை பிற்பகுதியில், ஆப்பிரிக்கா-ரஷ்யா உச்சிமாநாட்டின் போது ரஷ்ய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது.

கிளர்ச்சிக்குப் பிறகு அவர் வெளியிட்ட முதல் காணொளியில் அவர் ஆப்பிரிக்காவில் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அந்தக் காணொளி எங்கு படமாக்கப்பட்டது என்பதை பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை.

அவர் இறந்துவிட்டதாக கிரே சோன் தெரிவித்ததை அடுத்து, மாஸ்கோவிற்கு வடக்கே ட்வெர் பகுதியில் விழுந்த விமானத்தில் இருந்தவர்களின் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலை ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பிரிகோஜின் பெயர் அதில் உள்ளது.

 
விமான விபத்து

பட மூலாதாரம்,BBC RUSSIAN

இப்போது என்ன நடக்கிறது?

ரஷ்ய சட்டப்படி குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் விசாரணைக் குழுவின் கூறியுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் அவசர கால மீட்புப் பணிகள் முடிந்துவிட்டன.

ட்வெர் பிராந்தியத்தின் ஆளுநர் இகோர் ருடென்யா விசாரணையை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

https://www.bbc.com/tamil/articles/cprwlne87lzo

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகோஜின்: புதின் நட்பால் 'வாக்னர்' ராணுவம் கண்ட இவர், பகையானதும் பலியான மர்மம் என்ன?

பகையாக மாறிய நட்பு

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

எவ்கேனி பிரிகோஜின் (இடது) விளாதிமிர் புதினுக்கு இரவு உணவு பரிமாறுகிறார். 2011 இல் எடுக்கப்பட்ட படம்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஆண்ட்ரெய் கோரியனோவ்
  • பதவி, பிபிசி ரஷ்ய சேவை
  • 27 ஆகஸ்ட் 2023

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வாக்னர் குழுமத்தின் தலைவர் எவ்கேனி பிரிகோஜினுக்கு இடையிலான நட்பு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் தொடங்கியது. அதேபோன்ற தெளிவற்ற மற்றும் விரும்பத்தகாத வழியில் அது முடிவுக்கும் வந்தது.

அரசு பாதுகாப்பு ஏஜென்ஸிகள், தலைமறைவு உலகத்தின் குற்றவாளிகளுடன் கூட்டுச் சேர்ந்திருந்த காலப்பகுதியில் உருவான, ஒருவரை ஒருவர் சார்ந்த உறவு இது. அதன் முடிவு மோசமாகவே இருக்கும் என்பது கண்கூடு.

வாக்னர் குழுமம் சில தசாப்தங்களுக்குள் ரஷ்யாவின் மிகவும் செல்வாக்கு மிக்க அமைப்பாக மாறியது. புதின் அரசு தொடர்வது, யுக்ரேன் போரில் பிரிகோஜினின் வெற்றியை சார்ந்ததாக ஆகிவிட்டதாக மேலும் சிலர் கருதினர்.

இப்போது அரசியல் செல்வாக்கிற்கான எல்லா போட்டிகளையும் முடிவுக்கு கொண்டுவர கிரெம்ளின் விரும்புகிறது என்றே தோன்றுகிறது.

1990களின் முற்பகுதியில் எவ்கேனி பிரிகோஜின் முதல் முறையாக விளாதிமிர் புதினை சந்தித்தார். அவர்களின் முதல் சந்திப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் பிரிகோஜின் சிறையில் இருந்து அப்போதுதான் விடுவிக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. மறுபுறம் சோவியத் பாதுகாப்பு சேவையான கேஜிபிக்காக கிழக்கு ஜெர்மனியில் ஒரு பணியை முடித்துவிட்டு புதின் திரும்பி வந்திருந்தார். அரசியலில் நுழைய அவர் வழியை தேடிக்கொண்டிருந்தார்.

குற்றவாளிகள், கேஜிபி மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சூழல்

1990 களில் ரஷ்யாவில் நிலவிய கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலை, இந்த சந்திப்பின் பின்னணியில் இருந்தது. 1991 இல் சோவியத் யூனியன் பல நாடுகளாகப்பிரிந்த நேரத்தில், தலைமறைவு குற்றவாளிகளின் ஆதிக்கம் மேலோங்கியது. அவர்களின் கைகளுக்கு நிறைய அதிகாரம் கிடைத்தது.

வரலாற்று ரீதியாக சோவியத் யூனியனில் பாதுகாப்பு சேவைகள், குற்றவாளிகளின் உதவியை பெற்றன. பேச்சுவார்த்தை நடத்தி, பல்வேறு பணிகளுக்காக ஆட்சேர்ப்பு செய்தன.

குற்றவாளிகள் இந்த வகையான ஆதரவால் பயனடைவார்கள். இதனால் அவர்களும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

எவ்கேனி பிரிகோஜினும், விளாதிமிர் புதினும், ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமும், பெரும்பாலான மக்களின் கலாச்சார தலைநகருமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை சேர்ந்தவர்கள். இங்கே ஹெர்மிடேஜ் கலை அருங்காட்சியகம் மற்றும் இம்பீரியல் குளிர்கால அரண்மனை உள்ளது.

இந்த நகரம் 'ரஷ்யாவின் குற்ற தலைநகரம்' என்றும் அழைக்கப்படுகிறது, அங்கு சிறிய திருடர்கள் முதல் பெரிய குற்றமுதலைகள் வரை பல சக்திவாய்ந்த கிரிமினல் கும்பல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

 
பகையாக மாறிய நட்பு

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு ராணுவ வீரர் பிரிகோஜினுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

வாக்னர் குழுமத்தின் தலைவர்

எவ்கேனி பிரிகோஜின் இதற்கு விதிவிலக்கல்ல. 1970 களில் அவர் திருட்டு வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தின் எச்சரிக்கையைப் பெற்றார்.

1981 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் பிடிபட்டார். அவர் மீதான கொள்ளை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த கொடூரமான குற்றச் சம்பவத்தின் சூழ்நிலைகள் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளன: பிரிகோஜினும் மற்ற இரண்டு கூட்டாளிகளும் தெருவில் ஒரு பெண்ணைத் தாக்கி, கழுத்தை நெரிக்க முயன்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அந்த பெண்ணின் குளிர்கால காலணிகள் மற்றும் காதணிகளுடன் தப்பிச் சென்றனர்.

எதிர்காலத்தில் வாக்னர் குழுமத்தின் தலைவராக வரவிருக்கும் பிரிகோஜின் 1990 இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் வெளியே வந்தபோது இருந்த உலகம் அவர் சிறைக்குச் சென்றபோது இருந்ததிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

சீர்திருத்தவாதி மிக்கேல் கோர்பச்சேவ், பழைய சோவியத் தலைவர் லியோனிட் ப்ரெஷ்நேவின் இடத்திற்கு வந்திருந்தார். பெரிஸ்ட்ரோய் சீர்திருத்தம் முழு வீச்சில் இருந்தது. பெர்லின் சுவர் இடிக்கப்பட்டிருந்தது.

புதின் மற்றும் அமெரிக்கா

1990 களின் நடுப்பகுதியில் எவ்கேனி பிரிகோஜின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 'தி ஓல்ட் கஸ்டம் ஹவுஸ்' என்ற உணவகத்தைத் திறந்தார். குற்ற கும்பல்களின் தலைவர்கள் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் மேயர் அனடோலி சோப்சாக் ஆகியோரும் இங்கு அடிக்கடி வந்து செல்வார்கள்.

அந்த நேரத்தில் புதினுக்கு 40 வயது. அவர் சோப்சாக்கின் உதவியாளராக பணியாற்றினார்.

ஆனால் பிரிகோஜினுக்கு வாழ்க்கைப் பாதை மிகவும் கடினமாக இருந்தது. அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உணவகங்களின் சங்கிலியைத் தொடங்கினார். அங்கு வெளிநாட்டு வாடிக்கையாளர்களைத் தவிர, அரசியல்வாதிகளும் வருவார்கள்.

2002 இல் பிரிகோஜின், விளாதிமிர் புதினுக்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் இரவு உணவு பரிமாறுவது போன்ற ஒரு புகைப்படம் உள்ளது. அந்த நேரத்தில் அவரது செல்லப்பெயர் 'புதினின் சமையல்காரர்' (Putin’s chef).

கேஜிபியில் பணியாற்றியவரும், சந்தேக புத்தி கொண்டவருமான புதின் போன்ற ஒருவருக்கு தனது உணவின் பாதுகாப்பை உறுதிசெய்ய சொந்த சமையல்காரர் இருப்பது இன்றியமையாததாக இருந்தது.

 
பகையாக மாறிய நட்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

எவ்கேனி பிரிகோஜின் சமையல்காரர் முதல் ட்ரோல், பின்னர் கூலிப்படை வரை

2000 களின் முற்பகுதியில், விளாதிமிர் புதின் கிரெம்ளின் சென்றடைந்தார். ரஷ்யாவின் பாதுகாப்பு சேவை, தனது கட்டுப்பாட்டை மீண்டும் பெறத் தொடங்கியது.

2000 களின் நடுப்பகுதியில் இருந்து எவ்கேனி பிரிகோஜின், கிரெம்ளினுக்காக பல்வேறு பணிகளை செய்யத் தொடங்கினார். குறிப்பாக பாதுகாப்பு சேவைகளின் அதிகார எல்லைக்கு வெளியே உள்ள பணிகள் இதில் அடங்கும்.

ரஷ்யாவிலும் வெளிநாட்டிலும் தவறான தகவல்களை பரப்புவதையே முக்கிய பணியாகக்கொண்ட ஊடக நிறுவனத்தை அவர் நிறுவினார்.

இந்த ஊடக இயந்திரத்தில் உருவாக்கப்பட்ட கதைகள், எந்த ஒரு அரசு பிரச்சார அமைப்பும் பரப்பத்துணியாத அளவிற்கு அத்தனை சிறப்பாக இருந்தன.

ஆனால் சமூக ஊடகங்களின் சகாப்தம் வந்து அதன் செல்வாக்கு அதிகரித்தபோது, பிரிகோஜின் தனது சொந்த 'ட்ரோல் தொழிற்சாலையை' நிறுவினார்.

ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகள்

உண்மை என்று எதுவும் இல்லை, அதைப் பின்தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்ற நம்பிக்கையை ரஷ்யர்களிடையே பரப்ப இந்த தொழிற்சாலை உதவியது என்று பல வர்ணனையாளர்கள் கருதுகின்றனர்.

2013-14 ஆம் ஆண்டில், யுக்ரேனிய புரட்சி மற்றும் க்ரைமியா ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட பிறகு, தனியார் ராணுவ அமைப்பான ’வாக்னர் குழுமம்’ முதல் முறையாக வெளிச்சத்திற்கு வந்தது.

வாக்னர் குழுமம், க்ரைமியா மற்றும் கிழக்கு யுக்ரேனில், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளை ஆதரித்தது.

அந்த நேரத்தில் கிரெம்ளினுக்கு யுக்ரேனை முழுமையாக ஆக்கிரமிக்கும் தைரியம் இல்லை. மாறாக அது சிரியாவில் ஒரு ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.

சிரியாவில் ரஷ்யாவின் தலையீட்டின் நோக்கம், கிழக்கு யுக்ரேனில் உள்ள டான்பாஸில் நடந்த போரில் இருந்து கவனத்தை திசை திருப்புவதாகும் என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த நேரத்தில் தான் பிரிகோஜினின் நெருங்கிய கூட்டாளியான டிமித்ரி உத்திகன் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். அவர் வாக்னர் குழுமத்தின் கமாண்டர் ஆனார். அவர் தீவிர வலதுசாரி கருத்துக்கள், மிருகத்தனம் மற்றும் இரக்கமற்ற குணத்திற்கு பெயர் பெற்றவர்.

 
பகையாக மாறிய நட்பு

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

நோவோசிபிர்ஸ்கில் உள்ள வாக்னர் குழுமத்தின் உள்ளூர் அலுவலகத்திற்கு முன்னால் ஒரு தற்காலிக நினைவுச்சின்னம். எவ்கேனி பிரிகோஜின் (இடது) மற்றும் டிமித்ரி உத்திகனின் புகைப்படம்.

தனியார் ராணுவம்

எவ்கேனி பிரிகோஜினும், அவரது தனிப்பட்ட ராணுவமும் புதினின் அதிகாரத்திற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.

ஆனால் பிரிகோஜினுடன் அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ரஷ்ய அரசு 2022 வசந்த காலம் வரை தொடர்ந்து கூறி வந்தது.

தனியார் ராணுவத்தை வைத்திருப்பது ரஷ்ய சட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது.

வாக்னரின் செயல்பாடுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கிரெம்ளினின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தொடர்ந்து கூறிவந்தார்.

சில தனியார் தொழிலதிபர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்பது மட்டுமே கிரெம்ளினுக்குத் தெரியும் என்று அவர் கூறிவந்தார்.

ஆனால் மறுபுறம் வாக்னர் ரகசியமாக ஈடுபட்டிருந்த யுக்ரேன் மற்றும் சிரியாவின் ராணுவ நடவடிக்கைகள், ரஷ்யாவின் உயர் அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்க முடியாது என்பதும் அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது.

'வாக்னர் மையம்'

2022 கோடையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து ஆயுதமேந்திய தொழிலதிபர்கள் குழு யுக்ரேனில் போரில் ஈடுபட்டதாக ரஷ்ய ஊடகங்களில் செய்திகள் வெளிவரத் தொடங்கின.

சில வாரங்களுக்குள் எவ்கேனி பிரிகோஜின், ரஷ்ய சிறைகளுக்குச் சென்று போரிடுவதற்காக கைதிகளை ஆட்சேர்ப்பு செய்யத் தொடங்கினார்.

2022 இலையுதிர்காலத்தில், அதிகாரப்பூர்வ கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ். "நடப்பதை பார்த்து அவரது இதயம் வலிக்கிறது" மற்றும் "பெரிய பங்களிப்பை வழங்குபவர்" என்று பிரிகோஜின் பற்றி விவரித்தார்.

2022 நவம்பரில் எவ்கேனி பிரிகோஜின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 'வாக்னர் மையத்தை' திறந்தார், அதே நேரத்தில் ரஷ்ய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் மீதான அவரது விமர்சனம் கூர்மையாக ஆனது.

தெற்கு யுக்ரேன் மற்றும் கிழக்கின் சில பகுதிகளில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியபோது, பாதுகாப்பு அமைச்சகத்தின் மீதான பிரிகோஜினின் விமர்சனம் உச்சத்தை எட்டியது.

 
பகையாக மாறிய நட்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தனது நோக்கம் ரஷ்யாவில் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்துவதல்ல என்று எவ்கேனி பிரிகோஜின் கூறினார்.

அதிகரித்த மோதல்

போரில் தனியார் ராணுவத்தின் பங்களிப்பை ஒப்புக்கொள்ள ராணுவ தளபதி மறுப்பதாக வாக்னர் குழமத்தின் தலைவர் புகார் கூறினார்.

கிழக்கு யுக்ரேனில் உள்ள பாக்மூத் நகரில் நடந்த சண்டையின் போது வாக்னருக்கு போதுமான வெடிமருந்துகளை வழங்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் சீஃப் ஆஃப் ஜெனரல் ஸ்டாஃப் வலேரி ஜெராசிமோவ் மீது அவர் குற்றம் சாட்டினார்.

அதிகரித்து வந்த மோதல் குறித்து கிரெம்ளின் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால் எல்லா தனியார் ராணுவ குழுக்களும் ஒரு கமாண்டின் கீழ் வர வேண்டும் மற்றும் ராணுவத்துடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்று ஜூன் மாதத் தொடக்கத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கோரியது. பிரிகோஜின் இதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

ரஷ்யப் படைகள் வாக்னரின் நிலைகளை குறிவைத்ததாக, ஜூன் 23 ஆம் தேதி அதிகாலையில் எவ்கேனி பிரிகோஜின் குற்றம் சாட்டியபோது மோதல் உச்சத்தை எட்டியது. இருப்பினும் அத்தகைய தாக்குதல் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.

 
பகையாக மாறிய நட்பு

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

2023 ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியிடப்பட்ட வீடியோவின் தலைப்பு மூலம் அவர் ஒரு ஆப்பிரிக்க நாட்டில் இருப்பது தெரிகிறது.

பிரிகோஜினின் அச்சம்

மாஸ்கோவை நோக்கி 'நீதியின் அணிவகுப்பு' நடத்தப்படும் என்று பிரிகோஜின் அறிவித்தார்.

இவை பிரிகோஜினின் விரக்தியின் அறிகுறிகள் என்றும் ரஷ்ய ராணுவத்திற்கு எதிரான தனது மோதல் குறித்து அதிபர் புதினின் கவனத்தை ஈர்க்கும் முயற்சி என்றும் பிபிசி மற்றும் பிற ஊடகங்கள் பேசிய வட்டாரங்கள் தெரிவித்தன.

"தனது சுயஉரிமை பறிக்கப்படுவதைப் பற்றி அவர் கவலைப்பட்டார்" என்று எவ்கேனி பிரிகோஜினை நன்கு அறிந்த ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

வாக்னர் குழுமம் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியது. சுமார் 15 ரஷ்ய வீரர்களைக் கொன்றது.

பிரிகோஜின் இந்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டபோது ரஷ்ய பாதுகாப்பு சேவை FSB அவருக்கு எதிராக ஒரு கிரிமினல் வழக்கை ஆரம்பித்தது. அதே நேரத்தில் அதிபர் புதின், பிரிகோஜினின் பெயரைக்குறிப்பிடாமல் அவரை’தேச துரோகி’ என்றும் 'நாட்டை முதுகில் குத்தியவர்' என்றும் அழைத்தார். மேலும் எல்லா கிளர்ச்சியாளர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

ரஷ்யாவிடமிருந்து நிதி உதவி

ஜூன் 24 ஆம் தேதி மாலை வாக்னர் குழுமத்தின் அணிவகுப்பை எவ்கேனி பிரிகோஜின் நிறுத்தியபோது நிலைமை திடீரென தணிந்தது.

ஜூன் 29 ஆம் தேதி அதிபர் புதின், பிரிகோஜின் மற்றும் பிற கமாண்டர்களை சந்தித்தார். ரஷ்ய ராணுவ தளபதியின் கீழ் பணியாற்ற வாக்னர் குழுவை தான் சம்மதிக்க வைத்திருப்பதாக அதிபர் கூறினார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பணியாற்ற ஒப்புக்கொண்டதை பிரிகோஜின் மறுத்தார்.

வாக்னர் குழுமம் ஆரம்பத்தில் இருந்தே ரஷ்ய அரசிடமிருந்து நிதி உதவியைப் பெற்றுவந்ததாக அதன்பிறகு விளாதிமிர் புதின் திடீரென்று அறிவித்தார். இருப்பினும் தனியார் ராணுவத்துடன் எந்தவிதமான தொடர்பையும் பல ஆண்டுகளாக கிரெம்ளின் மறுத்து வந்தது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த ரஷ்யா-ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டில் பிரிகோஜின் காணப்பட்டார் என்று ஜூலை பிற்பகுதியில் வெளியான சில தகவல்கள் தெரிவித்தன.

இறுதி பொது உரை

பல ஆப்பிரிக்க நாடுகளில் வாக்னர் குழு செயல்பாடுகளின் வரலாற்றை கருத்தில் கொண்ட பல வல்லுநர்கள், ஆப்பிரிக்க கண்டத்திலும் பிரிகோஜின் தனது கவனத்தைச்செலுத்துவார் என்று கருதினர்.

டுவெர் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் எடுக்கப்பட்ட அவரது வீடியோ ஆன்லைனில் வெளிவந்தது.

பிரிகோஜின் தொப்பி அணிந்து மைதானத்தில் நின்றபடி "ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கய்தா மற்றும் பிற கொள்ளையர்களின் இதயங்களில் கடவுள் பயத்தை ஏற்படுத்திய பிறகு நான் இங்கே இருக்கிறேன்" என்று கூறுவதை இந்த வீடியோ காட்டுகிறது.

இதுவே அவரது கடைசி பொது உரை என்று நம்பப்படுகிறது.

பிரிகோஜினின் கதை ரஷ்ய வரலாற்றில் நன்கு அறியப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகளுடன் பொருந்துகிறது. கிரெம்ளினின் மிகக் கொடூரமான கொள்கைகளை அமல்படுத்தியவர்கள் பின்னர் தண்டிக்கப்பட்டு, அழிக்கப்பட்டனர் என்பதை வரலாறு நமக்கு காட்டுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cek4239lyzgo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.