Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசியால் வாடும் பிரித்தானிய மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பசியால் வாடும் பிரித்தானிய மக்கள்

பசியால் வாடும் பிரித்தானிய மக்கள்

பிரித்தானியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் 11.3 மில்லியன் மக்கள் பசியால் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ட்ரஸ்ஸல் டிரஸ்ட்” (Trussell Trust)என்ற உணவு வங்கித்  தொண்டு நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் குறித்த அறிக்கையின் படி பிரித்தானியாவில்  7 பேரில் ஒருவர், உணவு வாங்கப் போதிய பணமில்லாமல் தவித்து வருவதாகவும், வாழ்க்கைச் செலவுகள் உயர்வடைந்தமையே இதற்கான  காரணமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரித்தானியாவின் பொருளாதாரம் உலகில் 6ஆவது இடத்தில் உள்ளபோதிலும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அதிகரித்து வரும் பணவீக்கம், தொழிலாளர்களின் ஊதிய உயர்வை விட மிக அதிகமாக உள்ளதால், அனைத்து தொழிலாளர்களுமே மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1336781

  • Replies 66
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2023 at 09:39, தமிழ் சிறி said:

இதை நான் நம்பவில்லை ஏனெனில்  போதிய ஆதாரம் இல்லை 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kandiah57 said:

இதை நான் நம்பவில்லை ஏனெனில்  போதிய ஆதாரம் இல்லை 🤣

நீங்கள் நம்பாட்டில்.... @பெருமாள், @goshan_che, @Nathamuni, @கிருபன் ஆகியோர்

கொஞ்சம் பொறுத்து வருவினம். அவையளிட்டை கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ளுங்கோ. 🤣

On 30/6/2023 at 09:39, தமிழ் சிறி said:

அத்துடன் பிரித்தானியாவின் பொருளாதாரம் உலகில் 6ஆவது இடத்தில் உள்ளபோதிலும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அதிகரித்து வரும் பணவீக்கம், தொழிலாளர்களின் ஊதிய உயர்வை விட மிக அதிகமாக உள்ளதால், அனைத்து தொழிலாளர்களுமே மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியை வைத்துக் கணிக்கப்படும் பொருளாதார ஒப்பீட்டளவும் உள்நாட்டு மக்கள் வாழ்வாதாரமும் வெவ்வேறானவை என்று நினைக்கிறேன்.

https://en.wikipedia.org/wiki/List_of_countries_by_GDP_(nominal)

இங்கு சுவிஸ், நோர்வே, சுவீடன் போன்ற நாடுகள் 20 - 30 ஆவது இடங்களில் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள் நம்பாட்டில்.... @பெருமாள், @goshan_che, @Nathamuni, @கிருபன் ஆகியோர்

கொஞ்சம் பொறுத்து வருவினம். அவையளிட்டை கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ளுங்கோ. 🤣

இவர்கள் அனைவரும் செல்வ சீமான்கள்.  🤣. இவர்களை  விலையேற்றம்  பாதிக்காது....இப்போது உள்ள விலையை விட இரண்டு மடங்குகள் விலை கூடினாலும். தாக்கும் சக்தி இவர்களிடம் உண்டு” 😂🤣🙏.  நெடுக்கர்.  வதவூரன். ரதி   சூமோ....இவர்களை    மறந்து விட்டீர்களா?? ...இவரகளிலும்.  சூமோ   ஒரு .50. சென்ற். கூடினாலும்.   சத்தம் போட்டு.   ஊரையே கூட்டி விடுவார்கள்    🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, இணையவன் said:

மொத்த உள்நாட்டு உற்பத்தியை வைத்துக் கணிக்கப்படும் பொருளாதார ஒப்பீட்டளவும் உள்நாட்டு மக்கள் வாழ்வாதாரமும் வெவ்வேறானவை என்று நினைக்கிறேன்.

https://en.wikipedia.org/wiki/List_of_countries_by_GDP_(nominal)

இங்கு சுவிஸ், நோர்வே, சுவீடன் போன்ற நாடுகள் 20 - 30 ஆவது இடங்களில் உள்ளன.

கொரோனா தொற்றின் பின்... உலகம் முழுக்க உள்ள மக்கள் பெரும்பாலானோர்,
மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றார்கள்.
இதனால்... பொது இடங்களில்  சகிப்புத்தன்மை, குடும்ப வன்முறை போன்றவை 
பெரும் பங்கு வகிக்கின்றதாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, Kandiah57 said:

.இவரகளிலும்.  சூமோ   ஒரு .50. சென்ற். கூடினாலும்.   சத்தம் போட்டு.   ஊரையே கூட்டி விடுவார்கள்    🤣

இவரின் எழுத்திலும் நாக்கிலும் சனி குடி புகுந்து விட்டது. இனி இவரை அந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது.:rolling_on_the_floor_laughing:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இவரின் எழுத்திலும் நாக்கிலும் சனி குடி புகுந்து விட்டது. இனி இவரை அந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது.:rolling_on_the_floor_laughing:

அதுகும்... @ரதியையும்,  இழுத்து இருக்கிறார்.
இரு முனை தாக்குதல் நடக்கப் போகுது.
கந்தையா அண்ணை, இப்பவே... "பங்கர்" வெட்டி வைத்திருக்கிறது நல்லது. 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, தமிழ் சிறி said:

அதுகும்... @ரதியையும்,  இழுத்து இருக்கிறார்.
இரு முனை தாக்குதல் நடக்கப் போகுது.
கந்தையா அண்ணை, இப்பவே... "பங்கர்" வெட்டி வைத்திருக்கிறது நல்லது. 😂

கந்தையருக்கு அனுபவம் காணாது :face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

இவரின் எழுத்திலும் நாக்கிலும் சனி குடி புகுந்து விட்டது. இனி இவரை அந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது.:rolling_on_the_floor_laughing:

சூமோ கள்ளம் கபடமில்லாமாலும்  வெளிப்பாடடையாய்யும்.  கருத்துகள் பகிர்வதால். அப்படி   சும்மா பகிடிக்கு தான் எழுதினேன்....   தயவுசெய்து மன்னிக்கவும்   

35 minutes ago, தமிழ் சிறி said:

அதுகும்... @ரதியையும்,  இழுத்து இருக்கிறார்.
இரு முனை தாக்குதல் நடக்கப் போகுது.
கந்தையா அண்ணை, இப்பவே... "பங்கர்" வெட்டி வைத்திருக்கிறது நல்லது. 😂

நான் ரதியைப் பற்றி ஏதுவும். குறையாக சொல்லவில்லை  ..லண்டனில் வாழ்கிறார்கள் என்பதை மட்டுமே சுட்டினேன் 

5 minutes ago, குமாரசாமி said:

கந்தையருக்கு அனுபவம் காணாது :face_with_tears_of_joy:

5 minutes ago, குமாரசாமி said:

கந்தையருக்கு அனுபவம் காணாது :face_with_tears_of_joy:

ஓம்     அலுப்பு கொடுக்க   போதிய அனுபவம்  இல்லை தான்      🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள் நம்பாட்டில்.... @பெருமாள், @goshan_che, @Nathamuni, @கிருபன் ஆகியோர்

கொஞ்சம் பொறுத்து வருவினம். அவையளிட்டை கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ளுங்கோ. 🤣

1. உடம்பால் அல்லது மூளையால் உழைக்க தயராக இருப்பவர்கள்களுக்கு - ஐரோப்பாவிலேயே இன்றும் யூகேயை மிஞ்சிய பணம் காய்ச்சி மரம் வேறு எதுவுமில்லை.

2. 13 வருட வலதுசாரி பழைமைவாத கட்சியின் ஆட்சி, நாட்டில் இருப்போருக்கும், இல்லாதாருக்குமான இடைவெளியை கூட்டி விட்டுள்ளது.  100 பேரில் பணக்கார 10% குடும்பங்கள் £70,000 க்கும் அதிகமான வருடாந்த செலவுசெய்ய கூடிய வருமானம் உடையன (disposable income). எதிர் வளமாக ஏழ்மையான 10% குடும்பங்கள் 11,000 க்கும் குறைவான வருமானம் உடையன. இதில் கடைசி 20% மக்களை “அன்றாடம் காய்சிகள்” என கருதலாம். அதாவது மாச இறுதி வரும் முன்பே பண இருப்பு தீர்ந்து போகும் குடும்பங்கள். விலைவாசி உயர்வு, பண வீக்கம், எரிபொருள் விலை ஏற்றம் - இவற்றால், ஏனையோரை விட இந்த மக்கள் - செலவுகளை கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளனர். அதில் உணவு கட்டுப்பாடு/தட்டுப்பாடும் ஒன்றாகிறது. 

3. 2010 இல் பழமைவாத கட்சி ஆட்சிக்கு வரும் வரை food bank என்பது என்னவென்றே நாட்டில அநேகமான யாருக்கும் தெரியாது. இப்போ இது வார்ட்டுக்கு ஒன்று என்ற அளவில் உள்ளது. உணவு இல்லாதவர்கள், இலவசமாக பதிந்து உலர் உணவை பெறுவார்கள். உணவு கொடுப்பவர்களும் சாதாரண மக்களும், அமைபுக்களும்தான்.

4. நிச்சயமாக கடை 20% - பஞ்சத்தில் உள்ளது என சொல்லமுடியாவிட்டாலும் - தட்டில் உணவை போட மிகு பிரயத்தனப் படுகிறது. 

2 hours ago, இணையவன் said:

மொத்த உள்நாட்டு உற்பத்தியை வைத்துக் கணிக்கப்படும் பொருளாதார ஒப்பீட்டளவும் உள்நாட்டு மக்கள் வாழ்வாதாரமும் வெவ்வேறானவை என்று நினைக்கிறேன்.

https://en.wikipedia.org/wiki/List_of_countries_by_GDP_(nominal)

இங்கு சுவிஸ், நோர்வே, சுவீடன் போன்ற நாடுகள் 20 - 30 ஆவது இடங்களில் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

சூமோ கள்ளம் கபடமில்லாமாலும்  வெளிப்பாடடையாய்யும்.  கருத்துகள் பகிர்வதால். அப்படி   சும்மா பகிடிக்கு தான் எழுதினேன்....   தயவுசெய்து மன்னிக்கவும்   

நான் ரதியைப் பற்றி ஏதுவும். குறையாக சொல்லவில்லை  ..லண்டனில் வாழ்கிறார்கள் என்பதை மட்டுமே சுட்டினேன் 

ஓம்     அலுப்பு கொடுக்க   போதிய அனுபவம்  இல்லை தான்      🤣🤣

அப்புடியே கால்ல விழுந்த்துட்டாப்ள..😂😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இவர்கள் அனைவரும் செல்வ சீமான்கள்.  🤣. இவர்களை  விலையேற்றம்  பாதிக்காது....இப்போது உள்ள விலையை விட இரண்டு மடங்குகள் விலை கூடினாலும். தாக்கும் சக்தி இவர்களிடம் உண்டு” 😂🤣🙏.  நெடுக்கர்.  வதவூரன். ரதி   சூமோ....இவர்களை    மறந்து விட்டீர்களா?? ...இவரகளிலும்.  சூமோ   ஒரு .50. சென்ற். கூடினாலும்.   சத்தம் போட்டு.   ஊரையே கூட்டி விடுவார்கள்    🤣

விலை ஏற்றம் எல்லாரையும் பாதிக்கிறது. ஆனால் தாங்குதிறன் வேறுபடுகிறது. சிலர் உணவை குறைக்கும் படி அல்லது ஹீட்டர் போடுவதை குறைக்கும் படி ஆகிறது - சிலர் வருடாந்த 4 கொலிடேயை 3 ஆக குறைக்கும் படி ஆகிறது. அநேகர் இந்த இரு நிலமைக்கும் இடையில்தான்.

பிரித்தானிய தமிழர் அறுதி பெரும்பான்மையானோர் - மேலே சொன்ன disposable income கணிப்பில் பணக்கார 20% உள் வருவார்கள் என்பது என் ஊகம்.

யாழில் எழுதுவோர் அநேகர் 10%, குறைந்தது 15%க்குள் வருவார்கள் என்பதை அவர்கள் எழுதும் விடயங்களை வைத்து ஊகிக்கலாம். 

6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்புடியே கால்ல விழுந்த்துட்டாப்ள..😂😂

#நெடுஞ்சாங்கிடை😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள் நம்பாட்டில்.... @பெருமாள், @goshan_che, @Nathamuni, @கிருபன் ஆகியோர்

கொஞ்சம் பொறுத்து வருவினம். அவையளிட்டை கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ளுங்கோ. 🤣

கட்டாயம் பதில் வேணுமாங்க  சரி விதி படி நடக்கட்டும் 😀

உக்ரைக்கு அள்ளிஅள்ளிபணத்தை கொடுப்பதால்  பிரித்தானியர்கள் அணில்களை உண்ண வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று ரஷ்ய அரசு தொலைக்காட்சி சேனல் ஒன்று இந்த வாரம் கூறியுள்ளதாம் .

https://www.dailymail.co.uk/news/article-11846915/Russian-state-TV-claims-Britain-starving-forced-eat-squirrels.html

2 hours ago, தமிழ் சிறி said:

அதுகும்... @ரதியையும்,  இழுத்து இருக்கிறார்.
இரு முனை தாக்குதல் நடக்கப் போகுது.
கந்தையா அண்ணை, இப்பவே... "பங்கர்" வெட்டி வைத்திருக்கிறது நல்லது. 😂

பங்கர் என்ன இந்த திரி பக்கமே ..............................

சுமோ அக்கா விலைவாசி பற்றி  கதைச்க  கடைக்காரன்   தானே அம்புலன்சுக்கு போன் அடித்து நெஞ்சு வலி வந்தவன் போல் நடித்து தப்பி விடுவான் 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

சுமோ அக்கா விலைவாசி பற்றி  கதைச்க  கடைக்காரன்   தானே அம்புலன்சுக்கு போன் அடித்து நெஞ்சு வலி வந்தவன் போல் நடித்து தப்பி விடுவான் 😀

😂 சுமோ அன்ரி போஸ்ட் ஓபிஸ் முதலாளி எண்டு எழுதிய நியாபகம்.

எத்தனை கஸ்டம்ருக்கு வைகுண்ட ப்ராப்தம் ஆகியதோ🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

😂 சுமோ அன்ரி போஸ்ட் ஓபிஸ் முதலாளி எண்டு எழுதிய நியாபகம்.

எத்தனை கஸ்டம்ருக்கு வைகுண்ட ப்ராப்தம் ஆகியதோ🤣

வல்லவளு(னு)க்கு வல்லவன் வையகத்தில் உண்டு. 😂
சுமோ அன்ரியின் கடையில்... "பியர் ரின்" களவெடுத்தவன் 
எப்படிப் பட்ட திறமைசாலியாக இருந்திருப்பான். 💪 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1. உடம்பால் அல்லது மூளையால் உழைக்க தயராக இருப்பவர்கள்களுக்கு - ஐரோப்பாவிலேயே இன்றும் யூகேயை மிஞ்சிய பணம் காய்ச்சி மரம் வேறு எதுவுமில்லை.

2. 13 வருட வலதுசாரி பழைமைவாத கட்சியின் ஆட்சி, நாட்டில் இருப்போருக்கும், இல்லாதாருக்குமான இடைவெளியை கூட்டி விட்டுள்ளது.  100 பேரில் பணக்கார 10% குடும்பங்கள் £70,000 க்கும் அதிகமான வருடாந்த செலவுசெய்ய கூடிய வருமானம் உடையன (disposable income). எதிர் வளமாக ஏழ்மையான 10% குடும்பங்கள் 11,000 க்கும் குறைவான வருமானம் உடையன. இதில் கடைசி 20% மக்களை “அன்றாடம் காய்சிகள்” என கருதலாம். அதாவது மாச இறுதி வரும் முன்பே பண இருப்பு தீர்ந்து போகும் குடும்பங்கள். விலைவாசி உயர்வு, பண வீக்கம், எரிபொருள் விலை ஏற்றம் - இவற்றால், ஏனையோரை விட இந்த மக்கள் - செலவுகளை கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளனர். அதில் உணவு கட்டுப்பாடு/தட்டுப்பாடும் ஒன்றாகிறது. 

3. 2010 இல் பழமைவாத கட்சி ஆட்சிக்கு வரும் வரை food bank என்பது என்னவென்றே நாட்டில அநேகமான யாருக்கும் தெரியாது. இப்போ இது வார்ட்டுக்கு ஒன்று என்ற அளவில் உள்ளது. உணவு இல்லாதவர்கள், இலவசமாக பதிந்து உலர் உணவை பெறுவார்கள். உணவு கொடுப்பவர்களும் சாதாரண மக்களும், அமைபுக்களும்தான்.

4. நிச்சயமாக கடை 20% - பஞ்சத்தில் உள்ளது என சொல்லமுடியாவிட்டாலும் - தட்டில் உணவை போட மிகு பிரயத்தனப் படுகிறது. 

நன்றிகள் பல்  கோஷான்.  உங்கள் பதிலுக்கும்.  நேரத்திற்கும்   🙏

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

இங்கு சுவிஸ், நோர்வே, சுவீடன் போன்ற நாடுகள் 20 - 30 ஆவது இடங்களில் உள்ளன.

ஒரு நாட்டின் பொருளாதாரமும் அந்த நாட்டின் சராசரி மனிதனின் பொருளாதாரமும் வேறுபடும். ஒரு வருடத்தில் நாட்டின் உற்பத்தியின் (products and services) மொத்த மதிப்பு (gross) என்ன என்பது முதலாவது, அந்த உற்பத்தி பெறுமதியில் ஒரு குடிமனுக்கு (Per Head) பங்கு என்ன என்பது இரண்டாவது.  

நாட்டில் விலைவாசிகள் உயரும்போது இதில் இரண்டாவது தான் சரியான அளவுகோல். அப்படி பார்க்கும்போது சுவிஸ் - 7,  நோர்வே - 3,  சுவீடன் - 10 , ஆகிய இடங்களில் உள்ளன. யூகே - 22 ஆவது இடத்தில்.  

சிறு உதரணத்துக்கு இரண்டு குடும்பங்களை எடுத்துக்கொள்வோம். அதில் முதலாவதில் 5 அங்கத்தவர்களும் இரண்டாவதில் 3 அங்கத்தவர்களும் உள்ளனர். முதலாவது குடும்பத்தின் ஆண்டு வருமானம் 100 இலட்சம் இரண்டாவதற்கு 75 இலட்சம் என்றும் வைத்துக்கொள்ளுவோம். முதலாவது குடும்பம் அதிக வருட வருமானத்தை கொண்டிருந்தாலும் இங்கு இரண்டாவது குடும்பத்தவர்களைத்தான் பணக்காரர்கள் என்று கொள்ளவேண்டும்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பாணி மற்றும் பார்வையில் தலைப்பு

ஆனால் இது இந்தியா அல்ல பட்டினியால் சாகவிட. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இந்திய பாணி மற்றும் பார்வையில் தலைப்பு

ஆனால் இது இந்தியா அல்ல பட்டினியால் சாகவிட. 

அயல் கிழவி இன்னும் டெஸ்கோ வில் இருந்து நாய்க்கான உணவுகளை ஒன்லைனில் ஓடர் பன்னி நரிகளுக்கு கொடுக்குறதை நிறுத்தவில்லை 😀

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

ஆனால் இது இந்தியா அல்ல பட்டினியால் சாகவிட. 

பட்டினியால் இதுகள் எங்கை சாகிறது உங்கடை நாட்டில் நடப்பது போல் இங்கிலாந்திலும் வெகு விரைவில் கலவரம் உருவாகும் ராணுவத்தை கொண்டுவந்தே அடக்குமளவுக்கு நிலைமை மோசமாகும். அவ்வளவுக்கு பொருள்களின் விலை ஏற்றம் . 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

பட்டினியால் இதுகள் எங்கை சாகிறது உங்கடை நாட்டில் நடப்பது போல் இங்கிலாந்திலும் வெகு விரைவில் கலவரம் உருவாகும் ராணுவத்தை கொண்டுவந்தே அடக்குமளவுக்கு நிலைமை மோசமாகும். அவ்வளவுக்கு பொருள்களின் விலை ஏற்றம் . 

இங்கும் எதிர்பர்ர்க்க முடியாத அளவிற்கு பொருட்களின் விலை ஏறி உள்ளது.
உக்ரைன் போர் என்று சொல்லப் பட்டாலும்,
கொரோனா போன்ற  வேறு பல காரணங்கள் இருக்கும் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

இங்கும் எதிர்பர்ர்க்க முடியாத அளவிற்கு பொருட்களின் விலை ஏறி உள்ளது.
உக்ரைன் போர் என்று சொல்லப் பட்டாலும்,
கொரோனா போன்ற  வேறு பல காரணங்கள் இருக்கும் என நினைக்கின்றேன்.

உற்பத்திக்கான சிலவு பாரியளவில் கூடவில்லை ஆனால் கொர்னோ காலத்தில் இழந்த லாபத்தை பிடிப்பது போல் பொருள்களின் விலை ஏற்றம் இங்கிலாந்தின் வட்டி வீதம் இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள் வாடகை கூடுகின்றது வருமானம் பத்து வருடத்துக்கு முன்பு வந்த அளவுதான் .

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

இங்கும் எதிர்பர்ர்க்க முடியாத அளவிற்கு பொருட்களின் விலை ஏறி உள்ளது.
உக்ரைன் போர் என்று சொல்லப் பட்டாலும்,
கொரோனா போன்ற  வேறு பல காரணங்கள் இருக்கும் என நினைக்கின்றேன்.

ஏன் ஏனைய ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி, பிரான்சை விட யூகேயில் இப்படி பணவீக்கம், விலைவாசி அதிகம்? என கேட்க வேண்டாம்.

பிரெக்சிற் - கெட்டவார்த்தை 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஏன் ஏனைய ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி, பிரான்சை விட யூகேயில் இப்படி பணவீக்கம், விலைவாசி அதிகம்? என கேட்க வேண்டாம்.

பிரெக்சிற் - கெட்டவார்த்தை 😂

அட… ஆமா…..
பிரெக்சிற்றை, இலகுவாக மறந்து போனோம். 🙂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.