Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

இது தான் என் அவதானிப்பும். ஏனைய தளங்களில், ரஷ்ய உக்ரைன் யுத்தம் பற்றி எழுதப் பட்டிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள், ஆய்வுகள் எதையும் கூர்மையாக நேரம் செலவழித்து வாசித்தறிந்த பின் எழுதப்பட்டவையாக எனக்குத் தெரியவில்லை. இவற்றை மிக இலகுவாகக் கண்டு பிடிக்க ஒருவழி, சமூக வலை ஊடகங்களில் மிதந்து திரியும் cliche எல்லாம் ஏதோ வரலாற்றின் அரிய தரவுகள் போல மீள ஒப்புவிக்கப் பட்டிருக்கும். மேலே ஒரிஜினல் கட்டுரையாளரின் இந்த வசனம் ஒரு உதாரணம்:

"...நவீன உலகில் அதி­க­மான நாடு­களில் போர்­களை நடத்­திய நாடு, தொடர்ந்தும் போர்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கின்ற நாடு எது­வெனக் கேள்வி கேட்டால் அது அமெ­ரிக்கா எனச் சிறு­பிள்ளை கூடச் சொல்­லி ­விடும்"

இதை ஒப்புவித்த சிலரிடம் நான் கேட்டிருக்கிறேன்: சரி, இரண்டாம் உலகப் போரின் பின் உலகில் நிகழ்ந்த யுத்தங்கள் மொத்தமாக எத்தனை? அதில் அமெரிக்கா/நேட்டோவினால் ஆரம்பிக்கப் பட்டவை எத்தனை?

இரண்டிற்கும் பதில் கிடைக்காது. "நீ மேற்கின் அடிவருடி!" என்ற மூலையில் போய் நிற்பார்கள்😂

சண்டை என்றால் தலை தானே??

எதுக்கு தலையை போட்டு பிழியணும்?🤣

  • Replies 552
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொத்தணிக் குண்டுகளை உக்ரைன் உரியமுறையில் பயன்படுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு

கொத்தணிக் குண்டுகளை உக்ரைன் உரியமுறையில் பயன்படுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு

ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலில் அமெரிக்காவால் வழங்கப்பட்ட கொத்தணிக்குண்டுகளை உக்ரேனியப் படைகள் உரியமுறையில் பயன்படுத்துவதாக வொஷிங்டன் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நேற்று இடமபெற்ற ஊடக சந்திப்பின் போதே வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி இதனை தெரிவித்துள்ளார்.

120 க்கும் மேற்பட்ட நாடுகளால் தடைசெய்யப்பட்ட கொத்தணிக்குண்டுகள் ரஷ்யாவின் தற்காப்பு அமைப்புகளிலும் படைகளின் சூழ்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் ஜோன் கிர்பி கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கு நீண்ட கால ஆபத்துகள் இருப்பதால் பல நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ள கொத்தணி குண்டுகளை வழங்குவது மற்றும் அதன் பயன்பாடு என்பன பரந்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.

எவ்வாறாயினும் உக்ரைனும் ரஷ்யாவும் பொதுமக்களைக் கொல்லும் இத்தகைய கண்மூடித்தனமான ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

https://athavannews.com/2023/1340996

  • இணையவன் changed the title to ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

2014இல் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் முக்கிய குற்றவாளியான ரஸ்ய இராணுவ அதிகாரியை கைதுசெய்தார் புட்டின் - புட்டினை விமர்சித்ததால் வந்த வினை!

Published By: RAJEEBAN

22 JUL, 2023 | 02:21 PM
image
 

2014இல் உக்ரைன் வான்பரப்பிற்கு மேலாக மலேசியன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமைக்கு காரணமானவர் என சர்வதேச நீதிமன்றத்தினால் குற்றம்சாட்டப்பட்ட ரஸ்யாவின் முன்னாள் இராணுவ அதிகாரி இகோர் கேர்கின் புட்டின் உக்ரைன் நடவடிக்கையை தொடர்ச்சியாக விமர்சித்து வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தன்னை ரஸ்ய தேசியவாதி என அறிவித்த இகோர் கேர்கின்  ரஸ்ய ஜனாதிபதியை தொடர்ச்சியாக விமர்சித்து வந்த நிலையில் தீவிரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

2014 இல் உக்ரைன் வான்பரப்பில் எம்எச் 17 சுட்டுவீழ்த்தப்பட்டதில் இவருக்கும் தொடர்புள்ளது அந்த சம்பவத்தின் பின்னர் மொஸ்கோ சென்ற இவர் தலைமறைவானார்.

F1QofurX0AEpZ-_.jpg

 

உக்ரைன் மீதான போரை தீவிரமாக ஆதரித்த வந்த இவர் சமீபகாலங்களில் புட்டினின் நடவடிக்கையை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார் – புட்டினின் வீழ்ச்சி குறித்து கடந்தவாரம் இவர்கருத்து வெளியிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

தனது கணவனை காணவில்லை என கேர்கினின் மனைவி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

நான் வீட்டிற்கு வந்தவேளை அவரை காணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை அவர் தெரிவித்துள்ளார்

இந்த தகவல் வெளியான பின்னர் கேர்கின் ரஸ்ய நீதிமன்றமொன்றில் அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்படும் படம் வெளியாகியுள்ளது – அவருக்கு எதிராக தீவிரவாதத்தை தூண்டிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இகோர் கேர்கின் யார்?

இகோர் கேர்கின் அதிகம் அறியப்படாத ஒரு நபர் அவரது கடந்த காலங்கள் குறித்து அதிக தகவல்கள் இல்லை, அவர் 1970 இல் மொஸ்கோவில் பிறந்தவர்.

செச்னியாவில் போரிட்ட ரஸ்ய சோவியத் படைகளை சேர்ந்தவரான இவருக்கு டெரிபில் என்ற பட்டப்பெயர் உள்ளது.

2001 இல் ஆறு செச்னியர்களை  வீட்டிலிருந்து வெளியே கொண்டு சென்று கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உள்ளது.

1992 இல் பொஸ்னிய நகரத்தில் முஸ்லீம்களை படுகொலை செய்த குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக உள்ளது.

https://www.virakesari.lk/article/160643

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரைன் நடத்திய கொத்தணிக் குண்டு தாக்குதலில் ஊடகவியலாளர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு

உக்ரைன் நடத்திய கொத்தணிக் குண்டு தாக்குதலில் ஊடகவியலாளர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு

அமெரிக்கா வழங்கிய கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தி ஜபோரிஷியா பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரேனிய தாக்குதலில் ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ. செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் கொல்லப்பட்டார் என்றும் மேலும் மூன்று பேர் இதில் காயமடைந்தனர் என்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தி, உக்ரைன் தாக்குதல் நடத்திய இடங்களில் செய்தி சேகரிக்க சென்றபோதே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த ஊடகவியாளரின் மரணம் மேற்கத்திய சக்திகள் மற்றும் உக்ரைன் செய்த கொடூரமான, திட்டமிடப்பட்ட குற்றம் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சும் கடுமையாக சாடியுள்ளது.

ரஷ்ய அமைப்புகளுக்கு எதிராக கொத்தணி குண்டுகளை உக்ரேன் உரிய முறையில் பயன்படுத்துவதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜான் கிர்பி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1341126

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிரைமியாவில் ரஷ்ய ஆயுதக் களஞ்சியம் மீது உக்ரேன் தாக்குதல்

Published By: Sethu

24 Jul, 2023 | 10:48 AM
image

கிரைமியாவிலுள்ள ரஷ்ய ஆயுதக்களஞ்சியம் ஒன்றின் மீது உக்ரேன் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆளில்லா விமானங்கள்  மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட மேற்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கிரைமிய வான்பரப்பில் எதிரிகளின் 11 ட்ரோன்களை ரஷ்ய படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டிஸான்கோய் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

உக்ரேனின் கிரைமியா பிராந்தியத்தை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டமை கொண்டது.

 

https://www.virakesari.lk/article/160764

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்ய தலைநகரில் உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல்

Published By: SETHU

24 JUL, 2023 | 12:22 PM
image
 

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உக்ரேனின் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) இன்று தாக்குதல் நடத்தியுள்ளன.

மொஸ்கோவிலுள்ள இரு கட்டடங்கள் மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இத்தாக்குதலில்  எவரும் காயமடையவில்லை என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொஸ்கோ வான்பரப்பில் உக்ரேனின் இரு ட்ரோன்களை தாம் சுட்டுவீழ்த்தியாகவும், அவற்றில் ஒன்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கட்டடத்துக்கு அருகில் ஒரு ட்ரோன் வீழ்ந்ததாகவும் மற்றொரு அலுவலகக் கட்டடமொன்றின் மீது மோதியதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய கிரைமியா பிராந்தியத்திலுள்ள ரஷ்ய ஆயுதக் களஞ்சியமொன்றின் மீதும் உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உக்ரேனின் ஒடிசா நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என உக்ரேன் நேற்று சூளுரைத்த நிலையில் இத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. 

https://www.virakesari.lk/article/160783

Posted

 

உக்ரைனின் பாரம்பரியமான ஒடேசா தேவாலயம் மீது ரஷ்யா ஏவுகணை வீச்சு: ஒருவர் பலி, குழந்தைகள் படுகாயம்

ஒடேசா: உக்ரைனின் பாரம்பரியமான ஒடேசா தேவாலயம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியானார். குழந்தைகள் உட்பட 22 பேர் காயமடைந்தனர். உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தி உள்ள ரஷ்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருங்கடல் நகரமான ஒடேசா மீது நேற்று மீண்டும் தாக்குதலை தொடங்கியது. அங்குள்ள பாரம்பரிய தளங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் குறிவைத்து ரஷ்ய ராணுவம் ஏவுகணைகளை ஏவியது. இதில் பாரம்பரியமான டிரான்ஸ்பிகுரேஷன் கதீட்ரல் தேவாலாயத்தையும் ஏவுகணை விட்டு வைக்கவில்லை. குண்டுவீச்சில் இந்த தேவாலாயம் கடுமையாக சேதமடைந்தது.

 

மொத்தம் 25 பாரம்பரிய அடையாளங்களை தகர்க்கும் நோக்கில் ரஷ்யா ஏவுகணை வீசி உள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். 4 குழந்தைகள் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர். இடிந்த போன தேவாலயத்தில் இருந்து புனித பொருட்களையும், ஆவணங்களையும் மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ‘உக்ரைனின் பாரம்பரியம் இப்போது எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது’ என மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், ‘ரஷ்ய கூட்டமைப்புக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு தயாராகி விடும் தளங்களை குறிவைத்து தாக்கி உள்ளோம்’ என கூறி உள்ளது.
 

https://m.dinakaran.com/article/News_Detail/1177402/amp

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nunavilan said:

ரஷ்ய கூட்டமைப்புக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு தயாராகி விடும் தளங்களை குறிவைத்து தாக்கி உள்ளோம்’ என கூறி உள்ளது.

இப்படித்தான் சிறிலங்கா அரச பயங்கரவாதிகள் நவாலி தேவாலயத்தை தாக்கிவிட்டு அறிக்கை விட்டனர்,

ரஷ்ய பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு சரியான மருந்து இஸ்ரேலிடம்தான் உண்டு. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மிகவும் உறுதிப் படுத்தப்படாத செய்தி

பஹ்மூத் நகரின் மத்திக்கு அருகான Klishchiivka எனும் இடத்தை ஒரு தொகுதி உக்ரேனிய படைகள் அடைந்துள்ளதாக, அல்லது நெருங்கி விட்டதாக உக்ரேன் சார்பு கணக்குகள் சொல்கிறன.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, goshan_che said:

மிகவும் உறுதிப் படுத்தப்படாத செய்தி

பஹ்மூத் நகரின் மத்திக்கு அருகான Klishchiivka எனும் இடத்தை ஒரு தொகுதி உக்ரேனிய படைகள் அடைந்துள்ளதாக, அல்லது நெருங்கி விட்டதாக உக்ரேன் சார்பு கணக்குகள் சொல்கிறன.

ஆமா புட்டின் எங்கே??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

ஆமா புட்டின் எங்கே??

17 ஆபிரிக்க நாட்டு தலைவர்களை ரஸ்யா-ஆபிரிக்கா உச்சி மாநாட்டில் சென் பீட்டர்ஸ்பேர்கில் வைத்து நாளை மறுநாள் சந்திப்பாராம்.

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் உறுதிப் படுத்தப்படாத செய்தி

Svatove-Karmazynivka பகுதியில் முன்னரங்கில் இருந்து கார்கிவ் ஒப்லாஸ்ட் நோக்கிய திக்கில் ரஸ்ய படைகள் முன்னேறியுள்ளதாய் - ரஸ்ய சார்பு கணக்குகள் கூறுகிறன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

இரஸ்ய பாதுகாப்பு மந்திரி ஷைகோ வட கொரியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, விசுகு said:

ஆமா புட்டின் எங்கே??

ஏன் அவரை தேடுகிறீர்கள்.??. அவர்   பாதுகாப்பாக தான்  இருப்பார் .அவரை ..எந்தவொரு போரும். பாதிக்காது.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்சிய பாதுகாப்பு முன்னரங்க நிலைகளிலேயே தகர்ந்து போகும் மேற்குலக டாங்கிகள்...கவச வாகனங்கள் - உக்ரைன் தளபதி ஏமாற்றக் குரல் (பிபிசி)

The general in charge of Ukraine's stuttering counter-offensive in the south has said Russian defences are making it difficult for military equipment, including Western tanks and armoured vehicles, to move forward. (BBC)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மொஸ்கோவிலுள்ள கட்டடத்தின் மீது 2 ஆவது தடவையாக ட்ரோன் தாக்குதல்

Published By: SETHU

01 AUG, 2023 | 10:17 AM
image
 

ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலுள்ள கட்டடமொன்று இரு  தினங்கள் இடைவெளியில் இன்று இரண்டாவது தடவையாகவும் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகியது.

மொஸ்க்வா சிட்டி கொம்பிளக்ஸ் எனும் கட்டடம் நேற்றுமுன்தினம் உக்ரேனின் ட்ரோன் தாக்குதலுக்குள்ளானது. 

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் அக்கட்டடம் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்கானது என மேயர் சேர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார். 

உக்ரேனின் பல ட்ரோன்களை ரஷ்ய படையினர் சுட்டுவீழத்தியதாகவும் ஆனால், ஒரு ட்ரோன் மேற்படி கட்டடத்தை தாக்கியதாவும் அவர் குறிப்பிட்டார். 

இக்கட்டத்தின் 21 ஆவது மாடி முகப்பு சேதமடைந்துள்ளதாகவும், இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும் அவர் கூறினார். 

இத்தாக்குதலுககு உக்ரேன் மீது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால், பொதுவாக மொஸ்கோ மீதான ட்ரோன் தாக்குதல் தொடர்பில் உக்ரேன் நேரடியாக கருத்து தெரிவிப்பதில்லை. 

எனினும், நேற்றுமுன்தினம் நடந்த தாக்குதலின் பின்னர், யுத்தமானது ரஷ்யா பிராந்தியத்துக்கு திரும்புகிறது என உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  உக்ரேனின் கிறைவ்யி றிஹ் நகரில் ரஷ்யா நேற்று ஏவுகணைத் தாக்குதலில், 10 வயது சிறுமி உட்பட அறுவர் பலியானதுடன் மேலும் 75 பேர் காயமடைந்துள்ளனர்என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/161386

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யுக்ரேன் ராணுவத்தின் துணிச்சலான முன்கள வீராங்கனைகளின் குரல்கள்

ஆண்ட்ரியானா
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஓல்கா மல்செவ்ஸ்கா
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ரஷ்யாவிற்கு எதிரான போரில் பங்கேற்று சண்டையிட யுக்ரேனிய பெண்கள் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்து வருகின்றனர். இப்படி பதிவு செய்து களத்தில் சண்டையிடும் 5,000 முன்னணி பெண் வீராங்கனைகளில் மூவருடன் பிபிசி பேசியது. அவர்கள் தங்கள் சொந்த ராணுவத்தில் பாலின சமத்துவம் உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பிப் போராடும் நிலையும் காணப்படுகிறது.

மெலிந்த, நீல வண்ண கண்களைக் கொண்ட, அழகிய பெண் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறார். ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின்படி அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். ஆனால் அவர் உயிர் பிழைத்து தற்போது அவர் உடற்பயிற்சி மேற்கொள்வது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆண்ட்ரியானா அரேக்தா என்ற இந்த வீராங்கனை யுக்ரேனிய ஆயுதப்படையில் ஒரு சிறப்பு பிரிவு சார்ஜென்ட் ஆவார். மீண்டும் முன்வரிசையில் நின்று போர்புரியத் தன்னைத் தயார்படுத்திவருகிறார்.

டிசம்பரில் கெர்சன் பகுதியில் கண்ணிவெடியால் காயம் அடைந்த ஆண்ட்ரியானாவை யுக்ரேனில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் - அவரது பாதுகாப்பு கருதி பெயர் சொல்ல முடியாத இடத்தில் - சந்தித்து பிபிசி உரையாற்றியது.

ரஷ்யாவில் வெளியாகும் ஏராளமான ஊடகங்கள் அவரது "மரணத்தைக்" கொண்டாடிவருகின்றன.

"நான் கால்கள் மற்றும் கைகளை இழந்து ரஷ்ய ராணுவத்தால் கொல்லப்பட்டதாக அந்த ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன," என்கிறார் ஆண்ட்ரியானா. "அவர்கள் ஒரு விஷயத்தைப் பிரசாரம் செய்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர்."

முன்னணி ராணுவ வீராங்கனைகள்
 
படக்குறிப்பு,

ஆண்ட்ரியானா உக்ரைனில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவருகிறார். மேலும், மீண்டும் ராணுவத்தின் முன்வரிசையில் இருந்து போரிடத் தேவையான பயிற்சியையும் பெற்றுவருகிறார்.

அந்தச் செய்திகளில் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் "கொலைகாரி" என்றும், "நாசிப்படையைச் சேர்ந்தவர் அழிக்கப்பட்டார்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எந்த ஆதாரமும் இல்லாமல் 'அவர் கொடூரமானவர். பிறரின் துன்பங்களில் இன்பம் காண்பவர்' என்றெல்லாம் செய்திகள் வெளியாகியிருந்தன. யுக்ரேனிய இராணுவம் கெர்சனை விடுவித்தபின் இது போன்ற செய்திகள் வெளியாகத் தொடங்கின.

"இது எனக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. நான் இங்கே உயிருடன் இருக்கிறேன். இனிவரும் நாட்களிலும் என் நாட்டை நான் பாதுகாப்பேன்," என்று அவர் கூறுகிறார்.

18 மாதங்களுக்கு முன் ரஷ்யாவின் படையெடுத்தது. அதன் பின் தற்போது யுக்ரேன் நாட்டு ராணுவப் படைகளில் 60,000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். 42,000 க்கும் அதிகமானோர் இராணுவ நிலைகளில் உள்ளனர் - களத்தில் 5,000 பெண் வீராங்கனைகள் போரிட்டு வருவதாக யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யுக்ரேன் சட்டத்தின் கீழ் எந்த பெண்ணையும் அவரது விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி பணியில் ஈடுபடுத்த முடியாது என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தில் சில குறிப்பிட்ட போர் நடவடிக்கைகள் பெண்களால் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன என்றும் சிலர் நம்புகிறார்கள்.

"நான் என் தளபதியிடம் வந்து, 'எனக்கு என்ன பணி ஒதுக்கப்பட்டுள்ளது ?' என்று கேட்டேன். 'நீங்கள் ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையாகப் பணியாற்றவேண்டும்,' என்று அவர் கூறினார்," என்று எவ்ஜெனியா எமரால்டு என்ற ராணுவ பெண் வீராங்கனை நினைவு கூர்ந்தார் - அவர் சமீப காலம் வரை யுக்ரேன் போர்க்களத்திலிருந்து போரிட்டு வந்தார்.

முன்னணி ராணுவ வீராங்கனைகள்

பட மூலாதாரம்,EURASIA DAILY

 
படக்குறிப்பு,

ஆண்ட்ரியானா அரேக்தா இறந்துவிட்டதாக ஏராளமான ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ராணுவத்தில் இணைந்து துப்பாக்கி சுடும் வீராங்கனைகளாகப் பணியாற்றுபவர்கள் அதிக அளவில் அனைவரையும் கவர்ந்துவருகின்றனர் என்று அவர் கூறுகிறார். அந்த அளவுக்கு அவர்களுக்கு நற்பெயர் கிடைக்க நடைமுறைக் காரணம் ஒன்று உள்ளது.

"ஒரு ஆண் துப்பாக்கியை எடுத்து மற்றொருவரைச் சுடலாமா வேண்டாமா என யோசிக்கிறார் என்றால், அதே இடத்தில் ஒரு பெண் இருந்தால் அவர் அந்தச் செயலைச் செய்யவே மாட்டார்," என்கிறார் அவர்.

மூன்று மாத குழந்தையை தொட்டிலில் ஆட்டிக்கொண்டே பேசும் எவ்ஜெனியா, "அதனால்தான், ஆண்களைப் போல் இல்லாமல், பெண்கள் ஒரு உயிரை உருவாக்குபவர்களாக உள்ளனர்," என்கிறார்.

31 வயதான அவர், ரஷ்யா கிரைமியாவை ஆக்கிரமித்த பின்னர் இராணுவப் பயிற்சி பெற்றவர். ஆனால் 2022 இல் மட்டுமே அவர் இராணுவத்தில் சேர்ந்தார். முழு அளவிலான தற்போதைய போருக்கு முன்பு ஒரு நகைக் கடையின் உரிமையாளராக இருந்தார்.

யுக்ரேனிய பெண் வீராங்கனைகளை பெருமளவில் அடையாளப்படுத்தும் விதமாக அவர் வலுவான சமூக ஊடகச் செயற்பாட்டாளராக இருந்து வந்துள்ளார். அவர் ஒரு தொழில் முனைவோராக இருந்த போது, தொழில் வாழ்க்கையின் அனுபவங்கள் மூலம் சமூக ஊடகங்களில் பெரும் செல்வாக்கு பெற்றவராக இருந்தார்.

முன்னணி ராணுவ வீராங்கனைகள்
 
படக்குறிப்பு,

தனது மூன்று மாத குழந்தையுடன் புகைப்படத்தில் தோன்றும் எவ்ஜெனியா எமரால்டு, போருக்கு முன்பு நகை வியாபாரம் செய்தார்.

ஆண்ட்ரியானாவைப் போலவே, எவ்ஜெனியாவும் ரஷ்ய ஊடகங்களால் கொடூரமாக விமர்சிக்கப்பட்டவராக இருக்கிறார். அவரை "தண்டனை அளிப்பவர், நாசி" என்று ரஷ்ய ஊடகங்கள் பரவலாகக் குறிப்பிடுகின்றன. துப்பாக்கி சுடும் வீராங்கனையாக ஒரு பெண் முன்வரிசையில் நின்று போர்புரிவதை நூற்றுக்கணக்கான செய்திகளை ரஷ்ய ஊடகங்கள் வெளியிடுவது மட்டுமல்லாமல், அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

ராணுவத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாகப் பணிபுரிவது மிகவும் கொடூரமானது - உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பயங்கர கொடூரமானது என எவ்ஜெனியா கூறுகிறார்.

"ஏனென்றால் அங்கே என்ன நடக்கிறது என்பதை உங்களால் நேரடியாகப் பார்க்க முடியும். இலக்கை நீங்கள் தாக்குவதை நீங்கள் பார்க்கலாம். உங்களால் தாக்கப்படும் ஒருவரை நீங்கள் பார்க்கும் போது நீங்கள் நரகத்தில் இருப்பதைப் போன்ற உணர்ச்சிகளை அளிக்கும்."

எவ்ஜெனியா மட்டுமல்லாமல், நாங்கள் சந்தித்துப் பேசிய மற்ற முன் வரிசை வீராங்கனைகளும் அவர்கள் தாக்கிய உயிர்களின் எண்ணிக்கையை நினைவுபடுத்த முடியாது. ஆனால் எவ்ஜெனியா தான் யாரையாவது கொல்ல வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தபோது அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை நினைவு கூர்ந்தார்.

"குறைந்தது 30 வினாடிகள் நான் நடுங்கத் தொடங்குவேன். என் முழு உடலும் நடுங்கும். என்னால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போது திரும்ப மீட்கமுடியாத ஒரு செயலைச் செய்யப்போகிறேன் என்ற உணர்வு என்னுள் மேலோங்கும்," என்கிறார் எவ்ஜெனியா.

"ஆனால் நாங்கள் ஒரு போதும் அவர்கள் மீது போர் தொடுக்கவில்லை. அவர்கள் தான் எங்கள் மீது போரைத் திணித்தார்கள்."

முன்னணி ராணுவ வீராங்கனைகள்

பட மூலாதாரம்,ILLIA LARIONOV

 
படக்குறிப்பு,

எவ்ஜெனியா எமரால்டு, துப்பாக்கி சுடும் வீராங்கனையாகப் பணிபுரிவது குறிப்பாக கொடூரமான போர்முறை என்று கூறுகிறார்

யுக்ரேனிய இராணுவத்தில் பெண்களின் சதவீதம் 2014 இல், முதன்முதலாக ரஷ்யா படையெடுத்த பின் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020 இல் 15% ஐ எட்டியது.

ஆனால் பல பெண் துருப்புக்கள் ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதல்களின் போது பாலியல் சமத்துவமற்ற மனப்பான்மையால் பாதிக்கப்பட்டதாகவும், அப்போது தங்கள் சொந்தப் படைகளுக்கு உள்ளேயே போரிடும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

போர்க்களத்தில் முன் வரிசையில் இருந்து துப்பாக்கி சுடும் வீராங்கனையாகப் பணியாற்றிய போது, தனது அதிகாரத்தையும் நம்பிக்கையையும் நிலைநாட்டுவதற்கு முன்பாகவே இதை எதிர்கொண்டதாக எவ்ஜெனியா கூறுகிறார்.

"நான் சிறப்புப் படையில் சேர்ந்தபோது, ஒரு ஆண் வீரர் என்னிடம் வந்து, 'நீ இங்கே என்ன செய்கிறாய்? போய் ஒரு கப் சூப் சமைத்து அதை எடுத்துக்கொண்டு வா' என்றார். அந்த நேரத்தில் நான் மிகவும் புண்பட்டதாக உணர்ந்தேன். 'நீங்கள் என்னை கேலி செய்கிறீர்களா? நான் சமையலறையிலும் இருக்க முடியும். அதே நேரம், என்னால் உங்களைத் தாண்டி போரில் சாதிக்கவும் முடியும்' என்று சொன்னேன்."

யுக்ரேனிய பெண் வீராங்கனைகளுக்கு உதவும் 'ஆர்ம் வுமன் நவ்' என்ற அமைப்பைச் சேர்ந்த மற்றொரு எவ்ஜெனியா (எவ்ஜெனியா வெலைகா) பேசும் போது, "பெண்கள் தங்கள் கணவர்களைக் கண்டுபிடிக்கவே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதாக பொதுமக்களிடம் ஒரு வலுவான கருத்து உள்ளது," என்கிறார்.

உடல் ரீதியான துஷ்பிரயோகங்கள் குறித்தும் பெண்கள் தன்னிடம் புகார் தெரிவித்ததாக அவர் கூறுகிறார்.

"பிரச்னையின் அளவை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு பெண் சிப்பாயும் இதைப் பற்றி பேச விரும்பவில்லை," என்று அவர் கூறுகிறார்.

யுக்ரேனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் பிபிசியிடம் பேசுகையில், "பல்லாயிரக்கணக்கான வீராங்கனைகள் ராணுவத்தில் சேர்ந்துள்ள நிலையில், மிகச்சில நேரங்களில் இது போன்ற புகார்கள் எழுகின்றன," என்று கூறினார்.

முன்னணி ராணுவ வீராங்கனைகள்

பட மூலாதாரம்,UKRAINE DEFENCE MINISTRY

 
படக்குறிப்பு,

2021 ஆம் ஆண்டில், யுக்ரேன் இராணுவம் பெண் வீராங்கனைகள் 'ஹை ஹீல்ஸ்' ஷுக்களுடன் பயிற்சி செய்யும் படங்களை வெளியிட்டது பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியது

யுக்ரேனிய இராணுவத்தில் பணியாற்றும் பெண்களுக்கு பாலினத்திற்கு ஏற்ற சீருடைகள் இல்லை. ஆண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள், பொருத்தமான அளவுகளற்ற காலணிகள் மற்றும் குண்டு துளைக்காத உள்ளாடைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மயிலர் கூட, தனக்கு வழங்கப்பட்ட ஃபீல்ட் யூனிபார்ம் ஒரு ஆணுக்காக வடிவமைக்கப்பட்டதாக கூறுகிறார் - அவர் "உயரம் குறைவாக" இருப்பதால் அதன் அளவுகளை மாற்ற வேண்டியிருந்தது என்கிறார். அங்கு முறைப்படி அணியவேண்டிய சீருடையில் 'ஹை ஹீல்ஸ்' கொண்ட காலணிகளும் அடங்கும் என்று அவர் கூறுகிறார்.

இராணுவத்தில் உள்ள பெண்கள், அவர்களுக்குப் பொருத்தமான சீருடைகளை, ஆடைகளை வாங்கவேண்டும் என்றால் அவர்கள் அவற்றை இணையதளம் மூலம் சொந்த பணம் செலுத்திவாங்கிக் கொள்ளலாம் அல்லது தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் வாங்கிக்கொள்ளலாம். வேறு வழியில்லை.

இதனாலேயே ஆண்ட்ரியானா வெட்டரன்கா, யுக்ரேனிய பெண்கள் படைவீரர் இயக்கம் என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இது பெண் ராணுவ வீராங்கனைகளுக்கு சம உரிமைகள் மற்றும் நேட்டோவின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப யுக்ரேனிய ராணுவ சட்டத்தை சீர்திருத்துவதற்காக கோரிக்கை எழுப்பிவருகிறது.

ஆனால், இந்த விஷயத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பெண் வீராங்கனைகளுக்கான சீருடை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை ஒட்டுமொத்தமாக தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் மல்யார் கூறுகிறார். இருப்பினும், அவை எப்போது தயாரிக்கப்படும் என்ற விவரங்களை அவர் தெரிவிக்கமுடியவில்லை.

இதுபோன்ற பிரச்சினைகள் இருந்தபோதிலும், "போருக்கு பாலினம் எதுவும் இல்லை" என்று துப்பாக்கி சுடும் வீராங்கனை எவ்ஜெனியா எமரால்டு கூறுகிறார்.

போர்க்களம், ஆயுதமேந்தியவர்கள் ஆண்களா, பெண்களா என்பதைப் பொருட்படுத்தாது. ஒரு வீட்டில் ஏவுகணை தாக்கும் போது அங்கே ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் இருக்கின்றனர்."

"போர்க்களத்தின் முன் வரிசையிலும் இந்த நிலையே காணப்படுகிறது. நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து திறம்பட செயல்படவேண்டும். பெண் என்ற இடத்திலிருந்து உங்கள் நாட்டையும் உங்கள் மக்களையும் ஏன் பாதுகாக்க மாட்டீர்கள்?"

முன்னணி ராணுவ வீராங்கனைகள்

பட மூலாதாரம்,IRYNA

 
படக்குறிப்பு,

ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து போரில் தாக்குதல் நடத்தத் தயாராகும் பெண் வீராங்கனை.

கிழக்கு டான்பாஸ் பகுதியில், தற்போது துப்பாக்கி ஏந்தி எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டு வரும் இரினாவுக்குக் கிடைத்த ஒரு சிறிய ஓய்வு நேரத்தில் நாங்கள் அவருடன் மிகவும் சுருக்கமான உரையாடல் ஒன்றை நடத்தினோம். .

ராணுவத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கவேண்டும் என பெண் வீராங்கனைகள் போராடி வருகிறார்களோ, அந்த மாற்றங்களின் ஒரு எடுத்துக்காட்டாக அவர் திகழ்கிறார். அவர் தற்போது ஆண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள ஒரு படைப்பிரிவின் தளபதியாகப் பணியாற்றிவருகிறார்.

"ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனைனயின் பெயர் காதலுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. திரைப்படங்களில் இது போன்ற காட்சிகள் அழகாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் எனது கடின உழைப்பின் காரணமாகவே இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன்."

துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் எப்படி ஆறு மணி நேரம் வரை தரையில் படுத்துக்கொண்டு எதிரிகளைச் சுடுகின்றனர்? அதுவும் அவர்களது நிலைகளை அதிவேகமாக மாற்றம் செய்துகொண்டே பணியாற்றவேண்டிய நிலையை அவர் விவரிக்கிறார்.

"இது மரணத்துடன் விளையாடுவது போன்றது," என்று அவர் மேலும் கூறுகிறார்.

சேவை செய்யும் ஆயிரக்கணக்கான பெண்கள் தொழில் மற்றும் அவர்களது குடும்பங்களை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

யுக்ரேனிய படைவீரர் விவகார அமைச்சகத்தின் கீழ் பாலின சமத்துவம் குறித்த ஐ.நா. ஆலோசகராக இருந்த ஆண்ட்ரியானா தனது வேலையை விட்டுவிட்டு, கடந்த ஆண்டு ரஷ்யா படையெடுத்தபோது யுக்ரேனிய ராணுவத்தில் சேர்ந்தார்.

"அவர்கள் என் வாழ்க்கையின் சிறந்த காலத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்," என 35 வயதான அவர் கூறுகிறார். போருக்கு முந்தைய ஒரு காலத்தை நினைத்துப் பார்க்கையில், அவர் மேலும் கூறுகிறார்: "நான் சுற்றுப் பயணம் செய்து மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியும். மேலும் ஒரு தொழிலைக் கட்டியெழுப்பியிருக்க முடியும் அல்லது ஒரு சிறந்த வேலையில் அமர்ந்துகொண்டு ஒரு கனவுலகத்தில் வாழ்ந்திருக்கமுடியும்."

ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும் வயதில் ஒரு மகனை வைத்திருக்கும் தாயான ஆண்ட்ரியானா தொடர்ந்து பேசும் போது, ஏழு மாதங்களுக்கும் மேலாக தனது மகனை பார்க்கமுடியவில்லை என்றும், மொபைல் ஃபோனில் தனது மகனுடைய படங்கள் தொடர்ந்து வரும் போது புன்னகையுடன் அவைற்றைப் பார்த்து மன நிறைவடைவதாகவும் கண்ணீருடன் குறிப்பிடுகிறார்.

தற்போதைய நிலையில், அவரது சொந்த நாட்டில் அமைதியான எதிர்காலத்தைப் பெற வேண்டும் என்ற விருப்பம் தான் அவருக்கு ஒரு உந்துதலாக இருக்கிறது. நாடு முழுவதும் அமைதி ஏற்பட்டுவிட்டால், தனது மகன், அவனது பெற்றோரைப் போல போராடி அவனது உயிரைப் பணயம் வைத்து வாழவேண்டிய அவசியம் இருக்காது.

முன்னணி ராணுவ வீராங்கனைகள்
 
படக்குறிப்பு,

2014 இல் ரஷ்யா கிரிமியா மீது படையெடுத்தபோது ஆண்ட்ரியானா முதன்முதலில் ஆயுதப்படையில் சேர்ந்தார்

கடந்த ஆண்டு ரஷ்யாவின் முழுப் படையெடுப்பிற்குப் பிறகு இணைந்த எவ்ஜெனியா எமரால்டு போலல்லாமல், ஆண்ட்ரியானாவுக்கு ஏற்கெனவே இராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.

2014 ஆம் ஆண்டில், ரஷ்யா முதன்முதலில் யுக்ரேனைத் தாக்கி, கிரைமியாவை இணைத்து, டான்பாஸை ஆக்கிரமித்தபோது, அவர் பிராண்ட் மேலாளராக தனது வேலையை விட்டுவிட்டு முதல் தன்னார்வ பட்டாலியன்களில் ஒன்றில் சேர்ந்தார். ஆயிரக்கணக்கான யுக்ரேனியர்களுடன். அந்த நேரத்தில், இராணுவம் இப்போது இருப்பதை விட சிறியதாக இருந்தது என்பது மட்டுமல்லாமல் போதுமான வசதிகள் இன்றித் தவித்துவந்தது.

ஆண்ட்ரியானா பணியாற்றிய 'ஐடார் பட்டாலியன்', கிரெம்ளின் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை மீறல்களால் குற்றம் சாட்டப்பட்டது - ஆனால் யுக்ரேனிய இராணுவம் பிபிசியிடம் பேசிய போது, அந்த குற்றச்சாட்டுக்களை ஏற்க எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியது.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, யுக்ரேனிய தன்னார்வப் படைப்பிரிவுகளை பயனுள்ள வகையில் முறைப்படுத்த அந்நாட்டு அரசை வலியுறுத்தியது.

ஆண்ட்ரியானா எந்த தவறான நடத்தையிலும் ஈடுபடவில்லை என்றாலும், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் 'ஐடாரை' விட்டு வெளியேறினார். ரஷ்ய ஊடகங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் அவரை "துரதிருஷ்டம்" என்று தொடர்ந்து வர்ணித்துவந்தன.

யுக்ரேனில், அவரது சேவைக்காக அவருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன - ஒன்று "தைரியத்திற்காக", மற்றொன்று "மக்கள் ஹீரோ" என்பதற்காக வழங்கப்பட்டன.

பிபிசியிடம் பேசிய ஆண்ட்ரியானா, தான் இனி ஐடாரின் ஒரு பகுதியாக இல்லை என்றும், ஏற்கெனவே போரில் அவருக்குப் போதிய முன்னனுபவம் இருந்ததால், 2022 ஆம் ஆண்டில் மீண்டும் இராணுவத்தில் சேர வேண்டிய கட்டாயம் இருப்பதாக உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.

முன்னணி ராணுவ வீராங்கனைகள்
 
படக்குறிப்பு,

ஆண்ட்ரியானா மீண்டும் ராணுவத்தின் முன்வரிசைக்குத் திரும்புவதற்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்

ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேன் ராணுவ வீரர்களில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற கேள்விக்கு அந்நாட்டு அரசு ரகசியம் கருதி போதுமான தகவல்களை அளிக்கவில்லை. ஆனால், இதுவரை யுக்ரேன் ராணுவத்தினர் 93 பேர் உயிரிழந்திருக்கலாம் என பிபிசிக்குத் தகவல் கிடைத்துள்ளது.

'ஆர்ம் வுமன் நவ்' என்ற தொண்டு நிறுவனத்தின் தரவுகள், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றன.

ஆண்ட்ரியானாவின் மொபைல் ஃபோனில் பதிவு செய்துவைக்கப்பட்டிருந்த எண்கள், இறந்தவர்களின் பட்டியலாக மாறிவிட்டது.

"நான் 100 க்கும் மேற்பட்ட நண்பர்களை இழந்துவிட்டேன். எத்தனை தொலைபேசி எண்களை நீக்க வேண்டும் என்று கூட எனக்குத் தெரியவில்லை."

ஆனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட விலை கைவிட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது, என்று கூறும் அவர், ஜிம்மில் தனது மறுவாழ்வு பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cj5ndv8qrrno

குறிபார்த்துச் சுடுபவர்களையா(Sniper) துப்பாக்கி சுடுபவர்கள் என குறிப்பிடுகின்றது பிபிசி தமிழ்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஸ்யாவின் கருங்கடல் துறைமுகத்தின் தளத்தின்மீது உக்ரைன் ஆளில்லாவிமானதாக்குதல்

Published By: RAJEEBAN

04 AUG, 2023 | 05:43 PM
image
 

ரஸ்யாவின் கருங்கடல் துறைமுகத்தில் உள்ள தளத்தின் மீது உக்ரைன் கடல் ஆளில்லாத விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது.

ரஸ்யாவின் நோவோரோசிஸ்க் தளத்தின் மீதே உக்ரைன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இரண்டு ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முறியடித்துள்ளதாக ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமானங்களை தளத்திறகு பாதுகாப்பை வழங்கிக்கொண்டிருந்த  ரஸ்யாவின் போர்க்கப்பல்கள் கண்டு அவற்றை அழித்துள்ளன என ரஸ்யா தெரிவித்துள்ளது.

ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சு சேதங்கள் குறித்து எதனையும்தெரிவிக்காத அதேவேளை தரையிறங்கும் கப்பல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது செயற்படமுடியாத நிலையில் உள்ளது என  ரொய்ட்டருக்கு ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/161628

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

ரஸ்யாவின் கருங்கடல் துறைமுகத்தின் தளத்தின்மீது உக்ரைன் ஆளில்லாவிமானதாக்குதல்

Published By: RAJEEBAN

04 AUG, 2023 | 05:43 PM
image
 

ரஸ்யாவின் கருங்கடல் துறைமுகத்தில் உள்ள தளத்தின் மீது உக்ரைன் கடல் ஆளில்லாத விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது.

ரஸ்யாவின் நோவோரோசிஸ்க் தளத்தின் மீதே உக்ரைன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இரண்டு ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முறியடித்துள்ளதாக ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமானங்களை தளத்திறகு பாதுகாப்பை வழங்கிக்கொண்டிருந்த  ரஸ்யாவின் போர்க்கப்பல்கள் கண்டு அவற்றை அழித்துள்ளன என ரஸ்யா தெரிவித்துள்ளது.

ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சு சேதங்கள் குறித்து எதனையும்தெரிவிக்காத அதேவேளை தரையிறங்கும் கப்பல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது செயற்படமுடியாத நிலையில் உள்ளது என  ரொய்ட்டருக்கு ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/161628

ஆழில்லாத விமானம் அல்ல.. தற்கொலை ரோன் படகுத் தாக்குதல். 

Posted

உறுதிப்படுத்தப் படாத செய்தி.

கிரிமியா பாலம் உள்ள பகுதியில் சற்று நேரத்துக்கு முன் பாரிய வெடிச்சத்தமும் அதனைத் தொடர்ந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நவல்னிக்கு மேலும் 19 வருட சிறை தண்டணை வழங்கபட்டதாக செய்திகள் சொல்கின்றன. இலக்கங்கள் (19 வருடம் )ஒரு பொருட்டுல்ல.ரஷ்யாவில் உள்ள பல அரசியல் கைதிகளைப் போலவே நானும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறேன் என்பதை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன் என்று சொல்லியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உ.ப.ப செய்தி

1. கிரைமியாவின் கேர்ச் பாலத்தில் 3 குண்டு வெடிப்புகள்

2. SIG எனும் ரஸ்ய எண்ணை கப்பல் மீது ஆளில்லா, தற்கொலை சிறு விமானங்கள் தாக்குதல்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எப்படி இருந்த ரசியா.....

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரைன் ஜனாதிபதியை கொல்வதற்கு ரஸ்யா முயற்சி- தகவல் வழங்கிய பெண் கைது

Published By: RAJEEBAN

08 AUG, 2023 | 06:11 AM
image
 

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொலை செய்வதற்கான ரஸ்யாவின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ஜுன் மாதம் ஜெலென்ஸ்கி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மைக்கொலாய்வ் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொள்வது குறித்த விடயங்களை பெற்றுக்கொள்வதற்கு முயன்ற பெண்ணே கைதுசெய்யப்பட்டுள்ளார். மொஸ்கோ இராணுவத்திற்கு உதவும் உக்ரைன் பிரஜைகளை உக்ரைன் கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தன்னை கொல்வதற்கான சதி குறித்து  அதிகாரிகள் தகவல்வழங்கியுள்ளனர் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கைது குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்யா இதுவரை இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

download__3_.jpg

ரஸ்ய தரப்பிடம் தகவல்களை வழங்க முற்பட்டவேளை இந்த பெண் பிடிபட்டார் என உக்ரைன் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஜெலென்ஸ்கி விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் அவரது விஜயம் குறித்த தகவல்களை அந்த பெண் பெற முயன்றார் என தெரிவித்துள்ள உக்ரைன் அதிகாரிகள் சமையல் அறையில் அந்த பெண் உக்ரைன் அதிகாரிகளுடன் காணப்படும் படத்தை வெளியிட்டுள்ளனர்.

ஜெலென்ஸ்கி  குறிப்பிட்ட பகுதிக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் தங்களிற்கு இந்த சதி குறித்து தெரியவந்தது என தெரிவித்துள்ள உக்ரைன் அதிகாரிகள் இதனை தொடர்ந்து மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக  குறிப்பிட்டுள்ளனர்.

ஜெலென்ஸ்கி விஜயம் மேற்கொள்ளும் பகுதி மீது பாரிய விமானதாக்குதல்களை மேற்கொள்ள ரஸ்யா திட்டமிட்டது, சந்தேக நபர் அந்த பகுதியில் காணப்படும் இலத்திரனியல் பொறிமுறை அமைப்புகள் வெடிமருந்து கிடங்குகள் போன்றவை குறித்த தகவல்களை வழங்க முயன்றார் – ரஸ்யா அவற்றை இலக்குவைப்பதற்கு உதவுவதே அவரின் நோக்கம் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/161834

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொலை செய்வது விட்டால் போர் முடிந்து  விடும் என்ற  நிலையை போர் தாண்டி கனகாலமாச்சு.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.