-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
0
ஏராளன் · தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By பிழம்பு · பதியப்பட்டது
Published By: DIGITAL DESK 3 14 MAY, 2024 | 04:02 PM இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் பொலிஸாரின் பல்வேறு தடைகளையும் அச்சுறுத்தலையும் மீறி நடைபெற்றது. இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து மூன்றாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு மட்டக்களப்பு நகரில் விமான நிலைய வீதியில் உள்ள ஸ்ரீபரிபூர்ண விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,ஜேசுசவை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி, சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார்,தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் திருமதி ஆர்.ஜெயபிரகாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது ஆலயத்திற்கு முன்பாக கஞ்சி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் பெருமளவு புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்தனர். அங்கு வந்த மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸார் அங்கு கஞ்சி வழங்கும் செயற்பாடுகளை செய்யவேண்டாம் என்று அங்கிருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டு செல்லுமாறும் பணித்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனர். இந்த நிலையில் சுகாதார நடைமுறையினை பின்பற்றவும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகள் இன்று கஞ்சி செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியாது என மீண்டும் தடைகளை ஏற்படுத்துவதற்கு பொலிஸார் முயற்சித்த நிலையில் அங்கு பொதுச்சுகாதார பரிசோதர் ஒருவரையும் அழைத்துவந்து நிகழ்வினை தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் அங்குவந்த பொதுச்சுகாதார பரிசோதகர் சுகாதார நடைமுறைகளைப்பேணி செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு தெரிவித்ததை தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை பேணியவாறு கஞ்சி காய்ச்சும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது கஞ்சியை பரிமாறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது விமான நிலைய வீதியின் இரு மருங்கிலும் போக்குவரத்து பொலிஸார் நிறுத்தப்பட்டு வீதியில் செல்வோருக்கு கஞ்சியை பரிமாறும் செயற்பாடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கஞ்சியை பருக வாகனங்களை நிறுத்தியவர்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையிலும் பெருமளவான மக்கள் கஞ்சியை வாங்கி பருகும் நிலைமையை காணமுடிந்தது. மட்டக்களப்பில் பொலிஸாரின் தடைகளின் மத்தியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் | Virakesari.lk -
நினைவேந்தும் உரிமையை நிராகரிக்கவே முடியாது சம்பந்தன் எடுத்துரைப்பு; மூதூர் கைதுகளுக்கு கடும் கண்டனம்
By ஈழப்பிரியன் · Posted
ஐயா எப்ப எழும்பினார்? சொல்லவே இல்லை. -
By ஏராளன் · பதியப்பட்டது
Published By: RAJEEBAN 14 MAY, 2024 | 11:06 AM காசா மீதான இஸ்ரேலின் யுத்தத்திற்கான அமெரிக்காவின் ஆதரவு பாலஸ்தீனியர்களிற்கு ஏற்பட்டுள்ள தீமைகள் காரணமாக ஏற்பட்ட தார்மீக காயம் காரணமாக அமெரிக்காவின் புலனாய்வு பிரிவிலிருந்து இராஜினாமா செய்ததாக அமெரிக்க புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நவம்பரில் தனது பதவியை இராஜினாமா செய்த இராணுவ மேஜர் ஹரிசன் மான் இது குறித்து திங்கட்கிழமை தனது சகாக்களிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது தார்மீக காயம்குறித்து குறிப்பிட்டுள்ளார். எனது இராஜினாமாவிற்கான காரணங்களை அச்சம் காரணமாக நான் பல மாதங்களாக தெரிவிக்கவில்லை. தொழில்முறை விதிமுறைகளை மீறுவது, நான் பெரிதும் மதிக்கும் எனது சிரேஸ்ட அதிகாரிகளிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துவது, நான் துரோகம் செய்துவிட்டேன் என நீங்கள் கருதுவீர்கள் என பல அச்சங்களால் இராஜினாமாவிற்கான காரணத்தை முதலில் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனியர்கள் பாரியளவில் படுகொலை செய்வதற்கு காரணமான அமெரிக்காவின் கொள்கைகளை முன்னெடுக்க உதவுவது குறித்து வெட்கம் அடைந்தேன் குற்றவுணர்வினால் பாதிக்கப்பட்டேன் எனவும் ஹரிசன்மான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/183480 -
By ஈழப்பிரியன் · Posted
இதே மாதிரித் தான் இலங்கையிலும் இனப்படுகொலை நடந்தது. அதற்கு யார் பொறுப்பு சார்? -
நினைவேந்தும் உரிமையை நிராகரிக்கவே முடியாது சம்பந்தன் எடுத்துரைப்பு; மூதூர் கைதுகளுக்கு கடும் கண்டனம்
By பிழம்பு · பதியப்பட்டது
ஆர்.ராம் தமிழ் மக்கள் தங்களது உயிர்நீத்த உறவுகளை நினைவேந்துவதற்கான முழுமையான உரிமை உடையவர்கள். அது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதனை நிராகரிக்கவே முடியாது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மூதூர் சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகித்தவர்கள் இரவு நேரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கல்முனையிலும் கஞ்சி விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கருத்து வெளியிடும்போது சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வைகாசி மாதம் உணர்வுப் பூர்வமானது. அவர்கள் தமது உறவுகளை நினைவு கூருவதற்கான புனிதமான மாதமாகும். அவர்கள் போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கு முழுமையான உரித்துடையவர்கள். அவர்களின் அந்த அடிப்படை உரித்தினை யாரும் நிராகரிக்கவே முடியாது. அவ்வாறு நிராகரிப்பதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்துவம், நிராகரிப்பதும் அடிப்படைச் சட்டங்களை மீறுவதாகும். அதேநேரம், திருகோணமலை மூதூரில் தமது உறவுகளை நினைவு கூர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கல்முனையில் நினைவு கூரல் தடுக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை மனித உரிமை மீறலாகும். இவ்விதமான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன். அத்துடன், கைது செய்யப்பட்டவர்கள் தாமதமின்றி விடுவிக்கப்படுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பகிரங்கமான கோரிக்கை விடுகின்றேன். எமது மக்களின் உரிமைகளைக் கடந்த ஏழு தசாப்தமாக பறிந்து வருகின்ற நிலையில் தான் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரங்களைப் பகிருமாறு கோரிவருகின்றோம் என்றார். நினைவேந்தும் உரிமையை நிராகரிக்கவே முடியாது சம்பந்தன் எடுத்துரைப்பு; மூதூர் கைதுகளுக்கு கடும் கண்டனம் | Virakesari.lk
-
-
Our picks
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.- 1 reply
Picked By
மோகன், -
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.- 7 replies
Picked By
மோகன், -
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
narathar posted a topic in பேசாப் பொருள்,
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
- 5 replies
Picked By
மோகன்,
-
Recommended Posts