Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

”நாங்கள் சாத்தானின் பிள்ளைகளா?”: சீமானுக்கு எதிராய் கொதித்த ஜவாஹிருல்லா

Aug 01, 2023 09:39AM IST ஷேர் செய்ய : 
MMK chief Jawahirullah MH

கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அநாகரீகமாக விமர்சித்த சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 30 ஆம் தேதி மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ இலங்கை தமிழின மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளையும் பெண்களுக்கு எதிராக நடந்த அக்கிரமங்களையும் கண்கூடாக பார்த்தோம்.

எங்கோ ஒரு மூலையில் உள்ள மணிப்பூருக்காக பேசுகிறோம். அதில் நமக்கு லாபம் இல்லை. மணிப்பூரில் இருந்து யாரும் இங்கு வந்து நமக்கு ஓட்டு போட போவதில்லை. இங்கு இருக்கக் கூடிய கிறிஸ்துவர்களும் நமக்காக வாக்களிக்க போவது கிடையாது.

நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது”என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் அவர் இன்று (ஆகஸ்ட் 1) வெளியிட்டுள்ள பதிவில், “மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசும் பொழுது கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் இழிவாகப் பேசியிருப்பதும் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் மீது அமிலம் வீசுமாறு வன்முறையை தூண்டும் வகையில் உரையாற்றியிருப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுகவுக்கும் காங்கிரசுக்கும் தொடர்ந்து வாக்களித்து வருவதால் “முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகளாய் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாறிவிட்டார்கள்” என்று சீமான் பேசியுள்ளார்.

இந்த கயமைத்தனமான பேச்சு வன்மையான கண்டனத்துக்கு உரியது.

தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயலுமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

மணிப்பூரில் நடக்கின்ற வன்முறைகளுக்கு யார் காரணமோ..? யார் மௌனமாக இருந்து வன்முறைகளை ஆதரிக்கிறார்களோ.? அவர்கள் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் தங்களுடைய தாக்குதல் இலக்காக வைத்திருக்கும் பொழுது, சீமானுக்கும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தான் தாக்குதல் இலக்குகளாக இருக்கிறார்கள்.

இதுவே இவர் யாருக்காக பேசுகிறார், யாருடைய நலனுக்காக செயல்படுகிறார் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது. இத்தகைய குழப்பவாதங்களை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். சாத்தானின் பிள்ளைகள் என்ற கடுமையான, அருவருப்பான வார்த்தையை கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கும் எதிராக பயன்படுத்தி உள்ள சீமான் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.

முன்பு தாய் மதத்திற்கு திரும்புங்கள் என சங்கப்பரிவார் தொண்டர் போல் பேசியவர் சீமான். தற்போதைய அவரது சிறுபான்மை வெறுப்பு பரப்புரை மூலம் தன்னை வெளிப்படையாகவே அம்பலப்படுத்தி கொண்டுள்ளார். இத்தகைய வேடதாரிகளிடம் தமிழக மக்கள் எச்சரிகையாகவே இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

https://minnambalam.com/political-news/mmk-chief-jawahirullah-mh/

 

  • Replies 59
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

valavan

சீமானே ஒரு கிறிஸ்தவர்தான் அவர் உண்மையான பெயர் சைமன் என்று தமிழகத்தில் ஒரு பிரிவினர் கூவிக்கொண்டு இருக்கிறார்கள். அதுபோக விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் அவரை நோக்கி நெருங்கலாம் என்ற ரீதியிலேயே  அடிக்

goshan_che

இல்லை.   சில ஆயிரம் ஆண்டுகளாக படம் 1 ஐ போல் இருந்த நிலைமையை, படம் 2 ஐ போல் மாற்றுவது, படம் 1 நிலைமையையே தொடர வைக்கும் என்பதால், இப்போ படம் 3 இல் காட்டியுள்ளது போல் நடக்கிறது, கால

Justin

இந்த சீமானின் "நியாயமான" கோபம் போல, தமிழக கிறிஸ்தவர்களின், இஸ்லாமியரின் தி.மு.க மீதான ஈர்ப்பிற்கும் ஒரு "நியாயம்" இருக்குமா? உதாரணமாக, 2002 இல் குஜராத் கலவரத்தில் சில ஆயிரம் முஸ்லிம்களைக் கொன்ற ,

Posted

மணிப்பூர் பெண்கள் விவகாரம்: மனித நேய மக்கள் கட்சி பேனருக்கு எதிர்ப்பு!

மணிப்பூர் பெண்கள் விவகாரத்தை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி வைத்துள்ள பேனர் சர்ச்சையை ஏஎற்படுத்தியுள்ளது

Condemns over Manithaneya Makkal Katchi poster opposes manipur women issue
 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி இனக்கலவரம் வெடித்தது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் வெடித்த வன்முறை காரணமாக அம்மாநிலம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது.

மணிப்பூர் வன்முறையில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அம்மாநிலத்தை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் பலரும் சென்று வருகின்றனர்.

இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார்.

 

கடந்த மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

https://tamil.asianetnews.com/tamilnadu/condemns-over-manithaneya-makkal-katchi-poster-opposes-manipur-women-issue-ryllwn

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீமானும் இப்போது ஒரு சாதாரண மதவாத தலைவராக வெளிப்படுத்தி இருக்கிறார். அரசியல் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகின்றது. கிறிஸ்தவர்கள் , முஸ்லிம்கள் தன்னை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்த்தார். அப்படி நடக்காததால் இந்து மத வாதத்தை கையில் எடுத்திருக்கிறார். பார்ப்பம் தேர்தலில் என்ன நடக்குதென்று . அல்லது அண்ணாமலையுடன் இணைவதட்கு ஒத்திகையோ தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் அவதூறாகப் பேசினாரா சீமான்?

சீமான், பா.ஜ.க, இஸ்லாம், கிறிஸ்தவர், மணிப்பூர்

பட மூலாதாரம்,SEEMAN

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சிறுபான்மையினரை ‘சாத்தானின் பிள்ளைகள்’ என்று குறிப்பிட்டு பேசிய பேச்சு தற்போது சர்சைக்குள்ளாகியிருக்கிறது.

இது குறித்து நாம் தமிழர் கட்சி தரப்பு என்ன சொல்கிறது?

கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியது என்ன?

மணிப்பூரில் நடக்கும் சம்பவங்களைக் கண்டித்து, ஜூலை 30-ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கிறிஸ்தவர்கள் குறித்தும் இஸ்லாமியர்கள் குறித்தும் பேசிய பேச்சுதான் தற்போது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

அந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், "ஏதோ ஒரு ஓரத்தில் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதுல நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரில் இருக்கும் கிறிஸ்தவர்களும் ஓட்டுப்போடப் போறதில்லை... இங்க இருக்க கிறிஸ்தவர்களும் ஓட்டுப்போடப் போறதில்லை. நாம நினைச்சுக்கிட்டிருக்கோம், இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் தேவனின் குழந்தைகள்னு. ஆனா, அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல வருடங்களாகிவிட்டது,” என்றார்.

 

மேலும் பேசிய அவர், “இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் பெரிய பொறுப்பேற்க வேண்டியவர்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள்தான். தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் 18% வாக்குகளை தி.மு.க.வுக்குப் போட்டு, காங்கிரசுக்குப் போட்டு நாட்டை தெருவில் போட்டது இவர்கள்தான். சகிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீரழிவான நிர்வாகம் ஆகியவற்றுக்குக் காரணம் இவர்கள்தான். இவர்களிடம் போய் என்ன பாவத்தை ஒப்புக்கொடுப்பது. பாவத்தையே பெரும்பான்மையாக அவர்கள்தானே செய்கிறார்கள்?" என்று பேசினார்.

சீமான் கொடுத்த விளக்கம் என்ன?

இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "தொடர்ச்சியாக 18% வாக்கை தி.மு.க. காங்கிரசிற்குப் போடுகிறார்கள். பிறகு மாற்றம் எப்படி வரும்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாகச் சொல்வார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு செய்ய மாட்டார்கள். எங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆதங்கம் இருக்கிறது என்பதால் சொல்கிறோம். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.க. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள், நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன். நான் எவ்வளவோ பேசியிருக்கிறேன், அதையெல்லாம் விட்டுவிட்டு, சாத்தானின் பிள்ளைகள் என்று பேசிவிட்டாரே என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்," என்று குறிப்பிட்டார்.

 

வலுக்கும் கண்டனங்கள்

சீமான், பா.ஜ.க, இஸ்லாம், கிறிஸ்தவர், மணிப்பூர்
 
படக்குறிப்பு,

ஹிந்து என். ராம், டி.எம். கிருஷ்ணா, பேராசிரியர் வசந்தி தேவி, திரைப்படக் கலைஞர் ரோஹிணி ஆகியோரை உள்ளடக்கிய தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சீமானின் இந்தப் பேச்சைக் கண்டித்துள்ளது

சீமான் குறிப்பிட்டதைப் போலவே, அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பேராசிரியர் அருணன், க. உதயகுமார் ஒருங்கிணைப்பில் ஹிந்து என். ராம், டி.எம். கிருஷ்ணா, பேராசிரியர் வசந்தி தேவி, திரைப்படக் கலைஞர் ரோஹிணி ஆகியோரை உள்ளடக்கிய தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சீமானின் இந்தப் பேச்சைக் கண்டித்துள்ளது.

"இவரின் நோக்கம் தெளிவானது. பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும். அதன் மூலம் பா.ஜ.க. அணி வெற்றிபெற வேண்டும் என்பது. இந்தச் சதி வேலைக்கு இணங்காமல் சிறுபான்மையினர் தி.மு.க. அணிக்கு வாக்களிப்பதே இவரது ஆத்திரத்திற்குக் காரணம். அதனால்தான் சாத்தானின் பிள்ளைகள் என்று படுமோசமான வசவு மொழியை உதிர்த்திருக்கிறார்," என அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது.

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லாவும் இந்தப் பேச்சைக் கண்டித்திருக்கிறார். "இந்த கயமைத்தனமான பேச்சு வன்மையான கண்டனத்துக்கு உரியது. தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயலுமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்,” என்றார் அவர்.

மேலும், “மணிப்பூரில் நடக்கின்ற வன்முறைகளுக்கு மௌனமாக ஆதரிப்பவர்கள் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் தங்களுடைய தாக்குதல் இலக்காக வைத்திருக்கும் பொழுது, சீமானுக்கு கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் தான் தாக்குதல் இலக்குகளாக இருக்கிறார்கள். சாத்தானின் பிள்ளைகள் என்ற கடுமையான,அருவருப்பான வார்த்தையை கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்களுக்கும் எதிராக பயன்படுத்தி உள்ள சீமான் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்," என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 

‘சிறுபான்மையினர் தங்கள் இருப்புக்காகப் போராடுகிறார்கள்’

சீமான், பா.ஜ.க, இஸ்லாம், கிறிஸ்தவர், மணிப்பூர்

பட மூலாதாரம்,JAWAHIRULLAH FB

 
படக்குறிப்பு,

சீமான் பேசுவது சங்க பரிவாரங்களின் மொழி, என்கிறார் மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா

இது குறித்து பிபிசியிடம் பேசிய ஜவாஹிருல்லா, "சீமான் தொடர்ந்து இப்படிப் பேசி வருகிறார். ஆரம்பத்தில் சாசனம் என்ற ஒன்றை வெளியிட்டார், அதில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தனி தேசிய இனத்தினர் என்றும் அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். சிறுபான்மையினருக்கு எதிராக வேறு பல விஷயங்களையும் சொன்னார். அதற்கு எதிர்ப்பு வந்த பிறகு அதனை ஓரங்கட்டி வைத்துவிட்டார். சில மாதங்களுக்கு முன்பாக எல்லோரும் தாய் மதத்திற்குத் திரும்ப வேண்டும் என்றார். இது போன்ற மொழி சங்க பரிவாரங்களின் மொழி. இது மிக அருவெருப்பானது. இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் லஞ்சத்திற்கு எதிராக ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்கிறார். சிறுபான்மையினரின் இருப்பே கேள்விக்குரியதாக இருக்கும்போது அவர்கள் முதலில் அதற்காகத்தான் போராடுவார்கள்," என்றார்.

நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமியக் கைதிகளை விடுவிக்கவில்லை; இருந்தபோதும் இஸ்லாமியர்கள் தி.மு.கவையே ஆதரிக்கிறார்கள் என்று சீமான் கூறுவது குறித்துக் கேட்டபோது, "இஸ்லாமியச் சிறைவாசிகள் பிரச்சனையைப் பொறுத்தவரை சட்டப்பேரவைக்குள்ளும் வெளியிலும் தொடர்ந்து பேசி வருகிறோம். 2021ல் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டும் என சட்டப்பேரவையிலேயே பேசினேன். இதற்குப் பிறகு நீண்ட நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பதற்கு ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அந்த அரசாணையின் கீழ் இஸ்லாமியக் கைதிகளை விடுவிக்க வழியில்லை. இதைச் சுட்டிக்காட்டிய பிறகு, இந்த விவகாரம் குறித்து ஆராய அரசு ஆதிநாதன் குழுவை அமைத்தது. அந்தக் குழு தற்போது தனது அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. விரைவில் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம். இஸ்லாமிய சிறைக் கைதிகளுக்காக கடந்த மாதம் கோவையில் மிகப் பெரிய போராட்டத்தையும் நடத்தினோம். ஆகவே, சீமான் சொல்வது தவறு," என்கிறார் ஜவாஹிருல்லா.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும் சீமானின் பேச்சை கண்டித்திருக்கிறது. அவர் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறியிருக்கிறது.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கமும் சீமானின் பேச்சை வன்மையாகக் கண்டித்திருக்கிறது.

 

நாம் தமிழர் கட்சியின் பதில் என்ன?

சீமான், பா.ஜ.க, இஸ்லாம், கிறிஸ்தவர், மணிப்பூர்

பட மூலாதாரம்,PACKIARAJAN/TWITTER

 
படக்குறிப்பு,

அந்தக் கூட்டத்தில் பா.ஜ.கவை சீமான் கடுமையாக விமர்சித்தார், என்கிறார் நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன்

சீமானின் கருத்துக்கு எழுந்திருக்கும் எதிர்வினை குறித்து அக்கட்சியின் சர்வதேச செய்தித் தொடர்பாளர் பாக்கியராசனிடம் கேட்டபோது, சீமான் பேசியதற்கு முன்னும் பின்னும் பார்க்காமல் அவரது கருத்து புரிந்துகொள்ளப்படுகிறது என்கிறார்.

"சீமான் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் திட்டினார் என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். குறிப்பிட்ட அந்தப் பேச்சுக்கு முன்னும் பின்னும் அவர் கூறியதை இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அந்தக் கூட்டத்தில் பா.ஜ.கவை சீமான் கடுமையாக விமர்சித்தார். கலவரங்களை பா.ஜ.க. திட்டமிட்டு மேற்கொள்கிறது என்று தெரிவித்தார். பா.ஜ.க. கலவரத்தை விரும்புகிறது, அதனால் அதைச்செய்கிறது என்று சொன்னார். அமித் ஷா மணிப்பூருக்குச் சென்று, அனைத்து தொகுதிகளையும் வெல்வோம் என்று சொன்னதையடுத்து இந்தக் கலவரம் நடக்கிறது என்பதை நீண்ட நாட்களாக அவர் சொல்லிவருகிறார். அன்றைக்கும் அதைச் சொன்னார்.

“ 'அநீதிக்கு துணை போகாதீர்கள்' என இயேசுவும் நபிகளும் சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல், தவறான ஒருவருக்கு துணை போகிறீர்கள். திரும்பத் திரும்ப தி.மு.கவுக்கும் காங்கிரசுக்கும் துணையாக இருக்கிறீர்கள். சரியான ஒருவருக்கு கைகொடுப்பதில்லை என்ற பொருளில் அந்த வாசகங்களைச் சொன்னார்.

“தி.மு.கவுக்கும் காங்கிரசுக்கு வாக்களிப்பதால் என்ன நன்மை கிடைத்தது? இஸ்லாமியக் கைதிகளை விடுவிப்பதை எதிர்த்து மோசமான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்கிறது தமிழக அரசு. இப்படிச் செய்யும் தி.மு.கவை ஆதரிப்பதை எதிர்த்து கேள்விதான் கேட்க முடியும்" என்கிறார் பாக்கியராசன்.

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்துச் சீமான் பேசியவை குறித்து இதற்கு முன்பும் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன. 2013ஆம் ஆண்டில் விவிலியம் குறித்து பேசிய விவகாரம் சர்ச்சைக்குள்ளானதைக் கண்டித்து கிறிஸ்தவ அமைப்புகள், அவரைக் கைதுசெய்ய வேண்டுமெனக் கோரின. இதற்குப் பிறகு, தமிழர்கள் எல்லாம் தாய் மதமான சைவத்திற்குத் திரும்ப வேண்டும் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

https://www.bbc.com/tamil/articles/clewz1d27nno

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எப்பிடியாவது வெல்லவே வேண்டுமென்கிற desperation வரும் போது இப்படியான வேசக் கலைப்புகள் எப்படியும் வெளிவந்து விடும். இந்த விடயத்தில், அமெரிக்காவில் இருக்கும் வலதுசாரி ட்ரம்புக்கும், தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர தேசியவாதி சீமானுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

”மன்னிப்பு கேட்டால் ஓட்டு போடுவார்களா?”: சீமான்

Aug 02, 2023 22:03PM IST ஷேர் செய்ய : 
if i ask sorry you vote me seeman

இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்டால் ஓட்டு போடுவார்களா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மணிப்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து கடந்த ஜூலை 30 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் பற்றி கூறிய கருத்துகள் மற்றும் அதற்காக சீமான் பயன்படுத்திய வார்த்தைகள் சர்ச்சையானது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 2) செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்ப்பு எழுகிறது என்ற கேள்விக்கு,

“மன்னிப்பு கேட்டால் எனக்கு ஓட்டுப் போடுவார்களா? அநீதிக்கு எதிராக உருவாக்கப்பட்ட மார்கமே இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய இரண்டு சமயங்களும் தான். ஆனால் நீங்கள் அநீதிக்கு எதிராக எங்கு போராடிக் கொண்டிருக்கிறீர்கள்.

அநீதியைக் கண்டு அச்சம் கொள்ளாமல் துணிந்து எதிர்த்து போராடுகிறவன் எவனோ, அவனே உண்மையான ஜிகாத். இதை நான் சொல்லவில்லை நபிகள் நாயகம் சொன்னது.

அந்த வழியில் நின்று போராடியவர் ஒருத்தர் தமிழ்நாட்டில் இருந்தார் என்றால் எங்கள் அண்ணன் பழனி பாபா தான். மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகி விடுமா?

எனக்கு உரிமை இருக்கு, உறவு, வலி, ஆதங்கம், ஆத்திரம் இருக்கிறது. அதனால் நான் பேசினேன். யார் வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் செய்திருக்க கூடாது” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து ராஜ்கிரண் கருத்து குறித்த கேள்விக்கு, “அண்ணன் பெரியவர். ஆனால் என் வழி அவரிடம் இருக்கிறதா. சிஏஏ, என்.ஐ.ஏ என எல்லாவற்றுக்கும் என்னுடன் நின்று போராடினாரா?

முத்தலாக் தடை சட்டத்திற்கு வீதியில் நின்று போராடினாரா?. அவர் பெரியவர், அவர் மதத்தை நான் தவறாக பேசிவிட்டதாக நினைக்கிறார். அவர் முழுப்பேச்சையும் கேட்டாரா என்பது எனக்கு தெரியாது.

ஒரு மணி நேரம் என்ன பேசியுள்ளேன் என்று முழு பேச்சையும் கேட்க வேண்டும். ஒரு துண்டு காணொளியை பார்த்து விட்டு முடிவெடுக்க கூடாது. அண்ணன் என்னை திட்டுவதற்கோ கோபித்து கொள்வதற்கோ உரிமை இருக்கிறது” என்று தெரிவித்தார் சீமான்.

 

https://minnambalam.com/political-news/if-i-ask-sorry-you-vote-me-seeman-questions-today/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@Justin @Cruso

மணிப்பூரில் பெரும்பான்மை மேய்தி சமூகம். இவர்களில் பெரும்பான்மை இந்துக்கள்.

நாகா, குக்கி பழங்குடிகள் சிறுபான்மை - இவர்களில் பெரும்பான்ம கிறிஸ்தவர்.

மேய்திகள், நாகா குக்கிகளை அடிக்கிறார்கள்.

எனது விளக்கம் சரிதானே?

அப்போ ஏன் சீமான், அடிக்கும் இந்துக்களை சொல்லாமல், அடிவாங்கும் கிறிஸ்தவர்களை பார்த்து சாத்தானின் பிள்ளைகள், தீமைக்கு துணைபோவபர் என்கிறார்?

உண்மையிலே புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

@Justin @Cruso

மணிப்பூரில் பெரும்பான்மை மேய்தி சமூகம். இவர்களில் பெரும்பான்மை இந்துக்கள்.

நாகா, குக்கி பழங்குடிகள் சிறுபான்மை - இவர்களில் பெரும்பான்ம கிறிஸ்தவர்.

மேய்திகள், நாகா குக்கிகளை அடிக்கிறார்கள்.

எனது விளக்கம் சரிதானே?

அண்ணை மணிப்பூர் கலவரத்திற்கு தவறான தகவல் பரப்பல் காரணமாம்.

3 hours ago, goshan_che said:

அப்போ ஏன் சீமான், அடிக்கும் இந்துக்களை சொல்லாமல், அடிவாங்கும் கிறிஸ்தவர்களை பார்த்து சாத்தானின் பிள்ளைகள், தீமைக்கு துணைபோவபர் என்கிறார்?

உண்மையிலே புரியவில்லை.

அவர் தமிழக வாக்காளர்களில் சிறுபான்மையினர்(இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள்) தனக்கு வாக்களிக்காது திமுக விற்கு வாக்களித்தை குறித்தே பேசியிருக்கிறார். ஆனால் தமிழகத்திலுள்ள பெரும்பான்மை இந்துக்களை விமர்சிக்கவில்லை! அவர்களும் வாக்களிக்கவில்லை தானே?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

@Justin @Cruso

மணிப்பூரில் பெரும்பான்மை மேய்தி சமூகம். இவர்களில் பெரும்பான்மை இந்துக்கள்.

நாகா, குக்கி பழங்குடிகள் சிறுபான்மை - இவர்களில் பெரும்பான்ம கிறிஸ்தவர்.

மேய்திகள், நாகா குக்கிகளை அடிக்கிறார்கள்.

எனது விளக்கம் சரிதானே?

அப்போ ஏன் சீமான், அடிக்கும் இந்துக்களை சொல்லாமல், அடிவாங்கும் கிறிஸ்தவர்களை பார்த்து சாத்தானின் பிள்ளைகள், தீமைக்கு துணைபோவபர் என்கிறார்?

உண்மையிலே புரியவில்லை.

உண்மையிலே புரியவில்லையா😂!

சீமான் சப்ஐக்டை இழுத்து நிர்வாகத்தை ரென்சன் ஆக்காம விட்டுட்டு வாங்கோ, வேற திரிப்பக்கம் போலாம். !!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீமானே ஒரு கிறிஸ்தவர்தான் அவர் உண்மையான பெயர் சைமன் என்று தமிழகத்தில் ஒரு பிரிவினர் கூவிக்கொண்டு இருக்கிறார்கள். அதுபோக விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் அவரை நோக்கி நெருங்கலாம் என்ற ரீதியிலேயே  அடிக்கடி விஜய் புராணம் பாடுகிறார் சீமான். அப்போ கிறிஸ்தவரான விஜய் சாத்தானின் பிள்ளையென்றால் அவர்கூட கூட்டு சேரமாட்டாரா சீமான்?

ஆனால் இஸ்லாமியர்கள் விடயத்தில் சீமான் கூறியதில் எந்த தவறுமேயில்லை, அவர்கள் எந்த பிரச்சனையையும் தமது மதத்தை முன்னிறுத்தியே அணுகுவார்கள். பாஜக தமது மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலீடுபடுவதால் அவர்களுக்கு எதிர்ப்பை காண்பிக்கவும் தமக்கு ஆதரவான கட்சியை மத்தியிலும் மாநிலத்திலும்  ஆட்சி அமைப்பதை விரும்புகிறார்கள், 

அதற்கு அவர்கள் சப்பைக்கட்டு கட்டும் காரணம் மத சார்பின்மை இந்தியாவில் வேண்டும் அதனால் காங்கிரஸ் திமுகவை ஆதரிக்கிறோம் என்று........... என்று....மதத்தின்மேல் வெறித்தனமான  கொள்கை கொண்ட இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்,.

இவர்களின் இந்த கருத்தில் எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் ஏதாவது ஒரு அளவையியல் தெரிகிறதா?

On 1/8/2023 at 03:11, கிருபன் said:

எங்கோ ஒரு மூலையில் உள்ள மணிப்பூருக்காக பேசுகிறோம். அதில் நமக்கு லாபம் இல்லை. மணிப்பூரில் இருந்து யாரும் இங்கு வந்து நமக்கு ஓட்டு போட போவதில்லை.

இப்படி உண்மையாகவே சீமான் பேசியிருந்தால் இலங்கையில் நமக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி பேசவும்  தகுதியை இழந்துவிடுகிறார்.

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக தெருவில் இழுத்து செல்லும் காட்சியை பார்த்த உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒரு மனிதனும் அதனை எங்கோ ஒரு மூலையில் நடந்த சம்பவம் என்று எடுத்துக்கொள்ள மாட்டான், அதும் ஆதிக்கவெறிகளால் அதே துயரத்தை பலதடவை அனுபவித்துவிட்ட நாம் அது இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் நடந்த சம்பவம் என்று பார்க்க மாட்டோம்.

அண்ணா என்னை விட்டுவிடுங்கள் என்று அலறிக்கொண்டு சென்ற அந்த பெண்கள் மீதான கொடூரம்  மனிதநேயமுள்ள எவருக்கும் அது மணிப்பூர் சம்பவமல்ல மனிதர்களுக்கு ஏற்பட்ட துயரம்.

அது நீங்கலாக இஸ்லாமியர்கள் விடயத்தில் சீமானின் கருத்தின்மீது எந்தவிதமான தவறும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இஸ்லாமியர்கள் இந்தியாவில் பிறந்து வாழ்ந்து இறந்தும் போகிறார்கள்,, ஆனால் தமது மதம் சாராத இந்தியர்கள் பல லட்சம் இறந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள், கவலையும் பெரிதாக கொள்ளமாட்டார்கள்,

ஆனால் சிரியாவில் அவர்கள் மதம் சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டால் இந்தியாவில் இருந்து கண்ணீர் வடிப்பார்கள், ஊர்வலம் போவார்கள் ஊடகங்கள் அதுபற்றி செய்தி போடவில்லையென்று விபச்சார ஊடகங்கள் என்று திட்டுவார்கள்.

ஆனால் தாமும் இந்தியர்கள் என்று பிறருடன் சண்டைக்கு போவார்கள்,

ஆனால் இந்திய தேசிய கீதம் பாடமாட்டார்கள், இந்திய கொடியை தாங்கி பிடிக்க மாட்டார்கள் இந்திய போர்வீரன் ஒருவன் இறந்தால் அஞ்சலி செய்ய மாட்டார்கள். இந்தியாவில் அவர்கள் ஆட்கள் நடத்தும் குண்டுவெடிப்புகளுக்கு சிறு கண்டனம்கூட தெரிவிக்க மாட்டார்கள்  ஆனால் ஐஎஸ் ஐஎஸ் கொடியுடன் போஸ் கொடுத்து பலர் அகப்பட்டும் இருக்கிறார்கள்.

மதவாத பாஜகவை எதிர்க்க திமுகவை ஆதரிக்கிறோம் அவர்கள் ஆட்சிதான் வேண்டும் என்றார்கள், பின்பு அதே திமுக ஆட்சியில் கோயம்புதூரில் சிலிண்டர் குண்டு வைக்க பார்த்தார்கள். இவர்கள் எதற்க்குத்தான் விசுவாசம்?

தற்கால அரசியலில் எம்மை பொறுத்தவரை இந்தியா என்பது எமக்கு தேவையே இல்லாத ஆணிதான். 

ஆனால் சொந்த மண்ணை நேசிக்காத எவரும் சாத்தானின் பிள்ளைகளே அது இந்தியாவில் இருந்தாலும் சரி தமிழ் ஈழத்தில் இருந்தாலும் சரி . சீமான்  கருத்தில் பாதி எந்த விதத்திலும் தவறேயில்லை

  • Like 5
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

அண்ணை மணிப்பூர் கலவரத்திற்கு தவறான தகவல் பரப்பல் காரணமாம்.

அவர் தமிழக வாக்காளர்களில் சிறுபான்மையினர்(இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள்) தனக்கு வாக்களிக்காது திமுக விற்கு வாக்களித்தை குறித்தே பேசியிருக்கிறார். ஆனால் தமிழகத்திலுள்ள பெரும்பான்மை இந்துக்களை விமர்சிக்கவில்லை! அவர்களும் வாக்களிக்கவில்லை தானே?!

தகவலுக்கு நன்றி தம்பி.

ஓ…மணிப்பூர் கூட்டத்தில்…அந்த பிரச்சினையை பேசாமல்…. தமிழக மதச்சிறுபான்மையை காய்ச்சி எடுத்துள்ளார்.

இப்போ புரிகிறது 🙏.

நீங்கள் சொல்வது போல்,  நியாயமாக பார்த்தால் முப்பாட்டன் முருகனை எல்லாம் தூக்கி கொண்டு வித்தை காட்டியும் வாக்கு போடாத இந்துக்கள் மீதுதான் இன்னும் அதிகம் கோபபட்டிருக்க வேண்டும்.

பிகு

வாக்காளரை எமக்கு வாக்கு போட வைக்க, நான் அறிய - அவர்களை “ஷெய்தான்கே பச்சோ” என்று திட்டுவதுதான் மிகவும் வினைத்திறனான அணுகுமுறை🤣.

1 hour ago, Nathamuni said:

உண்மையிலே புரியவில்லையா😂!

சீமான் சப்ஐக்டை இழுத்து நிர்வாகத்தை ரென்சன் ஆக்காம விட்டுட்டு வாங்கோ, வேற திரிப்பக்கம் போலாம். !!

அட உண்மையாகவே குழம்பித்தான் கேட்டேன்.

இப்போ இந்த சப்ஜெக்ட்டை அதிகம் கவனிப்பதில்லை. ஆகவே அப் டேட் ஆக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, valavan said:

ஆனால் சொந்த மண்ணை நேசிக்காத எவரும் சாத்தானின் பிள்ளைகளே !

ஒரு கேள்வி?

ஈழ விடுதலைப்போராட்டம் என்று ஆரம்பித்து, மூன்று பத்தாண்டுகளுக்கு மேலாக, தமிழினத்தின் பேரெதிரியாக இருக்கும் சிங்கள அரசின் சார்பாளராக பிழைப்பினை ஓட்டும், டக்கி அங்கிள் டக்லஸ், சாத்தானின் பிள்ளையா இல்லையா? 

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கே  சீமான்  பேசுவது

மதத்தை முதன்மைப்படுத்துதல்

அல்லது மதம் சார்ந்த  கட்சிகள் ஊழல் மற்றும்  கொள்ளைகளை  கண்டும்  காணாததுமாய் திமுக  மற்றும் அதிமுக மற்றும் மத்திய  கட்சிகளுடன் சமரசம்  செய்து  அல்லது  கூட்டுச்சேர்ந்து  அவர்களுக்கு  தொடர்ந்து வாக்குப்போடல் பற்றியது

அது தான்  அவரது கோபம்

அது  நியாயமான  கோபம் தான்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, Nathamuni said:

ஒரு கேள்வி?

ஈழ விடுதலைப்போராட்டம் என்று ஆரம்பித்து, மூன்று பத்தாண்டுகளுக்கு மேலாக, தமிழினத்தின் பேரெதிரியாக இருக்கும் சிங்கள அரசின் சார்பாளராக பிழைப்பினை ஓட்டும், டக்கி அங்கிள் டக்லஸ், சாத்தானின் பிள்ளையா இல்லையா? 

மதம் என்ற ரீதியில் அடையாளமிட்டு டக்ளசை சாத்தானின் பிள்ளையென்று கூற தேவையில்லை, ஏனென்றால் அதே மதத்திலிருந்து வந்துதான் சீலனும் விக்டரும் இன்னும் பல போராளிகளும் மண்ணையும் எம் மனதையும் ஆண்டுவிட்டு போனார்கள்.  மதரீதியில் குறிப்பிடபோனால் அவர்களும் அந்த பொருளினுள் அடங்கிவிடுவார்களே.

இனம் என்ற ரீதியில் சாத்தானின் பிள்ளைகளுக்குள் டக்ளசை சேருங்கள், இனத்துக்குள் சாத்தானுகளுக்கு எந்த அனுமதியும் அளிக்க தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, valavan said:

மதம் என்ற ரீதியில் அடையாளமிட்டு டக்ளசை சாத்தானின் பிள்ளையென்று கூற தேவையில்லை, ஏனென்றால் அதே மதத்திலிருந்து வந்துதான் சீலனும் விக்டரும் இன்னும் பல போராளிகளும் மண்ணையும் எம் மனதையும் ஆண்டுவிட்டு போனார்கள்.  மதரீதியில் குறிப்பிடபோனால் அவர்களும் அந்த பொருளினுள் அடங்கிவிடுவார்களே.

இனம் என்ற ரீதியில் சாத்தானின் பிள்ளைகளுக்குள் டக்ளசை சேருங்கள், இனத்துக்குள் சாத்தானுகளுக்கு எந்த அனுமதியும் அளிக்க தேவையில்லை.

நன்றி 
அதேவேளை அவர் கிறிஸ்தவர் அல்ல. சைவர்.
இயக்க பெயராகவே டக்லஸ் இருந்தது, இருக்கிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Nathamuni said:

நன்றி 
அதேவேளை அவர் கிறிஸ்தவர் அல்ல. சைவர்.
இயக்க பெயராகவே டக்லஸ் இருந்தது, இருக்கிறது.

சீமான் உரை சம்பந்தமான திரியில் நீங்கள் அந்த கேள்வியை கேட்டதால் டக்ளசும் கிறிஸ்தவர் என நினைத்தேன், நீங்கள் சொல்லும்வரை டக்ளஸ் ஒரு சைவராக நான் அறிந்திருக்கவேயில்லை, அவரின் பின்புலத்தை அறியும் ஆர்வம் எப்போதும் இருந்ததில்லை .

தகவலுக்கு நன்றி நாதம்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, விசுகு said:

இங்கே  சீமான்  பேசுவது

மதத்தை முதன்மைப்படுத்துதல்

அல்லது மதம் சார்ந்த  கட்சிகள் ஊழல் மற்றும்  கொள்ளைகளை  கண்டும்  காணாததுமாய் திமுக  மற்றும் அதிமுக மற்றும் மத்திய  கட்சிகளுடன் சமரசம்  செய்து  அல்லது  கூட்டுச்சேர்ந்து  அவர்களுக்கு  தொடர்ந்து வாக்குப்போடல் பற்றியது

அது தான்  அவரது கோபம்

அது  நியாயமான  கோபம் தான்.

இந்த சீமானின் "நியாயமான" கோபம் போல, தமிழக கிறிஸ்தவர்களின், இஸ்லாமியரின் தி.மு.க மீதான ஈர்ப்பிற்கும் ஒரு "நியாயம்" இருக்குமா?

உதாரணமாக, 2002 இல் குஜராத் கலவரத்தில் சில ஆயிரம் முஸ்லிம்களைக் கொன்ற , "மாடு சாப்பிட்டார்கள்" என்ற சந்தேகத்தில் சில முஸ்லிம்களை அடித்தே கொல்ல ஊக்குவித்த கட்சியை, தற்போது மணிப்பூரில் சிறு பான்மைக் கிறிஸ்தவர்கள் கொண்ட சமூகம் பாதிக்கப் படும் போது மௌனம் காக்கும் கட்சியை இஸ்லாமியரும் , கிறிஸ்தவர்களும் தமிழகத்தில் காலூன்ற விடாமல் திமுக பக்கம் சார்ந்திருக்கிறார்கள் என்பது அவர்களது "நியாயமாக" இருந்தால் என்ன பதில் சொல்வீர்கள்?

"உங்களுக்கு அடி விழுந்தாலும் பரவயில்லை, நீங்கள் ஊழலை எதிர்த்து வன்முறையைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பீர்களா?"😂

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Justin said:

இந்த சீமானின் "நியாயமான" கோபம் போல, தமிழக கிறிஸ்தவர்களின், இஸ்லாமியரின் தி.மு.க மீதான ஈர்ப்பிற்கும் ஒரு "நியாயம்" இருக்குமா?

உதாரணமாக, 2002 இல் குஜராத் கலவரத்தில் சில ஆயிரம் முஸ்லிம்களைக் கொன்ற , "மாடு சாப்பிட்டார்கள்" என்ற சந்தேகத்தில் சில முஸ்லிம்களை அடித்தே கொல்ல ஊக்குவித்த கட்சியை, தற்போது மணிப்பூரில் சிறு பான்மைக் கிறிஸ்தவர்கள் கொண்ட சமூகம் பாதிக்கப் படும் போது மௌனம் காக்கும் கட்சியை இஸ்லாமியரும் , கிறிஸ்தவர்களும் தமிழகத்தில் காலூன்ற விடாமல் திமுக பக்கம் சார்ந்திருக்கிறார்கள் என்பது அவர்களது "நியாயமாக" இருந்தால் என்ன பதில் சொல்வீர்கள்?

"உங்களுக்கு அடி விழுந்தாலும் பரவயில்லை, நீங்கள் ஊழலை எதிர்த்து வன்முறையைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பீர்களா?"😂

 

இந்த காரணத்துக்காகத்தான் என்றால் சரி  தான்

ஆனால்  மறுபக்கமாக  திமுகவின்  ஊழல்களை  கண்டும் காணாமல் இருத்தல்  எப்படி நியாயமாகும்??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, விசுகு said:

 

இந்த காரணத்துக்காகத்தான் என்றால் சரி  தான்

ஆனால்  மறுபக்கமாக  திமுகவின்  ஊழல்களை  கண்டும் காணாமல் இருத்தல்  எப்படி நியாயமாகும்??

தமிழகத்தில் , திமுக மட்டும் தான் ஊழல் செய்யும் கட்சியா? ஊழல் என்ற அளவுகோலை மட்டும் வைத்து இந்தியாவில் எந்த அரசியல் கட்சியையாவது கறுப்பு, வெள்ளை எனப் பிரித்து விட முடியுமா?

இன்னொரு பக்கம்: யாழ் களத்திலும் சரி, அதற்கு வெளியேயும் சரி, இப்போது "மோடி அரசை வைத்து ஈழத்தமிழர் தம் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்" என்ற வாதம் இருக்கிறது.

அப்ப மோடி அரசு இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும் செய்த, செய்யும் வன்முறையை, தீவிர மத துவேசத்தைக் கண்டும் காணாத நிலை தானே?

கண்டும் காணாமல் இருத்தல் என்பதை விட இங்கே சிறுபான்மையினர் தங்கள் பாதுகாப்பிற்கு யார் உத்தரவாதம் தருகிறார்கள் என்பதையே பார்க்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ளாமல், தனக்கு வாக்கு விழவில்லை என்ற ஒரு ஏமாற்ற உணர்வை மட்டும் வைத்துக் கொண்டு பேசும் ஒரு அரசியல் வாதிக்கு ஊழல் ஒழிப்பில் அக்கறை இருக்குமென நான் நம்பவில்லை!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, Justin said:

தமிழகத்தில் , திமுக மட்டும் தான் ஊழல் செய்யும் கட்சியா? ஊழல் என்ற அளவுகோலை மட்டும் வைத்து இந்தியாவில் எந்த அரசியல் கட்சியையாவது கறுப்பு, வெள்ளை எனப் பிரித்து விட முடியுமா?

இன்னொரு பக்கம்: யாழ் களத்திலும் சரி, அதற்கு வெளியேயும் சரி, இப்போது "மோடி அரசை வைத்து ஈழத்தமிழர் தம் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்" என்ற வாதம் இருக்கிறது.

அப்ப மோடி அரசு இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும் செய்த, செய்யும் வன்முறையை, தீவிர மத துவேசத்தைக் கண்டும் காணாத நிலை தானே?

கண்டும் காணாமல் இருத்தல் என்பதை விட இங்கே சிறுபான்மையினர் தங்கள் பாதுகாப்பிற்கு யார் உத்தரவாதம் தருகிறார்கள் என்பதையே பார்க்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ளாமல், தனக்கு வாக்கு விழவில்லை என்ற ஒரு ஏமாற்ற உணர்வை மட்டும் வைத்துக் கொண்டு பேசும் ஒரு அரசியல் வாதிக்கு ஊழல் ஒழிப்பில் அக்கறை இருக்குமென நான் நம்பவில்லை!

 

உங்கள் கருத்து  சரியானதே

அதேவேளை சீமான் சொல்வதும்  தொடர்ந்து  தமிழகத்தில் நடப்பதே.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

``சீமானின் இந்தப் பேச்சு, பாசிச பாஜக - ஆர்எஸ்எஸ் குரலாக ஒலிக்கிறது” - திருமுருகன் காந்தி காட்டம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்மையில் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இந்த நிலையில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது சீமான் கருத்து தொடர்பாகப் பேசிய திருமுருகன் காந்தி, ``நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், `இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன’ என்று சிறுபான்மை மக்களைக் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார் சீமான். மேலும், `இந்த நாட்டில் நடைபெற்றிருக்கும் அநீதி அக்கிரமங்களுக்குப் பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமிய - கிறிஸ்துவ மக்கள்தான்’ என நாட்டில் நெருக்கடியைச் சந்தித்துவரும் சிறுபான்மை சமூகத்தவர்கள்மீது அபாண்டமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். சீமானின் இந்தப் பேச்சு, நாட்டில் சிறுபான்மை சமூகத்தவர்களை ஒடுக்கிவரும் பாசிச பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் குரலாக ஒலிக்கிறது. இதை மே 17 இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தனக்கு வாக்கு செலுத்தாத இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் சாத்தானின் பிள்ளை எனக் கூறும் சீமான், தனக்கு வாக்களிக்காத இந்து மக்களை எதனின் பிள்ளை என்று அழைப்பார்?” என்று கேள்வி எழுப்பினார்.

 
 
 
சீமான்
 
சீமான்

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில்,  "மணிப்பூரில் சிறுபான்மை பழங்குடி கிறிஸ்துவர்கள் மீதும், ஹரியானாவில் சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீதும் ஆளும் ஒன்றிய - மாநில பா.ஜ.க அரசுகளின் ஒத்துழைப்புடன் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் வன்முறைகளை நிகழ்த்தி வரும் இந்த வேளையில், ஒடுக்கும் பாசிச பயங்கரவாதிகளைக் கண்டித்தும் ஒடுக்கப்படும் சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு ஆதரவாகவும் பேசக்கூடிய நேரத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களே குற்றவாளியாக்கிய சீமானின் பேச்சு அரசியல் நாகரிகமற்ற செயலாகும்.

சீமான் தனது பேச்சை நியாயப்படுத்தும் விதமாக தான் மன்னிப்புக் கேட்டால் இஸ்லாமிய - கிறிஸ்துவ மக்கள் தனக்கு வாக்கு செலுத்திவிடுவார்களா என்று எதிர் கேள்வி கேட்டு இஸ்லாமிய, கிறிஸ்துவ சமூகத்தவர்களை மீண்டும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். தனக்கு வாக்களிக்கவில்லை என்றால், அவர்களின் பிரச்னைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது வெறுப்பை விதைக்கும் செயலாகும். வாக்களிப்பது, ஜனநாயகக் கடமையாகக் கருதும் மக்கள், அந்த வாக்கு யாருக்குச் செலுத்துவது என்ற ஜனநாயக உரிமையும், அப்படியாகச் செலுத்தப்படும் வாக்கை வெல்வதற்கான ஜனநாயக வழிமுறைகளைக் கட்சிகளுக்கும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. தனக்கு வாக்களிக்காத காரணத்தினால் ஒரு குறிப்பிட்ட சாராரை இழிவுபடுத்திப் பேசுவது ஜனநாயக விரோதச் செயலாகும்" எனக் கண்டித்தார் 

``சீமானின் இந்தப் பேச்சு, பாசிச பாஜக - ஆர்எஸ்எஸ் குரலாக ஒலிக்கிறது” - திருமுருகன் காந்தி காட்டம்
 

மேலும், ``தன்னை தமிழ் தேசியவாதி என்று கூறிக்கொள்ளும் சீமான், தமிழ் தேசியத்தின் அங்கமாக இருக்கும் சிறுபான்மை இஸ்லாமிய, கிறிஸ்துவ சமூகத்தினரை தமிழ் தேசியத்திலிருந்து விலக்கிவைப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. தமிழர்களை சாதி - மத அடிப்படையில் பிரித்துப் பேசுவதும் தமிழர்களின் ஒரு பகுதியை தேர்தல் அரசியல் நலனுக்காகப் புறக்கணிப்பதும் தமிழ் தேசியம் ஆகாது. இது போன்ற செயல்களை தமிழ் தேசியத்தில் வகைப்படுத்த முடியாது. இதை தமிழ் தேசியவாதிகளாக நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம்" என்று தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

``சீமானின் இந்தப் பேச்சு, பாசிச பாஜக - ஆர்எஸ்எஸ் குரலாக ஒலிக்கிறது” - திருமுருகன் காந்தி காட்டம்| May 17 organization coordinator Thirumurugan Gandhi slams seeman - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, விசுகு said:

ஆனால்  மறுபக்கமாக  திமுகவின்  ஊழல்களை  கண்டும் காணாமல் இருத்தல்  எப்படி நியாயமாகும்??

தமிழக வரலாற்றில் மிகவும் அதிகமான ஊழல் செய்து நீதிமன்றால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி  ஜெயலலிதாவை ஆதரித்து வாக்கு கேட்டார் சீமான். ஊழல் குற்றம் நிருபிக்கப்பட்ட  குற்றவாளியான சசிகலாவை நேரில் சந்தித்து அவருக்கும் எடப்பாடிக்கும் இடையிலான பிரச்சனைகளை தீர்கக தானே தூது போவதாகவும் மீண்டும் அவர் அரசியலில் இயங்க  ஊக்கப்படுத்திய சீமான் ஊழலுக்கு எதிரானவர் என்பதை அரசியல் கற்றுக்குட்டி கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  

ஜனநாயக அரசியலில் தாம் விரும்பிய கட்சிக்கு வாக்களிக்கும் மக்களின் உரிமையை கூட அங்கீகரிக்காது தனக்கு வக்களிக்காத தனது எதிர்க்கட்சிக்கு  வாக்களிக்கும் மக்களை “சாத்தான்கள்” என்று புழுதி வாரி திட்டுபவர் நிச்சயமாக ஒரு சிறந்த தலைவர் இல்லை. 

 

54 minutes ago, Justin said:

தமிழகத்தில் , திமுக மட்டும் தான் ஊழல் செய்யும் கட்சியா? ஊழல் என்ற அளவுகோலை மட்டும் வைத்து இந்தியாவில் எந்த அரசியல் கட்சியையாவது கறுப்பு, வெள்ளை எனப் பிரித்து விட முடியுமா?

உண்மை. இந்திய இலங்கை  அரசியலில் ஊழல் செய்யாதவன் அதற்கு  சான்ஸ் இன்னும் கிடைக்காதவன் மட்டுமே என்பதே தற்போதைய நிலை.  

Edited by island
எழுத்து பிழை திருத்தம்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீமான் தலைமையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 

51 நிமிடங்களைக் கொண்ட இந்தக் காணொளி சீமானுடைய பேச்சு.
என்ன பேசியுள்ளார் என்பதை புரிந்து கொள்ள உதவும் என்பதால் இணைத்துள்ளேன்.

நேரம் உள்ளோர் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 1/8/2023 at 09:11, கிருபன் said:

நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று.

சீமான் கொமடி விடுகிறார். எனக்கு தெரிந்து யாரும் அப்படி நினைத்து  கொண்டு இருக்கவில்லை.  புதிதாக மதம் மாறி கொண்ட தமிழர் மட்டும்  நான் இப்போது தேவனின் பிள்ளையாகிவிட்டேன் , இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தன்னை தானே விளம்பரம் செய்வார்கள்

Edited by விளங்க நினைப்பவன்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.