Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஆண்களின் நிர்வாணமும் அழகுதான்' – புகைப்படக் கலையில் மாற்றம் கொண்டுவரும் பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நிர்வாண புகைப்பட கலைஞர்
 
படக்குறிப்பு,

புகைப்படக் கலையிலும், ‘ஈரோடிக்’ எனப்படும் பாலியல் ஈர்ப்பு சார்ந்த கலையிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்புவதாகச் சொல்கிறார் யூஷி லீ.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், எலனர் வொய்சார்ட், அன்னா ப்ரெஸ்ஸானின்
  • பதவி, பிபிசி ரீல்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஒரு சிறிய அறையில் ஆறு ஆண்கள் படுத்திருக்கின்றனர்.

ஒருவர் அவர்கள்மீது ரோஜா இதழ்களைத் தூவுகிறார்.

ஒரு பெண் காமிரா மூலம் இந்தக் காட்சியைப் பார்த்து, நிர்வாணமாகப் படுத்திருக்கும் ஆண்களின் ‘போஸ்’களில் சில மாற்றங்களைச் செய்யச் சொல்கிறார்.

ஒரு மென்மையான, இணக்கமான ‘ஈரோடிக்’ (erotic) ஃபோட்டோ ஷூட் நடந்துகொண்டிருக்கிறது.

ஆனால் ஒரு முக்கியமான வித்தியாசம்.

ஆண்கள் நிர்வாணமாக இருக்கின்றனர். ஆடைகளணிந்த பெண் ஒருவர் அவர்களைப் புகைப்படமெடுக்கிறார்.

இந்தப் புகைப்படக் கலைஞரின் பெயர் யூஷி லீ. இவர் சீனாவில் பிறந்தவர். இப்போது லண்டனில் வசிக்கிறார்.

இவர், புகைப்படக் கலையிலும், ‘ஈரோடிக்’ எனப்படும் பாலியல் ஈர்ப்பு சார்ந்த கலையிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்புவதாகச் சொல்கிறார்.

பெண்கள், நிர்வாணம், பாலியல், புகைப்படக் கலை
 
படக்குறிப்பு,

யூஷி லீ, தனது கலைப்படைப்புகள் பாலினம், பாலியல் ஈர்ப்பு, மற்றும் பாலியல் வேட்கை ஆகியவற்றைப் பற்றிப் பேசுவதாகச் சொல்கிறார்

‘ஆண்களின் உடல்களைப் பாலியல் ஈர்ப்பின் மையமாகப் பார்க்கிறேன்’

யூஷி லீ, தனது கலைப்படைப்புகள் பாலினம், பாலியல் ஈர்ப்பு, மற்றும் பாலியல் வேட்கை ஆகியவற்றைப் பற்றிப் பேசுவதாகச் சொல்கிறார்.

தனது புகைப்படங்கள் ஆண்களின் உடலை பாலியல் ஈர்ப்பின் மையமாகப் பாவிக்கின்றன என்கிறார் லீ.

பலகாலமாக சமூகம் ‘பெண்கள் அழகாக இருக்க வேண்டும்’ என்றே சொல்லி வந்திருக்கிறது. அதனால் நாம் இன்றளவும் பெண்களின் உடல்தான் அழகானது என்று சிந்திக்கிறோம். ஆண் உடலைவிட பெண் உடலையே அதிகம் ரசிக்கிறோம்," என்கிறார் லீ.

பெண்கள், நிர்வாணம், பாலியல், புகைப்படக் கலை
 
படக்குறிப்பு,

தனது புகைப்படங்கள் ஆண்களின் உடலை பாலியல் ஈர்ப்பின் மையமாகப் பாவிக்கின்றன என்கிறார் லீ.

ஆனால் விலங்குகளைப் பார்த்தோமெனில், ஆண் விலங்குகளே அழகானவையாக உள்ளன. சிங்கங்கள், மயில்கள் போல," என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், “பாலியல் உணர்வு சார்ந்த ‘ஈரோடிக்’ கலைகளில் ஆண் உடல்கள் மிகக் குறைவாகவே பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது. சமநிலை இல்லாத இந்த நிலையை நான் உணர்ந்தேன். ஆண்களின் நிர்வாண உடல் இன்னும் விலக்கப்பட்டதாகவே இருக்கிறது.”

‘ஆண்கள் தாம் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டியதைப் பற்றிச் சிந்திப்பதில்லை’

பெண்கள், நிர்வாணம், பாலியல், புகைப்படக் கலை
 
படக்குறிப்பு,

இந்தப் புகைப்படக் கலைஞரின் பெயர் யூஷி லீ. இவர் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர். இப்போது லண்டனில் வசிக்கிறார்

பல நூற்றாண்டுகளாக ஆண் ஓவியர்களும் ஆண் புகைப்படக் கலைஞர்களும் பெண்களை நிர்வாணமாக வரைந்தும் புகைப்படமெடுத்தும் வந்துள்ளனர் என்று கூறும் லீ, அந்தப் போக்கை தான் மாற்ற விழைவதாகக் கூறுகிறார்.

“இப்போது நான் தான் காமிராவை இயக்குபவள். நான் என்ன விரும்புகிறேனோ அதை வெளிப்படுத்துகிறேன்,” என்கிறார் லீ.

டிண்டர் போன்ற டேட்டிங் செயலியில் சில ஆண்கள் தங்கள் அரை நிர்வாண செல்ஃபிகளைப் பதிவேற்றம் செய்வது வழக்கம். ஆனால் அவை தன்னை ஈர்க்கவில்லை என்கிறார் லீ. “ஆண்கள் எப்போதும் எப்படிக் கவர்ச்சிகரமாக இருப்பது என்பதைப்பற்றிச் சிந்திப்பதில்லை போலும்,” என்கிறார் அவர்.

இப்போதும், தன்னுடன் பணியாற்றும் ஆண் மாடல்களுக்குப், பாலியல் இச்சை தோன்றும் வகையில் எப்படிப் போஸ் செய்வது என்று தெரிவதில்லை என்கிறார் லீ. “ஆண்கள் தங்களைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. அவர்கள் தங்களைக் எப்படிக் கவர்ச்சிகரமானவர்களாக வைத்திருப்பது என்று சிந்திப்பதில்லை,” என்கிறார்.

‘எனக்கான அதிகாரத்தை நானே எடுத்துக்கொள்கிறேன்’

பெண்கள், நிர்வாணம், பாலியல், புகைப்படக் கலை
 
படக்குறிப்பு,

“இப்போது நான் தான் காமிராவை இயக்குபவள். நான் என்ன விரும்புகிறேனோ அதை வெளிப்படுத்துகிறேன்,” என்கிறார் லீ.

தாம் எடுக்கும் புகைப்படங்களில், ஆண்களை இயற்கையாக, மென்மையானவர்களாகக் காட்ட விரும்புவதாகக் கூறுகிறார் லீ.

“எனது புகைப்படங்கள் எனது இச்சைகளுக்குக் காட்சி வடிவம் கொடுக்க ஒரு வழிமுறை,” என்கிறார் அவர்.

ஆனால், இது பாலியல் சார்ந்த இச்சை மட்டுமல்ல என்கிறார் அவர். “இது அதிகாரத்திற்கான வேட்கையும் கூட. நான் அதிகாரம் செலுத்துபவளாக இருக்க விரும்புகிறேன்,” என்கிறார் அவர்.

சில புகைப்படங்களில் யூஷி லீ தன்னையும் இணைத்துக்கொள்கிறார். இது ஒரு புகைப்படத்துக்கும் அதைப் பார்ப்பவர்களுக்கும் உள்ள உறவை மேலும் சிக்கலாக்கும் முயற்சி என்கிறார்.

இது தனது இன அடையாளத்தைப் பற்றிய சமூகக் கட்டமைப்புகளுக்கு தனது எதிர்வினை என்றும் சொல்கிறார் அவர். “நான் சீனாவில் இருந்து வருகிறேன். பொதுவாக மேற்குலகில், ஆசியப் பெண்கள் சிறிய, சாதுவான, ஆனால் கவர்ச்சியானவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்,” என்கிறார் அவர்.

நிர்வாண ஆண் மாடல்கள் என்ன சொல்கிறார்கள்?

பெண்கள், நிர்வாணம், பாலியல், புகைப்படக் கலை
 
படக்குறிப்பு,

பெண்கள் ஆண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது ஆண்களுக்குத் தெரிவதில்லை, என்கிறார் நிர்வாண மாடலான அலாஸ்டர் கிரஹாம்

பெண்கள் ஆண்களிடம் அவர்களது படத்தை அனுப்பச் சொல்லும் பொது என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது ஆண்களுக்குத் தெரிவதில்லை, என்கிறார் நிர்வாண மாடலான அலாஸ்டர் கிரஹாம்.

“ஒரு பெண் ஆண்களிடம் அவனது புகைப்படம் அனுப்பச்சொல்லிக் கேட்டால், உடனே ஆண்கள் தங்கள் ஆணுறுப்பின் படத்தையே அனுப்புகிறார்கள். எனது கை, கால்களின் படத்தை அனுப்பி என்ன ஆகப்போகிறது?” என்று கேட்கின்றனர்.

மற்றொரு நிர்வாண மாடலான எம்மனுவல் அடெனேயே, தன்னுடைய வெளிப்புறத் தோற்றத்தை தன்னுடைய அழகு என்று எப்பொதும் நினைத்ததில்லை என்கிறார். “நான் எப்போதும் தோற்றத்தைவிடச் செயல்பாடுகளே முக்கியம் எனும் கொள்கை உடையவன்,” என்கிறார்.

“நான் ஒரு காரின் தோற்றமாக இருப்பதைவிடவும் அதன் எஞ்சினாக இருக்கவே விரும்பிகிறேன். ஆண்களின் உடலை ரசனைக்கான கருவியாக அல்லாமல் பயன்பட்டுக்கான கருவியாகவெ பார்த்திருக்கிறேன்,” என்கிறார் அடெனேயே.

தொடர்ந்து பாலியல் இச்சைக்கான பொருளாகவே பார்க்கப்படாமல் இருப்பது ஆண்களை தைரியமானவர்களாக மாற்றுகிறது என்கிறார் கிரஹாம். “ஆனால் ஆண்கள் அப்படிப்பட்ட கவனத்தையும் ஈர்க்க வேண்டும்,” என்கிறார் அவர்.

நீங்கள், உங்கள் உடலைக் குறித்த விழிப்புணர்வோடு இருந்தால், நீங்கள் உங்கள் உடலைக் காதலித்தால், நீங்கள் அழகானவராக உணர்ந்தால், அதை இந்த உலகத்தோடும் பகிர்ந்து கொள்வீர்கள், நீங்கள் ஒரு உணர்வுமிக்க நபராக மாறுவீர்கள் என்கிறார் கிரஹாம்.

ஆண்கள் போகப் பொருள் ஆக்கப்படுகிறார்களா?

பெண்கள், நிர்வாணம், பாலியல், புகைப்படக் கலை
 
படக்குறிப்பு,

நிர்வாண மாடலான எம்மனுவல் அடெனேயே, தன்னுடைய வெளிப்புறத் தோற்றத்தை தன்னுடைய அழகு என்று எப்பொதும் நினைத்ததில்லை என்கிறார்

யூஷி லீ எடுக்கும் புகைப்படங்கள் ராப் (Rap) இசை வீடியோக்களுக்கு நேர் எதிரானவை என்கிறனர் அவரது ஆண் நிர்வாண மாடல்கள்.

ராப் இசை வீடியோக்களில், ஒரு ஆண் பாடகரைச் சுற்றியும் அரை நிர்வாணப் பெண்கள் நடனமாடுவர். “இங்கு நாம் மறுபக்கத்தில் இருக்கிறோம்,” என்கிறார் அடெனேயே.

ஆனால் லீயின் படங்கள் ஆண்களை போகப் பொருட்களாகச் சித்தரிக்கின்றனவா எனற கேள்வியும் எழுகிறது.

இதற்கு அவரது ஆண் மாடல்கள், இது தங்கள் சம்மதத்துடனே நடக்கிறது என்கின்றனர். மேலும், லீ தங்களை மிகவும் மரியாதையாக நடத்துவதாகவும் கூறுகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c72wwwvgw5do

  • கருத்துக்கள உறவுகள்

வர வர என்னத்தையெல்லாம்  ஆராய்ச்சி பண்ணுறாங்க @nedukkalapoovan இதை கேட் க மாட்டீங்களா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

வர வர என்னத்தையெல்லாம்  ஆராய்ச்சி பண்ணுறாங்க @nedukkalapoovan இதை கேட் க மாட்டீங்களா

போட்டோ ஷூட்டிற்கு ஒரு சிங்கம் களமிறங்கிடுச்சு!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

போட்டோ ஷூட்டிற்கு ஒரு சிங்கம் களமிறங்கிடுச்சு!

அப்படியில்லை ஆண்களுக்கென்றால் உடன ஓடி வந்து உள்ள புகுந்து உழக்கிவிட்டு போவார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படியில்லை ஆண்களுக்கென்றால் உடன ஓடி வந்து உள்ள புகுந்து உழக்கிவிட்டு போவார்

சரி சரி அமைதியா போவம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெண்ணாவது துணிந்து ஆண்களின் கம்பீரமான, கட்டுமஸ்தான அழகையெல்லாம் வெளியுலகிற்கு எடுத்துக்கொண்டு வருகிறாவே அதற்குப் பாராட்டுக்கள்........!  👍

கனடாவில், ஒன்ராரியோ மாகாணத்தில், விற்பி எனும் சிற்றூரில் இவருக்கு போஸ் கொடுப்பதுக்கு ஒரு ஆண் தயாராக இருக்கின்றார் என்று சொல்லிக் கொண்டு.....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

கனடாவில், ஒன்ராரியோ மாகாணத்தில், விற்பி எனும் சிற்றூரில் இவருக்கு போஸ் கொடுப்பதுக்கு ஒரு ஆண் தயாராக இருக்கின்றார் என்று சொல்லிக் கொண்டு.....

மணி முக்கியம் தெரியனும்😁

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வர வர என்னத்தையெல்லாம்  ஆராய்ச்சி பண்ணுறாங்க @nedukkalapoovan இதை கேட் க மாட்டீங்களா

லண்டனில் இருந்து நெடுக்கர் போறதைவிட

ஏற்கனவே கனடாவில் தயாராக உள்ள @நிழலி யை உங்க கண்ணுக்கு தெரியலையா?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வர வர என்னத்தையெல்லாம்  ஆராய்ச்சி பண்ணுறாங்க @nedukkalapoovan இதை கேட் க மாட்டீங்களா

என்ன ஒரு பாலில் மேல தொங்குது.. இன்னொரு பாலில் கீழ தொங்குது. அதை எப்படி சுத்தி சுத்தி படமெடுத்துப் போட்டாலும்.. தொங்கிறது.. தொங்காததுகள் தான் தெரிந்துவிட்டுப் போகப் போகுது. விட்டுத்தள்ளுங்க. நமக்கு எல்லாமே உயிரியல் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2023 at 09:02, ஏராளன் said:

இப்போது லண்டனில் வசிக்கிறார்

ஒண்டேரியாவில் இருந்து ஓலமிட்டாலும்…

சான்பிராஸ்சிஸ்கோவில் இருந்து சாபமிட்டாலும்….

யூனிவர்ஸ்சுக்கு தெரியும் பெண்கள் மயங்கும் ஆணழகன் எங்கே உள்ளார் என்று🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

கனடாவில், ஒன்ராரியோ மாகாணத்தில், விற்பி எனும் சிற்றூரில் இவருக்கு போஸ் கொடுப்பதுக்கு ஒரு ஆண் தயாராக இருக்கின்றார் என்று சொல்லிக் கொண்டு.....

அந்த புள்ள பயப்படாம இருக்கணும் ஆண்டவரே 

15 hours ago, நந்தன் said:

மணி முக்கியம் தெரியனும்😁

எந்த மணியை சொல்கிறாரோ தெரியலயே😛

15 hours ago, ஈழப்பிரியன் said:

லண்டனில் இருந்து நெடுக்கர் போறதைவிட

ஏற்கனவே கனடாவில் தயாராக உள்ள @நிழலி யை உங்க கண்ணுக்கு தெரியலையா?

அதாவது நெடுக்கர் விவரமானவர் அலசி ஆராய்ஞ்சு தான் அடுத்த கட்டத்திற்கு நகர்வார் 

நிழலி அவரே வந்து ஆஜராகி உள்ளார் அப்ப போட்டோவையும் இணைப்பார் இணைத்தவுடன் திரிக்கு பூட்டு போட வேண்டியது தான்

9 hours ago, nedukkalapoovan said:

என்ன ஒரு பாலில் மேல தொங்குது.. இன்னொரு பாலில் கீழ தொங்குது. அதை எப்படி சுத்தி சுத்தி படமெடுத்துப் போட்டாலும்.. தொங்கிறது.. தொங்காததுகள் தான் தெரிந்துவிட்டுப் போகப் போகுது. விட்டுத்தள்ளுங்க. நமக்கு எல்லாமே உயிரியல் தான். 

விவரமான ஆளுயா 😛

6 hours ago, goshan_che said:

ஒண்டேரியாவில் இருந்து ஓலமிட்டாலும்…

சான்பிராஸ்சிஸ்கோவில் இருந்து சாபமிட்டாலும்….

யூனிவர்ஸ்சுக்கு தெரியும் பெண்கள் மயங்கும் ஆணழகன் எங்கே உள்ளார் என்று🤣

இதுக்குள்ள இது வேறயா 😛😛

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஒண்டேரியாவில் இருந்து ஓலமிட்டாலும்…

சான்பிராஸ்சிஸ்கோவில் இருந்து சாபமிட்டாலும்….

யூனிவர்ஸ்சுக்கு தெரியும் பெண்கள் மயங்கும் ஆணழகன் எங்கே உள்ளார் என்று🤣

எனக்கும் தெரியுது.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2023 at 13:09, ஏராளன் said:

போட்டோ ஷூட்டிற்கு ஒரு சிங்கம் களமிறங்கிடுச்சு!

நானும் ரெடி🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதாவது நெடுக்கர் விவரமானவர் அலசி ஆராய்ஞ்சு தான் அடுத்த கட்டத்திற்கு நகர்வார் 

நிழலி அவரே வந்து ஆஜராகி உள்ளார் அப்ப போட்டோவையும் இணைப்பார் இணைத்தவுடன் திரிக்கு பூட்டு போட வேண்டியது தான்

தயவு செய்து இதை கலையாக பாருங்கோ.

மணியாக பார்க்காதீங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2023 at 09:35, தனிக்காட்டு ராஜா said:

வர வர என்னத்தையெல்லாம்  ஆராய்ச்சி பண்ணுறாங்க @nedukkalapoovan இதை கேட் க மாட்டீங்களா

On 2/8/2023 at 18:19, நிழலி said:

கனடாவில், ஒன்ராரியோ மாகாணத்தில், விற்பி எனும் சிற்றூரில் இவருக்கு போஸ் கொடுப்பதுக்கு ஒரு ஆண் தயாராக இருக்கின்றார் என்று சொல்லிக் கொண்டு.....

15 hours ago, goshan_che said:

ஒண்டேரியாவில் இருந்து ஓலமிட்டாலும்…

சான்பிராஸ்சிஸ்கோவில் இருந்து சாபமிட்டாலும்….

யூனிவர்ஸ்சுக்கு தெரியும் பெண்கள் மயங்கும் ஆணழகன் எங்கே உள்ளார் என்று🤣

4 hours ago, உடையார் said:

நானும் ரெடி🤣

யூஷி லீ க்கு மெயில் போட்டிருக்கு!
இலங்கை, கனடா, லண்டன், அவுஸ்திரேலியாவில் கம்பீரமான(உபயம் suvy அண்ணை) ஆண்கள் தயாராக இருப்பதாக, பாப்பம் இந்த சந்தர்ப்பத்திலாவது தனிக்கு ஸ்பொன்சர் விசா லண்டனுக்கு கிடைக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

இது  நமக்கு  சரிப்பட்டு வராது  ராசாக்கள்

எல்லாவற்றையும் களட்ட  சொல்லுவாவாம்

அதைக்காட்டு இதைப்பிடி  என்பாவாம்

அப்புறம் போத்திக்கொண்டு  வீட்ட போ  என்பாவாம்

நமக்கு  இது  சரிப்பட்ட வராது  ராசாக்கள்☺️

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லிஸ்டில் 4 ம் இடத்தில் இருக்கும் நாட்டுக்காரர் எல்லாரும் ரிஜெஜ்டெட். அவர்களுக்கு வாய்மட்டும் நல்ல நீளம்.

-யுஷி லீ -

https://nowpatient.com/health-news/the-member-measure#

1 hour ago, ஏராளன் said:

யூஷி லீ க்கு மெயில் போட்டிருக்கு!
இலங்கை, கனடா, லண்டன், அவுஸ்திரேலியாவில் கம்பீரமான(உபயம் suvy அண்ணை) ஆண்கள் தயாராக இருப்பதாக, பாப்பம் இந்த சந்தர்ப்பத்திலாவது தனிக்கு ஸ்பொன்சர் விசா லண்டனுக்கு கிடைக்குமா?

பிகு

இந்த நாட்டில் இப்போ இருப்போர், முன்னர் இருந்து இப்போ வேறு நாட்டில் இருப்போருக்கும் இது பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

யூஷி லீ க்கு மெயில் போட்டிருக்கு!
இலங்கை, கனடா, லண்டன், அவுஸ்திரேலியாவில் கம்பீரமான(உபயம் suvy அண்ணை) ஆண்கள் தயாராக இருப்பதாக, பாப்பம் இந்த சந்தர்ப்பத்திலாவது தனிக்கு ஸ்பொன்சர் விசா லண்டனுக்கு கிடைக்குமா?

ஆஹா அவக்கு ஒரு கடிதம் போட்டு அங்கு போய்  சூட்டிங்ல இறங்க வேண்டியதுதான்

ஒரு பதில் தான் போட்டன் திரிக்கு இப்ப எல்லோரும் லைன் கட்டுறாங்க ஆக எனக்கே முதல் உரிமை அருணாசலத்தாரை இந்தப்பக்கம் எட்டிப்பாக்க வைக்காதீர்கள் பிறகு ஓவியம் கீறினார் சோலி முடிஞ்சு போச்சு @Kavi arunasalam அவ்வளவுதான்😛😛

2 hours ago, விசுகு said:

இது  நமக்கு  சரிப்பட்டு வராது  ராசாக்கள்

எல்லாவற்றையும் களட்ட  சொல்லுவாவாம்

அதைக்காட்டு இதைப்பிடி  என்பாவாம்

அப்புறம் போத்திக்கொண்டு  வீட்ட போ  என்பாவாம்

நமக்கு  இது  சரிப்பட்ட வராது  ராசாக்கள்☺️

எதுக்கும் தூர நிற்கவும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்த லிஸ்டில் 4 ம் இடத்தில் இருக்கும் நாட்டுக்காரர் எல்லாரும் ரிஜெஜ்டெட். அவர்களுக்கு வாய்மட்டும் நல்ல நீளம்.

-யுஷி லீ -

https://nowpatient.com/health-news/the-member-measure#

பிகு

இந்த நாட்டில் இப்போ இருப்போர், முன்னர் இருந்து இப்போ வேறு நாட்டில் இருப்போருக்கும் இது பொருந்தும்.

இந்த அளவீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது! எங்கை இருந்து அளந்திருக்கிறாங்கள்? (வேரிலிருந்தா அல்லது அடியிலிருந்தா) என்ற விபரமில்லாமையால் இதை நான் வன்மையாக நிராகரிக்கிறேன்

(mind voice: இனி சிறி லங்கா பூர்வீகமெண்டு அறிமுகம் கொடுப்பதைத் தவிர்க்க வேணும்!😎)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இது  நமக்கு  சரிப்பட்டு வராது  ராசாக்கள்

எல்லாவற்றையும் களட்ட  சொல்லுவாவாம்

அதைக்காட்டு இதைப்பிடி  என்பாவாம்

அப்புறம் போத்திக்கொண்டு  வீட்ட போ  என்பாவாம்

நமக்கு  இது  சரிப்பட்ட வராது  ராசாக்கள்☺️

எங்களுக்கு தேவையானது இல்லை ஒதுங்குவம்😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

எங்களுக்கு தேவையானது இல்லை ஒதுங்குவம்😎

தம்பிடா 😛

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இந்த அளவீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது! எங்கை இருந்து அளந்திருக்கிறாங்கள்? (வேரிலிருந்தா அல்லது அடியிலிருந்தா) என்ற விபரமில்லாமையால் இதை நான் வன்மையாக நிராகரிக்கிறேன்

(mind voice: இனி சிறி லங்கா பூர்வீகமெண்டு அறிமுகம் கொடுப்பதைத் தவிர்க்க வேணும்!😎)

உந்த tan பண்ணும் மிசினில படுத்தாவது கலரை ஏற்றி, மடக்ஸ்கார்…. மலாவி…மண்டிங்கோ எண்டு பூர்வீகத்தை மாற்ற வேண்டியதுதான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நந்தன் said:

எங்களுக்கு தேவையானது இல்லை ஒதுங்குவம்😎

இன்னும ஏன் இதுக்குள்ள மினக்கெடுவான் போகலையா இருவரும்😛😛

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆஹா அவக்கு ஒரு கடிதம் போட்டு அங்கு போய்  சூட்டிங்ல இறங்க வேண்டியதுதான்

IMG-4327.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.